பெண்மையை வென்றவன் புயலானவன்..

by Pradhanya kuzhali
180 views

Epi -9 

என்ன கேட்க போற? என தேவ் தாசின் குரல் கொஞ்சம் அழுத்தமாக ஒலித்தது. 

இட்லியை பிட்டு கொண்டு அவனை பார்த்தவள். நான் உங்க பொண்டாட்டி அப்டின்னு நீங்க தான் சொன்னீங்க? உங்க அப்பா முன்னாடி என அன்பு சொல்லி கொண்டிருக்க, ப்ச் அது அந்த நேரத்தில சொல்லிட்டேன். நீ என் பொண்டாட்டி இல்ல. நமக்கு நடந்தது பெரிய கல்யாணமும் இல்ல என்றவன் அவளின் கழுத்தை பார்த்து, உனக்கு வேணாம்னு நினைச்சா உன் கழுத்தில் இருக்கும் தாலிய கழட்டி வச்சுடு. என்றான். 

சத்தியமாக அவன் இப்படி ஒரு வார்த்தை கூறுவான் என அன்பு நினைக்கவில்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு தவிப்பு தோன்றியது. தேவ் சாதாரணமாக எழுந்து சென்று விட்டான். 

அவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டது என்னவோ 7 நாட்கள் தான்.. ஒரு வாரம் தான் முடிந்திருந்தது. மஞ்சள் கயிற்றின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு வார்த்தை சொல்லி விட்டானே என ஒரு பக்கம் தோன்றினாலும், மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விட்டான் என்றும் தோன்றியது. அதற்காக சந்தோஷப்பட முடியாதே.. இனி அன்பரசி என்ன செய்வாள். கண்டிப்பாக இந்த பந்தம் இப்படியே நிலைக்காது என்று உள்ளுக்குள் தோன்றியது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தாள். 

அந்த நாள் முழுவதும் ஆயிரம் சிந்தனைகள் மனதுக்குள் ஓடி கொண்டிருந்தது. தாலி சரடை அழுத்தமாக பற்றியபடி படுத்திருந்தாள். இரவு ஆனதும் அவளுக்கான உணவுகளை வாங்கி வைத்தவன் உடனே புறப்பட்டான் தேவ். 

இப்படியே இரண்டு வாரங்கள் ஓடியது. ஒரு வாரம் காலையில் வீட்டில் இருப்பான். இன்னொரு வாரம் இரவில் இருப்பான். பெரிதாக பேச்சு வார்த்தைகள் இல்லை.  சில நாட்கள் வீட்டுக்கே வர மாட்டான். ஆனால் எப்பொழுது வந்தாலும் முழு போதையுடன் வருவான். 

இப்படியே இருந்தால் சரிவராது அன்பு. உன் கையில் பணம் வேணும். அதுக்கு ஒரே வழி வேலைக்கு போறது தான். வீட்ல இருந்து நீ என்ன பண்ண போற? என்று தோன்றியது. சரி வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தாள். 

உடம்பு எப்படி இருக்கு மா? பரவாயில்லையா? என்று சிவதாசன் அக்கறையாக விசாரித்தார். 

ம்ம் நல்லாருக்கேன் மாமா! ஒன்னும் பிரச்னை இல்ல என்றவள் புன்னகையுடன் கிளம்ப.. கண்ணு வெளியே போறியா மா? என கேட்டார். 

ஆமா மாமா கொஞ்சம் வெளி வேலையா போறேன். சொல்லுங்க மாமா என அவள் திரும்பி பார்க்க.. 

உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கோவிலுக்கு போலாமா? வரியா கண்ணு என சிவதாசன் அழைத்தார். 

அன்பு ஒரு சில நொடிகள் யோசித்தவள் சரியென ஒத்து கொண்டாள்.  இருவரும் நேராக கோவில் சென்றார்கள். சிவதாசன் மணப்பாரத்துடன் கடவுளின் பூ முகத்தை பார்த்தார். 

எதற்கு அழைத்திருக்கிறார்? என்று தெரியாமல் அவருக்கு எதிரில் நின்றிருந்தாள் அன்பு. ஒருவழியாக சிவதாஸ் வாயை திறந்தார். 

உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே மா? என அவர் கேட்க… 

என்ன சொல்றீங்க மாமா? நீங்க சொல்றது புரியல என அவரை பார்த்தாள் அன்பு. 

இல்ல உனக்கும் விஜய்க்கும் கல்யாணம் பண்றதா தானே செல்ல அத்தை கிட்ட வாக்கு கொடுத்திட்டு வந்தேன். ஆனால் நீ தேவ்வ கல்யாணம் பண்ணிக்கிற போல ஆகிடுச்சு என்றார். 

அன்பு சிரித்தபடி, உங்க பெரிய பையனுக்கு கண்டிப்பா என்னை பிடிக்காதுன்னு தெரியும் மாமா. அவரை நான் ஏற்கனவே சுகாசினி மேடம் கடையில பார்த்திருக்கேன். எனக்கு அவர் கூட கல்யாணம் நடக்காதுன்னும் தெரியும். ஆனால் அம்மாச்சி கிட்ட சொன்னால் அவங்க மனவேதனை படுவாங்க அப்டின்னு சொல்லாமல் விட்டுட்டேன். ஆனால் அதுக்குள்ள அவரோட போட்டோ அது தேவ் போட்டோ அனுப்பி விவரமா சொன்னீங்க என்றாள். 

சிவதாசன் தீவிரமாக நீ நினைக்கலாம் உன்னோட வாழ்க்கைய ஒரு பொருத்தமில்லாதவனுக்கு கட்டி வச்சிட்டதாக, ஆனால் நீ நினைக்கர போல தேவ் தாஸ் மோசமானவன் இல்ல. அவனை பத்தி உனக்கு சொல்ல தான் இங்கே கூட்டிட்டு வந்தேன் என்றார். 

அன்பு அவரை நேர் கொண்டு பார்த்து, இல்ல மாமா நான் உங்க பையன தப்பா நினைக்கல அவருக்கு இஷ்டமே இல்லாத என்னை கல்யாணம் பண்ணி அவரோட வாழ்க்கையை.. என நிறுத்தினாள். 

சிவதாசன் பெரும் மூச்சுடன், என் பையன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக, அவன் மனுஷனா மாற, அவனை மனுஷனா மாத்திட உன்னால மட்டும் தான் முடியும் கண்ணு. நான் என்னோட வாழ்க்கையில் பண்ண பெரிய தப்பு ரெண்டாவது கல்யாணம் பண்ணது தான். அதனால தான் அவன் இந்த நிலையில் இருக்கான் என கூறினார். 

அன்பு புரியாமல் அவரை பார்த்தாள். என்ன சொல்றீங்க என்பதைப்போல.. 

ஆமா உன்னோட அத்தை சாந்தி எனக்கு ரெண்டாவது தாரம். என்றார் சிவதாசன். 

எனக்கு புரியல மாமா? தேவ் உங்க பையன் இல்லையா? சாந்தி அத்தை பையன் விஜய் தாசா? என புரியாமல் கேட்டாள். 

இல்லமா எனக்கும் சாந்திக்கும் பொறந்த பையன் தான் தேவ்தாஸ் என்றார் சிவதாசன். 

அன்பரசி அதிர்ந்து விழித்தாள். ஒன்றுமே புரியவில்லை. சிவதாசன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு, சாந்தி என் முதல் மனைவி மரகத்ததோட தங்கச்சி. விஜய் பொறந்து ஒரு வருசத்துல முடக்குவாதத்தில இறந்து போயிட்டா. என்னால கை குழந்தை விஜய் வச்சுட்டு சமாளிக்க முடியல.. மரகதம் படுத்த படுக்கையாக இருந்த நேரத்திலேயே அக்கா குழந்தைய தன்னோட குழந்தையா வளர்க்க ஆரம்பிச்சா சாந்தி. அப்படியே 3 வருஷம் போச்சு. விஜய் சாந்திய விட்டு வர ரொம்ப அடம் பண்ணான். சாந்திக்கு மாப்ளை பார்த்தாங்க. விஜய கைக்குழந்தையா விட்டு இன்னொரு கல்யாணம்  பண்ண சாந்தி விருப்பபடல.. அப்புறம் எங்க அம்மா சாந்தியை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க நான் ரெண்டு வேண்டாம் வேண்டாம்னு போயிட்டேன். கடையில சாந்தியே என்னை கட்டிக்கிறேன்னு வந்து கேட்டா. 

கல்யாணத்துக்கு பிறகு நாலு வருஷம் கழிச்சு தான் தேவ் பிறந்தான். எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்தது. ஆனால் என சிவதாசன் குரலில் நடுக்கம் தோன்றியது. 

அன்பு அவர் பேசுவதை அதிர்ச்சியில் கேட்டு கொண்டிருந்தாள். அவளால் இப்பொழுது கூட நம்ப முடியவில்லை. விஜய் தாசை தனது பெற்ற மகனை விட நேசிக்க காரணம் என்ன காரணம் என மண்டையை குடைந்தது அவளுக்கு. 

என்ன அண்ணா பண்ணிட்டு இருக்க? என விமலாவின் குரல் கேட்டது. 

சட்டென திரும்பி பார்த்தார் சிவதாசன். அன்பு அவர்கள் இருவரையும் பார்க்க, ஒண்ணுமில்ல கோவிலுக்கு வந்தேன். என சமாளித்தவர், பார்கவி எங்கே? நீ மட்டும் தனியாகவோ கோவிலுக்கு வந்த? என கேட்டார். 

இல்ல பார்கவிய இப்போ தான் அவளோட புருஷன் வீட்ல விட்டுட்டு அப்படியே கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போலாம்னு வந்தேன். அதுக்குள்ள உன்னை பார்த்துட்டேன் என விமலாவின் பார்வை அன்புவின் மீது படிந்தது. 

சிவதாசன் தவிப்புடன் இருப்பதை பார்த்த அன்பு, அந்த சூழலை புரிந்து கொண்டு சரிங்க மாமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் புறப்படறேன்  என்று விட்டு கிளம்பியிருந்தாள். 

விமலா கோபத்துடன், என்ன அண்ணா பண்ணிட்டு இருக்க? அவள் கிட்ட எதுக்கு இதையெல்லாம் சொல்லிட்டு இருக்க? என் பொண்ணோட வாழ்க்கை உனக்கு முக்கியமா தெரியல அப்படி தானே? என கோபத்துடன் கேட்டாள். 

சிவதாசன் பெரும் மூச்சுடன், அவளுக்கு தெரிய வேண்டாமா? தேவ் எதுக்கு ஜெயிலுக்கு போனான் அப்டின்னு? என அவர் எடுத்து கூற.. 

விமலாவின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, சொல்லு உன் பையன பத்தி சொல்லு அது கூடவே இவளுக்கு பார்கவி பத்தியும் தெரியட்டும். அப்புறம் என் பொண்ணோட விசயம் எல்லாருக்கும் தெரிய வரும். உன்ற மருமக தேவ் கூட வாழணும்னு உனக்கு ஆசையே இல்லையா? இதனால என் பொண்ணு வாழ்க்கையும் கேள்வி குறி ஆகும். நான் அவமானப்படனும். என் பொண்ணு வாழவெட்டியா வந்து உட்காரணும் அது தானே உனக்கு ஆசை. என சேலையின் தலைப்பால் கண்களை துடைத்தார். 

சிவதாசன் மணப்பாரத்துடன் அன்பு ரொம்ப நல்ல பொண்ணு. அவள் அப்படியெல்லாம் சொல்ல மாட்டாள் விமலா. பார்கவி வாழ்க்கையில் என் பையனால எந்த பிரச்னையும் வராது. என்றார் 

விமலா அழுகையுடன், போதும் என் புருஷன் இருந்திருந்தா நான் இத்தனை கஷ்டப்பட்டிருப்பனா? எனக்கு எங்கேயும் போக வாக்கில்லன்னு தான் உன்ற வீட்ல இருக்கேன். அங்கே அம்மா வீட்டுக்கும் போக முடியல. நான் என்ன பண்ணினேன் என் கிட்ட அம்மா பேசி 10 வருசமாகுது என இன்னும் தேம்பி அழுதார். 

சிவதாசன் பெருமூச்சுடன், நான் எதுவும் சொல்ல கூடாது அவ்ளோ தானே? 

ஆமா அண்ணா நீ எதுவும் சொல்ல கூடாது. என்றார் விமலா திட்டவட்டமாக.. 

சிவதாசன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை தனது தங்கையுடன் வீட்டுக்கு சென்றார். 

தேவ் தாஸ் மூன்று நாள் கழித்து தான் வீட்டுக்கு வந்தான். அன்பரசி அவனுக்காக தான் காத்திருந்தாள். 

அன்பரசி ஒரு துணிக்கடையில் கேசியராக வேலைக்கு சேர்ந்திருந்தாள். மாதம் 9000 சம்பளம். தேவ் தான் திருமணபந்தம் இல்லையென கூறி விட்டானே இருவரும்  ரூம் மெட்ஸ். அதற்காக காத்திருந்தாள். அவனிடம் பணத்தை கொடுக்க வேண்டும். 

இரவு 11 மணியை தொட்டிருந்தது. வீட்டுக்கு வந்து ட்ராப் பண்ணவா சார் என மரியாதையான குரலில் கேட்டார் ஓட்டுனர். 

வேணாம் எப்பவும் போல தூரமே நிறுத்துங்க. என கம்பீர குரலில் கூறினான் தேவ். 

ஆனால் மேடம் உங்களை வீட்ல விட சொன்னாங்களே!! என ஓட்டுனர் தயக்கத்துடன் கேட்க.. 

ப்ச் இதுக்கு தான் நான் கார்ல வரலனு அவ்ளோ தூரம் சொன்னேன். என்றவன் கோபத்துடன் இறங்கி கொண்டு, நடந்தான் தேவ். 

அந்த அர்த்த ராத்திரியில் அந்த பளபளப்பான லம்போர்கினி அவன் வீட்டுக்கு சென்ற நொடி மறைந்து போனது. 

சட்டையின் இரண்டு பட்டனை கழட்டி விட்டவன். ஒரு லோக்கல் கடையில் குடித்து வந்த தரலோக்கல் ரவுடி போல அவனது தோற்றத்தை மாற்றி கொண்டான் தேவ். அவன் சுவைத்த WhistlePig 10 Year Old Small Batch Rye Whiskeyக்கும் இப்பொழுது அவன் பிடித்து கொண்டிருக்கும் துண்டு பீடிக்கும் சம்மந்தம் இல்லை. தலையை கோதி கொண்டவன் வீட்டுக்குள் நுழைந்தான். 

எதிரில் அன்பு…? 

தொடரும்.. 

You may also like

Leave a Comment