அத்தியாயம் – 6
சரிங்க அத்தை நாங்க வரோம். நாளைக்கு நேரமே வந்துடுங்க. நாளைக்கு கண்ணன் மச்சானையும் கூட்டிட்டு வந்திடுங்க முகில் மச்சான் என கையெடுத்து கும்பிட்ட படி கூறினான் மோகன்.
முகிலுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. கடுப்புடன் நின்று கொண்டிருந்தான். கோபி தன் அக்காவிடம் நாளைக்கு நேரமே வந்திடு கா! அது உன்னோட வீடும் கூட மறந்திடாத! என கூறியவர். கூடவே என் மருமகளையும் கூட்டிட்டு வந்திடு என்றார்.
மகேஷ் உடனே முகிலனை பார்க்க, அவனோ முறைத்து தள்ளினான். மான்வி என அழைத்தார் கோபி. மலர் மற்றும் மான்வி இருவரும் சிரித்த படி வெளியே வந்தார்கள்.
பாப்பா நாளைக்கு மாமா வீட்டுக்கு வந்துடுங்க.
சரிங்க மாமா! என தலை அசைத்தாள் மலர்.
வேண்டா வெறுப்பாக அவ்விடத்தில் நின்றான் முகிலன் கோபியின் குடும்பத்தை பார்க்க எரிச்சலாக இருந்தது.
முகிலன் நாளைக்கு வந்திடு பா!
ம்ம் வரோம் என ஒற்றை பதில் கூறினான்.
மலர் நாளைக்கு வீட்டுக்கு வா என்று விட்டு புன்னகையுடன் கிளம்பினாள் மான்வி அம்மணிக்கு நாளை பெண் பார்க்கும் நிகழ்வு என தெரியாது. அதனால் இந்த சாந்த முகம். தெரிந்து விட்டால்? என்ன நடக்கும்? பத்ரகாளி போல மோகனை வதம் செய்வாள்.
அவர்கள் சென்றதும் புன்னகையுடன் திரும்பிய மலரை பார்த்து முறைத்தான் முகிலன். அண்.. அண்ணா! என எட்சிள் கூட்டி விழுங்கினாள் பொன்மலர்.
என்ன டா முறைக்கிற?
அந்த ஆளு அவரோட பொண்ணு அந்த வாயாடிய கண்ணனுக்கு கட்டி வைக்கிறேன்னு சொன்னதுக்காக மட்டும் தான் நான் அமைதியா இருக்கேன். மற்ற படிக்கு எனக்கு எதிலும் விருப்பம் இல்ல. நாளைக்கு மட்டும் அந்த மான்வி கண்ணனை எதுவும் அவமான படுத்தினா! அவ்ளோ தான் இந்த கார் முகிலன் யாருன்னு அவங்களுக்கு காட்டுவேன். உன்னோட தம்பி உயிருக்கு உத்தரவாதம் இல்ல தெரிஞ்சுக்க என் அண்ணனுக்கு ஒன்னுன்னா உயிரை கொடுப்பேன் என சொல்லி விட்டு சென்றான் கார்முகிலன்.
மலர் கூட அதை தான் திரும்ப யோசித்தாள். மா அண்ணனுக்கு கல்யாணம் இல்லன்னா எனக்கும் வேணாம். என மோகன் மேல் துளிர் விட்ட தளிர் எண்ணங்களை வெட்டி வீசி விட்டு சென்றாள் பொன்மலர்.
இங்கே கலெக்டர் ஆபீஸில், கார் வண்ணன் உங்களை சப் கலெக்டர் கூப்பிட்டாங்க என கூற அங்கிருந்து நேராக நந்திதா ராஜை பார்க்க சென்றான் கார்வண்ணன்.
அவனது வருகைக்காக காத்திருந்தாள் நந்திதா. போலீஸ் என்றால் கண் முன் தோன்றும் உருவம் கார் வண்ணனாக தான் இருப்பான். அது கூடவே உள்ளம் கவர்ந்த கள்வன் கூட கண்ணன் தான். அந்த அளவுக்கு டிரெய்னிங் பீரியடில் இருந்து கார்வண்ணனை மிகவும் பிடிக்கும் நந்திதாவுக்கு. உள்ளம் கவர்ந்த கள்வன் ம்ம் கண்ணன். என மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
மேம் என வந்து நின்றான் கண்ணன். ஏர்போர்ட் போகனும். 15 டேஸ் வர மாட்டேன் கவர்ன்மென்ட் நியூ ஸ்கீம் பத்தி கான்பரன்ஸ் இருக்கு. டெல்லில என்றாள்.
ம்ம் வாங்க என இருவரும் முன்னால் நடந்தார்கள்.
கண்ணா!
“மேம்!”
டேய்!..
சொல்லு!
லஞ்ச் முடிச்சிட்டு ஏர்போர்ட் போலாம் வாடா! என நந்திதா அழைக்க.. ஒரு பெரிய உணவகத்தில் ஜீப்பை நிறுத்த சொன்னான்.
முத்து நீங்களும் வாங்க என கண்ணன் அழைக்க, லஞ்ச் பாக்ஸ் ஸ்டேஷனில் இருக்கு சார் இன்னும் டைம் இருக்கு என்றான்.
ஓகே என இருவரும் உள்ளே செல்ல உணவுகள் வந்தது. அனைத்தையும் அவனுக்கு பரிமாறினாள் நந்திதா.
நானே வச்சிக்கிறேன் நீ சாப்பிடு! என கண்ணன் அவளுக்கு தள்ளினான். உன்னோட முகம் சரி இல்லையே! ரெண்டு நாளாக? என்னாச்சு எதுவும் பிரச்சனையா?
தங்கச்சிக்கு கல்யாணம் பன்றதுக்கான வேலை வீட்டில் நடக்குது. அதை நினைச்சு தான் கொஞ்சம் டென்ஷன் என சாப்பிட்டு கொண்டே கூறினான் கண்ணன்.
அப்படியா என சாதத்தை பிசைந்தவள். அடுத்து உனக்கு தான கல்யாணம் என இதயம் படபடக்க கேட்டாள் நந்திதா.
இதை கேட்டதும் கண்ணன் புன்னகையுடன் காமெடி பண்ணாத! சாப்பிடு என சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.
டேய் உனக்கென்ன குறை? மாவட்டத்துக்கே SP டா! உங்க அப்பா ஏட்டா இருந்து இறந்திட்டார். ஆனால் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமா நீ கஷ்ட பட்டு ரா பகலா படிச்சு IPS ல பாஸ் பன்னிருக்க, பார்ட் டைம் ஜாப்புக்கு கூட போயிருக்க. சும்மாவா! உழைப்பு டா! நீ! உன்னோட வளர்ச்சி எனக்கு ஒரு மோட்டிவேசன் கொடுக்குது. அவ்ளோ பெரிய இடத்தில் இருக்க.. உன்னோட ஒர்த் உனக்கு தெரியாது டா கண்ணா! என்றவள் சாப்பிட்ட படி இவ்வளவு ஏன் நானே உன்னை கல்யாணம் பண்ணிப்பேன் தெரியுமா? என்றாள்.
காமெடி பண்ணாம கம்முன்னு சாப்பிடு என்ற படி உணவில் கவனம் செலுத்தினான் கண்ணன்.
உணவை பிசைந்த படி இருந்தவள். ஒரு பெரு மூச்சை விட்டு கண்ணா!..
ம்ம்
நான் 15 நாள் இந்த ட்ரிப் முடிச்சிட்டு வந்ததும் உன் கிட்ட ஒரு விசயம் சொல்ல போறேன். ரொம்ப நாள் தீவிரமாக யோசிச்சு பார்த்தேன். ரொம்ப நாளாக இந்த எண்ணம் இருந்தது.
அதை ஏன் 15 நாள் கழிச்சு சொல்ற? இப்போவே சொல்லு என கேட்டான்.
இல்ல நான் வந்து சொன்னால் தான் சரியா இருக்கும். என சாப்பிட்டு கொண்டே பேசினாள் நந்திதா! சட்டென புரை ஏறியது அவளுக்கு. மெதுவா மெதுவா எதுக்கு அவசரம் என தண்ணீரை அவளுக்கு கொடுத்து தலையை தடவி விட்டான்.
