அத்தியாயம் -30
மான்வி அதே இடத்தில் இன்னும் அதிர்ச்சி குறையாமல் நிற்க, கண்ணனோ எதையும் கண்டுகொள்ளாமல் படுக்கையில் விழுந்தான். ‘முத்தம் கொடுத்தா என்ன பண்ணிடுவா? மிஞ்சி மிஞ்சி போனால் கன்னத்தில் ஒரு அடி கொடுப்பாளா? வாங்கிப்போம்’ என்ற வைராக்கியத்துடன் தான் திட்டம் போட்டு உள்ளே வந்தான். ‘அப்படியே மேட்டர்..’
‘என்னை இன்னிக்கு கொண்ணு என்னோட குடலை உருவி மாலையா போட்டுக்குவா! பேருக்கு தான் மான்வி ஆனால் மினி ரவுடி.’ என உள்ளம் யோசிக்க, அவள் பேசிய அத்தனையையும் மறந்து விட்டான். ஒரு பக்கம் நந்திதா மற்றும் சரவணன் நினைவுகள் அது மட்டுமில்லாமல் நந்திதா தன்னை காதலிக்கிறாள் என சொன்னதை நினைக்க வேற்று பெண் போல தோன்றியது. ‘ஏனோ நந்திதாவிடம் பேச பிடிக்க வில்லை. என்னை மினி ரவுடிக்கே பிடிக்கல. இந்த நந்திதாவுக்கு எப்டி பிடிச்சது? சரவணன் எப்டி இருக்கான்? அப்படியே மதுர படத்துல வர கலெக்டர் விஜய் மாதிரி மாசா இருக்கான். ஆனால் நானே காஞ்ச கருவாடு மாதிரி இருக்கேன். ஏன் இவள் இப்படி சொன்னா. சரி அடுத்த வேலையா அதை க்லியர் பண்ணனும்’ என முடிவெடுத்தவன். தனது மான்குட்டி இல்லல்ல மினி ரவுடியை நினைத்துக்கொண்டு உறங்கினான்.
ஆனால் மினி ரவுடியோ இங்கே மூலையில் முனி பேய் போல அதே இடத்தில் அமர்ந்தது. ‘எவ்ளோ தைரியம் முத்தம் கொடுக்க? வெட்டி போடணும் அவன் வாய!.. ச்சீ!.. அந்த நந்திதாவை மயக்கி இருக்கான்னா? இவன் சாதாரண ஆள் இல்ல. பொறுக்கி. அதான் கார் வண்ணன்னன்னு பேர் வச்சிருக்கான். கருவாயன் அவளை மட்டுமா மயக்கினான்? என்னையும் மயக்கிட்டான். இவன் மோசமானவன். இவன் உனக்கு வேணாம் டி மான்வி. அந்த நசுங்கி போன நந்திதாவையே கட்டிக்… இவன் எவளை கட்டிக்கிட்டா எனக்கென்ன? நாளைக்கே இந்த இடத்தை immediate ஆ காலி பண்ணனும். முத்தம் கொடுக்கறயா? உன்னை இதுக்கு தனியா பழி வாங்கிக்கிறேன்.’ என பிதற்றி கொண்டே அதே இடத்தில் அப்படியே உறங்கினாள் மான்வி.
இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணன் தன் நிறத்த்தினால் மான்விக்கு பிடிக்கவில்லை தன்னை பழிக்காமல் தட்டி கழிக்கிறாள் என நினைத்து புளுங்குகிறான். மான்வி இடையில் வந்த நந்திதாவ நினைத்து புழுங்கி துடிக்கிறாள்.
இப்படி இருவரும் ஒருவரை நினைத்து துடிக்கிறார்கள். யாராவது ஒருவர் வெடித்து உண்மையை சொல்லி விட்டாள் போதும். அதன் பின் ஒவ்வொரு நாட்களும் சக்கரை தண்ணீராக இனிக்கும்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. மான்வி பீரோ மூலையில் இல்லை. படுக்கையில் இருந்தாள். அவள் மேல் போர்வை இருந்தது. ‘நான் எப்படி இங்கே வந்தேன்? அந்த கருவாயன் என்னை!..’ என போர்வையை விலக்கி பார்த்தாள்.
ஒரு பெரு மூச்சுடன் நெஞ்சை பிடித்தவள். மெதுவாக அறையில் இருந்து எழுந்தாள். கண்ணன் அவளுக்கு பூஸ்ட்டை எடுத்துக் கொண்டு நுழைந்தான். “இந்தா அம்மா கொடுத்தாங்க”
“கதவை லாக் பண்ணு!” என உத்தரவிட்டாள். அதிகாரம் தூள் பறந்தது. கண்ணன் அவளின் கழுத்தை பார்க்க, எங்கே பார்க்கிறான் என குனிந்து பார்த்தவள் தாலியை எடுத்து ஜாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டாள்.
“இருக்கும் இருக்கும் கட்டினவன் பார்க்க கூடாதா!” என லுக்கு விட்டான்.
நான் இன்னிக்கே ஜாயின் போறேன். சோ உன் அம்மா கிட்ட பேசி ஏற்ப்பாடு பண்ணிடு. நேற்று அவள் சும்மாதான் ஒப்புக்கு சொல்கிறாள் என நினைத்தான். ஆனால் இன்று உண்மையாகவே ஜாயின் பண்ண போறா!.
“சரி நான் பார்த்துக்கிறேன். ஆனால் போலீஸ் பங்களாவுக்கு வந்திட்டு போ! உன்னோட திங்க்ஸ் எல்லாம் நான் அங்கே ஷிப்ட் பண்றேன்.”
“No அதை மட்டும் பண்ணாத!” என திடுக்கிட்டாள் மான்வி.
ஏன்? என கண்ணன் கேட்க, ப்ச் எத்தனை முறை சொல்றது? எனக்கு அங்கே உன்னோட பொண்டாட்டியா? இதெல்லாம் செட் ஆகாது. நாளைக்கு அதே வீட்டுக்கு உன்னோட.. வேணாம் விடு..
“மான்வி நீ என்னை ரொம்ப அவமான படுத்துற டி! கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட ஆகல ஏன் டி இப்படியெல்லாம் பேசுற?”
“நான் இந்த வீட்டை விட்டு எங்கேயும் வரமாட்டேன். என்னோட திங்ஸ் இங்கே தான் இருக்கணும். என்னை கம்பள் பண்ணாத” என்று விட்டு குளிக்க சென்றாள்.
இதோ கிளம்பிவிட்டாள். மேலிருந்து கீழே எட்டி பார்த்தாள். வாசலில் முகிலின் பைக் இருந்தது. வெளியே ஜீப்பும் இருந்தது. “என்ன பார்த்திட்டு இருக்க? அம்மா உன்னை காலையில் இருந்து தேடுறாங்க? வீட்டுக்கு அண்ணி வந்தால் பொறுப்பு சமையல் எல்லாம் கை மாறும்னு பார்த்தால் இங்கே நீ என்ன பண்ற?” என முகிலன் அதிகாரமாக கேட்டான்.
“உங்க அம்மாவுக்கு வேலைக்கு ஒத்தாசை செய்யனுன்னா கல்யாணம் பண்ணிக்கோ! உன் பொண்டாட்டி வந்து செய்யட்டும். நான் சும்மா தான் இருப்பேன். போடா!” என்றவள் கீழே இறங்கினாள்.
முகிலன் பேச்சற்று பார்த்தான். கண்ணன் வெளியே வர, “அவள் என்ன பேசிட்டு போறாள்ன்னு கேட்டியா நீ?”
“என்ன பேசிட்டு இருந்தீங்க? நான் கவனிக்கலயே?” என்றான் கண்ணன். அதற்கும் மேல் முகிலனால் பேசவா முடியும். அவளுக்கு மேல் இருக்கிறான் இவன்?
புடவையை இழுத்து சொருகி கொண்டு கண்ணனுக்கு உணவு பரிமாறினாள் மான்வி. தாழிப்பு கரண்டியில் சட்னி தாளித்து கமகமக்க இட்லி எடுத்து வைத்தாள்.
கண்ணு நீ போயி அவன் கூட சாப்பிடு. இருக்கிறது நாலு பேர் இந்த வேலை கூட நான் செய்யலன்னா சுகர் பிரஸர் வந்திடும் போ பொண்ணு. நான் எதுக்கு இருக்கேன் என மகேஷ்வரி அனுப்பி வைத்தார்.
மூவரும் உணவு முடிக்க, வளையல் குலுங்க அவன் தொடையை கிள்ளினாள் மான்வி.
ப்ச் என்ன டி?
சொல்லு! என கண்களால் சைகை செய்தான்.
மா நானும் இவளும் போயிட்டு..
அதென்ன டா இவள்? என்ன பழக்கம் இது? இந்த பேச்செல்லாம் ரூமுக்குள்ள வச்சுக்க.. என மகேஸ்வரி கத்தினார்.
நாங்க ரெண்டு பேரும் என கண்ணன் சோர்வுடன் கூற, “என்ன சொல்லு? சின்னவனுக்கு லஞ்ச்பாக்ஸ் பேக் பண்ணனும்.”
“நாங்க அடுத்த வாரம் வரோம். இப்போ வேலை இருக்கு எங்களுக்கு.”
தாராளமா கூட்டிட்டு போ! எனக்கு எந்த பிரச்னையும் இல்ல என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
முகில் கல்லூரிக்கு கிளம்பி வெளியே வர, வண்டியை காணவில்லை.
மா எங்கே வண்டி? என காட்டு கத்தாக கத்தினான்.
சார் தான் மேடம ட்ராப் பண்ண எடுத்திட்டு போயிருக்கார் என முத்து கூறினான். மா உன் மருமக வேணும்னு பண்றா ஒழுங்கா இருக்க சொல்லு! என கத்திக் கொண்டே உள்ளே சென்றான் முகில்.
எனக்கு ஜீப்ல எப்போ தோணுதோ அன்னிக்கு வரேன் இப்போ பைக்ல கொண்டு போயி விடு இல்லன்னா நடந்து போறேன் என மான்வி கிளம்பினாள். வரேன் இரு டி! என கூட்டி வந்தான் பஸ் ஸ்டாப் வரை..
இறங்கியதும் எப்பொழுதும் போல உரிமை பட்டவள் அவனது வேளட்டை எடுத்து அதில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டாள்.
நான் சம்பாதிக்கிறதே உனக்கு தான் செல்லம். நீ எவ்ளோ வேணாலும் எடுத்துக்க என்பது போல பெருமிதமாக பார்த்தான் கறுவாயன்.
“கிளம்பு” என மான்வி நகர…, அவளின் கையை பிடித்தான் தவிப்புடன்..
ஹே பாஸ்டாப்ல நின்னுட்டு இருக்கோம். நாமக்கல் DSP பொண்ணை கை பிடிச்சிட்டு நிக்கிறான்ன்னு வர போகுது விட்டு தொலை.
ஆல்ரெடி வந்திடுச்சு என சொல்லிவிட்டு கிளம்பினான்.
என்ன வந்துச்சு என மான்வி மாவட்ட செய்திதாளை வாங்கி பார்த்தாள். கடைசி பக்கத்தில் மான்வி கண்ணன் இருவரும் போலீஸ் படையுடன் வரவேற்பில் போஸ் கொடுத்தது இருந்தது. கசக்கி கிழித்து எறிந்தாள்.
ஈரோடு பஸ் காத்துக்கொண்டிருக்க பேருந்து வரை சென்றவள் ரிவர்ஸ் வந்து மீண்டும் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு சென்றாள் மான்வி. அப்போ பேர் மான்வியா இருந்தாலும் மனசு குரங்கு போல..
***
ஃப்ரீ பீரியட்டா சார்? என கேட்டபடி வந்து அமர்ந்தார் ஜெகன். ஒன் ஆஃப் தி பேக்கல்ட்டி. ஆமா சார் என மாதிரி தேர்வு நடந்து முடிந்திருக்க விடை தாள்களை திருத்தி கொண்டிருந்தான் கார் முகிலன். நடுவில் இடை நிற்றல் ஏற்பட்டது. 22MCH1073 யார் என அட்டனன்ஸ் எடுத்து பார்த்தான். “தேன் தமிழ்”..
பேப்பரையே வெறித்து பார்த்தான். திமிர் இல்ல அகங்காரம் கொழுப்பு எல்லாமே அதிகம். இவள் எப்படி போனால் எனக்கென்ன. என்னோட வேலைய பார்க்கிறேன் என முகிலன் சொல்லிக் கொண்டான். அவளது பேப்பர் மட்டும் திருத்தவில்லை.
நேராக அடுத்த ஹவர் கிளாசுக்கு சென்றான். அனைவரும் எழுந்து நின்று அமர, “ஹே முகில் சார் கிளாசுக்கு வந்தாச்சு!” என பானு உசுப்ப.. அனைவரும் அமர்ந்ததும் தடாலடியாக விலுக்கென எழுந்து நின்றாள் தேன் தமிழ்.
சரி என்ன பண்ணிட போறான். என மீண்டும் அமர்ந்தாள்.
“நீ ஓவரா பண்ற டி! அவர் அமைதியா இருக்காருன்னு சாதாரணமா எடை போடாத!” என ஜெஸி காதை கடித்தாள்.
“போதும் போதும் விடு மரியாதையெல்லாம் கொடுத்தாச்சு” என தமிழ் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“மாடல் டெஸ்ட் பேப்பர் கரெக்சன் முடிஞ்சது. ஏற்கனவே யாராவது பேப்பர் கொடுத்தாங்களா?”
“நோ சார் எப்போவும் நீங்க தான் பர்ஸ்ட் கொடுப்பீங்க?” என முதல் பெஞ் மாணவிகள் கோர்ஸ் கொடுத்தார்கள்.
தமிழ் எதையும் கண்டு கொள்ளாமல் அவளது நோட்டில் விஸ்வா என எழுதி அழகு பார்த்து அதை கிறுக்கி மறைத்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு மாணவராக அவர்களின் பேப்பரை வாங்கி வந்தார்கள். ஜெஸ்ஸி, பானு, பிரபு, சூர்யா, அருண், விக்னேஷ், தமிழ் செல்வன், வேல்முருகன், சதீஸ், பூரணி, சுபத்ரா, கார்த்திகா, இந்து என மாணவ மாணவிகள் அனைவரும் வரிசையாக அவரவர் பேப்பரை வாங்கிகொண்டார்கள்.
எல்லாரும் செக் பண்ணிங்கோங்க எனி டோட்டல் மிஸ்டேக் இல்ல தவறா திருத்தியிருந்தால் வாங்க கரக்சன் பண்றேன் என சொல்லியபடி அமர்ந்தான் கார்முகிலன்.
ஜெஸி ஒரு பக்கம் பானு ஒரு பக்கம் பேப்பரை புரட்டி கொண்டிருக்க, என்ன டி பார்க்கரீங்க? என தமிழ் கேட்டாள்.
கில்லி தான் மார்க் போட்டிருக்கார். உனக்கு எவ்ளோ மார்க்? என பானு கேட்க, “எனக்கு இன்னும் பேப்பர் வரலயே!”
“வரலையா? எக்சாமுக்கு வந்த தான!”
வந்தேனே! இவன் கிட்ட கேட்கணுமா? எல்லாம் என் நேரம் என எழுந்தவள். “சார் என்னோட ஆன்சர் சீட் வரவேயில்லை” என தமிழ் கூறினாள்.
அனைவரும் திரும்பி பார்க்க, முகில் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான். திமிர்பிடிச்சவன்! இவனுக்கு ஒரு கேடு வராதா? என தமிழ் உள்ளுக்குள் முனகினாள்.
“சார் என்னோட ஆன்சர் சீட் வரல” என சத்தமாக கத்தினாள்.
“மொட்டையா சொன்னால் எப்படி தெரியும்? உன்னோட நம்பர் சொல்லு கேர்ள்!”
22MCH1073 என தேன்தமிழ் கூற, “ம்ம் இருக்கு மைதிலி இதை பாஸ் பண்ணு மா” என ஆன்சர் சீட்டை நீட்டினான் முகில்.
மைதிலி பேப்பரை திருப்பி பார்த்தவள். “சார் கரெக்சன் பண்ணலயே!” என்று கூற, நீங்களே பிரிச்சு பாருங்க நான் ஏன் கரெக்சன் பண்ணலன்னு தெரியும். என்று நன்றாக இருக்கையில் சாயிந்த படி பார்த்தான் கார்முகில்.
அனைவரும் தமிழை திரும்பி திரும்பி பார்த்தார்கள். “ஹே என்னாச்சு? ஏன் சார் பேப்பர கரெக்சன் பண்ணல” என அவர்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.
என்ன டி பண்ணி வச்ச? என ஜெஸி கேட்க.. அகிலா பேப்பரை பார்த்து விட்டு, “காயத்ரி மேம் போர்ஸன் மட்டும் தான் தமிழ் எழுதியிருக்கா! முகில் சார் நடத்தின ரெண்டு லெசன்லயும் எந்த பதிலும் எழுதல”
திருதாட்டி போடா! என தமிழ் நிமிர்ந்து நின்றாள்.
மைதிலி உங்க கிளாஸ்மேட் காயத்ரி மேடம் கிட்டயே கரெக்சன் வாங்கி என்றி பண்ணிக்கட்டும். எனக்கு அவங்க பேப்பர்ல எந்த வேலையும் இல்ல. என்னோட வேலைய மட்டும் தான் நான் செய்வேன். என்றான் கார்முகிலன்.
தமிழ் ஆவேசமாக எழுந்தவள் நேராக மைதிலியிடமிருந்து அவளது ஆன்சர் சீட்டை வாங்கிக் கொண்டாள்.
“ஹே லூசு என்ன பண்ணி வச்சிருக்க?” என ஜெஸி பேப்பரை வாங்கி பார்த்தவள் தமிழை முறைத்தாள்.
இந்த ஆள் ஒன்னும் என் பேப்பரை திருத்த வேண்டாம். பெரிய மாஸ்டர் விஜய்ன்னு நினைப்பு அவனும் அவன் முகரையும் எரிச்சல் மயிராகுது. என தமிழ் கண்டபடி புலம்பினாள்.
“இப்போ மேடம் வீட்டுக்கு போயி கரெக்சன் வாங்க போறியா?” என பானு கேட்டாள். மேடம் வருவாங்க அப்போ வாங்கிப்பேன்.
“ஹே மேடம் ரிசைன் பண்ணி ஒரு வாரமாச்சு இனி வர மாட்டாங்க. என்ன டி பண்ணுவ?” என பானு ஜெஸி இருவரும் கேட்டார்கள்.
டிக் என அந்த ஹவர் முடித்து பெல் அடித்தது.
கிளாஸ் ரெப் பேப்பர் கலக்ட் பண்ணி வையுங்க லஞ்ச் முடிஞ்சு ஃபர்ஸ்ட் ஹவர் கிளாஸ்ல வாங்கிக்கிறேன் என கிளம்பினான் முகிலன்.
தமிழ்…?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels