
Mister ARROGANT PART 12
- 21 May 2026
- 309 reads
- ☆ No ratings yet
- 116 min read
EPI 331
நான் வந்து பார்க்கலாமா? என்று கேட்க
தாராளமா வாங்க நானும் உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு! இன்னொரு புது ப்ராஜெக்ட் வந்திருக்கு அத பத்தி உங்ககிட்ட பேசணும். என்று சித்தார்த் கூறி விட்டு அவனது போனை குலுக்கிக் கொண்டும் திருப்பிக் கொண்டும் இருக்க..
அந்த நேரம் இதன்யா அவளுடைய அனைத்து டயலாக்கையும் ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு, அதை ரத்னகுமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இது அப்படி இல்லமா! இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் கோபத்தை கொடுங்க, ஹான் இந்த இடத்துல உங்களுடைய சவுண்டு கொஞ்சம் ஏறி இறங்கி வரணும்! அப்பதான் அது கேக்குறதுக்கு நல்லா இருக்கும்! என்று சொல்ல..
ஓகே சார் என்று இதன்யா அவர் சொன்ன அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தவள். ஒருமுறை பேசிப் பார்த்தாள்.
ரத்னகுமார் முகத்தில் சிரிப்புடன் பெர்ஃபெக்ட்டா வருது ஒரு தடவை ட்ரை பண்ணி பார்க்கலாமா? என்று புன்னகையுடன் கேட்க கண்டிப்பா சார் என்று டப்பிங் மைக்கை வைத்துக்கொண்டு டயலாக் பேப்பரை ஒரு முறை படித்தவள். ஆழ்ந்த ஒரு பெரும் மூச்சை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
அது நவ்யாவின் இன்ட்ரொடக்ஷன் சீன், மூச்சு வாங்க மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள். இதன்யாவின் கவனம் முழுவதும் அந்த காட்சியிலேயே இருக்க.. அந்த நவ்யாவின் உதடு அசைவுற்கு ஏற்றது போல ஐந்து நிமிட டயலாக்கை பேசி முடித்தாள்.
அந்த நேரம் சித்தார்த்தின் பார்வை இதன்யாவின் மீது படிய..
அவள் எப்படி பேசுகிறாள் என உன்னிப்பாக கவனித்தான்.
அவள் பேசி முடித்துவிட்டு பயத்தில் பெருமூச்சுடன் திரும்ப..
அங்கே ரத்னகுமார் தம்சப் காட்டினார்.
வெளியே வந்து ஒரு நிமிடம் அவள் பேசுவதை கேட்க.. பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சூப்பரா இருக்கு! வெல்டன் என்று சொல்ல
சார் பொய் சொல்லாதீங்க!
இல்ல நிஜமாகவே நல்லா வந்திருக்குமா நீயே ஒரு தடவ பாரு என்று ரத்தினகுமார் காட்டிட..
அந்த நேரம் சித்தார்த் கடுமையான குரலில் ரத்னா ஃபர்ஸ்ட் அவங்க பேசின டயலாக் வாய்ஸ் கிளிப்போட மெர்ஜ் ஆகல , விட்டு விட்டு வருது. குரல்ல பயம் தெரியுது, நவ்யா பேசுறதுக்கும், உங்களோட வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் பேசறதுக்கும், கொஞ்சம் கூட ஒட்டுதல் தன்மையே இல்ல! ஏதோ வேக வேகமா முடிச்சு மாதிரி இருக்கு! என்று சித்தார்த் கூறினான்.
அவன் கூறிய அடுத்த நொடி இதன்யா கண்களில் கோபம் கொதித்தது. மீண்டும் மீண்டும் அந்த கிளிப்பையும் இதன்யாவின் வாய்ஸையும் மாற்றி மாற்றி கேட்டுப் பார்த்தாள்.
சித்தார்த் அலட்சியமாக ஆயிரம் முறை கேட்டு பார்த்தாலும் பேசுனது தான் வரும் என்று கூறினான்.
உடனே ரத்னகுமார் சித்தார்த்தை பார்த்து “அது ஒன்னும் பிரச்சனை இல்ல சித்து! நம்ம எடிட்டிங்ல வாய்ஸ் சரியா டெக்னிக்கல் டீம் வச்சு வேலை பார்த்துட்டு போட்டா சரியா போயிடும்! இந்த அளவுக்கு வருது ரொம்ப கஷ்டம்! ஒரே நாள்ல எப்படி அவங்கள போர்ஸ் பண்ண முடியும்? என்று கேட்க..
சும்மாவா இதை செஞ்சு தராங்க! இதுக்கு நீங்க சம்பளம் கொடுக்கறீங்க தானே! என சித்தார்த் கூறினான்.
அந்த வார்த்தைகளை கேட்டதும் அவளுக்கு கோபம் வர வேகமாக உதடுகள் துடிக்க வெளியே ஓடிவிட்டாள்.
அவள் வெளியே செல்வதை பார்த்து ரத்தினகுமார் கொஞ்சம் கவலையுடன் “எதுக்கு சித்து இப்படி பேசினீங்க? அவங்க ரொம்ப சோகமா போறாங்க! எடுத்த உடனே ஃபோர்சா அவங்கள பிடிக்க முடியுமா? சொல்லுங்க? சின்ன பொண்ணு என்று பறிவுடன் பேச..
அவ சின்ன பொண்ணா? இப்படி பேசினா தான் அவளுக்கு ரோஷம் வந்து, கொஞ்சமாவது அதை சரியா பண்ணுவா! என்று சித்தார்த் கூறினான்.
அது எப்படி சித்து எல்லாரும் நூற்றுக்கு நூறு சரியா இருக்க முடியும்? எல்லார்கிட்டயும் குறை இருந்தா தானே, வாழ்க்க அதை சரி பண்ற மாதிரி போகும். எல்லாமே நிறையோடு இருந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்க போகுது? என்று ரத்தினகுமார் சொல்ல..
அதுக்கு தான் நான் இருக்கேன். அவள என்கூட.. அதாவது நானும் நவ்யாவும் இருக்க conversation டயலாக் கொடுத்து ப்ராக்டிஸ் பண்ண சொல்லுங்க! என சித்தார்த் சொல்ல
எப்படி திடீர்னு எப்படி அவங்கள பெரிய டயலாக் கொடுக்க முடியும்? என்று ரத்தினகுமார் கேட்க..
சித்தார்த் சிரித்து கொண்டே நீங்க சொல்லுங்க ரத்னா அவ என் கூட பேசட்டும் அப்பதான் இன்னும் கொஞ்சம் கோபமா அப்படியே நவ்யாவை விட உக்கிரமா பேசி அதை கரெக்டா முடிப்பா! நீங்க வேணா பாருங்களேன் என்று கூறினான்.
என்னமோ சொல்றீங்க இந்த படத்தோட டப்பிங் முடியறதுக்குள்ள, உங்களோட சண்டை இன்னும் பெருசா போயிடும்னு நினைக்கிறேன். என ரத்னகுமார் சலித்துக் கொள்ள..
சித் சிரித்துக் கொண்டே நீங்கள் கூப்பிடுங்க! போங்க ரத்னா! என்று அனுப்பி வைத்தான்.
*
நவ்யா அவளின் நிறத்துக்கு ஏற்ப ஷிபான் புடவையில் , பிரீ ஹேர் விட்டு ஒப்பனை செய்து கொண்டு கைகளில் அந்த புடவையின் வண்ணத்தில் ஏற்ப வளையல், உதட்டுக்கு சாயம் புதிதாக வாசனை திரவியம் என்று புத்தம் புது மலராக தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
அவள் வீட்டை விட்டு வெளியே வரும்போது அங்கு காத்திருந்த அவளின் பர்சனல் அசிஸ்டன்ட் என்ன மேடம்? இந்த நேரத்துல இப்படி ஒரு மேக்கப்? எதுவும் பார்ட்டிக்கு கிளம்புறீங்களா? என்று கேட்க..
நவ்யா சிரித்துக் கொண்டே டப்பிங் போறேன் என்று கூறினாள்.
உங்களை தான் டப்பிங் போக கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்களே! வாய்ஸ் கூட இப்பவும் உடைஞ்ச மாதிரி தான் இருக்கு! என்று அவள் கவலையுடன் சொல்ல..
நவ்யா சிரித்துக் விட்டு உன்னோட அக்கறை புரியுது. நான் டப்பிங் போகல.. சித்தார்த் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்காரு. நான் போயிட்டு அப்படியே புது ப்ராஜெக்ட்ல கமிட் ஆகுறத பத்தி பேசலாம்னு போறேன் என்று புன்னகையுடன் கூறினாள்.
அதை கேட்டதும் அவளுடைய அசிஸ்டன்ட் ரீனா சிரித்துக்கொண்டே நீங்க டப்பிங் ஸ்டுடியோக்கு புது ப்ரொஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்றத்துக்கு போற மாதிரி தெரியல, நீங்க சித்தார்த் கிருஷ்ணாவ ரொம்ப மிஸ் பண்ணிட்டு அவர பாத்தே ஆகணும்னு நினைச்சுட்டு போற மாதிரி எனக்கு தோணுது! என்று ரீனா சொல்ல..
நவ்யா புருவம் சுருக்கி அவளை கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தவள். என்ன? இப்படி சொல்ற? என்று கேட்க..
அது வந்து சாரி மேம் ஏதோ என் மனசுல அப்படி பட்டது. அதனால ஓப்பனா பேசிட்டேன்! என்று ரீனா கொஞ்சம் பதட்டத்துடன் கூறினாள்.
நவ்யா உதட்டில் ஒரு சின்ன புன்னகை எட்டிப் பார்க்க
உடனே ரீனா அவளப் பார்த்து உங்களோட மனசுல அவர் இருக்கிறார். தான மேம்! நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா என்று ரீனா கேட்க
உடனே நவ்யா முகத்தை கொஞ்சம் கோபமாக வைத்துக் கொண்டு அப்படி எல்லாம் இல்ல இதையெல்லாம் வெளியே சொல்லிட்டு இருக்காத என்று கூறினாள்.
இல்லமா நான் சொல்ல மாட்டேன். அதேபோல ஏதோ எனக்கு தோணுன விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டேன். அதை ஏதாவது தப்பா இருந்தா சாரிங்க என்று ரீனா கேட்க
நவ்யா சிரித்துவிட்டு அதனால என்ன உன் மனசுல நினைச்சது சொல்லி இருக்க! நான் தப்பா நினைச்சுக்கல! என்று சொல்லிவிட்டு நவ்யா ஸ்டுடியோ கிளம்பினாள். காரில் செல்லும்போது நவ்யாவின் மனதில் ரீனா சொன்ன விஷயங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது.
உள்ளுக்குள் ஒரே புத்துணர்வு குதூகலமாக இருந்தது. ஆனால் அவளுடைய மனதில் இப்போ நம்ம போய் சித்தார்த் கிட்ட, நம்மளோட காதலை எப்படி? எப்படி அதை எடுத்துக்குவாரு? ஒருவேளை நம்மள தப்பா நினைச்சுட்டா? அவரோட கடந்த காலத்துல மெலினா அவரை லவ் பண்றேன்னு ஒட்டி நிறைய காசிப் அது மூலமா பெரிய பெரிய படம், அவார்ட்ஸ் அப்படின்னு வந்து கடைசியில் கழட்டி விட்டுட்டு போயிட்டாங்க! அந்த மாதிரி சித்தார்த் நம்மள தப்பா நினைச்சுட்டா? என்ன பண்றது? என்று யோசித்தவள். மனம் கவலையில் மூழ்கியது.
என்ன செய்யறது? இதுக்கு என்ன தீர்வு? என்று யோசித்துக் கொண்டிருந்தவள். முகம் தெளிந்தவளாய் இதுக்கு ஒரே ஒரு ஐடியா தான்! முதல்ல நம்ம அந்த புது ப்ராஜக்ட்ல கமிட் ஆகி அந்த படத்தை சக்சஸ் புல்லா முடிச்சுட்டு, அதுக்கப்புறம் நம்மளோட கேரியர்ல நவ்யா அப்படின்னு எல்லாரும் உடனே நம்மள பத்தி அளவுக்கு நிறைய ஒரு அஞ்சு ஆறு படம் பண்ணிட்டு, அட்லீஸ்ட் ஒரு மூணு படமாவது பண்ணிட்டு, நம்மளுக்கு ஒரு பெயரை சம்பாதிச்சிட்டு, சிறந்த நடிகை நவ்யா அப்படி என்ற பெயரோட போய் சித்தார்த் கிட்ட ப்ரொபோஸ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கணும். என்று நினைத்தாள்.
உடனே அவளுடைய சிந்தையில் அதுக்குள்ள வேற யாராவது வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா? ப்ரொபோஸ் பண்ணிட்டு போயிட்டா? என்ன பண்றது? என்று அவள் மூளை யோசிக்க
நவ்யா தன்னுடைய மனதை தட்டிக் கொடுத்து அப்படியெல்லாம் நடக்காது. நம்ம கூடதான இருக்கோம். அப்படி ஏதாவது முயற்சி பண்ணா, அந்த நேரம் நம்மளோட லவ்வையும் சொல்லிட வேண்டியதுதான். கண்டிப்பா அவரோட மூவ்மெண்ட்ஸையும் பார்த்தா, நம்மள அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு தோணுது! அதனாலதான் நம்மள அவர் ரொம்ப கேரிங்கா பாக்குறாரு! அவரோட பிசினஸ்ல வந்த லிட்டில் ஹார்ட் ப்ராடக்ட்டுக்கு, நாமதான் பிராண்ட் அம்பாசிட்டர், அது எப்பவும் நிரந்தரமான ஒரு பதவி , அது நமக்கு கொடுத்திருக்கிறார் என்றால், காரணம் இல்லாமையா இருக்கும்! அப்படின்னா, அவரோட ஹாட்டுக்கு நம்ம எவ்வளவு நெருக்கமானவங்க! என்று அவள் நினைத்துக் கொண்டே வந்து சேர..
இது மட்டும் நிஜமான லிட்டில் ஹார்ட்டுக்கு தெரிந்தால், அந்த இதயா என்னும் இதன்யா சித்தார்த்தின் உடைய இதயத்தை பிச்சு கண்டம் துண்டமாக வெட்டி காக்கைக்கு போட கூட தயங்க மாட்டாள். அந்த அளவுக்கு உண்மையான லிட்டில் ஹார்ட் ஒருத்தி இருப்பது இந்த பிராண்ட் அம்பாசிடர் திரையுலக நடிகை நவ்யாவிற்கு தெரியாமல் போனதுதான் பரிதாபம்.
இது எங்கே போய் முடியும்? அவ எப்போ காதலை சொல்ல போறா? அதுக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கோ ? பார்ப்போம்! என்ன நடக்குதுன்னு,
நவ்யா இறங்கி கொண்டு மெதுவாக மேலே செல்ல இதன்யா ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தாள்.
*
நவ்யாவின் கண்களில் அங்கு நின்று கொண்டிருக்கும் இதன்யா தெரியவே இல்லை. அவளுடைய சிந்தை மனம் முழுவதும் சித்தார்த் மட்டுமே இருக்க.. நேராக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
சித்தார்த் பார்வை ம்ம் வந்துட்டாளா? இல்ல முகத்தை அப்படியே தான் வச்சுட்டு இருக்காளா? என்று எதேர்ச்சியாக திரும்பி பார்க்க
அங்கே நவ்யா வந்து கொண்டிருந்தாள். இவ அதுக்குள்ள வந்துட்டாளா? என்று அவன் முகம் அஷ்ட கோணலாக வளைந்தது.
இதன்யா ஒரு பெரும் மூச்சை விட்டு அவன் பேசுவதை ஒரு பக்கம் புறந்தள்ளி டப்பிங் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தாள்.
ரத்னகுமார் நவ்யாவிடம் பேசிக்கொண்ட கொண்டிருக்க, அங்கே இதன்யா வருவதை பார்த்ததும்..
உடனே அவர் வாங்க மா! வாங்க இதன்யா இப்போ ஓகே தானே! நீங்க? என்று கேட்க
நான் ஓகே சார் என்று அதே கடுமையான இறுகிய முகத்துடன் பதிலளித்தாள்.
நவ்யாவின் பார்வை இதன்யாவின் மீது பட்டு ஒரு நிமிடம் ஏதோ யோசிப்பது போல நின்றவள். உடனே புன்னகையுடன் நீங்க அன்னிக்கி லிட்டில் ஹார்ட் இனாகரேசன் ஃபங்ஷன்ல உங்களை பார்த்தேனே என்று சிரித்துக் கொண்டே கூற..
குட் மார்னிங் மேம் நான் தான் இதன்யா என்று கூறினாள்.
அப்படியா நீங்க எங்கே இங்க? என்ற நவ்யா கேள்வியுடன் அவளை பார்க்க..
ரத்னகுமார் நவ்யாவை பார்த்து இவங்க தான் உங்க குரலுக்கு டப்பிங் கொடுக்க போறாங்க! என்று கூற
வாட் என்ன சொல்றீங்க என்று நவ்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது .
அவளின் முகத்தில் உள்ள அதிர்ச்சியை பார்த்ததும் இதன்யாவிற்கு அவள் மேலேயே சுய பச்சாதாபம் ஏற்பட்டது.
அப்ப நம்ம எதுக்குமே லாயக்கில்லை சேச்சே இந்த சித்தார்த் கிருஷ்ணா! இல்ல… சிதார்த் ரவிச்சந்திரன் எல்லார்கிட்டயும் தம்பட்டம் அடிச்சு வச்சிருக்காரா? இவங்க கூட என்ன கேவலமா தானே பார்க்கிறாங்க? அந்த அளவுக்கு எனக்கு திறமை இல்லையா? என்று அவளுடைய உதடுகள் துடித்துக் கொண்டிருக்க..
சித்தார்த் போதும் என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான்.
அனைவரும் சித்தார்த்தை பார்க்க..
இதன்யாவின் பார்வை வேறு எங்கோ இருந்தது.
உடனே அவன் மனதில் நான் பேசுனதுக்கு என்ன பாக்காம இருக்கிறதான் அவுட் புட்டா? இருக்கட்டும் போடி சரிதான்! என்று நினைத்துக் கொண்டவன்.
என்ன சொன்ன நவ்யா? என்று கேட்டான்.
இல்ல இவங்க தான் எனக்கு குரல் கொடுக்கப் போறாங்களா? என்று கேட்க
அத நீங்க ரத்னா கிட்ட தான் கேட்கணும். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்ம புது புராஜக்ட் பத்தி அர்ஜெண்டா பேச தான் கூப்பிட்டேன். என்று சித்தார்த் கூறினான்.
இருடா இனி நீ!.. எப்படி… உன்ன நான்? ஹஹஹ…. இப்பவே ஊருக்கு போறேன் டா! உன்ன?… இல்லடா நான் இனிமே இந்த ஊரு பக்கமே வரமாட்டேன்! ஹஹஹ எவ்வளவு தைரியம் இருந்தா? இவ்ளோ உதாசினமா பேசுவ? உன்னோட மனசுல கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லல்ல! ஹஹஹ என கேவி கேவி உள்ளுக்குள் அழுதாள்.
எல்லாத்துகிட்டையும் என்ன விட்டுக்கொடுத்து பேசுற என்று அவளுடைய இதயம் குமரிக் கொண்டிருப்பது. சித்தார்த்துக்கு இங்கு கேட்டது என்று கூட சொல்லலாம்.
சித்தார்த் ரத்னாவை பார்த்து இங்கு கொஞ்சம் ஹீட்டா இருக்க மாதிரி இருக்கு, ஹாட்ட கம்மி பண்ண கொஞ்சம் ac ய அதிகப்படுத்துங்கள்? என்று சொல்லிவிட்டு நவ்யாவை பார்த்தான்.
என்ன பேசுறீங்க? நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலையே? என்று சொல்ல..
இதன்யா கொஞ்சம் தைரியமாக கோபத்தையும் அதிகப்படியான கோபத்தையும் தைரியத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சார் லாஸ்ட்டா ஒரே ஒரு கிளிப் பேசுறேன்! அத உங்களோட டீம் எல்லாருக்கும் போட்டு காமிங்க! ரெண்டு வாய்ஸையும் மர்ஜ் பண்ணி பாருங்க! ஓகேவா இருந்ததுன்னா, நான் பேசுறேன்! இல்லனா இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது! எனக்கு டீச்சிங் பேக்டீஸ் இருக்கு! நான் கிளம்புறேன். என்று வெட்டு ஒன்று துண்டு துண்டாக பேசினாள்.
வரே வா என்று சித்தார்த் சொல்ல
நவ்யா மற்றும் இதன்யா இருவரின் பார்வையும் சித்தார்த்தின் மேல் வீசியது.
அடேங்கப்பா! இது சித் தான்!..
தொடரும்
கமெண்ட் பண்ணுங்க.. நாளைக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்க போகுது! இன்னும் அடுத்தடுத்து வர எபிசோட்ல பெரிய ட்விஸ்ட் இருக்கு! அதுல என்ன நடக்குமோ? எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு.
பார்க்கலாம்
EPI 332
இதன்யா கொஞ்சம் தைரியமாக கோபத்தையும் அதிகப்படியான கோபத்தையும் தைரியத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சார் லாஸ்ட்டா ஒரே ஒரு கிளிப் பேசுறேன்! அத உங்களோட டீம் எல்லாருக்கும் போட்டு காமிங்க! ரெண்டு வாய்ஸையும் மர்ஜ் பண்ணி பாருங்க! ஓகேவா இருந்ததுன்னா, நான் பேசுறேன்! இல்லனா இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது! எனக்கு டீச்சிங் பேக்டீஸ் இருக்கு! நான் கிளம்புறேன். என்று வெட்டு ஒன்று துண்டு துண்டாக பேசினாள்.
வரே வாவ் என்று சித்தார்த் சொல்ல…
உடனே நவ்யா மற்றும் இதன்யா இருவரின் பார்வையும் சித்தார்த்தின் மேல் வீசியது.
ரத்னா சித்தார்த்தை பார்த்து என்ன சார் இப்படி கிண்டல் பண்ணா என்ன அர்த்தம்? என கேட்க..
நானா? என்னை பார்த்தால் கிண்டல் பண்ற மாதிரி தான் தெரியுதா ரத்னா உங்களுக்கு? இப்போ என்ன சொல்லிட்டேன்? இந்த படத்தோட ஹீரோ நான்! ஆனால் என்னை விட இன்னிக்கு புதுசா வந்தவங்க உங்களுக்கு இம்பார்டன்ட்டா போயிட்டாங்க! யாரா இருந்தாலும் என் கிட்ட தான் என்னோட கை வளைவில்.. என சித் சொல்ல வர..
க்கும் என இதன்யா தொண்டையை சிரும்பினாள்.
எனக்கு கீழே வேலை பார்க்கிராவங்க தான்.. என சித் வார்த்தையை சரி செய்ய..
அப்பொழுதும் இதன்யாவின் துளைக்கும் பார்வை அவனை தாக்கியது.
பார்க்கிறேன்! அப்படி என்ன தான் அந்த வாய்ஸ்ல இருக்கு? நவ்யா வாயிச விட அவ்ளோ நல்லாருக்கா? என சித் கேட்க..
உடனே இதன்யா கோபத்துடன் நான் யாரோட ரெகமெண்டேஷனிலும், இங்க வரல.. எனக்கு மேல இருக்கிறவங்க பாஷா இருந்தாலும் சரி யாராக இரந்தாலும் சரி , ஞாயத்துக்கு தான் நான் கட்டுப்படுவேன். நீங்க என்னோட வாய்ஸ் கேட்டு அது ஓகேன்னு, சொன்னதுனால தான், நான் இங்கே வந்தேன். சோ ப்ளீஸ் சார் சீக்கிரம் இத முடிச்சு விடுங்க நான் கிளம்புறேன். என்று இதன்யா சொல்ல..
சித்தார்த் சட்டை கையை மடித்து விட்டுக் கொண்டே நவ்யா கொஞ்சம் அப்படி வெயிட் பண்றீங்களா? இப்போ நீங்களும், நானும் ஐ மீன் உங்களோட கேரக்டரும், என்னோட கேரக்டரும், பேசுற டப்பிங் தான். இப்போ டெஸ்டுக்கு பண்ண போறோம் நான் பேசிட்டு வந்துடறேன். என்று சொல்ல..
நவ்யா சிரித்துக்கொண்டே சரிங்க சித்து என்று சொல்ல
இதன்யா நேராக அந்த இடத்தை பார்த்த செல்ல போக..
நவ்யா அவளை அழைத்து உங்க பேர்? என்ன? ஹான் இதன்யா என்று சொல்ல..
சொல்லுங்க மேம் என்று அதே கடுமையான குரல்..
இல்ல நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க என்று நவ்யா சொல்ல வர..
நான் டப்பிங் போயிட்டு வரென் மேம் என அவளிடம் நின்று பேசாமல் வேகமாக சென்று விட்டாள். இதன்யா..
நவ்யாவிக்கு கொஞ்சம் எதோ போல ஆகி விட்டது. என்னத்தை பேசிட போறா? என நினைத்து கொண்டே இருக்க..
அந்த நேரம் அவளுக்கு போன் வர அதை பேச வெளியே சென்று விட்டாள்.
திரையில் படம் ஓடி கொண்டிருக்க இதன்யாவின் கண்களில் தீ பொறி பறக்க.. டப்பிங் பேப்பரை ஓர கண்ணால் பார்த்து விட்டு பட படவென அந்த கேரக்டராகவே மாறி பேச ஆரம்பித்தாள்.
படத்தில் உள்ள ஹீரோ கேரக்டர் உச்ச கட்ட கோபத்தில் பேசும் காட்சி அதை சித் பேச..
“ஹே சும்மா கத்தாதே! என கர்ஜனை கூடவே ஆளுமை… அந்த குரலில்.. உன்னோட பருப்பு எல்லாம் என் கிட்ட வேகாது. நான் கிரிமினல் லாயர் டா! உன்னை பிளான் பண்ணி சுழல் மாதிரி இந்த கேஸ்ல சிக்க வச்சதும் நான் தான்! இப்போ நடந்திட்டு இருக்க எல்லாமே என்னால் தான்! நீ ஜெயிலுக்கு போறது உறுதி! உன்னை மாதிரி முட்டாள் இருக்கிறதால தான் பெரிய பெரிய பிஸ்னஸ் மேன்ஸ் இந்த மாதிரி கேஸ்ல இருந்து ஈசியா தப்பிச்சு வர முடியுது! இனி நீ ஒரு ஆணிய கூட புடுங்கி நட்டு வைக்க முடியாது. அம் சாரி! இங்கே ஹார்ட்ல இருந்து சொல்றேன்!” என அந்த படத்தில் இருக்கும் ஒரு நீள வசனத்தை பேசி முடித்தாள். இதன்யா..
பேசி முடித்த அடுத்த நொடி வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தவள். மூச்சு வாங்கி கொண்டே ஸ்டோடியோவை ஒட்டி வைக்க பட்ட செடிகளின் அருகில் வந்து நின்றாள்.
என்ன பேசி முடிச்சிட்டீங்களா? என கேட்டு கொண்டே நவ்யா அருகில் வர..
Yes மேம் என சொல்லி கொண்டே திரும்பினாள் இதன்யா..
அந்த நேரம் அசிஸ்டன்ட் டைரக்டர் இருவரையும் அழைக்க..
நவ்யா முதலில் உள்ளே செல்ல பின்னால் இதன்யா வந்தாள்.
ரத்னாவின் பார்வை இதன்யாவின் மீது இருக்க சித்தார்த் போனை நோண்டி கொண்டு இருந்தான்.
நவ்யா சாதாரணமாக பேசாமல் என்னோட வாய்ஸ் சரி ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணிவீங்களா என எதார்த்தமாக கேட்க .
அதுக்கு அவசியமே இல்ல என சொல்லி கொண்டே அந்த படத்தின் முழு ஸ்கிரிப்ட் file எடுத்து இதன்யாவின் முன் நீட்ட..
என்ன சார்? என்பது போல அவள் பார்வை இருக்க ..
ரத்னா சிரித்து கொண்டே கழுகு பார்வையில் இருந்து தப்பவே முடியாதுன்னு சொல்லுவாங்க! அது மாதிரி இந்த கழுகு உங்களை கொத்துவது வலி இல்ல சிற்பம் செதுக்கி வடிக்க தான்.. என சித்தார்த்தை பற்றி மறைமுகமாக சொல்லி கொண்டே அவள் பேசிய கிளிப் போட்டு காட்டினார்.
அனைவர் பார்வையும் அவர்கள் மீது தான் இருந்தது.
நவ்யா மனதில் இவள் அவ்ளோ perfect ஆ பேசிட்டாளா? என ஓடியது.
இதன்யா அந்த கோப்பை வாங்காமல் don’t judge a book by its cover அப்டின்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும். இதுவே எனக்கு போதும்! எனக்கு மற்றவங்க மாதிரி மல்டி டாஸ்கிங் எல்லாம் வேணாம்! அதை நான் விரும்பவும் இல்ல.. என்னோட வேலை பாடம் சொல்லி கொடுப்பது. அதை மட்டும் பண்றேன். என அவள் செல்ல..
என்ன ரத்னா! ஓவர் சீனா இருக்கே! என சித் சொல்ல..
கொஞ்சம் கம்முன்னு இருங்க சித்து என ரத்னா அவளின் பின்னால் சென்றார்.
சித் இன்னொரு முறை இதன்யா பேசுவதை கேட்டவன். நன்கு கூர்ந்து அவளின் உச்சரிப்பையும் நவ்யாவின் உதட்டசைவையும் பார்த்தான். அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது . ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதையும், அவன் காதுகள் பட்டை தீட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க..
அவ்வளவு நல்லா பேசிட்டாளா? என்று நவ்யா வாய்மொழியாக கூற..
என்னோட ஸ்டூடன்ட் எப்படி இருப்பா? என்று சித்தார்த் கூறினான்.
என்ன என நவ்யா ஆச்சரியமாக பார்க்க..
ஆமா என் காலேஜ்ல தான் படிக்கிறா! பிரில்லியன்ட் கேர்ள்! கூடவே என்னோட ஸ்கூல்ல முக்கியமான போஸ்ட்ல இருக்கா! திமிரு ரொம்ப அதிகம் தான்!.. என வேலையில் கவனம் செலுத்தினான்.
ஆனாலும் நீங்க அவளை கண்டுக்க மாட்டேங்கிறீங்களே? என்று நவ்யா சொல்லிவிட..
திமிரு இருந்தா என்ன? அவளோட வேலைல கரெக்டா இருக்கால்ல! எனக்கு அதுதான் வேணும்! அது எனக்கு பிடிக்கும்! என்று சித்தார்த் சொல்லிக் கொண்டிருக்க..
வெளியே ரத்னா இதன்யாவிடம் நீண்ட வசனமாக பேசுவது காதில் விழுந்தது.
ஒரு நிமிஷம் இரு நான் போயிட்டு வந்துடறேன் என்று அவன் வெளியே செல்ல..
சித்தார்த்தின் போன் அந்த சிஸ்டத்திற்கு அருகில் இருந்தது. அந்த நேரம் பார்த்து லீனா அழைத்தாள்.
இங்கே வெளியே இதன்யா காரமாக இல்ல சார்! முடியாது, இந்த அளவுக்கு என்ன அவமானப்படுத்தின இடத்தில நான் வந்து நிககணுமா? என்ன என்று சொல்லிக் கொண்டிருக்க..
என்ன அவமானப்பட வேண்டியது இருக்கு? அவர் உங்களை சீண்டனும்ன்னு சொல்லிட்டு இருக்காரு! இது கப்பில்ஸ் கு ல்ல சாதாரணமானது! நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி, இது உங்களுக்கு புரியலையா? அவருக்கு தான் வயசு ஆயிடுச்சு! நீங்க சின்ன பொண்ணு தானே! நான் சொல்றது புரியுதா மா! என்று ரத்னா அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு பேச..
இதன்யா அப்பொழுதும் விதண்டாவாதம் ஆகவும் பிடிவாதத்துடனும் நின்று கொண்டிருந்தாள்.
ரத்னா என்று சொல்லிக் கொண்டே சித்தார்த் வர..
அவர் ஒரு பெரும் மூச்சை விட்டு எனக்கு எதுவும் தெரியாது. இந்த வாய்ஸ் உங்க மனைவி தான் செஞ்சு கொடுக்கணும். நீங்க என்ன பண்ணுவீங்களோ? எது பண்ணுவீங்களோ? தெரியாது. இதனியா பேசல.. உங்க மேல நான் கேஸ் போடுவேன்! என்று செல்லமாக மிரட்டி விட்டு அவர் உள்ளே சென்று விட..
என்ன மேடம் வெத்தள பாக்கு வச்சு அழைக்கணுமா? என்று சித்தார்த் கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்தான்.
இது என்னுடைய இஷ்டம் நான் பேசுறேன் பேசாட்டி போவேன். இதுல மத்தவங்க தலையிடனும்னு அவசியம் இல்ல. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க என்று அவள் சொல்ல..
இப்போ எதுக்கு அப்படி கடுகு மாதிரி பொரியற? என்ன சொல்லிட்டாங்க? இல்லாததை ஒன்னம் சொல்லலையே!..
போதும் என்று கைநீட்டியவள் நடக்க ..
சரி போனால் போகுது. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ! ஆனா இந்த ப்ராஜெக்டை நீ தான் முடிக்கணும். இது ரெக்வஸ்ட் இல்ல .உன்கிட்ட நான் கெஞ்ச மாட்டேன். இது என்னோட ஆர்டர். செஞ்சுதான் ஆகணும்.
செய்ய முடியாது போடா என்று அவள் நகர..
அப்போ என்ன பண்ணலாம் சரி இதுக்கு பின்விளைவு ரொம்ப அதிகமா இருக்கும் பரவாயில்லையா?
என்ன பண்ணிடுவ என்று இதன்யா திரும்பி சித்தார்த்தை பார்க்க..
என்ன வேணா பண்ணுவன்! உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா உங்க அண்ணனை!.. ஏதாவது பண்ணுவேன்! எதுக்கு உங்க அண்ணனை ? எப்போ பாரு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு ? நேரா உங்க அம்மாகிட்ட போயி நான் இவள தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ என் மேல கோவமா இருக்கா? எப்படி அத்த சமாதானம் பண்றது? அப்படின்னு கேட்பேன். போலாமா? என்று கேட்க
. இதன்யா அவனை முறைத்து பார்த்தாள்.
எதுக்குடி முறைக்கிற?
நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று உதடுகள் துடிக்க அவள் சொல்லிக் கொண்டிருக்க..
மன்னிப்பா நான் எதுக்கு கேக்கணும்? நான் என்ன தப்பு பண்ணே? என்று சித்தார்த் மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க..
உங்கள என்ன பண்றேன்னு பாருங்க? என்று அவள் நடந்தாள்.
டப்பிங் வருவியா? மாட்டியா? என்று சித்தார்த் கேட்க
வந்து தொலைகிறேன் என்று அவள் கண்களில் நீர் கோர்க்க இறங்கினாள்.
சித்தார்த் வேகமாக உள்ளே வந்து நவ்யாவின் கையில் அவனுடைய போன் இருந்தது.
என்னோட போன் என்று அவளை பார்க்க..
அது இப்போ இதுல யாரும் போன் பண்ணாங்க? ஆனா எடுக்கறதுக்குள்ள கட் ஆயிடுச்சு. என்று சொல்ல போனை வாங்கியவன். ஒரு நிமிஷம் என வேகமாக அவனுடைய கார் டிரைவருக்கு அழைத்தான்.
சொல்லுங்க பாஸ் என்ற மருமுனை சொல்ல..
மேடம் வராங்க கொண்டு போய் வீட்ல விட்டுடுங்க..
ஓகே பாஸ் ஆனால் பாஸ் நீங்க எப்படி போவீங்க?
எனக்கு இந்த இன்னும் வேலை இருக்கு நீங்க மேடம் கொண்டு போய் விடுங்க என்று கூறினான் .
சரி ஓகே பாஸ் என்று இதன் யாவை அழைத்துக் கொள் அழைக்கும் பொருட்டு அவர்கள் சென்றுவிட ..
சித்தார்த் பேசி முடித்துவிட்டு அவள் காரில் ஏறும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
இதன்யா முரண்டு பிடித்துக் கொண்டு நடக்க சித்தார்த் மேலே இருந்து அவளை பார்க்க..
மேடம் உங்கள தான் சார் மேல இருந்து பாத்துட்டு இருக்காரு! ப்ளீஸ் மேடம் அவரோட பிடிவாதம் தான் உங்களுக்கு தெரியுமே! என்று சொல்ல..
இதன்யா அவனை முறைத்துப் பார்த்தாள்.
சித்தார்த் அவளை பார்த்து கண்ணடிக்க..
போடா பொறுக்கி என்று காரில் ஏறிக்கொண்டு சென்று விட்டாள்.
அவள் சென்றதும் சித்தார்த்தின் தொட்டில் நிறைவான புன்னகை என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று நதியாவின் குரல் பின்னால் கேட்க ஒன்றும் இல்லை என்று திரும்பினால் இதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்க படத்தை பத்தி என்று கேட்க மறந்து போயிட்ட நான் மணிகண்டன் அப்படின்ற ஒரு டைரக்டர் கூட பானந்தியா மூவி பண்ண போறேன் இதுல ரெண்டு ஹீரோ நான் என்ன கேரக்டர்னு எனக்கு தெரியல கதையா மேலோட்டமா தான் சொன்னாங்க பிளாஷ்பேக் என்று நினைகமேலோட்ட உன்கிட்ட அத பத்தி பேசலாம்னு நீ கமிட் ஆகிட்டியா இல்ல அவைலபில் தானா என்று சித்தார்த் கேட்க
ஒன்னும் பிரச்சனை இல்ல சீதோ நான் ஃப்ரீ தான் பண்ணிட்டா போச்சு என்று சொல்ல
ஓகே அப்போ உன்னை வந்து அந்த டைரக்டர் காண்டாக்ட் பண்ணுவாரு. அவர்கிட்ட பேசிக்கோ, ஃபர்தரா படத்தோட பூஜைல மீட் பண்ணலாம்.. படத்தோட பூஜை அப்புறம் என்று சித்தார்த் பேசிக் கொண்டிருக்க..
அந்த நேரம் மீண்டும் லீனாவிடம் இருந்து அழைப்பு வர நவ்யாவின் பார்வை கூறாக அவனுடைய போன் மேல இருந்தது.
சித்தார்த் அழைப்பை ஏற்று சொல்லு லீனா என்று கூற..
டேய் படத்த பத்தி சொல்லி இருந்தாயே? என்று சொல்ல
ஆமா அப்போ நீ ஜாயின் பண்ணிக்கிறியா? என்று கேட்க
உன் கூட நடிக்கிறதுக்கு கசக்குமா என்ன? நீயும் சாதாரண ஆள் இல்ல, கேடி டா, நீ ஒரு ரவுடி ஓர் சிறுா நான் உன் கூட நடிச்சா அந்த காசிப்லேயே இன்னொரு ரவுண்டு படம் ஓடும். சரியான பிராடுடா நீ! என்று லீனா சொல்லிக் கொண்டிருக்க..
சித்தார்த்தின் உதட்டில் புன்னகை..
ஆனால் நவ்யா அதை ஒருவித பொறாமையுடனும் ஆற்றாமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சரி ஓகே நான் மத்தத பார்த்துகிறேன் வைத்துவிடுகிறேன் என்று கட் செய்தான்.
யாரு போன்கொண்டிருந்தாள் கேட்டுவிட..
சித்தார்த்தின் பார்வை நவ்யாவின் மீது இருந்தது.
நான் அது வந்து சாதாரணமா தான் கேட்டேன். உங்கள நான் தப்பா நினைக்கல என்று அவள் சொல்ல..
நீ தப்பா நினைச்சா எனக்கு என்ன கவலை என்று சித்தார்த் கூறினான்.
இதை கேட்டதும் நவ்யாவின் முகம் ஒரு நிமிடத்தில் மாறிப் போக..
சித் அலட்டி கொள்ளாமல் அது லீனா உனக்கு தான் தெரியுமே அவளும் நானும் இன்று அவன் நிறுத்திக் கொள்ளm..
அவங்களா என்று சொல்லலாமா என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றான்.
நவ்யாவிற்கு ஒரு மாதிரியாகி போக..
ஒரே மூச்சுடன் லீனாவை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்ககிட்ட அவங்கள பத்தி பேசணும் ? அவன பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு. அதுவும் என்கிட்ட சொல்ல ,
நீங்க இன்னும் அவங்க கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கீங்களா என்று கேட்க
இதை ஏன் நீ கேட்கிறாய் என்பது போல அவன் பார்வை இருக்க..
அது அது என்று அவள் தயங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
அந்த நேரம் ரத்னகுமார் மீண்டும் அந்த கிளிப் எடிட்டிங் செய்து, சித்தார்த்திடம் போட்டு காட்டிவிட்டு பார்த்தீர்களா? எப்படி இந்த குரல் நபியாவுக்கு ரொம்ப பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகுது. பியூச்சர்ல இந்த குரலுக்கு டிமாண்ட் கூட வர வாய்ப்பு இருக்கு. ஆனா ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் அந்த குரலை யூஸ் பண்ணதே நான் தான்! என்று ரத்னா இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டு பேச..
ரொம்ப தான் என்று சித் திரும்பிக்கொண்டான்.
உங்களுக்கு என்ன என்று ரத்னா சொல்ல..
சரி அடுத்த ஆரம்பிக்கலாமா என்று சித்தார்த் கேட்டான்.
வேணா சித்து அந்த பொண்ணு இதன்யாவும் வரட்டும் உங்க ரெண்டு பேரோட காம்பினேஷன்ல பேசினா தான் நல்லா இருக்கும் . அப்பதான் இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷனோட கோபம் அந்த பொண்ணுக்கு சரியா வரும் l. என்று கூற
சரி அப்போ வக்கில்லையா நான் கிளம்பட்டுமா என்று செய்தாள்.கேட்க
தாராளமா கிளம்பலாம். நாளையில் இருந்து தொடர்ந்து டப்பிங் இருக்கும் எப்படியும் அந்த பெண்ணோட வேகத்தை பார்த்தா பத்து நாள்ல முடிச்சிடுங்க நினைக்கிறேன் என்று கூற..
ஓவரா நம்பிக்கை வைக்கிறீங்க என்று ஏதாவது கூறினான். அப்படியா என்று ரத்னா கண்ணடித்துக் கொண்டே சித்தார்த்தை பார்க்க..
போதும் நான் கிளம்புறேன் என்று சித்தாள் சிரித்துக் கொண்டு எழுந்தான்.
நவ்யா அமர்ந்து கொண்டிருக்க..
இங்கேயே இருக்க போறீங்களா? என சித்தார்த் கேட்க
இல்ல அது வந்து என தயங்கிக்கொண்டே கீழே வந்தாள்.
அங்கு சித்தார்த்தின் கார் இல்லாமல் போகவே உடனே அவள் நான் வரும்போது உங்க காரை பார்த்தேனே? இப்போ உங்களோட கார் எங்க? என்று கேட்க அவள டிரா பண்ண போயிருக்கு என்று சித்தார்த் கூறினார்.
யாரு என்று நவ்யா ஆச்சரியத்துடனும் யாரென்று கேள்வியாக நபியா சித்தார்த்தை பார்க்க
இதன்யா என்று சித்தார்த் கூறினான்.
தொடரும்…
கமெண்ட்..
EPI 333
அங்கு சித்தார்த்தின் கார் இல்லாமல் போகவே உடனே அவள் நான் வரும்போது உங்க காரை பார்த்தேனே? இப்போ உங்களோட கார் எங்க? என்று கேட்க அவள டிரா பண்ண போயிருக்கு என்று சித்தார்த் கூறினார்.
யாரு என்று நவ்யா ஆச்சரியத்துடனும் யாரென்று கேள்வியாக நவ்யா சித்தார்த்தை பார்க்க..
சித்தார்த் அதே முக பாவனை உடன் இதன்யா என்று கூறினான்.
என்ன? அந்த பொண்ணா? அந்த பொண்ணுக்கு உங்களோட கார.. நீங்க! நீங்க எதுக்கு அந்த பொண்ணுக்கு ? என்று மண்டையில் ஆயிரம் கேள்வி தோன்றினாலும், அவனிடம் அந்த மொத்த கேள்வியும் கேட்க முடியாதல்லவா! அதனால் கேள்வியான பார்வையில் இவ்வளவு பெரிய ஆளு! அந்த பொண்ணுக்கு கார் கொடுத்திருக்கீங்க? என்ன விஷயம்? என்று பட்டம் படாமல் கேட்டாள்.
நவ்யாவிற்கு சித்தார்த்தின் மேல் நம்பிக்கை இருந்தது. அவனுக்கு இதன்யாவின் மேல் எல்லாம் ஆர்வம் வருவதற்கு துளி கூட வாய்ப்பே இல்லை! என்று நினைத்துக் கொண்டாள்.
ஏனென்றால் சித்தார்த் இப்பொழுது லீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ஸ்டேட்டஸுக்கு ஒரு பெரிய பெண்ணை தான் அவனுக்கு பிடிக்கும் ! சைட் அடிப்பதற்கு கூட இந்த மாதிரி பெண்களை அவன் தேர்ந்தெடுக்க மாட்டான். என்று தப்பு கணக்கு போட்டு விட்டாள். ஆனால் அவனுடைய மனக்கணக்கிலும் மனதிலும் ஒருத்தி மட்டுமே இருக்கிறாள். அவள் இதன்யா சித்தார்த் ஆனால் நவ்யாவிற்கு தெரியவில்லையே! பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?..
சித்தார்த் தீவிரமான பார்வையோடு இதன்யா அவ என்னோட ஸ்கூல் ஸ்டாப்! என்னோட ஆனிவல் டே ஃபங்ஷன் கேள்விப்பட்டு இருக்கீங்களா? அட்லீஸ்ட் நான் என்னென்ன வேலை பண்றேன்னு உங்களுக்கு தெரியுமா? என்னோட ஸ்கூல்ல அவ பெரிய போஸ்டிங்ல இருக்கா! கிட்டத்தட்ட மேனேஜ்மென்ட் அளவுக்கு, அதேபோல அவ என்னோட காலேஜ் ஸ்டுடென்ட்! அவளோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம்! அது எல்லாத்துக்கும் மேல, இந்த படத்துல.. அதுவும் என்னோட படத்துல அவ ஒரு பார்ட்டா இருக்கா! சோ அவளோட முக்கியத்துவம் எவ்வளவு என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு தோணுது! நான் எதுக்கு உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்கணும்? என்று சித்தார்த் நடந்தான்.
நவ்யா இதை துளி கூட எதிர்பார்க்கவில்லை. சித்து இவ்வளவு கோவப்படுறீங்க? நான் அவ்வளவு பெரிய விஷயமா இதை நினைக்கல என்று கூற..
சித்தார்த் அவளை பார்த்து ஒருத்தரோட முகத்தை வச்சோ அவங்களோட குணத்தையும் அவங்களோட டேலண்டையும் எட போடாதீங்க! அவ என்னோட ஸ்டூடண்ட், ரொம்ப பிரிலியன் அத எந்த இடத்திலும் அவ எக்ஸ்பிரஸ் பண்ணிக்கிட்டதில்ல! நானா தான் ஒவ்வொரு விஷயத்திலும் அவ்ளோ புஷ் பண்ணி தள்ளி விடுவேன்! கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க!..
நவ்யா அவனைப் பார்த்து நான் அந்த பொண்ணு பத்தி தப்பா எதுவுமே நினைக்கலையே சித்து! என்று கூற
சித் அவளை உள்ளூர பார்த்தவன் என் முன்னாடி இருக்கிற நவ்யா இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க! இப்ப எப்படி இருக்காங்கன்னு எனக்கு எல்லாமே தெரியும்! நீ அவளை பத்தி தப்பா நினைக்கல? என்று மொட்டையாக கேட்டான்.
அது என்ற நபியை தாங்கிக் கொண்டிருந்தவள் இந்த பொண்ணு அவ்ளோ நல்லா டப்பிங் பேசுமான எனக்கு கொஞ்சம் பொறாமையா இருந்தது மத்தபடிக்கு அந்த பொண்ண நான் தப்பா நினைக்கல அந்த பொண்ணுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் நான் ஏதோ ஒரு ரெண்டு தடவை பார்த்து இருக்கேன் என்று நவ்யா கூறினாள்.
சித்தார்த் எதுவும் பேசாமல் காருக்காக காத்திருந்தான்.
அந்த நேரம் நவ்யா அவளுடைய காரில் ஏறியவள். இவன் இப்படி கோபபடுவான் என எதிர்பார்க்கலையே! ஒரு சின்ன பொண்ணு அவனுக்கு கீழ வேலை செய்ற இந்த பொண்ணு மேல இத்தனை பில்டப் வெச்சிருக்கானே! அவன் சொன்னது கூட கரெக்டு தான். அவளோட டப்பிங்… ஹப்பா உண்மையாவே ஒரு வில்லி மாதிரி அந்த பொண்ண பேசியிருந்தது! நிறைய டேலண்ட் ஆன பொண்ணு தான், நம்ம தப்பா நினைச்சது தப்புதான்! என்று நவ்யா இதன்யாவை பற்றி மிகவும் ஸ்போட்டிவாக எடுத்துக் கொண்டவள்.
சரி எப்படியாச்சும் சித்தார்த்த சமாதானப்படுத்தி அவர்கிட்ட பேசணும். லீனா மேல அவருக்கு இன்னும் இன்ட்ரஸ்ட் இருக்கா? இல்ல ஃபிரண்ட்ஸா மெயின்டன் பண்ணிட்டு இருக்காங்களான்னு! தெரிஞ்சுக்கணும். என்று அவளின் காதலுக்கான வழிகளை யோசித்துக்கொண்டு அவன் அருகில் காரை நிறுத்தினாள்.
உங்களோட ஜாப நீங்க பாருங்க எனக்கு கார் வரும் நான் போய்க்கிறேன்!
சார் ப்ளீஸ் சார் நான் ஏதோ ஒரு ஞாபகத்துல பேசிட்டேன்! எனக்கு அப்படியே பட்ட எண்ணமெல்லாம் எதுவுமே கிடையாது! என்று நவ்யா கூற..
சித்தார்த் பிடிவாதமாக அதே இடத்தில் நின்றான். உடனே நவ்யா அவனுக்கு அருகில் இறங்கி நின்றாள்.
சித்தார்த் அவளை கண்டுகொள்ளாமல் இருக்க..
எப்போ சார் மலை இறங்குவீங்க? நான் பண்ணுது தப்பு தான்! நான் அப்படி பேசி இருக்க கூடாது! தப்புதான் என்று நவ்யா கூற
சித்தார்த் அவளை பார்த்து முதல்ல பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்ன்னு ஒன்னு இருக்கு! அதை கத்து வச்சுக்கோங்க! நாம மேல இருந்தா கூட நம்மள இந்த இடத்துக்கு கொண்டு வந்த யாரையுமே நம்ம மறக்கவும் கூடாது. அவங்கள எந்த ஒரு நிலையிலும் உதாசினமா பேசக்கூடாது. இந்த இடத்துக்கு நான் வந்ததுக்கான காரணம்? ஏன்? எனக்கு கீழ வேலை செய்ற ஆயிரம் வேலைக்காரங்க தான் அது கேட்டு திறந்து விடுகிற செக்யூரிட்டியா இருந்தாலும் சரி என்னோட பிஏவா இருந்தாலும் சரி எல்லாரும் ஒரே மாதிரி தான் எல்லாரையும் மரியாதையோட ஒரே போல தான் ட்ரீட் பண்ணுவேன். அவங்களோட வேலை தான் வித்தியாசப்படுமே தவிர, அவங்களுக்கு உண்டான அங்கீகாரம் சம்பளம் எல்லாமே ஒன்னு தான்! இனிமே இந்த மாதிரியான வார்த்தை எல்லாம் ஒருத்தர பத்தி எழக்காரமா புல்லி பண்ற மாதிரி பேசுறது, பொற்றே பண்ற மாதிரி பேசுறதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க! என்று கூறினான்.
நவ்யாவிற்கு கதி கலங்கியது.
இவ உண்மையாலுமே வேற மாதிரி நம்ம இந்த மாதிரி ஒருத்தனை என் வாழ்க்கையில நான் பார்த்ததே இல்லை. என்று மெய் மறந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் சித்தார்த் அவளை கண்டுகொள்ளவில்என் கார் வரும் வரை அதே இடத்தில் நின்றால்
நவ்யா எவ்வளவு கெஞ்சி பார்த்தாள்.சித்தார்த் நகரவே இல்லை, ஒரு கட்டத்தில் சரி நீங்க கிளம்பற வரைக்கும், நான் உங்களுக்கு கம்பெனி கொடுக்கிறேன். என்று கரகரத்துக் குரலில் அவள் பேசிக்கொண்டே இருக்க..
உடனே அவளின் கஷ்ட படும் குரலை பார்த்து அந்த குரலுக்கு இதமாக இருக்கும்படி சில சூடான உணவு பொருட்களை ஆர்டர் செய்து கொடுத்தான்.
நவ்யா அதில் கொஞ்சம் உருகத்தான் செய்தாள்.
எப்படி மிகவும் கேரிங்காக பார்த்துக் கொள்கிறான்?. இவன் கூட இருந்தா ரொம்ப பாதுகாப்பாவும் பத்திரமாகவும் உணரலாம்! இப்படி இருக்கிற பொண்ணு ஒருத்தனயா அந்த லீனாவுக்கு? எப்படி விட மனசு வந்தது? நல்ல வேலை அவ வேணாம்னு விட்டு போனதால் தான் இந்த சித் எனக்கு! என்று சிலாகித்துக் கொண்டே நின்றாள்.
அதன் பின் அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் மற்றும் நவ்யா கூடவே லீனா மூவரும் அந்த புது படத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்து கொண்டார்கள்.
முதலில் மூவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
அந்த நாலாவதா நடிக்க போற முக்கியமான கதாபாத்திரம் யாரு? என்று சித்தார்த் மணிகண்டனிடம் கேட்க..
அது இன்னும் தேடிட்டு இருக்கோம். அந்த கேரக்டர் மாறிட்டே இருக்குது சித்தார்த், எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல! நான் புக் ஆன உடனே உங்ககிட்ட சொல்றேன்! அதுக்கு முன்னாடி படத்தோட பூஜையை வச்சுக்கலாம்! என்று மணிகண்டன் அச்சு பிசுறாமல் ரவிச்சந்திரன் எப்படி சொல்லிக் கொடுத்தாரோ! அதேபோல பேசினார்.
சரி ஓகே என்று ஒற்றைப்பதிலுடன் சித்தார்த் முடித்துக் கொண்டான்.
இங்கே இதன்யா முறுக்கிக்கொண்டு தான் இப்பொழுது சுத்தமாக சித்தார்த்தின் பக்கம் திரும்புவதே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய விரிசல் அதிகமாகிக் கொண்டே சென்றது.
ஏனென்றால் டப்பிங்ல் சித்தார்த்துக்கு எதிராக இதன்யா பேசுகிறாள். அதனால் அவன் மேலிருக்கும் வன்மத்தை இன்னும் இன்னும் வளர்த்துக் கொண்டிருந்தாள். சித்தார்த் அது எதையும் கண்டு கொள்ளவில்லை. அவனுடைய டப்பிங் முழுமூச்சாக அவளுடன் சேர்ந்து அப்பொழுது மேகா கதாபாத்திரம் வரும் பொழுதும் மேகா சிறப்பாகவே பேசினாள்.
அவள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறாள் இருவரையும் இன்னும் கொஞ்சம் தான் பிரிக்க வேண்டும். இந்த ஒப்பந்த திருமணத்தின் காகித ஆதாரம் மட்டும் கிடைத்துவிட்டால், இந்த இதன்யாவை கசக்கி அந்த காகிதத்தோடு தூக்கி எறிந்து விடலாம். என்று ஒரு மனக்கணக்கு போட்டு வைத்திருந்தாள்.
அந்த மனக்கணக்குல தீயவைக்க அது இந்த ரைட்டரோட குமரல் தான்.
இப்படி என் நாட்கள் சென்று கொண்டிருக்க..
கடைசி நாள் டப்பிங் மிகவும் ஆரவாரத்துடன் நடந்தது கிட்டத்தட்ட இந்த படத்துடைய டப்பிங் 15 நாட்கள் சென்றது .
இதன்யார் கல்லூரி வேலையையும் மற்றும் இந்த டப்பிங் வேலையின் இரண்டையும் பார்த்துக் கொண்டே முடித்துக் கொடுத்தாள்.
வீட்டிலிருந்து போன் கால்களுக்கு மேல் உன் வந்து கொண்டே குமிந்தது.
இதன்யாவுக்கு எப்பொழுதடா தன் மகனை பார்த்து கொஞ்சுவோம்? என்று கைகள் பரபரத்துக் கொண்டிருந்தது.
இந்த வாரத்தில் கண்டிப்பா வீட்டுக்கு போயிடனும் ஒரு வாரம் இங்க வரவே கூடாது நிம்மதியா ஸ்பென்ட் பண்ணிட்டு வரணும்.
அடுத்து செகண்ட் செமஸ்டர்ட எக்ஸாம் தான் என்று இதன்யா ஒரு மனக்கணக்கு போட்டுக் கொண்டிருக்க..
அதில் தீயை வைக்கும் விதமாக இன்னொருவன் வந்து நின்றான்.
அவன் யாரென பிறகு பார்க்கலாம். இப்பொழுது கதைக்கு வரலாம்.
கடைசி நாள் டப்பிங் முடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்க..
இறுதி வசனம் அது மிகவும் கொடுமையாக இருந்தது. சித்தார்த் மொத்த ஆக்ரோஷமான வார்த்தைகளையும் கொட்டி பேசி தீர்த்து விட்டு அந்த வில்லியை மன்னித்து விடும் காட்சி வில்லி குமரி குமரி அழ வேண்டும். அந்த காட்சி ஓடிக்கொண்டிருக்க..
இதன்யா அந்த இடத்தில் உண்மையாகவே அழுது சிறப்பாக முடித்தாள். அவளை சுற்றி இருக்கும் அனைவரும் கைகளை தட்டிக் கொண்டிருக்க
சித்தார்த் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.
அவள் அவனை ஒரேட்டு கூட பார்க்க வில்லை. கண்களை துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
ரத்னா கைகளை தட்டிக் கொண்டே உண்மையாகவே நீங்க கிரேட் மா சொன்ன வேலையை சரியா முடிச்சு கொடுத்துட்டீங்க! உங்களுடைய பாகம் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம்! அத சிறப்பா முடிச்சிட்டீங்க! உங்களோட மொத்த குரல் சேர்ப்பு எல்லாமே முடிஞ்சிடுச்சு! எடிட்டிங் பண்ணி உங்களுக்கு படத்தை ஒரு தடவை போட்டு காட்டுறேன். அதுவும் எக்ஸ்பிளூசிவா என்று ரத்தினகுமார் கூறினார்.
தேங்க்யூ சார் இன்று புன்னகையுடன் கூறினாள்.
சித்தார்த் தொண்டையைக் கனைத்துக் கொண்டு வெளியே வர
சரி ஓகே நல்லபடியா இன்னைக்கு இந்த வேலை முடிஞ்சது அடுத்து படத்தோட ரிலீஸ் டேட் இதெல்லாம் ப்ரொடியூசர் கிட்ட பேசிட்டு உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்றேன் சித்தார்த். என்று ரத்தினகுமார் குஷியுடன் கிளம்பினார்.
சித்தார்த் இதன்யாவின் பின்னால் செல்ல
இதன்யா அவனை கண்டுகொள்ளாமல் தவிர்த்தாள்.
ஹே நில்லடி ரொம்ப ஓவரா சிலுப்பிக் கொண்டே போற! நானும் எத்தனை நாள் இப்படியே காஞ்சிப் போய் இருக்கிறது? என்று கேட்க
இதன்யா விடம் எந்த பதிலும் இல்லை.
ஹே உன்ன தாண்டி நில்லடி என்று சித்தார்த்த அருகில் வந்து அவளின் கையை பிடித்தான்.
வேகமாக அவனை தள்ளி விட்டு முறைத்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டாள்.
நீ வீட்டுக்கு எப்படியும் வருவ தானே என உடலை ஒரு மார்க்கமாக முறுக்கியவன்.
அவள் காரில் ஏறியதும் அருகில் செல்ல..
அண்ணா போகலாம் என்று டிரைவரிடம் கூறினாள்.
ஓட்டுநர் சித்தார்த் வருவதை பார்த்து மேடம் பாஸ் வராரு என்று சொல்ல
அண்ணா போகலாம்ன்னு சொன்னேன் என்று அவள் அதட்டயை ஒரு பார்வை பார்த்தாள்.
சித்தார்த் கண்களால் சைகை காட்ட..
உடனே அவர் காரை எடுத்துக் கொண்டு செல்ல..
என்ன? நான் வந்ததும் காரா வேகமா எடுக்க சொல்றியோ! இன்னைக்கு நைட்டு வரேண்டி என்று சித்தார்த் கிண்டலுடன் கூறினான்.
கார் கொஞ்ச தூரம் சென்றதும் இதன்யா கண்களில் கண்ணீர் கொட்டியது. அவன் அன்று நடந்து கொண்ட முறை சுத்தமாக பிடிக்கவில்லை. நவ்யா இருக்கும்பொழுது தன்னுடைய மதிப்பை அவன் தாழ்த்தி பேசியிருந்தது. இதன்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. சித் அவளை எவ்வளவு உயர்வாக பேசினான்? அதை சொன்னாலும் அவள் நம்பவும் மாட்டாள்.
இப்படியே இது போய்க்கொண்டே இருக்குமா? இதுக்கு எண்டு தான் எப்ப? என்று நீங்கள் கேட்டால் இன்னைக்கு இல்ல..
நாளைக்கு இதோட எண்டு இதன்யா அடுத்த நாள் வழக்கம் போல் கல்லூரி சென்றாள்.
அங்கு சென்று லீவ் லெட்டர் அனைவரிடமும் கொடுத்துவிட்டு வர
பிரியா அவளை பார்த்து என்ன இன்னைக்கு மேடம் ரொம்ப குசியா இருக்கீங்க? என்று கேட்க
நான் என் பையன பாக்க போறேன் என்று இதன்யா புன்னகையுடன் கூறினாள்.
அப்போ நீ கர்ப் கர்ப்! கர்ப்பம்! பார்த்தியா என்கிட்டையே மறச்சுட்ட என்று சொல்ல.
பூஜா அதை பார்த்து சிரித்தாள்
ஹே லூசா டி நீ! நான் ஒன்னும் மாசமா இல்ல. நான் எங்க அக்கா பையன பாக்க போறேண்டி! ஒரு வாரம் வரவே மாட்டேன்! இந்த பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன்! அங்கே இருக்க போறேன்.
அழகா இருக்கானா? கடிக்கிற மாதிரி இருக்கானா? என்று பிரியா கேட்க..
எப்ப பாரு உனக்கு இதே நினைப்பு தான் என இதன்யா சொல்ல..
எப்படி இருந்தா என்ன கடிக்கிற மாதிரி இருக்கானா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு! குண்டு என பிரியா சொல்ல
ஏ லூசு அவன் பிறந்து இப்பதான் 50 நாள் ஆகுது. உனக்கு தெரியும் தானே என்று சொல்ல..
சரி விடு நான் வந்து கடிச்சிக்கிறேன் என்று பிரியா கூறினாள்.
அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டு வர..
பூஜா மருத்துவமனை பார்ட் டைம் ஜாபுக்கு கிளம்ப
இன்னொரு பக்கம் பிரியா அவளுடைய வீட்டிற்கு கிளம்பினாள்.
இதன்யா காரில் ஏறிக்கொண்டாள்.
போலாமா மேம் என்று ஒரு குரல்
ம்ம் என்று அப்படியே காரில் சாய்ந்து கொண்டவள். ஒரு சில நிமிடங்கள் கழித்து கார் வேறு புறம் திரும்ப சட்டென முளித்து பார்த்தாள்.
யார் நீங்க கார் வேற பக்கம் போற மாதிரி இருக்கு என்று இதன்யா பதட்டத்துடன் சொல்ல
ஆமா கார் வேற பக்கம் தான் போகுது என்று அவன் கோரமாக சிரிக்க ஆரம்பித்தான் .
யாரது? யாரது? நாளைக்கு பாக்கலாம்!
தொடரும்..
EPI 334
இதன்யா காரில் ஏறிக்கொண்டாள்.
போலாமா மேம் என்று ஒரு குரல்
ம்ம் என்று அப்படியே காரில் சாய்ந்து கொண்டவள். கண்களை மூடினாள். அவளின் நினைவில் சித்தார்த் தான்! ச்சே ச்சே! போதும் அவன் மன்னிப்பு கேட்காத வரைக்கும் அவனை பத்தி நினைக்கவே கூடாது. என நினைத்தாள். வழக்கமாக வீட்டுக்கு செல்லும் வழியில் எத்தனை வளைவுகள் இருக்கும் என அவளுக்கு அத்து படி கண்களை மூடி கொண்டே வீட்டுக்கு வழியை நினைத்து பார்ப்பாள். ஆனால் இன்று எதோ வித்தியாசமாக இருக்க வேகமாக கண்ணை திறந்து பார்த்தாள்.
ஹலோ டிரைவர் அண்ணா! கார் வேற பக்கம் போகுது! எனக்கு டப்பிங் முடிஞ்சு போச்சு! இப்போ வீட்டுக்கு போகனும் வேற எங்கேயும் போக தேவையில்லை. ஆனா இது ஸ்டுடியோ போற வழி கூட இல்லையே! என் சுற்றிலும் பார்த்தாள்.
அந்த ஓட்டுநர் அமைதியாக வர. ..
ஹலோ யார் நீங்க? கார் வேற பக்கம் போற மாதிரி இருக்கு? என்று இதன்யா பதட்டத்துடன் சொல்ல
ஆமா கார் வேற பக்கம் தான் போகுது என்று அவன் கோரமாக சிரிக்க ஆரம்பித்தான் .
இதன்யா பதட்டத்துடன் போனை எடுத்து சித்தார்த்துக்கு அழைக்க போக போனில் சுத்தமாக சிக்னல் இல்லை. டிரை பண்ணாதீங்க மேடம்! இந்த காரில் எந்த டிவைசும் வேலை செய்யாது. என கூறி கொண்டே ஓட்டினான்.
இதண்யா பயந்து கொண்டு அந்த காரின் ஜன்னல் கதவை திறக்க முயற்சி செய்ய..
தாராளமா டிரை பண்ணுங்க! ஜன்னல் திறக்காது. எல்லாமே லாக்! நீங்க உள்ளே இருக்கிறது யாருக்குமே தெரியாது என சொல்லி கொண்டே ஓட்டினான்.
டேய் நான் அவ்ளோ பெரிய ஆள் இல்ல என்னை எதுக்கு டா கடத்தின? என இன்னொரு பக்கம் பிரியா சொல்லி கொண்டு குமுற! சும்மா மேடம் டைம் பாசுக்கு என கண்ணை சிமட்டினான்.
அய்யோ யாராவது வாங்க! என இன்னொரு பக்கம் வழியில் பூஜா கத்தி கொண்டே அழுதாள்.
எவ்ளோ வேணாலும் கத்திக்க டி! யாரும் வர மாட்டாங்க என சொல்லி கொண்டே காரை ஓட்டி கொண்டு பார்சல் பேக்கேஜிங் சர்வீஸ் செய்யும் குடோனுக்கு மூவரையும் கடத்தி சென்றான். அவன்? எவன் அவன்?
பிரியா மற்றும் பூஜா இருவரும் மயக்க நிலையில் தூக்கி வந்து கட்டி வைக்க பட்டனர். இதன்யா அழுது கொண்டே வந்தாள். இந்த நேரத்தில் டிராபிக் இந்த சென்னையில் இதே தொல்லை. என அந்த கடத்தல் காரன் வாய்பொழியாக கூறினான்.
அந்த நேரம் எதிரில் இருந்த இன்னொரு லைனில் தன் கார் போல தெரிய கண்களை துடைத்துக் கொண்டு இதன்யா சுற்றிலும் பார்த்தாள்.
இறங்கி இருந்த கார் கண்ணாடியை நவ்யா வெளியில் எட்டி பார்த்து விட்டு மேலே ஏற்றி விட.. கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் பார்க்க ஓட்டுநர் இருக்கையில் அவன் இன்னொரு இருப்பது தெரிந்தது. அந்த ஆண் என சொல்லாமலேயே, பார்க்காமலேயே அவளுக்கு பதில் தெரியும். சித்தார்த் கிருஷ்ணா தான் அது!
தான் கடத்தபட்டோம் என சொல்லவும் முடியாது. அவளின் ஏக்க விழிகள் அவனை பார்க்க துடிக்க அதற்குள் சிக்னல் பச்சை விளக்கு விழ வேகமாக கார் முன்னால் சென்றது.
இதன்யா ஏக்க விழிகளுடன் சித்தார்த் இருக்கும் காரை பார்த்தாள். கண்களில் நிற்காமல் கண்ணீர்..
சிக்னலில் இருந்து கார் மூவ் ஆனதும் வழக்கம் போல சித்தார்த் போனுக்கு காத்திருந்தான். எப்பொழுதும் இதன்யா எங்கே இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போன் வந்து விடும் ஆனால் இன்று இன்னும் போன் வர வில்லை. என்னாச்சு என புருவ முடிச்சிடன் அழைத்தான்.
ஹலோ! மேடம் வீட்டுக்கு வந்தாச்சா?
பாஸ் கடைசியாக பூஜா, பிரியா ரெண்டு பேர் கூடவும் மேம் வெளியே போனதா செய்தி பாஸ்! இப்போ மேடம் அவங்க கூட இருக்காங்க.. என கூறினான்.
ஓ அவங்க கூட இருக்காங்களா?
ஆமா பாஸ் காலேஜ் முடிஞ்சு மேம் அவங்க கூட வெளியே போயிருக்காங்க!
ஓ சரி அவங்க செக்யூரிட்டி கார்ட்ஸ நெக்ஸ்ட் ஒன் ஹார் கழிச்சு எனக்கு இன்பார்ம் பண்ண சொல்லுங்க! என சொல்லி விட்டு சித் போனை வைத்தான்.
நவ்யா மனதில் அது சித்துவுடய அம்மாவா இருக்குமா? என சாதாரணமாக விட்டு விட்டாள்.
அந்த நேரம் மணிகண்டன் நவ்யாவுக்கு அழைக்க..
ஆன் தி வே சார் நானும் சித்தார்த் சாரும் வந்துட்டு இருக்கோம்! என சொல்லி விட்டு போனை வைத்தாள்.
சித்தார்த் நேராக மணிகண்டன் வர சொன்ன ரெஸ்டாரன்ட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கு இருக்கும் கான்ப்ரன்ஸ் ஹாலில் அனைவரும் காத்திருந்தார்கள்.
அனைவரும் அந்த ரெஸ்டாரன்ட்ல இருக்கும் மினி கான்ஃபரன்ஸ் ஆளுக்குள் செல்வதற்கு முன் சித்தார்த் இதன்யாவின் நினைப்பாக இருக்க , உடனே அவளுடைய எண்ணுக்கு அழைக்க டயல் செய்தான்.
என்னதான் அவளுடைய என்னை பதிவு செய்து வைத்திருந்தாலும், டயல் செய்து போடுவது தனி சுகம் தான். சரியாக பச்சை தட்டும் நேரம் சித்தார்த்தின் சிந்தையில் இன்னிக்கு தான் அவ பிரண்ட்ஸ் கூட கொஞ்சம் ஜாலியா இருக்கா! நான் போன் பண்ணி பேசிட்டா மேடம்க்கு மறுபடியும் கோபம் தலைக்கு மேல ஏறிக்கும்! இன்னும் தலகால் புரியாமல் என்னை மதிக்கவே மாட்டா! என்று தோன்ற சரி என மீண்டும் டயல் செய்த என்னை டெலிட் செய்தான்.
கொஞ்ச நேரம் அப்படியே நின்றான் அந்த மினி ஹாளிலிருந்து உடனே மணிகண்டன் அவசரமாக வெளியே வந்தார். சித்தார்த்! சித்தார்த் என்று அழைக்க..
என்னாச்சு எதுக்கு இப்படி அவசர அவசரமாக ஓடி வரீங்க என்று சித் கேட்க
அது நீங்க வெளிவே நின்னுட்டீங்க! என்ன விஷயம்? எதுவும் பிரச்சனையா? உங்க கிட்ட பேசுறதுக்கு தான் வந்தேன்.
அப்படியெல்லாம் எதுவும் இல்ல வாங்க போகலாம் என்று இருவரும் அந்த ஆளுக்குள் நுழைந்தார்கள். அங்கு உள்ளே என் நுழைந்ததும், அனைவருடைய ஃபோனையும் சைலன்டை போட்டு வைத்தார்கள்.
சித்தார்த் மணியை பார்த்தான் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிறது. இன்னும் அரை மணி நேரத்துல மீட்டிங் முடிஞ்சிடும் , அவ எங்க இருக்கான்னு பார்த்து நானே பிக்கப் பண்ணிக்குவேன். என்று நினைத்தானே தவிர இதன்யா எங்கு இருக்கிறாள்? என்று அவளுடைய பாதுகாவலர்களுக்கு அழைக்க தோன்றவில்லை
என்னாச்சு சித்தார்த்? அவளுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிற! தயவுசெய்து ஒரு போன் பண்ணி கேட்டு இருந்தா, இந்நேரம் அவ காணாமல் போய் இருக்கிற விஷயம் தெரிஞ்சிருக்குமே! இது ரைட்டர் குமுறல்..
இங்கே இதன்யா அவனிடம் ப்ளீஸ் என்னை விட்டுடு! எதுக்கு என்னை கடத்திட்டு வந்த? உனக்கு எதுவும் பணம் வேணுமா? நான் உடனே தரேன்! என்னை விட்டுட்டு ப்ளீஸ்! என்று சொல்லிக் கொண்டிருக்க..
பணமா உன்ன பணத்துக்காக கடத்தினேன்னு நினைச்சுட்டு இருக்கியா? என்று கர்ஜனையான குரலுடன் அவன் பேசினான்.
பின்ன என்ற இதன்யா கேட்க
அத உன்கிட்ட சொல்ல முடியாது கொஞ்சம் வாய மூடிட்டு வா! நீ பேசுறத கேட்டா, ரொம்ப எரிச்சலா இருக்கு என்று கூறிக் கொண்ட கார் அந்த பார்சல் அனுப்பும் கூட குடோனுக்குள் நுழைந்தது. ஏற்கனவே அங்கே இரண்டு சேரில் பிரியாவும், பூஜாவும் வாயில் துணி வைத்து கட்டப்பட்டு இருக்க, அடுத்ததாக இதன்யா வந்து சேர்ந்தாள் .
அங்கு பிரியா மற்றும் பூஜா இருவரையும் பார்த்ததும் இதன்யாவிற்கு தூக்கி வாரி போட்டது. ஹே என்ன பண்ற? அவங்களை எதுக்கு பிடிச்சு வச்சிருக்க? உனக்கு என்னதான் வேணும்? எதுக்கு என்னோட பிரண்ட்ஸ் எனக்கு பிடிச்சு வச்சிருக்க? தயவு செய்து என்னை என்ன வேணாலும் பண்ணிக்க, என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேத்தையும் விட்டுட்டு! என இதன்யா சொல்லிக் கொண்டிருக்க
பிரியா மற்றும் பூஜா மெதுமெதுவாக மயக்கத்தில் இருந்து தெளிந்தவர்கள். அங்கு பூஜா இருப்பதைப் பார்த்து பிரியா அழத் தொடங்கினாள்.
பூஜாவும் அதே போல் பிரியா மற்றும் இதன் இருவரையும் பார்த்து அழ ஆரம்பிக்க
இதன்யா கொஞ்சம் தைரியமாக நான் யாருன்னு உனக்கு தெரியாது! இது மட்டும் எங்க வீட்ல தெரிஞ்சது? அவர் வந்தார்னா! நடக்கிறதே வேற! என்று அவள் தைரியமாக பேசிக் கொண்டிருக்க..
நீ யாரு? என்ன? உன்னோட மொத்த ஜாதகமும் எனக்கு தெரியும்டி! என அவனோட கீப் தான டி..
என்ன?
அவன் கொஞ்சம் இளன புன்னகையுடன் அதாவது வப்பாட்டி நீ! அந்த சித்தார்த்துக்கு வப்பாட்டி தானே! என்று கூறினான்.
இதை கேட்டதும் பிரியா பூஜா இன்னும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தார்கள்.
இதன்யா உதட்டை கடித்து தன் துக்கத்தை அடக்கியவள். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீ அவருடைய எதிரியா உன்னை அவரு சும்மா விட மாட்டாரு டா ராஸ்கல் இவ அவள் சொல்ல..
அந்த நேரம் கடத்தல் காரனுக்கு போன் வந்தது. சட்டென போனை எடுத்தான். ஹலோ எவரு? அதுக்குள்ள வந்துட்டானா? நேனு சம்பேஸ்தானு ரா! அந்த ஆள நான் சும்மா விட மாட்டேன் என்று தெலுங்கும் தமிழும் கலந்து பேசிக்கொண்டு இருந்தான்.
இதன்யாவிற்கு இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்பதைவிட பிரியாவையும், பூஜாவையும் பத்திரமாக காப்பாற்ற வேண்டுமே ! என்று சுற்றிலும் எதுவும் கிடைக்குமா என தேடிக் கொண்டிருந்தாள்.ஏதாவது பொருள் கிடைக்காதா? இவனை அடித்து போட்டுவிட்டு அவர்கள் இருவரையும் கட்டவிழ்த்து, கூட்டி சென்று விடலாம்! என்று நினைத்து தேட
சட்டென போனை வைத்தவன் அவளை பார்த்து என்ன? என்ன இப்படி தேடுற? என்று கண்களால் மிரட்டிக்கொண்டே அருகில் வந்தான்.
டேய் உன்ன கொன்றுவேன் நீ நான் யாருன்னு தெரியாம மோதிட்டு இருக்க!
தெரியும்டி நீ அந்த சித்தார்த்தத்தோட என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க..
நிறுத்துடா ராஸ்கல் யாரை பார்த்து என்ன சொல்லிட்டு இருக்க? என்று பிரியா பயத்துடனும் கோபத்துடனும் கலந்து கர்த்த..
அவன் வேகமாக பிரியாவின் அருகில் சென்றவன். அவளை கண்ணம் கண்ணமாக அடிக்க ஆரம்பித்தான்.
அய்யோ அம்மா! என பிரியா வலி வேதனையில் அழ ஆரம்பித்தாள்.
இதன்யா அவன் அருகில் சென்றவன் டேய் அடிக்காதடா விட்டுடுடா! டேய் ப்ளீஸ் டா உனக்கு என்ன வேணும்? எவ்வளவு பணம் வேணும் ப்ளீஸ் இவங்க ரெண்டு பேர்ட்டையும் விட்டுட்டு எங்களை விட்டுடுடா! என்று இதன்யா கெஞ்சிக் கொண்டிருக்க..
அவனுடய ஒரே தள்ளலில் இதன்யா கீழ விழுந்தாள்.
ஐயோ இதன்யா என்று இன்னொரு பக்கம் பூஜா அழுது கொண்டே உனக்கெல்லாம் வெக்கமா இல்ல! பொண்ணுங்கள கடத்திக்கொண்டு வருகிறே! உனக்கு தைரியம் இருந்தா சிதார்த் சார்கிட்ட மோத வேண்டியதுதானே! என்று அவள் சொல்ல
அந்தக் கடத்தல்காரன் பூஜாவின் அருகில் சென்று அவளின் தலைமுடியை கொத்தாக பிடித்து என்ன வாய் ஓவரா போகுது! அடுத்த வப்பாட்டியாக நீயும் பிளான் பண்ணிட்டு போல.. ஆனா உனக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசம் நீ அதை விட பெரிய ஆள் தான் புடிச்சிருக்க! என்று கூறினான்.
என்னோட டார்கெட் நீங்க ரெண்டு பேர் தாண்டி! அவளை சும்மா ஒப்புக்கு தூக்கிட்டு வந்தேன்! என்று அந்த கடத்தல் காரன் கூறினான்.
பூஜாவுக்கும் பிரியாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை நாங்க ரெண்டு பேரா நாங்க நாங்க என்ன பண்ணனும் என்பதுபோல் அவர்களுடைய பாவனை இருக்க…
இதன்யா அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டேன் அவனுடைய போன் அந்த மேஜையில் இருக்க அதை எடுத்து எதுவும் குறுஞ்செய்தி அனுப்பலாமா? என நினைத்தவள் வேகமாக அழுது கொண்டே பின்னால் நகர்ந்தாள்.
ஏய் என்ன? போற!. என்ன எடுக்க போற?! என்று அவள் நகர்ந்த விதத்தைப் பார்த்து சிரித்து கொண்டே என் போன் எடுக்க போறியா என்ன? உன்னோட கள்ளக்காதலனுக்கு போன் பண்ணி, இப்போ இருக்கிற இடத்தை சொல்ல போறியா? என்ன? நீ போன் பண்ணதும் அவன் ஓடி வந்துருவானு நினைச்சுட்டு இருக்கியா?.என்று கோரமாக சிரிக்க ஆரம்பித்தான்.
அவர் அவர் வருவார்! இந்நேரம் அவர் என்னை தேட கூட ஆரம்பிச்சிருப்பார் உன்ன சும்மா விட மாட்டாருடா! என்று இதன்யா சொல்லிக் கொண்டிருக்க..
அந்த கடத்தல்காரன் நேராக இதன்யாவின் அருகில் வந்தவன். சரி நான் இப்போ உன்னோட போனையே கொடுக்கிறேன். போன் பண்றியா? அவன் அதுதான் உன்னோட கள்ளக்காதலன் சித்தார்த் கிருஷ்ணா இல்ல.. இல்ல.. தப்பா சொல்லிட்டேன்! அவனுக்கு நீ கள்ள காதலி! கீப்புக்காக என்ன பன்றான்னு பார்க்கலாமா? கால் பண்றியா? இந்தா இதை பிடிச்சுக்க! இந்த போன் கால் பண்ணு! பார்க்கலாம்! என்று தூக்கி வீசினான்.
அந்த போனை பிடித்தவள். பதட்டத்துடன் வேகமாக சித்தார்த்துக்கு அழைத்தாள்.
ஒரு முறை..
இரண்டு முறை..
மூன்று முறை திரும்பத் திரும்ப அழைக்க.. சித்தார்த் போனை எடுக்கவில்லை.
அவள் உடனே வேறு யாருக்காவது அழைக்கலாம்? என்று சதீஷ், அபிஜித், குரு பிரகாஷ் என அனைவருக்கும் தட்டிவிட..
என்ன நிறைய பேருக்கு போன் பண்ற போல? அப்போ உன் லிஸ்ட்ல நிறைய பேர் இருக்காங்களா? என்று அவன் அசிங்கமாக பேசிட..
இதன்யாவின் கண்களில் கண்ணீர் வடிய போன் செய்வதை நிறுத்தினாள்.
பிரியா கோபத்துடன் டேய் உன்ன! நீ உயிரோடவே இருக்க மாட்ட டா! சித்தார்த் வந்தார்னா நீ அவ்வளவுதான்! என்று மீண்டும் சொல்ல..
அடடே உன்னை அப்படியே விட்டது என் தப்பு தான் என பளீர் என ஒரு அரை விட்டான்.அந்த அதிர்ச்சியில் பிரியா மீண்டும் மயங்கி விட..
டேய் அடிக்காத டா என்று இதன்யா எழுந்தாள்.
சரி எத்தனை முறை கால் பண்ண? என்று அந்த கடத்தல்காரன் கேட்க
இதன்யா அழுது கொண்டே ப்ளீஸ் அவங்கள விட்டுடு ஐயோ அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே! அவங்க ரெண்டு பேரையும் விட்டு விடு! என ப்ரியாவை பார்க்க..
ஏய் அவனுக்கு எத்தனை முறை கால் பண்ண சொல்லு இல்லன்னா அவளை கட்டி தொங்க போடுவேன்! என்று மிரட்டினான்.
நான் நான் அஞ்சாவது தடவ கால் பண்ணேன் என்று இதன்யா கலக்கத்துடன் சொல்ல..
அப்புறம் வேற யாருக்கு கால் பண்ண சரி நீ யாராருக்கு கால் பண்ணி இருப்ப? எனக்கு தெரியும்! அவனுக்கு யார் யாரெல்லாம் ஒத்து ஊதுறாங்களோ! அவங்களுக்கெல்லாம் கால் பண்ணி இருப்ப! இட்ஸ் ஓகே! சரி விடு எடுத்தானா? என்று அவன் கேட்க..
பூஜா அழுது கொண்டே இன்னொரு தடவை கால் பண்ணி பாருடி என்று கூற..
பூஜாவை போலவே இன்னொரு தடவ கால் பண்ணி பாருடி என்று கிண்டல் செய்தான். அவன்..
இப்போ உனக்கு என்னடா வேணும் என்னோட உயிர் வேணுமா எடுத்துக்கோ தயவு செய்து இப்படி வார்த்தையால கொல்லாத என்ற இதன்யா சொல்ல
உன் உயிர் வேணும்னு யார் சொன்னது? உங்க மூணு பேரோட உயிர் எனக்கு தேவையே இல்லை! இந்த கள்ளசாவிக்கு ஓனர் இருக்காங்கல்ல, அவங்களோட உயிர் எல்லாம் எனக்கு வேணும்! என்று கூறினான்.
பூஜாவும் இதன்யாவும் புரியாமல் பார்க்க..
சரி உன்னோட அதாவது மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காருன்னு தெரியுமா? என்று கேட்க..
டேய் விடு டா! என பூஜா மீண்டும் தைரியத்தை வர வளைத்து கொண்டு சொல்ல அவளின் அருகில் சென்றவன். கன்னத்தில் இரண்டடி வைக்க இதன்யா ஓடி போய் அவனை தடுக்க ஆரம்பித்தாள்.
ஹே ச்சீ கைய எடு! நீ ஒரு கேவலமான ஒருத்தி என தட்டி விட்டவன். அருகில் இருக்கும் மயக்க மருந்து கர்சீப் எடுத்து பூஜாவின் மூக்கில் ஐந்து நிமிடங்கள் வைத்து அழுத்த அவள் மயங்கி விழுந்தாள்.
உன் தோழிகளை காப்பாற்றி என்ன பயன்? அவளுங்க ஃபர்ஸ்ட் ஹேன்ட் ஆனால் நீ செகண்ட் தான்…
இதன்யா கண்களில் நீர் வழிய அவனைப் பார்த்தாள்.
அந்த கடத்தல்காரன் சிரித்துக் கொண்டே இப்போ நீ பர்மனெண்டா கள்ள சாவியா மட்டும் தான் இருக்க போறேன்னு நினைக்கிறேன்! உன்னை சின்ன வீடா வச்சிருக்கான். எங்கேயோ மச்சம் இருக்கு பா பெரிய வீட்டுக்கு எப்பவும் பிளான் பண்ணிட்டான். அந்த மெலினா சார்ஜ் குளிருக்கு இதமாக அப்பப்போ ஒதுங்க.. உன்னை பெர்மணன்ட்டா சின்ன வீடா வச்சிருக்கான்.
ஹான் முக்கிய விசயம் இப்போ புதுசா நவ்யான்னு ஒரு நாட்டுக்கட்டையை பிடிச்சுட்டு வந்து இரக்கான்! பாதி பாதி தமிழ்நாடு, பாதி கேரளா! பார்ன் இன் திருச்சி! நச்சுன்னு இருக்கலாமே! அவளுக்கு தான் நீ டப்பிங் கொடுத்திருக்க போல! என்று கடத்தல்காரன் பேச
இதன்யாவிற்கு முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தோன்றியது.
எனக்கு எல்லாமே தெரியும் டி என்பது போல் கடத்தல் காரனின் பார்வை இருக்க..
இப்போ உனக்கு என்னதான் வேணும் என்ற அவள் மீண்டும் அழுது கொண்டே கேட்டாள்.
நான் கேட்கிறத உன்னால கொடுக்க முடியாது. என்று கூறியவன். சரி இன்னொரு தடவை உன்னோட காதலனுக்கு போன் பண்றியா என்று குறும்பாக பார்த்தான்.
இதன்யா இன்னொரு முறை அழைக்க..
சித் எடுக்கவே இல்லை.
அந்தக் கடத்தல்காரன் உதட்டைப் பிதுக்கி கொண்டு போன் எடுக்கலையா? உன்னோட அவர்! அவன் எடுக்க மாட்டான் டி! இப்போ அவன் அந்த நவ்யா கூட இருக்கான். பார்த்திருப்பியே நம்ம கார்ல வரும்போது! ஆப்போசிட்ல இருக்க வண்டியில அவனும் அவளும் தானே இருந்தாங்க! அதுவும் உனக்கு வாங்கி கொடுத்த கார்ல! சரி தானே என்ற அந்த கடதல்காரன் கூறினான்.
இதன்யா….?
இவங்கள யாரு தான் வந்து காப்பாத்துவாங்க?
சித்தார்த் வருவானா?
அபிஜித் வருவானா?
இல்ல சத்தீஷ் வருவானா?
வெயிட் பண்ணி நாளைக்கு பாக்கலாம்!
தொடரும்
EPI 335
அந்தக் கடத்தல்காரன் உதட்டைப் பிதுக்கி கொண்டு போன் எடுக்கலையா? உன்னோட அவர்! அவன் எடுக்க மாட்டான் டி! இப்போ அவன் அந்த நவ்யா கூட இருக்கான். பார்த்திருப்பியே நம்ம கார்ல வரும்போது! ஆப்போசிட்ல இருக்க வண்டியில அவனும் அவளும் தானே இருந்தாங்க! அதுவும் உனக்கு வாங்கி கொடுத்த கார்ல! சரி தானே என்ற அந்த கடதல்காரன் கூறினான்.
இதன்யா அவனை அதிர்த்தியுடன் பார்த்தாள்.
ஈஈஈ! என்ன லிட்டில் ஹார்ட் பேபி மா! என்ன டா ஆச்சு? என அவனுடைய பார்வை இதன்யா, பூஜா மற்றும் பிரியா என அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு அவள் மேல் வந்தது.
இதன்யா எதுவும் பேசாமல் அதே இடத்தில் அப்படியே சரிந்தாள்.
உ!. உனக்கு என்ன வேணும்? என அவள் மீண்டும் கேட்க..
மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணா மட்டும் தான் என்னோட டார்கெட்! நீ இல்ல!.
அப்புறம் எதுக்கு எங்களை கடத்தின? என அவள் அவனை அடி பட்ட பார்வையுடன் கேட்க..
உன்னை தவிர்த்து அவள், இவள் இவங்க ரெண்டு பேரும் அதுல இருக்காங்க! என கூறினான். கொடூரன்!.
அவங்க என்னோட பிரெண்ட்ஸ்! என இதன்யா சொல்ல..
கடத்தல் காரண் புருவம் சுருக்கி ப்ரெண்ட் அப்டின்னா உன்னோட படுக்கை அறைக்கும் நாளைக்கு நீ சாகும் போது சவப்பெட்டியில் கூட பங்கு கொடுப்ப போல! என சிரித்தான்.
இதன்யா காதை பொத்தி கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அவன் உதட்டில் வில்லதனமான புன்னகை இழையோட.. உன்னோட வாழ்க்கை உன் கையில்! இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்! அதுக்குன்னு என்ன நல்லவன்னு மட்டும் நினைச்சுடாத! நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் உன்னை அப்படியே சும்மா விட்டுட்டு போக நான்!!! என்னை என கூறி விட்டு அவன் கதவை நோக்கி நடக்க..
அதற்குள் அவர்களின் மேல் ஒரு பார்சல் செய்யும் செவ்வக வடிவ மரபெட்டி அவர்களை அடைக்கும் விதமாக தனித்தனியாக டம் டம் டம் என பயங்கர சத்தத்துடன் ஆக்கிரமித்தது.
இதன்யா காதை அடைத்து கொண்டு முருகா என கத்தியவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.
*
என்ன டா இடியட்ஸ் அவளை தூக்கியாச்சா? என காத்து கொண்டிருந்தாள். மேகா!
இல்லையே மேடம்! அவங்க இன்னும் entrance வரவே இல்ல! இன்னிக்கு காலேஜ் லீவா மேடம் நாங்களும் காரில் இருக்கும் நம்பர் பிளேட் முதற்கொண்டு எல்லாமே மாத்தி ரெடியா வச்சிட்டு காத்துட்டு இருக்கோம்! ஆனால் அவங்க வரல மேம்! என ஒருவன் கூறினான்.
போங்க டா *.. *.. * என கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசியவள் இவள் கிட்ட எப்படி பேச?
அந்த ஆட்கள் என்ன இவள் இந்த கிழி கிழிக்கிரா என நினைத்து கொண்டு அப்படியே அமைதியாக இருக்க..
நீங்க எதுக்கும் லாயக்கு இல்ல வந்து தொலையுங்க இன்னொரு நாள் பிளான் பண்ணுவோம்! என கடத்தல் முயற்சியை கை விட்டாள்.
*
சித்தார்த் மீட்டிங் முடித்துவிட்டு அவனுடைய போனை பார்க்க இதன்யா அழைத்து இருப்பது தெரிய வந்தது.
இது கனவா? இல்ல! நிஜமா? நிஜம்தான் ம்ம் கண்ணாடிக்காரி இத்தனை முறை கால் பண்ணி இருக்கிறாளே? ஒரு வேலை நம்ம கிட்ட சாரி கேட்கத்தான் போன் பண்றாளோ? அப்போ இன்னைக்கு நைட்டு கச்சேரி தான்! என்று ஆயிரம் எண்ணங்கள் மனதில் குதிரை போல கட்டவிழ்ந்து ஓடிக் கொண்டிருக்க.m அவளை நினைத்து ஒருமுறை அவனுடைய உடல்கள் விறைக்கத்தான் செய்தது.
சித் கைகள் பரபரப்புடன் அவளுக்கு இன்னொருமுறை அழைத்தான்.
இந்த முறை அப்பொழுது அவள் எடுக்கவில்லை. அப்படி சொல்லி விட முடியாது. அவள் எடுக்கும் சூழலில் இல்லை. அந்த மரப்பெட்டி மேலிருந்து கீழே விழுந்ததில் மயங்கி கிடந்தாள்.
சித் மனதில் ம்ம் இதன்யா கூட பிஸியா இருப்பா! கண்டிப்பா இந்த நல்ல விசயத்தை பிரியா தான் எடுத்து சொல்லி அவளுக்கு அட்வைஸ் பண்ணி இருப்பான்னு நினைக்கிறேன் என்று சந்தோஷப்பட்டு கொண்டு வெளியே வந்தான்.
நவ்யா அவனுடைய முக மாறுதலை பார்த்து விட்டு ஆர்வமாக வெளியே வர..
சித்தார்த்தின் எண்ணுக்கு அந்த நேரம் சதீஷ் , அபிஜித் இன்னொரு பக்கம் குரு பிரகாஷ் என அனைவரும் போன் செய்ய.
சித் புருவ முடிச்சுடன் என்ன இத்தனை பேர் கால் பண்ணி இருக்காங்க? என்று ஒரு பதட்டத்துடன் முதலில் குரு பிரகாசுக்கு அழைத்தான்.
மச்சி சொல்லுடா!
டேய் பாப்பா எனக்கு போன் பண்ணி இருக்கு என்று குரு சொல்ல..
என்ன என்று சித்தார்த்துக்கு எங்கேயோ ஏதோ தப்பாக பட்டது.
சரி நீ வை நான் பார்த்துக்கிறேன் என்று வேகமாக கட் செய்ய..
சதீஷ் இரண்டாம் அழைப்பில் இருந்தான்.
சொல்லுடா..
டேய் டேய் அது வந்து ஒரு பெரிய பிரச்னை டா..
என்ன விசயம்?
சித்து அது வந்து பிரியா, பூஜா, இதன்யா இது என்ன மூணு பேரும் மிஸ்ஸிங் டா! என்று பதட்டத்துடன் சதீஷின் குரல் கேட்க..
என்னடா சொல்ற? என்று சித்தார்த்துக்கு ஒரு கணம் உலகமே இருண்டது போல் ஆனது. உள்ளுக்குள் இருள் பரவ ஆஆஆஆ!!! என ஆவசேமாக கத்தினான்.
அவன் கத்திய கத்தலில் நவ்யா ஒரு நிமிடம் பயந்து போக..
அடுத்த நொடி சித்தார்த்தை அவனுடைய பாதுகாவலர்கள் சுற்றி வைத்தார்கள்.
மேடம் போங்க மேடம்! எதுவும் பிரச்னை யா இருக்கும்.. சீக்கிரம் போங்க என அங்கிருக்கும் அனைவரும் நவ்யாவை அனுப்பி விட..
அவள் பயந்து கொண்டே சென்று விட்டாள்.
என்ன சொல்ற? இந்த உலகத்துல எவனுக்கு அந்த தைரியம் இருக்கு. அதுவும் என் பொண்டாட்டி மேல! என்னோட பொருள் மேல கை வைக்கிறதுக்கு? அந்த அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு? என்று ஒரு பக்கம் கோபம் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இது தெரியாம நான் முட்டாளா இருந்திருக்கேனே? அப்போ அவ அங்க தவிச்சிட்டு தான் எனக்கு போன் பண்ணி இருக்காளா? என்று சித்தார்த்துக்கு உடனே அவன் மேலிருக்கும் குற்றம் புரிய.. தன்னைத்தானே மிகவும் கேவலமாகவும் கோபமாகவும் நினைத்தவன் ஆ என்று கத்தினான் அரண்டு சித்தார்த்தை பார்க்க
சித்தார்த் வேகமாக தன்னுடைய காரை எட்டி உதைத்தவன் இப்பொழுது என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சித் வேகமாக ஜியாவுக்கு அழைக்க போக அவளே அழைத்தாள்.
பாஸ் என்று அவள் பதிலளிக்க..
இப்பவே ஜக்குபாய் வரணும் இதான்யா மிஸ்ஸிங் உடனே கண்டுபிடிங்க! இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு அவ எங்க இருக்கான்ற செய்தி வந்தாகணும்! என்று அவன் சொல்லவும்..
ஜியா அவன் பேசி முடிக்கும் பொருட்டு காத்திருந்தாள். பாஸ் இதன்யாவின் ஜிபிஎஸ் ட்ராக்கிங் ஆன் செய்தவள். பாஸ் அவங்க பார்சல் லார்ஜஸ்டிக்ஸ்ல குடோன் பக்கம் மேம்-ஓட போன் சிக்னல் காட்டுது என்று கூறினாள்.
ஜக்கு பாய் வரனும் என்று போனை கட் செய்தவன்.
உடனே காரை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினான் இன்னொரு பக்கம் சாணக்யா தேடிக் கொண்டிருக்க, சதீஸ், அபி என அனைவரும் தேடினார்கள். முதலில் அந்த இடத்தை அடைந்தது அபிஜித் தான்.
அபிஜித் பதட்டத்துடன் அந்த லாஜிஸ்டிக் பக்கம் வந்தவன் வேகமாக அனைத்து இடங்களிலும் சுற்றி பார்த்தான். அந்த இடத்தைச் சுற்றிலும் நிறைய டேங்கர் லாரிகள் மற்றும் பார்சல் லோடு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் என நிறைய இருந்தது.
Oh shit இந்த இடத்தில் எப்படி நம்ம அவளை கண்டுபிடிக்க போறோம்? என்று அபிக்கு ஒரு நிமிடம் உதறல் எடுக்க..
என்ன செய்வது என்று யோசித்து கண்டு தன் தந்தைக்கு அழைத்தான்.
னானா என்னோட பூஜாவை கடத்திட்டாங்க! என பதட்டத்துடன் தவிப்புடன் அவனின் குரல் ஒலிக்க..
எவருரா?
னானா பூஜா அம்மாயி என்னோட… என மூச்சு முட்டியவன். நான் லவ் பண்ற பொண்ணு என்று அபி தைரியத்தை வர வளைத்து கொண்டு கூறினான்.
என்ன சொல்ற என்று வீரசிம்மா பார்வையை சுருக்கி கேட்க..
நம்ம சத்யா லவ் பண்ற பொண்ண நான் விரும்புற பொண்ணு, சித்தார்த்-ஓட பொண்டாட்டி மூணு பேரையும் கடத்திட்டாங்க. என்று அபி கூற..
வீரசிம்மா பற்களை கடித்துக் கொண்டு சரி நீ முதல்ல அவங்க எங்க இருக்காங்கன்னு தேடு! நான் இன்னொரு பக்கம் யாருன்னு கண்டுபிடிக்கிறேன் என்று வீரசிம்மா போனை வைத்தார்.
அபிஜித் ஒவ்வொரு பக்கமாக தேடிக் கொண்டு சென்றவன். சித்துமும் கலங்கி நின்றான். எங்கு தேடி செல்வது என தெரியாமல் ஒரு இடத்தில் நின்றான் அப்பொழுது பெண்கள் கத்தும் சத்தம் கேட்க கூர்ந்து கவனித்தவனுக்கு அது யார் குரல் என்று தெரியவில்லை. ஆனால் அலறி கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க..
வேகமாக அந்த சத்தத்தை பின்தொடர்ந்து சென்றான். அதற்குள் அபிஜத்தின் காவலாளிகள், பீம் பாய்ஸ் இன்னும் ஒரு சில பக்கம் தேடிக் கொண்டிருக்க.. அந்த சத்தத்தை கேட்டுக் கொண்டே அந்த குடோன் பக்கம் வந்தான் அங்கு மூன்று பெட்டிகள் மட்டும் இருக்க…அந்த பக்கம் சென்றான்.
அந்த அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. திடீரென்று சத்தமே இல்லாமல் போனது. வேகமாக அபிஜித் வந்தவன்.
உடனே அவன் அவனுடைய பிரத்தியேக காவலாளிகளுக்கு அழைத்தான் அனைவரும் அந்த இடத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்தார்கள். சீக்கிரம் இந்த மூணு பெட்டியில் தூங்குங்க என்று அவன் உத்தரவிட..
அவர்கள் அந்த பெட்டியை எப்படி தூக்குவது? என்று யோசித்துக் கொண்டிருக்க..
அட்லீஸ்ட் ஏதாவது பண்ணி இதை உடைங்க முனகிர சத்தம் கேக்குது தவிப்புடன் அபி பேசிக் கொண்டிருக்க..
உடனே வேகமாக காவலாளிகள் அனைவரும் டீம் பாய்ஸ் அனைவரும் அந்த முயற்சியில் ஈடுபட முதலாவதாக உடைக்கப்பட்டது. பிரியாவினுடைய பெட்டி தான், அது பயங்கர சத்தத்துடன் உடைக்க பிரியா மீண்டும் அந்த சத்தம் தாளாமல் மயங்கி விழுந்தாள்.
அபியின் பார்வையில் பிரியா தெரிய..
அபி வேகமாக கண்களில் கண்ணீருடன் பிரியா! பிரியா! என்று அழுது கொண்டே ஓடியவன். அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான். பிரியா பிரியா என நடுங்கும் குரலில் என்று தவிப்புடன் இதயம் குமர கத்தினான்.
பிரியா பேச்சி மூச்சு இல்லாமல் நடுங்கிக் கொண்டு கிடக்க..
மெதுவாக அவளை தூக்கி “கார்ட்ஸ் இவங்கள கொஞ்சம் காத்தோட்டமான இடத்துக்கு தூக்கிட்டு போங்க!” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தம் பதித்தான். அது அவளின் உள்ளுக்குள் சென்றதோ என்னவோ அபியின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நடுங்கினாள்.
ஒன்னும் இல்லடி நான் வந்துட்டேன் உன்னை எப்பவும் கஷ்டத்தில் விடமாட்டேன். நான் இருக்கேன்டி. உனக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, சதீஷ் வேகமாக அந்த இடத்திற்கு வந்தான் பிரியா! பிரியா! என்று பதட்டத்துடன் ஓடி வந்தான்.
அபிஜித் பிரியாவை அவனிடம் கொடுத்துவிட்டு நேராக.. அந்த பெட்டியை பார்த்து அப்போ இது ரெண்டுலயும் இதன்யா பூஜா தான் இருப்பாங்க! சீக்கிரம் அவங்களுக்கு ஏதாவது ஆகப்போகுது, இதை உடைங்க இல்லை ஏதாவது பண்ணுங்க! என்று சொல்ல..
ஒருவன் கண்டெய்னரை தூக்க பயன்படுத்தும் கொக்கியை பயன்படுத்தி பூஜா உள்ளே இருக்கும் பெட்டியை தூக்க..
உள்ளே பூஜா கோழிக்குஞ்சு போல் சுருண்டு கிடந்தாள்.
அபிஜித்திற்கு அவனுடைய உயிரே போவது போல் இருக்க. வேகமாக பூஜா! பூஜா! என்று கத்திக்கொண்டு ஓடினான். அந்த கத்தல் பாவம் அவளுக்கு கேட்கவில்லையே! அவள் அப்படியே ஜடம் போல கிடந்தாள். முகமெல்லாம் வியர்த்து உயர்த்து வடிந்து உடல் எல்லாம் ஜில்லென்று இருந்தது. வேகமாக அவளை தூக்கி நாடிப் பிடித்து பார்த்து அவளுடைய நெற்றியில் கழுத்தில் கை வைத்துப் பார்த்தான்.
பாஸ் பாஸ் கொஞ்சம் ஜாக்கிரதையா உடனே இந்த இடத்தை விட்டு நகருண்க! இது கீழ எந்த நிமிஷம் வேணாலும் விழுகலாம். என்று அவன் சொல்லி முடிக்கவே! அது நொறுங்களுடன் கீழே விழ.. அபி அதற்குள் கண்ணிமைக்கும் நொடியில் பூஜாவை தூக்கி இழுத்துக் கொண்டு உருண்டு பிரண்டு வந்தான்.
அண்ணா! என்று பயத்தில் சதீஸ் கத்த அதற்குள் அந்த இடம் புகை மூட்டமாக பரவி போனது.
சதீஷ் வேகமாக அங்கு பார்க்க ஒரு பக்கம் அபி பூஜாவை உருட்டிக்கொண்டு அந்த புழுதியில் கிடந்தான்.
பூஜா நடுங்கிக் கொண்டு கண்கள் சோர்வில் கிடக்க..
அபி எழுந்தமர்ந்து அவளின் முகத்தில் உள்ள புழுதியை தட்டி விட்டவன்.
பூஜா பூஜா ஓபன் யுவர் ஐஸ் பேபி! என்று அழைத்தான்.
பூஜா அப்பொழுதும் அப்படியே இருக்க உனக்கு நான் எதுவும் மறந்து விட மாட்டேன். பூஜா பூஜா என பாருடி! உனக்கு ஒன்னும் இல்ல நான் வந்துட்டேன். என்று அவளை நெஞ்சுக்குள் அணைத்து கொண்டவன். நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
என்னப்பா செகண்ட் ஹீரோ! எல்லாம் பாய்ஞ்சுட்டு வந்து முன்னாடியே பிரியாவையும் பூஜாவையும் மாறி மாறி காப்பாத்துறாங்க! இந்த கதையோட ஹீரோ! இப்போ ஹீரோவா? இல்ல ஜீரோவா? அப்படின்னு நீங்க கேட்டா..
இப்பதான் ஹீரோ அரக்க பறக்க வந்துட்டு இருக்காரு. ஏன் அவரு லேட்டா வராரு? என்ன எப்பவும் ஹீரோதான் ஃபர்ஸ்ட்ல வரணுமா? அவன்தான் ஹீரோயினை காப்பாத்தணும்னு எதுவும் இருக்கா? இங்க என்னோட கதைல எல்லாமே ஹீரோ ஹீரோயின் தான்!
சதீஷ் அங்கிருக்கும் பீம் பாய்சை பார்த்து நீங்க மேலிருந்து மேல இருந்து தூக்க வேண்டாம். இதை உடைத்து விடுங்கள். என்று கூற
சரி என்பது போல் அவர்கள் அந்த வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஒரு சில நிமிடங்களில் அந்த மர பெட்டி ஒரு பக்கம் உடைய உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டே படுத்து இருந்தாள்.
இதன்யா தலையைப் பற்றி காதை பொத்திக்கொண்டு அமர்ந்து குறுக்கி கொண்டு சுருண்டு கிடந்தாள்.
சத்யஜித் வேகமாக இதன்யாவின் அருகில் சென்றவன்.
பாப்பா! பயப்படாத நான் வந்துட்டேன்! பாப்பா என்று சதீஷ் அழைக்க
இதன்யா அப்படியே நடுங்கிக் கொண்டே இருந்தாள்.
அபி வேகமாக அவளின் அருகில் வந்தவன் இதன்யா இதன்யா பயப்படாதடா! நாங்க இருக்கோம்! என்று சொல்லிக் கொண்டு அவளை பிடித்து தூக்க வந்தார்கள். அந்த நேரம் தன் சித்தார்த் அங்கு நுழைந்தான்.
சித்தார்த்தின் கண்கள் சுருக்கி கொண்டு அங்கு மயக்கத்தில் காருக்குள் இருக்கும் பூஜா மற்றும் பிரியா இருவரின் மீதும் பார்வை படிந்தது.
அவன் வேக நடையுடன் உள்ளே நுழைய..
அங்கே சதீஷ் மற்றும் அபி இருவரும் இதன்யாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவர்களை எழுப்பும் பொருட்டு மெதுவாக பேச்சு கொடுத்தார்கள்.
இதன்யா அசையாமல் படுத்துக் கொண்டிருக்க..
சித்தார்த் நேராக அவளின் அருகில் சென்றான். அவன் எந்த மாதிரியான நிலையில் இருக்கிறான். என அவனுக்கே தெரிய வில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு சூறாவளி இருக்கிறது.
இதன்யா என்று கர்ஜனையுடன் ஒரு அழைப்பு..
அவள் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான் இதன்யா!
இதன்யா என்று பெயரை மட்டுமே அழைத்தான்.
அவனுடைய கைகள் இரண்டும் அவளின் கன்னத்தை பிடிக்க வேகமாக.. அந்த நொடி அவன் மேல் தாவியவள் நெஞ்சுக்குள் பாதுகாப்பான இடம் கிடைக்குமா? என்று முகத்தை புதைத்துக் கொண்டாள் சித்தார்த்துக்கு உள்ளுக்குள் அத்தனை ரணமாக இருந்தது. ஆனால் அவனுடைய நடுக்கம் மட்டும் உள்ளுக்குள் குறைய வில்லை.
அபி ஹாஸ்பிடல் சென்று மேஜராக ஒரு செக் அப் செய்து கொள்ளலாம்! என நினைத்தான். ஏண் என்றால் மூவரும் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தார்கள்.
சித் அவளை அப்படியே தூக்கிக் கொண்டான். நேரா வண்டிய ஹாஸ்பிடல் விடுங்க என்று சொல்லிக் கொண்டே இதன்யாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
அப்பொழுதுதான் சாணக்யா ஒரு பாட்டில் தண்ணீருடன் மூன்று பாட்டில் தண்ணீர் மூவருக்கும் கொடுத்து பாஸ் கொஞ்சம் முகத்தில் தெளிச்சு விடுங்க! கொஞ்சம் தண்ணி குடிச்சா அவங்க பெட்டரா ஃபீல் பண்ணுவாங்க என சொல்ல..
அபிஜித் உடனே அதை அவமதிக்கும் விதமாக சிந்து தண்ணி கொடுடா எவ்வளவு நேரம் மூச்சு பிடிச்சு இருக்கான்னு தெரியல! கொஞ்சம் காத்தோட்டமான இடத்துக்கு கூட்டிட்டு போ! கொஞ்சம் நல்லா! என்று சொல்ல..
வெளியே நல்ல காத்தோட்டமான இடத்திற்கு அவளை அழைத்து வந்து இதன்யா என்று கைகளில் தாங்கிக் கொண்டிருந்தவன் அவளை காரின் முன் பகுதியில் சாய்த்து விட்டான். மணி மாலை ஆறை தாண்டி இருந்தது. அந்த தண்ணீர் பாட்டிலையும் முகத்தில் தெளித்து தெளித்து வட்டு அவளின் உதட்டில் தண்ணீரை கொஞ்சம் தொட்டு துடைத்து விட்டான்.
இதன்யா!..
இதன்யா! என அவளின் பெயரை தவிர்த்து அவன் புத்தியில் எதுவும் இல்லை.
கையில் இருக்கும் பொக்கிஸத்தை கை தவற விட்டிடுப்பான். ஆனால் இதற்கு யார் காரணம் என தெரிந்தால் அப்பொழுது கச்சேரி ஆரம்பம்.
இதன்யா என அழுத்தமான உயிரை ஊடுருவும் குரல்..
கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் அசைவு தெரிய அவளின் முகத்தை கொஞ்சம் சாய்த்து அவளின் முகத்தில் தண்ணீரை மெதுவாக தெளித்து விட்டவன்.
அவளின் மயக்கம் தெளிந்ததும் தண்ணீரை அவள் முன்னீட்டினான் மெதுவாக கண்களை திறந்தபடி முன்னாள் சித்தார்த் நின்று கொண்டிருந்தான்
இதன்யா ….?
தொடரும்..
கமெண்ட் போட்டு போங்க
EPI 336
இதன்யா என அழுத்தமான உயிரை ஊடுருவும் குரல்..
கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் அசைவு தெரிய, அவளின் முகத்தை கொஞ்சம் சாய்த்து அவளின் முகத்தில் தண்ணீரை மெதுவாக தெளித்து விட்டவன். இதன்யா! என மீண்டும் அழைத்தான்.
அவளின் மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தது.
சித் அவளின் ஒவ்வொரு முக மாற்றத்தையும் உள் வாங்கி கொண்டிருந்தான். அது அவளின் உயிர் வரை தொட்டது.
கண்களை இறுக்கி மூடி மெதுவாக திறந்தாள். முகத்தில் உள்ள நீர் அறும்புகளை துடைத்து விட்டான். மெல்ல மெல்ல இமை குடைகள் திறந்தது.
திக் பிரம்மை பிடித்தவள் போல அவனை வெற்று பார்வை பார்த்தாள்.
சித்தார்த் அவளின் கண்ணம் பிடித்து இதன்யா என அவளுக்கே சொந்தமான நேசத்தில் காதலில் குரல் கணீர் என ஒலிக்க ..
எதுவும் பேசாமல் அவனை பார்த்தவள். என்னை கீழே இறக்கி விடுங்க! என கூறினாள்.
ஆர் யூ ஓகே! என்ன டி எதும் பேச மாட்ற? என சித் அவளிடம் கேட்க..
ம்ம் பிளீஸ் கீழே இறக்கி விடுங்க! என சொல்லி கொண்டே முகத்தை திருப்பினாள்.
சரி ஒகே! ஓகே என மெதுவாக அவளை கீழே இறக்கி விட்டான். அடுத்த நொடி அவளின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
“இதன்யா!” என தாவி கொண்டு அவளை பிடிக்க செல்ல..
தட்டு தடுமாறி அவள் காரை ஒரு க்ரிப்புக்காக பிடித்து கொண்டு அம் ஆல் ரைட்! என அவன் முகத்தை கூட பார்க்காமல் மெதுவாக காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்து கொண்டாள்.
அந்த நேரம் பதட்டத்துடன் சதீஸ் மற்றும் அபி இருவரும் ஓடி வந்து என்ன டா பாப்பா எப்டி இருக்கு? என கேட்க..
சித் ஒரு பெரு மூச்சுடன் தெரில டா! என கோபத்தை கட்டு படுத்தினான்.
அபி வருத்தத்துடன் பிரியா பூஜா ரெண்டு பேரும் ரொம்ப அழராங்க என்னால ஹாண்டில் பண்ண முடியல..
பூஜாவுக்கு ஹாஸ்டலில் இன்பார்ம் பண்ணிட்டேன். பிரியா வீட்ல அவள் கீழே விழிந்துட்டா அப்டின்னு இன்பார்ம் பண்ணிருக்கு! ஹாஸ்பிடல் அப்டின்னா ரொம்ப பயந்திடுவாங்க அதனால் காலேஜ் கூட்டி போயிட்டு பிரியாவை அனுப்பி வச்சிட்டு பூஜாவை வீட்டுக்கு கூட்டி போறேன்.
அவங்க அழறாங்களா? என சித் கேட்க…
மம் ஆமா! இதன்யாவை கேட்கிறாங்க! கொஞ்சம் அவளை அவங்க கூட பார்க்க..என சொல்லி கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது. இதன்யா தான்
சதீஸ் கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்க.. அவன் பார்வையின் திசையை பார்த்த சித் ஒரு நிமிடம் அமைதியாக இதன்யாவை பார்த்தான்.
சதீஸ் நேராக அவளின் பக்கம் சென்றவன். பிரியா அங்கே அந்த காரில் இருக்கா! என சொல்ல…
இதன்யா கொஞ்சம் நடுக்கத்துடன் ஆனால் வெளியில் காட்டி கொள்ளாமல் சென்றாள்.
அவளை பார்த்த அடுத்த நொடி பாயிந்து வந்து பூஜா மற்றும் பிரியா இருவரும் கட்டி கொண்டார்கள்.
குண்டு உனக்கு ஒன் ஒன்னும் இல்லையே!.. என பிரியா விம்மி விம்மி அழ..
இதன்யா பூஜாவின் கன்னத்தை பார்த்து வலிக்குதா! என இருவரின் கன்னத்தையும் பிடித்து தொட்டு பார்த்தாள்.
பூஜா அழுது கொண்டே எங்களுக்கு என்ன நடந்ததுன்னு நியாபகம் இல்ல டி. பயமா இருந்துச்சு! என இருவர் கைகளும் நடுங்க..
இதன்யா உதட்டை கடித்து கொண்டு நான் நல்லாருக்கேன். பாருங்க! எனக்கு ஒன்னும் இல்ல! என அவர்களை அணைத்து கொண்டாள். அவர்களின் நடுக்கம் நன்றாகவே தெரிந்தது. கடத்தல்காரன் பேசிய அனைத்தும் காதில் மீண்டும் மீண்டும் கேட்டது.
போதும் இதுக்கு மேல இங்கே இருக்கிறது நல்லதுக்கு இல்ல! நம்ம கிளம்பலாம்! என சித் அவளை அழைக்க வர
அதற்குள் இதன்யாவே காரில் இருந்து இறங்கி வந்தாள்.
அவளின் பின்னால் பிரியா மற்றும் பூஜா இருவரும் இறங்கிய அடுத்த நொடி கால்கள் நடுங்க கீழே விழுந்தார்கள்.
அபி மற்றும் சதீஸ் பதட்டத்துடன் ஓடி வந்தார்கள். அவர்களை தூக்க..
பிரியா அழுது கொண்டே எதுக்கு இப்படி கால் நடுங்கிது? என இருவரும் ஒரு சேர கூறி கொண்டே மீண்டும் முயற்சி செய்ய மறுபடியும் தோல்வி தான்.
வீட்டுக்கு போலாம்! என சொல்லி கொண்டே பிரியாவின் வீட்டில் இளங்கோ – கலா இருக்கும் வீட்டில் போய் அவளை ஒரு female லெக்சரரை அழைத்து கொண்டு போய் விட்டு வந்தான். சதீஸ்.
அபி பூஜாவை வீட்டுக்கு அழைத்து வந்தான். அவளோ விடா பிடியாக ஹாஸ்டல் செல்கிறேன் என ஆட்டம் போட.. வழக்கம் போல அவளிடம் எரிந்து விழுந்தான். ஏன் என்றால் அபிக்கு பயமாக இருந்தது. மீண்டும் அங்கே விட்டு அந்த கடத்தல் காரன் வந்து தூக்கி சென்று விட்டால் என்ன செய்வது என்று பயம் தான்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல.. இதன்யாவிடம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
சித்தார்த் அவளிடம் எவ்வளவோ முறை பேச முயற்சி செய்தான். ஆனால் அவள் எந்த ஒரு எதிர் வினையும் செய்ய வில்லை.
சித்தார்த்துக்கு உள்ளுக்குள் ஒரே ரணமாக இருக்க ஏற்கனவே ஜக்கு பாயை விட்டு தேட சொல்லி இருந்தான். அந்த கடத்தல் கும்பலை..
ரிஷி மற்றும் ரோஸ்னி இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். இதன்யா அவளையே குறுக்கி கொண்டு அறையில் அடைந்து கிடந்தாள்.
சித்தார்த்துக்கு எந்த வேலையும் ஓட வில்லை. இந்த நிலையில் வீர சிம்மா பார்க்க வந்திருந்தார். சித்தார்த் மற்றும் அபி இருவரிடமும் பேச வந்தார்.
மாமா! என ரிஷி பதட்டத்துடன் வந்தான்.
சித் உயிர்ப்பு இல்லாத குரலில் அவள் மேலே இருக்கா! கொஞ்சம் பேசி பாரு ரிஷி! உன் கிட்ட அவள் பேசிவான்னு தோணுது! என சொல்லிவிட்டு அவன் அபியின் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி சென்றான்.
சதீசும் ஜக்கு பாய் கூட இந்த இன்வெஸ்டிகேசன் பற்றி விசாரிக்க சென்று இருந்தான்.
ரிஷி மற்றும் ரோஷ்னி இருவரும் அவளை பார்க்க மேலே செல்ல..
தனு!. என அழைத்து கொண்டே திறந்து இருந்த கதவை தட்டினான். ரிஷி.
அவனுடைய குரலை கேட்ட அடுத்த நொடி இதன்யாவின் கண்களில் நீர் முட்டி கொள்ள எழுந்து வேகமாக கால்கள் நடுங்க அவன் பக்கம் ஓடி வந்தாள்.
“சீனியர்!” என அவளின் கண்ணில் தாரையாக நீர் வழிய..
ரோஸ்னி அவளின் நிலையை பார்த்து ஒரு நிமிடம் கவலையுடன் பார்த்தாள்.
சீனியர்! என தேம்பி அவனுடைய கையை பிடித்து கொண்டு கேவி கேவி அழுதாள். அவனுடைய இரவல் தங்கை!.
ரிஷி கலங்கி போய் நாங்க இருக்கோம்! எதுக்கு இதன்யா நீ அழுகிற? என்ன மா! என அவன் கையை வருடி விட..
இல்ல சீனியர் எனக்கு அழனும் போல இருக்கு நான் அழுதுக்கவா? என அவள் விசும்பி கொண்டே கேட்க.. .
ம்ம் என ரிஷி ஒற்றை பதில் அளித்தான். அவ்வளவு தான் அவனுடைய கையை பிடித்து அழுதாள். அழுதாள்.. விடாமல் எவ்வளவு நேரம் என தெரிய வில்லை.
ரிஷி அவளை ஆசுவாச படுத்தும் பொருட்டு கண்ணை துடைத்து விட்டு தலையை வருடி விட்டான். ஒரு கட்டத்தில் அவனும் அழுதே விட்டான்.
ரோஸ்னி அவன் அழுவதை பார்த்து விட்டு இதன்யாவின் அருகில் அமர்ந்தாள். ஹே அழாத டி அண்ணா இருக்கான்! அவன் யாருன்னு கண்டு புடிச்சு அவனை இந்நேரம் தூக்கி இருப்பான். என சமாதானம் செய்தாள்.
இதன்யா அதன் பின் அழுகையை கட்டு படுத்தி கொண்டு நான் நான் நல்லாருக்கேன் என நகர. .
தனு உனக்கு என்ன வேனும்? சொல்லு! நான் மாமா கிட்ட சொல்றேன். இப்படி அழுகாத. என்னால தாங்க முடியல.. உங்க அண்ணா என்னய நம்பி தான் விட்டு போனாரு! நீ இப்படி . இது எதிர் பாராம நடந்த ஒரு விபத்து தான் நீ இதை நினைச்சு.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆனால் நீ தைரியமான பொண்ணு! என ரிஷி பேசி கொண்டிருக்க…
*
இங்கே சித்தார்த் அபியின் வீட்டு போர்ட்டிகோவில் இருந்து போனில் இமை வெட்டாமல் தன்னை தேடாமல் மற்றவரின் தோலில் ஆறுதல் தேடி கொண்டிருக்கும் தன் காதல் மனைவியை பார்த்தான். உள்ளுக்குள் துறுபிடித்த கத்தி இறங்கியது போல இருந்தது.
அவளின் அழுகை உள்ளுக்குள் பெரு வெடிப்பு கொள்கையை ஏற்படுத்த அப்படியே நின்றான்.
சித்தார்த்! என அழைத்து கொண்டே வீர சிம்மா வெளியே வர..
அவன் திரும்பி பார்த்தான். அந்த நேரம் பரபரப்புடன் கூடவே கட்டுகடங்கா கோபத்துடன் எல்லாத்துக்கும் காரணம் இவர் தான்! இவரால் தான் இது நடந்திருக்கு! என சொல்லி கொண்டே சதீஸ் வந்தான். அவன் பின்னால் ஜக்கு பாய் மற்றும் அவனுடைய ஆட்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
சித்தார்த் வீர சிம்மாவை போலவே வெற்று பார்வையுடன் இருக்க..
என்ன சொல்ற? என கேட்டுக் கொண்டே அபி வந்தான்.
அண்ணா! இதுக்கு எல்லாமே காரணம் அந்த பங்கணபள்ளி ல இருக்க சயந்தன் அந்த ஆளோட பையன் சதானந்தன் தான் பிளான் போட்டு தூக்கி இருக்கான்.
அப்படி பார்த்தால் உன்னையும் என்னையும் தான் எதுவும் செய்யணும்! எதுக்கு பிரியா, பூஜாவை தூக்கணும்? என அபி கேட்க..
சாணக்யா அவர்களின் முன் வந்து சில படங்களை நீட்டினான்.
நல்லா பார்த்துக்க! பிரியா, பூஜா, இதன்யா மூணு பேரையும் ஒரே காரின் நம்பர் பிளேட்ல தான் வந்து தூக்கி இருக்கான். பிரியாவை நான் விரும்புர விசயம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு! அப்போ நான் யாருன்னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கும். பூஜா வதினாவை நீ லவ் பண்றது கூட அவனுக்கு தெரியும் போல அது தான் தூக்கி இருக்கான்.
அப்போ சித்தார்த்? என அபி கேட்க..
அதை விடுங்க! என ஒற்றை பதிலுடன் முடித்து கொண்டான். சித்தார்த்..
என்ன டா சித்து இப்படி சொல்லிட்டு இருக்க? என ஆவேசத்துடன் சதீஸ் பேச வர.
ரொம்ப துள்ளாத! எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அபி நீ கிளம்பு இனி ஒரு நிமிடம் இங்கே இருக்க வேணாம்! நம்ம வீட்டுக்கு போலாம்! என வெகு இயல்பாக வீரா பேசி கொண்டிருக்க..
இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா டாடி!
வீரா எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருக்க..
சதீஸ் சிரித்து கொண்டே அவருக்கு நம்ம உயிர் தான் முக்கியம் இப்போ பிரியா பத்தி நான் சொன்னதுக்கு அவரு அதிர்ச்சி ஆகமா இருந்ததுக்கு காரணம். இந்த மாதிரி நடக்கும் அப்டின்னு அவருக்கு தெரியும். அவருக்கு தேவை நம்ம மட்டும் தான்! பிரியா முக்கியம் இல்ல..
என்ன டாடி! என அபி நேராக தன் தந்தையின் அருகில் வந்தான்.
அபி கிளம்பு! ஜக்கு பாய் இந்த சதீசை கைய காலை ஒடச்சு போட்டாலும் எனக்கு ஓகே தான் இவன் படுத்த படுக்கையாக கூட அங்கே வந்தால் எனக்கு நிம்மதி என வீரா சொல்லி கொண்டிருக்க..
நான் வர மாட்டேன் என ஒரே நேரத்தில் அபி மற்றும் சதீஸ் இருவரும் கத்தினார்கள்.
சித்தார்த் எந்த வெளிப்பாடும் இல்லாமல் ஒரு பெரு மூச்சுடன் வேடிக்கை பார்த்தவன். மாவா உங்க கிட்ட பேசணும்! என அழைத்தான்.
வந்து வச்சிக்கிறேன் என வீரா சித்தார்தின் பின்னால் சென்றார்.
பத்து நிமிடங்கள் கூட இருக்காது. வீரா சிம்மா கண்களில் ஒலியுடன் முகத்தில் எந்த வெளிப்பாடயும் காட்டாமல் வந்தார். அவரின் பின்னால் சட்டையை மடித்து கொண்டே சித்தார்த் வந்தான்.
அனைவரின் பார்வையும் அவர்களின் மேல் இருக்க
அபி வருத்தம் தோய்ந்த குரலில் டாடி பிளீஸ் நான் வரல! என கூற..
நீங்க ரெண்டு பேரும் வர வேணாம்! நான் இருக்கும் இடத்தில் இருந்து உங்களை கண்காணிப்பேன். ஆனால் அதுக்காக இந்த காதல், கண்றாவிக்கெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. அதையும் மீறி என்னை மீறி எதுவும் நடந்தது மொத்தத்தையும் என் தம்பி கொடுக்கு அஜய் பேருக்கும், சிலக்கம்மா பேருக்கும் மாத்தி வச்சுட்டு போயிட்டே இருப்பேன். என வீரா சொல்லி கொண்டிருக்க..
சித்தார்த் அவர் பேசி கொண்டிருக்கவே மாவா நான் கிளம்புறேன். என நடையிட்டான்.
அங்கு இருக்கும் அனைவரும் புரியாத புதிருடன் பார்த்து கொண்டிருக்க..
சாணக்யாவுக்கு மண்டையே வெடித்து விடும் அளவுக்கு குழப்பமாக இருந்தது.
அபி மற்றும் சதீஸ் இருவரும் பிடிவாதமாக இருக்க..
வீரா அனைத்து விவரமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
*
சித்தார்த் வெளியே வந்ததும் அவனுடன் ஜக்கு பாய், சாணக்யா என அனைவரும் வந்தார்கள்.
அவன் நேராக வீட்டுக்கு சென்றான். நாளையில் இருந்து புது படத்தின் ஷூட்டிங் ஆரம்பம். அதன் கூடவே முழு மூச்சாக பவர் ப்ராஜெக்ட் டெண்டர் பக்கம் கவனம். என ஸ்கெட்யுள் தயாராக இருந்தது. சதீஸ் மற்றும் ஜியா இவர்களுடன் இரவு மீட்டிங்.. மற்ற அனைத்து வேலைகளையும் சாணக்யா பார்த்து கொள்வான்.
சித்தார்த் நேராக வீட்டுக்குள் நுழைய..
ரோஸ் தன் அண்ணனை பார்த்தவள். கஷ்டம் என தலை அசைத்தாள்.
ரிஷி எழுந்து கொண்டு மாமா என அழைக்க..
இப்போ என்ன பண்றது? ரிஷி! என கேட்டான்.
அவள் ரொம்ப உடைஞ்சு போயிட்டா மாமா! பயம் எக்க சக்கம் என ரிஷி கூறினான்.
சரி நான் பார்த்து கொள்கிறேன் என மேலே ஏறினான்.
அறைக்கு வந்ததும் வழக்கம் போல பால் கணி பக்கம் எதையோ பறி கொடுத்தது போல அமர்ந்து இருந்தாள்.
சித் அவளின் அருகில் சென்றான்.
அவனை பார்த்ததும் எழுந்து நின்றாள்.
இப்போ உனக்கு என்ன வேணும்? என சித் கேட்க..
இதன்யா…?
தொடரும்..
கமெண்ட் போட்டு போங்க
EPI 337
அறைக்கு வந்ததும் வழக்கம் போல பால் கணி பக்கம் எதையோ பறி கொடுத்தது போல அமர்ந்து இருந்தாள்.
சித்தார்த் அவளின் மீது பார்வையை பதித்தான். கண்களில் கொஞ்சம் கூட உயிர்ப்பு இல்லை! முகத்தில் எதோ குறைகிறது. உதடுகள் துடிப்பு இல்லாமல் இருக்கிறது. எப்பொழுதும் துறு துறு என அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பவள் இன்று மிகவும் அமைதி.. இன்று மட்டுமா கிட்ட தட்ட நான்கு நாட்கள் மெளனத்தில் கொள்கிறாள். போதும் இதுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கணும்! என மனதில் சொல்லி கொண்டவன். சித் அவளின் அருகில் சென்றான்.
அவனை பார்த்ததும் எழுந்து நின்றாள்.
இப்போ உனக்கு என்ன வேணும்? என சித் கேட்க..
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
கேட்டதுக்கு பதில் சொல்லு! என கொஞ்சம் உருமினான்.
இதன்யா தலையை குனிந்து கொண்டே எனக்கு எங்க வீட்டுக்கு போகனும்!
சரி போ! என ஒற்றை பதிலுடன் முடித்தவன். நேராக சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
இதன்யா அதே இடத்தில் சிறிது நேரம் இருக்க..
சித்தார்த் போனை எடுத்து கொண்டு பால் கணி பக்கம் வந்தான்.
அவள் அந்த இடத்தில் இருந்து நகர போக அவளின் இடையுடன் வளைத்து பிடித்தவன். நெஞ்சில் சாய்த்து கொண்டு போன் பேசினான்.
தன்னிடம் அவளின் விலை உயர்ந்த கண்ணீர் முத்துக்களை நெஞ்சில் கொட்டி தன்னிடம் ஆறுதல் தேட வேண்டும். என ஒரு நப்பாசை.. ஆனால் அவளோ அப்படியே ஜடம் போல நின்றாள்.
சித்தார்த் போனில் கம்பீரம் குறையாமல் இப்போவே மேடம் கிளம்பராங்க! சோ கார் ரெடி பண்ணிடுங்க! இப்போ உடனே வருவாங்க என சொல்லி விட்டு போனை வைத்தான். அவள் அப்படியே இருக்க..
சித் ஒரு பெரு மூச்சுடன் அவளை விட்டு பிரிந்தவன். ம்ம் போலாம்! என சொல்லி கொண்டே அவளின் சோல்டர் பேக் மற்றும் ட்ரெஸ் பேக் என இரண்டையும் எடுத்து கொண்டு அவளை பார்த்தான்.
அவள் உடை மாற்ற சென்று ஒரு சில நொடிகளில் வந்தாள்.
சித்தார்த் அழைத்து கொண்டு கீழே வந்தான்.
சாரி! சாரி! அவன் யாரையும் அழைக்க வில்லை. அவன் பின்னால் அவள் வரவில்லை. அவளே இறங்கி அன்ன நடையுடன் வந்தாள்.
சித்தார்த் அவளுடைய இரண்டு பைகளையும் அங்கிருக்கும் பணியாளிடம் கொடுத்து விட்டவன். சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
இதன்யா அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவள் பாட்டுக்கு சென்று காரில் ஏறிக்கொண்டாள்.
சித்தார்த் அதே இடத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.
கார் கிளம்பும் சத்தம் கேட்டது அவ்வளவே இதன்யா அவளுடைய வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
இதோ அவள் சென்று கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலே ஆகிவிட்டது. ஆனால் எதுவும் மாறவில்லை வழக்கம் போல் சித்தார்த் அவனுடைய அனைத்து வேலைகளையும் செய்வான். படப்பிடிப்புக்கு செல்வான். சதீஷ் மற்றும் ஸ்டார்ஜியா இருவருடனும் மீட்டிங் நடக்கும். சாணக்யாவிற்கு வேலைகள், ஒரு பக்கம். கூடவே வீட்டின் நிர்வாகம், கல்லூரியின் நிர்வாகம், என அனைத்தையும் தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருந்தான். சித்
ரத்னகுமார் படம் நல்லபடியாக அனைத்து வேலைகளும் முடித்து இறுதி கட்டத்தை எட்டி இருந்தது. படம் ரிலீஸ் ஆக இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது. எந்த படமும் வராமல், கூடவே எந்த ஒரு விசேஷ நாட்களும் இல்லாமல் அனைவரும் சென்று பார்க்க கூடிய நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். என்பதே ரத்தினகுமாரினுடைய திட்டம். ஆகும். அதேபோல் அவர் காத்திருந்தார்.
இங்கே இதன்யா என்ன செய்கிறாள் பார்த்துவிடலாம்.
அவள் முதல் நாள் முகத்தில் ஏதோ ஒரு வித சோகத்துடன் தான் வீட்டுக்கு வந்தால் ஆனால் தன்னுடைய அம்மா அக்கா மற்றும் புதிய வரவாக வந்திருக்கும் தன் அக்காவின் மகன் என அனைவரையும் பார்த்து அந்த சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது.
புதிய வரவானவனுக்கு நிஜமாகவே ரிஷி என்று பெயர் வைத்திருந்தாள்.நிதன்யா.. பார்ப்பதற்கு அழகாக இருந்தான். அப்படியே நிதன்யாவை உரித்து வைத்திருந்தான். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முழுதாக முடிவடைந்திருக்கிறது. எப்பொழுதுமே தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை. அவன்மேல் எந்த நேரமும் பால் வாசனை.
நிதன்யா ஜாலியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்வாள். மொத்த வேலையும் தெய்வா தான் செய்வார். குழந்தை அப்பொழுது சினங்கும், பத்தாததற்கு வாரம் இரண்டு முறை அவளுடைய மாமியார், மாமனார் இருவரும் பார்க்க வந்து விடுவார்கள். ராஜபோக வாழ்க்கை என்று கூட சொல்லலாம்.
நிதன்யாவை அவளுடைய மாமியார் வீட்டில் அப்படி தாங்கி பார்த்துக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்து விட்டது. இன்னும் அவ்வளவு சந்தோஷம் நிதன்யாவின் கணவர் அவளை ஏற்கனவே கைக்குள் வைத்து தாங்குவார். இப்பொழுது குழந்தை பிறந்து விட்டது. இன்னும் சொல்லவா வேணும்? அவர் விருப்பப்பட்டு நிதன்யாதான் வேண்டும் என திருமணம் செய்து கொண்டார். குமார்.
இதன்யா வந்ததிலிருந்து எந்நேரமும் குழந்தை அவளிடம் தான் இருக்கும். எந்த வேலையும் நிதனியா செய்ய மாட்டாள்.
காலை முதல் மாலை வரை குழந்தைக்கு பால் கொடுக்க மட்டும் தான் வாங்குவாள். மற்றபடி ஃபோனும் கையுமாக தன் கணவனிடம் பேசிக் கொண்டிருப்பாள்..
இதையெல்லாம் பார்த்த இதன்யா முறைத்துக் கொண்டே, ஹே என்னடி மனசுல நினைச்சிட்டு இருக்க எப்போ பாரு போன் பேசிட்டு இருக்க. லவ்வர் கூட இப்படி பேச மாட்டாங்க! உனக்கு கைக்குழந்தை இருக்குடி அது மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா? பால் கொடுக்க மட்டும் தான் வாங்குற! என் தங்க ரிஷி பட்டு என்கிட்ட தான் அதிக நேரம் இருக்கான். நைட்டு தூங்கும்போது கூட நான் தான் வச்சிருக்கேன். உன் பையனோட பொன் முடி மூட்டை அதான் உச்சா துணி, காக்கா துணி மொத்தமா அம்மா தான் கிளீன் பண்றாங்க! நீ ஜாலியா நல்லா சாப்பிடுற! குழந்தைக்கு பால் கொடுக்கிற! அம்மாதான் குளிக்க வைக்கிறார்கள். நீ எப்ப டி இங்கிருந்து கிளம்புவ? உன்னால் அம்மாவுக்கு நிறைய வேலை! என்று இதன்யா கூறினாள்.
உடனே நிதன்யா கோபமாக “அப்போ நானும் என் பையனும் இங்க இருக்கிறது , உங்களுக்கு பிடிக்கலையா ? ”என்று உதட்டை சுழித்தாள்.
இதன்யா பதட்டத்துடன் என்னடி சொல்ற? எப்படி நான் அப்படி சொன்னேன்? உன்ன தான் சொன்னேன்! என் பையன நீ இங்கேயே விட்டுட்டு போயிடு! அம்மா வளத்துப்பாங்க! நீ தான் என் அம்மாவுக்கு வேலையா வைக்கிற!; உன் பையன் பொட்டாட்டம் இருக்கான். ஹான் இவன் உன் பையன் இல்லை. ரிஷி என்னோட பையன்! அழகன்! தங்கம்! என் செல்லகாரு! ரிஷிகாரு உங்க அம்மாவுக்கு எப்ப பாரு உங்க அப்பா நினைப்பு தான்டா! உன்கிட்ட அவ டைம் ஸ்பென்ட் பண்ணவே மாட்டேங்குறா! பாரு! சித்தி தான் உன் கூடவே இருக்கேன்! என்று பிறந்த குட்டியுடன் இதன்யா சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்க…
நிதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு கொண்டே ஹஹஹ! இதெல்லாம் உனக்கு தெரியாது. சின்னு. இருக்கிறதிலயே மோசமாக விசயம் இது தான். உங்க மாமா கூட இருக்கும்போது எப்படா இங்க வரலாம்னு தோணுச்சு. ஆனா என்னைக்கு இங்கே வந்தனோ ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம் கூட என்னால இங்க இருக்கவே முடியல டி! எப்போ டா உங்க மாமாவை பார்ப்பேன்னு இருக்குது. பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாரு? தனியா சமைச்சு சாப்பிடணும்! அதைவிட அவருக்கு துணி துவைக்கவே பிடிக்காது. பாவம் மனுஷன் சரி அப்படியே இருந்தாலும் கூட, பாத்திரம் விளக்கி சுத்தமா பிடிக்காது. என்ன பண்றது? என்று அவள் பெருமூச்சுடன் நின்றாள். .
ம்ம் வாஷிங் மெஷின் வாங்க வேண்டியது தானே? என்று இதன்யா கேட்க..
அது பணம் என்ன மரத்திலயா காய்க்கிது? இப்பதானே என் பையன் பிறந்து இருக்கான். இனிமே போய் தான் எல்லாத்தையுமே வாங்கணும். வீடு ஷிப்ட் ஆகணும். ஆனா என் மாமனார் மாமியார் ரெண்டு பேரும் அங்க போக விட மாட்டேங்கிறாங்க!
ஏன் என்னாச்சு என இதன்யா கேட்க..
நிதன்யா உதட்டை பிதுக்கி என்னோட மாமனார் மாமியார் என் பையன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுமாம்! அது தான் அவங்களோட பேரன் கூட இருக்கணும்! ஆனா எனக்கு இங்க இருக்கவே புடிக்கல! உங்க மாமாவை நான் உண்மையாவே ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொன்னவள். அதை வெளிக்காட்டு கொள்ளாமல் உடனே வேகமாக அங்கிருந்து வெளியே சென்றாள்.
இதன்யை குழந்தையை தூக்கி சாம்பிராணியில் காட்டியவள். தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு மெதுவாக அந்த பிஞ்சு முதுகை நீவி விட்டு கொண்டிருந்தாள்.
அவளுடைய எண்ணத்தில் நிதன்யா இப்பொழுது சொல்லிக்கொண்டு சென்ற விஷயங்கள் தன் ஓடிக்கொண்டிருந்தது.
*
சித்தார்த்தை பார்க்க ரிஷி வந்திருந்தான். அவர்களுக்காக வாங்கப்பட்ட தனி வில்லாவில் தான் ரிஷிம் ரோஷினியும் இருக்கிறார்கள்.
ரிஷி ராஜ் குடும்பத்தின் தொழிலை ஏற்று நடத்த ஆரம்பித்து இருந்தான். அவ்வப்பொழுது சந்தேகம் மற்றும் குழப்பங்கள் ஏதாவது இருந்தால், சித்தார்த்திடமும் ஸ்டார்ஜியாவிடமும் கேட்டுக்கொள்வான். அனைவருடைய வாழ்க்கையும் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் சித் – இதன்யா..
இங்கே ரிஷி பிசினஸ் விஷயமாக இப்பொழுது சித்தார்த்தை பார்க்க வரவில்லை.
தனிப்பட்ட விஷயமாக பார்க்க வந்திருந்தான்.
சித்தார்த் வேலையில் கவனம் செலுத்தி கண்டே சொல்லு ரிஷி என்ன? எதுவும் பிரச்சனையா? என்று கேட்க..
அத நான் தான் மாமா உங்ககிட்ட கேக்கணும்? என்ன பிரச்சனை? என்று ரிஷி கேட்டான்.
சித்தார்தின் பார்வை ரிசியின் மீது பட..
ரிஷி ஒரு பெருமூச்சுடன் இதன்யா ஊருக்கு போய் 15 நாள் ஆகுது. இன்னும் அவளை நீங்க கூப்பிடவே இல்ல! கூடவே நீங்க அவகிட்ட பேசுறது இல்லையாமா? என்ன ஆச்சு? என்ன விஷயம்? சொல்லுங்க மாமா என்று கேட்டான்.
என்ன பேச சொல்ற ? என்று சித் கேட்டான்.
ரிஷி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தவன்.
என்ன மாமா இப்படி ஒரு பதிலை சொல்றீங்க? என்ன பேசுறதா? அவ எப்ப வருவான்னு கேளுங்க? என்று ரிஷி சொல்ல ..
சித்தார்த் எலன புன்னகையில் என்கிட்டயே ஊருக்கு போறேன்னு சொன்னவளுக்கு, ஊருக்கு போய் சேர்ந்ததும் , எனக்கு போன் பண்ணி சொல்லணும்னு , ஒரு எண்ணம் இருக்குதா? சாரி இருந்ததா? இதுவரைக்கும் நான் ஊருக்கு போய் சேர்ந்துட்டேன்! அப்படின்னு ஒரு போன் கூட எனக்கு பண்ணவே இல்ல அவளை அப்படி இருக்கும்போது , நான் எதுக்கு அவளுக்கு போன் பண்ணனும் சொல்லு என்று கேட்டான்.
மாமா இப்படி முரண்டு பிடிச்சிட்டு இருக்காதீங்க! பொண்ணுங்க கிட்ட நாம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்! என்று ரிஷி சொல்ல
சித்தார்த்தின் கூர்மையான பார்வை அவனை தொலைத்து. ஓ சாரி மிஸ்டர் ரிஷி எனக்கு அட்வைஸ் கொடுக்க தான் இங்க வந்தீங்களா என்ன என்று கேட்டான்.
மாமா சாரி மாமா! நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்! சரி அவளை எப்போ இங்க கூட்டிட்டு வர போறீங்க? என்று கேட்க
சித்தார்த் அதற்கு என்ன பதில் சொல்வான்?
நீங்க என்ன எதிர்பார்க்கிறிங்க கமெண்ட் பண்ணுங்க
தொடரும்..
நாளை பார்க்கலாம்!
Commant pannunga ratings konjam like abd share..
EPI 338
சித்தார்த்தின் கூர்மையான பார்வை அவனை தொலைத்து. ஓ சாரி மிஸ்டர் ரிஷி எனக்கு அட்வைஸ் கொடுக்க தான் இங்க வந்தீங்களா என்ன என்று கேட்டான்.
மாமா சாரி மாமா! நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்! சரி அவளை எப்போ இங்க கூட்டிட்டு வர போறீங்க? என்று கேட்க
நானா? நான் எதுக்கு கூட்டிட்டு வரனும்? என சித் அவனுடைய வேலையை தொடர்ந்தான்.
என்ன இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க? நீங்கதான் அவளை போய் கூட்டிட்டு வரணும்! என்று ரிஷி கூற..
என்னை கேட்டு அவ ஒன்னும் போகலையே! என சித்தார்த் கைகளை மேஜையின் மீது தாளம் தட்டிக் கொண்டே அவனைப் பார்த்தான்.
ரிஷி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
சித்தார்த் அவனை பார்த்து “நீ டென்ஷனாகாத ரிஷி! அவளுக்கு எப்போ இங்க வரணும்னு தோணுதோ, எப்போ என்னை பாக்கணும்னு தோணுதோ! அப்ப வரட்டும்! அவளுக்கு வரவே தோணாம இருந்தா? அங்கேயே அவங்க அம்மா கூட இருக்கட்டுமே! இதுல என்ன தப்பு இருக்கு? என்று புருவத்தை உயர்த்தி கொண்டே அவனைப் பார்த்தான்.
அப்போ உங்களுக்கு அவளை பாக்கணும்னு தோணலையா மாமா என்று கேட்டான்.
சித்தார்த் அமைதியாக இருக்க,
கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மாமா! என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டே கேட்டான்.
ரிஷி அவனை பார்க்க..
தோணுது நிறைய தோணுது இப்போ அதுக்கு என்ன பண்றது என்று சித்தார்த் கூற..
நீங்க அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணாம இருந்தா, அவளுக்கு எப்படி மாமா தெரியும்? என்று ரிஷி கூறினான்.
சித்தார்த் எகத்தாள பார்வையுடன் அவளுக்கு என் மனசுல என்ன இருக்குன்னு நல்லாவே தெரியும், நான் பீலிங்க எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன் அப்டின்னு உனக்கு யார் சொன்னது? நான் வெளிய எப்படி வேணாலும் இருப்பேன். ஆனா, அவகிட்ட இந்த சித்தார்த் வேற மாதிரி இருப்பான். அது மத்தவங்க கிட்ட ஷோ பண்ணனும்னு, எனக்கு ஒன்னும் அவசியமில்லை. என்னோட ஃபீலிங்ஸ் என்னன்னு அவளுக்கு புரியும்! அந்த அளவுக்கு என்ன புரிஞ்சு வச்சிருக்கிறவளா இருந்தா அவளே என்னை தேடி வரட்டுமே! என்று கூறினான்.
இதே மாதிரி அவளும் நினைச்சா என்ன மாமா பண்றது? என்று ரிஷி சொல்ல
சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு அவளோட ஃபீலிங்ஸ் எனக்கு புரிந்ததினால் தான், என்ன வேணும்னு கேட்டேன், உடனே வீட்டுக்கு போகணும்னு சொன்னா, நான் அவளை அனுப்பி வச்சேன். அவ்வளவுதான்! என்னோட விஷயத்துல நான் கரெக்டா இருக்கேன்! சோ யாரும் என்ன வந்து கேள்வி கேட்கிற இடத்தில நான் இல்ல! ஆனா, அவளுக்கு அது புரிய மாட்டேங்குது. ரொம்ப சைல்டிஷ்ஷா பிகேவ் பண்றா! கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல! என்ற குற்றம் சாட்டிக் கொண்டிருக்க….
உங்களுக்கும் அவளுக்கும் வயசு வித்தியாசம் என்று ரிஷி சொல்ல வர
சித்தார்த்தின் பார்வை அவனை கூறாக துளைக்க..
மாமா அது அது அப்படி இல்ல மாமா என்று ரிஷி பயந்து கொண்டு இருக்க..
பற்களை கடிககும் சத்தம் கேட்டது. அவன் தான் சித்தார்த் என்னும் புத்த ராட்சசன். ரிஷி கிட்ட நான் உன் மேல பயங்கர கோபத்தில் இருக்கேன்! அதனால தயவு செய்து போயிடு! இல்லன்னா? ரோஷினிக்கு அவளோட புருஷன் அதுவும் காதல் கணவன் இருக்க மாட்டான்னு தோணுது. என்று தன்னுடைய விரல் நகத்தை பார்த்துக் கொண்டே அதை நோண்டிக் கொண்டும் கூறினான்.
ரிஷி ஒரு நிமிடம் பயந்தவன். மாமா! சாரி மாமா! நான் தெரியாம சொல்லிட்டேன்! அது அப்படி சொல்ல வரல..
அவ மெச்சூரிட்டி இல்லைன்னு சொன்னீங்கல்ல! அதுக்கு சொல்ல வந்தேன். மத்தபடிக்கு எனக்கு இதன்யா பத்தியும் தெரியும், உங்களை பத்தியும் தெரியும் என்று ரிஷி தண்ணீரை விளக்கம் கொடுக்க
நான் உன்னை கிளம்புன்னு சொல்லி ஒன் மினிட் 3 செகண்ட்ஸ் ஆகுது. இப்போ படுக்கையை ரெடி பண்ணும் போலயே! SPR ஹாஸ்பிடல் போறியா? இல்ல VSA ஹாஸ்பிடல் போறியா? என்று சித்தார்த் புருவத்தை சுருக்கிக் கொண்டே அவனைப் பார்த்த..
ரிஷி பெருமூச்சுடன் விட்டால் போதும் என்று ஓடிவிட்டான்.
அவன் சென்றால் சில மணி நேரங்களில் சித்தார்த் பிரியாவை பார்க்க கிளம்பினான் சொல்லுங்க சார் என்ன விஷயம் என்று பிரியா கேட்க..
உன்ன உடனே மீட் பண்ணனும் என சித் சொல்ல..
நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாமா என்று பிரியா கேட்டாள்.
சித்தார்த் யோசித்தான்.
காலேஜ்ல மீட் பண்ண முடியாது நான் உன்னை மீட் பண்றது யாருக்கும் தெரியக்கூடாது. என்று சித் கூறினான்.
பிரியா யோசனையுடன் எதுக்கு சித்து அப்படி சொல்றீங்க என்று கேட்க
அது அப்படித்தான் நீ உங்க வீட்டு அம்மா நம்பர் அப்படி இல்லன்னா டாடி வேற யாரோட போன்லையாவது எனக்கு கால் பண்றியா? இனிமேல் உன்னோட நம்பர்ல எனக்கு கால் பண்ணாத அதான் அவாய்ட் பண்ணிக்கோ என்று சித்தார்த் கூறினான்.
என்ன சித்து? எதுவும் பிரச்சனையா என்று பிரியா கேட்க
பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல நான் சொல்றத மட்டும் செய் என்று சித்தார்த் கூறினான்.
சரி இப்பவே அம்மா மொபைல்ல இருந்து வரேன் என்று பிரியா வேகமாக அவளுடைய அம்மா எண்ணில் இருந்து அழைத்தாள்.
என்ன விஷயம் என்று கேட்க
சித் ஒரு பெருமூச்சை விட்டு அன்னைக்கு என்ன நடந்ததுன்னு ஒன்னு விடாம சொல்லு! என்று கேட்டான்.
பிரியா வரிசையாக அன்று நடந்த விஷயம் அத்தனையும் கூட சித்தார்த்துக்கு ஒன்று புலப்பட்டது.
இதன்யா அப்பொழுதே தன் அக்காவின் குழந்தையை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள். அதனால் அவள் சென்றதில் 50 சதவீதம் முன்னால் இருக்கும் எண்ணங்கள் மட்டுமே! மீதி 50 சதவீதம் தான் இங்கு கேள்வி குறி???
அது பிரியா சொன்னதில் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. இருந்தாலும், உள்ளுக்குள் கண்ணாடி உடைந்து நொறுங்கியது போல் மனம் வலித்தது. அது தன் மீது சந்தேகமாக இருக்க கூடாது. என நினைத்து கொண்டான். உடனே அவன் அவளிடம், சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? என்று சித்தார்த் கேட்க
சொல்லுங்க சித்தூ! என்ன பண்ணனும்? என்று பிரியா கூற
நாளைக்கு பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட்ல AHOD ய போய் நீ பாரு, ஹான் நீயும் பூஜாவும் சேர்ந்து பாருங்க! அவர் ஸ்கெட்ச்ர் கிட்ட கூட்டிட்டு போவாரு! உங்கள கடத்தின ஆள் யாருன்னு அங்க அடையாளத்தோட நீங்க சொல்றீங்க! சரியா? என்று கேட்க..
சரி சித்து என்று பிரியா பதிலளிக்க
இன்னொரு விஷயம் என்று சித் மீண்டும் அவளை அழைத்தான்.
என்ன சொல்லுங்க சித்து.
ஆமா நீ அங்க கடத்தப் பட்டு அந்த லாஜிஸ்டிக்ஸ் குடோனில் போய் விடும் போது அங்கே பூஜா, இதன்யா ரெண்டு பேரும் இருந்தாங்களா? என்று கேட்டான்.
இல்லையே நான் வரும்போது அவங்க இருந்ததா எனக்கு ஞாபகம் இல்லை!நான் மயக்கத்தில் இருந்தேன். என்று கூறினாள்.
சரி ஓகே என்று அவன் போனை வைக்கப் போக..
உடனே ப்ரியா ஒரு நிமிஷம் சித்து.
என்ன விஷயம்?
ஆமா இப்போ இதன்யா ஊர்ல இருக்காலே! உங்களுக்கும் அவளுக்கும் இதுவும் சண்டையா? அவ கோச்சுட்டு போயிட்டாளா ? பெரிய பிரச்சனையா? உங்களை விட்டுட்டு போயிட்டாளா? என்று கேட்க
சித்தார்த் புன்னகையை சிந்தினான்.
அட சொல்லுங்க சித்தூ! எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு! அந்த கிட்னாப்பர் பேசினது தான் என்னோட மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கும்! அதே போல எங்க மூணு பேரு மேல அந்த பார்சல் பெட்டி விழுகும் போது உயிரே போன மாதிரி இருந்தது. அது நடந்து கொஞ்ச நேரத்தில் அதுலயும் இதன்யா எழுந்து நடந்ததுதான் ஆச்சரியமே? என்று பிரியா விதிர்விதித்து கொண்டே கூற
சித்தார்த் ஒரு பெருமூச்சியை விட்டவன். நான் அவ்வளவு சீக்கிரம் உன் பிரண்ட விட்டுட்டு போயிடுவேன்னு நீ நினைக்கிறாயா? என்ன? என்று கேட்டான்.
அதுதான் சித்து! என்னோட சித்து என்று பிரியா அவனுடைய ரசிகையாக பேச..
சித்தார்த் அதே தான் கோகுல பிரியா! அவளை எது நடந்தாலும் நான் விடமாட்டேன். என் கண்காணிப்புல தான் அவ இருப்பா! நீ ஒன்னும் பயப்படாத ப்ரியா! தைரியமா இரு! எதுவா இருந்தாலும் இனி நான் இருக்கேன்! என்று கூறினான்.
எனக்கு இன்னொரு சந்தேகம்?
இப்போ என்ன?
இதன்யாவை தூக்கினவன், எதுக்கு எங்க ரெண்டு பேர்யும் தூக்கணும்? நானும் பூஜாவும் என்ன பண்ணனும்? என்று அவள் கேள்வியாக கேட்க
சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு இதனை சதீஷ் கிட்ட தான் கேட்கணும். என்று கூறினான்.
அவனா? அவனுக்கு என்ன அவனே ஒரு பொடி பையன்! அவனா வீரமா வந்து காப்பாற்றுவான்? பொடிப்பையன் என்று அவனை ஏளனமாக பேசினாள்.
சரி சரி பத்திரமா இருமா நாளைக்கு கரெக்டா பாரு என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அதன் பின் சித் நேராக அபியின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்றான்.
பூஜா தனித்துவிடப்பட்டவள் போல் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு தன்னையே சுருக்கிக் கொண்டாள்.
இங்கு இருக்க சுத்தமாக விடுக்க பிடிக்கவில்லை. ஆனால் அபி அதிகாரம் செய்து அவளை தக்க வைத்து தங்க வைத்துக் கொண்டிருக்கிறான்.
அவர்களுடைய காதலை அதாவது அபியோட காதல இன்னும் பூஜா கிட்ட சொல்லல! அதை எப்ப சொல்லுவானோ அவனுக்கு தான் தெரியும்.
சதீஷ் அபியின் பின்னால் சுற்றிக்கொண்டே அண்ணா நீ நிஜமாவே அன்னிய அவ்வளவு லவ் பண்றியா? உன்னோட காதல் நீ அப்படியே பறந்து அன்னிய தூக்கும் போது பார்த்தேன் என்று கேட்க
நானா? நான் எதுக்கு அவளை லவ் பண்ணனும்? என்று மீண்டும் பழையபடி முருங்கை மரம் ஏறிக்கொண்டான்.
சரி இது இப்படியே போகட்டும் முக்கிய விஷயத்திற்கு வரலாம்.
சித் நேராக வீட்டுக்குள் வர,
டேய் சித்து என சதீஷ் அழைத்தான்.
பாப்பா வந்துட்டாளா என்று அபி கேட்க
இல்லை என்பது போல் உதட்டை பிதுக்கியவன் பூஜா ?. என்று கேட்டான்
அவ உள்ள இருக்கா என்று அபி பதில் சொல்ல..
சரி நான் போய் பேசிட்டு வரேன் என்ற நேராக பூஜாவின் அழைக்க சென்றான்.
அபி பின்னால் தொடர..
நீதான் லவ் பண்ணலாம்னு சொன்னல்ல! இப்போ எதுக்கு சித்தார்த்த பாலோ பண்ற ? என்று சதீஷ் சொல்ல..
இதுக்கெல்லாம் காரணம் என்ன ? யாரு? மகனே நீ தான்டா என்று அபி உதைத்துவிட்டு பூஜாவை பார்க்க சென்றான்.
பூஜா உள்ள வரலாமா என்று சித் கேட்க
வாங்க சார் என்று உடனே எழுந்து அமர்ந்தாள்.
உன்கிட்ட சில விஷயம் விசாரிக்கணும் என்று கூற பிரியாவைப் போலவே பூஜா அனைத்து விஷயத்தையும் கூறினாள்.
உடனே சித்தார்த் அவளிடம் சரி மா வேற ஏதாவது வேற ஏதாவது வித்தியாசமா ? உனக்கு தோணுச்சா? கொஞ்சம் யோசிச்சு சொல்லு பாக்கலாம் என்று சித்தார்த் மீண்டும் கேட்க..
பூஜா மண்டையை கசக்கி யோசித்தாள்.
சொல்லுமா! எதுவும் தெரிந்ததா? பொறுமையா யோசி! ஒன்றும் அவசரம் இல்ல , ரெண்டு நாள் கூட எடுத்துக்கோ. வேற ஏதாவது வித்தியாசமா நீ பாத்த நினைப்பு வந்தால்! என்கிட்ட சொல்லு என சித்தார்த் எழுந்து செல்ல போக
சார் ஒரு நிமிஷம் என்று பூஜாவுக்கு அழைத்தாள்.
சொல்லு ? என்ன மா?
சார் அது பார்க்க அவனோட இடது கண்ணுல அந்த கண்ணு வித்தியாசமா இருந்துச்சு என்று பூஜா கூற..
புரியல என்ன என்று சித்தார்த் கேட்க
அது நமக்கு ரெண்டு கண்ணுமே I mean ஒன்னு ப்ளாக் கலர்ல இருக்கும் அப்படி இல்லன்னா! பிரவுன் கலர்ல இருக்கும். ஆனா, அந்த என்ன எங்களை கடத்தினவனோட கண்ணுல நான் நான் வந்து ஒரு கண்ணுல வலது கண்ணுல மட்டும் ஒரு பழுப்பு நிறமாக பார்த்தேன்.
அதாவது அவனோட ஒரு கண்ணில் மட்டும் பழுப்பு நிறத்தில் இருந்துச்சு! அதாவது உடனே பார்த்தா தெரியாது உத்து பார்த்தால் தெரியும் என்று பூஜா கூறினாள்.
அப்படியா என்று சித்தார்த் எதையோ யோசித்தவன் சரி நீ ரெஸ்ட் எடு எதுக்க..
பயப்படாத நான் இருக்கேன் என்று கூறிவிட்டு கிளம்பினான்.
*
ரிஷி படுத்ததாக சதீஷ் பிரியா உடனே ஸ்ரீ தன் இரண்டு மூன்று நாட்கள் போக ரிஷிக்கு அழைத்தாள்.
சொல்லு பிரியா என்று அவன் பதிலளிக்க ..
ரிஷி லூசு ஆமா என்ன அமைதியா இருக்க சித்தார்த் வேற இன்னும் இதன் ஞாபக இங்கு கூட்டிட்டு வரல எனக்கு ரொம்ப லோன்லியா இருக்கிற மாதிரி இருக்கு ஆமா உன் பையன பாக்க போகலையாடா? என்று பிரியா கேட்க
என்னோட பையனா? என இன்று ரிஷி திகைத்துப் பார்த்தான் டேய் நடிக்காத நிதன்யா அக்காவுக்கு குழந்தை பிறந்துருச்சு! அதுவும் பாரு! உன் பேரைத்தான் பையனுக்கு இருக்கு. நீ பார்க்க போகலையா என்று கேட்க
அது அனைத்தையும் கேட்கக் கூடாத இரண்டு காதுகள் கேட்டது.
ஹே உன் கிட்ட கேட்டேன் நான் எதுக்குடா இதையெல்லாம் சொன்ன? என்று ரிஷிகோ உணர்ந்து கொண்டே கூற..
என்னடா என்ன டீ போட்டு கூப்பிடுற எவ்வளவு கொழுப்பு இருக்கும்? இருடா உன்னை என் அடையாள கிட்ட சொல்றேன் என்று சொல்ல
ஆமா இப்ப ஒன்னும் பிரயோஜனம் இல்ல! என் அடியாளு இங்க ஆக்டிவேட் ஆயிருச்சு. இனிமே மொத்த வலையும் என்ன தான் பண்ண சொல்ல போற ? என்று ரிஷி சொல்ல
என்ன என்று பிரியா அதிர்ச்சியுடன் கேட்டால்
ஆமா ரோஷினி எல்லாத்தையும் ஸ்பீக்கர் போட்டு கேட்டுட்டு இருக்கா! அப்படி இல்லன்னா, கால் ரெக்கார்டிங் போய் பார்க்கிறா! அவளுக்கு போகுது எதுக்கு ப்ரியா இப்படி பேசி! என் வாழ்க்கையே பிரிக்கிறதுக்கு வரிங்க? என்று ஒரு கவலை கொண்டான்.
சரி அதை விடு அவளுக்கு நீ வேலை செஞ்சு கொடு இல்ல முட்டி போட்டு கால அமுக்கிவிடு அது எனக்கு தேவையில்லை இதன்யாவை எப்படிங்க கூட்டிட்டு வரது? அதுக்கு ஏதாவது யோசனை பண்ணியா என்று கேட்க அதற்கு
ரிஷி ஒரு பெருமூச்சியை விட்டவன் அது அவளே தான் வரணுமாம்! மாமா அவளை கூட்டிட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டார். என கூறினான். சித்
அப்படியா சரி நீ போய் அப்படியே உன் பையன பார்த்துட்டு, வா! இதன்யா உடனே கிளம்பி வருவா என்று பிரியா சொல்ல
ஏண்டி இப்படி எல்லாம் என்னை டார்ச்சர் பண்றீங்க? என ரிஷி மீண்டும் நொந்து போனான்.
டேய் உன் பொண்டாட்டி கிட்ட எவ்வளவு அடி வாங்குவியோ! வாங்கிக்கோ.. ஆனா தயவு செய்து, நீ போய் இதன்யா பார்த்துட்டு வந்தினா அடுத்த நிமிஷம் இதன்யா அவளால் அவள் அங்க இருக்க முடியாது. சித்துவ பாக்காம அவளால இத்தனை நாள்தாக்கு பிடிச்சதே பெரிய விஷயம்! நீ வேணா போய் பாரேன்! அவ நோஞ்சா கொழி மாதிரி தான் இருப்பான் அந்த நோஞ்சான் ஓடி அங்க போய் உட்கார்ந்துகிச்சு.
இங்க இருக்கும்போது குண்டு குண்டுன்னு தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருந்தா! இப்போ எப்படி இருந்தாலும் , தெரியல! சூம்பி போன மாதிரி இருப்பா! தயவு செய்து நீ போய்விடு போயிட்டு, உன் பையன பாத்துட்ட அவள கூட்டிட்டு வா என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.
ரிஷி பிரியா சொன்னதை போலவே இதன்யாவை பார்க்க கிளம்பினான்.
அதுவும் சித்தார்த்துக்கு தெரியாமல்…. சென்றான்.
தொடரும் .
சோ இதன்யா வருவாளா?
இங்கே ஸ்கெட்ச் படத்தில் சித்தார்த்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? அது அப்படி இருந்தாலும் கூட சித் அப்படியே முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறான்? அதுக்கு காரணம் என்ன?
கமெண்ட் போட்டு போங்க!
EPI 339
சித்தார்த், நவ்யா, மேகா என மூவர் கூட்டணியில் ரத்னகுமார் டைரக்ஷனில் ஒரு வித்தியாசமான கதைகலத்துடன் முதன் முதலாக சித்தார்த் நடித்த இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று முறைகளில் ரிலீசாகி இருந்தது.
அது நேரடி தமிழ் படம் அதாவது படமாக்கப்பட்ட மொழி தமிழ் தான். படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்க.. முதல் மூன்று நாட்களை படம் வெற்றிகரமாக கடந்திருந்தது. அனைத்து பக்கங்களிலும் சித்தார்த்துக்கு நேர்மறையான கருத்துக்கள், அதே போல் நவ்யாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள். என ஒரு பக்கம் வந்து குவிந்து கொண்டிருக்க..
அந்த நேரம் படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் படத்தினுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது? மக்கள் எப்படி படத்தை கொண்டாடுகிறார்கள் என்று அனைத்து நடிகர்களை போலவும் ரத்ன குமாரும் யோசித்து வைத்திருக்க..
அந்த விசயத்தை சித்தார்த் கிட்ட கூறினார். ம்ம் எந்த ஊருக்கு போய் பார்க்கலாம் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க? என்று ரத்னகுமார் கேட்க..
எனக்கு ஐடியா இல்லை! உங்க விருப்பம் சித்தார்த் அவரை பார்த்தான்.
மூணு இடம் யோசிச்சு வச்சிருக்கேன். நான் உங்களுக்கு சாய்ஸ் கொடுக்கிறேன்! அதுல நீங்க வாங்க பிக் பண்ணிடுங்க என்று ரத்தினகுமார் சொல்ல..
அப்படியா சொல்லுங்க பார்க்கலாம்? எந்த ஊர்? என்று கேட்டான்.
ரத்னகுமார் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு ஃபர்ஸ்ட் சென்னை, செகண்ட் திண்டுக்கல் , மூணாவது ஈரோடு என்று கூறினார்.
அப்படியா சரி நம்ம திண்டுக்கல் போகலாம் என்று சித்தார்த் கூற..
திண்டுக்கல்லா? ஹான் என தீவிரமாக யோசிக்கும் முக பாவனையை காட்டி ம்ம் அப்போ சென்னை பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று ரத்தினகுமார் கேட்க..
அப்போ ஓகே சென்னையில் போலாம் என்று சித்தார்த் கூறினான்.
சென்னை ரொம்ப பக்கத்திலேயே இருக்கு கொஞ்சம் தூரமா போனா தான் நல்லாருக்கும். ம்ம் ஈரோடு கரெக்டா இருக்கும்ன்னு எனக்கு தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று ரத்னகுமார் கேட்க
சித்தார்த் அவரை துலைப்பது போல பார்த்தான். ரத்னகுமார் தனது பாவனையை சரி செய்து கொண்டு, இப்போ என்னாச்சு? எதுக்கு அப்படி பாக்குறீங்க? கேட்டதுக்கு பதில் சொல்லுங்க? போகலாம்னு சொன்னா! போகலாம்.. மிம்மம் வேண்டாமா அப்போ இங்கேயே பார்த்துக்கலாம்! நானும் உங்களை கம்பெல் பண்ணல! சும்மா ஜஸ்ட் என்னோட சஜஷன் சொன்னன்! அவ்வளவுதான்! என்று ரத்னகுமார் தோலை குலுக்கினார்.
அப்படியா அப்போ சரி போலாமா! என்ற சித் சொல்ல..
போலாமா என்று ரத்னகுமார் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய..
சித்தார்த் ரத்தினகுமாரை தீவிரமாக பார்த்தான். எதுக்கு இப்படி பாக்குறீங்க? என்று ரத்தினகுமார் மீண்டும் கேட்க..
நீங்கள் பண்றது ரொம்ப அபத்தமா நடிப்புன்னு பச்சையா தெரியுது! யார் சொன்னது? இந்த சதீஷ் தான! என சித்தார்த் கேட்க..
அது சதீஷ் இல்ல என்று ரத்தினகுமார் தயங்க .
அப்போ வேற யாரு? என்று சித்தார்த் புருவம் சுருக்கி பார்க்க..
உங்களோட பிரதர் இன் லா மிஸ்டர் ரிஷி தான் சொன்னாரு என்ற ரத்தன குமார் கூறினார். .
எதார்த்த தீவிர யோசனைக்கு பிறகு சரி அங்கேயே போகலாம்! என்று சித் சொல்ல..
சரி ஓகே என்று புன்னகையுடன் ரத்தினகுமார் திரும்பினார்.
ஒரு நிமிஷம் என்று சித் சொல்ல..
சொல்லுங்க என்று அவர் கேட்டார்.
ஆமா இப்போ ரத்னகுமார் சார் எதுக்கு ஈரோட்டை செலக்ட் பண்ணீங்க? அங்க போய் நம்ம படம் மட்டும் பார்க்க போறோமா? இல்ல.. வேற ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா? என்று பொடி வைத்து கேட்டான் சித்தார்த்..
ரத்னகுமார் சிரித்துக்கொண்டே எனக்கென்ன ப்ரோக்ராம் இருக்க போகுது! உங்களுக்கு தான் நிறைய புரோகிராம் இருக்கணும்னு நினைக்கிறேன்! என்று இரட்டை அர்த்தத்தில் பேச..
என்ன சொல்றீங்க என்று சித் மீண்டும் கோபத்துடன் பார்க்க..
எதுக்கெடுத்தாலும் இந்த புருவத்தை சுருக்குவதற்கு மட்டும் கத்து வச்சிருக்கீக இப்போ இதன்யா எப்படி இருக்குதோ! தெரியல! என்று சொல்ல..
சித்தார்த் முகம் இப்பொழுது இருட்டாக மாறியது.
ரத்ன குமார் ஒரு பெருமூச்சியை விட்டுக் கொண்டே இப்படி இருக்காதீங்க! நல்லாவே இல்ல! உங்க கிட்ட ஏதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்கு! ஜஸ்ட் போங்க உங்களுடைய வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. ஆனால் இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாம இருந்தா, பின்னாடி அது பெரிய பிரச்சனை தான் போய் முடியும்! அந்த பொண்ணு பேசாம இருந்தால் என்ன? நீங்க போய் பேசணும்! நாம பேசினா ஒன்னும் குறைந்தபடமாட்டோம் என்று ரத்தினகுமார் கூற..
சித்தார்த் பெருமூச்சை விட்டு ம்ம் பேசி சலிச்சு போச்சு என்று கூறினான்.
ரத்னகுமார் சிரித்து கல்யாணமே வந்துட்டா வெட்கம் , மானம், சூடு, சொரணை இது எல்லாத்தையும் மறந்து மனையாள் காலில் சரணடைய வேண்டும். என கூற..
சித் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
ரத்னகுமார் சித்தார்த்தின் தோலின் மேல் தட்டி கொடுத்து, கவலை படாதீங்க.. எல்லாமே சரியாயிடும் சரி நாளைக்கு நீங்க அவைலபிளா? என்று கேட்க
இன்னிக்கி கூட போகலாம்..
ரத்ன குமார் சிரித்து கொண்டே அது “men will be a men”
சரி நாளைக்கு பாக்கலாம் என்று என்று ஏதாவது சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். அவன் கிளம்பிய அடுத்த நொடியில் ரத்னகுமார் சதீஷ்க்கு அழைத்தார்.
என்ன சொன்னாரு ஓகே வா! என சதீஷ் கேட்க..
ஹான் அதெல்லாம் ஓகே சொல்லிட்டார். ஆனால் எனக்கு ஒன்னு மட்டும் புரியல என்று ரத்னா கேட்க..
என்ன விஷயம் சொல்லுங்க! என சதீஸ் கெட்க..
அது நீங்க ஏன் ரிஷின்னு எதுக்கு சொல்ல சொன்னீங்க? நீங்களே இந்த பிளான் பண்ணீங்கன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே! என ரத்ன குமார் கேட்க..
சதீஷ் பெரு மூச்சுடன் நான்தான் இதை பண்ணனும்னு சித்தார்த்துக்கு தெரிஞ்சா! வந்து என்னை உதைப்பான்! அதுக்கு தான் நான் ரிஷிய கோர்த்து விட்டேன். அவன் சித்தார்த் வீட்டு மருமகன். அவளை எல்லாம் எதுவும் பண்ண மாட்டன். ஆனால் நானு! நான்தான் இவனுக்கு தொக்கு!
இதைக் கேட்டதும் ரத்னகுமார் சிரித்துக்கொண்ட சரி ஒன்னும் பிரச்சனை இல்ல! ஆனா அந்த தியேட்டருக்கு எப்படி இதன்யாவை வர வைக்க போறீங்க? என்று கேட்க..
அதற்கு என்ன பண்றது. என சதீஷ் ஒரு மூச்சை விட்டு ஹான் அதுக்கு தான் ரிஷி அங்கிருந்து எதனால் பார்ப்பதற்கு போறான்.
அப்படியா அவரு போவார இன்று ரத்ன குமாரர் கேட்க..
அப்படி போகலன்னா நான் தான் ஏதாவது பண்ணியாகணும் என்று சதீஷ் வந்து கொண்டார்.
ரத்னகுமார் சிரித்துக்கொண்டே சரி நல்லது தானே பண்றீங்க! நீங்க பண்றதுல சித்தார்த் இதன்யா ரெண்டு பேரும் சேர்ந்தா போதும்! என்று சொல்லி போனை வைத்தார்.
*
இங்கே இதண்யா அப்படியே இருந்தாள். அவளுடைய சிந்தையில் சித்தார்த் தான் ஒவ்வொரு நிமிடமும் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தான். எதற்கு நான் அவன்கிட்ட பேசாம வந்தேன். அப்போ கடத்தல்காரன் சொன்னதெல்லாம் நீ நன்பர? உன் புத்தாவை பற்றி எனக்கு தெரியாதா? என்று ஒரு மனம் சொல்ல… இருந்தாலும் அந்த கடத்தல் காரன் சொன்னது எல்லாமே உண்மைதான! அவரு நம்மள ஊர் அறிய கல்யாணம் பண்ணலையே! என்று இன்னொரு பக்கம் சொல்ல..
நீதானே ஊர் அறிய கல்யாணம் பண்ண வேணாம்னு சொன்னே! அதனாலதான் அவர் பண்ணல.. அதேபோல நீதான் சித்தார்த்தா ஒப்பந்த கல்யாணம் பண்ணிக்கிட்ட! சித்தார்த் வந்து ஏமாத்தலையே! இது காதலை தாண்டி கல்யாணத்தை கடந்த பந்தம். இப்படி எவனும் ஒரு பொண்ணு மேல பாசம் வைத்திருக்கிறவே மாட்டான். என மறுபடியும் அவன் மேல் பாசம் வந்து ஒட்டி கொண்டது.
இல்ல இன்னொரு மரமும் அப்புறம் எதுக்கு எவனோ ஒருத்தன் கிட்ட நம்மள வச்சு பெட் கட்டி இருக்கிறார். நாம அவருக்கு என்னவா இருக்கோம்? என்று இன்னொரு முறை யோசனை எல்லா காரணத்தையும் தேடி தேடி மனதை ஆறுதல் படுத்தி கொண்டாள்.
இது எல்லாம் ஒப்புக்கு என அவள் மனதில் ஓடிக்கொண்டிருககும் முக்கியமான விஷயம் அன்று அந்த கடத்தல் காரன் கடத்தி செல்லும் போது எதிர் திசையில் நவ்யா மற்றும் சித்தார்த் இருவரும் அவளுடைய காரில் சென்றது தான்.
அதை ஒரு துளி கூட அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவளின் சிந்தையில் அது மட்டும் வந்து கொண்டே சென்றது.
கிட்டத்தட்ட அவளின் வீட்டுக்கு வந்து 20 நாட்களுக்கு மேல் இருக்கும். அவன் சித்தார்த்தை அணு அணுவாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவனிடம் பேசாமல் தடுப்பது நவ்யாவின் நினைவுகள் மட்டுமே! அவளுடன் அன்று செல்லாமல் இருந்து இருக்க என்னோட போன் எடுத்து பேசி இருப்பாரு! கண்டவன் கிட்ட நான் அவமான பட்டிருக்க தேவையில்லை. என கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அவள் வெளியே வந்ததும் கூட அவளின் காதில் கேட்ட சத்தங்கள் அனைத்தும் சதீஸ் மற்றும் அபியின் குரல் மட்டும் தான். அது அவளுக்கு சம்பட்டியில் அடித்ததை போல இதயத்தில் வலியை கொடுத்தது.
இதற்கு தீர்வு என்ன தான் முடிவு? அது இதன்யாவை தான் கேட்க வேண்டும்.
இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற? என ஒரு மனம் கேட்க.. அவளுக்கு அதற்கான விடை தெரிய வில்லை. அவனிடம் பேசாமல், அவனுடைய ஸ்பரிசம் தீண்டாமல், அவனுடைய அரவணைப்பு இல்லாமல் வாடிய கொடி போல வதங்கி போனாள் பாவை.
கொடியை மீட்க வருவான் புத்தா! இதோ தூதுவன் வந்து விட்டான். வேறு யார் நம்ம ரிஷி தான்..
நியாபகம் வருதே நியாபகம் வருதே என்பதை போல் ஒவ்வொரு நிமிடமும் உணர்ச்சி குவியலில் தவித்து கொண்டிருந்தான். ரிஷி!
ஆம் நிதன்யாவை பார்க்க போகிறான். வழக்கம் போல அவள் போனும் கையுமாக இருக்க..
இதன்யா தன்னுடைய அக்கா மகனை கொஞ்சி முதுகை வருடிக் கொண்டே சுற்ற..
உள்ளே இருந்து தெய்வா சத்தமாக குரலில் ஹே சும்மா சின்ன பையனை தூக்கி வச்சுட்டு இருக்காத அப்புறம் கை சூடு தெரிஞ்சுகிட்டதும் சினுங்கிட்டே இருப்பான் சின்னு என கத்தினார்.
அட போ மா! நான் என் பையன கீழ விடவே மாட்டேன். என அவள் சொல்லி கொண்டிருக்க.. .
ஒரு நிமிசம் என் கிட்ட கொடு என ஒரு குரல்..
அவள் புருவம் சுருக்கி திரும்பி பார்க்க.. அங்கே ரிஷி சிரித்த முகத்துடன் நின்றான்.
சீனியர் ! அண்ணா! ரி!.. ரிஷி அண்ணா என அவள் சிரித்து கொண்டே சொல்ல..
யாரடி! யார் கிட்ட பேசிட்டு இருக்க? என கேட்டு கொண்டே வந்தார் தெய்வா!
ஆன்டி நான் ரிஷி! என்னை நினைப்பு இருக்கா?
அடடே ரிஷி தம்பி உங்களை எப்டி தெரியாம போகும் என தெய்வா உற்சாகத்துடன் அவனை உபசரிக்க ஆரம்பிக்க .
ரிஷி அந்த லட்டு குட்டியை ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தான்.
என்ன இந்த பக்கம்? என அவள் கேட்க..
சொல்றேன் என்பது போல தலை ஆட்டியவன். முதலில் தெய்வா கொடுத்த டீயை வாங்கி குடித்து கொண்டிருக்க அவர் உள்ளே சென்றதும் பேச்சை ஆரம்பித்தான்.
அதற்கு முன் இதன்யாவின் முன் சினிமா டிக்கெட் வைத்து நீட்டினான்.
என்ன இது என்று அவள் கேட்க..
நீ டப்பிங் கொடுத்த படம்! அது தான் நம்ம மாமா நடிச்ச படம் சூப்பர் ஹிட்! நல்ல கமெண்ட்ஸ் வந்திருக்கு! ஈரோட்டில் மகாராஜா தியேட்டரில் டிக்கெட் வாங்கி இருக்கேன். அங்கே போனால் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்லி கொண்டிருக்கவே அப்பொழுது தான் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள். நிதன்யா
அங்கே அமர்ந்திருந்த ரிஷியை பார்த்ததும். அவள்???
நாளை இதன்யா – சித்தார்த் மீட்டிங்.
தொடரும்..
கமெண்ட் போட்டு போங்க
EPI 340
ரிஷி அவளின் முன் சினிமா டிக்கெட் நீட்டினான்.
என்ன இது என்று அவள் கேட்க..
நீ டப்பிங் கொடுத்த படம்! அது தான் நம்ம மாமா நடிச்ச படம் சூப்பர் ஹிட்! நல்ல கமெண்ட்ஸ் வந்திருக்கு! ஈரோட்டில் மகாராஜா தியேட்டரில் டிக்கெட் வாங்கி இருக்கேன். அங்கே போனால் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்லி கொண்டிருக்கவே அப்பொழுது தான் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள். நிதன்யா
என்ன சர்ப்ரைசா? என இதன்யா கேள்வியுடன் அவனை பார்க்க..
இல்ல அது நீ டப் பண்ண பார்ட்டை தியேட்டரில் பார்க்கும் போது கிடைக்கும் சர்ப்ரைஸ் என எழுந்து நின்றான். ரிஷி..
என்னாச்சு சீனியர்? என இதன்யா திரும்பிப் பார்க்க அங்கே நிதன்யா நின்று கொண்டிருந்தாள்.
அங்கே அமர்ந்திருந்த ரிஷியை பார்த்ததும். அவள்??? நிதனியா அதே இடத்தில் அதிர்ச்சியுடன் பார்த்தால் ரிஷி அவளை பார்த்ததும் எழுந்து நின்ற நிதி என்று அழைத்தான்.
நிதன்யாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
உடனே இதன்யா ரிஷியிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு குடைய முன் வர, அதற்குள் தன் அக்கா வந்ததும் அனைத்தையும் அப்படியே உள்ளே மென்று முழுங்கிவிட்டு, அந்த சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கும் பொருட்டு “அக்கா நம்ம சீனியர்!”என்று தெரியாதவனை அறிமுகப்படுத்தி வைப்பது போல கூறினாள்.
அவள் வேகமாக வந்தவள், கொஞ்சம் திக்கிக்கொண்டே சீ!.. சீனியர்ர்!.. சீனியர் நல்லா இருக்கீங்களா? என்று தயங்கிக் கொண்டு கேட்க..
நான் நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க? உன்னோட பயனா என்று ரிஷியன் பார்வை மொத்தமும் குழந்தையின் மேல் இருக்க..
ஆமா என்று ஒற்றை பதிலுடன் முடிக்கற்றையை காதுக்கு ஒதுக்கினாள்.
ரிஷியன் பார்வை இதன்யாவின் மீது பட்டு தனு குழந்தையை அசால்ட்டா தூக்குற? உனக்கு தூக்க தெரியுமா? என்று சிரித்துக் கொண்டே கேட்க
அதெல்லாம் தூக்க தெரியும்! எப்பவுமே அவங்க அம்மாவை விட இவன் என்னிடம் தான் ஒட்டிக்குவான்!
சரி பேர் என்ன வச்சிருக்கீங்க என்று ரிஷி கேட்க..
அது ரிஷி என்று இதன்யா சொல்ல..
நிதன்யா தலையில் அடித்துக் கொண்டு நாக்கை கடித்தவள். கண்களை மூடிக்கொண்டு அது சாமிக்கு வேண்டுன பேரு! அதனால ரிஷின்னு வச்சிருக்கேன்! பொண்ணா பொறந்தா ரிதன்யானு வெச்சிருப்பேன்! ஆனால் பையன் அதனால ரிஷி என்று தலையை குனிந்து கொண்டே கூறினாள்.
ஏனோ இந்த பெயரில் உள்ளுக்குள் புது ரத்தம் பாயத்தான் செய்தது ரிஷிக்கு… ஆமாம் தன்னை காதலித்தவள்! அவளுடைய மகனுக்கு தன் பெயரை வைத்திருக்கிறாள்! அப்போ இதுதான் உயிரைக் கொடுத்து காதலிக்கிறதா? என்று கேள்வியுடனும் கிண்டலுடனும் அந்த புன்னகை வெளிப்பட்டது. மற்றபடி அதில் வன்வமோ, காதலோ எதுவும் இல்லை தூய்மையான அன்பு மட்டுமே. முன்பொரு காலத்தில் நிதன்யா தன்னை உருகி காதலித்தவள். ரிஷியும் அதேபோல் தான் அவள் அவனுடைய மனதில் நிதன்யாவுக்கு என்று எப்பொழுதும் ஒரு இடம் இருக்கிறது.
ஆனால் இப்பொழுது அன்பை மட்டுமே கொண்டிருக்கிறாள் நிதன்யா.
சரி ரொம்ப நல்லது என்ற விஷயம் பார்வை நிதனியாவின் மீது பட
அவள் குழந்தை பெற்றுடுத்து கண்ணங்கள் கொஞ்சம் குண்டாக்க கண்கள் எல்லாம் கொஞ்சம் உள்ளே போய் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாள் ஆனால் அதுவும் அழகாகவே இருந்தாள்.
சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் ரிஷி.
இதன்யா உடனே அப்புறம் உங்க மெசேஜ் எப்படி இருக்காங்க என்று அடுத்த பேச்சை இருவருக்கும் உணர்த்தி ஆரம்பித்து வைத்தாள்.
நிதன்யா சிரித்துக் கொண்டே ஆம எப்படி இருக்காங்க ரோஷினி என்று கேட்க
ரிஷி நல்லா இருக்காங்க வீட்ல இருக்காங்க என்று கூற கூட்டிட்டு வந்திருக்கலாமே என்று நீ நிதனியா சொல்ல …
கூட்டிட்டு வந்திருந்தேன் இந்நேரம் என்னை கிழிச்சு தொங்க போட்டுருப்பா! என்று ரஷியன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அதற்குள் தெய்வா சாப்பிட அழைக்க சாப்பிடுற நான்டி கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன் என்று ரிஷி சொல்ல
சரி என்று அவரும் பொதுவாக சில விஷயங்களை விசாரித்துவிட்டு உள்ளே சென்றான்.
அந்த நேரம் குழந்தை உற்சாகும் ஒன்றும் இரண்டும் ஒட்டுக்காக போட அம்மா இவன் மறுபடியும் ஒன்னுக்கு ஊத்திட்டான் என்று இதன்யா க்கத்தl .
வெளியே கூட்டிட்டு வா ஒரு தடவை கழுவி தான் படுத்து துணி கட்டணும். அப்பதான் அவனுக்கு வெடுக்குன்னு இருக்கும் .என்று தெய்வா சொல்லிக் கொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு இதன் யாவும் தெய்பாவும் வெளியே செல்ல..
இப்பொழுது அங்கே நிதன்யா மற்றும் ரிஷி இருவரும் மட்டுமே இருந்தார்கள்.
என்ன பேசுவது என்று தெரியவில்லை ரிஷி ஆரம்பித்தான். நீ சந்தோஷமா இருக்க ! அதை உன்னை பார்க்கும் போது எனக்கு தெரியுது! அதனால நான் என்னைக்கும் சந்தோஷமா இருப்பேன்! என்று ரிஷி கூற..
ரோஷினி ரொம்ப கொடுத்து வச்சவ என்று நிதன்யா சொல்ல
ரிஷி அவளைப் பார்த்து பெருமூச்சை விட்டான்.
நிதன்யா தயக்கத்துடன் நான் எதையும் உங்க கிட்ட சொல்லல
நீங்களும் எதையும் எக்ஸ்பிரஸ் பண்ணல சொல்லாத வரைக்கும் எல்லாமே நல்லபடியா தான் போச்சு. இப்பவும் உங்களுக்கு ரொம்ப அடாவடியான கண்மூடித்தனமான ஒரு காதல் கடிச்சிருக்கு, அதனால ரோஷினி கூட நீங்க சந்தோஷமா வாழுங்க நான் நல்லா இருக்கேன்; எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று கூறினாள்.
தெரியும் என்று அவன் ஒற்றை பதிலளிக்க..
சரி என்று அப்படியே அமர்ந்திருந்தாள்.
இருந்தாலும் சாரி என்ற ஒரே நேரத்தில் இருவரும் சொல்லிக்கொள்ள..
எதற்கு என்று அந்த மௌனத்திற்கு தெரியும் பதில் அந்த மௌனத்தில் இருக்கிறது.
இருவரும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு அதன்பின் இதன்யா வர இயல்பாக பேசிக்கொண்டே சென்றார்கள்.
நிதன்யா மிகவும் சாதாரண தொணியில் ய என்ன திடீர்னு இதன்யாவை பாக்குறதுக்கு வந்தீங்களா? இல்ல என்ன பாக்கறதுக்கு வந்தீங்களா? என்று அவள் எப்பொழுதும் போல் பேச
ரிஷி சிரித்து கொண்டே நான் இதன் ஞாபகப்படுத்த தான் வந்தேன்! என்று கூறினான்.
அப்படியா என்று நிதனியா கேட்க
ஒன்னும் இல்ல எங்க காலேஜ் படம் பண்ணி இருக்காரு சோ எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்து குடுத்தாங்க! அதை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.
நிதனியா அபூர்வம் சுருக்கி என்ன படத்துக்கு டிக்கெட் அதுவும் இவ என்ன விஐபியா ? இவல படம் பாக்குறதுக்கு இங்க வந்து டிக்கெட் கொடுத்துட்டு போறீங்க? இது ஒன்னும் நம்பற மாதிரி இல்லையே? என்ற துருவி கேள்வி கேட்க
ரிஷி இதன்யாவிற்கு புரை ஏறியது க்கும் இதையெல்லாம் இந்த விஷயம்! நான் எல்லாத்தையும், இவகிட்ட சொல்லிட்டு இருக்காங்க ஏற்கனவே நான்தான் எப்ப தக்காளி தொக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு இருப்பா. இப்போ இன்னும் சந்தேகத்தோட என்னை பாப்பா, டேய் என்று இதன்யா நினைத்துக் கொள்ள .
ரிஷி பொறுமையாக சாப்பிட்டு தண்ணீரை குடித்தவன் அது அப்படி இல்ல நிதி இதன்யா அந்த எங்க காலேஜ் ஓட ஸ்கூல் இருக்கு பாத்தியா அதுல ஒரு பெரிய போஸ்டிங்கில் ஒர்க் பண்றா! அதனால டீச்சர்ஸ்க்கு எல்லாத்துக்குமே டிக்கெட்ஸ் கொடுத்தாங்க! நீ இங்கே எனக்கு குழந்தை பிறந்து இருக்கிற விஷயம் தெரிஞ்சது அந்த டைம்ல எனக்கு கல்யாணமா போச்சு! என்னால பாக்க வர முடியல! உன்ன பாத்து கூட கிட்டத்தட்ட காலேஜ் படிச்ச டைம்ல பார்த்தேன். அதுக்கப்புறம் இப்பதான் மீட் பண்றேன். அதனால பாத்துட்டு அப்படியே டிக்கெட் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன். ஏன்னா இது வந்து கூப்பன் டிக்கெட் அந்த ஸ்கூல்ல காலேஜ்ல இருக்குற ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேனேஜ்மென்ட்க்கு ரொம்ப நெருக்கமா இருக்குறவங்களுக்கு , இந்த கூப்பன் டிக்கெட் நான் கூட படம் பாத்துட்டேன் என்று ரிஷ்சி சொல்ல உடனே நிதன்யா சிரித்துக் கண்டே பின்ன நீங்க டாக்டர் அண்ணன் ஆச்சே என்று நிதன்யா சொல்ல
உடனே தெய்வா எதுவோ ஞாபகம் வந்தவராக ஆமா கண்ணு! பாப்பா எப்படி இருக்குது? அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா? ரோஷினி கண்ணு எப்படி இருக்குது? என்று கேட்க
எல்லாரும் நல்லா இருக்காங்க ஆன்ட்டி என்று ரிஷி கூறினான் . .
ரிசியின் பார்வை நிதன்யாவின் மீது இருக்க..
சொல்லுங்க சொல்லுங்க சீனியர் என்று நிதன்யா கேட்க
அவளை விடு அவ ஏதோ என்னமோ பண்ணிட்டு இருக்கா இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்கா! அவளோட லைஃப்ல நான் தலையிடுவதில்லை! நான் உண்டு, என் வேலை உண்டு, இப்ப நான் தனியா வந்துட்டேன். எனக்கு எங்க தாத்தா பிசினஸ் எடுத்து நடத்த சொல்லி சரியான டார்ச்சர் அதனால அதுல கவனம் செலுத்திட்டு இருக்கேன். என ரிஷி கூற..
எப்படியோ கொஞ்சமாவது மாறி இருக்காங்களா ஆக்டர் மேகா!
இல்ல அப்படியே தான் இருக்காங்களா என்று நீ தனியா கேட்க ரிஷி உதட்டை பிதுக்கினான்
சரி ஓகே எல்லாமே அப்படியே இருக்க! எதுவும் மாறல என்று அர்த்தமுடன் சொல்லி கொண்டார்கள்.
போதும் நீ கண்டதை யோசிச்சிட்டு குழந்தையை பத்திரமா பாத்துக்கோ! உங்க ஹஸ்பண்ட் வரும்போது சொல்லு, இன்னொரு நாள் நான் வரேன். கூடவே ரோஷணியும் கூட்டிட்டு வரேன். என்று கூறினான்.
ஓகே என்று நிதன்யா சொல்ல
இதன்யா மெதுவாக அனைத்து உணவுகளையும் சாப்பிட முடித்தாள்.
அந்த நேரம் ரிஷிக்கு வழி அனுப்பி வைக்க வெளியே வர..ரிஷி இதன்யாவை பார்த்து கட்டாயமாக நீ படத்துக்கு போகணும். உன்னோட முதல் பெரிய பட்ஜெட்டில் நீ ஒரு வேலைய கச்சிதமா கரெக்டா பண்ணி இருக்க; அதனால அதை கண்டிப்பா நீ பார்க்கணும்! போவியா என்று ரிஷி புருவத்தை சுருக்கி கொண்டு கேட்க
கட்டாயமாக போறேன்! ஆனால் என்ன ரெண்டு டிக்கெட் மூனு் மூணு நாலு டிக்கெட்ஸ் கொடுத்து இருக்கீங்க என்று இதன்யா கேட்க
உங்க மாமாச்சி, உங்க அத்தை, பனிமலர், குழலன், உங்க அக்கா, குட்டி பையன் எல்லாரையும் கூட்டிட்டு போ என்று ரிஷி சிரித்துக் கொண்டே கூற..
அட போங்க சீனியர் நீங்க வேற என்று இதன்யா சொல்ல
இத்தனை நாள் மாமாவ பிரிஞ்சு இருந்துட்டல்ல எப்படி என்று கேட்க
இவ்வளவு நேரமும் சிரித்த முகம் உடனே சோகத்தை தத்தெடுத்து கொண்டது
ரிசி பெருமூச்சுடன் அப்பா;!! உங்க கிட்ட எதுவுமே கேட்க முடியாது. அவரு பாம்பை விட சீறி ட்ரேகன் நெருப்பை கக்கர மாதிரி பாக்குறாரு. நீயே சோகக்கடலில் மூழ்க, உங்களுக்கு நடுவுல நாங்க தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். என கூறினான்.
நீங்களா என இதன்யா கேட்க..
ஆமா பிரியாவோட போனை நீ எடுக்கவே மாட்டிக்கிறியாமா? அவ என்ன என் தலை உருட்டுறா! அவளால எனக்கும் ரோஷினிக்கும் பயங்கர சண்டை என்ற ரிஷி பேசிக் கொண்டிருக்க..
அந்த நேரம் நிதன்யா வந்தாள்.
சரி சரி நான் கிளம்புறேன் மறக்காம படத்துக்கு போயிடு! நாளைக்கு மதியம் ஷோ என்று ரிஷி சொல்ல .
சரி சரி என்று இதனியா கூற..
சரி பாய் என்று ரிஷி சொல்ல..
போயிட்டு கண்டிப்பா போன் பண்ணுங்க என்று இதன்யா கூறினாள்.
சரி என அவன் இரு பெண்களிடமும் விடைபெற்று விட்டு அந்த குழந்தை இன்னொரு முறை பார்த்துக் கொஞ்சி விட்டு சென்றான்.
அவனுக்கு குழந்தையின் மேல் ஆசை வந்துவிட்டது. இனிமேல் ரோஷினியின் பாடு…படாத பெரும்பாடு தான்.
பார்க்கலாமே எல்லாமே அன்பு தொல்லை மட்டும்தான்..
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது இங்கே வீட்டில் பரபரப்புடன் நிதன்யா கிளம்பி கொண்டு இருந்தாள்.
காலையிலேயே கிளம்பிட்ட? நீ நேரமே குளிக்கவே மாட்டியே? நான் தான் உன்னை குளி குளின்னு தள்ளுவன்! இன்னிக்கி முன்னாடியே கிளம்பி நிற்கிற? என்ற இதன்யா கேட்க
அதுவா குழந்தைக்கு சொட்டு மருந்தும் வாக்சினும் போடணும்; இன்னிக்கு டேட் வந்துடுச்சு அதனால நான் இங்க ஜிஎச் கூட்டிட்டு போயிட்டு வரணும் அதனால நான் கொலை நல்ல ஜிஹெச் போறேன். நானும் அம்மாவும் போறான் வரதுக்கு லேட்டாகும். என்று நிதன்யா கூற..
வரதுக்கு லேட்டாகுமா? ஏன் ?என்ன லேட்? என்று இதன்யா கேட்க
நான் தான் சொல்றேன் கொஞ்சம் இன்னிக்கு லேட் ஆகும். நானும் கொஞ்சம் செக் பண்ணிட்டு வரலாம்னு பார்க்கிறேன்! அம்மாவையும் செக் பண்ணனும் என்று அவள் கூறினாள்.
சரி என்னமோ பண்ணு என்று இதன்யா சொல்ல சரி நாங்க போயிட்டு வரோம் என்று நிதன்யா வெளியே வந்தாள்.
அந்த நேரம் லோகேஷ் போன் செய்தான்.
ஹலோ அண்ணி என்று லோகேஷ் அழைக்க..
சொல்லுங்க எப்படி இருக்கீங்க என்று நிதன்யா கேட்க
நான் நல்லா இருக்கேன் தம்பிய பார்க்க வரலாம்னு ஒரு பிளான் ஊருக்கு வந்திருக்கேன். என்று சொல்ல வர..
உடனே அவள் லோகேஷ் இல்ல நீங்க இப்போ நேரத்துல தான் வந்து இருக்கீங்க இதன்யா இங்கதான் இருக்கிறா! ஏதோ படம் ரிலீஸ் ஆயிருக்குதாமே டிக்கெட் இருக்கு அவள கூட்டிட்டு போயிட்டு வாங்க! ஈரோடு என்று சொல்ல..
லோகேஷ் கண்களில் இரண்டு ஹார்ட்டின்கள் பறந்தது. அப்படியா இதன்யா வந்திருக்காங்களா? என்று ஆவலுடன் கேட்டான்.
ஆமா நீங்க வந்து இருக்கீங்கன்னு எனக்கு ஏற்கனவே தகவல் வந்துடுச்சு. அதனால நானும் அம்மாவும் தம்பிக்கு வேக்சின் போடறதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கோம். அவ படத்துக்கு கிளம்பிட்டு இருக்கா அதனால நீங்களும் ஜாயின் பண்ணிக்கோங்க! ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்று நிதன்யா சொல்ல..
சரிங்க அண்ணி நீ ரொம்ப தேங்க்ஸ் என்று லோகேஷ் துள்ளலுடன் கிளம்பினான்.
இதன்யா வேகமாக உள்ளே சென்றவள் இந்த படத்துக்கு போய் ஆகணுமா? என்று விக்கெத்து அமர்ந்தாள்.
கடுப்பாக இருந்தது. இருந்தாலும் அவள் பேசிய வசனங்களை கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது சரி போயிட்டு வந்துடலாமே என்று வேகமாக கிளம்பினாள்.
அவளுக்கு பிடித்த ஊதா நிற புது சுடியை எடுத்து போட்டுக் கொண்டவள், கொஞ்சமாக ஒப்பனை செய்து, இரண்டு பக்கமும் சுடிதாரில் பின் செய்து போட்டு கொண்டாள். ஈரத்தலையில் இரு பக்கமும் முடி எடுத்து நடுவில் பின்னி லூசாக விட்டு ஒரு பேண்ட் போட்டாள். கழுத்தில் மெல்லியதாக தங்கச் செய். தாலிக்கொடி உள்ளே இருக்கிறது.
பின்னை வைத்து குத்தி மறைத்து இருக்கிறாள். இது எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன்.
அடுத்ததாக கையில் சிம்பிளாக வளையல் நெற்றியில் ஒரு பொட்டு சந்தன கீற்று குங்குமம் என பட்டாசாக ரெடியாக இருந்தாள்.
நேராக எக்ஸலெடுத்துக்கொண்டு மாமா வீட்டுக்கு சென்றாள். மாமா வழக்கம் போல் வேலைக்கு சென்று இருக்க… குழலனும் பனிமலரும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று இருந்தார்கள்.
அத்தை வீட்ல யாருமே இல்லையா
இன்னிக்கி பணி லீவு போடுறேன்னு சொன்னாலே என்று கேட்க
இல்ல பொண்ணு மணிக்கு காலேஜ்ல ஏதோ பிராக்டிகல் போயிடுச்சு என்று தேவி கூறினாள்.
சரிங்க அத்த நான் ஈரோடு வரைக்கும் போறேன். எதுவும் உங்களுக்கு வாங்கிட்டு வரணுமா என்று கேட்க இல்ல பொண்ணு என்று கூறினார்.
அப்படியா சரிங்க சார் என்று அவள் திரும்ப எனக்கு கிளம்பும்போது போன் பண்றியா பன்னீர்செல்வம் பார்க்ல ஒரு சில பொருள் வாங்கணும் என்று தேவி சொல்ல..
சரிங்க அத்தை என்று இதன்யா கிளம்பினாள் இதோ வந்துவிட்டது பஸ் ஏறிக்கொண்டாள்.
நேராக பஸ் ஸ்டாண்ட் அங்கிருந்து டவுன் பஸ்ஸில் ஏற வேண்டும். அவள் பஸ் ஸ்டாண்டிலிருந்து இறங்கவும், லோகேஷ் அவளுக்காக காத்திருந்தான். எவன் இவன் அதுவும் வண்டியுடன் என்ன பஸ் ஸ்டாண்டிலேயே வண்டி தூக்கிட்டு வரானே எவனா இருப்பான்? சரியான லூசா இருப்பான்! என்று அவள் அவனை கடந்து போக..
ஹலோ டீச்சர் இதன்யா மேடம் என்று அழைக்க இவன எங்கேயும் பார்த்த மாதிரியே இருக்கே என்று இதன்யாவிற்கு கிட்டத்தட்ட 200 எபிசோடுகள் பின்னால் சென்றாள்.
அச்சோ இவன் லோகேஷ் ; இந்த கேரக்டர் இன்னும் இந்த கதையில சுத்திட்டு இருக்கா? என்று இதன்யாவின் மனசுக்குள் ஓட..
ஹாய் என்று அருகில் வந்தான். நன்றாக இருக்கிறீர்களா? என்று வேறு வழியில்லாமல் அவள் கேட்க
நான் நல்லா இருக்கேன் என்று லோகேஷ் கசொல்லி விட்டு அவளை உற்று பார்த்தான்.
அதுவா அத்தை பன்னீர்செல்வம் பார்க்ல கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வர சொன்னாங்க! அதுக்காக வந்தேன்! என்று இதன்டா அப்படியே பிளேட்டை திருப்பி போட்டாள்.
அப்படியா சரி ஓகே வாங்க நானும் அந்த பக்கமாக தான் ஒரு வேலையா போறேன்! உங்கள அப்படியே பத்திரமா கொண்டு போயி விட்டு என்னோட வேலையும் முடிச்சிட்டு இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போலாமே! என்று லோகேஷ் சொல்ல.. .
இல்ல இல்ல எனக்கு வேற வேலை இருக்கு என்று இதன்யா அனுப்பினாள்.
அட வாங்க வெயில் வேற முரட்டு வெயில் அடிக்குது, கரூரில் ஈரோட்டிலும் வெயில் பட்டையை கிளப்பிட்டு இருக்குது. வாங்க! உங்களுடைய ஸ்கின் உங்களோட முகம் இந்த வெயிலையெல்லாம் தாங்காது. பாருங்க! இப்பவே கொஞ்சம் கொஞ்சமா டல்லடிக்க ஆரம்பிச்சிருச்சு! ஆனால் அதிலும் டால் அடிக்குது! என்று அவன் தேவையே இல்லாமல் பிலர்ட்டை கொட்ட..
சரி வரேன் என்று பற்களை கடித்தாள்.
வாங்க என்று லோகேஷ் வண்டியை ஸ்டார்ட் செய்ய..
உடனே இதன்யா அங்கிருக்கும் டவுன் பஸ்ஸில் ஏறிக்கொண்டவள். நீங்க பஸ் பின்னாகி பாலோ பண்ணுங்க என்று கூறினாள்.
லோகேஷுக்கு முகம் தொங்கி போனது. வேறு வழியில்லாமல் அவன் பேருந்தை பின் தொடர்ந்தான். அது நேராக அப்படியும் இப்படியும் புகுந்து செல்ல..
எங்க போறீங்க பன்னீர் செல்வம் பார்க்கை தாண்டி போகுது அவள் அமர்ந்திருக்கும் ஜன்னல் பக்கம் வர
அது நான் படத்துக்கு போறேன். ப்ளீஸ் உங்களோட வேலைய பாருங்க. நான் படத்துக்கு போறேன். என்று இதன்யா திரும்ப..
சரி என்று விட்டுவிட்டான்.
அப்பாடா போயிட்டான் என்று நினைத்துக் கொண்டே அவள் மகாராஜா தியேட்டர் பக்கம் இறங்கி ஒரு பெருமூச்சுடன் நடந்தாள்.
அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. படத்திற்கு மக்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.
இதுவரை இதன்யா தியேட்டரில் வந்து படத்தை பார்த்ததே இல்ல. இதுதான் முதல் முறை அதுவும் தனியாக வருகிறாள். அதுதான் அவளுக்கு ஆச்சரியம்..
அங்கு அவளுக்கு முன்னால் லோகேஷ் காத்துக்கொண்டிருந்தான் இவனோட வேலைய பார்க்க சொன்னா! வந்து கண்ணு முன்னாடி நிக்கிறானே! இம்சையே என்று இதன்யா நினைத்துக் கொள்ள..
ஹாய் எனக்கு இங்க தான் வேலை என்று லோகேஷ் கூறினார்
அப்படியா என்று பற்களை கடித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
சரி வாங்க ஒட்டுக்கா போலாம் என்று அவன் சொல்ல..
ஓகே போலாமே என்று அவள் கையில் இருக்கும் டிக்கெட்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற டிக்கெட்டுகளை கிழித்து தூக்கி போட்டாள்.
லோகேஷ் உள்ளே செல்ல போக, அங்கே டிக்கட் செக்கர் டிக்கெட் கேட்கவும் இதன்யா அவளுக்கான ஒரு டிக்கெட்டை நீட்டினாள்.
நீங்க உள்ள போலாம் என்று அவர் சொல்ல
லோகேஷ் ஒரு வித தவிப்புடன் இதன்யா நீங்க எந்த சீட்டு? என்று கேட்க..
அவள் K -8 என அவளுடைய சீட் எண்ணை அதை கூற..
அப்போ அது பால்கனியில ஃபர்ஸ்ட் கிளாஸ் அப்படின்னா அந்த பக்கம் எல்லாமே புக் ஆயிருக்குமே! என லோகேஷின் புருவங்கள் வளைய..
அச்சோ! இப்போ என்ன பண்றது? நீங்க புக் பண்ணலையா? இன்று எதுவுமே தெரியாதவள் போல இதன்யா கேட்க
ஆமா சரி விடுங்க நானும் டிக்கெட் எடுத்துட்டு உள்ளே வரேன். வீட்டுக்கு போகும்போது ஒட்டுக்கா போலாம்! என்று லோகேஷ் உள்ளே வர..
சரி வாங்க என்று அவனுக்கு டாடா! பை! பை! காட்டிவிட்டு உள்ளே சென்று அவளுடைய இடத்தில் சென்று அமர்ந்தாள்.
லோகேஷ் உள்ளே வந்தான். பாவம் அவனுக்கு முன்னாடி பக்கம் எங்கோ ஒரு கடைக்கோடியில் அவன் இருக்கை…
இதன்யா ஹாயாக அந்த ஏசி குளிரில் அமர்ந்தாள். இப்பொழுது தான் மூச்சு விடவே பிடித்தது. ஈரோட்டில் அத்தனை வெயில்! ஏனோ அவளுடைய வீட்டை மிகவும் மிஸ் செய்கிறாள். அவளுடைய வீடு என்றால் நாயகன் இருக்கும் இடம் அல்லவா?
அட நாயகனை பற்றி நினைக்க இதோ ஆட்ட நாயகன் வந்து விட்டான்.
அந்த நேரம் திரை திரையில் ஒரு சில வரிகள்.. அனைவரது பார்வையும் திரைப்பக்கம் இருக்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பானது.
ம்ம் வந்து விட்டான் நாயகன்! சித்தார்த் கிருஷ்ணா வருகிறார்! என்று அங்கங்கே குரல்கள் கேட்க..
இதுதான் சர்ப்ரைஸா! ஓஓஓஓஓ!!!! இது இது தான் சர்ப்ரைசா!!!! என்று இதன்யா அப்பட்டமான அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள்.
தொடரும்…
இதுக்கும் கமெண்ட் போட்டு போங்க I’m waiting










💬 Be the first to comment