அத்தியாயம்-7
ஹே ஜான் என்ன அவசரம் உனக்கு? என உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தாள். ஜான் என்னும் வீட்டு காப்பாளன் விடாமல்
வெளியே குரைத்து கொண்டிருக்க, ஜான் அமைதியா இருக்க மாட்டியா! என நாய்க்கு உணவு வைத்து விட்டு நிமிர்ந்தாள் மான்வி எதிரில் நெடு மரம் போல கார்வண்ணன் நின்றான்.
அன்னிக்கே 5000 பெனால்ட்டிய அந்த பிரபு பைய பே பண்ணிடானே! அந்த பெனால்ட்டிக்காக வீடு தேடி வரது டூ மச்சா தெரியலையா? போலீஸ்காரரே! என கேட்ட படி நின்றாள் மான்வி.
இன்னும் என்ன பண்ற மான்வி? என கேட்டுக் கொண்டே வெளியே வந்தான் மோகன். அங்கே கண்ணனை பார்த்ததும், “அடடே கண்ணன் மச்சான் வணக்கம் வாங்க!” என உற்சாகத்துடன் அழைத்தான்.
மான்வி திகைத்து போய் அப்படியே நின்று கொண்டிருக்க, கண்ணனின் பெயரை கேட்டதும் கார் முகிலன் எழுந்து வெளியே வந்தான். கார் முகிலன் மற்றும் கார் வண்ணன் இருவரை பார்த்ததும் விடாமல் குரைத்தது.
இவன்? என உள்ளுக்குள் ஒரு வித பதட்டம். கண்ணன் அவளை ஒரு பார்வை பார்த்தான்.
உள்ளே வாங்க மாப்பிள்ளை என சொல்லிக் கொண்டே வந்தார் கோபி. அண்ணா என பொன்மலர் வந்து நின்றாள். மான்வி எதுவும் பேசாமல் அவர்களை முன்னால் விட்டு ஓரமாக நின்று கொண்டாள்.
தண்ணி எடுத்திட்டு வா மான்வி என கோபி சொல்ல, பரவாயில்லை என கண்ணன் மறுத்தான். வந்துட்டானா கருவாயன்! கான்ஸ்டபிள்ளா? இல்ல ஏட்டா தெரியலையே? என மல்லிகா முனகி கொண்டிருந்தாள்.
மான்வி தண்ணீரை எடுத்துக் கொண்டு சென்றாள். என் பேச்சை கேட்காமல் போறல்ல மானு. உங்கப்பக்காரன் உங்க அண்ணகாரன் ரெண்டு பேரும் அந்த கருவாயனுக்கு கட்டி வைக்க போறாங்க! அப்போ உதவிக்கு இந்த அம்மாவை தேடி நீ வர தாண்டி போற! என ஓரமாக நின்றார்.
மல்லிகா என கோபி அழைக்க, வேண்டா வெறுப்பாக வெளியே சென்றவள். வாங்க கண்ணு! அக்கா உள்ளே வாங்க! மலர் உள்ளே வந்து பேசுங்க என மரியாதை நிமித்தமாக அழைத்தார்.
மான்வி தண்ணீரை தந்தையிடம் நீட்டினாள். அங்கே கொடு மா! என அவர் கூற, அவனது முகத்தை பார்ப்பதை தவிர்த்து மிகவும் இயல்பாக முகத்தை வைத்திருந்தாள். கண்ணன் அவளிடம் இருந்து வாங்கி கொண்டவன் ஒரே மூச்சில் குடித்து சொம்பை நீட்டினான்.
வாங்கி கொண்டு உள்ளே ஓடி விட்டாள் மான்வி. வாடா கண்ணா! என மகேஷ்வரி அழைத்தாள். எதுவும் பேசாமல் அவர்களுடன் உள்ளே நுழைந்தான் கண்ணன். முகில் தன் அண்ணனின் அருகில் ஒட்டிக்கொண்டு அமர்ந்தான்.
மல்லிகாவின் கண்கள் கண்ணனை தான் ஆராய்ச்சி செய்தது. மோகன் தன் அப்பாவை பார்க்க மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் கோபி. அப்போ நிச்சய மோதிரம் போட்டுக்களாமே என பேச்சை ஆரம்பித்தார்.
மகேஷ்வரி சந்தோசத்துடன் தன் மகன்கள் இருவரையும் பார்த்து கர்வத்துடன் புன்னகை செய்தார். முகில் கண்ணனின் காதுகளில் டேய் அந்த மேனா மினுக்கி உனக்கு வேணாம் டா அண்ணா! எனக்கு அந்த மோகன கூட பிடிக்கல. அந்த கோபி மனைவி behave பன்றதெல்லாம் மிஸ்டீரியஸ்சா இருக்கு. யோசுச்சுக்க. என காதில் கிசுகிசுத்தான்.
என்ன மச்சான்? பெரிய மச்சானோட காதை கடிக்கிறீங்க? எதுவும் குறை வச்சுட்டோமா சொல்லுங்க? எதுவா இருந்தாலும் செஞ்சிடலாம் என கேட்டுக் கொண்டே பார்த்தான்.
கண்ணன் மற்றும் முகில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். மாப்ளை என கோபி கண்ணனை அழைத்து உங்களுக்கு எந்த குறையும் இல்லையே? என கேட்க, என் தங்கச்சிக்கு சம்மதம்ன்னா எனக்கும் எந்த பிரச்னையும் இல்ல. நீங்க ஆக வேண்டியத பாருங்க என்றான்.
டேய் அவள் கிட்ட பேசு டா! என முகில் முனுமுனுத்த படி கூற, மான்வி என கோபி அழைத்தார். இதுல மோதிரம் இருக்கு என கண்ணன் மலரிடம் கொடுக்க, வாங்கி கோபியிடம் நீட்டினாள்.
மான்வி ஒரு ஓரமாக நின்று கொண்டாள். மல்லிகா அவளின் அருகில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தார். இது நிச்சய புடவை மான்வி இதை மலருக்கு கட்டி கூட்டிட்டு வாமா! என கோபி கூற, இதோ பா என மான்வி அழைத்துக் கொண்டு சென்றாள்.
அறையின் கதவை சாத்தும் போது மான்வி – கண்ணன் இருவரும் எதேட்சையாக பார்த்து கொண்டார்கள். ச்சே என தலையை உலுக்கிய மான்வி அழகாக மலரை தயார் செய்து அழைத்து வந்தாள். இன்னொரு புறம் கண்ணன் வாங்கி வந்த உடையில் மோகன் ரெடியாக வந்து நின்றான்.
மல்லிகாவுக்கு துளி கூட விருப்பம் இல்லை பற்றிக் கொண்டு வந்தது. இது இப்படியே நின்று விட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது. முகில் நேராக தன் அன்னையின் அருகில் சென்றவன். உன் மாப்பிள்ளை இப்போ முக்கியமா போயிட்டானா? என் அண்ணனை கண்டுக்காம இருக்க? எது செய்யரதா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் சேர்த்து செய்ய மாட்டியா நீ? இப்போவே உன் தம்பி குடும்பத்து பக்கம் சாயிற? ஹான்! என உசுப்பி விட்டான்.
எல்லாம் எனக்கு தெரியும். சும்மா குதிக்காத! அது அதுக்கு நேரம் காலம் இருக்கு. என மெல்ல கூறினார்.
என்ன கா எதுவும் பிரச்சனையா? என கோபி கேட்க.. அது வந்து நல்ல விசயம் தான் தம்பி. ஒரே நேரத்தில் ரெண்டு பேருக்கும் நிச்சயம் முடுச்சிட்டா என்னன்னு முகிலன் கிட்ட நான் சொல்லிட்டு இருந்தேன் என கூறினார் மகேஸ்வரி.
அவ்ளோ தான கா! இப்போவே பண்ணிட்டா போச்சு என்ற கோபி உடனே மான்வியை பார்க்க, அவளோ புரியாமல் தன் தந்தையை பார்த்தாள். மல்லிகாவின் முகம் புன்னகையில் ததும்பியது. நம்ம நினைச்ச மாதிரி நடக்க போகுது. கடவுளே! மான்வி பிரச்னை பண்ணனும். அந்த கருவாயன வேணாம்னு சொல்லணும். இனி கோபி – மகேஷ்வரி ரெண்டு பேரோட அண்ணன் தங்கை உறவு இப்போவே இதே இடத்தில் முறிய வேணும் என நின்றார் எதிர்பார்ப்புடன்.
மருமகளே உனக்கு இந்த கலர் நல்லாருக்கும். இதை போய் கட்டிட்டு வா மானு என நீட்டினார்.
மான்வி புருவம் சுறுக்கிய படி ஒன்றும் புரியாமல் பார்க்க, ஒரு நிமிசம்..
“ஒரு நிமிசம்!” என கூறியது கண்ணன் தான்.
மோகன் எட்சிலை விழுங்கிய படி மான்வியை பார்த்தான். என்ன நடக்குது இங்கே? என தன் அண்ணனை பார்த்தாள்.
நிச்சயத்துக்கு முன்னாடி நான் தனியா பேசணும். என கண்ணனின் பார்வை மான்வியை தொட்டு மீண்டது.
என்ன பேசணும்? உனக்கு என மகேஸ்வரி மல்லுக்கு நின்றார்.
அவன் எதுக்கு என்னை பார்க்கிறான்? இங்கே என்ன நடக்குது மோகா? என மான்வி தன் அண்ணனின் முகத்தை பார்த்தாள். ஒரு நிமிசம் பொறுமையா இரு. நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன் என கூறினான் மோகன்.
மோகன் அவங்க எதுக்கு எனக்கு புடவை எடுத்து தராங்க? என்ன டா நடக்குது? உண்மைய சொல்லு! இல்ல கொன்னு புதைச்சிடுவேன் நாயே என பற்களை கடித்தாள் மான்வி.
அண்ணன் பேசணும்னு சொல்றான்ல பேசட்டும் உங்களுக்கு என்ன பிரச்னை? என முகில் முன்னால் வந்து நின்றான். ஒரு பக்கம் மோகனை மான்வி குடைய இன்னொரு பக்கம் முகில் மகேஸ்வரியை துருவி எடுத்தான். அவனுக்கும் இந்த கல்யானத்தில் விருப்பம் இல்லை. தன் அண்ணனுக்கு ஏற்றவள் பொருமை, அமைதியாக, அடக்கமாக இருக்க வேணும் ஆனால் மான்வியிடம் எதுவும் இல்லை. அடாவடி முன்கோபம் என கண்ணனுக்கு துளியும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறாள் இதற்கு முன் கண்ணனுக்கு அழகான மனைவி வேணும் என நினைத்தான். ஆனால் இப்பொழுது அந்த எண்ணம் மாறி விட்டது.
மோகன் தன் தங்கையின் கையை பிடித்து கொண்டவன். அனைவரை பார்த்ததும் சிரித்து கொண்டே நானும் மான்வியும் மேலே போறோம். மலர் நீ மச்சான் கூட வா! என அழைத்து சென்றான். அனைவரின் முன்பும் எதுவும் சொல்ல முடியாத மான்வி மேலே சென்ற அடுத்த நொடி மோகனின் சட்டை காலரை பிடித்து அடிக்க கை ஓங்கினாள்.
நீ எவ்ளோ வேணாலும் அடிச்சுக்க. எனக்கு மலர் வேணும். அதே போல அப்பாவுக்கு அத்தை குடும்பம் கூட சேர ஆசை. அதனாலே தான் உன்னை கண்ணனுக்கு நானும் அப்பாவும் பேசி முடிச்சிட்டோம்.
அருகில் இருந்த பூச்சாடியை ஆவேசமாக தள்ளி விட்டாள் மான்வி.
மோகன் சர்வ சாதாரணமாக ஒன்னும் பிரச்னை இல்ல மான்வி! உனக்கு வேணாம்ன்னா கீழே போய் சொல்லிடு. நான் மலரை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். மலர் இல்லன்னா என்னோட வாழ்க்கையில் கல்யாண அத்தியாயம் இல்ல.
டேய் I வில் கில் யூ நாயே! உன்னோட வாழ்க்கைக்காக என்னை ஏன் இதுல இழுத்து விட்ட?
அதுவும் சரி தான். நான் இப்போவே போய் சொல்லிடுறேன். அம்மாவாள போன தடவை விட்ட உறவு. இந்த முறை என்னால நிரந்தரமா முடிய போகுது. இனி என மவுனமாக வெளியே செல்ல போக, என்னாச்சு மாமா எதோ சத்தம் கேட்டது? என கேட்டுக்கொண்டே மலர் மேலே வந்தாள்.
ஒன்னும் இல்ல மலர். சரி கீழே போலாம் பேச ஒன்னும் இல்ல. என மோகன் நகர்ந்தான்.
அண்ணா மேலே வந்துட்டாங்க! மான்வி கிட்ட சாரி சாரி அண்ணி கிட்ட அண்ணா பேசணும்னு சொன்னானே! என திரும்பி பார்த்தாள் பொன்மலர்.
அண்ணி என்று பொன்மலர் அழைத்ததும் தலை நிமிர்த்து இயலாமையுடன் பார்த்தாள் மான்வி.
கண்ணன் மேலே வந்தபடி இருவரையும் பார்த்து விட்டு மானின் மேல் சென்றது அவன் பார்வை.
மோகன் என்ன செய்வதென தடுமாற்றத்துடன் இருந்தான். கண்ணன் தன் தங்கையை பார்க்க, மாமா வாங்க நம்ம கீழே போலாம் என பொன் மலர் முன்னால் நடந்தாள். ஒரு பெரு மூச்ச விட்டு மோகன் பின் தொடர்ந்தான்.
என்ன நடக்குமோ? எதுவா இருந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும் என உறுதியுடன் இருந்தான்.
கார் வண்ணன் மற்றும் மான்வி இருவர் மட்டுமே இருந்தார்கள்.
மான்வி அவனது முகத்தை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொண்டாள்.
கண்ணன் நேராக உடைந்த பூச்சாடியின் அருகில் சென்றவன். அதை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
மான்வி…?
கண்ணன் மான்வி கிட்ட என்ன பேச போறான்? மல்லிகா நினைத்தது நடக்குமா? மோகனது காதல் கல்யாணத்தில் போயி முடியுமா? பார்ப்போம்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels