அத்தியாயம் -23
என்ன மாப்பிள்ளை சடங்கு ஆரம்பிச்சாச்சா?” என மோகன் மலருக்கு மெஸேஜ்ஜை தட்டி விட்டான்.
“அண்ணன் இப்போ தான் வந்துட்டு இருக்கு? உங்களுக்கு?” என மலர் தட்டி விட்டாள்.
“மாமன் வரணுமாமே அதுக்கு தான் வெயிட்டிங்” என்றான் மோகன்.
“அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்திடும்” என்றாள் மலர்.
“இங்கே வந்தால்?அப்போ மச்சான் எப்போ சடங்கு முடிக்கறது?” என மோகன் கேட்க, உங்களுக்கு மாலை போட முகில் அண்ணா வருது என்றாள் மலர்.
“அவனா?” என மோகன் கொஞ்சம் ஜெர்க் அடித்தான்.
மலர் உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு “என்னாச்சு மாமானுக்கு? எங்க அண்ணன பார்த்தால் அவ்ளோ பயமா?” என கிண்டல் செய்தாள்.
“ஆமா முகில்க்கு என்னை பிடிக்கலயே இப்போ கூட கல்யாணத்தை நிறுத்த காரணம் கிடைக்காதா ன்னு தேடிட்டு இருக்கான். உன் அண்ணன். உங்க வீட்ல டெரர் கண்ணன் மச்சான் இல்ல. முகில் தான். கண்ணன் மச்சான் வெளியே தான் போலீஸ். ஆனால் இவன் தான் வீட்டுக்குள்ள எல்லாரையும் மிரட்டுறான்” என்றான் மோகன்.
பிடிக்க வேண்டியவங்களுக்கு பிடிச்சிருக்கான்றது தான் முக்கியம். முகில் அண்ணாவை பத்தி உங்களுக்கு என்ன கவலை? என கேட்டாள் மலர்.
“ஆமா ஆமா அதுவும் சரி தான் உனக்கு பிடிச்..!” என நிறுத்தியவன் இதயம் படபடக்க “ஹே தங்கமே நிஜமாவே உனக்காக உனக்காக மட்டும் சொல்லு என் மேலே இஷ்டமா?” என்றான்.
அண்ணா வந்துட்டான் நான் வைக்கிறேன் என வெடுக்கென கட் செய்தாள் மலர் வெட்கத்துடன்..
மோகன் ஒரு வித சிலிர்ப்புடன் அமர்ந்திருக்க, ஹே மாப்ளை வீட்டில் இருந்து வந்திருக்காக என கீர்த்தி, ரோஸினி, ராகவி அனைவரும் எட்டி பார்க்க, யாரது என பார்த்தாள் மான்வி.
“ஓ இவன் தான் வந்திருக்கானா?” இப்படியே சும்மா அனுப்ப கூடாது என நினைத்தவள் புன்னகையுடன் சென்றாள்.
“ஹே மாப்ளை செம்ம அழகா இருக்கார் டி!” என கீர்த்தனா, ராகவி சொல்ல, ச்சீ இவன் மாப்பிள்ளையா? வியாக் இவனெல்லாம் எனக்கு மாப்ளை இல்லை. இவனை நான் கட்டிக்கவும் மாட்டேன். என்றவள் டீ போட்டாள். உப்பு தூக்கலாக..
முகில் முகத்தை உற்றென வைத்துக் கொண்டு போனை நோண்ட, ஒப்பனையுடன் ஒயிலாக நடந்து வந்தாள் மான்வி.
எடுத்துக்கோங்க மாப்ளை என புன்னகையுடன் கோபி சொல்ல, நீட்டினாள் மான்வி.
வாங்கி ஒரு மிடுக்கு குடித்தவன். இரும்பி கொண்டே பார்க்க, “மாமா எப்படி இருக்குங்க? சக்கரை இன்னும் கொஞ்சம் போடவா அளவு தெரியல!”
இன்னும் கொஞ்சம் சக்கரை வேணும் அண்ணி என்றான் முகில்.
இதோ போட்டு வரேன் என மான்வி சமையலறை பக்கம் செல்ல, தாம்பூலம் கொடுங்க அம்மா ட்ரெஸ் அப்புறம் மாலை மோதிரம் எல்லாம் கொடுத்து விட்டாங்க என சமையல் கட் பக்கம் சென்றான்.
கோபி சடங்கு செய்ய ஆட்களை அழைத்து ஆரம்பித்து வைத்தார் இன்னொரு பக்கம் போட்டோ கிராபர் அனைத்தையும் கவர் செய்து கொண்டிருந்தார்.
மான்வி உப்பை அள்ளி போட்டு கொண்டிருக்க, பாவி என முகில் நின்றிருந்தான்.
“என்னங்க மாமா இங்கே இருக்கீங்க?” என மான்வி கேட்க, எதிரில் இருந்த நெய் பாட்டிலை எடுத்தவன். மூடியை கழட்டிய படி பார்த்தான்.
அப்பாஆஆஆ! என கத்தினாள் மான்வி.
என்னாச்சு என அவளின் தோழிகள் முதல் மோகன், கோபி, பிரபு என அனைவரும் ஓடினார்கள்.
சாரி அண்ணி என உதட்டை பிதுக்கினான். அவளின் மேல் நெய் மொத்தமும் வலிந்து கொண்டிருந்தது.
அப்பா! பாருங்க பா இவன் என் மேலே நெய்ய அய்யோ என குதித்தாள். முகில் எதுவும் பேசாமல் தான்புல தட்டுடன் நிற்க, மான்வி நெய்யில் குளித்து இருந்தாள். மொத்த மணல் மணலாய் GRB உதயம் நெய் மொத்தத்தையும் அவளின் தலையில் கொட்டி இருந்தான் முகில்.
கோபி தயக்கத்துடன் முகிலை பார்க்க.. டாடி மான்வி தான் அவருக்கு டீயில் உப்பு போட்டு கொடுத்தா! அதான் உங்க மாப்பிளை இப்படி மான்வி மேலே நெய் கொட்டிட்டார் என்றார்கள் ராகவி, கீர்த்தனா இருவரும்..
“டேய் உன்னை பாரு டா என்ன பண்றேன்னு? அத்தை கிட்ட சொல்றேன். இரு டா!”
சொள்ளிக்கோங்க அண்ணிஇஇஇ! என பலித்து சிரித்தான் முகில்.
குமட்டி கொண்டு வருவதை போல பாத்ரூம் சென்றவள் மீண்டும் சுடு நீரில் குளிக்க ஆரம்பித்தாள்.
இவர் மாப்ளை இல்லையா? அண்ணின்னு சொல்றாரு? என கீர்த்தி நேராக மோகனிடம் கேட்டே விட்டாள்.
இவர் மாப்பிள்ளையோட தம்பி கார்முகிலன் என்றான் மோகன்.
ஹே அப்போ நமக்கெல்லாம் ஒரு சான்ஸ் இருக்கு டி! மாப்பிள்ளையோட தம்பியே இவளோ அழகா இருக்கார்ன்னா அப்போ மாப்ளை எப்டி இருப்பார்? என கற்பனை எங்கெங்கோ சென்றது.
மான்வி நீ லக்கி பெல்லோ என தோழிகள் அனைவரும் கிண்டல் செய்ய, குளித்து முடித்து வெளியே வந்தாள் மான்வி. “அவன் இருக்கானா போய்ட்டானா?”
இப்போ தான் கிளம்புறார்! என ராகவி சொல்ல, ப்ளூ இன்க் பாட்டிலை எடுத்து சென்றவள் அவனது மாடிக்கு சென்று மேலிருந்து ஊற்றினாள் மொத்தமாக..
ஹே மான்வி என்ன பண்ற? என மோகன் அதிர்ச்சியுடன் கேட்டான் ஆனால் உள்ளுக்குள் சந்தோசமாக தான் இருந்தது. போடா மூங்கில் என பலிப்பு காட்டினாள்.
கோபிக்கு என்ன செய்வதென தெரிய வில்லை. முகில் அவள் எதோ விளையாட்டு பிள்ளை. தெரியாம பண்ணிட்டா..
ஆமா இப்போ தான ரெண்டு வயசு ஆகுது. எல்லாம் எங்க அம்மாவை சொல்லணும். என முனகி கொண்டே சென்றான் முகில்.
“மாப்ளை சட்டைய மாத்திட்டு போங்க”
போதும் மாமா என கையெடுத்து கும்பிட்டவன் அங்கிருந்து புறப்பட்டான்.
“என்ன மா இப்படி பண்ணிட்ட!” என கோபி கேட்க, என் தங்கச்சி சரியா தான் பண்ணிட்டுருக்கா நீங்க விடுங்க பா என வந்து நின்றான் மோகன்.
