Mister ARROGANT

by Pradhanya kuzhali
2.2K views

Chapter 1

அதிகாலை ஒரு 6.30 மணிக்கு  எழுந்து சோம்பல் முறித்தவள் தன் ஆசிரியர் பட்டய படிப்பு புத்தகங்கள் புரட்டி கொண்டு இருக்க அவளுடைய இடது கண்கள் துடித்து கொண்டே இருந்தது .

அவள் ப்ரைனி “என்ன டி இன்னிக்கு தான் நீ 11 ம் வகுப்புக்கு பாடம் எடுக்க போற இன்னிக்கு காலையில் இப்படி உன்னுடைய கண்கள் துடிக்கிறதே “என அவள் மூளை சொல்ல,

மனமோ “இல்ல டா எல்லாம் நன்றாகவே நடக்கும் இன்னிக்கு வெற்றிகரமாக வகுப்பு எடுக்கனும் சரியா ” 

அந்த வண்ணத்திற்கு

எப்போது நான் உன்னில் சரணடைவேன் என்ற ஏக்கம் 

அந்த காகிதத்திற்கு எப்போது உன்னை 

அள்ளி கொள்வேனோ 

என்ற  மயக்கம்

அந்த தூரிகை இருவரையும் ஒன்றாக்க காத்து கிடக்க 

அவன் தத்தி தத்தி வந்து தன் பிஞ்சு விரல்களில் தூரிகையை பிடிக்க தெரியாமல் வண்ணத்தை பூசி கொண்டு காகிதத்திற்கும் வண்ணத்திற்கும் உள்ள காதலை சேர்த்து வைத்தான் அந்த அந்த மயில் வாகனன் அழகு தமிழ் முருகன் எப்பொழுதும் எனக்கு அழகு ஓவியம் என என் தமிழ் கடவுள் முருகனை நினைத்து  இந்த காதல் கவிதையை..

உன்கூட என்னோட டார்லிங் திருச்செந்தூர் முருகன் “இருக்கிறார். இன்னிக்கு எதுவும் தவறாக நடக்க கூடாது என்று தன் இரு கைகளையும் ஒரு கும்பிடு போட்டவள்

நேரத்தை பார்க்க அது 7.00 என காட்ட வேகமாக அடித்து பிடித்து கிளம்ப தயரானாள் நம் நாயகி 

யார் அவள்????

வாருங்கள் சொல்கிறேன்


7. 30 மணி ஆக தன் விடுதி தோழியை எழுப்பிக்கொண்டே தன் கண்ணாடியை போட்டு கொண்டு 

“பூஜா எழு டி நேரம் ஆகுது என சொல்லி கொண்டே தன் பள்ளி ஆசிரியை சீருடை புடவையை அழகாக கட்டி கொண்டு அந்த நீளமான குழல் கூந்தலை பின்னலிடாமல் எடுத்து அள்ளி முடிந்து கொண்டை போட்டு கொண்டு அந்த நெட் போட்டு விட்டு கிளம்ப தயராகினாள்.


நம் நாயகி பற்றி ஒரு சின்ன அறிமுகம்

கரு நீல நிற கண்கள், அந்த கூர் நாசி அது என்று சொல்வது சீசரின் காதலி கிளியோபாட்ரா கறுப்பு நிறத்தில் இருந்தாலும் அவளுடைய நாசி தான் மிகவும் வசிகரமானது என்று புராணங்கள் கதைகளில் படித்து இருக்கிறோம் அதை போல தான் இதன்யா வரதராஜன் மா நிறம்


அவள்நீல நிற கண்கள் அந்த வசீகரிக்கும் நாசிக்கு சொந்தமானவள் தான் நம் நாயகி இதன்யா வரதராஜன் 


“பூஜா சரி நீ இப்படியே தூங்கு இன்னிக்கு தான் நம்ப பள்ளிக்கு சேர்ந்து 7 நாள் ஆகி இருக்கு அடுத்த வாரம் கல்லூரியில் நமக்கு  B.ed  க்கு பணம் கட்ட வேண்டும், ஒரு நாள் பள்ளி வரல அவ்ளோ தான் டி !என இதன்யா சொல்லி கொண்டே போக, 

பூஜா சோம்பல் முறித்து கொண்டே 


“டீச்சர் எனக்கு பத்து நிமிடம் போதும் இப்போது பார்” என்று பம்பரமாக கிளம்பி பூஜா இதன்யா முன் நிற்க 


இதன்யா அவளை பார்த்து சிரித்து கொண்டே பள்ளிக்கு நடந்து இருவரும் சரியான நேரத்திற்கு பள்ளி வளாகத்திற்குள் வந்தனர்.


தன் இஷ்ட தெய்வத்தை வேண்டி கொண்டே இதன்யா பாட புத்தகங்களை எடுத்து கொண்டு அந்த 11 ம் வகுப்புக்கு அடி எடுத்து வைக்கும் அதே நேரம் 


பள்ளிக்கு உள்ளே காலடி இல்ல வெண்ணை போல் வழுக்கி கொண்டு வந்த அந்த வெள்ளை நிற காரில் இருந்து தனது ஷி கால்களுடன் கீழ இறங்கினான் நம் நாயகன் யார் அது ????


சித்தார்த் கிருஷ்ணா kk  குரூப்ஸ் , பள்ளி , கல்லூரி, மருத்துவமனை, மால்ஸ் மற்றும் ஒரு மிக பெரிய சாம்பராஜ்யத்தின் இளவரசன் முகத்தில் இது அவன் தாய் வழி சொத்துக்கள் மட்டுமே இன்னும் தந்தை வழி சொத்துக்கள் இன்னும் இருக்கிறது.

அதை பிறகு பார்க்கலாம்.

கிருஷ்ணா என்பது அவனுடைய அப்பாவின் பெயரா!!!!

இல்லை 

அவன் அப்பா பெயர் ரவிச்சந்திரன்

கர்நாடகா மாநிலத்தின் முன்னணி முன்னால் வெள்ளித்திரை நட்சத்திரம் .

சித்தார்த் குடும்பத்தை பற்றி பிறகு பார்க்கலாம் இப்போது நம் இதன்யா என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என வாருங்கள் பார்க்கலாம்.

வகுப்பில் நுழைந்த இதன்யா அங்கு உள்ள மாணவர்கள், மாணவிகளின் முகத்தை பார்க்க அவற்றில் சில என்று சொல்ல தெரியவில்லை அவர்களின் கனவுகள் தெரியவில்லை அந்த மாணவ மாணவிகள் முகத்தில் மதிப்பெண் அதிகமாக எடுக்க வேண்டும் என்று மூளை சலவை செய்த பெற்றோர் முகங்கள் தான் அவளுக்கு நினைவு வந்தது.


உடனே இதன்யா அனைத்து மாணவர்களிடம் 

ஹலோ பாய்ஸ் அண்ட் கிர்ல்ஸ்  என்று சொல்லாமல் 

ஹலோ மிஸ் யூனிவெர்ஸ் அண்ட் மிஸ்டர் பெர்பக்ட் 

இப்போ எல்லாரும் எழுந்து நில்லுங்க! 

நான் மிஸ் உநிவெர்சா! நான் மிஸ்டர் பெர்பெக்டா என  அனைத்து மாணவ மாணவிகளும்  குழப்பத்தில் இருந்தாலும் அவளின் பேச்சு உண்மையாகவே உலக அழகி பட்டியலில் அனைத்து மாணவிகளையும் இடம் பிடிக்க செய்தது. மாணவர்கள் தங்களை ஒரு மிகப்பெரிய பிஸ்னஸ் மேன் போல் நினைக்க புன்னகையுடன் என்ன என்பது போல் திகைத்து அனைவரும் எழுந்து நிற்க 

அவர்களை பார்த்து இதன்யா இப்போ உங்களுக்கு வேதியியல் வகுப்பு அதற்கு முன்  மொட்டிவேஷன் கிளாஸ் என்று கூறி கொண்டே 

இதன்யா தன் கைகளில் கொண்டு வந்த புத்தகங்கள் மற்றும் பொருட்கள் எடுத்து மேஜை மீது வைத்து விட்டு

If you happy and you know it 

Clap your hands 

If you happy and you know it 

And you really want you show it 

Clap your hands 

என்று கூறி ஒரு ஆங்கில குழந்தை பாட்டு ஒன்று பாட அதில் தன்னை மறந்து மாணவ மாணவிகள் அனைவரும் உற்சாகமாக கைகளை தட்டி அந்த முழு பாடலையும் சிரித்து கொண்டே உற்சாகமாக பாடி படிக்க தயாராக அமர 

இங்கு இதன்யா திரும்பி அணு அமைப்பு ஆங்கிலத்தில் நடத்த  ஆரம்பித்தாள்.

சரியாக இதன்யா அந்த கரும்பலகையில் எழுதி குவாண்டம் எண்கள், ஹென்சென் பெர்க், மெண்டலின் ஆவர்த்தன அட்டவணை பற்றி விளக்கமாக நடத்தி கொண்டு இருக்க 

மாணவர்கள் இதன்யா சொல்வது அனைத்தும் கவனித்து கொண்டு இருக்க அப்பொழுது ஆஃபீஸ் ரூமில் இருந்து இவளை அழைப்பதாக சொல்ல 

இதன்யா என்னவாக இருக்கும் என்று மாணவர்களிடம் முதல் 30 அணு எண் தனிமங்களை படிக்க சொல்லி கிளம்ப மாணவர்களும் உற்சாகமாக படிக்க ஆரம்பித்தனர்.

இதன்யா ஆஃபீஸ் ரூம் சென்று வெளிய காத்திருக்க அங்கு வந்த பணியாளி ஒருவர் ,

டீச்சர் உங்களை கரெஸ்பாண்டெண்ட் வர சொல்கிறார் 

உடனே இதன்யா கொஞ்சம் அதிர்ச்சி பின் அதை வெளிக்காட்டாமல் சரி என்று கரெஸ்பாண்டெண்ட் அறை நோக்கி நடந்து சென்றாள்.

அவள் மனதில் மேடம் எதுக்கு நம்மள வர சொல்கிறார்கள். என நினைத்து கொண்டு அந்த அறையின் வெளிய நின்றவள்.

ஒரு சிறு தயக்கத்திற்கு பிறகு அந்த அறை கதவுகளை தட்டி விட்டு உள்ளே வரலாமா மேடம்……????

இதன்யா கதவுகளை திறந்து கொண்டே உள்ளே செல்ல அங்கு அவள் கண்டது முகத்தில் முகமூடி மாஸ்க் அணிந்து கொண்டு அமர்ந்து இருந்த ஒரு ஆடவன் அமர்ந்து இருந்தான்.

அவன் கண்களில் நெருப்பு மட்டும் தான் வர வில்லை அவ்வளவு கோபம் அனல் கக்கும் பார்வை இவள் மேல் வீச 

இதன்யா கேள்வியாக அவனை பார்த்து நின்று கொண்டு இருக்க 

அவனோ இவளை பார்த்து 

If you Happy and you know it 

Clap your hands ….. என்று அந்த கம்பீரமான குரலில் பாடவும் ஒரு நிமிடம் இதன்யா படபடப்புடன் நின்று இருந்தாள்.

ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு உங்கள் பாட்டு என்று கொஞ்சம் தெளிவாகவே தமிழை சரளமாக பேசியவன் .

அடுத்த நிமிடம் அவளை பார்த்து 

இது ஒன்னும் டே கேர் இல்லயே மிஸ்……

உன்னோட பேர் என்ன 

V.இதன்யா என்றாள்.

ம்ம்ம் வாட் எவ்வர்

உனக்கு கோஞ்சமாவது அறிவு இருக்கா 

உன்னை யாரு இன்டெர்வியூ பண்ணி இந்த ஸ்கூல் ல டீச்சரா எடுத்தது .

என்று சித்தார்த் இதன்யாவை பார்த்து சிடு சிடுத்து மட்டம் தட்டி பேச 

முதன் முறையாக இதன்யாவுக்கு அழுகை கூட கோபம் வந்து விட்டது .

தன் கண்ணாடியை சரி செய்தவாறே இதன்யா சித்தார்த்தை பார்த்து முறைக்க

தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்

நீ எந்த பாடம் ஹாண்டில் பண்ற

கெமிஸ்ட்ரி என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவள் சொல்ல 

சித்தார்த், இந்த ஸ்கூல் கேம்பிரட்ஜி சிலபசை ஃபாலோ பண்ணுது அது உனக்கு தெரியுமா? மேலும் அவன் அவளை பார்த்து நீ lkg, ukg கிளாஸ்க்கு நீங்கள் போங்க மிஸ் இனி உங்களுக்கு இந்த அயர் கிளாஸ்ல வேலை இன்னும் சொல்ல போனால் உனக்கு lkg ukg கூட லாயக்கு  இல்ல என்று சொல்லி அவன் அவளை வெளியே போக சொல்ல 

இதன்யாவுக்கு இதற்கு மேல் அங்கு நின்றால் தனது தன்மானம் மொத்தமும் போய் விடும் என்று வேகமாக அவள் வெளியே சென்றாள்.

வெளியே சென்ற இதன்யா இன்னும் ஒரு நிமிடம் கூட இங்கு இருக்க கூடாது என்று நினைத்தவள் 

தான் முதலாம் ஆண்டு பணம் கட்ட வேண்டும் ஆசிரியர் பயிற்சி வகுப்புக்கு என்பது கூட மறந்து 

வேக வேகமாக ஒரு காகிதத்தில் வேலை விட்டு செல்வதாக ஒரு கடிதம் எழுதியவள் அதனை எடுத்து கொண்டு எந்த ஒரு அனுமதியும் இன்றி சித்தார்த்தை பார்க்க உள்ளே நுழைந்தாள் .

இது அவளுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.

ஆனால் அவள் சென்ற நேரம் தான் மிகவும் தவறானது 

ஆம் சித்தார்த் ஒரு முக்கியமான மீட்டிங் அதாவது அவனுடைய அப்பா தொழில்கள் சில இவன் தான் பார்த்து கொள்கிறான்.

அந்த மிகவும் முக்கியமான மீட்டிங் சென்று கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் வேகமாக உள்ளே வந்த இதன்யா

ஹலோ மிஸ்டர்…. என்று

அதிகாரம் நிறைந்த குரலில் சொல்ல 

சித்தார்த்துக்கு ஒரு நிமிடம் இப்போது அவமானமாக இருந்தது.

ஏன் என்றால் கணினி திரையின் அந்த பக்கம் இருந்த அந்த நபர் தான் இதற்கு காரணம் 

யார் அது ????

சொல்கிறேன் நண்பர்களே

இப்போது இதன்யா அவனை பார்த்து 

அந்த கடிதத்தை எடுத்து அந்த மேஜை மீது வைத்து விட்டு 

சித்தார்த்தை பார்த்து மிஸ்டர் யாரு நீங்கள் என்னை வகுப்பு எடுக்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் 

நான் அப்பொழுதே நினைத்தேன் ஏன் இந்த பள்ளி மாணவ மாணவிகள் முகம் இப்படி இருக்கிறது என்று ஆனால் அதற்க்கான அர்த்தம் எனக்கு இப்போது தான் புரிகிறது.

நல்ல வேளை நான் சேர்ந்த ஒரு வாரத்தில் இந்த பள்ளி பற்றி தெரிந்து விட்டது.

என்று மிகவும் ஆக்ரோஷ தோரணையில்அவள் தன்னை வெளிப்படுத்திய நேரம் 

கனினி திரையில் அந்த பக்கம் ஒரு ஏளனமாக ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.

உடனே சித்தாரத் வேகமாக தன் கணிணிய மூடி விட்டு அவளை அனல் கக்கும் பார்வையில் பார்க்க 

இதன்யா அவனை கண்டு கொள்ளாமல் எனக்கு இந்த பள்ளியில் வேலை செய்ய விருப்பம் இல்லை என்று கூறி அவள் வெளியே செல்ல போக 

சித்தார்த் வேகமாக அவள் அருகே சென்று அவள் கைகளை பற்றி??????

தொடரும்….

EPI 2

சித்தார்த் கடும் கோபம் கொண்டு இதன்யாவின் அருகில் செல்ல அவள்  இவனை கண்டு கொள்ளாமல் கதவு வரை சென்றாள்.
இரண்டே எட்டில் அவள் அருகில் சென்றவன்.
அவள் முன் போய் நின்றான்.

சித் இதன்யாவை பார்த்து யாரை கேட்டு நீ உள்ளே வந்த ,உனக்கு கொஞ்சம் கூட மேனேர்ஸ் இல்லயா! டிஸ்க்ஸ்டிங்,

இதன்யா எதுவும் சொல்லவில்லை அவள் அலட்சியம் செய்வதை பார்த்த சித்தார்த்துக்கு மிகவும் கோபம் வந்தது
ஹே நான் பேசி கொண்டு இருக்கிறேன்,” நீ எதுவும் சொல்லாமல் என்னை பார்த்து கொண்டு இருக்கிறாய் அவ்ளோ திமிரா உனக்கு ம்ம்ம் என்றான்.

மிஸ்டர் கொஞ்சம் வழி விடுங்கள், எனக்கு இங்கே இருந்து போகனும், என்று சொல்ல சித் இதன்யா அருகில் நெருங்கி வர இதன்யா அவனை கொல்லும் பார்வை வீச “அதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை டி “என்பது போல் அவளை அவன் நெருங்கும் நேரம் சரியாக அவனுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பின் பாடலே சொன்னது அது அவனது தாய் பவானி அழைக்கிறாள் என்று அவன் அவளை பார்த்து உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறி விட்டு தன் போன் எடுத்து கொண்டு பேச சென்றான்.

