பெண்மையை வென்றவன் புயலானவன்.

by Pradhanya kuzhali
197 views

Epi -7 

என்ன தெரியும்? என்பதை போல அன்பு அவனை ஏறிட்டு பார்த்தாள். 

உனக்கு யாருமில்லைன்னு எனக்கு தெரியாது என்றான் தேவ். அன்பரசியின் பார்வை அவன் மீது ஆழமாக படிந்தது. 

தேவ் ஒரு பெருமூச்சுடன், வா வீட்டுக்கு போலாம் என அழைத்தபடி முன்னால் நடந்தான். 

உங்களுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னு எனக்கும் தெரியும் என்றாள் அன்பு. 

சட்டென அவளது குரல் கேட்டு நின்றவன் திரும்பி பார்த்தான். அன்பரசி தலையை குனிந்து கொண்டு, உங்களுக்கு என்னை பிடிச்சிருன்னு நினைச்சு தான் நானும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். இப்போ என்னால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு என்றாள் உள்ளார்ந்த குரலில்.. 

அது தொந்தரவு இல்ல. இம்சை என்றான் தேவ். 

அவளின் கண்களில் நீர் சரிய கோபத்துடன் பார்த்தாள். 

தேவ் தெளிவாக அவளை பார்த்தவன். நான் உன்னை வேணாம்னு சொன்ன காரணம்? எனக்கு கல்யாணம் பண்ற அவளுக்கு எந்த தகுதியும் இல்ல. நீ படிச்சவ! நான் படிக்காதவன். நான் குடிகாரன், சிகரெட் பிடிப்பேன், உனக்கு யாருமே இல்லாம நீ அனாதை. நான் எனக்கு எல்லாரும் இருந்தும் நான் தனியா இருப்பேன் கிட்டதட்ட நானும் அனாதை கேட்டக்கிரி தான். நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். இப்படி பட்ட ஒருத்தனை உன்னை சார்ந்த யாரும் கட்டிக்க முன் வருவாங்களா? நீயே சொல்லு? என கேட்டான். 

இது தான் காரணமா? எதனால ஜெயிலுக்கு போனீங்க என அவள் அவனை பார்த்தாள். 

எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும்? நீயும் விஜய் தாசுக்கு பார்த்த பொண்ணு தானே? அவன் வேணாம்னு சொன்னதும் வேற வழி இல்லாம தானே என்னை கட்டிகிட்ட? என்றான் குத்தலாக.. 

அன்பரசியின் முகம் கோபத்திலும் இயலாமையிலும் மாறி போய், கைகளை இறுக்கி மடக்கி கொண்டவள். வாழுறதுக்கு வழி இல்லாம இருந்த எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்காங்க அம்மாச்சி! எனக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது. அவ்ளோ தான்.. அந்த இடத்தில் யாராக இருந்தாலும் கல்யாணம் செஞ்சிருப்பேன். என்றவள் தேம்பி அழுதபடி, இதுக்கு மேலே என்னை நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க என முகத்தை திருப்பி கொண்டாள். 

சரி போறேன் என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். நேரம் கிடுகிடுவென ஓடியது. மதிய நேரம் தாண்டி மாலை அதன் பின் இரவு என நேரமும் பொழுதும் நகர்ந்து கொண்டிருக்க, அதற்கு ஏற்ப பேருந்து நிலையம் பரபரப்பான சூழலுடன் இயங்கி கொண்டிருந்தது. அன்பரசி நொந்து போனாள் இரவு 10 மணியை தாண்டி கொண்டிருந்தது. காலையில் ராசாத்தி அம்மாச்சி வீட்டில் சாப்பிட்டு வந்தது தான். அதன் பின் பட்டினியாக இருக்கிறாள் காலையில் இருந்து. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை வரணும்? என்னை எதுக்கு கடவுளே உயிரோட வச்சிருக்க? என்னை எடுத்துக்கோ! என உள்ளுக்குள் மறுகியபடி நின்றவள் கண்களில் நீர் வழிந்தது. 

என்னாச்சு? உன் பேர் என்ன? எங்கே போகனும்? சொல்லு நான் கூட்டிட்டு போறேன் என கேட்டபடி அருகில் வந்தார்கள் ஆடவர்கள். 

அன்பரசி மனதில் திக்கென பயம் தொற்றிக் கொண்டது. நீங்க நினைக்கிற மாதிரி என அவள் சொல்ல வர, அவளை பார்த்து பின்வாங்கினார்கள் வாலிபர்கள். 

புருவம் சுருக்கியபடி அவர்களை பார்த்த அன்பு தீவிரமாக யோசித்தபடி திரும்ப, அங்கே தேவ் நின்றிருந்தான். 

ஏதோ மனதில் உள்ள அழுத்தம் குறைந்தது போல ஒரு உணர்வு. அவனை பார்த்ததும் பரவியது. 

அழுகை இன்னும் அதிகமானது அவள் வேகமாக நடந்து செல்ல, ஹே இம்சை ஓவரா பண்ணாத வா போலாம் என முன்னால் சென்று வழி மறித்தான். 

அன்பரசிக்கு அவனை அணைத்து கொள்ள வேண்டும் போல தோன்றியது முதன் முறையாக.. அவன் மட்டும் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் அவளது சரீரம் சிதைந்திருக்கும். 

நான் இம்சை தானே என்னால வர முடியாது. என அன்பரசி செல்ல.. 

இப்போ நீ வரலனா நான் கண்டிப்பா கிளம்பிடுவேன் என தீவிரமாக தேவ் தாஸ் கூற.. 

வேறு வழி இல்லாமல் அவன் பின்னால் சென்றாள். 

அழுத்தக்காரி! Bun butter என சொல்லி கொண்டான். இருவருக்கும் நடுவில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. அவர்கள் வீடு வந்து சேர அதிகாலை நான்கு மணியானது.  

கேட்டு பூட்டி இருக்க அன்பரசி தூக்க கலக்கத்துடன் அவனை ஏறிட்டாள். 

தேவ் பூட்டை உற்று பார்த்து கொண்டிருந்தான். எப் எப்படி உள்ளே போறது? என மெல்லிய குரலில் அவள் கேட்க.. 

எல்லாம் உன்னால தான் இத்தனை லேட்டு!! என்றான் கடுப்புடன்.. 

நான் என்ன பண்ணேன்? என சிணுங்களுடன் கேட்டவளை முறைத்து பார்த்தான் தேவ். 

எதுக்கு முறைக்கிறீங்க? என அவள் கேட்க.. 

பெரிய இவள் மாதிரி நின்னுட்டு இருந்தியே அதான் லேட் என்றான் தேவ். 

இப்போவும் நீங்க என்னை இஷ்டப்பட்டு கூட்டிட்டு வரலனு எனக்கு தெரியும். இது பரிதாபம்.. அப்படி தானே? என குரல் தழுதலுக்க  கூறினாள் அன்பரசி. 

இல்ல பாரிஜாதம் என்றான் தேவ். 

ஹாங் என அவள் பார்க்க, சுவர் ஏறி உள்ளே குதித்தவன். ஜன்னலில் பக்கம் இருக்கும் சாவியை எடுத்து பூட்டை திறந்தான். 

சரியான வித்தைக்காரன் தான் என மனதுக்குள் நினைத்து கொண்டாள் அன்பு. இருவரும் அவர்களின் இடத்துக்கு வந்து விட்டிருந்தார்கள். 

வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடி குப்பென வியர்வை பூக்க ஆரம்பித்தது. வீட்டின் விளக்குகளை போட்டவன் அவளை பார்த்தான். அன்பு சோர்வுடன் கண்களை தேய்த்தபடி ஏறிட்டாள். 

இந்த வீட்ல இருக்க வரைக்கும் நீ பாதுகாப்பா இருப்ப. இங்கேயே நீ இருந்துக்கலாம் நானும் இங்கேயே இருப்பேன். நாளையில் இருந்து சமைக்க ஏற்பாடு பண்றேன். உனக்கு என்ன தேவைன்னு சொல்லு வாங்கி வைக்கிறேன். நான் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தான் பொருள் வாங்குவேன். உனக்கும் எது ரொம்ப அத்தியாவசியமா தேவைபாடுதோ அதை சொல்லு. இப்போ தூங்கு மத்த விசயத்தை காலையில் பேசிக்கலாம் என்று விட்டு கதவை திறந்து போட்டு தலை வைத்து படுத்து கொண்டான் தேவ். 

அன்பரசிக்கு இப்பொழுது தேவைப்பட்டது ஒரே ஒரு விசயம் தான். நல்ல தூக்கம் வேண்டும். ஜன்னலின் பக்கம் இருக்கும் பொருட்களை நகர்த்தி விட்டவள் வேகமாக பாயை விரித்து தலையணை வைத்து உறங்க ஆரம்பித்தாள். 

வாழ்க்கை இப்படியே இருந்து விடாது. கண்டிப்பாக அனைவருக்கும் மாற்றங்கள் வரும். இப்பொழுது வரவில்லை என்றால் இனி வரும் காலங்களில் வரும். 

அடுத்தநாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. மணி பத்தை தாண்டி இருந்தது. இன்னும் உறங்கி கொண்டிருந்தாள் அன்பு. 

அடேங்கப்பா நம்மள விட தூங்குவா போலவே? என நினைத்தபடி பார்த்து கொண்டிருந்தான் தேவ். மணி 10.30 ஆகி விட பதினொரு மணிக்கு பாக்ஸிங் விசயமாக செல்ல வேண்டும் சில பெரிய மனிதர்களை சந்திக்க வேண்டும். அதனால உடற்பயிற்சி செய்து கொண்டே பச்சை முட்டையை குடித்தான். குளித்து முடித்து உடைக்கு மாறியவன். கடைக்கு சென்று வந்தான் தேவ். 

ஹே எந்திரி!! ஹலோ ஜொள்ளு ஊத்திட்டு தூங்காத உன்னை தான் என தேவ் கன்னத்தில் தட்டினான் தேவ். 

வேண்டாம் என கத்தி கொண்டு எழுந்து அமர்ந்தாள் அன்பரசி. அவளின் முகம் வியர்த்து இருக்க.. 

தேவ் அவளின் முன் டீயை வைத்தவன் கூடவே பட்டர் பன் வைத்தான். 

ஹை என பட்டர் பன் எடுக்க சென்றவள். தனக்கு எதிரில் ஒரு முரட்டு உருவம் முறைத்து கொண்டிருப்பதை திடுக்கிட்டு பார்த்தாள். 

சாரி தெரியாம தூங்கிட்டேன் இனி சீக்கிரம் எழுந்துகுவேன் என அப்பாவி போல கூறினாள். 

நீ இரா பகலா தூங்கினாலும் எனக்கு கவலை இல்ல. உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் இப்போ போனால் நைட்டு 12 மணிக்கு தான் வருவேன். என்றான். 

அப்படியா? என்றவள் சுற்றியும் பார்த்து, அடுப்பு இருக்கா சமைக்க பாத்திரம் இருந்தால் நான் சமைச்சிடுவேன் என்றாள். 

வெளியே விறகு அடுப்பு தான் இருக்கு. நான் diet ல இருக்கேன். இன்னிக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ நாளைக்கு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடுறேன் என்றான் தேவ். 

என்னங்க? என அழைக்க.. கடுப்புடன் திரும்பினான் தேவ். 

அன்புவின் முகம் சின்னதாக போனது. 

உனக்கும் எனக்கும் நடுவில் ஒண்ணுமில்ல.. அதனால நீ என்னை பேர் சொல்லியே கூப்பிடு! என்றான்.

சரி தேவதாஸ் சார் என்றாள் அன்பு. 

அதற்கும் திரும்பி முறைத்தான். அன்பு திட்டமாக அவனை பார்த்து, நீங்க தானே பேர் சொல்லி கூப்பிட சொன்னீங்க. அதனால நான் இனி அதுல பிக்ஸ் ஆகிக்கிறேன். அப்புறம் எனக்காக என்னென்ன செய்றீங்கன்னு கணக்கு வச்சு திருப்பி கொடுத்திடுவேன். நம்ம ரெண்டு பேரும் இங்கே தங்கி இருக்கோம் அவ்ளோ தான் வேற ஒண்ணுமில்ல என கூறினாள் அன்பு. 

ம்ம் எல்லாத்தையும் மொத்தமா கொடுத்துட்டா சரி! என்று விட்டு நகர்ந்தான். 

தேவதாஸ்!! 

ப்ச் என்ன? 

எனக்கு நைட்டு ரொம்ப கொசு கடிக்கிது. கொசுவத்தி சுருள் அப்புறம் விசிறி வாங்கி கொடுக்க முடியுமா என கேட்டாள். 

ம்ம் வாங்கிட்டு வரேன் என சொல்லி விட்டு புறப்பட்டவன். அவளின் முன்னால் 500 ரூபாவை வைத்தான். 

அவள் ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்தினாள். 

இது ஆத்தா உனக்கு கொடுத்தது. உன்னோடது. என வைத்து விட்டு சென்றான். 

ஓகே தேவ் தாஸ் என்றாள் அன்பு. 

அவன் அவளை பற்களை கடித்து கொண்டு முறைக்க.. 

தேவ் தாஸ் உங்களுக்கு லேட் ஆகலையா என்ன? என கேட்டாள் சின்ன சிரிப்புடன்.. 

போறேன் என வேகமாக புறப்பட்டு சென்றிருந்தான். 

அவன் சென்றதும் உதடு பிரித்து சிரித்தாள் அன்பு. ஏனோ இத்தனை நாட்கள் இருந்த பயமும் பதற்றமும் இப்பொழுது இல்லை. அவன் மீது ஒரு சின்ன பிடித்தம் ஏற்பட்டிருந்தது. அவன் வாங்கி கொடுத்த பாட்டர் பண் மற்றும் டீ இரண்டையும் தெம்புடன் குடித்தவள் அவர்கள் இருக்கும் வீட்டை சுற்றி பார்த்தாள் ஒரே ஒரு அறை தான் நீளமான அறை… 

ம்ம் இன்னிக்கி வீட்டை க்ளீன் பண்ணனும் என்று புடவையை சொருகி கொண்டவள் அவளது வேலையை ஆரம்பித்தாள். 

நிறைய காலி மது பாட்டில்கள் இருக்க, அது அனைத்தையும் எடைக்கு போட முடிவெடுத்திருந்தாள் அன்பு. 

தேவ் மற்றும் அன்பு இருவரும் வீட்டுக்கு வந்த விசயத்தை தெரிந்து கொண்ட சாந்தி மெல்ல பின்பக்கம் வந்தார். 

அங்கே அன்பு..? 

தொடரும். 

You may also like

Leave a Comment