மோகா! என மான்வி புன்னகைத்தாள்.
கண்ணன் வந்ததும் மகேஷ் வீட்டுக்கு சென்று கோபி சடங்கு செய்து விட்டு வந்தார். அனைத்தும் நன்றாக முடிய, கண்ணன் தான் முகிலிடம் மாட்டி கொண்டான். “டேய் அவள் உனக்கு வேணாம் டா!” என எல்லா இடத்திலும் போய் சொல்லி கொண்டிருந்தான்.
அதிகாலை நான்கு மணிக்கு முக்கிய சொந்தங்கள் நட்பு வட்டங்கள் அனைவரும் கோவிலுக்கு வந்திருக்க, கோபியின் வீட்டில் இருந்து மான்வி மோகன், மகேஷின் வீட்டில் இருந்து கண்ணன், பொன்மலர் இருவரும் மண கோலத்தில் வந்து சேர்ந்தார்கள்.
கார் முகில் அனைத்து வேலையையும் பார்த்து கொண்டிருந்தான். கார் வண்ணனின் நெருங்கிய நட்பு சரவணன் நேரமே வந்து விட்டான். ஹே இது கலெக்டர் டி! ஆமா டீவியில் பார்த்திருக்கேன். என அவர்கள் திரும்ப கார் வண்ணனை பார்த்து விட்டு மான்வியை பார்த்தார்கள்.
என்ன வந்தாச்சா மாப்பிள்ளை? என மான்வி எழுந்து எட்டி பார்த்தாள். பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக வந்து கொண்டிருந்தான் கார் வண்ணன்.
மாப்ளை ஜைஜாண்டிக்கா இருக்கான். ஆனால் கொஞ்சம் கருப்பா இருக்கான் டி மான்வி. என ரோஷினி கூறி விட்டாள். அதற்குள் தீபிகா, ஹே மான்வி நானா இருந்திருந்தால் கண்டிப்பா ஓகே சொல்லிருக்கமாட்டேன். மாப்ளை யோட தன்பிய பிடிச்சிருக்கு என்னு அங்கேயே சொல்லி இருப்பேன் என்றாள்.
கீர்த்தனா புன்னகையுடன் மான்வி அவர் கொஞ்சம் கருப்பு தான் ஆனால் நல்லா தான் இருக்கார் என்றாள். மது அவளை இடித்த படி ம்ம் நீ அவர் பக்கத்தில் நிண்ணா ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கும் என்றாள்.
இருந்தாலும் என ராகவி இழுக்க, மான்வி சிரித்துக் கொண்டே எழுந்தவள் தீபியின் அருகில் வந்து நீ என்னோட இடத்தில் இருந்தால் ஓகே சொல்லிருக்க மாட்ட ஓகே! ஐ அக்ரிட்.. என்றாள்.
தீபிகா மான்வியை பார்க்க, அவளோ சிரித்துக் கொண்டே “நான் நீயாக முடியாதே!” என்றவள் அப்படியே ராகவி பக்கம் திரும்பிய மான்வி. “இங்கே இருக்க உங்களை எல்லாரையும் அவன் வந்து பொண்ணு பார்த்திட்டு போன மாதிரியும் கட்டிக்க சொல்லி வந்து நின்ன மாதிரி கமென்ட் பண்றீங்க? அவன் எப்டி இருக்கான்னு உங்க கிட்ட மிஸ்டர் இந்தியா போட்டி நடத்த சொல்லி செல்கட் பண்ண சொன்னேனா என்ன?” என்றாள் தேள் கொடுக்கு போல..
“அவன் கவர்மென்ட் ஜாப்ல இருக்கான். நீ இஷ்ட பட்டு கட்டிக்கிற மாதிரி சீன் போடாத மான்வி. நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்” என்றாள் ரோஷினி.
மான்வி சிரித்துக் கொண்டே இருக்கட்டுமே அப்படி இருந்தால் தான் இப்போ என்ன? அப்படி இருந்தாலும் அவன் என்னை தேடி வந்திருக்கான். ஏன் நான் கூட தேடி போவேன். இது மாதிரி உங்களை யாரும் தேடி வந்து பொண்ணு கேட்டாங்களா என்ன? என்னோட அழகும் இந்த வெள்ளை தோலும் அவனோட பதவிக்கு ஈடாகுமா? என்ன? வந்த வேலைய பாருங்க என கையை ஆட்டி சைகை செய்தாள். நாலு செல்பி எடுத்துக் கொண்டு பசங்களை சைட் அடித்து விட்டு வயிறு நப்பி கொண்டு செல்ல தானே வந்தீர்கள் என பார்த்து விட்டு மதுவின் மகனை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தாள் மான்வி.
ச்ச என்ன டி இவள் இப்படி பேசுறா? முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் என தீபிகா, ராகவி, ரோஸ்னி சொல்ல, கீர்த்தனா சிரித்துக் கொண்டே “மான்வி ஸ்ட்ரெய்ட் பார்வர்ட்ன்னு தெரிஞ்சே நீங்க எதுக்கு டி அவள் கிட்ட வாய் விட்டீங்க. நீங்க பேசின பேச்சுக்கு அவள் இத்தோட விட்டதுக்கே சந்தோச படுங்க. இது அவள் வாழ்க்கை. நம்ம ரோல் இங்கே என்னவோ அதை மட்டும் பாருங்க” என்றாள் கீர்த்தனா.
டாலிங் உனக்கு ஹோம் ஒர்க் கொதுத்தெனே பண்ணியா? என பொடியன் கேட்க, அச்சோ இல்ல டாலிக் சொல்லு நான் நோட் பண்ணிக்கரென் என மான்வி கேட்க, நீ straight லைன் ஃபை டைம் எழுதணும் அண்ட் கிராஸ் லைன் எழுதிட்டு மம்மிக்கு போன் பண்ணு நான் ஹோம் வர்க் தரேன் என பொடியன் கூறினான்.
ஓகே டன் டார்லிங் என இருவரும் பேசி விளையாடி கொண்டிருந்தார்கள். மான் குட்டி என அழைத்த படி மகேஸ்வரி உள்ளே வந்தார்.
அத்தை என எழுந்து நின்றாள் மான்வி. அவளை பார்த்து நெட்டி முறித்தவர். வா மா தங்கம். முதலில் மலருக்கு கல்யாணம் ஈஸ்வரன் முன்னாடி நடக்குது. அதுக்கு நீ கூட இருந்து சடங்கு செய்யன்னும் வா பொண்ணு கண்ணன் கூப்பிடுறான் என மகேஸ்வரி கூறினார்.
மா அந்த பாட்டி என்னை கூப்பிட்ராங்க என பொடியன் கூற, அது உன்னோட மான்வி டார்லிங் கட்டிக்க போறவங்க டா கண்ணா என்றாள் மது.
மா நான் டார்லிங்கு ஹோம்வர்க் சொல்லணும் என குதித்தான் குட்டி கண்ணன்.
எனக்கு சொல்லு டா என கீர்த்தனா கூற, இல்ல நான் டார்லிங் கிட்ட போகனும் அவள் அழகா இருக்கா அவளுக்கு ஹோம் வர்க சொல்லணும் என குட்டி கண்ணன் குதித்து அழுதான்.
“போதும் டா அவளுக்கு ஹோம்வர்க்கை கார்வண்ணன் சொல்லுவார் அவரை தான் மான்வி கட்டிக்க போறா.” றாவடி பண்ணாத டா அடி வாங்குவ..
நான் தானே கார்வண்ணன் என புரண்டு அழுதான் குட்டி கார்வண்ணன்.
கீர்த்தனா ஆச்சரியத்துடன் “ஹே இவனுக்கு பேர் யாரு டி வச்சா?”
இவ்வளவு நேரம் உன்னோட ஃப்ரெண்ட்ஸ புரட்டி போட்டாலே ஒருத்தி அவள் தான் என்றாள் மான்வியின் பள்ளி, கல்லூரி, என அனைத்திலும் பின் தொடரும் உயிர் தோழி மது.
கீர்த்தனா சிரித்த படி மதுவை பார்க்க, மது புன்னகையுடன் பார்த்தாள்.
இதோ ஈஸ்வரன் முன் மோகன் மற்றும் பொன்மலர் இருவருக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தது. மோகன் மலரின் கழுத்தில் மூன்று முடிச்சி போட்டு தன் மனைவியாக்கி கொண்டான்.
அடுத்து கண்ணன் – மான்வி கல்யாணம்.. கல்யாணம் முருகன் சன்னதியில்
இன்னொரு பக்கம் நந்திதா வந்திட்டு இருக்கா?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels