அத்தியாயம் – 8
மான்வி ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தாள். கண்ணன் நேராக அங்கே உடைந்த பூச்சாடியின் அருகில் சென்றவன். தொண்டையை சிரும்பினான்.
அவளோ முடியை காதுக்கு ஒதுக்கினாள். அவனது முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள். விசயம் தெரியுமா? உன் கிட்ட சொன்னாங்களா? என அவ்விடத்தை நோட்டம் விட்டு கொண்டே பேசினான் கண்ணன்.
“என்ன விசயம்?” என மான்வி அவன் புறம் நிமிர்ந்து திரும்பினாள்.
இதற்கு மேல் தாங்காது என நினைத்தவன். நேராக அவளின் முன் வந்து நின்றான் கண்ணன்.
என்ன விசயம்? என மீண்டும் கேட்டாள் வேறெங்கோ பார்த்துக் கொண்டு, அவளின் வெள்ளை நிற தேகம் உடையை விட்டு தனியாக தெரிந்தது. அந்த அளவுக்கு அவள் அழகு சிலை தான். அவர்களின் வீட்டில் அனைவரும் நல்ல கலராக இருப்பார்கள். மைதிலி, மோகன், மான்வி அதற்கு காரணம் மல்லிகா நல்ல கலர். மான்வி அவளின் புடவை முந்தியை விளையாட்டு போல திருகி கொண்டே நின்றாள். அவளின் கவனம் அதன் மீது இருந்தது.
நம்ம கல்யாண விசயம் என கூறி முடித்தான் கண்ணன். அற்ப புழுவை போல நிமிர்ந்து அவனை பார்த்தாள் மான்வி. கண்ணனுக்கு அவளின் பார்வை தீயில் சுட்டதை போல இருந்தது. எதற்கும் மனம் தளரவில்லை. “எனக்கு தெரியும். உனக்கு இந்த கல்யானத்தில் விருப்பம் இல்லன்னு! ஆனால்”
“ஆனால் என்ன? போலீஸ் மூளையாச்சே சரி தான்! இப்போ என்ன பண்றது?” என மான்வி அவனது முகத்தை பார்க்காமல் முதுகை காட்டினாள்.
எனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல என்றான் கண்ணன்.
“அப்போ போய் உன் அம்மா கிட்ட சொல்லு! அதை இன்னும் சத்தமா என் அப்பன் காதில் சொல்லு!” என்றாள் ஒரு பெரும் பாரம் இறங்கியது போல..
அதுக்கு தான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்! என அவளின் முன் போய் நின்றான் கண்ணன். மீசை முறுக்கி விட்ட படி காக்கி பேண்ட் ஒயிட் சர்ட் காக்கி சட்டை பெல்ட் போலீஸ் கட்டிங் என கருப்பில் வெள்ளையும் காக்கியும் கலந்திருந்தது.
கண்ணன் அவளிடம் “நீ யாரையாவது லவ் பண்றயா?”
என்னோட பெர்சனல்ஸ உனக்கு நான் ஏன் சொல்லணும்? என்பதை போல மான்வியின் பார்வை இருந்தது.
“போலீஸ் மூளைய ஜான் கிட்ட கழட்டி வச்சிட்டு இங்கே கார்வண்ணனா பேசினால் போதும் என்னோட பெர்சனல்ல தேவையில்லாம கேட்டுட்டு இருக்க வேணாம். அடுத்தவங்க கிட்ட சொல்லும் அவசியம் இல்ல எனக்கு” என காட்டமாக பொறிந்தாள் மான்வி.
அப்போ கீழே போயி உன்னோட முடிவை நீ சொல்லிடு! என்னோட முடிவை என ஆரம்பித்தவன் இவள் கிட்ட எதுக்கு நம்ம பேசணும் என கோபம் தலைக்கு ஏறியது கண்ணனுக்கு. வேகமாக படிகளில் இறங்கினான்.
“ஒரு நிமிடம்”
கண்ணன் நிற்க வில்லை.
“நான் ஒரு நிமிஷம்ன்னு சொன்னேன்!”
“என்ன?”
மோகன் உன்னோட தங்கச்சிய லவ் பண்றான்.
அதுக்கு? என கண்ணன் கேட்க, பற்களை கடித்த படி அவனை பார்த்தாள் மான்வி.
இடக்கு மடக்கா பேசினது நானா? நீயா? வாய்க்கொழுப்பு ஜாஸ்தி என கண்ணன் முனுமுணுத்தான்.
“உன்னை யாரு என்னோட பெர்சனல் பத்தி பேச சொன்னா?” என மான்வியின் மூக்கு சிவந்தது.
“இப்போ என்ன பண்ணனுங்குற?”
“எதுக்கு வந்தியோ அதை பத்தி மட்டும் பேசு! ஏன்னா என் அண்ணன் வாழ்க்கையில் எனக்கு அக்கறை இருக்கு.” என்றாள் மான்வி.
இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள். கண்ணன் மான்வியிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
இங்கே கீழே மோகன் ஒரு பக்கம் பதட்டத்துடன் இருந்தவன் முகம் சுணங்கி போயி பாத்ரூம் பக்கம் சென்று விட்டான். என்னா ஆட்டம் ஆடின ராஸ்கல்! இரு டா உங்களுக்கு சரியான பதிலடிய என் பொண்ணு கொடுப்பா என்று மிகவும் சந்தோசத்துடன் அமர்ந்திருந்தாள் மல்லிகா.
கிட்ட தட்ட அரை மணி நேரம் ஆனது.
என்ன பண்றான் இன்னும்? அந்த ராட்சஸிய பார்க்க தனியா அனுப்பி இருக்க கூடாது. அவள் கிரிமினல் என முகில் எழுந்து படிக்கட்டின் பக்கம் சென்றான்.
எங்கே டா போற? என மகேஸ்வரி அவனை அழைத்து தேவையில்லாமல் முறைப்பை பரிசாக பெற்று கொண்டார்.
முகில் படிக்கட்டில் ஏறும் போது கண்ணன் முன்னால் வர அவன் பின்னால் மான்வி வந்தாள்.
கண்ணா! என முகில் தவிப்புடன் பார்க்க, கோபிக்கு மிகவும் பதட்டமாக இருந்தது.
பொன்மலர் மோகனை சுற்றிலும் தேடினாள். என்ன டா பண்ண இன்னும்? என முகில் தன் அண்ணனை தனியாக அழைத்து கொண்டு விவரங்களை துருவ முயற்சி செய்ய, டேய் அங்கே என்ன பேச்சு? கண்ணா! மானு கிட்ட பேசிட்டியா? எந்த பிரச்னையும் இல்லையே! வா வந்து மாமா கிட்ட சொல்லுங்க ரெண்டு பேரும் என மகேஸ்வரி அழைத்தார்.
மான்வி என அழைத்துக் கொண்டு மல்லிகா அருகில் சென்றவர். இப்போ தெரியுதா? உன் அப்பனும் உன் அண்ண காரனும் என்ன வேலை பண்ணிருக்காங்கன்னு இதுக்கு தான் நான் தலை பாடா அடிச்சுக்கிட்டேன். எப்படியோ உனக்கே எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சு! சீக்கிரம் உன் அப்பன் கிட்ட நாலு வார்த்தை நறுக்குன்னு கேளு! இதுங்க போனதும் இந்த இடத்தை கழுவி விடணும் என கூறினார்.
மோகன் எங்கே? என மான்வி கேட்க, மல்லிகா சிரித்த படி, சும்மாவா? என் பொண்ணு பதிலடி எப்டி இருக்குன்னு அந்த நாய்க்கு தெரியும் அதனால் உள்ளே போயிருக்கும். அவனுக்கு ஒரு சொத்து கிடையாது. எல்லாமே என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கு தான்! உலகத்தில் இல்லாத பொண்ணை பிடிச்சு போயிருச்சா என வாய்க்குள் மெதுவாக முனுமுணுத்தார்.
டேய் என்ன டா சீக்கிரம் சொல்லு! இங்கே இருந்து போனால் போதும்ன்னு இருக்கு. மிஸ்டர் கோபியோட மனைவி விஷ பாட்டில்ன்னா இந்த மான்வி மினி விஸ பாட்டில் டா என்றான் முகில்.
அதற்குள் மோகன் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான். அவனது முகம் வாட்டத்துடன் இருக்க பொன்மலர் அருகில் சென்றவள் கண்களால் என்னாச்சு என கேட்டாள். அவன் முகத்தை திருப்பி கொண்டான். அனைவரும் வைத்த கண் வாங்காமல் கண்ணன் மான்வி இருவரையும் பார்த்து கொண்டிருக்க, நிச்சயம் பண்ணிக்கலாம் என்றான் கண்ணன்.
அனைவரின் முகத்திலும் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்களுக்கு ஏற்ப உணர்வுகள் வெளிப்பட்டது. அய்யோ அந்த மேனா மிணுக்கி உனக்கு வேணாம் டா! தம்பி சொல்றத கேளு! என முகில் காதை கடிக்க, முகில் என்ன டா பண்ற? அவன் ட்ரெஸ் மாத்தட்டும் நீ கடைக்கு போயிட்டு வா! என மகேஸ்வரி பிரித்து விட்டார். அவரது முகத்தில் அத்தனை சந்தோஷம். பொன்மலர் மான்வியை மிட்டாய் கடை போல வட்டமடிக்க ஆரம்பித்தாள். அண்ணி அண்ணி அண்ணி என மூச்சுக்கு முன்னூறு முறை அழைத்திருப்பாள்.
மலர் நீ போ என அனுப்பி வைத்தவன் மான்வியின் பின்னால் சுற்றினான்.
தங்கச்சி!
செருப்பை கழட்டி அடிப்பேன் போயிடு! என மான்வி கோபத்தில் எரிந்து விழுந்தாள். மல்லிகாவுக்கு பிரஸர் ஏறிட மாத்திரையை தேடினாள்.
ப்ச் எனக்காக நீ ஒன்னும் கட்டிக்க வேணாம். நீ கண்ணன் மச்சான் கலரை பார்க்காத மனசை பாரு.
டேய் போயிடு! என கன்னத்தில் அறைந்தாள்.
“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். உனக்கு விருப்பம் இல்லன்னா வேணாம் மானு!”
“உனக்காக அவனை கட்டிக்கல!” என அவளது கொண்டையை அவிழ்த்து கொண்டே கூறியவள். அவனது கையில் நெயில் பாலிஷ் கொடுத்து சேரில் அமர்ந்தாள்.
தன் தங்கையின் காலுக்கு அடியில் அமர்ந்தவன். எதிர்பார்ப்புடன் எதுக்கு? எதுக்கு சம்மதிச்ச? எதாவது சினிமா டயலாக் பேசி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டியா? காண்ட்ராக்ட் மேரேஜ் இந்த மாதிரி கண்றாவி என மோகன் பொங்க.. காலால் எட்டி உதைத்தாள் மான்வி.
சொல்லு என மோகன் எழுந்து அமர்ந்தான்.
என்னை MBA படிக்க வைக்க ஒத்துகிட்டான். கூடவே இன்னும் சில விசயம் இருக்கு. ஆனால் அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது.
என்னென்ன? என மோகன் கேட்க..
பாதி சம்பளம் என் கிட்ட கொடுக்கிறேன்னு சத்தியம் பண்ணிருக்கான் கருவா பைய! சோ benefits நிறைய இருக்கு அதனாலே என்னோட மூளை கால்குலேட்டர் ஒகே சொல்லிடுச்சு என்றாள் மான்வி.
மோகன் புருவம் சுருக்கி தீவிரமாக யோசித்தவன். இது மட்டும் தானா? இதுக்காக தான் நீ ஒத்துக்கிட்டயா? என்ற நம்ப இயலாமல் பார்க்க, மான்வி முகத்தை சுருக்கியவள் உண்மையை சொல்லட்டுமா? இல்ல! பொய் சொல்லட்டுமா? என்று கேட்டாளா.
உண்மையை சொல்லு என்று மோகன் தவிப்புடன் தன் தங்கையை பார்த்தான்.
ஒரு பெருமூச்ச விட்ட மான்வி “அப்பாவுக்காக நான் இதுவரைக்கும் எதுவுமே செஞ்சது கிடையாது. இத்தனை வருஷமா நான் அம்மா பக்கம் தான் நின்னுருக்கேன். அதேபோல நீ மட்டும் விரும்பி இருந்திருந்தால் அதான் அந்த கருவாவோட தங்கச்சி இருக்காளே! ஒருத்தி! மோகன் இதைக் கேட்ட முறைக்க..
என்னடா இப்ப கூட நான் வெளியே போய் வேணாம்னு சொல்லுவேன் என்று மான்வி எழுந்து கொள்ள, சாரி சாரி சரி சரி சொல்லு என்று சமாதானம் செய்தான்.
ஹான் அந்த பயம் இருக்கட்டும். அவளும் உன்ன விரும்புறான்னு தோணுச்சு. அப்பாவுக்காக , அவளுக்காக , உனக்காக இத இந்த கல்யாணத்தை நான் மன்னிக்க சம்மதித்தேன்.
இத மச்சான் கிட்டயே சொல்லிட்டியா என்று மோகன் இயலாமையுடன் கேட்க, அவனுக்கும் இந்த விஷயம் தெரியாது. எவனோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறேன். அது இவனா இருந்துட்டு போகட்டும் என்று தெளிவான முகத்துடன் கூறினாள்.
ஹே மச்சான பத்தி நீ குறைவா எடை போடாதடி! அவர் இந்த மாவட்டமே அவர் கையில தான் இருக்கு. தெரியுமா?
அப்படியா என்று மான்வி கிண்டலாக கேட்க, ஹே என்னோட மான் குட்டி என்று ஆசையாக அழைத்தான் மோகன்.
போதும் நெயில் பாலிஷ கரெக்ட்டா வச்சு விடு என்று ஜடையை பின்ன ஆரம்பித்தாள்.
அடுத்து என்ன பண்ணனும் என்று மோகன் கேட்க, என்னோட சேரிய அயன் பண்ணு போ! என்று மான்வி கட்டளையிட்டாள்.
மோகன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே என்னடா பார்த்துட்டு இருக்க?
அது அது வந்து என்று தயங்கினான்.
5000 ரூபாய் வச்சு என்னை பிளாக்மெயில் பண்ணி அந்த கருவாக்கு கல்யாணம் பண்ண திட்டம் போட்டு அதை நடத்தி காட்டிட்டல்ல இனி இருக்குடி உனக்கு? உன்னை என்ன பண்றேன் பாருடா! போ! அவளை நீ பார்க்கவே கூடாது. போய் செய் என்று வேலை வாங்கினாள்.
அதன் பின் இரண்டு ஜோடிகளும் தயாராக வந்தார்கள். பேபி பிங்க் வண்ணத்தில் ஒரு பட்டுப்புடவையில் ஒற்றை மல்லிகை சரம் ஜடை நீளம் வரை தொங்கிக் கொண்டிருக்க, அட்டகாசமாக தயாராகி இருந்தாள் மான்வி.
மல்லிகாவால் கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை குளிர் காய்ச்சல் சேர்ந்து வந்துவிட்டது. அங்கிருக்கும் அனைவரும் அவளைத்தான் பார்த்தார்கள். மகேஸ்வரிக்கு பெருமை தாங்கவில்லை. முகில் தன் அண்ணனிடம் அந்த மேனாமினிக்கி வெள்ளப் பணியாரம் மாதிரி இருக்கா! அவ வேணாம் டா கண்ணா உனக்கு என்றான்.
கண்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். “இப்போ நிச்சய மோதிரத்தை இரண்டு ஜோடிகளும் மாத்திக்கலாம்” என்று கோபி சந்தோஷத்துடன் கூற, “அப்பா ஒரு நிமிஷம்” என்று மான்வி குறுக்கிட்டாள்.
ரெண்டு பேரும் கண்ணன் மான்வி இரண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க? அரை மணி நேரம் அவங்களுக்குள்ள என்ன பேச்சு வார்த்தை நடந்தது?
இப்போ மான்வி எதுக்கு ஒரு நிமிஷம்ன்னு சொல்றா?
அடுத்து என்ன நடக்கும்?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels