பெண்மையை வென்றவன் புயலானவன்.

by Pradhanya kuzhali
194 views

Epi -13 

அன்பு தயக்கத்துடன் அமர்ந்து சாப்பிட, ஜமுனா அவளை பார்த்து புன்னகையுடன், எதுக்கு இத்தனை தயக்கம்? நல்லா சாப்பிடு கண்ணு. இது உன்ற ஊடு என்றவர். 

பார்கவி சூடா வடை ஹாட் பாக்ஸில் இருக்கு தானே? என கேட்டார். 

ஆமா பெரியம்மா நான் போய் எடுத்திட்டு வரவா? என பார்கவி நகர, பார்கவி என விமலா கத்தினார். 

என்னமா? என பார்கவி கேட்க.. இவள் ரொம்ப அழுகிறா நீ இங்கே வா! என அழைத்து விட்டார். 

அன்பு மெதுவாக சாப்பிட்டு கொண்டிருக்க, நீங்க சாப்பிடுங்க நான் இதோ வந்துடுறேன். என்று பார்கவி நகர்ந்து விட.. 

எனக்கு இதுவே போதும் வடையெல்லாம் வேணாம்ங்க என்றாள் அன்பு. 

என்ன வேணாம்? என்ன கொஞ்சம் கொஞ்சமா கொரிச்சிட்டு இருக்க? அள்ளி தின்னு கண்ணு. நான் போய் வடை எடுத்திட்டு வரேன் என்று ஜமுனா உள்ளே சென்று விட,  அங்கே எதேச்சையாக வந்த சாந்தியின் கண்களில் பட்டு விட்டாள் அன்பு. 

சரசு மற்றும் சாரதா இருவரூக்கும் சாந்தியின் மீது ஏகப்பட்ட வைத்தறிச்சல்.. சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் பெரிய பணக்காரரி ஆகி விட்டாள். அதுவும் இரண்டாம் தாரமாக தனது அக்காள் புருஷன அவள் ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் போது பழித்து பேசிய கூட்டம் இன்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு வந்து விட்டாள். ஆம் அந்த அளவுக்கு சிவதாசன் அவரது உழைப்பால் உயர்ந்து இருந்தார். மிகவும் பெரிய  தொழிலதிபர் மனிதர்கள் பட்டியலில் வந்து விட்டிருந்தார். அந்த வயித்து எரிச்சல் மிகவும் அதிகமாகவே இருந்தது. அதனால் ஏதாவது செய்ய வேண்டுமே என்று எண்ணியவர்களுக்கு பகடை காயாக கண்ணுக்கு தெரிந்தவள் தான் அன்பு. 

சாந்தி.. உன்ற சின்ன மருமகளுக்கு தாலி பிரிச்சு கோர்க்களையா? என உறவினர் சாரதா கேட்க.. 

ம்ம் கோர்க்கலாம் கோர்க்கலாம் அவங்க பொறந்த வீடு இவளுக்கு தாலி பிரிச்சு கோர்க்க மேல தாளத்தோட வர்றாங்க என்றார் சிரித்து கொண்டே.. 

சரசு சாரதா இருவரும் நமட்டு சிரிப்புடன் பார்க்க, சாந்தி அதிகாரத்துடன், இவளோட சேர்த்து வீட்டு வேலை செய்யிறவர்களுக்கும் பாத்திரத்தொல சாப்பாடு போட்டு கொடுத்திடு விமலா. ரெண்டு நாள் இதை வச்சுக்கட்டும்.  என அனைவரின் முன்னால் சாந்தி சொல்லி விட்டு நகர.. அன்பு…? 

சாரதா மேலும், நீ பெத்த பையனுக்கு நல்லா பெரிய இடத்தில தான் பொண்ணு கட்டியிருக்க போல..  என கிண்டலடித்தார்கள்.

சாந்தியின் முகத்தில் கோபம் படற, யார் யாருக்கு என்ன தகுதி இருக்கோ அந்த தகுதிக்கு தான் செஞ்சிருக்கேன்.  அவளோட குடும்பம் வந்து போட்டால் நான் என்ன கைய பிடிச்சு தடுக்கவா போறேன். என்றவர் கேவலமாக பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். 

அன்புக்கு அழுகை தொண்டை குழியை அடைக்க கைகள் எல்லாம் நடுங்கியது. அனைவரின் முன்னாலும் அழ கூடாது என்று நினைத்தவள் வேகமாக எழுந்து இலையை மூடி வைத்து அவளது எச்சில் இலையை அவளே எடுத்து கூடையில் போட்டாள். 

கைகள் நடுங்க வேகமாக அவளது அறைக்கு நடந்தாள் என்று சொல்வதை விட ஓடினால் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். பார்கவிக்கு அவளை பார்க்க மிகவும் பாவமாகி போனது. 

அவளது இடத்துக்கு வந்தவள் கதவை சாத்தியபடி பெருங்குரலெடுத்து அழுதாள். அவளது பாட்டியுடன் இருக்கும் போது, அத்தை லலிதா வீட்டில் இருக்கும் போது கூட இந்த அளவுக்கு அவள் வேதனையை அனுபவித்ததில்லை. ஆனால் இன்று? மொத்தமாக உடைந்து போனாள் சிறிய சிறிய துண்டுகளாக.. 

இரவு பத்து மணிக்கு தேவ் வந்து சேர்ந்தான். அக்கம் பக்கத்தில் அனைவரும் பேசி கொண்டது காதில் விழுந்தது. தாலி பிரித்து கோர்க்கும் சடங்குக்கு தான் அனைவரும் வந்திருக்கிறார்கள் என்று. நாளை மண்டபத்தில் நடக்க போகிறது. 

பார்கவி தேவுக்காக காத்திருந்தாள் அவனுடன் எப்படியாவது இன்று பேசி விட வேண்டும் என்று, ஹே அங்கே என்னடி பார்த்திட்டு இருக்க? என விமலா கேட்க, வேகமாக ஜன்னலை மூடி விட்டு ஒன்றுமில்லை என திரும்பினாள். 

மறுபடியும் மறுபடியும் சொல்றேன் கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு. அந்த தேவ் பொண்டாட்டி கிட்ட உனக்கு என்னடி பேச்சு? என மிரட்டினார். 

பார்கவி எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள். வீட்டுக்குள் நுழைந்த தேவின் கண்களில் அவள் குத்துக்காலிட்டு முகத்தை புதைத்து அமர்ந்திருப்பது தெரிந்தது. 

தெரிஞ்சு போச்சு இவள் என்ன நினைக்கிறாள்னு. இப்போவே அதை clarifying பண்ணனும் என நினைத்தவன். மேடமுக்கும் தாலி பிரிச்சு கோர்க்கணுமா? என்ன? உனக்கு தெரியாதா?  நம்ம ரெண்டு பேரும் ரூம் மெட்ஸ் தான்.. தேவையில்லாம எண்ணங்களை வளர்த்துக்க வேணாம்.  வேற எதுவும் நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் இல்ல நீ தேவையில்லாம ஆசய என்று சொல்ல வந்தவன் சட்டென அதிர்ந்து போனான். 

சட்டென நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கண்களில் நீர் கொட்டியது. இதை தேவ் எதிர்பார்க்கவே இல்லை. 

அன்பு உடல்கள் நடுங்க எழுந்தவள். எதுக்கு என்னை கல்யாணம் பண்ண? ஏன் கல்யாணம் பண்ண? என்னை தான் உனக்கு பிடிக்கலையே? மண்டபத்துல இருந்து என்னை விட்டு ஓடி இருக்கலாமே? என்னை பிடிக்கலன்னு சொல்லி இருக்கலாமே? என அவனது சட்டையை உலுக்கியவள் விசும்பி கொண்டே, ஆமா உனக்கும் எனக்கும் நடுவில் ஒன்னுமே இல்ல.. நீ ரூம் மெட்டா? அதுக்கு கூட நீ தகுதி இல்ல. நீ ஒரு stranger stranger எனக்கு யாரோ ஒருத்தன். நீ அன்னிக்கு சொன்னியே தாலிய கழட்டி கொடுன்னு.. என்றவள் கோபத்துடன்.. இந்தா தாலி.. இது உன்னோடது தானே.. இந்த மாங்கல்யம் என வேகமாக கழுத்தில் இருந்து கழட்டியவள் அவனது கைகளில் திணித்தாள். 

அவளது முகம் சிவந்து, அழுகையின் வெளிப்பாட்டில் கன்னங்கள் உப்பி வீங்கி இருந்தது. கண் இமைகள் அழுகை ஈரத்தில் ஒட்டி இருக்க முகமெல்லாம் சோர்வில் வாடி கிடந்தது. 

தேவ் உறைந்து நின்றான். இந்த அன்பரசி அவனுக்கு வேறு ஒருத்தியாக தெரிந்தாள். அவனை கையெடுத்து கும்பிட்டவள்.  கண்டிப்பா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் எதுவுமே இல்ல.. சீக்கிரமே சீக்கிரமே என சொல்லி கொண்டிருக்கும் போதே அவளது குரல் நடுங்கியது. சீக்…  என சொல்ல வந்தவள் வார்த்தையை முழுங்கி கொண்டு அவளது படுக்கைக்கு சென்று விட்டாள். 

விடிய விடிய அழுது கரைந்தாள். தேவ் தாஸ் மொத்தமாக உடைந்து போனான். அவனது கண்கள் சிவந்து போக வேகமாக வெளியேறினான். 

தேவ் ஒரு நிமிசம்..? தேவ் திரும்பி பார்த்தான் கோபத்துடன்.. 

(To be continued) 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அன்பரசியின் முகத்தில் அத்தனை சோர்வு, கவலை அனைத்தும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அதையெல்லாம் ஓரம் கட்டி வைத்தவள். அவளது அன்றாட வேலைகளை செய்தாள். அவளது உடைகளை துவைத்து காய போட்டவள். வேகமாக குளித்து முடித்து வேலைக்கு புறப்பட்டாள். யாரையும் கண்டு கொள்ளவில்லை.. 

இந்த பக்கம் சுகாசினி மற்றும் விஜய் தாஸ் இருவரையும் சந்தமேளம் கொட்டி கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் மண்டபத்துக்கு அழைத்து வந்தார்கள். நான்கு குருக்கள் காத்திருக்க, இருவருக்கும் ஏலக்காய் மாலையை போட்டு சாந்தி ஆசிர்வாதம் செய்தார். அதற்கு காரணம் சுகாசினி மகாலட்சுமி அவதாரமாம். 

சுதாராணி காசி நாதன் இருவருக்கும் அத்தனை கர்வம் மற்றும் பெருமை கொட்டி கிடந்தது. விஷ்ணு தனது தங்கையின் மீது காசுகளை வீசி டான்ஸ் ஆட வைத்து அழைத்து வந்தான். பார்கவி யாழினியை வைத்திருக்க,  அவளின் கணவன் திவாகர் அருகில் நின்றிருந்தான். 

வைரக்கல் பதித்த மோப்பு கொடி அந்த மரகத கற்கள் மின்னி கொண்டிருந்தது. இது சாந்தி அவளுக்காக பார்த்து பார்த்து செய்ய சொன்னது. நீளமான தாலிக்கொடி 9 பவுன் அதில் தங்க காசு, மாங்கா வடிவம், லட்சுமி வடிவம் என பிரம்மாண்ட கொடியை மேள தாளங்கள் முழங்க போட்டு விட்டான் விஜய் தாஸ். 

அனைவரும் போட்டோ எடுத்து கொண்டார்கள் சிவதாசன் வந்த விருந்தினர்களை கவனித்து கொண்டிருக்க, சாப்பாடு பரிமாறும் நேரம் வந்தது அனைத்து விருந்தினர்களும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். உணவின் சுவையை பற்றி பெருமை பாடினார்கள். சில பேர் தூற்றி பேசினார்கள். 

