
📖 பெண்மையை வென்றவன் புயலானவன் · Chapter 1 of 58
பெண்மையை வென்றவன் புயலானவன்
- 24 Feb 2026
- 212 reads
- ☆ No ratings yet
- 1 min read
Promo
“இதுதான் முதலிரவா?” என உதடுகள் துடிக்க ஒடுங்கி இருந்தாள் அன்பு. சந்தியா காலப் பொழுதில் அவள் கழுத்தில் ஏறிய இரண்டு விஷயங்களில் ஒன்று, கசங்கி விழுந்து கொண்டிருந்தது. அழகாகத் தொடுத்த கல்யாணச் சம்மங்கி மாலை அவளின் நிலையைக் கண்டு கண்கள் கசக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்னொன்று, “உன்னை விடமாட்டேன்!” என முறுக்கிக் கொண்டு கிடந்தது. அது என்னவாக இருக்கும்? மஞ்சள் கயிறேதான்! இறுக்கமாக அவளின் கழுத்தைப் பற்றி இருந்தது.
இதோ, சடாரென அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்துவிட்டான். சிவந்த விழிகளில் கிறக்கமாக அவளைப் பார்த்தபடி அறைக்குள் நுழைந்தான். முகமெல்லாம் வியர்த்து வழிய, தள்ளாடியபடி நின்றான்.
அன்பரசியின் அன்பு கணவன்!
இனிதான் ஆரம்பம்… இனிதே ஆரம்பம்!
How did this episode feel?
Rate this episode
Be the first to rate










💬 Be the first to comment