பெண்மையை வென்றவன் புயலானவன்

by Pradhanya kuzhali
433 views

Epi -1 

சிவந்த குதிகள் இரண்டும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டன. ஒரு காலை மாற்றி மறு காலில் பாரத்தை ஏற்றியபோது, அந்தப் பாதங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது போல இருந்தது. “நான் இருக்கிறேன்… நான் இருக்கிறேன்…” என்று ஒரு கால் மறு காலுக்கு ஆறுதல் சொல்லியது. ஆனால், அந்த ஆறுதல் அவளது இதயத்தின் ரணத்தை ஆற்றுவதாக இல்லை.

அன்பரசி அங்கே ஒரு சிலையைப் போல நின்றிருந்தாள். உடல் ஒரு பக்கம், அவளது விதி ஒரு பக்கம் என அவளை இழுத்துப் பிடுங்கிக் கொண்டிருந்தன. கழுத்தில் சுமந்து கொண்டிருக்கும் அந்த கனமான மணமாலை அவளுக்குப் பாரமாகத் தெரியவில்லை. ஆனால், புதுப் பொலிவுடன் அவளது மாங்கல்யச் சரட்டில் மின்னிக் கொண்டிருக்கும் அந்தப் பொன் தாலி… அது மட்டும் ஏன் இத்தனை பாரமாக இருக்கிறது?

அந்தத் தாலி அவளுக்கு இந்த வீட்டில் உரிமையைக் கொடுத்ததா? அல்லது அவளை ஒரு இருண்ட மூலையில் தள்ளிவிடும் முத்திரையா? சுற்றிலும் மனிதர்கள் நடமாட்டம் இருந்தது. 

ஆனால், அந்தப் பெரிய வீட்டில் அன்பரசி மட்டும் அநாதையைப் போல ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். புகுந்த வீட்டில் நுழைந்த முதல் நாளிலேயே அவள் அந்நியப்பட்டுப் போனாள்.

அவளைக் கடந்து சென்ற உறவினர்களின் பார்வையில் ஈரமில்லை. ஒரு புதுப் பெண்ணை வரவேற்கும் ஆர்வம் அங்கில்லை. மாறாக, ஒரு விலங்குக்காட்சி சாலையில் விசித்திரமான ஒரு உயிரினத்தைப் பார்ப்பது போன்ற ஒரு  ஒருஆராய்ச்சி பார்வை’ தான் இருந்தது. கூடவே அவரவர்கள் தங்களுக்குள் கிசுகிசு குரலில் அன்பரசியை பற்றி பேசுவது. அவளுக்கும் தெரியாமல் இல்லை. 

“பாவம் தான் இவள்… எல்லாம் தெரிஞ்சுதான் கட்டிக்கிட்டாளா?” என்று ஒரு குரல் கேட்டது.

“அந்தத் தேவதாஸ் கூட இவ எப்படி குடும்பம் நடத்தப் போறாளோ?” என்று இன்னொருத்தி ஏளனமாகப் பேசிக் கடந்து சென்றாள்.

ஒவ்வொரு வாக்கியமும் அவளது மார்பில் கல்லெறிந்தது போல விழுந்தது. ஆனால், அந்த சொற்களின் அர்த்தம் புரியாதவள் போல அப்படியே நின்றாள். புரியாமல் இருப்பதே சில நேரம் வரம் என்பதை அவள் அந்த நிமிடம் உணர்ந்திருக்கக்கூடும். பெயருக்கு ஏற்றது போல, அன்பைக் கொட்டிக் கொடுக்கும் குணம் ஒரு பக்கம் என்றால், அதே அன்பிற்காக யாசிக்கும் குணம் அவளிடம் இன்னொரு பக்கம் இருந்தது.

அவளது முகத்தில் இருந்த வசீகரம் அவளது அந்த இரண்டு முட்டை கண்கள் தான். காதுகளில் ஒட்டியிருந்த சிறிய ஜிமிக்கி, கழுத்தில் ஒரு மெல்லிய தங்கச் செயின். இதுதான் அவளது பிறந்த வீட்டின் சீதனம்.  இதை வைத்துக் கொண்டு இந்த ராஜ கோபுரத்தில் அவள் எப்படி வாழ்வாள்? பணம், பொருள், அனைத்தும் பொருளாக கொண்டு வந்தவளை விட குணத்தில் இவள் தங்க கட்டி என புரிந்து கொள்ள யாரும் முன் வரவில்லை. இங்கு பணம் மட்டுமே பேசும் என்ற மனநிலையில் இருக்கும் ஆட்களே அதிகம். 

“யாருமே என்னிடம் பேச மாட்டேங்குறாங்களே…” என்ற ஏக்கம் அவளது மார்பைக் குத்தியது. திருமணத்திற்கு முன்னால் அன்பாகப் பேசிய அத்தை சாந்தி, இப்போது அவளை ஒரு தீண்டத்தகாதவள் போலப் பார்த்துவிட்டு விலகிச் செல்வது அவளது இதயத்தை நசுக்கியது. எல்லா பெண்களை போல தான் அவளும் புகுந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள் ஆசையுடன்.. ஆனால் அந்த ஆசை நிராசையாகும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. 

அந்த வீட்டின் இன்னொரு பக்கம் சொர்க்கத்தைப் போல ஜொலித்தது. மூத்த மகன் விஜய் தாஸ் – சுஹாசினி ஜோடிக்கு முதலிரவு அறை தயார் செய்யப்பட்டிருந்தது.

அறையெங்கும் மல்லிகைப் பூக்களின் வாசம். அங்கே ஒரு வர்க்கத்தின் பெருமையும், அதிகாரத்தின் மணமும் வீசியது.

சிவதாசன் தன் மூத்த மகனுடன் திருமணக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பரபரப்புடன் வந்த சாந்தி, தன் பட்டுப் புடவையை இழுத்து சொருகியபடி, “என்னங்க… நேரமாச்சு. அவன் கிட்ட என்ன பேச்சு? தம்பி, கிளம்பு” என்றார்.

“சித்தி… ஒரு அஞ்சு நிமிசம்” என்றான் விஜய்.

“அஞ்சு நிமிசமா? எழுந்திரு… உனக்காக மருமகள் காத்துட்டு இருக்கா. அவளைக் காக்க வைக்கலாமா? வா விஜய் செல்லம்” என்று அவனைப் பூசை அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள் காட்டிய அந்தப் பாசத்தில் ஒரு தாயின் நெகிழ்ச்சி இருந்தது. திருநீற்றைப் பூசிவிட்டு, “ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அப்போதான் இந்த குடும்பத்தோட குலம் செழிக்கும்” என்று சொல்லும்போதே சாந்தியின் கண்களில் நீர் கோர்த்தது.

விஜய் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தான். அடுத்த நொடி, சுஹாசினி ஓடி வந்து அவன் முதுகைக் கட்டிக் கொண்டாள்.

“சுகா…” என்று அவளை முன்னிறுத்தியவனின் கண்களில் காதல் ததும்பி வழிந்தது. அவளது பார்வையில் கூச்சம் இல்லை, ஒருவிதத் தாபம் இருந்தது. “Ready ஆ பேபி?” என்ற விஜயின் குரலும், “இதுக்காகத்தான் wait பண்ணேன்” என்ற சுகாசினியின் பதிலும் அந்த அறையின் சுவர்களைத் தாண்டி வெளியே கேட்டது. அங்கிருந்த உறவினர்கள் ஒரு மெல்லிய சிரிப்புடன் அங்கிருந்து கலைந்தனர்.

மணி பத்தைத் தாண்டியது. அன்பரசிக்கு அதற்கு மேல் நிற்கத் தெம்பில்லை. மெதுவாக, அடிமேல் அடி வைத்து சாந்தியைத் தேடிச் சென்றாள். அவள் நடந்த ஒவ்வொரு அடியிலும் அவளது மணமாலையிலிருந்து பூக்கள் கீழே உதிர்ந்து கொண்டிருந்தன. ஆனால், அந்தப் பூக்கள் அவளது வாழ்வின் வசந்தத்திற்கானவை அல்ல; மாறாக, ஒரு மௌன ஊர்வலத்தின் பூக்களைப் போலத் தெரிந்தன.

சாந்தி சமையலறை விளக்கை அணைத்துவிட்டுத் திரும்பியபோது, அங்கே ஒரு நிழலாக அன்பரசி நின்றிருந்தாள்.

“அத்தை…” என்று மிகவும் மெல்லிய குரலில் அழைத்தாள்.

சாந்தியின் முகத்தில் சட்டென எரிச்சல் குடியேறியது. “யாரு? இத்தனை நேரம் எங்கே இருந்த நீ?” என்று கேட்டவர், அவளைக் கண்டு கொள்ளாமல் முன்னால் நடந்தார்.

அன்பரசி ஒரு கோழிக் குஞ்சு போல அவரைப் பின்தொடர்ந்தாள். “அத்தை… அவர் எப்ப வருவார்? நான் எங்கே தூங்கணும்?” என்று காற்றுக்கே கேட்காத குரலில் கேட்டாள்.

சாந்தி நின்றார். ஒரு பழைய பாயையும், தலையணையையும் எடுத்து அவள் கையில் திணித்தார். “இந்தாடி மா… இதை வச்சுக்கோ. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே போட்டுட்டு நிப்ப? குப்பையில வீசு” என்றார்.

“அத்தை…?” என்று அதிர்ச்சியில் அன்புவின் உதடுகள் துடித்தன.

“மாலையச் சொன்னேன்” என்றார் சாந்தி அலட்சியமாக.

அன்பரசி தன் கைகளால் மாலையைக் கழற்றி வைத்துக் கொண்டாள். “உன் புருஷன் எங்கே தங்குறானோ அங்கே தான் நீயும் தங்கணும்.” என்று கை  காட்டினார். அந்த இடத்தக் பார்த்ததும் அவளது இதயம் நொறுங்கி போனது. . 

நீ தங்கும் இடம் என சாந்தி காட்டியது கொள்ளை புற, அட்டை குடோன். அதாவது வீட்டில் தேவையில்லாத பொருட்களை போட்டு வைக்கும் குடோன் போல இருக்கும் ஒரு இடத்தை காட்டினார். 

அன்பரசி திடுக்கிட்டு பார்க்க, உன் புருஷன் இங்கே தான் தங்குவான் மா! உனக்கு இந்த இடம் பிடிக்கலனா சொல்லு நான் உன்ற மாமனார் கிட்ட பேசி என அவர் வேண்டா வெறுப்பாக ஆரம்பிக்க.. 

இல்லைங்க அத்தை என கையெடுத்து கும்பிட்டாள் அன்பரசி. இப்பொழுது தான் சாந்தியின் முகத்தில் புன்னகையே தோன்றியது. 

“நீ இன்னிக்கே தனி குடித்தனம் போயிடுமா! எதுக்கு சொல்றேன்னா? சின்ன சிறுசுங்களைப் பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு? போமா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாந்தி.

அத்தை என அழைத்தாள் மீண்டும். 

இன்னும் என்ன? என்று சலித்து கொண்டே சாந்தி கேட்க, 

அவர்!! என தயக்கத்துடன் கேட்டாள் 

சரியாக அந்த நேரம், வாசலில் “தமார்” என்று ஒரு சத்தம் கேட்டது. முதலிரவு அறையில் இருந்த சுஹாசினி, “Disgusting! என்ன சத்தம் இது?” என்று கோபமாகக் கத்தினாள்.

“சுகா கண்ணு… பதறாதே. எவனோ குடிகாரன் வந்து விழுந்திருக்கான்” என்று சாந்தி சமாளித்தாலும், அங்கே வந்த உறவினர்கள் முணுமுணுத்தனர்.

யாரடி அது? என உறவுக்கார பெண் கேட்க.. 

சாந்தியோட மகன் தேவதாஸ்.. அவன் தான்.. 

உங்க அண்ணன் பையனா விமலா? என சிவதாசனின் தங்கை விமாலாவிடம் கேட்டார் சரசு. 

ம்ம் ஆமா பெரிமா என சொன்னவர் சரி என்று விட்டு திரும்ப அங்கே அன்பரசி நின்றிருந்தாள். 

விமலா எதுவும் பேசவில்லை. பார்கவி என சத்தமாக அழைக்க, மா இதோ வரேன் என இருவரும் அவர்களின் அறைக்குள் சென்று விட்டார்கள். 

இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பரசியின் செவிகளில் ஈட்டியாகப் பாய்ந்தன. ஜன்னல் வழியாகச் சுஹாசினி பேசுவது கேட்டது. “விஜய்… இந்தப் பொண்ணு.. 

எந்த பொண்ணு? 

ஹா இஷ்.. விஜய் you… என்னடா பண்ற? அந்த இடத்தில்.. நான் பேசிட்டு பப் ம்ம்.. என மூச்சு வாங்கினாள் சுகாசினி. 

இப்போ பேசு!! என விஜய் சொல்ல.. 

You you என சிணுங்களுடன் அதான் உன் தம்பி பொண்டாட்டி அன்பரசி, அவள் என் பொட்டிக்ல  கொடுத்தவ. இன்னைக்கு எனக்கு சமமா இந்த வீட்டுல மருமகளாகிட்டாளேன்னு நினைச்சேன். ஆனா இப்போ தெரியுது, இவ இந்த வீட்டுல வேலைக்காரியை விட….  Chance இல்ல… என்ன விஜய்? எப்படி அந்த அன்பரசி உன் தம்பி கூட இருக்க போறா? Damn god!! உனக்கு இப்படி ஒரு தம்பியா? வியாக்.. என ஜன்னலில் வழியே சுகாசினி. பேசுவது அன்பரசியின் காதில் விழுந்தது. என அவள் சொல்லி முடிப்பதற்குள்.. பேபி AC போடலாம் ஜன்னல லாக் பண்ணு என்றான் விஜய். 

அந்த வார்த்தைகளின் கனம் தாங்காமல், அன்பரசியின் கைகளில் இருந்த மாலை பொத்தெனத் தரையில் விழுந்தது. அவளது உலகமே சுக்குநூறாக உடைந்தது போல இருந்தது.

அதே விநாடி, போதையின் உச்சத்தில் பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் தேவதாஸ்.

“சொல்லிவிடு வெள்ளி நிலவே… சொல்லுகின்ற சேதிகளையே…”

தள்ளாடும் நடையில், அசுர சுருதியில் பாடிக்கொண்டு வந்த தன் கணவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அன்பரசி. அவளுக்குப் புரிந்தது ஒன்றுதான். இந்த வீடு அவளுக்கானது அல்ல. இந்தத் திருமணம் அவளுக்குப் பாதுகாப்பு அளிக்காது. 

எதுக்கு சாந்திய விஜய் சித்தின்னு கூப்பிடுறான்? 

அன்பரசி எப்படி பா தேவ தாஸ கல்யாணம் பண்ணா? 

தொடரும்.. 

தேவ் தாஸ் சார் நல்லவரா கெட்டவரா? அவர் எதுக்கு இப்படி சுதியோட வரார்? 

எப்பவுமே epi முடிச்சிட்டு பிடிச்ச character யாருன்னு கேட்பாங்க.. நான் கேட்கிறேன் உங்களுக்கு பிடிக்காத character யாரு?  எனக்கு பிடிச்ச character தேவ் தாஸ் தான்.

You may also like

Leave a Comment