அத்தியாயம் – 5

என்ன மா உன்னோட தம்பி வந்தாச்சா என கண்ணன் தன் அன்னையிடம் பேசியது ஸ்பீக்கரில் கேட்டது. 

டேய் கண்ணா என்ன பேசுற? உன்னோட மாமா டா! என கூறிய மகேஷ் அங்கே நின்று கொண்டிருந்த மான்வியை பார்த்து, மானு குட்டிஇஇஇ! என அழைத்தார். 

அத் அத்தை என தயங்கி கொண்டே திரும்பினாள்.  கண்ணனின் காதுகள் கூர்மையானது. ஓ அவளும் வந்திருக்கா! அப்போ என்னை கட்டிக்க ஒத்துக்கிட்டாலா என தோன்றியது கார் வண்ணனுக்கு. 

அப்போ அவனுக்கு நம்ம பேசினது கேட்டிருக்குமா? என நினைத்த படி நின்றாள் மான்வி. 

டேய் இரு டா! என மகேஷ் பேசி முடிப்பதற்குள்

மா நீ வந்தவங்கள கவனி என போனை கட் செய்தான் கண்ணன். 

மான் குட்டி!  எதுவும் வேணுமா கண்ணு என மகேஷ் கிச்சனில் வேலை செய்து கொண்டே  கேட்க..  இல்லைங்க அத்தை உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் நீங்க பாருங்க நான் மலர் அறைக்கு போறேன் என கூறினாள். 

சரி டா பொண்ணு! என மகேஷ் காபி டீ பலகாரம் என அனைத்தையும் வேகமாக செய்து கொண்டிருந்தார். கண் மூடினால் அவள் மேல் கோபம் மட்டுமே வந்து சேர்ந்தது. இத்தோடு 15 வருடங்களுக்கு மேல் ஆக போகிறது.  நாளைக்கு போயாகனுமா? என உள் மனம் கேள்வி கேட்டது. வந்தவங்க முதலில் கிளம்பி போகட்டும் அதுக்கு அப்புறம் முகில் கிட்ட பேசணும் என யோசித்து விட்டு அவனது வேலையை ஆரம்பித்தான் கண்ணன். 

“மலர் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா?” 

பூவை சரி செய்து கொண்டே எதிரில் நின்ற மான்வியை பார்த்தவள். உங்களை விட சின்ன பொண்ணு தான் நான். என்னை வாங்க போங்க சொல்ல வேணாம்  என்றாள் பொன்மலர். 

சரி என மான்வி தலை ஆட்டினாள். 

உங்க வீட்டுக்கு நான் வரது பிடிக்கல சரி தானே! என பொன்மலர் கேட்டாள். 

ஹே நான் என்ன கேட்கிறேன்? நீ என்ன பதில் சொல்ற? என மான்வி ஒரு நொடியில் கோபமானாள். 

அப்பப்பா இத்தனை கோபமா உங்களை பார்த்தால் அப்படியே மல்லிகா அத்தை மாதிரி இருக்கு. என்றாள் பொன்மலர். 

அது கொஞ்சம்… சாரி என மான்வி சிணுங்கினாள். 

மலர் ஒரு பெரு மூச்சை விட்ட படி, எங்க வீட்டில் எல்லாருக்கும் சம்மதம்  அதனால. 

“மோகனை உனக்கு பிடிக்கலயா?”

பொன்மலர் சிரித்த படி, எனக்கு நிறைய படிக்கணும். இப்போதைக்கு இதை நான் யோசிக்கல என்றாள். 

கவலை வேணாம் என் அண்ணன் படிக்க வைப்பான். உனக்காக எங்க அம்மாவை எதிர்த்திருக்கான். என்றாள் மான்வி. 

இதை பொன்மலர் மனதில் குறித்து கொண்டவள். அவளின் கையை பிடித்து இந்த கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பமா? என ஆர்வத்துடன் முகத்தை பார்த்தாள். 

மான்வி அவளை பார்த்து ஏன் கேட்கிற மலர்? 

கல்யாண விசயத்தில் யாரையும் வற்புறுத்த கூடாது அண்ணி! அதனால் தான் கேட்கிறேன். 

அண்ணியா? என மான்வி கண் விரித்தாள். 

பின்ன எப்டி கூப்பிட? நீங்க என் அண்ணனை என மலர் ஆரம்பிக்க, அதற்குள் மலரு எல்லாமே ரெடி வா மாமாவும் மோகனும் வெயிட்டிங் சீக்கிரம் என அழைத்தார்.

வா மலர் போலாம் என அந்த பேச்சை அத்தோடு நிறுத்தி விட்டு வெளியே சென்றார்கள்.

 பச்சை வண்ண புடவையில், வட்ட பொட்டு, மல்லிகை சரம். நெற்றியில் சந்தன கீற்று என தங்க நிறமாக ஜொலித்து கொண்டு கையில் காபி தட்டுடன் வந்தாள் பொன்மலர். 

முகில் கிட்ட பேசி கொண்டே பார்வை மொத்தத்தையும் பொன்மலரின் மீது பதித்தான் மோகன். நிஜமாகவே அவள்  பொன்மலர் தான். தங்கத்தில் மலர் என உவமைக்கு உயிர் கொடுத்தால் அது பொன்மலராக தான் இருக்க வேண்டும். 

பாப்பா! என வாஞ்சையுடன் அழைத்தார் கோபி. காபி எடுத்துக்கோங்க மாமா! என நீட்டினாள். மான்வி தன் அண்ணனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். 

அடுத்ததாக மான்விக்கு கொடுத்தாள். அடுத்து மோகன் இருக்க ஒரு வித பதட்டத்துடன் நீட்டினாள். எதுவும் பேசாமல் ஒன்றை எடுத்துக் கொண்டான். பாப்பா அதை அம்மா கிட்ட கொடுத்திட்டு இப்படி வந்து உட்காரு என முகில் அழைக்க.. அண்ணா என தயங்கினாள் பொன்மலர். 

நீ விருப்ப பட்டதாக அண்ணன் சொன்னான். அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா? அம்மா உன்னை வற்புறுத்தி ஒத்துக்க வச்சதா? என பெரிய குண்டை தூக்கி போட்டான் முகில். 

மோகன், கோபி, மகேஷ் என அனைவரும் ஒரு வித பதட்டத்துடன் பார்க்க, பொன்மலர் அங்கே எதுக்கு உட்காரனும். நீ வா அண்ணா பக்கத்தில் உட்காரு. என கையை பிடித்து அமர வைத்தாள் மான்வி. 

முகில் அவளை முறைத்து பார்த்தான். சும்மா இருப்பாளா அவள்? என்ன முகில் முறைக்கிற? அவளுக்கு என் அண்ணன் மேலே விருப்பம் இப்போவே உன் முன்னாடி சொல்லுவா! என்றவள். ம்ம் சொல்லு மலர். என மான்வி கூறி விட்டு பார்த்தாள். 

விருப்பம் தான்! என சொல்லி முடிப்பதற்குள் தொண்டை கவ்வி கொண்டது மலருக்கு.

மகேஷுக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. மோகன் எட்டி குதிக்காத குறை தான் முகில் தன் அன்னையை முறைத்து விட்டு போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். 

மகேஷ்வரி கோபியின் அருகில் வந்தவர். தம்பி அவன் அப்படி தான் நீ ஒன்னும் நினைச்சுக்காத நான் பெத்ததில் ரெண்டும் எப்போ எப்படி மாறும்ன்னு சொல்ல முடியாது என்றார். 

அப்பா வாங்க நம்ம பின் பக்கம் போகலாம். அத்தை அந்த ஊஞ்சல் இருக்கா! என மோகன் மற்றும் பொன்மலர் இருவரும் பேசுவதற்கு ஒரு சூழலை உருவாக்கி கொடுத்து விட்டு நகர்ந்தாள். 

மோகன் மற்றும் பொன்மலர் இருவர் மட்டுமே இருந்தார்கள். அவள் உள்ளங்கை வியர்த்து வழிந்தது. என்ன பேசுவது என தெரிய வில்லை. மிகவும் பதட்டமாக உணர்ந்தாள் பொன்மலர். 

தங்கம் என்னை பிடிச்சிருக்கா டி இல்ல அத்தைக்காக சொல்றயா? என அவளின் கையை பிடிக்க வந்தான் மோகன். 

பொன்மலர் அவ்விடத்தை விட்டு எழுந்தவள். என்னை நீங்க நினைப்பு வச்சிருக்க அளவுக்கு உங்களை எனக்கு நினைப்பு இல்ல. எங்க அம்மாவுக்காக இதுக்கு நான் ஒத்துக்கல. 

அப்போ உனக்கு ஓகே வா என கண்களில் ஆர்வமாக பார்த்தான் மோகன். 

அவன் முன் கையை நீட்டினாள் பொன்மலர். அவன் பிடித்து கொண்டான் உடனே. 

 உங்க கிட்ட என் கைய கொடுக்க காரணம் மான்வி என் அண்ணன் கைய பிடிக்கணும்ன்ற காரணத்துக்காக தான் என்றாள். 

மோகனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவனது முகம் கொஞ்சம் மாற, தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு என் அண்ணனோட வாழ்க்கை தான் முக்கியம் அதுக்காக தான் இந்த கல்யாணம். என் அம்மா கூட எங்க அண்ணனுக்கு அடுத்து தான். எனக்கு எல்லாமே எங்க அண்ணனுக தான் என்றாள். 

அப்போ கண்ணனுக்காக தான் இந்த கைய பிடிக்கற? என மோகன் இயலாமையுடன் கேட்டான். 

“நீங்க எதுக்காக என்னை  கட்டிக்கிறீங்க?”

உன்னை சின்ன வயசில் இருந்து பிடிக்கும். உன்னை கட்டிக்க விருப்பம் என்றான் மோகன். 

அப்டியா? சரி என்றாள். 

நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்லையே! 

படிக்கிற வயசுல எனக்கு இந்த கல்யாணம் அவசியாமான்னு தோணுது. 

ஆனால் அன்னனுக்காக ஒத்துகிட்ட அப்படி தானே! 

உங்க கூட பழகாமல் எப்டி சொல்லட்டும்? எனக்கா தோணும் போது சொல்லுவேன் உங்களை பிடிச்சிருக்குன்னு என்றவள். கைய பார்த்தாள். 

மோகன் விட்டு விட்டான். இரண்டடி எடுத்து வைத்தவள். உங்க போன் நம்பர் வேணும் கொடுங்க என அவளின் போனை நீட்டினாள். மோகன் வாங்கி எண்களை போட்டு நீட்ட.. 

“நீங்களே சேவ் பண்ணிடுங்க”

“எப்படி சேவ் பண்றது? I mean என்ன நேம்ல பண்றது?” 

“Futureன்னு போடுங்க” என்றாள். 

மோகன் அவளின் முகத்தை பார்க்க, என்னாச்சு போடுங்க என தைரியமாக கூறினாள். 

மோகன் உள்ளுக்குள் விருப்பத்தை இப்படி கூட சொல்லலாமா என  சிரித்த படி போனை நீட்டினான். ஒரு ரிங் விட்டு..  

முகில் அண்ணன் பார்த்தால் திட்டும் நீங்க கொள்ளை பக்கம் போங்க நான் போறேன் என நகர்ந்தாள். 

தங்கம் நில்லு என அருகில் சென்றவன். ஒரு போட்டோ பிளீஸ்.. 

ம்ம் என மலர் உத்தரவு கொடுக்க..  மோகன் அவளின் இடையில் பிடித்து அணைப்பது போல செல்ஃபி கேமரா ஆன் செய்தான். முதன் முதலில் ஆடவனின் ஸ்பரிசம் பட கண்ணம் சிலிர்க்க ஒரு வித பதட்டத்துடன் அவனை பார்த்தாள் பொன்மலர். 

சக் சக் என கிளிக் செய்தான் மோகன். மலர் தன்னை சமப்படுத்தி கொண்டு நேராக நின்றாள். 

ம்ம் தேங்க்ஸ் மா! உனக்கு செண்ட் பண்றேன். 

எனக்கு வேணாம் என சொல்லி விட்டு அவனது கை வளைவில் இருந்து கழண்டு கொண்டு ஓடி விட்டாள் பொன்மலர். 

மோகன் புன்னகையுடன் அவளின் தவிப்பான நோடிகளை ரசித்தவன். போட்டோவை பார்த்த படி பின் பக்கம் சென்றான். 

கண்ணா! அந்த மான்வி! என முகில் ஆரம்பிக்க.. உன்னை கட்டுகிறேன்ன்னு சொல்லிட்டாளா! என கண்ணன் கிண்டல் தொனியில் கேட்டான். 

அய்யோ டேய் அவள் மினி ரவுடி டா! அவளை கட்டிக்காத! என ஆவேசமாக பேசினான் முகிலன். 

என்ன டா சொல்ற? என கார்வண்ணன் கேட்க..  அவள் பொன்னே இல்ல டா! என்னமா சவுண்ட் கொடுக்கிறா தெரியுமா? அப்படியே அவங்க அம்மா அந்த மல்லிகாவை பார்த்த மாதிரி இருந்தது. ரோட்டில் போரவனை கட்டிக்க சொன்னால் கூட தெரிச்சு ஓடுவான் அந்த அளவுக்கு இருக்கா டா! அழகு ஆபத்தும் ஒன்னுன்னு சும்மாவா சொன்னாங்க என கூறினான் கார்முகிலன். 

ஓ அவ்ளோ அழகோ! என கண்ணன் கேட்க.. சுண்ணாம்பு மாதிரி வெள்ளையா இருக்கா டா! 

கண்ணம் சிரிக்க ஆரம்பித்தான். எதுக்கு கண்ணா சிரிக்கிற? என கார் முகிலன் கேட்க..  அப்போ நான் பிளாக் போர்ட் அவள் சாக் பீஸ் அப்படி தானே! என்றான். 

முகிலனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. கலர்ல என்ன டா இருக்கு. எப்போ பாரு உன்னையே நீ ஏன் தாழ்வா நினைக்கிற? நீ ஒன்னும் அவ்ளோ கருப்பு இல்ல டா! நீ தமிழ் நாட்டு கலர். எப்படி சொல்றது ஹான் சாக்லேட் கலர். ம்ம் இன்னும் சொல்ல போனால் சேதுபதி படத்தில் வரும் விஜய் சேதுபதி மாதிரி.. 

ம்ம் போதும் நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். 

சீக்கிரமே வந்துடுங்க அவள் என்னை வேணாம்னு தான் சொல்ல போறா! என சொல்லிய படி போனை வைத்தான் கண்ணன். 

நாளை கண்ணன் – மான்வி சந்திப்பு. 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

Leave a Comment

Follow Me

Top Selling Multipurpose WP Theme

Newsletter

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.