அத்தியாயம் -26

ப்ச் கைய விட்ரா! நீ எந்த ட்ரெஸ் போட்டு வந்தால் எனக்கென்ன? ஆனால் என் பக்கத்தில் நிக்காத!” என மான்வி கோபத்தில் அவனது கைகளை தட்டி விட முயற்சி செய்தாள். 

“இன்னிக்கி தான கல்யாணம் பண்ணிருக்கேன் உன் பக்கத்தில் தான் நிக்க முடியும்? வேற யார் பக்கத்தில் நான் நிக்கட்டும்! ஹே ஆட்டம் கட்டாத டி! அதான் சாரி கேட்கிறேனே? மான்விஇஇஇ!” என கண்ணனின் கைகளும் அவளின் கைகளும் கத்திச் சண்டை போட்டு கொண்டிருந்தது. 

“நீ என் கூட வர வேண்டாம். என் கூட நிக்கவும் வேணாம். விட்ரா கருவா! எவ கூட வேணாலும் நின்னுக்க. பிடிக்காத என்னோட டேஸ்ட்டும் உன்னோட டேஸ்ட்டும் ஒத்து வராது.” என மான்வி எழ போக, கைகளை பிடித்து அணை கட்டியவன். 

“ம்ம் கண்டிப்பா யாராவது வந்து அப்ரோச் பண்ணா அவங்க கூட நின்னுக்கிறேன். இப்போ உன் கூட தான் நிக்கணும். உன்னோட டேஸ்ட்டுக்கு நான் என் கூட நிக்க உனக்கு அசிங்கமா இருக்கும்ல” 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்து பார்த்தாள் மான்வி. 

“ஹே மான்வி எதுக்கு உனக்கு இத்தனை கோபம். இங்கே சிரிப்பு வருது டி! உதட்டுக்கு கீழே அதோ உதடு வளையுது” என கண்ணன் சமாதானம் செய்ய முன் வந்தான். 

“கருவாயா தள்ளி போ!”

என்னடி சும்மா சும்மா கருவா கருவான்னு சொல்ற? வெள்ளையா இருக்கோம்ன்னு சூட்டு கொழுப்பா? என அவளின் கைகளை பிடிக்க பாய்ந்தான். அவள் வலு கொடுத்து தள்ள, அந்தோ குஷி நிலை தடுமாறி மான்வியின் நெஞ்சு குழியில் அவன் முகம்..  

ஹக் என துள்ளினாள் மான்வி. ஹே என்ன பண்ற? ந.. நகரு..! என மான்வியின் உதடுகள் திக்கி திணறியது. 

அய்யோ சாரி என மெல்ல அவளிடமிருந்து விலகினான். “What the hell? நீ டூ மச்சா போயிட்டு இருக்க?” 

“ஹே நான் வேணும்னு பண்ணல! இது இனிமையான விபத்து..”

“என்ன?”

“இல்ல சின்ன விபத்து that means ஆக்சிடன்ட்ல இப்படி நடந்து போச்சு.” என்றவன் வேகமாக பாத்ரூம் சென்றான். 

கைக்கு வேலை வந்திடுச்சு கண்ணனுக்கு. வெறும் கை தான். என்ன பண்றது? 

மான்வி அவனுக்காக காத்திருந்தாள். ஹே என்ன பண்ற? ஹே கருவா? என்ன டா பண்ற? என ராகம் பாடினாள். அந்த ராகம் ரீங்காரமாக ஒவ்வொரு செல்லிலும் பரவி மொத்தமாக வெடித்து சிதறினான் கண்ணன். 

டேய் என கதவை தட்டினாள் வேகமாக… “வரேன் டிஇஇ!  வெயிட் பண்ணு போ!” என கண்ணன் கூற.. “இது தான் லாஸ்ட் வார்னிங் வரயா இல்லையா? இதுக்கு மேலே கேட்க மாட்டேன்.”

“வந்திடுச்சு”

“என்ன?” 

“வரேன் டி போ!” என்றான். மான்வி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். 

