அத்தியாயம் – 22

நகை எங்கே மல்லிகா? என கோபி தன் மனைவியை கூர்ந்து பார்த்தார். 

“ந.. நகை அங்கே இல்லங்க!” 

“அது தான் எங்கே?” என கோபி மீண்டும் கேட்க, நகையை அடகு வச்சிருக்கேன். 

அடகா? என கேட்ட படி மோகன் உள்ளே வந்தான். 

அடகு வச்சியா? எதுக்கு அடகு வச்ச? என கோபி கோபமாக கேட்டார். 

அதானே எதுக்கு அடகு வைக்கணும்? என்னோட சம்பளம் மொத்தமும் அம்மா கிட்ட தான் இருக்கு, டாடியோட ATM கார்டு அம்மா கிட்ட தான் இருக்கு. அப்படி இருக்கும் போது அடகு வைக்கிற அளவுக்கு என்ன தேவை வந்திருக்கும்? அதுவும் 20 சவரன் என மிச்சரை வாயில் அரைத்துக் கொண்டு கேட்டாள் மான்வி.

மல்லிகா பேய் அரண்டது போல நிற்க, பதில் சொல்லு? எதுக்கு அடகு வச்ச? என கோபி கேட்டார். 

மோகா அவ்ளோ நகை அடகு வச்சா எவ்ளோ பணம் டா வரும்? என மான்வி தன் அண்ணனிடம் கேட்க, கோபி ஆவேசமாக மல்லிகாவின் அருகில் நெருங்கி தோல் பட்டையை பிடித்தவர். எதுக்கு அடகு வச்ச? என்ன பண்ண? இப்போ சொல்ல போறியா இல்லையா? என அழுத்தி பிடித்தார். 

ப்பா என மோகன் வர, ஜஸ்ட் சட் அப்!.  என வீடே அதிர கத்திய கோபி, சொல்லு டி நகைய என்ன பண்ண? சொல்லு! என கர்ஜனையுடன் கத்தினார். 

மல்லிகா கண்களில் நீர் வழிய அது வந்து மான்விய சுரேஷ் தான் கட்டிக்க போறான்னு அவனோட பிஸ்னஸ்க்கு பணம் தேவைப்பட்டது. அதனாலே.. அதனால நான் நகையை அவன் பேரில் அடமானம் வைக்க  கொடுத்தேன். என்றார். 

பளார் என்று ஒரு அரை! 

மான்வியின் கையில் இருந்த மிக்சர் தட்டு கீழே விழுந்தது. மோகன் அதிர்ச்சியுடன் தன் தந்தையை பார்த்தான். 

கோபி ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தார். உன் புத்திய காட்டிட்டல்ல.. நீ யாரு டி அவள் வாழ்க்கைய முடிவு பண்ண? ஹான்!. யாரை கேட்டு கொடுத்த? நான் சமாதிச்ச பணத்தில் வாங்கின நகைய யாரை கேட்டு கொடுத்த? இது வரை என் பையன் கூட இத்தனை பணம் கேட்டதும் இல்ல. நான் கொடுத்ததும் இல்ல. என கேட்டுக் கொண்டே மீண்டும் கை ஓங்கினார். 

அப்பா என மோகன் தடுக்க பாய, டேய் மோகா இது அவங்க ரெண்டு பேருக்குள் நடக்குற விசயம். நம்ம சின்ன பசங்க நீ அமைதியா இரு என தடுத்தாள் மான்வி. வழியும் கண்ணீருடன் மல்லிகா பார்த்தார். 

உன் அப்பன் வீட்டு நகையா? தூக்கி கொடுக்க? கிளம்பு இப்போவே கிளம்பு.. 

மல்லிகா அழுத படி நிற்க, ஹே கிளம்பு டி! உன்னை தான் சொல்லிட்டு இருக்கேன். என கோபி அதட்டினார். 

மல்லிகா அவ்விடத்தை விட்டு நகர, “ஹே நில்லு டி! மான்வி ATM கார்ட், என்னோடது எல்லாத்தையும் எடுத்து வை, உன் கையில் இருக்க நீ போட்டிருக்க வளையல், தோடு, கொலுசு, எல்லாத்தையும் கலட்டி வை. டேய் மோகா மஞ்ச கயிறு எடுத்திட்டு வா!”

“அப்பா என்ன பண்றீங்க?” என திடுக்கிட்டு பார்த்தான். 

“மான்வி!”

அப்பா!.. என உள்ளே வந்தாள். 

உன் மாமன் போட்ட நகை! அது தான் உங்க அம்மா சீதனமா கொண்டு வந்தாலே அது பீரோவில் இருக்கு எடு அந்த ரெண்டு பவுன் செய்யின், கம்மல் ரெண்டையும் எடுத்து கொடு. மத்தத உள்ளே வச்சு பூட்டு என்றவர் அவரின் கையில் இருந்த நிச்சய மோதிரத்தை கழட்டி மான்வி எடுத்துக் கொண்டிருக்கும் நகையில் அவருடைய கழுத்து சங்கிலி எடுத்து மல்லிகா வின் கையில் திணித்து விட்டு வேகமாக பூஜை அறைக்கு சென்று வெள்ளை நூலில் மஞ்சள் குழைத்து தாலி கயிருக்கு ஏற்ற முகத்தில் மஞ்சள் கயிறை தயார் செய்து அங்கேயே மூன்று முடித்து போட்டவர். வேகமாக எடுத்து வந்தார் மல்லிகாவின் முன்பு. 

மல்லிகா ஜடம் போல நின்று கொண்டிருக்க, இதை கட்டிட்டு கழுத்தில் இருக்கும் கொடிய கழட்டி கொடு என்றார். 

“அப்பா வேணாம் பா! வீட்ல விசேசம் நெருங்கிட்டு இருக்கு. பக்கத்தில் வர போகுது. நீங்க என்ன பா இப்படி பண்றீங்க?”  என பொங்கி கொண்டு வந்தான் மோகன். என்ன தான் இருந்தாலும் தாயின் மீது பாசம் இருக்கத் தானே செய்யும். 

அந்த 20 சவரானை நீ வித்து தின்னிருந்தா கூட நான் கவலை பட்டிருக்க மாட்டேன் டா! ஆனால் உன் அம்மாகாரி! கண்டவனுக்கு கொடுத்திருக்கா? 

“அவன் கண்டவனா? அவன எப்படி நீங்க கண்டவன்னு சொல்லலாம். அவன் என் அண்ணன் பையன் வார்த்தைய தேவையில்லாம விட வேண்டாம்” என கத்தினார் மல்லிகா ஆவேசமாக… 

மான்வி தன் அம்மாவை மிரட்சியுடன் பார்த்தாள். கோபி விரக்தியுடன் கேட்டுகிட்டயா மோகா உன் அம்மா எனக்கு பொண்டாட்டியா உனக்கு அம்மாவா இங்கே இல்ல. மாதேஷ்வரனுக்கு தங்கச்சியா இருக்கா. ரொம்ப பெருமையா இருக்கு. இவள் குடும்ப நடத்த லாயக்கு இல்ல டா! ஒரு குடும்ப பொம்பளை குடும்பம் பிரியாமல் சேர்த்து பிடிப்பா! ஆனால் இவள்!… ச்ச!..  இவளை நினைக்க நினைக்க அறுவருப்பா இருக்கு. என்றார். 

மோகனால் எதுவும் பேச முடிய வில்லை. கோபி ஒரு பெரு மூச்சை விட்டவர். ம்ம் கழட்டி கொடு. என நிற்க, 

யாருக்கு வேணும் உன்னோட நகை என அனைத்தையும் கழட்டி கொடுத்து மஞ்சள் கயிற்றை வாங்கி போட்டு கொண்டு நின்றார் மல்லிகா. 

உன்னோட நகை எல்லாத்தையும் கொடுத்துட்டேன். சரி பார்த்துக்க மொத்தம் 7 பவுனு என்றவர். இனி நீ வீட்டில் கால் வைக்கணும்னா. 20 பவுன் வீட்டுக்கு வரணும். நீ 20 பவுனோட தான் வீட்டுக்குள்ள வர. மோகா அவளை கொண்டு போய் உன் மாமன் வீட்டில் விட்டுடு என்றவர் எதுவும் பேசாமல் ATM கார்ட் இரண்டையும் சரி பார்த்து கொண்டிருந்தார். 

மல்லிகா அவமானத்துடன் தன் அண்ணன் வீட்டுக்கு கிளம்பினாள். அப்பா வேணாம் பா. என மோகன் கூற.. 

நான் சொல்றத நீ கேளு என ஒரே பேச்சில் முடித்தார். 

மோகன் வேதனையுடன் தன் அம்மாவை பார்த்தான். எதுவும் பேசாமல் வண்டியில் ஏறினார். அப்பா பத்திரிக்கை? என கேட்க.., 

எப்படியும் அவங்க வர போறதில்லை. அந்த பத்திரிக்கையை நான் வேஷ்ட் பண்ண விரும்பல என மறுத்து விட்டார். 

இப்பொழுது நடந்த அனைத்தையும் மல்லிகா அவமானமாக எடுத்துக் கொண்டு சென்றார். அப்போ அவ்ளோ தானா? இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? மல்லிகாவுக்கு கணவனின் அருமை மாதேஸ்வரன் வீட்டில் தான் தெரியும். அதற்கும் காலம் ஆகும் பார்ப்போம். 

அப்பா! என மான்வி அழைக்க, கோபி இடிந்து போய் அமர்ந்திருந்தார். 

ப்பா என மான்வி தந்தையின் அருகில் வந்தவள். என்ன பா இத்தனை கோபம்? 

கோபியின் முகத்தில் கோபத்தை மிஞ்சிய ஏமாற்றமும் சோகமும் தெரிந்தது. அவ்ளோ தான் தங்கம் என் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்ல. அன்னிக்கு நான் என் அக்காவுக்கு ஆதரவா நின்னிருந்தேன்னுவை இவள் என் கூட வாழ்ந்திருக்க வே மாட்டா! அவளுக்கு வாழா வெட்டி அவமானம் இல்ல. அவங்க அண்ணனை சொன்னது தான் அவமானம். 

“விடு பா!”

“நீயே சொல்லு! அவளுக்கு ஒரு ஞாயம் எனக்கு  ஒரு ஞாயமா? அவள் அவங்க அண்ணன் குடும்பத்தை இழுத்து பிடிக்கிறாளே? எங்க அக்கா ஆதரவே இல்லாம எங்க மாமா இறந்த நேரத்தில் நான் விட்டுட்டு வந்தேனே அப்போ இவள் செய்யற மாதிரி தானே நானும் அன்னிக்கு யோசிச்சு இருந்திருப்பேன்.” என்றார் உருக்கமான குரலில். 

மான்விக்கு இப்பொழுது தான் சில விசயங்கள் தெளிவாக புரிந்தது. 

கண்களை மூடி பெரு மூச்சை விட்டவர். நான் இவள் கூட வாழ காரணமே என் அக்கா மகேஷ் தான். கண்ணன் அப்பாவுக்கு சாமி கும்பிடும் போது நீ சின்ன புள்ளை உங்களுக்கு அவ்ளோ விவரம் தெரியல. எதோ  எடக்கு மடக்கு பேச்சு ஆரம்பிச்சு அது சண்டையில் போய் முடிய அதுக்கான முழு காரணத்தை யார் மேலேயும் திணிக்க முடியல ரெண்டு பக்கமுமே சமாதானம் பண்ண முயற்சி பண்ணேன். 

“ஆனால் இப்போ தான் தெரியுது அதுக்கான முழு காரணம் யாருன்னு. அப்போவே எல்லாம் தெரிஞ்சிருந்த அக்கா என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொன்னது. வருங்காலத்தில் நம்ம உறவாடனும்னன்னு எழுதி இருந்தால் அப்போ பார்ப்போம் தம்பி நீ இப்போ போடா! நீ உன் குடும்பத்தோட சந்தோசமா இருக்கணும்.” 

“நீ எப்படி என்னை பத்தி நினைக்கிறயோ அதே போல தான் டா மல்லிகாவும்.  உன் மாமா விட்டு போனதை தவிர எனக்கு எந்த கவலையும் இல்ல. என் பசங்க என்னை பார்த்துப்பாங்க அப்டின்னு சொன்னது. இப்போ பாரு கண்ணன் பெரிய வேலையில் இருக்கான் அவனை பாருக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கும். இன்னொரு பக்கம் முகில் என்னா துடிப்பா இருக்கான் தெரியுமா ஒழுக்கம்கிற வார்த்தை பெத்தவங்கள பொறுத்து தான் அமையுது.” என்றவர் “இப்போ நீ சொல்லு நான் உனக்கும் மோகனுக்கும் கெட்ட வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைப்பெனா? என் மருமகனுக்கு என்ன குறை? என் மருமகளுக்கு என்ன குறை?” என்று ஆதங்கத்தில் பேசினார். 

“சரி இப்போ அம்மாவ கல்யாணத்துக்கு எப்படி பா!”

கோபி உறுதியுடன் எழுந்தவர். அதுல தெரியும் மான்வி உங்க அம்மாவுக்கு நீங்க முக்கியமா இல்ல அவங்க அண்ணன் முக்கியமான்னு. 

“அம்மா வந்ததுன்னா? என மான்வி கேட்க, கோபி விரக்தி புன்னகையுடன் நீயே போன் பண்ணி அப்பா மன்னிச்சிட்டார் வாமான்னு கூப்பிட்டாலும் வர மாட்டா!” 

“எப்படி பா!”

என்னை அவள் புரிஞ்சுக்கல. ஆனால் அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் என சொல்லி விட்டு நகர்ந்தார். 

மான்வி சமைக்க சென்றவள். இன்னும் நாலு அடி கொடுத்திருக்க வேணும் பா! என மனதில் நினைத்து கொண்டாள். 

இதோ திருமணத்துக்காக வீடே தயாரானது இரண்டு பக்கமும் மான்வியின் நட்பு வட்டங்கள் மொத்தமும் வீட்டுக்கு வந்து விட்டார்கள். கீர்த்தி, பிரபு, ரேகா, ரோஷிணி, மது குட்டி பையனுடன் வந்திருந்தாள். அவளது கணவன் திருமணத்துக்கு வருவதாக மனைவி மற்றும் குழந்தையை விட்டு சென்றான். 

இந்த பக்கம் நந்திதா ஊருக்கு புறப்பட்டாள். கண்ணனை கார் வண்ணனை காண..காதல் சொல்ல.. கொஞ்ச.. 

அடுத்து என்ன நடக்கும்? 

பார்ப்போம் 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.