சரியென வந்த தலை பத்து தலை படத்தில் இருந்து 

நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க

வெல வெல எதிரி பதுங்க 

தந்தனக்கா தத்தக்கா

தகதிமி தத்தக்கா

தந்தனக்கா தத்தக்கா

தகதிமி தத்தக்கா பாடல் ஓடி கொண்டிருக்க, old monk சரக்கு பாட்டிலுடன் பந்தி பரிமாறும் ஹாலுக்குள் நுழைந்தான் தேவ் தாஸ். 

மண்டபத்தில் சலசலப்பு குரல் கேட்க, அப்பொழுது தான்  சுகாசினி, விஜய் தாஸ், சாந்தி, சிவதாசன், விமலா, பார் கவி, திவாகர் என அனைவரும் அமர்ந்திருக்க.. அனைவரும் சட்டென திரும்பி பார்த்தார்கள். 

சிவதாசன் பதட்டத்துடன் எழுந்து தேவ்வை அழைக்க செல்ல, விஜய் கோபத்துடன் எழுந்தான்..

தேவ் நேராக சாந்தி அமர்ந்திருக்கும் பக்கம் வந்தவன் கோபத்துடன் எல்லா டெஸ்க் டேபிளையும் கீழே தள்ளி விட்டான். அனைத்தும் பெரும் சத்தத்துடன் கீழே விழ, ச்சீ ராஸ்கல் ரவுடி மாத்ரி நடந்துக்கிறான்? டேய் விஷ்ணு என்ன பார்த்திட்டு இருக்க? என சுதா கோபத்தில் முகம் சுழிக்க, விஷ்ணு கையை முறுக்கி கொண்டு முன்னாள் சென்றான். 

விஜய் இன்னொரு பக்கம் பாய்ந்தபடி வர, அங்கிருக்கும் உணவுகளை கீழே கொட்டி வீசி எறிந்தான் சாந்தியின் முன்.. அனைவரும் அவரவர்களுக்கு உள்ளே கிசுகிசு பேச்சுக்கள் பேசி கொள்ள.. சாந்தியின் முன்னால் தமார் மது பாட்டிலை சுக்கு நூறாக உடைத்து போட்டான். 

டேய் என்னடா பண்ற? என விஜய் அவனது சட்டையை பற்ற.. 

மூடிட்டு போயிடு.. இங்கே நான் பார்க்க வந்தது சாந்தி சிவதாசன.. என்றவன். உங்க வீடு உங்க மருமகளாக எவளை நினைக்கிறீங்களோ அவளை களை புடுங்க விடுங்க ஒரு ஏக்கர் கொடுத்து ஓட்டி அறுத்து தள்ள சொல்லுங்க அறுவடைய.. என்றான். 

சாந்தியின் முகம் சடுதியில் வியர்த்து கொட்டியது. உங்க கிட்ட கையேந்தி பிச்சை எடுக்க யாராவது வந்தால் அவங்களுக்கு உங்க குடும்ப பெருமை பாடி பிச்சை போடுங்க.. அதை விட்டுட்டு சம்மந்தமே இல்லாதவங்க கிட்ட சம்மந்த படுத்தி பேசுற வேலைய உங்களோட மூத்த மருமகள் கிட்ட மட்டும்… என நிறுத்திய தேவ் தாஸ்.

வேகமாக தள்ளி விட்ட டெஸ்கை நிமிர்த்தி விட்டு அங்கே அதில் பெரிய இலையை போட்டவன் ஒரு குண்டான் சாதத்தை கொட்டி அதில் நான்கு கரண்டி குழம்பு என அனைத்தையும் அள்ளி அள்ளி குழப்பி வைத்தவன் அதை இழுத்து வந்து சாந்தியின் முன் வைத்து திண்ணுங்க.. என அவனது சட்டை பாக்கெட்டில் இருந்து மது பாட்டிலை எடுத்து நடு கூடத்தில் ஓங்கி போட்டு உடைத்து விட்டு சென்றான் தோரணையாக.. 

தொடரும்.. 

You may also like

Leave a Comment