பெண்மையை வென்றவன் புயலானவன்.

by Pradhanya kuzhali
199 views

Epi -10 

அங்கும் இங்கும் சின்ன நடையுடன் கைகளை பின்னால் கட்டியபடி தனது கணவனுக்காக காத்திருந்தாள் அன்பு. அதாவது வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் என்று கூட சொல்லலாம். 

பீடியை இழுத்து புகைத்தவன். அதை அணைத்து விட்டு காலரை தூக்கி விட்டபடி வீட்டுக்குள் நுழைந்தான் தேவ். 

அவனுக்கு எதிரில் அன்பு நின்றபடி கையசைத்தாள். 

தேவ் அவளை கண்டுகொள்ளவில்லை. அவன் தலையணையை எடுக்க செல்ல..

ம்ம்க்கும் என தொண்டையை கணைத்தாள் அன்பு. 

தலையை திருப்பாமல் ஓர கண்களால் அவளை பார்த்து கொண்டு முன்னாள் நடந்தான். 

தேவ் தாஸ் உங்க கிட்ட முக்கியமா பேசணும். கொஞ்சம் நிக்க முடியுமா? அதுக்கு பிறகு நீங்க தூங்க போங்களேன். என பார்த்தாள் அன்பு. 

ஹ என கொட்டாவி விட்டவன். எனக்கு பயங்கரமா தூக்கம் வருது. என்ன விஷயம்னு சொல்லு? எனக்கு நாளைக்கு காலையில் வேலை இருக்கு. என கேட்டான். 

இந்தாங்க என பணத்தை நீட்டினாள் அன்பு. தேவின் புருவங்கள் பணத்தை பார்த்ததும் சுருங்கியது. 

என்ன இது? பணம்? என அவன் புரியாமல் கேட்க, இதுல 4500 ரூபாய் இருக்கு. வாங்கிக்கோங்க என்றாள் அன்பு. 

ஏது உனக்கு? என்று புருவம் சுருக்கியவன். என்ன? எனக்கு தெரியாம சிவதாசன் கிட்டருந்து பணம் வாங்கினயா? என்று கேட்டான் தேவ். அவனது கோபம் தனித்து தெரிய, முட்டை கண்களை விரித்து பார்த்தவள். அய்யோ எதுக்கு இத்தனை டென்ஷன் ஆகிறீங்க? முதல்ல நீங்களா எதுக்கு ஒரு judgementக்கு போறீங்க? என விவரிக்க முன் வந்தாள். 

தேவ் கோபத்துடன் ஒரு எட்டு முன்னால் வைத்தவன். சொல்லு ஏது இந்த பணம் என கேட்டான் ஆக்ரோஷமாக.. 

அவனது திடீர் கோபத்தில் பயந்த அன்பரசி திக்கி திணறியபடி, அது வந்து நான் வேலைக்கு சேர்ந்துட்டேன். வேலை செய்யிற இடத்துல முன் பணமாக 4500 தந்தாக.. அதான் உங்ககிட்ட கொடுக்கணும்ல.. என்றாள். 

வேலைக்கா? என்று கேள்வியாக அவளை பார்த்தான் தேவ். 

ம்ம் வேலைக்கு சேர்ந்துட்டேன். நீங்க எனக்கு டீ வாங்கி கொடுத்தது, ஹான் எனக்கு ஹாஸ்பிடல் செலவு பண்ணது, எனக்கு தேவையான பொருள் வாங்கி கொடுத்தது, ம்ம் இங்கே தங்க வாடகை.. இப்படி இது எல்லாத்தையும் சேர்த்து ஏற்கனவே உங்களை கணக்கு வச்சுக்கோங்க அப்டின்னு சொன்னேன். அதான் இப்போ இத்தனை சீக்கிரம் வேலை கிடைக்கும் அப்டின்னு எதிர்பார்க்கல.. நம்ம ரெண்டு பேரும் ரூம் மெட்ஸ் தானே அதான் உங்களுக்கு கொடுக்க வேண்டியத கொடுக்கணும். அதுக்கு தான் என்றவள். வாங்கிக்கோ தேவ் தாஸ் என்று மூச்சு விடாமல் பேசினாள். 

தேவ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். 

அன்பரசி அவனையே உற்று பார்த்தாள். ஒரு சில நொடிகளில் அந்த பார்வை இன்னும் கொஞ்சம் ஆழமானது. ஆறடி படிக்கட்டு போல தேகத்தை செதுக்கி வைத்திருந்தான். தேவையான சதை கொஞ்சம் கூட இல்லை. அன்று வேஷ்டி சட்டையில் அவனை பார்த்த மாத்திரத்தில் மனதை கொள்ளை கொண்டு விட்டான். ஆனால் வீட்டுக்கு வரும்போது சுதியுடன் வந்ததால் அவன் மீது பயம் பதட்டம் பிடித்தமின்மை தோன்றியது. அந்த கண்கள் கிறக்கத்தில் சுழன்று இருக்க, கேசம் கலைந்திருந்தாலும் நேர்த்தியாக இருந்தது. உருண்டு திரண்ட கைகளை பார்க்க பார்க்க பட்டர் தடவி கடிக்க வேண்டும் போல இருக்கும். அவன் ஒரு தேவ தூதனை போல இருந்தான். இப்படியே அவள் பார்த்து கொண்டிருக்க, 

சட்டென சொடக்கு போட்டான். அந்த நொடி சுயநினைவுக்கு வந்தவள். அது இந்தாங்க தேவ் தாஸ் என பணத்தை நீட்டினாள். 

தேவ் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் 

அவளிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டான். 

அவன் வாங்கிக்கொள்வான் என அன்பு நினைக்கவில்லை. எதுவும் பேசுவான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவன் ஒரு வார்த்தை கூட மறுத்து பேசாமல் வாங்கி கொண்டான். 

உள்ளுக்குள் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சியது. கீழ் உதட்டை அழுத்தி கடித்து கொண்டவள் எதுவும் பேசாமல் அவளது படுக்கைக்கு சென்றாள். 

தேவ் வழக்கம் போல அவனது இடத்தில் படுத்து கொண்டான். இந்த இரவின் இருட்டு அவனை தூக்க மயக்கத்துக்கு கொண்டு சென்றது. 

அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அன்பு அரக்க பறக்க எழுந்தாள். அவளின் முன் டீ இருந்தது. கூடவே பட்டர் பன். 

வேகமாக அதை எடுக்க சென்றவள் சட்டென சுதாரித்து கொண்டாள். அதென்ன இரண்டு வாரங்கள் வர மாட்டான். இரவு வருவான், பகல் வருவான், இவனது இஷ்டத்துக்கு வருவான் போவான் ஏதாவது நாம் கேள்வி கேட்டால் எட்ட நிறுத்துவான். பேச்சுக்கு கூட நேற்று பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை. உடனே வாங்கி கொண்டான். இவனுக்கும் நமக்கும் என்ன இருக்கிறது? என்ன வாழ்க்கை இது? பிடிச்ச வாழ்க்கைய ஏத்துகல.. கிடைச்ச வாழ்க்கைய பிடிச்ச போல ஏத்துக்கிட நினைச்சேன். ஆனால் பிடிக்க கூடாது அப்டின்னு எட்ட நிறுத்தும் இவனோட டீயும் எனக்கும் வேணாம் கூடவே என பட்டர் பன்னை பார்த்தாள். இன்று அவளது கன்னங்களை போல கொஞ்சம் உப்பி இருந்தது. ஒயிட் கிரீம் மற்றும் பட்டரின் வாசம் நாசியை துளைத்தது. பார்க்கவே அட்டகாசமாக இருந்தது. 

ஹெல்த் டிரிங்க் குடித்தபடி அவளின் முன்னால் வந்தான் தேவ். 

அன்பு அந்த டீயை கண்டு கொள்ளாமல் கொண்டை போட்டு கொண்டு எழுந்தாள். 

தேவ் எதையும் கண்டு கொள்ளாமல் புதிதாக வாங்கிய சேரில் அமர்ந்து கொண்டான். அவள் நேராக பாத்ரூம் சென்றவள் பல் துலக்கி விட்டு குளித்து முடித்து மாற்று சுடிதார் அணிந்து கொண்டு கொண்டையிட்டபடி வெளியே வந்தாள். 

அடுத்த பத்து நிமிடங்களில் கையில் ஒரு பெர்சுடன் அவள் வெளியேற, மேடம் என அழைத்தான். 

அன்பு கண்டுகொள்ளவில்லை.. அவள் வெளியே செல்ல.. 

ப்ச் இம்சை என தேவ் அழைக்க, ம்ம் ஹிம் அன்பரசி திரும்பவே இல்லை. அவள் வெளியே வந்திருக்க, ஹே அன்பு உன்னை தான் காது செவுடா? என்று கோபமாக கேட்டான். 

சட்டென நின்றவள். தேவ் என்னையா கூபிட்டீங்க? சொல்லுங்க என்ன வேணும்? என திரும்பினாள் புன்னகையுடன்.. அவளின் கண்களில் நக்கல் தெரிந்தது. 

என்ன நீ பாட்டுக்கு போற? டீ, பன் இருக்கே கண்ணுக்கு தெரியலையா? என கேட்டான் தேவ். 

தேவ் தாஸ் சார் ஏன் இதெல்லாம் பண்றீங்க? அதுவும் எனக்காக? என கேட்டாள். 

என்ன பேசுற? என தேவ் அவளை புருவம் சுருக்கி பார்க்க, அவளின் கையில் இருக்கும் பழைய வார் வாட்சை பார்த்தவள். இன்னும் அரை மணி நேரம் இருக்கு என மனதுக்குள் சொல்லி கொண்டு அவன் முன்னால் வந்தாள். 

தேவ் சட்டென எழுந்து நின்றான். உங்களுக்கும் எனக்கும் நடுவில் வெறும் ரூம் மெட் பந்தம் மட்டும் தான் இருக்கு…ஆச்சா? என்று கேட்டாள். 

ம்ம் அதுக்கு இப்ப என்ன? என தேவ் அவளை உற்று பார்க்க, அன்பரசி துப்பட்டாவை சரி செய்தபடி, நீங்க எதுவும் எனக்கு வாங்கி கொடுக்க வேணாம். என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்தாள். 

தேவ் முகம் சட்டென மாறி போக, டீயை பார்த்தான். So சாரி உங்களோட எதுவும் எனக்கு வேணாம். என சொல்லியபடி அவள் முன்னால் சென்றாள். 

தேவ் தாசின் முகம் கோபத்தில் கருத்து போக கைகளை இறுக்கி மடக்கியபடி அதே இடத்தில் நின்றான். அன்று முழுவதும் மண்டைக்குள் இதுவே ஓடி கொண்டிருந்தது. அந்த ஆரி போன டீ மற்றும் பட்டர் பன் இரண்டையும் அவன் அதே இடத்தில் விட்டு விட்டான். 

காலையில் இருந்து இரவு வரை பெரிதாக எதுவும் செய்ய தோன்றவில்லை. அவனது போன் சிணுங்கி கொண்டிருக்க, ப்ச் என கடுப்புடன் அழைப்பை ஏற்றான். 

ஹலோ தாஸ்? இன்னிக்கு கார் அனுப்புறேன் சீக்கிரமே வந்திடு என மறுமுனையில் இருந்து பெண் குரல் கேட்க.. 

இல்ல என்னால வர முடியாது. 

வாட்? என மறுமுனை அதிர்ச்சியானது. 

இன்னிக்கு எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. அதனால நாளைக்கு பார்த்துக்கலாம். 

என்னாச்சு டயர்டா இருக்கா? பீவர்ரா நான் வீட்டுக்கு வரேன்? என மறுமுனை பதட்டமானது. 

Try to understand நான் நாளைக்கு வரேன். எனக்கு ஒரு நாள் கேப் கொடு. 

அவங்க கிட்ட என்னால சமாளிக்க முடியாது தேவ். ஆனாலும் உனக்கு fever இருக்குன்னு சொல்ற. So health பார்த்துக்கோ. நாளைக்கு வா.. நான் பார்த்துக்கிறேன். அண்ட் நாளைக்கு நீ வரலனு வை. நான் கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுவேன். என்றாள் அந்த பெண். 

ப்ச் வேணாம். நான் இன்னிக்கே வரேன். என போனை வைத்தான் தேவ். 

அன்பரசி வீடு வந்து சேர இரவு ஒன்பது மணியானது மிகவும் களைப்பாக உணர்ந்தாள். 

ஹே எங்கே போயிட்டு வர? என அதிகார குரல் கேட்டது. 

அவள் சட்டென பெரிய வீட்டின் பக்கம் திரும்பினாள். சாந்தி அங்கே முறைப்புடன் நின்றிருந்தார். அன்பு அவர் பக்கம் திரும்பி நின்றாள். 

உன்னை தான் கேட்கிறேன்? காதுல விழுகளையா? என அதட்டல் நிறைந்த குரல் சாந்தியிடம் இருந்து வர.. 

வேலைக்கு போயிட்டு வாறேன் அத்தை என்றாள் மெல்லிய குரலில்.. 

என்ன வேலை? என சாந்தி கேட்க.. 

அதே நேரம் காரில் வந்து இறங்கினாள் சுகாசினி. அவளை பார்த்ததும் சாந்தியின் முகம் பிரகாசமாகிட, மருமகளே என புன்னகையுடன் அழைத்தார். 

ஆன்டி சோ டயர்ட் என சொல்லியபடி இறங்கியவள் தனக்கு வலப்பக்கம் நின்றிருந்த அன்புவை பார்த்து, ஹே அன்பு இன்னிக்கி நான் உன்னை அக்ரஹாரத்தில் பார்த்தேனே? என்ன வேலை உனக்கு அங்கே? என புருவம் சுருக்கி கேட்டாள் சுகா. 

சாந்தி அன்புவின் பக்கம் திருப்பி, அதான் சுகாசினி கேட்கிறாளே அங்கே என்ன பண்ற? என கேட்டார். 

நான் முருகப்பா சில்க்ஸ்ல கேசியராக ஜாயின் பண்ணியிருக்கேன் என்றாள் அன்பு. 

ஓ பெரிய கலெக்டர் உத்தியோகம்? ஜாயின் பண்ணிட்டியா? மானம் போகுது முருகப்பா கதையோட முதலாளி சண்முகமும் என்ற ஊட்டுக்கார்ரும் சிநேகிதர்கள். ரொம்ப நல்லாருக்கு என் குடும்ப மானம் கப்பல் ஏற வைக்க ஏற்கனவே வீட்ல ஒருத்தன் இருந்தான். இப்போ அவனுக்கு ஜோடியா இன்னொருத்தி என கூறி கொண்டே சாந்தி உள்ளே செல்ல, சுகாசினி அவளை கிண்டலாக பார்த்து சிரித்து கொண்டே உள்ளே சென்று விட்டாள். 

அன்புவின் கண்களில் நீர் கோர்க்க கடுப்புடன் அவளது இடத்துக்கு சென்றாள். 

தொடரும்..

You may also like

Leave a Comment