இதன்யா வெளியே வந்தவள் இப்போது மிகவும் பலவீனமாக உணர்ந்தாள். அவள் மனது இப்போ என்ன செய்ய போற எப்டி பணம் கட்டுவ

எதுவும் வழி இருக்குமா
முருகா பிலீஸ் எனக்கு உதவி செய் டார்லிங்
என்று அவள் தன் இஷ்ட தெய்வத்திடம் முறையிட்டு கொண்டே சென்றாள்.

அவளுக்கு சித்தார்த் மேல் அளவு கடந்த வெறுப்பு தோன்றியது. யார் இவன்?? “எல்லாம் இவனால் வந்தது”
ஒரு டெவில் மாறி இப்போ என்னை இப்படி ஒரு நிலைக்கு தள்ளி விட்டானே , முகத்தில் மாஸ்க் வேறு திமிர் பிடித்தவன், இந்த பள்ளிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நான் கனவெல்லாம் கண்டேனே!
இது உன்னோட மனசுல அரசு பள்ளி ஆசிரியர் ஆ தான் போகனும் டி உன்னை அந்த டெவில் எப்படி நடத்துகிறான் என்று பார்த்தாயா? இதுவே அரசு பள்ளியாக இருந்தால் உனக்கு எவ்வளவு மரியாதை , வாரம் வெறும் 5 நாட்கள் பள்ளி அந்த புதிய மலர் போல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு சொல்லி புது புது விஷயம் கற்று தருவது ஆத்ம திருப்தி,
என்று அவன் மேல் வெறுப்பு என்ற மணக்கோட்டையை வலு படுத்தினாள் இதன்யா.

இதன்யா யார் அவள் குடும்பம் அவளை பற்றி ஒரு சின்ன அறிமுகம்

வரதராஜன் – தெய்வா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்
நிதன்யா, இதன்யா, நந்தன்

நிதன்யா க்கு திருமணம் ஆகி ஹைதராபாத் ல செட்டில் ஆகி விட்டாள்.

நந்தன் இதன்யாவின் அண்ணன் அவன் படித்து முடித்து வேலை தேடி ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறான்.

வரதராஜன்  இதன்யாவின் அப்பா அவள் 7ம் வகுப்பு படிக்கும் போதே இறந்து விட்டார்.

அவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் அதனால் தேவிகாவுக்கு தன் கணவன் போல பிள்ளைகளும்  ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை
அதனால் நிதன்யா டீச்சர் ட்ரைனிங் முடித்து ஒரு பட்டய படிப்பு படித்து கொண்டு இருக்கும் போதே அவளை பார்த்ததும் பிடித்து போக வீடு வந்து பெண் கேட்க தேவிகா கட்டி வைத்து விட்டார்.
இப்போது நிது மாதமாக இருக்கிறாள் அடுத்து இன்னும் கொஞ்ச நாட்கள் வளைகாப்பு, டெலிவரி எல்லாம் இவர்கள் செலவு தான் அதனால் தன் அம்மாவுக்கு தன்னால் செலவு இருக்க கூடாது என்று விடுதியில் சேர்ந்து வேலை செய்து கொண்டே படிக்க திட்டமிட்டாள்.

இதன்யாவின் குடும்பத்திற்கு ஆதரவு  எதுவாக இருந்தாலும் செய்வது அவள் மாமா தான் செல்வராஜ் தான்

இப்போது இதன்யா தன் கனவுக்காக bsc வேதியியல் எடுத்து படித்தாள். இப்போது தன் அம்மாவின் கனவு B.ed  முடித்து TET டீச்சர் எளிஜிபிலிட்டி டெஸ்ட் தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டே இவள் செல்ல அப்போது

அவள் குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழல் இப்போது தான் நிதுவிற்கு கல்யாணம் செய்து அனுப்பினார்கள் .

அதனால் இதன்யா B.ed  ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து கொண்டே தொலை தூர கல்வி ஆனால் ரெகுலர் சேர்ட்டிபிகேட் கொடுத்து விடுவார்கள் இவள் படிக்கும் கல்லூரியில்  யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டு இருக்கிறது.

இப்போது இந்த பள்ளியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு வாரம் கடந்த நிலையில் இதன்யாவின் வாழ்க்கையில் நுழைந்து விட்டான் சித்தார்த்,

அங்கு நடந்த அனைத்தும் பூஜாவிடம் சொல்ல  அவளுக்கு மிகவும் கோபம் வந்தது ஆனால் அவளால் வேலை விட்டு நிற்க முடியாத குடும்ப சூழ்நிலை

இதன்யாவை தேற்றும் விதமாக  விடு டீச்சர் நான் யாரிடமும் சொல்லி எதுவும் வேலை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றுபூஜா சொல்ல அவளும் மனதை தேற்றி கொண்டாள் .

ஆனால் இதன்யாவுக்கு தெரியவில்லை இனி அவள் நினைக்கும் எதுவும் அவள் வாழ்வில் நடக்காத ஒன்று இது அவளுடைய வாழ்க்கை அல்ல சித்தார்த்யும் இணைந்து இருக்கிறானே.

இப்படியே இரண்டு நாட்கள் செல்ல அதன் பின் இதன்யா ஒரு பேபி ஷாப் ல ஷாப் கீப்பர் பணிப்பெண் வேலைக்கு சென்றாள்.

அன்று மாலை இதன்யா விடுதிக்கு வர அப்பொழுது பள்ளியில் இருந்து வந்த பூஜா இதன்யாவிடம்

இது நாளைக்கு நம்ப ரெண்டு பேரும் காலேஜ் போகனும் டி
என்ன பூஜா திடீரென காலேஜ் வர சொல்றாங்க என களைப்பாக அவள் அமர
தெரியல இது நான் வாட்ஸ் அப் குரூப் ல பார்க்கும் போது புதுசா யாரோ வருகிறார்கள் என்று  நம்ப H.O.D செய்தி அனுப்பி இருக்கிறார்கள் என்றாள்.

உடனே சரி ok உன்னோட போன் கொடு நான் ஷாப் ல லீவு கேட்கிறேன் ஏற்கெனவே சொல்லி வைத்து இருக்கிறேன்.

பூஜா அவளை கேள்வியாக பார்த்து எப்டி டி,
“இல்ல பூஜா சம்பளத்தில் கொஞ்சம் பிடித்து கொள்வார்கள் “
ம்ம்ம் ஒன்னு கேட்கவா இது(இதன்யா) ,
ம்ம்ம் சொல்லு பூஜா,
நீ உன் அண்ணா கிட்ட கொஞ்சம் பணம் கேட்கலாமே?
இல்ல பூஜா நிது கல்யாண கடன் அம்மாவும் , நந்துவும் தான் அடைக்கிறார்கள்
இப்போ நிது கர்ப்பமா இருக்கா அதுக்கு பணம் தேவை டி நிது மாமியார் கொஞ்சம் டெரர் டி
ம்ம்ம் சரி தூங்கலாம் நாளைக்கு காலேஜ் போகனும் என்று இருவரும் அந்த விடுதி உணவை சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது.
பூஜாவும், இதன்யாவும் படிக்கும் காலேஜ் பெயர் வித்யா ஆசிரியர் பயிற்சி பள்ளி, அது வித்யா கலை அறிவியல் கல்லூரியின் ஒரு கிளை அனைவரும் பரபரப்பாக அந்த ஆடிட்டோரியத்தில் அமர்ந்து இருக்க பூஜா, இதன்யா, வளர்மதி, கீர்த்தி, வான்மதி மாணவிகள் வரிசையில் கடைசி வரிசையில் அமர்ந்து கதைத்து கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர்.

மாணவர்கள் வரிசையில் ஆதி, சூர்யா, கோகுல், வேலு, சந்துரு என இன்னும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் அமர்ந்து கொண்டு பேசி சிரித்து கொண்டு இருக்க

மேடையில் அந்த காலேஜ் முதல்வர் சீனிவாசன் அனைத்து மாணவர்களையும் பார்த்து
சைலன்ஸ்!!!!! என கத்த அனைவரும் அமைதியாகி மேடையை கவனிக்கும் நேரம்
அங்கு உள்ள பேராசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கமும் மெதுவாக பேசி கொண்டு இருக்க

அப்பொழுது அழுத்தமான காலடி ஓசையுடன் அந்த பிரத்யேக பிராண்ட் ஷூ, கோட், பிராண்ட் வாட்ச் என தனி தன்மையுடன் அந்த அரங்கத்தின் நுழைவு வாயிலின் உள்ளே சில பாதுகாவலர்களுடன் மாஸ்க் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சித்தார்த் கிருஷ்ணா

முதல்வர் அவனை பற்றி புகழ இங்கு இதன்யாவுக்கு தூக்கி வாரி போட்டது

இவனா !!!!

நாம் செத்தோம் !!!

அப்பொழுது முதல்வர் இரு வார்த்தை சித்தார்த்தை பேச அழைக்க மாணவிகள் அனைவரும் ஆஅ என பார்த்து கொண்டு இருந்தனர்

எப்படி இருப்பானோ அவன் கண்களே கத்தி போல் இருக்கிறதே என சலசலக்க

சித்தார்த் தன் மாஸ்க் கழட்டி விட்டு அந்த மைக் நேர்த்தியாக பிடித்த அந்த ஒரு நிமிடம்

அங்கு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அதிர்ச்சி தான் ஒரு நிமிட இடைவெளிக்கு பின்

சித்து !!!!
சித்து!!!!!
சித்து!!!! என கர ஒலிகளை மாணவ மாணவிகள் உற்சாகமாக கத்த கூடவே பூஜாவும் சேர்ந்து கொண்டாள்.

இதன்யாவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.
அவள் பூஜாவிடம் ஹே யாரு டி இவன் , பூஜா அவளை முறைத்து ஹே இவர் பிரபலமான ஒரு நடிகர் உனக்கு தெரியாதா அய்யோ செம்மையா இருக்காரே
என்ன நடிகரா சத்தியமா எனக்கு தெரியல பூஜா

ம்ம்ம் உனக்கு தெரிய வாய்ப்பு இல்ல இவரு சண்டல்வுட் நடிகர் அதாவது இவர் சொந்த ஊர் கர்நாடகா , பெங்களூர் என்று பூஜா அவனை பற்றி சொல்லி கொண்டே போக இதன்யா அவனை ஒரு பார்வை பார்க்க அப்போது அவனுடைய கத்தி போன்ற பார்வை இவளுக்காக காத்து கொண்டு இருந்தது.

உடனே தன் தலையை கீழ குனிந்து கொண்டாள்.

அந்த மீட்டிங் முடிய அங்கு உள்ள மாணவிகள் சித்தார்த் கிட்ட கையொப்பம் வாங்க சூழ்ந்து கொள்ள

அப்பொழுது அங்கு உள்ள பாதுகாவலர்கள் தடுத்து அவனை பாதுகாப்பாக அவன் அறைக்கு அழைத்து செல்ல போகும் போது இதன்யாவை ஒரு க்ரோதமாக பார்த்து விட்டு சென்றான்.

இதன்யாவின் மனம் உலை கலன் போல கொதிக்க இப்போது என்ன செய்ய காத்து கொண்டு இருப்பானோ அய்யோ யாரிடமும் சொல்ல முடியாதே என்று இவள் மட்டும் கவலையான முகத்துடன் அவள் வகுப்புக்கு செல்ல மற்ற மாணவ , மாணவிகள் உற்சாகமாக சென்றனர்.

முருகா..!
முருகா….!
முருகா ….!காப்பாற்று….
என இவள் வேண்டி கொண்டு இருக்கும் நேரம் இவள் காதுகளில்

ஹலோ!” தன்யா ரெண்டு டீ, சால்ட் பிஸ்கட் சாப்பிட போலாமா” என்று ஒரு குரல் கேட்க

இதன்யா ஆச்சர்யமாக  சந்தோஷமாக தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அகல பார்வையை அந்த பின்னால் இருந்து சொன்ன நபரை பார்த்தாள்.

யார் அது…..?

தொடரும்…..

EPI 3

முருகா !
முருகா !
என்று வேண்டிக்கொண்டு இதன்யா
நடந்து செல்ல,
அப்போது “தன்யா இரண்டு டீ சால்ட் பிஸ்கெட் சாப்பிட போலாமா” ?…!!!
என்று குரல் கேட்க திடுகிட்டு இதன்யா திரும்பிப்பார்க்க ,அப்போது கன்னக்குழி தெரிய புன்னகை முகமாக நின்றிருந்தான்.
யார் அவன் ???? ரிஷி

  யார் அந்த ரிஷி அதை அப்புறம் சொல்கிறேன்
அவள் அவனை பார்த்து “ரிஷி அண்ணா நீங்களா “என்று ஆச்சரியம் நிறைந்த குரலோடு இதன்யா அவனை பார்க்க,
அவளை பார்த்து முறைத்து கொண்டே பின்னாடி திரும்பி நடந்தான்.

அவள் அவனைப் பார்த்து” என்ன அண்ணா பார்த்ததும் பேசிட்டு பேசாமல் போறீங்க”! என்று கேட்கவும்,

உன்கிட்ட என்ன சொன்னேன்?
நீங்கள் என்கிட்ட என்ன சொன்னீங்க?
அவன் அடுத்த அடி எடுத்து வைக்க

சரி ,சரி “சீனியர்” இப்போ okவா என்று அவள் சொல்லிக்கொண்டே  ரிஷியின் அருகில் நடந்து செல்ல  உடனே அவன் கன்னகுழி தெரிய ஒரு புன்னகையுடன் இப்போது இயல்பாக ம்ம்ம் என்று பதில் அளிக்க

உடனே இப்போ எதுக்கு உங்களுக்கு இவ்ளோ கோபம் என்று சொல்ல ரிஷி மீண்டும் கோபமாக முகத்தை வைத்து கொண்டான். பின் சீனியர் என்று கெஞ்சும் குரலில்” ஒரு டீ ரெண்டு சால்ட் பிஸ்கட் ” என்று இதன்யா அவனை பார்த்து சொல்ல ரிஷி ஆச்சரியம் ஆகி அவளை பார்க்க

சீனியர் உங்களுக்கு மட்டும் தான் எனக்கு வேண்டாம் என்று ரிஷியின் ஆச்சரிய முகத்திற்கு பதில் அளித்தாள்.

சீனியர் ,சீனியர்!. 

ஒரு நிமிடம் போன் கொடுங்க!. என அவன் கையில் இருந்து உரிமையாக போனை பிடுங்கி தன் அன்னைக்கு கால் செய்தாள். அவள் இருக்கும் இந்த மன நிலையில் தன் அன்னைக்கு பேச வேண்டும் என தோன்றியது. 

ஏன் என்றால் தெய்வாவிற்கு இதன்யா சென்னை யில் இந்த B. Ed படிப்பது பெரிதாக விருப்ப இல்லை. வரதராஜன் அரசு வேலை பணி புரிந்து கொண்ட நேரத்தில்   இறந்து விட  தெய்வா மூவரையும் அழைத்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில்” குலவிளக்கு” அவர்களின் சொந்த ஊர் அங்கேயே வந்து செட்டில் ஆகி விட்டனர். 

 தெய்வாவின் தம்பி செல்வராஜும் அங்கேயே தன் மொத்த குடும்பத்தையும் மாற்றி கொண்டு வந்து விட்டார்.

இதன்யா, ஹலோ மா நான் சின்னு பேசுறன்.. 

தெய்வா ஒரு நிமிடம்  சந்தோசத்தில் சின்னு என்னால் தனியா இருக்க முடியல டி! ஏற்கனவே ஸ்கூல் அப்புறம் மூணு வருஷம் காலேஜ் எல்லாமே வெளியே ஹாஸ்டலில் தங்கி படித்து இப்போ இந்த ரெண்டு வருசமும் பிரிந்து இருந்தால் எப்படி டி? 

இதன்யா, அப்போ வரவா! காலேஜ் ஃபீஸ் எப்படி கட்டுவது? 

இதை கேட்டதும் அவள் அமைதி ஆகி விட எதுக்கு மா இப்படி  பேசுற நான் லீவுக்கு ஊருக்கு வரேன். என சொல்லி சில கொஞ்சலை கெஞ்சலை பேசி சமாதானம் செய்து போன் வைத்தாள். 

ரிஷி இவ்வளவு நேரமும் அவள் பேசும் அழகை ரசித்து கொண்டு இருந்தான். இதன் யா சொடுக்கு போட்டு சீனியர் பேசி முடித்து விட்டேன் என போனை நீட்ட அவன் வாங்கி கொண்டு வேகமாக நடந்தான். அவள் சீனியர் சீனியர் என்று பின்னால் தொன தொனவென்று பேசி கொண்டே சென்றாள் இதன்யா

ரிஷி மனதில் எப்போ தனு என்னை ரிஷி ன்னு கூப்பிட போற உரிமையா என்னோட காதலியாக என்று அவன் நினைத்து கொண்டு அவளை பார்க்க

இன்னொருவரும் அவர்களை வெறுப்பு நிறைந்த கண்களோடு பார்த்து கொண்டு இருந்தார்.

அது வேறு யாரும் அல்ல நம் சித்தார்த் தான், இங்கே ரிஷியும் , இதன்யாவும் நேராக காலேஜ் கேன்டீன் சென்று இதன்யா  ரிஷிக்கு பிடித்த அந்த டீ , பிஸ்கட் வாங்கி கொடுக்க அவன் அதை வாங்கி கொண்டு ஒரு சிப் எடுத்து அந்த பிஸ்கட் ஒரு பைட் கடித்து சாப்பிட

இதன்யா அவள் கன்னத்தில் கை வைத்து கொண்டு அவன் சாப்பிடுவதை பார்த்து கொண்டே
ம்ம்ம் அப்புறம் உங்க முன்னாள் காதலி பற்றி இன்னும் கேட்கவே இல்லை
ரிஷி அவளை பார்த்து “எப்டி இருக்காங்க நிதன்யா “,
ம்ம்ம் அவ நல்லா இருக்கா, நீங்களும் அவ கிட்ட உங்கள் காதல் சொல்லல ,
அவ உங்களை பற்றி என் கிட்ட சொன்னாலே தவிர ,உங்கள் கிட்ட சொல்லல ஒரு வேளை சொல்லி இருந்தால் இன்னேரம் நீங்கள் எனக்கு மாமா ஆகி இருப்பீங்க .

ரிஷி அவளை பார்த்து” யாருக்கு யார் ன்னு இருக்கோ அது விதி படி தான் நடக்கும் தன்யா”,

இப்போ நீங்கள் தன்யா அப்டின்னு அவளை தானே கூப்பிடுவீங்க இப்போ என்னை கூப்பிடுறீங்க

ம்ம்ம் சரி தான்,” எனக்கு பிடிச்ச மாதிரி உன்னை கூப்பிடட்டுமா”

ம்ம்ம் ரிஷி அவளை பார்த்து “தனு ” என்று அழைக்க ம்ம்ம் கொயிட்லி குட் என்று கூறி அவள் எழ

இரு தனு என்று அவன் சொல்லி அவளுக்கு பிடித்த galaxy சாக்கலேட்டு வாங்கி அவளுக்கு தர இதன்யா மனதில் தன் அக்காவுக்கு பிடித்தது அதனால் வாங்கி தருகிறான் என்று இன் முகத்துடன் வாங்கி கொண்டாள்.

ஏன் என்றால் அவளுக்கு இது மிகவும் பிடிக்கும் இதன்யாவுக்கு அது ரிஷிக்கு தெரியும்.  இப்போது நியாபகம் வந்தவளாய் என்ன சீனியர் இந்த பக்கம் என்று கேட்க

ரிஷி பதில் அளிக்கும் அந்த நேரம் வேதியியல் துறை h.o.d இதன்யா என்று அவள் பெயரை அழைத்து கொண்டே வேகமாக படபடப்புடன் நடந்து அருகில் வந்தார்.

இதன்யா தன் hod யை பார்த்ததும் வேகமாக எழுந்து மேடம் என்று அருகில் செல்ல “உன்னை கரஸ்பாண்டெண்ட் வர சொன்னாங்க சீக்கிரம் வா” என்று அழைக்க
உடனே ரிஷி அவரை பார்த்து நீங்கள் போங்க மேடம் நான் அவர்களை கூட்டி செல்கிறேன் என்று சொல்ல

Hod ஆச்சர்யம் ஆகி பார்க்க நான் அவரோட PA என்று சொல்ல இப்போது இதன்யாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்

உடனே hod  ரிஷிய பார்த்து சரி சார் நீங்கள் கூட்டி போங்க என்று சொல்லி அவர் செல்ல , இதன்யா சிலையாக நின்றாள்.

ரிஷி அவள் முன்  ஒரு சொடுகிட்டு வா தனு போகலாம் என்று சொல்ல இவள் வேறு வழி இல்லாமல் சென்றாள்.

ரிஷி இதன்யாவை பார்த்து என்னாச்சு தனு இவ்ளோ நேரம் பட்டாசு  எஸ்பிலோசிவ் ஆக வெடித்து கொண்டு இருந்த இப்போ உன் முகம் சரி இல்லயே! 

ஆமா எதுக்கு உன்னை சித்தார்த் சார் வர சொல்கிறார் என்ன விஷயம் என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி கொண்டே சென்றான்.

சீனியர் நீங்கள் எப்டி அவர் கிட்ட வேலை என்று  திக்கி திணறி இதன்யா கேட்க அதற்குள் சித்தார்த் அறை வரவும் உடனே அங்கு இருந்த பாதுகாவலர்கள் இதன்யாவை பார்க்க உடனே ரிஷி அவர்களை கொஞ்சம் வெளியே காத்திருக்குமாறு கட்டளையை பிறப்பித்தான்.

இதன்யா ரிஷியை  வாயடைத்து பார்க்க ரிஷி சித்தார்தின் குணம் அறிந்தவன் அல்லவா அதனால் தனு நீ போய் சார பார்த்து விட்டு வா நான் இங்கேயே காத்திருக்கிறேன்

ம்ம் சரி சீனியர் என்று அந்த கதவின் அருகில் நின்றவள் மனதில் முருகா என்று சொல்லி கொண்டே கதவை தட்டி கொண்டு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வரலாமா என்று கேட்டு பின் உள்ளே சென்றாள்.

சித்தார்த் அவளை பார்த்து ஒரு ஏளன புன்னகை சிந்தியவன்.

ம்ம்ம் மேடம் may i come in எல்லாம் கேட்கறீங்க என்று அவளை பார்த்து சொன்னவன்.இதன்யாவை பார்க்க அவள் கைகளை பிசைந்து கொண்டே நின்று கொண்டு இருந்தாள்.

எந்த பதிலும் கூறாமல் நிற்க உடனே சித்தார்த்க்கு கோபம் வந்தது அவன் அதனை கட்டு படுத்தி கொண்டு ,”ஏன் ரெண்டு நாளா ஸ்கூல் க்கு வரல”

இதன்யா அவனை பார்த்து” நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேனே “
உன்னோட ரிசைன நான் அக்ஸப்ட் பண்ணலயே,  என்று கால் மேல் கால் போட்டு கொண்டு கைகளில் ஒரு பேனாவை சுழற்றி கொண்டே அவன் பதில் சொன்னான்.

இதன்யா எதுவும் சொல்லாமல் சித்தார்த்தை பார்க்க அவன் அதிகார தோரணையில்,” நீ நாளையில் இருந்து ஸ்கூல் க்கு வர” ,இனி தான் உனக்கு இருக்கு,”  என்ன வாய் உன்னோடது”, கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் இடியட், என்று அவளை பார்த்து சித்தார்த் திட்ட

இதன்யாவுக்கு சுருக்கு என்று கோபம் வந்தது. நான் வேலைக்கு வர முடியாது, என்று சொல்லி இவள் திரும்ப உடனே சித்தார்த் ம்ம்ம் சரி, நம்ப கோர்ட் ல சந்திக்கலாம் என்று சித்தார்த் கூறினான்.

சித்தார்த் அப்படி கூறியதும் கதவு வரை சென்றவள் பாதியில் நின்று அவனை திரும்பி பார்த்து
எதுக்கு கோர்ட்ல மீட் பண்ணனும்?
சித் அவளை  அரக்கன் போல்  பார்த்து சிரித்து கொண்டே நீ போர்ஜெர் பண்ணி B.ed  முடிக்காமல்  ஸ்கூல் ல join பண்ணதுக்கு தான்

அப்புறம் காலேஜ் ல இர்ரெகுலரா வந்து ஸ்கூல் ல வேலை செய்து கொண்டு இருந்தாயே அதுக்கு தான் என்று ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர் ஊற்றி கொண்டே இதன்யாவை பார்க்க

அவள் முகம் ரத்தபசை இல்லாமல் இவன் சொல்வதை கேட்டு உறைந்து நின்றாள்.அவளின் முகத்தை பார்த்த அவனுக்கு எதையோ சாதித்தது போல் ஒரு வெற்றி களிப்பு

சித் மனதில் இது கொஞ்சம் தான் என்னை அவமானப்படுத்திய உனக்கு இன்னும் நிறைய இருக்கு என்று நினைத்தவன் அந்த  தண்ணீர் குவலையை எடுத்து கொண்டு அவள் அருகில் வந்து கொடுக்க அவள் அவனை வெறித்து பார்க்க

ம்ம்ம் என்று அதட்டினான் சித்தார்த் இதன்யா அதனை வாங்கி கொண்டாள்.

ஓகே, மிஸ் இதன்யா நாளைக்கு வந்து விடுங்கள், இன்னிக்கு இது போதும் என்று நினைக்கிறேன் .இப்போ எனக்கு கொஞ்சம் போர் அடிக்குது ,  நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்ல அவள் இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள மேஜையில் வைத்து விட்டு வெளியே சென்றாள்.

என்ன தான் நடந்தது சித்தார்த் இந்த முடிவு எடுக்க என்ன காரணம் ??????

தொடரும்…..

EPI 4

இதன்யா தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து விட்டு வெளியே சென்றாள்.
இங்கு உள்ளே சித்தார்த் அவனுடைய சூழல் நாற்காலிக்கு சென்று அமர்ந்தவன் அவளை முதன் முறையாக சந்தித்த நிகழ்வுக்கு நினைவுகளில் சென்றான்.

இங்கு தமிழ்நாட்டில் கிருஷ்ணன் அதாவது kk குரூப்ஸ் க்கு போட்டியாக நிறைய பள்ளிகள், கல்லூரி , முக்கியமாக kk குரூப்ஸ் க்கு போட்டியாக ரதிதேவி ரவிச்சந்திரன் RR குரூப்ஸ் ஆப் எடுகெசன்  மிகவும் தொல்லை கொடுப்பதால் இன்னும் தங்கள் பள்ளியை எப்படி சிறப்பாக முன்னேற்றுவது என்று கண்காணிக்கவே  சித்தார்த் பள்ளிக்கு வந்தான்.

அப்போது இதன்யா 11 ம் வகுப்புக்கு அந்த குழந்தை பாடல் பாடி வகுப்பு எடுத்து கொண்டு இருக்கும்போது அவனுக்கு மிகவும் கோபம் வந்தது.

யார் இவள் ???
11ம் வகுப்புக்கு குழந்தை பாடல் எடுத்து கொண்டு இருக்கிறாளே இவளுக்கு என்ன தெரியும்  இது போல் முட்டாள் இருப்பதால் தான் நம் தாத்தாவின் பள்ளி இப்படி இருக்கிறது என்று அவளை எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில் இதன்யாவை வர சொன்னான்.

சித்தார்த்துக்கு அவள்  கண்கள் மிகவும் ஈர்க்கும் விதமாகவும் , அவளுடைய நாசி கொஞ்சம் அவனை நிலை தடுமாற செய்ய
சித் உனக்கு ஏன் அவளை பார்த்தால் இப்படி தோன்றுகிறது
இவள் அவளை போல் இல்லை  என்று அவன் மனது சொல்ல
அந்த இன்னொருவள் யார்?????
இல்லை சித்தார்த் எல்லா பெண்களும் ஒரே மாதிரி தான் ஆண்களை மயக்கி அவளை போல் காரியம் சாதித்து கொண்டு இப்போது என்னை தவிக்க விட்டு செல்வது போல் ஏமாற்றி விடுவார்கள் என்று அவன் மூளை சொன்னது
இதன்யாவை கண்ட படி பேசி அனுப்பி விட்டான்.

அடுத்து அவன் ஒரு முக்கியமான மீட்டிங் ல இருக்கும் போது இதன்யா உள்ளே வரலாமா என்று அனுமதி கூட கேட்காமல் அவள் பாட்டுக்கு இஷ்டத்துக்கு உள்ளே வரவும் சித்தார்த்துக்கு மிகவும் கோபம் வந்தது

அப்படியே வந்தவள் சும்மா இல்லாமல் வாய்க்கு வந்த படி பேசியது மனதுள் அவள் மேல் வெறுப்பு ஏற்பட்டது.

அதை விட முக்கியமான காரணம் என்ன என்றால் அந்த மீட்டிங் ல மறுமுனையில் இருந்த நபர் தான் அது யார் ???
அது வேறு யாரும் அல்ல ரதி தேவி ரவிச்சந்திரன்

ஆம் அது சித்தார்த் அப்பாவின் இரண்டாவது காதல் மனைவி இந்த பெண்ணால் தான் சித்தார்தின் அம்மா பவானி, ரவிச்சந்திரன் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர் . சித்தார்த்துக்கு ரோஷினி என்று ஒரு தங்கை இருக்கிறாள்.

ஆனாலும் தன் அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக சித்தார்த் தன் அப்பாவின் சில தொழிலை பார்த்து வருகிறான். ரதி தேவி- ரவிச்சந்திரன் க்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறான்.

ரதி க்கு எப்படியும் அனைத்து சொத்துக்கள் எல்லாம் தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் சித்தார்த் தோற்று போக வேண்டும் என்ற எண்ணம் கிட்ட தட்ட கதையின் ஒரு வில்லி இவள் தான்( இன்னும் இருக்கிறார்கள் அதை அப்புறம் சொல்கிறேன்).

ரதி -ரவி இருவரும் ஒன்றாக திரைப்படங்களில் நடித்து அந்த ரீல் ஜோடி மிகவும் நன்றாக இருக்கிறது என்று நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொண்டார்கள்.

அப்படி இதன்யா கதவை திறந்து கொண்டு உள்ளே வரும்போது சித்தார்த் ரதியிடம் தன் அப்பவின் தொழில் பற்றி பேசும்போது நடுவில் இவள் பேசியது கேட்டு ரதி ஒரு ஏளன புன்னகை நன்றாகவே வாய் விட்டு சிரிக்க அப்பொழுது முடிவு செய்தான் சித்தார்த் இவளை ஏதாவது செய்ய வேண்டும் இந்த பெண்களே மிகவும் கேடு கெட்ட எண்ணம் கொண்டவர்கள் என்று இதன்யாவின் மேல் தீராத வன்மத்தை வளர்த்து கொண்டான்.

இன்னொரு முக்கியமான விஷயம் சித்தார்த்துக்கு தமிழ் பெண்களை பிடிக்காது ஏன் என்றால் ரதி தேவி தமிழ் பெண் இதன்யா தமிழ் பெண் அதனால் அவனுக்கு இன்னும் அவள் மேல் வன்மம் அதிகமாகியது.

சரி அவளை மீண்டும் ஏன் பள்ளிக்கு வர சொன்னான்????
ஏன் அவள் படிக்கும் காலேஜ் வாங்கினான்???

இதன்யா பள்ளிக்கு வர காரணம் அவளது திறமை தான் ஆம் அந்த ஒரு வாரம் இதன்யா சென்று வகுப்பு எடுத்த கிளாஸ் மாணவ மாணவிகள் கொஞ்சம் அந்த கற்றல் திறன் சோதனை தேர்வுகளில் நல்ல தேர்ச்சி நிலையில் பெற இப்போது சித்தார்த் அவளுடைய திறன் பற்றி புரிந்து கொண்டான் .

இது மட்டுமா காரணம் முக்கியமாக இதன்யாவை பழி வாங்க வேண்டும் . அப்புறம் அவள் சித்தார்த்தின் அம்மா பவானியால் இந்த வேலைக்கு வந்து இருக்கிறாள்.

ஆம் அவளை பவானி தான் நேர்காணல் செய்தாள்.

இதன்யா படிக்கும் காலேஜ் அது அதில் தான் ரதிதேவி கலை அறிவியல்  அந்த காலேஜ் ல தான் படித்தாள். அதனால் சித்தார்த் ரதிக்கு முன்னால் இந்த காலேஜ் தன் அம்மாவின் பெயரில் வாங்கி விட வேண்டும் என்று இந்த காலேஜ் வாங்கினான்.

ஆனால் சித்தார்த் எதிர்பாராத ஒரு விஷயம் அந்த காலேஜ்ல இதன்யா படிப்பது தான் அவன் அந்த அறையை ஒரு நோட்டம் விட அப்பொழுது இதன்யா நின்று இருந்த இடத்துக்கு அருகில் உள்ள மேஜையில் அந்த galaxy சாக்கலேட்டு இருக்க சட்டென்று எழுந்து அதனை எடுத்து டஸ்ட்பின் வரை எடுத்து சென்று பின் அதனை ஒரு பார்வை பார்த்து  விட்டு  உள்ளே போட்டான்.

சித்தார்த் மனதுள் வாடி நாளைக்கு உன்னை என்ன செய்கிறேன் என்று பார் எவ்வளவு திமிர் உனக்கு திமிர் பிடித்தவளே என்று நினைத்து கொண்டான்.

இதன்யா வெளியே வந்தவள் நேராக முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் காட்டிக்கொள்ளமல் ரெஸ்ட் ரூம் சென்றாள். போய் அங்கு கண்ணாடியை பார்த்து சிறிது நேரம் கழித்து இரண்டே சொட்டு கண்ணீர் வெறும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டவள் அவள் வகுப்புக்கு வந்து அவள் bag ல இருந்து ஒரு பொருளை எடுத்தாள்.

அது என்னவாக இருக்கும்????
அது என்ன ???
அது ஒன்னும் இல்லைங்க அது தலைவலி மருந்து தான்

அது வெறும் தலை வலி மருந்து இல்லை இதன்யாவின் இந்த  மன கஷ்டத்தை போக்கும் மருந்து அதை எடுத்து அவள் அழகாக கொஞ்சம் அவளின் நாசி, கொஞ்சம் நெற்றியின் இரு ஓரங்களில் பூசி கொண்டு அந்த வாசத்தினை முகர்ந்து அவளால் முடிய மட்டும் அந்த வாசத்தினை உள்ளே இழுத்து கொண்டாள் .

இப்போது இதன்யாவின் மனம் கொஞ்சம் நன்றாக இருந்தது இதெல்லாம் ஒரு விஷயமா இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டாள்.

இதன்யாவை தேடி கொண்டு வந்தான் ரிஷி . அவனை பார்த்து மாணவிகள் கொஞ்சம் வழிய கண்ஜாடையில்  இதன்யாவிடம் வெளியே வர சொல்ல அவளும் வேறு வழி இல்லாமல் வெளியே வந்தாள்.

ம்ம்ம் சொல்லுங்க சீனியர் , நீ தான் சொல்லனும் அவரு எதுக்கு உன்னை வர சொன்னாரு ? , அது ஒன்னும் இல்ல ஸ்கூல்ல நேர்காணல் போனேன் அதுக்காக வர சொன்னாரு வேற ஒன்னும் இல்லை என்று அவள் சமாளிக்க , ஓ அப்போ நீ kk குரூப்ஸ் ல ஸ்கூல் க்கு வர போறியா என்று ரிஷி கேட்க ம்ம்ம் ஆமா சீனியர் என்று அவள் பதில் சொல்ல அதனை கேட்டு ரிஷிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது இனி கொஞ்சம் நாளைக்கு தன்னவளை அருகில் இருந்து பார்க்கலாம் பேசலாம் என்று ரிஷி மனதில் நினைத்து கொண்டான்.

தனு உன்னோட தொலைபேசி எண் கொடு என்று கேட்க இதன்யா , இல்ல என் கிட்ட போன் இல்லை சீனியர் என்று அவள் பதில் அளித்தாள்.

அப்புறம் வீட்டில்  எப்படி பேசுவ ஆண்ட்டி கிட்ட , அது என்னோட ரூம் மெட் பூஜா போன் வைத்து இருக்கிறாள் என்று சொல்ல ம்ம்ம்ம் சரி நாம்ப நாளைக்கு பார்க்கலாம்.

சீனியர் ஒரு நிமிடம் , ரிஷி என்ன என்பது போல் அவளை பார்க்க ,நீங்கள் எப்படி இந்த ஜாப் ல நீங்கள் பிஸிக்ஸ் ல phd பண்றேன்னு சொன்னீங்க தானே

ரிஷி அவளை பார்த்து சிரித்தவன் அது ஒரு பெரிய கதை தனு நீ நாளைக்கு வா நான் சொல்கிறேன் என்று சொல்ல அவள் சரி என்று தன் வகுப்புக்கு சென்றாள்.
அங்கு சென்றவுடன் அனைத்து மாணவர்களும் சித்தார்த் பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தனர் அங்கு உள்ள மாணவி ஒருத்தி “ஹே பூஜா இவரு நடிச்ச அவளும் நானும் அதுல வர நாயகியும் சித்துவும் லிவிங் டுகெத்தேர் ல இருந்தங்களாம்”, வான் மதி ம்ம்ம் ஆமா சித்துவும் அந்த நாயகியும் சேர்ந்து ஜோடியா ஒரு 4 படம் நடிச்சு இருக்காங்க அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் , சித்து tv ல பார்க்கிறது விட நேரில் செம்ம அழகு தானே , இவங்களுக்கு சொந்தமாக சினிமா கம்பனி இருக்கு நெறைய சினிமா தேட்டர் இருக்கு என எந்த பக்கம் பார்த்தாலும் சித்தார்த் பற்றி பேச இதன்யாவுக்கு கோபம் அதிகமாக அவள் அந்த தலை வலி மருந்து எடுத்து இன்னும் பூசிக்கொண்டாள்.

மாலை ஆனது பூஜாவும், இதன்யாவும் விடுதி வந்தனர் வந்ததும் வழக்கமாக தன் அம்மா தேவகி கிட்ட பேசி விட்டு  பூஜாவிடம் தானும் பள்ளி வருவதாகவும் கூற அவள் இதன்யாவை கேள்வி கணைகள் கொண்டு துளைக்க ரிஷி அண்ணா உதவி செய்தார்கள் என்று கூறினாள். .

அடுத்த நாள் சீக்கிரமே வந்தது எப்போதும் போல இதன்யாவும் பூஜாவும் பள்ளிக்கு கிளம்பினர். இதன்யாவின் வருகைக்கு இருவர் காத்து கொண்டு இருந்தனர் ஒன்று  சித்தார்த் இன்னொருவர் ரிஷி தான்

ரிஷி இதன்யாவுக்கு ஒரு ஆண்ட்ராய்ட் போன் வாங்கி கொண்டு அவளுக்கு கொடுப்பதற்காக பள்ளிக்கு ஆவலுடன் கிளம்பினான் காரில் வரும்போது சித்தார்த் ரிஷியின் உற்சாகம் நிறைந்த முகத்தை பார்க்க தவற வில்லை.

பள்ளி வந்துவிட இங்கு அப்பொழுது தான் பூஜாவும்,  இதன்யாவும் பள்ளிக்கு உள்ளே சென்றனர் சித்தார்த் தன் மாஸ்க் இல்லாமல் நடக்க அங்கு இருக்கும் அனைவருக்கும் சித்தார்த் குணம் தெரியும் அனைவரும் கொஞ்சம் எட்ட நின்று வணக்கம் வைத்து விட்டு செல்ல இளம் ஆசிரியைகள்  பூஜாவும் தான் சித்தார்த் அழகில் மயங்கி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க

இதன்யா முன் இப்படி நடப்பது ஏனோ  சித்தார்த்துக்கு மிகவும் பெருமையாக இருந்தது. சித்தார்த் அவளை பார்க்க அவளும் இவனை சிரித்து கொண்டு பார்ப்பது போல் இருக்க சிறிது நேரம் கழித்து தான் சித்தார்த்துக்கு தெரிந்தது அவள் பார்த்து சிரிப்பது தன்னை இல்லை பின்னால் ரிஷியும், இதன்யாவும் கண்களால் பேசிக்கொள்ள இப்போது சித்தார்த்துக்கு கோபம் சுருக்கென்று கோபம் , அவமானம், ஏமாற்றம் என அனைத்தும் ஒரு சேர தோன்ற

அவன் மனதில் ஓ நீ என்னை பார்க்காமல் அவனை பார்கிறாயா இரு டி இன்று உனக்கு இருக்கிறது என்று நினைத்து கொண்டான்.

அடுத்து என்ன நடக்கும் தொடர்ந்து படிங்க????

தொடரும்… 

EPI 5

இதன்யாவுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் சித்தார்த்தை பார்த்து பயம் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

எப்போதும் போல் பள்ளிக்கு கிளம்பி சென்றாள் . அவளுக்கு தெரிந்து விட்டது இனி நம்மை சும்மா விட மாட்டான் என்று பூஜாவுடன் உள்ளே செல்ல ,சித்தார்த் அப்பொழுது தான் தன் காரில் இருந்து இறங்கி பள்ளியின் நுழைவு பகுதிக்கு வந்தான்.

சித்தார்த் எப்படி இருப்பான் ???

கத்தி போன்ற கண்கள் , ஒட்டிய இரு புருவங்கள், கூர் நாசி , என்றுமே வளர்ந்து இருக்கும் அந்த சவரம் செய்யப்படாத தாடி அந்த மீசை அந்த உதடுகள் அதில் இன்னும் அழகு தான் , அவனுடைய நிறம் தேனும் பாலும் சேர்த்தது போல , அதை விட அவன் கழுத்து தொண்ட பகுதியில் உள்ள உடைந்த குரல் வலை ஒவ்வொரு முறை அவன் பேசும்போது ஏறி இறங்கும் அந்த குரல் வளை மிகவும் அழகு , அகன்ற தோள்கள் சரியான உயரம் , கதாநாயகன் அல்லவா அதனால் ஒரு ராஜ்யத்தின் அரசன் போல சித்தார்த் இருந்தான்.

அவன் நடந்து வரும் தோரணையில் அங்கு இருக்கும் பெண்களால் அவனை விட்டு கண்களை எடுக்க முடியாது ஆண்களுக்கே உரித்தான ஒரு திமிர் , அழகு , நடை  என வந்து கொண்டு இருந்தான்.

இதன்யா சித்தார்த்தை பார்த்தாள் அது ஒரு நிமிடம் தான் அவனுக்கு பின்னால் ரிஷி வர உடனே அவள் பார்வை ரிஷியை நோக்கி சென்றது.

ரிஷி எப்படி இருப்பான் கன்னகுழி தெரிய முகமெல்லாம் புன்னகையுடன் ரிஷியை ஒரு முறை பார்த்தாலே பெண்கள் மயங்கி விடுவர் அவனுடைய குணத்திலும் சரி , புன்னகையிலும் சரி அவனும் சித்தார்த்துக்கு சலைத்தவன் இல்லை ஆனால் ஏதோ ஒன்று குறைய தான் செய்தது. ஆனால் இவனும் இளவரசன் போல் வந்து கொண்டு இருந்தான்.

இதன்யாவை பார்த்ததும் ரிஷிக்கு கன்னகுழி தெரிய ஒரு புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டே வர இங்கு பூஜா அவளிடம் ஹே இதன்யா இங்கே எதுக்கு டி சித்து வருகிறார் அய்யோ செம்மையா இருக்காரே ஒரு போட்டோ கூடஎடுக்கலாம் .

ஹே நீ ரிஷி அண்ணகிட்ட கேட்டு சொல்றியா ,மம்ம் ஒரு நிமிடம் ரிஷி அண்ணா எதுக்கு சித்து கூட வராங்க என்று பூஜா சித்தார்த்தை பார்த்த சந்தோஷத்தில் உளறி கொண்டு இருக்க

இதன்யா இது எதையும் காதில் வாங்காமல் அவள் ரிஷியை பார்க்க அப்போது அவன் டீ , சால்ட் பிஸ்கட் என கண்களில் ஜாடை கையில் குடிப்பது போல் செய்ய அவளுக்கு ஒரு சிறு புன்னகை முகத்தில் வந்தது இவள் கண்களால் ம்ம்ம் என்று சிமிட்ட எதேச்சையாக சித்தார்த் இதனை கண்டு விட்டான்.

அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது இவ்வளவு நேரம் இவள் நம்மை பார்க்க வில்லை ரிஷியை தான் பார்த்து கொண்டு வந்து இருக்கிறாள் என்று  அவன் கோபம் கொண்டு வேக நடை போட அங்கு உள்ள அனைவரும் அவனுக்கு காலை வணக்கம் சொல்லிக்கொண்டே வர இவள் அருகில் வரவும் இதன்யாவும் , பூஜாவும் சேர்ந்துஅவனுக்கு வணக்கம் சொல்ல இதன்யாவை முறைத்து பார்த்து விட்டு அவனுடைய அறைக்கு சென்றான்.

அங்கு சென்றவன் ஒரு பாதுகாளனை அழைத்து ரிஷி, இதன்யாவை பற்றி விசாரிக்க சொன்னான்.

ரிஷி வெளியே காத்து கொண்டு இருக்க அவனை அழைத்து அவனுக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பி விட்டு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அலுவலகத்தில் உள்ள ஒருவரை அழைத்து இதன்யாவை வர சொல்ல சொன்னான்.

சித்தார்த் அறைக்கு வெளியே உள்ள அமரும் இருக்கைகள் அனைத்தும் அப்புற படுத்த சொன்னான். அவன் எதிர்பார்த்தது போலவே இதன்யா வந்தாள்.

அங்கு உள்ள பணியாள் இதன்யா வந்து இருப்பதாக உள்ளே போய் சொல்ல அவளை காத்திருக்குமாறு  சொல்லவும் இதன்யா வேறு வழி இல்லாமல் அங்கு நின்று கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள்.

உள்ளே cctv காமிராவில் வெளியே அவள் காத்திருப்பதை இங்கு சூழல் நாற்காலியில் சித்தார்த் அமர்ந்து கொண்டு அவளை ரசிக்க ஆரம்பித்தான்.

அந்த படபடக்கும் விழிகள் ஒவ்வொரு முறையும் அவள் கண்ணாடியை சரி செய்வது அவளது புடவையை இடை, மேலே அங்கங்களை சரி செய்வது என ஏதாவது செய்து கொண்டு அருகில் உள்ள தண்ணீர் எடுத்து கொஞ்சம் பாருகினாள்.

சித்தார்த் இவளை பார்வையில் பருகி கொண்டு இருந்தான்.நேரம் செல்ல செல்ல இதன்யாவின் முகம் மாற தொடங்கியது சித்தார்த் அறையை பார்த்து முறைத்து விட்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள்.

சித்தார்த் நன்கு அமர்ந்து கொண்டு அவளது கோபத்தை ரசித்து கொண்டே உன்னோட மூக்குக்கு மேல கோபம் வருது ம்ம்ம் , நல்லா தான் இருக்க டி உன்னோட கோபம் செம்மயா இருக்கு என்று அவன் முன்னால் இருந்த அந்த கணினி திரையில் அவளது உருவத்தினை வருடினான்.

சித் மனதில் இப்போ எதுக்கு உன்னோட எண்ணம் அவ மேல இருக்கு ,”அவளை நீ பழி வாங்க தான் வர வைத்து இருக்கிறாய்”. அவன் தன் மனதிடம்” இதுவும் ஒரு வகை பழி வாங்குவது தான்” என்று  சொல்லி கொண்டே அவளை இதற்கும் மேல் காக்க வைக்க மனம் இல்லாமல் உள்ளே வர சொல்ல சரியாக மதிய உணவு இடைவெளி மணி அடித்தது .

இதன்யா மனதில் அய்யோ இவ்ளோ நேரம் என்னை இங்கு தேவையில்லாமல் நிற்க வைத்து விட்டானே திமிர் புடிச்சவன் என்று திட்டி கொண்டே உள்ளே சென்றவள் அனுமதி கேட்டு கொண்டே சென்றாள்.

சார் என்னை வர சொன்னீர்களா ? என கேட்க சித்தார்த் அவளை பார்க்காமல் முன்னால் இருந்த கணினி திரையில் கவனம் செலுத்தி கொண்டே ம்ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தான்.

மதிய இடைவெளி அதனால் சித்தார்த்துக்கு உணவு வர ரிஷி அதனை எடுத்து கொண்டு உள்ளே வர அங்கு இதன்யா நின்று கொண்டு இருக்க உடனே கண்களால் இங்கு என்ன செய்கிறாய் ?என்று கேட்கவும் இதன்யா சித்தார்த்தை கண்களில் ஜாடை செய்தாள்.

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்துக்கு எரிமலை வெடித்து சிதராத குறை ஒன்று தான்

ரிஷி யூ கேன் கோ , என்று சித்தார்த் கூறினான்.

உடனே ரிஷி திகைத்து விட்டு ஓகே சார் என கூறி விட்டு இதன்யாவை ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு சென்றான்.

இதன்யா அவனை பார்த்து சார் ! என்று அழைக்க
ம்ம்ம்ம் என்று அவளை மேல் இருந்து கீழ் ஒரு நோட்டம் விட்டு கொண்டே அவளை பார்க்க அவன் பார்வை மாற்றம் அறியாமல்

என்னை எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க

எனக்கு முதலில் சர்வ் பண்ணு என்று சித்தார்த்  சொல்ல

ஒரு நிமிடம் தயங்கியவள் பின் வேறு வழி இல்லாமல் அந்த உணவுகளை எடுத்து அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் பரிமாற ஆரம்பித்தாள்.

அவள் எதிர்வினை கண்டு சித்தார்த் திருப்தி பட்டு கொண்டான்.

இருந்தாலும் அவன் மனதில் நான் மட்டும் உன்னை இப்போ போக விட்டு இருந்தால் அந்த ரிஷி கூட போய் ஒன்றாக ரெண்டு பேரும் சேர்ந்து லன்ச் சாப்பிட்டு இருப்பீர்கள்என்று நினைத்தவன் நேர்த்தியாக அந்த உணவுகளை சாப்பிட ஒரு நிமிடம் இதன்யா அவன் சாப்பிடும் விதத்தை பார்த்து அசந்து தான் போனாள்.

நன்கு வளர்க்கப்பட்டவன் ஆனால் திமிர் தான் தலைக்கு மேல் உள்ளது என நினைத்து கொண்டாள்.

சித்தார்த் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த உணவு தட்டுகளை இதன்யா எடுக்க செல்ல சித்தார்த் உடனே வேண்டாம் அதற்கு பணியாள் வருவார்கள் என  கூறி விட்டு அவன் கை கழுவி விட்டு கைகளை துடைத்துவிட்டு செல்ல அதற்குள் பணியாள் வந்து அந்த இடத்தினை சுத்தம் செய்து விட்டு சென்றனர்.

மீண்டும் தன் இடத்தில் வந்தவன் அவள் அங்கு நின்று கொண்டு இருப்பதை பார்த்து  அங்கே சுவற்றில் சாயிந்தவாறு கைகளை கட்டி கொண்டு அவளை பார்க்க இவன் வருவான் என்று அவள் காத்து கொண்டு இருக்க

அவளை காக்க வைக்காமல் அவள் பின்னால் வந்தவன் மிஸ் இதன்யா என்று அழைக்க அவள் என்ன என்பது போல் திரும்பி பார்க்க

உன்னை எதுக்கு வர சொன்னேன் அப்டின்னு நான் மறந்து விட்டேன் நீ இப்போ போகலாம் என்று சொல்லவும்

இதன்யாவுக்கு அவன் மேல் மூக்கு மேல் கோபம் தான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மனதில் அவனை திட்டி கொண்டே சரி சார் என்று கோபத்தில் சொல்லி விட்டு இவள் வேக நடை போட

அங்கு அழகுக்காக தொங்கவிட பட்டு இருந்த ஒரு அழகு பொருள் பட்டாம் பூச்சி போல் இருக்கும் அந்த பொருள்இவள் வேக நடையில் அதை கவனிக்க வில்லை இதன்யாவின் கொண்டை வலை அதில் மாட்டிக்கொள்ள உடனே இவள் அதை கவனிக்காமல் அடுத்த அடி வைக்க அவளது கொண்டை பிரிந்து மொத்த கூந்தலும் காற்றில் பறக்க தேவதையாக தெரிந்தாள்.