ஒரு சில நொடிகளில் வெளியே வந்தான். “என்ன போலாமா?”

ம்ம் என பளிச்சென்று வந்து சேர்ந்தான். அண்ட் முக்கியமான விசயம்? 

“என்ன?” 

“உன்னோட திருடன் போலீஸ் வலுவை எல்லாம் வீட்டு வாசப்படியில் விட்டுட்டு வர! என் கிட்ட உன்னோட வலு காட்டின கைய உடைச்சு போட்டுடுவேன். கண்ட இடத்தில் கை வைக்கிற வேலை எல்லாம் வேணாம். எதோ முதல் தடவைன்னு விடுறேன் இல்ல”

கண்ணன் அவளை தவிப்புடன் பார்த்தவன். இறுகிய மனதுடன் “கண்டிப்பா பண்ண மாட்டேன் சாரி! என்றான். 

ஹான் அது? என வெளியே சென்றாள். என்ன மா இந்த நேரத்தில? என கோபி கேட்க, இல்ல பா அது நாளைக்கு போடுற ட்ரெஸ்க்கு பிளவ்ஸ்ச தைக்க கொடுத்திருந்தேன் அதை வாங்க போறேன். 

“இந்தா ATM கார்ட் எடுத்திட்டு போ!”

இல்ல மாமா நான் கூட போறேன். பார்த்துக்கிறேன். என கண்ணன் கூற, இருக்கட்டும் மாப்பிள்ளை என மான்வியிடம் நீட்டினார். 

நீங்க வையுங்க மாமா! வா மான்வி என அவளின் கையை வம்படியாக இழுத்து வந்து விட்டான். 

டாட்டா டாடி! என கை காட்டினாள். 

முத்து ஜீப் என போனை எடுத்து அவன் சொல்லி கொண்டிருக்க, நீ ஜீப் ல போ நான் ஸ்கூட்டில வரேன் என்றாள் மான்வி. 

“ஹே அதான் கல்யாணம் ஆகிடுச்சு தான இப்போ வரதுக்கு என்ன?”

அது வேணாம்! என மான்வி ஸ்கூட்டி பக்கம் செல்ல, டென்ஷன் பண்ணி சீன் போடாத வா! என அவளின் கை கோர்த்து இழுத்து சென்றான். ஆனால் கண்ணனுக்கு தெரிய வில்லை. இது தான் அவளின் முதலும் கடைசியுமான ஜீப் பயணம் என்று. 

ரேமண்ட்ஸ் அழைத்து சென்றவள். பார்த்து பார்த்து அவனுக்கு தேர்வு செய்தாள். நேவி ப்ளூ கோட், பிங்க் கலர் சேர்ட், கோட் கிளிப், டை அதற்கு ஏற்ப காலணிகள் என அனைத்தையும் தேர்வு செய்தாள். கூலிங் கிளாஸஸ் முதற்கொண்டு. 

ஹே ட்ரையல் காட்டு என அவனை அனுப்பி வைத்தாள். பத்து நிமிடங்கள் ஆனது. இன்னும் என்ன டா பண்ற?.. 

இது இந்த சர்ட் பட்டன் போட முடியல என கைகளை திருப்பி போட்டு கொண்டிருந்தான். 

இரு வரேன். என மெல்ல கைகளில் உள்ள பட்டனை போட்டு விட்டாள். கொஞ்சம் இறுக்கமா இருக்கு. டைட் தான் பட் ஃபிட் இப்போ பாரு என கண்ணாடியில் காட்டினாள். அவளின் கை அவனது தோல் மேல் முட்டு கொடுத்து நிற்க, அள்ளி முடிந்து கலைந்த மான்வியின் கூந்தல் புது மஞ்சள் தாலி, நெற்றியில் குங்குமம் கைகளில் கலகலக்கும் வகைகள், விரல்களில் மருதாணி வாசம். கூந்தலில் பூ வாசம் கூடவே உறைந்த நெய்யின் வாசம் என்று ஒரு வித போதையை கொடுத்தது அவளின் வாசம். வெறும் மான் இல்ல கஸ்தூரி மான் போல.. 

இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று வருடி சென்றது. நிலை கண்ணாடியில். அதே நேரம் மெல்ல திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இந்த நிசப்தம் உள்ளுக்குள் ஹார்மோன் மாற்றங்களை ஒரு பக்கம் நிகழ்த்தி கொண்டிருந்தது. அவனது மூச்சு காற்று அவளுக்கு அவஸ்தையாகி போக..  அவளின் அருகாமை அவனுக்கு மோகம் முட்டியது. 

க்கும் என களைத்தது கண்ணன் தான். நீ வெளியே வெயிட் பண்ணு நான் மாத்திட்டு வரேன் என அனுப்பி வைத்தான். 

அதன் பின் அவளின் உடைகளை வாங்கி கொண்டு நேராக சாப்பிட அழைத்துச் சென்றான். வஞ்சனை இல்லாமல் அள்ளி கட்டி உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் சைவத்தை. அளவாக சாப்பிட மாட்டாள் மான்வி. எது பிடிக்கிறதோ அதை கேட்டு வாங்கி தின்பாள். 

அவள் சாப்பிடுவதை கூட ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். அந்த தாழம்பூ குங்குமம் ஒரு பக்கம் தலைவனை மயக்கி கொண்டிருந்தது. இந்த நாள் இருவருக்குமே புது வித அனுபவத்தை கொடுத்து, உள்ளுக்குள் நீங்க இடத்தில் நின்றது.

இருவரும் வீடு வர இரவு பத்து மணி ஆனது. மான்வி நேராக யாத்ரா மற்றும் குட்டி கார்வண்ணனை அழைத்துக் கொண்டு தோழிகளுடன் உறங்க சென்று விட்டாள். 

கண்ணன் அவளின் அறையில் அவளின் துப்பட்டாவை சுற்றி முகர்ந்து கொண்டே அந்த வாசத்தில் உறங்கினான். அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. காலை, மதியம் என இரண்டு உணவு வேளையும்  ஆர்டர் செய்ய பட்டது. 

இதில் மைதிலி மற்றும் மல்லிகா இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வில்லை. அவர்கள் தனியாக வீட்டிலேயே உணவு சமைத்து சாப்பிட்டார்கள். 

கோபி மைதிலியிடம் கண்ணு புறப்படு மா! ரிசப்ஷன் இருக்கு யாத்ரா குட்டிய கிளம்ப வை நேரமாகுது பாரு என அழைத்தார். 

மதியாதோர் தலைவாசல் மிதியாதேன்னு பழமொழி இருக்கு. நான் வர மாட்டேன் என்றாள் மைதிலி. 

என்ன மா மைதிலி நான் மாப்பிளைக்கு முறையா பத்திரிக்கை வச்சு உங்களுக்கு மூணு பேருக்கும்  துணி எடுக்க பணம் கொடுத்திட்டு வந்தேன் மா! நான் உன்னை அழைக்காம எப்டி தங்கம் விடுவேன்? என கோபி உறுக்கமாக பேசினார். 

தயவு செஞ்சு நிக்காதீங்க போங்க பா! என மைதிலி கூற, டாடி நீங்க வாங்க! என மான்வி கை பிடித்து இழுத்து வந்தாள். 

கோபி வலி வேதனையுடன் நின்று கொண்டிருக்க, அவளை விடுங்க பா! நம்ம யாத்ரா குட்டிய தூக்கிட்டு போலாம். நான் நேத்து யாத்ராவுக்கு ட்ரெஸ் எடுத்தேன். வாங்க போலாம் அவள் கிடக்குறா! என்றாள் மான்வி. 

இல்ல தங்கம் நான் பத்திரிக்கை.. என அவர் சொல்ல வர…  நான் சுபாஷ் கிட்ட பேசிட்டேன் இவள் ஆடாட்டும் விடுங்க நம்ம போலாம் என மான்வி சமாதான படுத்தி விட்டு கிளம்பினாள். 

இரண்டு மணிக்கு மண்டபத்துக்கு கிளம்பினார்கள். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் மான்விக்கு ஒப்பனை செய்ய பட்டது. இன்னொரு பக்கம் கண்ணன் கோட் ஷூட்டில் டிப் டாப்பாக தயாராகி கொண்டிருந்தான். மலர், மோகன் அதே போல தயாராகினார்கள். 

பொன்மலர் லெகாங்காவில் தயாராக, மோகன் கிரே கோட் ஷூட்டில் தயாராகி கொண்டிருந்தான். மோகனின் அலுவலக வட்டங்கள், மலரின் கல்லூரி வட்டங்கள், கார் முகிலின் கூட பணிபுரிபவர்கள், இந்த பக்கம் மான்வியின் கல்லூரி தோழர்கள், சொந்த பந்தங்கள், கோபியின் சார் பதிவு பணியாளர் வட்டம்  கண்ணனின் போலீஸ் டிபர்ட்மென்ட் வட்டங்கள் என கிட்ட தட்ட 2500 பேருக்கு மேல் கூட்டம் என அழைக்கப்பட்டிருந்தார்கள். 

ஃபோட்டோ கிராபர் மான்வி மற்றும் கண்ணனிடம் வந்து கபில் போட்டோ ஷூட் பண்ணனும் மோகன் சார் ஆல்ரெடி அவங்க பேர் கூட பிடிக்க ஆரம்பிச்சுட்டார். நீங்களும் வாங்க சார் மேம் என அழைத்தார்கள். 

பிடிச்சே ஆகணுமா? என்னும் ரீதியில் அவஸ்தையான தொனியில் கண்ணன் பார்த்தான். 

அவ்விடத்துக்கு மோகன் வந்து என்னாச்சு மச்சான் என கேட்க, ஒன்னும் இல்ல என கண்ணன் சமாளித்து நின்றான். 

சீக்கிரம் சார் அங்கே பின் பக்கம் செட்டு போட்டிருக்கு என அவர் பார்த்தார். மான்வி அவனது அருகில் வந்து என்னாச்சு எதுக்கு கூப்பிட்ட? என கேட்டுக் கொண்டே வந்தாள். 

அது இவங்க எதோ சொல்றாங்க? அதான் உன்னை கூப்பிட்டேன். என கண்ணன் போனை நோண்டினான் எதுவுமே தெரியாதது போல.. 

“மேம் கபில் ஷூட் இருக்கு. அதான்”

இப்பவேவா? 

ஆமா மேம் கெஸ்ட் வரதுக்குள் இந்த செசன முடிக்கணும். நைட்டு கொஞ்சம் எடுக்கணும் என கூறினான் போட்டோ கிராபர். 

கண்ணன் அப்படியே நின்று கொண்டிருக்க, போலாம் வா என அழைத்தாள். 

என்ன போலாமா?  என கண்ணன் உள்ளுக்குள் குதூகலத்துடன் அதை வெளியே மறைத்துக் கொண்டு கேட்டான். 

ஹான் போலாம் வா! என உடையை சரி செய்த படி சென்றாள். 

மேடம் கன்னத்தில் கிஸ் பண்ணுங்க, பின்னாடி இருந்து சாரை கட்டிக்கோங்க, சார் மேடமை தூக்குங்க, சார் மேடத்தின் சாரி முந்திய பிடிச்சு இழுங்க, மூக்கும் மூக்கும் முட்ட நில்லுங்க, கட்டி அணைச்சுக்கங்க என ஒவ்வொன்றையும் ரசித்து செய்தது இரண்டு மனதும். 

இப்படியே ஒரு மணி நேரம் ஆனது. நன்றாக இருள் பூசி இருக்க, முகிலன் நிறைய முறை போன் செய்து விட்டான். வர சொல்லி. 

“சார் இந்த செசன்ல லாஸ்ட் கிளிக் இது தான் லிப் டு லிப் கிஸ் பண்ணுங்க மீதி நைட் ஒரு டென் கிளிக் இருக்கு” என கூறினான். 

கண்ணன் – மான்வி…?

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.