அத்தியாயம் -25

 குடிப்பியா? என இரண்டு புறுவங்களையும் தூக்கியவாறு பார்த்தாள் மான்வி. 

“நான் அக்கேஷல் ட்ரின்க்கர்” என்றவன் சாப்பிடுவதில் கவனம் செலுத்த, “அதுக்கு அர்த்தம் சொல்லு!”.. 

“அது எதாவது பேங்ஷன் வந்தால் லைட்டா ரெண்டு பெக்கு டி!”

“சந்தோசமா இருக்கும் போதா? இல்ல சோகமா இருக்கும் போதா?” என மான்வி கேட்க, சோகமா இருக்கும் போது என்றான் கண்ணன். 

அப்போ இன்னிக்கி ரொம்ப அதிகமா குடிப்ப போல? என மான்வி புன்னகையுடன் கேட்க, “ஏன் இன்னிக்கி அதிகமா குடிக்கணும்?”

“வேற எதுக்கு? உன் பாசமலர்க்கு கல்யாணம் நடந்திருக்கு அது சந்தோஷம்.”

“அதுவும் சரி தான்” என அடுத்த வாய் வைத்தவன் அவள் சொன்ன விசயத்தை கேட்டு புரை ஏற பார்த்தான். 

மான்வி சாப்பிட்டு கொண்டே “உனக்கு பிடிக்காத என்னை கட்டிருக்க அப்போ ரெண்டு பெக்கு என்ன நாலு பெக்கு கூட உள்ளே போகும் சரி தான” என பார்த்து சிரித்தாள். 

“ம்ம் தண்ணி குடி” என எடுத்து நீட்டினாள். அவன் புரை ஏறுவதை பார்த்து.. 

‘இதுக்கு மேலே தாமதிக்க கூடாது. எப்படியாவது என்னோட மனசுல இருக்க விசயத்தை வெள்ளச்சி கிட்ட சொல்லிடனும். உன்னை எதுக்கு டி எனக்கு பிடிக்காமல் இருக்க போகுது? என்னோட வாழ்க்கையிலேயே நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறது இன்னிக்கி தான் டி!’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான் கண்ணன்.

அடுத்ததாக மோகன் பொன்மலர் இருவரையும் அழைத்துக் கொண்டு கார் முகில் அவர்களின் வீட்டுக்கு புறப்பட இன்னொரு காரில் கோபி, கார் வண்ணன், மான்வி மூவரும் கிளம்பினார்கள். 

மான்வியின் நட்பு வட்டங்கள் மொத்தமும் ஜீப்பில் ஏறிக் கொண்டார்கள். கோபி கண்ணனை பார்த்து கொண்டே வந்தார் அவ்வப்பொழுது. 

கண்ணன் ஒரு சில நொடியில் அதை கவனித்து விட்டு இவர் ஏன் என்னையவே பார்க்கிறார்? அய்யோ என இறும்பிய படி சமாளித்தான். 

“ப்பா என்ன வேணும்?”

“என்ன மா என்னாச்சு? எனக்கு ஒன்னும் இல்லையே?”

“இல்ல உன் மாப்ளையை நீ சைட் அடிக்கிற மாதிரி தெரியுதே!” என சிரித்தாள். 

கோபி வேறு புறம் திரும்பி கொள்ள, கண்ணன் மான்வியை முறைத்தான். என்ன கருவா? கண்ணை நோண்டி போட்டுடுவேன். என உருட்டினாள். 

எப்போவும் வன்முறை தான் இந்த மான்வி. என தலையை உலுக்கிய படி வேடிக்கை பார்த்தான். 

அவர்கள் வீடு வந்து இறங்க அங்கே மல்லிகா, மைதிலி, அவளின் நான்கு வயது மகன் யாத்ரா இருந்தான். அடடே யாத்ரா குட்டி என கோபி இறங்கியவர் வாங்க மாப்ளை. மான்வி மாப்பிள்ளையை அழைச்சிட்டு வா என தன் பேரனை தூக்க சென்றார். 

தாத்தா என யாத்ரா கைகளை நீட்ட, உங்க தாத்தாவுக்கு நம்ம முக்கியம் இல்ல. நீ போக வேணாம் என குழந்தையிடம் சொல்லி கொண்டே உள்ளே சென்றாள் மைதிலி. இருங்க மாப்ளை என கூறி விட்டு  கோபி மைதிலியிடம் வந்து “யாத்ராவை என் கிட்ட மைத்து. நீ போயி அவங்களுக்கு ஆரத்தி எடு டா தங்கம் பொண்ணு மாப்ளை ரெண்டு பேரும் வெளியே நிக்கிறாக” என்றார். 

“அய்யோ இந்த வீட்டுக்கு வேலை செய்ய சேவகம் பண்ண வரல நானு. எங்க அம்மாவுக்கு துணையா வந்தேன்.” என மகனை தூக்கி கொண்டு உள்ளே சென்று விட்டாள். “20 சவரன் நகை! பார்த்துக்கோங்க கடையில கொடுத்து கூட சோதனை பண்ணிக்கோங்க. நீங்க போட்ட நகை எனக்கு ஒரு பொட்டு கூட வேணாம்” என சொல்லிய படி மல்லிகா இன்னொரு பக்கம் உள்ளே சென்றார். 

“அப்பா ஆரத்தி ரெடி நீங்க வாங்க!” என மதுவின் குரலில் சுய நினைவுக்கு வந்தார் கோபி. அந்த நடுத்தர வயது மனிதனின் மனம் சுக்கு நூறாக உடையாத குறை மட்டும் தான். 

ஒரு போட்டோ கிராபர் குழு இங்கு வீட்டுக்கு வந்திருந்தார்கள். அதே போல இன்னொரு குழு கார் வண்ணன் வீட்டுக்கும் சென்றிருந்தது. ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்ததும் பால் பழம் கொடுக்க பட்டது. கண்ணன் மிகவும் தயக்கத்துடன் காணப்பட்டான். மான்வியின் புடவையை குட்டி கண்ணன் பிடித்த படி திரிந்தான். 

“டேய் இங்கே வாடா இல்ல அடி வாங்குவ!”

மது உனக்கு என்ன டி? என் டார்லிங் என் கூட சுத்துரது உனக்கு உள்ளுக்குள் ஜலஸ். என் டார்லிங்க திட்ற வேலை வச்சுக்காத! என மிரட்டினாள் மான்வி. 

டார்லிங் என இடையை கட்டிக் கொண்டான். மான்வி அவனிடம் பூசெண்டை கொடுத்து “இதை பத்திரமா புடிச்சிட்டு நான் கேட்கும் போது என் டார்லிங் கொடுக்கணும் ஓகேவா!” என அவள் கூற பொடியனும் தலையாட்டினான். 

அவர்களின் சம்பாசனைகளை இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். “ரெஸ்ட் ரூம் போறயா கருவா?”

அதென்ன கருவா? அவன் டார்லிங்? நான் இவளுக்கு கருவா? என முறைத்து பார்த்தான். 

“என்ன? முறைக்கிற?”

ஒன்னும் இல்ல என எழுந்து சென்றான். அதன் பின் அவள் சென்றாள். டேய் இங்கே வாடா! 

எதுக்கு கூப்ட்டீங்க என குட்டி கண்ணன் கேட்க, நீ அவளுக்கு டார்லிங்கா? என கன்னத்தை பிடித்தான் கண்ணன். 

“ஹா வலிக்குது?” என கத்த ஆரம்பித்தான் குட்டி கண்ணன். 

டேய் என மது கத்திக் கொண்டே வர,  டேய் டேய் கத்தாத டா! டேய் உன்னை எதுவுமே பண்ணலயே டா! அய்யோ இது வாயா வன்னாந்தாலியா? இப்படி perform பண்றான்? என கண்ணன் பதட்டத்துடன் நின்றான். 

டார்லிங் என மான்வி குரல் உள்ளிருந்து கேட்க.. 

“அய்யோ இவள் வேற?”

என்னாச்சு? என மது வர, மா நான் ஜஸ்ட் பேசி கன்னத்தை பிடிச்சேன் அதுக்கு கத்துரான். என வியர்த்து வடிந்து கூறினான் கண்ணன். 

அதற்குள் மான்வி வெளியே வந்தவள். என்னாச்சு? என கேட்க, டார்லிங் இவன் bad boy! என்றான் குட்டி கண்ணன். 

ஹே அடி வாங்க போற என மது அவனது காதை திருக போக, ஹே அடிக்காத என மான்வி தடுத்து அவனை சமாதானம் செய்தாள். அண்ணா அவனுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன். இவன் நைட் தூங்கவே இல்ல விடிய விடிய முளிச்சிட்டு இருந்தான். அதான் இப்படி ரெட்டை வால் பண்ணிட்டு இருக்கான்

பரவால்ல மா என கண்ணன் கூற, சரிங்க அண்ணா என மது மேலே சென்றாள். சரி கிளம்பலாமா என கோபி அழைக்க, கண்ணன் உடனே புறப்பட்டு விட்டான். 

இருங்க பா நான் யாத்ராவை கொஞ்சிட்டு வரேன். என பக்கத்து அறைக்கு சென்றாள் மான்வி. 

யாத்ரா குட்டி என மான்வி அழைக்க, சித்தி என தாவி கொண்டது அந்த சின்ன குட்டி.. ஹே என் பையன இறக்கி விடு! என மைதிலி பத்ரகாலி போல எழுந்தாள். 

சுபாஷ் வந்து சொல்லட்டும் உடனே இறக்கி விடுரென் என அவனை தூக்கி கொண்டு சென்றாள். 

ஹே விடு டி! என மைதிலி சத்தமிட்டாள். 

சித்தி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? என யாத்ரா கேட்க, ஆமா தங்கம் என கன்னத்தில் முத்தமிட்டு நெற்றி முட்டி கொஞ்சினாள். உனக்கு பூ போட்டாங்களா தலையில? என கேட்டுக் கொண்டே இருந்தான். 

ஆமா என அறைக்குள் நுழைந்தாள். இது யாரு என அவளின் காதுக்குள் சத்தமாக கேட்டான் யாத்ரா. இவர் யாரு? எனக்கும் தெரியலையே தாத்தா கிட்ட கேளேன்! அப்பா அப்பா என கத்தினாள். 

என்ன மா போலாமா? என கோபி வர, தாத்தா என தாவினான் யாத்ரா. 

“அப்பா எங்க டா தங்கம்?”

அப்பா பெரிய ஆபிஸ் போயிருக்காங்க! என்றான் யாத்ரா. 

சுபாஷ் ஐடி யில் வேலை செய்கிறான். அவ்வப்பொழுது பெங்களூர் செல்வான். கண்ணன் அவனை அழைக்க, போங்க தங்கம் நம்ம சித்தப்பா! என கோபி சொல்ல, தயக்கத்துடன் சென்றான் யாத்ரா. அங்கிருந்து அவர்கள் அனைவரும் காரில் விளக்கு ஏற்ற சென்றார்கள். 

மான்வி கையுடன் யாத்ராவை தூக்கி வந்து விட்டாள். மோகனை பார்த்ததும் மாமாச்சி என தாவி சென்றான் யாத்ரா. ஃபோட்டோ கிராபர் அவர்களை அழகாக படம் எடுத்தார்கள். மான்வி கண்ணன் வீட்டில் நுழைவது, அவள் விளக்கு ஏற்றுவது என அனைத்தையும் எடுத்தார்கள். 

மீண்டும் மறு வீடு சடங்கு என மான்வி கண்ணன் இருவரும் கோபியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மதிய உணவு அவளின் நட்பு வட்டத்துக்கு ஆர்டர் செய்ய பட்டது. மொத்தத்தில் அனைவரும் அதிகாலை எழுந்த கிறக்கத்தில் படுத்து உறங்கினார்கள். 

சாப்பிட்டதும் கண்ணன் இன்னும் நிறைய நண்பர்கள் என அனைவரையும் போனில் அழைத்துக் கொண்டிருந்தான். இலகுவான உடைக்கு மாறிய மான்வி. படுக்கையில் உறங்க ஆரம்பித்தாள். கண்ணன் நொடிக்கு நூறு முறை அவளை பார்த்தான். 

மாலை போல அவள் தூங்கி எழுந்திருக்க, கண்ணன் போன் பேசி கொண்டிருந்தான். ஹே இத்தனை நேரம் போன் பேசிட்டு இருக்க? என உடலை முறுக்கிய படி கேட்டாள். 

வேலை எப்போவும் இருக்கும் என உள்ளே வந்தான். 

மது போன் செய்ய, அட்டன் செய்தவள் அய்யோ மறந்து போய்ட்டேன் இதோ இப்போவே போறேன் டி! என்றாள் மான்வி. 

என்னாச்சு? 

அது நாளைக்கு ரிசப்ஷன் ட்ரெஸ் பிளவ்ஸ் வாங்கணும் மறந்து போய்ட்டேன் இப்போ தான் நினைப்பு வருது என எழுந்தாள். 

அப்படியா என திருமண புகை படத்தை நந்திதாவுக்கு அனுப்பி கொண்டிருந்தான். பத்திரிக்கையில் இருந்து இது வரை அனுப்பிய அனைத்தும் one டிக் மட்டுமே காட்டியது. என்னாச்சு இவளுக்கு? என கண்ணன் யோசித்துக் கொண்டிருக்க,… 

ஹே கருவா நாயே! என கத்தினாள் மான்வி. 

“ப்ச்ச்!..” என அவன் நிமிர்ந்து பார்க்க, “நான் உன்னை பத்து முறைக்கு மேல் கூப்பிட்டுடேன் உன் கவனம் எங்கே இருக்கு?”

“அது சரி சொல்லு! என்ன விசயம்?”

“நாளைக்கு நைட்டு என்ன ட்ரெஸ் போட்டுக்க போற?” என மான்வி அவன் அருகில் அமர்ந்தாள். 

அதுவா? சிம்பிளா ஃபார்மல் போட்டுக்க போறேன்.

“கோட் ஷூட் டிரை பண்ணு!”

“அது முடியாதே!”

ஏன்? 

“நான் ஸ்டிட்ச் பண்ண கொடுக்கல!” என்றான் கண்ணன். 

சரி கிளம்பு போலாம். 

“எங்கே போலாம்? இப்போ தைக்க கொடுத்தால் கிடைக்காது”

“ரெடி மேட் டிரை பண்ணலாம்” என மான்வி ஒரு புடவையை எடுத்து போட்டாள். 

“வேணாம்” 

மான்வி அவனை முறைத்து கொண்டே நின்றாள். 

“வேணாம் டி!”

எனக்கு வேணும்! நல்லா வேணும்! என முகத்தை தூக்கி கொண்டு திரும்பினாள். 

சரி இப்போ என்ன உன் கூட வரேன்! என்ன வேணுமோ பண்ணிக்க. உன் இஷ்டம் என அவளை பார்த்தான். 

உதட்டை சுழித்து கொண்டு திரும்பினாள். 

ஹே என அருகில் அமர்ந்து முகத்தை திருப்பினான். 

விடு என கையை தட்டி விட்டாள். சரி சாரி அதான் சாரி கேட்கிறேன்ல என கையை பிடித்தான். அவள் தட்டி விட அவன் பிடிக்க போக கடைசியில் அவன் பிடித்த சாரி தொட்ட இடம் மான்வியின் நெஞ்சுகுளி. 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.