Mister ARROGANT PART 8

by Pradhanya kuzhali
653 views

EPI 256

சித்தார்த் கேஸ்ட்ரோ Weds இதன்யா லாவண்டர் ( turning point stunning marriage)

சித்தார்த் குரு பிரகாஷிடம் போன் பேசிவிட்டு வந்ததும், அடுத்த கட்ட வேலைகள் அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தான். 

இதன்யா நண்பகல்  9 மணிக்கு எழுந்தாள்.  இல்லை.. இல்லை.. சித்தார்த்  எழுப்பினான். 

ஹே லிட்டில் ஹார்ட் இன்னிக்கி நமக்கு பிளைட் அது உனக்கு நினைப்பு இருக்கா? என்று சொல்லிக் கொண்டே அவளுக்காக டீயை கொண்டு வந்து வைத்தான்.

இதன்யா கண்ணை தேய்த்துக் கொண்டே எப்பொழுதும் கண்ணாடியை மூக்கில் இருந்து  தள்ளுவதுபோல் நினைவில் செய்துகொண்டு..  குட் மார்னிங்! நான் சீக்கிரம் கிளம்பிடுவேன்! எத்தனை மணிக்கு ட்ரெயின்? சாரி எத்தனை மணிக்கு பிளைட் ?

 நீ கெளம்புனதும் ஃப்ளைட்! நம்ப அபிவோட பிளைட்ல தான போக போறோம்! என்று கூறினான்.

சரி சரி என்று டீயை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் தலையை துவக்கிக் கொண்டு ஹீட்டர் போட்டுக் கொண்டிருக்க..

என்ன? இப்போ எல்லாம் என்ன பயங்கரமா கவனிக்கிறிங்க? பெட் காஃபி எல்லாம் கொண்டு வந்து கொடுக்கறீங்க!. இனிமே எப்பவும் இப்படித்தான் செய்வீங்களா?  என்று அவள்  ஆர்வமாக கேட்க..

சித், க்கும் .. இதையெல்லாம் நீ செய்யணும்! ஆனா பாரு நான் உனக்கு செஞ்சிட்டு இருக்கேன்!

 இதன்யா ஆமா நான் செய்யறதுக்கு முன்னாடி  எட்டு மணி நேரம் தூங்கணும்! ஆனா பாருங்க நைட்டு அங்கே  ஜெர்மனாட்டில் இருந்து  ஜெனிவா வந்தோம். அங்கிருந்து மறுபடியும்  ஃப்ளைட்ல இங்க லண்டன் வந்திருக்கொம்.  எனக்கு நடுவுல கேப் விட்டா , நான் எப்படி தூங்க முடியும்? 

சித்தார்த் , சரி சரி போ டக்குனு போய் குளிச்சிட்டு வா என்று கூறினான்.

இதன்யா, ஹான் உடனே குளிக்கிறேன் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்? 

என்ன என்று திரும்பிப் பார்த்தான்.

எனக்கு இந்த வீட்ட சுத்தி காமிங்க?  படத்துல மட்டும் தான் இப்படி பார்த்து இருக்கேன்! நெஞ்சத்துல இப்படி ஒரு வீடு இருக்கா? என்று மூக்கை விடைக்க அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் சரி வா பார்க்கலாமே! என்று கூட்டிக்கொண்டு அனைத்து அறைகள், தனித்துவ கலை பொருட்கள், பெயிண்டிங்ஸ்,  ஸ்விம்மிங் நீச்சல் குளம், மற்றும் கிச்சன் என மொத்த வில்லாவையும்   சுற்றி காட்டினான்.

இதன்யா பிரமிப்புடன் இந்த வீடு அங்க சென்னையில் இருக்க நம்ம வீட்ட விட ரொம்ப பெருசா இருக்கு. அழகா இருக்கு! இதோட இன்டீரியர் ஒர்க் எல்லாமே இங்க ஃபாரின் கல்ச்சர்க்கு ஏத்த மாதிரி இருக்கு!

 ஆமா  சரி சரி கிளம்பு டைம் ஆகுது என்று கூறினான் .

உடனே இதன்யா இதோ போறேன் என குளிக்கச் சென்றாள்.  அவள்  சென்றதும் சித்தார்த் அபிக்கு போன் செய்து  எல்லா ரெடியா? 

நீங்க ஸ்ட்ரெயிட்டா ஸ்பாட்டுக்கு வந்துடுங்க! என்று கூறினான்.

சித், அதுக்கு முன்னாடி கொஞ்சம் காஸ்டியூம் இருக்கு! 

அபி,  சிரித்துக் கொண்டே அதுவும் ரெடி தான்! கார் வரும் சோ  இங்க வந்ததும் சேன்ஜ் பண்ணிக்கோங்க! நான் ஷோ ரூம்ல இருக்கேன். நீங்க அங்கே நேரா வந்துடுங்க.. என்று கூறினான்.

சரி என்று சித்தார்த் அவளுக்காக காத்திருந்தான். 

அவளுக்கான  உடையை ஏற்கனவே சித்தார்த்தி எடுத்து வைத்திருந்தான். அவள் வெளியே வந்ததும் அதை அணிந்து கொண்டு இப்போ ஓகேவா?  தலையில் கட்டப்பட்ட ஈர  கொண்டையுடன்  கேட்டாள்.

 ஹான் ஓகே அந்த முடிய பிரீ ஹேர் விடு! இங்கே வா  வந்து உட்காரு கொஞ்சம் மேக்கப் பண்ணலாம் என்று முகத்துக்கு மாய்ஸ்ரைசிங் கிரீம் மற்றும் காஜல் கண்ணுக்கு,  உதட்டுக்கு லிப்ஸ்டிக் மற்றும் கொஞ்சம் பவுண்டேஷன் என அனைத்தையும் போட்டு விட்டவன். Owe இப்போ ஓகே! பக்காவா இருக்க என்று கூறினான்.

இதன்யா அவளை கண்ணாடியில் பார்த்து பொட்டு மிஸ் ஆகுது!. 

பொட்ட அப்புறம் வச்சுக்கலாம் வா! டைம் ஆச்சு! வா வா போலாம் என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

அவர்கள் வெளியே வர அங்கே  கருப்பு நிற கார் ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது. 

எங்கே போறோம்! நம்ம டிரஸ் எதுவும் பேக் பண்ணவே இல்லையே? ஃப்ளைட் க்கு இப்பிடியே போரோமா? 

இப்போ ஒரு முக்கியமான இடத்துக்கு போயிட்டு அப்புறம் தான் ஊருக்கு கிளம்ப போறோம். 

அப்படியா சரி ஓகே என்றவள் மீண்டும் முதலில் இருந்து எங்கே போறோம்? எங்கே போறோம்? என்று தொன தொனவென்று சித்தார்த்திடம் கேள்வியை கேட்டு நச்சரித்துக் கொண்டே வந்தாள்.

சித் ,கொஞ்சம் அமைதியா வாடி! இப்போ நம்ப பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட போறோம். என்று கூறினான் .

அவர்கள் இருவரும் சென்றது ஒரு பொட்டிக் பிரத்யகமான ஆடை வடிவமைப்பு ஷோரூம் சென்றார்கள்.

அபி வெளியே காத்துக்கொண்டிருந்தான். எல்லா ரெடியா?  என்று சித் கேட்க..

அண்ணா இது சாப்பிடும் இடமா? இதன்யா கேட்க..

வாமா நான் சொல்றேன் என்று அபி அவளை அழைத்துச் சென்றான்.

அங்கே உள்ளே சென்றதும் சித்தார்த் ஒரு பக்கம் செல்ல இதன்யாவை அங்கிருக்கும் பணிப்பெண்கள் அழைத்துச் சென்றார்கள்.

மேம் இந்த டிரஸ்ஸ போட்டுட்டு வாங்க என்று கூற..

இதுவா இத எப்படி போடணும்? எதுக்கு இந்த டிரஸ்? என்று அவள் கேள்வி கேட்க..

இது வெட்டிங் டிரஸ் மேம் என்று கூறினார்கள்.

இதன்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.  என்ன கல்யாண ட்ரஸ்ஆ? என்று அந்த வெள்ளை நிற வெட்டிங் டிரஸ்சை பார்த்தாள்.

பணிப்பெண், சீக்கிரமா ஜஸ்ட் இத சேஞ்ச் பண்ணுங்க! மேம் என்று சொல்லவும்..

அவள் உறைந்து கொண்டு அப்படியே அந்த உடையில் புகுந்து கொண்டாள்.

அந்த பணிப்பெண் அவளின்  பின்னால் சில வேலைகள் அவளுடைய முடியை விரித்து விட்டு, உடையை சரி செய்து விட்டு  கண்ணாடியில் பார்க்க..உடை அவளுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. இந்த நொடி  அவளுக்கு கனவில் மிதப்பது போல் இருந்தது.  தேவதையை அழைத்து வருவது போல் இதன்யாவை அந்த ஷோ ரூமில் இருக்கும் பெரிய கண்ணாடி முன் காட்ட அழைத்து வந்தார்கள்.

அங்கே ஏற்கனவே சித்தார்த் light nevy blue கோட் சூட்டில் தயாராக இருந்தான். இப்பொழுது கோட் கிளிப் போட்டு கொண்டிருந்தான்.

 இதன்யா என்னங்க என்று அழைக்க.. சித் அவளை திரும்பி பார்க்கவில்லை, ஆனால் முன்னால் இருக்கும்  கண்ணாடியில் அவளுடைய முகத்தைப் பார்த்தான். 

அபி,  வாவ் உண்மையாகவே ரண்டு பேரும் சூப்பரா இருக்கீங்க! உங்க ரெண்டு பேர இப்படி பார்க்க  பார்க்க இந்த ரெண்டு கண்ணு போதாது. 

அபி அவ்வாறு சொல்லவும்..சித்தார்த் அவனை  முறைத்துப் பார்த்தான்.

போடா நீ மட்டும் தான் இந்த டயலாக் எல்லாம் சொல்லனுமா? நானும் சொல்லுவேன்! என்று அபி சொல்ல..

சித், போ கொஞ்சம் வெளிய போ என்று முறைத்தான்.

இதன்யா அவனிடம் இங்க என்ன நடக்குது?  என்னங்க ஆச்சு?  என்று கேள்வி கேட்க..

சித், ஒன்னும் இல்ல சும்மா என்று கண்ணடித்தான்.

பணிப்பெண் ஒருத்தி வந்து அவளுக்கு அழகான ஒரு கிரீடம் வைத்துவிட்டு அவளுடைய உடையை சரி செய்து சென்றுவிட..

சித்தார்த் அவளை தலை முதல் கால்வரை  பார்த்து “எப்பவும்  நீ அழகுதான்! ஆனால்  இன்னிக்கி இன்னும் கொஞ்சம் அழகா இருக்க!  இந்த டிரஸ்ல சும்மா அப்படியே லிட்டில் ஹார்ட் குள்ள இப்படி ஒரு ஏஞ்சல் இருப்பாளான்னு எனக்கே பிரம்மிப்பா இருக்கு! பின்னுது! அல்லுது! உன் அழகு!”

இதன்யாவிற்கு வெட்கமாக வர கீழே குனிந்து கொண்டே உதட்டை கடித்தாள். அவனை பார்க்க முடியாமல்  இதன்யா திரும்பிக் கொண்டால் சரி சரி வெட்கப்படாத.. உன்னோட முடி ரொம்ப அழகா இருக்கு பக்கத்துல வா!  என்று அவளுடைய முடியை கொஞ்சம் முன்னால் எடுத்து போட்டு விட்டான்.

இதன்யா அப்பொழுதும் அமைதியாக இருக்க.. 

சித், ஹே நான் இவ்வளவு சொல்றேனே!  என்னை பார்த்து நீ ஏதாவது சொல்றியா? என்று கேட்டான்.

இதன்யா , நீங்க கூட நல்லா தான் இருக்கீங்க!  என்று ஒற்றை வரியில் முடித்தாள்.

இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியதா  இருக்கு! 

உடனே அவள் டென்ஷன் ஆகி உங்களுக்கு இந்த லைட் நேவி ப்ளூ விட பிளாக் இன்னும் பட்டாசா இருக்கும். போதுமா! சொல்லிட்டேன். 

சித்தார்த் இருபுருவத்தையும் தூக்கி அப்படியா சரி ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு!  இப்படிக்கா போயிட்டு அப்படிக்கா வந்துடுறேன். என்று சொல்லி உள்ளே சென்றவன்.  அந்த கோட்டை மாற்றி விட்டு பிளாக் சூட் எடுத்து போட்டுக் கொண்டான். உள்ளே வெள்ளை நிற சட்டை, அதற்கு மேல் பிளாக்  கோட் பேண்ட் , மற்றும் கைகளில் அந்த பிராண்டட் வாட்ச், மற்றும் கோட் கிளிப் சிவப்பு வண்ணத்தில் மின்னுவது போல் இருக்க..  அதை சரியான இடத்தில் பொருத்திக்கொண்டு கையை ஒரு நிமிடம் உதறிவிட்டு,  பட்டன் போட்டுக் கொண்டே வெளியே வந்தான்.

 லிட்டில் ஹார்ட் என்று மென்மையுடன் அழைக்க..

இதன்யா திரும்பி பார்த்தவள் அப்படியே கண்ணியமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்போ ஓகேவா என இரு புருவம் தூக்க கேட்டான் .

ஹான் ஓகே என்று திரும்பிக் கொண்டாள்‌. 

சித்,  சரி சரி டென்ஷனாகாத என்று அவளுடைய கையை கோர்த்துக்கொண்டு இருவரும் வர

இதன்யா, கைப்பிடிக்காதீங்க இந்த டிரஸ்சை தூக்கிட்டு தான் நடக்கணும்! 

சித்,  தூக்கிட்டு எல்லாம் நடக்க தேவை இல்லை! நார்மலா நட என்று இருவரும் வெளியே வந்தார்கள்.

அபி அவர்களுக்காக காரில் காத்துக் கொண்டிருக்க..

இப்போ நம்ம எங்க போறோம்?  இந்த டிரஸ்சோட எப்படி ஃப்ளைட்ல ஏற முடியும்? 

கொஞ்சம் அமைதியா வாடி என்று கூறியவன். கீழே குனிந்து அருகில் உள்ள பெட்டியில் இருந்து அவளுடைய காலுக்கு தகுந்த ஒரு ஹீல்ஸை எடுத்து காலை பிடித்து மாட்டி விட்டான். 

இது என்னது? ஸ்டூல் மாதிரி இருக்கு? இதைல்லாம் எல்லாம் என்னால போட்டு நடக்க முடியாது  நான் கீழே விழுந்துடுவேன். நீ நடக்க வேண்டாம் என் கைய புடிச்சுக்கோ தானா நடப்ப என்று கூறினான்.

அப்படி! அப்படி எல்லாம் , அதெல்லாம் முடியாது..

சித், அன்னிக்கு  நடக்க சொல்லிக் கொடுத்தேனே! 

 அது அது வந்து மறந்து போச்சு..

உடனே இதைக் கேட்டு அபி சிரிக்க..

இதுல மறக்கறதுக்கு என்ன இருக்கு? நீ என் கைய புடிச்சுக்கோ! தானா நடப்ப! ஹே நீ ரொம்ப குட்டையா இருக்க  டி! எனக்கு தோலுக்கு வரணும்ல்ல என்று கூற..

நாலாம் ஒன்னும் குட்டை கிடையாது. நீங்க தான்  ரொம்ப ஹைட்டா இருக்கீங்க..

அதே தாண்டி நானும் சொன்னேன். என்று கூறினான்.

அந்த பேராலயம் சர்ச்சுக்கு முன்னால் போய் அவர்களின் கார் நின்றது. 

இதன்யா பிரம்மிப்புடன் கண்கள் விரிய இது எந்த இடம்?  இதை பார்த்தா சர்ச் மாதிரியே இருக்கே! என்று கூற..

இது சர்ச் மாதிரி இல்ல!  சர்ச் தான் என்று சித்தார்த் பதிலளித்தான்.

இது லிங்கன் சர்ச் உலகத்திலேயே மிக உயரமான சர்ச் இதுதான் என்று கூறினான் அப்படியா? Lincoln cathedral church.. இது 238 வருஷம் பழைமையான திருக்கோயில். கூடவே இது உலகத்திலேயே மிக உயரமான tallest building. 160 m high 525 ft.. இதை 1311 ல கட்டி இருக்காங்க!  என்று சித்தார்த் சொல்லிக்கொண்டே செல்ல.. 

ஆமா இதை எதுக்கு ஹிஸ்டரி கிளாஸ் மாதிரி என்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணி சொல்லிட்டு இருக்கீங்க? என்று இதன்யா கேட்க..

அபி கொஞ்சம் புன்னகையுடன் பாப்பா இன்னைக்கு  உங்க ரெண்டு பேருக்கு இங்கே ஒரு சிறப்பான சம்பவம் நடக்க போகுது! 

இதன்யா ஷாக் ஆகி என்ன? என்ன அண்ணா  சொல்றீங்க? என்று கேட்க..

சித்தார்த், அவன் ஒரு லூசு இன்னைக்கு நம்ம இங்க ஒரு புது ரெக்கார்டர் கிரியேட் பண்ண போறோம்!

என்ன ரெக்கார்டா? என்று கேட்க.

ஆமா என்று சித்தார்த் கூறினான்.

இதன்யா, அதான் என்ன என்று கேட்க வர.

கொஞ்சம் அமைதியா இரு! இந்த இடத்தில் இன்னொரு சர்ப்ரைஸும் உனக்கு இருக்கு! அதை பார்த்து நீ வருத்தப்படக்கூடாது. ஃபீல் பண்ண கூடாது. 

 அப்படி என்ன விஷயம் என்று புருவம் நெருக்கி கேட்க..

அது அங்க வாடி சொல்கிறேன். என்று அவர்கள் இருவரும் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள்.

அந்த இடம் அவளுக்கு பிரம்மிப்பாக இருந்தது. அங்கு ஒரு ஹானரபில் ஃபாதர் ப உள்ளே இருக்க எல்லா இடங்களிலும் கேண்டில் ஏற்றப்பட்டு, ஒரு சின்ன சத்தம் கூட இல்லாமல் இருந்தது பீட்டர் மற்றும் கெவின் அவர்களுடன் சில ஆட்கள் பத்து பேர் குழுவாக இருந்தார்கள்.

இதன்யாவை அழைத்துச் செல்ல 2 பெண்மணிகள் வந்திருந்தார்கள். உடனே சித் அவளின் கையை விட்டு  ச காணாமல் போனான்.

இதன்யா சுற்றிலும் தேடி பார்க்க..

அந்த பெண்மணிகள் சிரித்துக்கொண்டே அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து வந்தார்கள். கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டு கொண்டிருந்தது. நேராக  இதன்யா பார்க்க அங்கே சித்தார்த் நின்று கொண்டிருந்தான்.

அதன் பின் இதன்யாஅவனை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். நடுவில் ஒரு ஃபாதர் பைபிளை வைத்துக்கொண்டு சில வாசகங்களை வாசித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் அவர்களுக்கு எதிரில் ஒரு நோட் புக்லெட் வைக்கப்பட்டிருந்தது.

அபி அவர்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு கொண்டான். அவர்கள் வீட்டிலிருந்து இதுவரை சர்ச்  உள்ளே வந்தது என அனைத்தையும் புகைப்பட கலைஞர்கள் போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தார்கள். இன்னொருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். 

ராஜா ராணி பட பாணியில் திருமணம் நடக்கவில்லை, ஆனால்  பிரிட்டிஷ் யுனைடெட் கிங்டம் பாணியில் திருமணம் நடந்தது பெயரை சித்தார்த் கேஸ்ட்ரோ மற்றும் இதன்யா லாவண்டர் இருவரின் திருமணம் இருவரிடமும் சம்மதம் கேட்க..

உடனே சித்தார்த் ஃபாதரிடம் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து இந்த நாட்டோட ராணிக்கு st Paul cathedral சர்ச்ல வெட்டிங் நடந்தது. ஆனால் எனக்கு  இந்திய ராணி கூடவே இதய ராணிக்கு இந்த லிங்க்லன் சர்ச்சில் கல்யாணம் நடக்கணும்னு நான் நினைக்கிறேன். சோ நீ என்ன நினைக்கிற? என்று கேட்டான்.

இதன்யா இதயம் படபடக்க  பார்த்துக் கொண்டிருக்க..

அபி பாப்பா ஓகே சொல்லு! என்று கூற..

இதன்யா அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. 

சித் அபியை பார்த்து விட்டு  யாருக்காகவும் சொல்ல கூடாது. உனக்காக மட்டும் உன் மனசுல இருந்து சொல்லு!  என்னை என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என்று கேட்டான்.

அவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கி போனது. உதட்டில் புன்னகை வர மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தாள்.

சித்தார்த் நீ சம்மதம் சொன்னாதான்  அவரு அடுத்ததை ஸ்டார்ட் பண்ணுவாரு? என்று கேட்டான்.

அவள் மூச்சு வாங்க சம்மதம் என்று கூறினாள். 

ஃபாதர்  டபுள் ஓகே என்று கூற இருவரிடமும் முறைப்படியாக மறுபடியும் சித்தார்த் காஸ்ட்ரோவை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா?  இதன்யா லாவெண்டரை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?  என்று கேட்டு சம்மதம் என்று சொல்லியவுடன் எதிரில் உள்ள ஒரு அந்த புக்லெட்டில் இருவரையும் கையெழுத்து போடச் சொன்னார்கள். 

அங்கே சாட்சிக்காக ஒருவர் கையெழுத்து போட்டிருக்க..  முதலில் சித்தார்த்த கையெழுத்து போட்டு கொடுக்க..

இதன்யா அவணிடம் இருந்து வாங்கி போடச் சென்றாள். 

சித்தார்த், அந்த கையெழுத்தை மறுபடியும் ஒரு தடவை நல்லா பாரு? என்று கூறினான்.

என்ன ? என்று புரியாமல் இதன்யா கேட்க..

எனக்கு சாட்சி கையெழுத்து யார் போட்டு இருக்காங்கன்னு பாரு? என்று கூற..

யாரு என்று படித்தவள் கண்களில் கண்ணீர் கோர்க்க சுற்றிலும் தேடிப் பார்த்தாள்.

சித்தார்த், இங்க இல்ல என்று கூறினான்.

இதன்யா அழவே ஆரம்பித்தாள்.

பிரதர் அவளை பார்க்க.. 

சித், ஹே அப்புறம் உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணுறேன்னு நினைச்சுக்குவாங்க என்று கூறினார்.

நந்து இங்கதான் இருக்கானா?  என்று உதடு துடிக்க கேட்டாள்.

நான் இங்க இருந்து கிளம்பும்போது  உனக்கு காட்றேன் என்று கூறினான். 

உனக்கு நான் தான் கையெழுத்து போடுவேன் என்று  அபிஜித் சிரித்து  கொண்டே கையெழுத்திட்டான்.

அதன் பின் பிரதர் இருவருக்கும் மோதிரங்கள் கொடுக்க இருவரும் மாற்றி போட்டுக் கொண்டார்கள். கிருக்கும் அனைவரும் கைத்தட்ட.. 

ஃபாதர் இருவரையும் பார்க்க, அபிஜித் அவர்களிடம்  இப்போ முத்தம் கொடுக்க வேண்டிய நேரம்! என்று கூற..

சித்தார்த் இதன்யாவை அருகில் நெருங்கி உதட்டோடு உதடு பச்சக் என முத்தம் கொடுத்து விட்டான். ஓகேவா? என்று திரும்பி கேட்டான்.

அவள் வெட்கத்துடன் நிற்க.. சித் அவன் உதட்டில் ஒட்டிய லிப்ஸ்டிக்கை  கற்சிப் கொண்டு  துடைத்துக் கொண்டான்.

இதன்யா அப்படியே உறைந்து நிற்க..

அபிஜித்,  என்னமா  அப்படி ஷாக்காக்கி பாக்குற? எனக்கே இதெல்லாம்  பழகிப்போச்சு! 

உடனே சித்,  என்னடா சொல்ற என்று அதிர்ச்சியுடன் பார்க்க..

டேய் இங்க இதுல புதுசா பாக்குறதுக்கு என்ன இருக்கு?  அவளை கூட்டிட்டு போய் சும்மா உதட்டிலேயே ஒட்டுக்கிற ..

சித், கம்முனு இருடா ஃபாதர் இருக்காங்க என்று கூறினான்.

அபிஜித்,  அட போடா! அவருக்கு புரியாது.   

இதன்யா இதையெல்லாம் கேட்டு  வெட்கத்தில் தலை குனிந்து கொண்டே நிற்க.  அதன் பின் ஒயின் மாற்றி மாற்றி பருகி கொண்டார்கள்.

இது என்னது? என அவள் கேட்க.  

ஹ திராட்சை ரசம்!  அன்னிக்கு குடிச்சியே ஆப்சந்தி  மாதிரி  தான் இது.. என சித் கூற.. 

அபிஜித், என்னடா சொல்ற..

சித் உடனே திசை திருப்ப ஃபாதர் பிளஸ் பண்ணுங்க என திரும்பினான். 

 பாதர்,  இப்போ நீங்க திருமதி சித்தார்த் காஸ்ட்ரோ ஆகிட்டீங்க என்று கூறி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். 

 அபிஜித், அது என்ன காஸ்ட்ரோ? என கேட்க..

சித், எனக்கு பிடிச்ச பேர் அதே போல இதன்யாவுக்கு லாவண்டர் ரொம்ப புடிக்கும்!  அது யுனிக்!  அந்த காலத்தில் லாவண்டர் கிடைக்கவே கிடைக்காது. என்று கிளாஸ் ஆரம்பிக்க..

இதன்யா, போதும் என்று கூறினாள். இதன்யாவின் கையில் பூச்செண்டு இருக்க

சித்தார்த்தையும் இதன்யாவையும் கெவின் பீட்டர் மற்றும் அவர்களை சுற்றியுள்ள ஆட்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதன்யா, என்ன எல்லாரும் நம்மள ஆர்வமாக பார்க்கிறார்கள்?  என்று கேட்க..

 சித்தார்த்,  இந்த பூச்செண்ட I mean இந்த பூங்கொத்த நீ பின்னாடி தூக்கி போடணும், அதை யார் புடிக்கிறாங்களோ, அடுத்து  அவங்களுக்கு கல்யாணம் நடக்கும் அப்டின்னு  ஒரு ஐதீகம் இருக்கு, சோ நீ வெளியே வந்து படிக்கட்டில் இறங்கினதுக்கு அப்புறம் அந்த பூங்கொத்தை நீ தூக்கி போடுற! என்று கூற..

அவள் சிரித்துக்கொண்டே சரி என்றாள். இருவரும் கைகோர்த்துக் கொண்டே வெளியே வந்தார்கள்.

அந்த நேரம் கெவின் பீட்டர் அவர்களை சுற்றியுள்ள ஆட்கள் ஆர்வமாக இதன்யாவையே பார்த்துக் கொண்டிருக்க…

இதன்யா கண்ணை மூடிக்கொண்டு இப்போ தூக்கி போட போறேன் சிரித்துக்கொண்டே தூக்கி போட்டாள்.

அது நேராக அபிஜித் கைகளில் வந்து விழுந்தது.  உடனே பீட்டர் கெவின் அனைவரும் அச்சச்சோ  நமக்கு கிடைக்கல அது அபி சாருக்கு  கிடைச்சிருச்சு என்று சொல்ல..

இதன்யா, யாருக்கு கிடைச்சிருக்கு என்று ஆர்வமாக திரும்பிப் பார்க்க..

சித்தார்த்,  அடுத்த கல்யாணம் அபி வெட்ஸ் பூஜா என்று கூறினான்.

அபிஜித், நெவர் நெவர் அப்படியெல்லாம் நடக்கவே கூடாது! எப்படி என் கையில வந்துச்சு?   ஜீசஸ் இது என்ன?  என்று நினைத்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தான்.

அண்ணா வாழ்த்துக்கள்!  அடுத்து உங்களுக்கு தான் கல்யாணம் என்று அவள்  கூற.. 

 அங்கே நின்று பீட்டர் மற்றும் கெவின் இருவரும் சித்தார்த்திடம் குரூப் போட்டோ எடுக்கலாம் என்று சொல்ல… அதன் பின் சில போட்டோக்கள் அபி கூட, அதன் பின்  தனியாக ஒரு போட்டோ கப்பில் போட்டோ என அனைத்தையும் எடுத்தார்கள்.

 அந்த பேராலயத்தைச் சுற்றி நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இதன்யா சித்தார்த் இருவரும்  ஒவ்வொரு போட்டோவுக்கும் அழகாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்க..

அந்த நேரம் இதன்யா, நீங்க மோதிரம் போடறதுக்கு முன்னாடி ஒன்னு சொன்னிங்களே? என்று கேட்க..

என்ன சொன்னேன் என்று புருவத்தின் இறுக்கிக் கொண்டே  அவளின் முகத்தை பார்த்தான்.

புகைப்பட கலைஞர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க.. 

இதன்யா சித்தார்த்தடைய இதய ராணிக்கு இங்க கல்யாணம் நடக்குது? அப்புறம் வேற, என்ன சொன்னீங்க?  என்று கேட்க..

சித்தார்த் சிரித்துக்கொண்டே இந்த நாட்டோட ராணிக்கு கல்யாணம் சென்ட் பால் சர்ச் ல கல்யாணம் நடந்தது. அதேபோல  எனக்கும் என்னோட ராணிக்கும் கல்யாணம் இந்த சர்ச்சில் நடக்குது சோ இதுவும் வருங்காலத்தில் பேசப்படும்! என்று கூறினான்.

இதன்யா அவனை சிரித்துக்கொண்டே பார்க்க புகைப்பட கலைஞர்கள் , சார் அங்க கிஸ் பண்ணத சரியா போட்டோ எடுக்கல , சோ இங்க ஒரு கிஸ் குடுங்க! என்று சொல்ல..

சித்தார்த் அவளை பார்த்தான்.

என்ன என்று புருவத்தை நெருங்கினாள்.

கிஸ் குடுக்கணுமாம்!. 

யாருக்கு? 

உனக்கு தான் என்று கூற..

அவள் கொஞ்சம் விலகி இவங்க முன்னாடி எல்லாம் கொடுக்க மாட்டேன்! 

சித், அத தாண்டி போட்டோ புடிக்கப் போறாங்க என்று கூறினான்.

இதன்யா தயக்கத்துடன் அவனை  பார்க்க

சித் அவளின் இடையோடு அணைத்து கொஞ்சம் குனிந்து இதழுடன் இதழ் பொருத்திக் கொண்டான். மேல் உதடு கீழ் உதடு என்று அவர்கள் ரசித்துக் கொடுத்து கொண்டிருக்க..

அந்தப் படம் எடுப்பவன், எடுத்தாச்சு என்று சொல்ல.. 

ஹே கொஞ்ச நேரம் இரு டியூட் என்று அவர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை அந்த வீடியோவில் எடுத்து முடித்தார்கள். 

அபி, கட் என்று சத்தமிட்டான் .

சித்தார்த் விடாமல் இருக்க இதன்யா கஷ்ட பட்டு  அவனிடமிருந்து பிரிந்தாள்.

 அபிஜித்,டேய்  கொஞ்சம் லிப்ஸ்டிக்க தொட..

உடனே இதன்யா அவளின் உதட்டை  துடைக்க போக ..

பாப்பா நீ இல்ல அவன் என்று கூறினான்.

அதன்பின் இதன்யாவிற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து கொஞ்ச நேரம் அதே உடையில் இருவரையும் தனியே விட்டார்கள். 

என்ன திடீர்னு கல்யாணம் என்று  அவனுடைய முகத்தை பார்க்காமல் கேட்டாள்.

எனக்கு பண்ணனும்னு தோணுச்சு! ஏன் உனக்கு பிடிக்கலையா? என்று கேட்டான்.

பிடிக்கலையாவா? இது கேள்வியா? இன்னைக்கு எனக்கு கனவுல இருப்பது போல இருக்கு! இது கனவா இல்லாம இருந்தா நல்லா இருக்கும்! என்று கூறினாள்.

இது கனவில்ல நிஜம்தான்! அப்போ நீ என் கிஸ்சை ஃபீல் பண்ணவே இல்லையா? கம் க்லோஸ் என்று சித்தார்த் முத்தம் கொடுக்க அழைக்க..

 இதன்யா சிரித்துக் கொண்டு இல்லைங்க! நான் உண்மையாகவே இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! என்னோட கல்யாணம்! எனக்கு சந்தோசம் தான் எதுவா இருந்தாலும் ஓகே  கடவுள் ஒருத்தர் தான்! எங்கே நடந்தாலும் அங்க இணைய போறது ரெண்டு மனசு மட்டும் தான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ப்ராப்பரா கல்யாணம் பண்ணனும்னு நெனச்சேன். அவ்வளவுதான்.

சித் கவலைப்படாத கூடிய சீக்கிரம் எல்லாமே சரியானதுக்கப்புறம் நம்ம உங்க முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம். 

அவள் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

ஹே எதுவும் சொல்லுடி என்று கேட்க..

நீங்க மணமகனா இருந்தால் நான் எத்தனை தடவை வேணாலும் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று கூறினான்.

ஹே இப்படி ரொமான்டிக்கா பேசாத! 

ஏன்?

அப்புறம் பக்கத்துல வந்தால் எனக்கு அப்படி ஆயிடுச்சு! எனக்கு இப்படி ஆயிடுச்சு! நீங்க தள்ளி போங்கன்னு சீன் போடுவ! என்று கூற..

இதன்யா, நானெல்லாம் அப்படி நினைக்கல நீங்க தான் பக்கத்திலேயே வரமாட்டேங்கிறீங்க..  என்று சொல்ல..

சித்தார்த், எனக்கு உண்மைய சொல்லப்போனா இப்ப கூட கொஞ்சம் தயக்கம் இருக்கு என்று கூறினான்.

இதன்யா சட்டென அவனை திரும்பி பார்க்க..

அது கூடிய சீக்கிரம் சரியாகும் அப்போ எல்லாமே நடக்கும் என்று கூறினான்.

அபிஜித் சரி கிளம்பலாமா டா என்று சொல்ல இருவரும் கிளம்பி சாப்பிட சென்றார்கள்.

அந்த உடையை ஆசையாக பார்த்தாள்.

சித்தார்த், இந்த ட்ரெஸ்ஸ உனக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போகணுமா?  இல்ல இங்கே நம்முடைய வில்லாவில் வச்சிட்டு வரலாமா? 

இதன்யா, எடுத்துட்டு போகலாமா என்று கண்கள் மின்ன கேட்க..

உனக்கு ஓகேன்னா எடுத்துட்டு போகலாம் என்று அந்த உடையை பேக் செய்து கொண்டார்கள்.

அதன் பின் ஒரு பிரேக்ஃபாஸ்ட் மற்றும் லஞ்ச் லண்டனில் சில இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கேயும் அபிஜித் தான் கைடாக அவர்களை அனைத்திடங்களிலும் போட்டோ எடுத்தான்.

அதன் பின் கிளம்பும் நேரம் வந்தது. இதன்யா  மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.

(இது இந்த கதையில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் இதன்யா சந்தோஷமாக இருக்கிறாள்.இனிமே அவங்களோட காதல் இப்படித்தான் போகும்.)

அதன் பின் அவர்கள் ஏர்போர்ட் சென்று விட்டார்கள்.

இதன்யா தவிப்புடன் சித்தார்த்தை பார்க்க.

 சித், நிச்சயமா நீ உங்க அண்ணாவை பார்த்துட்டு தான் கிளம்புவோம். உனக்கு அவன் கிட்ட பேச நினைச்சா பேசு..

அதன் பின் அவர்கள் நேராக ஏர்போர்ட் சென்றார்கள். எங்க நந்துவை காணோம்?  என்று கேட்க..

அங்கு பாரு என்று கூறினான்.

அங்கே நந்து ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து கொண்டு அவனுடைய ஆபீஸ் விஷயமாக ஒரு கிளைன்ட்டம் பேசிக் கொண்டிருந்தான்.

இதன்யாவிற்கு கண்களில் கண்ணீர் பொங்க தன் அண்ணனை பார்த்தாள்.

சித்தார்த், போன் பேசுறதா இருந்தா கால் பண்ணி பேசு!..எடுப்பான் என்று சொல்ல..

இதன்யா வேகமாக தன் அண்ணனுக்கு கால் செய்தாள். 

தொடரும்..

இந்த twist நீங்க எதிர் பார்த்திருக்க மாட்டீங்க? எப்டி? இன்னிக்கு எபி எப்டி இருந்தது. சொல்லிட்டு போங்க. 

நாளை பார்ப்போம்

Comment pannunga ratings konjam like share pannunga.  

EPI 258

 அவர்கள் ஏர்போர்ட் சென்றார்கள். இதன்யா தவிப்புடன் சித்தார்த்தை பார்க்க. நிச்சயமா நீ உங்க அண்ணாவை பார்த்துட்டு தான் கிளம்புவோம். உனக்கு அவன் கிட்ட பேச நினைச்சா பேசு.. என சித்தார்த் சொல்ல.. 

“இல்ல அண்ணாவுக்கு தெரிய வேண்டாம். அவன் இதை எப்படி எடுத்துக்குவான்? அது தெரியாது!”  என்று  அவள் கூற,“ சரி பொறுமையா சொல்லிக்குவோம்.  நம்ம இங்க ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டோம்! உனக்கு இந்த நாட்டிலும் இன்னும் ஆறு மாசத்துல சிட்டிசன்ஷிப் கிடைத்துவிடும்.” என்று சித்தார்த் கூறினான்.

எப்படி என்று அவள் கேட்க..

ஏற்கனவே எனக்கு இங்க சிட்டிசன்ஷிப் இருக்கு! இப்போ நான் இந்த நாட்டு முறைப்படி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்க அண்ணனோட ஃபுல் டீடைல்ஸ் இதுல இருக்கு, அவனும் இந்த கல்யாணத்துக்கு ஒரு சாட்சி மாதிரி,  அதனால என்னோட சிட்டிசன்ஷிப் படி உன்னை நான் இங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதனால, உனக்கும் இந்த நாட்டோட சிட்டிசன்ஷிப் கிடைச்சிடும். என்று கூறினான்.

இதன்யா அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள,  சித்தார்த் அவளின் தலையை வருடி கொடுக்க,  உடனே இதன்யா உங்ககிட்ட ஒன்னு கேட்கவானு சொல்ல… என்ன அது? 

எப்படி நந்து அந்த புக்லெட்டில் சைன் போட்டா?  எப்படி நீங்க அதை பண்ணுனீங்க? என்று அவள்  கேட்க,

சித்தார்த் சிரித்துக்கொண்டே “அது உன் அண்ணன்  கிட்ட நான் நேரா போய் டேய்! நான் உன் தங்கச்சியை கட்டிக்கிறேன்னு சொன்னேன்! அவனும் சரின்னு சொல்லிட்டான்.” இதன்யா அவன் முறைக்க, சித்து அதே சிரிப்புடன் அவள் கிட்ட  “அப்போ வாடா வந்து ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைன்னு கேட்டேன். அதுதான்  அவன் வந்தான்.”  இதன்யா  கொஞ்சம் கடுப்புடன் உண்மைய சொல்லுங்க? என்று அவனுடைய சட்டையில் உள்ள பட்டனை திருகிக் கொண்டே கேட்க, 

உடனே சித்தார்த் கொஞ்சம் அமைதியான குரலில் நான் ஏற்கனவே குரு பிரகாஷ் கிட்ட சொல்லி இருந்தேன்.

என்னன்னு சொன்னீங்க? 

 “அதாவது நம்ம இந்தியாவில் இருந்து , ஒரு பொண்ணு இந்த நாட்டு பையன லவ் பண்ணிடுச்சு, அவங்களுக்கு சட்ட பூர்வமா கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்காக, ஒரு சாட்சி  தேவைப்படுது, அதை உங்க அண்ணனை பண்ண சொல்லி, குரு பிரகாஷ் ஆபீஸ்ல இருந்து சொல்லி இருக்கான்” அப்டின்னு சித்தார்த் சொல்ல

 ஒன்னும் புரியலையே என்று இதன்யா சொல்ல,   உனக்கு என்னதான்டி புரிஞ்சிருக்கு? இப்போ நான் சொல்றது புரிய,

இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? 

ஒரு லவ் மேரேஜ்க்கு சாட்சி கையெழுத்து போடுறதுக்கு, உங்க அண்ணனை, ஆபீஸ்ல இருந்து அப்ரோச் பண்ணியிருக்காங்க,அவனும் சரின்னு வந்து போட்டு கொடுத்து இருக்கான். அவ்வளவுதான். என சித் சொல்லி முடிக்க,  எனக்கு ஒரு சந்தேகம்! என அவள் சொல்ல..

என்ன சந்தேகம்? என சித் அவளை பார்க்க,  சாட்சி கையெழுத்து போட வந்தவுங்க  கல்யாணத்த பாக்காம எப்படி சைன் போடுவாங்க? அதுல பேர் இருந்திருக்குமே? 

சித் சிரித்துக் கொண்டே அந்த வவுச்சர்ல ஃபர்ஸ்ட் கேஸ்ட்ரோ அண்ட் லாவண்டர் அப்படின்னு மட்டும் தான் இருந்தது. அதனால உங்க அண்ணன் சைன் போட்டு கொடுத்துட்டு கொஞ்ச நேரம் வெயிட் பண்ண,  நம்ம யாரும் வராதனால அவன் கிளம்பி போயிட்டான்! அப்டின்னு சொல்ல,  இதன்யா புரியாமல் என்ன சொல்றீங்க ? என்று கேட்க

உனக்கு நான் இங்க வச்ச பேரு அது மட்டும் தான் அந்த வவுச்சர்ல இருந்தது. அதனால அவன் சைன் போட்டுட்டு அந்த பாதர் கிட்ட பேசிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தான். நாம வராததனால கிளம்பி போயிட்டான். இப்போ புரியுதா? என்று பார்க்க..

அப்படியா நான் கூட எப்படி தெரிஞ்சு இந்த விஷயத்துக்கு எங்க அண்ணா ஒத்துக்கிட்டான்? அப்படின்னு எனக்கு ஒரே யோசனையா இருந்தது.என்று கூற..

சித்தார்த் அவளின் முகத்தை நிமிர்த்தி இதழில் ஒட்டி ஒட்டி எடுத்தவன். அப்போ உங்க அண்ணா வேணாம்னு சொல்லிட்டா! நீ வந்து மோதிரம் எனக்கு போட்டிருக்க மாட்டியா? என்று கேட்க

“போட்ருக்க மாட்டேன்!” என்று புருவத்தை சுருக்கிக் கொண்டே  அவள் கூற,  உடனே சித்தார்த் அவளிடம் இருந்து விலக, இதன்யா நாம் எங்கே இருக்கிறோம் என்று கூட பார்க்காமல், அவன் இதழில் ஒற்றி எடுத்து “தள்ளி போகாதீங்க! நான் சும்மா சொன்னேன்! நான் எதுக்கு உங்களை விட்டுட்டு போவேன்? நீங்க என்னோட புருஷன்! கணவர்! உங்களை எதுக்கு நான் விட்டுட்டு போவேன்?   நான் அண்ணா கிட்ட  கேட்பேன்.”

என்ன? என்று பார்த்தான். 

நான் இவரை   கல்யாணம் பண்ணிக்கிறேன்.  அப்டின்னு சொல்லுவேன். 

“அவன் வேண்டாம்னு சொன்னா? என்ன பண்ணுவ?” என சித் கேட்க,  “வேண்டான்னு சொன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனை கன்வீன்ஸ் பண்ண ட்ரை பண்ணுவேன்!”என்று கூற..

 “நான் பல தகிடுதத்த வேலை எல்லாம் பண்ணி, உங்க அண்ணன வர வச்சு,  கையெழுத்து போட்ட வெச்சு உன்னை கல்யாணம் பண்ணி சம்பவ சாதனை பண்ணதுக்கு இந்த மாதிரி பதில் சொன்னா தானே! நான் அவ்வளவு வேலை செஞ்சதுக்கு ஒர்த்தா இருக்கும்! இப்ப நீ சொன்ன பாரு! அதுதான் நல்ல பதில் புரியுதா பொண்டாட்டி!” என்று அவளைப் பார்த்தான்.

இதன்யா சிரித்துக் கொண்டே “உங்க கண்ணு கூட இப்போ ரீசன்ட் டைம்ஸ்சாசிரிக்கிற மாதிரி இருக்கு.”

அப்போ கண்ணுல பல்லெல்லாம் தெரியுதா? என அவன் கேட்க, ரொம்ப மொக்க காமெடியா இருக்கு, இதை  உங்க படத்துல போட்றாதீங்க விருது கூட கிடைக்காமல் போயிடும் என்று இதன்யா கூறினாள்.

அபி அவர்களுக்கு சாப்பிட எதுவும் வாங்க செல்ல.. எங்கே நந்துவை காணோம்?  என்று இதன்யா தேட ஆரம்பித்தாள். அங்க பாரு என்று  சித் கூற, 

அங்கே நந்து ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து கொண்டு அவனுடைய ஆபீஸ் விஷயமாக ஒரு கிளைன்ட் கிட்ட பேசிக் கொண்டிருந்தான்.

இதன்யாவிற்கு கண்களில் கண்ணீர் பொங்க தன் அண்ணனை பார்த்தாள். “போன் பேசுறதா இருந்தால் கால் பண்ணி பேசு! எடுப்பான்!”என்று சொல்ல உடனே வேகமாக அவனுக்கு போன் செய்ய..

நந்து நம்பரை பார்த்து உடனே போன் எடுத்தவன்.  என்ன சின்னு?  இந்த நேரத்தில் எனக்கு போன் பண்ணி இருக்க? இன்னும் தூங்கலயா? என்று கேட்க, “ அப்போ நான் போன் பண்ண கூடாதா? உனக்கு!” என்று இதன்யா கேட்டாள்.

சித்தார்த் அவள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான். நந்து கொஞ்சம் சிரித்து கொண்டே  “அஞ்சு மணி நேரம் இங்கேயும் அங்கேயும் வித்தியாசம், இது நடுராத்திரி, அதனாலதான் தூங்கலையான்னு கேட்டேன். இதுக்கு போய் கோச்சிபியா?”  என்று நந்து கேட்டான்.

சரி அதெல்லாம் ஒன்னும் இல்ல! நீ என்ன பண்ணிட்டு இருக்க? சாப்டியா? உடம்பெல்லாம் எலச்ச மாதிரி தோணுது? என்று கேட்டாள்.

மேடம் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கீங்க? என்று புருவத்தை தூக்கினான். “ பக்கத்துல இருந்தாலும் என்னால உன்ன பாக்க முடியலையே! ”என்று கூற, “ நந்தன் திடுக்கிட்டு என்ன சின்னு! இப்போ என்ன சொன்ன?” என்று கேட்டான்.

ஒன்னும் இல்லடா! .. என்று ஒரு சில நிமிடங்கள் கழித்து “அண்ணா நீ ரொம்ப கஷ்டப்படுறியா? உன்னால இங்க இருக்க முடியலையா?”என்று இதன்யா மிகவும் சோகமாக கேட்டாள்.

நந்து சிரித்துக்கொண்ட “அதெல்லாம் ஒன்னும் இல்ல! நான் நல்லா இருக்கேன், எனக்கு என்ன கஷ்டம்? ரொம்ப நாள் உங்கள பாக்காம இருக்கேன். நான் நிதன்யாவோட வளைகாப்புக்கு வருவேன்ல, அப்ப பாத்துக்கலாம், ஒரு மாசம் லீவு கிடைக்கும். சரியா! நீ எதை பத்தியும் கவலைப்படாத இவ்ளோ நேரம் எல்லாம் முழிச்சிட்டு இருக்க கூடாது! கண்ண மூடி தூங்கு! ஸ்கூலுக்கு போகணும்ல்ல! ”என்று கூறினான்.

ஆமா சரி என்று சொல்ல..

உடனே அவன் வேகமாக சின்னு வைக்காத! என்ன நந்து! என இதன்யா கேட்க,

“நீ ஸ்கூலுக்கு எல்லாம் போக வேண்டாம்! இப்போ உனக்கு செமஸ்டர் லீவு தானே, அதனால அம்மாவை பார்க்கறதுக்கு நீ ஊருக்கு போ! அம்மாவுக்கு உன்னோட ஞாபகமா இருக்கும்! எப்ப பாரு உன்ன பத்தி தான் சொல்லிக்கிட்டே இருப்பாங்க! நீ அம்மா கூட போய் இரு! நீ காலேஜ் பீஸ் எல்லாம் காட்டும்போது எனக்கு போன் பண்ணு நான் உனக்கு  பணம் அனுப்புறேன். நான் வேலைக்கு போயிட்டு இருக்கேன்ல்ல, இனிமேல் நீ வேலைக்கு போக வேண்டாம்!” என்று குடும்ப தலைவனாக இப்பொழுது பேசினான்.

இதன்யா அழுகையுடன் குரல் உள்ளே போக அமைதியாக இருக்க,  என்ன? என்ன சின்னு! எதுவும் பேசாம இருக்க , அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்பா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்,நீ இவ்வளவு தூரம் ஃபாரின்ல வந்து வேலை செய்ற! என்று கூற..

ஆமா சரி விடு நீ அத பத்தி எல்லாம் பெருசா நினைக்க கூடாது. நம்ம எங்க இருந்தாலும் நமக்கு நல்லது தான் நடக்கும். நம்ம அப்பா நம்ம கூட தான் இருப்பாங்க. நீ வருத்தப்படாத! நீ சந்தோஷமா இரு, நான் உனக்காக சம்பாதிக்கிறேன். உன்ன, நிதன்யாவை அம்மாவை எல்லாம் நான் பாத்துப்பேன். என்று கூறினான்.

ச்ச ச்ச! பாசம் கடலளவுக்கு ஓவரா போயிட்டு இருக்கு, அண்ணன் தங்கச்சி பாசம்னா சும்மாவா? இந்த மாதிரி ஏன் ரோஷினி இருக்க மாட்டேங்கிறா  என்று சித்தார்த்திய யோசித்துக் கொண்டிருந்தான்.சரி நமக்கு எல்லாம் இதெல்லாம் செட் ஆகாது. இதேபோல ரோஷினி நம்ம கிட்ட வந்து பேசினா எப்படி இருக்கும்? என்று சித்தார்த் யோசிக்க, வியக் நல்லாவே இல்ல! என்று நினைத்துக் கொண்டான்.

ரோஷினிக்கு என்ன கவலை இருக்கு? அவ நல்லா இருக்கா! அவ இந்த மாதிரி பேசணும்னு அவசியமே இல்ல, பணத்தை தண்ணி போல செலவழிக்கிற அளவுக்கு அவங்க அப்பா, அம்மா இரண்டு பேரும் பேக்ரவுண்டும் இருக்கும்போது, அவ எதுக்கு இப்படி எல்லாம் நம்ம கிட்ட வந்து பேச போறா? என்று நினைத்தான். 

என்னங்க என்று இதன்யா அழைக்க,  உங்களுடைய  பாச கப்பல் மூழ்கிரிச்சா? இல்ல ஸ்மூத்தா போகுதா? என்று கேட்டான்.

எங்கள பாத்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா? என அவள் சொல்ல;  நீ ஏன் டி அப்படி தப்பா நினைக்கிற? உங்க அண்ணா மேல நிறைய பாசம் போலயே? என்னை விட உங்க அண்ண மேல தான்  பாசமும் போல! என்று  சித் கூற..

“ஆமா எங்க அண்ணாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும், உங்களுக்கு எப்படி ரோஷினியோ, அதே போல தான் என் அண்ணா எனக்கும்” என்று கூற,  சித்தார்த் வேண்டுமென்றே “எனக்கு ரோஷினி எல்லாம் பிடிக்காது, ரோஷினிய விட எனக்கு உன்ன தான் பிடிக்கும்! ”என்று கூறினான்.

 “அப்படியா ஆனா எனக்கு ஃபர்ஸ்ட் எங்க அண்ணாவை தான் பிடிக்கும், அதுக்கு அப்புறமா தான் நீங்க எல்லாம்!”அப்படியா சரி டி என்று அவன் நகரச் செல்ல, 

“இப்போ இதுல என்ன இருக்கு? சும்மா எதுக்கெடுத்தாலும் கம்பேர் பண்ணிட்டு  இருக்கீங்க? யாருக்கு என்ன பிடிக்கும்?  உன்னை வேற ஒருத்தன் கல்யாணம் பண்ணா என்ன பண்ணுவ? வேற ஒருத்தன் காதலிச்சா என்ன பண்ணுவ ?வேற ஒருத்தன் இப்படி வந்து கேட்டா என்ன பண்ணுவ ? அப்படி கேட்டால் என்ன பண்ணுவ? உங்க அண்ணா மேல பாசமா? உங்க அக்கா மேல பாசமா? உங்க அம்மா முக்கியமா? நான் முக்கியமா? எதுக்கு தான் இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க?” என கடுப்புடன் இதன்யா கூறினாள். 

சித்தார்த் எதுவும் பேசாமல் அவளை பார்க்க, “என்ன பாக்கறீங்க? உங்க கண்ண நோண்டிடுவேன்! சும்மா சும்மா பொழுதுநிக்கும் இப்படியே கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் பண்றது, இந்த மனுஷி எவ்ளோ கஷ்ட படுவா? ”யார் அந்த மனுஷி என்று அவன் கேட்க, நான் தான் என்று சிரிப்புக் கொண்டே கூறினாள்.

நீ தாண்டி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க! நான் ஒன்னும் உன்னை டார்ச்சர் பண்ணல! என்று அவன் முன்னால் நடந்தான். பாரு பாரு உடம்பு முழுக்க பொய்! நீங்கதான் என்ன டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க! ஏதோ நானா இருக்க போய் உங்க கூட இருக்கேன், என் இடத்தில் வேற ஒரு பொண்ணு இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன்! என அவள் நிறுத்தி விட..

என்ன பண்ணுவா? என்று சித்தார்த் திரும்பி கேட்க… இதன்யாவிற்கு அவனுடைய பார்வை மிகவும் பயத்தை கொடுத்தது. அது வந்து! அது அது வந்து இதன்யா என்று அவள் பயந்து கொண்டே பார்க்க, 

“ஓ இப்படி எல்லாம் நினைச்சுட்டு இருக்கியா? இப்ப கூட எனக்கு மார்க்கெட் தாண் டி! யாராயிருந்தாலும் பத்து நிமிஷத்துல அவங்கள கரெக்ட் பண்ணிடுவேன்! தெரியுமா? அந்த அளவுக்கு நம்மள பாத்தாலே பொண்ணுங்க எல்லாம் மயங்கி விழுவாங்க!”என்று கூறினான்.   அடேங்கப்பா எவ மயங்கறா? அதை நானும் வந்து பார்க்கிறேன்! ஏதோ நீங்க என்கிட்ட கெஞ்சி கேட்டதனால உங்கள கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நான் சம்மதிச்சேன்! மத்த படி ஒன்னும் இல்ல, அதனால ஓவரா இமேஜ்நேசன் பண்ணிக்காதீங்க! புரியுதா? யார்கிட்டயாவது பேசினீங்க, காதை திருகிவிடுவேன், மூக்கை அறுத்து போட்டு கண்ணை நோண்டி போட்ற்றுவென். வாடி வந்து அறு பார்கலாம்!  என்று சித்தார்த் அவளை நோக்கி வர, 

அந்த நேரம் அபிஜித்  யாரிடமோ போனில் பேசிக்கொண்டே வர, இதன்யா நேராக அபிஜித் அருகில் சென்று அண்ணா நமக்கு டைம் ஆச்சு வாங்க கிளம்பலாம்! என்று அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் சென்றாள்.

என்னமா என்ன ஆச்சு இரும்மா போன் பேசிட்டு வரேன் என அபி போனில் கவனம் செலுத்த,  அண்ணா அது அப்புறம் பேசிக்கலாம்! வாங்க என்று கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தாள். அவள் சித்தார்த்தை பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வர, சித்தார்த் மென்னகை சிந்திக் கொண்டு அதை அவளிடம் காட்டாமல நேராக பிளைட்டில் ஏறினார்கள். 

லண்டனில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆனது. அடுத்த நாள்  விடியர்காலை அவர்கள் வந்தடைந்தனர். சித்தார்த் அவளிடம் இப்போ வீட்டுக்கு போலாமா ? இல்ல நேரா சென்னை கிளம்பிடலாமா? என்று கேட்க, 

 நம்ம ஒரு தடவை அத்தையை பார்த்துட்டு உடனே கிளம்பிடுவோம்! இப்போ எனக்கு எங்க அம்மாவை பாக்கணும் போல இருக்கு! என்று கூற,  சரி என்று நேராக பவானிக்கு அழைத்தான். ஹலோ மா! 

எங்க இருக்க? சித்து!

அம்மா நான் வந்துட்டேன், ஜஸ்ட் ஏர்போர்ட்ல இருந்து வந்துட்டு இருக்கேன். என அவன் சொல்ல, அப்படியா சரி ஓகே வாங்க! என பவானி கூற,  இப்போ நீங்க எங்க இருக்கீங்க என்று சித்தார்த் கேட்க, 

நான் வந்து  தாத்தா வீட்ல சந்திரமௌலி, உங்க தாத்தா வீட்ல இருக்கேன்.  என்று கூற..  நீங்க அங்க எதுக்கு இருக்கீங்க? நீங்க கிளம்பி வர வேண்டியதுதானே? அந்த ஆள் வீட்ல தான் இருக்கானா? அப்டின்னு சித்தார்த் சொல்ல,

உடனே  மரியாதை இல்லாம பேசாத! என்று பவானி கூற, அவருக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு! உங்களை என்று சொல்ல வர..

தேவை இல்லாம பேசாத சித்து, எல்லாத்துக்கும் மரியாதை கொடுக்கணும்! உனக்கு நான் அதை சொல்லிதானே வளர்த்து இருக்கேன்.

அம்மா என்று சித்தார்த் கத்த!. 

“இந்த சத்தம் போடும் வேலை எல்லாம் இங்க வச்சுக்காத, உன் மேல இருக்கிற கோபம் அப்படியே தான் இருக்கு! நீ அதுக்கு பதில் சொல்லியே ஆகணும்!”என காட்டமாக பவானி கூறினார். 

இப்போ பதில் சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல, என்று  சித்தார்த் பவானியின் குரலை விட சத்தமாக கூற.. என்ன? வாய்ஸ் எல்லாம் ரொம்ப சவுண்டா இருக்கு? என்ன நெனச்சிட்டு இருக்க?  உன்னோட மனசுல? ஹான்! இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்! என்று பவானி  சொல்ல ,சித்தார்த் உடனே  போனை கட் செய்தான். 

என்னங்க ஆச்சு? எதுக்கு இப்படி சத்தம் போட்டு போன கட் பண்றீங்க! என்று சொல்ல,  எனக்கு அவங்க!.  அவங்க அங்கே  இருக்கிறது சுத்தமா பிடிக்கல! என்று கோபமாக பேச.., “ கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அத்தை தேவையில்லாம எதுக்கு அங்க இருக்க போறாங்க?”என இதன்யா பொறுமையாக கூறினாள். 

“அது அப்படி இல்லை, இதன்யா நம்மளோட வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டத்தில் ஒருத்தர் நம்மள விட்டுப் போகும்போது, அவங்கள எந்த காரணத்தை கொண்டும் திரும்ப ஏற்றுக்கவே கூடாது. இது தான் என்னோட பாலிசி! அவங்க மிகப்பெரிய துரோகத்தை நமக்கு செஞ்சுட்டா, அவங்களோட முகத்துல கூட முழிக்க கூடாது. அது தான் என்னோட ஒரே கொள்கை. எங்க அம்மா பண்றது சுத்தமா எனக்கு பிடிக்கல! நீ சொன்னியே அவங்களுக்குன்னு ஒரு துணை, அதுதான் அந்த ராஜசேகர்! இன்னொரு விஷயம் தெரியுமா? எனக்கும் அந்த நவீன்குமார்கும் எல்லாத்துலயுமே போட்டிதான்! ஆனால் அப்பவும் நான் ஏன் அப்படி நினைக்கிறேன்? அவங்களோட சொத்துக்காகவும், அவனை தோற்கடிக்கணும்கிற எண்ணமும் எனக்கு இல்ல! எங்க அம்மாவுக்கு சரியான ஜோடி ஒரு பாதுகாப்பு அவர்தான்னு தோணுச்சு! அதனாலதான் நான் அவரை சூஸ் பண்ணேன்!”  என்று சித்தார்த் கூறினான். 

 சரி விடுங்க அதை அத்தை சீக்கிரமா புரிஞ்சுக்குவாங்க!  அவங்களுக்கும் அங்க இருக்கணும்னு விருப்பம் இல்லை, என்று இதன்யா சொல்ல,

அந்த நேரம் வண்டி ஓட்டுநர் சந்திரமௌலி வீட்டின் சாலை பக்கம் வண்டியை திருப்ப, ஸ்டாப் இட் வேணாம் என்று கூறினான்.

ஓட்டுநர் வண்டியை மெதுவாக ஒட்டிக்கொண்டு, சித்தார்த்திடம் என்ன ஆச்சு சார்? என்று கேட்க.. நம்ம  சென்னை போகனும் என்று கூறினான்.

 “என்னங்க இது தப்பு! அத்தை நமக்காக அங்க வெயிட் பண்ணுவாங்கல்ல! அவங்கள பாத்துட்டு தானே போகணும்!” என்று கூறினாள். “ நான் சொல்றேன்! வண்டிய சென்னைக்கு விடுங்க! நான் வீட்டுக்கு போகணும்! எனக்கு நாளையில் இருந்து ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது!” என்று கூறினான்.

ஓட்டுநர் அவன் சொல்வதை கேட்டு வண்டியை சென்னைக்கு விட்டார்.  அவன் வருவான்! வருவான்! என்று பவானி காத்துக் கொண்டிருக்க,  சித்தார்த் வரவே இல்லை. ஆரவ் மற்றும் நிஷா இருவரும் தான் மாலை போல வந்தார்கள். 

சந்திரமௌலி அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே எங்கே சித்தார்த்த காணோம்? அவன் நேத்தே கிளம்பிட்டான் என்று ஆரவ் கூற,  என்ன சொல்ற என்று சந்திர மௌலி கேட்டார்.  அவன் எங்க கூட ஸ்பென்ட் பண்ணவே இல்ல!

அங்கே லீவுக்காக வீட்டுக்கு வந்திருந்த என்ன ஆரவ் சொல்ற? ஹனிமூன் எப்படி சித்தார்த்தும் இதன்யாவும் உங்க கூட ஸ்பென்ட் பண்ணுவாங்க?  என்று கேட்க.. ரேவதி, ஸ்வர்ணம், சந்திரமௌலி என அனைவருமே சிரித்தார்கள்.

ஆரவ் அவளை முறைத்து விட்டு“ தாத்தா சித்தார்த் அங்க வந்ததும் உடனே கிளம்பிட்டான். மூணு நாள் கழிச்சு வந்தான். மறுபடியும் கிளம்பிட்டான். அதுக்கப்புறம் என்ன நடந்ததுனு எனக்கு தெரியாது!” என்று சொல்ல;

உடனே சந்திரமௌலி போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தார் “மாமா அவங்க ரெண்டு பேரும் பெங்களூர் வந்தாச்சு! காலையிலேயே வந்துட்டாங்க! May be  அவங்க சென்னைக்கு கிளம்பி இருப்பாங்கன்னு தோணுது!” என பவானி சொல்ல, 

சந்திரமௌலி ஆர்வமாக சித்தார்த்தும் இதன்யாவும் இங்க நம்ம வீட்டுக்கு வருவாங்கன்னு நான் எதிர்பார்த்தேன்! மா!  பவானி! அதனாலதான்.. என பேச்சை நிறுத்தி  சரி ஓகே அவங்க சென்னை கிளம்பிட்டாங்களா?  சரி பத்ரமா போனால் சரி தான் என்று அந்த வயது முதிர்ந்த மனிதர் அவருடைய அறைக்கு சென்றார். 

அவர்கள் வீட்டுக்கு வந்ததும் இதன்யா நிம்மதியாக சுதந்திரமாக உள்ளே நுழைந்தாள். 

சித்தார்த் முகம் கொஞ்சம் கருமையாக இருக்க, “இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சு இருக்கீங்க? நம்ம எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்ணினோம்! அதை விட்டுட்டு இப்படி ஒரு முகத்தை வச்சுட்டு இருக்கீங்க? ”என்று சொல்ல, அங்கே ஹாலில் ஆஷிஷ் கவுடா அமர்ந்திருந்தான். அருகில் சதீஷும் இருக்க, 

உங்களை தான் கேட்டுட்டு இருக்கேன்! பதில் சொல்ல போறீங்களா? இல்லையா? என்று இதன்யா சித்தார்த்தை அதிகாரம் செய்து கொண்டிருக்க,

“க்கும்” தொண்டை கணக்கும் சத்தம் கேட்டது.

இதன்யா யாரென திரும்பி “நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க? என்று அவர்களை பார்த்து கேட்டாள்.

சித்தார்த் பார்வை திரும்ப,.. சித்து என்று சதீஷ் எழுந்தான். யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் நேராக அறையை நோக்கி செல்ல போக,

டேய் ராஸ்கல் ஒழுங்கா என் கார குடுத்துடு யார கேட்டு எடுத்துட்டு வந்த?  சாவியை கொடு! நான் உடனே கிளம்பனும்! என்று ஆஷிஷ் கத்தி கொண்டே  சித்தார்த்த அருகில் வந்தான்.

இதன்யா புரியாமல் காரா எந்த கார் என்று மூவரையும் பார்க்க எனக்கு தெரியாது நான் இப்போ ரொம்ப டென்ஷனா இருக்கேன் தயவு செய்து போயிடு இல்லன்னா என்கிட்ட செமத்தியா வாங்குவேன் என்று சித்தார்த் படியில் ஏறினான். 

எந்த கார் என்று இதன்யா கேட்க, “அட அத ஏன் இதன்யா கேக்குற? அன்னிக்கு என்னோட பர்த்டே ஃபங்க்ஷனுக்கு நீ அப்புறம் பிரியா ரெண்டு பேரும் கிப்ட் கொடுத்தீங்கல்ல, நீ கீ செயின் குடுத்தியா! பிரியா ஒரு பிரேஸ்லெட் மாதிரி ஒன்னு கொடுத்தாளா! அதை உன் புருஷன் தூக்கிட்டு வந்துட்டான்.” என ஆசிஸ் சோகமாக கூறினான். 

என்ன என்று இதன்யா அதிர்ச்சியில் பார்க்க,  அந்த கார  இவன அனுப்பி, என்னை ஃபுல்லா குடிக்க வைத்து, அந்த கார தூக்கிட்டு வந்துட்டான்.

எனக்கு எந்த காரும் தெரியாது தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போங்கடா என்று கத்த ஆரம்பித்தான். 

என் கார வாங்காம நான் இங்க இருந்து போக மாட்டேன்!  ஒழுங்கா கார கொடு இல்லன்னா? நான் இதன்யாவ இப்பவே வெளியில் கூட்டிட்டு போவேன்! வா இதயா  நம்ம இன்னிக்கி ஒரு ரெஸ்டாரண்ட் போலாம்! அந்த ரெஸ்டாரன்ட்ல என்ன ஸ்பஷல் தெரியுமா?   இந்த கல்யாணம் கேள்வி பட்டு இருக்கியா! என்று ஆரம்பிக்க..

 இதை கேட்டதும் சித்தார்த் வேகமாக கீழே வந்தான். “அவன் ரொம்ப கோவமா இருக்கான்! உன்ன அடிச்சிடுவான், நீ கிளம்பி ஓடிப் போயிடு! சொல்றத கேளு! என சத்யஜித்  சொல்ல,

இதன்யா ஒருவித பதட்டத்துடன் சித்தார்த்தை பார்த்தாள். அவன் அருகில் வந்து ஆஷிசை ஒரு பார்வை முறைத்து விட்டு இதன்யாவின் கைகளை பிடித்துக் கொண்டு படியில் வேகமாக ஏறினான்.

நல்ல வேலை  என்று சதீஷ் ஒரு பெருமூச்சு விட.. “டேய் ஒழுங்கா என் கார குடு! இல்லன்னா உன்ன சும்மா விடமாட்டேன்!  என்னடா நெனச்சிட்டு இருக்க?  அது என்னோட ஃபேவரிட் தெரியுமா. அந்த கீ செயின் எனக்கு வேணும்! குடுடா!”என்று கத்திக் கொண்டிருக்க, 

“ஒழுங்கா ஓடிடு அவ்ளோதான்! அடுத்த வார்த்தை பேசின நடக்கிறதே வேற! நான் இப்ப ரொம்ப கோவத்துல இருக்கேன்! ரெண்டு பேரும் இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த இடத்தை காலி பண்றீங்க! உங்களுக்கு டைம் ஸ்டார்ட் நவ்!” என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்று விட்டான். 

வாடா ஆசிசு நம்ம போகலாம்!  சித்தார்த்தா கோபத்தில் இருக்கானே! நாளைக்கு வரலாம்! என்று சதீஷ் கூற, ஆஷிஷ் அவனைப் பார்த்து முறைத்து தள்ளினான். 

இப்போ எதுக்கு என்னை பார்த்து முறைக்கிற?  இங்கே இருந்தா அவன் நம்ம சொல்றதை எல்லாம் கேட்க மாட்டான் டா! நான் சொல்றத புரிஞ்சுக்க! நாளைக்கு சாவகாசமா வரலாம்! என சதீஷ் மீண்டும் கூறினான். 

இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா?  நீ தான்டா! உன்ன சும்மாவே விடமாட்டேன்! இரு அந்த வாயாடி பின்னாடி தானே சுத்திக்கிட்டு இருக்க! பிரியாவ நான் நாளைக்கு டின்னர் கூட்டிட்டு போறேன்! என்று சொல்லிக் கொண்டே ஆஷிஷ் முன்னால் நடக்க..

சதீஷ் ஷாக்காகி என்ன? பிரியாவை டின்னர் கூட்டிட்டு போறியா? நீ எப்படி கூட்டிட்டு போகலாம்? என்று சதீஷ் வேகமாக அவன் முன்னால் சென்று நின்று கேட்க..

ஆஷிஷ் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே “ஆமா இதுக்கெல்லாம் காரணம் நீ தானே! அப்போ உன்ன பழி வாங்கிக்கிறேன்! சித்தார்த் பெரிய ஆளும் கூட, நம்ம எதுக்குப்பா மோதணும்! என்று  வெளியே வந்தான்.

இந்த அதிக பிரசங்கித்தனம் வேலையெல்லாம் வச்சுக்காத! அவகிட்ட பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத! நீ எதுக்கு அவளை டின்னர் கூட்டிட்டு போகணும்! என்று சதீஷ் கேட்க..

ஆசிஸ் சிரித்துக் கொண்டே எனக்கு கூட்டிட்டு போக தோணுது! நான் கூட்டிட்டு போறேன்! 

அதுதான் உனக்கு ஏண்டா தோணும்?  அதெல்லாம் தோணக்கூடாது! என சதீஷ் கூற.. 

 எனக்கு தோணுது!

தோன கூடாது என்று சதீஷ் கத்தி கொண்டே அவனது சட்டையை பிடித்தான்.

இங்கே இதன்யாவை அவனுடைய அறை உள்ளே வந்து கதவை சாத்தி விட்டுத்தான் இதன்யாவின் கைகளை விட்டான்.

இங்கே என்ன நடக்குது? அவங்க ரெண்டு பேரும் என்ன சொல்லிட்டு போறாங்க? ஆஷிஷ் சார் என்ன சொல்றாரு? என்று கேட்க, 

எதுவும் எனக்கு தெரியாது என்று வேகமாக குளிக்க சென்றான்.

அவனது கைகளை பிடித்த இதன்யா, இப்போ சொல்றீங்களா? இல்லையா? என்று முறைத்துக் கொண்டு கேட்க, 

என்னடி அதிகாரமா கேக்குற? என்னால சொல்ல முடியாது! என்று சித்தார்த் கூற..

சொல்லித்தான் ஆகணும்! இப்ப சொல்ல போறீங்களா? இல்லையா? என்ன கீச்செயின்? நான் ஆஷிஷ் சார் பர்த்டேக்கு கொடுத்த கீ செயின் பத்தி பேசிட்டு இருக்காங்க?  அத போய் நீங்க தூக்கிட்டு வந்தீங்களா?  என்று புருவத்தை சுருக்கி கொண்டு அவனைப் பார்த்தாள்.

உள்ளே 

சித்…? 

இதன்யா…? 

இங்கே வெளியே 

ஆஷிஷ் – சதீஸ் 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 259

சொல்லித்தான் ஆகணும்! இப்ப சொல்ல போறீங்களா? இல்லையா? என்ன கீச்செயின்? நான் ஆஷிஷ் சார் பர்த்டேக்கு கொடுத்த கீ செயின் பத்தி பேசிட்டு இருக்காங்க?  அத போய் நீங்க தூக்கிட்டு வந்தீங்களா?  என்று புருவத்தை சுருக்கி கொண்டு அவனைப் பார்த்தாள்.

சித்தார்த் அவளை வெறித்து பார்க்க. 

என்ன அப்படி பார்க்கிரீங்க? இப்போ சொல்ல போறீங்களா? இல்லையா? என அவன் அருகில் நெருங்கி அவனை படுக்கையில் வலுக்கட்டாயமாக அமர வைத்தாள். 

இப்போ என்ன வேணும் என்று முகத்தை அழுத்தி துடைத்து கொண்டே அவளை பார்த்தான். 

தெரியாத மாதிரி நடிக்காதீங்க? ஒழுங்கா எல்லாத்தையும் சொல்றீங்க? என்ன விசயம்? கீ செயின் பத்தி சொல்லுங்க என மிரட்ட ஆரம்பித்தாள். 

அது அது வந்து! 

புத்தா ஒழுங்கா இப்போ சொல்லு! இல்லன்னு வை உன் கிட்ட பேசவே மாட்டேன். என்று அவள் கூற..

ஹே இரு சொல்றேன்! 

ஹான் என அவள் பார்க்க, அன்னிக்கு அன்னிக்கு பார்ட்டியில்! 

அதெல்லாம் தெரியும் நான் அவருக்கு கீ செயின் கொடுத்தேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்னை? 

எப்டி நீ அவனுக்கு கொடுக்கலாம்? நீ என்னோட கேர்ல்! என்னோட பொண்டாட்டி! என சித் புருவம் நெருக்கி கொண்டே கூற..

அவரு தான் பர்த் டே பாய் அதனால் அந்த கீ செயின் கிப்ட் பண்ணேன். உங்களுக்கும் வேணுமா? சொல்லுங்க வேணும்னா வாங்கி தரேன்! ஆமா அதை எதுக்கு இப்போ கேட்கிறீங்க? அன்னிக்கும் நான் உங்க பொண்டாட்டி தான்! அப்போவே கேட்டு இருக்கலாமே! என இதன்யா கூறினாள். 

அப்போ நீ என் மேல கோவமா இருந்த? அதான் கேட்கல! 

இதன்யா அவனை முறைத்து பார்த்து கொண்டே சரி அதை விடுங்க இப்போ அந்த கீ செயினை எடுத்திட்டு வந்துடீங்களா? 

சித் அமைதியாக இருக்க .

கேட்டதுக்கு பதில் வேணும் கீ செயினை எடுத்திட்டு வந்தீங்கலா? 

இல்லையே! 

அப்புறம் எதுக்கு ஆஷிஷ் சாரு இங்கே வந்து கத்திட்டு போறாரு! அங்கே என்ன நடந்துச்சு? சொல்லுங்க! 

எத்தனை தடவை நான் சொல்லட்டும்? உன்னை எனக்கு பிடிக்கும். நீ அவன் கிட்ட அவனுக்கு கிஃப்ட் கொடுக்குற? அதான் எடுத்திட்டு வந்தேன். 

அந்த கீ செயின் வெறும் நூறு ரூபாய் தான் என அவள் சொல்ல .

காசு விசயம் இல்ல! அது உன் கிட்ட இருந்து போயிருக்கு! அதோ கோடி கணக்கில் எக்ஸ்பன்ஸ்வ்! அதான் தூக்கினேன். 

என்னத்தை? 

அவனோட காரை தூக்கினேன். உன்னோட எல்லா பொருளும் எனக்கு சொந்தம். அது டைரக்ட் அண்ட் இன்டைரக்ட் எப்படி இருந்தாலும் எனக்கு தான்! என சித் கூறினான். 

இதன்யாவுக்கு அவனை என்ன சொல்வது என்று தெரிய வில்ல, இது உங்களுக்கே டூ மச்சா தெரியலையா? காரை யாரும் எடுத்திட்டு வருவார்களா? 

சித் கடுப்புடன் சும்மா சும்மா என்னை பத்தியே சொல்லிட்டு இருக்காத! இதுக்கு எல்லாம் சதீஸ் தான் ஐடியா கொடுத்தான். போடி நீ போய் அவனை கேளு! எனக்கு குளிக்கணும்! என எழ முயற்சி செய்ய..

சரி அந்த காரை ஆஷிஷ் சார் கிட்ட கொடுத்திடுங்க! 

No way! 

அது அவரோடது! இது ரொம்ப bad habit இதெல்லாம் டாக்சிக் லவ் மாதிரி இருக்கு. நீங்க பண்றது ரொம்ப டூ மச்சா இருக்கு! 

நீ ஆயிரம் எக்ஸ்ப்லைன் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன். நகரு நகரு! என அவன் சொல்ல..

இப்போ கொடுக்க போறீங்களா இல்லையா? 

மாட்டேன் போடி! 

இதன்யா அவனை பார்த்தவாறு மடியில் ஏறி அமர்ந்தாள். 

ஹே என்ன பண்ற? இறங்கு! 

புத்தா! என்று ஒரு மார்க்கமாக அழைத்தாள். அப்படியே அவளின் உடலை பாம்பு போல நெளித்தாள். 

என்ன பண்ற? என அவன் சொல்ல வருவதற்குள், அவனுடைய உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். சித் கண்கள் பெரிதாக விரிய அவள் கண்ணை மூடி கொண்டு எனக்கு எனக்கு வந்து ஒரு மாதிரியா இருக்கு! உன்னோட முத்தம் அது என் மேல கொடுத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு! கொஞ்சம் முத்தம் கொடு! 

நான் இன்னும் குளிக்கல டி! தள்ளி போ! 

ஹே கிஸ் கொடுக்காம உன்னை விட மாட்டேன் என இதழை கவ்வி இழுத்தாள். 

என்ன இன்னிக்கு ஒரு மார்க்கமா பார்க்கிற? 

புத்தா நான் எது சொன்னாலும் நீ செய்வியா? சொல்லு! 

ஹான்! இல்ல அது! 

ஹே புத்தா! என அவனுடைய கன்னத்தில் உரச ஆரம்பித்தாள். 

சரி சொல் சொல்லு என்ன வேணும்? 

அந்த கீ செயினை ஆசிஸ் சார் கிட்ட கொடுத்திடு! 

ம்ம் ஹி ம்ம் என்று பெரு மூச்சை விட்டான். 

ஸ்ஸ்ஸ் பிளீஸ் புத்தா! நீ மட்டும் அதை கொடுத்தால் நான் ஊருக்கு போக மாட்டேன். இங்கேயே உன் கூட ஸ்பெண்ட் பண்ணுவேன். சே யெஸ் ஆர் நோ!. 

சரி கொடுக்கிறேன். என சித்தார்த் சொல்ல..

என் புத்தா! என் தொங்கா! என் முத்தா! என இதழில் ஒற்றி ஒற்றி எடுக்க..

சித்தார்த் அவளை வளைத்து பிடித்து நீ தான் தொங்கா என முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். 

புத்தா நீ குளிக்கணும்! 

நம்ம சேர்ந்து குளிக்கலாமா? அன்னிக்கு சொன்னியே! அப்போவே நீயும் நானும் குளிக்கிற மாதிரி நினைச்சு பார்த்தேன். என கழுத்தில் கடித்தான். 

ச்சீ! என அவள் சினுங்க..

ஹே உன்னை united kingdom ல கல்யாணம் பண்ணி இருக்கேன். வித் என் மச்சான் பெர்மிஷன் கூடவே தெரியுமா! என சித்தார்த் அவளின் உடைகளை கழட்ட..

இங்கே வேணாம்! 

அப்புறம்! 

இல்ல இங்கே வேணாம் பாத் ரூம்ல போய் கழட்டலாம்! என அவள் சொல்ல..

அப்போ உனக்கு ஒகேவா! என உள்ளே சென்ற குரலுடன் கேட்டான். 

அது என அவள் திக்கி கொண்டே நிற்க.. இங்கே இருந்தே ஆரம்பிக்கிறேன். என முத்தத்தில் வேகம் கொடுத்தான். 

அவள் சொக்கி கொண்டே அவனிடம் கிறங்கி கிடக்க.. சித் அவளை தூக்கி கொண்டு செல்ல போக..

தனு! என்ன பண்ற? எனக்கு என்ன வாங்கிட்டு வந்த? என ரோஸ் கதவை திறந்தாள். 

ரோஸ் சத்தம் கேட்கவும் வேகமாக அவனிடம் இருந்து கீழே குதித்த இதன்யா பாத் ரூமுக்கு உள்ளே சென்று கதவை பூட்டினாள். 

சித் கடுப்புடன் திரும்பி பார்க்க எங்கே இதன்யா? உன் கையில் நீ நீ அவளை தூக்கிட்டு போனியா? இப்போ எங்கே அவள்? என கேட்க..

ஹே அறிவு இருக்கா இல்லையா? உள்ளே வரும் போது நாக் பண்ணிட்டு வரனும் அப்டின்னு அந்த பேசிக் சென்ஸ் கூட உன் கிட்ட இல்லையா? உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? 

இப்போ என்ன டா வந்ததும் ஓவரா குதிக்கிர? நான் உன்னை பார்க்க வரல! இதன்யாவை பார்க்கணும். என உள்ளே வந்து படுக்கையில் அமர்ந்தாள். 

அந்த நேரம் சித்தார்த்துக்கு போன் வந்தது. ரத்னா தான் போன் செய்து இருந்தார். 

அவன் போனை எடுத்து கொண்டு பால்கனி பக்கம் செல்ல.. 

இதன்யா தலைக்கு குளித்து கொண்டே அவன் சொன்ன அனைத்தையும் நினைத்து பார்த்தாள். சாதாரண கீ செயினுக்கு காரையே தூக்கிட்டு வந்து இருப்பார்ன்னுனு நான் கொஞ்சம் கூட நினைக்கல.. எப்படி இவரு இப்படி இருக்காரு! என நினைத்தவளுக்கு சிரிப்பாக இருந்தது. சரி பார்ப்போமே அதை திருப்பி தராரா இல்லையான்னு! என அவள் குளித்து முடித்து உடையை போட திரும்ப அங்கே உடை இல்லை .

அச்சோ ட்ரெஸ் எடுத்து வர மறந்துட்டேன்! என வாட்ரோப்ல இரவு கட்டபடும் உடையை அணிந்து கொண்டாள். அவள் தயங்கி கொண்டே வெளியே வர அங்கே ரோஸ் இருக்க . 

அச்சோ இவங்க இன்னும் கிலம்பலயா? ச்ச! என நொந்து கொண்டே வந்தாள். 

ஹே இதன்யா என சிரித்து கொண்டே அருகில் வந்தாள்.

சொல்லுங்க ரோஸ்! 

ஹே உன் கிட்ட முக்கியமான விசயம் பேசணும் அதுக்கு தான் வந்தேன். சரி சீக்கிரம் ட்ரெஸ் மாத்து! என அவளை டிரெஸ்ஸிங் ரூமுக்கு தள்ளினாள். 

என்ன விசயம் சொல்லுங்க ரோஸ்! 

நீ முதலில் ட்ரெஸ் change பண்ணு நம்ம என்னோட ரூமுக்கு போலாம். என வெளியில் காத்திருந்தாள். 

இதன்யா நொந்து கொண்டே உடையை மாற்ற .

ஹே நீ இன்னும் கிலம்பலயா?  என சித் கேட்க

என்னால் கிளம்ப முடியாது போடா! நான் இதன்யா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். 

நீ வேனா உன் ரூமில போய் தனியா பேசு! ஆனால் அவள் வர மாட்டாள். போ கிளம்பு! 

போடா! 

இப்போ நீ போக போறியா இல்ல ரிஷிக்கி கால் பண்ணி இனி ஒரு வாரத்துக்கு உன்னை பார்க்க வராதது போல செய்வேன். 

ஹே ஹே வேணாம். எதுக்கு அண்ணா இப்படி பண்ற? 

நாங்க ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கோம். இப்படி பட்ட நேரத்தில் எங்களுக்கு ரெஸ்ட் தேவை. ஆனால் நீ அதை விட்டுட்டு எங்களை டென்ஷன் பண்ற? 

டேய் போதும் நிறுத்து நீ ரெஸ்ட் எடு இனி நான் இங்கே வந்து கேட்டால் சொல்லு என அவள் கோபத்துடன் சென்றாள். 

ஹே ரோஸ் என்ன விசயம் சொல்லுங்க! என அவள் வெளியே வர..

என்ன டி அவளை தேடுர? ஆமா எதுக்கு குளிச்சு ட்ரெஸ் மாத்துன? நான் வர வரைக்கும் சோப்பு நுரையுடன் உள்ளே இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும். சரி வா உனக்கு நிறைய பப்புள் செய்ய சொல்லி தரேன் ஒண்ணா குளிப்போம்.

அவள் களைப்புடன் புத்தா! பிளீஸ் எனக்கு ரொம்ப ரொம்ப தூக்கம் வருது பிளீஸ் என படுக்கையில் விழுந்தாள். 

ஹே சாப்பிட்டு தூங்கு! 

நீங்க குளிச்சிட்டு வாங்க சேர்ந்து சாப்பிடலாம் என தூங்கி விட்டாள். 

அடுத்த நாள் சித்தார்த் அவளை ஒரு இடத்துக்கு அழைத்து செல்கிறான்? அது என்னவா இருக்கும்? 

இது எதுக்கு எனக்கு? என அவள் சித்தார்த்தை பார்க்க..

நீ அன்னிக்கு சேவை பண்ணியே அதுக்கு என அவளை பார்த்தான்..

இதன்யா…? 

தொடரும்…

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 260

எதுக்கு? நான் கொண்டு போய் கொடுக்கணும்? என்ன சொல்ற என்று பூஜா கேட்க, 

இல்ல அவர் உன்ன தான் கொண்டு வர சொன்னாரு. என்று அவளின் சக வரவேற்பு பெண் சொல்ல..

பூஜாவுக்கு மனதில்  அவ்வளவுதான்! நம்மள பாத்துட்டான்! இனி இந்த வேலை நமக்கு இல்லைன்னு  நினைக்கிறேன். அய்யோ  ஜஸ்ட் வெறும் நாலு நாள் தான் வேலை பார்த்து இருக்கோம்! அதுக்குள் வேற வேலைக்கு தேடனும? என்ன பண்றது? எல்லாம் என் நேரம்! டீயை வாங்கி கொண்டு அபி இருக்கும் அறையை நோக்கி சென்றாள்.

பூஜா கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள். அபி முன்னால் அமர்ந்து இருந்த  மருத்துவர்கள் மற்றும் ஹெச் ஆர் என அனைவரையும் பார்த்து “அடுத்த கட்டமாக ரிப்போர்ட் எல்லாத்தையும் கொண்டு வாங்க! நம்ம மீதிய நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்!” என்று கூறினான்.

அவர்கள் அனைவரும் வெளியே அவனுக்கு விஸ் சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

“சார் டீ” என பூஜா சொல்ல.. 

அங்க வச்சுட்டு போங்க என்று கூறினான்.

பூஜாவுக்கு ஒரு பெருமூச்சு சரி வேலையை வேலையா பார்க்கிறான். என நினைத்து வைத்து விட்டு வெளியே செல்ல திரும்பினாள்.

மேடம்க்கு  அடையாளம் தெரியலையா? கேட்க…

பூஜா திடுக்கிட்டு நின்றாள். 

என்ன அப்படியே சாக் ஆகி நிக்கிற? நீ எங்க இங்க என்ன பண்ற? என்று கேட்டான் .

நான் அது வந்து இங்க ரிசப்ஷன்ஸ்ட்டா வேலை பாக்குறேன்! என பூஜா தயங்கி கொண்டே கூறினாள்.

உன்னை யாரு இங்க வந்து வேலை பார்க்க சொன்னது? உனக்கு வெரை இடமே கிடைக்கலையா? என்று அபிஜித் கடுமையான சொற்களாக கூறினான்.

நான் ஒன்னும் வேணும்னு  இங்கே வந்து சேரல!  இங்க வேகன்ட் இருக்குன்னு சொன்னாங்க. அதனால வந்து ஜாயின் பண்ணினேன். அதைவிட இது உங்களுடைய ஹாஸ்பிடல்ன்னு எனக்கு தெரியாது.  என்று பூஜா  கூறினாள்.

நீ பிளான் பண்ணி தான் இங்க வந்த? உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?  நீ எதாவது ட்ரிக் பண்ணி  கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறயா? என்று அபிஜித் கேட்டான்.

பூஜா அவனை முறைத்துக் கொண்டு எனக்கெல்லாம் அந்த மாதிரியான எண்ணம் கிடையாது. உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?  என்று கேட்டாள்.

சரி அப்புறம் எதுக்கு இங்க வந்த?  என்று அவனும் சலிக்காமல் கேட்டான். 

இதென்ன கேள்வி?  நான் இங்க ஜஸ்ட் வேலை செய்கிறேன்.  அவ்ளோதான் வேற ஒன்னும் இல்ல! எப்படியும் இனிமேலும் இந்த வேலை எனக்கு நீட்டிக்காது அப்டின்னு  தெரிஞ்சு போச்சு நான் வேலையை விட்டு போயிடுறேன். பூஜா சென்றாள்.

ஹே நில்லு நான் இன்னும் பேசி முடிக்கல! என்று அபி கூறவும் அவள் நின்றாள்.

சொல்லுங்க என்ன விசயம்? 

நான் சொன்னதும் உடனே வேலைய விட்டு போறேன்னு சொல்ற?  ஐ திங்க் நீ ஸ்கூல்ல தான பாப்பா கூட வேலை பார்க்கிற? இங்கே எதுக்கு வேலைக்கு வர? அதும் இல்லாமல் இப்போ லீவ் தான ஊருக்கு போக வேண்டியது தானே! எதுக்கு இங்கே வந்து வேலையை பார்த்து கிட்டு எனக்கு டென்ஷன் கொடுக்கிற? 

 நான் ரொம்ப ஏழை கஷ்டப்படுறேன். அதனால எனக்கு செலவுக்கு காசு இல்ல. அதனால்  வேலைக்கு வரேன்.  நானே தான் என்னோட காலேஜ் fees கட்டி படிச்சிக்கிறேன். அதனால தான் வேலைக்கு வரேன். உங்களுக்கு என்ன பிரச்னை? என்று பூஜா கேட்டாள். 

ஓவரா பேசாத! என்று அதிகாரமாக கூறினான். 

எப்படியும் இனிமேல் இந்த வேலை எனக்கு இல்லைன்னு தெரிஞ்சு போச்சு! நான் வெளியே போகிறேன்! என்ற அவள் நகர போக..

நான் உன்ன வேலை விட்டு போனு சொல்லவே இல்லையே! என்ற அபிஜித் கூறினான்.

இப்போ என்னதான் சொல்ல வரீங்க? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க? என்று கேட்க..

 அபிஜித் நீ உன்னோட வேலை பார்த்துக்க எனக்கு எந்த பிரச்னையும் இல்ல!  ஆனா நான்  உனக்கு  தெரிஞ்சவன்னு மட்டும் காட்டிக்கொள்ளாதே! அதை போல நீயும் நானும் என்னிக்குமே சேர மாட்டோம்! அதே போல சதீஷ் கூடவும் நீ சேரனும்னு நினைக்காத! என்று அபிஜித் கூறினான்.

பூஜாவிற்கு கண்ணீரே வந்தது. அதை உள்ளிழுத்து கொண்டு என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்று கேட்டாள்.

உன்ன பத்தி நான் எதுக்கு நினைக்க போறேன்! அப்படி எதுவும் இல்லன்னு தான் உனக்கு மைன்ட் பண்ணிட்டு இருக்கேன்.  நீ என்னை பத்தி நினைக்காதேன்னு சொல்ல வரேன்.நான் உன்னை எல்லாம் நினைக்கவே மாட்டேன். சோ இதெல்லாம் அவங்க ரெண்டு பேரும் சேரணும்னு தான்! சோ அத நல்லா மனசுல வச்சுக்க! இப்ப நீ கிளம்பலாம்! என்று கூறினான் .

பூஜா எதுவுமே சொல்லாமல் வெளியே வந்தாள். 

அவள் சென்றதும் அபிஜித் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டான். அவனுடைய மனதில் எங்கே பூஜா மிகப் பெரிய பிரச்சினையாக வந்து விடுவாளோ என்று தோன்றியது.  ஏற்கனவே லண்டனில் கல்யாண  பூங்கொத்தை இதன்யா தூக்கிப்போட்டு அதை அபிஜித் பிடித்ததில் இருந்தே, மனதில் மிகவும் பயமாக இருந்தது. ஒருவேளை கல்யாணம்  நம்ம எதிர்பாக்காத ஒருத்தியோடு நடந்துச்சுன்ன? என்ன பண்றது? இதுக்கு எல்லாம் காரணம். அந்த நாய் ஒரு மொன்ன நாய், என்கூட பிறந்த மொண்ண நாய்க்காக, இவள லவ் எல்லாம் பண்றேன்னு  பொய் சொல்லிட்டேனே!  அதை நினைச்சா தான் பயமா இருக்கு. இப்போ இவளை எப்படியாவது நம்ம வாழ்க்கையில் இருந்து துரத்தனும்! சீக்கிரம் படிச்சு முடிச்சுட்டு  இவள் கிளம்பி போயிட்டா,  நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். 

பூஜா ஹாஸ்டல் வந்ததும்  சோர்வுடன் படுக்கையில் அமர்ந்தாள். இன்று ஆஸ்பிட்டலில் நடந்த விஷயத்தை நினைத்ததும், அவளுக்கு பாரமாக இருந்தது. வேற எதாவது வேலை தேடி போயிடணும். இனிமேல் ஒரு நிமிஷம் கூட இந்த ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ண கூடாது. என்று யோசித்துக் கொண்டே அவள் இருக்க..

அந்த நேரம் பிரியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பூஜா கொஞ்சம் சிரித்துக்கொண்டே போனை எடுத்து ஹலோ பிரியா சொல்லுடி! இப்பதான் நான் சோர்வா டயர்டா வந்து உட்கார்ந்தேன். உன்னோட போன் வந்ததும் நான் இப்போ brisk. என்ன விஷயம்? என்று கேட்டாள்.

ஆமா நீ என்ன பண்ற  என்று பிரியா கேட்டாள்.

நான் இப்போதாண்டி ஆபீஸ் வேலை முடிச்சுட்டு வந்து உட்கார்ந்தேன் என்று பூஜா கூறினாள்.

ஆபீஸ் வேலையா? நீ ஸ்கூல்ல தானே போயிட்டு இருக்கன்னு சொன்ன? இப்போ என்ன ஆபீஸ்ன்னு சொல்ற?  என்று ஃப்ரீயா கேட்க..

அதுவா அது கொஞ்சம் பார்ட் டைம் ஜாப்பா ஒர்க் பண்ணலாம்னு, ஒரு ஹாஸ்பிடல்ல ரெசப்ஷன்ஸ்டா வேலை செய்றேன். 5 to 8 என்று கூறினாள்.

பிரியா வருத்தப்பட்டு கொண்டே நீ ரொம்ப பாவம் பூஜா! நிறைய வேலை செய்றல்ல என்று கூறினாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல இதெல்லாம் எனக்கு சாதாரணம் சரி சொல்லு! என்ன விஷயம்? படிச்சிட்டு இருக்கியா? என்று பூஜா கேட்டாள்.

பிரியா சோர்ந்து கொண்டு அதை ஏன் பூஜா நீ வேற கேக்குற? எனக்கு அப்படியே கடுப்பா இருக்கு! யார்கிட்டயும் காசு வாங்க முடியல! வீட்ல வேற கொஞ்சம் பிரச்சனையா!  எதுவும் வகையா வாங்கி  சாப்பிட முடியல! லைப்பே ரொம்ப டப்பா போயிட்டு இருக்கு! அதைவிட இந்த எக்ஸாம் பிரஷர் அதுக்கும் மேல இருக்கு! என்னால லீவு கூட என்ஜாய் பண்ண முடியல! என்று  கூறினாள்.

அப்படியா சரி சாப்டியா? என்று கேட்க..

 சரி நான் சாப்பிட்டேன் நீ அபி கூட பேசினியா என்று  பிரியா கேட்டாள்.

நான் அவர்கூட பேசல என்று தயங்கிக் கொண்டே கூறினாள்.

என்ன பேசலையா? நீங்க ரெண்டு பேரும் போனே பேசிட மாட்டீங்களா ? அப்புறம் எப்படி லவ் டெவலப் ஆகிறது? அந்த அபி நாய் எக்ஸாம் முடிஞ்சதிலிருந்து என் கண்ணுலையே படல! இன்னைக்கு அஞ்சு நாள் ஆகப்போகுது! என்று கூறினாள்

அவர் அவருக்கு வேலை இருக்கு! பிஸியா இருப்பாரு..

என்ன வேலை? வீட்ல உட்கார்ந்து கேம் விளையாடிட்டு இருப்பான். வேற என்ன இந்த பிரீ பையர், பப்ஜி இந்த மாதிரி ஏதாவது விளையாண்டுட்டு இருப்பான் என்று கூறினாள்.

தெரியல என்று பூஜா சொல்ல..

 ஏ உங்க ரெண்டு பேரயும் பார்த்தால், எனக்கு லவ் பண்ற மாதிரியே பீலிங் வரமாட்டேங்குது! ஏதோ நீங்க நடிக்கிற மாதிரி தோணுது! என்று பிரியா கூறினாள்..

உடனே ஷாக்கான பூஜா என்ன சொல்ற? 

 ஒன்னும் இல்ல எப்ப பாரு உன்ன பத்தி அவன் கிட்ட கேட்டா தெரியாதுன்னு சொல்றான்.அவன் கிட்ட உன்ன பத்தி கேட்டா அவனும் உன்ன மாதிரியே தான் பதில் சொல்றான். ரெண்டு பேரும் மீட் பண்ணீங்களா? அப்புறம் எப்படி நீங்க லவ் பண்றீங்க? உன்னோட லவ் ஸ்டோரி பத்தி என்கிட்ட நீ சொல்லவே இல்லையே! என்று பிரியா கேட்க.

பூஜா திடுக்கிட்டு ஹே பிரியா வெயிட் பண்ணு. நாங்க நிஜமாவே லவ் பண்றோம்! இன்னைக்கு கூட நான் அவரை பார்த்தேன். கிட்டத்தட்ட பத்து நிமிஷம் டைம் ஸ்பென்ட் பண்ணினேன். என்று பூஜா கூறினாள்.

பிரியா ஆர்வத்துடன் என்ன சொல்ற?  அப்போ நீங்க அவுட்டிங் போனீங்களா? என்று கேட்க..

அவுட்டிங் எல்லாம் இல்ல, பஸ் ஸ்டாப்ல மீட் பண்ணோம் என்று பூஜா பொய் கூறினாள்.

பஸ் ஸ்டாப்பா? எங்கே ? என்று கேட்டாள்.

அதுதான் நான் ஹாஸ்பிடல் வேலை முடித்துவிட்டு வர வழியில, அவரு வெயிட் பண்ணாரு, டெய்லி நான் அவரை மீட் பண்றன், ரெண்டு பேரும் பத்து நிமிஷம் பேசிட்டு அப்புறம் அவரு கிளம்பிடுவாரு. என்று கூறினாள்.

சரி உனக்கு ஏதாவது பிரச்சனையா? 

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்று பூஜா கண்களை மூடிக்கொண்டு சோர்வில் கூறினாள்.

 அவனுக்கெல்லாம் அந்த அறிவு கிடையாது. இந்த கிப்ட் பண்றது எல்லாம் சரி விடு எப்படியாவது உன்ன பார்த்தானா? சரி நாளைக்கு என்ன பத்தி சொல்லு!  என்று கூறினாள்.

 நாளைக்கு நான் சொல்றேன் என்று பூஜா சொல்ல..

அப்போ டெய்லி வருவானா என்று  பிரியா கேட்க..

ஆமா டெய்லியும் வருவாரு! அவருக்கு ஏதோ வேலை இருக்கும் போல! அதனால் இனி டெய்லி வருவாரு என்று சோர்வில் அனைத்தையும் கூறி விட்டாள்.

என்ன வேலை? உன் கூட அவன் ஜாப் பண்றானா?  நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை  செய்றீங்களா? சொல்லுடி நானும் வரேன். நம்ப மூணு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்யலாம். ஜாலியா இருக்கும். என்று பிரியா கூறினாள்.

பூஜா ஷாக்காகி இல்ல! இல்ல! அப்படி இல்ல! அதாவது நாங்க டெய்லியும் பாத்துக்குவோம். அவ்வளவுதான் அவரு வேலை எல்லாம் செய்யல, அவரு ரொம்ப பணக்காரர், என்று நீதான சொன்ன? அவங்க பேமிலி ரொம்ப ரிச்,  என் கூட வந்து வேலை செய்வாரா என்று கூறினாள்.

பிரியா சிரித்து கொண்டே என்ன  பூஜா சிரிக்கிற! என்று கேட்டாள்.

 அவங்க வேற பேமிலி கிடையாது. நீயும் அதே ஃபேமிலி தான்! அதனால அது உங்க ஃபேமிலி என்று பிரியா கூறினாள்.

ஆமாமா உங்க பேமிலி என்று சதீஷை நினைத்துக் கொண்டு பூஜா பிரியாவிடம் உங்க பேமிலி என்று கூறினாள்.

என்ன என்னோட ஃபேமிலியா? நீ தானடி அந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணிக்க போற!

பூஜாவுக்கு இந்த வார்த்தைகள் எல்லாம்  கடப்பாரை இறக்குவது போல் இருந்தது.  (எது நடக்கும் அப்படின்னு பேசுறோமோ! அது கண்டிப்பா நடக்கும்ங்க! அது போல தான் இப்போ வேற ஒன்னு நடக்க போகுது!) சரி இப்போ கதைக்கு வருவோம். 

போதும்! போதும்! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு! நான் தூங்கட்டுமா பிரியா! நான் நாளைக்கு பேசவா! எனக்கு வேற காலேஜ் ஸ்டார்ட்டாக போகுது!  சரி நீயும் போய் தூங்கு! என்று ஃபோனை வைத்தாள்.

பிரியா போனை வைத்து அடுத்த நொடி அவளுக்கு இரண்டாம் காலில் சதீஷ் வந்தான். 

யார் பேசிட்டு இருக்க? உன்கிட்ட என்ன சொன்னேன்!  பரீட்சைக்கு தானே உன்னை படிக்க சொன்னேன். அதை விட்டுட்டு மணிக்கணக்கா யார்கிட்ட பேசிட்டு இருக்க? என்றும் மிரட்ட ஆரம்பித்தான்.

பிரியா கடுப்புடன் என்னை மிரட்டுவதற்கு நீ யாருடா ? நான் யார்கிட்ட வேணாலும் பேசுவேன். உனக்கு என்ன? என்று கேட்டாள்.

அப்படியா சரி நான் இப்பவே உங்க அம்மாச்சி வீட்டுக்கு வரேன். உங்க மாமாச்சிய பாக்குறேன். உங்க அத்தையை பார்க்கிறேன். என்னோட போன் நம்பர் கொடுக்கிறேன்.  அப்படி இல்லனா அவங்களுக்கு நான் போன் பண்ணட்டுமா? ஹலோ மிஸ்டர் பாலு இந்த பிரியா யாரிடமும் போன் பேசிட்டு இருக்கா? அது யாருன்னு கேட்டு சொல்லுங்களேன்னு உங்க பாலு மாமா கிட்ட சொல்லட்டுமா? என்று கேட்டாள்.

 டே மட்ட மட சாம்பிராணி தயவுசெய்து அந்த மாதிரி எதையும் பண்ணி தொலைக்காதே! என்று பிரியா கூறினாள்.

சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு யார்கிட்ட பேசிட்டு இருந்த? 

நான் யார் கிட்ட பேசினா? உனக்கு என்ன? 

சொல்ல போறியா இல்லையாடி! உங்க  வீட்டு ஓட்ட பிரிச்சு உள்ள புகுந்துருவேன்.  என்று  சதீஷ் கூறினான்.

எங்க வீடு ஓடு கிடையாது. எங்க வீடு தார்ஸ் வீடு என்று பிரியா கூறினாள்.

சதீஷ்  சிரித்துக்கொண்டே உங்க மாமாச்சி வீடு வீடு என்று இழுத்தான்.

எங்க மாமாச்சி வீடு என்று ஷாக் ஆனவள். ஹே என்றாள்.

பிரியா! வரவா! வரவா!

பிரியாவின் மாமா இருக்கும் வீடு தார்ஸ்,  ஆனால் பிரியாவின் அம்மாச்சி இருக்கும் அந்த போர்ஷன் முழுவதும் ஓட்டு வீடு மாதிரி தான் இருக்கும். 

என்ன டி பேசு! சரி அப்போ யார் கிட்ட பேசின?  என்று கேட்டான்.

நான் பூஜா கிட்ட பேசினேன்! 

அப்படியா அவங்களோட லவ் எப்படி போயிட்டு இருக்கு? என்று சதீஷ் கேட்டான்.

அதுவா அவள்  ரொம்ப பாவம்! ஸ்கூலுக்கு போறது இல்லாம, ஹாஸ்பிடல்ல ரெசப்ஷன் ஸ்டா ஒர்க் பண்றா! என்று  கூறினாள்.

உடனே சதீஷுக்கு ஐயோ பாவம் ஸ்கூல்லையே காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் வேலை, அது இல்லாம ஹாஸ்பிடல்லையும் வேலைன்னா,  வதினாவுக்கு எவ்வளவு டயர்டா இருக்கும்? பாவம் எதுக்கு அவங்க கஷ்டப்படுறாங்க! நம்ம வீட்டோட மொத்த சாம்ராஜ்யமே அவங்களுக்கு தான! என்று மனதில் ஒரு கணக்கு போட்டவன்.

சரி பாய் என்று போனை வைக்க சென்றான். 

டேய் என்ன டா  கட் பண்ற! பேசு! என்று பிரியா ஒரு சுதியுடன் கூறினாள்.

சதீஷ் ஆச்சரியமாக  என்னடி பேசவா! என்ன இன்னிக்கி ஒரு மார்க்கமா பேசுற! நான் வரவா! 

டேய் டேய்! சாரி சாரி ஃபோனை வைத்துவிடு!

ஏண்டி இப்ப எதுக்கு சாரி கேக்குற?

பிரியா தயங்கி கொண்டே நான் அது வந்து, இதயா, பூஜான்னு நினைத்து உன்னை பேச சொல்லிட்டேன்!

இந்த கலர் கலரா நடிச்சு ரீல் சுத்தற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! நீ என்னதான் பேசுன்னு சொன்ன! என்ன விஷயம்? ஒழுங்கா சொல்லு! 

பிரியா சிணுங்கி கொண்டு டேய் ராஸ்கல்! நாயே! நான் உன்ன சொல்லல! நான் ஏதோ ஒரு ஞாபகத்துல சொல்லிட்டேன்! போதுமா! என்று  திட்டினாள்.

என்னடி  உனக்கு நான் ஆசையா ஃபோன் பண்ணினேன்.  நீ தானே ஒரு மாதிரி மார்க்கமா சொன்ன? நான் வேணும்னா முத்தம் கொடுக்கவா?  என்று வேண்டுமென்றே சதீஷ் போனில்  ஒற்றி எடுத்தான். அந்த முத்தம் வைப்ரேஷனுடன் பிரியாவுக்கு காதில் கேட்டு வேறொரு வைப்ரேசனாக மாறி பிரியாவிற்கு சாக் அடித்தது போல் இருந்தது.

ஏய் எப்படி இருக்கு முத்தம்? என்று சதீஷ் கேட்க..

செருப்பு பிஞ்சிடும் ஒழுங்கா ஃபோனை வை! நான் படிக்கணும்! அதை தான் சொல்ல வந்தேன்! என்று பிரியா திட்டிட..

 நான் கோபமா போன் வைக்கிறேன். என்று சதீஷ் கட் செய்துவிட்டான்.

பிரியாவிற்கு சிரிப்பாக வந்தது. அந்த முத்தத்தை நினைத்து கொண்டே  படுக்கையில் ஏறி குதிக்க ஆரம்பித்தாள்.

ஏன் இப்படி தோணுது! இவன்கிட்ட பேசினாலே எதுவோ பண்ணுதே! நம்ம net எக்ஸாம்ல பாஸ் பண்ணனும்! என்று சொல்லிக் கொண்டே படிக்க ஆரம்பித்தாள். 

சதீஷ் நேராக அபியின் அறைக்கு வெளியே கதவை தட்டிக் கொண்டு உள்ளேன் நுழைந்தான்.

அறிவு கெட்டவனே ரூமுக்குள்ள வரும்போது நாக் பண்ணிட்டு வரனும்முன் பேசிக்  சென்ஸ் கூட உனக்கு கிடையாதா? என்று அபி எரிந்து விழுந்தான்.

 ப்ரோ திட்டாத ப்ரோ உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! என்று சதீஷ் கூறினான்.

என்ன? எனக்கு நிறைய வேலை இருக்கு. ஒரு சில ஆடிட்டிங் ஒர்க்ஸ் இருக்கு! சில லைசன்ஸ் எல்லாம் ரெனிவல் பண்ணனும். சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு என்று திட்டினான்.

நான் சதீஷ் தயங்கிக்கொண்டே ஆமா பூஜா வதினா உன்கிட்ட பேசினார்களா? நீ வதினா கிட்ட பேசினியா? என்று கேட்டான்.

யாரு அது என்று அபி சதீஷை பார்த்தான். 

ப்ரோ பூஜா வதினா  பத்தி சொல்லிட்டு இருக்கேன். 

இதை கேட்டதும் அபிக்கு ஆத்திரமாக வர அங்கிருந்த பேப்பர் வெயிட்டை  தூக்கி சதீஷின் மேல் வீசினான். ப்ரோ என்னை கொல்ல பார்க்கிறாயா? உனக்கு போய் சொல்ல வந்தேன் பாரு! என்னை  அடிக்கணும். நானே போய்  ஹெல்ப் பண்ணிக்கிறேன். என்று அவன் பின்னால் திரும்பி நடக்க..

  டேய் நின்னு தொலை! என்ன விஷயம்? சொல்லித் தொலை என்று கூறினான்.

 ஒன்னும் தேவை இல்ல. உன் வேலையை பாரு. நான் போய் பார்த்துக்கொள்கிறேன். பேசுகிறேன். உன்கிட்ட இனிமேல் வந்து எதுவும் சொல்லவே மாட்டேன். என்று நகர

அபிஜித் கடுப்புடன் பற்களை கடித்துக் கொண்டே சொல்லித்தொலை! இல்லன்னா, நான் உன்னை கொண்டு போய் அப்பாகிட்ட விட்டுடுவேன்! என்றும் மிரட்டினான்.

அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.  உனக்காக இல்ல இப்போ வதினாவுக்காக, உன்கிட்ட விஷயத்தை சொல்றேன்.

அது தான் என்ன கண்றாவி சொல்லி தொல..

ஆமா பூஜா அண்ணி டெய்லி ஸ்கூலுக்கு போறாங்,அதுவும் இல்லாம இப்போ ஏதோ ஆபிஸ் ஒர்க்கா வெளியில் போறாங்கலாமே! என்கிட்ட ப்ரியா சொன்னா! இவ்ளோ வேலை செய்றாங்கல்ல! நீ ஏன்னு கேட்டியா?

அபிஜித் அவனுடைய வேலையை கவனித்துக் கொண்டே நான் எதுக்கு அவ கிட்ட போய் ஏன்னு கேட்கணும்? என்று கேட்டான்.

சதீஷ் ஆகாக்கி என்ன ப்ரோ இப்படி பேசுற சித்தார்த்து இதன்யாவை எப்படி தெரியுமா பாத்துக்குறான்? அவளை ஒரு சின்ன வேலை கூட செய்ய விடுவதில்லை. அவங்க அண்ணா அவகிட்ட இருக்குற எல்லா ப்ராப்ளத்தையும் சால்வ் பண்ணுனா, ஆனா அத அவகிட்ட  கிட்ட காமிக்கல, அதேபோல அவள வேலையும் செய்ய வைக்குறான், அவளை இண்டிபெண்டன்டா ஹப்பியா வச்சு இருக்கான். அவளை கஷ்டப்படுத்தாமல் அவளை அப்படி தாங்குறான்.  

இப்போ எதுக்கு என்னையும் சித்தார்த்தையும் கம்பேர் பண்ணிட்டு இருக்க? நானும் அவனும் ஒண்ணா? அதேபோல அவ உனக்கு அண்ணியா? நான்  கல்யாணம் பண்ணிட்டேனா? என்று அபிஜித் கேட்டான்.

ப்ரோ காமெடி பண்ணாத அவங்க எனக்கு அண்ணி தான்! நீ லவ் பண்ற ,அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? என்று கூறினான் .

ஆமா போன லவ்வுக்கு நீதான் இதே மாதிரி சொல்லிட்டு இருந்த!  இந்த லவ்! இது லவ்வே கிடையாது. புரியுதா! என்ற அபிஜித் மீண்டும் எரிந்து விழுந்தான்.

 உனக்கு ஒண்ணுமே தெரியல! பூஜா அண்ணி டெய்லிக்கும் நிறைய வேலை செய்றாங்க ரொம்ப டயர்டா ஃபீல் பண்றாங்க! பாவம் அவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு! ஜஸ்ட் அவங்களுக்கு நீ மறைமுகமாக ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்ல்ல! என்று சதீஷ் கூறினான். 

நான் எதுக்கு அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்? அவளோட வேலையை அவ பாக்குறா! நீயே உன்னோட வேலை ஒழுங்கா பாக்குறதில்ல! இதுல அவளுக்கு எதுக்குடா நீ சப்போர்ட் பண்ற! உன் வேலையை பார்த்துட்டு போ! என்று திட்டினான்.

நீ ஏன் ப்ரோ இப்படி இருக்க! எப்படித்தான் உன்னை பூஜா வதினா உன்னை லவ் பண்றாங்கன்னு! எனக்கு தெரியல! டேய் செப்பல் பிஞ்சிடும்! ஒழுங்கா ஓடிப் போயிடு! என்று சொல்ல..

உடனே சதீஷ் நான் போய்கிறேன். நானே அன்னிக்கு ஹெல்ப் பண்ணிக்கிறேன். அப்பதான் எனக்கு என் மேல அன்னிக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வரும். என்று கூறினான்.

இதை கேட்டதும்  அபிஜித் மனதில் அப்போ மறுபடியும் பூஜா உன்னை முதலில் இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா! பிரியா ரொம்ப கஷ்டப்படுவாளே! என்று நினைத்தவன்.

ஏ நின்னு தொலை! என்று

நான் போறேன் ப்ரோ என்று அவன் வெளியே செல்ல..

 நில்லுனு சொன்னேன். 

என்ன என்று சதீஷ் திரும்பி பார்த்தான்.

 நீ ஒன்னும் அவ கிட்ட போய் பேச வேண்டாம். நான் போய் அவகிட்ட பேசுகிறேன். அவளுக்கு நான் வந்து.. நான் ஹெல்ப் பண்ணிக்கிறேன். உன் வேலையை பார்த்துட்டு நீ போ. என்று கூறினான் .

நெஜமாவா உன்னை நம்ப முடியாதே என்று சதீஷ் கூற..

 நாளைக்கு நான் தான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்ல, அவளுக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன். அவளை நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன். போதுமா! உன் வேலையை பார்த்துட்டு நீ போ! பிரியா கிட்ட பேசுனியா? என்று அபி பேச்சை மாற்றினான். 

அவ வழக்கம் போல! உனக்கு காரி துப்பி இருப்பாளே! என்று கேட்டான். என்னுடன் சேர்த்து உன்னையும் தான்  காரி துப்பினா என்று சதீஷ் சிரித்துக்கொண்டே கூறினான்.

நான் என்ன பண்ண என்ற அபிஷேக் கேட்டான்.

நீ தான் ரொம்ப நாளா அவ கிட்ட போனே பேசலயாமே! அதனால ரொம்ப பீல் பண்ணா! என்று சதீஷ் கூற..

அபிஜித் சிரித்துக் கொண்டே அப்படியா பேபி சொன்னா? இப்பவே நான் போன் பண்ணி பேசுறேன்! எனக்கும் ஒர்க்கிங் டைம்ல கூட அவளோட நியாபகம் வந்துட்டு இருக்கு! என்ன பண்றது? என்னால பேச முடியல! என்று அபிஜித் கொஞ்சம் சதீஷ்க்கு புகைச்சலை கிளப்ப..

சரி நான் கிளம்புறேன் என்று விரைப்புடன் சதீஷ் வேகமாக ஓடிவிட்டான்.

எப்படி இவனுக்கு அந்த பூஜாவை பத்தி தெரிஞ்சது? ஒரு வேலை நம்மள பத்தி ஏதாவது சொல்லி இருப்பா! இவ சரியான சீன் காரி! என்ன  வேலை பண்றா? எலி குட்டியாட்டம் இருந்துகிட்டு பயங்கர யானை வேலை பண்ணிட்டு இருக்கா! என்று நினைத்தவன். நாளைக்கு உன்னை பார்த்துக்கொள்கிறேன் டி .என்று அவனுடைய வேலையில் கவனம் செலுத்தினான்.

இங்கே பவானி நேராக  சந்திரமௌலியை பார்க்க வந்தார்.

சொல்லுமா பவா என்று அவரை அழைக்க..

மாமா நான் கிளம்புறேன் என்று சொல்ல..

பின்னால் ஏன் கிளம்புற இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போ என்று ரவிச்சந்திரன் வந்து நின்றார்.

பவானி,  மாமா சீக்கிரமா ரோஷினிக்கும் ரிஷிக்கும் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன். அதனால எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்புறேன் என்று சொல்லி அவள் நகர..

ரவிச்சந்திரன் ஆமாம்பா நானும் பவானி கூட வேலையை பார்க்கிறேன். எனக்கு ரோஷினி ஒரே பொண்ணு, செல்ல பொண்ணு, என்று ரவிச்சந்திரன் செல்ல..

பவானி அவரை திரும்பி பார்த்து முறைத்தார். இப்போ எதுக்கு நீங்க என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க? உங்க வேலைய பாருங்க! மாமா உங்களுக்காக தான் இவரை விட்டு வைக்கிறேன். இது சித்தாரத்துக்கு தெரிஞ்சது நடக்கிறதே வேற! அவன் ஏற்கனவே இவர் இங்க இருக்காருன்னு தெரிஞ்சு தான் வீட்டுக்கு வராமல் நேரா சென்னை போயிட்டான். இப்போ இவரு என்கூட வந்தா  அவன் என்ன வேணாலும் பண்ணுவான். கொஞ்சம் பாத்துக்கோங்க மாமா. என்று சொல்லிவிட்டு பவானி கோவமாக கிளம்பினார்.

ரவிச்சந்திரன் பவானியின் பின்னால் மீண்டும் செல்ல போக..

ரவி நில்லுன்னு சொன்னேன் என்று சந்திரமௌலி சத்தமிட்டார்.

அப்பா உங்களுக்கு புரியலையா ரோஷினி எங்களோட பொண்ணு பா! எனக்கும் பவானிக்கும் பிறந்தவ!

சந்திரமௌலி கடுப்புடன் ஏண்டா இப்படி நீ  இருக்க அவ சொன்னது காதுல விழுக்கலையா? உன் மகனுக்கு தெரிஞ்சா உன்னை சுட கூட தயங்கமாட்டான்.தயவு செய்து உன் வேலையை பார்த்துட்டு போ என்று சொல்லி விட்டு நகர்ந்தார்..

 ரவிச்சந்திரன் மனதில் எனக்கு எப்படி போகணும்னு எனக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டே சென்றார். 

 சித்தார்த்  மேலே சென்று உடையை மாற்ற இதன்யா ட்ரெஸ்ஸிங் ரோமிங் வெளியே நின்று புத்தா! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்!

இப்போ இந்த இடத்தில் வந்து இதை சொல்லி ஆகணுமா? போ டி நான் வரேன்! கார்ல இருந்து உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்! உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு! தான் சொல்ற! என்ன விஷயம் என்று சலிப்புடன் கேட்டான்.

அது அது வந்து என்று இதன்யா சொல்லிக் கொண்டிருக்க..

அந்த நேரம் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

சொல்லு என்ன விஷயம்? 

அது இன்னிக்கு மேகா சூட்டிங் வந்தாங்களா என்று இதன்யா கேட்டாள். 

சித்தார்த்…? 

என்ன சொல்லுவான்? 

சதாநந்தன் வர போகிறான்? ஆனால் வேறு ஒருவனாக பார்ப்போம் அடுத்து என்ன நடக்கும்? 

எப்போ இன்னும் இதன்யா – சித்தார்த் சேருவாங்க! கூடிய seeekiieaththkl அதுவும் நடக்கும். 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 262

அது இன்னிக்கு மேகா சூட்டிங் வந்தாங்களா என்று இதன்யா கேட்டாள். 

சித்தார்த் நேராக படுக்கைக்கு சென்றவன் அதை ஏன் என்கிட்ட கேட்கிறேன் உன்கிட்ட தான் அவளோட நம்பர் இருக்குமே என்று கூறினான்.

இதன்யா அவனை கோபமாக வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

ஏன்? இப்போ எதுக்கு என்னை அப்படி முறைக்கிற? என்று  பார்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல படுக்கையில் படுத்து கொண்டே அவளை பார்த்து கேட்டான்.

சொல்லு! எதுக்கு என்ன அப்படி முறைச்சு பார்க்கிற! நான் இப்போ உன்கிட்ட தப்பா எதுவும் சொல்லலையே! என்று இருபுருவங்களையும் சித்தார்த்த தூக்கினான்.

நீங்க ரொம்ப ரொம்ப மோசம் என்று கூறினாள்.

உன்கிட்ட அவதான் அன்னைக்கு உனக்கு போன் பண்ணி பேசினா தானே! சோ  அவளுக்கு போன் பண்ணி, ஏன் ஷூட்டிங் வரலன்னு கேளு! அத விட்டுட்டு என்கிட்ட கேட்டா? நான் என்ன பண்ண முடியும்! என்று சித்தார்த் கூறினான்.

இதன்யா அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

சித்தார்த் அவளை பார்த்துக் கொண்டே இப்போ எதுக்கு அவளை பத்தி அதிகமா கேட்டுக்கிட்டே இருக்க? என்ன விஷயம்?

நான் சும்மா கேட்டேன்!

உண்மையை சொல்லு! என்ன விஷயம்?

சும்மா தான் கேட்டேன் என்று கூறினாள்.

என்னமோ பண்ணு! என்று அவன் திரும்ப அந்த நேரம் அவனுக்கு போன் வந்தது.

அந்த போன எடுத்து கொடு டி!

கொடுக்க முடியாது.. என்று முகத்தை திருப்பினாள். 

எடுத்து குடுடி

நீங்களே எடுத்துக்கோங்க தரமாட்டேன்.

அப்போ உன்ன 7 ஹெவன் இப்பவே கூட்டிட்டு போறேன். 

அதுக்கெல்லாம் நீங்க லாயக்கு இல்ல!  என்று இதன்யா சொல்லிக்கொண்டே அவனை பார்த்தவள். திடுகிட்டாள்..

அதற்குள் சித் அருகில் வந்திருந்தான். என்ன சொன்ன? என்னடி சொன்ன? ஹான் என சோபாவில் சாய்த்து அவளின் இடையை அழுத்தி பிடித்து உதட்டை நோக்கி குனிந்தான். 

ஹே புத்தா! போன் அடிக்குது போ! போய் எடுத்து பேசு! போ புத்தா! 

சித் உதட்டை கவ்வி பிடித்து முத்தமிட ஆரம்பித்தான். மேல் உதடு கீழ் உதடு, வருடல், சீண்டல், லிக், பைட் என அனைத்தும் அந்த உதடுகள் மறத்து போகும் அளவுக்கு கவனித்தான். 

இதன்யா மூச்சை பிடித்து கொண்டே அவன் தோலை கட்டி கொண்டவள். இப்பொழுது மூச்சுக்கு திணற ஆரம்பித்தாள். 

மிம்ம் என்று முனக ஆரம்பித்தாள். சித் அடி பார்வையுடன் அவளை பார்த்து கொண்டே  சொக்கி பித்து பிடித்தவன். மேல் உதட்டை விட்டு கீழ் உதட்டை மட்டும் கவ்வி பிடித்தான். 

சரியாக அந்த நேரம் மீண்டும் போன் அடிக்க ஆரம்பித்தது. 

இதன்யா வெடுக்கென கண்ணை திறந்து அவன் தன்னை விட்டு விலகுவான் என பார்த்தாள். அவன் முழு மூச்சுடன் முற்றுகையில் இருக்க..

அவளால் அந்த முத்தத்தையே தாங்க முடிய வில்லை. அய்யோ இவர் அன்னிக்கு ரொம்ப ரொம்ப மென்மையா நடந்துகிட்டாரு! அதுக்கு அப்புறம் வன்மை தான் ஆனால் அதை கூட என்னால் தாங்க முடிஞ்சுது. இப்போ இது! இது என்னால் இந்த ஒரு முத்தத்தயே தாங்க முடியலையே 7 th heaven மாதிரி தெரியல! எனக்கு பரலோகம் தான் தெரியுது. இதுக்கு மேல அவர் தள்ளி போக நம்ம தான் எதும் செஞ்சாகணும். என முன்னால் இருக்கும் டீபாயின் மீது இருந்த அவனுடைய போனை கஷ்ட பட்டு எடுத்து பெயரை கூட பார்க்காமல் அட்டன் செய்து சித்தார்த்தின் காதுக்கு அருகில் வைத்தாள். 

ஹலோ என்று ஆண் குரல் கேட்க வெடுக்கென சித்தார்த் கண்ணை திறந்தான். 

அவனுடைய உதடுகள் கொஞ்சம் அவளின் உதட்டின் மேல் இருந்து நகர வேகமாக மூச்சு வாங்க சித்தார்த்தை பார்த்தாள். சித்தார்த்தும் அதே நிலையில் தான் இருந்தான். உடனே இதன்யா சிணுங்கி கொண்டே புத்தா மிம் நகருங்க எனக்கு மொத்த ஆக்சிஜனும் போச்சு என்று அவள் வேகமாக மூச்சு வாங்க.. இது அனைத்தையும் கேட்க கூடாது காதுகள் கேட்டு கண்கள் சிவக்க, கைகள் முறுக்கேற அவனுக்கு மூச்சு முட்டியது. 

யார் அவன்? வேற யாரு நவீன் தான்! 

இப்பொழுது தான் ஒடிசாவில் அனைத்து வேலையையும் முடித்து விட்டு மோகன் வந்தான். 

அவன் வந்ததும் நவீன் மிகவும் கோபமாக ஹலோ என்று மீண்டும் அழைத்தான். 

சித்தார்த் நம்பரை பார்த்து விட்டு அரே! என்னா சகுனம்! என்னா சகுனம்! இப்படி தொக்கா வந்து சிக்கிட்டன். என நினைத்தவன். ஹலோ என்று எழுந்து அமர்ந்தான். 

ஆனால் நவீன் எதுவும் பேச வில்லை. ஹலோ லைன்ல இருக்கீங்களா? என சித் கேட்டான். 

டவர் இல்லையா?  என்ன ஆச்சு? என சித் எழுந்து இதன்யாவை பார்த்து உதட்டை அழுத்தி துடைத்து கொண்டே கண் அடித்தவன்.  அப்படியே பால்கனி பக்கம் சென்றான். 

ஹலோ! மிஸ்டர் போன் பண்ணிட்டு பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்! அப்போ வைக்கிறேன். இனி டிஸ்டப் பண்ணாதீங்க! என சித் கட் செய்ய போக. 

நான் லைன்ல இருக்கேன்! 

அப்போ பேசுங்க என்று சித்தார்த் கூறினான்.

 நம்ம ரெண்டு பேத்துக்குள்ள நடுவில் இருந்த சவால்! என்ன ஆச்சு?அதுக்காக தான், அதை பத்தி பேச தான் போன் பண்ணேன். 

என்னாச்சு? எந்த சவால்? என்று சித்தார்த் கேட்டான்.

டேய் நடிக்காத!  நான் என்னோட லக்கி சாம் என்கிட்ட  வரதுக்காக ஒரு சவால் விட்டேனே! நீ கூட அந்த தன்யா காஸ்மெட்டிக்கை என் கிட்ட இருந்து வாங்குவேன்னு என்கிட்ட சவால் போட்டியே! ஒரு வேளை தோத்துட்டா  இதன்யாவை  எனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னாயே! என்று நவீன் கூறினான்.

சித்தார்த் சிரித்துக் கொண்டே இதன்யாவை நீ என்ன நினைத்த? அவ ஒரு பொருள் மாதிரி உனக்கு தெரியுதா? அதை கொடுக்கிற மாதிரி பேசிட்டு இருக்க! என்று  கேட்டான் .

நவீன் சிரித்துக் கொண்டே “நடிக்காத அவளை நீ அப்படித்தானே ட்ரீட் பண்ணிட்டு இருக்க! அவ உனக்கு பொருள் தானே! என்று அவனும் கூறினான்.

ஆமா எனக்கு அவ பொருள் தான்! நீ எதுக்கு  பொருள்ன்னு  சொல்ற..

எனக்கு அவள் பொருள்  தான் ஆனால் உனக்கு என்று கேட்டான்.

எனக்கு அவ லக்கி charm! என்னோட உயிர் மாதிரி! 

அப்படியா என்று சிரிக்க ஆரம்பித்தான்.

நவீன் கோபமாக இந்த  சிரிக்கிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டாம்! ஆறு மாசம் முடியறதுக்கு ஜஸ்ட் இன்னும் 15 நாள்தான் இருக்கு! அதை ரிமைண்ட் பண்றதுக்கு தான் போன் பண்ணேன். என்னோட லக்கிய என்கிட்ட கொடுத்திடு!

வந்து நீயே கூட்டிட்டு போறியா? என்று சித்தார்த் கூறினான்.

நவீனிடம் இப்பொழுது பதில் இல்லை.

சித் சிரித்துக் கொண்டே 15 நாள் தானா? எனக்கு பெரிய விஷயம் இல்லை. நான் உன்னை தோக்கடித்துவிடுவேன். இந்த தடவை இன்ட்ரஸ்டா ஒரு விஷயம் பண்ண போறேன்.

சித்தார்த் கொஞ்சம் தீவிரமாக இந்த தடவை இதன்யாவை   வச்சு உன்ன தோக்கடிக்கிறேன் பாருடா! என்று கூறினான்.

நவீன் அமைதியாக இருக்க..

என்ன உனக்கு நம்பிக்கை இல்லையா?நீ தான் ஜெயிப்பேன்னு கான்பிடன்ட்டோட இருக்கியா? என்று சித்தார்த் கேட்டான்.

நவீன் தைரியமாக எனக்கு நான் தான் ஜெயிப்பேனு நம்பிக்கை இருக்கு! இந்த 15 நாள்ல நீ அப்படி எண்ணத்தை புடுங்கிட முடியும்னு! நானும் பாக்குறேன் டா! இதன்யா எனக்கு தான்! அவளை எப்படி தூக்குறேன்னு நீயும் பாரு! 

அதையும் பார்க்கலாம் என்று போனை வைத்தான் .

சித்தார்த் ஃபோனை பார்த்துக் கொண்டே அப்படியே திரும்ப அங்கே இதன்யா கைகளை கட்டிக் கொண்டே நின்றிருந்தாள்.

ஒரு நிமிடம் சித்தார்த் பயமா இருக்கு! பேய் போலவே இருக்கு!  என்று கூறினான்.

என்ன? நான் உங்களுக்கு பேய் மாதிரி தெரியுதா! யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க? அதுவும் என்னை பத்தி பேசுற மாதிரி தெரியுது! என்று இதன்யா கேட்டாள்.

அது ஒன்னும் இல்ல என முன்னாள் நடந்தான்.

இப்ப ஒழுங்கா சொல்றீங்களா? இல்லையா? என்று இதன்யா கேட்டாள்.

சித் யோசனையாக அவளை தலை முதல் கால் வரை பார்க்க ஆரம்பித்தான்.

என்ன அப்படி பாக்கறீங்க? நீங்க பார்க்கிறதுக்கும், பேசுறதுக்கும் என்ன சம்பந்தம்? ஒழுங்கா சொல்லுங்க? என்று கேட்டாள்.

சித்தார்த் அவளைப் பார்த்து இதெல்லாம் உனக்கு புரியாது! நீ ரொம்ப சின்ன புள்ள என்று கூறினான்.

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது! ஒழுங்கா விஷயத்தை சொல்லுங்க! என்ன பேசிட்டு இருந்தீங்க? அதுவும் என்னை பத்தி பேசிட்டு இருந்தீங்க! 

வா இங்க பக்கத்துல வந்து உட்காரு! என்று அவளை அழைத்தான்.

எதுக்கு என்ன கூப்பிடுறீங்க? என்று இதன்யா கேட்டாள்.

நீ பக்கத்துல வந்து உட்காரு கூறினான். அவளும் அருகில் வந்து அமர்ந்தாள். 

எனக்கு இப்போ பிசினஸ் பண்ணனும்! அதுவும் பொண்ணுங்க விஷயத்துல! என்று  சித் கூற..

இதன்யா மேலும் கீழும் கோபமாக பார்த்து என்ன பொண்ணுங்க விஷயத்துல பிசினஸ் பண்ண போறீங்களா? என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

அடியே லூசு அப்படி இல்லடி! காஸ்மெட்டிக் மாதிரி.. அதாவது sunscream, moisturizer, foundation  அந்த மாதிரி சொல்றேன்.  அதுக்கு வந்து எனக்கு ஐடியா வேணும்!  யாரு எனக்கு ஐடியா கொடுக்குறாங்களோ? அவங்களேயே நான் பார்ட்னரா ஜாயின் பண்ணிக்குவேன். அதுதான் உன்னால முடியுமா? உனக்கு  make up பத்தி என்ன தெரிய போகுது. என்று சித்தார்த் இளனமாக கூறினான்.

யாருக்கு மேக்கப் பத்தி  ஒன்றும் தெரியாது!  எனக்கு எல்லாமே தெரியும்! இந்த மாதிரி கெமிக்கல் மேக்கப் எல்லாம் எனக்கு தெரியாது. இயற்கையான மேக்கப் தெரியும். மஞ்சள் பூசுறது, இங்க பாருங்க, எனக்கு முடி எவ்வளவு நீளமா இருக்கு. இதையெல்லாம் மெயின்டைன் பண்றது சும்மான்னு நினைக்கிறீங்களா? எங்க அம்மா இதுக்கு எவ்வளவு வேலை செய்றாங்க தெரியுமா? வெந்தயம் செம்பருத்தி என்று ஆரம்பித்தாள்.

அப்போ உங்க அம்மா ரெடி பண்ற ஷாம்புவால தான் முடி வளரதுன்னு நெனச்சிட்டு இருக்கியா? என்று சித்  சிரித்துக் கொண்டே கேட்டான். 

ஆமா அதுல என்ன சந்தேகம்? 

சித் சிரிப்பை அடக்கிக்  கொண்டே அதுதான் பார்த்தேன்.  சரி எனக்கு இந்த டவுட்டை கிளியர் பண்ணு? அப்போ ஷாம்பு போட்ட முடி வளருமா? சாப்பிட்டால் முடி வளருமா? இதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லுடி! உன்ன நான் என்னோட பார்ட்னர் சேர்த்துக்கிறேன்! என்று சித்தார்த் கூறினான். 

அதற்கு இதன்யா..? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 263

அது இன்னிக்கு மேகா சூட்டிங் வந்தாங்களா என்று இதன்யா கேட்டாள். 

சித்தார்த் நேராக படுக்கைக்கு சென்றவன் அதை ஏன் என்கிட்ட கேட்கிறேன் உன்கிட்ட தான் அவளோட நம்பர் இருக்குமே என்று கூறினான்.

இதன்யா அவனை கோபமாக வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

ஏன்? இப்போ எதுக்கு என்னை அப்படி முறைக்கிற? என்று  பார்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல படுக்கையில் படுத்து கொண்டே அவளை பார்த்து கேட்டான்.

சொல்லு! எதுக்கு என்ன அப்படி முறைச்சு பார்க்கிற! நான் இப்போ உன்கிட்ட தப்பா எதுவும் சொல்லலையே! என்று இருபுருவங்களையும் சித்தார்த்த தூக்கினான்.

நீங்க ரொம்ப ரொம்ப மோசம் என்று கூறினாள்.

உன்கிட்ட அவதான் அன்னைக்கு உனக்கு போன் பண்ணி பேசினா தானே! சோ  அவளுக்கு போன் பண்ணி, ஏன் ஷூட்டிங் வரலன்னு கேளு! அத விட்டுட்டு என்கிட்ட கேட்டா? நான் என்ன பண்ண முடியும்! என்று சித்தார்த் கூறினான்.

இதன்யா அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

சித்தார்த் அவளை பார்த்துக் கொண்டே இப்போ எதுக்கு அவளை பத்தி அதிகமா கேட்டுக்கிட்டே இருக்க? என்ன விஷயம்?

நான் சும்மா கேட்டேன்!

உண்மையை சொல்லு! என்ன விஷயம்?

சும்மா தான் கேட்டேன் என்று கூறினாள்.

என்னமோ பண்ணு! என்று அவன் திரும்ப அந்த நேரம் அவனுக்கு போன் வந்தது.

அந்த போன எடுத்து கொடு டி!

கொடுக்க முடியாது.. என்று முகத்தை திருப்பினாள். 

எடுத்து குடுடி

நீங்களே எடுத்துக்கோங்க தரமாட்டேன்.

அப்போ உன்ன 7 ஹெவன் இப்பவே கூட்டிட்டு போறேன். 

அதுக்கெல்லாம் நீங்க லாயக்கு இல்ல!  என்று இதன்யா சொல்லிக்கொண்டே அவனை பார்த்தவள். திடுகிட்டாள்..

அதற்குள் சித் அருகில் வந்திருந்தான். என்ன சொன்ன? என்னடி சொன்ன? ஹான் என சோபாவில் சாய்த்து அவளின் இடையை அழுத்தி பிடித்து உதட்டை நோக்கி குனிந்தான். 

ஹே புத்தா! போன் அடிக்குது போ! போய் எடுத்து பேசு! போ புத்தா! 

சித் உதட்டை கவ்வி பிடித்து முத்தமிட ஆரம்பித்தான். மேல் உதடு கீழ் உதடு, வருடல், சீண்டல், லிக், பைட் என அனைத்தும் அந்த உதடுகள் மறத்து போகும் அளவுக்கு கவனித்தான். 

இதன்யா மூச்சை பிடித்து கொண்டே அவன் தோலை கட்டி கொண்டவள். இப்பொழுது மூச்சுக்கு திணற ஆரம்பித்தாள். 

மிம்ம் என்று முனக ஆரம்பித்தாள். சித் அடி பார்வையுடன் அவளை பார்த்து கொண்டே  சொக்கி பித்து பிடித்தவன். மேல் உதட்டை விட்டு கீழ் உதட்டை மட்டும் கவ்வி பிடித்தான். 

சரியாக அந்த நேரம் மீண்டும் போன் அடிக்க ஆரம்பித்தது. 

இதன்யா வெடுக்கென கண்ணை திறந்து அவன் தன்னை விட்டு விலகுவான் என பார்த்தாள். அவன் முழு மூச்சுடன் முற்றுகையில் இருக்க..

அவளால் அந்த முத்தத்தையே தாங்க முடிய வில்லை. அய்யோ இவர் அன்னிக்கு ரொம்ப ரொம்ப மென்மையா நடந்துகிட்டாரு! அதுக்கு அப்புறம் வன்மை தான் ஆனால் அதை கூட என்னால் தாங்க முடிஞ்சுது. இப்போ இது! இது என்னால் இந்த ஒரு முத்தத்தயே தாங்க முடியலையே 7 th heaven மாதிரி தெரியல! எனக்கு பரலோகம் தான் தெரியுது. இதுக்கு மேல அவர் தள்ளி போக நம்ம தான் எதும் செஞ்சாகணும். என முன்னால் இருக்கும் டீபாயின் மீது இருந்த அவனுடைய போனை கஷ்ட பட்டு எடுத்து பெயரை கூட பார்க்காமல் அட்டன் செய்து சித்தார்த்தின் காதுக்கு அருகில் வைத்தாள். 

ஹலோ என்று ஆண் குரல் கேட்க வெடுக்கென சித்தார்த் கண்ணை திறந்தான். 

அவனுடைய உதடுகள் கொஞ்சம் அவளின் உதட்டின் மேல் இருந்து நகர வேகமாக மூச்சு வாங்க சித்தார்த்தை பார்த்தாள். சித்தார்த்தும் அதே நிலையில் தான் இருந்தான். உடனே இதன்யா சிணுங்கி கொண்டே புத்தா மிம் நகருங்க எனக்கு மொத்த ஆக்சிஜனும் போச்சு என்று அவள் வேகமாக மூச்சு வாங்க.. இது அனைத்தையும் கேட்க கூடாது காதுகள் கேட்டு கண்கள் சிவக்க, கைகள் முறுக்கேற அவனுக்கு மூச்சு முட்டியது. 

யார் அவன்? வேற யாரு நவீன் தான்! 

இப்பொழுது தான் ஒடிசாவில் அனைத்து வேலையையும் முடித்து விட்டு மோகன் வந்தான். 

அவன் வந்ததும் நவீன் மிகவும் கோபமாக ஹலோ என்று மீண்டும் அழைத்தான். 

சித்தார்த் நம்பரை பார்த்து விட்டு அரே! என்னா சகுனம்! என்னா சகுனம்! இப்படி தொக்கா வந்து சிக்கிட்டன். என நினைத்தவன். ஹலோ என்று எழுந்து அமர்ந்தான். 

ஆனால் நவீன் எதுவும் பேச வில்லை. ஹலோ லைன்ல இருக்கீங்களா? என சித் கேட்டான். 

டவர் இல்லையா?  என்ன ஆச்சு? என சித் எழுந்து இதன்யாவை பார்த்து உதட்டை அழுத்தி துடைத்து கொண்டே கண் அடித்தவன்.  அப்படியே பால்கனி பக்கம் சென்றான். 

ஹலோ! மிஸ்டர் போன் பண்ணிட்டு பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்! அப்போ வைக்கிறேன். இனி டிஸ்டப் பண்ணாதீங்க! என சித் கட் செய்ய போக. 

நான் லைன்ல இருக்கேன்! 

அப்போ பேசுங்க என்று சித்தார்த் கூறினான்.

 நம்ம ரெண்டு பேத்துக்குள்ள நடுவில் இருந்த சவால்! என்ன ஆச்சு?அதுக்காக தான், அதை பத்தி பேச தான் போன் பண்ணேன். 

என்னாச்சு? எந்த சவால்? என்று சித்தார்த் கேட்டான்.

டேய் நடிக்காத!  நான் என்னோட லக்கி சாம் என்கிட்ட  வரதுக்காக ஒரு சவால் விட்டேனே! நீ கூட அந்த தன்யா காஸ்மெட்டிக்கை என் கிட்ட இருந்து வாங்குவேன்னு என்கிட்ட சவால் போட்டியே! ஒரு வேளை தோத்துட்டா  இதன்யாவை  எனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னாயே! என்று நவீன் கூறினான்.

சித்தார்த் சிரித்துக் கொண்டே இதன்யாவை நீ என்ன நினைத்த? அவ ஒரு பொருள் மாதிரி உனக்கு தெரியுதா? அதை கொடுக்கிற மாதிரி பேசிட்டு இருக்க! என்று  கேட்டான் .

நவீன் சிரித்துக் கொண்டே “நடிக்காத அவளை நீ அப்படித்தானே ட்ரீட் பண்ணிட்டு இருக்க! அவ உனக்கு பொருள் தானே! என்று அவனும் கூறினான்.

ஆமா எனக்கு அவ பொருள் தான்! நீ எதுக்கு  பொருள்ன்னு  சொல்ற..

எனக்கு அவள் பொருள்  தான் ஆனால் உனக்கு என்று கேட்டான்.

எனக்கு அவ லக்கி charm! என்னோட உயிர் மாதிரி! 

அப்படியா என்று சிரிக்க ஆரம்பித்தான்.

நவீன் கோபமாக இந்த  சிரிக்கிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டாம்! ஆறு மாசம் முடியறதுக்கு ஜஸ்ட் இன்னும் 15 நாள்தான் இருக்கு! அதை ரிமைண்ட் பண்றதுக்கு தான் போன் பண்ணேன். என்னோட லக்கிய என்கிட்ட கொடுத்திடு!

வந்து நீயே கூட்டிட்டு போறியா? என்று சித்தார்த் கூறினான்.

நவீனிடம் இப்பொழுது பதில் இல்லை.

சித் சிரித்துக் கொண்டே 15 நாள் தானா? எனக்கு பெரிய விஷயம் இல்லை. நான் உன்னை தோக்கடித்துவிடுவேன். இந்த தடவை இன்ட்ரஸ்டா ஒரு விஷயம் பண்ண போறேன்.

சித்தார்த் கொஞ்சம் தீவிரமாக இந்த தடவை இதன்யாவை   வச்சு உன்ன தோக்கடிக்கிறேன் பாருடா! என்று கூறினான்.

நவீன் அமைதியாக இருக்க..

என்ன உனக்கு நம்பிக்கை இல்லையா?நீ தான் ஜெயிப்பேன்னு கான்பிடன்ட்டோட இருக்கியா? என்று சித்தார்த் கேட்டான்.

நவீன் தைரியமாக எனக்கு நான் தான் ஜெயிப்பேனு நம்பிக்கை இருக்கு! இந்த 15 நாள்ல நீ அப்படி எண்ணத்தை புடுங்கிட முடியும்னு! நானும் பாக்குறேன் டா! இதன்யா எனக்கு தான்! அவளை எப்படி தூக்குறேன்னு நீயும் பாரு! 

அதையும் பார்க்கலாம் என்று போனை வைத்தான் .

சித்தார்த் ஃபோனை பார்த்துக் கொண்டே அப்படியே திரும்ப அங்கே இதன்யா கைகளை கட்டிக் கொண்டே நின்றிருந்தாள்.

ஒரு நிமிடம் சித்தார்த் பயமா இருக்கு! பேய் போலவே இருக்கு!  என்று கூறினான்.

என்ன? நான் உங்களுக்கு பேய் மாதிரி தெரியுதா! யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க? அதுவும் என்னை பத்தி பேசுற மாதிரி தெரியுது! என்று இதன்யா கேட்டாள்.

அது ஒன்னும் இல்ல என முன்னாள் நடந்தான்.

இப்ப ஒழுங்கா சொல்றீங்களா? இல்லையா? என்று இதன்யா கேட்டாள்.

சித் யோசனையாக அவளை தலை முதல் கால் வரை பார்க்க ஆரம்பித்தான்.

என்ன அப்படி பாக்கறீங்க? நீங்க பார்க்கிறதுக்கும், பேசுறதுக்கும் என்ன சம்பந்தம்? ஒழுங்கா சொல்லுங்க? என்று கேட்டாள்.

சித்தார்த் அவளைப் பார்த்து இதெல்லாம் உனக்கு புரியாது! நீ ரொம்ப சின்ன புள்ள என்று கூறினான்.

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது! ஒழுங்கா விஷயத்தை சொல்லுங்க! என்ன பேசிட்டு இருந்தீங்க? அதுவும் என்னை பத்தி பேசிட்டு இருந்தீங்க! 

வா இங்க பக்கத்துல வந்து உட்காரு! என்று அவளை அழைத்தான்.

எதுக்கு என்ன கூப்பிடுறீங்க? என்று இதன்யா கேட்டாள்.

நீ பக்கத்துல வந்து உட்காரு கூறினான். அவளும் அருகில் வந்து அமர்ந்தாள். 

எனக்கு இப்போ பிசினஸ் பண்ணனும்! அதுவும் பொண்ணுங்க விஷயத்துல! என்று  சித் கூற..

இதன்யா மேலும் கீழும் கோபமாக பார்த்து என்ன பொண்ணுங்க விஷயத்துல பிசினஸ் பண்ண போறீங்களா? என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

அடியே லூசு அப்படி இல்லடி! காஸ்மெட்டிக் மாதிரி.. அதாவது sunscream, moisturizer, foundation  அந்த மாதிரி சொல்றேன்.  அதுக்கு வந்து எனக்கு ஐடியா வேணும்!  யாரு எனக்கு ஐடியா கொடுக்குறாங்களோ? அவங்களேயே நான் பார்ட்னரா ஜாயின் பண்ணிக்குவேன். அதுதான் உன்னால முடியுமா? உனக்கு  make up பத்தி என்ன தெரிய போகுது. என்று சித்தார்த் இளனமாக கூறினான்.

யாருக்கு மேக்கப் பத்தி  ஒன்றும் தெரியாது!  எனக்கு எல்லாமே தெரியும்! இந்த மாதிரி கெமிக்கல் மேக்கப் எல்லாம் எனக்கு தெரியாது. இயற்கையான மேக்கப் தெரியும். மஞ்சள் பூசுறது, இங்க பாருங்க, எனக்கு முடி எவ்வளவு நீளமா இருக்கு. இதையெல்லாம் மெயின்டைன் பண்றது சும்மான்னு நினைக்கிறீங்களா? எங்க அம்மா இதுக்கு எவ்வளவு வேலை செய்றாங்க தெரியுமா? வெந்தயம் செம்பருத்தி என்று ஆரம்பித்தாள்.

அப்போ உங்க அம்மா ரெடி பண்ற ஷாம்புவால தான் முடி வளரதுன்னு நெனச்சிட்டு இருக்கியா? என்று சித்  சிரித்துக் கொண்டே கேட்டான். 

ஆமா அதுல என்ன சந்தேகம்? 

சித் சிரிப்பை அடக்கிக்  கொண்டே அதுதான் பார்த்தேன்.  சரி எனக்கு இந்த டவுட்டை கிளியர் பண்ணு? அப்போ ஷாம்பு போட்ட முடி வளருமா? சாப்பிட்டால் முடி வளருமா? இதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லுடி! உன்ன நான் என்னோட பார்ட்னர் சேர்த்துக்கிறேன்! என்று சித்தார்த் கூறினான். 

அதற்கு இதன்யா..? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 263

எனக்கு இப்போவே சொல்லு? சாப்பிடுறதாள முடி வளருதா? சாம்பு போட்டு ஹேர் வாஷ் பன்றதால முடி வளருதா? என சித்தார்த் கேட்டான். 

இதன்யா அவனை பார்த்து திறுதிறுவென முழிக்க ஆரம்பித்தாள். எதுவா இருக்கும்? எனக்கே ஒரே குழப்பமா இருக்கே! என யோசித்தாள். 

ஹே பதில் சொல்லு டி! எதனால் முடி வளருது? இதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லு! அப்படி சொல்லிட்ட நீ தான் என்னோட பிஸ்னஸ் பார்ட்னர். என்று கூறினான். 

சாம்பு போட்டால் அழுக்கு தான் போகும். சாப்பாடு! அது சாப்பாடு சாப்பிட்டால் தான் முடி வளரும்! என்று கூறினாள். 

இதை கேட்டதும் சித்தார்த் சிரிக்க ஆரம்பித்தான். 

ஹே இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க? நான் தப்பா சொல்லிட்டேனா? இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க? என புருவம் சுருக்கி கொண்டே கண்ணாடியை மூக்குக்கு தள்ளினாள். 

சரி தான்! நீ கொஞ்சம் பாஸ் ஆகிட்ட? என்று கூறினான்.

அதென்ன கொஞ்சம்? நான் சொன்னது தப்பா? 

இல்ல அப்படி சொல்ல முடியாது கொஞ்சம் தான் சரி என்று சித்தார்த் கூறினான். 

என்ன சொல்றீங்க? என இதன்யா கேட்டாள். 

உனக்கு முடி நீளமா இருக்க முதல் காரணம் உன்னோட ஜெனடிக் கோட், ஐ திங்க் உங்க அம்மா, கிராண்ட் மா எல்லாருக்கும் முடி நீளமா இருக்குமே! என்று சித்தார்த் கூறினான். 

அவள் ஆச்சரியமாக ஆமாங்க நீங்க சொல்றது சரி தான். இன்னும் கூட எங்க அம்மாச்சிக்கு முடி நீளமா இருக்கும். 

ஹான் அது சரி தான்! அண்ட் இன்னொரு விசயம் இருக்கு? 

என்ன என்று இதன்யா கேட்க 

முடி வளரதுக்கு தேவையான பயோட்டின் தான்! நம்ம பாடில இருக்கிற வேஸ்ட்டேஜ் திங்க்ஸ் ல முடி வளருதுண்ணு சொல்லுவாங்க! ஆனால் அது கொஞ்சம் சரியா இருந்தால் கூட பயோட்டின் முக்கியம். என்று கூறினான். 

அப்போ எண்ணெய் போட்டால் முடி வளராதா? 

எண்ணெய் போட்டால் முடி கொட்டும் ஆல்ரெடி நம்ம பாடியே ஆயிலை புரோட்யூஸ் பண்ணும். அதனால் நம்ம டெய்லி தலைக்கு குளிச்சி காய வச்சு. அழுக்கு இல்லாமல் பார்த்துக்குட்டா போதும். 

தேங்காய் எண்ணெய் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க இத்தனை முடிய வச்சுட்டு நான் தலைக்கு குளிச்சு சிக்கு எடுத்து ஜடை பின்னி, என்று பெரு மூச்சை விட்டாள். 

சீபம் ஆயில் ஏற்கனவே நம்ம தலையில் ஒவ்வொரு முடி வேர் பகுதியிலும் produce ஆகும். நீ அதுக்கும் மேல மறுபடியும் எண்ணெய் வைக்கும் போது பொடுகு அழுக்கு தான் farm ஆகும் என பெரு மூச்சை விட்டான்.

இதன்யா அவளுடைய முடியை முன்னால் போட்டு நீவி பார்த்தவள். நம்ம பாரின் போனதுல முடிய சரியாகவே பாங்கு பார்க்கல அதனால் கொட்டுது. இனி கொஞ்சம் சேர்ந்து சாப்பிட போறேன் அப்போ தான் முடி இன்னும் நீளமா வளரும். என்று கூறினாள். 

சித்தார்த் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். 

அவள் கடுப்பாகி என்ன டா பொழுதிக்கும் சிரிக்கிற? பல்லை காட்டாத! 

சரி சரி! இனி பல்லை காட்டல நான் வாய மூடிட்டு சிரிச்சுக்கிரென். என கொஞ்சமாக சிரித்தான். 

நான் என்ன தப்பா சொல்லிட்டேன். உனக்கு மூளை வழிந்து கொட்டி கடக்குது. எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்ல. போதுமா!  

இல்ல டி! நீ கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவது முக்கியம் இல்ல அதுல பயோட்டின் உன்னோட முடிக்கு தேவையான அளவு எடுத்துக்கணும். அப்போ தான் முடி வளரும். அதுக்கு தான் சிரித்தேன். 

எனக்கு எப்படி நான் எவ்ளோ பயோட்டின் எடுத்துக்கணும் அப்டின்னு தெரியும்? எதுவும் மாத்திரை இருந்தால் போட்டுக்கிட்டா நல்லா இருக்கும். தொல்லையே இல்லை. என்று இதன்யா கூறினாள். 

சித்தார்த் ஒரு சில நிமிடங்கள் அப்படியே அமைதி ஆனவன். அவளை பார்த்தான். 

என்ன ஆச்சு! முகம்? என இதன்யா கேட்டாள். 

சித் சிரித்து கொண்டே எழுந்து அவளின் அருகில் வந்தவன் அப்படியே தூக்கி அவளின் இடையில் முத்தம் பதித்தான். 

என்ன? என்ன புத்தா பண்ற? எனக்கு கூசுது என்று சிணுங்கினாள். 

எனக்கு ஐடியா கிடைச்ச்சிடுச்சு நீ தான் டி என்னோட பார்ட்னர். நீ தான் நீ மட்டும் தான்! என அவளை படுக்கையில் போட்டான். 

என்ன சொல்றீங்க? என கண்கள் விரிய கேட்டாள். 

சித் உத்வேகத்துடன் அவளை பார்த்தவன். நம்ம ஏன் ஒரு பயோட்டின் supplement market ல கொண்டு வர கூடாது? 

ஒன்னும் புரியல! 

அடியே நம்ம முடி வளர மாத்திரை கொண்டு வரலாம். 

க்கும்! யாரு வாங்குவா! ஏற்கனவே சாம்பு, ஆயில் அப்டின்னு ஆயிரம் product இருக்கு இதுல எப்படி இது ஒர்க் அவுட் ஆகும். 

ஒர்க் அவுட் ஆகும்! அந்த மாத்திரை பேர் little heart supplement lovers special pack. 

அப்டின்னா? 

அந்த மாத்திரைக்கு உன்னோட பேரு வைக்க போறேன். அது லிட்டில் ஹார்ட் வடிவத்தில் இயற்கை இனிப்பு தேன் ல செய்ய போறேன்.அண்ட் அந்த மாத்திரைக்காக காலெஜ் ல love poet English, தமிழ், கன்னடம், தெலுங்கு மாதிரி எல்லா மொழியிலும் லிட்டில் ஹார்ட் அப்டின்னு அந்த பேரில் website create பண்ணி அதுல all agers எல்லாரையும் ஒன் வீக் ல கவிதை எழுதி போட சொல்லுவேன். அதிலேயே லிட்டில் ஹார்ட் அப்டின்னா என்ன? அப்டின்னு மக்கள் தீவிரமா தேடி படிக்க ஆரம்பிப்பாங்க. சரியா ஒன் வீக் அப்புறம் அவங்க எழுதிய எல்லா கவிதையையும் boys and girls ரெண்டு வெரைட்டியா பிரிச்சு பசங்க எழுதினது எல்லாம் பொண்ணுங்க சாப்பிடும் பயோட்டின் ராப்பர்ல QR மாதிரி ஸ்கேனர் கொடுத்திடுவென். At the same time பசங்களுக்கு bodyகு தேவையான supplement அதிலேயும் இதே போல செய்வேன். அதை நம்ம product க் கு brand ambassitor இப்போ நவ்யா தான், male க்கு நானே இருக்க போறேன். ரிலீஸ் பண்ணதும் லீகல் மெடிக்கல் assurence fssai license எல்லாமே வச்சு market ல ரிலீஸ் பண்ண போறேன். ஜஸ்ட் 15 நாளில் ஒரு புது trend அ என்னோட ஹான் இல்ல நம்ம prodect பண்ண போகுது என மூச்சு விடாமல் சொல்லி முடித்தான். 

இதன்யா அவனை வாய் திறந்து பார்த்தவள். அதென்ன QR scan? என்று கேட்டாள். 

சித் தந்திர புன்னகை சிந்தியவன். இப்போ omr scan ல நீ போன்ல scan பண்ணா அதுல உன்னோட பேரு கேட்கும். சரி! அப்புறம்? 

கூடவே நான் அதுல லவ்வாரா சிங்கிலா அப்டின்னு, மொழி, காலேஜ் வாரியா நிறைய கேள்வி வச்ச்ருப்பென். இதுல எல்லாமே பதில் சொல்லிட்டு வரும் போது அந்த பொண்ணுக்கு லவ்வர் இருக்கான்னு பார்ப்பேன். ஆல்ரெடி கவிதை போட்டியில் கலந்து இருந்தால் அப்போவே விவரம் இருக்கும். அதுல மேட்ச் பண்ணி அவனோட காதலன் இவழுக்காக எழுதிய கவிதை அந்த QR code ல ஷோ ஆகும். 

எப்படி? 

இது ஒர்க் அவுட் ஆகாது! 

வேற என்ன நீ சொல்லு! என்று சித்தார்த் கேட்டான். 

இதன்யா யோசித்து விட்டு ரெண்டு மாத்திரயோட ராப்பெர்லயும் loveக்கு tips கொடுக்கிற மாதிரி teen agerக்கு கொடுக்கலாம். அதே போல கொஞ்சம் 40+ married persons கு அவங்களோட partner கூட happy யா போக சின்ன சின்ன விசயத்தை tip மாதிரி கொடுக்கலாம். இதுல one side love, commited, marriage single, introvert, extrovert அப்டின்னு வெரைட்டியா வச்சு ரிலீஸ் பண்ணும் போது யாருக்கு என்ன தேவையோ அதை வாங்கி பிரிச்சு அவங்க சாப்பிடும் போது அந்த நாள் இனிய நாளாக இருக்கும். ஒரு different feelings கொடுக்கும். எப்டி? 

சித்தார்த் கர்வத்துடனும், பெருமையாகவும், தன் மனைவியை பார்த்தான். அவளை அப்படியே இறுக்கி அணைத்து கொண்டான். நீ என்னை விட அறிவு டி! நான் என்னோட மனசுல இருந்து சொல்றேன். நீ ரொம்ப தனித்துவமான பொண்ணு! ரொம்ப unic என்று கூறினான். 

மிம்! நன்றிகள் பற்பல! 

சித்தார்த் அவளின் கழுத்தில் முகம் புதைக்க உடனே இதன்யா தள்ளி விட்டாள். 

ஹே உன்னை பாராட்டி கொஞ்சி தானே பேசினேன். இதுக்கு என்னை தள்ளி விடுற? Saddist! 

நீங்க பண்றது எனக்கு பிடிக்கல..

என்ன பிடிக்கல! நான் என்ன தப்பா பண்ணேன். சொல்லு! 

இதன்யா முகத்தை திருப்பி கொண்டு நீங்க male கு brand ambassador ஆ வேணாம். எனக்கு பிடிக்கல..

சித்தார்த் அவளின் பொறாமையை நினைத்து சந்தோசம் கொண்டவன். வேற வேற யாரை போடுறது? 

உங்க தம்பி! அவரை போடுங்க! 

ஹே அடிங்க! யாரு எனக்கு தம்பி? அவன் ஒரு b* என திட்ட ஆரம்பித்தான். 

இதன்யா காதை அடைத்து கொண்டு கதவை நோக்கி நடந்தவள். எனக்கு தெரியாது. ஆனால் நீங்க அந்த அம்பாசிடர் காராக இருக்க கூடாது. 

சித்தார்த் அவளின் பின்னால் நடந்து கொண்டே ஹே இந்த product நம்ம பவானி PVT LTD ல இருந்து பண்ண போறோம். அவனை எப்டி இதுல போட முடியும். 

இதன்யா அவனை திரும்பி முறைத்து பார்த்தவள். என்னமோ பன்னுங்க! ஆனால் அதுக்கு என் பேரை வைக்காதீங்க! 

அது உன் பேரா? என சிரித்து கொண்டே கேட்டான். 

அவனை முறைத்து கொண்டும் முனகி கொண்டும் இறங்கியவள். எதுவும் பேசாமல் உணவு முடித்தாள். அவனுக்கு முன்னால் மேலே வந்து சோபாவில படுத்து கொண்டாள். 

ஹே என்ன பண்ற? என்ன டி அங்கே சோபா? அதுல போய் படுத்துக்குட்ட? என்ன டி ஆச்சு? 

அவள் எதுவும் பேச வில்லை. 

சித்தார்த் பெரு மூச்சை விட்டு அவளை பார்த்தவன். வேகமாக வந்து அவளை ஒரே தூக்கலில் தூக்கி மெத்தைக்கு கொண்டு வந்தான். அவள் தடுக்க வில்லை அப்படியே இருந்தாள்.

படுக்கையில் படுத்ததும் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி கொண்டாள். 

சித்தார்த் அவளின் காதில் மீசை முடி வருட சூடான மூச்சை விட்டான். 

ஹே தள்ளி போ! ஒழுங்கா போயிடு! என்று இதன்யா தள்ளி படுத்தாள். 

ரெட் பேபி இப்போ நம்ம seventh heaven போலாமா? என அவளின் கழுத்தில் முத்தம் பதித்தான்.

இதன்யா…? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 264

ரெட் பேபி இப்போ நம்ம seventh heaven போலாமா? என அவளின் கழுத்தில் முத்தம் பதித்தான். 

இதன்யா அவனிடம் இருந்து தள்ளி கழுத்தை போர்த்தி கொண்டவள். ஒழுங்கா தள்ளி போ! இல்ல உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. என சொல்லி கொண்டே தள்ளி சென்றாள். 

என்ன டி பண்ணுவ? நான் உன்னை என சொல்ல வந்தவன். அப்படியே அமைதியாக இருந்தான். 

இதன்யா அவன் பக்கம் திரும்பி அவனுடைய இடைக்கு கீழ் எட்டி உதைக்க வந்தாள். 

சித்தார்த் கொஞ்சம் கூட இதை அவளிடம் எதிர்பார்க்காதவன் அவளின் காலை பிடித்து கொண்டு என் என்ன டி பண்ற? ஹான் இப்போ எதுக்கு எட்டி உதைக்க வந்த? எவ்ளோ தைரியம் டி! 

போடா!  என்று மீண்டும் திரும்பி கொண்டாள்.

சித்தார்த் அவளின் மேல் வந்தவன் கைகள் ரெண்டையும் ஒரு கையில் பிடித்து கொண்டு இதழுக்கு குனிந்தான். 

என்ன டா? என்ன பண்ற? 

பார்த்தால் தெரியலையா? என இதழில் அழுத்தி முத்தம் கொடுத்தான். 

என்ன டி? விட்டால் ஓவரா போற? என்ன என கீழ் உதட்டை கவ்வி பிடித்தான்.

ஹே வா.. க்கிது! என கூறினாள். 

வழிகட்டுமே! என முத்தமிட ஆரம்பித்தான்.

தள்ளி போங்க? என அவளுடைய மொத்த சக்தியையும் பயன் படுத்தினாள்.

சித்தார்த் கண்களை மூடி அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன். அப்படியே அவளிடம் மென் குரலில் என்னன்னு தெரியலை  பிஸ்னஸ் பத்தி பேசும் போது நீ சொன்ன ஐடியா, கூடவே உன்னோட அதை சொல்லும் விதம் எனக்கு எது எதோ பண்ண தோணுச்சு! பொண்ணுங்க சின்சியரா எதாவது வேலை பண்ணிட்டு இருக்கும் போது ரொம்ப அழகா தெரிவாங்க! அப்படி தான் நீ இன்னிக்கு செம்மையாக இருந்த! இப்போ  7 th heaven க்கு மேல போகனும் போல தோணுது. So இப்போ போலாமா! என அவளின் நெஞ்சில் முகம் புதைத்தான். 

கூடாது என அவனுடைய முடியை பிடித்து நிமிர்த்தி பார்த்தாள்.

ஏன்! ஏன் கூடாது. நீ என் பொண்டாட்டி! அதோ உன் கையில் அந்த ரிங் நான் போட்டது. அபீஸியலி என்று அவளின் உடையின் மேல எட்சில் செய்தான். 

ஹே! ஹேய்! தள்ளி போடா! 

ஏன் டி!. என்று சித்தார்த் கைகளுக்கு வேலை கொடுத்து கசக்க ஆரம்பித்தான்.

அப்போ இந்த prodectக்கு யாரு பிராண்ட் அம்பாசிடர் சொல்லுங்க! 

அது நவ்யா! வேற யாரை வைக்கட்டும்? 

டேய் பசங்க அம்பாசிடர் யாரு? என்று இதன்யா அவனை பார்த்தாள். 

சித்தார்த் நிமிர்ந்து அவளை பார்த்தான். 

ஹே பதில் சொல்லு! யார் அது? 

சித்தார்த் அவளிடம் இருந்து தள்ளி படுத்து கொண்டு உன்னோட பேரில் நான் ஒரு விசயத்தை லாஞ்ச் பண்ண போறேன். அதனால் அதுக்கு நானே பிராண்ட் அம்பாசிடர் ஆ இருக்க ஆசை பட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு எப்படியும் நீ தான் பொண்ணுங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர்ஆ வர ஒகே வா! சொல்லு! 

அது முடியாது! எங்க வீட்ல தெரிஞ்சா நான் செத்தேன். என இதன்யா எடுத்த எடு்பிலேயே கூறி விட்டாள். 

சித்தார்த் அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான். என்ன இது இவரு நம்மள கன்வின்ஸ் பண்ணுவாருன்னு பார்த்தால் நான் இவரை கண்வின்ஸ் பண்ணனுமா? என அவனை கட்டி கொண்டு அருகில் நெருங்கினாள். 

எனக்கும் தூக்கம் வருது! என அவளின் கையை தட்டி விட்டான்.

எனக்கு தூக்கம் வரல.. சரி வாங்க அது பண்ணலாம்! 

சித் அமைதியாக இருந்தான். ஹே உன்னை தான் வாடா மேட்டர் பண்ணலாம்! என்று கூறி விட்டாள். 

சித்தார்த் மனதில் அடிப்பாவி இவள் இவளை! சாதாரண ஆள் இல்லை சேர்க்கை சரி இல்லை! அந்த பிரியா அவள் அவள் தான் இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்லி கொடுத்திருப்பா! இடியட்! என நினைத்து கொண்டே அப்படியே இருந்தான்.

இதன்யா அவன் முகம் திரும்பிய பக்கம் வந்தவள். ஹே சாரி புத்தா! என் செல்ல புத்தா! உனக்கு புரியாது என்னோட feelings என்று அவளின் இதழில் முத்தம் கொடுத்தாள். 

எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்றேன் தானே! போ போய் தூங்கு!.

புத்தா உனக்கு ஏன் புரிய மாட்டிக்கிதி! இப்போ நம்ம முன்ன மாதிரி இல்ல! நம்ம புருசன் பொண்டாட்டி! நீ படத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கல! 

சித்தார்த் நேராக பார்த்து கொண்டே நான் இப்போ மட்டுமா நடிக்கிறேன். இதுக்கு முன்னாடியும் தான் நடிச்ச்சிட்டு இருந்தேன். அப்போ எதுவுமே நீ சொல்லவே இல்லையே! நடிக்காத டி! உன்னோட பேச்சு எப்போவும் uncertaintieஆ தான் இருக்கு! 

இல்ல புத்தா! உனக்கு தெரியாது. நீ இங்கே இருக்க! என இதயத்தை காட்டியவள். ஏன் புத்தா! நான் சாதாரணமா உன்னை பத்தி பிரியா பேசினா கூட எனக்கு பிடிக்காது. அப்படி இருக்கும் போது நீ பிராண்ட் அம்பாசிடர்ஆ நீயே அந்த நடிகை கூட இருக்கேன்னு சொல்ற? இப்போ தான் லீனா மேம் பிரச்னை முடிஞ்சது. ஐ மின் எப்போவும் அவங்களை கம்பேர் பண்ணி தானே உன்னை பேசுவாங்க! இப்போ அது இல்லாம இருக்கு நீ மறுபடியும் வந்து அந்த புது நடிகை கூட பேசினால் இந்த டீவி காரங்களுக்கு நீயே கண்டென்ட் கொடுத்த மாதிரி ஆகிடும். இதை நான் நினைக்கிறேன். ஒரே வார்த்தையில் சொல்ல போனால்  எனக்கு பிடிக்கல! 

 என்ன பிடிக்கல? என்று சித்தார்த் அவளை பார்த்தான். 

இன்னும் ஓபனா சொல்லனுமா! உன் கூட அந்த ஹீரோயின் பிராண்ட் அம்பாசிடர்ஆ இருக்கிறது எனக்கு பிடிக்கல! அதே போல! உன்னை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். நீ என்னோட பொருள்! எனக்கு மட்டும் தான்! 

சித்தார்த் புருவம் தூக்கி கொண்டு உன்னோட பொருள் நானா?  என்று கேட்டான். 

ஆமா நீ என் பொருள்! என்று இதழ் பதிக்க அருகில் வந்தவள் பேக் அடித்தாள். 

ஏன் டி? 

நீ ஃபர்ஸ்ட் பிராண்ட் அம்பாசிடர் மாத்து இந்த விசயம் மார்கெட் ல ரிலீஸ் ஆகட்டும். அந்த பிராண்ட் அம்பாசிடர் யாருன்னு பார்த்திட்டு தான்  நான் உன் பக்கத்தில் வருவேன். என கூறினாள். 

என்ன டி இது? 

ஆமா போடா! புத்தா! நீ அம்பாசிடர் ஆன? அடுத்து உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன். என சொல்லி விட்டு அவனையே கட்டி கொண்டு உறங்க ஆரம்பித்தாள். 

சித்தார்த் அவளின் முகத்தை நிமிர்த்தி சரி வேற ஒரு ஆளை பார்க்கிறேன். போதுமா! என முத்தமிட வந்தான். 

முதல்ல செய் அப்புறம் மற்றது செய்யலாம். என தள்ளி விட்டாள். 

ஹே ஓவரா போற டி! எனக்கு அட்லீஸ்ட் கொஞ்சம் கட்லிங் வேணும்! 

இட்லி வேணும்னா இருக்கு கீழே போய் சாப்பிட்டுக்க! உனக்கு சட்னியா நான் வர மாட்டேன். என இதன்யா கூறி விட்டு அவனுடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். 

சித்தார்த் அப்படியும் இப்படியும் ஆடி அசைந்து சிணுங்கி அவளை முத்தமிட்டு கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சல் சீண்டலுடன் கட்லிங் என்று அவளை கசக்கி முத்தமிட்டு தான் தூங்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. இதன்யாவுக்கு காலேஜ் லீவ்! அதனால் ரொம்ப நேரம் தூங்கி கொண்டிருந்தாள். 

என்ன இவளோ நேரம் தூங்கிட்டு இருக்க? ஹே எழு டி!. என சித்தார்த் சொல்லி கொண்டே ஷூட்டிங் கிளம்பினான். 

எனக்கு லீவ் புத்தா நான் தூங்கிட்டு தான் இருப்பேன். நீ போ! உனக்கு தான் ஆபிஸ் என்று கூறினாள்.

எத்தனை நாள் லீவு! போடி ஒழுங்கா ஸ்கூல் கிளம்பி போ! நான் ஸ்கூல் க்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. ஒழுங்கா போய் அங்கே என்ன நடக்குதுன்னு சொல்லு! நீ ஸ்கூழ்க்கு போயிட்டு கால் பண்ற! என்று அருகில் இருக்கும் பால் கணி கதவுகளை திறந்து விட்டவன். கூடவே ac off செய்தான். 

புத்தா! லைட் ஆஃப் பண்ணு..

முடியாது போடி! போ! என்று துரத்தி விட்டான். 

அப்படியே மாலை ஆனது. இங்கே அபி பூஜாவுக்காக காத்திருந்தான். 

இன்னும் எவ்ளோ நேரம்! கொஞ்சம் கூட டைம் கீப் அப் கூட இவளுக்கு இல்லை. நாண்சென்ஸ்.. என திட்டி கொண்டே அமர்ந்திருந்தான். 

அந்த நேரம் பூஜா கொஞ்சம் சோர்வுடன் வந்தாள். பள்ளியில் காலையில் இருந்து மாலை வரை ஓயாமல் வேலைகள். அங்கிருந்து இங்கே நின்று கொண்டே இருக்க வேண்டும். ச்ச என்ன டா வாழ்க்கை என்பது போல இருந்தது. 

பூஜா வந்ததும் அபி அவளை அழைக்க போன் எடுக்க அதற்குள் ரெஸ்ட் ரூம் சென்று விட்டாள். 

அபி அவள் வருவதற்காக காத்திருந்தான். இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே டைம் ஓட்டிட்டு இருப்பா! ச்ச! என அவன் நினைத்து கொண்டு திரும்ப பூஜா முகத்தை துடைத்து கொண்டே வந்தாள். 

அவள் வந்த அடுத்த நொடி போன் கூடவே வந்தது. 

ஹலோ! 

பூஜா கிட்ட போனை கொடு! என்று அபியின் குரல் கேட்டது. 

அந்த வரவேற்பு பெண் பூஜாவை ஆச்சரியமாக பார்த்து கொண்டே ஹே பூஜா உன்னை பெரிய டாக்டர் வர சொன்னாங்க! என்று கூறினாள். 

யாரது பெரிய டாக்டர்? இன்னிக்கு அவர் தான் opd பார்க்கிராரா? என்று பூஜா கேட்டாள். 

ஹே உன்னை டீன் வர சொல்றாரு! என்று கூறினாள். 

அவனா? என மனதில் நினைத்தவள். எதுக்கு என கேட்டாள்.

அதற்குள் அடுத்த போன் வந்தது. ஹே அவரு தான் டி கூப்பிடுறார்! என பயந்து கொண்டே அந்த லேண்ட் லைன் எண்ண பார்த்தாள். 

இதோ போறேன் என பூஜா அவன் அறையை நோக்கி சென்றாள். 

எதுக்கு வர சொல்றாரு? என may I come in sir என தட்டி கொண்டே உள்ளே நுளைந்தாள். 

அபி…? 

என் பேரு சாணக்யா எனக்கு சித்தார்த் சார் கம்பெனியில் வேலை செய்யறத தான் நான் என்னோட ட்ரீமா நினைக்கிறேன். என வந்தான். 

யார் இந்த சாணக்யா? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 265

அபி அவளை உள்ளே வர சொல்லி வரவேற்பு பெண்ணிடம் சொல்ல, இதோ போறேன் என பூஜா அவன் அறையை நோக்கி சென்றாள். எதுக்கு வர சொல்றாரு? என may I come in sir என தட்டி கொண்டே உள்ளே நுளைந்தாள். 

 அபிஜித் அவளை ஏளன பார்வையுடன் அந்த ரோலிங் சேரில் நன்றாக சாய்ந்து கொண்டே அவளை மேலும் கீழும் பார்த்தான். 

சார் என்னை எதுக்கு வர சொன்னீங்? என்று பூஜா கேட்க..

உன்ன பத்தி இப்போ  நல்லா தெரிஞ்சுகிட்டேன்! நீ எப்படியாப்பட்ட ஆளுன்னு? இப்போ தெரியுது! சரி அதைவிடு! இந்தா என்று அவளின் முன்னாள்  நான்கு பணகட்டுகளை எடுத்து வைத்தான். 

பூஜா புருவம் சுருக்கிக்கொண்டே என்ன இது? என்று கேட்க..

தெரியலையா என்று ஆளுமையான குரலில் கேட்டான்.  

 எதுக்கு என்ன வர சொன்னிங்க? அதுக்கு அதை மட்டும் சொல்லுங்க என்று கைகளை கட்டிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

சும்மா ஓவரா நடிக்காத! இந்த பணத்தை எடுத்துக்க! இதுக்கு தானே இந்த ட்ராமா எல்லாம் பண்ணிட்டு இருக்க! என்று கூறினான்.

அவள் ஒன்றும் புரியாமல் நீங்க என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல! என்று அவனைப் பார்த்தாள்.

அபிஜித் ஒரு பெருமூச்சியை விட்டுக் கொண்டே நீ ரொம்ப ரொம்ப பாவம்ன்னு சொல்லி அப்படியே பிரியா கிட்ட அந்த சதீஷ் கிட்ட எல்லாம் சீன் கிரியேட் பண்ண பாக்குறியா? அவன் கிட்ட அப்பாவி தனமா நடிச்சு பிரியாகிட்ட இருந்து சதீஷை பிரிச்சு நீ லவ் பண்ணலாம்னு பாக்குறியா? என்று கூறினான்.

இதையெல்லாம் கேட்க கேட்க பூஜாவுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. என்ன சொல்றீங்க? நான் எல்லாம் அப்படி நினைக்கிற ஆள் இல்ல! நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல! நான் எதுவுமே பண்ணலையே! என்று அழுது கொண்டே அவனைப் பார்த்தாள்.

ஏய் பொய் சொல்லாத! இதையெல்லாம் நான் நம்புற ஆள் கிடையாது! நீ பிரியா கிட்ட என்ன சொன்ன ?என்று அபிஜித் கேட்டான்.

பூஜா கண்களைத் துடைத்துக் கொண்டே நான் பிரியா கிட்ட எதுவுமே சொல்லலையே? என்று கூறினாள்.

ஏ பிரியா கிட்ட நீ என்ன சொன்ன? அதை மட்டும் சொல்லு!  ப்ரியா கிட்ட நீ பேசி இருக்க? 

பூஜா கொஞ்சம் சோர்வான குரலுடன் நேத்து தான் பேசினேன் என்று அவளிடம் பேசியதை சுருக்கமாக கூறியவள்.“  நம்ம ரெண்டு பேரும் பேசிக்குவோமானு அவ துருவி துருவி கேட்டுக்கிட்டே இருந்தா! அதனால நீங்க டெய்லியும் என்ன பார்க்க வரீங்கன்னு சொன்னேன்! வேற எதுவும் சொல்லல என்று கூறினாள்.

சரி அதை விடுஅந்த சதீஷ் கிட்ட நீ என்ன சொன்ன? என்று கேட்டான்.

பூஜா புரியாமல் நான் பிரியா கிட்ட மட்டும் தான் பேசினேன். அவர்கிட்ட எல்லாம் நான் பேசல என்று கூறினாள்.

ஏ பொய் சொல்லாத உன்னோட மனசுல அவன் தான இருக்கான்! அவனை பத்தி பேசினா மட்டும் உன்னோட முகம் அப்படியே மாறுது!

பூஜா இந்த முறை கோபமாக நீங்க தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க. என்னுடைய மனசுல அந்த மாதிரி எந்த தப்பான எண்ணமும் கிடையாது. அவர்கிட்ட  பேசவே இல்ல என்று கூறினாள். 

அபிஜித் அவளின் முகத்தைப் பார்த்து நீ உண்மைய தான் சொல்றியா? என்று மீண்டும்  கேட்டான்.

பூஜா கோபமாக நீங்க ரொம்ப ரொம்ப தேவையில்லாம என்னோட விஷயத்துல கிராஸ் பண்றீங்க! அடுத்த தடவை பிரியா என் கிட்ட கேட்டா, நான் உண்மையை சொல்லிடுவேன். என்று கூறினாள்.

போய் சொல்லு ! எனக்கு ஒன்னும் பயமில்லை என்று அபி சொல்ல..

 அப்படியா சொல்ற அதே போல பிரியா இன்னொரு விஷயமும் சொன்னா அதை சொல்ல மறந்துட்டேன். என்று பூஜா கூறினாள்.

என்ன என்று அபிஜித் கேட்டான்.

சொல்ல முடியாது என்று வெளியே செல்ல போக..

ஹே நில்லடி! இப்போ சொல்லிட்டு போ! பிரியா என்ன சொன்னா? என்று எழுந்து நின்றான்.

என்ன டி? யா? என்று பூஜா அவனைப் பார்த்தாள்.

சரி டங்கு ஸ்லிப் ஆகி சொல்லிட்டேன்!  பிரியா என்ன சொன்னா? என்று கேட்டான்.

பூஜா அவனை முறைத்துப் பார்த்தவள். பிரியா இங்க வந்து வேலைக்கு ஜாயின் பண்ணிக்கவான்னு கேட்டா? என்ன சொல்லட்டும்? என்று புருவத்தை தூக்கி கொண்டே கேட்டாள்.

அபிக்கு மிகவும் பயமாக வர கைகளில் சொடக்கு எடுத்துக் கொண்டே தயவு செய்து அப்படி எல்லாம் சொல்லிடாத!

 பூஜா சிரித்துக்கொண்டே இன்னும் எத்தனை நாளைக்கு இதை மறைக்க போறீங்க? அவகிட்ட மாட்டீங்கிட்டீங்க! அவ்வளவுதான்! அதே போல அவ ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது! அவளோட மனசுக்கு தப்புனு பட்டதுன்னா  திரும்ப பேசவே மாட்டா! என்று கூறி விட்டு  வெளியே சென்றாள். 

பூஜா வெளியே சென்றதும் அவள் சொன்ன விசயத்தை பற்றி அபி  யோசிக்க ஆரம்பித்தான்.

அப்போ நம்ம விஷயத்தை ப்ரியா கிட்ட எப்படியாவது சொல்லிடணும்!ரொம்ப நாள் கழிச்சு தெரிந்ததினால் நம்மள மொத்தமா அவாய்ட் பண்ணிடுவா! அப்புறம் அந்த சதீஷ முழுசா லவ் பண்ண ஆரம்பிச்சிடவா! ப்ரியாவோட மனசுல நான் இருக்க மாட்டேன்! அப்போ நம்ம வீட்டுக்கு வந்ததும், பிரியா என்கிட்ட பேசவே மாட்டா! என்று நினைத்தான். கூடிய சீக்கிரத்துல என்னை பத்தின உண்மையா சொல்லனும்! அதுக்கப்புறம் அந்த சதீஷ் என்னமோ பண்ணிட்டு போகட்டும்!  அவன் அவள் கிட்ட உண்மையை சொல்லி மாட்டட்டும் அதுக்கு முன்னாடி நம்ம அவளுக்கு நல்லவனா மட்டும் தான் தெரியணும்!  என்று நினைத்தான். 

அந்த நாளின் மாலையில் சதீஷ் மற்றும் அபி, ரிஷி , ரோஷினி, பூஜா, பிரியா  என்று அனைவரையும் சித் அழைத்திருந்தான். பூஜா மற்றும் பிரியா இருவரும் இன்னும் வர வில்லை. 

என்ன டா எதுக்கு வர சொன்ன? என சதீஷ் கேட்க..

ஒன்னும் இல்ல இப்ப பிரியா வரப்போகிறா! என்று சித்தார்த் கூறினான்.

என்ன என்ன டா சொல்ற?  அவள் வந்தால் நான் மாட்டிப்பேன் டா சதீஷ் அதிர்ச்சியுடன் சொல்ல..

 ஆமாண்டா நானும் மாட்டிப்பேன் என்று அபிஜித் கூறினான்.

சித் அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு சரி! அப்போ நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க என்று கூறினான்.

சரி எதுக்கு வர சொன்னேன்னு சொல்லு! என்று அபி அருகில் வந்து கேட்க..

நாங்க புதுசா ஒரு ப்ராடக்ட் ரிலீஸ் பண்ண போரோம்.  என்று சித் கூறினான்.

இதை கேட்டதும் அனைவரும் சிரித்துக் கொண்டே  என்ன?  கங்கிராஜுலேசன்! சொல்லவே இல்ல பார்த்தியா! என அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டே  தனு என்கிட்ட இருந்து மறைச்சிட்டியா என்று ரிஷி கேட்க..

ரோஸ் ஆச்சரியத்துடன் ஹனிமூன் போனதும் உடனே pregnant ஆக முடியுமா? ஹே இதன்யா என சிரித்து கொண்டே அருகில் வந்தாள். 

 பாப்பா பாத்தியா? என் கிட்ட சொல்லல? ஆனாலும் ரொம்ப சந்தோஷம்! இனி நான் மாமா ஆகிட்டேனா என்று பார்த்தான்.

 ஹாஸ்பிடல் போலாம்  வா ஒரு செக் அப் பண்ணிடலாம்! என்று கூறினான்.

புத்தா! என்று அதட்டி சொல்றத தெளிவா சொல்ல மாட்டீங்களா? நீங்க என்ன லூசா? என்று எல்லாரும் முன்னாடியும் அவனை திட்டினாள்.

என்னடா உன்னை இப்படி கழுவி கழுவி ஊத்துறா! என்று சதீஷ் கூற..

சித்தார்த் கொஞ்சம் குரலை சரி செய்து கொண்டே இடியட்ஸ் நான் சொல்றத தயவு செய்து முழுசா கேளுங்க! நான் புதுசா மார்க்கெட்ல ஒரு ப்ராடக்ட் லான்ச் பண்ண போறேன்! என்று கூறினான்.

என்ன சொல்றீங்க? என்னடா சொல்ற? என்று  அனைவரும் சித்தார்த்தை பார்க்க..

சித்தார்த் இதன்யாவை பார்த்து நானும் இதன்யாவும் அது சொல்லப்போனா இதன்யா தான் மொத்த மாஸ்டர் பிளான்! புதுசா லிட்டில் ஹார்ட் அப்படின்னு, லேடீஸ்க்கு பயோட்டின் அது கூடவே, ஒரு சப்ளிமெண்ட் பசங்களுக்கு அதாவது பாய்ஸ்க்கு தேவையான மல்டி விட்டமின்ஸ் சப்ளிமென்ட் ரிலீஸ் பண்ண போறோம். அதுக்காக இப்போ இங்க ஒரு சூட் நடக்க போகுது என்று கூறினான்.

அனைவரும் புரியாமல் பார்க்க இதன்யா சிரித்துக்கொண்டே இங்க ரோஷினி, ரிசி அண்ணா, அதே போல சதீஷ், பிரியா அப்புறம் அபி அண்ணா பூஜா அவங்கவங்களோட பேர்ல, நீங்க எல்லாமே ரியல் pair,அதாவது ரியலான ஜோடி, கூடவே நாங்க ரெண்டு பேரும்..so நம்ம எல்லாரும் சேர்ந்து, லிட்டில் ஹார்ட் மாதிரி கையை வெச்சிட்டு நம்மளோட பின்னாடி இருக்கிற தோற்றத்தை மட்டும் இந்த இடத்தில் போட்டோ ஷூட் பண்ண போறோம். அந்த ஃபோட்டோவை வைத்து ப்ரமோஷன் ரெடி பண்ண போறோம்! அதுதான் இதோட மொத்த தீம் என்று கூறினாள்.

ரிஷி ,ரோஷினி, சதீஷ் பஎன்று அனைவரும் உற்சாகத்துடன் இது நல்லா இருக்கே! என்று கூற..

உங்களுக்கு எல்லாம் நல்லா இருக்கும்! ஆனா நான் மாட்டிப்பேன்! என்று அபிஜித் கூறினான்.

என்னடா உனக்கு பிரச்சனை இன்று சித்தார்த் கடுமையான குரலில் கேட்க..

மாட்டேன்டா! பிரியா! அவள் கிட்ட நான் மாட்டினேன் இன்னிக்கே மார்ச்சிரு தான்! என்ன அவ காலேஜ் ஸ்டுடென்ட் அப்டின்னு நெனச்சிட்டு இருக்கா! இப்போ போய் நான் பூஜா கூட நின்னேன்னு வை நான் மாட்டிப்பேன்டா என்று வருத்தத்துடன் கூறினான்.

ரிஷி அபியை பார்த்து  பார்க்க நீங்க காலேஜ் ஸ்டூடண்டா? இதை அந்த கூமுட்டை நம்பராளா? என்று சிரித்துக் கொண்டே கேட்டான் .

யாரை சொல்ற அவள் என்னோட ஆளு என்று சதீஷ் கூறினான்.

 என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க! அவரு மிஸ்டர் ரிஷி!  அவ கிட்ட நீயும் ஒருநாள் மாட்ட தானடா போற! என்று ரோஸ் சொல்ல..

 ஆமால்ல மாட்டும்போது பாத்துக்குறேன் போடி என்று ரோஷினி சதீஷ் கூறினான். 

இப்போ நான் என்ன சித்து பண்றது? சொல்லுடா? எனக்கு பயமா இருக்கு! என்று அபிஜித் கூறினான்.

சித் அவனை கேவலமாக பார்த்துவிட்டு இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கு? நீ போய் அங்க கெஸ்ட் ரூம்ல இரு!  அதுக்கப்புறம் பிரியா இந்த போட்டோ சூட்ட முடிச்சுட்டு அந்த நாய் கூட கிளம்பினதும், நீ வெளியே வா! என்று  கூறினான்.

எந்த நாய்? என்று அபி கேட்க..

ரிஷி, ரோஸ், இதன்யா  என மூவரும் கோரஸ்ஸாக “ சதீஷ் அண்ணா”என்று கூறினார்கள்.

சித் இதை கேட்டதும் உதடு கடித்து சிரிப்பை அடக்கினான். 

போச்சு போச்சு பிரியா வரா!  

பார்ப்போம்! 

தொடரும்..

சரி இந்த மேகா எங்கே? பவானி கூட ஆளை காணோம்! நாளைக்கு வருவாங்க! 

சானக்யா எங்கே? 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 266

நீ உள்ளே போய் ஒளிஞ்சுக்க! அப்போ அவளால் உன்னை கண்டுபிடிக்க முடியாது! இதுக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் ஆகுற? என்ன டென்ஷன் பண்ணாத டா!  என்று சித்தார்த் கூறினான். 

அந்த நேரம் ரிஷி எதார்த்தமாக திரும்பிப் பார்க்க, அங்கே பிரியாவும், பூஜாவும் பேசிக்கொண்டு வருவது தெரிந்தது.

போச்சு பிரியா வரா நீங்க மாட்டிக்கிட்டீங்க! என்று ரிஷி கூறினான்.

என்ன? என அதிர்ச்சியாக அபிஜித் மற்றும் சத்தியஜீத் இருவரும் சேர்ந்து கூறினார்கள்.

சித்தார்த் கடுமையாக அவர்கள் இருவரையும் பார்த்தவன். டேய் நீ என்னோட P.A  அதனால மூடிக்கிட்டு நில்லு!  அபி நீ போ என்று கூறினான்.

அபிஜித் வேகமாக கெஸ்ட் ரூம் பக்கம் சென்று கதவை அடைத்து கொண்டான்.

பிரியா பூஜாவுடன் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவள். இதன்யாவை பார்த்ததும் என்னடி இதயா? என்ன விஷயம் அதுக்குள்ளாட்டியும் மாசமாக்கிட்டியா? என்று  கேட்டாள்.

இதை கேட்டதும் பூஜா சிரித்துக்கொண்டே  ஹே பிரியா என்ன கேட்கிற?  எல்லாரும் உன்ன தான் பாக்குறாங்க! சித்தார் சார் இன்னும் முறைக்கிறார். 

 சித்து பாத்திங்களா? என்கிட்ட விஷயத்தை மறைச்சிட்டீங்க! எப்படி இந்த மாதிரியான ஹைப்போதெட்டிக்கல் திங்ஸ் எல்லாம் உங்க ரெண்டு பேருக்குள்ள தான் நடக்குது! என்று கூறிக்கொண்டே வந்தாள்.

ரோஷினி ரிஷியிடம் அவளுக்கு கொஞ்சம் கூட shy இருக்காதா? என்ன? எதை பத்தி எந்த இடத்தில் பேசிட்டு இருக்கா பாருங்களேன்! என்று கூறினாள்.

ரோஷினி கூறிய வார்த்தைகள் சதீஷ்க்கு கேட்க “என்னோட மானத்தை வாங்குவதற்கு இப்படி எல்லாம் பேசுறாளா? இவளை அடக்க முடியலையே! என்று பார்த்தான்.

அவளுடைய பார்வை சதீஷின் மீது திரும்ப இவன் எதுக்கு இங்க வந்து நிற்கிறான்? ச்ச சித்து கிட்ட தான் வேலை பார்க்கிறான்! நான் மறந்தே போயிட்டேன்! என்று நினைத்தாள். ஆனாலும்  அவனை கண்டுகொள்ளாமல் இதன்யாவின் அருகில் போய் நின்று சொல்லு என்ன விஷயம்? என்று கேட்டாள்.

கொஞ்சம் வாயை மூடிட்டு நிக்கிறியா என்று இதன்யா கூற..

சித்தார்த் இதன்யாவை அவன் பக்கம் இழுத்துக் கொண்டு தயவுசெய்து இனிமே அவ கிட்ட பேசாத! உன்கிட்ட பேசி தான் அவளுக்கு நிறைய கெட்ட பழக்கம் வந்து சேருது! என்று கூறினான்.

என்ன me  யா! என பிரியா அதிர்ச்சியுடன் கேட்க.. 

ம்ம் நீயே தான்! என சித்தார்த் கூறினான். 

நானா என்று பிரியா கேட்டாள்.

உன்னை தான்! என்று  சித்தார்த்  கொஞ்சம் சட்டுனு கூறவும், அதைக் கேட்டு அங்கிருக்கும் அனைவரும் மெலிதாக சிரித்தார்கள்.

இப்போ எதுக்கு எல்லாரும் சிரிக்கிறீங்க? போங்க ஃபர்ஸ்ட் யாரு போட்டோ ஷூட் பண்றது? என்று கேட்டான்.

ஆமா இங்க என்ன நடக்குது?  எதுவும் ஆடிஷனா? என்று பிரியா கேட்டாள்.

 இங்க ஒரு போட்டோ ஷூட் நடக்க போகுது என்று கூறினாள்.

போட்டோ ஷூட்டா! நான் வரேன் சித்து! நம்ம ரெண்டு பேரும் ட்ரை பண்ணலாமா? என்று கேட்டாள்.

 சித்தார்த் இதன்யாவை பார்க்க அவள் பிரியாவை முறைத்துக் கொண்டே கொஞ்ச நேரம் அமைதியா நில்லு! என்று அவர்களின் குட்டி கலட்டாவை ஆரம்பித்தார்கள். 

சதீஷ் நேராக பூஜாவின் அருகில் சென்றவன். எப்படி இருக்கீங்க வதினா? நீங்க ரொம்ப  பிசி அப்டின்னு அண்ணா சொன்னான். அவன் கோபம் இல்லாமல் உங்க கிட்ட பேசுறானா? நீங்க ரொம்ப கஷ்ட பட வேணாம்! இப்போ அண்ணா வந்து உங்க கிட்ட பேசினாரா? என்று கேட்க

பூஜா நெற்றியை தேய்த்துக் கொண்டே அது என்ன வதினா? அந்த மாதிரி எல்லாம் என்னை கூப்பிடாதீங்க! 

 ஏன் என்னாச்சு? என்று சதீஷ் கேட்க..

அதுக்கு என்ன அர்த்தம்? என்று பூஜா கேட்டாள். 

அதுவா அண்ணி!  அண்ணனோட பொண்டாட்டிய அப்படித்தான் கூப்பிடுவாங்க! அதனாலதான் உங்கள வதினா அப்டின்னு  நான் கூப்பிடுறேன் இது கொஞ்சம் டீசண்டா இருக்குல்ல!  பூஜான்னு கூப்பிட்டா அது நல்லா இருக்காது! நீங்க என்னை விட சின்ன பொண்ணா இருந்தால் கூட, நீங்க இப்போ எங்க அண்ணனோட பொண்டாட்டி! அதனால உங்கள நான் வதினா தான் சொல்ல போறேன்!  அப்படி இல்லன்னா அண்ணின்னு சொல்லி கூப்பிடவா?  என்று சதீஷ் கேட்டான்.

ப்ளீஸ் இதெல்லாம் பிரியாவுக்கு போச்சு பெரிய பிரச்சினையாகும்! கொஞ்சம் அமைதியா நிக்கிறீங்களா! போங்க! அவ பக்கத்துல போய் நில்லுங்க! என்று பூஜா கூறினாள்.

நான் போறேன்! ஆனால் நீங்க  ஏன் என்கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க! நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா? என்று கேட்டான்.

அதெல்லாம் ஒன்னும் தப்பு இல்ல ! நீங்க போய் பிரியா கூட நில்லுங்க போங்க என்று பூஜா கூறினாள்.‌

வதினா நீங்க முன்ன மாதிரி என் கிட்ட பேசறது இல்ல அது ஏன்னு சொல்லியே ஆகனும்! என்று சொல்லி விட்டு பிரியா இருக்கும் பக்கம் சென்றான்.  

ஃபர்ஸ்ட் ரிஷி அண்ணாவும் ரோஷினி அவங்க ரெண்டு பேரும் எடுக்கட்டும் என்று இதன்யா கூறிட.. ரோஷினி சிரித்துக் கொண்டே ரிஷியன் கைகளை கோர்த்து அந்த இடத்திற்கு வந்து  நின்றார்கள்.

 கேமராமேன் மற்றும் போட்டோ எடுக்கும் ஸ்டைலிஸ்ட் என வரச் சொன்னான். அவர்கள் வந்து நிற்க..

சித்தார்த் என்ன போஸ்ன்னு சொல்லுடி! இல்ல! அவங்கள சொல்ல சொல்லட்டுமா? என்று இதன்யாவை பார்த்தான்.

இதன்யா திரும்பி அவர்களை பார்க்க.. எனக்கு ஒரு டவுட்டு  இதுல எங்க ரெண்டு பேரு முகமும் தெரியுமா? என்று ரிஷி கேட்டான்.

இதன்யா யோசனையாக கொஞ்சம் இல்லன்னா நம்முடைய பேக் போஸ் மட்டும் தான் தெரியும்! நீங்க அங்க போய் நின்னுட்டு உங்களோட ஒரு பாதி இதய விரல் கை வடிவத்தயத்தையும் ரோஷினியுடைய ஒரு பாதி விரல் வடிவ இதயத்தையும் சேர்த்து காட்டுங்க! உங்களோட பின்பக்கம் மட்டும்தான் தெரியும்! ரோஸ் உங்களோட முடிய பிரீ ஹார்ல போட்டுக்கோங்க! இப்ப போய் நில்லுங்க! இது  ஆர்ட்ல அதாவது பென்சில் ஆர்ட்ல தான் இது வரப்போகுது! என்று கூறினாள்.

சித்தார்த் அவள் சொல்வதை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ரிஷி இதன்யாவை பார்த்து ஆச்சரியமாக தனு! இதெல்லாம் தெரியுமா என்று கூறினான்.

வாங்க சீக்கிரம் வாங்க என்று அவர்களை அழைத்து முன்னால் நிற்க வைத்தார்கள்.

இரண்டு மூன்று ஷாட்களில் அவர்கள்  இதன்யா சொன்னதைப் போல நிற்க ஒரு சூப்பரான போஸ் கிடைத்தது.அதை கேமராமேன் எடுத்துக் கொண்டார்.

அடுத்ததது யாரு என்று கேட்க

இதன்யா மற்றும் சித்தார்த் இருவரும் சதீஷ் பிரியாவை பார்த்தார்கள்.

பூஜா ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். ரிஷி அங்கே சென்றவன்.  என்ன மா பூஜா நிற்கிற? உக்காருமா! என்று சொல்லி அவர்கள் மூவரும் பேச ஆரம்பித்தார்கள்.

என்ன? இல்ல  புரியல!  நீங்க சொல்றது! என்று இங்கே பிரியா அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

நீங்க ரெண்டு பேரும் போய் போஸ் குடுங்க என்று  சித் கூறினான்.

 பிரியா ஷாக்காக நானா நான் போய் எப்படி பாதிய இதயத்தை கொடுக்க முடியும்?  என்னோட மீதி இதயம்  யாரு?  என்று கேட்டாள்.

 உன் பக்கத்தில் நிக்கிறான் பாரு அவன் தான் என்று சித்  சதீஷை  பற்றி கூறினான். 

யாரு இவனா? 

ஹேய் என்று இதன் மிரட்ட..

சாரி சாரி மிஸ்டர் சதீஷ் சார்  கூட எதுக்கு நான் போய் நிக்கணும் ?

 சதீஷ் அவளின் அருகில் வந்து ரொம்ப ஓவரா பண்ணாத டி! ஒழுங்கா வந்து நில்லு! நம்ம ரெண்டு பேரும் பாதி பாதி இதயமா சேருவோம்! என்று அவளின் அருகில் இன்னும் கொஞ்சம் நெருங்கி காதோரம் கூறினான்.

செப்பல்சு பிஞ்சுரும்டா! அப்படியே ஓடிப் போயிடு! உன் கூட நான் நிற்பேன்னு, நீ கனவுல கூட நினைக்காத! நான் எல்லாம்   நிக்க மாட்டேன் என்று அவள் பின்னால் திரும்பினாள்.

என்ன டி திரும்புற? இப்போ  எங்க போற என்று கேட்டாள்.

நான் பூஜா கூட நின்னு எடுக்கலாம்னு இருக்கேன்.

உடனே சித்  சிரித்துக்கொண்டே அப்போ உன்னோட லெஸ்பியன் ஜோடி பூஜாவா? என்று கேட்க.

இதன்யா காதை அடைத்து கொண்டாள்.

பூஜா, ரோஷினி, ரிஷி என அனைவரும் சித்தார்த் சொன்னதில் கவனம் செலுத்தி என்ன சொன்னீங்க?  என்று திடுக்கிட்டு  பார்க்க..

சித்து ஏன் இப்படி பண்றீங்க என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள்.

அப்போ நீ அது இல்ல தானே! என்று சித் குறும்பாக கேட்டான். 

நான் அப்படி ஒன்றும் கிடையாது என்று கூறினாள்.

அப்போ அவன் கூட போய் நின்னு பிடி என்று சித்தார்த் கூறினான்.

“ப்ளீஸ் சித்து என்னால அவன் கூட எல்லாம் நிக்க முடியாது நீங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் போஸ் கொடுக்கலாம்!” என்று பிரியா சித்தார்த்தை அழைத்தாள். 

“என்னோட பொண்டாட்டி இதன்யா இருக்கும்போது, நான் எப்படி உன் கூட நின்னு போஸ் கொடுக்க முடியும் சொல்லு! Better இதை நீ உன் பிரண்டு கிட்டயே கேளு” என்று கூறினான்.

பிரியா இதன்யாவை பார்க்க..

ஒழுங்கா சதீஷ் அண்ணா கூட நின்னு பிடிக்கிற என்று கூறினான்.

என்னால முடியாது என்று பிரியா நின்று கொண்டாள்.

அப்போ நீ இதுல வர போறதில்லை!  இது பெரிய இடத்துல ஃபேமஸ் ஆக போகுது! இதுல நீ ஜாயின் பண்ணா உனக்கு ஒரு ஜாப் கொடுக்கலாம் அப்டின்னு   நினைத்தேன். என சதீஷ் கூறினான். 

 நீ என்னடா எனக்கு ஜாப் கொடுக்கிறது? இது சித்தார்த்  ப்ராடக்ட் ! உன்னோடது ஒன்னும் கிடையாது! அது உனக்கு  புரியுதா என்று பிரியா சதீசை பார்த்தாள். 

என்னோட ப்ராடக்டுக்கு எல்லாமே பர்சனல் அசிஸ்டன்ட்  எப்போவும் சதீஷ் தான் என்று சித்தார்த்  சிரித்து கொண்டே கூறினான். 

ஆக மொத்தத்துல நீங்க எல்லாரும் என்ன சொல்ல வரீங்க? என்று பிரியா கோபமாக அவர்களைப் பார்த்தாள்.

இதன்யா ஒரு பெருமூச்சியை விட்டுக் கொண்டே இப்போ நீ சதீஷ் அண்ணா கூட நிக்க போறியா? இல்லையா? இல்லன்னா சொல்லு  அடுத்து நாங்க புடிக்க போறோம்! நீ அப்படியே கிளம்பு! என்று கூறினாள்.

சதீஷ்க்கு இவ்வளவு தூரம் கெஞ்சி அவள் நம்முடன் பிடிப்பது வேண்டாம் என்று தோன்றியது அதனால் அவன் சித்தார்த் மற்றும் இதன்யா இருவரையும் பார்த்து “வேண்டாம் பாஸ் நீங்க விட்டுடுங்க பாப்பா பிடிக்காதவங்களை பிளாக்மெயில் பண்ணி வற்புறுத்தி ஒரு விஷயத்தை செய்ய சொல்லி சொல்ல கூடாது அதனால வேண்டாம்!” என்று கூறினான்.

அவனது முகம் மிகவும் பாவமாக இருக்க, சித்தார்த் அவனை இயல்பாக பார்த்தான்.  இதன்யா வருத்தத்துடன் “அண்ணா நீங்க பீல் பண்ணாதீங்க உங்களுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா!” இவ ஒரு ஆடு காளி என்று கூறினாள்.

ஹே நான் ஒன்னும் ஆட்டுக்காலி கிடையாது! போதும் இப்போ என்ன? அந்த போட்டோ புடிக்கணும்! அவ்வளவுதானே! நீ ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்டதனால் தான் நான் இருக்கு சம்மதிக்கிறேன்! அதேபோல சித்தார்த் சொல்லி இருக்கிறார், அதனால் சம்மதிக்கிறேன்! வந்து நின்னு தொலை! என்று முன்னால் சென்றாள்.

ஒன்னும் வேண்டாம் நீங்க கிளம்பலாம் மேடம் என்று சதீஷ் கூறினான். 

அவனது குரல் கொஞ்சம் கணீர் என்று இருக்க அங்கே பேசிக் கொண்டிருந்த மூவரும் அவர்களுடன் சேர்ந்து கேமராமேன் என அனைவரும் சதீஷை திரும்பிப் பார்த்தார்கள். 

டேய் இப்போ எதுக்கு கத்தி பேசுற! அது தான் நான் வரேன்னு சொல்றேன்ல! இப்போ வரியா? இல்லையா? என்று மீண்டும் பிரியா கேட்டாள்.

அவ்வளவு கெஞ்சி தான் நீ வரணுமா?; என் மேல உனக்கு இஷ்டம் இல்லையாடி! என்று வருத்தமான குரலில் சதீஷ் கூறினான்.

இப்போ நீ வராமல் இருப்பது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! என்று பிரியா ரைமிங் அடித்தாள்.

அதைக் கேட்டு சதீஷுக்கு சிரிப்பு வர மெதுவாக சிரித்தான்.

நீ பல்ல காட்டாத எனக்கு எரிச்சலா இருக்கு வந்து நின்னு தொல போட்டோ தானே! காசா! பணமா! என் கூட போட்டோ எடுத்தால் உனக்கு நிறைய லக்கு கிடைக்கும். வாடா என்று இருவரும் லிட்டில் ஹார்ட் போலவே போஸ் கொடுத்தார்கள்.

அவர்கள் கைகளை இணைக்க பிரியா ஆவலாக அவனுடன் கொஞ்சம் வெட்கம் கலந்து நின்று கொண்டு அவனுடைய விரல்களுக்கு ஏற்றவாறு கையை சேர்த்து வைத்தாள். சதீஸ் கொஞ்சம் உயரமாக இருந்தான். டேய் வழந்தா மண்டி கொஞ்சம் கைய கீழ இறக்கி வை! எனக்கு எட்டல..

இப்போ ஓகே வா என்று கையை இறக்கி அருகில் வந்தான். அவள் அழகாக அவனுக்கு ஏற்ப கையை வைத்தாள். பார்க்கவே அழகாக இருந்தது. சதீஸ் இதயம் வேகமாக துடிக்க “பிரியா லவ் யூ டி எனக்கு ஒரு லவ் யூ சொல்லு!” என்று கேட்டான்.

ஷாட் ஓகே என்று சத்தம் வர

போதும் போலாம் என்று அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதன்யாவின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

பிரியாவிற்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.  இதயம் வேகமாக துடிக்க வியர்க்க ஆரம்பித்தாள்.

என்னடி ஆச்சு? ஒரு மாதிரி இருக்க! என்று இதன்யா கேட்க .

ஒன்னும் இல்ல என்று தயங்கிக் கொண்டே பேசினாள்.

சொல்லு எதுவும் பிரச்சனையா என்று இதன்யா கேட்டுக் கொண்டே இருக்க..

சித்தார்த் பிரியாவை பார்த்தான்.

பிரியா இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் எனக்கு கொஞ்சம் breathing issueவா இருக்கு. நான் வெளியே போறேன். என்று வேகமாக வெளியே சென்றாள் .

சித்தார்த் சதீஷை பார்த்து கண் சிமிட்டினான்.  சதீஷ் தலை கோதி சிரித்து கொண்டே  அவளின் பின்னால் ஓடினான். 

இப்போ அடுத்தது என்று  அனைவரும் அவர்களைப் பார்க்க…

 நம்ம லாஸ்ட்டா எடுக்கலாம் இப்போ பூஜாவும் அபியும் என்று கூறிக் கொண்டே அபிஜித் வெளியே வா! அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க என்று கூறினான்.

அந்த நேரம் அபி தயங்கிக் கொண்டே வெளியே வந்தவன். ஒரு பெருமூச்சை விட்டு அப்பா பிரியா போயிட்டாளா? நிம்மதி என்று சிரித்த முகத்துடன் வந்தான்.

இதன்யா அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே அண்ணா வாங்க! இப்போ உங்களோட டர்ன் என்று அழைத்தாள்.

அபிஜித் புருவம் சுருக்கிக்கொண்டே என்ன டேர்ன்? எனக்கு ஒன்னும் புரியல? என்று கேட்டான்.

அண்ணா இப்போ நீங்களும் பூஜாவும் நிக்க வேண்டியது! ஏங்க சொல்லுங்க! என்று சித்தார்த்தை பார்த்தாள்.

என்னடா விளையாடுறியா? பூஜா என்று சித் அழைக்க..

சார் என்று பூஜா எழுந்து நின்றாள்.

வாங்க நீங்க ரெண்டு பேரும் வந்து நில்லுங்க என்று கூறினான்.

அபிஜித் ஷாக் ஆகி நான்! எதுக்கு அவள்  கூட நிக்கணும்? என்று கேட்டான்.

நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க தானே! என்று ரோஷினி கேட்டாள்‌

பூஜா குற்ற உணர்வாக நாம எங்க இவர லவ் பண்றோம்? இவர் கூட நிற்க கூடாது! என்று நினைத்தவள். இல்ல சார் இது வேண்டாமே!

என்ன ரெண்டு பேரும் ஒரே மாதிரி பதில் சொல்றீங்க! உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எதுவும் சண்டையா  என்று இதன்யா கேட்டாள்.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாப்பா! இது வேண்டாமே! நாங்க எதுக்கு புடிக்கணும்! தேவையே இல்லாம அது  ரியல் ஜோடி தான் பிடிப்பாங்க! என்ற அபிஜித் கூறினான். 

அப்போ நீங்க என்று சித்தார்த் அவனை கூர் பார்வையுடன் பார்த்தான்.

நான் அது வந்து ஒன்னும் இல்லடா வேண்டாம்!;என்று கூறினான் .

பஎனக்கு டைம் ஆகுது நான் கிளம்பட்டுமா என்று இருவரும் ஒரே போலவே பேச..

அப்போ பெருசா சண்டை போட்டு இருக்கீங்களா? என்று இதன்யா பூஜாவின் அருகில் வந்து அவளை சமாதானம் செய்ய..

சித்தார்த்  அபியை  ஒரு கூர் பார்வை பார்க்க..

அபி அவன் அருகில் வந்து தயவு செய்து அப்படி பாக்காத! நானும் அவளும் லவ் பண்ணவே இல்ல என்று உண்மையை கூறிவிட்டான்.

என்ன சொல்ற? என்று சித்தார்த் கொஞ்சம் கடுமையாக கேட்டான்.

ஆமா ஆக்சுவலா பூஜா லவ் சத்யஜித்! அதாவது உங்களுடைய ஃப்ரெண்ட் அந்த பிராடு நாய தான் அவ லவ் பண்றா!; 

சித்தார்த் புருவம் நெருக்கி கொண்டு என்ன சொல்ற என்று கேட்டான்.

ஆமா அவ ப்ரொபோஸ் பண்ண வந்த டைம்ல தான் பிரியாவும் சதீஷ் லவ் பண்றாங்கன்னு எனக்கு தெரிஞ்சது! அந்த சதீஷ் நாயி ப்ரியா பின்னாடி நாயை விட கேவலமா சுத்துனா!  நான் கூட பிரியா அவனை  லவ் பண்ணலன்னு தான் நினைச்சேன். ஆனா பிரியாவோட மனசுல சத்ய ஜித் தான் இருக்கான். அதனாலதான் வேற வழியே இல்லாம பூஜாவை நான் லவ் பண்றேன்னு சொல்லிட்டேன்! என்று அபிஜித் விளக்கம் கூறினான். 

தெளிவா சொல்லு! என்று சித்தார்த் மறுபடியும் கேட்க..

 சதீஷ், பிரியா , பாப்பா  அவங்க மூணு பேரும் இருக்கும்போது பூஜா சதீஷ் கிட்ட ப்ரபோஸ் பண்றதுக்கு போனா!  எனக்கு அப்போ தான் பூஜா சதீசை லவ் பண்ற விசயம் தெரிஞ்சது.  ஆனால் சதீஸ் பிரியா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க! அப்போ இது தெரிஞ்சா பிரச்சனையாகிடும்னு நான் அந்த பூஜாவ லவ் பண்றேன்னு சொல்லிட்டேன்! இப்போ புரியுதா! என்று கேட்டான்.

அப்படியா இது உன் தம்பிக்கு தெரியுமா! என்று  சித் கேட்டான். 

அந்த நாய்க்கு தெரியாது! அந்த நாயால தான் எல்லா பிரச்சனையும் என்று அபிஜித் அடுப்புடன் தலையை கோதினான்.

சித் சிரித்துக்கொண்டே நல்லா பண்றீங்கடா லவ்வு! உங்க பேமிலியே ரொம்ப டிஃபரண்டா இருக்கு! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல . 

சரி இப்போ என்ன பண்றது? என்று அபி கேட்க..

எனக்கு தெரியாது! இதன்யா கிட்ட சொல்லு அவளை நீயே சமாளிச்சுக்க! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ சொன்னத இந்த காதுல வாங்கி,  இந்த காதுல  எப்பவோ விட்டுட்டேன்! என்று சித்தார்த் கூலாக பதில் சொன்னான்.

என்னடா சித்து இப்படி சொல்ற? இத நான் எப்படி டாக்கல் பண்றது? 

ஆமா நீங்க யாரு என்று சித்தார்த் அவனை பார்த்து கேட்டான்.

அந்த நேரம் இதன்யா பூஜாவை அழைத்துக் கொண்டு வர, 

டேய் சித்து பாப்பா வரா டா!  எதுவும் பண்ணு! ப்ளீஸ் டா! என்னால அவ கூட போட்டோ பிடிக்க முடியாது! என்று அபிஜித் கூறினான்.

சித்தார்த் சிரித்துக்கொண்டே இப்போ என்ன? ரியல் ஜோடியா தான் உங்களை நினைக்கிறாங்க என் லிட்டில் ஹார்ட் உங்க மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கா! சோ நிஜமாவே   நீங்க ரியல் ஜோடியா மாறுங்க! ஒன்னும் தப்பு இல்லை 

டேய் என்ன பேசுற என்று கெட்ட வார்த்தைகளை அள்ளிவிட வர..

டேய் நீ ஒரு பேட் வேர்ட் கொடுத்தனு வை! இப்போவே போய்  இத எல்லாத்தையும் ப்ரீயா கிட்ட சொல்லுவேன். பிரியா யாருன்னு தெரியும் தானே! Bad word தலைவி! அப்புறம் உன்னை உன்னோட சகோதரர் மிஸ்டர் சத்ய ஜித் என மொத்த குடும்பத்தையும் ஆயில் இல்லாம ரோஸ்ட் பண்ணுவா! என்ன சொல்ற என்று புருவத்தை தூக்கினான். 

அபிஜித் பெருமூச்சை விட்டு சித்தார்த்தை கோபமாக பார்த்தான். 

மூடிட்டு போய் நில்லு போ என்று சித் அதட்டலாக கூறினான். 

அண்ணா பூஜா சமாதானன் ஆவிட்டா! நீங்க போங்க இரண்டு பேரும் நில்லுங்க என்று இருவரையும் வலுக்கட்டாயமாக தள்ளி விட்டாள். 

அபி வேறு வழியே இல்லாமல் போய் நிற்க பூஜா தயங்கிக் கொண்டே வந்து நின்றாள்.

ரிஷி ரோஷினி மற்றும் இதன்யா என அனைவரும் அவர்களை பார்க்க..

சித்தார்த் சோபாவில் அமர்ந்து கொண்டு அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அபிஜித் மற்றும் பூஜா இருவரும் நேராக அப்படியே நிற்க.. 

கேமராமேன் ஸ்டைலிஷ்  பக்கம் பார்க்க.. ரெண்டு பேரும் போஸ் குடுங்க!  கைய ரெண்டு பேரும்  ஹாட் போல காமிங்க! என்று கூறினார்.

அபிஜித் கையை மட்டும் உயர்த்தினான்.  பூஜா கைகளை சொடக்கு எடுத்துக் கொண்டே நிற்க..

ஹே அவங்க சொல்றது காதுல விழுகலையா? கைய தூக்கு!

பூஜா அவன் கையை பார்த்து நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  அவங்க என்ன சொல்றாங்க? நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க!

நான் என்ன பண்ற என்று அவனுடைய கையை பார்த்தான். 

பூஜா சலித்து கொண்டே அவங்க இதய வடிவத்தில் கை வைக்க சொன்னாங்க! நீங்க ஒரு டாக்டர் தானே! இதயம்  எப்படி இருக்கும் அப்டின்னு உங்களுக்கு தெரியாதா ?

அபிஜித் அவளை ஏளனமாக பார்த்தவன்.  இது இதயத்தோட சிம்பலே கிடையாது.  ஏதோ இங்க இருக்கிற எல்லாரும் கிரியேட் பண்ணிட்டு சீன் போட்டுட்டு திரியுறாங்க! என்று கூறினான்.

எனக்கும் இதெல்லாம் பிடிக்கல தான்! ஆனால்  வேற வழி இல்ல! அதனால தான் உங்க கூட நிக்க வேண்டியதா போச்சு என்று கூறினாள்.

ஆமா இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்?  நான் வேணா இப்போ மிஸ்டர் சதீஷ் அப்படி இல்லன்னா சத்ய ஜித் அவர்களை வர சொல்லட்டுமா? அவன் கூட நின்னு புடிக்கிறியா? என்று வேண்டுமென்றே கூறினான்.

கையை உயர்த்துப் போனவள். அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டதும்  அதை கீழே போட்டு விட்டாள்.

என்ன பண்ற? நான் சொல்றது புரியலையா? கைய தூக்குன்னு சொன்னேன்! என்று மீண்டும் கூறினான். 

பூஜா கைகள் நடுங்க கண்களில் நீர் கோர்க்க அவன் கை பார்த்து வேறு வழியே இல்லாமல் உதட்டை கடித்துக் கொண்டு இதயம் போல் செய்து அவன் அருகில் நீட்டினாள்.

என்ன? அந்த இடத்தில் நீட்டினா நான் எப்படி  நீட்ட முடியும்! என் கைக்கு பக்கத்தில் கொண்டு வா என்று அதாட்டினான். 

என் கையை அவ்வளவுதான் அதுக்கு மேல நான் ஸ்டூல் போட்டு தான் நிக்கணும்! நீங்க கையை இறக்கி  காட்டுங்க! உங்கள யாரு இவ்ளோ கஷ்டப்பட்டு நிற்க சொன்னது?  சித் சார் கிட்ட எல்லா உண்மையும் சொல்ல வேண்டியது தானே!; என்று பூஜா கேட்டாள். 

என்னத்த சொல்ல சொல்ற? என்று அபிஜித் கேட்டான் .

பூஜா வேறு பக்கம் திரும்பிக் கொண்டே தயவு செய்து சீக்கிரமாக பிரியா கிட்ட உண்மையை சொல்லிடுங்க! என்னால இதையெல்லாம் தாங்கிட்டு இருக்க முடியாது!

எதை சொல்ல சொல்ற? நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணலன்னு சொல்ல  சொல்றியா? இல்ல நீ சதீஷ் லவ் பண்றத பத்தி சொல்ல சொல்றியா? என்று கேட்டான்.

இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? என்னை  வார்த்தைக்கு வார்த்தை குத்தி கொலை பண்ணி பேசுற மாதிரி பேசுறீங்க! நீங்க டாக்டர் தான! இல்ல ஏதாவது சண்டைக்காரனா? என்னை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க! ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? நான் உங்களுக்கு என்ன பண்ணுனேன். எதுக்கு என்னை இவ்வளவு கஷ்டப்படுறீங்க! என்று அழுதே விட்டாள்.

என்ன ஆச்சு என்று கடுமையான குரல் கேட்டது. 

அது சித்தார்த் தான்.

அபிஜித் திரும்பி பார்க்க!

என்ன ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க சண்டை போடுறீங்களா? இதன்யா என்று சித் அழைத்தான்.

இவன் வேற சும்மா! என அபி நேராக நிற்க..

எதுக்கு பிரச்னை பண்ற? அதை புதுசா கிரியேட் பண்ற என்று கேட்டான்.

அண்ணா என்று பின்னால் இதன்யாவின் குரல் கேட்க..

ஒன்னும் இல்லமா சும்மா பேசிகிட்டு இருந்தோம் என்று சொன்னவன்.  இப்போ எதுக்கு ஓவரா டிராமா பண்ணிட்டு இருக்க! என்று சொன்னவன் .  அவளுடைய விரல்களுடன் ஒட்டினான் அவள் இன்னும் தேம்பித் தேம்பி அழ..  அந்த அதிர்வு அபிக்கு நன்றாகவே தெரிந்தது. 

ஹே நிஜமாகவே அழறியா என்று உண்மையாக தான் கேட்டான். 

இல்ல நான் சிரிச்சுட்டு இருக்கேன் என்று அழுது கொண்டே கூறினாள்.

அபிஜித் உண்மையாக ஹே ப்ளீஸ் சாரி! நான் தெரியாம சொல்லிட்டேன்! என்னை  மன்னிச்சிடு நான் ஏதோ கோபத்தில் சொல்லிட்டேன்! சாரி என்று கூறினான்.

பூஜா எதுவுமே பேசவில்லை அமைதியாக போஸ் கொடுத்தாள்.

நேரா நில்லுங்க இப்பதான் போஸ் கரெக்ட்டா வந்திருக்கு! ஆடாமல் நில்லுங்க என்று கேமரா மேன் சொல்லிக் கொண்டிருக்க.. அவர்கள் நேராக நின்றார்கள். 

ஹே சாரி கேட்கிறேன் தானே! எதுவும்   சொல்லு என்று கேட்டான்.

பூஜா அமைதியாகவே விம்மிக்கொண்டிருந்தாள்.

அதன் பின் ஷார்ட் ஓகே என்று கேமரா மேன் சொல்ல..

பூஜா கண்களை துடைத்துக் கொண்டு  அந்த இடத்திலிருந்து வந்தாள்.

அபிஜித் அவளை ஒரே ஒரு பார்வை பார்த்தான். எதுவும் பேசவில்லை. பூஜா நேராக இதன்யாவின் அருகில் வந்து நான் ஹாஸ்டல் கிளம்புறேன் டி!

என்ன ஆச்சு ஒன்னும் இல்ல எனக்கு வீட்டு ஞாபகம் வந்துடுச்சு!  நான் கிளம்பட்டுமா!; என்று கேட்டாள் 

சரி ஓகே நீ எதுவும் பார்ட் டைம் வேல பார்க்க போயிட்டு இருக்கேன்னு  ப்ரியா சொன்னாலே என்று கேட்டாள்.

இனி…இனிமே போக மாட்டேன் என்று பூஜா கூறினாள். 

அபிஷித் அவளை பார்க்க..

என்ன சொல்ற டி என்று இதன்யா கேட்டாள்.

எனக்கு!  என்னால இதுக்கு மேல முடியல! என்று விரக்தியாக சொன்னவள்.  சரி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு சித்தார்த்திடம்  சரி என்று ஒரு தலையசைத்துடன் பூஜா சென்றாள்.

அபிஜித்துக்கு ஓவரா பேசிட்டோமோ என்று குற்ற உணர்வாக இருக்க அவன் அதே இடத்தில் நின்றான்.

ரிஷி சித்தார்த்தை பார்த்து மாமா இப்போ உங்க டர்ன் என்று சொல்ல..

இதன்யா ஆவலாக அவனைப் பார்த்தாள்.  சித்தார்த்தம் அவளைத்தான் பார்த்தான். 

சாட் ரெடி லிட்டில் ஹார்ட் – புத்தா வாங்க பா! 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 267

ரிஷி சித்தார்த்தை பார்த்து மாமா இப்போ உங்க டர்ன் என்று சொல்ல..

இதன்யா ஆவலாக அவனைப் பார்த்தாள்.  சித்தார்த்தம் அவளைத்தான் பார்த்தான். 

சித்தார்த் முன்னாள் நடக்க அவனுக்கு பின்னால் இதன்யா வந்து சேர்ந்து கொண்டாள்.

அவன் முகத்தை கொஞ்சம் உர்ரென வைத்துக் கொண்டிருக்க..

“உங்களோட கைய கொஞ்சம் கீழ இறக்குங்க! எனக்கு ஹைட் பத்தல! என்று கூறினாள்.

சித்தார்த் நேராக நின்று கொண்டு கைகளை மட்டும்  அவளுக்கு ஏற்பது போல் நீட்டினான். 

இதன்யா பாதி இதயம் போல் வைத்து சித்தார்த்தின்  பாதி இதய  வடிவ விரல்களில்  இணைத்தாள்.

எதுக்கு முகத்தை இப்படி ஒரு வச்சிட்டு இருக்கீங்க? கொஞ்சம் சிரிக்கலாம் தானே! என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

ஆமா எதுக்கு சிரிக்கணும்? அதுக்கும் நீ!..என்று சித் அமைதியாக நின்றான்.  

இப்போ என்ன ஆச்சு? 

என்ன ஆச்சா? எல்லாரு என்னை முன்னாடியும் திட்டுற? என்று கடுமையாக கூறினான். 

நானா? நான் உங்களை திட்டினேனா? நான் எப்ப திட்டினேன்? என்று இதன்யா கேட்டாள்.

பொய் சொல்லாத இப்பதான் எல்லாரும் முன்னாடியும் என்னை திட்ற மாதிரி பேசுற! எல்லாரும் எதோ world wonder அ பார்க்கற மாதிரி என்னை  பார்க்கிறாங்க. 

 இதன்யாவிற்கு இதை கேட்டதும் சிரிப்பு வந்தது. 

அப்படி எல்லாம் இல்லைங்க! நான் எப்பவும் போல தான் பேசிட்டு இருக்கேன்! என்று கூறினாள்.

நீ எப்பவும் போல பேசுல டி! ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க!

நான் இன்னும் ஓவரா போறேனா?  என்று கேட்டாள்.

ஆமா நான் கெத்தா இருந்தேன்! ஆனால் இப்போ   நீ என்ன இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிற!

என்னத்த ஆட்டி வச்சாங்க என்று அவனை மேலும் மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்.

இப்படி எல்லாம் என்னை காம பார்வை பார்க்காதே என்று கூறினான்.

இதன்யா சிரித்துக்கொண்டே எனக்கு ஒன்னும் ஆசை இல்லை!  கொஞ்சம் கம்முனு நிக்கிறீங்களா! என்று இருவரும் சேர்ந்து அழகழகாக நிறைய போஸ் கொடுத்தார்கள்.  ஸ்டைலிஷ் ஆர்டிஸ்ட் கேமரா மேனை பார்க்க..

அவர் நொந்து கொண்டே கொஞ்சம் கலக்கத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

என்ன சார் கை நடுங்குது? என்று அவர் கேட்க..

அவர் எப்போ முடிப்பாரு? நம்ம ஷார்ட் ஓகே ன்னு சொல்லலாமா? வேணாமா? அவர் திட்டிட்டா? என்ன பண்றது? என்று சித்தார்த்தை பார்த்து கேமராமேன் பயந்து கொண்டிருந்தார்.

ஸ்டைலிஷ் கொஞ்சம் சிரித்துக் கொண்டே அவர் திட்ட மாட்டாரு! அவருடைய மனைவி பக்கத்துல இருக்காங்க தான!  அதனால நீங்க சொல்லுங்க சார்! இல்லையென்றால் நீங்கள் எடுத்துக்கொண்டே தான் இருக்கணும்! என்று  கூறினார்.

நெஜமாவா சொல்றீங்க மேடம் என்று அவரும் திரும்பி கேட்க..

ஆமா சார் நீங்க சொல்லுங்க சார்! ஆனால் எல்லா போசும் நல்லா தான் இருக்கு! என்று ஷார்ட் ஓகே என்று மெதுவாக கேமரா மன் கூறினார்.

 அதன்பின் சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் அந்த அந்த இடத்திலிருந்து வெளியே வந்தார்கள்.

உடனே  பேக்கப் செய்யப்பட்டது அனைத்து போட்டோவையும் ஒரு பென்டிரைவில் ஏற்றி அதை ஒரு காப்பி சித்தார்த்திடம் கொடுத்துவிட்டு, மற்றதை மார்க்கெட்டிங் லோகோ தயாரிப்பதற்காக எடுத்துச் சென்றார்கள். எல்லா போட்டோவும் இதுல தான் இருக்கா? என்று இதன்யா ஆவலாக கேட்டாள்.

ஆமாம் என்பது போல் சித்தார்த் தலையசைத்தான். அபிஜித் கொஞ்சம் கலக்கத்துடன் அமர்ந்திருந்தான்.

சித்தார்த் அபியை   கண்டுகொள்ளாமல் இதன்யாவிடம்  ஹே அந்த ஜாக்ரபி சேனல் கப்பில் எங்கே? என்று கேட்டான்.

ஆமா நீங்க யாரு கேக்குறீங்க?நானும் உங்க கூட தானே போட்டோ புடிச்சேன் ! என்று அவனைப் பார்த்தாள்.

ரிஷி சிரித்துக்கொண்டே அது இப்போ  பிரியாவையும், சதீஷ் சாரையும் தான் மாமா அப்படி சொல்றாங்க! என்று கூறினான்.

இதை கேட்டதும் இதன்யா சிரித்துக்கொண்டே இது மட்டும் பிரியாவுக்கு தெரிந்தது? சரியா ஆட்டம் போடுவா! எதுக்குங்க இப்படி எல்லாம் சொல்றீங்க? 

சித்தார்த் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு லேப்டாப்பில் பென்டிரைவை insert செய்து கொண்டே அவர்களுக்கு போன் பண்ணு! அங்க ஏதாவது அனிமல் சேனல்ல வர மாதிரி எதுவும் பண்ணிட்டு இருக்க போறாங்க! அதை எல்லாம் கண்ணால பார்க்க முடியாது! என்று கூறினான்.

இதை கேட்டதும் ரோஷினி, ரிஷி என  இருவரும் சிரிக்க, இதன்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க?  என்று கேட்டாள்.

உடனே ரிஷி மற்றும் ரோஷினி இருவரும் சித்தார்த்தை பார்த்துக் கொண்டே என்ன இதன்யா? இது கூட உனக்கு புரியலையா? என்று கேட்டார்கள்.

என்ன? என்று இதன்யா சித்தார்த்தை  பார்த்தாள். அடியே மக்கு! வந்து உட்காருடி பக்கத்துல! என்றும் மிரட்டினான்.

அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டு சித்தார்த்தை முறைத்தாள். 

மம் போன் பண்ணு! அந்த நாய் வரட்டும் அவங்களுக்கு போன் பண்ணு வரட்டும் என்று கூறிக்கொண்டே வேலையை பார்த்தான்.

அபி  அப்படியே அமர்ந்து கொண்டிருக்க..  அண்ணா நீங்க போய் ஒளிஞ்சிக்கலையா? பிரியா வரப்போறா! என்று கூற..

அபிஜித் எதுவும் சொல்லாமல் மெதுவாக எழுந்து உள்ளே சென்றான். 

இவன் ஒரு மண்ணாங்கட்டி மடையன்! என்று சித்தார்த் அப்படியே அவனது வேலையை பார்த்தான்.

இங்கே சதீஷ் மற்றும் பிரியா இருவரும் தோட்டத்திற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். 

பிரியா அங்கிருந்து மூச்சு வாங்கிக் கொண்டே சென்றவள் ஒரு இடத்தில் நின்று கொண்டாள்.  இடுப்பில் கை வைத்து கண்களை மூடி சுவாசிக்க ஆரம்பித்தாள்.

எதுக்கு அங்கிருந்து வேகமாக ஓடி வந்த?  என்னாச்சு என்று சதீஸ் கேட்க..

பிரியா நெற்றியை தேய்த்துக்கொண்டு எதுக்குடா? என் பின்னாடியே வருவியா? உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க? 

உன்ன தாண்டி நெனச்சிட்டு இருக்கேன்! இங்க என்ன பாரு! என்ன ஆச்சு? உன்னோட முகம் எல்லாம் வேர்த்து போச்சே! என்று அவளின் தோள்பட்டையில் கை வைத்தான்.

சதீசு! சதீசு! பக்கத்துல வராத சதீஷ் தள்ளிப்போ என்று பிரியா தள்ளி சென்றாள்.

என்னடி ஆச்சு? உடம்பு சரியில்லையா? ஹாஸ்பிடல் போலாமா! என்று கேட்டான்.

எனக்கு ஒன்னும் ஆகல சதீஷ் தயவு செய்து நீங்கள் பக்கத்துல வராத என்று பின்னால் நகர்ந்தாள். 

 சதீஸ் உண்மையாகவே பயந்து என்ன டி சொல்ற? நல்லா தானே இருந்த! என்னடி ஆச்சு? நான் உன்ன ஒண்ணுமே பண்ணலையே! என்று அவளைப் பார்த்தான்.

ப்ளீஸ் சதீஷ் வராதே என்று அவள் இன்னும் நகர்ந்தாள்.

சதீஷ் அவளின் அருகில் வந்து கைகளைப் பிடித்துக்கொண்டு என்னாச்சு பிரியா? எதுவும் பிரச்சனையா? சொல்லு? என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்.

எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ப்ளீஸ் தள்ளிப்போ! என்று மிகவும் மெதுவான குரலில் கூறினாள்.

என்ன இன்னைக்கு குரல் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே! என்று புருவம் நெருக்கி கொண்டே அவளின் முகத்தைப் பார்த்தான். 

அவளின் முகத்தில் உள்ள கன்னம், இரண்டும் சிலிர்த்து. அவளுடைய முகத்தில் உள்ள உடலில் உள்ள பூனை முடிகள் எல்லாம் நேராக நின்றது  போல் உடல் சிலிர்த்து கொண்டிருந்தது. குளிருதா டி என்று கேட்டான்.

இதை பிரியா அவனுடைய கைகளை தட்டி விடச் செல்ல..

சதீஷ் அவளின் மோவாயை பிடித்தான். என்னடி ஆச்சு? 

பிரியா சிணுங்கி கொண்டே  நீ பக்கத்துல வராத டா!  எனக்கு ஒரு மாதிரி இருக்கு! நீ தள்ளி போ! இனி என் பக்கத்துல நீ வரவே கூடாது! என்று மிரட்டும் தொனியில் முடித்தாள்.

 இதை கேட்டதும் சதீஷ் அவளின் இதழை பிடித்து முத்தமிட ஆரம்பித்தான். 

சதீஸ் பிரியாவை அவனுடைய பாதத்தில் நிற்க வைத்து முத்தமிட்டு கொண்டிருந்தான். இருவரும் அவ்வளவு நெருக்கத்தில் இருந்தார்கள். அவளை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டான். எப்படி அவனுடைய பாதத்தில் நிற்கிறாள்? என்று அவளுக்கே தெரிய வில்லை. மாயக்காரன் எதோ செய்து விட்டான். 

அவளின் கழுத்தில் முத்தமிட்டான். பிரியா எதுவும் பேசாமல் மூச்சு வாங்க  அமைதியாக அவனை கட்டி கொண்டாள். எவ்வளவு நேரம் இப்படி இருந்தார்கள். அவர்களுக்கே தெரிய வில்லை. அவனுக்கு இந்த பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உணர்வு மிகவும் பிடித்து இருந்தது. ஆடாமல் அசையாமல் இருந்தான். 

அந்த நேரம் தான் இதன்யாவிடம் இருந்து போன் வந்தது.  உடனே தன்னிலைக்கு வந்த பிரியா அவனிடமிருந்து பிரிந்து நின்றாள்.  தலையில் கை வைத்து அய்யோ என்ன காரியம் பண்ண பார்த்தேன்?  இவன் கூட! இப்படி பசை மாதிரி ஓட்டிக்கிட்டு! அதுவும்  இவ்வளவு நேரம் நின்று இருக்கேனே?  இதுக்கு காரணம் இந்த நாய் தான்! இனிமே இவன் பக்கமே தலை வச்சு படுக்கக் கூடாது! ஐயோ என்னை எந்தச் செப்பல்ல அடிக்கிறது? அய்யோ  எனக்கே தெரியலையே? என்று புலம்பிக்கொண்டே  அவனை பார்த்து முறைத்தவள் வேகமாக உள்ளே சென்றாள்.

ஹலோ அண்ணா! 

சொல்லு பாப்பா! என சதீஷ் பதில் அளித்தான். 

என்னாச்சு? உங்களுக்கு வர இவ்வளவு நேரமா?  அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு இருந்தா இப்போ முறைச்சுட்டு போறாளே!  இவள் பக்கத்தில் வந்து சேர்ந்தால்? அதுக்குள்ள ஏதாவது ஒரு பிரச்சனை வந்திடுது!  நான் இவகிட்ட என்னைக்கு on cloud nine பார்க்க?  என்று விரக்தியாக நினைத்தான். 

அண்ணா லைன்ல இருக்கீங்களா?

சொல்லு பாப்பா என்று சதீஸ் கூறினான்.

அண்ணா உங்க ரெண்டு பேரையும் இவர் வர சொன்னாரு என்று இதன்யா பதிலளித்தாள்.

இதோ இப்பவே என்று போனை வைத்தவன். நேராக உள்ளே சென்றான்.

அங்கே சித்தார்த் அனைத்து படங்களையும் பார்த்துக் கொண்டிருக்க,  ஜாக்ரபி சேனல்… க்கும்.. ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? ச்ச  என்ன பண்ணிட்டு இருந்தீங்க?  என்று சித்தார்த் கேட்டான்.

ஆமா இவங்க என்ன சொல்றாக? என்று பிரியா அதிர்ச்சியுடன் நின்றாள். 

பிரியா!  இவர் சொல்றது, எனக்கு புரியவே இல்லடி! உனக்கு புரியுதா?  என்று கேட்க..

பிரியா தலை குனிந்து மானத்தை வாங்குகிறாளே! இந்த இதன்யா! இவள வச்சுட்டு, ஒன்னும் பண்ண முடியாது! என்று நெற்றியை தேய்த்தாள்.

ரிஷி ரோஷினி சித்தார்த் என அனைவரும் அவர்களைப் பார்த்து சிரித்தார்கள்.

பிரியா இதை சமாளிக்கும் பொருட்டு சரி சரி! எனக்கு டைம் ஆச்சு! இதோ நான் கிளம்புறேன்! என்று அவள் திரும்பினாள்.

கிளம்பறையா இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ என்று சதீஷ் கூறினான்.

நான்!  உன்ன? டேய் எல்லாம் உன்னால! என முனகி கொண்டே அவனை பார்த்தாள். 

என்ன டி? என்று இரு புருவம் தூக்கினான். 

உனக்கும் எனக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை! இது என் புக்கு மேல சத்தியம்! என்று கூறினாள்.

புக்கு மேல சத்தியமா? என்று ரோஷினி சதீஷ் இருவரும் கேட்க..

ஆமா நாங்க எப்பவுமே புக் மேல தான் சத்தியம் பண்ணுவோம்! என்னடி இதன்யா சொல்லு!  ஆமா தானே! 

இதன்யா சிரித்து கொண்டே நாங்க ரிஷி அண்ணா எல்லாரும் அப்படி தான்! என்ன ரிஷி அண்ணா? 

 அவன்கிட்ட என்ன கேட்டுட்டு இருக்க அவனே ஒரு என்று பிரியா ஆரம்பிக்க.. 

ஓவரா பேசுற பிரியா! என ரிஷி கூறினான். 

என்ன டா ரிஷி? என்று பிரியா பேச வர.  

பிரியா என்று இந்த முறை சித் அழைத்தான்.

சித்து!  நான் சும்மா! சும்மா சொன்னேன்! சித்து ஒன்னுமில்ல.. ரிஷி சாரு அவரு பெரிய சாரு! என்னோட சீனியர் சாரு! ரொம்ப பெரிய ஆளு! என்று அப்படியே அந்தர் பல்டி அடித்தாள்.

சரி ஓகே பத்திரமா போயிட்டு வா என்று கூறினான்.

உடனே பிரியா எதோ நினைவு வந்தவளாக சித்து ஏதோ வேலை தரேன்னு சொன்னீங்க? என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.

பார்க்கலாம் என்னோட பிஏ கிட்ட கேளு! என்று சித் வேணும் என கூற..

அப்போ எனக்கு வேலையே வேண்டாம்! என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு சென்றாள்.

இதன்யா ஹே கூகுள் நில்லு டி! என அவளின் பின்னால் ஓடினாள் என்று வேகமாக இருவரும் வெளியே சென்றார்கள். 

 கேமரா எல்லாம் மெமரி டெலிட் பண்ணனும் போல என சித் கூறினான். 

டேய் கம்முனு இருடா ஏன்டா என்று சதீஷ் கூறினான்..

ரோஷினி சிரித்துக்கொண்டே அவ உன் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும்போது கூட இப்படியே பேசிட்டு தான் இருப்பாளா?  இல்ல அப்பவாவது அவங்களோட வாய் மூடி இருக்குமா! 

க்கும் ரிஷி! என்று கொஞ்சம் கடுமையான குரல்! அது சித் தான். 

ரிஷி உடனே எழுந்து கொண்டு சரிங்க மாமா நான் கிளம்புறேன். 

இங்கே சித்தார்தின் வீட்டுக்கு வெளியே ஒரு கத்தி போன்ற சட்டையில் மிடுக்குடன் டக் இன் செய்து கைகளில் file வைத்து கொண்டு செக்யூரிட்டியிடம் சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே சானக்யா கேட்டான். 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 268

இங்கே சித்தார்தின் வீட்டுக்கு வெளியே ஒரு கத்தி போன்ற சட்டையில் மிடுக்குடன் டக் இன் செய்து கைகளில் file வைத்து கொண்டு செக்யூரிட்டியிடம் சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே சாணக்யா கேட்டான். 

ஏய் சும்மா சும்மா அதை பற்றியே கேட்டுட்டு இருக்க! தயவு செய்து என்னை விடு இதயா! என்று கூறிக் கொண்டே கேட்டுக்கு அருகில் வந்தாள். பிரியா.

இதன்யா கோபமாக உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நீ ரொம்ப ரொம்ப ஓவரா போற! இப்போ நான் என்ன கேட்டுட்டேன். என்று அவளைப் பார்த்தாள்.

பிரியா கடுப்புடன் உனக்கு இது கூட புரியாதா டி! நீ கல்யாணம் வேற பண்ணிக்கிட்ட! உன்னை ஒன்னும் பண்ண முடியாது! சரி அதை விடு! அதை பத்தி எல்லாம் பேசாதே! அதுவும் முக்கியமா அந்த சதீஷை பத்தி என்கிட்ட பேசவே பேசாத! எனக்கு வேலை இருக்கு படிக்கணும்! என்று கிளம்பி விட்டாள்.

இனிமே நான் உன்னை தேடி வர மாட்டேன் நீதான் என்ன தேடி வரணும் என்று அதே இடத்தில் நின்று  இதன்யா கூறினாள்.

போடி  என்று பாதி தூரம் சென்றவள். ஆமா நான் உன்னை தேடி வருவேன். காலேஜ்ல மீட் பண்ணலாம்!  சூப்பரா லஞ்சு செஞ்சு கொண்டு வா! என்று சொல்லி கிளம்பினாள்.

 என்ன இவள் எப்ப பார்த்தாலும் திங்கறதிலேயே இருக்கிறா! என்று ஒரு பெருமூச்சு விட்டு திரும்ப பிரியா அப்பொழுது தான் வெளியே வந்தாள்.

ஹலோ எத்தனை தடவை சொல்றது?  இங்க உள்ள உடமுடியாது!  நீங்க ஆபீஸ் பக்கம் போங்க! இது அவரோட பிரைவசி வீடு! இங்கே எல்லாம் இந்த வேலையெல்லாம் சார் பண்ண மாட்டாரு! புரிஞ்சுக்க மாட்டீங்களா? என்று கடுமையாக அந்த வீட்டின் காவலாளி சாணக்கியாவிடம் கூறிக் கொண்டிருந்தான். 

அவன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக் கொண்டு ப்ளீஸ் சார்! நான் எல்லா இடத்திலும் ட்ரை பண்ணிட்டேன்! என்னை உள்ள விடமாட்டிக்கிறாங்க! ஓவர் பாலிடிக்ஸா இருக்கு! அதனால தான் நான் டைரக்டா இங்க வந்தேன்! என்று அவன் கலக்கமான குரலில் கூறினான்.

உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? இதுக்கு மேல சொல்ல முடியாது! அடிச்சு தான் விரட்ட முடியும்! போயா போய் அந்த பக்கம் போய் நில்லு! என்று காவலாளி அவனை தள்ளி ஒரு இடத்தில் நிக்க வைக்க.. 

அந்த நேரம் பிரியா கேட்டின் அருகில் வந்தாள். அவர் பிரியாவிற்கு கேட்டை திறந்து வைத்தார். பிரியா எதையும் கண்டுகொள்ளாமல் வேகமாக  கிளம்பி விட்டாள்.

அதன் பின் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த காவலாளியின் அருகில் வந்த சாணக்யா அவரிடம் ப்ளீஸ் எப்படியாவது என்னை உள்ளே விடுங்க! நான் அவரை ஒரே ஒரு தடவை  பார்த்துவிட்டால் நன்றாக இருக்கும்! அப்படி இல்லன்னா, இந்த பைலை கொண்டு போய் அவர்கிட்ட கொடுக்குறீங்களா? நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்! எனக்கு எங்கேயுமே வேலை கிடைக்கல! நான் நல்லா படிச்சிருக்கேன்! என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் தான் ரிஷி வெளியே வந்தான்.  அவன் காரில் ஹாரன் அடித்துக் கொண்டிருக்க.. காவலாளி திடுக்கிட்டு  யோவ் உன்னால தான்! என்னோட வேலை போகப்போகுது! என பதட்டத்துடன்  இதோ வரன் சார்! என்று  ரிஷிக்கு கேட் திறந்து விட்டார்கள். 

ரிஷி வெளியே வர சாணக்யா ரிஷியின் காரின் எதிரில் போய் கையை நீட்டினான். 

யோவ் என்னய்யா பண்ற? என்று காவலாளி அவனை பிடிக்க வர..

நில்லுங்க என்று ரிஷி கூறினான். 

சாணக்கியா கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டு சார் என் பேரு சாணக்யா! எம் பி ஏ  project management முடிச்சிட்டு வேலைக்காக நிறைய இடத்துல ட்ரை பண்ணேன்! வேல்யூவ புரிஞ்சுக்காம என்னை எல்லாரும் வெளியே அனுப்பிட்டாங்க! நான் நெட்ஒர்க் பிளான்ல ரெண்டு மூணு ப்ராஜெக்ட் பண்ணி இருக்கேன் சார். அத பத்தி சித்தார்த் சார்கிட்ட பேசி வேலை கேட்கலாம்ன்னு  வந்தேன். ஆனால்  இவங்க யாரும் என்னை உள்ளே விட மாட்டேங்குறாங்க.  என்று கூறினான்.

ரிஷி அந்த காவலாளிகளை  பார்த்தான்.

உடனே அந்த காவலாளி சார் இது  வந்து நம்ம பாஸ் சித்தார்த் சாரோட  பிரைவேசி டைம்! இந்த டைம்ல யாரையும் ஆபீஸ் விஷயமா உள்ளே விடக்கூடாது! உங்களுக்கே தெரியும் தானே! அவர் எவ்வளவு பிஸின்னு? இந்த ஆளு சும்மா சும்மா வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்! என்று  கூறினார்.

ரிஷி நீங்க ஆபீஸியலா அவருக்கு மெயில் போட்டிங்களா என்று கேட்டான்.

சார் எனக்கு அந்த அளவுக்கு எந்த டீடெயிலுமே தெரியாது! வீடு தெரிஞ்சதனாலதான் நான் இங்க வந்துட்டேன். என்று சாணக்யா கூறினான்.

என்ன?  வீடு தெரிஞ்சு  இங்கே வந்துட்டீங்களா?  இன்ஜினியரிங் MBA படித்திருக்கிறேன்னு சொல்றீங்க? ப்ராப்பரா ஒரு மெயில் கூட போட்டுட்டு வர முடியாதா? அவங்களே வேக்கண்ட் இருந்தா கூப்பிடுவாங்களே! என்று ரிஷி கேட்டான்.

சாணக்யா கண்ணாடியை மூக்குக்கு சார் இது நெட்வொர்க் பிளானிங். அதனால தான் நான் இந்த ப்ராஜெக்ட் மெயில் பண்ணல. சப்போஸ், என்னோடத யாராவது திருடிவிட்டால்? என்ன பண்றதுன்னு! எனக்கு பயம் சார்! என்னோட சின்ன வயசு உழைப்பு நான் பெரிய இடத்துல வேலை செய்யணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதனாலதான் நான் கரண்ட் கொடுக்குற ஈபிய சூஸ் பண்ணேன்.  என்று அவன் கூறிக் கொண்டிருந்தான்.

ரிஷி அவனிடம் நான் உங்களுக்கு சித்  சாரோட மெயில் ஐடி கொடுக்கிறேன். நீங்க அவருக்கு சென்ட் பண்ணுங்க. உங்களோட ப்ராஜெக்ட் புடிச்சு போச்சுன்னா! அவரே உங்கள கூப்பிடுவாரு! இங்க எல்லாம் வந்து தொந்தரவு பண்ணிட்டு இருக்காதீங்க! என்று கூறினான்.

சாணக்யா புன்னகையுடன் சரிங்க சார் என்று கூறினான். 

ரிஷி சித்தார்த்தினுடைய அபிஷியல் மெயில் ஐடியை சாணக்கியாவிற்கு கொடுத்தான்.

அதை வாங்கிக் கொண்டதும் ரொம்ப நன்றி சார் இதை இந்த உதவிய நான்எப்பவும் மறக்கவே மாட்டேன் என்று கூறினான்.

சரி இங்க நின்னுட்டு இருக்காதீங்க கிளம்புங்க!  என்று ரிஷி கூறினான்.

சாணக்யா அந்த காவலாளிகள் அனைவரையும் பார்த்து முறைத்து விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினான். 

இங்கே இதன்யா உள்ளே வந்ததும் அந்த நேரம் அபி கிளம்பினான்.  

சித்தார்த் அவனை கண்டு கொள்ளாமல் வேலையை பார்த்து கொண்டிருக்க.. அண்ணா! என்று இருவர் அழைத்தனர். 

இதன்யா மற்றும் சதீஸ் இருவரும் சேர்ந்தே அழைத்தார்கள்.  ஆனால் அபி ஒரே ஒருமுறை மட்டும் திரும்பி பார்த்துவிட்டு சதீஷ் முறைத்துக் கொண்டே சென்றான். 

இப்போ எதுக்கு முறைக்கிறான்?  என்று சதீஷ் நினைக்க.. என்ன அண்ணா முறைச்சு பார்த்துக்கிட்டே போறாரு என்று இதன்யா கேட்டாள்.

சித் சிரித்துக் கொண்டே அவன் இப்போ கொஞ்சம் கொஞ்சமா மெண்டல் ஆக   சுத்த போறான்னு தோணுது! என்று கூறினான். 

என்ன சொல்ற?  என்று சதீஷும்,என்ன சொல்றீங்க இன்று இதன்யாவும் கேட்டனர். 

ஒன்னும் இல்ல என வெடுக்கென கூறியவன்.  ஆமா நீ எதுக்குடா இன்னும் இங்கே இருக்க? கிளம்பு! அதான் போட்டோ எடுத்து முடிச்சிட்டல்ல என்று சித்தார்த் கூறினான்.

உன்  வேலையை முடிச்சது! உடனே துறத்துற? உன்ன பார்த்துக்கிறேன் இரு சதீஸ் இரண்டடி வைத்தவன். எதையோ யோசித்து விட்டு வேகமாக வந்து சித்தார்த்தின் கையில் இருக்கும் லேப் டாப்பை பிடிங்கினான்.

என்ன டா பண்ற? என சித் கடுமையான குரலில் கேட்டு லேப்டாப் பிடுங்க வர..

சதீஸ் அவனுக்கு அருகில் அமர்ந்து விடு டா!  விடு நானும் அவளும் எடுத்த போட்டோ பார்த்தாகணும்! நான் அதை எனக்கு இப்போ! உடனே அனுப்பி விடு! என்று அவன் கேட்டான். 

அவள் உன்னை வேணாம் ன்னு சொல்லிட்டுப் போறா!  நீ வந்து அவளோட போட்டோவை கேட்கற?  என்று சித்தார்த் கேட்க..

 சதீஸ்  சிரித்து கொண்டே எதுவும் சொல்லாமல் அனைத்தையும் அவனுடைய மெயிலுக்கு அனுப்பி கொண்டிருக்க…

ஹே சொல்லு! நீ கேவலமா சிரிக்கிறத பார்த்தால் அங்கே ஜாக்ரபி சேனல் ஓடி இருக்கும் போலயே! என்று சித்தார்த் பார்த்தான். 

அது என்று அவன் சொல்ல வர.. 

என்னங்க ஜாக்ரபி சேனல் அப்டின்னா என்ன? என்று இதன்யா கேட்க.. 

இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்தனர். என்னடா பாப்பா இப்படி இருக்கா! அப்போ நீங்க ரெண்டு பேரும்! என சதீஸ் திரும்பி சித்தார்த்தை  பார்த்தான். 

அய்யோ இவள் மானத்தை வாங்குறாளே! என சித் நினைத்து கொண்டு அவளை முறைத்தான். 

அப்போ ஹனிமூன்ல என்னடா பண்ணீங்க! 

நீ மூடிட்டு போ! என்ன நினைச்ச? அவள் இதன்யா! சோ பிரியா இல்ல! அவளுக்கு தான் இதெல்லாம் தெரியும்! என சித் சமாளித்தான். 

சதீஸ் அவனை பார்த்து கொண்டிருக்க உடனே ரோஸ் வந்து இதன்யாவை அழைத்து சென்றாள். 

சரி சொல்லிட்டு போ! என சித் கேட்டான். 

போடா! 

சொல்லாத! இனி உனக்கு என்னோட முடி கூட ஹெல்ப் பண்ணாது! என சித் லேப் டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தான். 

டேய் டேய் சித்து அது அது வந்து. என சதீஸ் தயங்க..

இந்த shy கண்றாவி எல்லாம் இங்கே என் முன்னாடி பண்ணாத விசயத்தை சொல்லு! என சித் கூறினான். 

நீ கண் அடிச்ச நானும் சாதாரணமா தான் பார்க்க போனேன். ஆனால் அங்கே போய் பார்த்தால் ஒர்க் அவுட் ஆகிடுச்சு டா! எப்டி சித்து? எனக்கு அந்த நிமிசம் ஹனி மூன் போக தோணுச்சு டா! என்று சதீஸ் கூறி கொண்டிருக்க…

இனி என்னோட கார்டன ரெண்டு பேரும் அசிங்க படுத்தாதீங்க! அவளை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போய் நீ என்ன வேணாலும் பண்ணிக்க.. என சித் கூறி முடித்து லேப் டாப்பை மூடி வைத்தான். 

சதீஸ் முறைத்து பார்க்க..

டேய் கிளம்பு! என்று சித் எழுந்தான். 

இங்கே ரிஷி வீட்டுக்குள் வர அங்கே பவானி இருந்தார். 

அத்தை! என அழைத்து கொண்டே உள்ளே வந்தான். 

இங்கே சதீஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் அபி வேகமாக அவன் அருகில் வந்து போனை பிடுங்கி கொண்டு சென்றான். 

அண்ணா! அண்ணா! என்ன பண்ற? 

அபி அவனுக்கு அருகில் வந்து வயிற்றில் ஒரு குத்து விட்டு சதீசின் போனை எடுத்து கொண்டு அவனுடைய அறைக்கு சென்று விட்டான். 

என்ன ஆச்சு இவனுக்கு? நிஜமாவே மெண்டல் ஆகிட்டானா? என சதீஸ் அப்படியே நின்றார்.  

இனி பிரதன்ய குழலிக்கு support பண்ணுங்க! 

தொடரும்..

அடங்காத அதிகாரா march la இருந்து daily ud வரும் contract apply panna poren. 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 269 

அண்ணா! அண்ணா! என்ன பண்ற? 

அபி அவனுக்கு அருகில் வந்து வயிற்றில் ஒரு குத்து விட்டு சதீசின் போனை எடுத்து கொண்டு அவனுடைய அறைக்கு சென்று விட்டான். 

என்ன ஆச்சு இவனுக்கு? நிஜமாவே மெண்டல் ஆகிட்டானா? என சதீஸ் அப்படியே நின்றான்.

அபி நேராக உள்ளே சென்றவன். போனை எடுத்து பூஜாவின் போன் நம்பரை பார்த்தான். 

இவள்!  இவளுக்கு! இவளுக்கு ஏன் நம்ம போன் பண்ணி பேசணும்? இவளை நாம கொடுமை கிடுமை கூட பண்ணலயே! என்று  நினைத்து மீண்டும் எழுந்த அபி போனை சதீஸ் கிட்ட கொடுக்க சென்றான். 

சதீஸ் உள்ளே சென்றவன் முதலில் படுக்கையில் இருந்த தலையணையை எடுத்து முத்தமிட்டு கொண்டே உருண்டான். பிரியாவின் கழுத்தில் கடிக்கும் போது அப்படியே ஜிவ்வென இருந்தது. அவளோட கழுத்துல இடம் கொடுத்தா அங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம்! என்று நினைத்து சிரித்தான். 

அபி கதவை திறக்க சதீஸ் வெடுக்கென எழுந்து அமர்ந்தான். என்னால போராட முடியல என பூஜா கடைசியாக சொன்னது நினைவுக்கு வந்தது. ச்ச! ச்ச! என நினைத்தவன் அவளின் போன் நம்பரை எடுத்தான். பூஜா வதினா என சதீஸ் பதிவு செய்து வைத்திருந்தான். 

அதை பார்த்ததும் அபிக்கு கோபம் வந்தது. வேகமாக அந்த வதீனா என்னும் வார்த்தையை டெலிட் செய்து விட்டு நேராக பூஜா டீச்சர் என பதிவு செய்தான். 

வதினா! அவள் உனக்கு வதிணாவா? என முனகி கொண்டே அவளின் எண்ணை அபியின் போனில் பதிவு செய்தான். 

இங்கே சதீஸ் திடுக்கிட்டு கதவை பார்த்தவன். இவன் உள்ளே வரானா? இல்லையா? எதுக்கு கதவை திறந்தான்! சொந்த வீட்டில் என்னோட ரூம்ல நான் எதுக்கு டா பயந்து பயந்து சாகணும்? அய்யோ தேவுடா வெங்கட ரமணா என்னை எதுக்கு இவனுக்கு தம்பியா பிறக்க வச்சீங்க? என சதீஸ் உட்கார்ந்து புலம்பி கொண்டிருந்தான். 

எப்படி save செய்தான்? எப்படி எப்படி என யோசித்தான். என்ன பேர்? பூஜா prayer என பதிவு செய்தான். அதன் பின் அழித்து அவளை எதுக்கு நம்ம சேவ் பண்ணி வைக்கணும்? அவள் நம்ம கிட்ட வேலை பார்க்கும் பொண்ணு முக்கியமா அவள் அந்த நாயை தானே லவ் பண்ணா! இப்போ கூட பண்ணிட்டு இருப்பா! என நினைத்து servant receptionist என பதிவு செய்தான். 

அவளை நினைச்சா மட்டும் எங்கே இருந்தாலும் தேடி வந்திடுறான்? நாளைக்கு தாலி கட்டும் போது கூட பக்கத்தில் வந்து உட்கார்ந்தா கூட ஆச்சரிய படுறத்துக்கு இல்ல! எல்லாம் என்னோட நேரம்! என சதீஸ் நினைத்து கொண்டிருக்க அந்த நேரம் கதவு திறந்தது. 

அண்ணா! என சதீஷ் அழைக்க..

அபி அவனை பார்த்து போனை தூக்கி போட்டு விட்டு சென்று விட்டான். 

நிஜமாவே இவன் மெண்டாலன் தான்! என நினைத்த சதீசுக்கு ஹான் இது கூட நல்லா இருக்கே! மெண்டாலன்! என வேகமாக சென்று கதவை அடைத்து கொண்டு படுக்கையில் வந்து விழுந்தான். பிரியா! பிரியா! பிரியா! என கண்ணை மூடி கனவு காண ஆரம்பித்தான். 

என்ன பவானி அவசரத்தில் வந்த மாதிரி இருக்கு! என தயாகரன் சொல்ல..

ஒன்னும் இல்ல தயா! கல்யாண பேச்சு எடுக்க தான் வந்தேன். உடனே கல்யாணம் பண்ணனும்! 

அப்படியா என தயாகரன் பேசி கொண்டிருக்க..

பவா என சிரித்த முகத்துடன் ராதிகா வர, அது உடனே ரோஸ்னி ரிஷி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும் ராதிகா! என்று பவானி கூறினார். 

அப்டியா பண்ணிடலாம்! நானும் இதை பத்தி நினைச்சுட்டு தான் இருந்தேன். நல்ல வேளை நீயே சொல்லிட்ட.. என்று ராதிகா கூறினார். 

அந்த நேரம் ரிஷி வந்தான். அத்தை! இப்போ தான் மாமாவை பார்த்திட்டு வந்தேன். எப்படி இருக்கீங்க? மாமா புதுசா ஒரு product release பண்ண போறாங்க! அதுக்கு போட்டோ ஷூட் க்கு நானும் ரோஸ் ரெண்டு பேரும் கொடுத்து இருக்கோம். என்று கூறினான். 

ரொம்ப சந்தோசம் ரிஷி! என்று சொன்ன பவானி வீட்டை நோட்டம் விட்டு ஆமா எங்கே உங்க பொண்ணு காணோம்! என கேட்டார். 

அது அவள் அப்பா கூட இருக்கா பவா என ராதிகா கூறினார். 

தயா எனக்கு கல்யாணத்துக்கு நாள் பார்த்து சொல்லு! உன்னோட ஃபேமிலி எல்லாரும் வரனும்! இப்போவே சொல்லிடு ஒரு நாலு டேட் செலக்ட் பண்ணி இப்போவே சொல்லு என்று பவானி கூறினார். 

இதை கேட்டதும் தயாவுக்கு மிகவும் சந்தோசம் உடனே வேகமாக அவர் காலண்டர் எடுத்து தேதி பார்க்க போக பின்னால் ரிஷி சென்றான். 

ராதிகா அங்கிருந்து இதோ வந்துடுறேன் என செல்ல போக.. 

ராதிகா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்று பவானி கூறினார். 

என்ன பவானி! என்று புன்னகையுடன் கேட்டார். 

உன் பொண்ணு சித்து கூட நடிக்கிறா போல! 

ஆ! ஆமா பவானி! என சிரித்து கொண்டே கூறினாள். 

பவானி அவரை உறுத்து பார்த்து “இதை நீ என்கிட்ட ஒரு தடவ கூட ஷேர் பண்ணலையே?” என்று கேட்டார்.

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு! பெருசா ஒன்னும் இல்ல! பவானி..

அப்படியா ஆமா உன் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்ண போற? எப்பவும் பொண்ணோட கல்யாணத்தை முடிச்சிட்டு தான் பசங்களுக்கு பண்ணுவாங்க! நானும் அதே போல தான்! ரோஷினிக்கு முடிச்சுட்டு தான் சித்தார்த்துக்கு பண்ணலாம்னு இருக்கேன் என்று பவானி  கூறினார்.

அதுதான் சித்தார்த் ஏற்கனவே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டானே! அந்த பொண்ண  உனக்கு புடிச்சிருக்கா? என்று  ராதிகா ஒரு வித தயக்கத்துடன்  கேட்டார்.

பவானி ராதிகாவை பார்த்து “உன் பையனை  புடிச்சிருக்கும் போது! எனக்கு என் மருமகள புடிச்சி இருக்காதா? என்ன? என்று கேட்டார்.

ராதிகாவிற்கு சங்கடமாக போனது. 

பவானி ஆளுமையான குரலில் “உன் பொண்ணு கிட்ட சொல்லி வை!  என் பையன் வாழ்க்கையில் மட்டும் அவ வந்தா! நான்.. என பற்களை கடித்து கொண்டு ஒரு உஷன மூச்சை வெகு விட்டவர்.  இந்த கல்யாணத்துக்கு நான் எதுக்கு தெரியுமா சொன்னா சம்மதிக்கிறேன்?

ராதிகா தயக்கத்துடன் பார்க்க, பவானி அவரை பார்த்து ரோஷினி ஒரு சாதாரண குடும்பத்தில் கல்யாணம் பண்ணா நல்லா இருப்பான்னு தான், இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்.  அதேபோல உன்னை மனசுல வச்சு நான் ரோஷினிய கட்டி கொடுக்கல! தயா ரொம்ப நல்ல கேரக்டர்! உன்னை பத்தியும் எனக்கு தெரியும்! தயாவை பத்தியும் எனக்கு தெரியும்! உன் மூலியமா தான் தயா எனக்கு அறிமுகமானார்.ஆனால் தயாவுடைய கேரக்டர் மாதிரி தான் ரிஷி! அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். அதனால உன் பொண்ண பார்த்து பத்திரமா இருக்க சொல்லு!  தயா வேணா சாதாரண குடும்பத்தில் இருந்து வந்திருக்கலாம்!  என் மருமகளும் அதே மாதிரி தான்! ஆனா என் மருமகளுடைய இடத்தை யாராவது பிடிக்கும்னு நினைச்சா? இந்த  பவானி!.  வேற மாதிரி! வேற  ஒரு பவானிய பார்ப்ப! எனக்கு பயம் இல்ல..  உன் பொண்ணு நினைக்கறது எப்போவும்  நடக்காது என்று கூறினார்.

ராதிகா கொஞ்சம் பதட்டமான குரலில் எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! பவானி  நான்  அவகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்! அவ அந்த மாதிரியான பொண்ணு இல்ல!

 பவானி நேரடியாக அவரை பார்த்து  எனக்கு இந்த மறைச்சு பேசறதெல்லாம் பிடிக்காது! உன் பொண்ணு என் பையன ஃபாலோ பண்ணி  ஸ்விட்சர்லாந்து போய் இருக்கா? உனக்கு தெரியாதா? என்று அவளை பார்த்தாள்.

அப்படியா சத்தியமா எனக்கு தெரியாது!சுவிட்சர்லாந்து போறான்னு தெரியும்! பட் இந்த விஷயம் எனக்கு தெரியாது!  என்னை நம்பு பவானி என்று பதட்டத்துடன் அருகில் வர..

பவானி எழுந்து நின்று என்னை  பத்தி கூட  உனக்கு முழுசா தெரியாது. ஆனால்   சித்தார்த் என்னை விட ரொம்ப ரொம்ப மோசம்!  சித்தார்த்தை பற்றி உனக்கு சுத்தமா தெரியாது! உன் பொண்ணு அவளால் கொஞ்சம் பிரச்னை வந்தாலும் இதன்யாவுக்கு எதிராக   ஏதாவது அவ தப்பா   ட்ரை பண்ணா அவ்வளவு தான்!  சித்தார்த்தி என்ன பண்ணாலும் நான் தடுக்க மாட்டேன்! என் பையனும், என் பொண்ணு தான் எனக்கு முக்கியம்.  புரியுதா! என்று  கூறினார். 

அந்த நேரம் தயாகரன் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்.  மூணு நாள் பார்த்து இருக்கேன் பவானி! அதுல ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் வச்சா எல்லாரும் வருவாங்க! என்று புன்னகையுடன் கூறினார்.

 ஓகே உங்களோட குலதெய்வத்துல கல்யாணம் பண்ணலாமா என்று பவானி  கேட்டார். 

அவருக்கு மிகவும் சந்தோஷமாகி போனது. இதுக்கெல்லாம் நீ ஒத்துக்குவியா? என்னமோ? நான் அதான் கேட்காமல் இருந்தேன்  பவானி! என்று தயாகரன் கூறிட..

ரோஷினிய  உனக்கு மருமகளா தான் நான் அனுப்புறேன்! அதனால எனக்கு ரொம்ப சந்தோஷம்! என் பொண்ண நீ மாமனாராவும் பார்த்துக்கணும், ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து என் பொண்ண நல்லா பார்த்துப்ப  அப்டின்னு நான் நம்புறேன்! என்று பவானி கூற..

 நான் கூட நீ ஸ்டேட்டஸ் பாப்பன்னு நினைச்சேன் பவானி! ஆனால் நீ  இஎப்பவும் ஒரே மாதிரி இருக்க! நீ  என்கிட்ட அதிகமா பேசினது கூட இல்ல! நான் பார்த்ததில் இருந்து  இதுவரைக்கும் ஒரே மாதிரி தான் இருக்க!  எனக்கு ரொம்ப சந்தோஷம்! என்று  கூறினார்.  

ராதிகா பதட்டத்துடன் நின்று கொண்டிருக்க சரி நான் கிளம்புறேன்.  நீங்க அந்த டேட்ட அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்.  ஃபர்ஸ்ட்  உங்க பேமிலியோட ஆசிர்வாதத்தோட உங்க குலதெய்வம் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்! அதுக்கப்புறம் ரிசப்ஷன் இங்க இருக்கிறதா இருந்தாலும் ஓகே! பெங்களூர்ல பெருசா பண்றதா இருந்தாலும் ஓகே! அதை என் மாமனார் கிட்ட கேட்டு நான் முடிவு பண்ணுகிறேன்! 

சரி பவானி அதேபோல பண்ணிக்கலாம்! தயா சொல்ல

ரிஷி புன்னகையுடன் பவானியை அனுப்பி வைத்த அனுப்பிவைக்க சென்றான்.

பவானி நேராக அவருடைய வீட்டுக்கு அதாவது சித்தார்த் ரோஷினி தனியாக இருக்கும் வீட்டிற்கு கிளம்பினார். 

ராதிகாவிற்கு இப்பொழுது மிகவும் பயமாக இருந்தது.  ஐயோ இவளுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சே! பயங்கர டெரரா பேசிட்டு போறா! ஆனா அப்பவும் மேகா திருந்தாம இன்னுமும் இதே வேலையை தான் பண்ணிட்டு இருக்க்கா. இவளை நான் எப்படி மாத்த போறேன்னு தெரியலையே?  பவானி வேற வில்லை பேசிட்டு போறாளே! என்ன நடக்குமோ? என்று பதட்டத்துடன்  நினைத்துக் கொண்டிருந்தார்.

தயாகரனுக்கு மிகவும் சந்தோஷம் உடனே போன் செய்து அவர்களுடைய அம்மா, அண்ணன், அக்கா குடும்பத்திற்கு சொல்லிக் கொண்டிருந்தார் .

*

 இங்கே சித்தார்த் அவனுடைய அறையில் அடுத்த கட்ட வேலையாக ஸ்டார்ஜியாவிடம் ஃபோன் செய்து இந்த சப்ளிமெண்ட் மாத்திரைகள், அதனுடைய டிசைன் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, அதை எவ்வாறு மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது? என்று மீட்டிங் முடித்துவிட்டு, அதற்குண்டான அவுட்லைனை லேப்டாப்பில் ரெடி செய்து கொண்டிருந்தான்.  கூடவே நிறைய பார்மச்செடிக்கல் கம்பெனிக்கு போன் செய்து ஒரு கம்பெனியில்  மாத்திரைகளை தயாரிக்க தயார் செய்ய டை அப் வைத்துக் கொள்வதாக கூறி அதை பற்றி பேசிக்கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான்.

அந்த நேரம் இதன்யா உள்ளே வந்தாள். அவள்  மணியை பார்க்க மணி எட்டு முப்பதை தொட்டிருந்தது. நேராக சென்றவள். அவளுடைய அம்மாவிற்கு போன் செய்து பேசிவிட்டு, அவளுடைய அவலித்து விட்ட கூந்தலை பின்னி கொண்டே அவனை பார்த்தாள். ஆனால் சித்  அவள் வந்தது கூட தெரியாமல் சின்சியராக வேலை செய்து கொண்டிருந்தான். 

எப்ப பார்த்தாலும் இவனுக்கு லேப்டாப் தடவறது மட்டும்  வேலையே! அதை பார்த்துட்டா மட்டும் மத்ததை  மறந்து போயிடுவான். கடன்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்க..

சித்தார்த் வேலையில் மும்முரமாக இருந்தான். இவனை என்ன பண்ணலாம்! அப்படியே சும்மா வுட கூடாது. என அவனுக்கு முன்னால் நடந்து பார்த்தாள்.  அப்பொழுதும் அவன் திரும்பவில்லை.  என்னென்னவோ செய்து பார்த்தாள். அவன் அப்படியே இருந்தான்.

அதன் பின் லேப்டாப்பின் முன்னால் தலையை வைத்துக் காட்டினாள். 

என்னடி பண்ணிட்டு இருக்க? என குரல் மட்டும் தான் பேசியது. அவன் வகையை தான் செய்து கொண்டிருந்தான். 

பார்த்தா தெரியலையா? 

நான் தான் உன்னை பார்க்கவே இல்லையே! என சித் சொல்ல..

அதான் கேட்கிறேன்? ஏன் பாக்கலன்னு?

என்ன டி கேள்வி? எனக்கு வேலை இருக்கு! அதனால நான் வேலை இருக்கேன். என அவள் எழுந்தாள். 

அப்ப நானும் உங்களை பார்க்கல!  என்று இதன்யா விலகி செல்ல போக..

சித்தார்த்தா அவர்களின் கைபிடித்து லேப்டாப்பை மூடி வைத்தான்.  என்ன வேணும் சொல்லு!

 இல்ல இல்ல நீங்க உங்க வேலையை கண்டினியூ பண்ணுங்க!  நான் போறேன் என்று அவள் நகர..

சித் அவளை  அப்படியே இழுத்து  அவள் அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.  இருவரும் முகத்தை பார்க்குமாறு அவள் கட்டிக் கொண்டாள். 

என்ன ஆச்சு? என்று கேட்டான்.

நீங்க தான் பார்க்கவே இல்லையே! 

நான் பார்க்கவே இல்லை தான்! ஆனா லிட்டில் ஹார்ட் என்னை பார்த்திட்டு இருந்தீங்கலே! எதுக்கு மேடம் சாரி டீச்சர் என்னை  பார்த்துட்டு இருந்தீங்க?  என்று கேட்டான்.

அடேங்கப்பா என்று அவள் முகத்தை திருப்ப..

சித்தார்த் அவளுடைய  மோவாயை பிடித்து முத்தமிடும் முத்தமிட ஆரம்பித்தான். 

இதன்யா சிணுங்கி கொண்டே திரும்பி எழுந்து செல்ல முயற்சி செய்ய.

சித்தார்த்  அவளின் இடையை  கட்டிக்கொண்டு முகத்தில் முத்தமிட்டுக்கொண்டே, கழுத்தில் முத்தமிட்டு கடித்தான். மிம்.. என்று அவள் முனக… 

சித் அவளின் உடையில் கைகளை நுழைத்து கொண்டான். 

ஹே என்.. என்ன பண்ற.. 

அவன் கைகள் இன்னும் செல்ல..  என்ன பண்றீங்க என்ற அவள் நகர..  ஹே தள்ளி போகாத என்று அப்படியே சோபாவில் படுக்க வைத்தவன். அவள் மேல் படர்ந்து கொண்டான். 

நான் என்ன உங்க கிட்ட சொல்லி இருக்கேன்?  இந்த ப்ராடக்ட்டுக்கு பிராண்ட் அம்பாசிட்டர் கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் தான் நீங்க பக்கத்துல வரணும்னு சொல்லி இருக்கேன்! இப்போ எதுக்கு நீ என் பக்கத்துல வந்தீங்க? என்று அவனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தாள்.‌

சித் சிரித்துக் கொண்டே நடிக்காத டி! நீ தான் என் பக்கத்துல வந்த? அப்படியே வந்து என்னை  பாக்கலையான்னு கேட்ட!!நானா உன் கிட்ட கேட்டேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்த என்னை.. டெம்ட்ட பில்ட் பண்ணிட்டு இப்போ என்ன டி ஆக்ட் விடுற..  நீ தான் வந்து பாக்கலையான்னு கேட்ட! அதான் உன்னை கவனுக்கனும் தான! அதுக்கு தான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன்.  என்று அவளுக்கு  முத்தமிட்டு கொண்டு  அவனுடைய கைகள் அவளின் உடைக்குள் மீண்டும் செல்ல..

என்ன பண்றீங்க என்று குரல் மெல்லமாக கேட்க ஆரம்பித்தது. 

ஹே பிராடு!  கொஞ்சம் கொஞ்சமா மட்டும்  அப்படியே கட்லின் அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?  என்று கேட்டான். 

புத்தா! அடி வாங்க போறீங்க!  தள்ளுங்க! என்று அவள் பேச..

ஏண்டி என் பக்கத்துல வந்து டெம்ப்ட் பண்ண?  அதுக்கு நீதான் ரெஸ்பான்சிபிலிட்டி ! என்று மீண்டும் அவளின் உதட்டை கவ்வி  முத்தமிட ஆரம்பித்தான்! 

மிம்.. ம்ம்.. ஹிம் என அவள் முனக . 

ஒரே ஒரு தடவை  மட்டும் அதை விட  இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருந்த டி! அந்த போட்டோ ஷூட் அப்போ வந்து ஜாக்ரபி பத்தி கேட்கும் போதே அங்கே அதை எக்ஸ்பிளைன் பண்ண தோணுச்சு என்று படுக்கைக்கு சென்றான். 

என்ன டா சொல்ற? அப்போ அதுக்கு இது தான் அர்த்தமா? 

சித்தார்த் சிரித்து கொண்டே நீ வேற என்ன நினைச்ச? நீ ஒரு மக்கு டீச்சர் டி! இதுல கெமிஸ்ட்ரி டீச்சர் வேற! என சொல்லி கொண்டு அவள் மேல் படர்ந்தான். 

 புத்தா! எதாவது பண்ணுன? உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்! தள்ளி போறா புத்தா! பக்கத்துல வராத!

என்னடி ஆச்சு அதுதான் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோமே! அது ஞாபகம் இருக்குல்ல! இன்னும் நம்ம ரெண்டு பேருக்கும்  ஃபர்ஸ்ட் நைட் நடக்கல டி என்னை கொடுமை பண்ற?

பொய் பொய்  என இதன்யா கூறினாள். 

என்ன பொய்! 

அவள் கண்களை மூடி அவன் தொடுதலில் கிறங்கி கொண்டே  அதுதான் என்னை என்ன கசகசா பண்ணிங்களே அப்புறம் என்ன? 

 அது என்ன கசகசா? என்று சித்தார்த் கேட்க ..

அதுதான் அன்னைக்கு ரெட் கார்பெட்ல என்னை  பண்ணீங்கல்ல அது பேர் தான் கசகசா! என்று இதன்யா கூறினாள்.

அப்போ நீ என்ன பண்ணுது கசமுசாவா?  என்று சித் கேட்டான். 

 ச்சீ! நானா! நானா! நான் இப்போ உங்களை பண்ணேன்?  என்று இதன்யா அந்த பக்கம் திரும்பிக் கொள்ள..

நடிக்காதடி மொத மொத நீ தான் பண்ணுன!  இப்போ ஒரு தடவை ட்ரை பண்ணலாமா? என்று சித்தார்த் கேட்க..

இப்போ வேண்டாம் வலிக்குமே என்று கூறினாள்.

அப்போ பண்ணவே வேண்டாம் என்று அவன் எழுந்து கொண்டான் .

இதன்யா அவனை  பிடித்து இழுத்து பண்ண வேண்டாமா? பண்ணனுமே! என்று கூறினாள்.

பண்ணனுமா?! வலிக்கும்ன்னு நீ தான சொன்ன? 

அது இப்போ வேண்டாம்! பண்ணனும் தான்! அதுக்கு முன்னாடி பிராண்ட் அம்பாசிடர்!

எதுக்குடி நீ அதுல எல்லாம் பொறாமை பட்டுட்டு இருக்க? என சித்தார்த் அவளை பார்க்க.. 

ஆமா எனக்கு பொறாமை தான்! நீங்க எனக்கு மட்டும் தான்! நான் ஒருநாள் ஷூட்டிங் வந்து பாக்கணும்! நீங்க என்னன்ன பண்றீங்கன்னு? 

ஏன் எதுக்கு சூட்டிங் வரப்போற! 

  நீங்க லீனா பத்தி கூட அதிகமாக பேசினது இல்ல! ஆனா இந்த நவ்யாவ பத்தி பேசிட்டு இருக்கீங்க!  தாரா மேம் பத்தி கூட இப்போ பேச்சு குறைந்து போச்சு!

தாரா வெண்ணிலா ஸ்டோரி அடங்காத அதிகாராவுக்கு போயிட்டா! அதான் பேசுறது இல்ல… சித் கூறினான். 

என்ன? 

அவள பாத்தா உன்ன மாதிரியே இருந்தது.  அதனால அவ கிட்ட கொஞ்சம் பேசுவேன். என சித் கூறினான். 

என்ன? கொஞ்சம் பேசுவீங்களா? 

பேச கூடாதா? 

நீங்க பேசக்கூடாது!  என்று இதன்யா கூறினாள்.

ஹே அவள் எனக்கு வில்லி கேரக்டர்ல தான் நடிக்கிறா!  அவன்கிட்ட சும்மா என்னன்னா என்ன அப்படின்னு பேசுவேன்!  லஞ்ச் டைம்ல பேசுவேன்!

என்ன லன்ச்சா?  என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

என்னடி ஆச்சு? 

 புத்தா! நீ யார் கூட சேர்ந்து சாப்பிடுவ? 

அவ  கூட தான்! 

அப்படியா அப்ப பக்கத்துல வராத! போடா!  என்று தள்ளிவிட்டு அவள் படுத்துக்கொண்டான். 

சித்தார்த் அவளை விநோதமாக பார்த்து  அருகில் வந்து என்ன டி இது? அவள்  என் கூட நடிக்கிறா!  அதனால அவ கூட சேர்ந்து சாப்பிடுவேன். அது அப்படி கூட இல்ல!  அவ தான் என் கூட வந்து சாப்பிடுவா! நானெல்லாம் அவளை கூப்பிட மாட்டேன்.  என்று கூறினான். 

அப்படியா?  அவ எதுக்கு உங்க கூட வந்து சாப்பிட சாப்பிடுறா? 

நம்மளோட  ஸ்வர்ணா ப்ரொடக்ஷன்ஸோட மீடியாவுல  அக்ரிமென்ட் சைன் பண்ணி இருக்கா!  அவ்வளவு தான்! அதனால்  பிராண்ட் அம்பாசிட்டர். அவளை நான் வந்து காண்டாக்ட் போட்டு இருக்கேன்.  அதனால அத பத்தி பேசுறதுக்காக என் கூட வந்து சாப்பிடுவா! ஆனால் அதுக்கு நீ ஏன் டி இப்படி  கற்பனை பண்ற? என்று சித்தார்த் கேட்டான். 

அப்படியா நிஜமாவா? இதை நான் நம்ப மாட்டேன். 

ஹே அதுக்குன்னு  உன்ன மாதிரி என்னால புக்ல சத்யம்.. அதென்ன புக் மேல எல்லாம் சத்தியம் பண்ண முடியாது. என்று சித்தார்த் கூறினான்.

இதன்யா முறைத்து கொண்டே  முகத்தை திருப்பிக் கொள்ள.. 

 இப்போ அதை விடு! இப்போ நீ  வரியா இல்லையா?  அப்போ பண்ண வேணாமா! வலிக்குமா என்று கேட்டான். 

ஆமா பண்ண வேணாம்!  வலிக்கும்! முகத்தை கோபமாக வைத்து கொண்டு கூறினாள். 

சரி என்று அவன் திரும்ப…

இவனை  என்று அவனை பிடித்து இழுத்து முத்தமிட ஆரம்பித்தாள்.

அப்போ இப்போ பண்ணலாமா?  உனக்கு வலிக்காதுல்ல என்று  தயக்கத்துடன் கேட்க

எப்படியா இருந்தாலும் வேண்டாம்! ஃபர்ஸ்ட் ப்ராண்ட் அம்பாசிடர்! 

அப்புறம் எதுக்குடி என்னை வந்து பாக்கலையா பாக்கலையான்னு!  வந்த.. இப்போ எதுக்கு இழுத்து முத்தம் கொடுத்த?  என்று உதட்டை கடித்து விட்டான். 

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரு அந்த ரோஷினியா தான் இருப்பா?  என்று நினைத்துக் கொண்டே..

அவர்கள் கதவை திறக்கவே இல்லை.  என்ன இவ்வளவு நேரம் ஆச்சு?  என்று கதவை திறந்து கொண்டு இதன்யா என்று அழைத்துக் கொண்டே பவானி உள்ளே வர..

அத் அத்த என பதட்டத்துடன் அவனை  தள்ளிவிட்டு எழுந்தாள்.

பவானி சித்தார்த்தை பார்க்காமல் நீங்க ரெண்டு பேரும் கீழ வரிங்களா? உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்!

ச சரி சரிங் அத்!. என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பவானி சென்று விட்டார். 

பவானி வெளியே சென்று விட சித்தார்த் அப்படியே அமர்ந்து இருந்தான்.

புத்தா! வாங்க உங்க அம்மா கூப்பிடுகிறார்கள்! போலாம்! 

சித்…? 

தொடரும்…

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 270 

பவானி சித்தார்த்தை பார்க்காமல் நீங்க ரெண்டு பேரும் கீழ வரிங்களா? உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்!

ச சரி சரிங் அத்!. என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பவானி சென்று விட்டார். 

பவானி வெளியே சென்று விட சித்தார்த் அப்படியே அமர்ந்து இருந்தான்.

புத்தா! வாங்க! அத்தை கூப்பிடுறாங்க! போலாம்!  எனக்கு வேற கொஞ்சம் அவமானமா போயிடுச்சு! அத்தை என்னை பத்தி என்ன நினைப்பார்களோ! என அவள் முன்னால் சென்று கொண்டிருக்க.. 

சித்தார்த் அப்படியே அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். 

என்னங்க? உங்களை தான் கூப்பிட்டுட்டு இருக்கேன்! இன்னும் என்ன பண்றீங்க! வாங்க போலாம்! அத்தை வர சொன்னாங்க! 

வர சொன்னால்? அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? என தலையை கோதி கொண்டே பதில் அளித்தான். 

என்ன பேசுறீங்க? வாங்க! 

முடியாது! அவங்க கூப்பிட்டால் நான் வரனும் அப்டின்னு எதாவது இருக்கா என்ன? என்னால் வர முடியாது. நீ வேன போயிட்டு வா! என அவன் திரும்பி படுத்து கொண்டான். 

அவள் ஒரு பெரு மூச்சை விட்டு நேராக கீழே சென்றாள். அங்கே பவானி, ரோஸ், என இருவரும் இருக்க.. அவரின் பார்வை இதன்யாவின் பின்னால் பார்த்தது. 

அவரின் பார்வையை புரிந்து கொண்ட இதன்யா கொஞ்சம் தயக்கத்துடன் அத்தை அவரு! அது வந்து அவருக்கு வேலை அதான் ஆனால் வேலையை முடிச்சிட்டு வருவாரு என்று கூறினாள். 

பவானி அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சரி நீ வா இப்போ அவன் தானா வருவான்.. என்று கூறி அவனுக்கு போன் செய்ய சொன்னார்..

இதன்யா தயக்கத்துடன் போன் செய்தாள். 

அவன் அட்டென் செய்த அடுத்த நொடி போனை வாங்கியவர். அதை காதில் வைத்து இப்போ ரோஸ்னிகும் ரிஷிக்கும் கல்யாண பேச்சு எடுத்து இருக்கேன். தேதி fix பண்ணியாச்சு. அதனால் கல்யாண வேலைக்காக என் கூட இதன்யாவை இப்போவே கூட்டி போறேன். பாய் என போனை வைத்தார். 

ரோஸ் புன்னகையுடன் அம்மா மிஸ்டர் ரிஷி வீட்டுக்கு போயிட்டு வந்தீங்களா? எனக்கு அவரு சொன்னாரு! என சிரித்து கொண்டே அவள் நிற்க..

இதன்யா கொஞ்சம் தயங்கி கொண்டே அத்தை இப்போ நம்ம ரெண்டு பேரும் பெங்களூர் போரமா? என கேட்க..

இல்லையே! என பவானி சாதாரணமாக கூறினார். 

அப்புறம் ஏன் அப்படி சொன்… என அவள் குரல் பாதியில் நிற்க.. பின்னால் கடுமையான சத்தத்துடன் அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க? என கேட்டு கொண்டே சித்தார்த் வந்தான். 

ரோஸ், இதன்யா இருவரும் அவனை சாக் ஆகி பார்க்க.. பவானி சாதாரண தொனியில் சும்மா டைம் பாசுக்கு தான் இதன்யாவை கூட்டிட்டு போறேன்னு  சொன்னேன்! அப்படி இல்லன்னா நீ மூச்சு வாங்க வேகமா  வந்திருப்பியா! என்று கூறினார். 

ஹே வாடி சாப்பிட்டு தூங்கலாம்!  நான் சாப்பாட்டை மேலே எடுத்து வர சொல்றேன். என அவளுடைய கையை பிடித்து அழைத்து சென்றான். 

டேய் நில்லு! 

முடியாது! என இதன்யாவை இழுத்து கொண்டு நடந்தான். 

இதன்யா அவன் கைய உதறி விட்டு இங்கே வா மா! நீ என் பேச்சை கேட்பியா இல்ல அவனா? என பவானி சொல்ல இதன்யா பவானியின் பக்கம் திரும்பினாள். 

சித் கோபத்தை வெளி காட்டி கொள்ளாமல் இப்போ உங்களுக்கு என்ன வேணும்! சும்மா டென்ஷன் பண்றீங்க? 

எனக்கா? எனக்கு பெருசா ஒன்னும் இல்ல நீ வந்து இங்கே உட்காரணும்! வா சீக்கிரம்! எனக்கும் பசிக்குது. எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்! என சொல்லி கொண்டே பவானி சித்தார்த்தை பார்த்தார். 

என்னங்க வாங்க! அத்தை கூப்டுறாங்க தானே! என இதன்யா சொல்ல.. 

நீ உன்னை மேலே வாடி வச்சுக்கிரென். என சொல்லி கொண்டே நேராக பவானிக்கி எதிரில் போய் அமர்ந்தான். 

பவானி சிரித்து கொண்டே அப்படி வாடா வழிக்கு! உன்னை எங்கே அடிச்சா எப்டி வலிக்கும் அப்டின்னு எனக்கு தெரியும்! இவள் கூட ஒட்ட மட்டும் தெரியுது! எனக்கு ஒரு பேர குழந்தைய ரெண்டு பேரும் பிளான் பண்ணி கொடுக்க தெரியல..  என நினைத்து கொண்டார். 

இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க? என்ன விசயம் சீக்கிரம் சொல்லுங்க! 

அவ்ளோ அவசரமா! அப்போ நீ போ! நான் இதன்யா கிட்ட பேசிக்கிறேன். 

இல்ல எனக்கு எந்த வேலையும் இல்ல சொல்லுங்க! என்று சித்தார்த் கூறினான். 

அது ரோஸ்னி அப்புறம் ரிஷி ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிவு பண்ணியாச்சு! என பவானி கூற..

இது தெரிஞ்ச விசயம் தானே! இப்போ எதுக்கு புதுசா சொல்ற மாதிரி பில்ட் அப் கொடுக்கிரீங்க! என சித் சலித்து கொண்டே கூறினான். 

அப்டியா? அப்போ நீ போ! நான் இதன்யா கிட்ட பேசிக்கிறேன். என பவானி மீண்டும் கூறினார். 

சரி சொல்லுங்க! என்ன பிளான்! என தீவிரமாக கேட்டான். 

பவானியும் கூற ஆரம்பித்தார். நான் தயா கிட்ட சொல்லி இருக்கேன். ரிஷி யிடைய குலதெய்வ கோவிலில் கல்யாணம் பண்ணிட்டு ரிசப்ஷன் இங்கே ஒன்னும். அப்புறம் அங்கே பெங்களூர் ல வச்சுக்கலாம் அப்டின்னு சொல்லிட்டு வந்திருக்கேன். இதுல எதுவும் மாற்றம் இருக்கா? உனக்கு எதுவும் ஐடியா இருந்தால் சொல்லு! ரோஸ்னி உனக்கு ஒகே தானே! இதன்யா உனக்கு எதுவும் மாற்றம் பண்ணனுமா? என்று கேட்டார். 

இதன்யா பேச வர உடனே சித் அவளின் கையை பிடித்து கொண்டு நானும் இதன்யாவும் இங்கே நடக்கிற கல்யாணத்துக்கு வருவோம். ரிசப்ஷன்க்கு வர முடியாது. தட்ஸ் இட்! என்று கூறினான். 

ஏன் ஏன் வர முடியாது. என்று பவானி கேட்க…

எனக்கு கால்சீட் இல்ல அதனால் நான் வர மாட்டேன். என்று சித் கூறினான். 

உனக்கு கால் சீட் இருந்தால் என்ன இல்லன்னா என்ன? நீ எனக்கு முக்கியம் இல்ல! இதன்யா நீ எதோ சொல்ல வந்தியே என்ன விசயம் சொல்லு! என்று பவானி கேட்டார். 

இதையெல்லாம் பார்த்து ரோஸ் சிரித்து கொண்டிருக்க…

அவள் என்ன சொல்ல போகிறாள்? என சித் அவளை முறைத்து பார்த்தான். 

இதன்யா டியர்! இங்கே என்னை பார்த்து சொல்லு! யாருக்கும் எதுக்கும் பயப்படாத! உன் கூட நான் இருக்கேன்.  என்ன விசயம்? என பவானி கேட்டார். 

அது எங்க அக்காவுக்கு ஒன்பதாம் மாசம் வளைகாப்பு வருதுங்க அத்தை அதுக்காக மட்டும் நான் ஊருக்கு போவேன். போயிட்டு ஒரு வாரம் இருந்திட்டு வரலாம் அப்டின்னு இருக்கேன். நீங்க ரிஷி அண்ணா கல்யாணத்தை எந்த தேதியில் வச்சிருக்கீங்க? அதை கேட்க தான் வந்தேன்! என இதன்யா கூறினாள். 

சித் உடனே இப்போ கேட்டு கிட்டீங்களா? நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பிசி அதனால் கல்யாணத்துக்கு மட்டும் தான் வருவோம்! வேற எதுக்கும் வர மாட்டோம்! என்று கூறினான். 

உன்னை யாரு கூப்பிட்டா? நீ! உன்னோட கால்சீட் எனக்கு தேவையில்லை டா! இதன்யா வந்தால் போதும் அதுக்கு தகுந்த மாதிரி கூட நான் தேதிய மாத்தி வைப்பேன். நீ வந்தால் வா வராட்டி போ! என்று சொன்னவர். அவள் முகம் பார்த்து சிரித்து கொண்டே சரி மா நான் என்னன்னு பார்த்திட்டு சொல்றேன். உங்க வீட்டு விசேஷம் அப்போ இல்ல மா! இன்னும் நம்ம விசேசத்துக்கு ரெண்டு மாசம் இருக்கு! உங்க அக்கா சீமந்தம் எப்போ? என்று பவானி கேட்டார். .

அது அடுத்த மாசம் அத்தை சரியா சொல்ல போனால் இன்னும் இருபது நாள் இருக்கு! என்று இதன்யா  கூறினாள். 

அப்படியா நல்லது! சரி வா சாப்பிட போலாம்! என ரோஸ், பவானி, இதன்யா என அனைவரும் செல்ல சித் அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். என்னை என்னை விட்டு போற அளவுக்கு இதன்யாவை மாத்திடீங்க! பார்த்துக்கிறேன். என சித் அவர்களுக்கு முன்னால் சென்று இதன்யாவின் அருகில் அமர்ந்தான். 

அனைவரும் அமைதியாக உணவை சாப்பிட்டார்கள். 

சரி சீக்கிரம் தூங்குங்க! நாளைக்கு invitation card கொண்டு வர சொல்லி இருக்கேன். செலக்ட் பண்ணலாம்! இனி கல்யாண வேலை நிறைய இருக்கு மா! என பவானி கூறினார். 

ரோஸ் கல்யாண கனவுகளுடன் செல்ல சித் இதன்யாவின் கையை விடாமல் பிடித்து கொண்டு அறைக்கு சென்றான்.

என்னங்க பண்றீங்க? என அவள் சொல்ல வர…

அறைக்கு உள்ளே சென்ற அடுத்த நொடி சித் அவளின் கையை விட்டு நேராக பால் கணி சென்றான். 

என்னாச்சு இவருக்கு? என அவளும் பின்னால் சென்றாள். 

ஹே என்ன நான் எங்கே போனாலும் பின்னால வருவியா? என்னை தனியா விடு! 

நானா! நான் உங்க பின்னாடி வரெனா! சரியா போச்சு போங்க! 

அப்போ நீ என் பின்னாடி வரல! என சித் பார்க்க..

சரி நான் தான் உங்க பின்னாடி வந்தேன். இப்போ என்ன ஆச்சு? உங்க முகத்தில கிலோ கணக்குல கவலை இருக்கு! 

அது கவலை இல்ல டி கோபம்! 

சரி கோபம் தான்! நான் தப்பா சொல்லிட்டேன். என்ன விசயம்? என இதன்யா கேட்டாள். 

உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? அவங்க கூப்பிட்டதும் உடனே வேகமா என்னை விட்டு போற? என சித் முறைத்து கொண்டே கூறினான். 

நானா இல்லையே என இதன்யா பொய் சொல்ல.. 

உன்னோட பொய் எனக்கு நல்லா தெரியுது! போடி என வேகமாக படுக்கைக்கு சென்று படுத்து கொண்டான். 

என்னை என்ன பண்ண சொல்றீங்க? அத்தை வந்து கூப்பிடும் போது நான்! என அவள் சொல்ல வர…

சித் அவளை கண்டு கொள்ளாமல் லைட் ஆஃப் செய்து தூங்க ஆரம்பித்தான். 

புத்தா என அவள் இன்னொரு பக்கம் வந்து படுத்து கொண்டாள். அவனுக்கு அருகில் நெருங்கி பிளீஸ் புத்தா! அதுக்குள் தூங்கிட்டியா? நம்ம பண்ணலாமா? என வேண்டும் என்றே கூறினாள். 

நான் உன் மேல கோபமா இருக்கேன். போடி! என சொல்லி கொண்டே தூங்க ஆரம்பித்தான். 

நீ போடா என அவளும் இன்னொரு பக்கம் திரும்பி தூங்க ஆரம்பித்தாள். தூக்கம் வர வில்லை. எப்பொழுதும் அவள் அவனுடைய மார்பில் தான் தூங்குவாள். ஆனால் இன்று! நமுத்து போன சண்டையை எடுத்து இருக்கிறான். 

புரண்டு புரண்டு படுத்து கொண்டே கடைசியில் அவனை கட்டி அணைத்து உறங்க ஆரம்பித்தாள். அவள் அணைக்கவும் சித் புன்னகையுடன் இருவரும் உறங்கி போனார்கள். 

அடுத்த நாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்ல இன்று மேகா சீன்! 

ரத்னா அவளுக்கு போன் செய்து அழைக்க இன்று வருவதாக சொல்லி இருந்தாள். 

சித் அவனுடைய ஸ்கிரிப்ட் புரட்டி பார்த்து கொண்டு காட்சிகளுக்கு தயாராகி கொண்டிருக்க…

மேகா உள்ளே வந்தாள். 

இன்னொரு பக்கம் அபி பூஜாவுக்காக காத்திருந்தான். 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 271

சித்தார்த் காலையிலேயே நேரமாக எழுந்தவன் ஷூட்டிங் கிளம்ப ஆரம்பித்தான்.

இதன்யா கொண்டையிட்டுக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

அவனுடைய ஒரு பார்வை கூட அவள் மேல்  திரும்பவில்லை என பெருமூச்சு விட்டாள். 

சித்தார்த் கண்ணாடி வழி அவளின் முகம் பார்த்து கொண்டே தலையை கோதியவன். அவள் பார்க்கும் நேரம் பார்வையை  வேறு பக்கம் திருப்பினான். 

ஹான்! எவ்வளவு நேரம் இந்த கோபம்ன்னு நானும் பார்க்கிறேன்!  நீங்களா என்னை தேடி வர தான் போறீங்க!  என்று இதன்யா கூறினாள்.‌

சித் மனதில் ஓ இந்த தைரியத்துல தான் என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கியா டி!  இந்த தடவ நீ தான் என்னை தேடி வரணும்! நான் உன்னை தேடி வரவே மாட்டேன்!  என்று எளன புன்னகை செய்தவன்.  பார்க்கலாம்டி!  உன்ன நான் எப்படி தேடி வர வைக்கிறேன்ன்னு பாரு!  என்று நினைத்துக் கொண்டே வெளியே சென்றான். 

பாருடா அவ்வளவு கொழுப்பாகி போச்சா!  என்னை  கவனிக்காம என்னை பாக்காம போற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா? இருக்கட்டுமே! என்று நினைத்தவள்.  நேராக அவன் கூடவே கீழே வந்தாள். 

 அவள் சித்தார்த்தை தவிர்த்து விட்டு பவானியில் சிரித்துக்கொண்டே சென்றவள்.  அத்த இன்னிக்கி இன்விடேஷன் பாக்கலாமா?  அவங்க எத்தனை மணிக்கு வராங்க? என்று கேட்டாள். 

அவரும் சிரித்துக் கொண்டே காலையிலேயே வரேன்னு சொல்லி இருக்காங்க டியர்! ரிஷி வந்ததும் பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கேன் என்று கூறினார். 

சரிங்க அப்புறம் புடவை நகை இதெல்லாம்?  என்று  அவள் கேட்க

ஆல்ரெடி நகை இருக்கு உனக்கு வேணா நகை வாங்கலாமா?  என்று கேட்டார். 

எனக்கா? ரோஷினிக்கு தான நம்ம வாங்கணும்!  என்று இதன்யா கூறினாள். 

அவளுக்கும் தான்! ஆனால்  உனக்கு புதுசா நான் எதுவுமே வாங்கி தரலையே!  அதனால அதையும் பண்ணிடலாம்!  அதுக்கப்புறம் மேரேஜ்  event’s எல்லாம் போன் பண்ணி இருக்கேன்.  அடுத்து புட்டுக்கு மெனு பாக்கணும், நிறைய வேலை இருக்கு. ஆமா?  உனக்கு என்னைக்கு காலேஜ் ஆரம்பிக்குது? என்று பவானி கேட்டார்.

எனக்கு கம்மிங் பிரைடே அத்தை என்று அவள் கூற..

சரி அப்போ இன்னும் நாலு நாள் இருக்கு நம்ம நிறைய ஷாப்பிங் போகலாம் என்று கூற..

அந்த நேரம் சித்தார்த்துக்கு புரை ஏறியது.  இருவரும் அவனை முறைத்து பார்த்தார்கள். 

இந்த முறைப்புக்கு எல்லாம் அசர ஆளு நான் கிடையாது! என்ற அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு ஷூட்டிங் கிளம்பினான். 

இங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில்..

ரத்னா பதட்டத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். 

என்ன டைரக்டர் சார் ரொம்ப சீரியஸா நடந்துட்டு இருக்கீங்க? இப்போ சீரியசான சீன் எடுக்க போறமா? என்று நவ்யா  கிண்டல் அடித்தாள்.‌

ஆமா நான் பண்ண பெரிய தப்பு! அந்த பொண்ணை செலக்ட் பண்ணது தான்! அதனால தான் இப்படி அங்கும் இங்கும் நடந்துட்டு இருக்கேன்! என்று ரத்னா கூறிக்கொண்டே மீண்டும் போன் செய்தார்.

நல்ல வேலை இந்த முறை அவள் போன் எடுத்தாள்.

ஹலோ உன் மனசுல என்னம்மா நினைச்சுட்டு இருக்க? அவ்வளவு வீராப்பா பேசின? இப்ப உன்னால கரெக்டா வர முடியாதா? நான் என்னோட வக்கீல விட்டு நோட்டீஸ் விட சொல்லட்டுமா? என்று ரத்னா கேட்டார். 

இல்ல சார் சாரி என்ன மன்னிச்சிடுங்க! நான் இப்போ சூட்டிங் ஸ்பாட்க்கு தான் வந்துட்டு இருக்கேன்! என்று பவியமான குரலில் பதில் மேகா அளித்தாள்.

 ரத்னாவுக்கு ஒரே ஆச்சரியமாக போனது.  இது அவதானா?  நம்மள மிரட்டின அதே பொண்ணு தானா?  நம்ம கிட்ட இவ்வளவு பவ்யமா பேசுறாளே? என்று அவர் அமைதியாக இருக்க..

சார்!  நான் ஆன் தி வேன் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்.  சாரி சார்! நான் வந்து நேர்ல எக்ஸ்ப்ளைன் பண்றேன். இப்ப போன வச்சுடறேன்! என்று கூறினாள் .

ரத்னா  போனை கட் செய்து விட்டு நேராக சித் அருகில் வந்தார். 

என்ன சார் என்று அவன் ஸ்கிரிப்ட்-ஐ புரட்டிக் கொண்டே ரத்னாவை பார்த்தான்.

ஆமா இங்க என்ன நடக்குது?  என்று கேட்டார்?

அதான் ஷூட்டிங் நடக்குது! ஏன் உங்களுக்கு எல்லாமே மறந்து போச்சா என்று ஆளுமையான குரலில் சித்தார்த் கூறினான். 

இதை கேட்டதும் நவ்யா சிரிக்க ஆரம்பித்தாள்.

அவளை  முறைத்துக் கொண்டே இன்னைக்கு ஒரு கட் வாங்குன?  உனக்கு பனிஷ்மென்ட்! என்று ரத்னா மிரட்டினார். 

நான் எல்லாம் எந்த கட்டு வாங்க மாட்டேன்! நீங்க வேணா பாருங்க! என்ன சித் சொல்றீங்க?  நீங்க என்ன பத்தி என்ன நினைக்கிறீங்க?

அவன்  நவ்யாவை கண்டுகொள்ளாமல் சரி என்ன ஆச்சு?  உங்களோட ஹீரோயின ஆளையே காணோம்! என்று சித்தார்த் கேட்டான். 

அவங்க ஆன்  தி வே ல இருக்காங்களாம்! என்று ரத்னா கூறி விட்டு அது  இதுல உங்களுக்கு ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியுது! என்ன விசயம்? 

 சித்தார்த்  அவரை கடுப்புடன் பார்த்தவன்.  தயவு செய்து சுமூகமா போயிட்டு இருக்க என் வாழ்க்கையில் கும்மி அடிச்சிடாதீங்க!  ஏற்கனவே பயங்கர பிரச்சனை!  என்று இதன்யாவை பற்றி சித்தார்த் கூறினான்.

இதை கேட்டதும் ரத்னா சிரித்துக்கொண்டே அப்படியா அப்போ இனிமே நிறைய கும்மி அடிக்க வேண்டியது தான்!  என்று ரத்னா கிளம்பினார். 

சித்தார்த் உங்களை என்ன பண்றேன் பாருங்க என்று மிரட்டினான்.

அந்த நேரம் நவ்யா அருகில் வந்து என்ன விஷயம்? நீங்க மேகாவை பற்றியா பேசிட்டு இருக்கீங்க? என்று கேட்க..

அவளை பத்தி பேசறதுக்கு, எனக்கு என்ன இருக்கு?  என்று சித்தார்த்  அவளைப் பார்த்தான். 

 அப்படி இல்ல உங்கள! அது  உங்க மேல அவளுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்ன்னு  கேள்விப்பட்டேனே!  அப்படியா? 

அப்படி இருந்தால், அதுல உனக்கு என்ன?  என்று சித்தார்த் கேட்டான். 

அப்போ உங்களுக்கு அவ மேல இன்ட்ரெஸ்ட்டா என்று இதயம் படபடக்க நவ்யா அவனிடம் கேட்டாள்.

அவ மேல எனக்கு இன்ட்ரெஸ்ட்டா? வாட் அ காமெடி! ஹான் இதுதான் பெரிய காமெடி சாதாரணமாக கூறினான். 

 அப்ப உங்களுக்கு மேகாவை பிடிக்காதா?  என்று நவ்யா கேட்க..

 அவளை எனக்கு எதுக்கு பிடிக்கணும்?  என்று சித்தார்த் கேட்டான். 

இல்லப்பா!  நீங்களும் அவளும் ரிலேஷன் கேள்விப்பட்டேனே?  உங்க சிஸ்டர் தான் அவங்க பிரதர கல்யாணம் பண்ணிக்க போறாராமே?  அப்படியா? என நவ்யா பார்க்க..

 ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியுது?  இன்னும் இந்த நியூஸ் எல்லாம் ரிலீஸ் ஆகலையே? என்று சித்தார்த் கூறினான். 

ஹலோ நான் ஸ்வர்ணம் புரொடக்ஷன்ஸ்ல சைன் பண்ணி இருக்கேன். எனக்கு தெரியாம இருக்குமா?  என்று நவ்யா இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டே கூறினாள். 

அப்படியா சரி உன்னோட காண்டாக்ட் கேன்சல் பண்றேன். இரு.  என்று சித் சொல்ல.. ஹே அப்படி இல்ல பா! நான் கேள்விப்பட்டேன் என்று நவ்யா கூறினாள்..

சித்தார்த் சாதாரண தொணியில் என் சிஸ்டரும்,  மிஸ்டர் ரிஷியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க!  இதுல அவங்க ரெண்டு பேரும் தான் ரிலேஷன்ஷிப்ல போகப் போறாங்க!  எனக்கும் அவளுக்கும் எந்த ரிலேஷனும் கிடையாது.  எந்த ரிலேஷன்-ஷிப்பும் கிடையாது. ஜஸ்ட் அவர் வெளியே எனக்கு ஸ்ட்ரேஞ்சர் இந்த சூட்டிங் ஸ்பாட்ல தான் எனக்கும் அவள் co actor so இது தான் அவளுக்கும் இருக்க சம்பந்தம்!  நீ எதையும்  எக்சாஜிரெட் பண்ணி சொல்லிட்டு இருக்காத!  தயவு செய்து இதுக்கு ஃபுல் ஸ்டாப் வச்சுடு  என்று கூறினான்.

இதை கேட்டதும்  தான் நவ்யாவிற்கு  நிம்மதியான மூச்சு வந்தது. 

சரி சரி என்று அவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.‌

அந்த நேரம் தான் நவ்யா வந்து இறங்கினாள். 

அவள் வந்ததும் நேராக ரத்னாவிடம் சென்று உருக உருக பேசிக் கொண்டிருந்தாள்.

ரத்னா அவளை வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

 நவ்யாவின் பார்வை மேகாவின் மீது பட்டு நேராக சித்தார்த்தின் மீது வந்து நின்றது.

இப்போ எதுக்கு என்ன பாக்குற? என்று சித்தார்த் கேட்டான்.

இல்ல நீங்க அவளை பாக்குறீங்களா? அப்டின்னு  பார்த்தேன். 

 ஆக்சுவலா நீ லூசா? 

இல்லையே என வெடுக்கென நவ்யா சொல்ல.. 

அப்போ இல்லையா? 

ஏன் கேட்கிறீங்க? என அவனிடம் கேட்டாள். 

இல்ல! இப்படி எல்லாம் திங்க் பண்ணிட்டு  இருக்!  கொஞ்சம் கலன்டு போயிட்டியா? என்ன என்று சித்தார்த் கூறினான்.

ஆமா நான் கொஞ்சம் லூசு தான்!  என்று நவ்யா  சிரித்துக்கொண்டே கூறினாள்.

 தயவு செய்து கொஞ்சம் டைட்டாகிட்டு என்கிட்ட பேசு என்று சித்தார்த் சொல்லி விட்டு திரும்ப,   நவ்யாவும்  சிரித்துக் கொண்டே திரும்ப மேகா நேராக அவர்களின் நோக்கி வந்தாள் . 

பாஸ்! பாஸ்! மேகா உங்களிடம் பேசுவதற்கு தான் வரா! ஐ திங்க் ப்ரொபோஸ் பண்ண போறான்னு நினைக்கிறேன்!

அப்படியா அவன் அப்படி பண்ண மாட்டாளே! என்று கூறி விட்டு  அவ பண்ணா?   உனக்கு என்ன ஃப்ரீயா விடு என்று அவனுடைய வேலையை பார்த்தான்.

நவ்யா திடுக்கிட்டு என்ன இவன்  இப்படி சொல்றான். என பதட்டத்துடன் இருக்க சரியாக மேகா நவ்யாவின் அருகில் வந்தாள். 

இது எதிர்பாராத திருப்பம்!

நவ்யா!. நவ்யா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்..

என்ன விஷயம் மேடம்?  என்று நவ்யா எழுந்து நின்று கேட்க..

உட்காரு!  உட்காரு! எனக்கெல்லாம் என்ன மரியாதை? முக்கியமா உன்னிடம் சாரி கேக்குறதுக்கு தான் வந்தேன்! என்று மேகா  கூறினாள்.

என்ன சொல்றீங்க சரியா என்று நபியா திடிகிட்டு பார்க்க..

மேகா கலக்கமான குரலில் இந்த படத்துல,  உன்னோட ஹீரோயின் கேரக்டரை, வலுக்கட்டாயமா பறிச்சது நான் தான்! அதனால  என்ன மன்னிச்சிடு! 

 நவ்யா அதிர்ச்சியுடன் பார்க்க! 

சாரி நவ்யா! எனக்கு ஹீரோயினா நடிக்க தான் புடிக்கும்!  அதுவும் என்னோட முதல் படத்துல செகண்ட் ஹீரோயினா, நடிக்கறதுக்கு , எனக்கு விருப்பமில்லை.  அதனாலதான், நான் இந்த மாதிரி பண்ணிட்டேன்.  சாரி என்று வருத்தத்துடன்  மேகா கூறினாள். 

சித்தார்த் இது எதையும் கண்டு கொள்ளாமல் அவன் எப்பொழுதும் போல் அவனுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். 

நவ்யா அதிர்ச்சியில் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க..

சொல்லு! ஏதாவது சொல்லு! நான் உன்ன கன்வின்ஸ் பண்ணனும்னு நினைக்கிறேன்! என்னோட தப்ப ரியலைஸ் பண்ணிட்டு தான், நான் உன்கிட்ட கேட்கிறேன். ப்ளீஸ் என்னை மன்னிப்பாயா என்று மேகா கேட்டாள்.

அது வந்து ஒன்னும் பிரச்சனை இல்ல!  இப்போ படம் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு தூரம் போயிட்டோம். இதுக்கு மேல அதை பேசி பயனில்லை! அதுவும் நல்லதுக்கு தான் தோணுது.  எனக்கு இந்த கேரக்டர் ரொம்ப புடிச்சிருக்கு! என்று நவ்யா கூறினாள்.

அப்படியா? உன்னோட பெருந்தன்மைய நான் புரிஞ்சுக்காம போயிட்டேனே! நான் எவ்ளோ தப்பான பொண்ணு! இருந்தாலும் நீ என்னை மன்னிச்சிரு! அதுக்கு நான் உண்மையா இருப்பேன்! என்று கூறினாள்.

 அப்படியா  சரிங்க மேடம்..

 இனி மேடம்ன்னு  கூப்பிட வேணாம்!  என்ன மேகானு கூப்பிடு! உனக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான் எதுக்கு மேடம்னு கூப்பிடுற?

அப்படியா  மேடம் என்று மீண்டும் நவ்யா மரியாதையுடன் அழைக்க..

இப்ப தானே சொன்னேன் என்ன மேகான்னு கூப்பிடு! ஏன் திரும்பத் திரும்ப மேடம்னு சொல்ற? நான் அவ்வளவு டெரராவா இருக்கேன்?  என்று  கேட்டாள்.

சரி எனக்கு இப்போ கூப்பிடறதுக்கு தயக்கமா இருக்கு.  ஆனா நான் உங்கள கூப்பிட ட்ரை பண்றேன் என்று  நவ்யா சொல்லி விட்டு அமர்ந்தாள்.

அடுத்தது மேகாவின் பார்வை சித்தார்த்தின் மீது சென்றது.  நவ்யா இருவரையும் பார்த்தாள்.

சித்தார்த் அவனுடைய வேலையை செய்து கொண்டிருக்க..

மேகா தான் வைத்த கண் வாங்காமல் சித்தார்த்தை பார்த்துக் கொண்டிருந்தாள். 

இவ ஏன் சித்தார்த்த இப்படி பாக்குறா?  என்று நவ்யாவிற்கு உள்ளுக்குள் பொறாமையாகவும், கோபமாகவும் இருந்தது. 

அவள் அப்படியே நின்று கொண்டிருக்க அந்த நேரம் சாட் ரெடியானது.

மேகா நீ ரெடியா உன்னோட சீனுக்கு ரெடியா? என ரத்னா கேட்டார்.

 சார் நான் எனக்கு கொஞ்ச நேரம் டைம் கொடுக்குறீங்களா? 

 ரத்னா அவளை முறைத்து விட்டு சரி சீக்கிரம் ரெடி ஆகு எனக்கு டைம் இல்ல அடுத்தது கேரளாவில அலப்பில எல்லாமே ரெடி பண்ண சொல்லிட்டேன்!  இன்னும் ரெண்டு நாள்ல இத முடிச்சிட்டு நம்ம நேரம் அங்க போகணும்! 

மேகா சித்தார்த்தின் அருகில் சென்று அமர்ந்தாள்.

சித்தார்த் இப்பொழுதும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

சித்து! 

நவ்யா இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்தவள் வேறு வழி இல்லாமல் எழுந்தாள். 

மேகா சித்தார்த்திடம் சாரி சித்து! நான் ஏதாவது உன்கிட்ட தப்பா நடந்து இருந்தா, என்ன மன்னிச்சிடு! இனிமே நீ என்னை  வேற ஒரு மேகாவா பாக்க போற!  

சித்தார்த் அவளை எளன பார்வை பார்த்தான். 

என்னை  நம்பு சித்து!  அப்படி பாக்காத நான் உண்மையா தான் சொல்றேன்!  இனி என்ன பத்தி நீ புரிஞ்சுக்க போற! நான் தப்பான பொண்ணு இல்ல.  இதுக்கு முன்னாடி அப்படி நடந்திருந்தால் என்னை மன்னித்துவிடு சித்து! என்று மேகா உடைந்த குரலில் கூறினாள்.

அப்படியா சரி ஓகே என்று ஒரே வார்த்தையில் முடித்தவன். ரத்னா என்று அழைத்தான். 

 சொல்லுங்க சித்து!

 இப்போ எனக்கும் நவ்யாக்கும் ஏதாவது ஷார்ட் இருந்தா சொல்லுங்க? அத நடிக்கலாம் என்று கேட்டான். 

அது மோஸ்ட்லி எல்லாமே முடிஞ்சிடுச்சு! இனி மேகாவுக்கும், உங்களுக்கும் தான் ஒரு சில சீன்ஸ் பாக்கி, அதுக்கு அப்புறம் உங்க மூணு பேரும், நீங்க மூணு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி சில சீன்ஸ் இருக்கு! 

 சரி ஓகே என்று நவ்யாவை பார்த்தவன்.  உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வரியா?  அந்த சைட் போலாம்! என்று கேட்டான். 

வரேன் என நவ்யா சிரித்துக்கொண்டே அவன் பின்னால் சென்றாள்.

மேகா அவளுடைய வேலையை பார்க்க,  என்ன விஷயம்! என நவ்யா அவனை பார்த்தாள்.

ஒன்னும் இல்ல இது கான்ஃபிடென்ஷியல் இது வெளியில லீக் ஆக கூடாது. என சித் அவளை பார்த்தான். 

நவ்யாவிற்கு இதயம் வேகமாக அடித்தது.  என்ன விஷயம் சித் சொல்லுங்க..

அது அது வந்து என்று அவன் தயங்கிக் நின்றான் .

ஒருவேளை என்னை லவ் பண்ணுறேன்ன்னு என்று சொல்லிடுவார என்று நவ்யா அவனை பார்த்துக் கொண்டிருக்க..

சித்தார்த் சுற்றிலும் பார்த்தவன்.  நான் உன் கிட்ட இப்போ அது  ஒரு அது லேடிஸ் விஷயம் அதனாலதான்! கொஞ்சம் தயங்கினேன். என்று சித்தார்த் கூறினான்.

நவ்யாவின் புருவம் நெருக்கி என்ன விஷயம்? என்று டெரராக கேட்டாள்.

எதுக்கு அப்படி பாக்குற உன்னோட முட்டை கண்ணு ரெண்டும் வெளியே வந்துற போகுது!

இப்போ லேடிஸ் விஷயம்ன்னு  சொல்றீங்க? என்ன விஷயம் சொல்ல வரீங்க? என்று நவ்யா மிரட்டும் தொனியில் கேட்டாள்.

சித்தாத் ஒரு பெருமூச்சு விட்டு என்னை சொல்றதுக்கு விடுமா.  நான் ஆக்சுவலா நான் ஒரு சப்ளிமென்ட் மார்க்கெட்ல கொண்டு வரப் போறேன்.  அதுக்கு female பிராண்ட் அம்பாசிட்டரா இருக்க முடியுமா? 

அவ்ளோ தானா?  இதை கேட்டதும் ஒரு நிமிடம் நவ்யாவிற்கு புஸ் என ஆனது. என்ன சொல்றீங்க?  சரி என்ன விஷயம்? இப்ப தெளிவா சொல்லுங்க? என்று கேட்டாள்.

சித்தார்த் மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.  பொண்ணுங்க முடி நீளமாக வளர்வதற்காக ஒரு சப்லிமென்ட் மார்க்கெட்ல கொண்டு வரப் போறேன்.  அதுக்கு நீ பிராண்ட் அம்பாசிடரா இருக்க நினைக்கிறேன்.  இதோ பாரு அதோட டீடெயில்ஸ் என்று சித்தார்த் அவனுடைய டேபில் காட்டி எஸ்பிளைன் செய்ய ஆரம்பித்தான். 

நவ்யா அவனை ஆச்சரியமாக பார்த்து உங்களுக்கு இத்தனை விஷயம் தெரியுமா ?அதுவும் இவ்வளவு ஈஸியா முடிய வளர்க்க முடியுமா? எனக்கே இது பார்த்து தான் தெரியுது! 

இது முடிய நீளமா வளக்காது! ஜஸ்ட் முடிய வளரத்துக்காக ஹெல்ப் பண்ணும்! அவ்வளவுதான் நீ ரொம்ப திங்க் பண்ண வேணாம்! உனக்கு ஓகேவா ? இல்ல நான் தாரா கிட்ட பேசட்டுமா? என்று கேட்டான்.

 வேணாம் வேணாம் நானே பண்றேன் எனக்கு ஓகே தான் என்று நவ்யா கூறினாள்.

அப்படியா ரொம்ப சந்தோஷம்! சரி நான் என்னைக்குன்னு சொல்றேன்!  நீ காண்ட்ராக்ட் சைன் பண்ணிடு மத்த டீடெயில்ஸை பத்தி அப்புறம் பேசலாம்.  அதுக்கப்புறம் உனக்கு என்ன கலர் பிடிக்கும்? என சித் கேட்க..

எதுக்கு கேக்குறீங்க? என நவ்யா ஆச்சரியமாக சித்தார்த்தை பார்த்தாள். 

இது request இல்ல என்னோட ஆர்டர்! ஐ மின் என்னன்னா? உனக்கு பிடிச்ச கலர்ல எல்லாம் நான் காஸ்டியூம்ஸ் சூஸ் பண்ண கூடாது. நான்  லாவண்டர்ல தான் காஸ்டியூம் சூஸ் பண்ணுவேன்! ஓகேவா! 

அப்படியா உங்களுக்கு லாவண்டர் பிடிக்குமா என்று நவ்யா கேட்க..

எனக்கு பிளாக் தான் பிடிக்கும்! பெக்யூலியர் பர்சனுக்கு தான்  இந்த லாவண்டர் பிடிக்கும்.  அதனால் தான் என்று கூறினான்.

அப்போ எனக்கும் லாவண்டர் பிடிக்கும் என்று நவ்யா கூறினாள். 

சரி ஓகே காண்ட்ராக்ட் பேப்பர் ரெடி பண்ணிட்டு, உன்னை கூப்பிடுறேன்.  நீ அதுல சைன் பண்ணிடு பர்தரா என்னைக்கி ப்ரோமோஷன்? எப்போ ப்ராடக்ட் ரிலீஸ்?  இத பத்தி எல்லாம் உனக்கு டீடெயில்ஸ் சொல்றேன்!  என்று கூறினான்.

சரி சித்து! என்று அவள் சந்தோஷத்துடன் சென்றாள்.‌

சித்தார்த் அதற்கான பேப்பர்ஸ் அனைத்தையும் ஸ்டார்ஜியாவை ரெடி செய்ய சொல்லியிருந்தான்.

ஓகே பாஸ் என்று அவள் கொஞ்சம்அசதியான குரலில் சொல்ல… என்னாச்சு ஜியா?  உன்னோட குரல்ல கொஞ்சம் கூட பிரிஸ்கே இல்லையே? எதுவும் உடம்பு சரியில்லையா? என்று கேட்டான். 

அப்படியெல்லாம் இல்ல பாஸ்! கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு!

 சித்தார்த் யோசித்துக் கொண்டே நான் தான் ஒரு அசிஸ்டன்ட் பாருன்னு சொன்னேன்ல, இப்போ புதுசா இந்த சப்லிமென்ட் ப்ராஜெக்ட் வேற வருது.  அதனால எனக்கு ஒரு அசிஸ்டன்ட் பாக்குறியா?  இங்க சதீஷ் ரொம்ப பிசியா இருக்கான்.  ஆல்ரெடி அவனும் நீயும் சேர்ந்து தான் இந்த ஒடிசா பவர் ப்ராஜெக்ட் பார்த்திட்டு இருக்கீங்க.  பர்தரா இப்போ என்னோட பிசினஸுக்கும்,  இந்த  சப்ளிமென்ட் புராஜக்ட்க்கும் நான் மூவ் பண்றதுக்கு எனக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்.  இப்போ நடிச்சுக்கிட்டே அதை பண்ண,  நாளை  பின்ன எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.  அதனால ஒரு அசிஸ்டன்ட் வாக்கின் இன்டர்வியூ வைக்கிறயா? என்று கேட்டான். 

இல்ல பாஸ் நானே எல்லாத்தையும் பண்றேன்.  எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! என்று ஸ்டார்ஜீயா கூற.. 

இல்ல ஜியா நீ ரொம்ப வேலை செய்றேன்னு, எனக்கு தோணுது. எல்லா பொறுப்பையும் நீ எப்டி தாங்குவ! உன்னை வேலை மட்டும் கொடுக்கும் முதலாளித்துவம் நான் இல்ல.  நீ உடனே புரோசஸ் பண்ணு!   நம்ம இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணிக்கலாம்! என்று சித்தார்த் கூறினான்.

சரிங்க பாஸ் என்று சொல்லி முடித்தவள்.  அதற்கான வேலையில் ஈடுபட்டாள். 

 அடுத்த கட்டமாக அவர்களுடைய காட்சிகள் அனைத்தையும் ஒரே சாட்டில் எடுத்து முடித்தார்கள்.  ரத்னத்திற்கு இன்று தான் மிகவும் திருப்தியாக நாள் முடிந்தது.  ஏனென்றால் மேகா எந்த ஒரு பிரச்சனையும் செய்யவில்லை.  மிகவும் அமைதியாக நடித்துக் கொடுத்தாள்.

அவள் வீட்டுக்கு கிளம்பும்போது சித்தார்த்தின் அருகில் வந்தாள்.

சித்தார்த் அவளை  கண்டு கொள்ளாமல் கிளம்ப..

ப்ளீஸ் சித்து!  ஒரே நிமிஷம் இரு நீ  சொன்னதை நான் புரிஞ்சுகிட்டேன்! உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுது என்னோட பெரிய தப்பு! இதன்யா கிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன்.  அப்பயாவதும் என்னை மன்னிப்பயா? நீ என்ன ஒரு stranger-வது பாரேன். யாராவது முகம் தெரியாத ஆளு கிட்ட பேசுற மாதிரியாவது என்கிட்ட பேசு.  நான் இனிமே உன் வழியில் குறிக்கிடவே மாட்டேன். என்று மேகா கூறினாள்.

சித்தார்த் அவளை திரும்பி கூட பார்க்காமல் ஏறி சென்று விட்டான். 

அவள் கத்திக்கொண்டே உன்னோட மன்னிப்பை வாங்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன்! நீ என்னை மன்னிக்கனும் சித்து! அதுவரைக்கும் நான் ஓய மாட்டேன்!  என்று கலங்கிய குரலில் கத்தினாள்.‌

இங்கே VSA ஹாஸ்பிடல்..

அபிஜித் அவளுக்காக காத்திருந்தான்.  சரியாக மணி மாலை 5.30  ஆனது. 

ஆனால் அப்பொழுதும் பூஜா வரவே இல்லை.  இவளுக்கு என்ன திமிர்?  ரிசப்ஷன்ல அந்த இன்னொரு பொண்ணு தான இருக்கா! இவள்  இன்னும் வரலையே என்று நினைத்தவன்.  ரிசப்ஷனுக்கு கால் செய்தான். 

ஹலோ குட் ஈவினிங் சார் என்று அந்த வரவேற்பு பெண் பரபரப்புடன் கூற..

ஆமாம் என்ன நீ மட்டும் இருக்க?  இன்னொரு ரிசப்ஷன்ஸ்ட் எங்கே? இப்போ opd ஸ்டார்ட் ஆக போகுது தானே. என்று கேட்டான். 

 நான் மட்டும் தான் சார் இருக்கேன்! 

அப்போ இன்னொரு பொண்ணு எங்கே? என்ற அபிஜித் கேட்டான். 

சார் அந்த பொண்ணு வேலை விட்டு நின்றுச்சு என்று கூறினாள். 

 என்ன வேலை விட்டு நின்றுச்சா?  யாரு வேலை விட்டு நிக்க சொன்னா? என அபி கேட்க இதற்கு  வரவேற்பு பணிப்பெண்ணுக்கு  என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

 அது தெரியல சார் என்று அவள் அமைதியாக இருக்க..

அவங்க இந்த ஒன் வீக் சேலரி வாங்கியாச்சா என்று கேட்டான்.

இல்ல சார் அந்த பொண்ணு சேலரியே வேண்டான்னு சொல்லிட்டு நின்னுடுச்சு. சார்! என்று வரவேற்பு பெண் கூறினாள்.

அப்படியா சரி ஓகே என்று போனை வைத்தவன். 

உடனே பூஜாவுக்கு அழைத்தான் புது எண்ணாக இருக்கவும் ஹலோ யாரு! என உடனே எடுத்தாள்.

எங்கே இருக்க?  என அபிஜித் கேட்டான்.

இப்போ எதுக்கு கால் பண்ணீங்க?  அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க! என்று பூஜா கூற..

ஹலோ நான் யாருன்னு உனக்கு தெரியுமா?  என்று அபிஜித் அவளிடம் ஆச்சரியமாக கேட்க..

நீங்க VSA  ஹாஸ்பிடல் டீன் தானே! என்று பூஜா சாதாரணமாக பதில் அளித்தாள்.

அப்போ என் குரலை வைத்து கண்டுபிடிச்சிட்டியா? என்று சொல்ல வந்தவன் அதை விட்டு  சரி ஓகே நீ உடனே ஹாஸ்பிடல் கிளம்பி வா! 

என்னால வர முடியாது! நான் வேலையை விட்டுட்டேன்! இனிமேல் நீங்க என்ன அதிகாரமா அங்கே வா ! இங்கே வா! என்று கூப்பிட முடியாது. 

 அப்படியா சரி ஓகே நீ பிரியாவை ஏமாற்றிகிட்டு இருக்கும் விசயத்தை  இப்பவே போன் பண்ணி நான் பிரியா கிட்ட சொல்றேன் என்று அபிஜித் கூறினான்.

அப்படியா சரி சொல்லுங்க!  நானும்  சொல்லுவேன். என பூஜாவும் கூறினாள். 

நீ என்ன சொல்லுவ என்று அபிஜித் கேட்டான். 

நான் உங்களை பத்தி சொல்லுவேன்! 

அபி உடனே அவளிடம் நானும் சதீசும் அண்ணன் தம்பின்னு சொல்ல போறியா? சொல்லு?  நீ எந்த பதில் சொன்னாலும் எனக்கு சந்தோசம் தான்! எனக்கு பிரியாவும் சதீஷ் பிரிஞ்சா கூட எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. என்று  கூறினான்.

இதை கேட்டதும் பூஜாவிற்கு தூக்கி வாரி போட்டது. என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?

அபிஜித் நன்றாக அவன் இருக்கையில் சாய்ந்து கொண்டே  அப்போ நான் எந்த பிரச்சனையும்   பண்ண கூடாதுன்னு நீ நெனச்சனா! இப்போ  டக்குனு கிளம்பி ஹாஸ்பிடல் வா என்று கூறினான்.

என்னால மறுபடியும் அங்கே  வர முடியாது.  உங்ககிட்ட என்னால போராட முடியாது. என்று பூஜா கலக்கமான குரலில் கூற

அபிஜித் டென்ஷன் ஆகி நான் உனக்கு இன்பர்மேஷன் தான் சொன்னேன்.  அதை எடுத்துட்டு வரதும், வராததும் உன்னோட இஷ்டம்.  இன்னும் அரை மணி நேரம் தான் உனக்கு டைம். என போனை கட் செய்தான். 

சரியாக அரை மணி நேரம் கழித்து கேமரா புட்டேஜ் அனைத்தையும் பார்த்தான் அவள் வந்ததற்கான எந்த அரவமும் தெரியவில்லை.  சரி அவ வரமாட்டா!  நம்மளும் சீக்கிரமா போய் பிரியா கிட்ட உண்மையை சொல்லிடலாம்! ஒவ்வொரு நாளும்  பிரியா கிட்ட மறைக்க மறைக்க எனக்கு தான் பிரச்சனை அதிகமாகும்!  என்று நினைத்துக் கொண்டு அவன் பிரியாவிற்கு அழைக்க போக..

அந்த நேரம் பூஜா பதட்டத்துடன் உள்ளே வந்தாள்.‌

சட்டென அபி கேமரா புட்டேஜ்களை பார்க்க  பூஜா அரக்க பறக்க பயந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டே வேகமாக உள்ளே நுழைந்தாள்.‌

அபிஜித் அவளை பார்த்து சிரிப்புடன் அப்படி வா!  இப்படி இருக்கணும்! கன் மாதிரி வரணும்! என்று நினைத்தவன் பரவால்ல இதுவும் நல்லா இருக்கே?  அவ பதட்டத்தோட ஓடி வர்றது!  ஒரு game ல ஜெயிச்ச மாதிரி இருக்கு. என நன்றாக சாய்ந்து கொண்டவன்.  அவளுக்கு மீண்டும் அழைத்தான். 

நான் வந்துட்டேன் என்று பூஜா சொல்ல வர..

அதற்குள் அபி நீ வந்துட்டேன்னு தெரியும் நேரா என்னோட ரூமுக்கு வா!

 பூஜா கடுப்புடன் போனை  பார்க்க..

அதை பார்க்க அபிக்கு சிரிப்பாக வந்தது. 

பூஜா! ஹே பூஜா! என்று வரவேற்பு பணிப்பெண் அழைக்க..

நான் மறுபடியும் வேலையில ஜாயின் பண்றேன்! அதை பத்தி டாக்டர் கிட்ட பேசிட்டு வந்துடறேன்! என்று வேகமாக உள்ளே செல்ல போக அங்கிருக்கும் காவலாளிகள் அவளை தடுத்தார்கள். 

நான் டாக்டரை பாக்கணும்!

இருங்க நான் கேட்டுட்டு வரேன் என்று கதவை திறக்க..காவலாளி செல்ல..

 உள்ளே அனுப்பு என்று ஆளுமையான குரல்… 

பூஜா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை.  என்னை டார்ச்சர் பண்றதுக்கு எப்படி வர சொல்றான்? என நினைத்து கொண்டே உள்ளே சென்றாள். 

வாங்க பூஜா prayer! 

தொடரும்..

கமெண்ட் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, இன்னைக்கு எபிசோட் எப்படி இருந்தது? அதை கண்டிப்பா சொல்லிட்டு போங்க ? இனி நிறைய திருப்பங்கள் உங்களுக்காக காத்திருக்கு! 

பிரதன்ய குழலிக்கு சப்போர்ட் பண்ணுங்க. 

EPI 272

சித்தார்த் வீட்டுக்கு வர அங்கே பத்திரிகை மற்றும் திருமணத்திற்கு நகைகள் என அனைத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தார்கள். 

சித்தார்த் வந்ததை கூட கண்டு கொள்ளாமல் பவானி மற்றும் இதன்யா தீவிரமாக அவர்களுடைய வேலையில் மேரேஜ் ஈவண்டுக்கு போன் செய்து பேசினார்கள். 

சித்  அதே இடத்தில் அப்படியே நின்றான்.  “என்ன இவங்க! இந்த பவா! நம்மள கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க? இவள் இந்த இதன்யா ரொம்ப சின்சியரா எங்க அம்மா கூட சேர்ந்து இருக்காளே?  இத இப்படியே விடக்கூடாது. ஏதாவது பண்ணனும்!” என்று நினைத்தான்.

சித்தார்த் அப்படியே முகத்தை மாற்றி கொண்டு டேய்  இப்போ நீ நடிக்க ஆரம்பிச்சாச்சு! 3.. 2..1..  கிளாப்போர்ட் ஆக்ஷன்.. என்று சொல்லிக் கொண்டே முகத்தை மிகவும் பாவமாகவும் சோர்வுடனும் வைத்துக் கொண்டு உள்ளே வந்தான். சித்  தலையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக படிக்கட்டில் ஏறினான்.

சித்தார்த்தை முதலில் பார்த்தது ரோஷினி தான்..

அம்மா சித்து வந்துட்டான் என்று சைகை காட்டிட..

அவன் படிக்கட்டில் ஒவ்வொரு படியாக தலையைப் பிடித்துக் கொண்டே மெதுவாக ஏறினான்.

என்னாச்சு இவனுக்கு? என்று பவானி அவனைப் பார்க்க..

என்னங்க அத்தை என்று அவரின் பார்வை சென்ற திசையை பார்த்தாள்.  புத்தா வந்தாச்சா என்று பார்த்தாள். உடனே இதன்யா தந்நிலைக்கு வந்து என்னங்க அத்தை?  அப்படி பாக்கறீங்க? நீங்க கண்டினியூ பண்ணுங்க! என்று சொல்ல..

பவானி மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினார். 

இங்கே சித்தார்த் மேலே வந்தவன்.   அவனுடைய அறைக்குச் சென்று கதவை சாத்திவிட்டு ஷூ கழட்டி விட்டு,  பிரஷ் ஆகி வெளியே வந்தவன் வேறு உடைக்கு மாறி இப்போ என்ன பண்றது? என்று அங்கும் இங்கும் நடந்தான்.

அந்த நேரம் மதினாவுக்கு போன் பண்ணலாம்? என்று எதையோ யோசித்தவன்.  குட் ஐடியா உடனே அங்கிருந்த  லேண்ட்லைனில் அழைத்தான். 

அது ஹாலில் இருக்கும் எனக்கு சில போன் அடித்தது. 

பவானி ஃபோனை எடுத்து காதில் வைக்க..

சோர்வான குரல் மதி மா! எனக்கு ரொம்ப ரொம்ப தலை வலிக்குது! இன்னைக்கு ஷூட்டிங்ல ரொம்ப வேலை! எனக்கு ஒரு ஸ்ட்ராங்கா தலவலி பறந்து போற மாதிரி ஒரு டீ போடுங்க! என்று கூறினான்.

ஹலோ என்று பவானி பேச..

மதிமா உங்களத்தான்  சித் ஹான் ஒர்க் அவுட் ஆகுதே என வேண்டுமென்றே மறுபடியும் மதி மா என்று  அழைத்தான். 

நான் பவானி பேசுறேன் என்று கம்பீரமான குரலில் அவர் கூறிட..

ஓ கிச்சன்ன்னு  நினைத்தேன். உங்களுக்கு வந்துடுச்சு! என்று போனை கட் செய்தான். 

அத்த போன்ல யாரு? என்று இதன்யா கேட்க..

ஒன்றும் இல்லை! என்று வேலையை தொடர்ந்தார்.

உடனே கிச்சனுக்கு போன் சென்றது.  ஹலோ சிந்து தம்பி! என்று மதி அழைக்க..

அவன் மிகவும் பாவமான குரலில் தலைவலி பிட்டை போட்டு விட்டான்.

இதோ உடனே உங்களுக்கு எல்லாவற்றையும் போட்டு கொண்டு வரேன். என்று அவர் வேலையை ஆரம்பித்தார்.

பவானிக்கு அதன் பிறகு எந்த வேலையும் ஓடவில்லை..

அத்தை! என்று இதன்யா அழைக்க..

ஒன்னும் இல்ல இன்னைக்கு இது போதும் நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்! நீ போ போய் ரெஸ்ட் எடு! என்று கூறினார்.

இல்லை பரவாயில்லை என்று இதன்யா பேச வர..

போமா நான் தான் சொல்றேன்ல்ல போய் ரெஸ்ட் எடு! என்று பவானி அனுப்பி வைத்தார். 

இதன்யா ஒன்றும் புரியாமல் மேலே செல்ல… அவளின் பின்னால் மதிமாவும் கெட்டில் மற்றும் டீ கப்  என அனைத்தையும் எடுத்துக் கொண்டு மேலே வந்தார். 

என்ன மதிமா இதெல்லாம்? டீ வாசனை மூக்க தொலைக்குது!

அது  சித்து தம்பிக்கு ரொம்ப தலைவலி! அதனால டீ போட்டு எடுத்துட்டு போறேன்.  ரொம்ப சோர்வா அசரிக்கையா பேசிச்சு அதனாலதான்

 அப்படியா என்று இதன்யா அவரின் பின்னால் சென்றாள். 

அறைக்கு வந்ததும் அனைத்தையும் டீபாயின் மீது வைத்தவர் சரி தம்பி குடிங்க சரியா போயிடும். மாத்திரை எதுவும்?  இல்லனா அபி தம்பியை கூப்பிடலாமா? என்று அவர் கேட்க..

பரவால்ல மதிமா நான் சமாளிச்சுக்கிறேன் நீங்க போங்க!  என்று கூறினான்.

மதிமா வெளியே வர இதன்யா உள்ளே சென்றாள் அவன் மிகவும் சோர்வாக முகத்தை வைத்து அப்படியே சோபாவில் சாய்ந்தான். 

என்னாச்சு இன்னிக்கி ரொம்ப சோகமா இருக்கானே? அவ்வளவு வேலை செஞ்சுட்டானா?  என்று  இதன்யா அவனை பார்த்தாள்.

 ஐயோ தலவலி தாங்க முடியல  என சொல்லி கொண்டே போன் எடுத்து ஸ்டார்ஜியாவிற்கு அழைத்தான். 

பாஸ் என்று அவள் பதிலளிக்க..

ஜியா இங்கே ஸ்பால இருந்து உடனே மசாஜ்க்கு ரெண்டு ஆளை வர சொல்லு! 

என்ன பாஸ் சொல்றீங்க?

ஜியா நான் சொல்றதை மட்டும் கேளு! ஸ்பால.. அதுதான் எனக்கு பயங்கரமா தலை வலிக்குது!  அதுக்கு எனக்கு மசாஜ் பண்ணனும். என சித் கூறினான். 

எந்த ஸ்பால பாஸ்! 

ஜியா! முடியல!  தலைவலிக்கு மசாஜ் பண்ண ஆளுங்கள வீட்டுக்கு வர சொல்லு! என்று மீண்டும் கூறினான்.

எந்த ஸ்பா பாஸ் நீங்க உங்களுக்கு அதெல்லாம் பிடிக்காதே!   தலை வலியா? என்று ஸ்டார்ஜியா கேட்க..

அதேதான் உனக்கு தெரியும் என்று போனை வைத்தான். 

அவ்ளோ தலைவலியா அவ்வளவு டயர்டுல இருக்கானா?  என்று அவனை பார்க்க..

சித்தார்த் ஃபோனில் ஸ்டார்ஜியாவிற்கு ஜஸ்ட் கிட்டிங் என்று மெசேஜ் தட்டி விட்டான். 

அதன் பின் சோர்வாக அப்படியே சோபாவில் படுத்துக்கொண்டான். 

டீயின் மனம் அந்த அறையை துளைத்துக் கொண்டிருந்தது.  இப்போ டீய வர சொல்லிட்டு இவன் பாட்டுக்கு படுத்துக்கிட்டானே?  என்று அருகில் சென்றவள். 

டீயை எடுத்து ஊற்றி அவனுக்கு கொடுக்க வர..

வரா வரா! ஹஹ…  என  சித்தார்த் அவளை கண்டு கொள்ளவில்லை. 

ஹலோ உங்களுக்கு தான் டீ!

அவன் கண்களை மூடி கொண்டே எனக்கு யார் இருக்காங்க? நான் தலைவலியில கஷ்டப்படுறேன்? எனக்கு ஹெல்ப் பண்றது கூட யாரும் இல்ல! அதனால மசாஜ் சென்டர்ல இருந்து ஆள் வருவாங்க! அவங்க என்ன பாத்துக்குவாங்க! நீ டீய வச்சிடு! என்று கூறினான்.

என்ன ஓவரா பேசிட்டு இருக்கீங்க? இப்போ என்ன நடந்தது? என்று அவள் கேட்க…

 ஒன்னும் நடக்க வேண்டாம். நீ தான் ஓவரா பண்ணிட்டு இருக்க.. என்று சித்தார்த் சோபாவில் இருந்து எழுந்து எதுவும் பேசாமல் படுக்கைக்கு சென்று படுக்கச் செல்ல..

இப்போ எங்க போறீங்க? 

 நான் எங்கே போறேன்? மசாஜ் சென்டரில் இருந்து ஆள் வர வரைக்கும் நான் படுக்கிறேன்.  என்று நகர..

இதன்யா சித்தார்த்தின்  கைகளைப் பிடித்துக் கொண்டாள். 

*

இங்கே அபி, உள்ளே அனுப்பு என்று ஆளுமையான குரலில் கூறினான். 

பூஜா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை.  என்னை டார்ச்சர் பண்றதுக்கு எப்படி வர சொல்றான்? என நினைத்து கொண்டே உள்ளே சென்றாள். 

உள்ளே அந்த சுழல் நாற்காலியில் வாகாக சாய்ந்து கொண்டே அவளை பார்த்தான் அபிஜித்

எதுக்கு என்னை வர சொன்னிங்க என்று மூச்சு வாங்க பூஜா பேசினாள். 

ஆமா நீ  செஞ்ச அந்த நாலு நாளு வேலைக்கு சம்பளம் வாங்காமலேயே போயிட்டியாமா! அத தெரிஞ்சுக்கறதுக்காக, தான் உன்ன வர சொன்னேன்.என்று சாதாரணமாக கூறினான்.

பூஜாவுக்கு கோபம் தலைக்கேரற உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?  இதுக்கு தான் என்னை கூப்பிட்டீங்களா?  உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?  ஒரு பொண்ணு தனியா அவ்வளவு தூரத்தில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்து இருக்கேன்.  எனக்கு ஏதாவது ஆச்சுன்னா?  எங்க அம்மா அப்பாவுக்கு யார் சொல்லுவா? நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? என்று அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

இதை அபிஜித் கொஞ்சமும் யோசித்துப் பார்க்கவில்லை.

அப்படி இல்ல என்று அவன் பேச வர..

“நிறுத்துங்க! உங்களுக்கு என்னை பார்த்தா இளக்காரமா தானே தெரியும்!  பிரியா உங்களுக்கு ரொம்ப ஒசத்தி, நானெல்லாம் கீழே போட்டு நடக்கிற செருப்பு மாதிரி தான!  அதனால நீங்க என்ன இப்படி தான் நடத்துறீங்க!  அவ உங்களுக்கு பிரண்டு, ஆனால்  நான் யாரோ ஒரு பொண்ணு தானே!  அதனால தானே இப்படி டார்ச்சர் பண்றீங்க?  இதன்யா, பிரியா மாதிரி என்னை நடத்துவீங்களா?  அவங்க எல்லாம் பெரிய வீட்டுக்கு மருமகளா ஆக போறாங்க!  நான் சாதாரண பொண்ணு தானே!”என்று திரும்பி திரும்பி அழ ஆரம்பித்தாள்.  

அபிஜித் ஒரு பெருமூச்சை விட்டு “இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் எங்க இருந்து தான் இந்த கண்ணீர் வருதுன்னு தெரியல! பா! சாமி! ”என்று நினைத்தவன்.

போதும்! போதும்! அழுது ஓவர் ரியாக் பண்ணிட்டு இருக்காத! என்று அதட்டலுடன் கூறினான்.

பூஜா கண்ணை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தவள்.  இவன் கொஞ்சமாவது கரைவானா? இவன் மனுஷனா? இல்ல மிருகமா? என்று நினைத்தவள். “இதுக்கு மேல உங்க கிட்ட பேசுறதுக்கு என்கிட்ட எதுவும் இல்ல! நான் கிளம்புறேன். என்று திரும்பினாள்.

ஹே நில்லு என்று எழுந்து நின்றான்.

இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்! என்று பூஜா கேட்க

நீ உன்னோட வேலையை பார்க்கலாம்! என்று அபிஜித் கூறினான்.

புரியல? என்ன சொல்றீங்க? 

அதாவது நீ போய் உன்னோட வேலையை கண்டினியூ பண்ணுன்னு  சொல்றேன்.  அதே போல இனி டெய்லியும் ஸ்கூல் முடிஞ்சதும் நேரம் இங்க வந்துவிடு! ஆமா என்ன படிச்சிருக்க? என்று அபி கேட்டான்.

பூஜா அவனை பார்த்து முறைக்க.. சரி என்ன டிகிரி?  என்று கேட்டான்.

அப்பொழுதும் முறைத்தாள்.

கேட்கறேன்ல்ல என்ன முறைச்சு பார்க்கிற?  பதில் சொல்லு! என்று அதட்டினான்.

நான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன்.  என்று பற்களை கடித்துக் கொண்டே பூஜா கூறினாள்.

ஓ அப்படியா சரி கெமிஸ்ட்ரியோட ஃபாதர் யாரு சொல்லு? என்று கேட்க..

பூஜாவிற்கு முகம் மாறி யோசனைக்குச் சென்றது.

இவ என்னத்த படிச்சிருப்பாலோ?  போய் பென்ஞ்ச தேச்சுட்டு வந்து  இந்த மாதிரி வசனம் பேசுவதற்கு மட்டும் தான் லாய்க்கு என்று நினைக்க..

லவாய்சியர் என்று பூஜா கூறினாள்.

அபி ஆச்சரியமாக பார்த்தவன். பரவாயில்லையே! அப்போ மூளை எல்லாம் வேலை தான் செய்து! போலயே! சரி அப்போ இனி நீ ரிசப்ஷன்ஸ்ட்டா இருக்க வேண்டாம்! இங்க வந்து மெடிக்கல் கோடிங் போட ஹெல்ப் பண்ணு,  இங்க ஸ்டாக் எல்லாம் செக் பண்ணிட்டு, எனக்கு மேனேஜ்மென்ட் ஒர்க் பார்ப்பதற்கு வந்துடு என்று கூறினான்.

நான் எதுக்கு பாக்கணும்?  என்று அவள் அவனைப் பார்த்து கேட்க..

அபிஜித் சிரித்துக் கொண்டே சரி போ நீ அங்கேயே ரிசப்ஷினிஸ்ட்டா நின்னு ஓஞ்சு சோர்ந்து போ! யாரு வேணான்னு சொன்னா? உனக்கெல்லாம் வேலை கொடுக்கிறேன்ன்னு கூப்பிட்டேன் பாரு! என்ன அடிக்கணும்.  அதுவும் இந்த ஹாஸ்பிடல்-ஓட டீன் இந்த பிரான்ச் எந்தெந்த இடத்தில் எல்லாம் இருக்குன்னு தெரியுமா? சவுத் இந்தியால என்னோட ஹாஸ்பிடல் தான் ஃபர்ஸ்ட் பிளேஸ்ல இருக்கு! என்று கூற 

இல்லையே எஸ்பிஆர் ஹாஸ்பிடல் தான் ஃபர்ஸ்ட் பிளேஸ்ல இருக்கு என்ற பூஜா கூறினாள்.

எஸ் பி ஆர் என்று சிரித்தவன்.  அதுவும் நாங்களும் டைப் அப்ல தான் இருக்கோம்.  எங்களோட ஷேர்ரூம் , அவங்களோட ஷேரும் கிட்டத்தட்ட ஒன்னு தான். நான் நிறைய சர்ஜரிக்கு அந்த ஹாஸ்பிடல் தான் போவேன். என்று அவளை வாறினான். 

பூஜா அவனை சாதாரணமாக பார்த்து “நீங்க எங்க போனா எனக்கென்ன? என்று கூற..

சரி இப்போ நீ வருவியா? மாட்டியா? என்று கேட்டான்.

என்னால வர முடியாது. என்று பூஜா சொல்ல..

சரி போ உனக்கு ஏதாவது பியூச்சருக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்ன்னு தான் இந்த ஒர்க்க கொடுத்தேன்..நாளைக்கு.. என அபி நிறுத்த.. 

நாளைக்கு என்ன?  என்று பூஜா கேட்டாள்.

நாளைக்கு இங்க ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் வச்சு நீ ஒரு நல்ல இடத்துக்கு வேலைக்கு போகலாம். என்று அவன் கூற..

சரி என்று அவள் திரும்பினாள்.

ஹே! 

என்ன என பூஜா அவனை பார்க்க..  இனி வா, போனு கூப்பிடாத! என் பெயரை சொல்லி கூப்பிடு. 

சரி என பூஜா ஒற்றை பதில் அளிக்க.. 

இப்பதான சொன்னேன்.  பேரை சொல்லி கூப்பிடுன்னு!

அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்! என பூஜா கூறினாள். 

அபி வேண்டுமென்றே “ஆமா என்னை கூப்பிடறதுக்கு டைம் எடுக்கும்! இதுவே அவனை கூப்பிடுறதா இருந்தா  பக்கத்துல இருக்கிறவகலோட முப்பத்தி ரெண்டு பல்லையும் கடன் வாங்கி 64 பல்லுல சிரிக்க சிரிக்க கூப்பிட்டு இருப்பல்ல!” என்று குத்திப் பேசினான்.

பூஜாவிற்கு கண்ணீர் கோர்த்துக்கொள்ள..

ஐயோஐயோ தேவையில்லாம பிரச்சனையா மறுபடியும் இழுத்து விட்டுடனே! என்று அபி  நினைத்தவன்.

சரி விடு காலேஜ் ஃபீஸ் கட்டிட்டியா? என்று கேட்டான்.

அதை பத்தி உங்களுக்கு என்ன?  என்னை  பத்தி தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்காதீங்க! உங்க வேலையை நீங்க பாருங்க! என்று சொல்லிக் கொண்டே திரும்பினாள்.

நீ ஓவரா பேசுற நான் யாருன்னு தெரியுமா? என்று அபி அவளை முறைத்து பார்க்க..

நீங்க யாரா இருந்தா எனக்கு என்ன?  நான் உங்ககிட்ட வேலை பார்க்கிறேன். அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றாள்.

ஹே நான் உன்னை வேலையில் ஜாயின் பண்ண சொன்னேன்!

நாளைக்கு வரேன் என்னால இன்னைக்கு வர முடியாது  என்று பூஜா வீட்டுக்கு கிளம்பினாள்.

சரி என்று அபி அமர்ந்தவன். ஏதோ நினைவு வந்தவனாய் அவளின் பின்னால் சென்றான்.

பூஜா உள்ளே இருந்து வெளியே வரவும் அவளை பார்த்து அனைவரும் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பூஜா ஒன்றும் புரியாமல் என்ன? நமக்கு வணக்கம் சொல்றாங்க? ஒருவேளை அந்த ரூமுக்கு போயிட்டு வந்ததால் இத்தனை மரியாதை கிடைக்குதா? என்று அவள் வினோதமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டே நடக்க..

பின்னால் ஷூவின் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்க்க அங்கே அபி வந்து கொண்டிருந்தான். 

ஓ மரியாதையா? இவனுக்கெல்லாம் யாரு மரியாதை கொடுத்து, டீனா உட்கார வைத்ததுன்னு தான் தெரியல. சரியான அரக்கனா  இருக்கான் என்று மனதிற்குள் நினைத்தவள். 

இனி இவனுக்கு என்ன மரியாதை? என்று வேகமாக வெளியே சென்றாள். அவளின் பின்னால் அபி செல்ல அவனுடைய  பிரத்யேக காவலாளிகள்  சூழ்ந்து கொண்டு கொஞ்சம் எட்ட நடந்து சென்றார்கள்.

அபி நேராக பூஜாவின் அருகில் சென்றான். 

யார் என பின்னாடி திரும்பி பார்த்தவள். இப்போ எதுக்கு என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க? இது நிஜமா?  இல்ல இல்ல நீங்க எங்கே போறீங்க?  நான்தான் உங்க பக்கம் வரேனா? சரி நீங்க போங்க! நான் அதுக்கப்புறம் போகிறேன். என்று பூஜா நின்றாள்.

அபியும் நின்றான்.

இப்ப எதுக்கு நிக்கிறீங்க? 

 நான் உன் பின்னாடி தான் வரேன் என்று அபி  கூறினான்.

இதை கேட்டதும் பூஜாவிற்கு ஷாக்காக இருந்தது. இப்போ  எதுக்கு என் பின்னாடி வரீங்க?

அதாவது உன்ன டிரா பண்ணலாம்ன்னு தான்! 

என்னை  எதுக்கு நீங்க எதுக்கு என்ன டிரா பண்ணனும்?  என்று அவள் கேட்க..

அதுதான் நீ கஷ்டப்பட்டு ஓடி வந்தேன்னு சொன்னல்ல உன்ன கொண்டு வந்து விடுவதற்கு தான். நாளைக்கு உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா? உங்க அம்மா அப்பா இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு வந்து தான் என் பொண்ணுக்கு இப்படி ஆச்சுன்னு சொல்லிட்டாங்கனா? அதுக்காக தான்! உன்னை விடறதுக்கு வரேன்! என்று அபி கூறினான்.

இந்த மாதிரியான மனிதநேயம் எல்லாம் உங்களுக்கு இருக்கா? 

 அபிஜித் அவளை வைத்த கண் வாங்காமல் உறித்து பார்த்தான்.

இப்போ எதுக்கு அப்படி பாக்குறீங்க? என்று பூஜா கேட்க..

உனக்கு மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்! அன்னிக்கு நீ என் கார்ல வந்து விழும்போது, உனக்கு ஃபர்ஸ்ட் எயிட் பண்ணினேன் ஞாபகம் இருக்கா?  நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது. நான் ரொம்ப நல்ல பையன்.  என்கிட்ட யாரும் நல்லபடியா நடந்துக்குறாங்களோ? அவங்களுக்கு நான் நல்லவங்களா தான் தெரிவேன். நானும் உங்ககிட்ட நல்லபடியாதானே நடந்துக்கிறேன்.  என்று கேட்டான். 

நானும் உங்க கிட்ட நல்ல படியா தானே நடந்துக்கிரென். என பூஜா கேக்க..

நீயா? 

நான் தான்? சொல்லுங்க 

நீ வேற ரகம் என்று  அபி கூறினான்.

என்ன ரகத்தை கண்டுபிடிச்சிட்டீங்க? என்று பூஜா கேட்க..

உன் வாய் கொஞ்சம் கூட அமைதியாக இருக்காதா? என்று அபி கேட்டான்.

நான் பேசுறது உங்களுக்கு இரிடேட்டா தான் இருக்கும் , இதுவே பிரியா பேசினா உங்களுக்கு மழையில நனைகிற மாதிரி இருக்குமே! 

 ஆமா அதுவும் சரிதான் ஆமா பிரியா கூட ஏன் உன்னை கம்பேர் பண்ணிக்கிற?

பூஜா அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க..

அபி சாதாரணமாக பிரியா வேற, நீ வேற, நீ பிரியா பக்கத்துல நிக்க முடியுமா? என சொல்லி விட்டான். 

மறுபடியும் சண்டை ஆரம்பிக்க..

அபி காரை எடுக்க சென்றான்.

அவள் திரும்பிக் கொள்ள..

ஹே வந்து வண்டியில ஏறு!  அவன் என்று சொல்லி வண்டியை அருகில் நிறுத்தினான்.

என்னால வர முடியாது நான் எப்படி வந்தேனோ அப்படியே போகிறேன்!

நீ வர என்று அதட்டினான்.

பூஜா அப்படியே நிற்க அபி சிரித்துக்கொண்டே நீ இப்போ ஏறி வந்துட்டா ஒன்னும் பிரச்சனை இல்ல! ஆனால்  நீ இங்கேயே நிற்க, நிற்க, இங்க இருக்கிற பேஷண்ட், இங்க வொர்க் பண்ற ஸ்டாப்ஸ், எல்லாரும் உன்ன வித்தியாசமா பார்ப்பாங்க! அதுக்கப்புறம் அவங்க என்ன நினைப்பாங்க? டீனுக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? அப்டின்னு கேட்பாங்க.. அதுக்கப்புறம் நான் சொல்ல வேண்டி வரும்!

என்ன சொல்லுவீங்க என்று பூஜா அதிர்ச்சியுடன் பார்க்க..

நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.

தம்பி சதீஷ  என்று ஆரம்பிக்க..

ஐயோ சாமி நான் தான் அவரை விரும்பலன்னு சொல்லிட்டேனே! எதுக்கு என்னை இப்படி கொன்னு எடுக்குறீங்க? என்று கேட்டு கொண்டே  இப்போ உங்களுக்கு என்ன வண்டியில ஏறனும்? அவ்வளவுதானே என்று ஏறி அமர்ந்தாள்.

அபி அடுத்து பேச வர ப்ளீஸ் தயவுசெய்து என்கிட்ட பேசாதீங்க எனக்கு தலை வலிக்குது. என்று கூறினாள்.வரும் வழியில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கார் நேராக அவளுடைய ஹாஸ்டலுக்கு சென்றது அவளை இறக்கி விட்டான்.  அவள் இறங்கியதும், அபி அவளை அழைத்தான். 

பூஜா!!!

அவள் திரும்பிப் பார்க்க .

நான் உன்னை கஷ்டப்படுத்தி இருந்தா சாரி! நான் வேணும்னு பண்ணல, ஆக்சுவலா நான் உன்ன கஷ்டமே படுத்தல உண்மையை மட்டும் தான் சொன்னேன்.  அது உனக்கு கஷ்டமா இருக்கு என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருந்தான்.

பூஜா பெருமூச்சை விட்டு அந்த சாரி கூட கேட்காதீங்க! அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கூறினாள்.

உன்ன என்று அவன் பற்களை கடிக்கm.

அவள் வேகமாக முன்னால் ஓடினாள். 

நாளைக்கு வேலைக்கு சரியான டைமுக்கு வந்துடு என்று கூறிவிட்டு, காரை எடுத்து சென்றான் பூஜா பெருமூச்சுடன் உள்ளே வந்து சென்றவள். அசரிக்கையாக படுத்துக் கொண்டாள்.  

*

இதன்யா அவன் கையைப் பிடித்து உட்காருங்க! என்று அழைக்க..

நீ கையை விடு!  நீ ரொம்ப ஓவரா பண்ற!  உனக்கு நான் தான் முக்கியம் இல்ல! இப்போ உனக்கு எங்க அம்மா தானே முக்கியம்! போடி! இனி எங்க அம்மா கூட தான் நீ படுத்து தூங்கணும்! எங்க அம்மா தானே உன் கழுத்துல தாலி கட்டுனாங்க! கிளம்பு டி! என்று கூறினான் .

உங்களுக்கு தலை வலிங்குறதுனால கண்ணு முன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க! 

உட்காருங்க நானே  உங்களுக்கு தைலம் தேச்சு விடுறேன். என்று கூறினாள்.

சித்தார்த் மனதில் ஐயோ! அது தகதகவென எரியுமே! என்று நினைத்தவன்.  வேணா வேணா எனக்கு அதெல்லாம் செஞ்சு விடாதே! மசாஜ் சென்டரில் இருந்து அவங்க வந்து பாத்துக்குவாங்க!

இதன்யா கோபத்துடன் எவளாவது மசாஜ் சென்டரில் இருந்து இங்கே வந்தா?  உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!  என்று மிரட்டினாள்.

நீ எதுக்கு ரொம்ப கோபப்படுற? மசாஜ் சென்டர்ல இருந்து கேர்ள்ஸ் மட்டும்தான் வருவாங்களா? என்ன? பசங்களும் வருவாங்க? இதைக் கேட்டதும் இதன்யா சிரிக்க ஆரம்பித்தாள்.

சித் அவளை கோபமாக பார்த்தவன். அப்போ நீ இந்த சிரிப்பு சிரிக்கிற அப்போ  நான் பொண்ணுங்கள தாண்டி வர சொல்லுவேன்! 

 வரட்டுமே! அவளை சும்மா விடமாட்டேன்! அருவாமனை எடுத்து அறுத்து போடுவேன்!  என்று இதன்யா கூறினாள்.

அருவாமனைன்னா என்ன? 

ஆமா உங்களுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது!  உட்காருங்கன்னு சொன்னேன்! என்று அவனை இழுத்து அமர வைத்தவள்.  தைலத்தை எடுத்து கொண்டு வந்து அவளின் அவனுடைய நெற்றியில் தடவ வர..

ஹே ஹே!.. no no!  ப்ளீஸ் ப்ளீஸ்! இதெல்லாம் எனக்கு பூசாத..  ஸ்கின்ன நான் பத்திரமா பார்த்துட்டு இருக்கேன்! ஜஸ்ட் எனக்கு மசாஜ் மட்டும் பண்ணி விடு! என்று சித்தார்த் கூறினான்.

அப்படியா?  எப்படி பண்ணனும்? 

மெதுவா உன்னோட ரெண்டு கை விரலையும் எடுத்து என்னுடைய நெத்திக்கு கொண்டு வந்து அப்படியே softஆ..

அப்டின்னா? என்ன இதமாவா? என இதன்யா கேட்க.  

இதம்? ஹான் அதே தான் இதமா.. கைய படர விட்டு நெத்திய தடவு பார்க்கலாம்! என்று  கூறினான். 

அவன் சொன்னதைப் போலவே இதன்யார் செய்ய ஆரம்பித்தாள்.

சித்தார்த் நன்றாக  அமர்ந்து கொண்ட கண்களை மூடிக்கொண்டே ரசித்தான். 

சித்தார்த் லீலை நாளைக்கு தொடரும்..

பார்க்கலாம். 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga..

இன்னிக்கி epi எப்டி இருந்தது? 

EPI 273

மெதுவா உன்னோட ரெண்டு கை விரலையும் எடுத்து என்னுடைய நெத்திக்கு கொண்டு வந்து அப்படியே softஆ.. என சித் கூற.  

அப்டின்னா? என்ன இதமாவா? என இதன்யா கேட்க.  

இதம்?  வாட் அ வேர்ட்?

என்ன சொன்னீங்க? என அவள் முன்னால் வர பார்க்க…

ஹே ஹே அதே தான்  இதமா.. கைய படர விட்டு நெத்திய தடவு பார்க்கலாம்! என சித் கூறினான். 

இப்படியா? என இதன்யா மெதுவாக செய்ய ஆரம்பித்தாள். 

ஹான் அப்படியே மெதுவா! ஸ்லோ ஸ்லோ! ஹான்! மூவ்! மூவ்!  என சித் அவளுக்கு instruction கொடுத்து கொண்டே கண்களை மூடி ரசித்தான். 

இப்படி பிடிச்சு விட்டால் தலை வலி போகுமா? என அவள் கேட்டு கொண்டே பிஞ்சு விரலில் மயில் இறகு வருடி விடுவது போல அவனுக்கு செய்து விட்டாள். 

ஹான் அப்படி தான்! அங்கே dressing table மேல மசாஜ் ஆயில் இருக்கு அதை எடுத்து உன்னோட கையில் அப்ளை பண்ணிட்டு எனக்கு பண்ணி விடு பார்ப்போம்! என சித் சொல்ல.. 

இதன்யா அந்த மசாஜ் ஆயிலை கைக்கி பூசி வந்து அவன் நெற்றியில் தடவி செய்தாள். 

ஹே அப்படியே என்னோட தலைக்கு மசாஜ் பண்ணு! 

என்ன? தலைக்கா? என அவள் அதிர்ச்சியுடன் கேட்க..

அப்போ பண்ண மாட்டியா? விடு! லீவ் இட் நான் தாய் மசாஜ்க்கு ஆளை ரெடி பண்றேன்! 

அப்டியா அதுவும் நல்லதுக்கு தான்! உங்க அம்மா கிட்ட போய் பண்ணிக்கோங்க! 

என்ன அம்மா? என சித் கேட்க..

ஆமா உங்க தாய்! அவங்க தானே!..

சித் கடுப்பாகி ஹே தாய் மீன்ஸ் தாய்லாந்து டி! அப்படியே ஃபுல் பாடி மசாஜ் எப்டி இருக்கும் தெரியுமா? ஹான் என பெரு மூச்சை விட்டவன். பேரிஸ் போகனும்! என போனை எடுத்தான். 

இதன்யா அவளுடைய போனை எடுத்து தாய் மசாஜ் போட்டு பார்த்தவள். கோபமாக சித் கையில் இருக்கும் போனை பிடுங்கி படுக்கையில் வீசினாள். 

ஹே என்ன பண்ற? எனக்கு தலை வலிக்குது! உள்ளே டன்ட நக்கர ரண்டக்கு டக்கர அப்டின்னு சத்தம் கேட்குது! என சித் தலையை பிடித்து கொண்டே கூற..

இப்போ என்ன உங்களுக்கு இப்படி மசாஜ் பண்ணி வுடன்னும் அவ்ளோ தான! இப்போவே பண்றேன். என மெதுவாக அவனுடைய தலையை கோதி கொடுத்து மசாஜ் செய்தாள். 

சித் சிரித்து கொண்டே இவளோட கைல எவ்ளோ வித்தை இருக்கு! இந்த கை என்னன்ன வேலை பண்ணுது! என டார்க் காமெடியாக யோசுத்தவன். ஒரு நிமிடம் விறைத்து தான் போனான். 

போதுமா! என அவள் கடுமையான குரலில் கேட்க.. 

ஹான் அப்படியே கொஞ்சம் முன்னாடி வா!..

என்ன? என அவனுக்கு முன் வந்தாள். 

சித்தார்த் முகத்தை இன்னும் சோகமாக வைத்திருக்க இன்னும் தலைவலி சரியாகலையா?  என வருத்தத்துடன் கேட்டாள்.

 ம்ம் அது கொஞ்சம் பரவாயில்லை!  இப்போ எனக்கு இங்க கழுத்து வலிக்குது! அப்புறம் இங்க தோள்பட்டை, இந்த ஆர்ம்ஸ், இந்த கை விரல் இதெல்லாம் வலிக்குது.  இந்த pain தாங்கவே முடியல என்று வருத்தமான குரலில் பாவமாக கூறினான்..

இதன்யா என்ன செய்வது என்று பார்க்க..

சித்தார்த் உள்ளே போன குரலில் நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்! நான் இருந்து ஆல வர சொல்லட்டுமா? 

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று கோபமாக கூறியவள்.  அருகில் வந்து எங்கே வலிக்குது?  இங்க கழுத்தா?  என கேட்டு மெதுவாக பிடித்து விட ஆரம்பித்தாள்.

நீ பின்னாடி பிடிக்காத! முன்னாடி.. இங்க என்னோட மடியில உட்கார்ந்து, எனக்கு பிடிச்சு விடு! என்று கூறினான்.

அதேபோல் இதன்யா கொஞ்சம் மசாஜ் ஆயிலை கையில் பூசிக்கொண்டு அவனுடைய கழுத்தை மெதுவாக அமுக்கிவிட்டாள்.

அதன் பின் தோள்பட்டையை பிடிக்க, அவளால் பிடிக்க முடியவில்லை. இரும்பு போல இருந்தது.

சித்தார்த் அவளை பார்த்தான். என்ன பாக்குறீங்க? 

அது நீ அழுத்துறது என்னமோ பஞ்சு மூட்டை என் மேல முற்ற மாதிரி இருக்கு! என்று சொல்லிக் கொண்டே அவளை பார்க்க..

இதன்யாவின் பார்வை அவன் கண்களில் இருந்தது. 

என் கையில இவ்வளவு தான் வலு இருக்கு! நான் என்ன பண்ணட்டும்? என்று கூறியவள். கஷ்ட பட்டு மெதுவாக அழுத்திவிட்டாள்.

சித் சிரிப்பை அடக்கிக் கொண்டான். இதன்யா அவளுடைய வேலையில் கவனமாக இருக்க.

சரி சரி போதும்! இப்போ எனக்கு காது வலிக்குது! 

என்ன காது வலிக்குதா? என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

ஆமா இந்த காது இந்த இடம் எல்லாம்  வலிக்குது. அப்புறம் மூக்கு இந்த இடத்தில் வலிக்குது. என்று கூறினான்.

என்ன இவன்? புதுசு புதுசா ஏதேதோ சொல்றானே? ஒண்ணுமே புரியலையே என்று இதன்யா காது மடலை மெதுவாக அழுத்தி  இப்போ ஓகேவா! என்று கேட்டாள்.

ஓகே தான் ஆனாலும்  இன்னும் கொஞ்சம் பக்கத்துல வா! என்று கூறினான். 

அவள் பக்கத்தில் வந்து அவனுடைய காது மடலை பிடித்துக் கொண்டிருக்க..

சித்தார்த் அவளுடைய வாசத்தை உள்ளெடுத்து  அவனுடைய கைகளை அ அவள்  முதுகுக்கு கொண்டு வந்து அணைத்துக் கொண்டான்.

இப்போ! இப்போ என்ன பண்றது? என்று கேட்டாள்.

இப்போ எனக்கு மூக்கு!

இதன்யா அவனுடைய முகத்தை அந்நார்ந்து பார்க்க..

சித்தார்த்தின் பார்வை  அவளின் கழுத்துக்கு கீழ் இருந்தது. 

அவள் திடுக்கிட்டு புருவம் நெருக்கி  இவன் எங்க பாக்குறான்? இவனோட பார்வையே சரியில்லையே? இப்படி கழுத்து வலி , தலை வலி எல்லாம் ஓகே ஆனால்  காது மடல், மூக்கு வலி அப்டின்னு புதுசு புதுசா சொல்றான்?  அப்போ இவனுக்கு நிஜமாகவே வலிக்கலையா? நம்மகிட்ட பொய் சொல்றானா? பிராடு பய! என்று நினைத்தவள். 

மூக்கை இறுக்கி அழுத்தி பிடிக்க ஆரம்பித்தாள்.

ஹே ஹே என்ன டி பண்ற? எனக்கு வலிக்குது.

ஹான் தெரியும் வலிக்கட்டுமே என்று காதை திருகினாள்.

ஹே நிஜமாகவே வலிக்குது!  என்னடி பண்ற? என சித் அவளின் கையை பிடித்துக்கொள்ள..

டேய் எங்கடா பாக்குற? என இதன்யா கோபத்துடன் பார்த்தாள். 

நானா இங்க பார்த்தேன்.  என அசால்ட்டாக கூறினான். 

என்ன என அவளுடைய உடையை சரி செய்து கொண்டு நீ பார்த்ததை அப்படியே சொல்லுவியா டா? கொஞ்சம் கூட உனக்கு பயம் இல்லையா?

ஆமா நீ தானே கேட்ட! எங்க பார்த்தேன்னு? அதுதான் நான் இங்க பார்த்தேன் என்று சித் கூறினான். 

அடப்பாவி அப்போ நெஜமாவே உனக்கு தலை வலிக்கலையா? 

தல வலிக்கும்ன்னு சொல்ல வந்தேன். 

அப்போ வலிக்கல அப்படித்தானே!  என்று அடிக்க ஆரம்பித்தாள். 

அவனுடைய  தோள்பட்டையை அடித்தவள்.  தலைமுடியை பிடித்து இழுத்து ஆட்டினாள் .

என்னடி பண்ற எனக்கு வலிக்கல! என்று சிரிக்க ஆரம்பித்தான். 

என்ன என்று கோபமாக கேட்டவள் அவனுடைய கன்னத்தை கடிக்க வந்தாள்.

சித்தார்த் அவளின் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் வைத்தவன்.  பரவால்லடி இந்த கைல ஏதோ வித்தை வச்சிருக்க! இந்த கை  என்னென்னல்லாம் பண்ணுது தெரியுமா?  என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்தான். 

இதன்யாவிற்கு அவன் பேசுவது வித்தியாசமாக இருக்க.. சித் அவளின் கையில் இருக்கும் பாம்பு விரலை அதாவது நீள விரலை கடித்தான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்தவள். ஹே புத்தா என் விரலை விடுங்க! என்று கொஞ்சம் வெட்கம் கலந்து சிரிப்புடன் கையை உதற ஆரம்பித்தாள்.

ஹே are you understanding this this என சொன்னதை திரும்ப திரும்ப கூறினான். 

எனக்கு ஒன்னும் தெரியாது. கைய விடுங்க! என நெளிந்தாள். 

சித் சிரித்து கொண்டே நீ கேடி லிஸ்ட்டு டி! எல்லாமே தெரிஞ்சிருக்க! ரவுடி! ரவுடி! என அவளை அவன் பக்கம் திருப்பினான். 

விடுங்க! 

ஹான் சரி விட்டுட்டேன். என கூறினான். 

அவள் இதயம் படபடக்க எழுந்து திரும்ப.. ஹான் நான் தான் ஜெயிச்சென். எப்டி உன்னை தானா என்னை தேடி வர வச்சேன் பாத்தியா! 

இதன்யா திடுக்கிட்டு பார்த்தவள். என்ன? என்ன சொன்னீங்க? 

ஆமா நீ தான் என்னை தேடி வந்திருக்க? நான் ஒன்னும் உன்னை தேடி வரலையே! அதான் டி சித்து பார்த்த தானே! நான் யாருன்னு? சித்தார்த் கிருஷ்ணா? பவருக்கே பவர்! 

போடா புவர் ஸ்டார்! 

என்ன டி சொன்ன? என சித் எழுந்து அவளை பிடித்தான். 

என்ன டா! என்ன? பிராடு! என அவள் பேசி கொண்டிருக்க…

ஒரு நிமிடத்தில் சித்தார்த்தின் முகம் கடுமையான பாறை போல மாறியது. அவள் எச்சிலை விழுங்கி கொண்டு அவனை பயத்துடன் பார்த்தவள்.  என்னங்க என்று அழைக்க..

சித்தார்த் அவளுக்கு முதுகு காட்டி திரும்பினான். 

என்னாச்சு? தெரியலையே! இவ்வளவு நேரம் ஜாலியா பேசினான்! இப்போ திடீர்னு முகத்தை பார்த்தால் எதோ பாறை முழுங்கி  எரிமலை மாதிரி இருக்கான். என்று முன்னால் சென்றாள்.என்னங்க! அது நான் வந்து! சும்மா சொன்னேன்.  என்று தயங்கிக் கொண்டே பேச..

ச்ச! எவ்வளவு தைரியம் இருந்தா? நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்ப..  என்று கடுமையான குரலில் கூறியவன். இனி!  என்று அவளின் அருகில் வந்து கண் இமைக்கும் நொடியில் அப்படியே படுக்கையில் பொத்தென தூக்கி போட்டான். 

அவள் அந்தப் பஞ்சு மெட்டையில் விழுந்து ஒரு அடி மேலே சென்று சுருண்டு விழுந்தாள். ஹே என்ன புத்தா! அவுச்! என பறந்து  விழுந்தவுடன் தள்ளாடி அவனை பார்க்க..

சித்  சிரித்துக் கொண்டே  படுக்கையில்  அவள் மேல் விழுந்தவன் நான் தான்டி நானே தான்  பிளான் பண்ணி உன்ன வர வச்சேன்!  என்னால எல்லாமே முடியும்! அப்டின்னு உன்கிட்ட காட்ட தான்! இப்படி எல்லாம் பண்ணேன். பாத்தியா? நான் கொஞ்சம் சினுங்கினாலே உன்னால தாங்க முடியல!  அதுதான் சித்தோட பவர்! என்று அவளின் உதட்டை கடித்து இழுத்தான். 

அவள் வலியில் சினுங்க..

ஹே சினுங்காத! இப்படி சவுண்ட் கொடுக்காத எனக்கு ஒரு மாதிரி இருக்கு தெரியுமா! என்று அவன் சொல்ல..

இந்த வார்த்தைகளை கேட்டதும் தன்னிலைக்கு வந்தவள். புத்தா!  ஒழுங்கா தள்ளிப் போயிடு! இல்ல உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது?  நான் உன்கிட்ட என்ன சொன்னேன்! 

என்ன சொன்ன என மென்மையுடன் உதட்டை அவன் வாய்க்குள் எடுத்து கொண்டான். 

அவளுக்கு சொன்னது எல்லாம் மறந்து போனது. Center fresh  நாக்கை நாட்டியம் ஆட செய்வது போல அவளின் உதடும் நாவும்  உறிஞ்சி கொண்டிருந்தான். 

ஹான் என பெரு மூச்சை விட்டவன். உன் மேல குட் ஸ்மெல் அடிக்குது! குளிச்சியா? 

அவனது கேள்விக்கு கூட அவளால் பதில் சொல்ல முடிய வில்லை மயங்கி கிடக்க..

சித் சிரித்து கொண்டே அவளின் டாப் உள்ளே கைகளை நுழைத்து கொண்டே கழுத்தில் முகம் புதைத்தான். 

ஹே கேட்டதுக்கு பதில் சொல்லு! எப்போ குளிச்ச? 

கா காலையில! 

ஹான் ஆனாலும் சோப்பு பாசத்தை விட உன்னோட வாசம் நல்லாருக்கும். ஐ லைக் இட் என்னை மயக்குது டி! அப்படியே வடவடனு உன்னோட வியர்வை கன்னத்தில் வழிந்து அப்படியே படியும் போது அதை தொட்டால் நல்லாருக்கும். என சித் அவளின் பஞ்சு மூட்டையை பிடித்தான். 

இதன்யா நெளிந்து கொண்டே வே வேனா!..

எனக்கு வேணுமே on cloud nine போலாம்! இன்னிக்கி உனக்காக.. நீ center fresh ஆ ஃபீல் பண்ணனும்! அப்புறம் நான் seventh heaven போகனும் அப்புறம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து love making further ஆ புரோசெஸ் பண்ணலாம்.என ஹஸ்கி வாய்சில் பேசியவன் அடுத்து அடுத்தது என அவளுக்கு மேல் இருந்து அவனுடைய கைகள் எட்சில் அவளின் ரகசிய பகுதிக்கு செல்ல போக…

டிங் டாங் பெல் என.. போன் அடிக்க அலற ஆரம்பித்தது. .

F* f* f* trash இன்னிக்கி முடியாது. முழுசா முடிச்சிட்டு தான் போவேன். என வேகமாக சித் making process செல்ல போக. .

டேய் பக்கத்தில் வந்த அடிப்பேன். என்ன டா என்னை மயக்க பாக்கிரியா! என உடையை சரி செய்து கொண்டே வேக மூச்சுடன் பார்த்தாள். 

ஹே போகாத டி! இதுக்கு மேல முடியாது. கஷ்டம் டி லாஸ்ட் லாஸ்ட் அண்ட் பைனல்! 

புத்தா! போன் அடிக்குது! 

நீ முதல்ல இந்த புத்தா வை கட் பண்ணு! கிராதகி! ராட்சஸி! டெவில்! You you இடியட்…என திட்ட ஆரம்பித்தான். 

இப்படி தாகத்துக்கு தவிக்கும் சித்தார்த் அவளுக்கு புதிது! என்ன? என்ன?  என்ன டா! .

என்னை இனி புத்தா சொல்லாத! 

ஏன்! என அவனுடைய போனை எடுத்து நீட்டினாள். 

நான் ஒன்னும் மகான் இல்ல.. உன்னை புத்தனா பார்க்க விருப்பம் இல்ல.. நான் சாது இல்ல.. உன் மேல எனக்கு அரக்க தனமா உணர்வு இருக்கு! அதை..

முதலில் போன் பேசுங்க! என கண்களை ஒரு மாதிரியாக சிமிட்டினாள். 

அந்த பெயரை பார்த்தவன் வெறி ஆகி டேய்! டேய் son of b*, you bull shit, f* you.. எங்கே டா இருக்க? What the hell? எதுக்கு எனக்கு கால் பண்ண? You you என வாய்க்கு வந்த படி திட்ட ஆரம்பித்தான். 

எனக்கு என்னோட கார் வேணும்! 

டேய்! ராஸ்கல் எங்கே இருக்க? 

கீழே வா டா இன்னிக்கி என் காரை வாங்காமல் போக மாட்டேன். B*, F* you.. என ஆஷிஷ் மெதுவான குரலில் கூறினான். 

வரேன் டா இப்போவே வரேன் என அவன் வேகமாக உடையை சரி செய்து கொண்டு கிளம்ப .

போன் ல யாரு புத்தா! 

ஹே kill you டி இனி புத்தா சொல்லாத! நான் புத்தன் மகான் இல்ல.. என்னை டார்ச்சர் பண்ற டி! உன்னை இரு! என அவன் வாய்க்கு வந்த படி கோபமாக பேசி கொண்டே செல்ல.. 

இதன்யா அவன் அருகில் நெருங்கி எட்டியவள். எக்கி நின்று அவனுடைய இதழை கடித்து கொண்டு மென் முத்தம் கொடுத்தாள். சித்தார்த் கோபத்துடன் தள்ள வர…

ஸ்ஸ்ஸ்… என சிணுங்கி கொண்டே மீண்டும் உதட்டை வருடினாள். 

சித்தார்த் இப்பொழுது தான் மொத்த உணர்வுகளையும் அடக்கினான். இப்பொழுது மீண்டும் அவனை திரி தூண்டி விட்டாள். 

சித் அவளை வளைத்து பிடித்து படுக்கைக்கு தூக்கி சென்றவன். வேகமாக அவன் மேல் படற ஆரம்பித்தான். 

என்ன புத்தா!. என சொல்ல வருவதற்குள் சித் அவளின் உதட்டை பூட்டி கொண்டான். 

இனி புத்தா சொல்லாத! எனக்கு உன்னை அரக்கனா மாறி எதுவும் பண்ண தோணுது! என காதை கடித்து உதட்டை எட்சில் செய்து உதட்டால் துடைத்தான். 

இனி இது வேலைக்காது என தெரிந்தவள். அவனுடைய உதட்டை கவ்வி பிடித்தாள். 

ஸ்ஸ் ஹா!. You!. என்று ஒரு சத்தம். 

பத்து நிமிடங்களுக்கு பிறகு..

சித்தார்த் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு  ஆசிசுக்கு எதிரில் இதன்யாவை முறைத்து கொண்டே  அமர்ந்திருந்தான். 

அப்படி என்ன நடந்தது? 

இப் இப்போ என்ன வே வேணும்? என சித் வலியுடன் அவனை பார்க்க..

ஒழுங்கா என்னோட கார் வித் கீ அண்ட் செயின் மொத்தத்தையும் கொடு இப்போவே கிளம்புறேன். என ஆஷிஷ் கூறினான். 

I don’t  give you! You can go now! என சித் வலியில் பெரு மூச்சை விட்டு கூறினான். 

டேய் ஒழுங்கா கொடு! அது என்னோட காரு! இதன்யா பாரு உன் புருசன் எப்படி இருக்கான்னு! என ஆஷிஷ் சொல்லி கொண்டே என்னை bad word ல யாருமே திட்டினது இல்ல. உன் புருசன் என்னோட மனசு கஷ்ட ப்படுற அளவுக்கு ஹர்ட் பண்ணி இருக்கான். எனக்கு அது ரொம்ப கஷ்ட படுத்துது! என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினான். 

சித் அவனை ஏகத்துக்கும் முறைத்து பார்க்க..

கார் கீ எங்கே? எங்கே இருக்கு? 

தெரியாது! என ஒற்றை பதிலில் கூறினான். 

தெரியாதா? சரி நான் இப்போவே அத்தைய! அப்படி இல்லன்னா! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி .. என இதன்யா சொல்ல வர.  

கார் கி இந்தா! உதட்டை ஊதி கொண்டே கூறினான். 

ரொம்ப தேங்க்ஸ் இதன்யா டைம் காட் இவன் ஒரு பிராடு! அதை விட இவன்.. என ஆஷிஷ் பேச வர…

டேய் வாங்கிட்ட தானே மூடிட்டு கிளம்பு! இனி என்னை தேடி இந்த பக்கம் வந்த! வேட்டை நாயை விட்டு உன்னை கடிக்க வைப்பேன். உன்னோட seeds இருக்காது. 

ஆஷிஷ் அவனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்து முறைக்க..

Seeds அப்டின்னா? என்ன? என இதன்யா கேட்டு வுட.. 

ஓ சாரு இன்னும் புத்தரா தான் இருக்கீங்களா? என ஆஷிஷ் சிரிக்க ஆரம்பித்தான். 

சித்தார்த் எழுந்து அவனை அடிக்க வர.. போடா புத்தா! நீ மகான் டா! அப்படியே இரு இது சிங்கிள்லொட சாபம்! என ஆஷிஷ்  வெளியே ஓடினான். 

இப்பொழுது சித்தார்த் இதன்யாவை முறைத்து பார்க்க… 

என்னங்க seeds அப்டின்னா என்ன? ஆஷிஷ் சார் என்ன சொல்லிட்டு போறாரு! என இதன்யா தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு அருகில் வந்தாள். 

ஓ f* இவளை வச்சிட்டு நான் புத்தனா தான் இருக்கணும்! என கோபத்துடன் மேலே சென்றான். 

ஹே புத்தா! நில்லுங்க! நில்லுங்க! பதில் சொல்லிட்டு போங்க என பின் தொடர்ந்து சென்றாள். 

சித் வேகமாக உள்ளே சென்றவன். ஆள் ஆளுக்கு என்னை டென்ஷன் பண்றாங்க! இவள் நம்மள விட மாட்டாள். பேசாம நீ குளி டா சித்து! என குளியலறை சென்றான். 

புத்தா! என மூச்சு வாங்கி கொண்டே வந்தாள். 

எதுக்கு டி என் வாய கடிச்ச! உள்ளே flame மாதிரி எரியுது! என சித் அவளை முறைத்து கொண்டே கேட்டான். 

பத்து நிமிடங்களுக்கு முன் என்ன நடந்தது? 

சித்தார்த் அவள் மேல் தீவிரமாக இருக்க இனி இது வேலைக்காது என தெரிந்தவள். அவனுடைய உதட்டை கவ்வி பிடித்தாள். 

சித்தார்த் அவளின் உடைக்குள் கைகளைப் விட்டு பஞ்சு பந்துகளை கசக்கும் நேரம்.. அவள் சுகவலியில் துடிக்க வேண்டும் ஆனால் சித் ஸ்ஸ் ஹ! You என உதட்டில் உள்ள இரத்தத்தை பார்த்தான்.

அடி பாவி என்ன டி பண்ற? அய்யோ என்னோட லிப்ஸ் it’s hurt me!  என உள் உதடுகளின் இரத்தத்தை பார்த்தான். 

அச்சோ! சாரி புத்தா! நான் ரொம்ப பீக் ல இருந்தேனா! அது தான்! தெரிஞ்சு இப்படி பண்ணிட்டேன். 

என்ன தெரிஞ்சா! என சித் பார்க்க.. 

Same to you! உங்களை மாதிரி தான் தெரிஞ்சு பண்ணேன்! என கண் அடித்தாள். 

ஸ்ஸ் என அவன் அவளை பார்க்க..

அதற்குள் மீண்டும் போன் அடித்தது. யாரு உங்களை இத்தனை தடவை கூப்பொடுறது? என வேகமாக போனை எடுத்தாள். 

அதில் ஆஷிஷ் என இருக்க.. சித் அந்த அறையில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து உதட்டின் உள்ளே வைத்தான். 

புத்தா! 

Don’t call me புத்தா என கோபமாக வெளியே சென்றான். 

இதன்யா அவனை பார்த்து சிரித்து கொண்டே பின்னால் சென்றாள். 

இது தாங்க நடந்தது. 

சரி இப்போ அவளுக்கு வேற பெரிய டவுட்! சித்தார்த் வேற குளிக்க போயிட்டான். 

Seeds அப்டின்னா என்ன? என யோசித்து கொண்டே இருந்தவளுக்கு பிரியா நினைவு வந்தது. 

ஹான் பிரியாவுக்கு கண்டிப்பா தெரியும் என உடனே அழைத்தாள். 

சொல்லு டி!. 

என்ன? 

அது seeds அப்டின்னா என்ன டி? என இதன்யா கேட்டாள். 

Seeds தெரியாதா? விதைகள் டி!. என பிரியா கூறினாள். 

ஹே அது எங்களுக்கும் தெரியும் ஆனால் இது அது இல்ல..

வேற என்ன? என பிரியா கேட்க…

அது ஆஷிஷ் சாரை பார்த்து புத்தா சொன்னாரு அது தான் எனக்கு ஒன்னும் புரியல…

என்ன சொன்னாரு? என பிரியா கேட்க..

வேட்டை நாயை விட்டு கடிக்க வச்சா உன்னோட seeds இருக்காதுன்னு சொன்னாரு! அதுக்கு அர்த்தம் என்ன? என இதன்யா கேட்க..

என்ன சொல்ற? ஒரே குழப்பமா இருக்கே! சரி அதை விடு அதுக்கு ஆஷிஷ் என்ன சொன்னாரு? 

அதுக்கு நான் seeds அப்டின்னா என்னன்னு புத்தா கிட்ட கேட்டேன். அதுக்கு ஆஷிஷ் சார் பயங்கரமா சிரிச்சிட்டு, நீ மகான் டா! இது சிங்கிள் சாபம் நீ இப்படியே இரு அப்டின்னு சொன்னாரு! என இதன்யா கூறினாள். 

பிரியா ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். 

ஹே என்ன டி சிரிக்கிற? என்ன விசயம்? எனக்கு மண்டையே வெடுக்கிற மாதிரி இருக்கு! என்ன டி seeds அது என்ன seeds? என அவள் கேட்க..

ஹே இதன்யா நீயும் சித்தார்த்தும் இன்னும் உங்களுக்குள் எதுவுமே இல்லையா! 

ஏன்? என்ன சொல்ற? 

இல்ல சும்மா! சரி நீ போய் தூங்கு சின்ன புள்ளை சாப்பிட்டு தூங்கு போ! என பிரியா சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினாள். 

ஹே என்ன ஒழுங்கா அதுக்கு அர்த்தம் என்னன்னு சொல்லு! சொல்லல நான் உன் கிட்ட பேசவே மாட்டேன். சொல்லு டி! 

அந்த நேரம் பாப்பாத்தி ஹே கடலைகொட்டை சட்னி செஞ்சிறுக்கேன். கோதுமை தோசை ரெடி வா பொண்ணு! என்று அழைத்தார். 

பிரியா வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தவள். வரேன் மாச்சி! என கத்தி சொல்லி விட்டு சிரிப்பை அடக்க முடியாமல் இதயா நீ பெட்டர் சித்து கிட்ட கேளு டி! ஆனால் சித்து ரொம்ப ரொம்ப பாவம்! உன்னை வச்சுட்டு கஷ்ட படுறாரு! அய்யோ அய்யோ! இந்த புள்ளைக்கு கொஞ்சம் அறிவை கொடுங்க! என வைக்க போக..

ஹே என்ன ஆள் ஆளுக்கு என்னை கேவலமா நினைக்கிறீங்க? இப்போ சொல்ல போறியா இல்லையா! என இதன்யா கோபத்துடன் கூறினாள். 

சரி இனி ஒன்னும் பண்ண முடியாது. கேட்டுக்க  நான் சொல்றத புரிஞ்சா நீ பாதாம் பிஸ்தா என அவள்  dark விசயத்தை lite ஆக அவள் கிட்ட சொல்லவும் சித் தலைக்கு குளித்து வெளியே வரவும் சரியாக இருந்தது. 

அச்சோ! என வேகமாக வெளியே சென்றாள். 

 அட போடி! இப்டியே என்னை ஏமாற்றி சுத்து! இனி புத்தா சொல்லி பக்கத்தில் வா! அப்புறம் இருக்கு என படுக்கையில் விழுந்தான். 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

ரிதம் நன்றாக சாப்பிட்டு முடித்து விட்டு வயிற்றை நீவி ஏப்பம் விட்டவள். அப்படியே.. 

EPI 274

பிரியா சொன்ன விசயத்தை கேட்டதும் கண்களை மூடி தன் கிறுக்குதனத்தை எண்ணி நொந்து கொண்டவள். அச்சோ! என வேகமாக வெளியே சென்றாள். 

அவள் வெளியே செல்வதை பார்த்த சித்தார்த் அவளை விட நொந்து அட போடி! இப்டியே என்னை ஏமாற்றி சுத்து! இனி புத்தா சொல்லி பக்கத்தில் வா! அப்புறம் இருக்கு என படுக்கையில் விழுந்தான். 

புரண்டு புரண்டு படுத்து பார்த்தான். தூக்கமே வர வில்லை. மின்னல் ஒரு கோடி மின்சாரத்தை வெறும் பார்வையில் கண் அசைவில் கொடுக்கும் கண்ணுக்கு சொந்தக்காரி, அது மட்டுமா?  அந்த மோகம்… அதாவது மோகன மூச்சை வெளி விடும் வசீகர கிளியோபட்ரா மூக்குக்கு சொந்தக்காரி, குட்டச்சி, கொஞ்சமாக சாப்பிட்டாலும் குட்டி தொப்பையை வைத்திருப்பவள், அது கூடவே அவளின் உயரத்தை விட முடி நீளமாக  இருக்கும். விலங்குகளில் பேரழகு பிடரி வைத்திருக்கும்  சிங்கம், தோகை வைத்திருக்கும் மயில், தந்தம் வைத்திருக்கும் யானை, கொண்டை வைத்திருக்கும் சேவல் என ஆயிரம் ஆண் இனங்கள் இருந்தாலும் அவை மொத்தமாக  இந்த மனித இனம் மொத்தமாகவே மயங்கி கிடப்பது பெண் இனம் தான். அதுவும்  பெண்ணின் மணமே இல்லாத கூந்தலில் தான் ஐந்து அடி சேலையில் கொள்ளை அழகை பதுக்கி வைத்திருக்கிறாள். அந்த கண்ணாடிகாரி. 

இப்படி எவ்வாறு புரண்டு புரண்டு படுத்தாலும் சித்தார்த்தினுடய சிந்தையில் இதன்யாவே வந்த அமர்ந்தாள். 

என்ன செய்ய?  என்ன செய்ய?  என்று யோசித்தவன்.  இதை இப்படியே விடக்கூடாது.  இதுக்கு  ஏதாவது முடிவு கட்டியாகணும்!  என்று எழுந்தான். 

அருகில் உள்ள ஒரு ஜக் தண்ணீரை மொத்தமாக குடித்தவன் வேகமாக அவனுடைய லேப்டாப் மற்றும் பொருட்கள் வேலை செய்யும் அனைத்து வித கேட்ஜெட்டுகளையும் எடுத்துக்கொண்டு நேராக ஸ்டடி ரூமை நோக்கி சென்றான். 

இங்கே வெளியே இதன்யா அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.  

ஐயோ!  ஐயோ! உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடி! எதைப்பற்றி நீ அவங்க கிட்ட பேசி இருக்க? வெட்கமாகவே இல்லையா? வர வர நீ ரொம்ப மாறிக்கிட்டே வர! இது சரியில்லை இதன்யா! என்று தனக்கு தானே புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் தான் சித்தார்த்த வேகமாக ஸ்டடி ரூம் நோக்கி சென்றான்.

இவரு இதுக்கு அங்க போறாரு ஒருவேளை ஏதாவது ஆபிஸ் வேலையா இருக்குமா? நல்லவேளை போகட்டும்! போகட்டும்! நான் உள்ளே போய் தூங்குறேன்.  இந்த விஷயத்தை கேட்டதும் எனக்கு  அவரோட முகத்தை பாக்குறதுக்கே தைரியம் இல்லை!  திராணி இல்லாதவளா ஆயிட்டேன்! ச்ச ச்ச  எதைப்பற்றி அவங்க முன்னாடி பேசி இருக்கேன்?  ஐயோ என்று சினுகியவள் அவன் சென்றதும் வேகமாக சென்று தூங்க ஆரம்பித்தாள்‌.

சித்தார்த் உள்ளே சென்றதும் சதீஷை போன் செய்து வரச் சொன்னான். 

என்னடா இந்த நேரத்துல கூப்பிடுற? 

சித் கொஞ்சம் கடுமையான குரலில் நீ எனக்கு கீழ வேலை பாக்குற?  அது ஞாபகம் இருக்குல்ல! 

சதீஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

சீக்கிரம் வா நிறைய வேலை இருக்கு என்று கூறினான்.

சதீஷ் நொந்து கொண்டு ஸ்டடி ரூமுக்கு அவனுடைய வீட்டில் இருந்து ஸ்டடி ரூமுக்கு வந்து சேர்ந்தான். 

சதீஷ் அவனிடம் இப்போ என்ன வேலை செய்யணும்.  ஒடிசா ப்ராஜெக்ட்டா? அதுல ஆல்ரெடி எல்லாத்துலயும் நானும் ஜியாவும் அப்டேட்ல தான் இருக்கோம் என்று கூறினான். 

Damn ஒடிசா ப்ரொஜெக்ட் இல்ல .. 

பின்ன வேற என்ன? என சதீஸ் கேட்க

சித் லேப் டாப்பில் page ஓபன் செய்து வேலையை ஆரம்பித்தவன். அது little heart project..

அதுல நீங்களும் நானும் டை அப் பண்ணவே  இல்லையே என்று சதீஷ் கூறினான். 

சித்தார்த் அவனை முறைத்துக் விட்டு ஓ காட் இட்! இப்போ உங்க அப்பா கம்பெனிக்காக தான் என்கிட்ட வேலை செஞ்சுகிட்டு இருக்கியா?  என்ன?  அப்படின்னா நீ இப்பவே ரிசைன் பண்ணிட்டு, அஃபிஷியலா உங்க வீரசிம்மா VSA ஹாஸ்பிட்டல்ஸ்,  அண்ட் பவர் புராஜக்ட்ஸ் அண்ட் கோல  ஜாயின் பண்ணிட்டேன்!  போ கிளம்பு!  என்று கூறினான். 

டேய் டேய் இல்ல இல்ல டா! நான் எதோ தூக்க கலக்கத்தில் பேசிட்டேன். தப்பு தப்பு.. நம்ம இப்போ.. லிட்டில் ஹார்ட் புராஜக்ட் பண்ண போறோம்! 

சித் தட்டச்சு செய்வது நிறுத்தி விட்டு அவனை பார்க்க..

டேய் என்ன டா எது சொன்னாலும்  இப்படியே பேசுற! இப்போ என்ன டா பண்ணட்டும்? சொல்லு! எது பேசினாலும் லாக் பண்ற? நீ தானே சொன்ன? இது லிட்டில் ஹார்ட் புராஜக்ட் அப்டின்னு அதனால தான்! நான் எதும் தப்பா சொல்லிருந்தா சாரி! என சதீஸ் நொந்து கொண்டே கூறினான். 

லிட்டில் ஹார்ட் மிஷன் ல நான் மட்டும் தான் ஒர்க் பண்ண போறேன். நீ எனக்கு ஹெல்ப் கூட இல்ல.. அவள் உன்னோட தங்கச்சி நியாபகம் இருக்கா! 

டேய் நீ எந்த லிட்டில் ஹார்ட்டை சொல்ற? என சதீஸ் கேட்டான். 

என் பொண்டாட்டி! இதன்யா லிட்டில் ஹார்ட்! 

என்னைய சாவடிக்கிரானே! என நினைத்து கொண்டு டேய் நான் சப்ளிமென்ட் பத்தி பேசிட்டு இருக்கேன். என சதீஸ் கூறினான். 

வெட்டி பேச்சை பேசாத! இப்போ நீ ஆக்டர்  ஜானவிக்கு கால் பண்ணு! அடுத்து ரக்சன், அண்ட் லாஸ்ட் தேவ் கபூர் நான் சொல்றது புரியுதா! என சித் கேட்டான். 

போன் பண்ணி என்ன பண்றது? 

நீ போன் பண்ணி கொடு! நான் பேசிக்கிறேன்! புடுங்கி மாதிரி பேசாத! பண்ணு! என சித் அதட்டினான்.

சதீஷ் எதுவும் பேசாமல் ஜானவிக்கு போன் செய்தான். 

ஹலோ சாரி மிஸ் ஜானவி நான் சித்தார்த் P.A.. அவரு முக்கியமா பேசனுமாம்! அது தான் உங்க பெர்சனல் நம்பர்களுக்கு சாரி நம்பர்க்கு கால் பண்ணேன். 

இட்ஸ் ஓகே அவர் கிட்ட கொடுங்க! என ஜானவி கூறினாள். 

ஹலோ ஜானவி ஒரு சின்ன favour? 

சொல்லு சித்து!!

சித்தார்த் அவளிடம் லிட்டில் ஹார்ட் புராஜக்ட் பற்றி கூற..

ஜானவி சிரித்து கொண்டே அப்போ என்னை பிராண்ட் அம்பாசிடர்ஆ கூப்பிட கால் பண்ணீங்களா? 

அச்சோ! இட்ஸ் ஹர்ட்டிங் ஜாணவி நீ ஒத்துக்க மாட்டேன்னு ஆல்ரெடி நியூ ஃபேஸ் புக் பண்ணிட்டேன்.. இப்போ இப்போ .. என சித் தயங்க..

சரி சரி இப்போ நான் என்ன பண்ணனும்? என ஜாணவி கேட்டாள். 

நாளைக்கு உன்னோட official Facebook, Twitter ல இருந்து இந்த லிட்டில் ஹார்ட் பத்தி ஒரு promotion பண்ணனும். அதோட தீம் details send பண்ணி இருக்கேன். Spin wheel-அ spin பண்ணி result க்கு wait பண்ணி போஸ்ட் போடு!

அப்டியா? சரி ஓகே சித்து 

அதே போல இது உனக்கு மட்டும் அனுப்புல.. இப்போ ரக்சன், தேவ் கபூர், தியா, எல்லார்க்கும் அவங்க கிட்ட பேச போறேன். இதோட successfull launch முடிஞ்சதும் பார்ட்டி இருக்கு உனக்கு சிரமம் இருந்தால் செய்ய வேணாம்! 

ஹே என்ன இது! Definitely I will do!. என ஜாணவி கூறினாள். 

ஒகே thank you baby! Bye என சித் கூறினான். 

அதே போல மற்ற நபர்களிடம் சதீஸ விட்டு பேச வைத்தான். 

சித்து நீ சொன்ன மாதிரி எல்லார் கிட்டயும் பேசிட்டேன். அடுத்து என்ன பண்ணனும்! தாரா கிட்ட கூட சொல்லட்டுமா? 

சித் அவனுடைய லேப் டாப்பை திருப்பி காட்டினான். 

இது? என சதீஸ் கேட்க..

இது தாரா அக்கவுன்ட் ஆல்ரெடி spin wheel பண்ணிட்டேன். என சித் கூறினான். 

அந்த spin wheel அதுள என்ன இருக்கு? என சதீஸ் கேட்டான். 

இது லிட்டில் ஹார்ட் சப்பிளமெண்ட் ரிலேடட்…

அதுல என்ன இருக்கும்? 

சித் குட்டி புன்னகையுடன் ஒன்னும் இருக்காது. 

அப்புறம் ஏன் டா spin wheel கொண்டு வந்த? என சதீஸ் கேட்டான். 

எல்லாருக்கும் ஒரு கியூரியாசிட்டிய டெவலப் பண்ண தான்! என சொல்லி கொண்டே பாப்பராசிகள் பக்கம் இந்த லிட்டில் ஹார்ட் செய்தியை அனானிமஸ் எண்ணில் இருந்து தட்டி விட்டான். 

மணி 11.30 ஐ தொட்டது.  டேய் மாடு! தண்டம் என்ன தூங்கிட்டு இருக்க! 

சாரி சாரி டா! என சதீஸ் கண்ணை தேய்த்து கொண்டே எழுந்து அமர்ந்தான். 

அந்த வெப் சைட் ரெடியா? என சித் கேட்டான். 

ஹான் ரெடி காபிரைட் அப்புறம் டாக்குமெண்டு ரெடி உனக்கு சென்ட் பண்ணிட்டேன். இதோ website ரெடி..

ஹான் இதை எல்லா ஆக்டர்ககும் சென்ட் பண்ணி விடு! அண்ட் மோஸ்ட்லி எல்லாம் முடிஞ்சுது. என பெரு மூச்சை விட்டான். 

அப்போ நான் போகவா!. 

Damn இன்னும் ஒரு விசயம் இருக்கு!. என சித் கூறினான். 

என்ன டா? 

ஹான் எல்லா நியூஸ் பேப்பர்ஸ் அண்ட் மேகசீன்ஸ் எல்லாத்துக்கும் ஒரு ad இந்த லோகோ லிட்டில் ஹார்ட் இருக்கிற மாதிரி இப்போவே போன் பண்ணி இன்பாம் பண்ணு.  அப்புறம் நான் இந்த மென்ஸ் சப்ளிமென்ட்க்கு இன்னும் பிராண்ட் அம்பாசிடர் choose பண்ணனும்!. என சித் கூறினான். 

அது தான் நீயே இருக்கேன்னு சொன்ன? 

சித் சதீசை முறைத்தான். உடனே அவன் நொந்து கொண்டு டேய் என்ன டா நீங்களே தான் சொல்றீங்க அதை நான் சொன்னால் முறைச்சு பார்க்கிற? உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க..

அதை விடு இந்த FSSAI என்னாச்சு? என சித் கேட்டான். 

அது நாளைக்கு ரெடி ஆகிடும் லைசன்ஸ் அப்ளை பண்ணிட்டேன். இன்சூரன்ஸ் அண்ட் அதோட ரிசல்ட் எல்லாமே நாளைக்கு கிடைச்சிடும் என சதீஸ் கூறினான். 

எப்போ ஸ்டார்ட் பண்ண? என சித் கேட்க..

அது அபி மூலமா அப்ளை பண்ணேன். அவங்க ஒரு தடவை இன்ஃபெக்ஷன் வரேன்னு சொல்லி இருக்காங்க! என சதீஸ் கூறினான்.

வெறி குட்.. I think பாதி ஒர்க் முடிஞ்சது அப்படி தானே! என சித் கேட்டான். 

இல்ல dermatalogist கிட்ட பேசி ஒரு சில பெட்டர்ன் ஒர்க் இருக்கு. அப்புறம் ஸ்டாக் அதாவது ஃபர்ஸ்ட் profection ஒர்க் எவ்ளோன்னு நீ தான் சொல்லணும்…

ம்ம் சொல்றேன். முக்கியமா இந்த product ல plastics container and plastic things எதும் use பண்ண கூடாது. 

சதீஸ் கொஞ்சம் யோசனையுடன் அப்போ எப்டி பேக் பண்றது. 

Reusable sugar cane ல இருந்து வர பேப்பர் ல தான் ராப்பர்ஸ் இருக்கணும்.. கவர் கூட குவாலிட்டியா இருக்கணும் கிப்ட் பேக் மாதிரி ஐஸ் ஸ்டிக் use பண்ணுங்க. 

அப்போ எப்போ டா மார்கெட் பண்றது? இதுக்கு ரொம்ப செலவு ஆகுமே..

நமக்கு தரம் தான் முக்கியம் ஃபர்ஸ்ட் லிமிடெட் product தான் கொடுக்க போறோம் அதுக்கு அப்புறம் மீதி பார்த்துப்போம்! எனக்கு இதுல profit விட name தான் முக்கியம் என சித் கூறினான். 

சரி ஓகே இன்னும் ரெண்டு நாளில் லிமிடெட் எடிசன் ரெடி பண்ண சொல்றேன். எப்போ introduce பண்ண போற.. என சதீஸ் கேட்டான்.

காலேஜ் என்னைக்கு ரிஓபன்? 

இன்னும் மூணு நாள் இருக்கு! 

சரி ஓகே நெக்ஸ்ட் வீக் வச்சிபோம்! சரியா இருக்கும். என சித்தார்த் கூற..

எந்த இடத்தில் function நடக்க போகுது? என சதீஸ் கேட்டான். 

இதை கேட்டதும் சித்தார்த் தந்திர புன்னகை சிந்தி கொண்டே அதை நவீன் குமார் தான் சொல்லணும். நீ போ எல்லா வேலையும் முடிச்சுட்டு சொல்லு. என உடலை வளைத்து முறித்தவன். மிம் ஹான் நாளைக்கு oh f* இன்னிக்கு இந்த நாள்  எல்லார்க்கும் இனிய நாளாக அமையட்டும். என எழுந்தான். மணி பார்க்க 12.01 என இருந்தது. 

சதீஸ் அவனை பார்த்தான்.

என்ன அப்படி பார்க்கிற? என சித் கேட்க..

இல்ல எப்போ பாரு ஆபீஸ் வேலை பார்க்கிற? ஷூட்டிங் போய் அங்கே ஒர்க் பண்ற, பவர் புராஜக்ட், அண்ட் இப்போ இந்த சப்ளிமென்ட் ஒர்க் இருக்கு! நீ எப்போ டா பாப்பா கூட ஸ்பென்ட் பண்ணுவ! என் பக்கத்தில் மட்டும் பிரியா இருந்தால் நான் எல்லாம் ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டேன். ஆனால் நீ இப்படி இருக்க! என்ன டா போடா! பக்கத்தில் ச்சீஸ் வச்சுக்கிட்டு gheeக்கு அலையுற மாதிரி இருக்கு! பிஸ்னஸ் பிஸ்னஸ்ன்னு எதுக்கு டா ஓடுற?  என சதீஸ் கூறினான். 

நானா அவளோட பக்கத்தில் போக மாட்டிக்கிறென். அந்த கண்ணாடிகாரி தான் என்னை விட மாட்றா! அவளை கட்டம் கட்ட தான் இது நடக்குது! இதுல எப்படி இருந்தாலும் வெற்றி எனக்கு தான்! I’m a winner! என சொல்லி கொண்டவன். ஓ proverb சொல்ற அளவுக்கு வந்துட்ட! அதுவும் நீ என்னை பாத்து சொல்ற இருக்கட்டும் இதுக்கு எல்லாம் ஒரு நாள் பதிலடி இருக்கு! என சித் தூங்க சென்றான். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் கூடவே பரபரப்புடன் விடிந்தது. 

சித்தார்த் வழக்கம் போல எழுந்தான். அவனை அதிகமாக எழுப்பியது போன் அழைப்புகள் என்று சொல்லலாம். அவன் எந்த அழைப்புகளையும் எடுக்காமல் ஜிம் சென்று செக்யூரிட்டிக்கு அழைத்தான். 

பாஸ் என அவர் பதில் சொல்ல..

சித்தார்த் treadmill-ல வேகமாக நடந்தவன். லோக்கல் டீ கடையில் இருந்து இன்னிக்கு மார்னிங் வரும் எல்லா நியூஸ் பேப்பர்ஸ், ஆல் லாங்குவேஜ் முக்கியமா இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்ஸ் அண்ட் வீக் மேகசீன்ஸ் எல்லாம் வாங்கி என்னோட  ரூம்க்கு கொடுத்து விடுங்க..

ஓகே பாஸ் என போன் வைத்தார்கள். மணி 7.30 ஆனது. சித்தார்த் குளித்து முடித்து உடை அணிந்து  டிப் டாப்பாக தயாரானவன் டிரெஸ்ஸிங் டேபிள் முன் வர அனைத்து செய்தி தாள்கள் மற்றும் வார இதழ்கள் என அனைத்தும் AA1 எடுத்து வந்தார். 

அவர் அறை கதவை தட்டவும் அந்த சத்தத்தில் இதன்யா மெதுவாக கண்களை தேய்த்தாள். 

எல்லாமே இருக்கா? என சித் கேட்க..

ஹான் பாஸ் எல்லா நியூஸ் பேப்பரும் இருக்கு! எல்லா இடத்திலும் இது ஸ்பெசல்-ஆ இது இந்த லோகோ தான் எல்லா பேப்பரோட உள்ளேயும் இருக்கு! என கூறினார். 

மம்ம் நீங்க போலாம்! என கூறினான். 

அதன் பின் சித் அனைத்தும் எடுத்து வந்து டீப்பாயின் மீது பரப்பி வைத்தவன். அவனுடைய லேப் டாப் எடுத்து ஓபன் செய்து சில முக்கிய செய்தி channel அனைத்தும் ஒரு ரவுண்ட் விட்டான். 

லிட்டில் ஹார்ட்? லிட்டில் ஹார்ட்? What is little heart? என ஓடி கொண்டிருந்தது. ஜாணவி மற்றும் தேவ் கபூர், ரக்சன் போன்ற சினிமா பிரபலங்கள் அவர்களுடைய முக நூல் மற்றும் டிவிட்டரிலும் spin wheel செய்வதையும் அதில் அவர்கள் எதும் கிடைக்காமல் லக்கி டிரா spin வின்னர் யார் என்பதிலும் ஒவ்வொருவருடைய முக நூலிலும் மாறி மாறி லைக் செய்து கமெண்ட் செய்ய அதையும் டீவியில் ஓடி கொண்டிருந்தது. 

சித்தார்த் போனை எடுத்து பார்க்க நிறைய பிரபலங்களின் தவற வுடபட்ட அழைப்புகள் இருக்க..  அவன் உடனே ஜியாவுக்கு அழைத்து அனைத்து போன் கால்களுக்கும் பதில் அளித்து செய்தி அனுப்ப சொன்னான். 

அந்த நேரம் தாரா அழைக்க..

ம்ம் சொல்லு! 

அதென்ன லிட்டில் ஹார்ட்? என் கிட்ட சொல்லாம என்னோட அக்கவுன்ட் ல இருந்து போஸ்ட் போட்டு இருக்க? பட வேலை எப்டி போகுது! 

அதை நீ சதீஸ் கிட்ட கேளு! நெக்ஸ்ட் படம் பண்ண பிளான்ல கதை கேட்டுட்டு இருக்கேன். உன் கிட்ட நல்ல கண்டென்ட் இருந்தா சொல்லு! 

சரி! மேடம் என்ன பண்றாங்க? கல்யாண போட்டோ ரொம்ப ரொமான்டிக்கா இருந்தது. என தாரா சொல்ல சித்தார்த்தின் உதட்டில் புன்னகை..

டேய் பதில் சொல்லு! 

சரி ஷூட்டிங்க்கு டைம் ஆகுது கிலம்பனும்! அங்கே வா பார்க்கலாம். 

ரத்ன குமாரா? என தாரா கேட்க .

ஆமா என சித் கூறினான். 

சரி வரேன். என போனை வைத்தான். அவன் வைத்ததும் அந்த நேரம் நவ்யா அழைத்தாள். நிறைய செய்திகள் வரிசையாக வந்திருக்க..

இவள் எதுக்கு இத்தனை முறை மெஸேஜ் பண்றா? என உடனே அவளுக்கு அழைத்தான். 

ஹலோ என்ன விசயம்? 

சித்து! எல்லா இடத்திலும் அந்த லிட்டில் ஹார்ட் பரவுடுச்சு! நான் ஷேர் பண்ணல பா! 

இல்ல இல்ல அது என்னோட டீம் தான்! வேற எதுவும் இல்லையே! என கேட்டான். 

அது இன்னொரு விசயம்? 

என்ன? என சித் கேட்டான். 

இது வரை சித்தார்த்தின் பார்வை அவளின் மீது படவே இல்லை அதில் கடுப்பான இதன்யா என்ன? இன்னிக்கு ஓவரா விரைப்பா இருக்கான்? நியூஸ் பேப்பர் எல்லாம் படிக்கிறான். நிறைய போன் கால் வேற இருக்கு! என பார்த்தாள். அந்த நேரம் இயற்கை அழைப்பு வர நேராக ரெஸ்ட் ரூம் சென்று அனைத்து கடன்களையும் முடித்து விட்டு வாயில் பிரஷ் வைத்து கொண்டே வெளியே வந்தாள். 

சித்தார்த் பால் கணியில் நின்று நவ்யாவிடம் பேசி கொண்டிருந்தான். 

சொல்லு மா? 

அது வந்து சார் நான் Facebook அப்புறம் Twitter எல்லாத்திலயும் பார்த்தேன். அதுல ஜான்வி மேம், தியா, தாரா மேம், தேவ் ரக்சன், சார் எல்லாம் லிட்டில் heart-கு promotion கொடுக்குறாங்க! 

சரி அதுல உங்களுக்கு என்ன பிரச்னை? மிஸ் நவ்யா? ஏன் நீங்களும் promotion பண்ண நினைச்சா தாராளமா பண்ணலாம் எனக்கு hit வேணும் என்று கூறினான். 

அது ஓகே என்னோட சந்தேகம் அது இல்ல..

வேற என்ன மா! 

நவ்யா தயங்கி கொண்டே நீங்க என்னோட contract அ கேன்சல் பண்ண மாட்டீங்க தானே! அது தான் எனக்கு பயம்! 

Are you mad? எதுக்கு இப்படி கேட்கிற? என சித்தார்த் அவளிடம் கேட்டான். 

இல்ல ஏற்கனவே அந்த மேகா என் கிட்ட இருந்து ஹீரோயின் character வாங்கிட்டாங்க! இப்போ நீங்களே வந்து இந்த brand ambassador-கு contract போட்டீங்க அது தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ஒரு வேளை நீங்க! இதை வேற யார் கிட்டயும் கொடுத்திடுவீங்க அப்டின்னு எனக்கு தோணுச்சு! 

என்னை நீ அப்படி தான் புரிஞ்சு வச்சிருக்கியா? என எதார்த்தமாக தான் கேட்டான். 

நீங்க சொல்றது புரியல..

நீ என்னோட ஒர்கர்! காட் இட்! இது ரத்ன குமார் or வேற டைரக்டர் வேற ஸ்டார் புரோடுயூசர் இதுல இன்வால்வ இல்ல புரியுதா! இது என்னோட… என்னோட தனிப்பட்ட வேலை அதுல உனக்கு ஒரு part கொடுத்து இருக்கேன். இதுல நீ தான் brand ambassdor நீ கவலை படாத! நான் எதுக்கு first of all உன்னை புக் பண்ணிட்டு வேற ஒருத்தங்கள போடணும்! நீ இதை ஓவரா திங்க் பண்ற! எதுக்கு இதை போட்டு penatrate பண்ற free-யா விடு!  என சித் கூறினான். 

நவ்யா அமைதியாக இருக்க..

ஹலோ நான் சொல்றது கேட்குதா! புறியதா மா! நீ தான் என்னோட லிட்டில் ஹார்ட் சப்ளிமென்ட்டுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஓகே வா! 

ஹான் ஓகே சார்! 

என்ன உன்னோட வாய்ஸ் பிரிஸ்கா இல்லையே!. 

ஒகே ஒகே சித்து நான் தான்! இதை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். 

சரி மா! என கட் செய்ய போக..

ஹலோ ஹலோ பாஸ்! 

என்ன மா! எனக்கு டைம் ஆகுது! என சித்தார்த் கூறினான்.

அவளுக்கு என்ன பேசுவது என தெரிய வில்லை. உடனே நீங்க கிலன்பிட்டீகளா? 

ஹான் சரி வைக்கிறேன். எது கேட்பதா இருந்தாலும் நான் வந்ததும் பேசு இப்போ முக்கியமா வேலை இருக்கு! என போனை கட் செய்தான். 

ஹான் ஹலோ என அவன் சொல்லி கொண்டே அவளின் கையை பிடித்து இழுத்தான். 

யாரு அது? அவள் தான் இதன்யா! அவன் என்ன பேசுகிறான் என ஒட்டு கேட்க வந்து விட்டாள். 

அச்சோ இவன் கிட்ட இப்படி போய் மாட்டிகிட்டெனே! எப்டி சமாளிக்க என யோசித்து கொண்டே ஹே நான் கொடியில் இருக்க டவல எடுக்க வந்தேன் ஒழுங்கா கைய எடுங்க! இந்த seventh heaven, on cloud nine, love making இப்படி எல்லாம் பேசி என் கிட்ட advantage எடுக்க டிரை பண்ணீங்க இங்கே நடக்கிறதே வேற என அவள் பேசி கொண்டே செல்ல. 

சித்தார்த் அவளிடம் இருந்து விலகி நேராக சோபா பக்கம் போய் அமர்ந்தான். 

இதன்யா வெளியே சென்று எங்கே டா இங்கே கொடி இருக்கு! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் கிறுக்கி மாதிரி பொய் சொல்ற? இதுல கூட உனக்கு talent இல்ல டி! என நினைத்து கொண்டே ஹப்பா போயிட்டான். என நினைத்து கொண்டே உள்ளே சென்றாள். 

மக்கு டீச்சர் கொடியில் இருந்து டவல் எடுச்சாச்சா? என  கால் மேல் கால் போட்டு கொண்டே கேட்டான். 

அது அது வந்து என தயங்கி கொண்டே அவள் நிற்க..

சித்தார்த் காதை குடைந்து கொண்டே ஹே இங்கே வாடி! 

இதன்யா அதே இடத்தில் நிற்க.. 

வாடின்னு சொன்னேன்! இப்போ வரல என அவன் கொஞ்சம் அசைய இதன்யா பயந்து கொண்டே அருகில் வந்தாள். 

வா இங்கே வா! இங்கே வந்து சிட் பண்ணு!. என அவனுடைய மடியை காட்டினான். 

முடியாது! என அவள் அதே இடத்தில் நிற்க..

சித் ஒரே பிடியில் அவனுடைய மடியில் இருந்தாள். 

ஹே இதோ இங்கே பாரு! என அனைத்து செய்தி தாள்கள் மற்றும் flash news, music channel என அனைத்திலும் லிட்டில் ஹார்ட் லோகோ தான் இருந்தது. அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே பார்க்க…

சித் அவளின் காதுக்கு பக்கம் நல்லா கேட்டுக்கோ இதோ இந்த லிட்டில் ஹார்ட் official Market launch next வீக் வெட்னஸ் டே நடக்க போகுது! 

பிராண்ட் அம் என அவள் சொல்ல வர..

சித்தார்த் அவளின் இடையை  அழுத்தி பிடித்து நீங்க சொன்ன மாதிரி vitamin supplementகு அதாவது male prodect க்கு male அம்பாசிடர் நான் இல்ல.. வேற ஒருத்தரை தான் contract போடுவேன்.

இதன்யா அந்த செய்தி தாளை பார்த்து கொண்டிருக்க…

சித் உஷ்ண மூச்சை அவளின் மேல் விட்டவன். அதை officilay launch பண்ணிட்டு நீ இத்தனை நாள் பண்ண எல்லாத்துக்கும்.. என காதை கடித்தான். 

அந்த சின்ன சீண்டல் அவளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி விட. 

அவனுடைய மூச்சை அவளின் காதுக்குள் விட்டவன். உன்னை அது வரை எடுத்துக்க மாட்டேன். Officilay லிட்டில் ஹார்ட் launch பண்ணதும் தான் உன் கூட officialy சேர போறேன். இதை யாரு நினைச்சாலும் தடுக்க முடியாது.

இதன்யா அவன் பேச்சை உள் வாங்கி கொண்டிருக்க அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் உடலில் உள்ள பூனை முடிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்து. கூச கூனி குறுகி அவன் மேல் அமர்ந்து இருந்தாள். 

சித் அத்தோடு விட்டு விட வில்லை..இதுக்கு மேல நீ என்னை tempt பண்ணா கூட அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு மொத்தமா உன்னை அன்னிக்கு வேட்டையாட போறேன் டி! ஒன் வீக் முழுக்க முழுக்க ஷூட்டிங் போனால் கூட நைட் உன்னை என்ன பண்றேன் பாரு! இனி புத்தா! அவனோட தவத்தை கலைக்க போறேன். என அவளின் உதட்டை பிடித்து கவ்வி ஒரு வன் முத்தம் கொடுத்தான். 

இல்ல இல்ல கவ்வி பிடித்து கொடுக்க ஆரம்பித்தான். 

அவளின் மொத்த சக்தியும் அப்படியே குறைய ஒரு நிமிடம் பிரிந்தவன். இதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேருக்கும் நடந்தது வேற! இனி நான் நடத்த போறது வேற. என்னை பார்த்தாலே நீ மொத்தமா அப்படியே கோல்ட் மாதிரி glow ஆக போற அந்த அளவுக்கு உன்னை வச்சு பண்ண போறேன் டி! என கீழ் உதட்டை கடித்து இழுத்தவன். அவளின் கழுத்து குழியில் ஒரு மோக கடியை கொடுத்து மோக மூக்குடன் அவனுடைய மூக்கை வைத்து முட்டி மேல் உதட்டை கடித்து அவளை சுய நினைவுக்கு கொண்டு வந்தவன். அவள் தன்னிலைக்கு வரும் முன் அவளை அசையாமல் அமர வைத்து விட்டு எழுந்து அவள் முன் நின்றான். 

ஒரு சில நிமிடம் கழித்து சுய நினைவுக்கு வந்தவள். அவனை பார்க்க..

ரெடியா இரு! நிறைய சாப்பிடு! ஏன்னா நெக்ஸ்ட் வீக் நிறைய பசிக்கும்! நிறைய flesh எடுத்துப்பேன். என கண் அடித்தான். அவளின் முகத்தில் வெட்கம் தாண்டவம் ஆடியது. 

உள்ளங்கை வியர்க்க அவனை பார்க்க முடியாமல்  அப்படியே இருக்க சித்தார்த் அவளை பார்த்து திருப்தி பட்டு கொண்டு கிளம்பினான். 

இங்கே நவீன் குமார் என்ன பண்றான்? இதோ போலாம். 

எல்லா நியூஸ் பேப்பர் செய்திகள் அந்த லிட்டில் ஹார்ட் லோகோ.. பாப்ப ராசிகள் அனைவரும் அந்து திரை நட்சத்திரங்களிடம் அதை பற்றி கேட்பதும் அந்த web site வடிவமைப்பு என அனைத்தும் பார்க்க பார்க்க.. நவீன் குமாருக்கு சித்தார்த் மேல் சந்தேகம் கொஞ்சம் வர… கூடவே ஒரு வித பதட்டமும் வந்தது. 

ரம்யா! ரம்யா! மோகன்! என கோபத்துடன் அழைத்தான். 

தொடரும்..

இன்னிக்கு epi எப்டி இருந்தது கமெண்ட் பண்ணவே மாட்டிக்கிரீன்க? 

AA நாளைக்கு upload பண்ணிடுவேன். எனக்கு லிட்டில் ஹார்ட் story கு தான் comment வேணும் 

Comment pannunga ratings konjam like share pannunga

EPI 275

அந்த நாள் காலையில் அனைத்து இடங்களிலும் பரபரப்பாக இந்த லிட்டில் ஹார்ட் செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. சித்தார்த் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் நேராக ரத்னகுமார் வந்து “சித்து  உங்களுக்கு இதை பத்தி ஏதாவது தெரியுமா?  எல்லா இடத்திலும் இந்த நியூஸ் தான் ரொம்ப பாப்புலரா போயிட்டு இருக்கு! என்று  கேட்க..

 சித்தார்த்  எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான்.   அப்போ இது உங்களோடதா?  இந்த லிட்டில் ஹார்ட்! இது ரொம்ப பரிச்சயமா இருக்கே?  உங்க வாயிலிருந்து தான் இதை நான் அடிக்கடி கேட்டு இருக்கேன்! என ரத்னா சொல்ல

ம்ம் இது என்னோட தான்!  என்னோட பொண்டாட்டிக்காக, நான் புதுசா ரிலீஸ் பண்ற ஒரு சப்ளிமென்ட்!.. 

ரத்னகுமார் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க..

இங்கே ஆஷிஷ் தூங்கி  எழுந்து அமர்ந்தான். காலையிலேயே அவனுடைய வீட்டின் ஹாலில் பரபரப்பாக செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.  அந்த நேரம் அறைக்கு வந்த பணியாள் ஐயா பெரியய்யா சீனிவாசா வந்திருக்காங்க!..

என்ன?  தலையை சொரிந்து கொண்டு எழுந்தமர்ந்தான்.

ஐயா ஸ்ரீனிவாசா ஐயா வந்திருக்காங்க!  என்று பணியாள் மீண்டும் கூறவும் டாடி என்று எழுந்து வேகமாக வெளியே சென்றான்.

என்னடா பண்ணிட்டு இருக்க?  என்று ஸ்ரீனிவாச கவுடா ஆஷிசை கேட்டார்.

தூங்கிட்டு இருந்தேன் டாடி!..

சரி அதைவிடு நியூஸ் எல்லாம் பரபரப்பா ஒரு spin wheel laucky draw போயிட்டு இருக்கே அத பத்தி தெரியுமா?  என்று கேட்டார்.

என்ன சொல்றீங்க என்று அவன் உடனே செய்தித்தாள்கள் மற்றும் டிவி என அனைத்தையும் போட்டு பார்க்க..

 லிட்டில் ஹார்ட் மற்றும் ஆண்களுக்கான அந்த சப்ளிமெண்ட் என அதைப்பற்றி ஓடிக் கொண்டிருகொண்டிருந்தது. ஜாணவி, ரக்சன், தாரா, தியா, தேவ் கபூர் என அனைவரும் அவர்களுடைய twitter மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் உள்ள பதிவுகள் மற்றும் லைவ் டாக் ஷோக்கள் என அனைத்தையும் என்று ஆஷிஷ் பார்த்தான். 

இது என்னன்னு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல! ஆனா ஏதோ நியூ ப்ராடக்ட் லான்ச் பண்ண போறாங்க போல! யாருன்னு தெரிஞ்சா நான் கூட அவங்களோட டை அப்க்கு டிரை பண்ணுவேன். மார்க்கெட்ல லாஞ்ச் பண்றதுக்கு முன்னாடியே டாப்ல இருக்கு இது பெரிய ஹிட் அடிக்கும்னு எனக்கு தோணுது!  என்று சீனிவாசா சொல்லிக் கொண்டிருக்க..

இது எனக்கு தெரியும் இது  சித்தார்த்தோடது என்று சாதாரணமாக ஆஷிஷ் கூறினான்..

ஸ்ரீநிவாசா உடனே ஆஷிசை ஆச்சரியமாக பார்த்து என்ன சொல்ற?  என்று பார்த்துக்கொண்டே கேட்டார்.

ஆமா டாடி இது சித்தார்த்தோட ப்ராடக்ட் தான் எனக்கு தெரியும்!..

 ஸ்ரீனிவாசனுக்கு  சித்தார்த்தை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. “பரவாயில்லையே!  அந்தப் பையன் எவ்வளவு புத்திசாலியா இருக்கான் பாத்தியா? Economic மார்க்கெட்ல எவ்வளவு நுணுக்கமாக எல்லா statisticக்கும் அவனுக்கு தெரியுது!  என்னா மாதிரி ரிலீஸ் பண்ணி இருக்கான்?  என்னால கூட இந்த அளவுக்கு யோசிக்க முடியாது!  ஒடிசாவோட மொத்த பவர் ப்ராஜெக்ட்,  அது இல்லாம ஸ்கூல், காலேஜ் மெயின்டைன் தமிழ்நாடு கர்நாடகா ரெண்டு ஸ்டேட்ளையும் ரன் பண்ணிட்டு இருக்கான்.  இது இல்லாம பெரிய பெரிய ஹாஸ்பிடல்சோட  டை அப் வச்சிருக்கான்.  சந்திரமௌல ஸ்வர்ணம் ப்ரோடுக்ஷன்ஸ்ல நிறைய படம், அட்வர்டைஸ்மென்ட் , அதுக்கப்புறம் இன்னும் நிறைய வேலை பண்ணிட்டு இருக்கான். கூடவே நடிச்சிட்டு இருக்கான்.  இது கூட இப்போ இந்த புது பிஸ்னஸ்”என வார்த்தைக்கு வார்த்தை சித்தார்த்தை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இதை கேட்டதும் ஆஷிஷ் கவுடாவிற்கு கோபம் வர.. இப்போ இதை இந்த பெருமை பாடுவதற்கு தான் இங்க வந்தீங்களா?  என்று கடுகடுப்புடன் பேசினான்.

ஸ்ரீநிவாசா அவனை ஏளனமாக பார்த்துவிட்டு “நீ எதுக்குடா லாய்க்கு? படம் நடிக்கிற! அதையும் உருப்படியா நடிக்கிறியா?  எந்த ஹீரோயின் போட்டாலும் அந்த ஒரே ஹீரோயின் கூட மூணு படம் நாலு படம் பண்ற? அதுல கதை இருக்கோ இல்லையோ நீ இருக்க!   நீயும் அவனும் ஒரே டைம்லதானே படிச்சீங்க! ஒரே டைம்லதானே இண்டஸ்ட்ரிக்கு நடிக்க வந்தீங்க! ஏதோ நீ நடிக்க ஆரம்பிச்சுட்ட! சித்தார்த் அவனோட பேமிலி பாலிடிக்ஸ்னால அவன் ரீச் ஆகல! ஆனாலும்  அவனோட நடிப்பு ரொம்ப தனித்துவமா இருக்கும்.. ஆனா பாரு அத சைடா பண்ணிட்டு, எவ்வளவு வேலை பண்ணிட்டு இருக்கான்!  பாத்தியா?”  என்று சீனிவாசா கூறினார்.

ஆஷிஷ் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருக்க..

உடனே சீனிவாசா எதையோ யோசித்து விட்டு இதுக்கு பிராண்ட் அம்பாசிடர் பத்தி ஒரு நியூஸ் போயிட்டு இருக்கு officialy advertising பண்ணலன்னு கேள்விப்பட்டேனே என்று கூறினார்.

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஆசிஸ் ஆச்சரியமாக கேட்க..

ஸ்ரீநிவாசா அவனை கேவலமாக பார்த்துவிட்டு நீ எல்லாம் எதுக்குடா லாய்க்கு?  நான் எவ்வளவு பெரிய பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்!  அதை பத்தி கொஞ்சம் கவலைப்படுறியா?  ஜாலியா குடிக்கிறது, ஹோட்டல்ல போய் படுத்து தூங்குவது! நல்லா சாப்பிடுவது ஏதோ பேருக்கு ரெண்டு படம், என்று எளனமாக பேசிக் கொண்டிருக்க..

இதை கேட்க கேட்க ஆஷிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. 

டாடி கொஞ்சம் நிறுத்துங்க என்று கத்தினான். 

சீனிவாசா அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ நீ சித்தார்த் கூட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்ள இரு அப்பதான் அவன் கூட நம்ம நிறைய பிசினஸ் டை அப் பண்ணிக்க முடியும்! கொஞ்சம் முன்ன பின்ன தான் இருப்பான். அவன் அதிகமா யார் கூடவும் ஒட்ட மாட்டான்.  பாரு அந்த வீரசிம்மா பையன பார்த்தியா அபிஜித்  எனி டைம் சித்தார்த் கூட தான். சுத்திட்டு இருக்கான். அந்த சின்ன கொடுக்கு கூட அதே போல தான்! அதனால் தான்  இப்போ அந்த பவர் ப்ராஜெக்ட்ல ரெண்டு பேரும் ஈக்குவல் ஷேர்ல பண்றாங்க!  அவங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஸ் கூட,   நானும் இந்த மாதிரி ஏதாவது அவன் கூட டை அப் வச்சுக்கலாம்னு நினைக்கிறேன்.  அவனுக்கு இங்க மட்டும் வேல்யூ இல்ல,  ஃபாரின்ல கூட அவன் பெரிய வேல்யூல இருக்கான் தெரியுமா? எத்தனை ஹோட்டல் பிசினஸ் பண்ணிட்டு இருக்கான் தெரியுமா? ”என்று கூறினார்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டே ஆஷிஷ் அமைதியாக இருந்தான்.

சீனிவாசா ஒரு பெரு மூச்சை விட்டு சரி நீ இப்படித்தான் இருப்பேன்னா !யாரு என்ன பண்ண முடியும்! நான் தான் எதுவும் பண்ணனும். நான் கிளம்புறேன். நீ  எதுக்கும் லாய்க்கு இல்ல போ போய் செய்யர வேலையை ஒழுங்கா பண்ணு! என்று   அவர் கிளம்பி கிளம்பிவிட்டார். 

ஆஷிஷுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. 

அப்போ நம்ம கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்டமோ?  சித்தார்த் நம்ம கிட்ட நல்ல முறையாதான் நடந்துக்கிட்டான். அவனோட அப்படியே மெயின்டைன் பண்ணனும். அவனோட ப்ரொடக்ஷன்ஸ்ல ரெண்டு மூணு படம் பண்ணனும்! அப்போ தான்  அப்பாவுக்கு நம்ம மேல ஒரு நல்ல மதிப்பு வரும்! என்று நினைத்தான்.

உடனே அந்த செய்திகள் அனைத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தாராவின் பதிவு நினைவு வந்தது.  ஏனென்றால் ஜானவி, தியா, ரக்சன், தேவ் அவர்களுடன் அதிகமாக ஒட்ட மாட்டான். தாரா ஆஷிஷுக்கு ஒத்த வயதுடையவள்.  அதேபோல சின்ன வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தார்கள்.  அதனால் உடனடியாக அழைத்தான். 

 சொல்லு என்று பதில் வர..

என்னடி எல்லாரும் என்னை இளக்காரமா மிரட்டுறீங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்று ஆசிஸ் எடுத்ததும் கடுமையாக பேசினான்.

டேய் காலங் காத்தால உனக்கு என்னடா?  நான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டு இருக்கேன்!  என்ன பிரச்சனை? 

எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆமா இந்த லிட்டில் ஹார்ட் அப்டின்னு  ஒரு போஸ்ட் போட்டு இருக்கியே? அதை பத்தி கொஞ்சம் சொல்லு! அதோட பிராண்ட் அம்பாசிடர் யாரு? நீயா? Ad பத்தி என்று கேட்டான்.

அதை பத்தி எனக்கு தெரியாது!  அந்த போஸ்டையும் நான் போடல! என்று தாரா கூற..

என்னடி சொல்ற?  நீ போடலையா?  என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை டி சொல்ல..

டேய் இனிமே இந்த டீ சொல்ற வேலையை நிறுத்திக்கோ! 

 ஏண்டி எப்பவும் நான் உன்ன அப்படித்தானே கூப்பிடுவேன்.

தாரா கடுப்பாகி  நீ அப்படித்தான் கூப்பிடுவ!  ஆனா இனிமே கூப்பிட வேணாம்னு சொல்றன்! ஏன்னா எனக்கு ஆள் இருக்கு!

 சரி சரி நான் ஒன்னும் உன்னை எல்லாம் பார்க்கிற ஆள் இல்லை. நான்  அவ்ளோ சீப் கிடையாது. 

அப்ப என்னை சீப்புன்னு சொல்ல வரியா?  என்று தாரா கேட்க..

 சாரி சாரி நான் சும்மா சொன்னேன் தாரு குட்டி! சரி இப்போ அந்த போஸ்ட்ட பத்தி கொஞ்சம் சொல்லேன்! 

தாரா அமைதியாக இருக்க ஆசிஷ், ப்ளீஸ் என கெஞ்ச தாரா கோபமாக போனை வைத்தாள்.‌

என்ன இவ?  போன வச்சுட்டாலே?   இப்போ எப்படி இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கறது?  என்று நினைத்தவன்.  சதீஷ்க்கு அழைக்கலாம் என்று தோன்றியது!  ஐயோ அவனுக்கு கூப்டா!  பிரியா விஷயத்துல  ஏற்கனவே அவனுக்கும் நமக்கும் சண்டை..  பேசாம சித்தார்த்துக்கே போன் பண்ணி கேட்டுடலாமா?  என்று ஆஷிஷ் நினைத்த போன் செய்ய வந்தவன்.  அவன் கிட்ட  வேற நேத்து கார் வாங்கிட்டு வந்ததிலிருந்து என் மேல பயங்கர கோபத்தில் இருப்பானே!  கண்டிப்பா நமக்கு ஹெல்ப்பும் பண்ணமாட்டான்!  நம்ம கிட்ட பேசவும் மாட்டான்! எப்படியாவது இந்த ப்ராடக்ட்ல நம்மளும் ஒரு பார்ட் ஆகணும்!  என்று நினைத்தான்.

இப்பொழுது ஆஷிக்கு இருக்கும் ஒரே வழி தாரா மட்டும்தான்.  அதனால் வேகமாக குளிக்க சென்றவன்.  படபடவென்று பத்து நிமிடங்களில் கிளம்பி வெளியே வந்து தாராவை பார்க்கச் சென்றான். 

இங்கே இங்கே நவீன் குமார் என்ன பண்றான்? இதோ போலாம். 

எல்லா நியூஸ் பேப்பர் செய்திகள் அந்த லிட்டில் ஹார்ட் லோகோ.. பாப்ப ராசிகள் அனைவரும் அந்து திரை நட்சத்திரங்களிடம் அதை பற்றி கேட்பதும் அந்த web site வடிவமைப்பு என அனைத்தும் பார்க்க பார்க்க.. நவீன் குமாருக்கு சித்தார்த் மேல் சந்தேகம் கொஞ்சம் வர… கூடவே ஒரு வித பதட்டமும் வந்தது. 

ரம்யா! ரம்யா! மோகன்! என கோபத்துடன் அழைத்தான். 

அப்பொழுதுதான் ஆபீஸ் கிளம்பி வந்த ரம்யாவிற்கு நவீன் குமாரின் கடுமையான குரல் கேட்கவும்..

வேகமாக அவனுடைய அறையை நோக்கி ஓடி வந்தாள்.  என்னாச்சு?.

“இது என்ன?  எல்லா இடத்திலும் இந்த லிட்டில் ஹார்ட் அப்படின்னு, இந்த நியூஸ் எங்க பாத்தாலும் வருது?  நிறைய செலிப்ரட்டிஸ் பின்னாடியே இந்த பாப்பராசிகள், நியூஸ் ரீடர்ஸ் எல்லாரும் ஓடி இத பத்தி விசாரிக்கிறாங்களே? இதோட அப்டேட் என்னன்னு தெரியுமா?” என கடுமையான குரலில் நவீன் கேட்டான்.

லிட்டில் ஹார்ட் என்ற பெயரை கேட்டதும் ஆட்டோமேட்டிக்காக ரம்யாவின் மனதில் சித்தார்த் மற்றும் இதன்யா தான் தோன்றினார்கள். 

ஏனென்றால் சித்தார்த் தான் வார்த்தைக்கு வார்த்தை அவளை லிட்டில் ஹார்ட்! என்று அழைத்துக் கொண்டிருப்பான். 

இது இது வந்து சித்தார்த்  ப்ராடக்ட்ன்னு என்று நினைக்கிறேன்.  என அவள் உடனடியாக கூறினாள். 

அந்த நேரம் உள்ளே வந்த மோகன் பாஸ் இப்போதான் எனக்கு இன்பார்மர் கிட்ட இருந்து நியூஸ் வந்துச்சு!  இது சித் சார் ப்ராடக்ட் என்று கூறினான்.

இதை கேட்டதும் நவீன் அங்கிருந்த பொருட்களை வேகமாக தள்ளிவிட்டான்.

ரம்யா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க மோகன் அவளை மேம்  கொஞ்சம் தள்ளி வாங்க என்று அழைக்க..

ரம்யா அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க..

என்ன?  எப்படி இது நடந்தது?.

மோகன் அமைதியாக இருந்தான். ரம்யாவின் மனதில் இவனுக்கு என்ன ஆச்சு?  சித்தார்த் மேல இவ்வளவு வன்மத்துல இருக்கானே! ரொம்ப மோசமானவனா இருப்பானா?  ஆனா பிசினஸ்ல நல்லவிதமாதான போயிட்டு இருக்கான்!  இவனோட வேலைக்கு இவன் கரெக்டா தன செஞ்சுட்டு இருக்கான்.  ஏன் சித்தார்த்தை போட்டியாவே நினைக்கிறான்? என்ன பிரச்சனை? என்று அவளுக்கு ஒரே யோசனையாக இருந்தது. 

மோகன் அமைதியாக நவீனை பார்த்துக் கொண்டிருக்க..

அப்போ அவன் சவால் விட்ட மாதிரி என்று சொல்ல

ரம்யா நவீன் குமாரை பார்த்தாள்.

நீ வெளிய வெயிட் பண்ணு என்று கடுமையான குரலில் கூறினான்.

அதற்கு மேல் அங்கு நிற்காமல் ரம்யா வேகமாக வெளியே சென்றாள்.

மோகன் போகும் ரம்யாவை பார்த்துவிட்டு கதவை அடைத்து விட்டு பாஸ் இத இப்படியே விட்டுடுங்க!  இது நடக்காது அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுறது ரொம்ப தப்பு பாஸ்! என்று மோகன் கூறினான்.

எனக்கு தெரியும் என அருகில் வந்தவன் மோகன் கண்ணில் பேனா எடுத்து குத்த வந்தான்.

பதட்டத்துடன் மோகன் பார்க்க.. 

என்ன நடந்தாலும்  சரி எனக்கு இதன்யா வேணும்!  என் லக்கி சார்ம நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!  அது ஒரு பக்கம் போகட்டும்? இப்ப கூட நான் நினைச்சனா இத ஒன்னும் இல்லாம என்னால பண்ண முடியும்.  பண்ணுவேன்!! என்று நவீன் சவால் விட்டான். 

மோகன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. 

இது ஒரு நியூஸ் அவ்ளோ தான்! ஆனால் எப்டி இதை பண்ணான்?  எப்ப பாரு அந்த ஜியா ஓடிஸா ப்ராஜெக்ட்ல இருக்கா?  அந்த சதீஸ் அசிஸ்டன்ட் காலேஜ் எல்லாம் கவனிச்சுக்குறான்.  இந்த சித்தார்த் இப்போ  படம்  நடிக்க போறான்னு பார்த்தேனே!  அப்போ அவனுக்கு அசிஸ்டன்ட் யாரையாவது பாக்குறானா? இல்ல ஏற்கனவே இருக்காங்களா? என்று நவீன் கேட்க..

மோகன் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் வைத்த கண் வாங்காமல்… பார்த்தான்.

என்ன அப்படி பார்க்கிறாய் என்று கடுமையான குரல் 

மோகன் தன்னை சரி செய்து கொண்டே ஆமாம் பாஸ்! பர்சனல் அசிஸ்டன்ட்காக அவர் தேடிட்டு இருக்கிறதா, எனக்கு நியூஸ் வந்துச்சு! 

நவீன் உதட்டில் புன்னகை மின்னியது.  என்ன பாஸ்? சிரிக்கிரீன்க?

நான் இதை பார்த்திப்பென். நீ போ! 

 இதை கேட்டதும் மோகன் ஷாக் ஆகி பாஸ் நீங்க என்று சொல்ல வர..

நான் எதுவும் பண்ண மாட்டேன் இதன்யா தானா என்கிட்ட வருவா!  இதுல ஜெயிக்க போறது  நான் தான்!  உண்மையான கேம் என்னன்னு அந்த சித்தார்த்துக்கு தெரியல!  என்று நவீன் குமார் கூறினான்.

மோகன் ஒரு பெருமூச்சியை விட்டு ஓகே பாஸ் என்று வெளியே சென்றான்.

சித்தார்த் நேராக படப்பிடிப்புக்கு சென்றான். ஷூட்டிங் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க. மேகா அவளுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.  நவ்யா அவ்வப்பொழுது சித்தார்த்திடம் ஒரு சில கேள்விகளையும் லிட்டில் ஹார்ட் பற்றிய விஷயங்களையும் பேசினாள். அப்படியே உணவு இடைவேளை வந்தது. 

அனைவரும் உணவு இடைவேளையில் இருக்க..

 ரத்தினகுமார் வந்தார்.

என்னாச்சு ரத்னா என்ற சித்தார்த் புருவத்தை சுருக்கி கொண்டு கேட்க..

உங்களை பாக்குறதுக்கு தாரா வந்திருக்காங்க  இங்க கொஞ்சம் கிரௌடாக போகுதுன்னு எனக்கு தோணுது! அதனாலதான். 

அவ்ளோ தான ஒன்னும் பிரச்னை இல்ல.. என சித் சொல்ல..

 ரத்னா , அவங்க மட்டும் இல்ல அவங்க கூட ஆஷிஷ் சாரும் வந்திருக்காரு!

இதை கேட்டதும் சித்தார்த் கடுமையான குரலில் இது லஞ்ச் டைம் தான!  இந்த டைம்ல நான் பார்த்து பேசலாம் தான!  அதேபோல படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!  என்று  கூறினான்.

ரத்னா சிரித்துக்கொண்டேன் நீங்க  யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு  எனக்கு தெரியும் சரி நான் அவங்ககளை பார்க்கிறதுக்கு ஏற்பாடு பண்றேன. 

 நீங்க போங்க மத்த சீன்ஸ் ரெடி பண்ணுங்க என்று சித்தார்த் கேரவனுக்குள் சென்றான். 

அந்த நேரம் இங்கே ஆஷிஷ் தாராவின் கைகளை பிடித்துக் கொண்டு ப்ளீஸ் ப்ளீஸ் கெஞ்சி கேட்கிறேன்! ஹே தாரா அவன்கிட்ட எப்படியாவது என்னை பேச வை என்று கேட்டுக்கொண்ட பின்னாலே சென்றான். 

தாரா கடுப்புடன் ஏண்டா இப்படி டார்ச்சர் பண்ற!  நான் சிவனேனு என்னோட போக்குல என்னோட சூட்டிங் பண்ணிட்டு இருந்தேன்! தேவையில்லாம அங்க வந்து லஞ்சுக்கு கூட்டிட்டு போறேன்னு, சொல்லி அங்க இருந்து என்னை சித்தார்த் கிட்ட கூட்டிட்டு வந்திருக்க.  இப்படி வெளியே சுத்துனாவே சித்தார்த் குரு கிட்ட சொல்லிடுவான்!  என்று  கவலையுடன் சொல்லிக் கொண்டிருக்க 

என்ன கண்டபடி பேசுவானா?  அப்ப நீ லவ் பண்றது அவனதானா?  என்று ஆஷிஷ் கேட்டான். 

வாய கழுவு நாயே நான் அவனை லவ் லவ் பண்ணல!..

அப்போ இப்போவே  நீ யாரை லவ் பண்ற சரி இதை நான் இப்பவே எல்லாத்துகிட்டையும் பரப்புறேன் என்று ஆஷிஷ் கூறினான். 

பரப்பி தான் பாரேன் நான் சித் கிட்ட போய் சொல்றேன். 

அப்போ சித்தார்த் உனக்கு சப்போர்ட்டா? 

ஆமாண்டா இப்ப என்ன பண்ண சொல்ற?  எதுக்குடா என் பின்னாடி வர..என்று தாரா கேட்க..

ப்ளீஸ் தாரா பேபி ப்ளீஸ் அவன்கிட்ட எப்படியாவது என்னை பேச வை ஒரே ஒரு தடவை ப்ளீஸ் என்று கேட்டான்.

அது அங்க போனா தான் தெரியும் சித்தார்த் பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாது. அவன் ரொம்ப கோபக்காரன் என்று சொல்லிக்கொண்டு இருவரும் சென்றார்கள்.

அங்கிருக்கும் சித்தார்த்தின்  பாதுகாவலர்கள் தாராவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு ஆஷிசை கேட் போட்டார்கள். 

நான் யாருன்னு தெரியும்ல என்ற ஆஷிஷ் அவர்களைப் பார்க்க..

உடனே அந்த பாதுகாவலர்கள் பாஸ் தாரா மேடத்தை  மட்டும்தான் உள்ள அனுப்ப சொல்லி இருக்காங்க! நீங்க யாரா இருந்தா எங்களுக்கு என்ன?  நாங்க சித்தார்த் சாரோட டீம் அவ்ளோதான்! என்று அப்படியே நின்றார்கள்.

இதை கேட்டு தாரா சிரிக்க ஆரம்பித்தாள். 

ஏய் சிரிக்காதடி ப்ளீஸ் அவன்கிட்ட போய் பேசி சமாதானம் பண்ணி, என்கிட்ட ஒரே ஒரு தடவை மட்டும் பேச சொல்லு! அவன் என்ன கேட்டாலும் நான் தரேன்! ப்ளீஸ் என்று கூறினான்.

 போடா என்று உள்ளே சென்றாள். 

எதுக்கு அந்த நாய் உன் கூட வந்திருக்கான்?  என்று எடுத்ததும் கடுமையான குரலில்  சித் தாராவை கேட்டான். 

 அவள் சிரித்துக் கொண்டே கங்கிராட்ஸ் டா நீ பெரிய பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்க? இரக்க எல்லா இடத்திலும் உன்ன பத்தி தான் பேச்சு! ஆமா உன் பொண்டாட்டி இதுக்கு என்ன சொன்னா?  என்று கேட்க..

அதைவிடு  தாரா இது சக்ஸஸா போகணும் அதனாலதான் இதை ரொம்ப டெடிகேட்டோட பண்ணிட்டு இருக்கேன்.  ஆமா இப்போ எதுக்கு அவனை கூட்டிட்டு வந்த?  நீ இந்த டைம்ல ஷூட்டிங்கில் தான இருப்ப? இங்க எதுக்கு வந்த? என்று சித்தார்த் கேட்க..

தாரா சிரித்துக்கொண்டே இதுக்கெல்லாம் காரணம் அந்த ஆஷிஸ் தான். அவன் தான் என்னை டார்ச்சர் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தான்

 சித்தார்த் அவளை பார்த்து என்னவாம் அவனுக்கு?  என்று விரைப்புடன் கேட்டான்.

தாரா அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே உனக்கும் அவனுக்கும் சண்டையா?  என்கிட்ட கால்ல விழுகாத குறையா கெஞ்சுறாண்டா! அப்படி என்ன பிரச்சனை? என்று தாரா கேட்க..

சித்தார்த் அப்படியே அமைதியாக இருந்தான்.

தாரா சிரித்துக்கொண்டே டேய் அவகிட்ட அவன்கிட்ட பேசுடா! 

 அவன்கிட்ட என்னால பேச முடியாது. நீ எதுக்கு வந்த? அதை சொல்லு என்று கேட்டான். 

அதுவா நான் சும்மா உன்ன பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்.  என்ன பிரச்சனை உனக்கு ஆசிஸுக்கும்? 

சித்தார்த் மனதில் இவகிட்ட இந்த கார் மேட்டர் சொன்னா! இவளும் சேத்து நம்மள கலாய்ப்பா, அதனால நாம இதை சொல்லக்கூடாது.  என்று நினைத்தவன் ஒன்னும் இல்ல என்று மழுப்பினான்.

தாரா அவனை உருத்து பார்க்க..

என்ன அப்படி பார்க்கிற?  அப்புறம் உன்னோட ஆளு எப்படி இருக்கான்?  என்ன உன்ன கல்யாணம் பண்ணிக்க போரான?  இல்ல அந்த ஸ்ரீதேவிய அப்படி இல்லன்னா நித்யா தேவி கல்யாணம் பண்ணிக்குவானா?  என்று சித்தார்த் கேட்டான் .

தாரா அவனை ஷாக்காக பார்த்து அவ பேரு ஸ்ரீதேவி இல்ல ஸ்ரீமதி என்று கூறினாள்.

ஏதோ ஒன்னுடி வார்த்தைக்கு வார்த்தை அவனை அவளுங்களை பத்தி தானே பேசிட்டு இருக்கான்.  எதுக்குடி அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க?  அவன் கிட்ட என்னடி இருக்கு?  என்று சித்தார்த் மீண்டும் உதயனை பற்றி கேட்டான்.

தாரா அவனைப் பார்த்து இதன்யா கிட்ட என்ன இருக்குன்னு நீ அவள் பின்னாடி சுத்திட்டு இருக்க?  என்று வாரினாள்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சித்தார்த் அமைதியாக இருக்க..

அப்ப மூடிட்டு இருடா என்று தாரா கூற..

நீ ஓவரா பேசிட்டு இருக்க உனக்கு டைம் முடிஞ்சிடுச்சு! கிளம்பு என்று கூறினான்..

என்ன போக சொல்ற?  ந நான் சாப்பிட்டேனா  இல்லையான்னு கேட்டியா? 

 ஏன் நீ சாப்பிடலையா?. அப்புறம் சமைக்கவெல்லாம் கத்துக்கிறியாமா என்று சித்தார்த் சிரித்துக்கொண்டே கேட்க

ஆமா அவருக்கு நான் தானே சமைச்சு போடணும்!  என்று கூறினாள்.

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு குரு பிரகாஷ் கிட்ட சொல்லி விடலாமா? 

தாரா அதிர்ச்சியுடன்  தயவுசெய்து அவன்கிட்ட மட்டும் சொல்லாத! அவரை ஏதாவது பண்ணிடுவான்! ஏற்கனவே நான் அவர் கூட பழக பழக தான் எனக்கு எல்லா விஷயமும் தெரிய வந்தது. அவங்க குடும்பத்தோட பிரச்சனைக்கு் முழு காரணமே குரு அப்புறம்  அவங்க அண்ணாவும் தான்!  இது மட்டும் உதயனுக்கு தெரிஞ்சா என்கிட்ட பேசவே மாட்டார்!  

அவனுக்கு நீ அதிகம் டி அவன் ஒர்த்தே இல்ல என்று சித்தார்த் கூறிட..

இன்னொரு தடவை ஒரு வார்த்தை அவர பத்தி பேசாத! எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் காரணமெல்லாம் தெரியாது! அவர பத்தி நீ பேசினால்  இதன்யாவ பேசுறதுக்கு சமம் என்று கூற..

சித்தார்த் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வெளியே வர..

அங்கே ஆஷிஷ் டியூட்?. மச்சான் என்று கத்தினான்.

 சித்தார்த் கடுப்புடன் ஒழுங்கா இங்கிருந்து ஓடிப் போயிடு!  இப்போ எதுக்கு பல்ல காட்டிட்டு இங்க வந்து நிற்கிற?  மாடு என்று திட்ட ஆரம்பித்தான்.

இதை கேட்டதும் பாதுகாவலர்கள் அனைவரும் சிரிக்க..

தாரா அவனை ஆச்சரியமாக பார்த்து ஆமா இதெல்லாம் எங்கே கத்துக்கிட்ட?  புது வார்த்தையா இருக்கே? டேய்  இது அந்த இதன்யா கிட்ட தானே கத்துக்கிட்ட!  என்று சிரித்தாள்.

சித்தார்த் மனதில் அச்சச்சோ! ஐயோ! ஓ காட் இந்த அச்சச்சோவும் அய்யய்யோவும் அவகிட்ட இருந்து எனக்கு ஒட்டிக்கிச்சு! இனிமே என்ன பண்றது? லிப்ஸில் முத்தம் கொடுக்கக் கூடாது. என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

டேய் என்னடா யோசிக்கிற என்று தாரா கேட்க..

ஒன்னும் இல்ல எதுக்குடா இங்க வந்த?  என்ற சித்தார்த்தின் பார்வை ஆஷிசியின் மீது இருந்தது.

அது வந்து என்று ஆசிஸ் தயங்கிட..

ஒழுங்கா ஓடிப் போயிடு. இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனிமே உன்னோட  படத்தை எதுவுமே நான் எடுக்க மாட்டேன்.  எந்த இன்டர்வியூக்கும் உன்கூட வரமாட்டேன். என்று கூறினான்.

எதுக்குடா இப்படி எல்லாம் பேசுற மச்சான்!  என்ற ஆசிஸ் பேச வர.. 

என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தின அவ கூட சேர்ந்துக்கிட்டு நீ ஓவரா ஆடிட்டு இருக்கியா என்று சித்தார்த் கூறினான்.

இல்ல மச்சான்!  அப்படி இல்ல மச்சான் நான் சொல்றத புரிஞ்சுக்கடா! என்று ஆஷிஷ் கேட்க..

போடா அவ்வளவுதான் இனி என்று சித்தார்த் மீண்டும் உள்ளே சென்றான். 

ஆஷிஷ் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க தாரா  அருகில் வந்தால் என்னதான்டா பிரச்சனை?  சொல்லுங்களேன் டா?  அவனும் சொல்ல மாட்டேங்குறான்? நீயும் சொல்ல மாட்டேன்ற? என்று சொல்ல..

அது ரொம்ப சீப்பான பிரச்சனை டி என்று ஆஷிஷ் கூறினான்.

அதுதான் என்னன்னு சொல்லி தொலை! என்று தாரா கேட்க..

அந்த கார் மட்டர் மற்றும் காப்பு மேட்டர் என அனைத்தையும் ஆசிஷ் கூறினான்.

இதை கேட்டதும் தாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

என்ன சொல்ற இதுதான் பிரச்சனையா?  இந்த சத்தியஜித் இப்படியெல்லாம் பண்றானா? ச்சீ அவன் இப்படி இருக்கானே? என்று அவள் முகம் ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு கூறினாள்.

ஆமாண்டி இந்த சித்தார்த் அதுக்கு மேல பண்றான் தெரியுமா? என்னோட ஃபேவரைட் காரை தூக்கிட்டு போயிட்டான்.  அதை வாங்குறதுக்கு போனா என்னென்ன பேசிரான் தெரியுமா?  என்று வருத்தமான குரலில் ஆசிஸ் கூறினான்.

சரி ஓகே விடு இதை எப்படி சரி பண்ணலாம் என்று யோசி என்று சொல்ல 

எங்க அப்பா சித்தார்த்த தலையில தூக்கி வெச்சிட்டு ஆடாத குறை தான்.  எனி டைம் சித்தார்த் புராணம் தான் பாடிட்டு இருப்பாரு!  இப்போ இவன் இந்த லிட்டில் ஹார்ட் ப்ராடக்ட் விட்டதும், அதை பற்றியே தான் பேசி ! அதைவிட என் படத்தை எல்லாம் கேவல கேவலமா கழுவி ஊத்துறாரு டி! என ஆஷிஷ் சொல்ல..

இதைக்கேட்டு தாரா சிரித்து கொண்டே சரி சரி இதுக்கு ஏதாவது பண்ணலாம்!  நீ கவலைப்படாத என்று இருவரும் கிளம்பினார்கள். 

நீ வரலையா என்று தாரா கேட்க..

நான் அவனை சமாதானப்படுத்திட்டு தான் வருவேன். 

நீ போ என்று ஆஷிஷ் சித்தார்த்தின் பின்னால் இரண்டு நாட்கள் அலைந்தான். 

சித்தார்த்தின் கடைக்கண் பார்வை கூட அவன் மேல் தீண்டவில்லை. இவனை சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு?! ஐயோ! சாமி! இதன்யாவுக்கு கோயில் கட்டி கும்பிடணும்!;என்று நினைத்தான்.

சித்து நான் உன் பின்னாடி ரெண்டு நாளா சுத்திட்டு இருக்கேன் டா. ஏதாவது பதில் சொல்லேன்.

 எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு! நீ நினைக்கிற மாதிரியான பையன்? நான் இல்ல நீ பேசாம ஒரு பொண்ணு பின்னாடி சுத்து! என்று சித்தார்த் கூறினான்.

இதை கேட்டதும் பாதுகாவலர்கள் அனைவரும் உதட்டை கடித்து சிரிக்க..

ஆஷிஷ்க்கு மிகவும் அவமானமாக போனது!; உன்னை என்ன பண்றேன் பாருடா? நீ மட்டும் என்கிட்ட பேசல? நான் உன்ன விடவே மாட்டேன்! என்று அவனுடைய காரில் சென்று அமர்ந்து கொண்டான். 

இது இப்படியே இன்னும்  ஒரு நாள்  தொடர்ந்து கொண்டிருக்க..

ஆஷிஷ் சித்தார்த் – ஆஷிஸ் பேசும் நாளும் வந்தது. 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga

AA uploade பண்ணியாச்சு.. 

EPI 276

“நீ தான சொன்ன பிராண்டா அம்பாசிடர் யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் உன்னோட  பக்கத்துல வரணும்னு,  ஒரு வார்த்தை சொன்ன தானே!  இப்போ நான் உன் பக்கத்துல வரலாம் தான!” என்று கேட்டான். 

அவள் எதுவும் பேசாமல் கண்களை இறுக்கி மூடியவள். இப் இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே! நானே வாய கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டென். இப்போ என்ன சொல்றது? என யோசித்து கொண்டிருக்க..

அவளின் அருகில் நெருங்கி அந்த உருவம் அமர்ந்தது. முருகா! என்று வெடுக்கென மூச்சு வாங்கி அருகில் உள்ளவனை பார்க்க அது சித்தார்த் தான் அவளை பார்த்து ஒற்றை புருவம் தூக்கியவன். என்ன? என்னாச்சு? என கேட்டான். 

அத்! அத்து! சா சாரி அது ஒன்னும் இல்ல! என எழுந்து நின்றாள். 

சித்தார்த்தா அவளின் கையைப் பிடித்து இழுக்க இதன்யா சுற்றிலும் பார்த்துக் கொண்டே “என்ன பண்றீங்க எதுக்கு என் கையை புடிச்சு இழுக்குறிங்க! எல்லாரும் பாக்குறாங்க! கிச்சன்ல மதிமா இருக்காங்க! இங்க உங்களுடைய செக்யூரிட்டி கார்ட்ஸ் எல்லாம் இருக்காங்க! ரோஷினி வீட்லதான் இருக்காங்க!” என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே சென்றாள். 

சித் பார்த்து சிரித்துக் கொண்டே “வீடுன்னா எல்லாரும் இருக்கத்தான் செய்வாங்க! அதுக்குன்னு இத்தனை நாள் அவங்க என்ன வெளியிலயா இருந்தாங்க! வீட்ல தான இருந்தாங்க! சில்லி ஆன்சர் பண்ணிட்டு இருக்காத! இப்போ உனக்கு என்ன ஆச்சு?  முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு!”என்று கேட்டான். 

ஒன்னும் இல்ல!  என்று அவள் தயங்கிக் கொண்டே நிற்க..

சரி நீ சொல்றதும் கரெக்ட் தான்! கிச்சன்ல மதிமா இருக்காங்க! நம்மள சுத்தி நிறைய செக்யூரிட்டி கார்ட்ஸ் இருக்காங்க! கூடவே ரோஷினி வீட்டிலேயே இருக்கா! இப்போ என்ன பண்ணலாம்? என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கேட்டான்.

முருகா! முருகா! முருகா! இவரு என்ன பண்றாரு?  ஐயோ ஒரு மாதிரி பாக்குறாரே! எனக்கு ஏதேதோ பண்ணுதே!! எனக்கு கூச்சமா இருக்கு!  என்று இதன்யா வெடவெடத்த கோழி போல அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். 

சித்தார்த் உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து “ சரி வா டாக்குமெண்டை எடுத்துக்க இத லேமினேஷன்! பண்ணி நம்ம பெட்ரூம்ல, அதுவும் உன்னோட கண்ணுக்கு தெரியிற மாதிரி மாட்டணும்! என்று கையை பிடித்து இழுத்தான்.

அது வந்து நானு என்று அவள்  தயங்க..

வா! வாட்ஸ் கோயிங் ஆன்! என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி பாக்குற?  என்று அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான். 

இதன்யா அவனின் இலுப்புக்கு பின்னால் நடந்தாள். அவளுடைய மனதில் போச்சு! இன்னைக்கு நல்லா மாட்டிக்கிட்டோம்! அடைமழை வெளுத்து வாங்க போகுது! என்னை கசக்கி பிழிய போறாரு! என்று நினைத்துக் கொண்டே எதுவும் பேசாமல் அவர்களின் ரூமுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சித்தார்த் கதவை லாக் செய்துவிட்டு டாக்குமெண்டை எடுத்து அருகில் உள்ள மேஜையில் வைத்தவன். ஹான் இன்னிருதடவை  நல்லா பாத்துக்கோ!  ஒரு தடவை படிச்சிக்கிறியா?  பண்றதுக்கு முன்னாடி! என்று கேட்டான்.

என்ன பண்ண? என்.. ச்ச.. த.. அது அத்.. அப்த்..  அச்சோ முருகா முருகா என அவள் கண்டைதை சொல்லி ஒரு வழியாக ஒரு flow பிடித்தவள். இப் இப்போ என்ன பண்ணப் போறோம்! என்று கேட்டாள்.

என்னடி தெரியாத மாதிரி கேக்குற? என்று அவளின் அருகில் நெருங்கினான்.

சித்தார்த்த கோட்டை கழட்டி மேஜையின் மீது தூக்கிப் போட்டவன். அவளின் கன்னத்தை பிடித்தான்.  அவள் முட்டைக் கண்களை விரித்து அவனைப் பார்த்து  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கைகளை பிசைந்து கொண்டே அவனைப் பார்த்தாள்.

சித்தார்த் அவளை மெதுவாக படுக்கையில் தள்ளி விட்டவன். அவள் மேல் விழுந்தான். 

சித்தார்த் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

என்ன அப்படி பாக்குறீங்க?  என்று அவளின் குரலில் ஒரு சிறு நடுக்கம் தெரிந்தது. 

சித்தார்த் பெருமூஜை அவள் மேல் விட..  இதன்யா விடுகென கண்களை மூடிக்கொண்டாள். சித் அருகில் வந்து அவளின் முகத்தை பார்த்தவன்.  ஏன் நான் உன்ன பாக்க கூடாதா? என்று கேட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக கண்களை மூடி கருவிழிகளை உருட்டிக் கொண்டிருக்க.. 

சித்  அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை எதுவும் செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து மெதுவாக முழித்து பார்த்தாள்.

சித்தார்த் மேலே இருக்கும் சீலிங்கை பார்த்து படுத்திருந்தான்.

இதன்யா ஒரு பெருமூச்சியை விட்டு “நீங்க நீங்க என்னை எதுவும் செய்யலையா?” என்று கேட்டாள்.

ஏன் செய்யனுமா என்று சித்தார்த் கேட்டான். 

இல்ல அது வந்து! என அமைதி ஆகினாள். 

இருவரும் அப்படியே இருந்தார்கள். ஒரு சில நொடியில் இதன்யாவுக்கு பயம் தோன்றியது. அச்சச்சோ ஒரு வேளை! அந்த சண்டை! அதாவது என்னை கட்டாய படுத்தி என் கூட அவர் இருந்ததுக்கு கேவலமா பேசினேனே! ஒரு வேளை இந்த மனுசன் அதை நினைச்சுக்கிட்டு இப்படி இருக்காரா! அய்யோ என நினைத்தவள். வேகமாக சித்தார்த் பக்கம் திரும்பி.. புத்தா! என அழைக்க..

ம்ம் என்றான்! 

என்னாச்சு! என்னை எதுவும் பண்ணலயா!

சித்தார்த் அவளை பார்த்து முறைத்தான். அதில் தலையை சொரிந்தவள். அது அது வந்து சரி விடுங்க புத்தா! நான் முத்தம் கொடுக்கிறேன். இப்போ பண்ணலாம்! என அவனுடைய இதழை நெருங்க சித்தார்த் அவளின் முகத்தை புருவத்தை உயர்த்தி கொண்டு பார்த்தான். 

என்ன டி பண்ற? என அவளின் கண்களை பார்க்க.. 

அவளால் அடுத்து முன்னேற்ற முடிய வில்லை. 

இப்படி இப்படி பார்க்காதீங்க! என சொன்னவள் அவளின் கண்களை கை கொண்டு மூடி உதட்டை பொருத்தி கொண்டாள். 

அவன் அப்படியே மண் போல இருக்க.. என்ன கல்லு மாதிரி இருக்கான் இந்த புத்தா! அய்யோ அப்போ என்ன நினைச்சுட்டு இருக்கான். என அவனை பயத்துடன் முழித்து பார்த்தாள். 

சித் உஷ்ன மூச்சுடன் அவளை பார்த்தான். என்ன ஆச்சு? 

உனக்கு என்ன ஆச்சு? என அவளை பார்த்தான். 

இல்ல எனக்கு ஒன்னும் இல்லையே! என இதன்யா சொல்ல..  ஒரு கழித்து அவளை பார்த்தவாறு என்னை பார்த்ததும் அப்படியே பம்பிட்டு நடுங்கி தானே பக்கத்தில் வந்த! ஆனால் இப்போ அவ்ளோ தோனுதா! என இரு புருவம் தூக்கினான். 

அது வந்து! எனக்கு பயம் வந்திடுச்சு! அதான் முத்தம் கொடுத்தேன். 

என்ன பயம்! என அவளின் கூந்தலில் உள்ள வாசத்தை இழுத்தான். 

நீங்க மறுபடியும் முறங்க மரம் ஏறி உட்கார்ந்து கிட்டது போல தோணுச்சு!!

என்ன சொல்ற? எனக்கு புரியல தெளிவா சொல்லு! 

இதன்யா அவனுடைய கை வலைவுக்குள் வந்தவள். அவன் கழுத்து செயினை பிடித்து கொண்டே “அது நீங்க மறுபடியும் என்னை தொட மாட்டேன். என் பக்கத்தில் வர மாட்டேன்! இது வேணாம் அப்டின்னு அந்த மூணு மாசத்துக்கு முன்னாடி நடந்த விசயத்தை நியாபாக வச்சிட்டு பேசுவீங்களோ அப்டின்னு நினைச்சு தான் எனக்கு பயம்!”

சித் அவளின் பயத்தை எண்ணி சிரிப்பு கூடவே எதோ ஒரு திருப்தி தான் பக்கத்தில் வரவில்லை என்றால் பயம் பதட்டம் கொண்டு பக்கத்தில் வருகிறாள். அந்த அளவுக்கு அவன் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டான். சரி அதனால் தான் வந்து முத்தம் கொடுத்தயா! என அவளின் கண்ணை பார்த்தான். 

ம்ம் ஆமா!. 

அப்போ நான் எதுவும் பண்ணி இருந்தால் என்ன செய்திருப்ப? 

எனக்கு ஓகே தான்!. என்று அவள் கூறினாள். 

அப்போ இன்னிக்கு கூட நீ ரெடியா இருக்கியா? என அவளின் மூக்குடன் மூக்கு வைத்து உரசினான். 

இன்னிக்கு அது இன்னிக்கி வந்து நான் ரெடி இல்ல! 

ஏன்? அப்புறம் எதுக்கு கிஸ் பண்ண? என சித் கேட்டான். 

கிஸ் வந்து பயத்தில் கொடுத்தேன். நீங்க என்னை விட்டு தள்ளி போனால் என்னால தாங்க முடியாது. என கூறினாள். 

சித் அவளின் இதழில் ஒற்றி எடுத்தவன். நேராக படுத்து கொண்டே அவளின் தலையை வருடி விட்டான். 

என்ன? என்னாச்சு எதுவும் பேசுங்க? 

மேலே டெராஸ் போலாமா! 

போலாமே!. என இதன்யா கூறினாள். 

இருவரும் ஒட்டி கொண்டே மேலே சென்றார்கள். 

AA1 க்கு போன் செய்தான். நட்சத்திரம் மற்றும் நிலா என மொத்த இரவு வானமும் அழகாக தெரிய.. 

மெத்தையை போட்டு அதை சுற்றி கொசுவலை நிற்க வைத்து அது இல்லாமல் ஒரு காத்தாடி என வானத்தை பார்த்தவாறு இருவரும் அதற்குள் படுத்து கொண்டார்கள். 

இன்னிக்கு என்ன ஆச்சு? நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க! என இதன்யா கேட்க

சும்மா! என்றான். 

இல்ல எதோ இருக்கு ஒழுங்கா சொல்லுங்க! என அவள் மீண்டும் கேட்டாள். 

நான் இதுல இந்த புராஜக்ட்ல வின் பண்ணுவேனா? என சித்தார்த் கேட்டான். 

“என்ன கேள்வி இது! நீங்க எவ்ளோ innovative தெரியுமா? உங்களுக்கு இதுல சந்தேகம் இருக்கா? நீங்க உங்களோட புராஜக்ட் மார்க்கெட்டுக்கு கொண்டு வர போறீங்க! இதுல ஜெயிப்பது தோற்ப்பது பற்றி என்ன இருக்கு!” என இதன்யா கேட்க 

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். 

நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க! உங்களை தான்! 

சித்தார்த் வானத்தை பார்த்து கொண்டே அவளின் கையை கோர்த்து பிடித்தான். 

என்னாச்சு புத்தா! இது நல்லாவே இல்ல! நீங்க வேற யாரோ போல இருக்கீங்க! 

சித் அவளின் முகத்தில் மென் முத்தம் கொடுத்து விட்டு மேகா உன் கிட்ட என்ன சொன்னா? 

அவள் பெயரை கேட்டதும் இதன்யாவின் முகம் மாறியது. 

கேட்டதுக்கு பதில்! 

அதை நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்? என இதன்யா சொல்ல.. 

சித்தார்த் இரவு வானத்தை பார்த்து கொண்டே அப்போ நானும் உன் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். 

ஹே புத்தா! என அவள் எழுந்து அமர்ந்தாள். 

சித் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு நீ ஏன் அவள் உன் கிட்ட பெட்டு கட்டின விசயத்தை என் கிட்ட சொல்லல..

மேகா உங்க கிட்ட வந்து சொன்னாங்களா? என அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

இல்ல நான் find பண்ணேன்..

இதன்யா ஒரு  பெரு மூச்சை விட்டு அது வீரத்துக்கு அழகு இல்லன்னு தோணுச்சு! நான் உங்க மேல… அது எனக்கு உங்க மேல இருக்க ஒரு உணர்வு அந்த பந்தம் அது மேல ரொம்ப நம்பிக்கை அதனால் அதை நான் தனியா பேஸ் பண்ண நினைச்சேன். அதான் உங்க கிட்ட சொல்லல..

அப்டியா? எந்த அளவுக்கு இந்த feel.. கை குழுக்கலா! இல்ல கட்டி பிடித்தலா? என சித் கேட்டான். 

புத்தா என அவனை கோபத்துடன் பார்த்தாள். 

சித் சிரித்து கொண்டே சும்மா!  என்று கூறினான். 

அப்படியே நழுவ வேணாம்! சொல்லுங்க எனக்கு தெரிந்து ஆகணும்! 

“லிட்டில் ஹார்ட் நாளைக்கு என்னை பத்தி யாராவது தப்பா சொன்னால்! நீ என்ன பண்ணுவ!”

என்ன தப்பு! என அவள் கேட்டாள். 

யாரோ ஒரு பொண்ணு கூட இருக்க மாதிரி! என அவன் சொல்லி முடிப்பதற்குள். நம்ப மாட்டேன்! என கூறினாள். 

என்னை பத்தி தப்பா சொன்னால்? 

நம்ப மாட்டேன்! என மீண்டும் கூறினாள். .

நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க பார்த்தால் என்ன பண்ணுவ! 

நீங்க விட்டுவிடுவீர்களா? என அவனை பார்த்தாள். 

சித்தார்த் அவளின் உதட்டை இழுத்து மாட்டேன். உன்னை விட மாட்டேன். எது நடந்தாலும்! நீ எங்கே இருந்தாலும் என்னோடவள் அப்படின்ற அடையாளம் உன் கிட்ட இருக்கும். 

உங்களையும் என்னையும் யார் பிரிக்க போறா! 

சித் அவளின் மூக்கை பிடித்து ஆட்டி உன்னோட ஒர்த் உனக்கு தெரியலடி உன்மேல நிறைய கண்ணு இருக்கு எனக்கு மட்டும் பவர் கிடைச்சா அந்த கண்ணை எல்லாம் நோண்டிடுவேன் என்று கூறினான். 

இதன்யா அவனை ஆச்சரியத்துடன் பார்க்க..  என்ன அப்படி பார்க்கிற?  நெஜமாலுமே இதெல்லாம் உண்மைதான் என்று கூறினான். 

ஹான் யார் வந்தால் எனக்கென்ன? எதுக்காகவும் நான் உங்களை விட்டு போக மாட்டேன். என்று அவனுடைய உதட்டில் முத்தம் கொடுத்தவள் கட்டி அணைக்க..

இப்போதைக்கு வேணாம்! என்று அவளை விலக்கினான். 

என்ன டா சொல்ற? என அவள் திடுக்கிட்டு பார்க்க..

சித் சிரித்து கொண்டே அப்போ வேணுமா! என இதழை மோகத்துடன் உரசினான். 

அது வந்து  கீழே இருக்கும் போது முதலில் பயமா இருந்தது. அப்புறம் நம்ம ரூம் வந்ததும்,   வேணும் போல கொஞ்சம் தோணுச்சு! என்னமோ தெரியல இப்போ நிறைய..  என அவள் தலையை அவன் நெஞ்சில் புதைத்தாள். 

சித் அவளின் வெட்கத்தை பார்த்து “பசங்க தான் பொண்ணுங்களை தேடி வரனும்! பசங்களை தேடி பொண்ணுங்க வந்தால்  அது நல்லாருக்காது!” 

அது அப்படி இல்ல புத்தா! நான் உங்க மேல அந்த அளவுக்கு இஸ்… என்று சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தி விட்டு நேராக படுத்தாள். 

ஹே கண்ணாடி! ஹேய் கண்ணாடி இப்போ என்ன சொன்ன? ஹே சொல்லு டி! என அவளுக்கு மேல் வந்தான். 

இதன்யா கண்ணை மூடி கொண்டே  சிரித்தாள். “ஹே சொல்லு! சொல்லு! மம்மம் இப்போ சொல்லல அப்புறம் எதுவும் நடந்தால் நான் பொறுப்பு இல்ல பார்த்துக்கோ!”

என்ன பண்ணுவ புத்தா! என கொஞ்சலுடன் கூறினாள். 

உன்னை என இதழ் கடித்து நா இழுத்து மோகம் மூச்சு முட்ட, கைகள் ஒட்டி பின்ன! வதனம் உரச அவளுடன் பாம்பு போல பின்னி கொண்டவன். உன்னை உன்னை! என மூச்சு வாங்கி நா சுவைத்தான். 

அவள் சிணுங்கி கொண்டே அவனை இறுக்கி அணைத்தாள். 

சித் அவளின் காதுக்கு அறுகில் நெருங்கி இப்போ வேணாம் டி! இப்படியே இரு இன்னும் நாலு நாள் அந்த லிட்டில் ஹார்ட்டை ரிலீஸ் பண்ணிட்டு இந்த லிட்டில் ஹார்ட் கூட கம்பைன் ஆகிறேன். என பிரிந்து அருகில் படுத்தான். 

அவள் அவனுடைய தீண்டலில் கிறங்கி அதில் இருந்து சுய நினைவுக்கு வரவே சிரிது நேரம் பிடித்தது. இதன்யா மூச்சு வாங்க அவனை பார்த்தவள். 

புத்தா ஹ புத்தா ஹ புத்தா!.. 

என்ன டி! என அவளின் முகத்தை பார்த்தான். 

பேசாமல் இப்போவே கீழே போலாம்! இப்போவே ஒரு தடவை sample பார்த்திடலாமா? என கேட்டாள். 

சித் அதிர்ச்சியுடன் என்ன டி சொல்ற? 

ஆமா புத்தா! அடுத்த வாரம் எனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகுது! அப்போ டையர்டா இருக்கும்! நீங்க வேற ரொம்ப அரோகென்ட்டா இருப்பீங்க! என்னால அதை எப்டி ஹாண்டில் பண்ண முடியும்! என கேட்டாள். 

யாரு யாரு நானா! நான் அந்த மாதிரி ஆளா! நமக்குள் நடந்த ரெண்டு தடவையும் நியாபகமே இல்ல டி! அது ரொம்ப ரொம்ப bad மெமரியா இருந்தது. அதனால் இந்த முறை.. அதுக்கு தான் அது கண்டிசன் இல்லாம நடக்கணும்! இப்படி பிளான் பண்ணி நடந்தால் அதுல கிக் இருக்காது! Sevanth hevan எல்லாம் வராது. 

பின் எப்படி? என அவள் அவனை பார்த்தாள். 

லிட்டில் ஹார்ட் லாஞ்ச் பண்ணதும் அடுத்த ரெண்டு நாள் நீயும் நானும் கூர்க் போறோம்! இங்கே இருந்து போக போகவே உன்னை பண்ணனும்! அப்படியே நீ என் மேல சொக்கி கடக்கணும்! நீ அடிக்ட் ஆகணும்! என மோகத்துடன் கழுத்து எலும்பு குழியை கடித்து வாசம் பிடித்தான். 

இதன்யாவுக்கு என்ன என்னவோ தோன்ற அவனை சிணுங்கி கொண்டே அடிக்க ஆரம்பித்தாள். 

என்னாச்சு! எதுக்கு டி அடிக்கிற.. அப்புறம் நான் உன்னை கடிப்பென். 

புத்தா! எனக்கு என்னவோ ஒரு மாதிரி கூச்சமா இருக்கு! அதை லோட் பண்ண முடியல இதுக்கு நீ தான் காரணம். 

சித் சிரித்து கொண்டே அதுக்கு பேரு டெம்ட்டிங் ரெட் பேபி!. 

இதன்யா அவனை புருவம் சுருக்கி பார்க்க. 

சித் அவளை சிலிர்க்க வைத்து இது இன்னும் fire ஆ இருக்கும். அந்த பீக் நீ போகும் போது பார்க்க நல்லா இருக்கும். அந்த மெயின் கோர்ஸ் விட இது ரொம்ப கிக்கு என உதட்டை கடித்தான். 

ஹான் லிட்டில் ஹார்ட் லான்ச் எப்படி இருக்குமோ! 

பார்ப்போம்! 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 278

சித்தார்த் பெரு மூச்சை விட்டு அவளை பார்க்க.. நெஞ்சுகூடு ஏறி இறங்க அவனை கிறங்கி கொண்டே பார்த்தாள். 

சித் இரு புருவம் தூக்க அவளை பார்த்தான். இதன்யா அவன் பக்கம் திரும்பி உதட்டை கடித்து இழுத்தாள். ஹே என கண்கள் விரிய அவளை பார்த்தான். 

ம்ம்.. ஹ..  ம்ம்.. ஹே ஹே!. எனக்கு எனக்கு.. எல்லாம் உன்னால புத்தா என வெடுக்கென கடித்தாள். 

ஸ்ஸ்ஸ் ராட்சஸி! It’s paining!. என சித் சினுங்க ..

அதை விட எனக்கு கஷ்டமா இருக்கு! என உதட்டை மென்று தின்றாள். ஆக்சுவலி பொண்ணுங்க லிப் தான் நல்லா இருக்கும்! ஆனால் உங்களுக்கு கீழ் உதடு அழகா நல்ல பதமா! இதமா ஈரமா இருக்கே! கொஞ்சம் கடிச்சா! சிவந்துடும் என மீசையை எட்சில் செய்தாள். 

சித்  கொஞ்சம் சிரிப்புடன் அவளின் காதல் மொழியில் கரைந்து கொண்டே வாகாக ஒத்துழைத்தான். எனக்கு ஒரு டவுட்டு! 

மிம்.. 

வாய சிறந்து பதில் சொல்லுங்க! 

ஹே உதடு!. என அவளின் கண்களை பார்த்தான். 

சரி சரி விட மாட்டேன் என விரலில் வருடி மீசையில் எட்சிள் செய்தவள். நீங்க யார் யாருக்கு கிஸ் பண்ணீங்க? 

என்ன? என சித்தார்த் சாக் ஆகி கேட்க..

நீங்க யாருக்கு கிஸ் பண்ணிருக்கீங்க அதுவும் லிப் டூ லிப்!. என அவன் கண்களை பார்த்தாள். 

சித் அவளின் முகத்தை பார்க்காமல் வேறு புறம் பார்வையை திருப்ப..

ஹே புத்தா! இங்கே இங்கே என்னை பாரு! என் கண்ணை பார்க்கிற? சொல்லு யாருக்கு கிஸ் பண்ண? 

இல்லையே! நான் யாருக்கும் கிஸ் பன்னதில்ல! Flying கிஸ் கூட கொடுத்தது இல்ல! 

நம்ப மாட்டேன் உண்மைய சொல்லு! இங்கே என்னை பாரு! 

எனக்கு நியாபகமே இல்ல! அது அவ்ளோ பெரிய விசயம் இல்ல… அதான் தெரிள.. நான் யாருக்கும் கிஸ் கொடுத்தது இல்ல டி! .

ஓ அப்டியா! சரி அது! பண்ணி இருக்கீங்களா? 

எது? 

அது தான் கசகசா! 

அப்டின்னா என ஒன்றுமே தெரியாதது போல கேட்டான். 

அவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டவள். அவளுடைய போனை எடுத்தாள். 

சித் அவனுடைய உதட்டை அழுத்தி பார்த்து எட்சிள் கொண்டு ஈர படுத்தி ஒரு பெரு மூச்சை விட்டு அவளை பார்த்தான். அதுக்குள் கோபம் வந்துடுச்சா! ஹம் என பெரு மூச்சை விட்டு அவளை கட்டி அணைத்தான். 

கைய எடுங்க! ம்ம்.. ச்ச! என சொல்லி கொண்டே தள்ளி படுத்தாள். 

ஹே ஓவரா பண்ற டி! இப்போ என்ன ஆச்சு? 

ஒன்னும் இல்ல என உள்ளே போன குரலில் கூறினாள். 

லிட்டில் ஹார்ட்! இங்கே என்னை பாரு! நான் உன் கிட்ட சொல்றேன். பாரு! சொல்றேன் திரும்பு டி! சீ மி! என்னை பார்த்தால் தானே சொல்ல முடியும்! என அவளை அவனுக்கு மேல் கொண்டு வந்தான். 

ப்ச் விடுங்க!. 

நான் யாருக்கும் முத்தம் கொடுத்தது இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். கொடுத்து இருக்கேன். போதுமா! 

யாருக்கு? எத்தனை பேருக்கு! 

அய்யோ! என அவளை பார்த்தான். 

சொல்லுங்க! 

அது மெலினா அப் அப்புறம் 

அப்புறம் என இதன்யா அவனை பார்க்க..

அதுக்கு அப்புறம் நீ உனக்கு தான்! வேற யாருக்கும் கொடுத்தது இல்ல..

பொய் சொல்லாதீங்க! நீங்க மொத்தம் எட்டு படம் நடிச்சு இருக்கீங்க! அதுல மூணு படம் ரிலீஸ் ஆகலயே! அதுல ஒரு படம் ரியா! அப்புறம் இன்னொன்னு தாரா மேம், அப்புறம் ஹான் லீனா கூட நடிச்சு இருக்கீங்க என புள்ளி விபரம் அனைத்தையும் புட்டு புட்டு வைத்தாள். 

என்ன இப்படி புள்ளி விவரமா எல்லாத்தையும் சொல்றாளே இப்போ இவகிட்ட என்னத்த சொல்றது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க என்ன என்கிட்ட பொய் சொல்றதுக்கு யோசிச்சிட்டு இருக்கீங்களா எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு என்று அவள் சொல்ல 

சித்தார்த் தன்னை சுதாரித்துக் கொண்டு இல்லை நான் யார் யாருக்கு எத்தனை முத்தம் கொடுத்தேன்னு புள்ளி விவரமா சொல்றேன். தாராவுக்கு என்று ஆரம்பிக்க..

 வேண்டாம் வேண்டாம் என்று கூறினாள்.

என்ன ஆச்சு?  என்று சித்தார்த் கேட்க..

தாரா மேம் உங்களோட பிரண்ட் , அதனால அவங்கள விட்டுட்டு மத்தத சொல்லுங்க!  ரியாவுக்கு எத்தனை முத்தம் கொடுத்தீங்க? என்று கேட்க..

நான் ஒரே ஒரு படத்துல தான் நடிச்சேன். அதனால கன்னத்துல கொடுக்கிற மாதிரி ஒரு அஞ்சு முத்தம், மத்ததெல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் VFX பண்ணிட்டோம்! அவளை கட்டி அணைச்சிருக்கேன்! மூணு தடவை என்று கூறினான்.

அவ்வளவுதானா என்று கேட்டாள்.

சத்தியமா என்று கூறினான். 

சரி அதுக்கப்புறம் அந்த அந்த மெலினா கூட என்று கேட்க..

சித்தார்த் கஷ்டப்பட்டு எச்சிலை விலுங்கி கொண்டேன்அவளைப் பார்க்க..

சொல்லுங்க!.  வாய திறந்து சொல்லுங்க! என்னாச்சு? என்று புருவத்தை தூக்கினாள்.

அவளுக்கு ஏதோ கொஞ்சம் கொடுத்தேன்.  என்று கூறினான். 

கொஞ்சம்ன்னா எவ்ளோ?  என்று கேட்டாள்.

உன்ன விட கம்மியா தான் கொடுத்தேன்.  என்னை விட கம்மியா!  ஓ உங்க ex – யும் உங்களோட வைஃபையும் கம்பேர் பண்றீங்களா?  என்று கேட்டாள்.

சித் ஷாக் ஆகி நீ தானடி கேட்ட!  அதனால தான் சொன்னேன்! என்று கூறினான். 

சரி அவங்களுக்கு எத்தனை முத்தம் கொடுத்தீங்க? 

அது தான்! அது வந்து கொஞ்சமா கொடுத்தேன். 

அப்போ கணக்கு இல்லாம கொடுத்திருக்கீங்க?  இன்ஃபினிட்டி யா? கொடுத்திருக்கீங்க? கரெக்டு தானே? என்று அவள் முறைத்து பார்க்க..

 இது என்னடி வம்பா இருக்கு!  எனக்கு அப்போ தெரியுமா?  நான் உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு!  நான் நெனச்சே பார்க்கல! 

அப்போ என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிங்க!! என்று அவளுடைய கையில் இருக்கும் மோதிரத்தை திருகி பார்த்தாள். 

சாரி சாரி உன்ன விட அவளுக்கு கம்மியா தான் முத்தம் கொடுத்தேன்! அதுவும் படத்துக்காக தான் கொடுத்தேன்! என்று கூறினான்.

அப்போ நேர்ல பாக்கும்போது!  நீங்க ராமர் மாதிரியும் லீனா சீதை மாதிரியும் இருந்தீங்களா?  பாத்துக்கவே மாட்டீங்களா? அந்த காலத்துல வர பிளாக் அண்ட் ஒயிட் மூவி மாதிரி உங்களோட சீன்ஸ் இருக்குமா? என இதன்யா கொக்கி போட.. 

 சித்தார்த் நொந்து கொண்டே இல்லை இதன்யா!  அவளுக்கு என்று அந்த 000 டிஜிட் எண்ணை கூறி..  அத்.. அத்தனை முத்தம் கொடுத்தேன்! போதுமா! என்று கூறினான். 

சரி என்று அவளை முகம் கொஞ்சம் கொஞ்சமாக உப்பத்தொடங்கியது. 

சித்தார்த் அவளின் முகத்தை பார்த்து  என்னாச்சு உன்னோட முகம் ஒரு மாதிரி இருக்கு?  உப்பி போன மாதிரி இருக்கு?  செவக்க ஆரம்பிக்குது? மூச்சு எல்லாம் சூடாகுது? என்று கேட்க ..

சரி அதை விடுங்க மேட்டருக்கு வாங்க!  என்று கூறினாள்.

 அப்பாடா எப்படியும் மறந்துட்டா! என நினைத்தவன்.  என்ன  இப்பவே மேட்டர் பண்ணலாமா?  என்று அவளின் உதட்டில் முத்தமிட வர…

தள்ளி போடா! 

ஹே நீ தான டி ஓகே சொன்ன?

அவ கூட அந்த லீனா கூட எத்தனை தடவை பண்ணிங்க! என்று  கேட்டாள்.

என்னடி என்னை பழி வாங்கற? 

எனக்கு தெரிஞ்சு போச்சு!  என்னை நீங்கள் ஏமாத்துறீங்க?  என்று அவள்  கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள..

 ஐயோ என்னடி பீரியட்ஸ் டைம் வந்துருச்சா?  எதுக்கு இப்படி எல்லாம் பேசுற?  திடீர் திடீர்னு ராட்சசி மாதிரி மாறுற! என்னடி பிரச்சனை? என்று சித்தார்த் கேட்டான் .

நான் நல்லா தான் இருக்கேன்! எத்தன தடவ பண்ணிங்க! 

 சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு இப்போ அதெல்லாம் எதுக்கு?  முக்கியமான விஷயத்தை வரலாமா? என்று கேட்டான். 

நீங்க  முதலில் அதை சொல்லுங்க என்று அவள் மீண்டும் அதே இடத்திற்கு வர..

சித்தார்த் அவளின் கைகளை பிடித்தான்.  தட்டி விட்டாள். 

மீண்டும் அவளின் கையில் பிடித்து,  உனக்கு எத்தனை முறை முத்தம் கொடுத்தேன்?. என்று சொல்லட்டுமா?  மொத மொதல்ல உன்ன நம்மளோட ஸ்கூல்ல வச்சு தான் பார்த்தேன்!!அப்போ காத்தே போகாத அளவுக்கு இறுக்கி கட்டி முத்தம் கொடுத்தேன்.  என்கிட்ட நீ என்ன விட்டு நீ தப்பிச்சு போவதற்கே பிளான் பண்ணிட்டு இருந்த?  அந்த நேரம் உனக்கு ஃபர்ஸ்ட் முத்தம் கொடுத்தேன்! என்று சித்தார்த் ஆர்வமாக கூறிக் கொண்டிருக்க..

அவங்க கூட என்று அவள் ஆரம்பிக்க..

என்ன சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க?  நான் தான் சொல்றேன்ல?  என அவளின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான். 

இதன்யா துள்ளிக் கொண்டே இருந்தவள்.  அவனை தள்ளி விட முயற்சி செய்ய..  சித்தார்த்தின்  கைகள் அவளின் இடையை வருடி பிடித்தது.  கொஞ்சம் எடுங்க! கையை எடுங்க என்று அவள் முறைத்துக் கொண்டே அவனை தள்ளிவிட முயற்சி செய்ய..

 கோபப்படாத என்று கழுத்தில் முகம் புதைத்தான். 

நீங்க என்னை ஏமாத்துறீங்க?  என்று அவள் பாவமாக குழந்தை போல் கூற..

நீயும் தான் என்னை ஏமாத்துன! என்று கூறினான்.

நான் என்ன ஏமாத்துனேன்? 

அதுதான் அந்த நவீன்குமார் பாக்க போனதான? என்று கேட்டான்.

நான் எங்கே பார்த்தேன். 

நடிக்காதடி அவனோட நம்பர் வாங்கி அவங்க கிட்ட பேசினது நீ தானே! எனக்கு ஆக்சிடன்ட் ஆகரதுக்கு முன்னாடி அவனை பார்க்க போன தான!

அய்யோ அய்யோ பச்சை பொய்!. என அவள் சொல்ல..

சரி விடு அந்த லோகேஷ்? அவனுக்கு பதில் சொல்லு!  என்ன ரொம்ப நாளா ஆள காணோம். அவன் கிட்ட பேசிட்டு தானே இருந்த? என்று கேட்டான். 

அது வந்து எனக்கு தெரியாது! என்று இதன்யா சொல்ல..

 நல்ல நடிக்காத என்ன பத்தி உனக்கு எல்லாமே தெரியும்! ஆனால் உன்ன பத்தி தான் எனக்கு எதுவுமே தெரியாது! எல்லாரும் உன் பின்னாடி சுத்திட்டு இருக்காங்க! அதுவே தெரியாம நீ இருக்க! அந்த ரிஷி கூட அப்படித்தான்! ஆரம்பிச்சான்.  என்று சொல்ல வர..

போதும் போதும் எனக்கு தூக்கம் வருது என்று அவனுக்கு முதுகு காட்டி அவள் தூங்க ஆரம்பிக்க

இதன்யா என்று சித் அழைத்தான்.

என்ன என்று கோபமாகவே பதிலளித்தாள்.

கொஞ்சம் திரும்பு உன்னிடம் முக்கியமா பேசணும்? என்று கூறினான்.

அவள் திரும்பாமல் இருக்க…

சரி ஓகே நான் பேசுவதை கேளு என்று கூறினான். 

அவள் அமைதியாக இருக்க சித்தார்த் பேச ஆரம்பித்தான். 

உன் கூட இந்த விஷயத்துக்காக போட்டி போடல!  லவ் மேக்கிங் அப்படின்ற விஷயம்! ரொம்ப தனித்துவமானது! அது யார் கூட வேணாலும் வரும்னு நீ நினைக்கிறது தப்பு! எனக்கு உன் கூட தான் அப்படி ஒரு எண்ணம் தோணுச்சு! ஆனா அதை சரியா என்னால செயல்படுத்த முடியல! அதுதான் உண்மை! 

இதன்யா அவன் பேசுவது அனைத்தும் உன்னிப்பாக கேட்டு கொண்டிருக்க..

சித் நேராக படுத்து கொண்டே ஒரு பையனுக்கு! அது எவனா வேணாலும் இருக்கட்டும் இந்த intimate, and sexual இது எல்லாமே மனசு சார்ந்தது இல்ல! 

அவள் ஒன்றும் புரியாமல் என்ன சொல்றான்? என யோசிக்க..

தெரியுது நான் சொல்றது உனக்கு புரியல! அதாவ்து ஒரு பொண்ணு கூட பையன் இருக்கும் போது மனதளவில் இருக்க மாட்டான். ஜஸ்ட் லஸ்ட் மட்டும் தான்! அவனோட வாழ்க்கையில் ஒரு பொண்ணு கூட தான் அந்த லஸ்ட் அதை தாண்டி மனதளவில் கனெக்ட் பண்ணி பார்ப்பான். எந்த ஒரு ஆண்பிள்ளைக்கும் அழகான பொண்ணை பார்க்கும் போது எல்லாமே தோணும். அப்படி தான் கடவுள் படைச்சு இருக்கான். அதை வெறும் பார்த்து ரசிப்பதோட கடந்து போயிடுவான். ஆனால் ஒரே ஒரு பொண்ணு கூட தான் இந்த விசயத்தில்  அவன் மனதளவில் கனெக்ட் ஆகி இருப்பான். என சித்தார்த் கூறினான். 

இப்படி பேசி பேசி நம்மள குழப்பி விடுறான். பிராடு புத்தா! என நினைத்தாள். 

இந்த  intimate விசயத்தை தவிர்த்து மற்ற எல்லா விஷயத்துக்கும் ஒரு பொண்ணு இல்ல ஹான்  ரெண்டு பொண்ணு! இல்ல  ஹான் மூணு பொண்ணு  கூட கனெக்ட் ஆ இருப்பான். 

யாரது என குரல் மட்டும் வந்தது. 

சித் சிரித்து கொண்டே தீவிரமாக என்னோட அம்மா கிட்ட பாசமா அதாவ்து அவனோட எல்லா பலவீனமும் ஒரு பையனுக்கு அம்மா தான்! 

அப்புறம் இன்னொரு பொண்ணு! என அவள் குரல் கேட்க..

சித் சிரித்து கொண்டே அவனோட காதலி அப்படி இல்லன்னா மனைவி! அந்த பொண்ணு கூட பாசம், காதல், மோகம் எல்லாமே இருக்க மாதிரி கணெக்ட் ஆகி இருப்பான். 

அப்போ அந்த மூணாவது? என அவள் ஓர கண்ணால் அவன் இருக்கும் திசையை பார்க்க …

சித் சிரித்து கொண்டே அவனோட குழந்தை அதுவும் பெண் குழந்தை! நம்ம குழந்தை நம்ம பொண்ணு வளர்ந்ததும் ஒருத்தனை காதலிக்கிறேன் அப்டின்னு வந்து நிண்ணா அதை அவனால் ஏத்துக்கவே முடியாது. என கூறினான். .

அடேங்கப்பா என அவள் எதுவும் பேசாமல் இப்படி மயக்கி பேச்சை பேசி என்னை கவுக்க பார்க்கிறான் என திரும்பாமல் அப்படியே இருந்தாள். 

சித் அமைதியாக எதிர்காலத்தில் தனக்கு பிறக்கும் போகும் மகளை பற்றி யோசித்தவன். இதன்யாவை மறந்து போனான். 

அப்போ நான் ரெண்டாவது இடத்தில் இருக்கேனா? எனக்கு முதலில் பொண்ணு பிறக்க கூடாது. பையன் தான் வேணும் என இதன்யா நினைத்து கொண்டிருந்தாள். அவளும் கனவு கண்டு கொண்டிருக்க…

சித் அவளை அணைக்க வந்தான். இதன்யா கையை தட்டி விட்டாள். 

 அவன் பெரு மூச்சை விட்டு “நீ என் கூட போட்டி போடுறதும்,  நான் உன் கூட போட்டி போடுறதும்,  நீ ஜெயிக்கிறாயா தோற்கரையான்னு பார்க்கிறது முக்கியம் இல்ல.  கடைசில நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா சேர்ந்தோமா அப்படிங்கறத தான் நான் நினைப்பேன்.  ஒவ்வொரு தடவை நீ சண்டை போட்டாலும் என்னோட அதிகபட்ச எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? என அவன் அவளின் கழுத்தில் கை வைக்க..

இதன்யா அவனை மெதுவாக திரும்பி பார்த்தாள்.‌

சித்தார்த் திருப்தியுடன் அவளை பார்த்தவன்‌‌.  நீ ஒவ்வொரு தடவை சண்டை போட்டு கோபமா இருந்தாலும் கூட  அந்த கோபத்தை கூட என் மேல தான் காட்டணும்னு நினைப்பேன்! என்னோட நெஞ்சில் நீ தூங்கணும்னு நினைப்பேன்! என்று கையை விரித்து காட்டினான்.

உங்களுக்கு ஏன் முன்னாடியே தெரியல? என பொய் கோபத்துடன் அவனை கட்டி கொண்டாள்.

என்ன தெரியல..

நான் வருவேன்னு ஏன் உங்களுக்கு தெரியல.. என்று அவள் கேட்க..

எஎன்ன சொல்ற என்று மீண்டும் அவன் கேட்க..

நீங்க எனக்கு தானே சொந்தம்! நீங்க எப்படி அவங்களுக்கெல்லாம் முத்தம் கொடுக்கலாம்?  அதனால இனிமே நீங்க படம் நடிக்க போக வேண்டாம்! எனக்கு பிடிக்கல! என்று சினுங்கினாள்.

இது ஜஸ்ட் ஒரு கம்யூனிகேஷன் டி!  ஒரு அஞ்சாறு படம் மட்டும் தான் பண்ணுவேன்! அதுக்கப்புறம் படம் பண்ண மாட்டேன்! என்று கூறினார். 

அப்போ 5 6 படம் பண்ணனும். ஆனால்  நீங்க ஹீரோயின் இல்லாம பண்ணுங்க! 

அப்டியா? அப்போ நீ டைரக்ட் பண்ணு அந்த படத்துல நான் ஹீரோயின் இல்லாம நடிக்கிறேன். என சித் கூறினான். 

அப்படியா எப்படி படம் பண்றது?  என்று இதன்யா கேட்க..

சித்தார்த்த தீவிரமான முகத்துடன் உன்ன நான் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிக்க வைக்கிறேன். அதை முடிச்சுட்டு வந்து என்னை டைரக்ட் பண்ணு! என்று கூறினான்.

அப்படியா எத்தனை வருஷம்?எந்த காலேஜ்? என்று   இதன்யா கேட்க..

அது காலேஜ் இங்க இல்ல உன்னை பாரின்க்கு படிக்க அனுப்புறேன். நீ படிச்சிட்டு வா! என்று கூறினான்.

அப்படியா வேண்டாம்பா! எனக்கெல்லாம் அது செட் ஆகாது! என்று இதன்யா திரும்பிக் கொள்ள..

இல்லை நீ படிக்கிற நீ என்ன டைரக்ட் பண்ணு அப்போ இன்னும் நல்லா இருக்கும்! என்று கூறினான்.

ஐயோ தெரியாம என் வாய கொடுத்து தேவையில்லாம ஒரு படிப்பை வேற எடுத்துட்டேனே! என்று அவள் நொந்து கொண்டே இருக்க..

சித்தார் சிரித்துக் கொண்டே அவளை அணைத்து துங்க ஆரம்பித்தான். 

அப்படியே பேச்சை மாத்தி தப்பிச்சிட்டீங்கல்ல என்று சொல்ல..

சரி அதை விடு முக்கியமான விசயத்தை நம்ம பேசவே இல்ல..

என்ன?

நான் உன் கூட எத்தனை தடவை மேட்டர் பண்ணினேன்னு சொல்லட்டுமா? என்று கேட்டான்.

நாம ரெண்டு தடவை தானே பண்ணி இருக்கோம்! என்று இதன்யா சொல்ல..

அது நிஜத்தில் டி! 

அப்புறம் வேற என்ன ரெண்டு தடவை தான்.. 

இரண்டு தடவை கனவுல உன்னை டெய்லியும் பண்ணுவேன். எப்படி பண்ணுவேன் தெரியுமா?  என்று ஆரம்பிக்க…

போதும் போதும் நிறுத்துங்க எனக்கு தூக்கம் வருது என்று அவனை கட்டி கொண்டு தூங்க ஆரம்பித்தாள். 

அந்த நாள் இனிமையாக முடிந்தது 

அதற்கு அடுத்து வந்த நாட்களில் ஸ்டைலிஷ் மற்றும் கேமரா மேன் இருவரையும் ஆஷிஷ் கவுடாவின் ஹோட்டலுக்கு ஹோட்டலுக்கு சென்றார்கள். 

 அங்கே ஆஷிஷ்.. லிட்டில் ஹார்ட் ஃபீமேல் பிராண்ட் அம்பாசிட்டருக்கு காத்துக் கொண்டிருந்தான். 

நவ்யா தயக்கத்துடன் வந்தாள்.

நீங்க யாரை பாக்கணும்? எந்த ரூம்?  நீங்க ஸ்டே பண்ண வந்திருக்கீங்களா? என்று அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க ..

அந்த நேரம் அவள் என்னோட பேரு நவ்யா நான் சித்தார்த் இருக்காரே அவரு சொன்ன போட்டோ ஷூட் காக வந்து இருக்கேன். என்று கூற..

வெல்கம் மேம்! ப்ளீஸ்  உள்ளே வாங்க!  உங்களுக்காக  தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்ல..

நேராக அந்த செட் அமைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு நவ்யா அழைத்துச் செல்லப்பட்டாள். 

அவள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க… ஆஷிஷ் ஒரு இடத்தில் அமர்ந்து போஸ் பார்த்து  கொண்டிருந்தான். 

அந்த நேரம் ஸ்டைலிஷ் ஆஷிஷ் கௌடாவிற்கு என்ன வகையான போஸ்ட்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க.. 

நவ்யா நேராக கேமராமேனை பார்த்தாள் நீங்க தான நவ்யா!  சரிதான என்று அவர் கேட்க.. 

ஆமா சார் என்று அவள் சொல்லிக் கொண்டே சுற்றிலும் பார்க்க.. 

அங்கே ஆஷிஷ் கவுடா ஸ்டைலிஷ் கிட்ட பேசிக் கண்டிருந்தான். 

அவங்க தான் மேல் பிரண்ட்  அம்பாசிடர் உங்களுக்கு அவங்களை தெரியும்  தான? இருந்தாலும் சொல்றேன் அவரு ஆசிஷ கவுடா என்று கேமரா மேன் சொல்ல..

தெரியும் சார் இதோ போறேன் என்று நேராக ஆஷிஷ் அருகில் சென்றாள். 

இவங்க என அருகில் வருபவளை  ஆஷிஷ்  பார்க்க.. 

 குட் ஈவினிங் சார் என்னோட பேரு நவ்யா சிதார் லிட்டில் ஹார்ட் ஓட பிராண்ட் அம்பாசிட்டர் என்று கூறினாள்.

ஸ்டைலிஷ் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே ஓகே மேம் இவங்க கூட தான் நீங்க போஸ் கொடுக்கணும்!  ரீல் ஜோடி நீங்க ரெண்டு பேரும் தான்! என்று கூறினார். 

ஓகே மேம் என்று காத்திருந்தாள்.  ஆஷிஷ் அவளிடம் சிரித்துக்கொண்டே ஹாய் என்னோட பேரு ஆஷிஷ்! 

தெரியும் சார் என்று நவ்யா சுற்றிலும் தேடிக் கொண்டிருக்க.. 

என்ன உங்களுக்கு? யார தேடி என அவன் ஆரம்பிக்க..

 இல்ல சித்து என்று அவள் கேட்க..

சித்தார்த் இங்க வரலையே என்று ஆஷிஷ் கூறினான். 

அப்படியா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கவே அந்த நேரம் சித்தார்த் நவ்யாவிற்கு அழைத்தான். 

ஹலோ சித்து நீங்க வந்துட்டீங்களா? என அவள் சந்தோசத்துடன் அந்த இடத்தில் இருந்து எக்ஸ்கியூஸ்மி என தள்ளி சென்றாள். 

ம்ம் என ஆஷிஷ் அமர்ந்து அவனுடைய போனை நோண்டி கொண்டிருந்தான். 

இங்கே சித் அவளிடம்  உன்னை ஸ்டைலிஷ் அப்புறம் கேமரா மேன் ரிசீவ் பண்ணுவாங்க என்று கூற..

ஆல்ரெடி பார்த்துட்டேன்! ஏன் நீங்க வரலையா? எப்போ வரீங்க!  என்று வராங்க கேட்க. 

நானா? நான் எதுக்கு அங்கே!  எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு மா! இந்த ப்ராடக்ட் இன்னாகரேஷன்க்கு சில முக்கியமான VIP க்கு இன் வைட் பண்ற வேலை இருக்கு! உனக்கு என்ன ஆச்சு?! என்று கேட்க..

இல்ல ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டேன் என்று கூறினாள். 

 ஒன்னும் பிரச்சனை இல்ல! நீ ஸ்டைலிஷ் கேமரா மேன பாத்திட்டியா? என்று கேட்டான். 

மம்ம் என்று ஒற்றை பதிலளித்தாள்.

கொஞ்சம் பிரிஸ்க்கா பேசு! ஆஷிஷ் இருக்காரா?   நீங்க ரெண்டு பேரும் தான் முன்னாடி தெரிய போறீங்க!  என்று சித்தார்த் கூறினார். 

நான் பிஸ்கா தான் இருக்கேன் என்று மெல்லிய குரலில் கூறினாள்.

இல்லையே ஷூட்டிங் நடிக்கும் போது லபலபவென்று பேசிட்டு இருந்த!  இப்ப குரலில் ஏதோ குறைகிற மாதிரி இருக்கே! என்று கேட்க..

ஒன்னும் இல்ல நீங்க வருவீங்கன்னு நினைச்சேன்.  எனக்கு இவங்க யாரையுமே தெரியாது! புதுசா இருக்கு உங்கள மட்டும் தான் எனக்கு தெரியும்! என்று கூறினாள்.

சித்தார்த் அவளின் நிலையை பார்த்து அதெல்லாம் ஒன்னும் கவலைப்பட வேண்டாம்! ஆஷிஷ் ரொம்ப நல்ல டைப் அவன் எல்லாரையும் ஈக்குவலா தான் நடத்துவான்! நீ போனை அவன்கிட்ட கொடு! என்று சொல்ல..

வேணாம் நீங்களே அவர்களுக்கு கால் பண்ணி பேசுங்க!  என்று  கட் செய்தாள்.

இந்த பொண்ணு! இவளை புரிஞ்சுக்கவே முடியல இன்று சித்தார்த்  உடனே ஆஷிஷ்கு போன் செய்தான்.

ஹலோ சொல்லுடா என்று ஆசிஸ் பதிலளிக்க..

டேய் அந்த பொண்ணு கிண்டல், கலாய் எதுவும் பண்ணாத!  இப்போ தான் பஸ்ட் ப்ராஜெக்ட் பண்றா! நீ எதுவும் விளையாட்டா சொல்லிடாத! அவள் கொஞ்சம் sensitive! ரொம்ப பீல் பண்ணுவா..

 அடேங்கப்பா பயங்கரமா சர்டிபிகேட் கொடுக்குறீங்க! என்று ஆசிஸ் சொல்ல..

You bull shit.. என சித் திட்டினான். 

Oh sensitive அப்டியா சரி நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன். என ஆஷிஷ் அவளை பார்த்தான். 

தொடரும்..

அடுத்து நவீன் குமார் Vs சித்தார்த் கிருஷ்ணா.. 

பார்ப்போம் 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 279

சித்தார்த்திடம் பேசிவிட்டு வந்த  ஆஷிஷ் அவளைப் பார்த்தான். 

அந்த இடத்தில் அவள் சுற்றிலும் பார்த்துக் கொண்டே ஒருவித புது பதட்டத்துடன் நின்றாள்.

நேராக அவளுக்கு அருகில் வந்தவன் ஹலோ நவ்யா ஆர் யூ ஓகே! என்று கேட்டான். 

ஒன்னும் பிரச்சனை இல்ல சார் என்று கூறினாள். 

சரி ஓகே நம்ம இப்போ சூட்டுக்கு ரெடி ஆகலாமா?

ம்ம என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவள்.  நேராக ஸ்டைலிஷ் அருகில் சென்றாள். 

அவர் ஆஷிஷ் கவுடாவிற்கும் நவ்யாவிற்கும் உடையை எடுத்து வைத்தார். 

இருவரும் அவர்களுடைய உடையை எடுத்துச் சென்றார்கள் அணிந்து கொண்டு  ஆசிஷ் வெளியே வந்தான். அவனுக்கு கேஷுவல் டிரஸ் மிகவும் அழகாக இருந்தது. 

ஸ்டைலிஷ் அவனுக்கு அருகில் வந்து சார் கொஞ்சம் மட்டும் டச்அப் பண்ணிக்ரீங்களா?  என்று கேட்டார்.

 எனக்கு no பிராப்ளம் I can do myself..  நீங்க அந்த பொண்ண போய் பாருங்க! நான் பார்த்துக்கிறேன்! என்று வாங்கிக் கொண்டான். 

ஸ்டைலிஷ் கொஞ்சம் புன்னகைத்தவர்.  ரொம்ப தேங்க்ஸ் சார்! என்று நவ்யா இருக்கும் பக்கம் சென்றார். 

நவ்யா அந்த கேஷுவல் உடையில் வெளியே வர… அவளுக்கு அருகில் வந்து முடியை தொங்க விட்டவர்.  ஹீட்டர் மற்றும்  அயனர்கொண்டு ஸ்ட்ரைட்னிங் செய்து அவளுடைய முகத்திற்கு கொஞ்சமாக ஒப்பனை செய்து, கூடவே உதட்டிற்கு அவளின் முகத்தில் உள்ள நிறத்திற்கு ஏற்றவாறு, உதட்டுக்கு லிப்ஸ்டிக் தேர்வு செய்து, அதை போட்டு விட்டார். 

அதன் பின் கழுத்துக்கு கொஞ்சம் ஒப்பனை செய்து விட்டார். இப்போ ஓகே மேம்! என்று அவளைப் பார்த்து உங்களோட முகம் ரொம்ப அப்பழுக்கு இல்லாம இருக்கு.  இது ட்ரடிஷனல் பேஸா இருக்கு! அழகா இருக்கீங்க! என்று கூறினார்.

நவ்யா சிரித்துக்கொண்டே ரொம்ப தேங்க்ஸ் மேம்! என்று சொல்லி சரி ஓகே வரீங்களா! இப்போ போஸ் பார்த்துடலாம்! என்று அழைத்து..  சித்தார்த் – இதன்யா இருவரும் பின்னால் இருக்கும் அவர்களுடைய பின்பக்க போஸ்ட்கள், லிட்டில் ஹார்ட் போஸ்ட் என அன்று போட்டோ சூட்டில் அனைத்து படங்களையும் காட்டினார்கள். 

ஆஷிஷ் அந்த படங்களை பார்த்துக் கொண்டிருக்க நவ்யா கூர்மையாக பார்த்தவள்.  இது  சித்தார்த் தானே! என்று ஸ்டைலிஷ்கிட்ட கேட்டாள். 

அவரும் ஆமாம் இது சிந்து சார் தான் என்று புன்னகைத்தார். 

உடனே நவ்யா அருகில் உள்ள பெண்ணை பார்த்து, இந்த பொண்ணு யாரு? சித் பக்கத்தில் இருக்கா! என நினைக்க..

 ஸ்டைலிஷ் அடுத்தடுத்து என நிறைய படங்களை காட்டி இதெல்லாம் ஓகேவா? இல்ல! வேற பிக் காமிக்கவா? என்று சதீஷ், பிரியா, ரிஷி, ரோஷினி, அபி, பூஜா என அனைவருடைய படங்களையும் காட்டினார்கள்.

நவ்யா அதையெல்லாம் பார்க்க.. ஸ்டைலிஷ் அவர்களுடைய பின்பக்கத்தை காட்டினார். 

நவ்யா அவரிடம்  இதெல்லாம் யாரு? என்று கேட்க..

ஸ்டைலிஷ் கொஞ்சம் தயங்கிக் கொண்டே அது வந்து மேம்! இதெல்லாம் ரியல் ஜோடி! இது கான்ஃபிடென்ஷியல்! யாருக்கும் ஷேர் பண்ண கூடாது! இதுல இருக்கிற ஃபீமேல் எல்லாம் எங்களுக்கு தெரியாது! பட் male எல்லாமே பெரிய இடத்து பிசினஸ்மேன்ஸ் பசங்க! அதை இங்க மென்ஷன் பண்ண முடியாது! சாரி மேம்!

இதை கேட்டதும் நவ்யாவின் முகம் மாறி போக..

 ஸ்டைலிஷ் அவளின் முகத்தை பார்த்து  சாரி மேம்! ஆனா இதுல சித்தார்த் சார் அவரோட தங்கை இருக்காங்க! அதை மட்டும் தான் உங்களுக்கு என்னால ஷேர் பண்ண முடியும்! என்று ஸ்டைலிஷ் கூற..

நவ்யா எதுவும் பேசாமல் கொஞ்சம் சிரித்து கொண்டே   ஓகே நோ ப்ராப்ளம் என்று கூறிவிட்டு அனைத்து படங்களையும் பார்த்தாள்.

சித்தார்த் மற்றும் இதன்யாவின் பின்பக்க படத்தை பார்த்து அந்த படத்தை கொஞ்சம் போடுங்க என்று சொல்லும் நேரம்..

எல்லாம் ஓகேவா என்று என்று குரல் கேட்டது .

மச்சி என்று ஆஷிஸ் திரும்ப.. 

சித்தார்த்  நபியாவை பார்த்துக் கொண்டே வந்தான். 

நவ்யா அந்த படத்தில் இருப்பதை மறந்து சித்தார்த்தை பார்த்ததும் சிரிப்புடன் எழுந்து அருகில் சென்றவள்.  வரமாட்டேன்னு சொன்னீங்க! என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

எங்க வீட்ல இருக்க கின்டர் கார்டன் பொண்ணை விட நீ பயந்து நடுங்கின மாதிரி தோணுச்சு அதான் வந்தேன்! அது மட்டும் இல்லாமல்  நீங்க ரெண்டு பேரும் கொடுக்க போற பிக் தான் ரொம்ப முக்கியம்!  அதனால்தான் நான் நேர்ல வந்தேன். என்று சித்தார்த் கூறினான். 

நவ்யா  அவனிடம்  கின்டர் கார்டன் கேர்ள் போல இருக்கா!

சரி மா அதை விடு! என அவளின் காஸ்டியூம் உடையை மேலிருந்து கீழ் வரை புருவம் சுருக்கி பார்த்தான். 

நவ்யா அவளது கூந்தலை காதுக்கு ஒதுக்கி கொண்டே அவனை பார்த்தாள். 

டேய் என்னையும் பாரு! என ஆஷிஷ் வந்து நிற்க..

ஹான் ஓகே பட் இந்த பர்ப்பில் இல்ல டா இங்கே பாரு என சித் – இதன்யா இருவரும் இருக்கும் அந்த உடையை காட்டினான். 

ஆஷிஷ் அதை பார்த்து விட்டு டேய் அது தான் போட்டு இருக்கேன். 

இல்ல shade வித்தியாசம் வருது போய் change பண்ணிட்டு வா! கொஞ்சம் கூட ஃபால்ட் இருக்க கூடாது என சித் கூற..

ஆஷிஷ் நொந்து கொண்டு இப்போ தான் டச் அப் பண்ணேன் அதுக்குள்ள இப்போ again பண்ணனும் ஏன் டா! என அவன் சென்றான். 

ஆஷிஷ் சென்றதை உறுதி படுத்தி கொண்டவள்.சித் அருகில் வந்து இது உங்க ஓன் புரோடெக்ட் தான! 

ம்ம் ஆமா!  

அப்போ இதுல எதுக்கு இன்னொருத்தர பிராண்ட் அம்பாசிடரா போடுறீங்க! இது உங்களோட ப்ராடக்ட் தானே நீங்களே இருக்கலாமே! என்று கேட்க..

சித்தார்த் அவளை வினோதமாக பார்த்தான். 

என்ன ஆச்சு? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா? என்று சொல்ல..

சித்தார்த் ஒரு சின்ன புன்னகையுடன் எனக்கு நானே லக்கி இல்லாத பர்சன்ன்னு  தோணும் அதனால தான் என்னோட பேக் போஸ் மட்டும் இதுல கொடுத்திருப்பேன். 

ஆஷிஷ் என்னோட குட் பிரண்ட், நானும் அவனும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா படிச்சு வளர்ந்தவங்க! அதனால இதுல என்னோட லைஃப்ல இருக்க இம்போர்ட்டண்ட் பர்சன்ஸ் எல்லாம் சேர்ந்து தான், இந்த ப்ராடக்ட்ல ஒரு பார்ட்டா இருக்காங்க!  அந்த பேக் போஸ்ல இருக்குற எல்லாரும் என்னோட க்ளோஸ் அதாவ்து ஃப்ரெண்ட்ஸ், கோலிட்ஸ், கூடவே ரியல் ஜோடி என்று கூறினான்.

அப்போ அவங்க எல்லாம் உங்களோட பிரண்ட்ஸ் ஆ! என்று அவள் கேட்க

இல்ல என்னோட சிஸ்டர், என்னோட சிஸ்டர் பிரதர்- இன் -லா எல்லாருமே அதுல இருக்காங்க.ஆஷிஷ் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அதனால அவனுக்கு இந்த பாட்ட கொடுத்து இருக்கேன்! 

அப்போ நானு என்று நவ்யா கேட்க..

சித் சிரித்துக்கொண்டே இதென்ன கேள்வி! நீ என்னோட ப்ராடக்ட்டுக்கு பிராண்ட் அம்பாசிடர்! கிட்டத்தட்ட சொல்லப்போனால் இந்த லிட்டில் ஹார்ட் எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான ஒரு விஷயம்! என்று இதன்யாவை நினைத்து அவன் கூறினான். 

போதும்! போதும்! உன்னோட லிட்டில் ஹார்ட் பத்தி விட்டா, நாள் முழுக்க நீ பேசிட்டே தான் இருப்ப! நினைச்சுக்கிட்டே தான் இருப்ப! என்று ஆஷிஷ் குரல் கேட்க..

சித்தார்த் அவனை முறைத்தான்.

என்னடா முறைக்கிற? இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்!

அப்டியா! அக்ரீமெண்ட் ஞாபகம் இருக்குல்ல என்று சித்தார்த் அவனை பார்த்து கேட்க..

நவ்யா அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் பார்த்தாள்.

அவளுடைய மனதில் இந்த அளவுக்கு இவங்க ரெண்டு பேரும் கிளோசா! அப்போ இவர் கூட நம்ம பிரண்டா இருக்கணும்! என்ற நவ்யா ஆஷிஷ்சை நட்புடன் பார்த்தாள்.

ஆஷிஷ் கேள்வியுடன் ஆமா மச்சி எனக்கு ஒரு டவுட்டு நீ ஏன் பிராண்ட் அம்பாசிடரா  இல்லாம இதோட பவுண்டரா மட்டும் இருக்க? அன்னிக்கே கேட்கணும் அப்டின்னு நினைச்சேன். 

 நான் பிரண்ட் அம்பாசிடர் ஆயிட்டா? நீ வீயுவரா இருப்ப! பரவாயில்லையா? என்று சித்தார்த் கேட்டான். 

ஆசிஷ் அவனை மேலும் கீழும் பார்த்து நிஜமாகவே இது தான் ரீசனா இல்ல உள்ள ஏதாவது இருக்கா? என்று கேட்க 

சித்தார்த் அவனுடைய இதயத்தை தொட்டு காட்டி லிட்டில் ஹாட்டுக்கு நான் பிராண்ட் அம்பாசிடரா இருக்கறது, பிடிக்கல! என்னை எல்லாரும் பார்ப்பாங்களாம்! சைட் அடிப்பாங்களாம்!  அதனால வேணாம்னு கின்டர் கார்டன் பேபி பிகவியர் வந்திடுச்சு! அதனால தான் இதுல  நான் உன்னை போட்டேன்! உன்னை எல்லாரும் பார்த்தா  லிட்டில் ஹாட்டுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! உனக்கு அந்த தேவை தான் இருக்கு! என்று அவனைப் பார்த்தான்.

 ஒன்னும் முடியல டா இந்த அட்டூழியத்த என்னால தாங்க முடியல என்று கூறிக் கொண்டிருக்க..

லிட்டில் ஹார்ட்! லிட்டில் ஹார்ட்ன்னு பேசுறாங்களே?  சித்தார்த்தத்தோட இதயத்தை தான் அவரு லிட்டில் ஹார்ட்ன்னு  சொல்றாரா?  என்று நவ்யா நினைத்தாள். கிண்டர் கார்டன் கேர்ள்ன்னு சொல்றாங்களே! ஒரு வேளை அவங்க ஃபேமிலில குட்டி பேபி இருக்குமா? யாரை சொல்றாரு? என நவ்யா யோசித்தாள். 

ஓகே சாட் ரெடி! நீங்க வாங்க! என்று அழைக்க..

சித்தார்த் அவர்களுடைய ஃபோட்டோ ஷூட்டை அமர்ந்து உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். 

நவ்யா ஒரு பெருமூச்சுடன் அந்த இடத்தை பார்க்க.. 

ஆஷிஷ் அவளிடம் இதுக்கு முன்னாடி நீங்க போட்டோ ஷூட்  பண்ணிருக்கிங்களா? என்று கேட்டான். 

அது தனியா பண்ணி இருக்கேன்!  ஜோடியோட பண்ணுனதில்ல இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!  அதுவும் எனக்கு ட்ரடிஷனல் தான் அதிகமா பிடிக்கும்! அதுல தான் நிறைய ஷூட் பண்ணி இருக்கேன்! என்று கூறினாள். 

ஒன்னும் பிராப்ளம் இல்ல அத ஃப்ரீயா விடுங்க ஜஸ்ட் இது ஒரு கிளிக் மட்டும் தான் என்று கூறினான். 

ஓகே சார் ரொம்ப தேங்க் யூக் என்று புன்னகையுடன் கூறினாள். 

அவர்கள் இருவரும் அந்த இடத்தில் போய் நிற்க..

சித்தார்த் கேமராவின் அருகில் வந்து ஸ்டைலிஷ் கிட்ட நவ்யாவோட முடிய பின்னாடி போட்டு விடுங்க!..

 இதோ சார் என்று  ஸ்டைலிஷ் போய் சரி செய்தார். 

சித்தார்த் ஆஷிஷ் கிட்ட லாஞ்சிங்க்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு? இது கான்ஃபிடென்ஷியல் தானடா!  இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க தானே! என்று கேட்க..

நோ இது  உனக்கு தான் தெரியுமே! இந்த இடம் ரொம்ப பர்சனல்! சோ யாரும் வர மாட்டாங்க! இந்த இடத்துல எடுக்கிற எதுவும் இந்த ஹோட்டலை விட்டு வெளியே போகாது! என்று ஆசிஸ் கூறினான்.

அப்போ ஓகே உன்னோட ஷர்ட்டில் கேஷுவலா நில்லு! அதை கிளிக் பண்ணுங்க என்று கேமராமிடம் சித் சொல்ல..

அவரும் ஆஷிசியினுடைய கேசுவல் லுக்கை கிளிக் செய்தார். 

நவ்யா  உன்னோட கையை கீழே விடு! ரொம்ப பிரஷர் பண்ணிக்காத! பாடிய லூஸ் பண்ணிட்டு, ரொம்ப இயல்பா நில்லு மா!  என்று சித் சொல்ல..

 அவள் சித்தார்த்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

என்னமா ஆச்சு நம்ம சூட்டிங் ஸ்பாட்டுல இருக்குற மாதிரி நீ இல்லமா! அப்படி இல்ல நான் ரத்தினகுமார வர சொல்லட்டுமா என்று கேட்டான். 

இல்ல இல்ல எனக்கு ஓகே என்று சிரிப்புடன் அவள் நிற்க..

இந்த சிரிப்பு இதை கேட்ச் பண்ணுங்க!  என்று சொல்ல சக் சக் என கேமரா மேன் எடுத்தார்.

இதுவரையும் தனித்தனியாக நிறைய படங்கள் கேமராமேன் எடுத்தார் அதன் பின் இப்போ கப்பில் போட்டோ என சித் கூறினான். 

ஸ்டைலிஸ் அவர்கள் இருவரிடமும் போஸ் சொல்ல.. ஆசிஷ் இயல்புடன் நின்றான். நவ்யா தயக்கத்துடன் அவனை பார்த்து விட்டு உடனே சித்தார்த் இருக்கும் இடத்தை பார்க்க..

ஹலோ மிஸ் ஓகேவா!. Anything problem.. என ஆஷிஷ் கேட்க..

ஓகே சார் என அவள் நின்றாள். 

கொஞ்சம் சிரிங்க! இல்லன்னா சித் அப்படியே டிரான்ஸ்ஃபார்ம் மோசமா இருப்பான். வேலைன்னு வந்துட்டா டெரர் ஆகிடுவான். என ஆசிஷ் கூற..

நவ்யா கொஞ்சம் புன்னகையுடன் நின்றாள். அந்த படத்தை அவனுடைய போனில் எடுத்தவன் அதை இதன்யா மற்றும் தாரா இருவருக்கும் அனுப்பினான். 

முதலில் சித்தார்த்துக்கு தாரா கிட்ட இருந்து பதில் வந்தது. போட்டோ ஜெனிக் லுக்…

சித் ஒரு பெரு மூச்சை விட்டு நீ இருக்க வேண்டிய இடம்! I’m angry with you என தட்டி விட்டான். 

தாரா சோகமான இமோஜி அனுப்பி விட்டவள். விடு அடுத்த முறை பார்த்துப்போம்! 

என்னை விட உதயன் ரொம்ப முக்கியமா அவன் முகத்தை சுறுக்கினான்னு வர மாட்டேன்னு சொல்லிட்டல்ல.. போடி! என சித் தாராவுக்கு தட்டி விட்டான். 

தாரா சிரித்து கொண்டே நான் சொன்ன ஐடியா நல்லா தானே இருக்கு! இந்த பொண்ணு கரெக்டா இருக்கா! ஆஷிஷ் இன்னிக்கு அழகா இருக்கான். என கூறினாள். 

சரி பாரு என வைத்தான். 

என்ன இன்னும் நம்ம மெஸேஜ் பார்க்காமல் மேடம் என்ன பண்றாங்க என சித் இதன்யாவின் மெசேஜ்க்கு  காத்திருக்க.. அவளிடம் இருந்து போனே வந்தது. 

பாரு டா!.. என சிரிப்புடன் காதில் வைத்தான். 

ஹலோ!.. என சித் பேச..

ஆஷிஷ் சார் மாசா இருக்காரு! அப்டியா! என பற்களை கடித்து கொண்டே கேட்டான். 

அவரோட லுக் ரொம்ப கேஷுவலா இருக்கு! ஆனால் அந்த பொண்ணு ரொம்ப பயத்தில் இருக்க மாதிரி இருக்கு! என இதன்யா சொல்ல..  

சித் வேண்டும் என்றே சரி வீடியோ கால் பண்றேன். கேமரா மேன் கிட்ட கொடுத்திட்டு போய் நிக்க வைக்கிறேன். நீ பார்த்திட்டு கமெண்ட் சொல்லு என வேண்டும் என்றே கூறியவன். போன் செய்து விட்டு புருவம் தூக்கி ப்ளூ டூத் காதில் வைத்தான். 

ஹலோ எதுக்கு வீடியோ கால் பண்ணீங்க? என அவள் அவனை பார்க்க..

இப்போ என்ன டி! கரக்சன் சொன்ன தான அதை சரி பண்ணனும்! என கேமரா மேன் கிட்ட போனை கொடுத்தவன்.  Back கேமரா காட்டுங்க என சொல்லி விட்டு செட் பக்கம் நடந்தான். 

என்ன பண்றீங்க என இதன்யா கேட்க..  

நான் என்ன பண்றேன்னு பாரு டி என நவ்யா அருகில் சென்றான். 

நவ்யா அவனை புருவம் தூக்கி பார்க்க..  

உடனே சித் ப்ளூ டூத் சரி செய்தவன். நவ்யா சிரி! அது எப்டி இருக்கணும் தெரியுமா! லைட்டா இருக்கணும் ஓவர் expression இல்லாம லைட்டா! லைட்டா சிரி என கூற.. 

நவ்யா அவன் சொன்னதை போலவே சிரித்தாள். 

நான் கட் பண்றேன்! என இதன்யா சொல்ல.. 

கட் பண்ணாத டி!  என கேமரா மேன் பக்கம் பார்த்தான். 

என்ன? என ஆஷிஷ் மற்றும் நவ்யா இருவரும் பார்க்க..

நத்திங் நத்திங்! சிரிப்பை கட் பண்ண வேணாம்! அப்டின்னு சொல்ல வந்தேன். 

இதன்யா ஒரு பெரு மூச்சுடன் போனில் என்ன பழி வாங்களா? நான் ஆஷிஷ் சாரை அழகா இருக்கேன்னு சொன்னதுக்கு இப்படி பண்றீங்க! அப்படி தானே! என இதன்யா போனில் கேட்க

சித் சிரித்து கொண்டே அப்படி இல்ல.. ஆசிஷ் லிட்டில் ஹார்ட் சிம்ப்ள்ஸ் காட்டுங்க! இப்படி என அவன் காட்ட.

இதன்யா அங்கு நடக்கும் காட்சியை பார்த்து டேய் நீ என்ன வேணாலும் பண்ணிக்க ஆஷிஷ் சார் அழகா தான் இருக்காரு. நான் இப்போவே உன் போனை கட் பண்ணிட்டு அவருக்கு கால் பண்ணி சொல்ல தான் போறேன். 

No no way I will kill you என கோபத்துடன் அவன் முகம் மாற…

நவ்யா அவனை சாக் ஆகி பார்த்தாள். 

என்ன டா? என்ன ஆச்சு? என கேட்க..

உன் போன் எங்கே? 

அது அங்கே இருக்கு! என ஆஷிஷ் கை நீட்டி காட்ட…

ஓகே நீங்க கேரி ஆன்! ஸ்டைலிஸ் வாங்க! நவ்யா மிக்குக்கு கீழ லைட்டா வேர்த்து இருக்கு அதை டச் அப் பண்ணுங்க! Face பக்கம் லைட் திருப்பி வைங்க என சொல்லி கொண்டே அவன் செல்ல..

இதை கேட்டதும் நவ்யா முகம் வெட்கம் கொண்டு கண்ணம் சிலிர்க்க அவள் தலை குனிந்து நின்றாள். 

சித் ஆசிசின் போனை எடுக்கவும் இதன்யா அழைக்கவும் சரியாக இருந்தது. 

ஹலோ நான் டி! .

எனக்கு ஆஷிஷ் சார் கிட்ட பேசணும்! கொடுங்க! 

முடியாது! அவன் பிஸியா இருக்கான். அவன் கிட்ட உனக்கு என்ன பேச்சு! என் கிட்ட பேசு டி! 

அப்படி எல்லாம் பேச முடியாது. 

சரி பேச வேணாம்! நான் அழகா இருக்கேன்னு சொல்லு! 

நீங்க அழகா இருக்கீங்க! 

ஹான் அது என சித் கூற..

பட் இன்னிக்கி ஆஷிஷ் சார் தான் அழகா இருக்காரு! என கூறி விட்டாள். 

அப்டியா அதுவும் சரி தான் இன்னிக்கி நவ்யா கூட அழகா இருக்கா! என சித் வேண்டும் என்றே கூறினான். 

அனைத்து போஸ்களும் எடுத்து முடிக்க இருவரும் கீழே வந்தார்கள். 

டேய் போனை கொடு! என ஆசிஷ் சொல்லி கொண்டே வர…

சித் அவனை கண்டு கொள்ளாமல் இப்போ கூட ஒன்னும் இல்ல.. நான் அழகா இருக்கேன்னு சொல்லு! நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்.  இல்ல.. என அவன் நிறுத்த..

என்ன பண்ணுவீங்க! நீங்க சொல்றது சரி தான்! அந்த பொண்ணு அழகா இருக்கா! பொய் சொல்லல.. உண்மை தான்! அவங்க அழகா இருக்காங்க! 

அப்டியா! இந்நேரம் உன் கன்னம் உப்பி இருக்கும் போல! 

எனக்கென்ன! நான் நல்லா இருக்கேன். 

அப்டியா! சரி இப்போ நான் அதை நவ்யா கிட்ட சொல்றேன் நீ வீடியோ கால் பண்ணு உன்னோட முகத்தை பார்க்கணும். 

நான் எதுக்கு பண்ணனும்! என இதன்யா கேட்க.. 

சித் சிரித்து கொண்டே எனக்கு பொறாமை டி! ஓபன் டாக் நான் ஒத்துக்கிரென். நீயும் அதே போல ஒத்துக்க நான் அவள் கிட்ட சொல்ல போறேன். 

என்ன சொல்ல போறீங்க? 

சித் சிரித்து கொண்டே நவ்யா அழகா இருக்க அப்டின்னு சொல்ல போறேன். 

சொல்லுங்க இப்போவே கூப்பிட்டு சொல்லுங்க! நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்! 

அப்போ பண்ற சரி தானே! 

பண்ணல இப்போவே சொல்லு டா வீடியோ கால் பண்றேன்! என கூறினாள். 

சித் ஒரு நிமிடம் அமைதி ஆனவன். அந்த அளவுக்கு வந்திட்டியா? இப்போவே சொல்றேன் டி! என நினைத்து போன் பண்ணு டி! என்றான். 

இதன்யா வீம்புக்காகவே போன் செய்தாள். 

நவ்யா! என அழைத்து கொண்டே இதன்யாவின் முகத்தை பார்த்தான். உப்பி தான் இருந்தது. 

சித்தார்த்துக்கு உள்ளுக்குள் சிரிப்பு வர அதை காட்டி கொள்ள வில்லை. 

சொல்லுங்க சித்து என அருகில் வந்தாள். 

இன்னிக்கி நீ அழகா இருக்க! இந்த வைலட் உனக்கு பெக்கூலியர்-ஆ இருக்கு! என கூறவும் போன் கட் ஆகவும் சரியாக இருந்தது. 

நவ்யா வெட்கத்துடன் தேங்க்ஸ் சித்து என சொல்ல…

வாட் அ சர்ப்ரைஸ் இதயா வீடியோ கால் பண்ணி இருக்க? என ஆஷிஷ் கூறினான். 

சித் புருவம் சுருக்க ஆசிசை திரும்பி பார்க்க.  

இன்னிக்கு நீங்க அழகா இருக்கீங்க! உடனே தோணுச்சு அதை கூடவே எக்ஸ்பிரஸ் பண்ண தோணுச்சு! அதான் டக்குன்னு போன் பண்ணிட்டேன். உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே! என இதன்யா அவனை பார்த்தாள். 

ஆஷிஷ் தலையை கோதி கொண்டே நிஜமா என அவன் சித்தார்த்தை பார்த்தான். 

அவன் முகம் பார்க்க சகிக்காமல் இருக்க… நவ்யா சித்தார்த்தின் வார்த்தைகளை கேட்டதும் வெட்கம் தாங்காமல் வேகமாக மூச்சு வாங்க உடை மாற்ற சென்றாள். 

ஆஷிஷ் அவளிடம் உன் புருஷனை வெருப்பேத்த எனக்கு போன் பண்ணி காம்பிளிமென்ட் கொடுக்கிரயா? என கேட்டான். 

நான் ஒன்னும் நடிகை இல்ல! மனசுல பட்டதை நேரடியா சொல்ற சாமான்ய பொண்ணு! நீங்களும் உங்க ஃப்ரெண்ட் மாதிரி தானே இருப்பீங்க சரி வையுங்க! என அவள் கட் செய்ய போக! 

ஹே ஹே! சும்மா! நீ சொல்லு இதயா என நேராக சித் பக்கம் சென்றான். 

இப்போ சொல்லு இதயா! என அவன் அருகில் சென்றான். 

இன்னிக்கி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! அந்த பிராண்ட் அம்பாசிடர் பேருக்கே உங்க பிக் தான் உருவம் கொடுத்திருக்கு! என கூறினாள். 

சித் அவனுடைய போனை வாங்கி அவளை பார்க்க..

இதயா உன் புருஷனுக்கு வயித்து எரிச்சல் என ஆஷிஷ் சொல்ல..

நான் மறைச்சு சொல்லல.. எதுவா இருந்தாலும் அதை express பண்ணிடனும்! அது தான்! பேச சித் வெடுக்கென போன் கட் செய்தான். 

ஆஷிஷ் சித்தார்த்தை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். 

சித் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். 

லிட்டில் ஹார்ட் அப்டின்னு சேவ் பண்ணி இப்போவே போஸ்ட் போட போறேன். என அவன் சிரித்து கொண்டே அவள் கிட்ட பேசிய போன் கால் டூறியேசன் எடுத்து லிட்டில் ஹார்ட் என twitter, Facebook என போட்டான். 

சித் அவனை முறைத்து பார்க்க.. போடா போ! என ஆஷிஷ் கூறினான். 

You*.. f*.. son of b*.. bull s*… என கெட்ட வார்த்தையை சித் பேசிட..

போடா! இதயா என்னை அழகா இருக்கேன்னு சொல்லி இருக்கா! எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா! என ஆஷிஷ் சொல்லி கொண்டிருக்க.. அங்கே இருந்த ஜக் தண்ணீரை எடுத்து ஆஷிஷ் மேல் சித் ஊற்றினான். 

ஆஷிஷ் சிரித்து கொண்டே ஓகே no problem.. என பேச.. 

அந்த நேரம் சதீஸ் கிட்ட இருந்து போன் வந்தது. 

என்ன? 

நவீன் குமாரை பார்க்க போகனும்! அதுக்கு தான் கால் பண்ணேன்! என கூறினான். 

இப்போ எங்கே இருக்க? என சித் கடுமையுடன் கேட்டான். 

இப்போ ஆன் தி வே! 

சரி என்னை பிக் பண்ணிக்க.. நான் @#  ஹோட்டல் பக்கம் இருக்கேன். 

நான் இன்னும் அஞ்சு நிமிசத்தில் அங்கே இருப்பேன் வா!. 

ஹான் என கோட் பட்டனை போட்டு கொண்டே கிளம்பினான். 

சித்து!   என ஆசிஷ் அழைக்க..

புரொடெக்ட் லாஞ்ச்  எல்லா இடத்துலயும் ஒரே நேரத்தில் நடக்கும். பட் இன்னாகரேசன் காலேஜ்ல நடக்க போகுது வந்து சேரு! என கிளம்பினான். 

அவன் சென்ற ஒரு சில நிமிடத்தில் நவ்யா வந்தாள். அவள் சித்தார்த்தை தேட.. 

ஆஷிஷ் அந்த போஸ்ட்டை பார்த்து திருப்தி பட்டு கொண்டே இதன் யாவுக்கு அனுப்பினான். ஹே இதயா நீ Facebook twitterல இருக்கியா? என தட்டி விட்டான். 

இல்லையே! அது எனக்கு எதுக்கு சார்! என அவனுக்கு பதில் கூறினாள். 

இது சோசியல் கனெக்ட் பாயிண்ட் இதயா சரி விடு இன்ஸ்டாகிராம்ல இருக்கியா? 

இல்லையே! 

அப்போ இந்த போஸ்ட் எப்டி பார்ப்ப? என ஆஷிஷ் கேட்டான். 

சரி இருங்க டவுன்லோட் பண்றேன்! என அவள் அந்த வேலையில் இருக்க..

ஆசிஷ் நிமிர்ந்தான். நவ்யா சுற்றிலும் தேடி பார்க்க..

என்ன நவ்யா யாரை தேடுறீங்க? 

சித்து இங்கே தானே இருந்தாரு! அவரை தான் சார் எங்கேன்னு பார்த்தேன். 

அவன் ஜஸ்ட் இப்போ தான் கிளம்பி போனான். 

அப்டியா! என அவள் பெரு மூச்சை விட்டாள். 

அதற்குள் ஆசிஷ்க்கு இதன்யா மெஸேஜ் செய்தாள். 

நவ்யா முன்னால் நடக்க.. ஆசிஷ் பாய் என சொல்லி விட்டு அவனுடைய ஹோட்டல் ரூமுக்கு சென்றான். 

ஹே நான் உன்னை ஃபாலோ பண்றேன். ஆமா பயோ ல என்ன வச்சிருக்க? இது என்ன போட்டோ சாமி போட்டோ போல இருக்கே! என ஆஷிஷ் சொல்ல..

ஆமா.. எனக்கு பிடிச்ச காட்! 

ஆஷிஷ் அவளின் பயோ படித்து விட்டு ஓ கெமிஸ்ட்ரி டீச்சர்! அப்புறம் என்ன லாவண்டர் ஃபேவரட்.. love is chemistry! அப்புறம் என அவன் படிக்க..

சார் சார்! என அவள் மெஸேஜ் செய்தாள். 

என்ன ஆச்சு? 

என்னை நிறைய பேர் ஃபாலோ பண்றாங்க ஆனால் அவங்க யாருன்னு எனக்கு தெரியாதே நான் என்ன பண்ணட்டும் என கேட்டாள். 

அப்படியே விடு யாரையும் ஃபாலோ பண்ணாத! நீ என்னை ஃபாலோ பண்ணு! என கூறினான். 

ஓகே சார் என அவள் சொல்ல..

இது மட்டும் சித்தார்த்துக்கு தெரிஞ்சா இன்னும் பொறாமை படுவான். அவனை வச்சு நீ எப்படி சமாளிக்கற! அற்றாசிட்டி பண்றான். என ஆசிஷ் கூற..

அவரை பத்தி பேசாதீங்க என பொறாமை படட்டும்! அவரை பத்தி குட்டி வயசுல நடந்த விசயம் எதுவும் சொல்லுங்க நான் அவரை டீஸ் பண்ணனும்! 

அப்டியா அவ்ளோ தான இப்போவே சொல்றேன் என ஆஷிஷ் சித்தார்த்தை பற்றி கூற ஆரம்பித்தான். 

நீங்க உள்ளே வாங்க என மோகன் அழைத்து செல்ல..

அந்த நேரம் ரம்யா ஒரு file சைன் வாங்க உள்ளே சென்று விட்டு மீண்டும் திரும்ப..

சித்தார்த் வந்து கொண்டிருந்தான். 

போச்சு! ஓ காட் சித்து இங்கே என்ன பண்றான்? என எங்கே ஒளியலாம் என ரெஸ்ட் ரூம் பக்கம் ஓடி விட்டாள். 

நவீன் கடுமையான முகத்தை வைத்து கொண்டு அவனுடைய அறையில் இருந்தான். 

பாஸ் என கதவை திறந்து கொண்டே உள்ளே அழைத்து வந்தான். 

சதீஸ் இன்விடேசன் எடுத்து சித்தார்த் கிட்ட கொடுக்க..

அதை வாங்கிய சித் நவீன் முன்னால் நீட்டினான். 

நவீன் மோகனை பார்க்க..  மோகன் சித்தார்த்தை பார்த்து பயந்து அதை வாங்காமல் நின்றான். 

நவீன் மோகனை முறைத்து கொண்டே அதை வாங்கினான். 

“ரில்சல்ட் என்னன்னு தெரியணும்னா! லிட்டில் ஹார்ட் இன்னாகரேசன்க்கு வந்திடுங்க.” என திரும்பினான். 

அவளை என் கிட்ட கொடுத்திடு..

“பெட்டர் இதை அவள் கிட்டயே வந்து கேளு! வா!” என சித் கூறி விட்டு அவனை கேவலமாக பார்த்து விட்டு வெளியே சென்றான். 

நவீன் மேஜையின் மீது ஓங்கி குத்த.. 

“ரம்யா சித்து” என சதீஸ் சொல்ல..

Ignore it …. But let see..

தொடரும்..

Conment pannunga ratings konjam like share pannunga 

EPI 280

இதன்யா அவளுடைய அறையில் ஆஷிஷ் கிட்ட மெசேஜில் பங்க்ஷன் எங்க நடக்க போகுது?  என்று கேட்க.. 

ஆசிஸ்  சிரிப்பது போல இமோஜியை அனுப்பி விட்டவன்.  என்ன தெரியாத மாதிரி கேட்கிற? உங்க காலேஜ்ல தான் பங்க்ஷன் நடக்குது! என்று கூறினான். 

அப்படியா நிஜமாகவே எனக்கு தெரியாது! என்று இதன்யா கூற..

 ஆசிஷ்  அடுத்ததாக நீண்ட நேரம் டைப் செய்தான்.

என்ன இவ்வளவு நேரம் டைப் செய்யறாரு?. அப்படி என்ன விஷயமா இருக்கும்? என்று இதன்யா காத்திருக்க..

மெசேஜ் வந்து சேர்ந்தது.“ பங்க்ஷன் லிட்டில் ஹார்ட்  சப்ளிமெண்ட் தான் மட்டும் தான்  உங்க காலேஜ்ல ரிலீஸ் பண்ண போறாங்க!  ஆக்சுவல் காம்போ கலெக்ஷன் அன்னைக்கு நைட்டு officially லான்சிங் நடக்க போகுது!  டோட்டலி ரெண்டு பங்க்ஷன்! த்ரீ டேஸ் கழிச்சு டீ பார்ட்டி கொடுக்கிறதா, சித்  சொல்லி இருக்கான்.  உனக்கு இத பத்தி தெரியாதா? சரி அதுக்கு நீ வருவியா?” என்று கேள்வியுடன் முடித்தான். 

இதன்யா அடுத்த மெசேஜாக “அதை பத்தி தெரியல சார்! சரி ஓகே நம்ம காலேஜ்ல பார்க்கலாம்!  உங்க கூட fan-ஆ போட்டோ எடுத்துக்கலாமா? என்று கேட்டான். என்று தட்டி விட்டாள். 

இதை கேட்டதும் ஆஷிஷ் சிரித்துக்கொண்டே “நீங்க ஃபேமஸ் ஆக்டர் சித்தார்த் கிருஷ்ணாவின் மனைவி! ஹன் அது மட்டுமா? லிட்டில் ஹார்ட் சாப்ளிமெண்ட் மாஸ்டர் மைண்ட்! அதோட பவுண்டர்! அது கூடவே செலிப்ரட்டி! இப்பவே இன்ஸ்டாகிராமில் உங்க ஃபாலோவர்ஸ் இன்க்ரீஸ் ஆகிட்டே இருக்காங்க! இந்த சிட்டுவேசன்ல  மிஸ்ஸஸ் இதன்யா சித்தார்த் கூட நான் போட்டோ எடுக்குறது! எனக்கு தான் ப்ரௌட் மொமெண்ட்!” என்று தட்டி விட்டான். 

அதைக் கேட்டதும் அவள் சிரிப்பது போல்,  தன் முகத்தை மறைத்துக் கொள்வது போல் இமோஜியை தட்டி விட்டாள். ஆசிஸ் ஒரு பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போல தட்டி விட அவள் சிரித்துக் கொண்டே அதை பார்க்க.. 

அந்த நேரம் அவளுடைய அறைக்குள் தடதடவென்று ஓடி வந்தாள்.  ஒருத்தி!.. வேற யாரு?  நம்ம ரோஷினி தான்! 

அச்சோ முருகா! அப்பா! அம்மா! என்று இதன்யா பயத்தில் கத்தினாள்.

ஹே ஹே எதுக்குடி கத்துற?  நான் தான் என்று ரோஷினி கூறினாள்.

அப்பா  என்று அவளை பார்த்து  பெருமூச்சை விட்டு இதயத்தை தட்டிக் கொண்டவள். 

என்னாச்சு?  எதுக்கு இப்படி தடதடன்னு ஓடி வரீங்க?  என இதன்யா கேட்க

ரோஷினி பெருமூச்சை விட்டு ஆச்சரியமாக கண்களை விரித்துக்கொண்டே, நீ இன்ஸ்டாகிராமில் இருக்கியா? பேஸ்புக்ல இருக்கியா? என்று கேட்டாள்.

ஏன் இப்போதான் ஓபன் பண்ணேன்!  என்று கூறினாள்.

அப்படியா ஆனா பாரு உன்ன அந்த ஆஷிஷ் ஃபாலோ பண்றானா?  பிராடு பைய! என்னை  ஃபாலோ பண்ணல! என சொல்லி அவளின் போனை பிடுங்கிய ரோஸ்னி அதுக்குள்ள ரிஷி கூட உன்னை ஃபாலோ பண்றாரு! ரிஷி கிட்ட நான் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது டி!  இன்னும் என்னை அவன்  பாலோவே பண்ணல! என்று ரோஷினி  கவலையுடன் கூறினாள். 

இதன்யா அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணாடியை மூக்குக்கு தள்ளியவள்.  இப்போ ரிஷி சார் உங்கள ஃபாலோ பண்ணலையா? ஒன்னும் கவலை இல்லை! நாளைக்கு உங்க கழுத்துல தாலி கட்டுனதும், ரிஷி டசார் தான் உங்க பின்னாடியே  தான பாலோ பண்ணுவாரு! அது போதுமே! பேஸ்புக்ல கூட ஃபாலோ பண்ணனுமா?  என்று கேட்க..

ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல! அவனுக்கு சப்போர்ட் பண்றதுக்கு மட்டும் வந்துடு! என்று ரோஷினி கூற..

உடனே இதன்யா புருவத்தை சுருக்கிக் கொண்டு அவன்? இவன்? அப்படி எல்லாம் பேசக்கூடாது  வாங்க!.. போங்க!..  உட்காருங்க!.. மாமா!.. சாப்பிடுங்க மாமா!.. என்ன அத்தான்!.. அப்படித்தான் பேசணும்!..

 மாமாவா என்று ரோஷினி ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு பார்க்க..

இதன்யா சிரித்துக்கொண்டே உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா?  என்று கேட்க..

என்ன விஷயம்?  என்று ரோஷினி அவளை பார்த்தாள். 

இதன்யா சிரித்துக்கொண்டே ரோஷினியின் காதுக்கு அருகில்  வந்தவள்.  “காலேஜ் டைம்ல எங்க அக்காவை  ஃபாலோ பண்ணும் போது, என்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு என்னை மாமான்னு கூப்பிடனும்னு எங்க அக்காவ பாத்து சொல்லுவாரு! அப்போ எனக்கு புரியல! ஆனா அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது! எங்க ரிஷி அண்ணாவுக்கு  மாமான்னு கூப்பிட்டா , ரொம்ப பிடிக்கும்னு,  நீங்க வேணா ட்ரை பண்ணுங்க! ”என்று கூறினாள்.

இதை கேட்டதும் ஒரே நிமிடத்தில் ரோஷினி முகம் மாற.. 

என்ன ஆச்சு உங்களுக்கு?  என்று இதன்யா கேட்டாள்.

 உங்க அக்கா ரிஷியை  மாமானு கூப்பிடு இருக்காளா?  என  முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கேட்க..

 இதன்யா நாக்கை கடித்துக் கொண்டே அப்படியே ரோஷினியை பார்த்தாள்.

சொல்லு! பதில் சொல்லு! என்று கோபமாக கேட்க..

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டு சாரி மேம்! நான் தெரியாம , இதை பத்தி உங்ககிட்ட பேசிட்டேன்! அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல! என்று கூற..

இதை கேட்டதும் ரோஷினி அவளின் கழுத்தை பிடித்து எவ்வளவு கொழுப்பு இருந்தா?  நீ என்ன மேம்னு கூப்பிடுவ? திமிராடி!  இப்ப என்னடி பேசினாங்க! உன்  அக்காவை எல்லாம் இனி மறந்துடு! நீ எங்க வீட்ல கல்யாணம் பண்ணி இருக்க?  நீ எங்க வீட்டு பொண்ணு!  இந்த மேம் கூப்பிடுற வேலை எல்லாம், இங்க வச்சுக்காத! நான் சும்மாதான் கேட்டேன்! எனக்கு பொசசிவ்னெஸ் இருக்க கூடாதா?  என்று புருவத்தை சுருக்கி கூறினாள். 

அது அப்படி இல்ல என இதன்யா தயங்க .. ரோஸ் சிரித்துக்கொண்டே இன்னொரு விஷயம் தெரியுமா?  உங்க அக்கா இப்போ ரிஷிக்கு என்ன முறை தெரியுமா? தங்கச்சி முறை! அதனால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!  இனிமே இந்த மேம்னு கூப்பிடுற வேலை, முகத்த மாத்தர வேலை எல்லாம் சித்தார்த்தத்தோட வச்சுக்க! என்கிட்ட எல்லாம் வந்துடாத!  என்று மிரட்ட..

இதன்யா அவளை பார்த்து சிரிக்க.. 

என்ன சிரிக்கிற? என்னை  பேஸ்புக்,  இன்ஸ்டாகிராம்ல ஃபாலோ பண்ணு! என எழுந்தாள்.

ஏன் கிளம்புறீங்க?  என்று அவள் கேட்க.. 

இல்ல சித்தார்த் வர வேண்டிய நேரம்!  நான் உங்க ரூம்ல இருந்தா, அவன் திட்டுவான்! அதனால நான் கிளம்புறேன்!

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல!..வாங்க  நீங்க இங்கே இருங்க!..

வேணாம் வேணாம்! எனக்கு எதுக்கு வம்பு?. என்று ரோஷினி நகரப் போக..

சரி அப்போ நான் உங்க கூட வரேன்! 

என்ன ஆச்சரியம்? எப்போ கெஸ்ட் ரூமில் இருந்து,  இங்க எங்க அண்ணன் கூட ஸ்டே பண்ண வந்தியோ! அப்போ இருந்து ஒரு தடவை கூட என்னை  பார்க்கவோ,  பேசவோ,  என் ரூம் பக்கமே வர மாட்ட! இன்னிக்கு என்னடானா? நீயாவே வரேன்னு சொல்ற? என்ன மேடம்! ஹான் அண்ணி! என்ன அண்ணி! என ரோஸ் கேட்டாள். 

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி என்ன பண்றதுங்க அண்ணி? இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுது எங்க அண்ணா கூட ரிஷி அண்ணா கூட பிஸியா போன் பேசிட்டு இருப்பீங்க? அங்க எலி மாதிரி எனக்கு என்ன வேலை என்று கேட்டால்

ஹே ஓவரா நடிக்காதடி! உன்ன பத்தி எனக்கு தெரியாதா? சொல்லு! என்ன விஷயம்? என்று ரோஷினி கேட்டாள்.‌

அது அவருக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கும்! ப்ராடக்ட் லான்ச் நடக்கிறதுல! அதனால நான் உங்க கூட வந்து டைம் ஸ்பென்ட் பண்றேன்! நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்! என்று கூற..

சரி இன்னிக்கு ஒரு நாள் தான் ப்ரீ!  நாளையிலிருந்து காலேஜ் ஸ்டார்ட் ஆகுது என்று பேசி கொண்டே  ரோஷினி இதன்யா இருவரும் கீழே அவளுடைய அறைக்கு  சென்றார்கள். 

சித்தார்த் அவனுடைய தாத்தா கிருஷ்ணனுக்கு போன் செய்து காலேஜில் நடக்க போகும் பங்க்ஷனை பற்றியும், லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்டை பற்றியும் கூறினான்.

அவர் சிரித்துக்கொண்டே சந்தோஷமாக சரி நான் வந்துடறேன்! பரவாயில்லையே?  என்னோட பேரன் ரொம்ப வேகமா முன்னேறி போறானே! கேட்க சந்தோசமா இருக்கு! இனி இறங்கு முகம் இல்ல! எப்போவும் நீ நட்சத்திரம் தான்! இதுக்கு காரணம் ரகசியம் என்ன?   யாரு என்று கிருஷ்ணன் கேட்க…

எல்லாமே அவளால தான்!  என்று ஒற்றை பதிலுடன் சித்தார்த் முடித்தான்.

கிருஷ்ணனுக்கு திருப்தியாக இருந்தது அவர் சரி என போனை வைத்தார். 

சித்தார்த் ஒரு சின்ன புன்னகையுடன் அப்படியே அமர்ந்திருக்க…

சதீஷ் அவனை அழைத்தான்.  சித்தார்த்  அமைதியான பார்வையுடன் கனிவாக குரலில்  என்ன சத்யா என்று கேட்டான். 

அது ரம்யா!  அங்க என்ன பண்றா?  ஆமா அந்த நவீன் உன்கிட்ட என்னமோ கேட்டானே? என்ன கேட்டான்?  அவளை கொடுத்துடுன்னு சொன்னான்! யாரை சொல்றான்?  அவன் அது ரம்யாவா?  என்று கேட்க.. 

சித்தார்த் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அது ஒன்னும் இல்ல! என்று கூறினான். 

சொல்லு இப்படி மறைச்சு மறைச்சு தான் நிறைய பிரச்சனை வருது! முன்னாடியே சொல்லு! அபியோட அப்பா கிட்ட எதுக்கும் சொல்லி வைக்கலாம்!என்று கூற..

சித்தார்த்  கொஞ்சம் தீவிரமாக தன் நண்பனை பார்த்தவன். அந்த அளவுக்கு அவசியமில்லை. இவனெல்லாம் பெரிய ஆளே கிடையாது! நான் பாத்துக்குவேன்! என்று  கூறினான். 

அப்போ என்கிட்ட சொல்லணும்னு, உனக்கு தோணல! சரி விடு என்று சதீஷ் திரும்பிக்கொண்டான்.

சித்தார்த் உடனே ஓட்டுநரை பார்க்க.. 

அவர் ஒரு இடத்தில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு வெளியே சென்றார்.  சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு அவன் யாரை பத்தி சொன்னான்னு உனக்கு தெரிஞ்சே ஆகணுமா?

ஆமா என்பது போல சதீஷ் பார்த்தான். 

அவன் இதன்யாவை பத்தி சொன்னான். 

 சதீஷ் ஒன்றும் புரியாமல் என்ன சொல்ற என்று கேட்க..

ஆமா இதை பத்தி யாருக்கும், அவ்வளவா தெரியாது! அவனுக்கும் எனக்கும்  சண்டைன்னு தெரியும்!  ஆனா எதுக்கு அவன் இன்னும் திவிரனா தலையிட காரணம்!  அவன் இதன்யா மேல ரொம்ப பைத்தியமா திரிகிறான்!

சதீஷ் ஷாக் ஆகி என்னடா சொல்ற? எப்படி இது! பாப்பாவை அவனுக்கு எப்படி தெரியும்?  என்று கேட்க..

சித் ஒரு நான்கு ஐந்து நிமிடத்தில் அந்த கதையை சொல்லி முடித்தான். 

 இதை கேட்டதும் சதீஷ்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  என்னடா மச்சான்?  நீ அப்படியே சும்மா இருக்க!  எப்படி! இதை கேட்டா எனக்கே  அவனை எனக்கு  கொல்ற ஆத்திரம் வருதுடா!  என்று கைகளை முறுக்கினான். 

சித்தார்த் பொறுமையாக அவனைப் பார்த்து எனக்கும் அப்படி தான் தோணுது!  ஆனா என்ன பண்றது?  அவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல! கொஞ்சம் சைக்கோ!  என்று கூறினான். 

சதீஷ் கோபமாக பற்களை கடித்துக் கொண்டே அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இன்னொருத்தன் பொண்டாட்டி மேல ஆசைப்படுவான்?  என்ன ஜென்மமா இருப்பான்? அபி அப்பா சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கேன்!  அந்த ராஜசேகர் கூட அப்படித்தான் போல! நாம பவானி அத்தை மேல ஆசை வச்சிருக்காங்கலாமே! என்று சொல்ல.. 

இதைக் கேட்டதும் சித்தார்த்துக்கு சட்டென அவர்கள் இருவரின் அதாவது பவானி மற்றும் ராஜசேகர் இருவருடைய அடுத்த கட்ட உறவுக்கு…  உதவி செய்வதை பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போதைக்கு அது நல்ல நேரம் இல்நே என்று நினைத்தவன் அமைதியாகிவிட்டான்.

சதீஷ் கோபத்துடன்“ நீ சும்மா விடாதடா!  அவனை ஏதாவது பண்ணியே ஆகணும்!” ஆமா இது பாப்பாவுக்கு தெரியுமா? என கேட்டான். 

அவளுக்கு இதை பத்தி தெரியாது ஆனால் இன்றேஸ்ட் இருக்குன்னு சொல்லி வச்சிருக்கேன்! 

சதீஸ் அவனிடம் கொஞ்சம் புன்னகையுடன் பாப்பா பத்தி எனக்கு தெரியும்! அவள் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்றா! நீ அவனை விடு மச்சி! நீ நேரா இதன்யா கிட்ட விடு! அவள் கிட்ட ரெண்டு அரை வாங்கினால் அடங்குவான்! B* என முனக…

சித் சிரித்து கொண்டே சத்யாவே கோப படுறான்! என பார்த்தான். 

சதீஸ் எதையோ யோசித்து அவன் ஆறு மாசத்துக்கு முன்னாடி லாஞ்ச் பண்ண அந்த தன்யா ஹேர் வாஷ் காம்போ! அது! என சித்தார்த்தை பார்க்க..

அது தன்யா இல்ல இதன்யா மிஸ்டர் நவீன் குமார் காதலியை பார்க்காமலேயே சிக்னல்ல பார்த்து அவளை மிஸ் பண்ணி அவளோட முடிய பார்த்து லவ் பண்ணி அப்படியே பைத்தியம் ஆகி இருக்கார் என கைகளை இறுக்கி மடக்கி கொண்டே சித்தார்த்  கூறினான். 

சதீஸ் புருவம் சுருக்கி அப்போ பாப்பா எங்கே இருந்தாள்? 

சித் எழன புன்னகையுடன் அவள் ஆல்ரெடி வர வேண்டிய இடத்துக்கு வந்துட்டா! என கண்ணை மூடி திறந்தான். 

சதீஸ் சிரித்து கொண்டே அவள் உனக்கு தான் அப்டின்னு ஏற்கனவே எழுதி இருக்கு!

அவள் என்னோட பொருள்! பார்த்தாலே விட மாட்டேன்! இவன் என் கிட்ட கேட்கிறான்! எதோ என்னை கட்டு படுத்திட்டு இருக்கேன். 

 விடு பாத்துக்கலாம்! என்று சித் கூறினான்.

*

இங்கே சந்திர மௌலி வீட்டில் அப்பொழுது தான் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு முடித்தார்கள். 

அந்த நேரம் தன் தந்தைக்கு போன் வர.. ரவி போனை எடுக்க சென்று எனக்கு தான் வரும்! என்னோட ஏஞ்சல் கல்யாண விசயமா ஒரு கால் அப்டின்னி நினைக்கிறேன். என போனை எடுத்தார். 

ஹலோ மிஸ்டர் சந்திர மௌலி கிட்ட பேசணும் என சொல்ல.. 

ரவி நேராக டாடி உங்களுக்கு தான் போன் என கொடுத்தார். 

சொல்லுங்க என அவரும் பேச.. லிட்டில் ஹார்ட்டா? அப்டின்னா? என அவர் கேட்டார். 

ரவி தன் தந்தை பேசுவதை கவனிக்க.. ஒரு சில நிமிடம் கழித்து போனை வைத்தவர் பெரு மூச்சுடன் எழுந்தார். 

என்ன டாடி? என்ன கேட்டாங்க? என ரவி கேட்க.. 

சித்தார்த் புதுசா ஒரு புராஜக்ட் பண்ணிட்டு இருக்கான். நெக்ஸ்ட் வீக் ரிலீஸ் ஆகுது! அதோட PVT யாருன்னு போன் வந்தது. 

புரியல! என ரவி கேட்க..

சந்திரமௌலி தன் மகனை பார்த்து உன்னோட பையன் புதுசா ஃபார்மசெடிகள் கம்பெனில ப்ராஜெக்ட் பண்ணி இருக்கான்.  அது ஸ்வர்ணம்,  சந்திரமௌலி பிரைவேட் லிமிடெட் கீழே வருதான்னு டை அப் வசவச்சுக்கறதுக் வ ஷேர் ஹோல்டர் நிறைய பேர் கால் பண்ணிட்டு இருக்காங்க.  இதுதான் ஃபர்ஸ்ட் கால்ன்னு நினைக்கிறேன்.  இத பத்தி ஏற்கனவே எனக்கு நியூஸ் வந்தது.  ஆனால் அது பவானி குரூப்ஸ்டதுன்னு எனக்கு இப்பதான் தெரியும்!  உன் பையன் ரொம்ப பிரில்லியன்ட்டா இருக்கான்! என்று சோகமாக கிளம்பினார்.

ரவிச்சந்திரன் புருவத்தை சுருக்கி “இப்போ என்ன நடந்ததுன்னு, இப்படி முகத்தை வச்சுட்டு போறீங்க! நம்மளோட பிசினஸ்ல என்ன குறை ?அவன் பண்ணா என்ன? என்று கேட்டார்.

சந்திரமௌலி ரவிச்சந்திரன பார்த்து “அவன் என்னோட ரத்தம்!  என்னோட பேரன்! இந்த வீட்டோட முதல் வாரிசு! தாய் வழி தாத்தா…  கிருஷ்ணன் குடும்பத்திலேயா?  அவன் பிறந்தான்?  அவன் இந்த சந்திரமௌலி குடும்பத்தோட ரத்தம்! ஆனால் அந்த பிசினஸ் மூளை பாரு! அங்க போய் வேலை செய்து!  அதுவும் எனக்கு சந்தோஷம்தான்! என் பேரன் என் கூட இல்ல! இதெல்லாம் நடக்குறதுக்கான காரணம்!  நீதாண்டா!” என்று வருத்தத்துடன் மேலே சென்றார். 

ரவிச்சந்திரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  அந்த லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட் பற்றிய செய்திகள் அனைத்தையும் வலைத்தளங்களிலும், youtube, facebook பக்கங்களிலும் பார்த்தார். 

அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  என் பையனுக்கு இவ்வளவு அறிவா? இவ்வளவு திறமையா இருக்கானா?  என்று ஒரு பக்கம் பெருமையாகவும் தான் இருந்தது. 

ஏனென்றால் இந்த அறிவு கொஞ்சம் கூட ஆரவ் கிட்ட  கிடையாது. அதே போல ரோஸ்னி பூவை விட மென்மையானவள்.  சிறு குழந்தை போல அவளுடைய எண்ணம்.. ஆனால்  சித்தார்த் சந்திரமவுலி, பவானி இருவருடைய பிசினஸ் மூளையையும் கொண்டு பிறந்து இருக்கிறான்.  அவனுடைய உருவம் அப்படியே ரவிச்சந்திரன் போல இருக்கும்!  தன்னுடைய மகனின் படத்தை ஜூம் செய்து பார்த்தார்.  உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது. 

இந்த படம் ரவிச்சந்திரன் இளவட்டத்தில் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது இருந்த ஜாடையை ஒத்திருந்தது. ஒரு பெருமூச்சை விட்டு தலையை கோதியவர். ரோஷினியோட கல்யாணத்துல ஏதாவது பண்ணி,  பவானியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடனும்! அதேபோல இவன்கிட்டயும் நம்மள பத்தி புரிய வைக்கணும்! இவன்  இந்த ராஸ்கல் மட்டும் சம்மதிச்சுட்டா, பவானி இங்கேயே இருப்பா!  எங்க அப்பாவும், எங்க அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க! சித்தார்த் இந்த வீட்ல இருப்பான்!  யாரும் எங்கள கேவலமா பேச மாட்டாங்க! என்று ரவிச்சந்திரன் நினைத்தார். 

(ஆனால் நான் என்ன நினைக்கிறேன்?  சித்தார்த்  என்ன நினைக்கிறான்? போக போக தெரியும். )

உடனே அவர் மனதில்  முதல்ல இந்த ராஸ்கலோட மனச மாத்தணும்!  இவன் அப்படி எல்லாம் மாற மாட்டானே! என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்? என்று அவர் யோசித்தார். 

அந்த நேரம் ஒரு யோசனை தோன்றியது.  நேராக பிரபல இயக்குனர்கள் அனைவருக்கும் கால் செய்து ஒரு கம் பேக்!  மாஸா கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.  அதுக்கு கதை இருக்கா?  என்று கேட்டார். 

ரவிச்சந்திரன் பேசியதும் அவர்கள் அனைவரும் சந்தோஷமாக என்ன சார்?  நீங்க ஒரு படம் பண்ணா கண்டிப்பா அது ஹிட்டு தான் அடிக்கும்! அதே போல உங்களோட படம் போட்ட காச சரியா எடுத்துடும். என்று சொல்ல.. எனக்கு சரியான டைரக்டர் வேணும் என அவர் சொல்ல..

அனைவரும் ஒரே ஒரு இயக்குனரை பரிந்துரை செய்தார்கள். உடவே அவர் போன் செய்தார். ஹலோ நான் ரவிச்சந்திரன் பேசுறன். 

சொல்லுங்க சார்! நீங்க எனக்கு கால்? என கேட்க… 

ஒரு படம் பண்ணனும்! 

ஹான் பண்ணலாம் சார்! என பதில் வர.. 

ஆனா இதுல ஒரு கண்டிஷன் இருக்கு என்று அவர் கூற…

உடனே அந்த இயக்குனரோ என்ன சார் சொல்றீங்க என்று கேட்டார். 

 இதுல ரெண்டு ஹீரோ நான் ஓல்ட் வெர்ஷன்ல வருவேன்.  நியூ வெர்ஷன்ல இன்னொரு ஹீரோ நடிக்கணும்!  அந்த மாதிரி கதை இருக்கான்னு கொஞ்சம் பாருங்க! ரீமேக் கூட ஒகே எந்த மொழியில் இருந்தாலும் புரோப்பெர் காபிரைட் பர்மிட் வாங்கி பண்ணிடலாம். .இந்த படம் ஹிட் அடிக்கணும் என்று கூறினார்.

அந்த இயக்குனர் புரியாமல் என்ன சொல்றீங்க சார்?  எனக்கு தெளிவா சொல்லுங்க என்று கேட்க..

ஹீரோ நானும் சித்தார்த்தும் நடிக்கணும்! என்று கூறினார்.

இதை கேட்டதும் இயக்குனர் அமைதியாகிவிட

என்ன சொல்லுங்க?  நீங்க பண்றீங்களா?  இல்ல வேற யாரையும் நான் கூப்பிடட்டுமா?  என்று கேட்க இயக்குனர் தயங்கினார். 

சார் எப்படி சித்தார்த் சார இதுல என்று தயங்கிக் கொண்டிருக்க.. 

ரவிச்சந்திரன் ஆளுமையுடன் எனக்கு அவன் தான் நடிக்கணும்!  அவன மட்டும் நடிக்க வச்சிடுங்க அப்படி பண்ணிட்டா தொடர்ந்து ஸ்வர்ணம் புரொடக்ஷனில் இருந்து உங்களுக்கு நிறைய படம் வரும்! என்ன சொல்றீங்க? இந்த டீலுக்கு ஓகேவா? என்று கேட்டார்.

இயக்குனர் அமைதியாக இருக்க..  அப்ப நான் வேற யார்கிட்டயாவது பேசட்டுமா?  என்று ரவிச்சந்திரன் கேட்க..

சர்  சார் நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.

எனக்கு சரி அப்படிங்கற பதில் மட்டும் தான் வேணும் என்று சொல்லிவிட்டு ரவிச்சந்திரன் போனை வைத்தார். 

*

சித்தார்த் நேராக வீட்டுக்கு வந்தான் அவன் வீட்டுக்கு வர  நடுசாமம் ஒன்றைத் தொட்டிருந்தது. இவ்ளோ லேட் ஆகிடுச்சு! என்று கலைப்புடன் அவனுடைய அறைக்குச் செல்ல..

அங்கு இதன்யா இல்லை அவன் தூக்க கலக்கத்தில் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து பிரஷ் ஆகி வந்து பார்க்க.. 

இதன்யா அங்கு இல்லை!  எங்கே போனா?. இங்க தான இருந்தா?  என்று நேராக கீழே  வந்தான்.

கிச்சனில் யாருமில்லை..  காவலர்கள் மட்டும் நான்கு பேர் ஒவ்வொரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். 

முன்னாடி இருப்பவரிடம் சென்று இதன்யா எங்கே என்று கேட்டான்.

பாஸ் அவங்க ரோஷினி மேம் கூட இருக்காங்க என்று கூறினான்.

என்ன என்ற சித்தார்த் புருவம் சுருக்கி கேட்க..

ஆமாம் பாஸ் ரோஷினி மேம் கூட தான் சாப்பிட்டாங்க ரெண்டு பேரும் அவங்க ரூம்ல இருக்காங்க என்று சொல்ல..

சித்தார்த்துக்கு நன்றாக தெரிந்தது. இதன்யா இன்று அவளுடன் தூங்கிக் கொண்டிருக்கிறாள். 

 அப்படியா என்று கடுப்புடன் கேட்டு நேராக ரோஷினியின் அறைக்கு  சென்றான்.  ரோஷினி நன்றாக இதன்யாவை கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். 

எவ்வளவு தைரியம் இருந்தா?  இவ என்னை விட்டு இங்க வந்து  தூங்கிட்டு இருப்பா!  என்ன விட்டுட்டு சாப்பிட்டு இருக்கா!  என்னோட வீடியோ கால கட் பண்ணி இருக்கா!  எவ்வளவு தைரியம் இருக்கும்?  இவளோட மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கா..? என அவன் நினைக்க அந்த நேரம்  போன் வந்தது.

இந்த நேரத்துல யார் என்று பார்க்க..  அவனுக்கு வேற யார் கூப்பிட போறா?  ஸ்டார்ஜியா அழைத்தாள். 

இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கா என்று அவன் வெளியே வந்து பேச..

ஜியா ஒரு  நிமிடம் தயங்கிவிட்டு சாரி பாஸ்! உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம்!  தெரியுமா?  தெரியாதானு தெரியல! அதை இன்ஃபார்ம் பண்றதுக்கு தான் கால் பண்ணேன்! 

என்ன விஷயம் என்று சித்தார்த் கேட்டான். 

பாஸ் இதன்யா பேஸ்புக்லயும் இன்ஸ்டாகிராம்லயும் லாகின் பண்ணி இருக்காங்க! 

 என்ன என்று சித்தார்த் கேட்க ஆமாம் பாஸ் அவங்க ரெண்டும் புதுசா அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருக்காங்க!  இதனால நமக்கு ஏதாவது அனானிமஸ்,  பிராப்ளம்ஸ்,  செக்யூரிட்டி சம்திங் தர்ட் கிரேட தேர்ட் பார்ட்டிஸ்,  யாராவது கனெக்ட் பண்ணி,  நம்மள டிராக் நம்ம பிசினஸ்க்கு ஏதாவது பிராப்ளம் ஆகுமான்னு,  கேக்குறதுக்கு தான் கால் பண்ணேன். அவங்களோட செக்யூரிட்டி டெக்னிக்கல் எல்லாம் டீம் வச்சு ஃபாலோ பண்ணவா? என ஜியா கேட்க..

 சித்தார்த் ஒன்றும் புரியாமல் சரி ஒரு நிமிஷம் இரு நான் உடனே கூப்பிடுறேன்.  என்று நேராக அவளுடைய போனை எடுத்தான். 

அதில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் சென்று பார்க்க அவளை அதற்குள் 500 பேர் ஃபாலோ செய்து இருந்தார்கள். எப்படி இது நடந்தது?  என்று இதன்யாவையும் ஃபோனையும் மாறி மாறி பார்த்தான். 

மாற்றம் இதன்யாவால் இல்லை! அந்த ஆஷிஷ் கவுடாவால் வந்தது!  இவனாலதா! இவனாலதா!  இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் இவன் தானா?  இவனால தான் எனக்கு பெரிய பிரச்சனை!  தலைவலி இவனை எங்கேயாவது பேக்கப் பண்ணி அனுப்பனும்! என்று பற்களை கடித்துக் கொண்டே நினைத்தவன்.   உடனே ஸ்டார்ஜியாவிற்கு கால் செய்தான். 

பாஸ் என்று அவள் பதிலளிக்க… அதெல்லாம் ஒன்னும் பிரப்ளம் இல்ல!  இது நார்மல் அக்கவுண்ட் தான்! நீங்க எப்பவும் வாட்ச் பண்ணிக்கிட் இருங்க அன்வாண்டட் மெசேஜஸ்,  அன்வாண்டட் கால்ஸ் ஏதாவது இது மூலமா வந்ததுனா! எனக்கு உடனே இன்பார்ம் பண்ணுங்க. என்று சித்தார்த் கூறினான். 

ஓகே பாஸ் என்று ஜீயா வைத்துவிட்டாள். படுக்கையில் படுத்து இருக்கும் அவளை  சித்தார்த் அவளை முறைத்துப் பார்த்தான் நான் வரலன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா? எப்படி தூங்குறா?  நான் சாப்பிட்டனானு கேட்டாளா? என்ன பத்தி அவளுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை! இங்கே வந்து தூங்குகிறாளா? இதுக்கு!… இதுக்கு!… நான் ஆபீஸ்லயே வேலை செஞ்சுட்டு இருப்பேனே! நாளைக்கு நேரத்திலேயே ஷூட்டிங் போயிடணும்! இவள அவாய்ட் பண்ணா தான் இவ திருந்துவா! என்று நினைத்தவன் .உடனே அவனது அறைக்கு செல்ல திரும்பினான். 

ஒரு நிமிடம் நின்றான். 

அது ஒரு நிமிஷம் அப்படியே விட்டுப் போக மனசு வரல! கொஞ்சம் முத்தம் எடுத்துக்கலாம்! என்று அவளின் அருகில் சென்றான். 

ரோஷினி அவளை கட்டிக்கொண்டு தூங்க… சித் மனதில்  நம்ம ஏன்?  அவளை விட்டு பிரிஞ்சு போய் தூங்கணும்?  நாம அவ கூடையே தூங்கலாம்! சரியா அஞ்சு மணிக்கு எழுந்து போயிடலாம்! என்று நினைத்தவன்.  

ரோஷினியின் உதடு மேல் உதடு கடித்துக் கொண்டு மேல் அன்னப்பற்கள் முன்னாடி வருவது போல் நவண்டையை கடித்துக் கொண்டிருக்க..

சித்தார்த் சலித்து கொண்டே  இவளுக்கு மனசுல இப்பதான் born baby!  நினைப்பு சலைவா கூடவே உதடு கடித்து எப்படி தூங்குறா?. கல்யாணம் பண்ண போற வயசுல இப்படி பண்ணிட்டு இருக்காளே? என்று நினைத்தவன்.  அவளின் உதட்டில் சுண்டி விட்டான்.

வலியில் அழுகையுடன் ரோஸ் கத்த ஆரம்பிக்க..

உடனே சித்தார்த்  ரோஷினின் கையில் பொத்தி வாயை அடைத்தான்.  கண்களால் அவளை மிரட்டினான். 

அவள் எழுந்து கத்த வர  அப்படியே…

அந்த பக்கம் வா என்று அஸ்கி வாய்ஸில் அழைத்தான்.

என்னடா?  எதுக்குடா அடிச்ச?  உனக்கு அண்ணனு மரியாதை கொடுத்தா நீ ஓவரா பண்ற ? விடுடா உன்னை இப்பவே அம்மா கிட்ட சொல்றேன்! தாத்தா கிட்ட சொல்றேன்னு ஆரம்பிக்க..

சித்தார்த் அவளிடம்  தயவுசெய்து கெஸ்ட் ரூம்ல போய் தூங்கு!..

நான் எதுக்கு கெஸ்ட் ரூம்ல போய் தூங்கணும் என்று ரோஷினி மீண்டும் படுக்கைக்கு செல்ல..

நீ இப்போ ஓகே கெஸ்ட் ரூம்ல போய் தூங்குனினா உனக்கு இந்த ரெண்டு மாசத்திலேயே கல்யாணம் நடக்கும்! அப்படி இல்லன்னா நான் கல்யாண தள்ளி போட சொல்லிடுவேன்! என்று சித் சொல்ல..

அவள் அதிர்ச்சியாகி திரும்பிப் பார்க்க..

நீ என்னோட தங்கச்சி தான்! உன்மேல நான் நிறைய பாசம் வச்சிருந்தேன்!  நீ நிறைய அந்த ரவிச்சந்திரன் அந்த ஆளு மாதிரி நிறைய தில்லாலங்கடி வேலை பண்ணாலும், உன் மேல எனக்கு நிறைய பாசம் இருக்கு அதனால நீ போய் கெஸ்ட் ரூம்ல தூங்குனனா! உனக்கு நான் என்னோட செல்ல தங்கச்சியா!  நினைச்சுக்குவேன்!  இல்லன்னா?  என்று அவளைப் பார்த்தான்.

ரவி…? 

நவீன் குமார்…? 

ரம்யா…? 

ரோஸ்…? 

சித்…? 

இதன்யா…? 

தொடரும்…

கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ஸ்டோரி எப்படி போயிட்டு இருக்கு சொல்லிட்டு போங்க!

EPI 281

உன் மேல எனக்கு நிறைய பாசம் இருக்கு அதனால நீ போய் கெஸ்ட் ரூம்ல தூங்குனனா! உனக்கு நான் என்னோட செல்ல தங்கச்சியா!  நினைச்சுக்குவேன்!  இல்லன்னா?  என்று அவளைப் பார்த்தான்.

ரோஸ் ஒரு பெரு மூச்சை விட்டு அவளை உன்னோட ரூமுக்கு தூக்கிட்டு போய் தூங்கு அண்ணா! எதுக்கு என்னைய டார்ச்சர் பண்ற? 

அப்டியா சரி போறேன் அதுக்கு முன்னாடி இதை பாரு! என போனை நீட்டினான். 

ரோஸ் சிறு வயதில் இருந்து இதுவரை அவள் தூங்கும் போது உதட்டை கடித்து ஜொல் விட்டு கொண்டே தூங்கும் படங்கள் தான் அது அனைத்தும் இதையெல்லாம் பாதி சுகிர்தா சித்தார்த்தின் பாட்டி பவானியின் அம்மா எடுத்து வைத்தது. மீதி எல்லாம் அவர் இறந்த பின் பவானி எடுத்து வைத்தார். 

ரோஸ் முறைத்து விட்டு அந்த படங்கள் அனைத்தையும் டெலிட் செய்தாள். 

என்ன டெலிட் பன்றயா? சரி பண்ணிக்க ஆல்ரெடி என்னோட ட்ரைவ் ல இருக்கு! இதை அப்படியே ரிஷிக்கு அனுப்பி விடுவேன். என சித் கூறினான். அதுவும் கடுமையாக தான் இருந்தது. 

ரோஸ் அவனை முறைத்து பார்த்தவள். நேராக கெஸ்ட் ரூம் சென்று விட்டாள்.

சித் ஒரு புன்னகையுடன் அது! என்று  அறையின் கதவை சாத்தி விட்டு, நேராக இதன்யாவின் அருகில் வந்தான்.  அவளை பார்க்க நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.  அவ்வளவு தூக்கமா டி! உனக்கு கொஞ்சம் கூட என்னோட நினைப்பு வரலல்ல! சரி அப்படியே இருக்கட்டும்! என்று ரோஷினியின் கபோர்டை திறந்தான்.

அதில் படுக்கை விரிப்பு,  போர்வைகள் என அனைத்தும் லைட் பிங்க் மற்றும் லைட் வயலட் என்று எல்லாமே பெண்களுக்கு பிடித்தமான நிறங்கள் இருக்க..  அதை பார்த்ததும் சித்தார்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேறு வழி இல்லாமல் அதில் இருந்து ஒரு புது போர்வையை எடுத்து அவளுக்கு பொருத்திவிட்டு அவனும் படுத்துக் கொண்டான்.

ஏசியை இன்னும் அதிகப்படுத்தி அவளை முகத்தைப் பார்த்தான்.  நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.  மீசைகள் உரச இதழுக்கு அருகில் வந்தவன்.  முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். மேல் உதடு கீழ் உதடு! என உரசி முத்தமிட அவளின் மொட்டு அதரங்கள் திறந்து கொண்டது. உதட்டையும் கொஞ்சம் கவனித்து கடித்து இழுத்தவன் நா கூடவே சுவைத்தான். மூச்சு சூடாகியது. இன்னும் கொஞ்சம் செல்ல முத்தம் கொடுத்து மூக்கோடு மூக்கு உரச.. தூக்கத்துல இருக்குறவ கண்டிப்பா முழிச்சுக்கணும்! ஆனா இவ பயங்கர தூக்கத்துல இருக்கா! கனவுல அவன் முத்தம் கொடுப்பது போல இருக்க!  அவளும் சிரித்துக் கொண்டே பதிலுக்கு முத்தம் கொடுத்து கொண்டிருக்க.. திடீரென சித் நினைப்பு என்ன நிஜமாகவே முத்தம் கொடுக்கிற மாதிரி இருக்கே?  என்று வாய்மொழியாக கூறியவள். 

சட்டென முழிக்க சித் அதற்குள் அவளின் கண்களை பார்த்து  அங்கிருக்கும் அனைத்து விளக்குகளையும் ஆப் செய்தான்.  அப்போ கனவா?  என்று அருகில் இருக்கும் ரோஷினியை பார்த்தாள்.

என்ன நான் ரோஷினி மேல இப்படி படுத்துட்டு இருக்கேன்! அய்யய்யோ தப்பு ச்ச அவர்ன்னு நினைச்சு படுத்துட்டேன்!  அவனுக்கு என்னோட ஞாபகம் வந்ததா?  என்று வாய்மொழியாக கூறியவள்.  தள்ளி படுத்து கண்களை தேய்த்துக் கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். 

அவள் வாய்மொழியாக பேசியதை கேட்டவனுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.  “என்னோட நினைப்புல தான் இருக்கியா?  அப்பயும் என்கிட்ட பேசணும்!  என்ன பாக்கணும்னு தோணல! அப்படியே இருடி! அந்த ஆஷிஷ் நாய பேஸ்புக்ல ஃபாலோ பண்றியா?  அந்த நாய் உன்ன ஃபாலோ பண்றான்! இன்ஸ்டாகிராம்ல இப்போ செலிப்ரேட் ஆகுற அளவுக்கு பாலோவர்ஸ் வந்துட்டாங்களா? ஆனா, மேடம்க்கு நான் ஞாபகம் வரல! இருக்கட்டும் டி! ”என்று அவளின் கூந்தல் வாசத்தை இழுத்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தான். 

சரியாக 5.30க்கு எழுந்தான்.  அவளைப் பார்த்தான் . சொக்கிக் கொண்டே நன்றாக குறட்டை விட்டு  தூங்கிக் கொண்டிருந்தாள்.  இன்னைக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே எப்படி தூங்குறா!   கிளம்ப எப்படியும் ரூமுக்கு தானே வருவா?  அப்ப பாத்துக்கலாம்!.  ஹான் இல்ல இல்ல அந்த இன்னாகரேஷன் முடியுற வரைக்கும் இவள அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்கணும்! அதுக்கு அப்புறம் என்ன பண்றான்னு பார்க்கலாம்! அவளை வந்து என்கிட்ட கெஞ்சி புத்தா புத்தான்னு  பின்னாடி பாலோ பண்ணுவா! குட்டி பூனை மாதிரி இல்ல கல்ல பூனை என்று சொல்லிக் கொண்டே அவன் நேராக கெஸ்ட் ரூம் சென்றான். 

ரோஷினி வாயை பிளந்து கொண்டு  நவண்டையை கடித்துக் கொண்டு தூங்க.. 

 அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவளின் மேல் தெளித்தான்.  தூக்கி வாரி போட்டது போல் பயந்துகொண்டு எழுந்து அமர்ந்து தலையை சொரிந்து கொண்டே அவனைப் பார்த்தாள்.சித்தார்த் அதே கடுமையான முகத்துடன் குட் மார்னிங் ரோஷினி! என்றான்.

டேய் எனக்கு பேட் மார்னிங் டா! எதுக்குடா என்னை டார்ச்சர் பண்ற? இரு அம்மா கிட்டையே சொல்றேன்! ஏன்டா என்னை நிம்மதியா தூங்க விட மாட்டியா? என்று சிணுங்கி கொண்டே கூறினாள்.

சித்தார்த் அவளிடம் இன்னைக்கு காலேஜ் பர்ஸ்ட் டே , ஞாபகத்துல வச்சுக்க!  போ போய் குளிச்சிட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு! என்று கூறினான்.

என்ன என்னை படிக்க சொல்ற? என்று ரோஷினி கேட்க..

நீீ தானே காலேஜ் செய்து சேர்ந்து படிச்சிட்டு இருக்க! அதனாலதான் காலேஜ் போனு சொன்னேன். இதுல என்ன தப்பு?  என்று கேட்டான்.

ரோஷினி கண்ணை தேய்த்துக் கொண்டே  நான் காலேஜ் சேர்ந்ததே ரிஷி என்னை லவ் லவ் பண்ணனும்னு தான்! இப்போ ரிஷி என்னை லவ் பண்றாரு! கூடிய சீக்கிரத்துல எனக்கு கல்யாணம் ஆகப்போகுது! அதனால நான் காலேஜ் விட்டு நின்றலாம்னு இருக்கேன்! 

 இதை கேட்டதும் சித்தாரத்துக்கு திருப்தியாக இருந்தது “குட்!  நல்ல வேலை காலேஜ் நிக்கிறியா?  உடனே காலேஜ், அப்புறம் ஸ்கூல் பொறுப்பு எல்லாத்தையும் ஏத்துக்கோ! ரிஷி இனிமே ராஜ் குரூப்ஸ் பிசினஸ்சை டேக் ஓவர் பண்ண போறான்னு! அம்மா சொல்லிட்டு இருந்தாங்க! ”என்று  கூற.. 

என்ன?! நான் ஸ்கூலையும் காலேஜையும் பார்த்துக்கொள்ளனுமா? நான் எதுக்குடா பாத்துக்கணும்? உன் பொண்டாட்டி இருக்கா! அவள பாத்துக்க சொல்லு! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! என்று ரோஷினி கூற..

அப்படியா சரி நான் இனி பாத்துக்குறேன்.  என்று வெளியே சென்றான். 

ரோஷினி அவனுடன் வெளியே வந்தவள்.  நேராக அவளுடைய அறைக்குச் சென்று மீண்டும் உறக்கத்தை தொடங்க இதன்யாவின் போர்வையை பார்த்தாள்.

ஓ புது போர்வையில் சாரும், சாரோட மிஸ்ஸஸ்சும் தூங்குவாங்க! எவ்வளவு கொழுப்புடா! இருடா உன்னை அவகிட்ட சொல்றேன்! என்று சொல்ல..

சித் அவளை  முறைத்து நீ மட்டும்  அவகிட்ட சொன்ன அப்புறம் ரிஷி  கிட்ட எல்லாத்தையும் அனுப்பிடுவேன்.

ரோஷினி ஒரு பெருமூச்சியை விட்டு அவனை முறைத்து சரி போய் தொல என்று கூற.. 

சித்தார்த் அது என்று சொல்லிக்கொண்டே அவனுடைய அறைக்கு சென்று வழக்கம் போல் அனைத்து வேலையும் செய்தான்.

ஒரு மனுஷனுக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை அட்லீஸ்ட் 6 மணி நேரமாவது தூங்கலாம்.  ஆனால் இந்த சித்தார்த் பையன் அதைவிட கம்மியா தான் தூங்குறான்! எப்படி இந்த பேட்ச் பண்றான்? எனக்கே தெரியல? ஏன்னா நானும் கம்மியா தான் தூங்குறேன்.  மூன்று ஸ்டோரி எழுதிறேன். 

நேராக சப்ளிமெண்ட் பற்றிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்தான்.  அதேபோல் காலேஜுக்கு போன் செய்து இனாகிரேஷன் பற்றிய விவரங்களை கான்ஃபிடன்சியலாக அனைத்தையும் செய்யும்படியும்,  சில டிவி செய்தித்தாள்கள், என ரிப்போர்ட்டர் அனைவருக்கும் ஒரு இன்னாகரேஷன் பங்க்ஷன் பற்றிய விபரத்தை கான்ஃபிடன்ஷியலாக கூறும் படி கேட்டுக்கொண்டான்.

அதேபோல் பள்ளி முதல்வரும் உதவி பொறுப்பு முதல்வர் என அனைவரும் சரி என்று கூற..  அதை முடித்துவிட்டு அவன் நேராக சூட்டிங் கிளம்பினான். 

தரமான ஒரு பார்மச்சிடிக்கள் நிறுவனத்தில் சித்தார்த்தின் லிட்டில் ஹார்ட் மற்றும் மல்டி விட்டமின் சப்ளிமென்ட் அந்த இரண்டு மாத்திரைகளும் தயார் செய்யப்பட்டு அவன் சொன்னதன் பேரில் மேனுபேக்ச்சரிங் எஃப் எஸ் எஸ் சி ஐ என அனைத்தையும் வாங்கி…  கிட்டத்தட்ட 1000 மாத்திரைகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவரவர்களுடைய டேஸ்ட்க்கு தனித்தனியாக தயார் செய்யப்பட்டு…

அதில் இன்னும் ஒரு 500 காம்போ பேக் மட்டும் தயார் செய்யப்பட்டது. இது முதலில் சேம்பிள் என்று சொல்லலாம்.  இது விரைவாக விற்பனையாகும் சமயத்தில் அதிகமான மார்க்கெட்டிங் மற்றும் புரொடக்ஷன் நடைபெறும். 

*

அந்த படங்களில் நடிக்கும் அனைத்து ஆர்டிஸ்ட்கள் வேலையாட்கள் என அனைவரும் கூடியிருந்தார்கள்.  ரத்னகுமார் அனைவரையும் மேகா நவ்யா சித்தார்த் மற்றும்  அந்த படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் என மொத்தமும் அந்த செட்டில் கூடியிருந்தார்கள். 

ரத்னகுமார் அவர்களை பார்த்து இங்க இன்னிக்கி தான் லாஸ்ட் ஷூட்  இதோட காட்சிகள் முடிஞ்சிருச்சு! இனிமே நம்ம கேரளா பக்கத்துல இருக்க ஆலப்புழாவுல  ஷூட்டிங் இருக்கு அதை முடிச்சிட்டு ஹைவேல, அதுக்கப்புறம் சில கோர்ட் காட்சிகள் அப்படின்னு இதோட மொத்த படமும் முடியுது! இத சொல்றதுக்கு தான் உங்கள எல்லாரையும் இங்க ஒண்ணா வரவச்சேன்! என்று கூறினார். 

அதுக்கப்புறம் சார் என்ற நவ்யா கேட்க.. 

ரத்தினகுமார் சிரித்துக்கொண்டே அதுக்கப்புறம் சின்ன சின்ன காட்சிகள் விட்டு போச்சுன்னா நம்ம இதே செட்டில் எடுத்துக்கலாம்.  எடிட்டிங், டப்பிங் அப்புறம் வந்து எஃபெக்ட்டு இன்னும் நிறைய வேலை இருக்கு!  இப்போதைக்கு சூட்டிங் மட்டும் தான்! இந்த ஷூட்டிங் இன்னும் தேவைப்பட்டதுனா நம்ம திரும்ப ஒரு 15 நாள் அந்த மாதிரி போகும்! என்று கூறினார்.

ஓகே சார் என்று கூற..

அடுத்து டப்பிங் ரெடி ஆகுங்க ஆலப்புழா எப்ப போகலாம்? பிரேக் வேணுமா என்று கேட்டார். 

சித்தார்த் அமைதியாக பார்த்தான்.  ரத்தினகுமாரின் பார்வை சித்தார்த்தின் மீது இருக்க..

அப்புறம் சொல்றேன் என்று சித்தார்த் கூற..

ஓகே இன்னைக்கான காட்சிகளை நடிக்கலாம்!  நான் மத்த விஷயத்தை உங்களுக்கு இன்பார்ம் பண்றேன் என்று கூறினார். அதன் பின் அந்த நாட்களுக்கான காட்சிகள் சென்றது. 

எனக்கு கம்மிங் வெட்னஸ்டே மட்டும் வேணும் என்று சித்தார்த் ரத்தினகுமாரிடம் கூற.. 

ரத ஓகே தாராளமா எடுத்துக்கோங்க ஆனால் அதுக்கப்புறம் 10 டேஸ் தொடர்ந்து சூட்டிங் இருக்கும்! அதுல மிஸ் ஆகக்கூடாது! என்று கூறினான்.

சித்தார்த் புறுவத்தை நெருக்கி கொண்டு வந்துட்டு போக முடியாதா? என்று கேட்டான்.

இல்ல இது நைட்லயும் சூட் போகும். சோ 24 ஹவர்ஸும் நமக்கு தேவைப்படும் அப்பதான் சரியான நேரத்தில் படத்தை முடிக்க முடியும்!  நான் ப்ரொடியூசர் கிட்ட பேசி இருக்கேன்! என்று ரத்தினகுமார் கூறினார். 

சித்தார்த் ஒரே வார்த்தையில் சரி என முடித்தான்.

ஏன் முக்கியமான வேலை ஏதாவது இருக்கா என்று ரத்தினகுமார் கேட்க..

உனக்கு வேலையே இல்லையா ரத்னா! உன்னோட பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு வந்துருவியா? 

அது அப்படி தான் வேலைன்னு வந்துட்டா சும்மா இருக்க முடியுமா! ஜஸ்ட் 10 days!.  என ரத்னா கூற..

F* என்று சித்தார்த் கூறினான். 

ரத்னா சிரித்து கொண்டே அப்போ லிட்டில் ஹாட்டை மிஸ் பண்றீங்க போல! சாரி லிட்டில் ஹார்ட்! சரியா என கேட்டார். 

சித் பெரு மூச்சுடன் வேற என்ன பண்றது? என நொந்து கொண்டே அவன் வேலையை பார்த்தான். 

இதன்யா வழக்கம் போல கல்லூரிக்கு சென்றாள். இன்று காலை அவனை பார்க்க முடிய வில்லை. அந்த வருத்தத்தில் இருக்க இங்கே மதியம் சரி லைப்ரரி செல்லலாம் என பூஜாவை அழைத்துக் கொண்டு சென்றாள். 

அங்க  பிரியா சாரி மேட்ம் புத்தகங்களை எடுத்துக்கொண்டு அந்த லைப்ரரியனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். 

என்னடி ஆச்சு என  இதன்யா பூஜா இருவரும் அவளின் அருகில் செல்ல..

ஒரு ஒரு ஐடி கார்டுக்கு ஒரு புக் 2 புக் தான் தருவாங்களாம்!  ஆனா எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு இதயா! நான் எப்படி ரெண்டு புக் எடுத்துட்டு போயிட்டு படிக்க முடியும்? என பிரியா கூற.. 

 ரெண்டு புக்கும் எடுத்துட்டு போக வேணாம்னு நினைக்கிறாயா  என இதன்யா கேட்க.. 

இன்னிக்கு நான் மூணு சாப்டர் முடிக்கணும்!  அதனால எனக்கு அஞ்சு புக்கு வேணும் என்று பிரியா கூற..

பூஜா அவளை  வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்க…

ஹே என்ன?  கண்ணு வைக்கிறீர்களா?. என்னோட ஜேர்ணர் கண்டிப்பா பேப்பர்ல வரதாம் போகுது என்று கூற..

ரொம்ப சந்தோஷம் இப்போ உனக்கு புக்கு தான வேணும்! நானும் பூஜாவும் எடுத்து தர்றேன்.  பூஜா உன்னோட ஐடில இருந்து ரெண்டு , என்னோட ஐடியா இல்ல அந்த ரெண்டு புக் என்று நீட்ட..

லைப்ரரியன் பிரியாவை பார்த்துவிட்டு அப்படியே இதன்யா மற்றும் பூஜா இருவரையும் பார்த்து..  அது ஒன்னும் பிரச்சனை இல்லம்மா! உங்க ஐடில புக் எடுத்துக்கலாம்! 

என்ன மேம்?

ஆனா இந்த பொண்ணு எடுத்த ரெண்டு புக்க திரும்ப ரிட்டன் பண்ணவே இல்ல!  அதுலயே 15 நாள் பெண்டிங் இருக்கு அதுக்கு பெனால்டி வேற கட்டணம் என்று கூறினார்.

இதை கேட்டதும் இதன்யா பிரியாவை முறைக்க..

ஏய் என்ன முறைக்கிற நான் நிறைய படிக்கிறனா! அந்த புக்கு காசு போட்டு என்னால வாங்க முடியாது! அதனால வீட்ல வெச்சி இருக்கேன்! என்று கூறினாள்.

சரியான பிராடு டீ நீ அப்போ நான் தரமாட்டேன் என்று இதன்யா சொல்ல.. 

இல்ல தா நான் படிச்சிட்டு தந்துடுறேன் உன்னோட ஐடியில மட்டும் புக் எடுத்துக்கிறேன் .

நெக்ஸ்ட் டைம் பூஜா கிட்ட இருந்து எடுத்துக்கிறேன் என்று இதன்யாவின் ஐடியில் இருந்து இரண்டு புக் எடுத்தாள்.  

அவர்கள் இருவரும் செல்ல பிரியா மெதுவாக „ ஆமா அந்த லிட்டில் ஹார்ட் பத்தி எந்த அப்டேட்டும் இல்லையே? உனக்கு ஏதாவது தெரியுமா? என்னோட போட்டோ எப்ப வரும்? என்று இதன்யாவிடம் கேட்டாள்.

இதை கேட்டதும் பூஜா மற்றும் இதன்யா இருவரும் சிரிக்க..

ஏய் என்ன ரெண்டு பேரும் அமுக்கு கள்ளிகளாட்டம் சிரிக்கிறீங்க?  நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க என்று கேட்க..

பூஜா சிரித்துக்கொண்டே எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!  ஏன்னா நான் லிட்டில் ஹார்ட் கிடையாது.  இதன்யா தான் லிட்டில் ஹார்ட்!  என்று  சொல்ல.. 

இதன்யா பிரியாவை பார்த்துவிட்டு “இது பத்தி ஃபுல்லா இந்த லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட்டோட மெயின் வந்து மிஸ்டர் சதீஷ்குமார் தான்! உனக்கு ஏதாவது அப்டேட் வேணும்னா, சொல்லு! நான் சதீஷ்குமார் ஓட நம்பரை ஷேர் பண்றேன்! நீ அவருக்கு கால் பண்ணி கேட்டேனா! உன்னோட போட்டோவும், அவருடைய போட்டோவும் எப்போ வரும்னு! அவர் சொல்லுவார்! என்று  அவளை வாரினாள். 

 ச்ச ச்ச! டென்ஷனா இருக்கு!   அவகிட்ட நான் கேட்கணுமா என்று பிரியா சொல்ல.. 

ஏய் என்று இதன்யா குரலை உயர்த்தினாள்.

என்ன ஏ சொல்ற நான் பி சொல்லவா? என்று பிரியா சொல்ல..

சத்தியமா காமெடி வரல! இதை வேணா நீ சத்தீஸ் சார் கிட்ட போய் சொல்லு! அண்ணா வேணா சிரிப்பாங்க! என்று இதன்யா கூற..

அவனை அண்ணா சொல்லாத! 

அப்போ நீ சார் சொல்லு  என பூஜா கூறினாள்.

நான் எதுக்கு சார் சொல்லணும்? என்று பிரியா கேட்க.. 

நீதான் அவரை லவ்வே பண்ணலல்ல அதனால சார் சொல்லு!  என இதன்யா கூறினாள்.

அதுவும். சரி தான் சரி சார் சொல்றேன். 

இதன்யா வேண்டுமென்றே நீ அவரை  அண்ணா! அண்ணா சொல்லலாம்! நீ தான் அவரை லவ்வே பண்ணலல்ல!  என்று கூற..

இதை கேட்டதும் பிரியா வேகமாக நானா?. நான் எதுக்கு அவன அண்ணா சொல்லணும்?  அப்படிப்பட்ட அண்ணா எனக்கு ஒன்னும் தேவையே இல்லை! 

 பூஜா சிரித்துக் கொண்டே மனசு பதறுதா?  கண்ணு கலங்குதா?  என்று கேட்டாள்.

இப்போ எனக்கு கை முருக்குது! உன் கன்னத்துல அடிக்க தோணுது? என்று பிரியா சொல்ல.. 

கைய தான் வச்சு பாரேன் டி! அபி அண்ணா வருவாங்க!  என்று இதன்யா கூறிவிட்டாள்.

உனக்கு அவன் அண்ணாவா?  என்ன அண்ணாவா?  என்று பிரியா இதன்யாவையும் பூஜாவையும் மாற்றி மாற்றி பார்க்க..

இதன்யாவிற்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை.  இப்போது என்ன பண்றது?  என்று தயங்கிக் கொண்டிருக்க.. 

பதில் சொல்லு! அவன் எப்படி உனக்கு அண்ணா ஆக முடியும்? அவனும் நம்மளும் ஒரே ஏஜ் என்று பிரியா கூற..

அதைக் கேட்டதும் “ கொஞ்சம் தயங்கிக்கொண்டே அது வந்து… அது..  அப்படி இல்ல..  அது அது வந்து…  ஹான்  என்னன்னா அவரு பூஜாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்களை எப்படி நம்மா அபி அப்படின்னு சொல்ல முடியும்!  பூஜாவோட மனசு கஷ்டப்படும்,  அதனால நான் அவரை அண்ணான்னு சொல்றேன்!  நீயும் அண்ணனு கூப்பிடு!”என இதன்யா கூறினாள். 

 ஒருவித பதட்டத்தில் இவளுங்க வேற இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்களே!  சீக்கிரமா இத  டாக்டர் கிட்ட போய் சொல்லணும்! அவர் எப்படியாவது எல்லா உண்மையும் பிரியா கிட்ட சொல்லிட்டாருன்னா,நானும் தப்பிச்சிடுவேன்! என்று பூஜா நினைத்தாள். 

ஹே பூஜா நான் சொல்றது கேக்குதா! எங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்க? அபி கூட கனவுல மிதக்குறியா?  ஹே உன்ன தாண்டி என்று பிரியா அதட்ட..

ஹான்  என்ன என்று இருவரையும் பார்த்தாள்‌. 

நான் அபியை அபின்னு சொல்றது உனக்கு பிரச்சனையா?

 அது நீ எப்படி வேணாலும் கூப்பிடு? நீ பேர் சொல்லியே கூட கூப்பிடு!  அது உன்னட  இஷ்டம்! அவர் உன்னோட பிரண்டு தானே! என்று பூஜா கூற..

உடனே பிரியா இதன்யாவை பார்த்து பார்த்தியா?  நான் அபிய நான் எப்படி வேணாலும் கூப்பிடுவேன்?! ஏன்னா அவன் என்னோட பெஸ்ட்!! என்னோட பிரண்டு! அதுக்கப்புறம் தான் பூஜாவுக்கு லவ்வர்! என்ன பூஜா அப்படித்தானே என்று கேட்க ..

ஆமா ஆமா என்று பூஜா வேறு வழியில்லாமல் சிரித்து சமாளித்தாள். 

அவர்கள் கிளாசுக்கு சென்றதும் சர்குளர் வந்தது. வரும் புதன் கிழமை கல்லூரியில் இனாகரேசன் நடக்க போவதற்கான சர்குலர் தான் அது! அதை சொன்னதும் மாணவ மாணவிகள் அனைவரும் குதுகலத்துடன் அதை பற்றி பேசி கொண்டிருக்க… இதன்யா எதையும் கண்டு கொள்ள வில்லை. 

அன்று மாலை வீட்டுக்கு வர.. அவள் வந்ததும் ஆஷிஷ் கிட்ட இருந்து மெசேஜ் வந்தது. இதயா! வெட்நஸ் டே என்ன பிளான்? 

காலேஜ் போறது தான் சார்! என தட்டி விட்டாள். 

அப்போ இல்ல மா! நான் நைட் கேட்டேன். அபீசியல் லாஞ்ச் நைட்டு தான்! ஐ மின் காம்போ பேக் இன்னாகரெட் பண்றது. என கூறினான். 

அப்டியா! சரிங்க சார்! 

என்ன சரி சொல்ற? எல்லாரும் வருவாங்க நீ!. 

அது என்னை கூப்பிட்டா தான் வர முடியும்! என இதன்யா கூறினாள். 

ஹே கால் பன்னவா? என ஆஷிஷ் கேட்க..

ம்ம் பண்ணுங்க! என கூறினாள். 

உடனே கால் செய்தான். என்ன இதயா இப்டி சொல்ற? நீ தான் அதுக்கு ஓனர்!. .

அப்படி இல்ல சார்! அதோட ஓனர் மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணா சோ அவரு கூப்பிட்டால் தான் நான் வர முடியும்! 

அப்போ ரெண்டு பேருக்கும் சண்டையா? என ஆஷிஷ் கேட்க…

அவள் அமைதி ஆகி போனாள். சாரி இதயா! என அவன் சொல்ல..

இல்ல சார் அப்படி இல்ல! அவருக்கு நிறைய வேலை! பிசி மேன்! என் கிட்ட பேச அவருக்கு நேரம் இல்ல! அதனால! அவரு என்னை கூப்பிட்டால் நான் வருவேன். என கூறினாள். 

சரி ஓகே அதை விடு புதன் மார்னிங் நான் உன்னை பார்க்கிறேன். முன்னாடியே சிட் பண்ணு! என ஆஷிஷ் கூறினான். 

முன்னாடியா! நம்ம சரித்திரத்தில் முன்னாடி உட்கார்ந்தது இல்லையே சார்! 

இதை கேட்டதும் ஆஷிஷ் சிரித்து விட்டு சரி பார்ப்போம்! என பேசி போனை வைத்தார்கள். 

அடுத்த நாளும் அப்படியே சென்றது. இரண்டு நாள் சித்தார்த், சதீஸ், கூடவே ஸ்டார்ஜியா என யாருக்கும் தூக்கமில்லை. அனைவரும் உழைத்து களைத்து ஓயிந்து போய் சித்தார்த் வீட்டுக்கே புதன் காலை தான் வந்தான். 

அவன் வீட்டுக்கு வந்ததும் குளித்து முடித்து கல்லூரி இன்னாகரேசன் விழாவுக்கு கிளம்பினான். 

இதன்யா அவனை கண்டு கொள்ளாமல் எப்பொழுதும் போல கல்லூரி கிளம்பினாள். 

அவள் உணவு மேஜைக்கு சாப்பிட வரும் நேரம் அவளுக்கு முன்னால் சித்தார்த் இருந்தான். 

அச்சோ! இப்போ இவரை எப்டி கடந்து போறது? போகனும்!  போய் தான் ஆகணும்! ஹே இதன்யா மாடு முகத்தை  கோபமா வச்சுக்க! அப்புறம் இன்னிக்கு காலை சாப்பாடு கூட டிபன் பாக்ஸில் போட்டுக்க! என மூளை சொன்னது. ஓகே டன் என மதி மா! எனக்கு மார்னிங் அப்புறம் மதிய லஞ்ச் ரெண்டையும் டிஃபன் பாக்ஸில் போடுங்க! எனக்கு நேரம் ஆகுது என கிச்சன் பக்கம் சென்றாள். 

சித் அவளை ஓர கண்ணால் பார்க்கிறானா? என அவள் பார்த்தாள். 

ஓ பார்க்கலயா! பார்க்காத டா! இன்னிக்கி அந்த இந்நாகரேசன் க்கு நான் ஆடிடிரியத்தில் இருக்க மாட்டேன். கிளாஸ்லயே இருந்திடுவென்! என நினைத்து கொண்டாள். 

மதி மா! பத்து நாள் அவுட் டோர் ஷூட் போறேன். அதனால் சாப்பிட வீட்டுக்கு வரா மாட்டேன். என ஜாடையுடன் கூறினான். 

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மதி மா! பாய் என கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே இதன்யா சென்றாள். 

எவ்ளோ தைரியம்! வரேன் டி! உனக்கு கச்சேரி இருக்கு டி! சொல்ல கூடாது. செய்யணும்! என சித் கிளம்பி வெளியே வர அதற்குள் சிட்டாக பறந்து விட்டாள். 

சித் வாங்கி கொடுத்த அந்த கார் அதே இடத்தில் நிற்க.. 

பாஸ் போலாமா என ஓட்டுநர் கேட்க…

இல்ல இன்னிக்கு நான் ஓன் ட்ரைவ் பண்றேன். 

AA2 – பாஸ் அது என தயங்கி கொண்டே முன்னால் வர.. 

இல்ல என்னை நீங்க ஃபாலோ பண்ணுங்க! எனக்கு இன்னிக்கு ட்ரைவ் பண்ணனும்! என கூறி காரை எடுத்தான்.

இங்கே இதன்யா காரில் அமர்ந்தவள்.  ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டு முகத்தை உப்பி வைத்துக் கொண்டு வந்தாள்.

எவ்வளவு கொழுப்பு இருந்தா, அவன் பத்து நாள் ஷூட்டிங் போறேன்னு என்கிட்ட ஜாடையா சொல்லுவான்?  போகட்டுமே எனக்கென்ன வந்தது?  என் முன்னாடியே அந்த நடிகைகாரிய அழகா இருக்காள்ன்னு  சொல்லுவான்!  என்னை  எப்பவாச்சும் வந்து சொல்லி இருக்கானா?  இவன்கிட்ட.. இவனை நான் கல்யாணம்! முருகா! எல்லாம் உன்னால!  நான் தப்பு பண்ணிட்டேன்!  என்று மோதிரத்தை பார்த்து  எதுக்குடி நீ கையை நீட்டின?  என்று கையைத் திட்டினாள்.

பாவம் முருகன் என்ன செய்வார்?  அவருடைய சன்னதியில் கல்யாணம் நடக்கவில்லையே?  நாடு கடந்து கடல் கடந்து மாதாவின் பாதத்தில் தானே கல்யாணம் செய்து கொண்டாள். 

இதை பார்த்துக்கொண்டே ஓட்டுநர் சிரிப்புடன் காரை ஓட்டினார்.

இதன்யா முகத்தை  இன்னும் சோகமாக வைத்துக்கொண்டு இனி நீ அவன்கிட்ட பேசவே கூடாது!  அவன் என்னமோ பண்ணட்டும்! நமக்கும் அவனுக்கும் துளி கூட சம்பந்தமில்லை!  நம்ம படிக்கிறதுல கவனம் செலுத்துவோம்! டெட் பாஸ் பண்ணி வேலைக்கு போவோம்! என்று சொல்லிக் கொண்டாள். 

இங்கே கல்லூரியில் அனைத்து வேலைகளும்  முடிந்து நிகழ்ச்சி நடக்க தயாராக இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆடிட்டோரியம் வரவழைக்கப்பட்டார்கள்.  இளங்கலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள்,  அதேபோல் முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள்,  பட்டய படிப்பு ஆசிரியர்  பயிற்சி மாணவர்கள் என  மட்டும் அழைத்தார்கள். 

அதில்  பொறியியல் படிக்கும் மாணவிகள் சிலர் என்ன? எப்ப பாரு எந்த ஃபங்ஷன் நடந்தாலும், எல்லாமே ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல நடக்குது நம்ம காலேஜ்ல எதையுமே கண்டெக்ட் பண்ண மாட்டேங்கறாங்களே! என்று கேட்க..

நம்ப நிறைய பேப்பர் படிக்கிறோம்? ! அவங்க தான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்ச்சரல்ஸ் எல்லாம் அவங்களுக்கு தான்  நிறைய நடக்கும். அதனாலதான் எந்த பங்க்ஷனும் நம்ம காலேஜ்ல நடக்க மாட்டேங்குது!  எல்லாமே ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்லயே நடத்தி முடிச்சுக்குறாங்க!  என்று நொந்து கொண்டே சென்றார்கள். 

பிரியா குதூகலத்துடன் இதன்யாவை தேடி வந்தாள். 

ஏய் நான் ரெடி! நீங்க எல்லாம் ரெடியா?  என்று இதன்யாவை பார்த்தவள்.  ஒரு பவுச்சில் நிறைய சாக்லேட்டுகள் லாலிபாப் என்று அனைத்தையும்  தயாராக கொண்டு வந்தாள்.

பூஜா அதை பார்த்து அந்த பவுச்சில என்ன இருக்கு?  என்று கேட்க. 

அது  சலுப்பா இருக்கும்ல!  அங்க அவங்க தொண தொணன்னு பேசிட்டு இருந்தாங்கன்னா! சாப்பிடலாம்ல்ல.. அது மட்டும் இல்லாம இந்த காலேஜ் ஓனர் சரியான கஞ்சம் என்று சொல்ல வந்தவள்.. அதை மழுப்பிவிட்டு அது ஒன்னும் இல்ல!  சும்மா என்று சமாளித்தாள்..

இதன்யா பிரியாவை முறைத்து விட்டு சரி நீங்க கிளம்புங்க! என்று கூற..

என்ன நாங்க கிளம்பவா? அப்போ நீ வரலையா? என்று பூஜா கேட்க..

ஆமா எனக்கு போர் அடிக்குது என்று இதன்யா கூறினாள்.

ஏன் அப்படி சொல்ற என்று பூஜா கேட்க 

உடனே பிரியா சிரித்துக்கொண்டே அவ சித்தார்த் கிருஷ்ணாவை டெய்லி பார்ப்பா!  ஆஷிஷ் கிட்ட பேசுறா! இப்போ புதுசா பேஸ்புக் இன்ஸ்டாகிராம்ல அக்கவுண்ட் எல்லாம் ஓபன் பண்ணி இருக்கா! அவ பெரிய செலிபிரிட்டி! அவளுக்கு சளுப்பா தானே இருக்கும்! என்னடி! இதயா குண்டு! என்று அழைக்க.. 

ஒழுங்கா ஓடிப் போயிடு நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்!  என்று இதன்யா  டெஸ்கில் தலை சாய்த்தாள்.

என்ன டென்ஷன குண்டு சொன்னால் தானே நான் ஐடியா கொடுப்பேன்! 

இதன்யா…? 

சித்தார்த்..? .

தொடரும்..

நாளைக்கு பார்ப்போம் 

கமெண்ட் போட்டு போங்க.. இன்னிக்கு epi எப்டி இருந்தது? அடுத்து பரபரப்பா நகர போகுது?  சாணக்யா வேற வராறு! பார்ப்போம்

EPI 282

ஒழுங்கா ஓடிப் போயிடு நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்!  என்று இதன்யா  டெஸ்கில் தலை சாய்த்தாள்.

என்ன டென்ஷன் குண்டு! சொன்னால் தானே நான் ஐடியா கொடுப்பேன்!  என பிரியா அவளிடம் கூறினாள். 

எனக்கு எதோ டென்ஷன்! போங்க டி! என கூறினாள். 

பிரியா மீண்டும் பேச வர.. பூஜா அவளை தடுத்து விடு பிரியா அவள் அப்செட்ல இருக்கா! என கூறினாள். 

அனைவரும் ஆடிட்டோரியம் கிளம்பி சென்றார்கள். பிரியா மற்றும் பூஜா அவளுக்கு எதிரில் அமர்ந்து கொள்ள.. 

ஹே நீங்க போகலயா? என இதன்யா அவர்களை பார்த்தாள். 

அதான் நீ வரலையே! அப்புறம் அங்கே போர் அடிக்கும் என  பிரியா சொல்லும் போதே வினோலினா, பூர்ணா இருவரும் பிரியாவை தேடி வந்தார்கள். 

ஹே பிரியா! வா வா போலாம்! இன்னிக்கி ஆஷிஷ் வராருன்னு கேள்வி பட்டோம்! போய் சைட் அடிக்கலாம் வாடி! இன்னிக்கி fun பண்ணலாம்! அது இல்லாமல் டீ பப்ஸ் கொடுக்க போறதா கேள்வி பட்டேன். நம்ம பங்கை சரியா சாப்பிடணும்! மெது வடை கூட இருக்காம் என பூர்ணா, வினோ தொண தொண வென்று பொரிய..  

பூஜா அவர்களின் வாயை பார்த்தாள். பூர்ணா மேலும்! ஹே அந்த சேரு இருக்கானே! டிப் டாப்பா நின்னுட்டு இருக்கான்! நான் கூட பார்த்து அசந்து போயிட்டேன். 

அவன் மட்டும் தனியா நிக்கல அந்த பிசிக்ஸ் சோனாலி கோலம் போட்டு கிட்டே அவன் கிட்ட வலிஞ்சிட்டு நின்னா! என வினோ கூறினாள். 

யாரு சேரு? அப்டின்னா என்ன? என இதன்யா கேட்க.. அது தான் இந்த காலேஜ் பிரான்சி மாதிரி சீன் போடுவானே! அவனோட ஷூ சேத்தில முக்கி எடுத்த மாதிரி இருக்கும்! அதான் அவனுக்கு சேரு அப்டின்னு நாங்க பேர் வச்சிட்டோம்! என பூரனா கூறினாள். 

யாரை சொல்றீங்க? என மீண்டும் இதன்யா கேட்க… 

சதீஸ் சாரை பத்தி பேசிட்டு இருக்காங்க! என பூஜா கூறினாள். 

பிரியா இதை சமாளிக்கும் பொருட்டு சரி அவனை பத்தி இங்கே என்ன பேச்சு விடு பூசு! வினோ! விடுங்க! இன்னிக்கி நான் அந்த பங்ஷன் வரல!. 

ஹே என்ன இப்படி சொல்ற? அந்த சோனாலி சீன் போடுறதை எப்டி பார்க்கிறது! வா பிரியா கலாய்ச்சி விடுவோம்! அப்போ தான் கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கும்! எதோ லிட்டில் ஹார்ட் சாக்லேட் வருதாம் எல்லாருக்கும் தர போறதா ஒரு நியூஸ்! சோ இதை எல்லாம் நம்ம தொட்டு கொடுத்தால் தான் தொடங்கும் சின்றாசு வாமா! என பூர்ணா அழைத்தாள். 

குண்டு வாடி போலாம்! பிளீஸ்!  என பிரியா பார்க்க..

நான் வரல! நீங்க போங்க!. என இதன்யா கூறினாள். 

*

இங்கே தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பமானது. 

எல்லாம் ரெடியா? என சித்தார்த் அழைத்தான். 

ஹான் சித்து எல்லாமே ரெடி ஆஷிஷ் ஆன் தி வே! தாத்தா, காலேஜ் principal, அண்ட் என்ஜினியரிங் காலெஜ் ல இருக்க ஸ்டாப்ஸ் அப்புறம் B. Ed காலேஜ் ல இருந்து பிரின்சி எல்லாருமே இருக்காங்க! நீ வந்தால் ஆரம்பிக்கலாம்! என கூறினான். 

சரி இதன்யா எங்கே இருக்கா? அவளை பார்த்தியா? என சித் கேட்டான். 

சதீஸ் சுற்றிலும் தேடி கொண்டே B.ED காலேஜ் இப்போ தான் வந்து உட்காருறாங்க! அதுல பாப்பா இருக்கும் நீ வா! என கூறினான். 

சரி என நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரையும் வரவேற்று பேச ஆரம்பித்தார். 

சதீஸ் முதுகலை வேதியலில் வாயாடியை தேடினான். அவளை காண வில்லை. அவளின் கூடவே இருக்கும் வினோலினா, பூர்ணா என யாருமே இங்கு இல்லை. சதீஸ் நேராக அனைத்து இடத்திலும் பார்த்தான். 

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பக்கம் திரும்ப அதில் இதன்யா இல்லை வான்மதி மற்றும் அகல்யா இருக்கும் இடம் சென்றான். 

குட் மார்னிங் சார் என அவர்கள் வணக்கம் சொல்ல. 

குட் மார்னிங் எல்லாரும் வந்தாச்சா? என சுற்றிலும் பார்த்தான். 

ஹான் சார்! என அவர்கள் சொல்ல..

இதன்யா மிஸ் எங்கே? இன்னிக்கி அவங்க வரலயா? என சொல்லி கொண்டிருக்கும் நேரம் ரிஷி வந்தான். 

அவளுக்கு உடம்பு சரியில்ல போல கிளாஸ்ல இருந்துட்டா! என கூறினார்கள். 

குட் மார்னிங் சார் என ரிஷி விஸ் செய்ய..

நல்ல வேளை ரிஷி சார் நீங்க வந்துட்டீங்க! போய் இதன்யாவை கூட்டிட்டு வாங்க! 

தனு வரலையா? வீட்ல இருக்காளா என ரிஷி கேட்க..

இல்ல அவள் க்ளாஸ்ல இருக்கா! இப்போ தான் பாஸ் போன் பண்ணார். பிளீஸ் போங்க! அவளை கூட்டிட்டு வாங்க! என அவன் முன்னால் சென்றான். 

சரி என ரிஷி செல்ல… கையை முட்டு கொடுத்து கொண்டே கடைசி வரிசையில் ரோஸ் தூங்கி கொண்டிருந்தாள். 

ரிஷி அவளை சிரிப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு நேராக இதன்யாவை அழைக்க சென்றான்.

நான் தான் வரலைன்னு சொல்றேன் தான! நீங்க போங்க பிளீஸ்! 

குண்டு பிளீஸ் குண்டு வாடி!. என பிரியா அழைக்க..

ஆஷிஷ் வருவாரு! பார்க்கலாம் வா குண்டு என கூடவே பின் பாட்டுடன் வினோ, பூர்ணா இருவரும் பாடினார்கள். 

பூஜா இதை கேட்டு சிரிக்க.. இங்கே என்ன நடக்குது? M.sc ஸ்டூடண்ட்க்கி இந்த பிளாக்ல என்ன வேலை? என கேட்டு கொண்டே ரிஷி வந்தான். 

பிரியா அவனை அலட்சியமாக பார்க்க..  பூஜா அவனை பார்த்து குட் மார்னிங் சீனியர் என கூறினாள். 

இதன்யா எழுந்து விஸ் செய்தாள். உடனே அதை பார்த்து வினோ, பூர்ணா இருவரும் கூறினார்கள். 

ஆனால் பிரியா மட்டும் கூற வில்லை. இவள் எப்போவும் இப்படி தான்! அடங்காதவள் என நினைத்த ரிஷி! ஹலோ ஆர் யூ ஹியர்.. என மீண்டும் கூற.. 

எனக்கு உடம்பு சரி இல்ல சார்! அதான்! என இதன்யா சொல்ல.. 

சரி இதை கரஸ்பாண்டன்ட் கிட்ட வந்து சொல்லுங்க டீச்சர்! என கூறினான். 

ஹே வா குண்டு இவன் எல்லாம் பேசுற அளவுக்கு நீ வந்திட்டியா? இந்த காலேஜ் உன்னோடது குண்டு! என பிரியா சொல்ல..

என்ன அங்கே மர்மரிங்! ஹான் என ரிஷி அதட்டினான். 

ஒன்னும் இல்ல சார் அடவைஸ் கொடுத்திட்டு இருக்கேன்! 

என்ன அடவைசா? என ரிஷி கேட்க..

ஆமா அடவைஸ்.. 

ஹே அது அட்வைஸ் என ரிஷி கூறினான்.

சரி சா…. ரி என விட்டு விட்டு கூறினாள். 

டீச்சர் என பூஜாவை பார்த்தான். ஒகே சார் வா இதன்யா என அழைக்க.. அவள் பதில் சொல்லாமல் ஐந்து பெண்களும் சென்றார்கள். 

உடனே ரிஷி பிரியாவின் காது பட இப்போவே போய் PT சார் கிட்ட சொல்லணும் பிளாக் விட்டு பிளாக் வந்தால் fine அது கூடவே ஒரு நாள் ஆப்சன்ட் போட சொல்றேன் என கூறினான். 

இதை கேட்டதும் பிரியா முறைத்து பார்க்க..  ரிஷி வாயில் பலிப்பு காட்டினான். 

இரு டா உன்னை என்ன செய்கிறேன் பார் என பிரியா வேகமாக பின்னால் வந்தவள். அவன் தலையில் கொட்டினாள். 

ஹே எருமை! வலிக்குது! நான் உன்னோட சீனியர்! இந்த காலேஜ்ல புரோபேசர் என ரிஷி சொல்ல.. 

போடா ரிஷி எருமை எனக்கு நீ எப்போவும் ரிஷி எருமை தான் என குழுவுடன் ஐக்கியம் ஆகி விட்டாள். 

பிரியா என திரும்பி பார்க்க.. அவள் இதன்யா அருகில் இருந்தாள். வினோ மற்றும் பூர்ணா சென்று அவளின் கையை கோர்த்து கொண்டார்கள். 

ரிஷி அவர்களின் பின்னால் வர முன்னால் சென்றார்கள். 

இங்கே நிகழ்ச்சி தொகுப்பாளர் சித்தார்த்தை வரவேற்று கொண்டிருக்க.. சில செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் என அனைவரும் அவன் வருவதை படம் பிடித்து கொண்டார்கள். 

சித் இன்று கோட் ஷூட் இல்லாமல் சாதாரண கேசுவள் லுக்கில் வந்தான். பார்க்கவே அழகாக இருந்தான்.  கண்களில் எதிர்பார்ப்பு! புருவம் சுருக்கி அந்த இடத்தை நோட்டம் விட்டு கொண்டே இறங்கினான். 

சித் முன்னால் செல்லவும் கொஞ்ச தூரத்தில் வந்த இதன்யாவுக்கு அந்த காரின் நினைப்பு வர..

இது என் காரு! என்னோட காரில் இவனை யாரு வர சொன்னது? என அதே இடத்தில் நின்றாள்.

கமான் கேர்ள்ஸ் குயிக் ஆல்ரெடி எல்லாரும் வந்துட்டாங்க! சீக்கிரம் அவங்க உள்ளே போறதுக்குள் நம்ம ஜாயின் பண்ணிப்போம்! என ரிஷி கூறினான். 

சித்தார்த் பார்வை ஆடிடோரியத்தை மொத்தமும் அலசி விட்டு சதீசின் மீது வந்து விழுந்தது. 

அய்யோ முறைக்கிரான்! எல்லாம் என் நேரம் ரிஷி சீக்கிரம் கூட்டிட்டு வாடா என நினைத்தான். 

அங்கிருக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் கத்தி ஆர்ப்பரித்து சித்து சித்து என கத்தி கூச்சலிட்டு கொண்டாடினார்கள். 

சித் கைகளை உதறி விட்டு நேராக மேடையின் முன் இருக்கும் கதிரையில் அமர்ந்தான். 

சதீஸ் அவன் அருகில் வந்து பாஸ் மேலே வாங்க! என கூற…

டேய் ம* உன் கிட்ட என்ன சொன்னேன்? அவள் எங்கே? 

சதீஸ் கடுப்பாகி டேய் மாங்கா ம* நீ அவள் கிட்ட சண்டை போட்டியா? சொல்லு! என கேட்க… 

இல்லையே என பொய் கூறினான். 

சதீஸ் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்தான். 

என்ன அப்படி பார்க்கிற? நான் உன்னோட பாஸ்! மரியாதை கொடு! என சித் சட்டை கையை மடித்து விட..

கொஞ்சம் தனியா வாங்களேன் மரியாதை நிறைய கொடுக்கிறேன் சார்! என சதீஸ் பற்களை கடித்து கொண்டு கூறினான். 

அது அதெல்லாம் வர முடியாது. போ! என சித் சொல்ல..

கிருஷ்ணன் சதீசை பார்த்து அழைக்க..

பாஸ் கரெஸ்பாண்டன்ட் கூப்பிடுறார் கொஞ்சம் மேலே வாங்க! லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட் வந்திடுச்சு! மிஸ்டர் ஆஷிஷ் வர போறாரு! என கூறினான். 

இதை கேட்டதும் சித் வேறு வழி இல்லாமல் எழுந்தான். உடனே அங்கிருக்கும் அனைவரும் கத்திட… சித் அவர்களை பார்த்து கை அசைத்து விட்டு புன்னகையுடன் மேலே சென்று கிருஷ்ணன் அருகில் அமர்ந்தான். 

அந்த நேரம் தான் அந்த பஞ்ச பாண்டவிகள் அனைவரும் உள்ளே அமர வைத்தார்கள். 

சதீஸ் சித்தார்த்தை பார்த்து கண்களால் சைகை செய்தான். சித் பார்வை இதன்யாவின் மீது இருந்தது. எவ்ளோ தைரியம்? மேடம் எவ்ளோ பொறுமையா வராங்க.. அப்போ வர பிடிக்கல! கடுப்பா இருக்கா! ஹான் எனக்கு நல்லா இருக்கு டி! என மெல்லிய புன்னகையுடன் அமர்ந்து இருந்தான். 

நிகழ்ச்சி தொகுப்பாளர் சதீஸ் பக்கம் திரும்பி ஆஷிஷ் பற்றி கேட்க.. 

உடனே சதீஸ் அவனுக்கு போன் செய்தான். 

ஹலோ ஆஷிஷ்? Where are you? என கேட்க..

ஜஸ்ட் நவ் இப்போ தான் எண்டர் ஆகிறேன்! என ஆஷிஷ் கூறினான். 

ஹான் இப்போ நீங்க ஆரம்பிங்க! என சதீஸ் சைகை காட்டிட.. ஆசிஷ் பற்றி intro கொடுக்க பட்டது! 

இவன் எல்லாம் ஒரு ஆளு இவனுக்கு intro வேற ஒரு கேடு! என சித் நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான். 

வினோ சந்தோசத்துடன் இருந்தாலும் இதுக்காவது நம்ம போக்கே கொடுக்க நின்ணி இருக்கலாம்! ஆனால் எதுக்கு எல்லாமே இந்த பிசிக்ஸ் department செய்யுது! எனக்கு எரிச்சலா இருக்கு! என கூறினாள். 

பூர்ணா கோபத்துடன் இதுக்கு எதுவும் செய்தே ஆகணும்! என சொல்ல..

ஒன்னும் பண்ண முடியாது! என கூறினாள். 

அனைவரும் அவளை பார்க்க அவள் இதன்யா தான்! 

என்ன குண்டு! அப்படி சொல்ற? நம்ம எதுவும் பண்ணுவோம்! நீ பண்ணா முடியும்! 

அது முடியாது! இங்கே இருக்க பெரிய தலை எல்லாம் பிசிக்ஸ்! அதும் இல்லாமல் இங்கே ஆடிடோரியம், ஆபிஸ் ரூம், பிரின்சிபால் ரூம் எல்லாமே பிசிக்ஸ் dptக்கு பக்கத்துல தான் இருக்கு! அதனால அவங்க தான் இங்கே எல்லாமே என டெஸ்க்கில் தலை கவில்த்தாள். 

அந்த நேரம் ஆஷிஷ்! ஆசிஷ் என அனைவரும் கத்தி கொண்டே ஆர்பரிக்க.. பிரியா ஆளுக்கு ஒரு லாலி பாப் கொடுத்து விட்டு ஆசி! ஆசி! என அவளும் கத்தினாள். ஐந்து பெண்களும் தனித்துவமாக இருக்க.. இதன்யா ஆஷிஷ் வரும் காரணத்தால் அவளும் உற்சாகத்துடன் கூச்சல் போட்டாள். 

ஆஷிஷ் உள்ளே வரவும் சோனாலி பூங்கொத்தை கொடுத்து வெல்கம் சார் என அழைக்க.. 

ஜொள்ளு கரை பிரண்டு ஓடுது என பூர்ணா கூற.. 

சோனாலி சோனாலி என பிரியா கத்தினாள். 

அவள் திடுக்கிட்டு யாரு டா நம்ம பேரை சொல்றது என தேட பிரியாவின் குழு சிரிக்க ஆரம்பித்தது. 

வினோ! தலையை சொரிந்து கொண்டே கத்த! 

என்ன டி அப்படி சொரியர? 

கொஞ்சம் குழந்தை குட்டிங்க தலையில இருக்காங்க குண்டு என வினோ கூறினாள். 

என்ன குழந்தை குட்டி! என இதன்யா கேட்க.  

பூர்ணா சிரித்து கொண்டே பேன் தான்! அடுத்து பேன் பாலம் தான் இதயா நீ இங்கே தள்ளி வந்திடு! உன்னோட முடி நீளமா இருக்கு அப்புறம் உனக்கு ஒட்டிக்கும்! என கூறினாள். 

ஹான் வரேன் வரேன்! என இதன்யா பூஜா அருகில் அமர்ந்து கொள்ள..

வினோ சிரிப்புடன் அட போங்கடி இந்த அருமை உங்களுக்கு என்ன தெரியும்! பிரியா என் கிட்ட கேட்டு வாங்கி தலையில் போட்டுக்குவா! என கூற..

இதன்யா பிரியாவை பார்த்தாள். என்ன கோகுல் நாயே!. .

இல்ல குண்டு உனக்கு இது தெரியாது. சொர்க்கம் டி! ஞாயிற்றுக்கிழமை கறி கஞ்சி தொண்டை குளி வரை நப்பி கிட்டு அப்படியே பேன் பார்த்தோம் ன்னு வை அப்படியே சொர்க்கமா இருக்கும்! 

பிரியா மற்றும் வினோ இருவரும் கோரசாக அப்படியே மயங்கி மயங்கி விழுவோம்! என கூறினாள். 

அய்ய என இதன்யா கூற..  

வினோ லாலி பாப் வாயில் அடக்கி கொண்டே உன் கொண்டை லூசா இருக்கு ஜடை போடலயா? வாயேன் ரெஸ்ட் ரூம் போயிட்டு ஜடை பின்னிட்டு அப்படியே கேன்டீன் போயிட்டு கூல் வாட்டர் குடிச்சிட்டு வரலாம்! என கூறினாள். 

ஹே சூப்பர் ஐடியா! என பூர்ணா கூற..

ஹே போலாம் என பிரியாவும் வாயில் மிட்டாய அடக்கி கொண்டே கூறினாள். 

ஹலோ மேடம்ஸ் நம்ம இப்போ எங்கே இருக்கோம் தெரியுமா? இந்த இடத்துக்கும் உங்களுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்கீங்க! என பூஜா கேட்க..

அட ஆமா! சரி ஹே குண்டு கொண்டையை டைட் பண்ணு! என்று அவர்கள் கொஞ்சம் சத்தமாகவே பேச.. அங்கே வந்த காயத்ரி மேம் அனைவரையும் முறைத்தார். 

உடனே பூர்ணா மேம் கிட்ட “மேம் இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! லாலி பாப் வேணுமா! என கண்ணை சிமட்டி கொண்ட  கேட்டாள். 

கேர்ள்ஸ் என்ன நடக்குது! எல்லா ஃபேக்கல்ட்டியும் இருக்காங்க! இங்கே பின்னாடி இருந்து தான் ஒரே சத்தமா இருக்கு! என்ன மா பண்றீங்க! என மிரட்டினார். 

இனி பேச மாட்டோம்! மேம் என பூர்ணா சிரித்து கொண்டே கூறினாள். 

இதன்யா மற்றும் பூஜா இருவரும் அவளை வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்க.  

பிரியா சிரித்து கொண்டே என்னோட ட்ரையினிங்! பூர்ணா முகம் ரொம்ப பாவமா இருக்கும்! அதான்! அவளை வச்சு நாங்க தப்புபோம்! பூசு கொஞ்சம் இங்கே உன்னோட திறமைய காட்டு.!. என சொல்ல…

பூர்ணா ஒரே நொடியில் முகத்தை பாவமாக வைத்து கொண்டு இருவரையும் பார்த்தாள். அதை பார்த்ததும் பூஜா, இதன்யா இருவரும் சிரிப்பை அடக்கி கொண்டே குனிந்து கொண்டார்கள். 

என்ன மூவரும் மாறி மாறி சிரிக்க.. ஆர் யூ ஹியர் என உயிரை கொடுத்து முன்னால் சித்தார்த் கத்தி கொண்டிருந்தான். 

எஸ் சித்து என மாணவ மாணவிகள் கத்தினார்கள். 

ஆனால் அதை கவனிக்கும் நிலையில் பாஞ்சாலிகள் இல்லை. 

அதில் கடுப்பான சித்து மைக்கை அழுத்தி பிடித்தான். 

ஒரு சில நிமிடம் சித் அமைதி ஆகிட.. ஆசிஷ் சதீஸ் கிட்ட! பேச வர அவன் ஜுஸ் எடுத்து கொண்டே அருகில் வந்தான். 

டேய் இதயா எங்கே? பிரியா பேபி இந்த காலேஜ்ல தான படிக்கிரா? என வேண்டும் என்றே கேட்க…

செருப்பு பிஞ்சி போகும் நாயே! ஃபக்சன் முடியட்டும் இரு அப்புறம் உன்னை வச்சிக்கிறேன். என சதீஸ் கூறினான். 

சித் அமைதி ஆகிட அங்கிருக்கும் அனைவரும் அமைதி ஆக பின்னால் இருந்து  குரல் கேட்டது. 

லாஸ்ட் ரோ! ஸ்டான்ட் அப் என கூறினான். 

அனைவர் பார்வையும் பின்னால் திரும்ப யாரு டா இது! என திரும்பிய சோனாலி அங்கே வினோ, பிரியா இருப்பதை பார்த்து போச்சு இன்னிக்கி சங்கு தாண்டி! ஆடு காலிகளா! Tc கிழிச்சு அனுப்ப போறாங்க! என சிரித்து கொண்டே நின்றாள். 

சித் அங்கிருக்கும் ஸ்டாப் பக்கம் திரும்ப.. கேர்ள்ஸ் என வேகமாக பின்னால் சென்றார்கள். 

ரோஸ் தூக்கத்துடன் கண்ணை தேய்த்து கொண்டே பார்த்தாள். 

உடனே அனைவரும் எழுந்து நின்றார்கள். 

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கெமிஸ்ட்ரி hod மற்றும் B.ed காலேஜ் கெமிஸ்ட்ரி hod பெரு மூச்சுடன் பார்க்க….

பூர்ணா மிட்டாயை வாயில் இருந்து எடுத்து விட்டு போச்சு சவுக்கு சவுந்தர்ராஜன் கண்ணுல எரிச்சிருவான் போல! என கூறினாள். 

ஆசிஷ் சிரித்து கொண்டே பிரியா இதன்யாவை பார்த்தான். 

அனைவர் பார்வையும் சித்தார்த்தின் மீது இருக்க..

கம் இன் front! என கடுமையான குரலில் கூறினான். 

முன்னாடி போ! பூஜா! ஹே பூசு எதுவும் பண்ணு முகத்தை பாவமா வச்சு பாரு! என சொல்ல. 

Tc கிழியும் மூடிட்டு ஓடி போயிடு! என பூர்ணா கூறினாள். 

பிரியா எட்சிழை விழுந்து குண்டு அப்படியே ஒரு ரொமான்டிக் லுக் விட்டு கவுத்துடு நம்ம இங்கேயே உற்கார்ந்துக்கலாம் என கூற… 

எருமை! போ! என கூறினாள். 

அங்கே என்ன சத்தம்? என மீண்டும் கேட்டான். 

பூஜா முன்னால் நடக்க.. அவளின் பின்னால் பூர்ணா, வினோ, பிரியா, கடைசியாக இதன்யா அனைவரின் கையிலும் லாலி பாப்! இந்த பொண்ணு! அது அந்த பொண்ணு தான அன்னிக்கு சார் கேட்ட கேள்விக்கு பதில் சொண்ணுச்சே! என அனைவரும் பேசி கொண்டிருக்க. 

ஹே என்னை எதுக்கு டி முன்னாடி அனுப்புநீங்க? என பூஜா சிணுங்கி கொண்டே சென்றாள். 5 பெண்களும் முன்னால் வர..   

இப்போ அடுத்து உன்னை தான் கூப்பிட போறாங்க! என சத்தம் கேட்க.  

ரோஸ் வெடுக்கென எழுந்து அமர்ந்தாள். 

ரிஷி தான் உடனே அவளிடம் ஹே என்ன டி பண்ண வீட்ல தூங்காம இங்கே என்ன தூக்கம்! 

போங்க ரிஷி! எல்லாமே அந்த சித்து தான் காரணம்! நானும் தனுவும் தான் தூங்கினோம்! என சொல்ல.. 

கிருஷ்ணன் ரிஷியை பார்த்தார். ஹே ரோஸ் தாத்தா உன்னை பார்க்கிறார். முன்னாடி போ! என கூறினான். 

இல்ல!! போகல…போ தாத்தா கூப்பிடுரார். என சொல்ல 5 பெண்கள் அருகிலும் ஆறாவதாக போய் சேர்ந்தாள். 

சித்தார்த் இதன்யாவை முறைத்து பார்த்து விட்டு முன்னால் இருக்கும் வரிசையை காட்டினான். 

Hod இருவரும் முகத்தை துடைத்து கொண்டே சார் இன்னிக்கி ஒரு தடவை மட்டும் மன்னிச்சிடுங்க! என சொல்ல.. 

நிகழ்ச்சி தொகுப்பாளர் கிட்ட சில விவரத்தை சித்தார்த் கூறினான். அதை கேட்டதும் அவர் திடுக்கிட்டு பார்க்க..

என் முகத்தில் என்ன இருக்கு? என சித் கேட்க.. 

நிகழ்ச்சி தொகுப்பாளர் தயங்கி கொண்டே இப்பொழுது குத்து விளக்கு ஏற்றி  இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்க முதுகலை முதலாம் ஆண்டு கோகுல பிரியா குழுவை அன்புடன் அழைக்கிறோம் என கூறினார். 

யார் என மாணவ மாணவிகள் சுற்றிலும் பார்க்க…

யாரு டி கோகுல பிரியா? என பிரியா பூர்ணா கிட்ட கேட்டாள். 

ஹே பிரியா நீ தான் டி! என சொல்ல.. .

வினோ பயத்துடன் எனக்கு உச்சா வருது கை நடுங்கிது! என வியர்வை வழிய பார்க்க. 

போச்சு சங்கு தான்! என அப்படியே இருக்க.. .

சித்தார்த் எழுந்து மைக் அருகில் வந்தவன். கோகுல பிரியாவை வெற்றிலை பாக்கு வச்சு அழைக்கணுமா? யாரது? என வேண்டும் என்றே கூறினான். 

பிரியா பயந்து கொண்டே எழுந்து நின்றாள். இதன்யா அப்படியே அமர்ந்து இருக்க..   

Be quick என அதட்டி பார்த்தான். 

ஹே என்ன உனக்கும் சித்துவுக்கும் சண்டையா! அய்யோ கை நடுங்குது! என இதன்யாவை இழுத்து வந்தாள். 

ஹே நான் b.Ed நீ வேற நான் வேற! போ! என கையை தட்டி விட்டாள். 

பிரியா அந்த ஆளுயர குத்து விளக்கை பார்த்தாள். 

அதை பார்த்தால் பயமா இருக்கு! அப்படியே அது பேக் பக்கம் சொருகினா கும்பி பாகம் என வினோ கூறினாள். 

ஹே வாய மூடு டி! எனக்கு பயமா இருக்கே! என மூவரும் செல்ல..

ஆசிரியர் பயிற்சி மாணவிகளை அன்புடன் அழைக்கிறோம் என நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்ல…

ஐ ஜாலி குண்டு வரா! என பிரியா குதுகளிக்க.. 

க்கும் என காயத்ரி தொண்டையை கணைத்தார். 

அனைவரும் முன்னால் நடக்கும் அனைத்தையும் பார்த்தார்கள். சித் அனைவரையும் பார்க்க ரோஸ் முன்னால் வந்து காயத்திரி கிட்ட மெழுகு வர்த்தி வாங்கி பிடி சீக்கிரம் என ஏற்றி விட்டு சென்றாள். 

கிருஷ்ணன் திருப்தியுடன் பார்க்க.. அடுத்து பிரியா, பூர்ணா, வினோ என அனைவரும் ஏற்றி வைத்து விட்டு பின்னால் செல்ல போக! 

5 முகம் கொண்ட விளக்கில் வரிசையாக அனைவரும் ஏற்றி வைக்க சரியாக இதன்யா வரும் நேரம் அனைத்தும் ஒளிர்ந்து கொண்டு இருக்க இதன்யா விளக்கு ஏற்ற முடியாமல் திரும்பி அவளின் இடத்தில் சென்று அமர செல்ல…  அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது. 

என்ன டா அது? 

To be continued..  அந்த நேரம் அவளின் லூசாக இருந்த கொண்டை வலை அவலிந்து விழ! அவளின் இடை நீண்ட கூந்தல் அருவி போல விழுந்தது. 

அந்த ஆடிடோரிடத்தில் இருக்கும் 2000  மாணவ மாணவிகள் பார்வை இதன்யாவின் மீது செல்ல.. 

அந்த பொண்ணை மேலே கூப்பிடுங்க! என சித்தார்த் கூறினான். 

ஆசிஷ், கிருஷ்ணன், சதீஷ், ரிஷி என அனைவரும் சித்தார்த்தை பார்க்க… 

இங்கு என்ன டா நடக்குது? என ஸ்டாப் அனைவரும் அங்கு நடப்பதை பார்க்க.  

நிகழ்ச்சி தொகுப்பாளர் அவளின் பெயரை தெரியாமல் நிற்க.. 

“இதன்யா” என சதீஸ் கூறினான்.  

இதன்யா அவளின் இடத்தில் அமர போக..  பயிற்சி ஆசிரியர் இதன்யா அவர்களை அன்புடன் அழைக்கிறோம்! என கூறினார்.

என்ன? என அவள் சாக் ஆகி பார்க்க..

பிளீஸ் இதன்யா கம் இன் front என சொல்லி கொண்டே பார்க்க.. 

இதன்யா தன்னையே பார்த்து நொந்து கொண்டு அந்த கூந்தலை முன்னால் எடுத்து வேகமாக கொண்டை போட செல்ல.. 

இட்ஸ் ஓகே வாங்க! என கூறினார். 

முருகா முருகா என அவள் சொல்லி கொண்டே தடுமாறி மேலே ஏறி நின்றாள். 

நிகழ்ச்சி தொகுப்பாளர் சித்தார்த்தை பார்க்க அவன் எழுந்து மைக் பக்கம் வந்தான். 

அனைவரும் கத்த ஆரம்பிக்க.. 

ஹலோ மை டியர் ஸ்வீட் ஹார்ட்ஸ்! என பெண்கள் பக்கம் பார்த்தான். 

ஓ சித்து மி டூ! என பெண்கள் கத்தினார்கள். 

சித் மாணவர்கள் பக்கம் திரும்பி ஹீரோ கிட்ட அப்புறம் வரேன் என கூறினான். அதை கேட்டு மாணவர்கள் விசில் அடிக்க.  

இதன்யா முறைத்து பார்க்க..  

இதோ இந்த கேர்ள் கிட்ட என்ன ஸ்பெஷல் அப்டின்னு நீங்க நினைக்கிறீங்க? என சித் கேட்டான். 

இதன்யா கையை மடக்கி கட்டி கொண்டே கண்ணாடியை மூக்குக்கு தள்ள. 

மாணவர்கள் அனைவரும் long hair பொண்ணு என கூறினார்கள். 

ஹீரோஸ் கண்ணு எப்போவும் சார்ப் குட் என கூறி விட்டு! அதே தான் இதே போல ஸ்வீட் ஹார்ட் எல்லாருக்கும் முடி நீளமா வளர தான் லிட்டில் ஹார்ட் நம்ம புரோடெக்ட் லாஞ்ச் ஆகி இருக்கு! என கூறினான். 

மாணவிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அவர்களின் முடியை பார்த்து கொண்டே இதன்யாவின் முடியை பார்த்தார்கள். 

பிரியா இதை பார்த்து சிரிக்க.. ஆசிஷ் மற்றும் சதீஸ் இருவரும் பிரமிப்புடன் பார்த்தார்கள். பிஸ்னஸ் மூளை இது தான் போல.. 

கிடைக்கிற கேப்ல எல்லாம் ஒரு சின்ன விசயத்தை கூட பிஸ்னஸ்சா மாத்துறான். நாயி என இதன்யா நினைத்தாள். 

நிஜமா வா! என அனைத்து பெண்களும் கேட்க. 

சித் புன்னகையுடன் இதுக்கு பதில் இன்னிக்கி நடக்க போற official launch பார்த்தா உங்களுக்கு கிடைக்கும்! பார்ப்பீங்களா? என கேட்டான். 

கண்டிப்பா பார்ப்போம்! என இதன்யாவின் முடியை பார்த்தார்கள். 

இதயா முடியை எல்லாரும் கண்ணு வைக்கிறாங்க! என வினோ கூற.. 

அடுத்ததாக சித் மாணவர்கள் பக்கம் திரும்பினான். 

இதன்யா இன்னும் அதே இடத்தில் நிற்க.. சித் பார்வையை கூராக்கி இப்போ  லாங் ஹேர் பொண்ணு கீழே போலாம் என அவளை கண்டு கொள்ளாமல் கூறினான். 

இதை கேட்டதும் இதன்யா..? 

தொடரும்.. 

அடுத்து நைட் நடக்க போற function நவீன் வேற வர போறான்.

பார்ப்போம்! 

இன்னிக்கு epi எப்படி இருந்தது? கமெண்ட் சொல்லிட்டு போங்க! 

I’m waiting..

Epi 283

இதன்யா இன்னும் அதே இடத்தில் நிற்க.. சித் பார்வையை கூராக்கி இப்போ  லாங் ஹேர் பொண்ணு கீழே போலாம் என அவளை கண்டு கொள்ளாமல் கூறினான். 

இதன்யா அவனை முறைத்து பார்த்துவிட்டு வேகமாக கீழே இறங்கி ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றாள்.  அவளின் பின்னால் கண்ணிமைக்கும் நேரத்தில் வினோலினா, பிரியா, பூர்ணா, பூஜா என அனைவரும் சென்றார்கள்.

அங்கிருக்கும் பேராசிரியர்கள் அனைவரும் அவர்கள் பக்கம் திரும்பி ஒரு பெரும் மூச்சை விட்டு நேராக சித்தார்த் பேசுவதை கவனிக்க தொடங்கினார்கள். 

மாணவ மாணவிகள் அனைவரும் இதன்யா போவதை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் சித்தார்த் பவர் பாயிண்ட் பிபிடி ப்ரொஜெக்டர் ஆன் செய்ய சொல்லி இந்த லிட்டில் ஹார்ட் பற்றிய விவரங்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் அந்த வேலையில் இருக்க.. 

மாணவர்கள் குழுவில் அந்த பொண்ணு அழகா இருக்கா?  என்று ஒரு சிலர் பார்த்துக் கொண்டிருக்க.. 

உடனே அந்த குழுக்களில் பேசும் சத்தம் கேட்டது. அதை ஆசிஸ் தான் கவனித்துக் கொண்டிருந்தான். 

அவளுக்கு முடி நீளமா இருந்தாலும் நச்சென்று நாட்டு கட்ட மாதிரி இருக்காடா! முடிக்கும், புடவைக்கும் அப்படியே ஆளையும் தூக்குது! இத்தனை நாள் இவ நம்ம கண்ணுலையே படலையே! என்று மாணவர்கள் ஒரு பக்கம் பேச.. 

இன்னொரு பக்கம் இருக்கும் மாணவர்கள் நம்ம ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல இந்த பொண்ணுங்க எல்லாம் எந்த டிபார்ட்மெண்ட்? என்று ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்க..

அவங்க எல்லாம்  கெமிஸ்ட்ரி  டிபார்ட்மென்ட் இந்த பொண்ணு என்னோட பஸ் தான் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஆஷிஷ் மற்றும் சதீஷ் மனதில் “இதெல்லாம் இவனுக்கு தெரிஞ்சா என்ன நடக்குமோ!” என்று சிரித்துக் கொண்டே இருக்க..

சித்தார்த் ஒரு சில நொடிகளில் அந்த பவர் பாயிண்ட் பற்றி லிட்டில் ஹார்ட் பற்றியும் விளக்க ஆரம்பித்தான். அதைக் கேட்டு அனைவரும் அதை கேட்டுக் கொண்டிருக்க..  முடிவுக்கு வந்தவன். இந்த இந்த சப்ளிமெண்ட்டை யங்ஸ்டர்ஸ் மட்டுமில்லாம   15 வயதுக்கு மேல் இருக்கிற பொண்ணுங்கல இருந்து பண்ணி வயசானவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம்! இதை எல்லாருக்கும் சேர் பண்ணுவீங்களா? என கேட்க.. 

 அதை கேட்டதும் அங்கிருக்கும் அனைவரும் கைகளை தட்டி கொண்டே கண்டிப்பா சார்! என கூறினார்கள்.

 இப்போ ஆசஸ் உங்ககிட்ட பேசுவாரு என்று நேராக அவனுடைய இடத்திற்கு போய் அமர்ந்தார்.

இங்கே இதன்யா என்ன செய்து கொண்டிருக்கிறாள்? 

நேராக ரெஸ்ட் ரூம் பக்கம் வந்தவள் கைகளை கழுவிக்கொண்டு நிற்க..நான்கு பெண்களும் மூச்சு வாங்கிக் கொண்டே நின்றார்கள்.  “என்னை சௌந்தர்ராஜன் என்ன பண்ண போறாரோ?” என்று வினோ கவலையுடன் சொல்ல..

அதெல்லாம் நம்மளை யாரும் அந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க நம்ம எவ்வளவு பெரிய செலிபிரிட்டி!  என்று பிரியா சொல்ல..

அதைக் கேட்டதும்  ஆமா டி இப்படித்தான் நினைச்சுகிட்டு அங்க எல்லாரும் நம்மளையே பார்த்தாங்க! என பூஜா சொல்ல…

அதனால என்ன இப்போ மொத்த காலேஜுக்கும் நம்ம அஞ்சு பேரும்தான் ஹாட் டாபிக்கா இருபோம் என சந்தோசத்துடன் கூறினாள். 

 இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வினோ அருகில் வந்து அவளின் தலையை தொட்டு எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க? நீ எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா பண்ணியிருக்க? உன்னோட முடிய எல்லாரும் கண்ணு போட்டு இருக்காங்க! அதிலிருந்து ரெண்டு முடிய பிச்சு கொடு என்று கேட்க..

என்ன?  வலிக்கும்.. என்று இதன்யா கூறினாள்.

பரவாயில்லை கொடு உன்னை சுத்தி போடனும்! முடிய வச்சு சுத்தி போடுவோம்! என்று கேட்க.. 

மெதுவாக கொஞ்சம் முடி எடுத்து கொடுத்தாள்.

அதை விட்டு சுத்தி போட்டவள்.  இதுல துப்பு தூக்கி முச்சந்துயில் போடலாம்! ஹான்  நீ ஓடி போய்  இத முச்சந்தியில் போட்டுட்டு வா பூசு என்று வினோ கொடுக்க.. 

அதை வாங்கிக் கொண்டு பூர்ணா மற்றும் பூஜா இருவரும் சென்றார்கள்.

அதன் பின் வினோ அவளை அருகில் அழைத்து தண்ணி ஜடை போல் இரு பக்கமும் முடியெடுத்து நடுவில் பின்னி விட்டு, அதன் பின் அனைத்து முடிகளையும் ஒரு சேர பின்னி கீழே பேண்ட் போட்டு விட்டாள்.

இங்கே திரும்பு! என்று பார்க்க..

இதன்யா என்ன என்று திரும்பினாள்.‌

வினோ அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே ரொம்ப அழகா இருக்க டி! இந்த முடி உனக்கு அவ்வளவு அழகு! பத்திரமா பாத்துக்க என்று கூற..

பிரியா உடனே இதன்யாவின் அருகில் வந்து ஆமா என்னுடைய இதயா குண்டு ரொம்ப ரொம்ப அழகு என்று கன்னத்தில் முத்தமிட.. 

ச்சீ பிரியா என்று அவள் சினுங்க..

வினோ நானும் முத்தம் கொடுக்கிறேன் என்று இதன்யாவின் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. 

இதன்யா அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டாள். சரி நம்ம கேண்டின் போய்  கூல் வாட்டர் குடிச்சிட்டு அப்புறம் இங்கேயே சுத்திக்கிட்டு இருப்போம்! பங்க்ஷன் முடியட்டும். அப்புறம் நம்ம கிளாஸ் போயிடலாம்! மறுபடியும் அங்க போக முடியாது! எனக்கு வேற அங்க போனாலும் உச்சா  வர மாதிரி இருக்கு..  என்று வினோ கூற..

இதை கேட்டது பிரியா எனக்கும் ரொம்ப பயமா இருக்கு! என்று கூறினாள்.

அதன் பின் அவர்கள் ஐவரும் சேர்ந்து கேண்டின் சென்று கொஞ்சம் கூல் வாட்டர் குடித்து ஒரு பக்கமாக அமர்ந்து அந்த சாக்லேட் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தார்கள். 

ஹப்பா நல்ல வேலை இன்னிக்கி நல்லா போச்சு!  நிறைய ஹவர கட்டடிச்சிருக்கோம்! என்று சிரித்துக் கொண்டே பேசினார்கள்.

ஆமா ஆமா நாளைக்கு இதே மாதிரி லஞ்ச்ல மீட் பண்ணலாமா? நம்ம எல்லாரும் ஒட்டுக்கா சாப்பிடலாமா? கேண்டின்ல தக்காளி சோறு நாசமா இருக்கும்! வாங்கி சாப்பிடலாமா? சாயந்திரம் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்! என்று கூற..

நாளைக்கு நான் ஸ்கூல் போகணும் என்று பூஜா கூறினாள்.

நானும் போறேன் என்று கூறவும்..

நீ பார்ட் டைம் ஜாப் போறியா என்று அனைவரும் கேட்டுக் கொண்டு..‌ அப்படியே பேசி வகுப்பறை மதிய உணவு இடைவேளை வந்தது.

இங்கே ஆசிஷ் பேசி முடித்து கரகோஷங்களுடன்  கிளம்புவதற்கு முன்னால்  டேய் சித்து உன்னோட காலேஜ சுத்திக்காட்டு என்ற ஆசை கேட்க..

ஏன் இங்க இருக்குற பொண்ணுங்களை  பார்த்து சைட் அடிக்கணுமா என்று சித்தார்த் கேட்டான்.

 ஆஷிஷ் தலையை கோதி விட்ட படி எல்லா பொண்ணுங்களையும் வேண்டாம்! கோகுல பிரியா குழுவை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என்று  கூறினார்.

செருப்பால அடிப்பேன் என்று சதீஷ் முறைக்க..அதேதான் நானும் நானும் சொல்றேன் என்று சித்தார்த் கூற…

அடேங்கப்பா அந்த பிரியா வாயாடி இதன்யா இவங்க மட்டும் தான் அழகியா?  என ஆசிஷ் பார்க்க..

வேற என்ன சொல்ல வர என நகத்தை தேய்த்து கொண்டே அடிப்பது போல சித்தார்த் பார்த்தான். 

அது அப்படி இல்ல மச்சி! இதன் யா பேரழகி டா உலக அழகி! அவளை நான் பார்த்து பேசி சிரிக்க தான் முடியும்! எனக்குண்ணு ஒரு ஆள் வேணும் தான! இதயா கூட மூணு பேர் இருந்தாங்க தானே அவளுங்க  செம்மையா இருக்கிறார்கள்!  என்று ஆஷிஷ் சொல்ல..

டேய் அதுல பூஜா எங்க அண்ணாவோட லவ்வர்! என்னோட வதினா! என்று சதீஸ் கூறினான்.

இதை கேட்டதும் ஆசிஷ் திடுக்கிட்டு யார் அந்த பூஜா? என்று கேட்க..

அதுதான் பாப்பா கூட இன்னொரு பொண்ணு புடவை கட்டிக்கிட்டு இருந்தது.  அவங்க தான் பூஜா! 

ஓ அந்த பொண்ணு பேரு தான் பூஜாவா? என்று ஆசிஸ் கேட்க..

ஆமா நியாபத்தில் வச்சுக்க என சதீஸ் சொல்ல. ஆஷிஷ் நொந்து கொண்டே என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க?  ஆள் ஆளுக்கு ஒருத்திய தூக்கிட்டு வரீங்க!  அப்ப நானு! என்ற ஆசிஸ் பாவமாக கேட்க..

உனக்கு இந்த காலேஜ் இல்ல!  இன்னும் உன்னோட ஆள் பொறந்திருக்கவே இல்ல டா!   நீ முத்துன கத்திரிக்கா தான் என்று சித்தார்த் கள்ள சிரிப்புடன் கூறினான். 

அப்படின்னா என்ன என்று சதீஷ் கேட்க..

நீ ஒரு தத்தி என்று சித்தார்த் சொல்ல..

 இனி முழு வேலையும் லவ் பண்ணலாம்ன்னு இருக்கேன்.  எனக்கு அவங்களையெல்லாம் இன்ட்ரோ குடு!  ஜாலியா இருக்கும்!  பேசாம நானும் வந்து காலேஜ் படிக்கலாமான்னு இருக்கேன்!  பேசாம காலேஜ் பத்தி ஒரு தீம்ல ஒரு படம் எடுத்தா என்ன? உங்க காலேஜ்லையும் ஷூட்டிங் பண்ணிட்டு நிறைய பேரை சைட் அடிக்கலாம்! இந்த என்விரான்மென்ட் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு! எனக்கு தனியா கூட காலேஜ் சேர்ந்து படிக்கணும் போல தோணுது! பிரியா கூட படிக்கணும் போல தோணுது! என்று கூற

இருவரும் அவனை முறைத்தார்கள். 

 அவர்கள் அனைவரும் சேர்ந்து சித்தார்த்தின் கரஸ்பாண்டெட் அறைக்கு செல்ல கிருஷ்ணன் பொறியியல் கல்லூரி பக்கம் வேலையாக சென்றார்.

சித் சாப்பிட உணவுகளை ஆர்டர் செய்தான்.

உடனே சதீஷ்  உனக்கும் அவளுக்கும் சண்டையா என்று கேட்க..

யாரு?என்று சித்தார்த் கேட்க.  .

டேய் நடிக்காதடா சித்து! உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த பசங்க எல்லாருமே இதன்யா மேலே சரியான கண்ணுடா! இந்த காலேஜ்ல இப்போதைக்கு ஹார்ட் டாப்பிக் அந்த அஞ்சு பேரும் தான்! அவங்கள பத்தி தான் ஈச் அன் எவரி திங்க் பேசிட்டு இருக்காங்க! அதுவும் இதன்யாவோட முடியை பத்தி எல்லா பசங்களும்  பேசிக்கிறானுங்க! என சதீஸ் சொல்ல..

உடனே நாட்டுக்கட்டை அப்படின்னா என்ன மச்சி என்று ஆஷிஷ் கேட்க.. 

 ஏன்? யார் சொன்னது? எவன் சொன்னான்? என்று கேட்க..

சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டு உனக்கு பொறாமை படறத்துக்கு ஒரு அளவே இல்லையா டா ! அவனுங்க எல்லாம் சின்ன பசங்க! என்று சொல்ல.. 

அது எப்படி சொல்லலாம்! அவ என்னோட பொண்டாட்டி என்று சித்தார்த் கூறினான். 

அது உனக்கு மட்டும் தானே தெரியும் அவங்களுக்கு எலலாம் எப்படி தெரியும்? என ஆசிஷ் பார்த்தான். 

அதெல்லாம் தெரிய தேவையில்லை! அவ இப்படியே இருக்கட்டும்! என சித்தார்த் கூறினான்.

ஆஷிஷ் புருவம் சுருக்கிக்கொண்டே ஏன் அப்படி சொல்ற என்று கேட்க..

நான் எதையாவது எக்ஸ்பிரஸ் பண்ணா! அது எனக்கு பேட் தான் கொடுக்குது! நாங்க இப்படியே இருக்கோம்! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! இப்பதான் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணோம். என்று சித்தார்த் கூறினான் 

எப்ப  என்று ஆசிஸ் கேட்க..

போட்டோ வந்ததும் சொல்றன் வந்து பாரு என்று கூறினான்.

டேய் அதை விடு உனக்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் உன் முகத்தை அப்படி வச்சுட்டு இருக்க!என்று கேட்க..

சித் சோர்வாக சாய்ந்தவன். இவன் அழகா இருக்கான்னு வீடியோ கால் பண்ணி பேசுறா!

டேய் அவள் எப்போவும்.. எப்போ பேசினாலும்  அவ உன்ன பத்தி தான் கேட்பா என்ற ஆசிஸ் சொல்ல..

ஆமா பேஸ்புக் இன்ஸ்டாகிராம் எல்லாம் நீ தான் உங்களுக்கு இன்ட்ரோ குடுத்தியா?  மொத்தத்தையும் லாகின் பண்ணிட்டா! இன்று சித்தார்த் கூறினான்.

சதீஷ் ஒரு பெருமூச்சுவிட்டு இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதுக்காக அவ கிட்ட பேசாம இருப்பியா! என்று சொல்ல..

நானா பேசல! அவதான் என்கிட்ட பேச மாட்டேன்றா! என்ன சந்தேகப்படுறா! என்று சித்தார்த் கூறினான்.

என்ன சந்தேகம்? சொல்லு என்ன சந்தேகம் என்ற ஆசிஸ் கேட்க..

“அந்த நவ்யா கூட நான் ஆக்ட் பண்றது அவளுக்கு சுத்தமா பிடிக்கல! அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அந்த மேகா தான் தப்பா எண்ணத்தோடு இருக்கா! ஆனா அவ மேல  அந்த கண்ணாடிகாரிக்கு சந்தேகம் வரல அந்த நவ்யா கூட நான் அதிகமா பேசக்கூட மாட்டேன்! அவளை வைத்து என்னை சந்தேகப்படுறா! இத நான் என்னன்னு சொல்லட்டும்? ”என சித் நொந்து கொண்டே கூறினான். 

இதைக் கேட்டு ஆஷிஷ மற்றும் சதீஷ் இருவரும் சிரித்தார்கள்.

என்னடா சிரிக்கிறீங்க? பொண்ணுங்க எப்போ எப்படி நினைக்கிறார்கள்! அப்டின்னு ஒன்னும்  தெரியாது! டேஞ்சர் பாய்சன்! என்று சித்தார்த் கூற..

அப்படியா இதை அவள் கிட்ட சொல்லவா என்ற ஆசிஸ் கேட்க..

போய் சொல்லு! எனக்கு என்ன பயமா? என்று சித்தார்த் கூறினான்.

சரி அப்போ இன்னைக்கு நைட்டு அவளை கூட்டிட்டு வருவியா?  என்று கேட்டான்..

ஏன் இத உன்கிட்ட கேட்க சொன்னாளா?  என்று சித்தார்த் கேட்க..

ஆசிஸ் சிரித்துக் கொண்டே நீ கூப்பிட்டாலும் அவ வரமாட்டேன்னு சொன்னா!..

 அப்படியா அதையும் பார்க்கலாம். 

சரி ஓகே அப்போ நைட்டு பார்ப்போம்! நான் கிளம்பி போய் தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். என ஆசிஷ் எழுந்து கொஞ்ச தூரம் சென்றவன். மீண்டு.  பார்ட்டி எப்போ? என்று கேட்டான்.

என்ன பார்ட்டி? என்று சித்தார்த் கேட்க..

டேய் லிட்டில் ஹார்ட் லாஞ்சுக்கு பார்ட்டி வைக்கிறேன்னு சொன்ன! இப்போ என்ன பார்ட்டின்னு  கேட்கற? 

எனக்கு 20 டேஸ் ஷூட்டிங் இருக்கு! அத முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் பார்ட்டி! அதனால மேபி நெக்ஸ்ட் மந்த் வச்சுக்கலாம்! என்று சித் கூறினான்.

நெக்ஸ்ட் மன்த்-ஆ? என்று ஆசிஸ் கேட்க…

ஆமா இப்போ நான் கொஞ்சம் பிஸி! என்று கூற..

சரியென ஆசிஸ் கிளம்பிவிட்டான். 

சித்தார்த் அவனிடம் நைட்டு ரெடியா வந்துடு! ரொம்ப ரொம்ப முக்கியம்  இன்னிக்கு நைட்டு தான்! என்று கூறினான்.

சரி என்று ஆசிஸ் கிளம்ப.. அந்த நேரம் அவனுடைய தந்தையிடம் ஸ்ரீனிவாசாவிடமிருந்து போன் வந்தது.

ஹலோ சொல்லுங்க டாடி என்று ஆஷிஷ் கேட்க..

இப்பதாண்டா நீ ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்க! ரொம்ப சந்தோஷம் எல்லா இடத்துலயும் உன்ன பத்தி தான் செய்தி! படத்தைவிட இந்த அட்வர்டைஸ்மென்ட்க்கு நீ பிராண்ட் அம்பாசிட்டரா இருக்கிறது. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு! என்று கூறினார்.

தேங்க்யூ டாடி என்று ஆசை சிரித்துக்கொண்டே நிம்மதியுடன் பேசினான். 

டேய்! அவளை கூப்பிட்டு சமாதானப்படுத்து!  வரலைன்னு சொல்லிட போறா! என்று சதீஷ்  சொல்ல..

எங்க போய்ட போறா!  இங்கே கூப்பிட்டு போய் நான் சமாதானப்படுத்தினேனா! ஓவரா பிகு பண்ணுவா!  அதனால நான் பாத்துக்குறேன் நீ ஒன்னும் கவலைப்படாதே என்று  சித் கூறினான்.

ஆசிஷ் சென்ற கொஞ்ச நேரத்தில் சதீஸ் மற்றும் சித்தார்த் இருவரும் இரவு நடக்கபோகும் நிகழ்ச்சி பற்றிய ஏற்பாடுகளை சரி பார்க்க புரோடெக்ட் ஸ்டாக் என அனைத்தையும் பார்க்க அந்த பிரபலமான மால் காம்ப்ளக்ஸ்க்கு சென்றார்கள். 

ஆம் இந்த suppliment – காக தனியாக சோ ரூம் ஒன்றை நிறுவி இருக்கிறான். அதில் ஊதா வண்ண நிறத்தில் லிட்டில் ஹார்ட் பிராண்ட் வெள்ளி எழுத்துக்களில் மின்ன அங்கே ஆயிரம் ஸ்டாக் மற்றும் 500 கப்பில் காம்போ பேக் தயாராக இருந்தது. 

அங்கு அனைத்து வேலையையும் செக் செய்து விட்டு நவ்யா மற்றும் ஆஷிஷ் இருவருக்கும் மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு பத்திரிக்கை செய்தி தாள்களில் போட செய்தியாளர்கள் அனைவரையும் அழைத்து கூறினான். 

சதீஸ் அந்த இடத்தை ஆசையுடன் பார்த்து திருப்தி பட்டு கொண்டான். 

என்ன டா அப்படி பார்க்கிற? என சித் கேட்க..

இது இந்த பிராண்ட் எனக்கு என்னோட குழந்தை மாதிரி! எனக்கு இது ரொம்ப மனசுக்கு நெருக்கமான ஒரு விசயம்! இதுல எல்லா இடத்திலும் என்னோட ஒர்க் இருக்கு! 

சித் ஆத்மார்த்த புன்னகையுடன் ஆமா இது நீ தான்! என கை நீட்டி காட்டினான். ஆளுயர படம் அது சத்ய ஜித் மற்றும் கோகுல பிரியா அவன் சென்று அந்த படத்தை வருடி பார்த்தான்.

HAPPY!..

சரி வா நம்ம கொஞ்சம் எல்லாம் அகைன் செக் பண்ணிட்டு அப்புறம் கிளம்பி வரனும்! என இருவரும் கிளம்பினார்கள். 

*

கல்லூரியில் இருந்து வந்த இதன்யா எப்பொழுதும் போல உடையை மாற்றி கொண்டு தன் வீட்டுக்கு போன் செய்தாள். நிதன்யா மற்றும் தெய்வா என அனைவரிடமும் பேசினாள். 

அம்மா போனை கொடு நான் பேசணும் என நிதன்யா போனை வாங்கினாள். 

ஹே நிதி உன்னோட வயிற்றில் பாப்பா மூவ் தெரியுதா? என்னை பத்தி பாப்பாவுக்கு சொன்னியா? என கேட்டாள்.

அது நீ வா! வந்து பாப்பா கிட்ட பேசு என வயிற்றை நீவினாள். 

சரி ஓகே மாமா வந்து பார்த்தாரா? என இதன்யா கேட்க.. 

பார்த்தாராவா! என நிதன்யா கூற.. 

அப்போ வரலையா? 

வந்தாரு! என்னை அங்கே மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு! ஒரு வாரம் அங்கே ரெஸ்ட்! திண்டல் கோவிலுக்கு, கொடுமுடி போயிட்டு வந்தோம்! என நிதன்யா சிரித்து கொண்டே கூறினாள். 

அப்போ ஜாலி தான்! என இதன்யா சொல்ல.. 

சரி அதை விடு உன் கிட்ட முக்கியமா பேசணும்! 

சரி அதை விடு! எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு! உன்னோட வயிறு எவ்ளோ பெரிசா இருக்கு! எனக்கு அதை பார்க்கணும்! பனிமலர் வந்தால் எனக்கு உன்னை போட்டோ எடுத்து இப்போவே அனுப்பு! அட்லீஸ்ட் செல்ஃபி அனுப்பு! ஆசையா இருக்கு நிது! என இதன்யா கூறினாள். 

சரி இப்போவே அனுப்புறேன்! உன் கிட்ட பேசணும்! 

என்ன விசயம்! என மீண்டும் கேட்க.. 

அது அந்த மேகா! அது அவள் படம் நடிக்கிறா போல உனக்கு அதை பத்தி தெரியுமா! 

என்ன? உனக்கு எப்டி தெரியும்? என இதன்யா சொல்ல.. 

அது வாட்ஸ் அப்ல குரூப் ல சில போஸ்டர்ஸ் பார்த்தேன். அவள் அந்த அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டா போல! என கேட்க…

ஆமா! தெரியும்! என இதன்யா கூறினாள். 

நிதன்யா ஒரு நிமிடம் அமைதி ஆகி விட்டு அது அவள் பெரிய இடத்துக்கு போயிட்டா! நான் எனக்கு நிறைய கனவு இருந்தது.  ஆனால் என தயங்க..

அக்கா! நீ ஒரு லூசு டி! நீ உன்னை போய் அவளை உன் கூட கம்பேர் பண்ற? அவளும் நீயும் ஒண்ணா! அவளுக்கு நடிக்கிற வேலையை விட வேற என்ன தெரியும்! நீ உனக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்கு! உன்னோட லைஃப் செட்டில்.. உனக்கு தம்பி பாப்பா பிறந்ததும் கொஞ்சம் வளர்ந்ததும், நீ உன்னோட கேரியர்ல அடுத்து போலாம்! ஆனால் அந்த மேகா இன்னும் வாழ்க்கையில கடைசி ஸ்டெப்ல தான் இருக்கா! அவளுக்கு படம் நடிச்சு! அப்புறம் கல்யாணம் ஆகி அப்புறம் குட்டி போட்டு இதெல்லாம் நடக்க போகும் போது என் அக்கா stable life ல இருப்பா! என்னோட பையன் வளர்ந்து நாளைக்கு படிக்கிற அளவுக்கு போயிருப்பான்! ஆனால் அவளுக்கு அப்போ தான் குழந்தை இருக்கும்! நீ எப்படி வேணாலும் போ நிதி ஆனால் உன்னோட வாழ்க்கை இந்த பொண்ணுங்க வாழ்க்கை ஆரம்பிப்பது கல்யாண வாழ்க்கை தான்! நீ எதுக்கு நிதி கவலை படுற! Happy யா இரு டி! என கூறினாள். 

எனக்கு இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு! சின்னு.. எனக்கு என்னை பத்தி குறையா இருந்தது. என நிதன்யா கூறினாள். 

இதன்யா சிரித்து கொண்டே சரி சரி நீ ஃபீல் பண்ணாத அவள் நடிக்கிற படம் ஊத்திக்கும் என கூறி கொண்டு சிரிக்கவும் புறை ஏறி இரும்பும் சத்தம் கேட்டது. 

வெடுக்கென இதன்யா திரும்ப அங்கே சித்தார்த் அவளை பார்த்து கொண்டே வந்தான். 

நிதி போட்டோ அனுப்பு டி! என சொல்லி போனை வைத்தாள். 

என் படம் ஊத்திக்கணுமா! அவ்ளோ சந்தோசமா! என கேட்டு கொண்டே அவள் முன் வந்து நின்றான். 

நான்! அது! உங்க படத்தை மீன் பண்ணல.. அந்த மேகா பத்தி தான் சொன்னேன்! உங்களை பத்தியும் உங்க கோ ஆக்டர் பத்தியும் நான் எதுக்கு பேச போறேன்! என சொல்லி கொண்டே அவனை தவிர்த்து விட்டு சென்றாள். 

அந்த நேரம் அவளின் போனுக்கு டிங் என்று மெஸேஜ் வந்தது. இதன்யா வேகமாக போனை எடுத்து பார்க்க நிதன்யா கிட்ட இருந்து தான் மெசேஜ் வந்தது. 

இதன்யா சிரித்து கொண்டே பார்க்க நிறை மாத வயிற்றில் மிகவும் அழகாக இருந்தாள். 

அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே நிதி அழகா இருக்க! உன்னை பார்க்கணும் போல இருக்கு டி! என ஆர்வத்துடன் டைப் செய்ய அதற்குள் அவளின் கையில் போன் இல்லை. 

சித் பிடுங்கி கொண்டான். போனை கொடுங்க! கொடுகன்னு சொன்னேன்! என அவள் அவனிடம் பிடுங்க முயற்சி செய்ய

அப்படி யாரை பார்த்திட்டு இருக்க? அந்த அளவுக்கு ஸ்மைல் அதிகமா இருக்கு! என பார்க்க..

அது எங்க அக்கா! கொடுங்க! என அவள் அடிக்க..

என்ன வயிறு பெருசா இருக்கு! 

நிறைய சாப்பிட்டா? உங்க கிட்ட நான் எதுக்கு சொல்லணும் போனை கொடுங்க… என கிள்ளினாள். 

சித் அவளின் கையை பிடித்து உங்க அக்கா மாதிரி எனக்கு தெரியல. எனக்கு உன்னை பார்ப்பது போல இருக்கு! சோ நைட்டு வந்ததும் வேலையை ஆரம்பிக்கலாம்! கூடிய சீக்கிரத்தில் நீ இப்படி ஆகணும்! என சித் அவள் காதில் கூறி முத்தமிட்டான். 

இதன்யா…? 

*

இங்கே ஹாஸ்பிடலில் அபி எப்பொழுதும் போல் வேலையில் பிஸியாக இருந்தான்.

அந்த இடைவேளையில் பிரியாவுக்கு போன் செய்தான். அங்கே காலேஜில் நடந்த அத்தனை விஷயத்தையும் ப்ரியா அபியிடம் கூறினாள்.

அப்புறம் வேற என்ன நடந்தது என்று அபி கேட்க.. 

நான் பூஜா வினோ, பூர்ணா, இதையா எல்லாருமே ஜாலியா என்ஜாய் பண்ணா! மொத்த காலேஜும் எங்கள தான் பார்த்தது என்று அனைத்து விபரங்களையும் கூறி விட்டு நீ ஏன் வரல?  உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ண தெரியுமா?

இல்ல எனக்கு கொஞ்சம் வீட்டில் வேலை வந்துடுச்சு அதனாலதான் என்ற அபி சமாளித்து பேசினான். 

 பூஜா வழக்கம் பல வேலைக்கு வந்து அவளுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்க..

அந்த நேரம் அபிக்கு சித் அழைத்தான். 

சொல்லு டா! 

இன்னைக்கு நைட்டு பார்ட்டி இருக்கு கண்டிப்பா வந்துடு! காலையிலேயே உன்னை நான் எதிர்பார்த்தேன்! நீ வரல

சரி நான் நைட் வந்துடுவேன் என்று போனை வைத்தான் வெளியே வந்து பூஜா கிட்ட “எனக்கு ஒரு ஸ்ட்ராங் பிளாக் காபி வேணும்!”

 ஓகே சார் என எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு வந்து நீட்டினாள்.

அதை வாங்கிக் கொண்டவன் நைட்டு வந்த லிட்டில் ஹார்ட் இன்நாகரேஷன்க்கு உன்ன இன்வைட் பண்ணி இருக்காங்களா? என்று அபி கேட்டான்..

இல்லையே காலேஜ்ல அந்த பங்க்ஷன் ஏற்கனவே முடிஞ்சு போச்சு!

 சரி நீ போ! 

அதன் பின் ஒரு சில நிமிடங்கள் கழித்து சதீஷ் போன் செய்தான்.

என்னடா என்று கடுக்கடுப்புடன் கேட்டான்.

ப்ரோ இன்னைக்கு நைட்டு பார்ட்டிக்கு சித்தார்த் இன்வைட் பண்ணி இருக்கான் தானே! அதுக்கு அன்னிய கூட்டிட்டு வரியா? என்று கேட்டான்.

எதுக்கு அவளை கூட்டி வரனும்? 

அது சும்மாதான் என்று சதீஷ் கேட்டான்.

நான் எதுக்கு இவள கூட்டிட்டு போகணும் என்ற அபி கேமராவில் வெளியே அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?  என்று பார்க்க.. 

 பூஜா ஃபோனை நோண்டி சிரித்துக் கொண்டிருந்தாள். 

 அபி போன் செய்தான்.

ஹலோ சொல்லுங்க சார் எதுவும் வேண்டுமா? என்று பூஜா கேட்க 

உள்ளே வா!

சார் என்ன விஷயம்?

ஆமா அந்த போன்ல என்னத்த பாத்து அப்படி சிரிச்சிட்டு இருக்க! இது வேலை நேரம்ன்னு தெரியாதா? போன் இங்கே வச்சுட்டு போ!

அது அது வந்து!..

ஹே போன்ல என்ன பண்ணிட்டு இருந்த? என்ன சிரிப்பு!  என்று மீண்டும் கேட்டான்.

“இன்னிக்கு  ஆக்டர் ஆசிஸ் காலேஜ் வந்திருந்தார்! அந்த இன்னாகுரேஷன் ஃபங்ஷனுக்கு, அதை விட அவர் இதன்யாவை  இன்ஸ்டாகிராமில் பாலோவ் பண்றாரு!  நானும் அவளை அவரை  எப்போவோ பாலோ பண்றேன்! ஆனால் இன்னிக்கு அவர் எனக்கு எனக்கு!  மெசேஜ் பண்ணாரு!” என உற்சாகமாக கூறினாள். 

 அப்படியா என்று கேட்டவன் இங்கே காட்டு என்று கேட்க

நான் எதுக்கு உங்க கிட்ட காட்டணும்! உங்க வேலையை நீங்க பாருங்க!எனக்கு வேலை இருக்கு! என்று வெளியே சென்று விட்டாள்.

அதன் பின் அவளுடைய டூட்டி 8 மணிக்கு முடிய..

அபி வெளியே வந்தான். அருகில் உள்ள ரிசப்ஷினிஸ்ட் அபியை திடுக்கிட்டு  பார்க்க..

அபி பூஜாவை பார்த்தான். 

ஹே பூஜா! உன்ன தான் சார் பார்க்கிறார்!  எந்த சாரு என்று நிமிர்ந்து பார்க்க..

அங்கே அபி நின்று கொண்டிருந்தான். 

சொல்லுங்க சார்! என்ன வேணும்! என்று கேட்க..

நான் கிளம்புகிறேன்!!

சரிங்க சார் போயிட்டு வாங்க!

நீயும் கிளம்பு என அபி சொல்ல..

நானா! என பூஜா சாக் ஆகி பார்க்க..

 கிளம்புனு சொன்னேன் என்று அபி முன்னாள் நடந்தான் பூஜா என்ன சொல்லிட்டு போறார். என்று  பின்னால் சென்றாள்.

 எங்க போறோம்? நான் எதுக்கு என்று ஆயிரம் கேள்வி கேட்டாள்.

இன்னிக்கு நைட் நடக்க போறி சித்த்தோட அந்த லிட்டில் ஹார்ட் லாஞ்ச்க்கு தான் நம்ம ரெண்டு பேரும் போக போறோம்! ஹாஸ்டல்ல வெயிட் பண்ணு! நான் வந்து உன்ன பிக் அப் பண்ணிக்கிறேன்! என்று கூறினான். 

இல்ல நான் வர முடியாது! எனக்கு என சொல்ல வர…

நீ தானே நடிக்க ஆரம்பிச்ச! அதை கண்டின்யூ பண்ற பொறுப்பு கூட உனக்கு இருக்கு! நீ வர! என சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டான். 

நாளை பார்ப்போம்! 

தொடரும்.. 

கமெண்ட் போட்டு போங்க இன்னிக்கி epi எப்டி இருந்தது. 

 EPI 284

சித் அவளின் கையை பிடித்து “இந்த போட்டோல இருக்க உங்க அக்காவை பார்த்தால் எனக்கு அவளோட இடத்தில் நீ இருக்க மாதிரி எனக்கு தோணுது!!” சித்தார்த் பின்னால் இருந்து அவளின் கண்ணத்தொடு கண்ணம் உரசி நிதன்யாவின் படத்தை ஜூம் செய்தவன். “ஹான் உன் அக்கா அழகா இருக்கா!  உனக்கும் அவளுக்கும் வித்தியாசமே கண்ணு தான்! அவளோட கண்ணு ஜஸ்ட் ஒரு அனஸ்தீசியா, பட் உன்னோடது!.. மம் கொக்கைன் போல ஸ்ட்ராங்!” என அவன் பேச பேச கண்ணம் சிலிர்க்க அவனுடைய மூச்சு காற்று அவள் மேல் தீண்ட தீண்ட படபடப்புடன் நின்றாள். 

கன்சீவ் ரைட்!! என கேட்டு கொண்டே பெரு மூச்சை விட்டான். 

இதன்யா அவனிடம் இருந்து போனை பிடுங்கி கொண்டு இந்த வார்த்தையில் மருந்து தடவி செய்வினை வைக்கிற பேச்சு எல்லாம் என் கிட்ட வேணாம்! என்று சோபாவில அமர்ந்தாள். 

சித் அவளின் அருகில் சென்றவன். என்ன டி என்னென்னமோ சொல்ற! வாட் ஈஸ் மீன் பை செய்வினை? 

அது எதுக்கு நான் உங்க கிட்ட சொல்லணும்? கூகிள் இருக்கு போட்டு தேடுங்க! என கூறி கொண்டே தன் அக்காவின் அடுத்தடுத்த படங்களை பார்த்தாள். 

சித் அவள் சொன்னதை போலவே தேடி பார்த்தான். ஹே எனக்கெல்லாம் பிளாக் மேஜிக் தெரியாது. என கூற..

இதன்யா கண்டு கொள்ளாமல் அவளுடைய வேலையில் கவனமாக இருந்தாள். 

சித் அவளின் அருகில் வந்து அமர்ந்து இப்போ என்ன பிரச்னை? சொல்லு! 

எனக்கென்ன பிரச்னை? போங்க! என தள்ளி அமர்ந்தாள். 

ஹே ஓவரா பண்ற டி! 

ஆமா நான் தான் ஓவரா பண்றேன்! போங்க! 

சித் அவளின் போனை வாங்கி ஆஃப் செய்து அருகில் வைத்தவன். உன் அக்கா!  மாதிரி எப்போ நீ ஆகரது! என இரண்டு கைகளையும் பிடித்து அருகில் இழுத்தான்.  

இதன்யா அவனிடம் இருந்து விலக போராடி கொண்டே அடித்தாள். “ஹே இன்னிக்கு நைட் தான் நான் எதிர் பார்த்த நாள்! அந்த நாள் வந்திடுச்சு! லிட்டில் ஹார்ட் லாஞ்ச் ஆகும் போது இந்த சித்தார்த் லிட்டில் ஹார்ட்க்கு உள்ளே போக போறான்! சோ நைட்டு வந்ததும் வேலையை ஆரம்பிக்கலாம்! கூடிய சீக்கிரத்தில் நீ இப்படி ஆகணும்! ”என சித் அவள் காதில் கூறி முத்தமிட்டான்.  

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சித் அவளின் கழுத்து எலும்பில் முத்தம் கொடுத்து “ சரி கிளம்பு டைம் ஆகுது!”

“நான் எங்கேயும் வரல!”

“ஹே விளையாடாத டி! இன்னிக்கி தான் லாஞ்சிங்! எல்லாமே ரெடி! வா போலாம்” என சித் அவளுக்கான உடை பையை எடுத்து அவள் முன் வைத்தான். 

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு அப்படியே இருக்க 

என்ன டி ஆச்சு? 

“மிஸ்டர் சித்தார்த் அந்த இடத்தில் அழகான பொண்ணுங்க ஆல்ரெடி நிறைய பேர் வருவாங்க! சோ ரீல்ல ஜோடியா இருக்க உங்களுக்கு துணை நிறைய பேரு இருப்பாங்க! அங்கேயும் நான் ஒளிந்து கொண்டு தானே இருக்கணும்! எல்லார் முன்னாடியும் என்னால வர முடியாதே! அப்படி கஷ்ட பட்டு நான் வந்து பார்க்கிறதுக்கு வீட்ல சாப்பிட்டு தூங்குவேன்.” என கூறி விட்டாள். 

சித்தார்த்துக்கு கோபம் தலைக்கு ஏறியது. இத்தனை நாட்கள் உள்ளே உறங்கி கொண்டிருந்த கோபம் இன்று அவளின் வார்த்தையில் பற்றி கொண்டான். ஆனால் எதுவும் பேச வில்லை. அவளை அடி பார்வை பார்த்தவன். அப்போ இப்போவே இந்த நிமிசம் உன்னை எல்லார் முன்னாடியும் நீ தான் என் பொண்டாட்டி அப்டின்னு சொல்ல எனக்கு சம்மதம்! வரயா? என கேட்டான். 

மாட்டேன்! என வேண்டும் என்றே கூறினாள். 

சித் கைகளை இறுக்கி மூடி திறந்தவன் உஷ்ண மூச்சை வெளி விட்டு உதட்டை அழுத்தி கடித்து கொண்டவன். இப்போ உனக்கு என்ன டி பிரச்னை? சொல்லு! 

உங்களுக்கு என்னன்னு தெரியாதா? எதுவா வேணாலும் இருக்கட்டும்! ஆனால் நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா! நீங்க உங்க சமூகம் ரொம்ப பெருசு! நாளைக்கு என்ன வெனாமும் நடக்கலாம்! என இதன்யா வேண்டும் என்றே கூறினாள். 

சித் ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவன். “இப்போ என்ன பண்ணனும்? தெரியாமல் அவள் அழகா இருக்கான்னு சொல்லிட்டேன்! நீ என்னை அழகா இருக்க அப்டின்னு சொல்லுவ அந்த சின்ன எஸ்பெக்டைசன் அது சின்னது இல்ல ரொம்ப அதிகம்! அதை நேரடியா நான் உனக்கு எக்ஸ்பிரஸ் பண்ணது தப்பு தான்! என பெரு மூச்சை விட்டவன். இனி நான் நடிக்க கூடாது! இது தான உன்னோட ஆசை! நான் நடிக்கல! எனக்கே தெரியுது! வேலை நிறைய இருக்கு! இந்த நடிக்க போறது டிஷ்டப் தான் ஆகுது! சோ நான் நடிக்கல!” என கூறினான். 

இதன்யா அவனை கண்டு கொள்ளாமல் போனை நோண்டி கொண்டிருக்க… சித் உள்ளே சென்று கோட் தேர்வு செய்யாமல் ஒரு கேசுவல் உடையை நச்சென தேர்வு செய்தான்! பிஸ்னஸ் மற்றும் ஆபீஸ் விசயங்களுக்கு மட்டும் தான் சூட் நன்றாக இருக்கும் என்று இந்த உடை பொருத்தமாக இருக்கும் என நினைத்தான். 

வைலட் சேர்ட், மட் பாட்டம், ஒயிட் ஸ்நீக்கிர்ஸ், மட் வண்ண வார் வாச், பிளாக் கூலர்ஸ் என மிகவும் அழகாக வெளியே வந்தான். அவனுடைய வாசனை திரவியம் ஒரு ஸ்பிரே! உடையை சரி செய்து கையை professional costume வல்லுநர் போல மடித்து விட்டு தலையை கோதி அழகாக சீவி விட்டான். அவனுடைய கண்கள் ஒரு முறை மூடினால் கூட ஒரு சொக்கி விழும் அளவுக்கு அலுப்பு, சோர்வு தூக்கம், இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு தான் தூங்க வேண்டும்! இவளை இந்த கஷ்டத்திலும் கொஞ்சினால் மிஞ்சி கொண்டே செல்கிறாள். 

ப்ச்ச என வாய் மொழியாக கூறியவன். அவளை கண்டு கொள்ளாமல் கிளம்பினான். 

வரல என்று வீம்புக்கு சொல்பவளை என்ன சொல்ல முடியும்? வந்து விட்டான். அவன் செய்யும் இத்தனை உழைப்பும் அவளுக்காக தான்! ஆனால் அதை அறியும் நிலையில் அவள் இல்லை. 

இதன்யா பொக்கென முகத்தை வைத்துக்கொண்டு நேராக ரோஷினி என்ன செய்கிறாள்?  என்று பார்க்க வந்தாள்.

அவளுடைய அறை மிகவும் இருட்டாக இருந்தது.  என்ன அப்போ ரோஸ் அந்த  ஃபங்ஷனுக்கு கிளம்பி போயிட்டாங்க என்று நினைத்துக் கொண்டே லைட் போட்டாள்..

 யாரது? என்று பற்களைப் கடித்துக் கொண்டு தலையை சொரிந்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

 என்ன ரோஸ்னி நீங்க ஃபங்ஷனுக்கு கிளம்பலையா? என்று கேட்க..

எந்த பங்க்ஷன்க்கு கிளம்ப சொல்ற?  அதுதான் என் மொத்த தூக்கத்தையும் உன் புருஷன் ஸ்பாயில் பண்ணிட்டு போயிட்டானே! என்று கூற..

இதை கேட்டதும் இதன்யா என்ன சொல்றீங்க?  நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலையே?  என்று  சொல்ல..

ரோஷணியே கொட்டாவி விட்டுக் கொண்டே என்னடி உனக்கும் அவனுக்கும் பிரச்சனை?   உன்னால நான் கெஸ்ட் ரூம்ல தூங்க வேண்டியது தான் போச்சு!  என்று அப்படியே மயங்கி சரிந்தாள்.

என்ன? என்று இதன்யா ஷாக் ஆகி கேட்க.

என்ன நொன்ன என்று ரோஷினி மறுபடியும் கேட்டாள்.

ரோஸ் என்ன விஷயம் சொல்லுங்க? என்று இதன்யா பக்கத்தில் வர… 

அய்யய்யோ தூக்க கலக்கத்துல எல்லாமே உளறிட்டேனே என்ற தலையை சொரிந்து கொண்டே ரோஷினி இதன்யாவை பார்த்தாள்.

இதன்யா கைகளை கட்டிக் கொண்டு என்ன விஷயம்?  நீங்களும் அவரும்? என்ன மறைக்கிரீங்க?  உங்க அண்ணா என்ன பண்ணாரு? உண்மைய சொல்லுங்க? என்று கேட்டாள்.

ஒன்னும் இல்ல போ! 

ப்ளீஸ் நீ  நடந்ததுன்னு சொல்லுங்க!  நான் தானே உங்களுக்கு ரொம்ப முக்கியம்! இல்ல? உங்க அண்ணா முக்கியமா? என்று இதன்யா கேட்க..

இத வச்சு என்னை மாத்தி மாத்தி பிளாக்மெயில் பண்ணுங்கடி உனக்கும், உன் புருஷனுக்கும் வேற வேலையே இல்லையா? என்று அவள் கேட்டாள்.

இதன்யா சிணுங்கி கொண்டு என்ன? ரோஷினி சொல்லுங்க?  என்று கேட்க..

 இத நீ அவன்கிட்ட சொல்லிடுவியா என்று ரோஷினி கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்க..

எத? என்று கேட்க .

அய்யோ! கடவுளே! கோவிந்தா! மாதேஸ்வரா! என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்து என்று ரோஷினி கூறினாள்.

நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல! நைட்டு ஏன் நீங்க கெஸ்ட் உங்களை படுத்தீங்க! என்று இதன்யா கேட்க.. 

நைட் சித்தார்த் வந்தான். வந்துட்டு, என்னை கெஸ்ட் ரூம்ல படுக்க சொல்லிட்டு உன்கூட படுத்து தூங்கினான்.  என்று கூறினாள்.

அப் அப்படியா? அய்யோ! அப்படியா என்று இதன்யா ஷாக் ஆகி கேட்க..

அப்படித்தான் இது போயி அவன்கிட்ட சொல்லி வைக்காத! என்னை ஏற்கனவே பிளாக் மெயில் பண்ணிட்டு இருக்கான்! காலேஜ்ல போனாலும் கிளாஸ் நடத்தி கொல்றாங்க! தூக்கம் தூக்கமா வருது! ஆடிட்டோரியம் வந்து தூங்கலாமா அப்டின்னு பார்த்தால்! விளக்கு ஏத்து அதை பண்ணு ,இத பண்ணனு, அங்க ஒரு டென்ஷன் பண்றாங்க!  சரி வீட்டுக்கு வந்து தூங்கலாம் அப்படின்னு தூங்கினா! நீ வந்து நிக்கிற! என்னடி உங்களுக்கெல்லாம் பிரச்சனை? என்னை தூங்க விட மாட்டீங்களா?  என்று ரோஷினி கேட்டாள்.

சரி நீங்க தூங்குங்க என்று உடனே வெளியே வந்த இதன்யாவிற்கு தான் எவ்வளவு முட்டாள்தனமாக பேசினோம்? அவனிடம் எப்படி நடந்து கொண்டோம்? என்று தோன்றியது.

அப்போ நைட்டு அவர்தான் எனக்கு முத்தம் கொடுத்தாரா? இது தெரியாம நான் வாய பொளந்து தூங்கிட்டு இருந்தேனே! அவர என்னவெல்லாம் பேசி அய்யோ!  எனக்காக தான எல்லாமே செய்றாரு! அதுவும் என் பேர்ல செய்யறாரு! அவருக்கு என் மேல எவ்ளோ லவ்! என்று ஃபீலாக நினைத்துக் கொண்டிருந்தவள்.  வேகவேகமாக அறைக்குச் சென்று அவன் வைத்த பையை பிரித்துப் பார்த்தாள்

அதில் அழகாக சிம்பிளாக ஒரு புடவை இருந்தது.  புடவை எடுத்துப் பார்த்தால் மிகவும் அழகாக இருந்தது.  அதற்கு சிம்பிளான ஆபரணங்கள் அவள் அப்படியே இதை கட்டிக்கொண்டு சித்தார்த்தியினுடைய பக்கத்தில் நின்றால் எப்படி இருக்கும்?  என்று கனவு கண்டாள்.

ஒரு குதி குதித்து விட்டு வேகமாக குளிக்கச் சென்று  வெளியே வந்தவள்.  ஹீட்டர் போட்டு முடியை காய் வைத்து, ஒரே ஒரு கேட்ச் கிளிப் மட்டும் தலைக்கு போட்டு, அந்த புடவையை அழகாக கட்டிக் கொண்டாள்.

இதுக்கு ஒரு பிலிப்ஸ் விட்டால் தான் நல்லா இருக்கும் இதுதான் அந்த ட்ரெஸ்ஸோட புடவை கொடுத்திருக்கு! சோ அதனால நம்ம ஒரு ப்ளீட்ஸ் வச்சுக்கலாம் என்று ஒரு பிலிப்ஸ் வைத்தவள், ஒரு கோபுர பொட்டை வைத்துக் கொண்டு, சித்தார்த்  ஏற்கனவே வாங்கி கொடுத்து லிப்ஸ்டிக் எடுத்துப் பார்த்தாள். கொஞ்சமாக போட்டுக் கொண்டாள்.மம்மா எர்த் ப்ளூபெர்ரி பெர்ஃப்யூம் கொஞ்சமாக அடித்துக் கொண்டாள். 

அதனுடைய வாசனையே மயக்கியது. அதன் பின் வேற என்ன? வேற என்ன? என அவளுடைய கண்ணாடியை போட்டுக்கொண்டு,  வாட்ச் கட்டிக் கொண்டு சித்தார்த் போட்டு விட்ட  மோதிரத்திற்கு முத்தம் கொடுத்து,  சரி இன்னைக்கு நான் ரொம்ப கோபமா பேசிட்டேன்! எப்படியாவது உங்களை சமாதானப்படுத்தனும் என்று ஒரு பர்ஸ், அவளுடைய போன் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

அந்த நேரம் ரிஷி ரோஷினியை அழைக்க செல்ல அவன் திட்டு வாங்கிக்கொண்டே வெளியே வந்தான். 

என்ன இவ? இப்படி திட்டுறா? மணி என்ன ஆகுது? இப்பவே என் கமுந்து அடிச்சு தூங்கிக்கொண்டு இருக்கிறாளே? அப்போ நாளைக்கு கல்யாணம் ஆனதும், நமக்கு வேலை செய்வாளா?  இல்ல இவளுக்கு நம்ம வேலை செய்யணுமா?  மணி இப்பதானே ஒன்பது ஆகுது.  இப்பவே இப்படி தூங்குகிறாளே?  என்று பார்க்க..  அந்த நேரம் இதன்யா சீனியர் என்று அழைத்துக் கொண்டே ரிஷி பக்கம் வந்தாள்.

தனு இன்னைக்கு செம்மையா இருக்கீங்க மேடம்!  மாமா மேல இருக்காரா! வந்துட்டு இருக்காரா! என்று கேட்டான்.

அவரா அவர் முன்னாடியே போயிட்டாரு என்று  கூற..

அப்புறம் நீ எப்படி என்று ரிஷி கேட்க

நீங்க…  ரோஷினி வரலையா?  என்று கேட்டாள்.

ஆமா அவ தான் பயங்கரமா தூங்கிட்டு இருக்காளே! காலையிலிருந்து தூங்கு மூஞ்சியாவே இருக்கா! என்று ரிஷி யோசனையுடன் நின்று கொண்டே கூறினான். 

அவள் அதை நினைத்து சிரித்தவள். சரி விடுங்க நம்ம போலாமா!  என்று கேட்டாள்.

அப்போ சரி வா போலாம் என்று ரிஷி  இருவரும் அந்த மாலையில் நடக்கும் இனாகிரேஷனுக்கு கிளம்பினார்கள். 

இங்கே அபிஜித் சரியாக 8:30 மணிக்கு பூஜாவின் ஹாஸ்டலுக்கு வந்து முன்னால் நின்றான். 

ரிஷி உடனே பூஜாவுக்கு அழைத்தான்.  ஹலோ சொல்லுங்க என்று அவள் பதிலளிக்க..

என்ன சொல்லுங்க?  உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?  கிளம்பி இருன்னு  சொன்னேனா?  என்ன பண்ணிட்டு இருக்க?  ரெடி ஆனியா இல்லையா?  என்று கேட்டான். 

ஹான் நான் ரெடி என்று சொல்லிக் கொண்டு பூஜா வெளியே வந்தாள்.

அபி அவளை உருத்து பார்த்தவன்.  வா என்று அழைத்துக் கொண்டு நேராக ஒரு பியூட்டிஃபு சேபாவுக்கு அழைத்துச் சென்றான்.  நாம் எங்கே போகிறோம்?  என்று பூஜா கேட்க.. 

சும்மா உன்ன இங்க ரவுண்டு அடிச்சு கூட்டிட்டு போகணும்னு! எனக்கு வேண்டுதல் அதனால் கூட்டிட்டு போறேன்! கம்முனு வரமாட்டியா? தேவையில்லாதது தான் பேசுவியா! என்று அதட்டினான்.

பூஜா அவனை பார்த்து இந்த அதட்டற வேலை இங்கே வேணாம்!  நாம நடிக்க தான செய்றோம்! அந்த வேலையை மட்டும் பாருங்க அதுவும் இப்ப நம்ம நடிக்கவே தேவையில்லை!  அங்க போய் அவங்க முன்னாடி தான் பெர்பார்ம் பண்ண போறோம்! 

 இதை கேட்டதும் அவளை மேலும் கீழும் பார்த்துக் கொண்டு உனக்கு நல்லா நடிக்கிற திறமை இருக்கு!  பேசாம சித்தார்த் படத்துல உனக்கு ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் சான்ஸ் வாங்கி தரவா? நீ தான் ரியல் லைப்ல நல்லா நடிக்கிற! அப்போ ரீல் லைப்ல சொல்லவே தேவையில்லை! என்று அபி கூறினான்.

பூஜா அவனை முறைத்து பார்த்துவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

அதன் பின் ஸ்பாவுக்கு சென்றவன்.  அவளிடம் ஒரு பையை கொடுத்து இதுல இருக்குற டிரஸ் வியர் பண்ணிட்டு வா! இந்தா என்று கூறினான்.

எங்க போய் டிரஸ் மாத்தணும்? எனக்கு எதுக்கு இந்த டிரஸ்?  என்று கேள்விகளை கேட்டு குடைய ஆரம்பித்தாள்.

நான் சொல்றத மட்டும் செய் போ!  உன்ன பத்தி அவங்களுக்கு தெரியும் என்று கூறினான்.

அஒரு சில நிமிடங்களில் பூஜா தயாராகி தன்னையே  பார்த்துக் கொண்டவளுக்கு இது  நான் தானா என்று தோன்றியது!  ஒப்பனையை ஒரு கோட்டிங் போட்டு பூசி இருந்தார்கள்.  அதுவும் அவளுக்கு அழகாக தான் இருந்தது.  அந்த ட்ரெடிஷனல் ஸ்டாச்சுவுக்கு,  புடவை கட்டியது போல அமுக்கவும் அழகாக இருந்தாள்.

பேரழகி என்று சொல்ல முடியாது.  அந்த உடைகளுக்கு ஏற்ற அழகி!  அதுவே போதுமே! பேரழகியாக இருக்க அவசியம் இல்லை! அவள் தயங்கிக்கொண்டே வெளியே வந்தவள்.  அவன் அருகில் வந்து போலாமா என்று கேட்க..

யார் நீங்க என்று அபி ஃபோனை நோண்டிக்கொண்டே கேட்டான். 

ஹலோ நான் தான் பூஜா என்று கூற..

பூஜா வா என்று சுற்றிலும் பார்த்தவன்.  நீயா பூஜா? என்று அவளை மேலும் கீழும் பார்த்தான்.

ஏன் என்ன பார்த்தா பூஜா மாதிரி தெரியலையா?  அப்போ நான் வேற பொண்ணு மாதிரி இருக்கேனா?  என்று கார் கண்ணாடியில் அவளின் முகத்தை பார்த்தாள். 

இந்த பூஜா வா என்று கொஞ்சம் சிரித்தவன். சரி போலாம் என்று அழைத்துச் சென்றான். 

ம்ம் நீ  சாப்டியா என்று கேட்டான். 

நான் சாப்பிட்டேன் என்று அவள் கூற..

நான் சாப்பிடல வா சாப்பிட்டு போலாம்.  என்று ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.  அவனின் பின்னால் ஒரு கொஞ்ச தூரத்தில் ஒரு கார் ஃபாலோ செய்து கொண்டே இருந்தது.  இது  அபியினுடைய பிரத்தியேக காவலாளிகள் அவனை பாலோ செய்து வந்தார்கள்.  ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றவர்கள். 

அபி அனைத்தையும் ஆர்டர் செய்தான். அவன் சாப்பிடுவதை பூஜா பார்த்துக் கொண்டே இருக்க.. 

உனக்கு வேணுமா என்று கேட்க? 

எனக்கு வேணாம் என்று திரும்பிக் கொண்டாள்.

 அபி சாப்பிட்டுக்கொண்டே  சாப்பிடுறவங்களை பார்த்தா கிரேவிங்ஸ் அதிகரிக்கும்னு சொல்லுவாங்க! 

எனக்கு தான் வேண்டாம்னு சொல்றேன்ல என்று  பூஜா கூற.. 

சீன் போடாத லிப்ஸ்டிக் எல்லாம் கலையாது சாப்பிடு என்று நீ கூறினான். 

பூஜா அனைத்தையும் சாப்பிட்டவள்.  இதுல என்ன இருக்கு உப்பு, சப்பு, காரம் எதுவுமே இல்லை  இதையெல்லாம் யார் சாப்பிடுவா? 

இதெல்லாம் கம்மியா சாப்பிட்டாதான் நமக்கு அதிகமா சாப்பிட்டா bp , சுகர் எல்லாமே வந்து சேரும்! உனக்கெல்லாம் இது புரியாது! நான் இப்படித்தான் சாப்பிடுவேன்! ஏதாவது ஒரு நாள் தான் ரொம்ப நல்லா சாப்பிடுவேன்! அதுவும் ரெஸ்டாரண்ட்ல எனக்கு சுத்தமா பிடிக்காது! என்று கூறினான்.

உங்களுக்கு எதுக்கு ரெஸ்டாரன்ட் வீட்டிலேயே உங்களுடைய , எல்லாம் ரெஸ்டாரன்ட் செப்  தானே சமைக்கிறீங்க! என்று பூஜா கூறினாள். 

ஆமா இப்போ அதுக்கு என்ன என்று கூறியவன்.  கொஞ்சம் சாப்பிடும் வேலையை பாரு! என இருவரும் சாப்பிட்டுவிட்டு நேராக அந்த பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். 

இன்று சித்தார்த் என்ன செய்கிறான்?  பார்த்து விடலாம்! 

முகத்தை தொங்க போட்டு கொண்டே சித்தார்த் கொஞ்சம் கடுமையாக வந்து சேர்ந்தான். 

எல்லாமே சரியா இருக்கா?  என்று விஐபி லிஸ்ட், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், பிராண்ட் அம்பாசிடர் இன்னும் முக்கியமானவர்கள் வேலையாட்கள் என அனைவரையும் சதீஷ்டம் விசாரித்தான்.

எல்லாமே பக்கவா இருக்கு பாஸ்!  எல்லாரும் வந்துட்டாங்க! டின்னர் போயிட்டு இருக்கு!  பாதி பேர் கெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க!   என்று சதீஷ் கூறினான்.

சரி என்று சித்தார்த் அங்கிருக்கும் அந்த காம்போ பேக்குகளை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். 

சதீஷ் அருகில் வந்து பாஸ் இதன்யா மேம் வரலையா?  என்று கேட்டான். 

சித்தார்த் கடுப்புடன் தொண்டையை சரி செய்து கொண்டு நிற்க.. 

பணிப்பெண் அவனுக்கு ஒரு கிளாஸ் தண்ணீரை நீட்டினாள். 

நோ தேங்க்ஸ் என்று அவளை பார்க்க.. அவள் சென்று விட்டாள்.

என்னாச்சு என்று சதீஷ் கேட்டான். 

 ஓவரா பண்றடா! என்னால தாங்க முடியல! வர மாட்டேன்னு சொல்லிட்டா! என்று கூறினான்.

வரமாட்டேன்னு சொன்னா, நீ விட்டுட்டு வந்துட்டியா? என்று சதீஷ் கேட்க..

என்ன பண்ண சொல்ற?  அவளை தூக்கி கொஞ்ச சொல்றியா? என்ன அடிமை மாதிரி ட்ரீட் பண்றா? என்னென்னமோ பேசுறா?  இந்த படம் தாண்டா எனக்கு லாஸ்ட்! இனிமேல் நான் படமே நடிக்க மாட்டேன்! என்று சித்தார்த் கூறினான்.

சதீஷ் அவனைப் பார்த்து சிரிக்க..

இப்போ எதுக்கு பல்ல காட்டுற! எனக்கு எரிச்சலா இருக்கு! நான் ரொம்ப சேடா இருக்கேன்! இன்னைக்கு நான் எவ்வளவு….ச்ச எத்தனை நாள் எனக்கு தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்! அசால்ட்டா வரலன்னு சொல்றா! என்று அவன் வருந்திக் கொண்டிருக்க..

அந்த நேரம் நவீன்குமார் மோகன் ரம்யா மற்றும் நவினுடைய காவலாளிகள் பீம்பாய்ஸ் இரண்டு பேர் வந்திருந்தார்கள். சதீஷ் தான் முதலில் அவர்களை பார்த்துவிட்டு.. .

சித்து நவீன் வந்தாச்சு ரம்யாவும் வந்திருக்காடா! என்று கூற

அவளை நீ கண்டுக்காத என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்! என்று சொல்லிக் கொண்டே வெல்கம் பண்றவங்க!  பொக்கே எல்லாம் ரெடியா இருக்கா? என்று சித்தார்த் கேட்டான். 

இதோ பாஸ் என்று சதீஷ் அவர்களை அழைக்க பொக்கேயுடன் சித்தார்த் வெளியே நவீன் குமாருக்கு கொடுத்தான். 

நவீன் அதை வாங்கிக்கொண்டு பரவாயில்லையே! சொன்ன மாதிரியே ஆறு மாசம் இல்லாம ஜஸ்ட் 15 டேஸ்ல உன்னோட அச்சீவ் அதை பண்ணிட்டு போல! என நவீன் கூற.. 

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல! ஆரம்பிக்கும்போது தெரியும்! ஆனால் என்னோட ஆரம்பத்துக்கு  நீங்க தான் காரணம்! அத இங்கே இருக்கும் எல்லாருக்கும் சொல்ல கடமை பட்டிருக்கென். என்று சித்தார்த் கூறினான்.

நவீன் ஒரு எழன புன்னகையை சிந்த…

சித்தார்த் அவனிடம் “அப்புறம் தன்யா காஸ்மெட்டிக் ஓட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா! நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் போலாமா! என்று சித்தார்த் கேட்டான். 

நவீன் சித்தார்த்துக்கு கண்ணாடியை கழட்டிக்கொண்டே அவன் முகத்தை பார்த்து என்ன ரெடியா என்று கேட்க நவீனுக்கு பேச்சே வரவில்லை சரி கொஞ்சம் இல்ல கொஞ்சம் நிறையவே கஷ்டமா இருக்கும்னு தோணுது ஜஸ்ட் கமிஷன் முடிஞ்சதும் இதை பத்தி பேசிக்கலாம் என்று சொல்ல பாஸ் அவங்களுக்கான விஐபி சீட் இன்று காட்ட எப்பவும் உன்னோட அசிஸ்டன்ட் ஒருத்தர் தான்னு கேள்விப்பட்டேன்!  இப்போ புதுசா! என ரம்யாவை பார்த்தான். 

நீ மட்டும் தான் பெரிய பிசினஸ் பண்றியா?  நானும் பெரிய பிசினஸ்மேன் தான்! எனக்கும் நிறைய வொர்க் இருக்கு! நான் எத்தனை அசிஸ்டன்ட் வேணாலும் வச்சுக்கலாம்! அதை பத்தி உனக்கென்ன?  என்று சொல்ல.. 

சித்தார்த் தீவிரமாக யோசித்துக் கொண்டே இது பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா இன்னொரு சீட் கொடுத்திருப்பேன்!  ஆனா இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்ல மிஸ்டர் சந்திர மௌலியொட கிராண்ட் டாட்டர்  இன்னைக்கு வருவாங்கன்னு நினைச்சு,  ஒரு சீட் விட்டுட்டு போனேன்!  ஆனா  அவங்க வரல! அந்த சீட்டை உன்னோட அசிஸ்டன்ட்க்கு  கொடுக்கிறேன்! என ரம்யா பற்றி ரம்யாவிடமே கூறினான்.

ரம்யா பயத்தில் கண்களை மூடி திறக்க… மிஸ் நீங்க உட்காரலாம் என்று சதீஸ் சொல்ல..

ரம்யாவிற்கு ஒவ்வொரு நிமிடமும் திக்கு திக்கென்று இருந்தது. இவங்க ரெண்டு பேருக்கு என்ன பிரச்சனை?  எத பத்தி சித்தார்த் நவீன் கிட்ட பேசிட்டு இருக்கான்?  ஒண்ணுமே புரியலையே?  என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க…

மேம் வந்து உட்காருங்க என்று சதீஷ் கூறினான். 

ரம்யா தலையை குனிந்து கொண்டே அவனை ஓர கண்ணால் பார்க்க.. 

சதீஷும் சித்தார்த்தம் அவளை யார் என்று தெரியாதது போல காட்டிக் கொண்டார்கள். 

சித்தார்த் சதீஷிடம் ஓகே எல்லாரையும் வர சொல்லு பங்க்ஷன் ஸ்டார்ட் பண்ணலாம்! ஆல்ரெடி அபி வந்துட்டேன்னு மெசேஜ் போட்டுட்டான்! அவங்க உள்ள வருவாங்கன்னு நினைக்கிறேன்! ரிஷி ரோஷினி இப்ப வந்துருவாங்க! எல்லாரையும் வர சொல்லு!

சதீஸ் அடுத்த நிமிடமே அனைவருக்கும் தட்டி விட்டான்.   முதலில் இந்த லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட் மற்றும் மல்டி விட்டமின் டேப்லட் இரண்டையும் எந்த பார்மசிட்டிக்கள் கம்பெனியுடன் சேர்ந்து புரொடக்சன் வேலை செய்தார்களோ, அந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பாளர்கள் என அனைவரையும் வரவேற்று, அதில் தலைமையாக இருப்பவரை முன்னால் அமர வைத்தான். 

அதன் பின் , ரத்ன குமார், கிருஷ்ணன் என அனைவரும் வந்து சேர்ந்தார்கள். நவீன் குமார், மோகன், ரம்யா என அனைவரும் அமர்ந்திருக்க… செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள். என அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள். 

சித்தார்த் மைக் பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தான். ஹலோ எவரி ஒன்! உங்க எல்லாரையும் வெல்கம் பண்ணிக்கிறென். இந்த லிட்டில் ஹார்ட் என சொல்லி கொஞ்சம் சிரித்தான். இது பெண்களுக்காக புதுசா டிரை பண்ணது தான் இந்த லிட்டில் ஹார்ட் இது உங்க எல்லாரோட மனசுக்கும் நெருக்கமா அமையும் அப்டின்னு நினைக்கிறேன்.  இந்த காம்போ அதை பத்தி சொல்லனும்னா நம்ம ஆண்கள் சமூகத்துக்காக உருவாக்க பட்டது. என அனைத்து விவரத்தையும் எடுத்து கூறியவன். லாஸ்ட் ஒன் திங்க் ஒவ்வொரு ராப்பர் கூட நிஜமாவே உங்க ஹார்ட்டை டச் பண்ணும் இந்த சப்ளிமெண்ட் அதில மேஜிக்கள் குவெட்ஸ் இருக்கு! இந்த தளத்துல நடந்த போட்டியில் யார் வின் பண்ணாங்களோ! அவங்களுக்கு சொன்ன படி வந்து சேரும். 

ஒரு விசயம் நமக்கு பாடியில் ஒர்க் அவுட் ஆக 28 டேஸ் எடுத்துக்கும். அது போல் தான் இந்த சப்ளிமெண்ட் சொல்ல வேண்டிய எல்லா விசயத்தையும் சொல்லிட்டேன். இனி லான்சின்  ஸ்டார்ட் ஆக போகுது! என சொல்லி கொண்டே பார்த்தான். 

ஸ்டைலிஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையில் ரீல் ஜோடியாக ஆசிஷ் மற்றும் நவ்யா இருவரும் அவரவர்களுடைய சப்லிமென்ட் எடுத்து கொண்டு வந்தார்கள். அங்கு நடக்கும் அனைத்தையும் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் என வீடியோ எடுக்க.. இந்த நிகழ்ச்சி லைவில் போய் கொண்டிருந்தது. 

நவீன் குமார் எந்த உணர்வையும் வெளி படுத்தாமல் பார்த்து கொண்டிருந்தான். 

யார் இந்த பெண்? நவ்யா இவங்க ரத்தன குமார் பட நாயகி புது முகம் என அதை பற்றி பேச..

இவங்க தான் லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட்க்கு பிராண்ட் அம்பாசிடர் அண்ட் ஆஷிஷ் கவுடா இவருக்கு அறிமுகம் தேவையில்லை. மல்டி விட்டமின்க்கு பிராண்ட் அம்பாசிடர் அண்ட் ரெண்டும் சேர்ந்து கப்பில் காம்போ ஒன்னு அறிமுக படுத்த போறோம்! என சொல்ல இருவரும் அதை எடுத்து வந்து நின்றார்கள். 

என்னோட ஃபர்ஸ்ட் மோடிவேடர் மிஸ்டர் நவீன் குமார் இதை வாங்கிக்கணும்! என சித் கூறினான். 

நவீன் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து முன்னால் சென்றான். 

சுற்றிலும் பார்த்து கொண்டே லக்கி சார்ம் வரலயா? என கேட்டு கொண்டே பார்க்க..

சித் தப்பு மிசஸ் லிட்டில் ஹார்ட்! சித்தார்த் சரியா இருக்கும்! இனி திருத்திக்க.. என சொல்லி விட்டு அதை கொடுத்தான். 

நவீன் இளன புன்னகையுடன் வாங்கி கொண்டு செல்ல..

மிசஸ் சித்தார்த் லாஸ்ட் லைன்ல இருக்காங்க! இந்த வெற்றி அவளோட ஐடியா! சோ கண்டிப்பா அவள் இல்லாமலா! என சித் கூற…

நவீன் இதன்யாவை கண்டு விட்டான். இதன்யா கண்களில் ஆச்சரியம், கர்வத்துடன் மேடையை பார்த்து கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். 

சித்…? 

இதன்யா…? 

நவீன்…? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga இன்னிக்கு எபி எப்டி இருந்தது. சொல்லிட்டு போங்க! 

EPI 285

மிசஸ் சித்தார்த் லாஸ்ட் லைன்ல இருக்காங்க! இந்த வெற்றி அவளோட ஐடியா! சோ கண்டிப்பா அவள் இல்லாமலா! என சித் கூற…

நவீன் இதன்யாவை கண்டு விட்டான். இதன்யா அங்க முன்னால் நடக்கும் நிகழ்ச்சியை எக்கி எக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரிஷி சிரித்துக் கொண்டே  உனக்கு நிஜமாகவே தெரியலையா? முன்னாடி தான் மாமா விஐபி சீட் போட்டு வச்சிருக்காங்களே! அங்க போய் உட்காருகிறாயா? என்று கேட்டான்.

 அவனை வெடுக்கென பார்த்தவள். அங்க பத்திரிக்கையாளர்கள், நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர்ஸ், எல்லாம் இருக்காங்க! அவங்களுக்கு என்னோட முகம் தெரிஞ்சிருச்சுன்னா?   ஏற்கனவே இப்போதான் நிதன்யா கொஞ்சம் நல்லா பேசுறா! என்னோட முகம் டீவில வந்திருச்சுன்னா? என்னை  துருவி துருவி கேள்வி கேப்பாளே! எதுக்கு சீனியர் தேவையில்லாத வேலை! என்று இதன்யா கூறினாள். 

ரிஷி சிரித்துக் கொண்டே எதுவும் பேசாமல் அங்கு நடக்கும் நிகழ்ச்சியை கவனித்தான். அந்த நேரம் அபி பூஜா இருவரும் வர.. 

அங்கே இதன்யாவை பார்த்த பூஜா நேராக அவளுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டாள் பின்னால் ஒரு ரோ மட்டும் காலியாக இருந்தது.

இதன்யா அருகில் அமர்ந்த பூஜாவை பார்த்துவிட்டு நிகழ்ச்சியை கவனிக்க.. 

பூஜா அவளைப் பார்த்து சிரித்தாள்.  இதன்யா  நேராக நிகழ்ச்சியை கவனிக்க.. எப்ப வந்த இதன்யா? என்று  கேட்க.. 

யார் நீங்க என்னை பத்தி கேக்குறீங்க? என்று இதன்யா பார்த்தாள்.

ஹே நான் பூஜா டி என்று சொல்ல..

இதன்யா  ஷாக் ஆகி பூஜா!.   சீனியர்! இங்க பூஜாவை பாருங்களேன்! என்று ஆச்சரியத்துடன் காட்ட.. 

பரவால்லையே எங்க உன்னோட பார்ட்னரை காணோம்? எல்லாரும் ஜோடியா இருக்கீங்க? நான் மட்டும்தான் இங்க தனியா இருக்கேன்! அந்த ரோஷினி குப்புற படுத்தி தூங்கிட்டு இருக்கா! என்று கூறினான். 

நவீன் இதன்யாவை பார்த்து கொண்டே  அவனுடைய இடத்தில் போய் அமர்ந்தான்.

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு அடுத்த அனைவரையும் பேச அழைக்க…  ஒவ்வொருவரும் அவர்களுடைய அனுபவத்தை பற்றி கூறினார்கள். 

 இதையெல்லாம் மிஸ் பண்றேன் டா! பிரியாவும் இதன்யாவும் வந்திருந்தா, நல்லா இருக்கும்ல! என்று கூற..

சித்தார்த் நேராக அமர்ந்து கொண்டே  பிரியா மட்டும் தான் வரல..

அப்போ இதன்யா என்று சதீஷ் கேட்க..

அவ எப்பவும் வந்துட்டாளே!

எங்கடா இருக்கா என்று சதீஷ் சுற்றிலும் தேடிப் பார்க்க..

அவள் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தாள்.

சதீஷ் சித்தார்த்தை பார்த்து சிரித்துக்கொணடே இப்போ சாருக்கு சிரபுஞ்சில சாரி ஸ்விட்சர்லாந்துல இருக்கிற மாதிரி ரொம்ப சில்லுனு இருக்கும் போலையே! 

 ஏண்டா நீ வேற அந்த நவீன் ஒரு பக்கம் அவளையே வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கிறான். இன்னொரு பக்கம் இதன்யா  நான் இங்க என்னென்ன பண்றேன்னு பாக்க தான் அவ கிளம்பி வந்திருப்பா! மத்தபடிக்கு இதுக்கு எல்லாம் வரணும் வரணும்னு கொஞ்சம் கூட அவளுக்கு விருப்பம் இல்ல! என சித்தார்த் கூறினான்.

அதை எப்படி நீ சொல்ற? அவ கண்ண பாரு ரொம்ப எதிர்பார்ப்போட உன்ன தான் தேடி பாத்துட்டு இருக்கா! அந்த அளவுக்கு அவ இன்ட்ரஸ்டா இருக்கா! நீ கண்டத பேசிட்டு இருக்காத! என்று சதீஷ் கூறினான்.  

அடுத்தடுத்து அந்த இந்த டேப்லட் காம்போ பாக்குகளை அங்கு வந்த சில ஜோடிகளுக்கும் அந்த வலைத்தளத்தில் நடத்தப்பட்ட லக்கி டிரா மற்றும் காம்பெடிஷன் வெற்றியாளர்களுக்கும், அது கொடுக்கப்பட்டது. 

பத்திரிக்கையாளர்கள் முதல் அங்கிருக்கும் அனைவருக்கும் ஒவ்வொன்று வழங்கப்பட்டது.. அதன் பின் அனைவரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார்கள். 

சித்தார்த் எழுந்து நின்று இந்த பங்க்ஷன் இதோட முடிஞ்சது உங்களுக்கு டின்னர் ரெடி பண்ணி இருக்கேன்.  எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்!  

அனைவரும் சித்தார்த்திடம்  பேட்டி எடுக்க வர..

சித்தார்த் சிரித்துக் கொண்டே அதை தவிர்த்தவன் இந்த ப்ராடக்ட் பத்தி பேசுறதா இருந்தா,  பிராண்ட் அம்பாசிடர் கிட்ட கேளுங்க! அதே போல இதோட  முடிச்சுக்கலாம் அம் ஹஞரி

என்ன சார் இப்படி பேசாம போறீங்க! எவ்வளவு பெரிய ட்ரெண்ட செட் பண்ணி இருக்கீங்க!!ப்ளீஸ் சார் நாங்க நிறைய கொஸ்டின்ஸ் வச்சிருக்கோம்! எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்! என்று ரிப்போர்டர்கள் கூற..

சித்தார்த் ஒரு புன்னகை கொடுத்துவிட்டு இதோட சக்சஸ் மீட்ல பார்க்கலாம். இது எப்படி போகும்னு இன்னும் தெரியலையே! இப்பதானே லாஞ்ச் பண்ணி இருக்கேன்!

அங்கிருக்கும் ரிப்போர்டர்கள் அவனை பார்த்து இப்படி நீங்க பேசலாமா சார்? எவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணி இருக்கீங்க! உங்கள நாங்க ஆக்டரா தான் பார்த்தோம். ஆனா பிசினஸ் மேக்னட்னு எங்களுக்கு இப்பதான் தெரியுது. என்று பேச.. 

போதும் போதும் மத்த கேள்வி எல்லாம் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்! போய் சாப்பிடுங்க என்று அனைவரையும் அனுப்பினான்.

அங்கே நவ்யா மற்றும் ஆஷிஷ் கவுடா அருகில் சென்று…அவர்களை படம் எடுத்தார்கள் அவர்கள் அந்த பிராண்ட் பாஸ்டர் அனுபவம் மற்றும் அந்த சப்ளிமெண்ட் பற்றி சில வார்த்தைகள் பேசினார்கள்.  

எப்போ விளம்பர படம் வரப்போகுது என்று கேட்க..

அதை லிட்டில் ஹார்ட் பவுண்டர்கிட்ட தான் கேக்கணும் என்று நவ்யா புன்னகையுடன் கூறினாள்.

உங்களோட பர்ஸ்ட் லுக் பாத்தோம் நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க உங்களோட டைரக்டர் இங்க வந்திருக்காரா? என்று ரத்தினகுமார் பற்றி கேட்டார்கள். 

ஆமா படத்த பத்தி இப்ப நாங்க எதுவுமே பேச மாட்டோம்! என்று அவள் தவிர்க்க செல்ல..

படத்தோட ஹீரோ யாரு அத பத்தி கொஞ்சம் சொல்லிட்டு போங்க மேம்! என்று அவர்கள் கேட்க..

இதெல்லாம் இப்போ இல்ல! படம் வரும்போது பாருங்க! என்று அவள் கூறினாள். 

நவீன் குமார் ரம்யா மோகன் மூவரும் இருக்க ரம்யாவிற்கு இங்கிருந்து எப்படிடா செல்வது?  என்று ஒரே போராட்டமாக இருந்தது! இதன்யா மட்டும் நம்மளை பார்த்தால்,  பிடித்துக் கொள்வாளே! என்று நினைத்துக் கொண்டே இருக்க..

மோகன் அவளைப் பார்த்தான். 

என்னாச்சு மேம் என்று கேட்க..

ஒன்றும் இல்லை என்று சமாளித்தாள். 

நவீன் குமார் ரம்யாவை பார்க்க எதுவும் பிராப்ளமா ரம்யா?  என்று நவீன் கேட்டான். 

இல்ல அது எனக்கு இங்க இருந்து கிளம்பனும்னு தோணுது!  எனக்கு… அது  என்று அவள் தயங்க.. 

நவீன் குமார் ஒரு பெருமூச்சை விட்டு சரி சரி கிளம்பு! எப்படி வந்த? 

நான் பார்த்துக்குவேன் நீங்க பாருங்க பாஸ் நம்ம நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம். அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.

இங்கு நடந்த அந்த லாஞ்சிங் ஃபங்ஷன் மற்றும் இனாகிரேஷன் செய்திகள் அனைத்தும் கர்நாடகாவில் பெங்களூரில் சந்திரமவுலியின் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

சந்திரமௌலிக்கு பெருமையாக இருந்தது சித்தார்த் எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டான்! என்று ஆசையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் ரம்யா நவீன்குமார் என் அருகில் அமர்ந்து இருப்பதை பார்த்து என்ன பாப்பா?  இங்க இருக்கா? ஒரு வேலை சித்தார்த்தத்தோட ஃபங்ஷனுக்கு வந்து இருப்பாலோ! என்று நினைத்து விட்டு அதை சாதாரணமாக விட்டுவிட்டார்.

அப்பா இவனுக்கு இந்த அளவுக்கு அறிவு இருக்கா என்று ஆச்சரியமாக ரவிச்சந்திரன் கேட்க..

சந்திரமௌலி பெருமையுடன் என் பேரனை பத்தி என்னடா நினைச்ச? உன்ன மாதிரி நினைச்சியா?  அவன் எவ்வளவு டேலண்ட்! கூறினார். 

அவர் சிரித்துக்கொண்டே எப்படியா இருந்தாலும், எனக்கும் சந்தோஷம்தான்! அவ என்னோட பையன்! என்னோட ரத்தம்! அவன் அறிவாவும் திறமையாகவும் இருக்கறதுக்கு காரணம் நான் தான் என்று ரவிச்சந்திரன் கூறினார். 

சந்திரமௌலி  அவரை  இளக்காரமாக பார்த்துவிட்டு எப்பவுமே நீ இப்படி தானடா! என்று நினைத்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அனைத்து தொழிலதிபர்களும் சந்திரமௌலிக்கு போன் செய்து சித்தார்த்தியினுடைய புதிய இந்த பிசினஸ் இந்த தொழிலை பற்றியும் அவனுடைய திறமையை பற்றியும் பெருமையாக வாழ்த்துக்களையும் அதை பற்றிய விவரங்களையும் கேட்டுக் கொண்டார்கள். சந்திரமௌலிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது .

*

இங்கே அனைவரும் டின்னர் செல்ல..  நவ்யா சித்தார்த்துக்காக காத்திருந்தாள். 

சித்தார்த் நிறைய வேலைப்பளுவில் மிகவும் பிசியாக இருக்க.. 

நவ்யா அங்கிருந்து கொண்டே மெசேஜ் செய்தாள்.

சித்தார்த் அதை  எடுத்து பார்க்க டின்னர் போலாம் வரீங்களா? என இருந்தது. 

எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்க போங்க என்று தட்டிவிட்டு தட்டிவிட்டான். 

அங்கிருக்கும் ரிப்போர்ட்டர்ஸ் மற்றும்  பாதி பேர் சென்று விட்டார்கள்.

நவீன் குமார் மற்றும் மோகன் அதே இடத்தில் அமர்ந்திருக்க..

பாஸ் இன்னும் நவீன் குமார் டின்னர் போகவே இல்ல அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.  என்று சதீஸ் கூற

சித்தார்த் நவீன் அருகில் சென்றான். அப்புறம் என்ன சொல்லு! எதுவும் பேசணுமா? அமைதியா உட்கார்ந்துட்டு இருக்க?

பேசுறதுக்கு எதுவுமே இல்லையா என்று நவீன் குமார் கேட்டான்.

அதை நீ தான் சொல்லணும் நீ பெட் கட்டுன விஷயத்துல நான் ஜெயிச்சுட்டேன்.  உன்னோட தன்யா காஸ்மெட்டிக்ஸ் என்று கூற வர..

நவீன் அவனுடைய வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

சித் கோரமாக  சிரித்துக் கொண்டே அத அழிச்சுரு என்று கூறினான்.

என்ன என்று நவீன் பார்க்க

ஆமா அவளோட பேரு தன்யாவே இல்ல! இதன்யா! உண்மையான இடத்துல சரியான இடத்துல என் பொண்டாட்டி இருக்கா! அவளோட பெயரை மாத்தியும், அவளோட குணத்த மாத்தியும்,  உருவாக்கனும்னு அவசியம் இல்ல! அதனால நீ அந்த காஸ்மெட்டிக்ச அழிச்சிடு!.   பெட்டர்  என்கிட்ட கொடுத்திடு நான் அதை மாத்திக்கிறேன். என்று கூறினான். 

நவீன் குமாருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஆனால் அப்பொழுதும் அவன் விடவில்லை.  “நீ இதுல ஜெயிச்சிட்டனால சீன் போட்டுட்டு இருக்காத! எப்படியா இருந்தாலும் , அவளை உன்கிட்ட இருந்து நான் பிரிச்சே தீர்வேன்! அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவேன்! 

என்ன பண்ணுவ? அவளுக்கு எல்லாத்தையும் மறக்கடிக்க போறியா? என்ன என்று சித் சிரித்துக் கொண்டே கேட்டான்.

நவீன் குமார் அமைதியாக நிற்க சொல்லு அவளை டரக் கொடுத்து  இன்டியூஸ் பண்ணி ஏதாவது அவ கூட ரிலேஷன்ஷிப் ட்ரை பண்ண போறயா? என்று கேட்டான்.

சித்தார்த் சிரித்துக்கொண்டே அவன் முகம் ஒரு நிமிடம் கோபமாக, அவனது பார்வை கூர்மையாக மாறியே “அப்படி எல்லாம் நீ பண்ணிட்டேனா அடுத்த நிமிஷமே அவர் செத்துடுவா! அப்படி இல்லன்னா கூட அவ எங்க இருந்தாலும் என்கிட்ட ஓடி வந்துடுவா! நீ என்ன  நெனச்சிட்டு  இருக்க…!”

 உன் மனசுல நீ என்னடா நினைச்சுட்டு இருக்க?  நீ  லீனா கூட தானே சுத்திட்டு இருந்த!  இப்போ எங்க இருந்து திடீர்ன்னு இவ பின்னாடி, இவள புடிச்சுட்டு சுத்துற! உனக்கு இவ செட் ஆக மாட்டா! என்று நவீன் கூறினான். 

சித்தார்த் பார்வையை மாற்றி கூர்மையாக வைத்தவன்.  அதை நீ சொல்லக்கூடாது! அவள பார்த்ததுமே பிக்ஸ் ஆயிட்டேன்! அவ எனக்கு தான்! ஆல்ரெடி…  ஆல்மோஸ்ட்…  அவ எனக்கு சொந்தமாகி என சித்  சிரிக்க ஆரம்பித்தான்.

நவீன் குமார் கோபத்தில் தகித்துக் கொண்டு நிற்க  சித் தெளிவாக அவ எப்பவோ எனக்கு சொந்தமாகிட்டா! நீ பேசாம என்ன பழிவாங்கறத விட்டுட்டு, அவளைப்தேவை இல்லாம நினைக்கறதை விட்டுடு, முக்கியமா அடுத்தவன் பொண்டாட்டிய தேவையில்லாம நினைக்குறத விட்டுட்டு உனக்குன்னு ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி! வாழு. உன் பிசினஸ பாடுது உன் குடும்பத்தை பார்த்துட்டு போ! இங்க என்கிட்ட வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காத! நான் உன்ன என்னோட எதிரிங்குற லிஸ்ட்ல வைக்கவே இல்ல!  என  சித்தார்த் கூறினான்.

ஓ அப்படி வேற இருக்கா என்னை எதிரியா பார்த்தா என்னடா பண்ணுவ நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா என்று நவீன் கேட்டான் .

சித்தார்த் கோரப் புன்னகை சிந்தியவன்.  அப்டியா அப்போ நம்ம ரெண்டு பேரும் இனிமே எதிரியா? 

 நான் உன்னை எப்பவுமே அந்த லிஸ்ட்ல தான் வச்சு பார்க்கிறேன் என்று கூற.. 

அப்படியா ஓகே அந்த அளவுக்கு நீ பெருசா எதுவுமே பண்ணலையே ரெண்டு மூணு தடவை என்னை ஆக்சிடென்ட் பண்ண ட்ரை  பண்ணி இருக்க! உன்னோட ஸ்மால் ட்ரிக்ஸ் எல்லாம் இங்கே பலிக்காது என்று கூறினான். 

உன்னிடம் இருந்து அவளை எப்படி தூக்குறேன்னு நீயே பாரு ஆனா அப்போ நீ ரொம்ப மோசமான நிலைமையில் இருக்க போற! நான் தான் இப்படி பண்ணினேன் என்று தெரியாத அளவுக்கு உரு தெரியாம உன்னை என்ன பண்றேன்னு பாருடா! என்று சொல்லிவிட்டு நவீன் கிளம்பினான். 

போயிட்டு வா நான் வெயிட் பண்றேன் என்று சித்தார்த் நின்று கொண்டிருந்தான். 

நவ்யா அப்பொழுதும் அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டிருக்க.. 

அடுத்தடுத்து அனைவரிடமும் பேசிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தான். 

சதீஷ் சித்தார்த்தின் அருகில் வந்து மச்சி இதன்யா உன்ன தாண்டா பாக்குறா! 

இன்னிக்கு நான் அழகா இருக்கேனடா? என்று சித்தார்த் கேட்டான். 

ஏன்?

இல்ல ரொம்ப நாள் கழிச்சு என்னை பாக்கற டா!  என்று சித்தார்த் கூறினான். 

வெட்கக்கேடு என்று சொல்லிக் கொண்டே அவர்கள் பேசி கொண்டிருக்க. 

ரிஷி இதன்யா மற்றும் பூஜா என அனைவரும் சித்தார்த்தை நோக்கி வந்தார்கள். 

டேய் அவள் என் பக்கம் வர மாதிரி இன்ஸ்டிங் தோணுது! என சித் தாடியை வருடி விட்ட படி கேட்க..

பாப்பா வருது மச்சி என்று சதீஷ் கூறினான். 

அவள் சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கி வந்தவள்.  அங்கிருந்து யுடன் போட்டு நேராக நவ்யா பக்கம் சென்றாள்.

போச்சு மச்சி அவ நவ்யாகிட்ட போயிட்டா! 

சித்தார்த் வெடுக்கென திரும்பி பார்க்க.. 

அங்கே நவ்யாவின் அருகில் இதன்யா ரிஷி பூஜா என மூவரும் போய் நின்றார்கள். 

 யாரோ எவரோ என நவ்யா பார்க்க..

  உங்களோட பிக்..  அண்ட் பிராண்ட் அம்பாசிடர் நீங்க தானே! ப்ராடக்ட் ரொம்ப நல்லா இருக்கு!  உங்களோட நடிப்பு, உங்களுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தோம்; ரொம்ப யதார்த்தமா இருக்கு என்று கங்கிராஜுலேசன் கீப் ராக்கிங் என்று இதன்யா கூறினாள்.

 பூஜாவும் அதே போல் சொன்னாள்.

சதீஷ் சித்தார்த்திடம் வாடா அவங்க என்ன பேசுறாங்கன்னு கேப்போம்! என சதீஷ் போக..

 டேய் நான் தாண்டா பாஸ் நான் தான் முன்னாடி வரணும் என்று சித்தார்த் அவனுக்கு  முன்னால் சென்றான் . 

நவ்யாவின் பார்வை சித்தார்த்தை தழுவ அருகில் வந்தவன். இது என்னோட  பிரதர் இன் லா ரிஷி! என அவளுக்கு அறிமுகம் செய்தான். 

 நவ்யா  சிரித்து கொண்டே பேசினாள். ரிஷியின்  அருகில் இருந்த இதன்யாவை பார்த்தவள்.  இவங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா?  என்று நினைத்துக் கொண்டாள். 

உடனே இதன்யா சித்தார்த்தின் பக்கம் பார்வையை திருப்பாமல் சீனியர் நம்ம போலாமா! 

 எல்லாருக்கும் டின்னர் ரெடி பண்ணி இருக்கேன் சாப்பிட்டு போங்க பூஜா என்று சித் அழைக்க.. 

உடனே நவ்யா பூஜாவை பார்த்து விட்டு ஆச்சரியத்துடன்  இவங்கள உங்களுக்கு? 

 இவங்க சாரி இவங்க..   ரெண்டு பேரும் என்னோட ஸ்கூல் ஸ்டாப்ஸ் என்று சித்தார்த் கூறினான். 

அப்படியா சரி என்று சிரித்துக் கொண்டே பேசியவர் வாங்க டின்னர் போலாம் என்று அழைக்க. 

அந்த நேரம் ஆசிஷ் வந்து விட்டான். ஹே இதயா நான் எப்படி இருக்கேன் என்று கேட்டுக் கொண்டே நேராக இதன்யாவின்  அருகில் வந்தான். 

ஹே இதயா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாமா? இத நம்ப பேஸ்புக்ல போடலாமா என்று அவளிடம் பேசிக்கொண்டே சென்றான். 

நவ்யா பூஜாவிடம் பார்த்து ஆச்சரியமாக ஆசிஷ் சாருக்கு எப்படி  அவங்கள தெரியுமா?  அந்த பொண்ணு முடி நீளமா இருக்கு! அழகா இருக்கு  அவங்கள தெரியுமா?  என இதன்யாவை பற்றி நவ்யா பேசிக் கொண்டே வர..  

பூஜா சிரித்துக்கொண்டு ஆசிஷ் சாரு எங்க ஸ்கூல் ஆனுவல் ஃபங்ஷனுக்கு வந்திருக்காரு! அதோட ஹெட் இதன்யா!  அவதான் நடத்தினா!  எல்லாமே எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் அவதான் பண்ணினா!  அதனால சாரும் அவளும் க்ளோஸ் பிரண்ட்ஸ் வெளியில காட்டிக்க மாட்டாங்க!..

அப்படியா என்று நவ்யா ஆச்சரியத்துடன் பார்க்க..

சித்தார்த் அனைவரையும் முறைத்துக் கொண்டே சென்றான். 

சதீஷ் சிரித்துக்கொண்டே பாருடா அவன் உனக்கு போட்டியா வந்துட்டான்! என்று சொல்ல.. 

மூடிட்டு போ! என சித் கூறினான்.

உடனே நவ்யா சித்தார்த்திடம் உங்களோட சிஸ்டர் வரலையா? என கேட்க.. 

எங்கே ரோஸ்னி? 

அவ தூங்கிட்டு இருக்கா மாமா! நீங்க காலைல இன்ஆகிரேஷன் பங்க்ஷனுக்கு கூப்பிட்டீங்களாமா! அத சொல்லி நான் வரலைன்னு தூங்கிட்டு இருக்கா! என்று ரிஷி கூறினான். 

 பஃபே சிஸ்டத்தில் உணவுகளை போட்டு கொண்டிருந்தார்கள். 

இதன்யா மற்றும் ஆஷிஷ் வாங்கிக் கொண்டு அதை போட்டோ எடுத்தார்கள். 

உடனே ஆஷிஷ் அவளுடைய தட்டில் உள்ள உணவுகளை போட்டோ எடுத்தவன் அதை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் என்னுடைய ரசிகையுடன் இன்று டின்னர் என்று தட்டி விட்டான். 

அது உடனே சோசியல் மீடியாவில் வர சதீஷ் அந்த படத்தை சித்தார்த்திடம் காட்டினான்.

டேய் பாருடா அவன் என்ன போட்டு இருக்கான்னு? என்று சொல்ல.. 

சித்தார்த் கடுப்புடன்  டேய் சீட்டர் அதை ஒழுங்காத டெலிட் பண்ற! இல்லன்னா இப்பவே பிரண்டா பாஸிடரா நான் ஆகிடுவேன்! பாக்குறியாடா!

 போடா இதுக்கு நீயே பவுண்டர் கிடையாது.  இதன்யா தான்! அவ சொல்லட்டும் நான் டெலிட் பண்றேன்!

இப்போ என்னடா சொல்ல வர என்று கேட்க

நீ இதன்யா கிட்ட இத பத்தி சொல்லு அவ டெலிட் பண்ணுன்னு, சொன்னானா! நான் அடுத்த நிமிஷம் டெலிட் பண்ணிடுறேன்! என்று ஆஷிஷ் கூறினான். 

நான் போய் அவகிட்ட கேக்க மாட்டேன்.  என்று சித் பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.

சரி கேட்காத அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது என  சிரித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். 

 இங்கே இதன்யா பூஜாவுடன் நின்று சாப்பிட்டு கொண்டிருக்க..

அபி அவளின் அருகில் வந்தான் இன்னொரு பக்கம் சதீஷ் நிற்க..

ககும் என்ன ஆச்சு? உங்க முகம் சரியில்லையே என்று  இதன்யா கேட்க.. 

 ஆமா பாப்பா! கிட்டத்தட்ட இதுக்காக 15 நாளா ஒரே வேலைமா அதனால எங்களுக்கு ரொம்ப அலுப்பு சோர்வா இருக்கு! தூக்கம் தூக்கமா வருது அதேபோல பிரியா வந்திருந்தா நல்லா இருக்குன்னு தோணுச்சு! ஆனா அவதான் வரலையே! என்று சதீஷ் கவலையுடன் கூற.. 

கவலைப்படாதீங்க உங்கள பத்தி சொல்லுங்க உடனே வந்துடுவா! 

என்ன பத்தி சொன்னா என்ன கொலை கூட பண்றதுக்கு தயங்க மாட்டான் என்று சதீஷ் சிரித்துக்கொண்டே உணவுகளை சாப்பிட்டான். 

நதியா சித்தார்த்தின் அருகில் தான் இருந்தாள். ஆனால் பேசவில்லை.  ஏனென்றால் சித்தார்த்தம் ஆஷிசம் பேசிக் கொண்டிருந்தான்.

டேய் இப்போ எதுக்குடா என்னை டார்ச்சர் பண்ற? அந்த நவ்யா பொண்ணு ஹீரோயின் வேற நம்மள வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கு! எதுவும் நம்மள தப்பா நினைக்க போகுது! 

த்து… என சித் சொல்ல…

போ போய் இதன்யா கிட்ட பேசுற வேலைய பாரு என்று சொல்ல

இதுக்கு எல்லாம் நீ தான்டா! இரு உன்னை எதுவும் பண்ண முடியாது! அவளோட அக்கவுண்ட் எல்லாம் நான் லாக் அவுட் பண்ணி, அத இனிமே அவ இன்ஸ்டால் facebook யூஸ் பண்ணாத மாதிரி பண்றேன். இரு என்று சித்தார்த் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தான். 

நவ்யா சாப்பிட்டு கொண்டே பார்த்தாள். அவளின் அசிஸ்டன்ட் உணவுகளை வாங்கி வந்து கொடுக்க.

அந்த நேரம்  கடைசியாக குலாப் ஜாமுன் ஸ்வீட் வைக்கப்பட்டது. அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இதன்யா அந்த இனிப்பை மட்டும்  இரண்டு மூன்று சாப்பிட வைட்டரிடம் வாங்கி சாப்பிட்டாள்.

அங்க கவனிங்க அந்த குலாப் ஜாமுன அந்த லாங் ஹேர் பொண்ணுக்கு வைங்க! என்று கூறினான். 

இதை கேட்டதும் ஆஷிஷ் சதீஷ் அபி பூஜா ரிஷி என அனைவரும் சிரிக்க.. 

இதன்யா முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே  எனக்கு வேண்டாம் என்று கூற. 

இல்ல சார் தான் சொன்னாரு என்று வைட்டர் கூற

ப்ளீஸ் வேண்டாம் என்று இதன்யா கூறினாள். 

உடனே நவ்யா சித்தார்த்தையும் இதன்யாவையும் பார்க்க 

அப்போ ஒகே அவங்களுக்கு வேணாம்னா,  ஒன்னும் பிராப்ளம் இல்ல! பிரிட்டியா இருக்காங்கல்ல! பக்கத்துல அவங்களுக்கு வைங்க! பூஜா என்ன வேணும்? எதுவும் வேணும்னா சொல்லுங்க!  எல்லாமே ஓகேவா என்று கேட்டான். 

அச்சோ சார்!  சார் எனக்கு!..  எனக்கு எல்லாமே போதும் சார்! என்று திக்கி திணற  சிரித்துக்கொண்டே கூறினாள்.  

அபி அவளை முறைத்துப் பார்க்க..

 பூஜா கம் நம்ம எல்லாம் எடுத்துக்கலாம்! மிஸ்டர் சதீஷ் சாரி…. சாரி  மிஸ்டர் அபி எங்களை கவர் பண்ண முடியுமா! என்று கேமராவை நீட்டினான். 

பூஜா போட்டோ எடுக்க செல்ல.. அபி அவளின் கையை பிடித்தான். கைய விடுங்க என்னோட கை வலிக்குது என்ற நெளிந்து கொண்டே நின்றாள்.

நவ்யா அருகில் இருந்த ஆஷிஷிடம் இவங்க எல்லாருமே தெரிஞ்சவங்களா? 

 ஆமா அவர் அபி! ,  சித்தார்தோட ரிலேஷன் சதீஷ் அவனோட பி.ஏ!  அந்த பொண்ணுங்க ரெண்டு,  அப்புரம் ரிஷி, இதன்யா, பூஜா இவங்கெல்லாம் காலேஜ் மேட்ஸ்! எல்லாரும் ஒரே இடத்தில் வொர்க் பண்றாங்க! அதனால இவங்க இம்போர்ட்டண்ட்! என்று ஆஷிஷ் கூறினான். 

அப்படியா சரி என்று அவள் உணவுகளை சாப்பிட்டாள்.

 இதன்யா பூஜா இருவரும் ஹாண்ட் பாக் செய்து ரெஸ்ட் ரூம் செல்ல… அங்கே ஹான்ட் வாஷ் செய்ய சித்தார்த் வந்தான். 

அங்கே பூஜா சித்தார்த்தை பார்த்த உடனே பூஜா வெளியே செல்ல.. 

இதன்யா வெளியே வரவும் சித்தார்த் கை கழுவி கொண்டிருக்கவும் சரியாக இருந்தது. 

இதன்யா அவனுக்கு அருகில் வந்து ஒட்டி நின்றாள்.

சித்தார்த் வேண்டுமென்று தள்ளி நிற்க.. அவ  மீண்டும் ஒட்டி நின்றாள்.

சித்தார்த் மீண்டும் நகர..  இப்போ உங்களுக்கு என்ன வேணும்? என்னை கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வரணும்னு அக்கறை இல்லல்ல!  என்று  அவள் சொல்ல

மறுபடியும் சண்டையா ஆரம்பிக்காதடி என்னால முடியல என்று சித்தார்த் கூறினான்.

அப்போ நான் தான் சண்டை போடறேன்னு சொல்ல வரீங்களா? 

ஓ காட் என்ற அவன் பெருமூச்சு விட்டான். 

சொல்லுவீங்க சொல்லுவீங்க என்று அவள் மீண்டும் பேச ஆரம்பிக்க… 

 இப்போ உனக்கு என்னடி பிரச்சனை?  என்று சித்தார்த் கேட்டான். 

நீங்க எதுக்கு எனக்கு நாலஞ்சு குலாப் ஜாமுன் வைக்க சொன்னீங்க! நான் நிறைய சாப்பிடுகிறேன்னு என்று எல்லாத்து முன்னாடியும் ப்ரொஜெக்ட் பண்ண பாக்குறீங்களா? 

 சித்தார்த் பெருமூச்சுவிட்டு  அடியே  நீ சாப்பிட்டதையெல்லாம் நான் விடாம வெச்சி கண்ணு வாங்காம, அப்சர்வ் பண்ணிருக்கேன் அது உனக்கு தெரியல! ஒரு நாலஞ்சு குலாப் ஜாமூன் சாப்பிட்டா! தேவையான இடத்தில, பிடிக்கத் தேவையான  கொஞ்சம் flesh I mean சதையும் சேர்த்து வரும்! அப்போ பிடிக்கும் போது நல்லா இருக்குமேன்னு,  நெனச்சு சொன்னேன்! ஆனா அது உன்னோட அறிவுக்கு எட்டல! என நொந்து கொண்டான். 

 என்ன என்று இதன்யா கேட்க.. 

தெரிஞ்சே ஆகணுமா? என்று புருவத்தை தூக்கிக் கொண்டு கேட்டான். 

ஆமா சொல்லுங்

இந்த இடம் அதுக்கு சரியா இருக்காதுன்னு நினைக்கிறேன்! வீட்டுக்கு வரியா சொல்றேன்! 

 இல்ல எனக்கு இப்பவே சொல்லுங்க என்று கூறினாள்.

இப்ப  சொன்னா கூட வீட்டுக்கு போறதுக்குள்ள எல்லாமே பில்ட் ஆயிடும் என்று கூறினான். 

என்ன ஆகும்  என்று இதன்யா கேட்க.. 

சித்தார்த் அவளின் அருகில் நெருங்கி பின் பக்கம் பிடித்தவன்.  இதுதான் பிடிக்க தேவையான இடம்!… ம்ம்ம் கடிக்கவும் செய்யலாம்! அவள் வேகம் மூச்சுடன் அவனைப் பார்க்க.. 

இன்னும் கூட இருக்கு என அவளின் முன்னால் மோதி கொண்டே இது என காது பக்கம் சொல்ல.. 

நான் புத்  புத் புத்தா என்று தயங்கிக் கொண்டே அழைக்க.. 

இன்னும் கூட இருக்கு என்று அவளின் தொடையை வருடினான். அப்படியே இன்னும் என சொல்லி கொண்டே கண்ணத்தோடு கன்னத்தை தேய்த்தான். 

போதும் என்று அவள் தள்ளிவிட.. 

சித் மீண்டும் நெருங்கி வீட்டுக்கு வாடி! இன்னிக்கு இருக்கு! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்!  என்று சொல்லி அவளின் உதட்டை கடித்து இழுத்து விட்டு சட்டென வெளியே சென்றான். 

 அந்த நேரம் நவ்யா அவனுக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்க..

ஓகே சார் ஃபங்ஷன்லாம் எப்படி போச்சு?  என்னோட போர்ஷன் உங்களுக்கு ஓகேவா? என்று கேட்க.. 

ஹான் ஓகே! 

 நீங்க எப்போ கிளம்புறீங்க என்று நவ்யா கேட்க…

 நான் இப்போ கிளம்பிடுவேன் நாளைக்கு சூட் இருக்கு அதனால நான் போய் ரெஸ்ட் எடுக்கனும்  என சொல்ல வந்தவன்.

அந்த நேரம் இதன்யா வெளியே வருவது தெரியவும் அது எனக்கு இனிமேதான் நிறைய வேலை இருக்கு! வீட்டுக்கு போனதும் ஆரம்பிக்கனும் என்றான்.

அந்த வார்த்தை அவள் வெளியே வரவும் கேட்க

இந்த லிட்டில் ஹார்ட் வேலை இருக்கா சித்து என கேட்க…

லிட்டில் ஹார்ட் வேலை தான் என  அழுத்திக்கொண்டே கூற..

இதன்யா கொஞ்சம் இரும்பி கொண்டே முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே அவனை திரும்பி பார்க்க..

நவ்யா அடுத்தடுத்து அவனிடம் கேள்வி கேட்க அவனுடைய கவனம் முழுவதும் இதன்யாவின் மீது தான் இருந்தது. 

இதை ஸ்டைலிஸ் கிட்ட இருந்து வாங்கும் போது கூட தெரில.. அவள் வியற் பண்ணதும் சும்மா அவழுக்குண்ணு செஞ்ச மாதிரி இருக்கு! என சித் நினைத்தான். 

சித்து! சித்து!. என நவ்யா அழைக்க..

சித்…? 

இதன்யா …? 

தொடரும்…

இன்னிக்கி epi எப்டி இருந்தது? சொல்லிட்டு போங்க! 

EPI 286

சார் ஹலோ சித்து!. என நவ்யா அவனுடைய தோலை தட்டினாள். 

இப்பொழுது தான் இதன்யாவின் மீது உள்ள பார்வையை “ஹான் சொல்லு மா!” என்ன சொன்னீங்க!” என சித் நவ்யாவை பார்த்தான். 

அது இன்னிக்கி பங்ஷன் நல்லா போச்சு சார்! என்னோட பார்ட் என நவ்யா சொல்ல வர…

ஓ அதுவா! இன்னிக்கி பங்க்ஷன் நல்லா போச்சு! உங்களோட கோஆபரேஷனுக்கு தேங்க்ஸ்! சொல்ல தேவையில்லை..  ஏன்னா நீங்க என்னோட ஒர்க்கர்! அதுக்கப்புறம் இதோட பேமெண்ட் கரெக்டா கிரெடிட் ஆகிடும்! பர்தரா இனி அட்வர்டைஸ்மெண்டை ஆட் ஷூட் இருக்கும்! நீங்களும் ஆசிஸ் இரண்டு பேரும் சேர்ந்து அட்வர்டைஸ் பண்ற மாதிரி சில ஆட்ஸ் இருக்கும்! என சொல்லி கொண்டே அவன் சுற்றிலும் இதன்யாவை தேடினான். 

ம்ம் ஓகே சார் என நவ்யா பதில் சொல்லி கொண்டே வந்தாள். 

ரிஷியுடன் பேசி கொண்டே இதன்யா நடக்க..

ஓகே நவ்யா! பார்ப்போம்! என சித் நேராக சதீஸ் அருகில் சென்றான். 

சதீஷின் அருகில் சென்றவன் “டேய் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துரு! எனக்கு டைம் ஆகுது! வீட்டுக்கு போகணும்! என்று கூறிவிட்டு அடுத்த சில மணித்துளிகளில் சிட்டாக பறந்தான். 

இதன்யா ஆஷிஷ் கிட்ட பேச செல்ல “ஹே வாடி போகலாம்! என்று அவளின் காது ககு அருகில் சொன்னவன்.  அவளை விட்டு முன்னாள் நடந்து செல்ல..

இதன்யா தயக்கத்துடன் ரிஷியைப் பார்த்தாள். ரிஷி அவர்கள் இருவரையும் சோகமாக பார்த்தான். 

என்னாச்சு சீனியர் என அவள் பாவமாக கேட்க…

அவன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே “போமா போய்!.. அட்லீஸ்ட் நீயாவது என்ஜாய் பண்ணு!!  என்னோடது இப்பதான் குப்புற படுத்து தூங்கிட்டு இருக்கு! அது என்னைக்கு எந்திரிக்கிறது? என்று பெருமூச்சுடன் ரிஷி நிற்க..

சதீஷ் அருகில் வந்து ரிஷி! இங்க கொஞ்சம் வேலை இருக்கு!  அதெல்லாம் முடிச்சுட்டு போலாமா! என்று கேட்டான்.

வாங்க சார் பண்ணலாம் என்று ரிஷி சதீஷ் கூட சேர்ந்து கொண்டான். 

அடுத்த சில நொடிகளில் அபி மற்றும் பூஜா இருவரும் கிளம்பி விட..

ஆசிஷ் அந்த பக்கம் வந்தவன். மேடம் நீங்க கிளம்புலயா! என நவ்யாவை கேட்டான். 

இதோ! சார் என அவளும்  ஷோ ரூம் பக்கம் பார்க்க.. அங்கே  ரூமின் உள்ளே ரிஷி, சதீஸ் இருவரும் இருக்க.. சித்து வுக்கு எவ்ளோ வேலை என நினைத்து கொண்டே நவ்யா கிளம்பினாள். 

அவள் சுற்றிலும் பார்வையை திருப்பி கொண்டே சித்தார்த்தை தேட இதன்யாவின் அருகில் வந்து கார் அவளை உள் இழுத்து கொண்டது. 

ஹே புத்தா! என அவனை பார்க்க.. எப்டி கண்டு பிடிச்ச? என அவளின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே நான் உன்னை கிட்நாப் பண்ணலாம்னு இருந்தேன்! ஆனா நீ என்ன கண்டுபிடிச்சிட்டியே? என்று சித்தார்த் கூற… 

 இதன்யா சிரித்துக் கொண்டே“ உங்களை கண்டுபிடிக்கிறது! அவ்ளோ பெரிய கஷ்டமா? 

அப்போ ஈசியா?  நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிட்வியா?  என்று அவன் கேட்க.. .

ஹான் கண்டுபிடிப்பேன்

 சரி ஓகே போலாமா! வீட்டுக்கு போய் நிறைய வேலை இருக்கு! என்று கிரங்கும் குரலில் கூறினான். 

இதன்யா அவனை பார்க்காமல் ஜன்னல் பக்கம் பார்க்க.. 

என்னடி அங்க ஜன்னலை பார்க்கிற?  இங்க என்னை பாரு! என்று சித் சொல்ல.. 

நாம எப்போ வீட்டுக்கு போவோம்!  வண்டி இன்னும் மூவ் ஆகலையே! என்று கூறினாள்.

 ஓ லிட்டில் ஹார்ட் இன்னைக்கு பயங்கரமா இருக்காலே! வண்டி எடுங்க! குயிக் என்று கூறினான்.

அவர்கள் செல்ல  இதன்யாவை அவன் உள்ளே இழுத்து கன்னத்தில் முத்தம் பதித்த காட்சிகளை, நவீன் தான் விரக்தியுடன், வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“இருக்கட்டும்! நடக்கட்டும்! கூடிய சீக்கிரத்துல நீ என்கிட்ட வந்துடுவே! உன்னை அவன் கிட்ட இருந்து பிரிப்பென்! நீ எனகானவ! அவன் கிட்ட தெரியாமல் மாட்டி கிட்ட! உன்னை தூக்க அதற்கான வேலையை நான் எப்பவோ ஆரம்பிச்சுட்டேன்!! ஆனா கொஞ்சம் கொஞ்சமா தான எல்லாமே நடக்கும்!  எனக்கு நம்பிக்கை இருக்கு!” என்று வண்டியை எடுக்க சொன்னான். 

ஒரு சில நிமிடங்களிலே இதன்யா வேறு  ஜன்னல்  பக்கம் வேடிக்கை பார்த்தவளுக்கு  அவனைப் பார்க்க தோன்றியது. 

சட்டென திரும்பி பார்க்க கண்களை மூடிக்கொண்டு பின் சீட்டில் நன்றாக சாய்ந்து இருந்தான். 

புத்தா! என்று அழைக்க..

ஹா என்று மெல்லிய ஓசையில் பதில் அளித்தான்.

புத்தா என மறுபடியும் அழைக்க வெடுக்கென முழித்தான்.

“என்னடி ஆச்சு”

ஒன்னும் இல்ல தூங்கிட்டீங்களா?  

ஆமா சரி சொல்லு! ஒன்னும் இல்ல என அவனுடைய கைகளை கோர்த்துக் கொண்டாள்.

 நல்லா சாப்டியா? இன்னும் குலாப் ஜாமுன் வேணுமா? என்று சித்தார்த் கேட்டான்.

அடி வாங்க போறீங்க என்று கொஞ்சலுடன் பேசியவள். மீண்டும் திரும்பி கொள்ள கைகளை வருடி விட்ட படி வீடு வந்து சேர்ந்தார்கள். 

சித் உள்ளே வந்தவன் படியில் ஏற  இதன்யா மெதுவாக  அன்ன நடையிட்டாள்..

எதுக்குடி மெதுவா நடக்கிற வேகமா வா என்று அழைத்தான். 

சும்மாதான் நீங்க போங்க! அதான் வரெனெ!

ஹே ரெட் baby! என வா என்று கண்களால் கதை பேசினான்.

அவள் தயக்கத்துடன் வர கையைப் பிடித்து இழுத்துக்  கொண்டு அறைக்குள் சென்றான். 

சித் கதவை தாழிட்டு அவளின் உதட்டில் ஒட்டி முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.

இதன்யா மூச்சு முட்ட அவனைப் பார்க்க… 

என்ன அப்படி பார்க்கிற?லிட்டில் ஹார்ட் விட்டாச்சு! 

என்ன விட்டாச்சு? என அவளை பேச விட்டு உதடு கவ்வி! அவனின் விரல் கொண்டு குவித்து பிடித்தவன். அதான் supplement! மொத்தத்துல எல்லாரும் ஹாப்பி! சில பேருக்கு வயித்தெரிச்சலா இருக்கலாம்! ஆனாலும் ஓகே ! இப்போ உன்னை தொடலாம் தானே என்று கண்களால் காந்தமாக கேட்டான். 

இதன்யா வெட்கத்துடன் திரும்பி நகர..  அவளின் புடவை பிடித்து அருகில் இழுத்து பின்னாலிருந்து கட்டி கழுத்தில் முத்தம் பதித்து கடிக்க ஆரம்பித்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்து என செல்ல.. 

 இதன்யா கஷ்ட பட்டு கழுத்தை சாய்த்து   உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்..

அடியே இப்பதான் கேள்வி கேப்பியா? நான் எவ்வளவு தீவிரமா எங்கேயோ போயிட்டு இருக்கேன்! இப்போ கேள்வி கேட்கிறா? போடி பேசாத என்று அவளின் மோவாயில் முத்தம் பதித்தான்..

அது வந்து சிணுங்கி கொண்டு  நான் முத்தம் கொடுக்கவா..  என கேட்டு விட்டாள். 

Is it? இது…. இது லிட்டில் ஹாட்டா? என்னோட லிட்டில் ஹாட்டா? முத்தம் கொடுக்கிறேன்னு கேட்கிறா? என்று சித்தார்த் அவளை பார்க்க…

ஆமா இன்னைக்கு நீங்க அழகா இருக்கீங்க! அந்த கோட் சூட் ட்ரெஸ் விட இது மாஸா இருக்கு! என்று அவனுடைய கழுத்து செயினை அவள் பக்கமாக இழுத்து முத்தம் பதித்தாள்.

சித் குனிந்து அப்படியே அவளின் இடைய பிடித்து மேலே தூக்கி இருவரும் தீவிரமாக மூச்சு முட்ட முத்த சத்தத்தில் சண்டையுடன் இருக்க போட்டி தீவிரமாக… அந்த சத்தத்துடன்  கூடவே போன் சத்தமும் கேட்டது. 

(என்னடா ஒவ்வொரு தடவையும் இவ ரொமான்டிக் சீன் எழுதும்போது, இப்படி சத்தம் கேக்குது? என தயவுசெய்து பிரதன்யாவை திட்டிடாதீங்க! பிரதன்யா ரொம்ப ரொம்ப பாவம்! அவளுக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!)

அது பவானி தான்…  சித்தார்த் அவனுடைய சட்டை பையில் இருந்து போனை எடுத்தவன். வெடுக்கென கட்  செய்து உடனே சுட்ச் ஆப் செய்து தூக்கி போட்டான். 

அடுத்த நொடி இதன்யாவின் போன் அடிக்க ஆரம்பித்தது. போன் விடாமல் அடித்துக் கொண்டிருக்க. 

 எங்க டி உன் போனு யாரு இந்த நேரத்துல? என்று டென்ஷன் ஆனவன் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்ய போக..

ஏங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க! யாருன்னு பார்க்கலாம்! அம்மாவா இருக்க போறாங்க! என்று போனை பார்க்க..

அதில் பவானி என்று இருந்தது.  அத்த என்று சொல்ல.. 

எங்க அம்மாவா? கட் பண்ணு! வேலையா இருக்கேன்னு சொல்லு! பேசாத! என்று போனை வாங்கி கட் செய்தான்.

யூ லூசு என்று ஃபோனை பிடுங்கியவள் அவனை முறைத்துக் கொண்டு நான் அத்தை கிட்ட பேசிட்டு வரேன்! அதுவரைக்கும் பொறுங்க என்று கூறினாள்.

ஹே சாவடிக்கிற முடியலடி! வாடி என்று இழுத்தான். 

முடியாது என்று இதன்யா டயல் செய்ய…

சரி நான் உன்ன கொஞ்சிக்கிட்டே இருக்கேன்! கூடவே  லவ் மேக்கிங்  ஆரம்பிக்கிறேன்! நீ எங்க அம்மா கிட்ட பேசு என்று அவளுடைய பக்கத்தில் வந்தவன்,  புடவையில் உள்ள ஹூக்கை கழட்டி உருவ ஆரம்பித்தான். 

“என்னங்க”என்று அவள் கூச்சத்தில் நெளிய “என்ன வெக்கமா இருக்கா?” என்று கண்ணடித்தவன். 

 சரி ஒன்னும் பிரச்சனை இல்ல! லைட் எல்லாம் ஆஃப் பண்ணிக்கலாம்! ஒரே லைக் மட்டும் இருக்கட்டும்! என்று அங்க இருக்கும் லைட் அனைத்தையும் ஆப் செய்து, ஒரே ஒரு சிங்கிள் பல்ப் மட்டும் போட்டு விட்டவன். அவளின் அருகில் வர..

ஹலோ அத்தை என்று இதன்யா பேச.

சித்தார்த் போன் சுவிட்ச் ஆப்னு வருது! என்னாச்சு அவனுக்கு?

 அது ஒன்னும் இல்லை வீட்டுக்கு வந்துட்டோம்! அவரோட போன்ல சார்ஜ் இல்ல! அதனால சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு! என்று சமாளித்தாள். 

சரி போன அவகிட்ட அவன்கிட்ட குடு என்று கூற..

அத்தை என போனை நீட்ட.. 

என்ன? 

அத்தை பேசுங்க! என நெளிந்து கொண்டு நீட்டினாள். 

 சித்தார்த்  அவளுக்கு முத்தம் கொடுக்கும் போதே பவானி சொன்னது கேட்டது. அவன் அவளிடமிருந்து நகர்ந்து கொண்டு “நான் பேசமாட்டேன் நீ போய் பேசிட்டு வா! நான் வெயிட் பண்றேன்!” என்று கூறினான் .

அத்தை அவர் வந்து வேலையா… அது வந்து  என்று திக்கிக் கொண்டிருக்க..

ஏன் அவன் என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டானா? என்று பவானி கேட்டார்.

அது ஆமாங்கத்தை இன்று இதன்யா தயக்கத்துடன் கூறினாள். 

பவானி  பக்கம் எதுவுமே பேசவில்லை மிகவும் அமைதியாக இருக்க..

 எல்லாமே சரியாகிவிடும் என்று இதன்யா கூற..

பவானி விரக்தியாக இவன?  இவனுக்காக நான் இருந்தா! இவன் என்ன வேலை பண்றான் தெரியுமா? எனக்கு சுத்தமா பிடிக்கல!  என்று கூறினார். 

என்னங்கத்த சொல்றீங்க? 

 பவானி பெருமூச்சு விட்டு “எனக்கு கல்யாணம் பண்ற வேலைய பாத்துட்டு இருக்கான்! இத ஒரு அம்மாவா என்னால எப்படி ஏத்துக்க முடியும்? நான் என்ன ரொம்ப கஷ்டப்பட்டு கைக்குழந்தை வச்சிட்டு இருக்கேனா? தவிச்சிட்டு இருக்கேனா?  அப்படி இருந்தாலும் கூட இன்னொரு ஆண்பிள்ளையோட துணை எனக்கு எதுக்கு? இன்னும் கொஞ்ச நாளில் கூடிய சீக்கிரத்துல ரோஷினிக்கும், ரிஷிக்கும் கல்யாணம் ஆகப்போகுது.  என்னை  நான் எப்படியோ பிஸியா வச்சுக்கணும்னு எனக்கு தெரியும்!  எனக்கு என் பேர புள்ளைங்க நாளைக்கு இருக்காங்க! நீங்க இருக்கீங்க! அவன் என்னை ரொம்ப கஷ்டப்படுத்தறான். எனக்கு விருப்பமில்லாத செஞ்சு வைக்க ட்ரை பண்றான்.” என்று பவானி உடைந்த குரலில் சொல்ல..

இதன்யா அவரை சமாதான படுத்தும் விதமாக சரி விடுங்க!எல்லாமே சரியாயிடும்! நான் பேசி பார்க்கிறேன்! என்று கூற..

என்னத்த பேசப்போறியோ!  அவன் எப்படி கேட்பான்?  சரியான பிடிவாதகாரன்! அவங்க அப்பனோட புத்தி அப்படியே இருக்கு! என்று பவானி கூறினார்.

இதன்யா அமைதியுடன் இருக்க..

சரி விடு நான் எதுக்கு போன் பண்ணேன்! அதை  மறந்துட்டேன் பாரு!  இன்னைக்கு பங்க்ஷனோட  போட்டோஸ் எல்லாமே பார்த்தேன்! ரொம்ப நல்லா இருந்துச்சு! நீ கடைசியா உட்கார்ந்திருக்க போல!

இதன்யா அதிர்ச்சியுடன் அத்தை! அப்போ நான் எல்லா டிவிலயும் தெரிகிறேனா? என பயத்துடன் கேட்டாள்.

பவானி இதை கேட்டு சிரித்துக்கொண்டே இல்லம்மா! அது சதீஷ் எனக்கு எடுத்து அனுப்பினான்! அவ்ளோ பயமா? 

அது! அது! வந்து நாம கரெக்டா இருக்கனும்! அதுக்கு தான் என இதன்யா தயங்க..

“ம்ம் பிரச்சனையை தேடி நம்மளே போகக்கூடாது! சரி விடுமா! ஆனால்  இந்த லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட்டோட யோசனை ரொம்ப அருமை! அதேபோல சித்தார்த் பேசின எல்லாமே  ரொம்ப சூப்பரா இருந்தது பங்க்ஷன் நல்லா முடிஞ்சது. எல்லாரும் எனக்கு போன் பண்ணி விஷ்  பண்றாங்க! நிறைய பேரு டைப் அப்! ஷேரிங் அப்படி, இப்படின்னு, எனக்கு இன்னைக்கு ஒரே சந்தோஷமா இருந்ததுமா! அதை பத்தி சொல்றதுக்கு தான் கால் பண்ணேன்! ஆனா உன் புருஷன் என்கிட்ட பேச மாட்டிக்கிறான்!” என்று பவானி வருத்தத்துடன் கூறினார்.

எல்லாமே சரி ஆயிடுங்க அத்தை என்று இதன்யா சொல்ல…

சரி அவன் சாப்பிட்டானா? என்று கேட்க..

நாங்க எல்லாரும் சாப்பிட்டோம்! நீங்க சாப்பிட்டீங்களா? என்று இதன்யா கேட்டாள்.

நான் ஓகேமா! ரோஷினி என்ன பண்றா? என்று கேட்க..

அவங்க தூங்கிட்டு இருக்காங்க.. 

சரி ஓகே நீங்க பாருங்க நான் முடிஞ்சா வர  பார்க்கிறேன். கல்யாணம் வேலை ஒரு பக்கம் போயிட்டு இருக்கு!  என பவானி பேசிவிட்டு வைத்தார். 

இதன்யா பால் கணியில் இருந்து   ஒரு பெருமூச்சியை விட்டு உள்ளே வந்து பார்க்க..

சித்தார்த் அப்படியே படுத்துக் கொண்டிருந்தான். என்னங்க!. என் மேல உங்களுக்கு கோபமா?  அத்த போன் பேசுறாங்க! எப்படி பேசாம வர முடியும்! கட் பண்றது அது நல்ல பழக்கமா? பெரியவங்களுக்கு நம்ப மரியாதை கொடுக்கணும்! என்று சொல்லிக் கொண்டு அருகில் வந்தாள்.

சித்தார்த் பக்கம் எந்த சத்தமும் வர வில்லை..

புத்தா அருகில் வந்தவள். என்னங்க..

புத்தா!..

சித்தார்த்!..

ஏ சித்தார்த் கிருஷ்ணா!

ஹே சித்தார்த் ரவிச்சந்திரன்!

ஹலோ பாஸ் என அழைத்துக் கொண்டே வந்தவள்.  என்ன பதிலே பேச மாட்டன்றார். என்று அருகில் பார்க்க..

அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.  அச்சச்சோ தூங்கிட்டாரா!  சின்ன புள்ள மாதிரி பிடிவாதம் பிடிச்சு  என்னைய சுத்தி சுத்தி வந்தார்! இப்போ அதுக்குள்ளாட்டியும் தூக்கம் வந்துருச்சா? பறவிதிக்காரா! என்று அவர்களுடைய பாஷையில் கூறியவள். 

அவன் அருகில் படுத்து கட்டிக் கொண்டே உறங்க ஆரம்பித்தாள்.அந்த புடவை மாற்றக்கூட அவளுக்கு தோன்றவில்லை.  இருவரும் உறங்கிப் போனார்கள். 

அப்போ சம்பவம் இல்லையா? என்று இந்த கதையைப் படிக்கும் எல்லாருக்கும் இது தானே கேள்வி? வரும் வர வேண்டிய நேரத்தில் வரும்!!

அதன்பின் இருவரும் தூங்கினார்கள்.  காலை ஒன்பது மணிக்கு தான் சித்தார்த்தி எழுந்தான். அந்த நேரம் இதன்யா கல்லூரிக்கு கிளம்பி தயாராகிக் கொண்டிருக்க..

சித்தார்த்  பிரிஸ்காக எழுந்து மணியை பார்த்து 5 o clock மணிய  9 o clock டைம் தப்பா காமிக்குதா? மணி என்ன? என்று அப்படியே இதன்யாவை திரும்பிப் பார்த்தான்.

அவள் ஜெகஜோதியாக புடவையில் ஜம்மென இருக்க..

என்னடி இந்த புடவை கட்டிட்டு இருக்க? அப்போ நைட்டு?. என்று சித்தார்த் யோசித்தான். 

இதன்யா கண்ணை சிமட்டி கொண்டே  நைட்டு நைட்டு தான் நம்ம ரெண்டு பேரும் தூங்கிட்டோம் என்று கூறினாள். 

உடனே அவன் முகம் மாற சிரிப்புடன் அவள் பார்த்தாள். 

சித் உடனே எழுந்து அப்போ வா! வா! இப்பவே பண்ணலாம்! என்று அவளை இழுத்து படுக்கையில் தள்ள..

ஹேய் புத்தா அடி வாங்க போறீங்க என்று இதன்யா கூறினாள்.

போடி நான் இதுக்காக தான் கஷ்டப்பட்டு ரா பகலா முழிச்சு வேலை பார்த்தா? எந்த நைட்டு முழிச்சிருக்கணுமோ! அந்த நைட்டு தூங்கிட்டேனே! என்று அவளுடைய கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடிக்க..

இதன்யா சிரித்துக்கொண்டே இப்போ எதுவுமே பண்ண முடியாது! நம்ம சாயந்திரம் பாத்துக்கலாம்! விடுங்க..

 சாயந்திரம் என்று சித்தார்த் கடுப்புடன் அமைதியாக அமர்ந்திருந்தான். 

இப்போ என்ன ஆச்சு என்று அவள் அருகில் வந்து கேட்க

அந்த நேரம் ரத்னகுமாரிடம் இருந்து போன் வந்தது. நம்ம டீம் எல்லாம் ரெடி கிளம்பியாச்சு! நீங்க எப்போ ஸ்பாட்டுக்கு வர போறீங்க! என்று கேட்க..

நான் நேரா அங்க அலப்பி வந்துடறேன் என்று சித்தார்த் கூறினான். 

சரி ஓகே வந்துடுங்க என்று ரத்தினகுமார் வைத்தார்.

அலப்பியா என்று இதன்யா கேட்க

சித்தார்த் தலையை கோதிக்கொண்டே ஆமா சூட்டிங் 20 டேஸ்! நான் இங்க இருக்க மாட்டேன்!  

அப்படியா சரி ஓகே போயிட்டு வாங்க என்று இதன்யா சாதாரணமாக கூறினாள்.

என்ன போயிட்டு வாங்க வா!  ஒழுங்கா என்கூட கிளம்பி வா! வந்து எனக்கு தேவையான எல்லாத்தையும் குடுத்துட்டு, அதுக்கப்புறம் நீங்க காலேஜ் போ! எங்க வேணாலும் போ! என்று சித்தார்த் கிளம்ப ஆரம்பித்தான். 

என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது புரியல! என்று இதன்யா கேட்க

 ஹே டென்ஷன் டென்ஷன் என்னை வேணும்னு டார்ச்சர் பண்றா! என முணுமுணுத்து கொண்டே அடியே குண்டு நம்ப ரெண்டு பேரும் அப்படியே இருக்கோம் டி!  நான்  உன் கூட… அய்யோ என்னடி இப்படி என்னை கொடுமை பண்ற?  என்னை எழுப்பி இருக்கலாம்ல்ல!  என சித் கூறினான். 

இதன்யா அவளுடைய போனை எடுத்து இந்தாங்க இதை கொஞ்சம் கேட்கிறீர்களா?  என்று ஆடியோவை சித்தார்த்தின் முன் நீட்டினாள். 

என்ன இது என்று கேட்க..

ஒரு மிருகம் உருமும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

என்ன சத்தம் இது? யார் கத்துறா? எதோ அனிமல் மாதிரி இருக்கு! என்று சித்தார்த் கூற..

அது அனிமல் கிடையாது நீங்க தான்! 

நானா நான் அனிமலா என்று சித்தார்த் அவளின் அருகில் நெருங்க.. 

ஹலோ பாஸ் புத்தா! நீங்க புத்தாவே இல்ல தெரியுமா? நீங்க நைட்டு தூங்கும்போது இவ்வளவு குறட்டை என்று இதன்யா  கூறினாள்.

நானா? நான் குறட்டை எல்லாம் விடமாட்டேனே! என்று சித்தார்த சொல்ல..

நீங்க என்ன இப்பதான் 20+ ன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா?  30 பிளஸ் முடிஞ்சு 31+ ஆரம்பிச்சுருச்சு! அதுக்கு மேல இனி வயசு அதிகமாக்கிட்டே போகும்! வயசு அதிகமாக, வேலை அதிகமாக, குறட்டை வந்துகிட்டே இருக்கும்! அவ்ளோ அலுப்ப வச்சிட்டு உங்களை நான் எழுப்பி மேட்டர் பண்ணா எப்படி இருக்கும்? என கேட்டாள். 

 சித்தார்த் அவளை முறைத்து பார்க்க.. 

என்ன முறைப்பு என்று இதன்யா கேட்க..

நீ புதுசா கல்யாணம் பண்ண மாதிரி பேசல டி!  உன்ன பாத்தா ஒரு ரெண்டு மூணு குழந்தைங்களுக்கு அம்மா மாதிரி இருக்குடி! மேட்டர்னு சர்வ சாதாரணமா சொல்ற?  அந்த வார்த்தையை சொல்லும்போது உனக்கு வெட்கமாகவே இல்லையா? என்று சித்தார்த் கேட்டான்.

எனக்கு என்ன வெட்கம் ? ரெண்டு மூணு குழந்தைகள் பெத்துக்கிட்டவங்க தான் மேட்டர்னு சொல்லுவாங்களா? அப்ப நீங்க எத்தன குழந்தை பெத்துக்கிட்டீங்க? என சந்தேகத்துடன் பார்த்தாள். 

 நான் சும்மா சொன்னேன் டி சரி அத விடு கிளம்பி என்கூட வா என்று சித்தார்த் கூறினான்.

நான் காலேஜ் போகனும்! எனக்கு வேலை இருக்கு என்று கூற..

ஒழுங்கா வந்துடு எனக்கு உன்கிட்ட நிறைய வேலை இருக்கு! என்று அவளை பிடித்து இழுத்தான். 

நீங்க போய் ஷூட்டிங் முடிச்சிட்டு வாங்க! அதுக்கப்புறம்..  என அவள் சொல்ல..

ஓ காட் கொன்றுவேன்!… உன்ன.. என்னடி நினைச்சுட்டு இருக்க! ஒவ்வொரு தடவையும்  நானும் உன் பக்கத்துல வந்தா ஒன்னு பீரியட்ஸ் ஆகிடுற! அப்படி இல்லன்னா ஏதாவது ஃபங்ஷன் வந்துருது! அதுவும்  இல்லன்னா இந்த மாதிரி எவனாவது கிளம்பி எனக்கு அவளைக்கொடு?  இவள குடுன்னு? அப்டின்னு  வந்துட்றானுங்க என்று சித்தார்த் சொல்லி கொண்டே செல்ல..

என்ன சொல்றீங்க என்று இதன்யா பார்த்தாள். 

அது வந்து லிட்டில் ஹார்ட் பத்தி சொன்னேன்! என்று கூறினான்.

இல்ல இல்ல நீங்க ஏதோ மறைக்கிறீங்க?  இதன்யா அருகில் வர

லூசு, நான் அதை சொல்லல இப்பதான் ஆசிஸ் பிராண்ட் அம்பாசிடெர்ரா இருக்கணும். அப்படின்னு அதை வச்சு இழுத்து மேட்டர் பண்ண கூடாதுன்னு சொன்ன!  அதுக்கப்புறம் நான் நடிக்க கூடாது அப்படின்னு அந்த மெயின் மேட்டர் வச்சி இழுக்குற! என்னடி நெனச்சிட்டு இருக்கீங்க?  பசங்களுக்கு தேவையே ஒரு நல்ல சாப்பாடு ,தூக்கம் , அப்புறம் இது தான் என அவளின் முகடுகளை மோதி இடித்தான்.

போங்க! என அவள் திடீர் வெட்க கூச்சத்தில் நெளிய.. 

ஹே எனக்கு வேணும் டி!  இதையே கட் பண்ணா நான் பாவம் இல்லையா? கட்டா? இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லையே டி! என்று சித்தார்த் பாவமாக சொல்ல..

 புத்தா ப்ளீஸ் நீங்க போயிட்டு வாங்க! அங்கே நான் இதுக்காக எப்டி வர முடியும்!  என்று கூறினாள்.

அப்போ வர மாட்டியா? 

அது மாட்டேன் என அவள் சொல்ல..

சித்தார்த் கடுப்புடன் குளிக்கச் சென்றான்.  அரக்கப் பறக்க வெளியே வந்தான். 

இதன்யா நின்று கொண்டிருக்க.. 

காலேஜ் போலயா போ என்று சித்தார்த் மிரட்டும் தொனியில் கூற

அப்போ சென்ட் ஆப் கிஸ் இல்லையா என்று இதன்யா ஏக்கத்துடன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளினாள். 

“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லடி நீ செண்ட் ஆஃப் கிஸ்லையே Seventh heaven போவ!  என்னால எல்லாம் அதை பீல் பண்ண முடியாது!  எனக்கு அது வேணும்!” என சித் பிடிவாதத்துடன் திரும்பி கொண்டான். 

இதன்யா பெருமூச்சை விட்டு இப்படி அரக்கப்பறக்க பிளான் பண்ணி செஞ்சா அது நமக்கு உணர்வு கொடுக்குமா? நம்ம ரெண்டு பேரும் சேருவது ஆக்சிடென்ட்டளா  நடக்கணும்! ஆனா நீங்க எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்ற மாதிரி இருக்கு! 

சித்தார்த் அவளை முறைத்துப் பார்த்தான். 

என்ன முறைக்கிறீங்க? என்று சொல்ல

அவளை பார்க்காமல் கிளம்பிக் கொண்டே தயவு செய்து “நீ கெளம்பிடு! உனக்காக நான் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் செய்றேன் பாரு! என்னைய அடிக்கணும் டி! பிளான் பண்ணி செய்ற மாதிரி இருக்கா! ஆக்சுவலா பிளான் பண்ணி செய்றது நான் இல்ல! நீதாண்டி! ஒவ்வொரு நிமிஷமும் புதுசு புதுசா பேசுற! என்று சித்தார்த் உண்மையாகவே விரத்தியுடன் கூறினான். 

இதன்யா நேராக அருகில் வந்து அவனை வலுக்கட்டாயமாக திரும்பியவள்.  எக்கி நின்று அவனின் கழுத்து செயினை இழுத்து  உதட்டோடு உதடு ஒற்றி கண்களை மூடி அவன் எப்படி முத்தம் கொடுப்பானோ? அதை சமன்பாடு விதிகளை மனப்பாடம் செய்து  ஒப்பித்து எழுதுவது போல் அவன் இதற்கு முன்  கொடுத்த முத்தத்தை இப்பொழுது வெளிப்படுத்தி கொண்டிருந்தாள். 

இந்த மாதிரி முத்தம் கொடுத்து என்னை டெம்ப் பண்றத மட்டும் தான், நீ கத்து வச்சிருக்க! போடி என்று அவளை விலக்க

இதன்யா முடியை சரி செய்து கொண்டு நீங்க ஒரு தடவை பண்ணிட்டு போயிட்டா! அப்புறம் நான் இந்த 20 நாளையும் அதையே நினைச்சுட்டு இருக்கணுமா! கூர்க்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க!

 படுத்தறாளே என்று மனதில் நினைத்தவன். இப்படி பேச மட்டும் தான் செய்வியா? இல்ல! 20 நாள் கழிச்சு வந்ததுக்கு  அப்புறம் இதே கதையை தான் திரும்ப ஓட்டுவியா?  என்று பாவமாக கேட்டான். 

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டு “எனக்கு இப்ப கூட ரெடி தான் பண்ணலாம்! நான் காலேஜ் லீவு போடுறேன்! நீங்க பண்ணிட்டு கிளம்பி போங்க! ”என்று கூறி அவளே அவனை படுக்கையில் இழுத்தாள். 

அப்போ அவ்ளோ ஆசை வச்சிருக்கியா?  இத நான் எழுந்ததும் சொல்லி இருக்கலாம்ல்ல என்று சித்தார்த் அவளின் உதட்டை பிடித்து இழுக்க..

இதன்யா அவனை கட்டிக்கொண்டு நீங்க என்னை சந்தேகப்படுறீங்க!அதுக்காக கிளாரிபிகேஷன்காக தான் இப்போ செய்கிறோம்! என்று கூற..

சித்தார்த்  அவளை விலக்கி முகத்தை பார்த்தவன்.  அப்போ ஆசையா வரலையா? என்று கோபத்துடன் கேட்டான். 

இதுல ஆசை என்ன இருக்கு? எப்பவுமே உங்க மேல எனக்கு ரொம்ப ஆசை தான்! என்று கண்ணடித்தாள். 

அடியே!  

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! வாங்க என்று இழுத்தாள்.

லிட்டில் ஹார்ட்! ரெட் பேபி! என்று அழைக்க.. 

என்னால 20 நாள் தாங்கிக்க முடியும்! ஆனா புத்தா எப்படி தாங்க போறாருன்னு தான் தெரியல! அரக்கராஜாவா எப்போ வேணாலும் ஆகலாம்! சோ எப்போ வேணாலும், என்னை தேடி சென்னை ஓடி வந்துடுவீங்கன்னு, எனக்கு தோணுது! என்று இதன்யா கூறினாள்‌.‌

அப்போ அந்த அளவுக்கு என்னை வீக்கா நினைக்கிற? அப்படித்தானே!

ஐயோ நான் பொதுவா சொன்னேன் அப்போ உங்களுக்கு என் மேல எண்ணமே இல்லையா? 

எனக்கு தான் நிறைய இருக்கே அதுக்கு தான் உன்ன வாடி ன்னு சொன்னா! நீ தான் வர மாட்டேங்குற! என்று சித்தார்த் கூறினான். 

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டு இப்போ எங்க அக்காவுக்கு சீமந்தம், அதுக்கு ஊருக்கு போகணும். ரோஷினிக்கு கல்யாணம் அதுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணனும்! எப்படியும் காலேஜ் நான் கம்மி நாள் தான் போறேன்.  ஒட்டுமொத்தமா உங்க கூட தான் நான் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்றேன்! இப்படி நான் அங்க அலப்பி இருபது நாள் வந்து இருந்துட்டேனா? என்ன பண்றது? 

 20 நாள் வேணா மூணு நாள் மட்டும் போதும்

அப்போ நாலாவது நாள் தோணாதா? 

தோணுமே!  என அவளின் நெஞ்சில் முட்டினான். 

 அப்போ என்ன பண்ணுவீங்க? 

குளிச்சிட்டு படுத்துக்குவேன்! 

அப்போ இந்த 20 நாளுமே அப்படி பண்ணலாம்.  ஆனால் 20 நாள் கழிச்சு இங்க வந்தா டெய்லியும் சேர்ந்து குளிக்கலாம் என்று இதன்யா கூறினாள். 

நிஜமா! 

நிஜம் தான் என இதன்யா சொல்ல.. 

அவளின் மென் பகுதியை கொஞ்சம் அழுத்தம் கொண்டு இரண்டு பக்கமும் கசக்கியவன். சரி டி!  அப்படியே ஓடிடு  என இதழ் இழுத்தான். 

ஒகே mis you புத்தா! என அவனுடைய உள் உதட்டை கடித்து இரத்தம் சுவைத்தவள். புத்தா! நீ கூட குலாப் ஜாமுன் சாப்பிடு உன்னோட உதடு கடுச்சி திங்கனும் போல இருக்கு என்று சொல்லி ஓடி விட்டாள். 

சித் உதட்டை மடித்து கடித்து கொண்டே சிரித்தவன். 

உன்னை அலப்பி வர வைக்கிறேன் டி! மேடம் iv வர போறீங்க! என சொல்லி கிளம்பினான். 

தொடரும்.. 

EPI 287

ஒகே mis you புத்தா! என அவனுடைய உள் உதட்டை கடித்து இரத்தம் சுவைத்தவள். புத்தா! நீ கூட குலாப் ஜாமுன் சாப்பிடு உன்னோட உதடு கடுச்சி திங்கனும் போல இருக்கு என்று சொல்லி ஓடி விட்டாள். 

சித் உதட்டை மடித்து கடித்து கொண்டே சிரித்தவன். 

உன்னை அலப்பி வர வைக்கிறேன் டி! மேடம் iv வர போறீங்க! என சொல்லி கிளம்பினான். 

அப்படியே இரண்டு நாட்கள் ஓடியது தினமும் சித்தார்த் ஷூட்டிங்கில் மிகவும் பிசியாக இருந்தான்.

இதன்யா அவளுடைய வேலையில் கவனமாக இருந்தாள்?  இல்லையே? அவளுக்கு என்ன வேலை இருக்கு அவனை நினைக்கரதை தவிர்த்து!.. அதே தான்  “அன்னைக்கே எல்லாத்தையும் பண்ணிருக்கலாமோ! ” என்று தோன்றியது. சித் அருகில் வந்து முத்தமிட்டு கூட அழைக்க வேணாம் என வீம்புக்கு கூறி விட்டாள்.

ஆனால் இன்று அந்த அவர்களுடைய படுக்கையறைக்கு வந்தாலே, எந்த இடத்தில் பார்த்தாலும் சித்தார்த்  தான் தெரிகிறான்.

லேப்டாப் நோண்டிக்கொண்டிருப்பது, ட்ரெஸ்ஸிங் ட்ரெஸ்ஸிங் டேபிள் பக்கம் அவன் உடை அணிந்து தலைவாரிக் கொண்டிருப்பது,  வாசனை திரவியம் போட்டுக் கொள்வது, அப்படியே பால்கனி பக்கம் திரும்பினால், சித்தார்த் பால்கனி யாரிடமும் போன் பேசிக் கொண்டிருப்பது. என எங்கு பார்த்தாலும் சித்தார்த் தான் தெரிந்தான்.படுக்கை பக்கம் பார்த்தால் அவன் அவளைக் கட்டி அணைத்து தூங்கும் காட்சிகள் தான் கண்முன் வந்து ஓடியது. 

“இப்படி என்னை அம்போன்னு புலம்ப விட்டுட்டு போயிட்டானே!”என்று நினைத்தாள். 

காலை முதல் மாலை வரை வேலை செய்து அழுப்பில் வருபவனுக்கு தூங்க வரும் நேரம் அவளுடைய ஞாபகம் தான்! அவளை அணைத்துக் கொண்டு தூங்கும் நினைவுதான் வந்து சேரும் வேலையில் அவனுக்கு நிற்க நேரமில்லை. இப்படியே ஐந்து நாட்கள் சென்றது .

இங்கே ஸ்டார்ஜியா மற்றும் சதீஷ் இருவரும் சித்தார்த்தினுடைய புதிய பர்சனல் அசிஸ்டன்ட்காண இண்டர்வியூ வேலையில் தீவிரமாக இருந்தார்கள். 

அது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க இதன்யா மூன்று நாட்கள் தொடர்ந்து மெசேஜ் செய்தாள். ஆனால் அவனிடமிருந்து எந்த ஒரு ஃபோனும் வராமல் இருக்க..அதை விட்டுவிட்டாள்.

அதேபோல்  லிட்டில் ஹாட்ஸ் சப்ளிமென்ட் மார்க்கெட்டில் பட்டையை கிளப்பி கொண்டிருந்தது.  அந்த லிட்டில் ஹாட்டை வாங்குவதற்கு தனியாக பேன் பேஜ் இருந்தார்கள்.  அதேபோல் அந்த ரேப்பரில் இருக்கும், அந்த செய்தி துணுக்குகளை படிப்பதற்காகவே நிறைய பேர் வாங்கினார்கள்.

அந்த செய்தி துணுக்குகளை சமூக வலைத்தளங்களில் முதன்முதலில் ஷேர் செய்ய ஆரம்பித்தது ஜான்வி தான்! 

அவள் ஷேர் செய்த நொடியில் இருந்து அனைவரும் யார் யாரெல்லாம் அந்த லிட்டில் ஹார்ட்ஸ் சப்ளிமெண்டை வாங்கினார்களோ அதை twitter facebook instagram என சமூக வலைத்தளங்களில் போட ஆரம்பித்தார்கள்.

நவ்யாவின் புகழ் இன்னொரு பக்கம் பரவிக்கொண்டே இருந்தது.  லிட்டில் ஹார்ட் இன் பிராண்ட் அம்பாசிடர் என்ற பெயர் அவளை நிறைய பட வாய்ப்புகளுக்கு கூட்டி சென்றது.  கூடவே நிறைய விளம்பர படங்களுக்கும் ஒப்பந்தம் ஆகி இருந்தாள்.  இந்த 20 நாள் ஷூட்டிங்கை முடித்ததும் தான் ஆரம்பிக்கப் போகிறாள். 

இது இப்படி இருக்க… அந்த நேரம் ஐந்து நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால்  கொஞ்சம் இடைவெளி விட்டு அனைவரும் அங்கிருக்கும் இடங்களை சுற்றி பார்க்க ஆரம்பித்தார்கள்

சித்தார்த் அவளைப் பற்றி விசாரிப்பதற்காக மதிய வேளையில் போன் செய்தான். 

சித்தார்த் போன் செய்ய செய்ய இதன்யா உடனே கட் செய்தாள். 

“என்ன போன் பண்ணா! கட் பண்றா” என்று நினைத்தவன் அவளுக்கு மீண்டும் மீண்டும் கால் செய்தான். அவள் போனை எடுக்கவில்லை. உடனே சதீஷுக்கு அழைத்தான். 

ஹலோ சொல்லுடா..

ஆமா நான் போன் பண்ணா அவள் எடுக்கவே மாட்டிக்கிறா என்ன ஆச்சு என்று கேட்டான்.

யார் எடுக்க மாட்டிக்கிறா? என்று சதீஷ் கேட்க..

நான் யாருக்கு கால் பண்ணுவேன் என்று சித்தார்த் கேட்டான். 

இதன்யா கிளாஸில் இருப்பாடா! படிக்கிற டைம்ல எதுக்கு புள்ள டிஸ்டர்ப் பண்ற? என்று சொல்ல..

என்ன படிக்கிற டைம்!   கிட்டத்தட்ட அஞ்சு நாள் ஆச்சு! அவ என்கிட்ட பேசவே மாட்டிக்கிறா!!அப்படியா பாப்பா எல்லாம் அப்படி பண்ணாதே! என்று இரு நான் விசாரிச்சிட்டு வரேன்.  சித்தார்த் சொன்னதற்காகவே காலேஜ் பக்கம் சென்றான். 

நேராக அவளுடைய வகுப்பறைக்கு சென்று  “இதன்யா மேம் ஸ்கூல் விஷயமா உங்ககிட்ட பேசணும் கொஞ்சம் வெளிய வாங்க! என்று அழைத்தான். 

ஓகே சார் வரேன் என்று சென்றாள்.

யாரும் அவளை கண்டு கொள்ளவில்லை.  அவள் சித்தார்த்தினுடைய பள்ளியில் வேலை செய்கிறாள். என்று அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்.  சொல்லுங்க!  என்ன அண்ணா! 

 சித்தார்த் போன் பண்ணா நீ எடுக்கவே மாட்டேன்றியாமே! என்னாச்சு? என்று கேட்க

இதன்யாவின் முகம் கோணலாக சென்றது. 

என்னம்மா ஆச்சு முகம் எல்லாம் ஒரு மாதிரி போகுது! என்று கேட்க..

நான் எதுக்கு அவர்கிட்ட பேசணும் என்று கூறினார்

என்ன பாப்பா இப்படி சொல்ற?  என்று சதீஷ் கேட்க

அண்ணா நான் இப்ப காலேஜ்ல இருக்கேன்! அதுவும் கிளாஸ்ல படிச்சுட்டு இருக்கேன்!  இப்போ அவர் எதுக்கு எனக்கு போன் பண்றாரு? 

சதீஷ் அவளை பார்த்து என்னம்மா இது கேள்வி இப்போ தான் சித்தார்த் ஃப்ரீயா இருக்கான் போல! அதனால கால் பண்றான்! நீ பேசு.. 

நான் படிச்சிட்டு இருக்கேன் படிக்கிற பிள்ளை எதுக்கு அவர் டிஸ்டர்ப் பண்றாரு நான் அவர்கிட்ட பேச முடியாது என்று கூறினாள். 

“ எதோ இருக்கு! என்னதான் ஆச்சு சொன்னாதானே தெரியும்!  அவன் ஏதோ தப்பு பண்ணி இருக்கான்!  எனக்கு தெரியும் இந்த சித்தார்த் இப்படித்தான்! என்ன விஷயம் சொல்லு!”என்று போட்டு வாங்க ட்ரை செய்தான்

ஆமா நான் டெய்லியும்..  நான் விடாம அந்த மனுஷனுக்கு கால் பண்றேன். என்னோட போனை எடுக்க மாட்டேங்குறாரு! என்கிட்ட பேசவே மாட்டேன்றாரு! என்று கூறினாள். 

அதான் இப்போ போன் பண்ணி இருக்கானே! எடுத்து பேசு! அவன் வேலையா இருப்பான்! அதனால உனக்கு போன் பண்ணிருக்க மாட்டான்! இப்போ எடுத்துப் பேசு என்று சதீஷ் கூறினான். 

இதன்யா முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு என்னால் அவர்கிட்ட பேச முடியாது! நான் எடுக்க மாட்டேன் நான் எதுக்கு எடுக்கணும்? அவரு  நடிகர்ன்னா  பெரிய கொம்பு முளைச்சிருக்குன்னு அர்த்தமா! நான் அவர்கிட்ட பேச முடியாது! என்று போய் அமர்ந்து கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

என்ன பண்றான் இவ்ளோ நேரம் ஆச்சு என்ற சித்தார்த் சதீஷ்க்கு போன் செய்ய..

டேய் அவ உன் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டா என்று சதீஷ் கூறினான். 

என்ன? பேச மாட்டேன்னு சொல்லிட்டாளா? என்று நீ இரு! வரேன்! என்று இதன்யாவிற்கு மீண்டும் அழைக்க..

அப்பொழுது பிசி என வர.. என்ன பிசி என சதீஷ் அழைத்தவன் “என்ன அவளோட நம்பர் எடுக்க மாட்டேங்குது! பிசினு வருது! அவ யார்கிட்டயாவது போன் பேசிட்டு இருக்காளா? என்று கேட்க..

சதீஷ் சிரிக்க ஆரம்பித்தான்.

இப்போ எதுக்குடா சிரிக்கிற?  இங்கே கிளார் அடிக்குது என்று சித்தார்த் கூற..

மச்சி அவ உன்னை பிளாக்ல போட்டுட்டான்னு நினைக்கிறேன் என்று சிரித்துக் கண்டே கூறினான்.

அப்படியா அவளை நான் எப்படி பிளாக் பண்றேன்னு பாரு! இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க என்னென்னலாமோ நடக்கும் பாரு! அவ முகம் எப்படி போகுதுன்னு, அதை எனக்கு போட்டோ எடுத்து அனுப்புற! என்று சித்தார்த் கூறினான். 

என்னடா பண்ணப் போற! டேய் ஏதாவது எக்கு தப்பா பண்ணி வைக்காத! அவ என்ன தான் முறைப்பா! என்று சதீஷ் கூற.

நான் வைக்கிறேன் என்று கட் செய்து விட்டு அவனுடைய வேலையை ஆரம்பித்தான்.

நேராக ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வருக்கு அழைத்தவன் இந்த வருடத்திற்கான iv.. industrial visit… Regional science centre, G.D Naidu science museum, experimenta science centre, கேரளாவில் அமைந்திருக்கும் ஆலப்புழா மற்றும் பிளாக் தண்டர் என்று மூன்று நாட்களுக்கான இன்டஸ்ட்ரியல் விசிட் பிளான் செய்தான். 

அதை முதல்வரிடம் தெரிவிக்க “சார் இப்பவே பண்ணனுமா?” என்று அவர் கேட்டார்.

ஆமா அடுத்த செமஸ்டர் ஆரம்பிச்சிருச்சுல்ல இப்பவே பண்ணனும்! என்ன? என்கிட்ட கொஸ்டின் கேட்கிறீங்க? என்று சித்தார்த் கேட்டான்.

அது அது ஒன்னுமில்ல சார் என்று அவர் தயங்கிக் கொண்டே பதில் அளிக்க..

சீக்கிரம் பண்ணுங்க நான் கூட உங்கள இன்வேஸ்டிகேஷன் பண்றதுக்கு வருவேன். என்று சித்தார்த் கூறினான்.

ஓகே சார் அதே போலவே பண்ணிடுறோம்.  என்று சொல்லி போனை வைத்தார்கள். 

அடுத்த அரை மணி நேரத்தில் பி.எட் மாணவர்கள் அனைவருக்கும் சுடச்சுட சர்குலர் வந்தது. 

 என்ன செய்யப் போறானோ என்று சதீஸ் இதன்யாவின் வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருக்க..

அந்த நேரம் சர்குலர் வந்தது.

என்னது என்று சதீஸ் கேட்க

உடனே அந்தப் பணியாளர் இது  சர்குலர் பிரின்சிபல் ரூமில் இருந்து வந்தது. அதை சொல்றதுக்கு தான் நான் வந்தேன். என்று கூறினார்.

சதீஷ் சிரித்துக்கொண்டே அதை பார்த்தவன்.  சித்து பிராடு எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிற என்று நினைத்துக் கொண்டே அவனும் அந்த அலுவலக பணியாளருடன் வகுப்பறைக்குள் சென்றான்.

அந்த விரிவுரையாளரிடம் சர்குலரை நீட்டி சைன் வாங்கிவிட்டு அந்த சர்குலரியில் இருக்கும் விஷயத்தை படிக்க ஆரம்பித்தான். 

 அந்த சர்குலரை படிக்க படிக்க அங்கிருக்கும் அனைவரும் ஓஹோ என்று  ஹோ ஹோ ஹோ என வகுப்பில் இருக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் கத்த..

  அட கிரகத்தை கோயம்புத்தூர் தான் iv-யா என்று கொங்கு பாஷையில் பேசினாள்.

பூஜா சிரித்துக்கொண்டே என்னடி? ஏன் கோயம்புத்தூருக்கு என்ன? என்று அவள் கேட்க

அத நான் ஈரோட்டில் இருந்து போனாலே எனக்கு ரொம்ப பக்கம் தான்! அங்க போய் ஐ வி கூட்டிட்டு போறாங்க! வேற எங்கேயாவது கூட்டிட்டு போகலாம்ல்ல! என்று இதன்யா கூறினாள்.

 பூஜா அவள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு எதேட்சியாக முன்னால் பார்க்க.. அங்கே சதீஸ் சிரித்து கொண்டே நின்றான். 

ஹே இதயா சதீஷ் சார் உன்ன பாத்து சிரிக்கிறாரு ? என்ன விஷயம்? நீதான் ஐவி  க்கு பிளான் குடுத்தியா? என்று பூஜா கேட்க

இதன்யாவின் பார்வை சதீஷின் பக்கம் திரும்பவும் இப்பொழுது அனைத்தும் புரிந்து விட்டது..

ஐவி நான் வரமாட்டேன் என்று இதன்யா கூறினாள்.

என்னாச்சு என்று கேட்க

நான் வரமாட்டேன் என்று சொல்ல..

அதன் பின்னர் மாணவ மாணவிகள் அனைவரும் “என்ன மேம் வெறும்  சயின்ஸ் மியூசியம்  மட்டும் தான் போக போகப் போறோமா? வேற எங்கேயும் இல்லையா மேம்? என்று கேட்க

விரிவுரையாளர் சிரித்துக்கொண்டே கேரளாவுல ஆலப்புலா,  கூடவே  ஆழியார் டேம் போக போறோம். அத முடிச்சிட்டு நேரா காலேஜ் வந்துருவோம்.  அந்த நைட் இங்க காலேஜ்ல ஸ்டே பண்ணிட்டு, அடுத்த நாள் லீவு மண்டே காலேஜ். மொத்தம் நாலு நாள் ப்ரோக்ராம் என்று விரிவுரையாளர் கூறினார்.

“நாலு நாளா? ஜாலி! அசைன்மென்ட் இல்ல! டீச்சிங் பேக்டீஸில் இல்ல! லெசன் பிளான் தொல்ல இல்ல! கேஸ்டடி இல்ல இந்த நாலு நாள் ஹாப்பியோ ஹேப்பி நியூயர் அதுக்கப்புறம் பொங்கல் லீவு அத முடிஞ்சு இந்த செம சூப்பரா போகுது” என்று அனைவரும் கத்தினார்கள். 

வேக மூச்சு விட்டுக்கொண்டு எவ்வளவு தைரியம் இருந்தா? அவன் இருக்கிற இடத்துக்கு என்னை வர வைக்கிறான்?  நான் வரவே மாட்டேன் போடா! எத்தனை தடவை நான் உனக்கு கால் பண்ணிருப்பேன்!  இப்போ  நீ இருக்குற இடத்துக்கு  என்னை வர வைக்க ட்ரை பண்றியா? போடா? நான் வரமாட்டேன்! என்று இதன்யா முணுமுணுத்தாள். 

என்னடி பேசிட்டு இருக்க என்று பூஜா கேட்க.

போடி என அவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இங்கே ஐ வி கூட்டிக்கொண்டு போவது தெரிந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் என்ன? கோயம்புத்தூரா? வாழ்வு தான்! ஏன் இந்த சித்தார்த்துக்கு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் புள்ளைங்க எல்லாம் என்ன பாவம் பண்ணாங்க? அவங்களையும் கூட்டிட்டு போக வேண்டியது தானே! என்று கேட்க…

பூஜா சிரித்துக்கொண்டு மிசஸ் இதன்யா சாரர் கிட்ட சண்டை போட்டுட்டாங்க!  அவங்கள கூல் பண்றதுக்காக தான்! இந்த பிளானேவாம் நான் கேள்விப்பட்டேன்! என்று  கூறினாள்.

வாழ்வு தான் போய் அனுபவி என்று பிரியா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள.. 

எதுக்குடி இப்படிலாம் சொல்லிட்டு இருக்க?  நான் முதலில் IV போகவே போறதில்ல என்று கூற.

போக மாட்டியா நீ வருவ?  என்று பூஜா கூறினாள்.

நான் வரமாட்டேன் என்று இதன்யா சத்தமாக கூற..

 இவ நாக்க தொங்க போட்டுக்கிட்டு ஐ வி வருவாள் என்று  பிரியா சிரித்துக் கொண்டே கூற..

எப்படி சொல்ற என்று பூஜா புருவம் சுருக்கி ஆச்சரியமாக கேட்க

 “அங்க வந்தா சித்தார்த் இவ பின்னாடியே பாலோவ் பண்ணனும், நாய்க்குட்டி மாதிரி இவ கால சுத்தி  வரணும்ல, ஃபாலோ பண்ணனும் , அதனால கண்டிப்பா வருவா! இவ ஒரு வெட்டி சீன் காரி! பாத்தியா புருஷன் நடிகர்,  அதுல பாதியாக இவ நடிக்கணும்ல்ல அதனால வருவா! சரி என் பாவத்தை கொட்டிட்டு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க!” என்று பிரியா கூறினாள்.

நான் போகமாட்டேன் என்று இதன்யா வீம்பு புடிக்க..

போடி போடி உன் நடிப்பை எல்லாம் நாங்க எப்பவோ பாத்துட்டோம்! இந்த சீன் போடுற வேலை எல்லாம் இங்க வச்சுக்காத! என்று அவரவர்கள் வகுப்புக்கு சென்றார்கள்.

ஹே நான் சொல்றத நம்புங்கடி என்ற இதன்யா சினிங்கி கொண்டே கூற

பூஜா சிரித்துவிட்டு “கண்டிப்பா நீ இவ்வளவு ஓவர் ஆக்டிங் கொடுக்கிறதுனால, வருவ என்று தான் தோணுது என்று  சொல்ல

பூஜா என்று பற்களை கடித்துக் கொண்டே அவள் பின்னால் செல்ல..

வா போலாம் என்று அவர்கள் வகுப்பறைக்கு சென்றார்கள்.

 இங்கே ஹாஸ்பிடலில் பூஜா வழக்கம்போல் அவளுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாளைக்கு நான் வரமாட்டேன் என்று அவள் கூட வேலை செய்யும் அந்த வரவேற்பு பெண் கூற..  நான் அடுத்த நாலு நாள் வரமாட்டேன் என்று பூஜா கூறினாள்.

நான்கு நாளா என்று வரவேற்பு  பெண் கேட்க

ஆமா என்னோட காலேஜ்ல IV கூட்டிட்டு போறாங்க! அதனால நான் நாலு நாள் வரமாட்டேன்! என்று பூஜா சந்தோஷத்துடன் கூறினாள்.

அப்படியா சரி பர்மிஷன் லெட்டர் வாங்கிக்கோ! இப்போ அதிகமா நீயும் மெடிக்கல் கோடீங்களா டீன் சொல்லி தான செய்ற…அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு லீவ் போட்டுடு என்று கூற..

நான் எதுக்கு அவர்கிட்ட சொல்லணும்?  நாம சாதாரண வேலை செய்றவங்க? அவரு பெரிய இடத்துல இருக்காரு! இதெல்லாம் முக்கியமான விஷயமா? என்று கேட்க..

வரவேற்பு பெண் அவளை உற்றுப் பார்த்தாள்.

என்ன அப்படி பார்க்கிற?!

சரி என்னமோ பண்ணு என்று பணி வரவேற்பு பின் அவளுடைய வேலையை பார்த்தாள்.

அந்த நாளிலிருந்து சித்தார்த் இரவு வணக்கம், நைட் சாப்டியா பேபி?  காலை வணக்கம், மதியம் என்ன லன்ச் கொண்டு போன? இன்னிக்கி காலேஜ்ல என்ன நடந்தது? என்று மெசேஜ்ஜில் கேட்க ஆரம்பித்தான். 

ஐயோ இவனோட அன்பு தொல்லையை தாங்க முடியலையே! இப்போ மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டானே! ராஸ்கல் என்று இதன்யா அவனுடைய மெசேஜை பார்த்து சிரித்தாள்.

ஆரம்பத்தில் இதன்யாவும் தான் மெசேஜ் செய்வா! ஆனா சித்தார்த் இன்ட்ரோவர்ட் பர்சன் ஆச்சே! அந்த மெசேஜ் பார்த்து படிப்பானே தவிர, படித்து சிரித்து கொள்வான்! ஆனால் திரும்ப அவளுக்கு அனுப்ப மாட்டான்.

இப்பொழுது அவன் உட்கார்ந்து மெசேஜ் டைப் செய்து கொண்டிருக்கிறான். ஷூட்டிங் வேலையிலும் கூட டிங்டாங் என்று அவளுடைய இடைவேளை, உணவு இடைவேளை, மாலை என அனைத்து நேரமும் மெசேஜ் செய்வான்.

ரத்னகுமார் அருகில் வந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சரியா, மதியம் காலையில, நைட்டு டிங்டாங்னு ,போன வச்சுட்டு சுத்துறீங்க! என்று கேட்க

உனக்கு என்னையா? உங்க வீட்டிலிருந்து உனக்கு ஏதாவது வந்ததா? என்று கேட்க

ரத்தினகுமார் சிரித்துக்கொண்டே எங்க மாமியார் வீடு இங்க தான் என்று கூறினார்.

இதை கேட்டதும் சித்  ஷாக் ஆகி பிராடு என்று சொல்ல..

அவர் சிரித்துக்கொண்டே மோஸ்ட்லி என்னுடைய எல்லா படத்திலும் ஒரு டச்சிங் சீன் இங்க வச்சிடுவேன்! அதனாலதான் மேகாவுக்கும் உங்களுக்கு இருக்கிற முக்கியமான சீன் இங்க வச்சிருக்கேன்! நான் எங்க மாமியார் வீட்டுக்கு போய் டைரக்ட்டாவே என் மனைவியை பார்த்திடுவேன்! என்று ரத்தினகுமார் கூறினார்.

அப்படியா நானும் தான் பார்ப்பேன் என்று சித்தார்த் கூறினான்.

உங்க மாமியார் வீடு எங்கே இருக்கு என்று ரத்னா கேட்க

ஈரோடு இன்று சித்தார்த் கூற..

சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் ஈரோடா என்று கேட்க

அங்கல்ல இந்த பக்கம் என்று கூறினான்.  சரி எந்த பக்கமும் எப்படியோ பார்டர்ல பொண்ணு புடிச்சுட்டீங்க என்று ரத்தினகுமார் சொல்ல

ஆமா என்று சித்தார்த் தலை அசைத்தான்.

சரி இப்போ லீவ்ல இருக்காங்களா? அப்படி பார்த்தாலும் வரமுடியாதே! என்று ரத்தினகுமார் கேட்க

நான் நெனச்சா வர முடியும்! இப்பதான் அவள பாக்கணும்னு தோணுச்சா! அதனால ஐவி பிளான் பண்ணி இருக்கேன்! வருவா என்று கூறினான்.

ரத்னகுமார் அதிர்ச்சியுடன் வாயை பிளந்து சித்தார்த்தை பார்த்துக் கொண்டிருக்க..

என்ன ரத்னா அப்படி பாக்கறீங்க என்று சித்தார்த் கேட்டான்.

ஆனா நீங்க ரொம்ப டூ மச்சா பண்றீங்க என்று கூற

ரத்னா நீ பண்றது தான் டூ மச் நானும் 20 நாள் என் வீட்ல இருக்குறவங்கள பாக்காம எப்படி இருக்க முடியும்? அதனாலதான் என்று சித்தார்த் கூற.. 

அடேங்கப்பா இந்த மாதிரி சீன் எல்லாம் என் படத்துல கிடைக்க மாட்டேங்குது! ரொமான்டிக் ஓவர் லோடால இருக்கு! அப்போ ஒரு புக்கே இருக்கும் போல! என்று கேட்க..

ரெண்டு புக் முடிச்சாச்சு என்று சித்தார்த் கூறினான். 

உடனே ரத்தினகுமார் சிரித்துக்கொண்டே புக்குக்குள்ள மயிலிறகு ஏதாவது வச்சிருக்கீங்களா? எப்போ குட்டி போடறது? மூன்றாவது புக்கு வந்துட்டீங்க! இன்னும் எந்த குட்டியையும் காணோமே! என்று இரு பொருள் பட பேசினார்.

சித் பாவமாக “ரத்னா நாங்க இன்னும் எதையும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல! அவ ரொம்ப சின்ன பொண்ணு!

ரத்னா சித்தார்த்தின் அருகில் வந்து “இந்த விஷயத்துல பொண்ணுங்க வேண்டாம்! முடியாது! பிடிக்காது! அப்படின்னு தான் சொல்லுவாங்க! அதுக்கு வயசு எல்லாம் ஒரு தடையே இல்ல! அவங்க ரொம்ப சீன் போடுவாங்க! அதனால நீங்கதான் களத்துல இறங்கணம்! ஆனா பண்ண பண்ண அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! ஆனா எந்த பெண்ணும் வாய் திறந்து பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்லவே சொல்லாது! அதுல ஏதாவது குற்றம் கண்டுபிடித்து… இவ்வளவுதானா? என்று அதை கமேன்ட் பேசுவார்களே! தவிர எந்த பொண்ணும் இந்த விஷயத்துல சேடிஸ்பை ஆக மாட்டா” என்று கூறினார். 

அனுபவம் பேசுதோ! என்று சித்தார்த சொல்ல

ரத்னகுமார் சிரித்துக்கொண்டு எல்லா பொண்ணுங்களும்! இந்த விஷயத்துல இப்படித்தான்! நாம தான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கணும்! உங்க மனைவிக்கு வயசு என்ன 18 ஆகுதா? என்று கேட்க..

அவளுக்கு 23 முடிய போகுது முடிஞ்சிடுச்சு 25 வரப்போக்குது என்று கூற..

அப்போ உங்களுக்கு 32 இருக்குமா என்று கேட்க எனக்கு 30 பிளஸ் என்று சித்தார்த் கூறினான். 

தெரியாம ரெண்டு வயசு கம்மியா சொல்லிட்டேன்! அப்படி பார்த்தாலும் உங்களுக்கும் உங்க மனைவிக்கும் எட்டு வருஷம் வித்தியாசம் அப்போ உங்களுக்கு 32 முடிஞ்சு 33 தானே! என்று ரத்தினகுமார் கேட்டார்.

இப்போ வயசு எல்லாம் ரொம்ப முக்கியமா? என்று சித்தார்த் கோபப்பட..

ஆம்பளைங்ககுக்கு  இந்த வயசு பத்தி பேசினால் கோபம் தான் படுவாங்க! ஒன்னும் பெரிய விஷயம் இல்ல! இப்பவே குட்டி போட ட்ரை பண்ணுங்க! அப்போதான் உங்களோட வாழ்க்கை ஸ்மூத்தா போகும்! என்று ரத்னா கூறினார்.

அது கொஞ்சம் கஷ்டம் ரத்னா அவ படிச்சு முடிச்சதும் தான் எல்லாமே பண்ணனும்! என்று கூற

அட்லீஸ்ட் ரெண்டு பேரும் இந்த ரெண்டு வருஷ வாழ்க்கையும் என்ஜாய் பண்ணுங்க! மெசேஜ் பண்றத பாத்தா ரெண்டு பேத்துக்குள்ளயும் எதுவும் இல்ல போலயே! என்று ரத்னா சொல்ல..

சித்தார்த் வெடிக்கென பார்த்தான். அப்போ நான் சொல்றது சரியா? என்று ரத்னா கேட்க..

அப்படி சொல்ல முடியாது! ஒரு ஆறுமாதத்துக்க முன்னாடி நடந்திருக்கு! 

ரத்னா சித்தார்த்தை மிரட்சியுடன் பார்த்து உங்கள மாதிரி ஒரு பையனை பார்த்ததே இல்லை! ஒரு பொண்ணு கிடைச்சா அந்த பொண்ணு மேல எப்படா பாயலாம் அப்படின்ற ஆம்பளைங்கள தான் பாத்து இருக்கேன்! ஆனால் நீங்க வேற ரகம் சித்தார்த்! உண்மையாகவே நீங்க என் மனசுல ஒரு இடத்துல இருக்கீங்க!”

உன் மனசுல நான் எதுக்கு இருக்கணும்? என்று சித் கேட்க 

 அவர் சிரித்து கொண்டே சரி சரி எப்படி இருந்தாலும் நல்ல கேரக்டர் தான் நீங்க என்று ரத்தினகுமார் சர்டிபிகேட் கொடுத்தார்.

சரி படத்தை பார்க்கலாமா சீக்கிரம் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும் என்று சித்தார்த் கூற..

அதுதான் உங்க மனைவியே இங்க வர போறாங்களே! அப்புறம் என்ன? உங்களுக்காக அந்த ஒரு நாள் ஃப்ரீ கொடுக்கிறேன்.முடிஞ்சா ரெண்டு பேரும் ஜாலியா இருங்க என்று ரத்னா கூற..

ஓவரா பேசிட்டு இருக்கீங்க! என்று சித்தார்த் குரல் கடுமையாக ..

சரி சரி வாங்க போலாம் என்று அடுத்தடுத்த ஷாட்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். 

இங்கே அந்த வரவேற்பு பெண்  சொன்னதை நினைத்துக் கொண்டிருந்த பூஜா ஒரு பெருமூச்சு விட்டு வேறு வழியில்லாமல் சொல்லி தொலையலாம்! இவர்கிட்ட போய் நிக்க வேண்டியதா இருக்கே! வேலையை விட்டு போக முடியல என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

ஹலோ எக்ஸ்கியூஸ் மீ

ஹா என்று குரல் கேட்டது.

நான் வந்து..   எனக்கு நாலு நாள் லீவ் வேணும் 

என்ன நாலு நாள் லீவா!  என அபி பார்வை பூஜாவின் மீது பட்டது. 

எனக்கு காலேஜ்ல ஐவி கூட்டிட்டு போறாங்க அதனால நாலு நாள் போறேன்.  என்று கூற..

நாலு நாளா எந்த ஒரு இடம்! 

பூஜா வெடுக்கென  அவனிடம் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு நான் சொல்லணும்? எனக்கு நாலு நாள் லீவ் வேணும்! தந்தா தாங்க! இல்லைனா வேலை விட்டு தூக்கிட்டு போயிட்டே இருங்க! என்று சொல்ல

அபி அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு நாலு நாள் ஐவியா!..  போயிட்டு வா! போயிட்டு வா! ஜாலியா என்ஜாய் பண்ணு! நாலு நாள் அப்புறம் நீ இங்க வந்து…  அதாவது காலேஜ்ல வந்து ஜாயின் பண்ணதும், உன்னையும் என்னையும் பத்தியும், அந்த சதீஷ் பத்தியும் நான் பிரியா கிட்ட சொல்றேன்! போயிட்டு வா என்று புருவம் சுருக்கி கொண்டு சொன்னவன். 

அவனது வேலையை பார்க்க ஆரம்பித்தான். 

பூஜாவிற்கு உள்ளுக்குள் தூக்கி வாரி போட்டது போல், பயப்பந்து உருண்டது. நம்ம நிம்மதியா இருக்கிறது, இவனுக்கு எல்லாம் பிடிக்காதா! ராஸ்கல்! இவன  இவனோட ஒவ்வொரு விரலையும் உடைச்சு விட்டு, கண்ண நோண்டி, மூக்கு அறுத்திடனும், எப்படி நம்மள கஷ்டப்படுத்துறான்?  இப்படி சொன்னா நான் எப்படி ஐவி போய் ஜாலியா இருப்பேன்!  என்று  நினைத்துக் கொண்டிருக்க..

என்ன அப்படியே நின்னுட்டு இருக்க போ! கிளம்பு என்ற அதட்டினான்.

பூஜாவிற்கு கோபம் வர அங்கிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி அவன் மேல் இடப்போக..

ஹேய் என்ன பண்ற என்று குரலை உயர்த்தினான்.

என்னடா நெனச்சிட்டு இருக்க? ஓவரா பிளாக் மெயில் பண்ற? நீ என்னடா சொல்றது! நான் சொல்றேன்! பாத்துக்கலாம்டா! உன்னை நான் சும்மாவே விடமாட்டேன்! என்று பூஜா வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினாள். 

அவள் சென்றதும் சுனாமி அடித்து ஓய்ந்தது போல் அமைதியாக.. 

What the hell? என்னென்ன பேசிட்டு போறா? டா சொல்லிட்டு போறாளே? இவளுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தியா போச்சு! என்ன பண்றான்னு நானும் பார்க்கிறேன் டி! என்ற அபி அவனுடைய வேலையே செய்ய ஆரம்பித்தவனுக்கு அதற்கு மேல் செய்யவே முடியவில்லை.

ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அப்படியே  அந்த ரோலிங் சேரில் நன்றாக சாய்ந்து கொண்டான்.

டா சொல்றா! டா சொல்றாளே? எப்படி டா சொல்ல முடியும்? என்று நினைத்துக் கொண்டு  சாய்ந்திருந்தான். 

பிரியா சொன்னது போலவே இதன்யா ஐவி கிளம்பிவிட்டாள்.

பூஜா அவளைப் பார்த்து உதடு கடித்து சிரிப்பை அடக்க.. 

இப்போ எதுக்குடி பல்ல காட்டுற?  என்று இதன்யா கேட்க.. 

அன்றே பிரியா கணித்தார்! நீ ஐ வி வருவாய் என்று அதேபோல் நடந்து விட்டது. 

ஆமா இவ பெரிய அவ பெரிய அகத்திய முனிவர் கண்ண மூடி அடுத்து என்ன நடக்கும்னு கண்டு பிடிக்கிறதுக்கு? வாய மூடிட்டு வா! இதுக்கு வந்து தான் ஆகணுமாம்! இதுக்கு அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும்!  செயல் திட்டம் கலப்பயணம் அப்டின்னு  சொல்லிட்டு அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும்! அதுக்காக தான் நான் ஐவியே வரேன்! என்று இதன்யா சொல்ல..

அப்படியா அதை என்கிட்ட கேட்டாலே நானே சொல்லுவேன்! என்று பூஜா பார்க்க..

உன் வேலையை பாரு! நான் ஜிடி நாயுடு மியூசியம் பார்க்கணும்! அதுக்காக தான் வரேன் என்று சமாளித்தாள்.

ஹான் நானும் பார்க்கிறேன் என அனைவரும் கிளம்பினார்கள். 

அடுத்து சித்தார்த் – இதன்யா மீட் 

தொடரும்.. 

கமெண்ட் போட்டு போங்க இன்னிக்கி எப்டி இருந்தது? Today episode? 

EPI 288

Happy journey என பூஜாவின் எண்ணுக்கு செய்தி வர..

யாரு எனக்கு மெசேஜ் பண்றது? என பூஜா பார்க்க அதற்குள்.. இன்னொரு மெஸேஜ் உங்க பக்கத்தில் இருக்கும் இதயமே இல்லாத இதன் யா வுக்கும் சேர்த்து happy journey சொல்லிடுங்க என வர..

ஹே யாரு டி இது? என பூஜா போன் நீட்ட..

அதை வாங்கி பார்த்த இதன் யா கோபத்துடன் முதலில் இந்த நம்பரை பிளாக் பண்ணு! இடியட்! ராஸ்கல் என திட்டினாள். 

யாரு டி இது என பூஜா கேட்க..

அவன் தான் சித்தார்த் கிருஷ்ணா! என வாயை கோணலாக வைத்து கொண்டே இதண்யா கூறினாள். 

என்ன சித்துவா? இவ்வளவு பெரிய இடத்துல இருக்குற அவுரு…  எனக்கு !. எனக்கு மெசேஜ் பண்ணி இருக்காரு!  அதுவும் ஹாப்பி ஜர்னி சொல்லி இருக்காரு! என பூஜா பூரித்துக் கொண்டே கூறினாள். 

இதன்யா காதை அடைத்துக் கொண்டு கடுப்பு கிளப்பிக்கிட்டு! என்ன டென்ஷன் பண்றாங்க?. என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவள். மனதில் அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் பூஜாவுக்கு மெசேஜ் பண்ணுவான். எனக்கு கூட மெசேஜ் பண்ணனும்னு தோணல!  நீங்க அங்க வாடா! என்ன பாக்க வா! உன்ன நான் எப்படி அவாய்ட் பண்றேன்னு மட்டும் பாரு! என்று நினைத்துக் கொண்டாள். 

 அப்படியே கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்தாள். ஆனால் பேருந்தில் இருக்கும் அனைவரும் பாட்டை போட்டுக்கொண்டு ஆட்டமாக ஆடத் தொடங்கினார்கள்.  இந்த IV மிகவும் ஜாலியாக இருந்தது. 

காலேஜ்ல இருந்து மாணவ மாணவிகளை இண்டஸ்ட்ரியல் விசிட்  களப்பயணம் கூட்டி செல்ல அரசில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டது.  அதற்கு மேல் கொஞ்சம் பணத்தை கொடுத்து அனைவரிடமும் கணிசமான தொகையை வாங்கி இந்த iv அனைவருக்கும் நிறைவான மனநிலையில் அழைத்துச் செல்லும்படி சித்தார்த் ப்ளான் செய்திருந்தான்.

அவர்களுக்கு உண்ண உணவு தூக்கம் அனைத்து பெண்களை அழைத்துச் செல்வதால், மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.  என்று அதற்கும் ஆட்களை போட்டு இருந்தான்.  இதன்யா அந்த பேருந்தில் வருவதால் அவளுக்கும் சேர்த்து பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தான். 

அனைவரும்  அதிகாலை கோயம்புத்தூர் வந்து சேர்ந்தார்கள்.  மாணவிகள் அனைவரும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட,  அதே போல் மாணவர்கள்  அவர்களுடைய விரிவுரையாளர்கள் என தங்கினார்கள்.

இதன்யா, வான்மதி ,பூஜா, சத்யா என அவளுடைய அறையில் நான்கு பெண்கள் தங்கி இருந்தார்கள்.

எப்படியோ கோயம்புத்தூர் வந்துட்டோம் என்று பூஜா சிரித்துக் கொண்டே சொல்ல..

இங்கிருந்து முக்கா மணி நேரத்திலேயே எங்க வீட்டுக்கு போயிடலாம்! என்று இதன்யா கூறினாள்.

 அவ்வளவுதானா என்று மாணவிகள் அனைவரும் கேட்க.. 

ஆமா எங்க வீட்ல ஜாலியா இருக்கும்! பக்கத்திலேயே வாய்க்கால் போகும்! சிவ கோயில் காட்டில் கரும்பு , நெல்லு, எங்க வீட்ட மயில் சத்தம்! அந்த இடமே ஜெகஜோதியா இருக்கும்! என்ஜாய் போடலாம்! மகிழமரம் நிழலில் அப்படியே ஒரு கட்டில் போட்டு தூங்கணும்னு வச்சுக்கோயேன்! அப்படி சூப்பரா இருக்கும்! என்று இதன்யா விளக்க ஆரம்பித்தாள். 

அந்தப் பெண்கள் அனைவரும் ஆசையாக இதன்யாவை பார்க்க.. 

நான் இப்போ  சொல்றதெல்லாம் கொஞ்சம் தான்! அங்கே  இன்னும் ஜாலியா இருக்கும் தெரியுமா!  இட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கும்!  காலையில் இட்லியும் எங்க வீட்ல செய்யற குடல் குழம்பும் வேற லெவல்ல இருக்கும்! அது கூடவே நோம்பி சாட்டுல கிடாய் கறி,  தண்ணி குழம்பு பிரியாணி, கூட்டம் கூட்டமா செஞ்சு நல்லா சாப்பிடுவோம்! பண்டிகை எல்லாம் சூப்பரா இருக்கும்! தேரோட்டம் இன்னும் நல்லா இருக்கும்! என்று இதன்யா கூறினாள். 

அப்படியா எனக்கு கூட உங்க வீட்டுக்கு வரணும்னு ஆசையா இருக்கு! என்ற பெண்கள் அனைவரும்  சொல்ல. .

இதன்யா சிரித்துக்கொண்டே அதனால என்ன?  எங்க அக்காவுக்கு வளகாப்பு வருது. நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நீங்க வாங்க..  நம்ம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்! என்று இதன்யா சந்தோஷமாக கூற..

அப்போ நானு  என்று பூஜா கேட்க..

நீ ,பிரியா அப்புறம் வந்து வானு சத்தியா நம்ம பசங்க வேல்முருகன், சூர்யா, விக்னேஷ், எல்லாரயுமே நான் இன்வைட் பண்ணுவேன்!  ஜாலியா இருக்கும்! என இதன்யா குசியுடன் கூற.. 

அனைத்து பெண்களும் ஜாலியாக ஓகே சொன்னார்கள். அதன் பின் தூங்க ஆரம்பித்தார்கள்.  ஏனென்றால் இங்கிருந்து தான் அனைத்து மியூசியத்திற்கும் சென்று விட்டு,  திரும்ப ஹோட்டல் அறைக்கு வந்து அடுத்த நாள்  அதிகாலை நேராக ஆலப்புழா  கிளம்பி சென்று பார்த்துவிட்டு,  அங்கிருந்து நேராக பிளாக் தண்டர் திரும்ப அனைவரும் ஹோட்டல் வந்து நேராக கல்லூரி செல்வார்கள் இதுதான் திட்டம். 

அடுத்த நாள் காலை அங்கிருந்து அனைவரும் ரீஜனல் சயின்ஸ் சென்டர்,  ஜிடி நாயுடு மியூசியம் என அனைத்து இடங்களுக்கும் சென்று அந்த இடத்தை சுற்றிப் பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு, போட்டோ எடுத்துக்கொண்டு ஓய்ந்து களைத்து போய் அறைக்கு வந்தார்கள். 

அந்த  இரவு தூங்கி அடுத்த நாள் ஆலப்புழா செல்ல வேண்டும் உள்ளே வந்ததும் அனைவரும் உடைய எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

என்னடி எல்லாம் டிரஸ் பாக்கறீங்க?  என்ன விஷயம்?  என்று இதன்யா கேட்க..

பூஜா சிரித்துக்கொண்டே இன்னிக்கி போன இடத்துக்கு தான் நம்ம யூனிஃபார்ம்ல போனோம்!  ஆனால் நாளைக்கு ஆலப்புழா பிளாக் தண்டர் எல்லாம் நம்ம அன்யூனிஃபார்ம் சோ சாரி இல்ல கொண்டை இல்ல கலர் ட்ரெஸ் ஜாலியா இருக்க போகுது! என கூறினாள். 

இதன்யா அவளுடைய பேக்கை பார்க்க அதில் யூனிஃபார்ம் மட்டும்தான்  இருந்தது!  அவள் கலர் டிரஸ் எடுத்து வரவே இல்லை! பூஜா வான்மதி சத்யா மூவரும்  என்ன உன்னோட முகத்தை சோகமா வச்சிருக்க? என்னடி ஆச்சு?  என்று கேட்டார்கள். 

அதுவா நானே இரண்டுமே யூனிபார்ம் தான் எடுத்துட்டு வந்தேன்!  கலர் டிரஸ் எடுத்துட்டு வரவே இல்ல!

அப்போ வரும் போது போட்டு வந்த அழுக்கு மட்டும் தான் இருக்கா?  என்று பூஜா கேட்க..

ஆமாண்டி என்று சிணுங்கி கொண்டே கூறினாள்.

உன்னை எல்லாம் என்ன தான் பண்றதோ?  ஏண்டி இப்படி இருக்க?  சரி என்னோட டிரஸ் ஒன்னு போட்டுக்கோ!  என்று பார்க்க..

உன்னோட டிரஸ் எனக்கு பத்தாது!  நீ ஹைட்டா இருக்க கொஞ்சம் குண்டா இருக்க! அப்ப என்னோடது என்று சத்யா பார்க்க  பார்க்க..

அது ஒரு சுத்து பிரிக்கணும்! என வான் மதி கூறினாள். 

சரி நான் உட்கார்ந்து பிரிக்கிறேன் என்று இதன்யா சொல்லிக் கொண்டிருக்க.. 

அந்த நேரம் பிரியா போன் செய்தாள்.

ஹலோ! 

சொல்லு ப்ரியா  என்று சுரத்தே இல்லாத குரலில் பேசினாள்.

என்ன ஆச்சு உன்னோட குரல் ரொம்ப சோகமா இருக்கு! என்ன விசயம்? 

 நான் கலர் டிரஸ் எடுத்துட்டு வரவே இல்லடி யூனிபார்ம் சாரி மட்டும் தான் வச்சிருக்கேன் என்று சிணுங்கி கொண்டே இதன்யா கூறினாள். 

பிரியா சந்தோஷமாக சிரித்துக்கொண்டே நல்லா வேணும்டி! குண்டு! இப்ப பார்த்தியா! என்னை விட்டு ஆடிட்டு IV  போன தானே! இதுதான் உனக்கு தண்டனை!  என்ற ப்ரியா கூற

இதன்யா கோபத்துடன் போடி கோகுல் நாயே என்று போனை வைத்துக்கொண்டு வைத்துவிட்டு அறைக்கு வந்தாள்‌.

பிரியா சிரித்துக்கொண்டே இப்போ என்ன பண்றது? எப்படி அவளுக்கு டிரஸ் கொடுக்கிறது? சரி சித்தாரத்துக்கு மெசேஜ் பண்ணி பார்ப்போம்! என்று மெசேஜ் செய்ய.. 

  ஒரு டிக் தான் ஆனது!  என்ன இப்படி இருக்கு? என்ன பண்ணலாம்? என்று யோசித்தவள் சதீஷ்க்கு போன் செய்தாள்.

ஹலோ பிரியா பேபி என்னோட ஞாபகம் வந்துடுச்சா? சொல்லுடி என்று ஆசையாக சதீஷ் பேச.. 

உன்னோட ஞாபகம் எல்லாம் எனக்கு வரல!  நீ உடனே உங்க பாசுக்கு போன் பண்ணி இதன்யா வுக்கு ரெண்டு டிரஸ் பார்சல் பண்ண சொல்லு!  என்று பிரியா கூற..

என்ன ஒன்னும் புரியல என்ற ப்ரியா சதீஸ் சொல்ல.. 

டேய் மடையா நீ ஒன்னும் பேச வேண்டாம்! அவரை எனக்கு கால் பண்ண சொல்லு! என்று பிரியா கூற..

சதீஷ் புருவத்தை உயர்த்தி கொண்டே யாரு? ஆக்டர் சித்தார்த் கிருஷ்ணா?  கோகுலப்பிரியாவுக்கு போன் பண்ணனுமா?  அந்த அளவுக்கு கோகுல ப்ரியா! பெரிய ஆளா? என்று கேட்டான். 

இப்போதைக்கு நான் தான் பெரிய ஆள்! நீ உடனே போன் பண்ண சொல்லு என்று கூற..

அதெல்லாம் நான் என் பாஸ் கிட்ட சொல்ல மாட்டேன் போடி! என்று சதீஷ் சொல்ல..

சரி விடு அதுக்கு அப்புறம் நீ தான் ரொம்ப பீல் பண்ணுவ என்று பிரியா போனை வைத்தாள்.

ஒரு சில நிமிடங்களிலேயே சதீஷ் சித்தார்த்துக்கு போன் செய்து பிரியா போன் செய்த விவரத்தை கூற..

உடனே கால் செய்தான். என்ன விஷயம் பிரியா! சொல்லு..  என சித் கூறினான். 

சித் அந்த சதீஷ்சை ஒழுங்கா இருக்க சொல்லுங்க! ஓவரா பண்ணிட்டு இருக்கான்! என அவள் கோபத்துடன் சொல்ல..

உங்களோட காதல் விளையாட்டை பத்தி   சொல்றதுக்கு தான் என்னை  போன் பண்ண சொன்னியா?  நான் எவ்வளவு பிசின்னு  உனக்கு தெரியுமா? என சித் கடுமையுடன் கேட்க. 

 அவள்  பதட்டத்துடன் “ஐயோ சித்து! நான் அதுக்காக போன் பண்ணல! இதன்யா யூனிஃபார்ம் மட்டும் தான் எடுத்துட்டு போய் இருக்கா! நாளைக்கு ஆலப்புழா வரதுக்கு அவகிட்ட கலர் டிரஸ் இல்லையாம்!  அதனாலதான் உங்களால ஏதாவது பண்ண முடியுமான்னு?  ஒரு அக்கறையில்…  உங்களுக்காக..  நீங்க ரெண்டு பேரும் சண்டைல இருக்கீங்களேன்னு!  ஒரு அக்கறையில் போன் பண்ணேன்! ஆனா எனக்கு லாஸ்ட்டா கெட்ட பேரு தான் வருது! சரி விடுங்க சிந்து!  இனிமே நான் உங்களுக்கு எந்த இன்பர்மேஷனும் தரமாட்டேன்!  என்று சொல்லிக்கொண்டே பிரியா போனை வைக்க போக.. 

ஹே பிரியா பிரியா  வைக்காதீங்க! என்ன?  என்ன சொல்றீங்க?  என்று கேட்க..

இல்லை நீங்க உங்க சதீஸ் P.A வச்சு டீல் பண்ணிக்கோங்க! இல்லன்னா இதயா கிட்ட நேரா கேட்டுக்கோங்க! நான் எதுக்கு அதிகப்பிரசிங் தனம் பண்ணிக்கிட்டு!  நான் உண்டு என் வேலை உண்டுன்னு , இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுறேன்!; என்று பிரியா சொல்ல.

பிரியா  ஓவரா பண்ணாத ஏற்கனவே நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்!  என்ன விஷயம்? டிரஸ் அவளுக்கு வேணுமா? என்று கேட்டான்.

ஆமா அவளுக்கு அவள் கிட்ட யூனிபார்ம் மட்டும் தான் இருக்கு!  அதனால நீங்க டிரஸ் ஏற்பாடு பண்ண முடியுமா?  அப்படின்னு தான் போன் பண்ணி கேட்டேன்!  என்று கூற..

இதை அவள் ஏன் என் கிட்ட போன் பண்ணி சொல்லல? உன் கிட்ட சொல்லி கேட்க சொன்னாலோ?  என சித்தார்த் கேட்க..

 “உங்க காதல் விளையாட்டில் எனக்கு எதுவும் தெரியாது பா!  நீங்க பேசினா பேசுங்க! ரெடி பண்ணி கொடுத்தா குடுங்க எனக்கென்ன?” என்று பிரிய சொல்லிவிட்டு போனை வைத்தாள்‌‌. 

சித்தார்த் உடனே கிலம்பியவன். அங்கிருக்கும்  கடைக்குச் செல்ல பிளான் செய்தான்.  இப்போ டிரஸ் வாங்கணுமே! எப்படி வாங்குவது? அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்!  என  யோசித்துக் கொண்டே வெளியே வந்தான்.

வெளியே அமர்ந்து அந்த இரவு நேரத்தை ரசித்து கொண்டிருந்த  நவ்யா அவன் யோசனையாக வருவதை  பார்த்து அருகில் சென்றாள்.

என சித்து இந்நேரத்துல வெளிய வந்து இருக்கீங்? உங்களுக்கு இப்போ தானே ஷூட் முடிஞ்சது? போய் ரெஸ்ட் எடுக்கலயா? தூங்கலையா என்று கேட்க..

ஒன்றும் இல்லை சும்மா என்று கூறினான். 

இல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கு! என்று அவள் கேட்க..

சபோகேட்டடா இருக்கு ஷாப்பிங் போறேன்! 

என்ன திடீர்னு என அவள் மீண்டும் கேட்க சித் அவளை முறைத்து பார்த்தான். 

சாரி if you don’t mind நானும் உங்க கூட வரலாமா? என அவள் கேட்க..

சித் அவளை பார்க்க..

எனக்கும்  ஷாப்பிங் போகனும்  போல தோணுது! பிளீஸ் நானும் வரவா!  ப்ளீஸ் சித்து என்று கேட்க..

நீ ரத்தினகுமார் கிட்ட கேட்டு வாங்க என்று சித்தார்த்  நகர .. 

நவ்யா சென்று ரத்தினகுமார் கிட்ட நான் சித்தார்த் கூட ஷாப்பிங் போறேன் போலாமா! என பர்மிஷன் கேட்க

சரி போயிட்டு வாங்க என்று கூறவும்..

அவள் சித்தார்த்துடன் கிளம்ப தயாரானாள்.

சித்தார்த் காவலாளிகளிடம் வண்டி எடுக்க  சொல்ல சித்து அவரு ஓகே சொல்லிட்டாரு! நானும் வரேன் என்று சொல்லி அவளும் ஏறிக்கொண்டாள்.

மேகா இதையெல்லாம் பார்த்து ஒரு பெருமூச்சை விட்டு தூங்க சென்று விட்டாள். 

அவர்கள் இருவரும் நேராக கடைத்தெரு பக்கம் சென்றார்கள். 

இந்த நேரத்துல அப்படி என்ன வாங்க போறீங்க? என்று  நவ்யா கேட்க..

ஏதோ வாங்க போறேன் என்று மொட்டையாக பதில் அளித்தான். .

சரி டென்ஷன் ஆகாதீங்க என்று வர ஒரு துணி கடைக்குள் சென்றார்கள். 

சித்தார்த்  மாஸ்க் போட்டுக்கொண்டு வந்திருந்தான்.  நவ்யாவை அவ்வளவாக யாருக்கும் தெரியாது!  அதனால அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!  இது லேடீஸ் ஐட்டம் போல இருக்கே!  யாருக்கு வாங்க வந்து இருக்கீங்க என்று கேட்க

உங்களுக்கு எதுக்கு? கூறினான். 

என்னப்பா எது சொன்னாலும் கோபமா பேசுறீங்க! என்ன பிரச்சனை என்று நவ்யா கேட்டாள்.

சித்தார்த் தன்னை சரி செய்து கொண்டு நான் கொஞ்சம் மோட் அவுட்ல  இருக்கேன்.  எனக்கு மைண்ட் சரியில்லை!  ப்ளீஸ் என்கிட்ட எதையும் கேட்காதீங்க! என்று கூறினான். 

சரி சரி சாரி என்று சொல்லிக்கொண்டே அவள் உடை பார்த்துக் கொண்டிருக்க…

சித்தார்த் அந்த இடத்தில் உள்ளே சென்றவன். இதன்யாவுக்காக  அங்கே இருந்த உடைகளைய பார்த்ததும் உடனே தேர்வு செய்தான்.இரண்டு உடைகளை வாங்கினான்.

அந்த நேரம் ரோஸ் போன் செய்ய..

என்ன சொல்லு! 

எதுக்கு இதன்யா மட்டும் IV போறா! என்னை மட்டும் வீட்ல தனியா விட்டு போயிட்டா! எல்லாம் உன்னால அண்ணா! எனக்கு போர் அடிக்குது! 

ரிஷிய வீட்டுக்கு கூப்பிட்டு பேசு இல்லன்னா அவன் கூட போய் ஸ்டே பண்ணிக்க! என சித் சாதாரணமாக சொல்ல. 

என்ன? என ரோஸ் சாக் ஆகினாள். 

என்ன சாக் ஆகுற? நீ வேஸ்ட் பெல்லோ! 

உன் பொண்டாட்டி தான் உனக்கு உசத்தி! என ரோஸ் சொல்ல.

ஆமா! இப்போ அதுக்கு என்ன என சித் கூறினான். நேராக பில் போடும் இடத்துக்கு வந்தான். 

அப்போ இதன்யா உன் கூட தான் இருக்காலோ! 

இல்ல ட்ரெஸ் வாங்க வந்திருக்கேன்! என சித் சொல்ல..

எனக்கு என்ன வாங்கிட்டு வருவ? என ரோஸ் கேட்டாள். 

உனக்கு எதுக்கு வாங்கி தரணும்! போனை வை ரோஸ்னி என சித் கட் செய்தான்.  

சித்தார்த்தின் உரையாடலை கேட்ட நவ்யாபுக்கு இந்த உடையை அவன் தங்கைக்காக வாங்குகிறான். என நினைத்து கொண்டாள்.

நவ்யா அந்த இடத்திற்கு வந்தால் எதுவும் பேசாமல் அவனைப் போலவே அவளுக்கு பிடித்த முறையில் வாங்கிக் கொண்டாள்.

உடையை எடுத்து வாங்கி பில் போட்டு வர நவ்யா அவளது உடைக்கு பில் போட்டாள்.

சார் இது ரெண்டையும் ஒரே பில் போடவா என்று கடைப்பணியாளர் கேட்க..

இல்ல நான் தனியா பே பண்றேன் என்று நவ்யா கூறி கொண்டே வர..

சித்தார்த் எதுவும் பேசாமல் நானே பே பண்ணிடறேன் என்று கூறினான்.

நீங்க எதுக்கு எனக்கு பே பண்ணனும்?  அதுதான் எரிஞ்சு விழுற மாதிரி பேசுறீங்களே?. என்று நவ்யா சொல்ல..

ஏமா இப்படி பண்ற நான் தான  மோட் அவுட் சொன்னேன்ல என்று சித்தார்த் கூறினான்.

சரி சாரி நானே வாங்கிக்கிறேன் பரவால்ல என்று நவ்யா சொல்ல..

ஓகே வாங்கிக்க என சித் வெளியே சென்றான். 

 நவ்யா அவன பார்த்து  எனக்கு சூடா டீ குடிக்கணும் போல இருக்கு இது மழை சீசனா இருக்கு! சூடா குடிக்கலாமா என்று கேட்டாள்.

டீயா? 

ஆமா பிளீஸ் வாங்க சித்து! என அழைக்க..

நீ உன்னோட ரூம் போய் ஆடர் பண்ணிக்க… என சித் முகத்தை திருப்பி கொண்டு செல்ல..

எனக்கு வேணும் பிளீஸ்!  

எனக்கு இங்க எல்லாம்…  லோக்கல்ல எந்த போட்டோ நான் சாப்பிட மாட்டேன் என்று சித்தார்த் கூற

நவ்யா முகம் சோகமாக கிளம்பினாள். 

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு சரி வா என்று வாங்கி கொடுத்தான். 

அவர்கள் இருவரும் ஷூட்டிங் வந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்ட ஒரு சிலர் யார் இது?  என்று ஆர்வமாக பார்த்தார்கள். 

சித்தார்த்தினுடைய  (a+b)2  படம் மொத்தத்தில் எல்லா இடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.  அதில் சித்தார்த் மற்றும் தாராவின் நடிப்பு உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சி பொங்க  யதார்த்தமாகவும் இருக்கும். 

 நவ்யா சித்தார்த்திடம் ஒரு கப்பை நீட்டி நீங்களும் குடிங்களேன் என்று சொல்ல எனக்கு வேண்டாம் என்று சித்தார்த் கூறினான். 

உடனே அவள் கப்பை வாங்கி எடுத்துச் செல்ல போக சரி ஓகே என்று வாங்கினான்.

அவன் மாஸ்கை எடுத்து குடிக்க செல்லும் நேரம் காலேஜிலிருந்து போன் வந்தது.

அவன் டீயை அருகில் வைத்து விட்டு போன் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். 

சார் நீங்க சொன்ன மாதிரி நாங்க வந்தாச்சு நாளைக்கு  விடிய காலைல மூணு மணிக்கு கிளம்ப போறோம்! கோயம்புத்தூரில் இருந்து ஆலப்புழாக்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம்.  அங்கு வந்ததும் நீங்க வந்து பார்க்கலாம் சார்!  நான் எல்லாத்தையுமே பெர்ஃபெக்க்ஷன் ஓட பண்ணி இருக்கேன்.  என்று அந்த ஐவியின் பொறுப்பாளர் கூறினார். 

ஓகே என்று பேசியவன்.  ஃபோனை வைக்க…அந்த நேரம் நவ்யா அவனுக்கு உண்டான டி யை எடுத்து வந்து நீட்டினாள்.

சித்தார் திரும்ப அந்த டீ கொட்டி விட்டது. அச்சோ அச்சோ சாரி  பிளீஸ் சொல்லவும் அது நவ்யாவின் மேல் பட என்னமா பண்றீங்க என்று கோபத்துடன் பார்த்தான்m 

சாரி சித்து நீங்க அங்கேயே வெச்சிட்டு வந்தீங்கன்னு எடுத்தேன்.

ஏம்மா இப்படி பண்றீங்க?  என்று அவனுடைய கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டிருக்க..

அங்கிருக்கும் ஒரு சிலர்  ஹே அது சித்து! சித்து! என அவர்களை படம் பிடிக்க ஆரம்பித்தார்கள். இது சித்தார்த் தான அப்போ சித்தார்த் படம் நடிக்க போறாரா?  என எல்லாரும் அவர்களுடைய போனில் படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் போட ஆரம்பித்தார்கள்.  அந்த இடத்தில் கூட்டம் கூட சட்டென சித்தார்த் மாஸ்க் அணிந்து கொண்டு அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டான்.

சாரி சித்து எல்லாம் என்னால தான!  உங்கள எல்லாரும் பார்த்து போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! என்று நவ்யா சொல்ல..

இட்ஸ் ஓகே என்று அனைவரும் கிளம்பினார்கள்.  சித்தார்த் கிளம்பும்போது காவலாளி AA1  அவரை அழைத்து இதை  கிட்ட கொண்டு போய் சேர்த்துடுங்க என்று கூறினான். 

ஓகே பாஸ் என்று அதை வாங்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து அப்படியே  அவர் செல்ல.

 அங்கிருக்கும் மற்ற காவலர்களுடன் சித்தார்த் தங்கும் இடத்துக்கு  ஷூட்டிங்  வந்து சேர்ந்தான். 

அந்த உடையை காவலாளி விரிவுரையாளர் கிட்ட கொடுக்க… அதிகாலையில் அவளுடைய அறையில் இரண்டு உடைகளும் கொடுக்க கதவை தட்டினார்.

மேம் என்று அவள் கதவை திறக்க

உனக்காக இந்த டிரஸ் பார்சல் வந்துச்சு! 

டிரஸ்ஸா?  நானா? எனக்கா! என்று அவரை அதிர்ச்சியாக பார்க்க..

 வாங்கிக்கோ மா! என சிணுங்கி கொண்டே அவளுடைய விரிவுரையாளர் கூற…

ஓகே மேம் என்று உடையை வாங்கியவள் யார் இதை கொடுத்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே போனை எடுக்க..

அப்பொழுது சித்தார்த்திடமிருந்து குருஞ்செய்தி இரவே வந்திருக்க அதை ஓபன் செய்தாள்.

டிரஸ் புடிச்சிருக்கா?  உனக்கு ஓகேவா?  என்று செய்தி இருக்க

இதன்யாவின் முகத்தில் புன்னகை அப்போ என்கிட்ட கேட்காமலேயே டிரஸ் எடுத்து கொடுத்தாச்சா என்று சந்தோஷத்துடன் உடைய எடுத்தவள் வேகமாக குளித்து முடி அனைவரையும் எழுப்பினாள்.

அவன் நார்மல் மெசேஜ் செய்திருந்தான். வலைத்தளங்களில் பரவிய செய்தி எதுவும் இதன்யாவுக்கு தெரியவில்லை.  அதிலிருந்து அவளுக்கு பிடித்த ஒரு உடையை போட்டுக்கொண்டு ஜம்முன்னு தயாராகி வெளியே வந்தாள்.

இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கே!  என் புத்தா என்று கொஞ்சியவள்!  நேராக ஆழப்புலாவிற்கு கிளம்பினாள்.

சீக்கிரம்  புத்தாவை பாக்கணும் போல இருக்கு!  என்று சொல்லிக் கொண்டு கிளம்ப..

அவர்கள் வெளியே வந்ததும் ஐவியின் பொறுப்பாளர் student’s எல்லாரும்  டிரஸ் bag கூடவே எடுத்துக்கோங்க!  அங்கிருந்து  போட் ஹவுஸ்ல  ஸ்டே பண்ணிட்டு நம்ம நேரா  பிளாக் தண்டர் போவோம்! அதை முடிச்சுட்டு இங்க ஹோட்டல் வந்துட்டு பேக் பண்ணிட்டு, உடனே காலேஜ் கிளம்பிடனும்! என கூறினார். 

 உடனே அவர்கள் இன்னொரு உடையையும் எடுத்து வைத்துக்கொள்ள  இதன்யா  ட்ராவல் bag மற்றும்  அதில்  எக்ஸ்ட்ராவாக உடை  எடுத்துக்கொண்டு ஆலப்புழாவிற்கு சித்தாரத்தை பார்க்க கிளம்பினாள்.

அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடைசியாக அவனது உதட்டை கடித்து விட்டு சென்றதும் கண்ணுக்குள் நிற்க…  இன்றோடு எட்டு நாள் ஆகிறது. இப்போ பேசவே கூடாது!  நேரா அவன போய் கொஞ்சனும் என்று ஆயிரம் கனவுகளுடன் வண்டியிலேயே தூக்கத்தை கண்டினியூ செய்தாள். 

அங்கிருந்து வான்மதி, சத்யா என அனைவரும் ஏ சித்து சார்! இது  சித்து சாரு!  இது யாரு ஒரு நடிகை கூட இருக்காரு போல! இல்லையே! பார்த்தால் அப்படி தெரியலையே! ஹான் இது அந்த லிட்டில் ஹார்ட் ப்ராடக்ட்ல ஆட்ல வந்தவங்க  தானே! இவங்க தான் அதோட ராப்பர்ல இருக்காங்க!

ஹே அது நம்ம சித்து சாரோடதா?

ஆமால்ல  நம்ம காலேஜ்ல கூட பங்க்ஷன் நடந்துச்சுல்ல!  அப்போ  இவங்க கூட  சித்தார்த்தார் படம் நடிக்கிறாரா?  இது தெரியாம போச்சே?  ஏதோ ரெண்டு பேரும் கடைக்கு போய் இருக்காங்க போல! என்று அங்கிருக்கும் அனைவரும் பேசிக்கொள்ள..

இதன்யாவிற்கு தூக்கம் தெளிந்து அவர்களுடைய குரல்கள் காதில் விழவும் சட்டென போனை எடுத்து வேகமாக பார்த்தாள்.

என்னடி ஆச்சு என்று  பூஜா இதன்யாவிடம் கேட்க.

ஒன்னும் இல்ல என்று போனை எடுத்து பார்க்க.

அதில் சித்தார்த் மற்றும் நவ்யா இருவரும் டீ குடித்தது அந்த டீ அவள் மேல் பட்டுவிட அதை துடைத்து விட்டது. இருவரும் கடைக்கு செல்வது  என அனைத்து போட்டோக்களும் பறவி கிடந்தது. 

இங்கே இதன்யாவின் காதுகளில் அப்போ சித்து மறுபடியும் கம்பேக் குடுக்க போறாரா?  என அவளுடைய தோழிகள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தது.

என் கூட பேச… எனக்கு மெஸேஜ் பண்ண! என்னோட போன் காலுக்கு ரிப்ளை பண்ண நேரம் இல்ல! ஆனால் ஆனால்! யார் யார் கூடவோ outing போக நேரம் இருக்கு என உதடு துடிக்க ஆரம்பித்தது.

கௌசல்யா அந்த படத்தை பார்த்து விட்டு இந்த நவ்யா தான் சித்தார்த்துக்கு pair! ரெண்டு பேரும் ஜோடியா செமையா இருக்கிறார்கள்?  அப்போ படம் மாஸா இருக்க போகுது!  என்ற அனைவரும் பேசிக்கொண்டார்கள். 

இதெல்லாம் கேட்க கேட்க இதன்யாவிற்கு இவ்வளவு நேரமும் இருந்த மனநிலை முற்றிலும் மாறி தன் மேல கோபம் மற்றும் சுய பட்சாபம் வர தொடங்கியது. 

அவளது உடையை பார்த்தாள். துளி கூட பிடிக்கவில்லை..  கோபம் கோபமாக வர அருகில் பூஜாவை சுரண்டி விட்டாள்.

என்ன டி தூக்கம் போயிடுச்சா? எழுந்துட்ட நைட் தூங்கலயா?

பூஜா அந்த சத்யா வோட டிரஸ் இங்கே?  என்று கேட்க..

பேக்ல இருக்கடி! என்னாச்சு? என்று பூஜா கேட்க..

 ஒன்னும் இல்ல இன்று முகத்தை திருப்பி கொண்டாள். பூஜாவிற்கு தெரிந்து விட்டது. 

இதன்யா ஏதோ கவலையில் இருக்கிறாள்.  அது நன்றாக தெரிய.. எதுவும் பேசவில்லை. ஆலப்புழா அனைவரும் சரியாக ஒரு ஏழு முப்பது மணி அளவில் வந்து இறங்கினார்கள். 

அங்கிருந்து காலை உணவை முடித்துக் கொண்டு நேராக போட் ஹவுஸ் சென்றார்கள்.  இந்த பயணம் ஒரு நாள்..  மாணவ மாணவிகள் அனைவருக்கும் உற்சாகமாக இருந்தது.  இரண்டு போட் ஹவுஸ் புக் செய்ய பட்டது. மொத்த மொத்த மாணவ மாணவிகள் கூட்டமும் பயணம் செய்யப்போகிறது.  ஒன்றில் மாணவர்கள் விரிவுரையாளர்கள், இன்னொன்றில் பெண் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் என கிளம்பினார்கள். 

இதன்யாவின் முகம் வந்ததிலிருந்து ஒன்றும் சரியே இல்லை..

என்னடி ஆச்சு என்று பூஜா கேட்டுக் கொண்டிருக்க ஒன்னும் இல்ல என்று சொன்னவள். 

சீக்கிரம் எனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே வர..

என்னடி பேசற இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கு! இந்த டிரஸ் மாத்திட்டு வேற எந்த டிரஸ் போட போற? என்று சொல்ல

இதன்யா தலையை பிடித்துக் கொண்டு நான் சத்யாவோட டிரஸ் போட்டுக்குவேன்!  என்று கூறினாள்.

சரி ஓகே அப்போ பிளாக் தண்டர்ல ரெண்டு டிரஸ் வேணுமே தண்ணில நனைஞ்சுட்டிங்கனா?  இன்னொரு டிரஸ் எப்படி போடுவ?  என்று கேட்க..

இப்போ நீ டிரஸ் தர மாட்டல்ல அப்ப நான் சாரி கட்டுகிறேன் என்று வேகமாக அவளுடைய துணி டிராவல் பேக் எடுத்துக்கொண்டு அந்த ஆலப்புழா போட் உள்ளே உள்ள அறைக்கு சென்று தோழிகளை அழைத்து கொண்டு புடவை கட்டி கொண்டு வெளியே வந்தாள். 

என்னாச்சு இதன்யா?  என வான் மதி கேட்க.. 

ஓகே students இங்கே ஷூட்டிங் ஸ்பாட் பார்க்க யார் யார் வரீங்க? பெர்மிஷன் கேட்டாச்சு! இங்கே அரை மணி நேரம் வண்டி நிற்கும் என விரிவுரையாளர் சொல்ல அனைவரும் உற்சாகமாக கிளம்ப.. 

இதன்யா மட்டும் அங்கேயே இருந்து கொண்டாள். எவ்வளவு சொல்லியும் வராமல் வீம்பு பிடிக்க.. அனைவரும் சென்ற பின் அவளை பார்க்க சித்தார்த் போட் ஹவுஸ் உள்ளே வந்தான். 

லிட்டில் ஹார்ட்! இதன்யா.!.. என சித் அழைத்து கொண்டே அவளின் உடையை பார்த்தவன். 

என்ன டி இது? 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும் ..

EPI 289

என்ன இதன் யா இப்போ எதுக்கு இத்தனை பிடிவாதம்? எல்லாரும் கலர் டிரஸ் நீ மட்டும் யூனிபார்ம் சாரீல இருக்க? என்னடி இது?  என பூஜா கேட்க..

அவள் எதுவும் பதில் சொல்லாமல் நின்றாள்.

பூஜா ஒன்றுமே புரியாமல் என்ன ஆச்சு விளக்கு ரொம்ப புதுசா நடந்துக்கிறாளே நல்லா தானே இருந்தா என்று நினைக்க என்னமோ!  என்று விட்டுவிட்டாள்.

ஓகே students இங்கே ஷூட்டிங் ஸ்பாட் பார்க்க யார் யார் வரீங்க? பெர்மிஷன் கேட்டாச்சு! அடுத்த அரை மணி நேரத்தில் நம்ம அங்கே ரீச் ஆகிடுவோம்! என விரிவுரையாளர் சொல்ல அனைவரும் உற்சாகமாக கிளம்ப.. இதன்யா மட்டும் புடவையில் இருக்க…

விரிவிறையாளர் அவளின் அருகில் வந்து என்னம்மா ஆச்சு? இந்த டிரஸ்ல இருக்க? என்று கேட்க..

ஒன்னும் இல்ல மேம்! நாளைக்கு பிளாக் தண்டர் போறப்ப டிரஸ் இல்ல! அதனாலதான் இதை போட்டு இருக்கேன்!

 விரிவுரையாளர் அவளை மேலும் ,கீழும் பார்த்துவிட்டு“ அதுதான் உனக்கு ரெண்டு ட்ரெஸ் பார்சல் வந்ததே!”என்று அவர் கேட்க..

அது வந்து எனக்கு பத்தல மேம்!  என்று சொன்னவள். “எனக்கு ரொம்ப தலை வலிக்கிற மாதிரி இருக்கு! நான் இங்கேயே இருக்கேன்! நீங்க போயிட்டு வாங்க! ”என்று கூறினாள். 

அவளிடம் விரிவுரையாளருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஒரு பெருமூச்சியை விட்டு“ சரி காலையில பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுங்க வரும்போது யாருமே சரியா சாப்பிடல!” என்று அதற்குண்டான வேலையில் ஈடுபட்டார்கள்.

அந்த ஐவியின் பொறுப்பாளர் சார் நீங்க சொன்ன மாதிரியே நாங்க இங்க ஆலப்புழா சூட்டிங் ஸ்பாட் கிட்ட வந்துட்டோம் என்று சித்தார்த்துக்கு கூறினார்.

“வாங்க!” என சித்தார்த் அவளை பார்ப்பதற்காக காத்திருந்தான். 

ரத்னகுமார் என்ன முகத்துல  இன்னிக்கு தேஜஸ் அதிகமா இருக்கு இங்கே இருக்க மொத்த யூநிட்லயும் உங்க முகம் தான்  பிரிஸ்கா இருக்கு!  கண்ணெல்லாம் ரொம்ப ஜொலிக்குது என்று கூறினார். 

ச்ச ரத்னா வாய மூடுங்க என்று சித்தார்த் கூறினான்.

இப்போ என்னப்பா நான் தப்பா சொல்லிட்டேன்!  என்ன விசயம்? லிட்டில் ஹார்ட் விஜயமா?

அது  என்னோட காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் வர போறாங்க! சூட்டிங் ஸ்பாட்ட பாக்குறதுக்கு என்று சித்தார்த் கூறினான். 

சரி என ரத்னா மீண்டும் திரும்பி  நீங்க ரெண்டு பேரும் நேற்று ஷாப்பிங் போன பிச்சர்ஸ் எல்லாம் சோசியல் மீடியாவுல பரவிடுச்சு! நீங்க படம் பண்ற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு! என்று சொல்ல..

சித் சிரித்துக்கொண்டே ஃபர்கிவ் மி என்று கூறினான். 

இதுக்கெல்லாம் யாராவது forgive கேப்பாங்களா? விடுங்..

இதுவும் நமக்கு படத்துக்கு ப்ரமோஷன் தான என்று ரத்னா கூறினார்..

நான்லாம் அவ்ளோ பெரிய ஆள் இல்லையே! நான் படம் நடிச்சா? அதை எல்லாரும் கவனிப்பாங்களா என்ன? என்று சித்தார்த் கேட்டான்.

ரத்னா தீவிரமான முகத்துடன் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீங்க! உங்களோட திறமை உங்களுக்கு தெரியல! May be  உங்க லிட்டில் ஹாட்டுக்கு தெரிஞ்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல என்று ரத்னா சிரிக்க..

எப்போ பாரு உங்களுக்கு இதுதான் வேலை என்று கடுகடுப்புடன் கூறியவன் திரும்பிக் கொண்டான்.

ஓ! இது ஆண்களுக்கு உண்டான வெட்கமா? ஆண்கள் வெட்கப்பட்டா இப்படித்தான் இருக்குமோ! என்று ரத்னா மேலும் மேலும் சித்தார்த்தை கிண்டலடித்துக் கொண்டே இருக்க…

சித்தார்த் புருவத்தை சுருக்கி கொண்டு உங்களுக்கு வெக்கம் மானம், சூடு சொரணை இருக்கா அப்படின்னு உங்க மனைவி கிட்ட கேட்டா தெரியும். என்று சித்தார்த் கூறினான். 

என்ன சொல்றீங்க என்று அவர் கேட்க

என்னோட வெட்கத்தை பத்தி நீங்க பேசுறீங்க தானே! உங்களுக்கும் வெட்கம் வரும்னு எனக்கு எப்படி தெரியும்? அவங்க தானே கீ… இல்ல இல்ல அவங்க லாக்கர் நீங்க தான் கீ  என சித் கூறினான். 

அடப்பாவி என்று ரத்னா சொல்ல..

அப்படித்தான் எனக்கும்  இருக்கு! கொஞ்சம் வாயை மூடுங்க ரத்னா என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது..

அந்த இடத்துக்கு மாணவ மாணவிகள் வந்து சேர்ந்தார்கள்.  அனைவரும் சந்தோஷம் மற்றும் ஆர்வத்துடன் அந்த இடத்திற்கு வந்தார்கள். 

“ஹே சித்து சார்! ஹே சித்து சாரு! எத்தனை தடவை காலேஜ்ல பார்த்திருக்கோம். இப்போ இன்னும் அழகா இருக்காரு!; அது யாரு மேகா?  இவங்க தான் ரிஷி சாரோட தங்கச்சின்னு சொல்லிக்கிறாங்க!  ஆமா ரிஷி சார் தான்  சித்தார்த் சாரோட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போறாங்களாமா?  இவங்க நவ்யா!  அதுதான் நேற்று Instagramல வந்த படத்துல பார்த்தோமே! ”அவங்க  தான் இது என்று ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு அந்த இடத்தில் பேசி கொண்டு… 

அவர்கள் அனைவரும் சித்தார்த்தின் அருகில் வந்ததும்,  அனைவரும் விஷ் செய்தார்கள் இதை பார்த்து ரத்னகுமார் சிரிக்க..

என்ன சிரிப்பு நான் டாக்டர் சித்தார்த் கிருஷ்ணா புரியுதா!  பிசிக்ஸ் கிராஜுவேட் என்று கூறினான். 

“புரியுது நான் எதுவுமே சொல்லல!  நீங்க இப்போ ஷூட்டிங் பிரேக்  போங்க!” என சொன்னவர் மொத்த யூனிட்டையும் பார்த்து “ஹான் எல்லாரும் பிரேக் எடுத்துக்கோங்க!” என்று சொல்லிவிட்டு ரத்தினகுமார்  அடுத்த ஷாட் பற்றி ஆங்கிள் பற்றி யோசித்து கொண்டே  அமர்ந்தார்.

சித்தார்த் சுற்றிலும் இதன்யாவை தேடினான். அவளை எங்குமே காணவில்லை.  உடனே பூஜாவை பார்க்க..

பூஜா தயங்கிக் கொண்டே அவ இல்ல என்று கண்களால் சைகை செய்தாள்.

எங்கே இருக்கா?  என்று சித் கேட்க..

பூஜா ஜாடையாக வான்மதியிடம் ஹே இதன்யா போட் ஹவுஸ்ல இருக்கால்ல! அவள போய் கூப்பிடலாமா? என்று வான்மதி  கேட்க..

அதுதான் இதன்யா வரலைன்னு சொல்லிட்டாலே என்று சத்யா கூறினாள். 

சரி என்று பூஜா சமாளித்தாள். 

அதை பார்த்த சித்தார்த் நேராக போட் ஹவுஸ் சென்றான். 

இதன்யா ஒரு இடத்தில் நின்று அந்த தண்ணீரை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். 

இங்க என்ன பண்ற?  ஆமா என்னடி டிரஸ் இது?  உனக்காக நான் வெயிட் பண்றேன் நீ வராமல் இங்கே என்ன பண்ற என்று அவன் குரல் கேட்டது. 

அந்த குரலை கேட்ட அடுத்த நொடி சப்த நாடியும் முறுக்கிக் கொள்ள, அத்தனை கோபம், ஆத்திரம், பொறாமை, என எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டது. 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..  

லிட்டில் ஹார்ட் என்று சித்தார்த் அழைத்தான் .

சொல்லுங்க சார் குட் ஆப்டர்நூன் சார்! என்று திரும்பி விஷ் செய்தாள்.

நான் உன்ன ஏன் டிரஸ் மாத்தலான்னு கேட்டேன்! என்ன டிரஸ் இது? என்று கேட்டான். 

இது யூனிபார்ம் அவள் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல போக.

என்னடி ஆச்சு?  நீ வருவன்னு  நான் வெயிட் பண்ணேன்!  இப்போ என்ன ஆச்சு முகமே சரியில்ல?  இன்னும் கோபமா? என்று கேட்டான். 

எனக்கு எந்த கோபமும் இல்ல சார்! என்று அவள் நகர்ந்து செல்ல கையை பிடித்தான்.

ப்ளீஸ் விடுங்க! என்று உதடுகள் அதிர பேசினாள். 

ஹே என்ன டி என்னாச்சு என்று சித்தார்த் மீண்டும் நெருங்க..

விடுங்கன்னு சொல்றேன்ல! என   கண்ணாடியை மூக்கு தள்ளிக்கொண்டு கையை தட்டிவிட்ட..

இவ்வளவு கோபமா? நான் விடாமல் மெசேஜ் பண்றேன் மேடம் தான் போன் எடுத்து அதை பார்க்கிறது கூட இல்ல! நான் எதுவுமே பண்ணலையே?  என்று சொல்ல..

எதுவும் பண்ண வேண்டாம்! என்று சிரிப்புடன் வேறு இடத்தில் செல்ல..

சித்தார்த் அவளின் அருகில் வந்து கையை பிடித்து இழுத்தவன். இது வேலைக்கு ஆகாது என  கட்டிக் கொண்டான். ஹே  நான் ரொம்ப மிஸ் பண்றேன்!;

நான் உங்கள மிஸ் பண்ணவே இல்ல! இன்பாக்ட் சொல்லப்போனால், இந்த எட்டு நாளும் நான் ரொம்ப நிம்மதியா இருந்தேன்! இந்த ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இன்னும் நான் சுதந்திரமா இருக்க போறேன்! என்று சம்பந்தமே இல்லாமல் பேசினாள்.

ஹே என்று அவளின் முகத்தை நிமிர்த்தி பார்க்க.

ப்ளீஸ் தள்ளி போங்க என்று தட்டி விட்டாள்.

சித்தார்த்துக்கு பொறுமை எல்லையை கடக்க வேகமாக அவளின் அருகில் வந்தவன்.  அவளை கட்டி அணைத்து உதட்டோடு உதடு சேர்ந்து முத்தமிட ஆரம்பித்தான். 

பிடிக்கவில்லை என்று தட்டி விட அவளுக்கு மனதில்லை கைகளை இறுக்கி மூடிக்கொண்டு கண்களில் நீருடன் அப்படியே இருந்தாள்.

இப்போ என்ன ஆச்சு? எப்போவும் கொடுக்கும் முத்தம் தான!  எதுக்கு டிஃபரண்டா பீஹேவ் பண்ணிட்டு இருக்க? நான் மெசேஜ் பண்ணாம நான் ரொம்ப பிசியா இருந்தேன்னு அதனால இப்படி நடந்துக்கொள்கிறாயா? நான் தான் அதுக்கு சாரி கேட்டுட்டேனே! என்று சித்தார்த் கூற.. 

அப்படி எல்லாம் எதுவும் இல்ல உங்க வேலையை நீங்க பாருங்க ப்ளீஸ் என்னை விட்டு தள்ளி போறீங்களா! என்று கூறினாள். 

நான் எதுக்கு தள்ளி போகணும்! என்று ரத்தினகுமார் சொன்னத நினைவில் இருக்க அவன் மீண்டும் நெருங்கி நெருங்கி வந்து அவளைக் கட்டிக் முத்தமிட்டான். 

இதன்யா முகத்தை திருப்பிக் கொள்ள மோவாயில் பிடித்து உதட்டோடு உதடு சேர்த்து மேல் உதடு கீழ் உதடு நா என மொத்தமாக சுவைத்தவன்.  அவளின் கழுத்தில் வாசம் எடுத்து இதழை அழுத்தி பிடித்து தன்னுடன் இழுத்தான்.  “உன் மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்க?  நான் உன்ன பாக்காம ஏங்கி தவிச்சிட்டு இருக்கேன்!  அசால்டா  சந்தோஷமா இருந்தேன்! இனி  இருப்பேன்னு சொல்ற?  அப்போ என்ன பார்க்காம பிரிஞ்சி உனக்கு  கஷ்டமாவே இல்லையா?  சரி  உன் மனசுல என்ன இருந்தாலும், அதை பத்தி எனக்கு கவலை இல்லை!  நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்!” என்று கழுத்தில் கடித்தான்.

இதன்யா அமைதியாக இருக்க அந்த நேரம்  நவ்யாவிடம் இருந்து போன் வந்தது திரும்பத் திரும்ப வர போனை எடுத்து பார்த்தான். 

அதில் நவ்யா என்று இருக்க..

இதன்யாவின் உதட்டில் புன்னகை.. இப்போ என்ன கேட்டீங்க கஷ்டமா இருக்கா அப்படி தானே கேட்டீங்க! இப்போ உங்களை பார்த்ததும் என  கூறியவள் அவனையும் போனையும் மாறி மாறி பார்த்து கொண்டே ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அவன் அவனிடமிருந்து தள்ளி சென்று விட்டாள். 

 என்ன சந்தோஷம்? இப்போ எதுக்கு இப்படி சொன்ன? ஹே நீ ஏதோ தப்பா நெனச்சிட்டு இருக்க! 

நான் இப்போதான் ரொம்ப கரெக்டா போயிட்டு இருக்கேன்.  ப்ளீஸ் உங்க வேலைய போய் நீங்க கண்டினியூ பண்ணுங்க. என்று கூறினாள்.

அப்போ அந்த போட்டோவை எல்லாம் நீ பாத்துட்ட அத வச்சு என்னை சந்தேகப்படுற! சரிதானா? என்று சொல்ல.

நான் எந்த போட்டோவையும் பார்க்கல! உங்க வேலைய நீங்க பாருங்க! என்று வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். 

சித்தார்த் மீண்டும் செல்ல போக நவ்யா வேறு தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தாள். 

ஹலோ என்ன என்று கடுமையான பதிலுடன் கேட்டான். 

சித்து  லன்ச்  ரெடி எங்கே இருக்கீங்க? என கேட்டாள்.

நான் கேட்டேனா? என சித் கோபத்துடன் கேட்டான். 

இல்ல சித்து எப்போவும் நம்ம ஒன்றாக தானே சாப்பிடுவோம்! என அவள் சொல்ல..

ஒண்ணாவா? நான் இப்போ எங்கே இருந்தால் உங்களுக்கு என்ன? எனக்கு எதுக்கு போன் பண்ணி கேட்கிறீங்க? என கண்டபடி திட்டி போனை கட் செய்தான். 

  சித் இதன்யாவை தேடி போக அதற்குள் அவள் போட் ஹவுசில் இருந்து சூட்டிங் ஸ்பாட் பக்கம் சென்று விட்டாள். 

சித் கடுப்புடன் அவளை தேடி கொண்டே சென்றான். ஐயோ இவள வச்சுக்கிட்டு நான் என்னதான் பண்ணட்டும்?  இப்படி என்ன டார்ச்சர் பண்றாளே?  இனிமே ஃபுல் அண்ட் ஃபுல் ஆக்சன்ல தான் ட்ராவல் பண்ணனும்! இவளை சும்மா இப்படியே வச்சுக்கிட்டு இருந்தா,  இவ கண்டதை யோசிச்சு, இவளோட மூளை அமைதியாக இருக்காது. ஒண்ணுமே இல்லாத மண்டையை வைத்துக்கொண்டு, இன்னும் மோசமாக போக கூட வாய்ப்பு இருக்கு! என  நினைத்தவன். ஒரு நிமிடம் நொந்து போனான். 

இன்னும் 11  நாள் இருக்கே! இந்த ஷூட்டிங் எப்போடா முடியும் என்று பற்களை கடித்துக் கொண்டே அவளின் பின்னால் சென்றான்.

இதன்யா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க.. 

அங்கிருந்து சரியாக அரை மணி நேரம் அதன் பின் அனைவரும் போட் ஹவ்ஸ்   கிளம்பியது.

சித்தார்த் அவளை வெரித்து பார்த்தான்.  மிகவும் கோபமாக வந்தது. இப்பொழுது தான் அவன் மனதில்  நான் அந்த நவ்யாவ கூட்டிட்டு போயிருக்கவே கூடாது! அவளால தான்!  அவ எதுக்கு என்னை நினைக்கணும்? சப்போஸ் நாம ஏதாவது சொல்லி, நல்லா இருந்த மனசை லவ் என்ற வார்த்தை கொண்டு டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆகிடும். ஆனால் இத இவ வேற கண்டதை நினைச்சுட்டு இருக்கா! 

அதன் பின் சூட்டிங் ஆரம்பித்தது. அப்படியே அந்த நாளும் சென்றுவிட..  இதன்யா அதே புடவையில் இரவையும் கழித்தாள்.  குளித்து முடித்து நேராக பிளாக் தண்டர் கிளம்பினார்கள். 

இதன்யா சித்தார்த் வாங்கி கொடுத்த உடனே போடவே இல்லை.  அவளுக்கு பிடிக்கவும் இல்லை அதை அவனது முகத்திலேயே தூக்கி எறிய வேண்டும்! என தோன்றியது.  எவ்வளவு தைரியம் இருந்திருந்தால்?  என்று மூச்சு முட்டியது பிளாக் தண்டரில் எந்த கேமும் விளையாடாமல் ஓரமாக போய் அமர்ந்து கொண்டாள். 

ஏண்டா இந்த ஐவி வந்தோம் என்று தோன்றியது.  அதன் பின் நேராக ஹோட்டல் வந்தவர்கள். ஹோட்டலில் இருந்து அடுத்த நாள் கால் அந்த நைட்டே அவர்கள் கிளம்ப வேண்டும் சித்தார்த்தால் எவ்வளவு முயன்றும் அவனால் கிளம்பி சென்று இதன்யாவை பார்க்க முடியவில்லை. 

என்னடா இப்படி ஆகிப்போச்சே ஐயோ இன்று சித்தார்த் வருந்தி கொண்டிருக்க…

அடுத்த நாள் அந்த 11 நாட்களும் அவள் வித்தியாசமாக நடந்து கொண்டாள். மூன்று நாட்கள் தான் மிஞ்சி மிஞ்சி இருக்க முடிந்தது. அதற்கு மேல் ஒரு நாள் கூட அவளால் அந்த வீட்டில் அவனுடைய… இல்லை அவர்களுடைய அறையில் இருக்க முடிய வில்லை.

 அறையில் எங்கு பார்த்தாலும் அவனது ஞாபகமாக இருக்…  நவ்யா அவனது கையைப் பிடித்துக் கொண்டு நிற்பதும், அவளின் காதல் பார்வையும் தான் இதன்யாவின் கண்களையும் இதயத்தையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது. அவ தப்பான பார்வை தான் பார்க்கிறா? எனக்கு தெரிது! ஆனால் நான் சொன்னா என்னை தப்புன்னு சொல்றாங்களே?  நமக்கு இது வேண்டாம்! நமக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்! என்று கண்டபடி பேச ஆரம்பித்தாள்.

இங்கேயே இருந்தோம்னா நம்ம பைத்தியம் புடிச்சிடும்.என  அங்கும் இங்கும் நடந்தாள்‌. தினமும் அழுகை தான் வந்தது.  அவர்கள் படுக்கும் அந்த மெத்தையில் கூட படுக்கவில்லை,  சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள். சட்டென உடனே இங்கிருந்து சென்றாலும் ரோஷினி பவானி என்று அனைவருக்கும் சந்தேகம் வரும்.  அதனால் என்ன செய்வது? என கையில் இருந்த மோதிரத்தை பார்த்தாள். “என்னை கல்யாணம் பண்ணிட்டு  வேற ஒரு பொண்ணு கூட கைய புடிச்சு நிக்கிரீக? உங்க அப்பா மாதிரி வெளில இன்னொரு பொண்ணு கூட.. ஒரு பொண்ணா! இது மூணாவது! எல்லா சிருக்கிகளும் உங்களை தான் பார்க்கிறாங்க! ஆனால் நான் சொன்னா? என்னை என்னை! என வெம்பி கொண்டே இப்போதைக்கு எனக்கு இங்கே இருந்து போகனும்! உன்னை மறக்கனும்! என்று யோசித்து  கொண்டிருந்தவளுக்கு நிதன்யாவின் வளைகாப்பு ஞாபகம் வந்தது. 

இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது! நம்ம உடனே கிளம்பிடனும்! என்று நினைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு போன் செய்தாள்.

சொல்லுடி சின்னு!  என்று நிதன்யா உற்சாகத்துடன் பேச.. 

நான் வீட்டுக்கு வரேன் என்று கூறினாள். 

வளைகாப்புக்கு இன்னும் ஆறு நாள் இருக்கு,  என்று சொல்ல..

இதன்யா நிதன்யாவிடம் நீ வந்ததும் கட்டு சோறு முடிஞ்சு உன்னை மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்களே உன் கூட என்னால இருக்க முடியாது.. என சொல்ல..

“ஹே லூசு நான் இப்போ மாமா கூட இருக்கேன் வலைபாப்பு முடிச்சு! என்னை நம்ம வீட்ல கொண்டு வந்து விடுவாங்க டி!” என நிதன்யா சொல்ல.. 

ஹான் தெரியும் என உளரளை சரி செய்து கொண்டு சரி எனக்கு அம்மா நினைப்பா இருக்கு வரேன்! என்றாள். 

இந்நேரத்துல வர வேண்டாம்! நாளைக்கு காலையில வா! என்று நிதன்யா சொல்ல.. 

சரி என்று போனை வைத்தாள். அந்த இரவை எப்படி கடப்போம் என்று அவளுக்கே தெரியவில்லை. 

நேராக அடுத்த நாள் கல்லூரி சென்றாள்.  சித்தார்த் எவ்வளவோ அவளிடம் பேச வேண்டும் என போன் செய்ய,  இதன்யா அவனுடைய போனை எடுக்கவே இல்லை கல்லூரியில் தன் கூட படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வளைகாபூக்கு வர வேண்டும் என கூறியவள் பிரியாவை பார்க்க சென்றாள்.

“என்ன டி குண்டு”

“நான் ஊருக்கு போறேன்! அக்காவுக்கு வளைகாப்பு நீ வந்திடு!”

என்ன நானா? என்னை விட மாட்டாங்களே! என பிரியா சொல்ல..

சரி அப்போ இனி என் கிட்ட பேசாத! என வேக நடையிட்டாள். 

ஹே ஹே இதயா! என பிரியா செல்ல..

இதன்யா கடுப்புடன் நான் உங்க வீட்டுக்கு வந்து ஸ்டே பண்ணனும்! நீ கூப்பிடுவ வரனும் ஆனால் இது வரைக்கும் நீ ஒரு தடவை கூட எங்க வீட்டுக்கு வந்ததே இல்ல! என சொன்னவள் கோபமாக இனி உன் கிட்ட பேச ஒன்னும் இல்ல ஹே வினோ, பூர்ணா நீங்களும் இவளை போல தானா இல்ல வருவீங்கலா? என கேட்டாள். .

ஆமா வீடு இங்கே தான இருக்கு வர டிரை பண்றோம் குண்டு என இருவரும் சொல்ல…

ஈரோடு! வந்துடுங்க! என அவள் செல்ல..

ஏன் டி இந்த ஊரில் ரோடு எல்லாம் நல்லா இல்லையா! வளைகாப்பு போய் ஈரோட்டில் வச்சிருக்காங்க! என பூர்ணா சொல்ல..

இதன்யா மூவரையும் முறைத்து விட்டு கிளம்பினாள். 

சித்தார்த்  போன் செய்தால் வேண்டும் என்றே கட் செய்கிறாள். சில வேளை அதுவும் செய்வதில்லை. அவனுடைய அழைப்புகளையும் அவனையும் தவிர்க்க ஆரம்பித்தாள்‌. 

இப்போ என்ன தான் நினைச்சிட்டு இருக்கா? இரு டி உன்னை வந்து பேசிக்கிறேன்! என நினைத்தான். ஆனால் சித்தார்த் கடுமையாக சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தான் யாரும் அவனிடம் பேசவே பயப்பட்டார்கள்.  அந்த நாட்கள் மிகவும் கடுமையாக செல்ல..

இதன்யா வீட்டில் இருந்து கிளம்பினாள்.  முதலில் பவானிக்கு போன் செய்து கிளம்புகிறேன் என்று சொல்ல

சரி பத்திரமா போயிட்டு வாம்மா என்று கூறினார். 

அவள் பெட்டிகளுடன் வெளியே வர எங்க கிளம்பிட்ட என்று ரோஷினி கேட்டாள்.

எங்க அக்காவுக்கு வளைகாப்பு அதனால நான் ஊருக்கு போறேன்! 

 அப்படியா சரி நானும் வரேன் என்று கூற..

நீங்களா? என அதிர்ச்சி ஆகி கேட்டவள். நீங்களா நீங்க எப்டி? நீங்க வர வேண்டாம் என்று  கூற..

ஏன் உன் கூட வரக்கூடாது ?? நான் வருவேன்!  என்று ரோஷினி சொல்ல..

ஏன் ரோஸ் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?  அங்கெல்லாம் உங்களால வர முடியாது!  உங்களுக்கு நிறைய பாதுகாப்பு தேவை! அங்கே எங்க வீடு வசதியா இருக்காது! இந்த மாதிரி ac எல்லாம் இல்லை, சிக்னல் கூட கிடைக்காது. என்று இதன்யா சொல்ல.. 

அதெல்லாம் நான் வருவேன்! என ரோஸ் வுடா பிடியாக நின்றாள்..

“சரி அத்தை கிட்ட கேளுங்க! அவங்க சரின்னு சொன்னா, நீங்க வரலாம்! என்று இதன்யா மனதில்  பவானி விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இதை சொல்ல ரோஷினி உடனே தன் அம்மாவுக்கு போன் செய்தாள். 

“நான் இப்பவே அம்மா கிட்ட பேசிட்டு, நான் உன் கூட வரேன்! என்னால காலேஜ் எல்லாம் போக முடியாது! எனக்கு ரொம்ப முடியல! என்று ரோஷினி சொல்ல..

அப்போ வீட்டிலேயே இருங்க என்று இதன்யா கூறினாள். 

வீட்டில் யாருமே இல்ல!  உன் புருஷனும் ஷூட்டிங் போய்ட்டான்! தாரா இங்க வரவே மாட்டேன்றா! ரம்யா ஆளையே காணோம்!  நீயும் இப்ப ஊருக்கு போறn நான் மட்டும் எப்படி இவ்ளோ பெரிய வீட்டுல தனியா இருக்கிறது? சொல்லு..  அதனால நானும் உன் கூட வருவேன். 

நீங்க சொல்றதுனால நான் உங்கள கூட்டிட்டு போறன் ரோஷினி! ஆனா நீங்க அத்தை கிட்ட கேளுங்க! அத்தை சரின்னு சொன்னா தான்! உங்களை கூட்டிட்டு போவேன்! இப்போ ஸ்பீக்கர்ல போடுங்க! என்று இதன்யா கூறினாள். 

ரோஷினி சிரித்துக்கொண்டே போனை ஸ்பீக்கரில் போட்டு அம்மா என்று அழைக்க

சொல்லு ரோஷினி! அம்மா நான் இதன்யா கூட அவங்க அக்கா வளைகாப்புக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு இருந்துட்டு வரட்டுமா?  என்று ரோஷினி கேட்டாள்.

இதன்யா ஆர்வத்துடன் வேண்டாம்!.. ஐ கண்டிப்பா வேண்டாம்னு தான் சொல்லுவாங்க! அப்பதான் நமக்கு நிம்மதி! என்று பார்த்துக் கொண்டிருக்க..

சரி போயிட்டு வா எதுவும் கிப்ட் வாங்கிட்டு போ என்று இதன்யா நினைத்ததற்கு மாறாக கூறினார். 

இப்ப என்ன பண்ணுவ?  அம்மாவே சரின்னு சொல்லிட்டாங்க! வெயிட் பண்ணு! நான் வரேன்! என்று சிரித்துக் கொண்டே ரோஷினி உள்ளே சென்றவள்.  அவளுக்கு தேவையான உடையை ஒரு ட்ராலியில் போட்டு எடுத்து வந்தாள்.

இதன்யா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவள். அவளது பையை பார்த்துவிட்டு என்னது இது? என்று முகத்தை அஷ்ட கோணலாக வளைத்தாள். 

இதுதான் என்னுடைய டிரஸ்! நம்ம ஒரு 10 டேஸ் அவங்க ஸ்டே பண்ணுவோமா?  என்று ரோஷினி ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க.. 

இல்ல வளைகாப்பு முடிஞ்சு நம்ம உடனே வந்துடுவோம்! இத்தனை டிரஸ் எதுக்கு என்று கேட்க..

பரவாயில்லை என்று அவர்கள் கிளம்ப..

பஸ்ல எப்படி இதையெல்லாம் எடுத்துட்டு போக முடியும்?  எதுக்கு ரோஷினி நீங்க தேவையில்லாமல் வரீங்க? என இதன்யா கேட்க.. ..

என்ன பஸ்ஸா? என்று ரோஷினி அவளைப் பார்க்க..

ஆமா என்று யோசித்தவள்! அய்யோ நம்ம கூட ரோஸ் வர போறாங்க! அப்போ பாதுகாப்பு வேணும்ல! இப்போ என்ன பண்றது என்று யோசித்துக் கொண்டிருக்க.. 

அந்த நேரம் கார் தயாராக இருந்தது. ஹே தனு வா  ஜாலியா போலாம்! என்று ரோஷினி சொல்ல.. 

எதுல போக போறோம் என்று கேட்டாள்.

காரில் போக போறோம் என  ஏறி அமர்ந்து  நீ வரலையா என்று ரோஷினி அவளை பார்க்க..

இதன்யா சிணுங்கி கொண்டே காரில் ஏறினாள்.

இது எங்க போய் முடிய போகுதோ!  என்று அவள் நினைக்க.   கண்டிப்பாக  இதோட முடிவு சித்தார்த்  தான் அது நாளைக்கு தெரியும்! 

So சம்பவம் தான்! ஹான்.. 

ஒரு ஹைவே பைபாஸில் சென்றதால் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் ஈரோடு வந்து சேர்ந்தார்கள். 

ரோஷினி போனை எடுத்து இங்கிருக்கும் பிரபல உணவுகள் என்னென்ன என்று பார்த்தாள்.

ஹேய் இதுல கொங்கு ரெஸ்டாரன்ட் நல்ல ரேட்டிங்கில் இருக்கு!  அங்க பிரியாணி நல்லா இருக்குமா?  என்று ரோஷினி கேட்டாள்.

நான் அங்கெல்லாம் சாப்பிட்டதில்லையே! என்று இதன்யா கூறினாள். 

போடி நீ எப்பவும் இப்படித்தான் உனக்கு என்ன தான் தெரியுது? என நேராக ஹோட்டலுக்கு வண்டிய  விடுங்க, அதோட என்விரான்மென்ட் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வாங்கிடலாம்! என்று சென்றார்கள்.  நன்றாக சுத்தமாக தான் இருந்தது. 

சரி இதன்யா உங்க அக்காவுக்கு என்ன பிரியாணி பிடிக்கும்? 

 எங்க அக்கா அதெல்லாம் சாப்பிட மாட்டா என்று இதன்யா வேண்டுமென்று பொய் கூற..

சரி அப்போ சிக்கன் மட்டன் ரெண்டுமே வாங்கிடலாம்! அதுல கண்டிப்பா உங்க அக்கா எதாவது சாப்பிடுவா! என்று ரோஷினி க அந்த ஹோட்டலில் இருக்கும் பிரபலமான அனைத்து உணவுகளையும் கூடவே புரோட்டா குழம்பு என அனைத்தையும் வாங்க..

இத எதுக்கு ரோஷினி இதெல்லாம் வாங்குறீங்க ஐயோ இதுக்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகும் என்று அவள் பயத்துடன் இருக்க..

நீ கம்முனு இரு உனக்கு ஒன்னும் தெரியாது!  என்று அனைத்தையும் வாங்கினாள். 

 எங்க அக்கா அங்க இருக்க மாட்டாள். எங்க மாமா வீட்ல இருப்பார் ரோஷினி  பணத்த வேஸ்ட் பண்றீங்க ?

பரவால்ல உங்க அம்மா சாப்பிடட்டும் உங்க அண்ணா என்று கேட்க..

அண்ணா நாளைக்கு தான் வருவான்

அப்படியா உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற ரிலேஷன் எல்லாருக்கும் தரலாம்! நம்மளும் சாப்பிடலாம் பாரு நம்மளோட கார்ட்ஸ் டிரைவர் எல்லாரும் இருக்காங்கல்ல! என்று ரோஷினி கூற..

சரியாக அந்த நேரம்  ரிஷி அழைத்தான்.  ஹலோ சொல்லுங்க ரிஷி! 

இப்போ எங்க இருக்கீங்க மேடம்? ரொம்ப பிசியா இருக்கீங்க போல? காலேஜ் இன்னைக்கு லீவு போல!  எதுக்குடி காலேஜ் லீவு போட்ட?  என்று ரிஷி கேட்க

அதுவா நான் இப்ப ரொம்ப பிசி ரிஷி என்று ரோஷினி கூறினாள்.

அதுதான் என்ன பிசி

நான் இப்போ இதன்யாவோட  அதாவது உங்க எக்ஸ் ஓட வளைகாப்புக்கு வந்து இருக்கேன்!  

இதை கேட்டதும் ரிஷிக்கு தூக்கி வாரி போட்டது.  என்ன? என்ன சொல்ற? நீ சொல்றது புரியல! என்று ரிஷி பேக்கடிக்க..

அவள் சிரித்துக் கொண்டே நடிக்காதீீீீீீீங்! அவங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்! இப்போ போக போறோம்! ஜாலியா இருக்க போகுது! உங்க எக்ஸ்க்கு வளகாப்பு அதுல என்ஜாய் பண்ணிட்டு வரலாம்னு வந்திருக்கேன்! 

ரிஷிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவன் அமைதியாக இருக்க.. 

என்ன ரிஷி பயமா எதுக்கு பேச மாட்டேன்றீங்க! அப்போ உங்களுக்கு அந்த பொண்ணோட நினைப்பு வந்துருச்சா? அவ உங்களுக்கு தங்கச்சி என்று சொல்ல.. 

ரிஷி ஐயோ இப்படி குதர்க்கமா மாட்டிக்கிட்டோமே!  நம்மளே போனை கொடுத்து போன் பண்ணி அவகிட்ட வாயை கொடுத்து மாட்டிக்கிட்டோமே!  என்று நினைத்தவன் சரி போய்ட்டு வா! நான் வச்சிடறேன் என்று கட் செய்தான். 

இதன்யா தலையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்திருக்க..

ரோஷினி உணவின் வாசனையை உள் இழுத்துக்கொண்டு சூப்பரா இருக்கும் போலயே!  சரி உங்க வீடு எங்க இருக்கு ரூட் சொல்லு? 

மேம் எங்களுக்கே தெரியும் என்று டிரைவர் கூறினார்.

இதன்யா அவரை ஆச்சரியத்துடன் பார்க்க. 

அதுதானே எங்க அண்ணா எப்பவும் கிளவர் பாய் என்று நினைத்துக் கொண்டு அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர கார் நேராக இதன்யாவின் வீட்டை நோக்கி சென்றது. 

தொடரும்..

சித்தார்த் வர போறான்! 

EPI 290 

ரோஷினி உணவின் வாசனையை உள் இழுத்துக்கொண்டு சூப்பரா இருக்கும் போலயே!  சரி உங்க வீடு எங்க இருக்கு ரூட் சொல்லு? 

மேம் எங்களுக்கே தெரியும் என்று டிரைவர் கூறினார்.

இதன்யா அவரை ஆச்சரியத்துடன் பார்க்க…  ரோஷினி சிரித்துக்கொண்டே“ எங்க அண்ணா ரொம்ப கிளவர் பாய்! உன்ன பத்தி இஞ்ச் இன்சா தெரிஞ்சு வச்சிருக்கான்! பாத்தியா?”  என்று இருவரும் அங்கே இதன்யாவின் வீட்டுக்கு சென்றார்கள். 

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள் கொஞ்ச தூரம் இருக்கவே நிறுத்துங்க! நிறுத்துங்க! இங்கேயே நிறுத்துங்க என்று கூறினாள். 

இப்போ என்ன ஆச்சு எதுக்கு காரம் எங்கேயும் இன்னொருத்த சொல்ற இங்கதான் உன்னோட வீடு இருக்கா? 

“அது இல்ல ரோஸ் நான் இப்படி கார்ல போய் இறங்கினா?  என் வீட்டு பக்கத்துல இருக்கிறவங்க,  எங்க  வீட்ல எங்க அம்மா  எல்லாம் கேள்வி கேப்பாங்க!”

ஏன் கார்ல போய் இறங்கினால்,  போலீசில்கீதும் வந்து பிடிக்குமா?  என்று ரோஷினி கேட்க..

இதன்யார் சலித்து கொண்டே அப்படியெல்லாம் இல்லை!  எங்க அம்மாவுக்கு என்னோட கல்யாண விஷயம் தெரியாது! 

ஓ அப்படியா அப்போ நான் அண்ணாவையும் அம்மாவையும் வரசொல்லட்டுமா? 

“அய்யோ அய்யோ ரோஷினி இது நீங்க நினைக்கிற மாதிரி சின்ன விஷயம் இல்ல!  ரோஷினி ப்ளீஸ் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான்! எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா அதைவிட மோசம்!  எங்க அக்கா என்ன சாமியாட்டம் ஆடி தேரோட்டத்துக்கு கிடா கொடுத்துடுவா ப்ளீஸ்! எதையும் மூச் விடாதீங்க!” என இதன்யா கூறினாள். 

ரோஷினி சிரித்துக்கொண்டே நீ பேசுறது எதுவும் எனக்கு புரியல..  ஓகே.. இப்ப என்ன பண்ணனும்?  இந்த இடத்தில் நடக்கணுமா?  எங்க உன்னோட வீடு இருக்கு! கேட்டாள். 

அந்த பக்கம் இருக்கிற வீடுதான்!  ஓட்டு வீடுதான்! மச்சு வீடெல்லாம் இல்ல என்று சொல்ல.

ரோஷினி திடுக்கிட்டு அப்டின்னா? 

மச்சு அதுதான் அப்டின்னா  மாடி வீடு, டைல்ஸ், மார்பில் எல்லாம் இல்ல.. வீடெல்லாம் சிமெண்ட் கார வீடுதான் எங்க வீடு. ஆனா பெரிய வீடு என்று தனியாக கூறினாள்.

அதனால என்ன?  எங்க இருந்தா என்ன?  என்று ரோஷினி  இறங்கிக்கொள்ள..

உடனே காவலாளிகள் அவளுடைய ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தார்கள். 

அண்ணா ப்ளீஸ் உங்ககிட்ட இப்ப என்ன சொன்ன பின்னாடி வராதீங்கன்னு சொன்னனா?  என்று இதன்யா கூற..

உடனே அவர்கள் இதன்யாவையும் ரோஷினியையும் பார்த்து “நாங்க இங்கே  இருக்கிற லோக்கல்ல தான் இருப்போம்! டெய்லி ரெண்டு பேர் உங்களுக்கு காவலுக்கு இருப்பாங்க மேம்! எதுவா இருந்தாலும் உடனே கூப்பிடுங்க! கடைக்கு எல்லாம் எங்கேயும் வெளியே போக வேண்டாம்! என்று படப்படவென பொரிந்து தள்ளினார்கள்.

அதை கேட்டதும்  நொந்து கொண்டு  இதுக்கு தான் உங்கள வர வேணாம்னு சொன்னேன்!  இப்ப பாத்தீங்களா?  இங்க வந்து இவங்க எல்லாம் பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க! நீங்க சாதாரண ஆளா என்று இதன்யா சொல்ல ..

நீயும் இப்ப சாதாரண ஆள் இல்லை! எங்க அண்ணனோட பொண்டாட்டி!

இதை வேற எப்போ பாரு சொல்றீங்க? ஆமா நான் தான் பொண்டாட்டி! இப்போ அதுக்கு என்ன! அத விடுங்க! நீங்க முன்னாடி போங்க! நான் வரேன்;  என்று கூறினாள்.

ரோஷினி மெதுவாக முன்னாடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே நடக்க.. 

உடனே இதன்யா நேராக டிரைவரின் அருகில் வந்தாள்.

என்ன மேடம் சொல்லுங்க?  எதாவது வேணுமா? என்று அவர் திடுக்கிட்டு அவளைப் பார்த்து இறங்கி வர.. 

 இல்லன்னா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம்? என இதன்யா கூறினாள்.

என்ன என்று அவர் கேட்க..

அதாவது எங்க வீட்டுக்கு வழி தெரியும்னு சொன்னீங்கல்ல!! அப்போ நான் இங்க கிளம்பி வந்தது, அவருக்கு தெரியுமா? 

புரியல மேடம் நீங்க சொல்றது என்று ஓட்டுநர் சொல்ல..

இதன்யா சலித்துக் கொண்டே அய்யோ அண்ணா!; நான் இப்போ இங்க ஊருக்கு கிளம்பி வந்து இருக்கிறது, அவருக்கு தெரியுமா? அவர் சொல்லித்தான், நீங்க கூட்டிட்டு வந்து விட்டீர்களா! 

இல்ல மேடம் சாருக்கு அதெல்லாம் தெரியாது! அவர்தான் ஷூட்டிங்ல இருக்காரு! ஆனா உங்களை தனியா அனுப்ப கூடாதுன்னு சொல்லி இருக்காரு. இப்போ ஒரு ரோஷினி மேம் உங்க கூட வர்றதுனால, நாங்க கூட வந்தோம்! அப்படி இல்லனா கூட  உங்களை பாதுகாப்பா கண்காணிக்கிறதுக்கு மட்டும் தான் அனுப்பி இருப்பாரு!  நீங்க பஸ்ல கூட ட்ராவல் பண்ணலாம்!  இப்போ நீங்க ரெண்டு பேரும் வராதால தனியா அனுப்ப முடியாதுல்ல!  எப்படி வந்தாலும் பாதுகாப்பு தான்! ரோஷினி மேம் பஸ்ல எல்லாம் போய் பழக்கம் இல்ல!  அதனால தான் கார்ல கூட்டிட்டு வந்தோம்!  என்று ஓட்டுனர் கூறினார். 

அப்படியா என்று பெருமூச்சை விட்டவள் சரிங்க அண்ணா! என்று நகர..

உடனே ஓட்டுனர் அழைத்து“ இப்போ சார்கிட்ட நீங்க ஊருக்கு வந்தது சொல்லனுமா மேடம்?? இப்பவே போன் பண்ணவா? என்று போனை எடுக்க …

ஐயோ ஐயோ அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க! அவர் கிட்ட எல்லாம் எதையும் சொல்ல வேண்டாம்! புரியுதா ?  ப்ளீஸ் என்று இதன்யா கெஞ்ச..

ஓட்டுநர் மனதில்  நீங்க சொல்லாமல் இருந்தால் கூட ஷூட்டிங் முடிச்சுட்டு வந்ததும் அவரே கேட்டு தெரிஞ்சுக்கிட்டு வந்துருவாரு! என்று மனதில் நினைத்தார். 

சரிங்கண்ணா போயிட்டு வரோம் என இதன்யா சென்றாள். 

அவள் பெரு மூச்சை விட்டு ரோஷினியின் அருகில் நடக்க.. 

ஹே ரொம்ப வேகமா நடக்குற!  மெதுவா நட என்று கூறினாள்.

சரி வாங்க என்று கையை பிடித்து அழைத்துச் சென்று அம்மா அம்மா என்று இதன்யா கத்தினாள். 

சின்னு என்று என்று சந்தோச குரலில்  வேகமாக வெளியே வந்தார் தெய்வா. 

சின்னு  யாரது என்று அருகில் உள்ள ரோஷனியை பார்த்து கேட்டார். ரசகுல்லா போன்று இருப்பாள்!

அம்மா இது ரோஸ்!  என் கூட படிக்கிற பொண்ணு மா!

கூட படிக்கிற பொண்ணா என்று தெய்வா புடவையில் கைகளை துடைத்துக் கண்டே புன்னகையுடன் வாங்க கண்ணு!  உள்ள வாங்க என்று கூற.. .

ரோஸ் சிரித்து கொண்டே ட்ராலியை இழுத்து கொண்டு உள்ளே வர…

தெய்வா  அவளின் கையில் இருக்கும் ட்ராலியையும் ரோஷினியையும் மாறி மாறி  பார்த்தார் .

இதன்யா ஹலோ ஆன்ட்டி நல்லா இருக்கீங்களா?  உங்களுக்காக நான் பிரியாணி வாங்கிட்டு வந்து இருக்கேன்! என்று ரோஷினி அவர் முன்னாள் நீட்ட..

இப்பொழுது தெய்வா இதன்யாவையும் ரோஷினியையும் மாறி மாறி பார்த்தார்.

அம்மா வாங்கிக்கோ என்று இதன்யா சொல்ல..

சரி நீங்க முதல்ல உள்ள வாங்கன்னு தண்ணி குடிங்க என்று அழைத்து உள்ளே உள்ள கட்டிலில் அமர வைக்க..

ரோஷினி செருப்பை கழட்டி விட்டு உள்ளே வந்தாள்.

இதன்யா திரும்பி செப்பலை கழட்டிடுங்க என்று சொல்ல வர..

எனக்கு தெரியும் டி ஓவரா பண்ணாத என்று ரோஷினி போய் வீட்டை பார்த்தாள். உடனே இதன்யா ரோஷினி கிட்ட உங்க வீடு மாதிரி எங்க வீடு வசதியா இருக்காது என்று சொல்ல.. 

ஹே உங்க வீடு படத்துல வர மாதிரி இருக்கு!  நான் இந்த மாதிரி வீட்டை நிறைய படத்துல பார்த்திருக்கேன்! என சுற்றி பார்த்தாள். 

இதன்யா சிரித்துக் கொண்டே அப்படியா? இந்த பக்கம் சைடு எல்லாம் இப்படித்தான் வீடு இருக்கும்!  நல்லா இருக்கும் என்று  கூறினாள். 

அந்த நேரம் தெய்வா கையில் சொம்பு தண்ணீருடன் இந்தா கண்ணு கொஞ்சம் குடி என்று சொல்ல..

அம்மா நாளைக்கு கேன் தண்ணி சொல்லிடலாமா?  என்று கேட்க..

அப்படின்னா என்று ரோஷினி திரும்பி பார்த்தாள். 

அதுதான் நீங்க குடிக்கிற ஆர்.வோ தண்ணீர் எல்லாம் இங்கே கிடைக்காது.  இங்க ஆத்து தண்ணி மட்டும் தான். உங்களுக்கு இது சேருமா! என இதன்யா கேட்டாள். 

ரோஷினி தெய்வாவின் பக்கம் திரும்பி “ஆன்ட்டி எப்போ பாரு இதன்யா இப்படி தான் பேசிட்டு இருக்கா! ஏன்? நான் இதெல்லாம் குடிக்க மாட்டேன்னா? இவள அடிங்க ஆன்ட்டி!..

தெய்வா சிரித்துக்கொண்டே “இல்ல அப்படியெல்லாம் இல்ல கண்ணு! எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க! உங்கள நல்லா சௌகரியமா கவனிச்சுக்கணும்ல்ல! அதனால சின்னு அப்படி சொல்றா! 

சரிங்க ஆன்ட்டி அந்த பிரியாணியை சாப்பிடுங்க உங்களுக்காக ஆசை ஆசையாய் வாங்கிட்டு வந்தேன். என்று ரோஷினி சொல்ல

இதன்யா சிரித்துக் கொண்டே அம்மா அந்த புது வட்டள் எடுங்க! அட்டாலி மேல இருக்கா! என அவள் செல்ல.. 

ஹே என்ன தனு சொல்ற? வட்டலா அப்டின்னா?

இதன்யா சிர்த்து கொண்டே அப்டின்னா தட்டு! பிளேட் … என எடுத்து வந்து அதை கவர் பிரித்து நீட்டினாள். தெய்வா ஒரு முறை கழுவி கொடுக்க..  இதன்யா இங்கு இருக்கும் போது அணியும் உடைகளை போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.

என்னடி இது ட்ரஸ் என்று ரோஷினி கேட்க..

இங்க  இப்படித்தானுங் டிரஸ் போடுவாங்க! என்று ரோஷினை மரியாதையாக அழைக்க.

என்ன மரியாதை எல்லாம் பயங்கரமா இருக்கு? என ரோஸ் புருவம் நெருக்கி கேட்க.. 

ஆமா எங்க ஊருக்கு வந்த உடனே மரியாதை கொடுக்க கத்துக்கணும்ங்க! மரியாதை இல்லாம சின்ன குழந்தை கூட  கூப்பிட மாட்டோம்!;இங்க மரியாதையோட தான் நாங்க கூப்பிடுவோம்ங்க! என்று இதன்யா சொல்லிக் கொண்டே தெய்வா கிட்ட இருந்து புது சில்வர் பிளேட் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அந்த பிரியாணியை போட்டு ரோஷினி மூக்கில் மூக்கை உறிஞ்சி கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள். 

நல்லா இருக்கா என்று இதன்யா கேட்க..

சூப்பரா இருக்குடி சாப்பிடுறியா? 

பரவாயில்லை நீங்களே சாப்பிடுங்க என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்படியே நாட்கள் நான்கு நாட்கள ரோஷினியை இதன்யா அழைத்துக்கொண்டு அங்கு அருகில் இருக்கும் கொல்லை அம்மன் கோவில், பெருமாள் கோவில் , சிவன் கோவில் கொடுமுடியில் மகுடேஸவரர் கோவில் என அனைத்து இடங்களையும்  கூட்டி சென்று சாமி தரிசனம் செய்தார்கள். 

இங்க இத்தனை கோவில் இருக்கா?  சூப்பரா இருக்கு! டி!  உங்க ஊரு செம்மையா இருக்குடி! எல்லாமே ஜாலியா இருக்கு தெரியுமா? எங்க பாரு ஆறு சூப்பரா இருக்கு! Sand smell super! வாசனையா இருக்கு என்று ரோஷினி கூற..

இதன்யா சிரித்துக்கொண்டே ஆமா எனக்கு இங்க இருந்து கிளம்பும்போது அழுகையா வரும்! எனக்கு எங்க ஊர் ரொம்ப பிடிக்கும். 

இன்னும் வேற ஏதாவது இடம் இருக்கா?  உங்க வீட்ல பங்க்ஷனுக்கு உண்டான எந்த ஒரு ஒர்க்கும் ஸ்டார்ட் ஆகலையே?  என்ற ரோஷினி கேட்க..

அது மாமா வீட்லதான் பண்ணுவாங்க!  நம்ம இங்க இருந்து சாப்பாடெல்லாம் செஞ்சு மாமா வீட்டுக்கு எடுத்துட்டு போயி,  அக்காவுக்கு வளையல் போட்டு,  அக்காவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்.  நாளைக்கு சாயந்திரம் என்னோட பி.எட் பிரண்ட்ஸ் எல்லாம் வரேன்னு சொல்லி இருக்காங்க.  பிரியா, பூஜா எல்லாரும் வருவாங்க.   என்று கூறினாள். 

ரோஷினி அவளை பார்க்க என்ன முறைச்சு பார்க்கிறீங்க?  என்று இதன்யா கேட்க..

அவங்க வந்ததும் என்னை  தனியா விட்டுட்டு அவங்க பின்னாடி சுத்துவியா என்று புருவத்தை நெருக்கி கொண்டு கேட்க..

இதன்யா சிரித்துக்கொண்டே “நான் எதுக்கு அவங்க பின்னாடி சுத்த போறேன். நம்ம எல்லாம் ஜாலியா போலாம்!  சரியா?  அடுத்து சென்னிமலை முருகன் கோவில், திண்டல் முருகன் கோவில் போலாம்! அது ஊருக்கு போகும் போது போலாமா? 

ரோஷினி சிரித்துக்கொண்டே  போலாம் என காரில் வந்து சரியாக வீட்டிற்கு ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் இருவரையும் இறக்கி விட்டார்கள்.  அவர்கள் நடந்து கொண்டே  வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 

எங்க ஊர் உங்களுக்கு புடிச்சிருக்கா என்று இதன்யா கேட்க

ரோஷினி  சந்தோஷமாக ரொம்ப ஜாலியா இருக்கு! பாரு! நான் போன் கூட எடுக்கறது இல்ல! எனக்கு இந்த லைஃப் ரொம்ப புடிச்சிருக்கு! பேசாமல் ரிஷிய கூட்டிட்டு ஹனிமூன் இங்கே வந்திடலாம்! என அவள் வாய்பொழியாக கூற 

என்ன? என இதன்யா வித்தியாசமாக பார்த்தாள். 

ஆனால் இதை பார்த்து ரோஸ் சிரிக்க இதன் யா அதிர்ச்சியுடன் என்ன? ரோஸ் என அவர்கள் சிரித்து பேசி விளையாட.. 

*  

இவர்கள் இங்கே  இப்படி இருக்க..  அங்கே சித்தார்த் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு, நேராக சென்னை கிளம்பினான். 

இதன்யாவை சமாதானம் செய்ய வேண்டும் எப்படி செய்வது?  க்ராதகி என்னை எப்படி டார்ச்சர் பண்றா?  டிரஸ்ஸ போட்டுக்க மாட்டேன்னு,  அந்த புடவையை கட்டிட்டு திரிஞ்சாலே!  என சித் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..வீடு மிகவும் அமைதியாக இருக்க.

மதிமா என்று அழைத்தான். 

சொல்லுங்க தம்பி என்று மதி வெளியே வந்தார். 

 எங்கே அவள்? காலேஜ் போயிட்டாளா? வர நேரம் தானே!  என்ற மூச்சு விடாமல் சித்தார்த் கேட்டுக் கொண்டிருக்க…

பாப்பா ஊருக்கு போயிருச்சு தம்பி..

என்ன? ஊருக்கா? எந்த ஊருக்கு என்று புருவத்தை சுருக்கிக் கொண்டே சித்தார்த் கேட்க..

பாப்பாவோட அக்காவுக்கு நாளைக்கு வளைகாப்பு அதனால பாப்பா நாலு நாளைக்கு முன்னாடியே ஊருக்கு போயிடுச்சு என்று கூறினார்.

என்ன நாலு நாளைக்கு முன்னாடியா? என்று சித்தாரத்துக்கு ஒன்றும் புரிய வில்லை.

எவ்வளவு தைரியம் இருந்தா, ஐவியிலிருந்து வந்ததும் உடனே கிளம்பி இருக்கியா?  உன்னை இதுக்கு மேல விட்டு வைக்கிறது தப்பு!  என்று சித்தார்த் நேராக மேலே சென்றான்.

அந்த நேரம் ரத்தினகுமார் கால் செய்ய..

யோவ் நான் மூணு நாளைக்கு எந்த கமிட்மெண்டும் இல்ல, எல்லாத்தையும் கேன்சல் பண்ணு! இனி நடிக்க கூப்பிட்டா கேஸ் போடுவேன்! உன்னோட மொத்த படத்தையும் நான் நடிச்சு கொடுத்துட்டேன்.  இதுக்கு மேல கால்ஷீட் கேட்டேனா?  உன் மேல கேஸ் போடுவேன்! என்று சித்தார்த் கோபத்துடன் பேசிக் கொண்டிருக்க..

என்ன ஆச்சு ஏன் இவ்வளவு டென்ஷனா பேசுறீங்க? சித்து! என்று ரத்தினகுமார் கேட்டார்.

யோவ் ரத்னா நீ இன்னும் அளப்பி போட்டோஸ் தான இருக்க! நீ மட்டும் ஜாலியா உன் பொண்டாட்டி கூட இருக்க! நான் இப்படி தனியா இருக்கேன்!  இதுக்கெல்லாம் காரணம் நீதான்?  என்று சித்தார்த் கூற..

நான் என்ன பண்ண என்று ரத்னகுமார் ஷாக்காக கேட்க

உன் படத்துல கமிட் ஆனதுல இருந்து தான் என் பொண்டாட்டி என்னை சந்தேகமாவே பாக்குறா என்று சித்தார்த் கூறினான்.

ஆமா ஆமா எல்லாம் உங்கள சுத்தி பொண்ணுங்களா இருக்காங்க!  நீங்களும் எல்லா பொண்ணுகிட்டயும் பேசுறீங்க! 

யோவ் நானா எல்லா பொண்ணு கிட்டயும் பேசுரேன். ரத்னா வந்தேன்னு வை என்று சித் மிரட்ட .. 

ரத்னகுமார் சிரித்துக்கொண்டே “சரி சரி ஒன்னும் பிரச்சனை இல்ல மூணு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோங்க!  அதுக்கப்புறம் புரொடக்ஷன் ஒர்க் ப்ரோமோஷன் ஒர்க் அப்புறம் மேல் அது அதுக்குண்டான பிராசஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்! சேம் டைம் டப்பிங் வி.எஃப் . எக்ஸ் அப்புறம் சவுண்ட் பேக்ரவுண்ட் இதுக்கெல்லாம் நிறைய வேலை இருக்கு!”என்று ரத்தினகுமார் சொல்ல சொல்ல சித்தார்த் ஃபோனை கட் செய்தான். 

மதி அனைத்து உணவுகளையும் தயார் செய்து வைத்துக் கண்டு சித்தார்த்தக்காக காத்திருக்க…அவன் அவசர அவசரமாக கீழே வந்தான். 

சித்தார்த்து தம்பி என்று மதி அழைக்க

மதிமா நான் இப்போ உடனே கிளம்பனும் எனக்கு வேலை இருக்கு! 

மதி அவன் பக்கம் வந்து என்ன அவ்ளோ அவசரம்! 20 நாள் கழிச்சு வந்திருக்க!  வெளில எல்லாம் சாப்பிட்டு இருப்பீங்க! உங்களுக்காக நான் ஸ்பெஷலா செஞ்சிருக்கேன்! சாப்பிட்டு தான் போகணும்! என்று  சொல்ல

இல்ல மதி மா! நான் கிளம்பனும் எனக்கு லேட் ஆகுது

 தம்பி என்று மதி வலுக்கட்டாயமாக அழைத்து சாப்பிட வைத்தார்.

சித்தார்த் சாப்பாட்டை பார்த்து கொண்டிருக்க.. 

அப்படி பார்த்தால் என்ன அர்த்தம் சாப்பிடுங்க! என சொல்ல… 

சித் ஒரு வாய் பெயருக்கு எடுத்து வைத்தவன். ரோஸ்னி எங்கே? ஒழுங்கா காலேஜ் போனாலா? என கேட்டான். 

இல்ல சின்ன பாப்பாவும் வளைகாப்புக்கு போயிருக்கு!

என்ன? என சித் அதிர்ச்சியுடன் பார்க்க..

ஆமா! என மதி அவனது தட்டை பார்த்து சாப்பாடு அப்படியே இருக்கு! சீக்கிரம் சாப்பிடுங்க என கூறினார். 

ஏனோ அவளுடன் ரோஸ்னி சென்றது மனதுக்கு நிம்மதியாக இருந்தது. சித் திருப்தியுடன் சாப்பிட்டான் ஏனென்றால் அவனுக்கு இந்த 20 நாட்களும் சரியாக உணவு இல்லை. என்னதான் புரொடக்ஷனில் ஹீரோ ஹீரோயினுக்கு நல்ல தரமான உணவுகள் சமைத்துக் கொடுத்தாலும், வீட்டு சாப்பாடு போல வருமா?  அதனால் அவன் சாப்பிட்டு கொண்டு இருக்க..

அந்த நேரம் சதீஷ் வந்தான்.

என்ன நல்லா சாப்பிடற போல மதி மா அப்படியே எனக்கும்? என்றவன்  அருகில் வந்து அமர..

நீயே மதத்தையும் கொட்டிக்க நான் கிளம்புறேன்.  என்று சித் எழுந்தான். 

ஏன் டா இன்டர்வியூ இருக்குடா! நாளைக்கு எல்லா உனக்கு பர்சனல் அசிஸ்டன்ட்  செலக்சன்  இன்டர்வியூ நாளைக்கு தான் பைனல் ரவுண்ட்! நீ இப்போ வேகமா எங்க கிளம்புற? என்று சதீஷ் கேட்டான். 

ஆமா நான் இதையே பண்ணிட்டு இருந்தால்,  அப்புறம் இதுதான் சாக்குனு உயரமான எவரெஸ்ட் மலைல கூட அவ முகத்தை தூக்கிட்டு உட்கார்ந்துக்குவா, அப்டியா பட்ட கேடி தான் அந்த இதன்யா! இவள எல்லாம் என்னால சமாளிக்க முடியாது! அதனால நான் இப்பவே கிளம்புறேன்! என்று சித்தார்த் கிளம்பினான். 

அதுதான் எங்கன்னு சொல்லிட்டு போடா என்ற சதீஷ் கேட்க..

உனக்கு சொல்ல முடியாது போ என்று சென்று விட்டான். 

சதீஷ் அதே இடத்தில் நிற்க..

மதிமா சிரித்துக்கொண்டே தம்பி இதன்யா பாப்பாவ பாக்குறதுக்கு போறாரு என்று கூறினார். 

ஓ அப்படியா அதுக்கு தான் இப்படி வேக வேகமா ஓடுறானா! என்ன மதிமா? எதுவும் விஷயமா?  இங்கே ஏதாவது காசிப் இருக்கா என்று உணவுகளை எடுத்து சாப்பிட்டு கொண்டே மதிமாவிடம் பேச ஆரம்பித்தான். 

அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது தம்பி என்று மதிமா பதில் அளிக்க.. 

பொய் சொல்லாதீங்க.. 

ஏன் தம்பி இப்படி பேசுறீங்க என்று மதிமா அவரிடம் கேட்டார். 

அப்படியே அவர்களின் உரையாடல் சதீஸ் சாப்பிட்டு முடித்து கிளம்பி விட்டான்.

இங்கே சித்தார்த் நேராக 5 மணி நேரம் பயணம் செய்து மறுபடியும் ஈரோடு வந்து சேர்ந்தான்.  ஈரோடு பஸ் ஸ்டான்ட் ரவுண்டானாவில் இருந்தவன். காரை நிறுத்த  சொல்லிவிட்டு அதை இடத்தில் ஒரு சில நிமிடங்கள் நின்றான். 

இங்கே இதன்யா அவளது வீட்டில் பிரியா,  பூஜா அந்த இரண்டு வால் மட்டும் வரவில்லை வேற யார் பூர்ணா, வினோ இருவரும் மட்டும் இந்த பங்க்ஷன்க்கு வரவில்லை. மற்ற  படி அவர்களின் b. Ed friends அனைவரும் வந்திருந்தார்கள். வினோ மற்றும் பூர்ணா இருவரையும் அவர்களின் வீட்டில் விட வில்லை.  பிரியாவை அழைக்க இதன்யா  பெரும்பாடு பட்டாள்.

நீ வந்தால் வா! வராட்டி போ! என்று இதன்யா சொல்ல பிரியா வீட்டில் உண்ணாவிரதம் இருந்து இந்த செய்தி இளங்கோவிற்கு சென்று, அதன்  பின் ஒரு வழியாக அவர் போயிட்டு வா என்று சொல்லி..   அந்த வார்த்தை இந்த இரண்டு வார்த்தைகளையும் கேட்டதும் சிட்டாக பறந்து வந்துவிட்டாள்.  அப்பொழுதும் இளங்கோ சாதாரணமாக விட்டு  விடவில்லை பிரியாவை அழைத்துக் கொண்டு,  இங்கே பிரியாவை  ஈரோடு அழைத்து வந்து டவுன் பஸ் இதன்யாவின் ஊருக்கு செல்லும் ஏற்றிவிட்டு தான் அவர் கிளம்பினார்..

வரும்போது கோகுல பிரியா!  என்று இளங்கோ கேட்க

முகத்தை திருப்பிக் கொண்டே நான் வரும்போது இதன்யா கூட வந்துருவேன்! தயவுசெய்து கிளம்பி வந்துடாதீங்க! எதுக்கு இப்படி பண்றீங்க?  இதுக்கு தான் நான் அங்கே வீட்டை விட்டு மாமாச்சி வீட்டில் இருக்கேன். 

இளங்கோ எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டு சரி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு என கூறினார்.  

நீங்க கிளம்புங்க!  என்ற  வார்த்தையுடன் அவள் திரும்பிக் கொள்ள…அவள்  இதன்யாவின் வீட்டுக்கு வந்ததும்,  பிரியா போன் செய்து தன் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டரா?  என்று கேட்டுவிட்டு இதன்யாவின் வீட்டில் கும்மாளத்தை தொடங்கினாள்.

இப்படியாக அனைவரும் நிதன்யாவின் வளைகாப்பு அடுத்த நாள் காலை  என இருக்க  நந்துவும் வந்திருந்தான் வீடே கொண்டாட்ட கோளாக்கலமாக இருந்தது. 

நந்து ரோஷினியை புருவம் சுருக்கி பார்த்தவன் யார் இந்த பொண்ணு?  என்று கேட்க

இது என் கூட படிக்கிற பொண்ணு நந்து என இதன்யா கூறினாள்.

பிரியா கண்களில் சைகை செய்து லவ் மேட்டர் என சிக்னல் கொடுக்க… 

வாய மூடிட்டு போடி இன்று இதன்யா கூறினாள்.

நீங்க என்ன பண்றீங்க? என்ன படிக்கிறீங்க! என்று நந்து கேட்க

நான் வந்து B.A  தமிழ் என்று கூறினாள்

உங்க முகத்தை பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி இல்லையே! பெரிய பொண்ணு மாதிரி இருக்கே!  என் வயசு இருக்கும் போலையே! 

ஆமா  இன்ஜினியரிங் முடிச்சுட்டு நான் மறுபடியும் B.A தமிழ் என்னோட கவிதையையும் கட்டுரையையும் தமிழ் மொழியை ரொம்ப லவ் பண்றேன்! அதை வளத்துக்கறதுக்காக படிக்கிறேன்! அண்ணா! என்று சமாளித்தாள்.

சரிமா தங்கச்சி என்று நந்துவும் கூற..

அங்கே உற்சாக மாக அனைவரும் விளையாடினார்கள். 

 நந்து எங்க எல்லாரையும் பாசூர்ல அந்த பழமையான சிவன் கோவில் இருக்குல்ல! அங்க கூட்டிட்டு போறியா டா.. டேம் கூட இருக்குமே என்று சொல்ல

டேமா அப்போ மீன் எல்லாம் புடிப்பாங்களா?  என்று பிரியா கேட்க..

எப்போ பாரு திங்கறதிலேயே இருடி என்று இதன்யா சொல்ல..

எதுக்கு பிரியாவை திட்ற!  உனக்கு மீன் வேணுமா பிரியா?  போலாமா வரியா என்று கேட்டான்.

போலாமா அண்ணா என்று பிரியா உற்சாகத்துடன் சொல்ல  நானும் வரேன் என ரோஸ் சொல்ல எல்லாருமே போலாம் என்று அனைவரும் உற்சாகத்துடன் கிளம்பினார்கள்.

அப்போ மீன் சாப்பிட்டு யாராவது கோயிலுக்கு போவாங்களா? என்ன நந்து என்று இதன்யா கேட்க

நீங்க வேணா கோவிலுக்கு போங்க நாங்க வேணா மீன் சாப்பிடுகிறோம் என்று பிரியா சொல்ல  அனைவரும் மாலை 5 மணிக்கு கிளம்பினார்கள். 

இதன்யா அந்த ஆற்றின் நடுவில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட அவளுடன் பூஜாவும் சேர்ந்து கொண்டாள். 

ரோஷினி,  நந்தன், பிரியா மற்றும் வான்மதி வளர்மதி,  சத்யா என அனைவரும் மீன் சாப்பிட சென்றார்கள்.  அவர்களுடன் வேல்முருகன் சுந்தரவேல்,  பிரபு, சுரேஷ் என அனைவரும் சேர்ந்து கொண்டார்கள். 

இதன்யா சாமி கும்பிட்டு சிரித்துக்கொண்டே வெளியே வர தூரத்தில் ஒரு பழக்கப்பட்ட கார்  நின்றது.  இது என் கார் என்று எடுத்ததும் அவளின் உள் மனது சொல்ல . இல்ல இது அவனோடது! என இன்னொரு மனம் கூறியது. 

 அவன் இங்க வந்துட்டானா என்று உள்ளுக்குள் தோன்றியது. 

பூஜா இதன்யாவின் அதிர்ச்சியான முகத்தை பார்த்து,  ஏன் அப்படி பார்க்கிற? என்ன ஆச்சு என்று கேட்க..

ஒன்றும் இல்லை வா என நடந்தார்கள்.  என்னை ஏமாத்துனானே!  அவளுக்கு…  அந்த பொண்ணு கூட நடிக்கிறானே?  அந்த பொண்ணுக்கு டிரஸ் வாங்கி கொடுத்திருக்கான்! அந்த பொண்ணுக்கு டீ வாங்கி கொடுத்திருக்கான்! அந்த பொண்ணுக்கு கை கழுவி விட்டு இருக்கான்! எப்போ பாரு அந்த பொண்ணோட பேச்சய தான் பேசிட்டு இருக்கான்! இதை சொன்னால் நான் சந்தேக காரி என்று இதன்யா முணுமுணுத்துக் கொண்டே வர…

எந்த பொண்ணு என்று பூஜா கேட்க

ஹே நான் மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருக்கேன்! 

உன் மானங்கெட்ட மைண்ட் வாய்ஸ் மனசுக்குள்ள தான்  பேசணும்!  வாயில பேசக்கூடாது! அது எந்த பொண்ணு? என பூஜா கேட்க..

இல்ல கம்முனு வா என்று இருவரும் சென்றார்கள். 

சித்தார்த் காரில் இருந்து கொண்டே இதன்யா என்று அழைக்க..

ஹே சித்து சார்!  உன்னை சார் கூப்பிடுகிறார்!  

அப்போ  இங்க வந்ததுக்கு நீ தான் காரணமா?   சொல்லி இருக்கியா? என்று இதன்யா கேட்க..

நான் எல்லாம் சொல்லல . என சொல்ல.

சித்தார்த் கண்ணாடியை இறக்கி நானே தான் வந்தேன்! உன் கிட்ட பேசணும் வா! என்று கூற..

என்னால் வர முடியாது! உங்க வேலைய பாத்துட்டு போங்க!

அப்டியா! சரி நீயா தேடி வருவ!  அதுவரைக்கும் நான் இங்கே தான் இருப்பேன்! என சித் கூற.. 

எனக்கு என்ன? அவள் நடந்தாள்.

 அனைவரும் மீன் சாப்பிட்டு கண்டே சிரித்துக் கொண்டு ஜாலியாக வர அவர்கள் அனைவரும் அங்கிருந்து நந்தன் செல்வத்துடன் சேர்ந்து மளிகை பொருட்கள் என அனைத்தையும் வாங்க ஈரோடு செல்ல. வர வண்டும் செல்வத்தின் மனைவி தேவி வளைகாப்புக்கு வைக்கப்படும் தட்டு குங்குமம் மஞ்சள் வெத்தலை சீர் தட்டுகள் என அதை வாங்குவதற்காக ஈரோடு சென்று இருந்தார்கள். 

அந்த நேரம் இதன்யா பூஜா பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டிருக்க.. 

அவர்களை கிராஸ் செய்து கொண்டு சித்தார்த்தின் கார் வேகமாக அவர்களின் முன்னால் சென்றது. ஒரு இடத்தில் போய் பார்க் செய்து நிறுத்திக் கொண்டான். 

இவர்கள் நடந்து பேசிக்கொண்டே வர அங்கே சித்தார்த்தின் கார் இருந்தது மாணவ மாணவிகள் அந்த காரை இதற்கு முன் பார்த்தது இல்லை .

கார் அதே இடத்தில் இருந்தது. விடிய விடிய கார் அதே இடத்தில் இருந்தது .காலையில் எழுந்து இதன்யா வெளியே வரவும் ரோஷினி இந்த காரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! என்று குளித்து முடித்து உடை அணிந்து சொல்ல 

 அப்போ விடிய விடிய கார் இங்கதான் இருக்கா?  அவன் வெயிட் பண்ணா? நமக்கு என்ன?  நடிப்பான் என்று சொல்லிக்கொண்டே இதன்யா வளைகாப்புக்கு கிளம்பி நேராக நிதன்யாவை கட்டிக் கொடுத்த ஊருக்கு சென்று விட்டாள். 

அவர்களுடைய நட்பு வட்டம் என அனைத்தும் அங்கு சென்றது.  சித்தார்த் அதே இடத்தில் தான் இருந்தான்.  மாலை அவர்கள் வரும்போதும்,  அதே இடத்தில் சித்தார்த்தின் கார் இருக்க..

இதன்யாவிற்கு இதயம் படபடக்க அவன் காரில் இருந்து வெளியே வந்து நின்றான். 

மாஸ்க் அணிந்திருந்தான்.  அவனுடைய கண்கள்  இதன்யாவை கூறாக பார்த்துக் கொண்டிருந்தது.

இதன்யாவுக்கு நடுக்கம் எடுக்க.. 

அப்போ நேற்று சாயந்திரத்திலிருந்து இன்னிக்கு சாயந்திரம் வரைக்கும்,  இங்கேயேதான் நின்னுட்டு இருக்காரா?  என்று பதட்டத்துடன் நேராக சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவள் சித்தார்த்திடம் எப்படி செல்வது?  என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 

போன் அலறியது! 

ஹே ஹலோ!. 

இன்னிக்கி நைட்டு என்னை பார்க்க வர! இல்லன்னா! நான் உங்க வீட்டுக்கு வருவேன் என சொல்லி சித்தார்த் போனை வைத்தவன். வாடி உன்னை இங்கேயே!. .f*.. 

நாளைக்கு சம்பவம் தான்! 

இதன்யா எட்சிலை முழுங்கி கொண்டு பார்க்க மா யாருது அந்த காரு? இங்கே நின்னுட்டு இருக்கு! அனிதா ஊரு கார் வாங்கிட்டாங்களா? என நிதன்யா வயிற்றை நீவி கொண்டே கேட்டாள். 

போச்சு செத்தென்! நிதன்யா துருவ ஆரம்பிச்சுட்டா! 

தொடரும்..

பிரியா வோட part எப்டி இருந்தது. இந்த கதைய படிக்கும் எத்தனை பேரோட அப்பா உங்களை கொண்டு போய் விட்டு வருவாங்க? வினோ பூர்ணா parents மாதிரி friend வீட்டுக்கு allow பண்ணாம இருக்காங்களா? 

Comment pannunga.. 

You may also like

Leave a Comment