ம்ம் இப்போ பரவால்ல என நிமிர்ந்து பார்த்தவள். மாப்பிள்ளை ஓகே ஆகிடுச்சா? பாப்பாவுக்கு.
அவளுக்கு பிடிச்சிருக்கு. அடுத்த புரோசாஸ் ஆரம்பிக்க வேண்டியது தான். என்றான் கார்வண்ணன்.
அதுவும் நல்லதுக்கு தான் என அங்கிருந்து எழுந்தார்கள். அதன் பின் பொதுவான அலுவலக வேலையை பற்றி பேசிய படி அவளை ஏர்போர்ட் கொண்டு போய் விட்டான். லக்கேஜை தூக்கி கொண்டவன். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா முடிச்சிட்டு வா!
ஹான் கண்டிப்பா! என அவனை நட்பு நிமித்தமாக கட்டியணைத்து பிரிந்தாள். போயிட்டு போன் பண்ணு என கண்ணன் அனுப்பி வைத்தான்.
நந்திதா அவனை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். உள்ளுக்குள் எதோ போல இருந்தது. விடு நந்திதா! வந்ததும் உன்னோட காதலை சொல்லிடு அப்புறம் பிரிய வேண்டிய தேவையே இல்லை என நினைத்துக் கொண்டு சென்றாள்.
கோபி பதட்டத்துடன் மோகனை பார்க்க, என்ன பா! நீங்களே வீக்கா இருந்தால் எப்படி அவளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் என கூறினான்.
எப்டி டா? அவள் ஒத்துக்குவாளா? நாளைக்கு வேணாம்னு அக்கா முன்னாடி சொல்லிட்டா பிரச்னை ஆகிடும் என கூறினார் முரளி.
நான் இருக்கேன் என ஒரே வார்த்தையில் முடித்தான் மோகன்.
மல்லிகா வாழ்க்கையே பறிபோனது போல முகத்தை வைத்திருக்க, மா! நாளைக்கு அத்தை வீடு வராங்க. அதனாலே நீ சமைக்கிறயா? நான் கடையில் சொல்லி ஆர்டர் பண்ணவா? என கேட்டான்.
மான்வி உடையை மாற்றிக் கொண்டு கொண்டையுடன் வந்தவள். நாளைக்கே நிச்சயம் பண்ண போறியா மோகா? என கேட்க… மோகன் யோசனையுடன் இது கூட நல்ல யோசனையாக இருக்கே! அப்போ நாளைக்கே நிச்சயம் வச்சுப்போம். அப்பா நீ அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடு என்று விட்டு உள்ளே சென்றான்.
மான்வி தன் அன்னையை சமாதானம் செய்ய, விடு மான்வி! கடைசியில் நீயும் உன்னோட அப்பன் ரத்தம்ன்னு நிருபிச்சுட்ட அந்த கண்ணனை கட்டிக்க உனக்கு இஸ்டம் அப்படி தானே! என மல்லிகா பொங்கிய ஆற்றான்மையுடன் கேட்டார்.
என்ன மா உலருற! உனக்கு இதே வேலை தான் என மான்வி அவ்விடத்தை விட்டு கடந்து சென்று விட்டாள்.
தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் மல்லிகா விரக்தியின் உச்சத்தில் இருந்தார். இப்போ எதுக்கு இந்த நேரத்தில் கடைக்கு போக சொல்ற அதுவும் நகை கடைக்கு. என கார் முகிலன் கேட்க, நாளைக்கே நிச்சயம் பண்ணிக்களாம்ன்னு என் தம்பி போன் பண்ணி சொல்லிட்டான். மான்விக்கும் மோகனுக்கும் நம்ம தான் மோதிரம் போடணும் நான் கண்ணனை வர சொல்லிருக்கேன் போயி வாங்கிட்டு வந்திடு! என தீர்க்கமாக கூறினார் மகேஸ்வரி.
கார்முகில் எதுவும் பேசாமல் கிளம்பினான். டேய் நீ செலக்ட் பண்ணு! வாயாடிக்கே உன்னை பிடிச்ச்சிருக்கு. இனி சந்தோஷம் தான். ஒரு வேளை சின்ன வயசில கூட அவள் நல்லவ தான் டா! அந்த மல்லிகா தான் மோசமான ஆளு! விடு இப்போ சந்தோசமா இருக்கு எங்கண்ணனுக்கு கல்யாணம் என மகிழ்ச்சியில் இருந்தான் கண்ணன்.
எனக்கென்னமோ நாளைக்கு பிரச்னை வர மாதிரியே தோணுது என கண்ணன் கூற, போடா! போய் மோதிரத்தை செலக்ட் பண்ணு என தன் அண்ணனை தள்ளிக் கொண்டு சென்றான் கார்முகிலன்.
இங்கே மோகன் தன் தங்கையிடம் மான்வி நாளைக்கு அத்தை, மலர், முகில் எல்லாரும் வரான்க அதுக்கு நீ தான் உபசரிக்கனும்.
அவங்க மூணு பேர் மட்டும் தானே!
இல்ல கண்ணனும் வரான்.
என்னால அவனை கூப்பிட முடியாது. அந்த கறுவா எதுக்கு இங்கே வரான். நான் என்ஜினியரிங் ஹோல்டர் அவன் சாதாரண ஏட்டு போலீஸ் என்னால அவனுக்கு பணிவிடை செய்ய முடியாது என்று வெடுக்கென எழுந்தாள் மான்வி.
“எனக்கு கொடுத்த வாக்கு? அவ்ளோ தான்ல!”
டேய் மோகா அநியாயம் பண்ற டா!
உன்னோட கையில் தான் எனக்கு மலர் கிடைப்பாளா இல்லையான்னு இருக்கு. ஒரு வேளை நீ அங்கே எதுவும் பண்ண? எனக்கு மலர் வைப்பாங்க! அண்ணனும் தம்பியும் சேர்ந்து. என்று விட்டு நகர்ந்தான்.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. வீடே அலங்காரத்தில் ஜொலித்தது. உறங்கி எழுந்தவழுக்கு இது நம்ம வீடு தானா? என தோன்றியது. மல்லிகா அப்படியே தான் இருந்தார்.
மோகன் நேராக மான்வியிடம் வந்தவன். இது இன்னிக்கி நீ போட சாரி என பட்டு புடவை அதற்கு மேட்சிங் என அனைத்தையும் வைத்தான்.
ஓ உன் பொண்டாட்டிய வரவேற்க இது எல்லாத்தையும் நான் பண்ணனும் அப்படி தானே!
கொடுத்த வாக்கு! என மோகன் சொல்ல.. அப்படியே செத்து தொலைஞ்சு போகாத நாயே! இரு உன்னை ஜானை விட்டு கடிக்க சொல்றேன் என்றவள் எழுந்து குளிக்க சென்றாள்.
மூவரும் வந்து சேர்ந்தனர். அக்கா கண்ணன் என கோபி கேட்க.. வருவான் டேய் கண்ணனுக்கு போன் போடு என சொல்ல ஜீப் சத்தம் கேட்டது.
அண்ணா வந்திடுச்சு என பொன்மலர் சொல்ல.. ஏட்டுக்கு ஜீப்பா என மல்லிகாவுக்கு தோன்றியது. மரியாதை நிமித்தமாக சபை நாகரீகத்துக்காக ஓரிரு வார்த்தை பேசினாள். மற்ற அனைத்தும் மான்வி தான் செய்கிறாள். அதனால் மான்வி கிட்ட பேசுவதில்லை. இன்றில் இருந்து.
மான்வி ஜானுக்கு சாப்பாடு வை டா தங்கம் அதுக்கு பிறகு நம்ம நிச்சயம் முடிச்சிட்டு சாப்பிட தாமதம் ஆகிடும் என்றார் கோபி.
வெளியே நாய் குலைத்து கொண்டிருக்க, ஜான் அமைதியா இருக்க மாட்டியா! என நாய்க்கு உணவு வைத்து விட்டு நிமிர்ந்தாள் மான்வி எதிரில் நெடு மரம் போல கார்வண்ணன்.
மான்வி – கார் வண்ணன்
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels