அத்தியாயம் – 21

அவளின் கைகளை வளைத்து பிடித்தான் கண்ணன். கைகளையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள். அப்பொழுது தான் உணர்ந்தாள். இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்திருப்பதை.. அவனது முகத்திலும் பிடியிலும் ஒரு வித அழுத்தம் தெரிந்தது. 

மான்வியின் இதயம் வேகமாக துடிக்க, அவளின் நெற்றியில் வழிந்த வியர்வை மெதுவாக தாடைக்கு இறங்கி கொண்டிருந்தது. அதை சுண்டி விட பரபரத்த எண்ணங்களை கட்டுப்படுத்தி கொண்டவன். “போதும் என்னால இப்போ நல்லாவே பார்க்க முடியுது. துடைக்க வேணாம்.” என்றான். 

“அப்போ கைய விடு!” 

ஓ சாரி ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு நான் சேர்ட் மாத்திட்டு வரேன். என எழுந்தான். 

அவன் சட்டையை மாற்றிக் கொண்டு கீழே வர மான்வி அங்கு இல்லை. 

மான்வி!.. மான்வி எங்கே இருக்க? என அனைத்து இடத்திலும் தேடினான். எங்கே போயிட்டா? என வெளியில் வந்தான். ஜீப் நின்றிருந்தது.  அவளுக்கு வேகமாக அழைத்தான். 

“ஹலோ!”

எங்கே டி இருக்க? என பதட்டத்துடன் கேட்டான். 

“வீட்டுக்கு நேரமாகிடுச்சு அதான் கிளம்பிட்டேன்.”

உன்னை ஜீப்ல தான போக சொன்னேன். என கண்ணன் முகம் கோபத்தில் சிவந்தது. 

DSP சாருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஒரு கேஸ் விசயமா வர சொன்னேன். வந்தீங்க. சோ உங்க வேலைய நீங்க பாருங்க. எனக்கு எங்க வீட்டுக்கு எப்படி போகனும்னு தெரியும். என்றாள் மான்வி மென் புன்னகையுடன். 

கண்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். ‘அன்னிக்கு சொன்ன ஒரு வார்த்தையை புடிச்சுக்கிட்டு இன்னும் நிக்கிரா! இவளுக்கு மான்வின்னு வச்சதுக்கு பதிலா, முயல்ன்னு வச்சுறுக்கலாம். இல்ல ரெட் சில்லி! மிளகாய் பொடி! இல்லல்ல. இவள் பண்ற சாகசம் தைரியம் எல்லாம் பார்க்கும் போது ஜான்சி இராணின்னு வச்சிருக்கலாம்.’ என பெயருக்கு பட்டி மன்றம் நடத்தி கொண்டிருந்தான் கண்ணன். 

“ஹே ஹலோ லைன்ல இருக்கியா?” என அவளின் குரலில் உணர்வுக்கு வந்தவன். சரி இனி ஜிப்ல ஏறுன்னு உன்னை எப்போவும் கட்டாய படுத்த மாட்டேன். 

“ம்ம்” 

அப்புறம் ஒரு சந்தேகம்? என கண்ணன் தலை கோதிய படி புன்னகையுடன் அவனறைக்கு சென்றான். 

“என்ன சந்தேகம்?”

“நீ நிஜமாவே டீச்சரா? இல்ல டாக்டரா?”

என்ன? என மான்வி புரியாமல் கேட்க, இல்ல கை வைத்தியம் பார்த்திருக்கேன். ஆனால் இந்த நாக்கு.. என கண்ணன் சொல்லி முடிப்பதற்குள் கி கி கி கி!… சத்தம் கேட்டது. போனை கட் செய்து விட்டாள் பாதகத்தி. 

கண்ணனின் உதட்டில் புன்னகை, ம்ம் இந்த மிளகா பொடிக்கி ஒரு தேங்க்ஸ் சொல்லணும்.  என கிருக்கு தனமாக யோசித்தது அவனது மூளை. அவளின் லைவ் லொக்கேஷன் எடுத்து செக் செய்தான். 

சரியாக தான் சென்று கொண்டிருக்கிறாள். என புன்னகைத்த உதடுகள் அடுத்த நொடி கடுமையை தத்தெடுத்து கொண்டது. உடையை சரி செய்த படி மிடுக்குடன் கீழே வந்தவன் முத்து ஜீப்பை ஸ்டேஷனுக்கு விடுங்கள் என ஏறினான். 

“சார் நான் எவ்வளவோ மேடம் கிட்ட சொன்னேன். ரொம்ப பிடிவாதமா மறுத்துட்டு கேப் புக் பண்ணி போயிட்டாங்க” என வருத்தத்துடன் கூறினான் முத்து. 

விடுங்க முத்து. அவளுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வா என கூறி விட்டான். 

அடுத்த அரை மணி நேரத்தில் சுரேஷ், கிருஷ்ணா, தீணா மூவரும் ஜட்டியுடன் நின்றார்கள். கண்கள் இரண்டும் வீங்கி சிவந்திருந்தது. நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க என அனைத்து காவலர்களையும் பார்த்து கூறினான். 

“கண்ணா ஒழுங்கு மரியாதையா என்னை விட்டுடு” என சுரேஷ் சொல்ல, “மான்வி ஏன் அப்படி சொன்னா? அதுக்கு பதில் சொல்லு!”

என்ன சொன்னா? என சுரேஷ் யோசிக்க, டேய் நடிக்காத! உன்னை ட்ரெஸ் கழட்டி இழுத்துட்டு போக சொன்னாளே! அவள் காரணம் இல்லாம எதையும் சொல்ல மாட்டா! உனக்கு அவளை கட்டிக்க விருப்பம்ன்னா போய் பொண்ணு கேட்டிருக்கனும். நாங்க வந்து பொண்ணு கேட்காதன்னு கைய பிடிச்சு தடுத்தோமா? எதுக்கு டா கட்டாய கல்யாணம் பண்ண அவளை கடத்தின? சொல்லு! என லத்தியை எடுத்துக் கொண்டு அருகில் நெருங்கினான் கண்ணன். 

“கண்ணா வேணாம் அவளுக்கு நான் தான்னு சின்ன வயசுலயே முடிவு பண்ண விசயம். நடுவில் வந்தது நீ! நான் அவளை கட்டாய கல்யாணம் பண்ணிக்க தூக்கல. நீ தான் பிளாக் மெயில் பண்ணி அவளை கட்டிக்க பார்க்கிற! அல்ப்பமா உன் தங்கச்சிய அந்த மோகன் மொண்ணை க்கு கொடுத்து அவளை கல்யாணம் பண்ண சீப்பா திட்டம் போட்டிருக்க. உன்னை எவள் கல்யாணம் பண்ணிப்பா? உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்க யா அதை விட மான்வி பக்கத்தில் நிக்க உனக்கு தகுதி இருக்கா?” என சுரேஷ் கேள்விகளாக கேட்டான். 

கண்ணன் சுரேஷின் அருகில் நெருங்கி நீ என்ன பேசினாலும் நான் ரியாக்ட் ஆக மாட்டேன். புரியுதா? ஏன்னா உன்னை நான் மனுஷனாவே ட்ரீட் பண்ணல. உன்னை வெளியவே விட கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்கான்னா அவள் உன்னை சாக்கடை மாதிரி நினைக்குறா அப்டின்னு நல்லா தெரியுது. என்ன சொன்ன? உனக்கு அவள் அவளுக்கு நீயா? என சிரித்த கண்ணன். “அவள் எனக்கு தான். மான்வி எனக்காக பிறந்தவள். இன்னும் மூணு நாளில் என் பொண்டாட்டி! நான் கருப்பா  இருந்தாலும் என்னை தான கட்டிக்க வரா! உன்னை கேவல படுத்த சொல்றா அப்டின்னா என்ன அர்த்தம்? அவள் மனசுல நீ இல்ல.” 

“டேய் நீ எல்லாம் என்னை பத்தி பேசற?” 

கண்ணன் சிரித்த படி அவள் மனசுல நான் இருக்கேனா இல்லையா அதை வரும்காலத்தில் பார்க்கலாம். இல்லன்னா கூட உருவாக்குவேன். நீ என்ன வேணாலும் சொல்லிக்க டா என்றவன் இன்ஸ்பெக்டர் உங்க ஒர்க்கை ஸ்டார்ட் பண்ணுங்க என எதிரில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் மற்றும் தீனா இருவரையும் இரண்டு சாத்து சாத்தி விட்டு கிளம்பினான். 

சார் நீங்க என சுதர்சன் கேட்க, கண்ணன் கேவலமாக சுரேஷ பார்த்து விட்டு நான் அடிச்சா அவன் செத்து போயிடுவான். நீங்க பார்த்துக்கோங்க என கலெக்டர் ஆபிஸ் சென்றான். 

இந்த பக்கம் மான்வி வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள். தங்கம் அப்பா ஸ்கூல் வந்தேனே நீ காணோம். ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல என கேட்டார் கோபி. 

“அது கோவிலுக்கு போனேன் பா! அது தான் கொஞ்சம் தாமதம் ஆகி போச்சு”  என்றாள் மான்வி. 

மல்லிகா மான்வியை வெறக்கி வெறக்கி பார்த்து விட்டு பின் பக்கம் போன் பேச சென்றார். முகத்தில் கலவரம். என்ன செய்வதென்றே தெரிய வில்லை. பதட்டத்துடன் அவர் திரும்ப, இன்னும் அதிர்ச்சி அவரின் முன்னால் மான்வி நின்றிருந்தாள். 

என்ன டி இங்கே என்ன பண்ற? நகரு என அவ்விடத்தில் இருந்து நழுவ முயற்சி செய்தார். 

நீ எல்லாம் ஒரு பொம்பலையா என மான்வியின் குரல் உயர்ந்தது. 

மல்லிகா கோபத்துடன் திரும்பி பார்க்க மான்வி சாதாரணமாக நின்றாள்..

மான்வியை மல்லிகாவின் சொந்த ஊரில் சின்ன மல்லிகா என அழைப்பார்கள். பேச்சு நடை பாவனை முக வெட்டு எல்லாமே மல்லிகாவை உரித்து வைத்து பிறந்தவள் இவள் தான். ஆனால் குணம் மட்டும் இருவருக்கும் வேறுபடும். தப்பு என தெரிந்து விட்டால் காளியாக மாறி விடுவாள் மான்வி. யாராக இருந்தாலும் சரி. 

என்ன வாய் நீலுது என மல்லிகா கேட்க, நீ ஒரு 

பொம்பலையான்னு கேட்டேன். 

ஹே கண்ணம் பலுத்திடுறும் என பலார் என அரை விட்டார் மல்லிகா. 

மான்வி கொஞ்சம் கூட சளைக்காமல் உன் அண்ணன் பையன் அந்த சுரேஸ் என்னை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ண பார்த்திருக்கான். அதுக்கு நீயும் உடந்தை தானே! இதோ போறேன் அப்பா கிட்ட சொல்றேன் என நகர்ந்தாள். 

மல்லிகா நெருப்பில் விழுந்தது போல துடித்தாள். சொன்னால் என்ன நடக்கும் என நன்றாகவே அவருக்கு தெரியும்.  இத்தனை வருட காலமும் தன்னை ஒரு சொல் சொல்லாத கோபிக்கு மறுமுகம் இருக்கிறது. அலுவலகத்தில் லஞ்சம் வாங்காத ஸ்றிக்ட் ஆபிசர். ஒரு நாள் தன் அண்ணன் லஞ்சம் கொடுக்க வற்புறுத்த அன்று தான் கணவனின் ருத்ர தாண்டவம் முகத்தை முதல் முறை பார்த்தாள். இன்று அக்காள் குடும்பம் கூடவே மான்வி சொல்ல போகும் விசயம் என தெரிந்தால் தனக்கு சங்கு உறுதி என தெரிந்தது. 

மல்லிகா என கத்தி அழைத்தார் கோபி. 

மோகன் அப்பொழுது தான் மேரேஜ் ஈவன்ட் கிட்ட அட்வான்ஸ் கொடுத்து விட்டு மொத்தத்தையும் சரி பார்த்து விட்டு வந்தான். 

மல்லிகா எத்தனை தடவை கூப்பிடுறது? என மீண்டும் கத்தினார் கோபி. 

சொல்லுங்க என பதட்டத்துடன் வந்து நின்றாள் மல்லிகா. 

மான்வியொட நகை ய எடு மொத்தம் எத்தனை பவுன் வருதுன்னு எடை போட்டு பார்க்கணும். நாளைக்கு பாப்பா கொண்டு போகும் போது சரியா இருக்கும் என்றவர். புதிதாக வாங்கிய நகைகளை பார்த்து கொண்டிருந்தார். 

மல்லிகா அதே இடத்தில் நிற்க, தந்தையின் அருகில் மான்வி அமர்ந்து மிச்சர் சாப்பிட்டு கொண்டிருந்தாள். 

அப்போ இவள் சொல்லலயா? ஆனா இப்போ நகைய கேட்கிறாங்க நான் என்ன பண்ணுவேன்? என விலவிலத்து நின்றார். 

மல்லிகா என உரக்க கத்தினார் கோபி. 

“ஹான் சொல் சொல்லுங்க”

என்ன நிக்கிற? இதெல்லாம் நீ செய்ய வேண்டியது. என் தங்கத்தை எங்க அக்கா பையனுக்கு கட்டி கொடுக்க  உனக்கு விருப்பம் இல்ல. எதுவும் செய்ய மாட்ட நானே செஞ்சுக்கிரென். தாரை வார்த்து கொடுக்கும் போதாவது பக்கத்தில் நில்லு அது போதும் போ மசமசன்னு நிக்காத நகையா எடுத்திட்டு வா! என்றார் கோபி. 

வேறு வழியில்லாமல் பாவலா காட்டிய படி பீரோ பக்கம் சென்று நின்றார் மல்லிகா. என்ன செய்வதென தெரியவில்லை.. கண்களில் கண்ணீர் கொட்டியது. 

மோகா பத்திரிக்கை வச்சாச்சு தான எல்லாருக்கும். 

பா மாமா வீட்டுக்கு, மைதிலிக்கு மட்டும் வைக்கல மத்த படி எல்லாமே வச்சாச்சு. என்றான் மோகன். 

சரி இப்போவே போய் நானும் உங்க அம்மாவும் வச்சுட்டு வரோம் என்றவர். எழுந்து சென்று இன்னுமா எடுத்திட்டு வர சாவிய கொடு என திறந்து பார்க்க நகைகள் இல்லை. 

எந்த பீரோவில் வச்சிருக்க? மான்வி உன் கப்போட்ல இருக்கா தங்கம்? என கோபி கேட்க,  பா எனக்கு காசே கொடுக்காது அம்மா. இதுல வேற நகையா எப்படி பா வைக்கும்? என்றாள் மான்வி. 

நகை எங்கே மல்லிகா என கோபி கேட்க, 

நகை எங்கே மா என தெரிந்துகொண்டே மான்வி தன் அன்னையின் முன்னால் வந்து நின்றாள். 

என்னங்க நகை அது வந்து? நகைய.. என மல்லிகா தயங்க.. 

கோபி..? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.