அத்தியாயம் -24

மங்கல வாத்தியம் முழங்க பொன் மலரின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு சரி பாதியாக ஏற்று கொண்டான் மோகன். மான்வி தன் அப்பாவின் கைகளை பிடித்திருக்க, மலர் தன் அண்ணன்கள் இருவரையும் கண்களில் நீர் கோர்க்க பார்த்தாள். மகேஸ்வரி தன் கணவனை நினைத்து கொண்டார். 

விரைப்புடன் இருக்கும் முகில் வேக மூச்சுடன் பார்த்தான். ஒரே தங்கை.. செல்ல தங்கை தங்கள் வீட்டு பெண் இப்பொழுது இன்னொருவனுக்கு மனைவி ஆகி விட்டாள். இன்னொரு குடும்பத்து பெண்ணாகி விட்டாள். என உள்ளுக்குள் பாசம் பரிவு பிரிவு என அனைத்தும் தெரிந்தது. 

மான்வி நொடிக்கு நூறு முறை வாசலை பார்த்தாள். இந்த தருணம் மிகவும் முக்கியம் அல்லவா? மல்லிகா வந்து விட மாட்டாரா என தோன்றியது. 

“ப்ச் தங்கமே எதுக்கு டி அழற? உன் அண்ணனுங்க ரெண்டு பேரும் என்னை முறைச்சு பார்க்கறானுங்க டி!” என மோகன் அவளின் காதில் பேச, மலர் கண்களை துடைத்துக் கொண்டு நான் படிச்சு முடிக்கிற வரை எங்க வீட்ல தான் இருப்பேன். உங்க கூட வர மாட்டேன் என பெரிய ஆப்பு குண்டாக தூக்கி போட்டாள். 

எதே! என்ன டி விளையாட்டு பன்றயா? அதுக்கு தான் உலக போரை விட பெரிய போர் பண்ணி உன்னை கல்யாணம் செஞ்சனா? என  கேட்டான் மோகன். 

பொண்ணு மாப்ளை ரெண்டு பேரும் அக்னிய வலம் வாங்க! மாப்ளையோட தங்கை நீங்க பொண்ணு கைய பிடிச்சு சுத்துக, பொண்ணோட அண்ணன் மாப்ளை கையை பிடிச்சு அக்னிய மூணு சுத்து சுத்தி கூட்டிட்டு வாங்க என்றார் குருக்கள். 

டேய் நீ போ! என மகேஷ் கண்ணனை சொல்ல, ஹே முகில் நீ போடா! என கண்ணன் கூறினான். 

இன்னொரு பக்கம் குட்டி கண்ணன் அழுது கொண்டிருக்க, மான்வி சென்று குட்டி கண்ணனை தூக்கி வந்து மோகன் கைகளை பிடித்து சுற்ற வைத்தவள் மலரின் கையை அவள் பிடித்துக் கொண்டாள். 

ம்ம் இப்படியும் செய்யலாமே! சீக்கிரம் குலம் தழைக்கும் என்றார். 

மதுவுக்கு கைகளை ஆட்டினான் குட்டி கண்ணன். 

“ஹே எதுக்கு அழற? பிடிச்சு தான கட்டிக்கிற?” என மலரை மிரட்டினாள் மான்வி. 

“இல்ல அண்ணி அது வந்து அண்ணாவை அம்மாவை விட்டு”

உன் அண்ணன் லண்டனில் இருக்கானா? நீ எங்கே செவ்வாய் கிரகத்தில் இருக்கியா? ஓவரா பண்ணாத டி! எங்களை பார்த்தால் எப்டி தெரியுது? அந்த மூங்கில விட மோகன் உன்னை நல்லா பார்த்திப்பான். மேக் அப் கலையிது பாரு சிரி என கூறினாள் மான்வி. 

அவள் என்ன சொல்லி கொடுக்கிறா உனக்கு? என முகில் வந்தான். கண்ணன் அண்ணா ரொம்ப பாவம். என மலர் கூறினாள். 

இதையே தான் நானும் சொல்றேன். எங்கே கேட்கிறான் அவன்? என பெரு மூச்சை விட்டான். நல்ல படியாக அவர்கள் திருமணம் முடிந்தது. 

ம்ம் நாழி ஆயிடுத்து வாங்க போலாம் என அடுத்த கல்யாணத்துக்கு தயாரானார்கள். இப்போ நீங்க அழ மாட்டீங்களா அண்ணி? என மலர் கேட்க, நான் எதுக்கு அழனும்? என் அண்ணன் வீடு பக்கத்தில் தான் இருக்கு என்றாள் மான்வி சிரித்துக் கொண்டே. 

சரவணன் கண்ணனின் அருகில் வந்து “சிஸ்டர் ரொம்ப போல்ட் போலயே!” என கூற, இல்ல சரவணா அவள் போல்ட் இல்ல சரியான பிளேட் என்றான் முகில். 

கண்ணன் கொஞ்சமே புன்னகைத்த படி, அவளுக்கு கேட்டா நீ அவ்ளோ தான் டா! எதுக்கு டா அவள் கிட்டயே போயி வம்பு பண்ற?  

பார்த்தியா சரவணா? அந்த செவுத்து நக்கிக்கு இப்போவே இவன் சொம்பு தூக்கிட்டு இருக்கான். கல்யாணம் ஆகிட்டா அவ்ளோ தான் அவள் அடிமை ஆக்கிடுவா என்றான் முகில். 

“நீயும் அப்படி தான மச்சி!” என சரவணன் கேட்க, நானா நானெல்லாம் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். 

ம்ம் சரி தான் அதென்ன முருகன் சன்னதில கல்யாணம்? என சரவணன் கேட்க, “அண்ணனுக்கு ஜாதகத்தில் அப்படி தான்னு அம்மா ஒத்த காலில் நிக்கிது? கல்யாணத்துக்கு இத்தனை செலவு பண்றாங்க?” என்றான் முகில். 

“நீ எப்படி கல்யாணம் பண்ணுவ?” என சரவணன் கேட்க, நான் செலவு வைக்க மாட்டேன் மச்சான். ஏன்னா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். 

ஏன் டா இப்படி சொல்ற? என சரவணன் கேட்க, ஆமா இவனுக்கே இப்படி ஒரு ராட்சஸி வந்திருக்கா! அது தான் எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்ன்னு நம்பிக்கையே போச்சு என்றான். 

கண்ணன் சிரித்த படி மணவறையில் அமர, மான்வி இன்னொரு பக்கம் வந்தாள். சிவப்பு வண்ண பட்டு புடவையில் அலங்காரம் அளவாக.. எப்படி சொல்ல? தாமரையில் இருந்து எழுந்து வந்த தாரகை போல மணவாளன் தோல் சேர வந்தாள். 

இது கனவு போல இருந்தது கண்ணனுக்கு, கனவு இல்ல டா கண்ணா நிஜம்! மான்வி டா உன்னோட மான்வி உனக்கு சொந்தமாக போறா! என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென இரத்தம் ஏறியது. கடவுளுக்கு நன்றி கூறினான். 

அருகில் வந்து அமர்ந்தாள். ரெண்டு பேரும் வணக்கம் சொல்லுங்க. என குருக்கள் சொல்ல சொல்ல சடங்கு சம்பிரதாயம் அனைத்தும் நடக்க ஆரம்பித்தது. 

என்ன கோபி இன்னும் மல்லிகா வரவே இல்லையே? நீ அவங்க அண்ணனுக்கு பத்திரிக்கை வச்சயா இல்லையா? என மகேஸ்வரி ஆயிரம் முறை கேட்டிருப்பார். 

விடு கா! விருப்பம் இல்லன்னா யாரும் வர வேணாம். நீ எதுக்கு கா அவளை நினைக்கிற? புள்ளைங்க கல்யாணத்தை பாரு கா! கண்ணனை பாரு! என கோபி கவனம் முழுவதையும் திருமணத்தில் செலுத்தினார். அவருக்கு இல்லாமல் இருக்குமா? மல்லிகா மீது தான் மொத்த எண்ணமும். 

குருக்கள் மந்திரம் சொல்ல சொல்ல அனைத்தையும் சொன்னார்கள் இருவரும். ரெண்டு பேரும் மாலை மாத்திக்கோங்க என சொல்ல, மது அருகில் வந்து உதவி செய்தாள். அங்கு நடக்கும் அனைத்தையும் போட்டோ கிராபர் சக் சக் என போட்டோ வீடியோ ட்ரோன் என அனைத்தையும் எடுத்தார்கள். 

மாங்கல்யம் ஆசிர்வாதம் பண்ணுங்க என நீட்ட அனைவரும் தொட்டு கும்பிட்டு அட்சதை எடுத்துக் கொண்டார்கள். கண்ணன் பதட்டத்துடன் இருக்க, மான்வி கேஷுவலாக அமர்ந்திருந்தாள். 

ம்ம் மாங்கல்யம் கட்டுங்க! கெட்டி மேளம் கெட்டி மேளம் மாங்கல்யம் தந்துனா நெனா மம ஜீவன.. என குருக்கள் பாட கண்ணன் மான்வியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். 

“என்ன பா மூணு முடிச்சயும் நீயே போட்டயா?”

அது என கண்ணன் இழுக்க, உன்னோட தங்கை தான் பா மூனாம் முடிச்சு போடணும். என்றார் குருக்கள். 

அங்கிருக்கும் அனைவரும் சிரிக்க, உன் பொம்பனாட்டிய யாரும் தூக்கிண்டு போயிட மாட்டா! குங்குமம் வை மாங்கல்யத்தில் அப்படியே நெத்தியில் வச்சு விடு! என்றார். 

முகில் தலையில் அடித்துக் கொண்டான். ஏன் டா இப்படி? என.. 

மான்வி சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். 

சரவணன் முகிலை கிண்டலடித்தான்.  ம்ம் முருகன் சன்னதிய சுத்தி வாங்க.. வேண்டிக்கோங்க.. பெத்தவா கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க, அப்படியே அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கணும். என்றார். 

முகில் மான்வியின் அருகில் சென்று உன்னோட முகத்தை அவர் கிட்ட காமி.. 

ஏன் டா? என கண்ணன் கேட்க, அவர் தான் அருந்ததிய பார்க்க சொன்னாரே இப்போ இவள் ஜக்கம்மா மாதிரி தான இருக்கா! என களாய்த்தான். 

டாடிஇஇஇ! என மான்வி உதட்டை பிதுக்கிக் கொண்டு அழைத்தாள். 

போடி என்றான் முகில். 

“கருவா! என்ன அப்படியே நிக்கிற?”

டேய் முகில் கம்முன்னு இரு டா! என முறைத்தான் கண்ணன். 

ப்பா பயந்துட்டென் என சிரித்தான் முகில். அவர்கள் சாமியை கும்பிட்டு விட்டு கண்ணன் அவளின் காலுக்கு மெட்டி போட்டு விட்டு இருவரும் வானத்தில் தெரியும் நட்சத்திரத்தை பார்த்தார்கள். அதன் பின் மணவரை வந்து சேர்ந்தார்கள். 

மான்வியின் புடவை முந்தி எடுத்து கண்ணனின் துண்டில் இறுக்கமாக முடிச்சு போட்டு கையையும் சேர்த்து கட்டினார்கள். 

அழுத்தி பிடித்துக் கொண்டான் அவளின் கைகளை..  பிரகாரத்தில் உள்ள அனைத்து சாமி சன்னதிகளையும் கும்பிட்டு விட்டு வந்து சேர்ந்தார்கள் இருவரும். 

அக்கா அடுத்து என கோபி கேட்க.. “தம்பி நானு மோகன் மாப்ளையையும், மலரையும் பால் பழம் சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீ கண்ணனையும் மான்வியையும் கூட்டிட்டு போ!”

அக்கா எனக்கு அங்கே போயி என்ன பண்றதுன்னு தெரியாது. நாங்களும் அங்கேயே வரோம். சடங்கு அங்கேயே செய்வோம் கா! என்றார் கோபி. 

மகேஸ்வரி அவரிடம் விடா பிடியாக மறுத்து விட மது புன்னகையுடன் நீங்க கவலை படாதீங்க டாடி நாங்க வரோம் எனக்கு தெரியும் என அழைத்தாள். 

கண்ணன் அருகில் இருப்பவளை ஓர கண்ணால் பார்த்தான். நிஜமாவே கல்யாணம் ஆகிடுச்சு மச்சி! நீ சிஸ்டரை நல்லாவே பார்க்கலாம். என்றான் சரவணன். 

டேய் கிண்டல் பண்ணாத நானெல்லாம் பார்க்கல என சமாளித்தான் கண்ணன். அதன் பின் நட்பு வட்டங்கள் சொந்தங்கள் என அனைவரும் கீழே இறங்கினார்கள். அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. 

கருவா! கை வலிக்குது அதை ரிமூவ் பண்ணு என மான்வி கூற, ஏக்கத்துடன் அவிழ்த்தான் முடிச்சை. 

அண்ணா அண்ணா என்ன பண்றீங்க? 

என்னாச்சு மா? என கண்ணன் கேட்க, இதை அவிழ்க்க கூடாது வீட்டுக்கு போற வரைக்கும். என மது கூறினாள். 

“அதை உங்க பிரென்ட் கிட்ட சொல்லுங்க”

மான்வி! என மது அழைக்க, ஹே நான் எங்கே போயிட போறேன் அதான் கட்டி வச்சுட்டாங்க தானே! என்றாள். 

ஜஸ்ட் சட் அப் மான்வி என முடிச்சை போட்டு விட்டாள். 

“பார்ரா உன் மேலே பயம் இருக்கு மா! அடங்குறா” என்றான் கண்ணன். 

“ஹே நானெல்லாம் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் மான்வி!” 

ஆமா மகாராணி என மது சிரித்துக் கொண்டே  சாப்பிட சென்றார்கள். இரண்டு திருமண ஜோடிகளும் உணவை உண்டார்கள். 

மான்வி நெளிந்து கொண்டே அமர்ந்திருந்தாள். 

என்ன டி ஆச்சு? 

ஒன்னும் இல்ல.. என கூறி விட்டு மீண்டும் நெளிந்தாள் மான்வி. 

என்னன்னு சொல்லு! எதுவும் பிரச்சனையா? சொல்லு என கண்ணனின் முகம் பதட்டத்தில் மாற,.. 

“ஹே ஒன்னும் இல்ல. சாரி ரொம்ப இறுக்கமா இருக்கு. சாப்பிட முடியல.. “

இப்போ என்ன பண்றது? என கண்ணன் கேட்டான்.

“இன்ஸ்கட் வயிறை இறுக்கி இருக்கு எரியுது.”

“லூஸ் பண்ணி விடவா?” என்றான். 

மான்வி அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்க்க, என்ன டி லூஸ் பண்ணி வி.. என்றவன் வார்த்தைகள் நின்று கொண்டது. 

“ஹே நான் எதுக்கு இதை உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்? எதுக்கு டா என்னை கேட்ட? இப்போ லூஸ் பண்ணி விடுகிறேன்ன்னு சொல்ற? அன்னிக்கு அப்படி தான் ஹிப்ப பிடிக்கிற? இன்னிக்கி தாலி கட்டின அடுத்த செக்கண்ட்… என்ன என்ன டா சொல்ற?” என கண்ணம் சிவக்க பார்த்தாள் கோபமாக.. 

“அது.. வ.. அத்.. அது வந்து ஒரு flow ல சொல்ட்டென் டி! அப் அப்படி எல்லாம் இல்ல டி!” என கண்ணனின் முகம் தீவிரமாக மாறியது. 

கருவா! என சொன்னவள் சட்டென அமைதியாகினாள். 

மான்வி நான் வேணும்னு சொல்லல டி என கெஞ்சினான் கண்ணன். 

க்கும் என தொண்டை கணைக்கும் சத்தம் கேட்டது. சரவணன் தான் புன்னகையுடன் நின்றான். 

“சரவணா நீ எப்போ வந்த?”

“நீ கெஞ்சும் போது வந்தேன் டா மச்சான்” என சிரித்தான் சரவணன். 

கண்ணன் எதையும் காட்டி கொள்ளாமல் “சாப்ட்டியா?”

சாப்பிட்டேன் டா நான் கிளம்புறேன் கலெக்டர் ஆபீஸ் போகனும். இன்னிக்கி குறை தீர் கூட்டம் இருக்கு. 

சப் கலெக்டர் கிட்ட பேசிட்டியா? என கண்ணன் சிரித்துக் கொண்டே கேட்க, நீ தான் சொல்லணும். உன்னோட சப் கலெக்டர் தான. என்றான் சரவணன். 

வரட்டும் அவள் கிட்ட பேசவே மாட்டேன். இன்னும் வரல. 

சரி டா bye..

டேய் நாளைக்கு நைட் ரிசப்ஷன் இருக்கு.  வந்திடு. என கண்ணன் சொல்ல.. 

கண்டிப்பா மச்சி வருவேன். என புன்னகையுடன் கூறினான் சரவணன். 

அப்போ நாளைக்கே நீ ட்ரீட் வைக்கிற மாதிரி வந்திடு என கண்ணன் கூற, மான்வி நிமிர்ந்து பார்த்தாள். 

டேய் சிஸ்டர் பார்க்கிறாங்க. 

“டேய் நாளைக்கு ட்ரீட் வைக்கிற சேர்ந்து தான் வரணும்” என கண்ணன் உறுதியாக கூறினான். 

“பயமா இருக்கு டா!”

சப் கலெட்கர கூட வச்சுக்கோ பயம் இருக்காது என கிண்டலடித்தான் கண்ணன்.

சரவணன் சிரித்த படி கிளம்பினான். என்ன ட்ரீட்? நீ குடிப்பியா? என முறைத்து கொண்டே கேட்டாள் மான்வி. 

கண்ணன்..? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.