Epi- 12
நான் உங்க மூத்த மகனை பத்தி பேசிட்டு இருக்கேன். நம்ம மருமகள் சுகாசினி பெரிய பிசினஸ் பண்றா? சொந்தமா கடை வச்சிருக்கா. அவங்க வீட்ல இருந்து அவளுக்கு மண்டபத்தில தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கு வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அப்டின்னா பாருங்க அவங்க எவ்ளோ பெரிய இடம்ன்னு? வேற என்ன பண்ணுவாங்க அவங்களோட பொண்ணுக்கு விமர்சையாக பண்ணனும்னு நினைச்சாங்க. ஆனால் பாருங்க ஒரு குடிகாரன் ஜெயிலுக்கு போயிட்டு வந்த தண்ட நாய்க்கும் அதே மண்டபத்தில் அவங்களோட அந்தஸ்துக்கு இணையா கல்யாணம் நடக்கும் போது வேற எப்படி இருக்கும்? என கேட்டார் சாந்தி.
சிவதாசன் மவுனமாக தனது மனைவியை பார்த்தார்.
என்னங்க மாமா? என சாந்தி கேட்க..
தேவ்வ தான் உனக்கு பிடிக்கல.. சரி விடு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு? என கேட்டார்.
அவளா என எகத்தாளமாக சிரித்தவர், அவள் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியுமா?
என்ன பண்றா நம்ம மருமகள்? என சிவதாசன் கேட்க..
அந்த சிறுக்கி வேலைக்கு போறா! அதுவும் எங்கே தெரியுமா? நம்ம கிட்ட ஆர்டர் கொடுப்பாரே முருகப்பா சில்க்ஸ் ஓனர் சண்முகம். அவரோட கடையில் நம்ம குடும்ப மானத்தை வாங்க புருஷன் கூட பங்கு போட்டு போட்டி போட்டு, அங்கே வேலை செய்யிறா? இது எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா? என கூறினார்..
இதுல என்ன அவமானம் இருக்கு? அவள் உழைச்சு சம்பாதிக்க நினைக்கிறா? திருடல பொய் சொல்லல என சிவதாசன் கூறினார்.
யாருக்கு தெரியும் நாளைக்கே நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்தாலும் வரும் அவள் புருஷன் மாதிரி அவளும்.. என சாந்தி நிறுத்த..
இப்படி இருக்கவ என்ன ம** க்கு குழந்தைய பெத்துக்கிட்ட? என ஆக்ரோஷமாக கேட்டு விட்டார்.
சாந்தியின் கண்களில் நீர் முட்டி கொண்டு வந்தது.
சிவதாசன் அதே ஆக்ரோஷத்துடன், பெத்த புள்ளைங்க தப்பு செஞ்சா அந்த தப்பை குத்தி காட்ட கூடாது. அப்படி எடுத்துக்காட்டி பேசிட்டா நீ பெத்த அம்மா இல்ல. தெருவில் போறவங்கலுக்கும் உனக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல என்றார்..
இதையெல்லாம் கேட்ட சாந்தி பொத்தென்று மயங்கி சரிந்தார்.
சட்டென சுயநினைவுக்கு வந்த சிவதாசன் வேகமாக சாந்தியின் பக்கம் சென்றவர். சாந்தி என்னாச்சு என கன்னத்தை தட்டினார். இன்னொரு பக்கம் விமலா வேகமாக வந்து, அன்னிக்கி என்னாச்சு அண்ணா? நான் இப்போவே விஜய்க்கு போன் பண்றேன் என துரிதமாக செயல்பட்டார்.
விஜய் அரக்க பறக்க ஓடி வந்தான். என்னாச்சு பா? சித்திக்கு என்னாச்சு? என அவனது குரலில் அத்தனை தீவிரம் இருக்க ஹாஸ்பிடலையே கதிகலங்க செய்தான். அந்த நேரம் பார்த்து டாக்டர் வந்தார்.
விஜய் வேகமாக ஓடி, என் சித்திக்கு ஒன்னுமில்லையே டாக்டர்? நான் இப்போவே போய் அவங்கள பார்க்கலாமா? என கேட்டான்.
அவங்களுக்கு blood pressure.. ஓவர் டென்ஷன் ஆக கூடாது. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. சாயந்திரம் வரை observation ல இருக்கட்டும் அதுக்கு பிறகு கூட்டிட்டு போங்க என்று விட்டு சென்றார் மருத்துவர்.
விஜய் பதட்டத்துடன் அறைக்குள் நுழைந்தவன் நேராக அவரின் அருகில் சென்று கையை பற்றி அமர்ந்து கொண்டான். என்னாச்சு சித்தி? நீங்க எதுக்கு இத்தனை கோபப்படுறீங்க? அப்படி என்ன நடந்தது என துடித்து போனான்.
சாந்தி அமைதியாக இருக்க, சிவதாசன் விமலாவிடம், விஜய் பொண்டாட்டிக்கு என்னோட மூத்த மருமகளுக்கு பெரிசா தாலி பிரிச்சு கோருக்கிற function பண்ணிடலாம். ஆக வேண்டியத நீயும் கூட இருந்து பண்ணு மா!! எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று புறப்பட்டார் சிவதாசன்.
அப்பா!! என விஜய் கோபத்துடன் அழைக்க, என்னடா? இப்போ எதுக்கு கத்துற? என அவர் திரும்பி கேட்க..
என்ன நீங்க பாட்டுக்கு போறீங்க? அம்மாவ இந்த நிலைமையில் விட்டுட்டு உங்களால் எப்படி பா போக முடியுது? என விஜய் உண்மையான வருத்தத்தில் ஆதங்கத்தில் பேசினான்.
சிவதாசன் இகழ்ச்சியான புன்னகையுடன், அவளுக்கு என்னை விட நீ தான் முக்கியம். நீ பக்கத்தில இருந்தாலே குணமாகிடுவா? வீட்டுக்கு வந்து சேருங்க என்று சொல்லி புறப்பட்டிருந்தார்.
சாந்தியின் கண்களில் கண்ணீர் திரையிட்டது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் முகத்தை வைத்திருந்தார்.
மிருகப்பா சில்க்ஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. கடையின் முன்னால் காரை நிறுத்தினார். உடனே சண்முகத்துக்கு அழைத்தார். அன்பு கேஷ் கவுண்ட்டரில் வேலையில் இருந்தாள்.
சிவதாசன் உடனே சண்முகத்துக்கு அழைத்தார். அடுத்த சில மணி துளியில் கடைக்கு வெளியே சென்றார் சண்முகம். என்ன தாசு வெளியே இருக்க உள்ளே வா என சண்முகம் அழைக்க, சிவதாஸ் தனது நண்பனை பார்த்து, என் மருமக உன்ற கடையில் தான் வேலை பாக்குறா.
என்ன? என சண்முகத்தின் முகம் மாறிட, நிஜமாவே எனக்கு தெரியாது தாசு.. நான் இப்போவே என்னன்னு பார்க்கிறேன் என சண்முகம் வெளியே செல்ல போக, அவரது கையை பிடித்து கொண்டார் சிவதாஸ்.
என்ன தாசு? என சண்முகம் திடுக்கிட்டு பார்க்க, இல்ல சண்முகம். நீ வேலைய விட்டு தூக்க வேணாம். அவள் ரொம்ப நல்ல தங்கமான பொண்ணு. நான் உன்கிட்ட பேசின போல நீ காட்டிக்காத. என்றவர் பணக்கட்டுகளை அவரின் முன்னால் தள்ளி, அடுத்த மாசத்துல இருந்து சம்பளம் ஏத்திடு. இந்த பணத்தை கொடு அவளுக்கு சந்தேகம் வரக்கூடாது சண்முகம் என்றார்.
என்னடா பிரச்னை? என சண்முகம் நொந்து கொண்டு கேட்க.m சிவதாசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சரி நான் பார்த்துக்கிறேன். வாடா உள்ளே? என சண்முகம் அழைக்க..
இல்ல சண்முகம். நான் வந்தனா அவளுக்கு சந்தேகம் வந்திடும். நீ என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம் என்று சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினார்.
அன்று மாலை எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் அன்பு. வந்தவள் சும்மா வரவில்லை ராசாத்தி அம்மாச்சி கொடுத்த 500 ரூபாயில் அவனுக்கு கொடுக்க வேண்டிய பட்டர் பின் வாங்கி கொண்டு வந்தவள் அவனது இடத்தில் வைத்து விட்டாள்.
வீட்டில் சமைக்க தேவையான அனைத்தையும் வாங்கி வந்தவள் இரவு அவளே சமைத்தாள்.
இரண்டு நாட்களாக மீண்டும் தேவ் தாஸ் வீட்டுக்கு வரவில்லை.
தாலி பிரித்து கோர்க்கும் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. காலையில் வேலைக்கு செல்வாள் மாலை எட்டு மணிக்கு வந்து சேர்வாள். திடீரென எடைக்கு போடும் கடையை கடந்து சென்றாள். அங்கே பழைய பள்ளி புத்தகங்களை பார்த்தாள். தினமும் துணிக்கடையில் வாங்கும் செய்தி தாள்களில் அரசு பணிகளுக்கு தேர்வுகள், காலியிடங்களின் விவரங்களை பார்த்திருக்கிறாள். உள்ளுக்குள் அவளுக்கு அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம். அப்படி வேலைக்கு சென்று விட்டால் தேவ் தாசுக்கு பாரமாக இருக்க வேண்டியதில்லை. செல்லத்தாய் திரும்ப வந்ததும், அவரை அழைத்து கொண்டு தனியாக சென்று விடலாம் என யோசனை வேறு ஓடி கொண்டிருந்தது.
அன்பு உன்னால படிக்க முடியுமா? என மனதுக்குள் கேள்வி ஓடியது. படிக்க முடியுமே? 6 ல இருந்து 12 வகுப்பு பாட புத்தகம் படிக்க முடியாதா? அஞ்சு வருஷம் கூட படிச்சு போட்டிதேர்வு எழுதலாமே? யாரு என்னை ஏன் fail ஆன? அப்டின்னு கேட்பா? என தனக்கு தானே சிரித்து கொண்டாள் வெள்ளந்தியாக… ஆனால் இப்பொழுது அவளுக்கு மனதில் இருப்பது தேவ் தாசிடம் தனக்கு உண்டான பணத்தை கொடுக்க வேண்டும் என்பது தான்.. ஓகே வரேன் dears முதல்ல தேவராட்ச்சன் கிட்ட கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்திட்டு அப்புறம் உங்க எல்லாரையும் வாங்கிட்டு போய் வீட்ல படிக்க prepare பண்ணுவேன். இளநிலை பட்டத்துக்கு தகுதியான போட்டி தேர்வு எழுதனும் என சொல்லி கொண்டு சென்றாள்.
அந்த நாள் மாலை சோர்வுடன் வீட்டுக்கு வந்தாள் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். என்ன விசேஷம்? என வேடிக்கை பார்த்தாள். வெளியே இருந்து பார்க்க மட்டும் தான் இந்த வீடு பெரிசா இருக்கு. வீட்டுக்கு வேலைக்காரங்க இருக்காங்க கார் இருக்கு, பெரிய வீடா இருக்கு. ஆனால் வீட்டுக்குள்ள போனால் நமக்கு என்னவோ மூலை தான். என நினைத்தபடி உள்ளே சென்றாள்.
அட இது யாரு? என ஜமுனா கேட்டார். பார்கவி குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருந்தாள். தாலி பிரிச்சு கோர்க்கும் நிகழ்வுக்காக.. விமலா மெல்லிய குரலில் இது தேவ் தாசோட பொண்டாட்டி என்றார்.
அப்படியா? என்றவர்..சாப்பிட கூப்பிடலாமே நம்ம எல்லாரும் சாப்பிட்டோம்ல என்றவர் பார்கவி அந்த பொண்ண அழைச்சிட்டு வா? என அனுப்பி வைத்தார்.
பார்கவி நேராக அன்பரசியின் வீட்டு பக்கம் சென்றாள். ஹலோ அன்பு? என மெல்லிய குரலில் அழைத்தாள்.
யாரது என அவள் கதவை திறந்து கொண்டு வந்தாள்.
உங்களை சாப்பிட வர சொன்னாங்க? என பார்கவி அழைக்க..
இல்லங்க வேணாம்.. என்று சொல்ல வந்தவளுக்கு சாந்தியின் நினைவு வந்தது. ஒரு பெரும் மூச்சை விட்டவள். வரேன் என திரும்பினாள். அடடே வீடு சுத்தமா இருக்கே? தேவ் குடிக்கிறத நிப்பாட்டிட்டானா? என கேட்டாள் பார்கவி.
அன்பு புருவம் உயர்த்தியவள் அப்படி தான்னு நினைக்கிறேன் என புன்னகையுடன் கூறியவள். உள்ளே வாங்க என அழைத்தாள்.
பார்கவி சிரித்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். அன்பரசி வேகமாக உடையை மாற்றி கொண்டவள் தலையை வாரி கொண்டே பார்கவியை பார்த்து, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்றாள்.
ஆம் பார்கவி பேரழகி. நீண்ட கூந்தல் கொழு கொழு கன்னங்கள், கொஞ்சம் பூசினார் போல உடல் வாகு, நல்ல நிறம்.. அவளை பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்கும். அவ்வளவு அழகு.
பார்கவி சின்ன புன்னகையுடன் வேடிக்கை பார்க்க யாழினி சிணுங்கினாள். இல்லடா இல்லடா.. என்னாச்சு உனக்கு? அழ கூடாது என சமாதானம் செய்தாள் பார்கவி.
பார்கவி!! பார்கவி என விமலாவின் குரல் கேட்க.. அன்பரசி புன்னகையுடன், நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க நான் வரேன் இங்கே ரொம்ப வியர்க்கும்.
அப்போ சரி என பார்கவி வெளியே வந்தவள் தனது அன்னையை பார்த்து, என்னாச்சு மா? என கேட்க..
கூப்பிட்டு வரதுக்கு இத்தனை நாளா? அவள் கிட்ட என்ன பேச்சு? தேவையில்லாம பேசுற வேலை வச்சுக்காத என தரதரவென இழுத்து சென்று விட்டார்.
ஒரு சாதாரண உடையுடன் வெளியே வந்தவள். பின் பக்க வாசல் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.
ஜமுனா அவளை பார்த்ததும், வா வா கண்ணு? என்ன பின்பக்கம் இருந்து வர? என அவளை அழைத்தார்.
அவள் புன்னகையுடன் நல்லா இருக்கீங்களா? என கேட்டார்.
நான் நல்லாருக்கேன் என்று ஜமுனா அன்புவின் தலையை நீவியபடி வா கண்ணு நீ செல்லத்தாய் பேத்தி தானே? நான் உன்ற மாமனாருக்கு பெரிமா பொண்ணு என அவளை சாப்பிட அமர வைத்தார்.
பார்கவி குழந்தையை கொஞ்சியபடி இலை எடுத்து போட்டாள்.
அங்கே எதச்சையாக வந்த சாந்தியின் கண்களில் பட்டு விட்டாள் அன்பு.
தொடரும்..