சித்தார்த் இதனை எதிர்பார்க்க வில்லை இவ்வளவு கூந்தல் அதுவும் கட்டபடாமல் இவ்வளவு அழகாக இருக்கிறாளே என்று தன்னிலை ஒரு நிமிடம் மறந்து தான் போனான்.

இதன்யா தன் கூந்தலை ஒரு புறம் போட்டு கொண்டுஅவனை பார்த்து மன்னித்து விடுங்கள் தெரியாமல் அவிழ்ந்து விட்டது என்று கூறி கொண்டே அந்த வலையை எடுக்க முற்பட அது இவளுக்கு எட்ட வில்லை.

சித்தார்த் அவள் அருகில் பின்னால்  வந்து அதனை எடுத்து கைகளில் கொடுக்க அவன்  அருகாமை முதன் முதலில் அவளுக்கு ஒரு சங்கடத்தை கொடுத்தது. அவள் தள்ளி நிற்க அப்பொழுது தான் சித்தார்த் உணர்ந்தான்.

இவ்வளவு நெருக்கமாக இதன்யாவின் அருகில் இருப்பதை உணர்ந்தான் அவள் கண்களை அங்கும் இங்கும் அலைபாய விட்டு பின்னால் தள்ளி நிற்க இவன் அவளை நோக்கி ஒரு காலடி வைத்தான். அவள் நகர இவனும் நகர்ந்தான்.

அவளுக்கு மிகவும் அருகில் வந்து அந்த நெட் அவள் கைகளில் திணித்து விட்டு சட்டென்று விலகினான்.

வேக வேகமாக அவள் வெளியே சென்று விட்டாள் சித்தார்த் அவள் செல்வதை தான் கணினி திரையில் பார்க்க அவள் தன் இதயத்தை பிடித்து கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அங்கு உள்ள தண்ணீர் எடுத்து ஒரே மூச்சில் குடித்தாள்.

பின்னர் தன்னை ஒருவாறு சமன் செய்து கொண்டு அங்கு இருந்து கிளம்பினாள். போகும் அவளை சிறு புன்னகை முகத்துடன் பார்த்து கொண்டு இருந்தான் சித்தார்த்

இது சிறிது நேரம் தான் அடுத்து சித்தார்த் கண்ட காட்சியில் கோப  நெருப்பு தான்…..

தொடரும்….

EPI 6

இங்கே சித்தார்த் இதன்யாவின் பின்னால் நின்று கொண்டு இருக்க  அப்பொழுது தான் அவனுடைய நீண்ட கைகள் இருப்பதை பார்த்தாள். 

சித்தார்த்  இதன்யாவின் பின்னால் நின்று கொண்டு அதை  அவன் எடுக்க அப்பொழுது தான் அவள் பின்னால் இருந்து நீண்ட கைகள் எடுக்க  உடனே அவள் திரும்ப சித்தார்த் மிகவும் அருகில் இருப்பதை உணர்ந்தாள்.

எப்போதும் இல்லாமல் அவள் இதயம் மிகவும் வேகமாக துடித்தது. நம் சித்தார்த் அவ்வளவு அழகு அவனுடைய அந்த அடர்ந்த கண் இமைகள் மிகவும் அழகு அந்த குரல் வளை மேலும் கீழும் நகர்வது இன்னும் அழகு தான் இதன்யாக்கு முதன் முதலில் ஒரு ஆடவன் அருகில் வரவும் இப்படி படப்படப்பாக இருக்கிறாளா! இல்ல சித்தார்த் தான் இதுக்கு காரணமா என்று அவளுக்கு தெரியவில்லை.

அந்த அறையில்  ac இருந்தும் அவளுக்கு வியர்த்தது. அவளது நெற்றியில் இருந்து ஒரு வியர்வை துளி வழிந்து கண்ணாடி அருகில் வழிந்து செல்ல அதனை தன் கைகளால் துடைத்தாள்.

உடனே தன்னிலைக்கு வந்தவள் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க சித்தார்த் அவளை நோக்கி ஒரு அடி வைக்க அந்த அறையில் இருவர் மட்டுமே இருக்க அவள் கால்கள் தானாகவே பின்னால் எடுக்க இவன் கைகளில் கொடுத்து விட இதன்யா வேகமாக வெளியே வந்தவள் தண்ணீரை குடித்து விட்டு நேராக ரெஸ்ட் ரூம் சென்றாள்.

ரெஸ்ட் ரூமில் உள்ள கண்ணாடியில் இதன்யா மனது “ஹே என்னாச்சு இதன்யா உன்னோட இதயம் நீ ஏன் அவன் பக்கத்தில் வந்ததும் அப்படி துடிச்ச “

எனக்கு தெரியல….. என்று இதயம் சொல்ல

மூளை “பொய் சொல்லாத அவனை பார்த்தால் உனக்கு ஏதோ ….. அவனோட கோபத்தில்  கண்ணு துடிக்குது! 

நிறுத்து ,மண்ணாங்கட்டி !”அவனை பார்த்தால் எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகுது கோவம் கோவமா வருது திமிர் புடிச்சவன்.”

அவள் மூளை ம்ம்ம்” நீ சொல்றது சரி தான் அது அவன் தூரத்தில் இருக்கும்போது, பக்கத்தில் இருந்தால் என்ன ?”

பக்கத்தில் இருக்கும்போது ஒ ஒன்னும் இல்லயே ….
இப்போ ஏன் உன்னோட இதயம் இப்படி துடிக்குது? என மூளை கேட்க
அது எனக்கு தெரியல ?

அப்போ அன்னிக்கு அவன் உனக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு வந்து அந்த டம்ளர் நீட்டும்போது கூட இதே மாதிரி தான் உன்னோட இதயம் துடித்தது ஏன் ?

அது ஏன் ?எதுக்கு ? அது உனக்கு தேவை இல்ல brainy இனி அவன் இருக்கும் பக்கமே போக கூடாது என்று தன்னை ஒருவாறு சரி செய்து கொண்டு வெளிய வந்தாள் இதன்யா.

அங்கு அவளுக்காக ரிஷி காத்து கொண்டு இருக்க ,”சீனியர் இங்கே என்ன பண்றீங்க?”
அவன் அவளிடம் ,”மிஸ் நீங்கள் இன்னும் லன்ச் சாப்பிடவே இல்லை நியாபகம் இருக்கா” …..

அச்சோ !….

நான் மறந்து போயிட்டேன் எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க என்று அவன் அருகில் இவள் நடை போட்டு கொண்டே பேச ரிஷி அவளின் பேச்சில் சொக்கி போனான்.

அங்கே சென்றவுடன் இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர்.

இங்கே சித்தார்த் அவள் சென்றதும் தன் இருக்கைக்கு வந்தவன் இவனது ரூமில் உள்ள cctv காட்சிகளை எடுத்து பார்க்க அது அவனுக்கு ஒரு புது உணர்வாக இருந்தது.

அவன் மனது அய்யோ செம்மையாஇருக்கா டா ?மயக்குறா!
என்ன மூக்கு !
என்ன கண்ணு…. எவ்ளோ கூந்தல்! கட்டபடாமல் இவ்ளோ அழகா இருக்காளே!
“அப்டியே கொல்றா என்னை”

ஆனால் ஏதோ ஒன்னு எஸ்ட்ரா இருக்கு, ஒன்னு இல்ல! ரெண்டு !என்று மூளை சொல்ல ,

என்ன அது !  திமிரு ரொம்ப அதிகம் , உடனே மனது , அப்புறம் என்ன அது எனக்கு தெரியுமே அவளுக்கு உடம்பு முழுக்க திமிர் தான்

மூளை “அவளோட கண்ணாடி” அதுல என்ன என்று சித்தார்த் மனது கேட்க ம்ம்ம் ஆமா அது மட்டும் இல்லனா இன்னும் அவள அடக்க முடியாது
ஏன் என்று அவன் மனம் கேட்க மூளையோ, “அவளோட மொத்த அழகையும் அந்த கண்ணாடி தான் மறைத்து  வைத்து இருக்கு”

ம்ம்ம்ம் கரெக்ட் அவள் கண்ணாடி மட்டும் போடாமல் இருந்தால் இன்னும் செம்மையா இருப்பா என்று சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டவன்.
என்ன சித் நீ அவளை பத்தியே யோசித்து கொண்டு இருக்க” அவள் ஒரு மாய வலை நீ அவளிடம் மாட்டிகொள்ளாதே”
எல்லா பெண்களும் காரியவாதிகள் என்று சித்தார்த் வாழ்க்கையில் உள்ள இரண்டு இரண்டு பெண்களை நினைத்து கூறி கொண்டான்.
அதில் ஒன்று சித்தார்த்தின் சித்தி ரதி தேவி இன்னொருவர் யார்?
அதை அப்புறம் சொல்கிறேன்.

இப்படி சித்தார்த் நினைத்து கொண்டு இருக்கும்போதே ரிஷி மற்றும் இதன்யா பற்றிய விவரங்களை இருவருக்கும் உள்ள விவரங்களை அனைத்தும் சேகரித்து கொண்டு இருவர் சித்து அறையின் வெளியே நிற்க

சித்தார்த் தன் இயல்பு நிலைக்கு வந்தவன். அவர்களை உள்ளே வர சொல்ல அவர்கள் கொஞ்சம் பதட்டத்துடன் உள்ளே சென்று ஒரு கோப்பு எடுத்து அவனிடம் நீட்டினர் .

அதில் ரிஷியின் பள்ளி கல்லூரி புகைப்படம் இதன்யா பள்ளி கல்லூரிகளில் எடுத்த படங்கள் இருக்க,

அதனை சித்தார்த் பார்த்து கொண்டே அவர்களை ஒரு பார்வை பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் சொல்லுங்க என்பது போல் இருக்க

இருவரும் மாறி மாறி அவர்கள் சேகரித்த தகவல்கள் அனைத்தும் கூற தொடங்கினர்.

சார்..”ரிஷி சாரும் இதன்யா மிஸ்சோட அக்கா ரெண்டு பேரும் ஒரே பள்ளி படிக்கும்போதே நிதன்யா ரிஷி சாரை ஒன் சைடா லவ் பண்ணி இருக்காங்க “

சித்தார்த் முகம் கேள்வியாக அவர்களை பார்க்க அவர்கள் சார் இதன்யா மிஸோட அக்கா பெயர் நிதன்யா , அப்புறம் காலேஜ் ல நம்ப ரிஷி சாரும் மிஸோட அக்காவ விரும்பி இருக்காரு ஆனால் அவங்க கிட்ட சொல்லல .

காலேஜ் முடிச்சதும் மிஸ் அக்காவுக்கு கல்யாணம் ஆகி இருக்கு அவங்க லவ் பண்ண விஷயம் இதன்யா மிஸ்க்கு மட்டும் தான் தெரியும் என்று இன்னும் சில விவரங்களை அவர்கள் சொல்ல அவர்களை பார்த்து போதும் என்பது போல் கைகளை அசைக்க விட்டால் போதும் என்று இருவரும் சென்றனர்.

அவர்கள் சென்றவுடன் அந்த புகை படங்களை எடுத்து பார்த்துக்கொண்டே ம்ம்ம் என்னோட கணிப்பு எப்போதும் தவறா போகாது உன்னோட அக்கா சும்மா சொல்ல கூடாது டி உன்னை போல் தான் இருக்கிறாள் அப்படியே இவனை லவ் பண்ணிட்டு வேற ஒருவனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா எல்லா பொண்ணுங்களும் ஏமாற்றுகாரிகள் என்று நினைத்தவன்.

ரிஷியை ம்ம்ம் ரிஷி நீ அதுக்கும் மேல அக்கா தங்கை ரெண்டு பேரையும் லவ் பண்ற முன்ன அக்கா இப்போ என்று தன் பற்களை நற நரத்து கொண்டே” இப்போ இதன்யா” என்று கூறினான்.

அப்போ என் தங்கைக்கு என்ன பதில் சொல்ல போற நீ என்று மனதில் நினைத்து கொண்டான்

அவள் என்ன செய்கிறாள் என்று cctv footage ல பார்க்க அவளும் ரிஷியும் சேர்ந்து உணவு உண்ணும் காட்சி தான்

அப்போது ரிஷிக்கு சாப்பிடும் போது திடீரென புரை ஏற இதன்யா உடனே எழுந்து தண்ணீர் அவன் அருகில் நீட்ட பின் ரிஷி இன்னும் இரும்பிக்கொண்டே இருக்க இதன்யா சட்டென்று அவன் தலையை தட்ட ரிஷி இதனை எதிர் பார்க்க வில்லை காதலுடன் இதன்யாவை பார்க்க ஆனால் அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிய வில்லை.

இதன்யா ரிஷியின் தலையில் கைகளை வைக்கும் போதே இங்கு சித்தார்த்துக்கு கைகள் வேகமாக மடக்கினான் அவனுக்கு சுருக்கு என்று கோபம் ஏறியது .

ஏனோ சித்தார்த்துக்கு இதன்யா ரிஷியிடம் நெருக்கமாக இருப்பதுபிடிக்க வில்லை.

“ஏய் இரு டி நான் வருகிறேன் ,எவ்வளவு திமிர் டி,அவன் தலையில் தட்டி விடுகிறாயா நீ  “என்று சித்தார்த் அவன் வேலையை ஆரம்பித்தான்.

இங்கே பெங்களூரில் மோகன் படபடப்புடன் நின்று கொண்டு இருந்தான். “டப்பென” அறையின் கதவை வேகமாக சாத்தும் சத்தம் கேட்டது. 

மோகனுக்கு பயத்தில வியர்வை வழிய அதை துடைத்து கொண்டே அடுத்து பேச வர நவீன் கோபமாக ஸ்டாப் இட்!  இன்னும் என்ன சொல்ல போற? என்று அவன் கைகளை இறுக்கி மடக்கினான்.

யார் அவன் வேறு யார் நவீன் குமார் தான்!. அவனை பற்றி விரிவாக வரும் பகுதியில் பார்க்கலாம். 

மோகன், “சார் ஒரு நிமிடம் அந்த காலேஜ் தான் நம்ம கையை விட்டு போச்சு! ஆனால் அந்த பவானி வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில் ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் வாங்கி இருக்கோம்!. மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் சித்தார்த் ரவிசந்திரனுக்கு  இணையாக அந்த இடத்தில நம்ம இருக்கோம்!”

நவீன் இறுக்கத்துடன் எதையோ யோசித்தான். மோகன் மனதில் இவரொட பெர்சனல் அசிஸ்டன்டா வந்த நாள் தான்.  என் வாழ்க்கையில் நானே குழி தோண்டி கொண்டது.  என நினைத்து கொண்டு இருக்க.. 

மோகன்!..

மோகன்!. 

ச சார்!. என அவன் சிந்தையில் இருந்து நினைவுக்கு வர ஆர் யூ ஹியர் வேலை நேரத்தில் கனவு காண வேணாம்! என எழுந்து நின்றான். 

ஓகே சார் இனி கனவு காண மாட்டேன்!. 

என்ன? 

சாரி சார் எதோ தெரியாமல் பேசி விட்டேன். என மோகன் சமாளித்தான். 

நவீன் நேராக அவன் அறை பக்கம் திரும்பி கொண்டே நாளைக்கு நான் அந்த காம்ப்ளக்ஸ் பார்க்கனும் ஏற்ப்பாடு பண்ணிடு என சொல்லி கொண்டே சென்றான். 

உள்ளே சென்ற நவீன் குளியலறை புகுந்து கொண்டான். நவீன் குமார் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் ஒருவன்! 

நவீன் குமாருக்கும் சித்தார்த் கிருஷ்ணாவுக்கும் என்ன சம்மதம்? ஏன் அவன் சித்தார்த்தின் மீது கோபமாக இருக்கிறான். இந்த கேள்விகள் அனைத்துக்கும் கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும். 

நவீன் குமார் குளித்து முடித்து வெளியே வந்தவனுக்கு போனில் ஒரு செய்தி ச்ச டேமிட் எவ்ளோ லாஸ்! என அவன் கோட் அண்ட் ஜாக்கெட் என எடுத்து போட்டு கொண்டு சித்தார்த்! உன்னை விட மாட்டேன் டா! என சொல்லி கொண்டே  வேகமாக நகர்ந்தான். 

தொடரும். …

EPI 7

சித்தார்த் அவர்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதை பார்த்து உள்ளுக்குள் அடக்க முடியாத ஆத்திரம் வர உடனே அவன் ரிஷிக்கு கால் செய்தான்.

ரிஷி தனது கை பேசியை சைலண்டில் போட்டு இருக்க அதை அவன் கவனிக்க வில்லை.
சித்தார்த் இப்போது நேராகவே கிளம்பி விட எண்ணி அவன் வெளியே சென்ற போது ரிஷியின் அறையை கடக்கும் நேரம் உள்ளே அவன் காலையில் பார்த்த அந்த ஆண்ட்ராய்ட் ஆப்பிள் போன் இருக்க உடனே இப்போது சித்தார்த் மனது வேறு ஒரு திட்டம் தோன்றியது.

சித்தார்த் அவனது போனில் ஒரு நபருக்கு கால் செய்தான். 

ஹே எங்க இருக்க? ….

நீ எதுக்கு டா எனக்கு போன் பண்ண! 

ரிஷி!… என்று சித்தார்த் இழுத்து விட்டு பின் சரி நான் உனக்கு தெரியாமலே போன் பண்ணிட்டேன் ok பாய்

அண்ணா … ! அண்ணா ! பிலீஸ் போன் வைக்காத ரிஷி பற்றி என்ன என்று ஒரு ஆற்றாமை ஆவலுடன் வினவினாள் ரோஷினி!

ம்ம்ம் சித்தார்த்தின் தங்கை ரோஷினி ரவிச்சந்திரன் தான் அது அப்பா செல்லம் பவானி என்றால் உயிர்

அண்ணா இருக்கியா?
அண்ணா….
ம்ம்ம் என்று ஒற்றை பதில் தந்தான் சித்தார்த்

ரிஷி பற்றி என்ன அண்ணா சித்தார்த் அவளிடம் ஹே ரிஷி உனக்கு போன் வாங்கி வைத்து இருக்கிறான் உங்கிட்ட சொன்னனா?

க்கும்… “நீ வேற அவன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசமாட்டிக்கிறான் நானும் விடாமல் காலை மதியம் இரவு என மூன்று வேலையும் போன் பண்றேன் வாட்ஸ் அப் ல மேசஜ் பண்றேன் ஆனால் ஒரு பதில் கூட ரிஷி அனுப்ப மாட்டிங்குறான். FB ல friend requst கொடுத்து 3 மாசம் ஆகுது அதை கூட ஏற்றுக்கொள்ள வில்லை சித்து என்று மிகவும் கவலை கொண்டு ரோஷினி சித்து கிட்ட ,நான் எப்படி அவன் மனதில் இடம் பிடிக்க அப்டின்னு தெரியல சித்து!” என்று மிகவும் கவலையாக சொல்ல,

எப்போதும் எலியும் பூனையுமாக சண்டைபோட்டு கொண்டு சுட்டி தனமாக  இருக்கும் தன் தங்கை இப்படி கவலையாக பேசவும் சித்தார்த் மனம் உண்மையாகவே வருந்தியது அந்த வருத்தம் கோபமாக இதன்யாவின் மேல் சென்றது.

ரோஸ்னி என்று அழைத்த அவன் ,”இந்த சித்தோட தங்கை எப்போதும் கவலை பட கூடாது”.

“சித்து நான் அழகா இல்லயா? என் பின்னால் எத்தனை பசங்க சுத்துறாங்க ஆனால் ரிஷி என்னை திரும்பி கூட பார்க்க மாட்டிங்குறான்.”

“என்னோட குட்டி டெவில் தேவதை நீ கவலை படாதே ரிஷி உன்னிடம் சீக்கிரமே ப்ரொபோஸ் பண்ணுவான்’என்று சொல்ல நிஜமாவே இது நடக்குமா அண்ணா! என்று ஆசையாக ரோஷினி கேட்க ம்ம்ம் நான் இருக்கிறேன் ரோஸ்னி என்று கூறி போன் வைத்தான் சித்தார்த்.

சித்தார்த் இயல்பாக இருப்பது அவன் அம்மா, தாத்தா, ரோஷினி, அப்புறம் இருவர் குரு பிரகாஷ் ரெட்டி, தாரா வெங்கட் இருவரும் நண்பர்கள் இவ்வளவு தான் அவன்

ரிஷி யார் ?
ரிஷியின் அம்மா ராதிகாவும், பவாணியும் தோழிகள் ராதிகா சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தன் டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு  அப்பாவை எதிர்த்து செய்து கர்நாடகால இருந்து தமிழ்நாடு வந்து விட்டார்.

ரிஷியின் தாத்தா ராஜு மிகவும் பெரிய செல்வந்தர் ஆனால் சரவணன் சாதாரண குடும்பம் இப்போது ராஜு மனம் மாறி தன் சொத்துக்கள் அனைத்தும் ரிஷி பார்த்துக்கொள்ள வேண்டும். என்று அவர் கட்டாயத்தின் பேரில் தன் அம்மா ராதிகாவின் காரணமாக ரிஷி சித்தார்த்துக்கு உதவி செய்து அவனிடம் இருந்து கற்றுக்கொள்ள அப்புறம் முக்கியமான விஷயம் நம்ப சித்தார்த் பிஸிக்ஸ் மூளை அதாவது பிஸிக்ஸ்ல பிரத்யேகமாக டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறான். அவனிடம் ph.d பண்ண வேண்டும் என்பது தான் ரிஷியின் கனவு வேறு ஒன்றும் இல்லை.

சித்தார்த்தின் தங்கை ரோஷினி ரிஷியை பார்த்ததும் காதல் கொண்டு தன் அம்மா, தாத்தா, ஏன் ரிஷியின் அம்மா ராதிகாவிடம் சொல்லி விட்டாள்.

ராதிகாவுக்கும் மிகவும் சந்தோஷம் தான் அதனால் சீக்கிரமே ரிஷியின் காதல் பெற்று விட வேண்டும் என்பது ரோஷினியின் ஒரே லட்சியம்.ஆனால் ரிஷி பணக்கார வாரிசு என்று இதன்யாவுக்கு தெரியாது.

      *****

இங்கு இதன்யா ரிஷியிடம் ” சீனியர்”….

ம்ம்ம்.. சொல்லு தனு

நீங்கள் எப்படி இங்க ஜாய்ன் பன்னீங்க?
ரிஷி அவளை பார்த்து பேச வர அப்பொழுது இதன்யா மிஸ்… என்று பின்னால் இருந்து குரல் கேட்க, அவள் என்ன என்பதை போல் எழ மிஸ் உங்களை தலைமை ஆசிரியர் வர சொன்னாங்க, என்று அந்த பணியாள் சொல்ல ரிஷி” நீ போ தனு நான் ஈவினிங் உனக்கு வெய்ட் பண்றேன்”

ம்ம்ம் ஓகே சீனியர் நான் போய்ட்டு வரேன் என்று அவள் வேக வேகமாக தலைமை ஆசிரியர் அறைக்கு செல்ல அவர் இவளிடம் மிஸ் இதன்யா உங்களுக்கு வகுப்பு காலஅட்டவணை மாறி இருக்கு நீங்கள் இப்போது இருந்து +1க்கு வேதியியல் வகுப்பு மதியமும், நாளையில் இருந்து +2 க்கு வேதியல் வகுப்பு எடுக்க வேண்டும் காலை 12ம் வகுப்பு, மதியம் 11 ம் வகுப்பு சரியா.என்று அவர் இவளை பார்க்க,

சரி சார் என்று இதன்யா சந்தோஷம் நிறைந்த முகத்துடன் வெளியே செல்ல தலைமை ஆசிரியர் உடனே போன் செய்து சார் நீங்கள் சொன்னது போலவே சொல்லி விட்டேன். என்று சித்தார்த் கிட்ட சொல்ல
ம்ம்ம் என்று சொல்லி அவன் போன் கட் செய்தான்.

சித்தார்த் ஒரு தந்திர புன்னகை சிந்தி இப்போ ரிஷி உன்னை கவனிக்க வேண்டுமே என்று அவனை அழைக்க ரிஷி சித் அறைக்கு வந்தான்.

ரிஷி…. சொல்லுங்க சார்
இன்னிக்கு ரோஷினி உனக்கு கால் பன்னாளா?
அது!… என்று சிறு அமைதிக்கு பிறகு “ஆமா சார் மேடம் எனக்கு கால் பண்ணாங்க நான் கொஞ்சம் வேலையா இருந்தேன் அதனால எடுக்க முடியல .”

சித்தார்த்துக்கு மனதில் “ம்ம்ம் உன்னோட வேலைய தான் நான் பார்த்தேனே!” என்று நினைத்தவன்.

“ம்ம்ம் ஓகே நீங்கள் இன்னும் இரண்டு நாளில் நம்ப காலேஜ் க்கு போய் உங்க thesis க்கு உண்டான வேலைய பாருங்கள்.” என்று சொல்லவும் இந்த முறை ரிஷிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது இதன்யா இங்கு இருக்கிறாள் அவளை விட்டு எப்டி இருக்க முடியும் என்று அவன்முகம் வாட அதற்கு காரணம் தான் சித்தார்த்துக்கு தெரியுமே “வாட் ஹப்பன் ரிஷி?”
நத்திங் சார் , எனக்கு ஓகே என்று சொல்லி அவன் சென்றான்.

இதன்யா சந்தோஷமாக 11 ம் வகுப்புக்கு செல்ல அங்கு யாரும் இல்லை அருகில் விசாரிக்க மாணவர்கள் அனைவரும் மீட்டிங் அறையில் இருப்பதாக சொல்ல இவளும் சாதரணமாக கிளம்பி அங்கு போக ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள்.

ஏன் என்றால் தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் மாணவிகள் என சுமார் 400 பேர் இருக்க வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று நடத்த ஆரம்பித்தாள் அவளுக்கு துணையாக பூஜா , சித்ரா என இரு ஆசிரியர்கள் ஆனால் வகுப்பு எடுப்பது இவள் மட்டுமே அல்கீன், அல்கைன், என்று எல்லாம் விளக்க ஒரு மதிய பொழுது முழுவதும் முடிந்தது.

காலையில் இருந்து சித் அறைக்கு வெளியே நின்றாள்.  இப்போது இங்கு வகுப்பு எடுக்க என நின்று கால்கள் மிகவும் வலித்தது. இங்கு சித்தார்த் மிகவும் நிம்மதியாக அவளை கணினி திரையில் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.

இந்த வகுப்பு இல்லாமல் ஸ்பெஷல் கிளாஸ் அதுவும் இதன்யாவே எடுத்து சோர்வில் நொந்து போனாள். வேர்வை வடிந்து அந்த சாக்பீஸ் தூசுகள் அவள் மேல் படிந்து பார்க்க மிகவும் சோர்வாக தெரிந்தாள் அதை பார்த்து சித் மனம் திருப்தி அடைந்தது.

வகுப்பு முடிந்து வெளியே வந்த இதன்யா ரெஸ்ட் ரூம் சென்று தன் முகம் கழுவி கொண்டு தன்னை ஒரு வாறு சரி செய்து கொண்டு வெளியே வர மணியை பார்க்க அது 6.30 என காட்டியது அதற்கு முன்னவே பூஜா கிளம்பி விட்டாள்.

அவள்  ரிஷி காத்திருக்க சொன்னதை மறந்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல அப்பொழுது வெளியே சித் காரும் புறப்பட்டது.

அங்கே ரிஷி ஒரு ஆட்டோவில் வந்து இதன்யாவிடம் ஏறு தனு!  நான் உன்னை விடுதியில் விட்டு விடுகிறேன். என்று சொல்ல அவள் இருந்த சோர்வில் அந்த ஆட்டோவில் ஏறினாள்.

அவள் ஆட்டோவில் ஏறுவதை பார்த்த சித்தார்த்துக்கு மனசு” இவளுக்கு அறிவே இல்ல, தனியாக இப்படி  ஆட்டோவில் போறாளே எதுவும் ஆனால் என்ன ஆவது! திமிர் பிடித்தவள்! என மனதில் நினைத்தவன் ஓட்டுனரிடம் அவளது ஆட்டோவை பின் தொடர சொன்னான்.

ஆனால் அவனுக்கு ரிஷி ஆட்டோவில் இருக்கிறான் என தெரியவில்லை. சாலையில் signal விழ சித் கார் ஆட்டோவின் நேராக வரவும் சித்தார்த் ஆட்டோவின் உள்ளே பார்க்க இப்போது இன்னும் ஆத்திரம் அப்படி என்ன பார்த்தான்.

இதன்யாவுக்கு இருந்த சோர்வில்  தன்னை அறியாமல் தூக்கம் வர தெரியாமல் ரிஷியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ரிஷிக்கு ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிரகடிக்க இங்கு சித்தார்த்துக்கு ஆயிரம் பேரை கொன்று குவிக்க வேண்டும் என்று தோன்றியது.

ரிஷி கன்னகுழி தெரிய அவள் தலையை வருட செல்ல சரியாக பச்சை நிறம் விழ ஆட்டோ ஸ்டார்ட் செய்ய சட்டென்று இதன்யா அந்த சத்தத்தில் எழுந்து கொண்டாள்.

சாரி சீனியர் தெரியாமல்…..
ம்ம்ம் பரவாயில்லை தனு என்று அவன் முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளமல்  இயல்பாக இருக்க

நேராக ஆட்டோ விடுதிக்கு முன்னே போய் நிற்க இதன்யா ஒரு நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

ரிஷிக்கு அப்பொழுது தான் அவள் சென்றதும் அவளிடம் போன் கொடுக்க வில்லை என நினைவு வர” உன்னை பார்த்தாலே நான் எல்லாம் மறந்துவிடுகிறேன் தனு லவ் யூ டி! என நினைத்தவன். நாளைக்கு உன் கிட்ட தந்திடுவேன்.” என்று சொல்லி ரிஷி கிளம்பினான்.

(நாளைக்கு என்ன நடக்கும் ? சித்தார்த் என்ன செய்ய போகிறான்? அதை விட ரிஷி போனை கொடுத்து காதல் சொல்ல போகிறான் போலயே! இந்த நவீன் வேறு சித்தார்த்தின் மேல் கோபமாக இருக்கிறான்? அதற்கு என்ன காரணம்?  இது அனைத்தையும் அடுத்த ud ல பார்க்கலாம் இன்னிக்கி epi பிடித்து இருக்கா! Comment பண்ணுங்க உங்க friends க்கு share பண்ணுங்க) 

நன்றி ! 

மறுபடியும் உங்க comment I’m waiting!. 

தொடரும்….


EPI 8

இதன்யா கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்கு குளித்து வேக வேகமாக புடவையை கட்டிக்கொண்டு காலை உணவு தவிர்த்து விட்டு ஒப்பனை இல்லாமல் ஒரு பொட்டு மட்டுமே வைத்து தன் கண்ணாடி அணிந்து கொண்டு முடி ஈரமாக இருந்ததால் ஒரு குட்டி க்ளிப் மட்டும் போட்டு ஸ்கூல் ல போய் கொண்டை வளை போட்டு கொள்ளலாம் என்று நினைத்து வேக வேகமாக விடுதியில் இருந்து வெளியேறினாள்.

இன்று ஓட்டுனரை வேண்டாம் என்று சொல்லிய சித்தார்த் தானே தன் காரை எடுத்து கொண்டு பாதுகாவலர்களை கொஞ்சம் தூரம் விட்டு பின் தொடர சொன்னவன் நேராக இதன்யாவின் விடுதி இருக்கும் சாலைக்கு சென்றவன் இவள் வேகமாக நடந்து வருவது தெரியவும் கொஞ்சம் தூரத்தில் கார் நிறுத்தி சித்தார்த் பார்க்க  அவள்  நடந்து வரும் தோரணையில் ஒரு நிமிடம் இமைக்க மறந்து பார்த்தான். அது ஒரு நிமிடம் தான் அவன் மூளை விழித்து கொண்டு அதன் வேலையை ஆரம்பித்தது.

சித் இப்படி தான் நீ பார்ப்பதை போல ரிஷியும் பார்ப்பான் என சொல்ல அவன் சித்தார்த்தாக மாறி அவளை கஷ்டப்பட்டு கோபம் வரவழைத்து பார்க்க.. 

சித்தார்த் மனம் “ஹே அங்கே பாரு சித்!” அவளுக்கு அருகில் என்று சொல்ல வேகமாக காரினை எடுத்து கண் மூடி திறக்கும் நேரத்தில் அவளை காருக்குள் இழுத்து போட்டு கொண்டான்.

அவள் வாய் திறந்து கத்த போக சித்தார்த்தை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தவள் இதயம் படபடக்க நீங்களா….. நீங்கள் எதுக்கு என்னை காருக்குள் இழுத்தீங்க?

என்ன நடந்தது? 

கொஞ்சம் ரிவைன்ட்!. 

நவீன் நேற்று இருந்த கோபத்தில் சில ஆட்களிடம் சொல்லி சித்தார்த் க்கு ஒரு மைனர் ஆக்சிடன்ட் பண்ண சொல்ல.. 

மோகன், சார் அது எல்லாம் வேணாம்!. என பேச வர நவீன் சிரித்து கொண்டே சித்தார்த் கிட்ட  போய் வேலைக்கு ஜாயின் பண்ணிக்க தயாராகிட்ட போல.. 

மோகன் படபடத்து கொண்டே இல் இல்ல சார் அப்படி எல்லாம் இல்ல இப்போவே செய்கிறேன். என யாருக்கோ போன் செய்து விவரம் கூறினான். 

ஒரு லாரி சித்தார்த் போகும் பாதையில் அவன் காரை இடித்து சுற்ற விட்டு அங்கே உள்ள கரன்ட் கம்பத்தில் மோத வேண்டும். அது தான் அவர்களின் பிளான்.

அதே போல் லாரி வந்தது ஆனால் அவர்களின் பிளானில் எதிர்பாராத ஒன்று நடுவில் இதன்யா வந்தது தான் அந்த லாரி வந்த வேகத்தில் என்ன ஆகி இருக்குமோ!. அவனை காப்பாற்றி அவள் தேவதை ஆகி விட இதன்யாவை காப்பாற்றி சித்தார்த் தேவ தூதன் ஆகி விட்டான். 

 இப்பொழுது காருக்கு உள்ளே சித்தார்த் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவள் அருகில் வந்து சீட் பெல்ட் அவளுக்கு போட்டு விட இதன்யாவுக்கு மூச்சு முட்டியது. அவன் நேராக தன் போன் எடுத்து ப்ளூ டூத் ல இணைத்து பேசிக்கொண்டே நேராக வண்டியை போலீஸ் ஸ்டேஷன்  இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

இப்போது இதன்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை,என்ன செய்கிறான்? இவன் நாம் கேட்ட கேள்விக்கு பதில் கூறினானா ?என்று அவள் யோசித்து கொண்டே அவனை ஓரக் கண்ணால் பார்க்க சித்தார்த் கடமையே கண்ணாக வண்டிய ஓட்டி கொண்டு போனான்.

இதன்யா இப்போது சித் அவளை உள்ளே இழுத்து போட்டதை நினைக்க அவள் நடந்து வரும் போது திடீரென ஒரு இரும்பு போன்ற இரு  கைகள் ஒன்று கையையும் இன்னொன்று அவள் இடையை ….

இதன்யாவுக்கு இதயம் படபடக்க என்னோட இடுப்பு இடையை பிடித்து உள்ளே அமர வைத்து இல்ல இழுத்து உள்ளே அவனுக்கு நெருக்கமாக அமர்ந்து இருக்கிறேன் நான் அச்சோ !!! என்று அவள் இடையை பார்க்க அவன் முதல் பிடிப்பு தான் ஒரு நிமிடம் நினைவு வர ஹே ஹே வேணாம் டி பிலீஸ் இதை நினைக்காதே என்று வலுக்கட்டாயமாக கண்ணை மூடி கொண்டே தலையை ஆடினாள்.

இப்போது சித் அவளை பார்க்க மிகவும் அழகாக தெரிந்தாள் அவனுடையவள் (அவனுடையவளா????!!!) ஒரு சிறு புன்னகை மெலிதாக சித் முகத்தில் மீண்டும் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

இப்போது போலீஸ்  ஸ்டேஷன் வரவும்

இதன்யா ,”சார் இப்போ இங்கே என்ன நடக்குது? எதுக்கு என்னை இங்கே கூட்டி வந்தீங்க! “

அவன் அவளை பார்த்து” உன்னை ஜெயில்ல போடறதுக்கு தான்” என்று சொல்ல

உடனே இதன்யாவுக்கு கோபம்” என்னை எதுக்கு சிறையில்ல போடுவீங்க ?”என்று கோபத்தில் மூக்கு புடைக்க பேசியவளை பார்க்க சித்தார்த்துக்கு ஒரு புறம் சிரிப்பும் ஒரு புறம் இன்னும் சீண்ட வேண்டும் என்று தோன்ற.

அவன் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு “அதை நீ போலீஸ் கிட்ட கேட்டுக்கோ உனக்கு எல்லாம் என்னால விளக்கம் கொடுக்க முடியாது .”

ம்ம்ம் அப்புறம் ரெடியா இரு இப்போ ரெண்டு போலீஸ் வந்து உன்னை அர்ரெஸ்ட் பண்ண போறாங்க என சொல்ல இதன்யாவுக்கு அப்படியே சித்தார்த்தை ஒரு மலையின் உச்சியில் இருந்து தள்ளி விடலாமா என்று தோன்றியது.

உடனே அவன் அவளை பார்த்து நீ நெனக்கிறது கண்டிப்பாக நடக்காது . அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க நீ என் கிட்ட இருந்து ஐ மீண் போலீஸ் கிட்ட தப்பிக்க  முடியாது. காட் இட் என்று சொல்லி விட்டு அவன் ஸ்டேஷன் உள்ளே செல்ல இதன்யாவுக்கு என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை.

கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நிற்க சித் சொன்னது போலவே இரண்டு  பெண் காவலாளிகள் வந்து அவளை கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து செல்ல இப்போது அழுதே விட்டாள்.

அந்த காவிலாளிப்பெண், இப்போ அழுது என்ன பிரயோஜனம் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இன்னும் கொஞ்சம் விட்டால் எல்லாம் முடிந்து இருக்கும் என்று கூற

இதன்யா கண்களில் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை உடனே அங்கு தலைமை காவல் அதிகாரியோடு  பேசி கொண்டே சித்தார்த் வந்தவன்.

சார் இந்த பெர்ஸன் தான் என்று சொல்ல , சார் இவர் சொல்வது போல் எதுவும் இல்லை நான் எதுவும் செய்ய வில்லை இவர் தான் என்னை என்று அவள் அழுது கொண்டே சொல்ல 

என்ன பொண்ணு மா நீ ஜாக்கிரதையாக இருக்க தெரியாதா இங்கே பாரு என்று அந்த சாலையின் சிசிடிவி காட்சிகள் காட்ட இப்போது தான் இதன்யாவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரிய ஆரம்பித்தது.

அவள் சாலையில் எதுவும் கவனிக்காமல் நடந்து வர அவளுக்கு பின்னால் ஒரு லாரி டிரைவர் குடித்து விட்டு லாரியை இதன்யா மீது ஏற்றி இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்து தான் சித்தார்த் சரியான விகித நேரத்தில் அவளை காருக்குள் தூக்கினான்.

ஒரு நிமிடம் அந்த காட்சியை பார்த்த இதன்யாவுக்கே ஒரு நிமிடம் உயிர் மேல் பயம் வந்தது.
சித்தார்த் அவளின் முக மாற்றம் அனைத்தும் மனதில் நிறைத்து கொள்ள தவற வில்லை.

அந்த லாரியின் வண்டி எண் சித்தார்த் கூறி விட்டு ஒரு கப்லைன்ட் கொடுத்து விட்டு வெளியே வர இதன்யா அவனுக்காக காத்திருந்தாள்.

அவள் சித்தார்த்தை பார்க்கும் பார்வை கொஞ்சம் மாறியது. திமிர் பிடிச்சவன் தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்

கொஞ்சம் மட்டும் என்று மூளை கேட்க

குட்டியா கொஞ்சமா நல்லவன் என்று சொல்லிக்கொண்டாள்.

சரி இல்ல இதன்யா என்று மூளை சொல்ல ம்ம்ம் சரி தான் ரொம்ப கெட்டவன் கொஞ்சம் தான் நல்லவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே அருகில் சித்  வந்தான்.

அவன் இரு புருவங்கள் தூக்கி என்ன என்பதை போல கேட்க

அவள் இட வளமாக தலையாட்டினாள் .

ம்ம்ம் கார் ல ஏறு

அவள் மனதுள் முன்னாடி உட்கார்ந்தால் அவன் ரொம்ப பக்கத்தில் இருக்க மாதிரி இருக்கும் அதனால நீ பின்னால் போய் உட்காரு என்று சொல்ல

இதன்யா நேராக பின் இருக்கையில் போய் அமர காரின் கதவுகளை திறக்க போக ஹே நான் ஒன்னும் உனக்கு டிரைவர் இல்ல என்ற வார்த்தை அவளுக்கு பதிலாக வரவும் வேறு வழி இல்லாமல் முன்னால் தயங்கி கொண்டே அமர்ந்து கொண்டாள்.

சீட் பெல்ட் என்று இவன் சொல்ல அவள் தேடி அதனை கண்டு பிடித்து லாக் செய்ய அது சரியாக லாக் செய்ய தெரியாமல் அதையும் இதையும் மாற்றி மாற்றி ஏதோ செய்து கொண்டு இருக்க அதில் கடுப்பான சித்தார்த் அதனை அவனே போட்டு விட அவள் அருகில் அவர்கள் இதழ்கள் உரசுவுதற்கு ஒரு இன்ச் தான் இடைவெளி இருந்தது.

அவளை வண்டியில் அமர வைக்கும் போது இந்த நிகழ்வை சித்தார்த் கவனிக்க வில்லை ஆனால் இப்போது கண்டு கொண்டான்.

இதன்யாவின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய மூச்சு முட்டியது இவன் அவளின் நிலையை அறிந்து உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் எதுவும் நடக்காதது போல முகத்தை வைத்து கொண்டு சரியாக போட்டு விட்டு அவன் இடத்துக்கு வந்தான்.

அவன் மனதில் ம்ம்ம் நம்ம பக்கத்தில் வந்த உடனே அவள் பெண்மையின் சாயல் அதிகமாக வந்து விடுகிறது என்று மகிழ்ச்சியில் திளைத்தான்.

இப்போது இதன்யாவின் மனம் குதித்து வெளிய வர தான் இல்லை அவளுக்கு சுவாசம் கொஞ்சம் பத்த வில்லை உடனே காரின் ஜன்னல் கதவுகளை கொஞ்சம் வெளியே வெளிக்காற்று வாங்கினாள்.

சார் ரொம்ப நன்றி என்று இவள் சொல்ல அதற்கு அவன் அதை நீ செயலில் காட்டு
எ..  என்ன செயலில்… காட்டணும்

நீ எனக்கு சொந்தம் என்று அவன் சொல்ல, என்ன????
உன்னோட உயிரை சொல்றேன் நான் தானே உன்னை காப்பாற்றினேன்.

அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.

நீ எனக்கு டெய்லி சாப்பாடு சர்வ் பண்ணு நான் அதை உன்னோட நன்றியாக எடுத்து கொள்கிறேன்.

இப்போது இதன்யாவினால் மறுக்க முடியவில்லை.அவள் வாழ்க்கையில் மிகப்பெரிய உதவி இது சித்தார்த் மட்டும் இன்று இல்லை என்றால் இவள் வாழ்க்கை முற்று புள்ளி தான் என நினைத்தவள்.

ம்ம்ம் சரி சார் என்னை கொஞ்சம் ஸ்கூல் ல விட்டு விடுங்கள்.

தொடரும்…..

EPI 9 

இதன்யா கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்கு குளித்து வேக வேகமாக புடவையை கட்டிக்கொண்டு காலை உணவு தவிர்த்து விட்டு ஒப்பனை இல்லாமல் ஒரு பொட்டு மட்டுமே வைத்து தன் கண்ணாடி அணிந்து கொண்டு முடி ஈரமாக இருந்ததால் ஒரு குட்டி க்ளிப் மட்டும் போட்டு ஸ்கூல் ல போய் கொண்டை வளை போட்டு கொள்ளலாம் என்று நினைத்து வேக வேகமாக விடுதியில் இருந்து வெளியேறினாள்.

இன்று ஓட்டுனரை வேண்டாம் என்று சொல்லிய சித்தார்த் தானே தன் காரை எடுத்து கொண்டு பாதுகாவலர்களை கொஞ்சம் தூரம் விட்டு பின் தொடர சொன்னவன் நேராக இதன்யாவின் விடுதி இருக்கும் சாலைக்கு சென்றவன் இவள் வேகமாக நடந்து வருவது தெரியவும் கொஞ்சம் தூரத்தில் கார் நிறுத்தி சித்தார்த் பார்க்க  அவள்  நடந்து வரும் தோரணையில் ஒரு நிமிடம் இமைக்க மறந்து பார்த்தான். அது ஒரு நிமிடம் தான் அவன் மூளை விழித்து கொண்டு அதன் வேலையை ஆரம்பித்தது.

சித் இப்படி தான் நீ பார்ப்பதை போல ரிஷியும் பார்ப்பான் என சொல்ல அவன் சித்தார்த்தாக மாறி அவளை கஷ்டப்பட்டு கோபம் வரவழைத்து பார்க்க.. 

சித்தார்த் மனம் “ஹே அங்கே பாரு சித்!” அவளுக்கு அருகில் என்று சொல்ல வேகமாக காரினை எடுத்து கண் மூடி திறக்கும் நேரத்தில் அவளை காருக்குள் இழுத்து போட்டு கொண்டான்.

அவள் வாய் திறந்து கத்த போக சித்தார்த்தை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தவள் இதயம் படபடக்க நீங்களா….. நீங்கள் எதுக்கு என்னை காருக்குள் இழுத்தீங்க?

என்ன நடந்தது? 

கொஞ்சம் ரிவைன்ட்!. 

நவீன் நேற்று இருந்த கோபத்தில் சில ஆட்களிடம் சொல்லி சித்தார்த் க்கு ஒரு மைனர் ஆக்சிடன்ட் பண்ண சொல்ல.. 

மோகன், சார் அது எல்லாம் வேணாம்!. என பேச வர நவீன் சிரித்து கொண்டே சித்தார்த் கிட்ட  போய் வேலைக்கு ஜாயின் பண்ணிக்க தயாராகிட்ட போல.. 

மோகன் படபடத்து கொண்டே இல் இல்ல சார் அப்படி எல்லாம் இல்ல இப்போவே செய்கிறேன். என யாருக்கோ போன் செய்து விவரம் கூறினான். 

ஒரு லாரி சித்தார்த் போகும் பாதையில் அவன் காரை இடித்து சுற்ற விட்டு அங்கே உள்ள கரன்ட் கம்பத்தில் மோத வேண்டும். அது தான் அவர்களின் பிளான்.

அதே போல் லாரி வந்தது ஆனால் அவர்களின் பிளானில் எதிர்பாராத ஒன்று நடுவில் இதன்யா வந்தது தான் அந்த லாரி வந்த வேகத்தில் என்ன ஆகி இருக்குமோ!. அவனை காப்பாற்றி அவள் தேவதை ஆகி விட இதன்யாவை காப்பாற்றி சித்தார்த் தேவ தூதன் ஆகி விட்டான். 

 இப்பொழுது காருக்கு உள்ளே சித்தார்த் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவள் அருகில் வந்து சீட் பெல்ட் அவளுக்கு போட்டு விட இதன்யாவுக்கு மூச்சு முட்டியது. அவன் நேராக தன் போன் எடுத்து ப்ளூ டூத் ல இணைத்து பேசிக்கொண்டே நேராக வண்டியை போலீஸ் ஸ்டேஷன்  இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

இப்போது இதன்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை,என்ன செய்கிறான்? இவன் நாம் கேட்ட கேள்விக்கு பதில் கூறினானா ?என்று அவள் யோசித்து கொண்டே அவனை ஓரக் கண்ணால் பார்க்க சித்தார்த் கடமையே கண்ணாக வண்டிய ஓட்டி கொண்டு போனான்.

இதன்யா இப்போது சித் அவளை உள்ளே இழுத்து போட்டதை நினைக்க அவள் நடந்து வரும் போது திடீரென ஒரு இரும்பு போன்ற இரு  கைகள் ஒன்று கையையும் இன்னொன்று அவள் இடையை ….

இதன்யாவுக்கு இதயம் படபடக்க என்னோட இடுப்பு இடையை பிடித்து உள்ளே அமர வைத்து இல்ல இழுத்து உள்ளே அவனுக்கு நெருக்கமாக அமர்ந்து இருக்கிறேன் நான் அச்சோ !!! என்று அவள் இடையை பார்க்க அவன் முதல் பிடிப்பு தான் ஒரு நிமிடம் நினைவு வர ஹே ஹே வேணாம் டி பிலீஸ் இதை நினைக்காதே என்று வலுக்கட்டாயமாக கண்ணை மூடி கொண்டே தலையை ஆடினாள்.

இப்போது சித் அவளை பார்க்க மிகவும் அழகாக தெரிந்தாள் அவனுடையவள் (அவனுடையவளா????!!!) ஒரு சிறு புன்னகை மெலிதாக சித் முகத்தில் மீண்டும் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

இப்போது போலீஸ்  ஸ்டேஷன் வரவும்

இதன்யா ,”சார் இப்போ இங்கே என்ன நடக்குது? எதுக்கு என்னை இங்கே கூட்டி வந்தீங்க! “

அவன் அவளை பார்த்து” உன்னை ஜெயில்ல போடறதுக்கு தான்” என்று சொல்ல

உடனே இதன்யாவுக்கு கோபம்” என்னை எதுக்கு சிறையில்ல போடுவீங்க ?”என்று கோபத்தில் மூக்கு புடைக்க பேசியவளை பார்க்க சித்தார்த்துக்கு ஒரு புறம் சிரிப்பும் ஒரு புறம் இன்னும் சீண்ட வேண்டும் என்று தோன்ற.

அவன் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு “அதை நீ போலீஸ் கிட்ட கேட்டுக்கோ உனக்கு எல்லாம் என்னால விளக்கம் கொடுக்க முடியாது .”

ம்ம்ம் அப்புறம் ரெடியா இரு இப்போ ரெண்டு போலீஸ் வந்து உன்னை அர்ரெஸ்ட் பண்ண போறாங்க என சொல்ல இதன்யாவுக்கு அப்படியே சித்தார்த்தை ஒரு மலையின் உச்சியில் இருந்து தள்ளி விடலாமா என்று தோன்றியது.

உடனே அவன் அவளை பார்த்து நீ நெனக்கிறது கண்டிப்பாக நடக்காது . அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க நீ என் கிட்ட இருந்து ஐ மீண் போலீஸ் கிட்ட தப்பிக்க  முடியாது. காட் இட் என்று சொல்லி விட்டு அவன் ஸ்டேஷன் உள்ளே செல்ல இதன்யாவுக்கு என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை.

கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நிற்க சித் சொன்னது போலவே இரண்டு  பெண் காவலாளிகள் வந்து அவளை கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து செல்ல இப்போது அழுதே விட்டாள்.

அந்த காவிலாளிப்பெண், இப்போ அழுது என்ன பிரயோஜனம் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இன்னும் கொஞ்சம் விட்டால் எல்லாம் முடிந்து இருக்கும் என்று கூற

இதன்யா கண்களில் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை உடனே அங்கு தலைமை காவல் அதிகாரியோடு  பேசி கொண்டே சித்தார்த் வந்தவன்.

சார் இந்த பெர்ஸன் தான் என்று சொல்ல , சார் இவர் சொல்வது போல் எதுவும் இல்லை நான் எதுவும் செய்ய வில்லை இவர் தான் என்னை என்று அவள் அழுது கொண்டே சொல்ல 

என்ன பொண்ணு மா நீ ஜாக்கிரதையாக இருக்க தெரியாதா இங்கே பாரு என்று அந்த சாலையின் சிசிடிவி காட்சிகள் காட்ட இப்போது தான் இதன்யாவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரிய ஆரம்பித்தது.

அவள் சாலையில் எதுவும் கவனிக்காமல் நடந்து வர அவளுக்கு பின்னால் ஒரு லாரி டிரைவர் குடித்து விட்டு லாரியை இதன்யா மீது ஏற்றி இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்து தான் சித்தார்த் சரியான விகித நேரத்தில் அவளை காருக்குள் தூக்கினான்.

ஒரு நிமிடம் அந்த காட்சியை பார்த்த இதன்யாவுக்கே ஒரு நிமிடம் உயிர் மேல் பயம் வந்தது.
சித்தார்த் அவளின் முக மாற்றம் அனைத்தும் மனதில் நிறைத்து கொள்ள தவற வில்லை.

அந்த லாரியின் வண்டி எண் சித்தார்த் கூறி விட்டு ஒரு கப்லைன்ட் கொடுத்து விட்டு வெளியே வர இதன்யா அவனுக்காக காத்திருந்தாள்.

அவள் சித்தார்த்தை பார்க்கும் பார்வை கொஞ்சம் மாறியது. திமிர் பிடிச்சவன் தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்

கொஞ்சம் மட்டும் என்று மூளை கேட்க

குட்டியா கொஞ்சமா நல்லவன் என்று சொல்லிக்கொண்டாள்.

சரி இல்ல இதன்யா என்று மூளை சொல்ல ம்ம்ம் சரி தான் ரொம்ப கெட்டவன் கொஞ்சம் தான் நல்லவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே அருகில் சித்  வந்தான்.

அவன் இரு புருவங்கள் தூக்கி என்ன என்பதை போல கேட்க

அவள் இட வளமாக தலையாட்டினாள் .

ம்ம்ம் கார் ல ஏறு

அவள் மனதுள் முன்னாடி உட்கார்ந்தால் அவன் ரொம்ப பக்கத்தில் இருக்க மாதிரி இருக்கும் அதனால நீ பின்னால் போய் உட்காரு என்று சொல்ல

இதன்யா நேராக பின் இருக்கையில் போய் அமர காரின் கதவுகளை திறக்க போக ஹே நான் ஒன்னும் உனக்கு டிரைவர் இல்ல என்ற வார்த்தை அவளுக்கு பதிலாக வரவும் வேறு வழி இல்லாமல் முன்னால் தயங்கி கொண்டே அமர்ந்து கொண்டாள்.

சீட் பெல்ட் என்று இவன் சொல்ல அவள் தேடி அதனை கண்டு பிடித்து லாக் செய்ய அது சரியாக லாக் செய்ய தெரியாமல் அதையும் இதையும் மாற்றி மாற்றி ஏதோ செய்து கொண்டு இருக்க அதில் கடுப்பான சித்தார்த் அதனை அவனே போட்டு விட அவள் அருகில் அவர்கள் இதழ்கள் உரசுவுதற்கு ஒரு இன்ச் தான் இடைவெளி இருந்தது.

அவளை வண்டியில் அமர வைக்கும் போது இந்த நிகழ்வை சித்தார்த் கவனிக்க வில்லை ஆனால் இப்போது கண்டு கொண்டான்.

இதன்யாவின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய மூச்சு முட்டியது இவன் அவளின் நிலையை அறிந்து உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் எதுவும் நடக்காதது போல முகத்தை வைத்து கொண்டு சரியாக போட்டு விட்டு அவன் இடத்துக்கு வந்தான்.

அவன் மனதில் ம்ம்ம் நம்ம பக்கத்தில் வந்த உடனே அவள் பெண்மையின் சாயல் அதிகமாக வந்து விடுகிறது என்று மகிழ்ச்சியில் திளைத்தான்.

இப்போது இதன்யாவின் மனம் குதித்து வெளிய வர தான் இல்லை அவளுக்கு சுவாசம் கொஞ்சம் பத்த வில்லை உடனே காரின் ஜன்னல் கதவுகளை கொஞ்சம் வெளியே வெளிக்காற்று வாங்கினாள்.

சார் ரொம்ப நன்றி என்று இவள் சொல்ல அதற்கு அவன் அதை நீ செயலில் காட்டு
எ..  என்ன செயலில்… காட்டணும்

நீ எனக்கு சொந்தம் என்று அவன் சொல்ல, என்ன????
உன்னோட உயிரை சொல்றேன் நான் தானே உன்னை காப்பாற்றினேன்.

அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.

நீ எனக்கு டெய்லி சாப்பாடு சர்வ் பண்ணு நான் அதை உன்னோட நன்றியாக எடுத்து கொள்கிறேன்.

இப்போது இதன்யாவினால் மறுக்க முடியவில்லை.அவள் வாழ்க்கையில் மிகப்பெரிய உதவி இது சித்தார்த் மட்டும் இன்று இல்லை என்றால் இவள் வாழ்க்கை முற்று புள்ளி தான் என நினைத்தவள்.

ம்ம்ம் சரி சார் என்னை கொஞ்சம் ஸ்கூல் ல விட்டு விடுங்கள்.

தொடரும்…..

EPI 10

இதன்யா “என்னை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிடுங்க எனக்கு கிளாஸ் க்கு டைம் ஆச்சு”

“இப்போ நான் என்ன சொன்னேன்? என சித் அவளிடம் கேட்க…

இப்போ எப்டி நான் சர்வ் பண்ண முடியும் ? 

சித் ஒரு முறை அவளது இதழ்களை பார்த்து விட்டு மனதுள்  சிட் என்று சொல்லிக்கொண்டு

இப்போ ஐயம் ஹன்ங்ரி சாப்பிட போறோம் என்று சொல்ல

எனக்கு கிளாஸ் க்கு டைம் ஆச்சு பிளீஸ் எனக்கு பசிக்கல 

சித்தார்த் அவளை பார்த்து முறைக்க அவள் உடனே தன் வாயை மூடிக்கொண்டாள்.

ஒரு உயர் ரக ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன் கார் பார்க்கிங் செய்து விட்டு ஒரு தனி அறை புக் செய்தான்.

இதன்யா பிரமிப்பாக அவன் பின்னால் ஒரு இரண்டு அடிகள் தள்ளி நடந்து சென்றாள். அவள் மனதில் “ஹே நீ என்ன பண்ணிட்டு இருக்க,அவன் என்ன சொன்னாலும் அவன் பின்னாடி எதுவும் கேள்வி கேட்காமல் நீ உன்னோட இஷ்டத்துக்கு சுத்துற!”

நான் என்ன பண்றது எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டிங்குது, அவன் பேச்சு என்னை மாட்டி விட்டுடுது என்று இவள் கீழ குனிந்து கொண்டே செல்ல

அவன் அறைக்கு சென்று பின் அவளை பார்க்க அவள் ஏதோ யோசனையில் மெதுவாக நடந்து வந்தாள்.

ஹே  இங்கே வா! என்று அவன் கைகளை காட்டிட இவளும் சென்றாள். உள்ளே சென்றதும் அந்த அறை மிகவும் அழகாக இருந்தது.

அங்கு வந்த ஹோட்டல் பணியாளர் சித்தார்த்தை பார்த்து அடையாளம் கண்டு கொண்டு சித்து சார் நான் உங்கள் தீவிர ரசிகன் உங்களோட (a+b)2 படம் அதுல உங்களோட நடிப்பு வேற லெவல் என்று அவன் சொல்லிக்கொண்டே போக சித் ஒரு புன்னகை மட்டுமே சிந்தியவன்.அவனுடன் ஒரு புகைப்படம் , ஆட்டோ க்ராப் போட்டு கொடுத்து அவனிடம் சில ஆடர் கொடுக்க அவனும் கொஞ்ச நேரம் காத்திருங்கள் சார் என்று சொல்லி விட்டு செல்ல

இதன்யா அவளுடைய கை பையை இறுக்கி பிடித்து கொண்டு அந்த இடத்தை தன் கண்ணாடியை சரி செய்தவாறே ஒரு வித படபடப்புடன் பார்த்து கொண்டு இருக்க சித்தார்த் அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

உடனே ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி கொண்டு அவள் அருகில் போய் நீட்ட அவள் அதை வாங்கி ஒரு சிப் குடித்து விட்டு கீழ வைத்தாள்.

அவள் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான். இப்போது எழுந்து செல்ல முடியாமல் இதன்யா தவித்தாள். ஏன் இவன் இன்னிக்கு ஒரு மாதிரி நம்ப கண்ணுக்கு தெரியுறான் என்று அவள் யோசித்து கொண்டு இருக்க உணவு வந்தது.

சித்தார்த் நேர்த்தியாக அமர்ந்து கொண்டு பணியாட்களை வெளியே போக சொல்லி விட்டு இதன்யாவை பார்க்க உடனே அவள் தன் கைகளை கழுவி விட்டு அவனுக்கு சர்வ் செய்ய அவன் திருப்தியாக சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் சாப்பிடும் முறை இதன்யாவுக்கு பிடித்து தான் போனது பக்குவமாக உண்பவன் எந்த சத்தமும் போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக மென்று விழுங்குவான் அழகு தான்

போதும் நான் கை கழுவி வருகிறேன் என்று கைகள் கழுவி விட்டு அவன் வர இதன்யா அவனை பார்த்து போலாம் சார் என்று சொல்ல

நீ சாப்பிடு அப்புறம் கிளம்பலாம்

நான் ஹாஸ்டல் ல சாப்பிட்டு தான் வந்தேன் எனக்கு வேணாம் என்று அவள் சொல்ல

இப்போ நீ சாப்பிட்டு தான் வர ,இல்லை இன்னிக்கு முழுவதும் இங்கேயே இரண்டு வேளை சாப்பிட வைத்து விடுவேன்.

சரி ஓகே என்று கூறியவள் இரண்டு இட்லி மட்டும் எடுத்து போட்டு கொண்டு வேக வேகமாக சாப்பிட ஹே மெதுவா என்று சொல்ல

அவளது கூந்தல் முன்னும் பின்னும் காற்றில் பறந்து கொண்டே முன்னே வர அவள் சாப்பிட சிரமப்பட்டுகொண்டு இருப்பதை பார்த்த சித்தார்த் அவள் அருகில் சென்று “ஹே கொஞ்சம் தள்ளி உட்கார்” என்று சொல்ல அவள் கொஞ்சம் முன்ன போய் உட்கார அவளது கூந்தல் அனைத்தும் ஒதுக்க அருகில் வர “சார் என்ன பண்றீங்க வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன்.”

ஸ்ஸ்ஸ் சைலேன்ஸ்!.. என்று அவன் சொல்லி அவள் கூந்தலில் கைகளை வைத்து அனைத்து கூந்தலும் அவனது விரல்களில் அவளுக்கு வலிக்காத வண்ணம் ஒரு பக்கமாக போட போக சித்தார்த்தின் விரல்கள் அவள் பின் கழுத்தில் அவன் விரல்கள் பட இவளுக்கு ஏதோ மின்னல் வெட்டு போல இருந்தது.


இதன்யாவின் முதுகுக்கு கீழ் அவளது இடை பகுதி வரை இருந்த கூந்தலை ஒதுக்க  சித்தார்த்துக்கு இப்போது அவளின் இடைய பார்த்து எண்ணம் தோன்ற விரல்கள் ஒரு கணம்  தீண்ட சொல்வது போல் உள்ளுக்குள் ஏதோ செய்ய சட்டென்று அவளை விட்டு நகர்ந்து வெளியே சென்றான்.

இதன்யா சிறிது நேரம் கழித்து தான் இயல்பு நிலைக்கு வந்தவள் உடனே வெளியே சென்றாள் அவள் வெளியே வந்ததும் அவளை அழைத்து கொண்டு நேராக காலேஜ் பக்கம் சென்றான் மணி இப்போதே 11 மணி என காட்டியது நம்ப காலேஜ் போறோம் இன்னிக்கு அங்க தான் உனக்கு ஒர்க்

ம்ம்ம் ஓகே சார் என இதன்யா தலை அசைத்தவள் மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை.  அவளுக்கு சித்தார்த்தின் விரல்கள் அவளின் பின் கழுத்தில், இடையில் , தீண்டிய இடம் எல்லாம் தகித்து கொண்டு இருக்க எப்படி இதில் இருந்து எப்படி வெளி வருவது என யோசித்து கொண்டு இருந்தாள். இது அவளுக்கு புது வித உணர்வு. என்னவென்று சொல்ல தெரியவில்லை.

அவள் காலேஜ் உள்ளே இறங்கவும் ஹே ஒன் மினிட்

இதன்யா என்ன என்பதை போல் அவனை பார்க்க டேக் இட், என அவன் ஒரு போன் நீட்டினான். எதுக்கு இது என்கிட்ட கொடுக்குரீங்க
உங்கிட்ட ஸ்கூல் வேலை விஷயமா எப்டி பேசறது அதுக்கு தான்

எனக்கு வேணாம் ஹே நீ வாங்கி தான் ஆகணும் என்பதை போல சித்தார்த்தின் பார்வை இருக்க

இல்ல எனக்கு வேணாம் உங்களுக்கு வேலை விஷயம் பத்தி
ஸ்கூல் வாட்ஸ் ஆப் குரூப் ல போடுங்கள் நான்  பூஜா என் தோழி போனில் அதில் பார்த்து கொள்கிறேன் என்று அவள் சொல்லி விட்டு இறங்க போக சட்டென்று சித்தார்த் அவள் கைகளை பிடித்து இழுக்க அவள் அவன் மார்பில் விழுந்தாள்.

ஹே நான் உங்கிட்ட பேசி முடிக்கல உன் இஷ்டத்துக்கு இறங்க போற

நான் என்ன சொல்றேனோ அதை தான் நீ கேட்கணும் என்னை கொஸ்டின் பண்ண உனக்கு ரைட்ஸ் இல்லை புரியுதா என்று அவள் தாடைகளை பற்றி அருகில் முகம் உரச ஒரு இன்ச் இடைவெளில சொல்ல இதன்யா இதை அவனிடம் எதிர்பார்க்க வில்லை ஒரு ஆடவனிடம் இவ்வளவு அருகில் இருப்பது உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

அவள் மருண்ட விழிகளோடு அவனை பார்த்து எ… என்ன பண்றீங்க !என்று உதடுகள் தந்தி அடிக்க அவனிடம் கேட்க சித்தார்த் அப்பொழுது தான் அவனின் நிலை உணர்ந்தான்.

சட்டென்று அவளை அவளது இருக்கையில் அமர வைத்தவன் அவளது கைகளை பிடித்து வலது கை ஆள்காட்டி விரல்  பிடித்து எடுத்து அந்த ஆண்ட்ராய்ட் போனில் சில
.. செக்யூரிட்டி செட்டிங் செய்தவன் அவனது வேலையில் கண்ணாக இங்கே எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்து கொண்டு இருக்க

இதன்யாவுக்கு இங்கு என்ன நடக்கிறது அவன் நம்மை ஒரு பொம்மை மாறி ட்ரீட் பண்றானே !அவனுக்கு ஒன்னும் ஆகாது, எனக்கு தான் அன்கம்பார்டபிலா இருக்கு , ஒரு பொண்ணுகிட்ட எப்டி நடந்துக்கணும் அப்டின்னு கொஞ்சம் கூட அறிவே இல்ல நான்சென்ஸ் இதுல இவனெல்லாம் ஒரு ஆக்டர் வேற என்று அவள் மனதில் நினைத்து கொண்டு இருக்க,

ம்ம்ம் முடிந்தது என்று கூறியவன் அவளிடம் போன் கொடுக்க அவள் மறுக்காமல் வாங்கி கொண்டாள்.

இதன்யா கீழ இறங்கி போக செல்ல சித்தார்த் அவளிடம் உனக்கு மட்டும் ஸ்பெஷல் ஆ ஒன்னும் போன் வாங்கி கொடுக்கல எங்க ஸ்கூல்ல ஒர்க் பண்ற முக்கியமா 10,11,12 கிளாஸ் ஹாண்டல் பண்ற டீச்சர்ஸ் எல்லாருக்கும் ஸ்கூல் மேனேஜ்மென்ட் கொடுத்து இருக்கு அதனால டோன்ட் தின்க் ஓவர் இமாஜினஷன் என்று கூறி விட்டு அவளுக்கு முன்னவே சித்தார்த் இறங்கி சென்று விட்டான்.

இதன்யா இறங்கியவுடன் அங்கு வந்த சித்தார்த் காவலாளிகள் அவனது காரை லாக் செய்து விட்டு சென்றனர். இப்போது என்ன சொல்ல வருகிறான் நான் எதுக்கு எதுவும் நினைகனும்

இதன்யாவின் மனம் ஹே பொய் சொல்லாத உன்னோட முகத்தில் ஏதோ கொஞ்சம் ஏக்கம் தெரியுது போல

மண்ணாங்கட்டி அவன் மேல் எனக்கு ஏக்காமா அவனும் அவனோட நான்சென்ஸ் தின்கிங், டிஸ்க்ஸ்டிங் என்று நினைத்து கொண்டு இவள் நடந்து செல்ல இப்போது மென்மையாக இரு கைகள்  அவளை இழுத்து அவளது கன்னங்களை கடித்து வைக்க

ஓ நீ இங்க தான் படிக்கிரியா என்று கடித்த இடத்தை தேய்த்து விட்டு காதை பிடித்து திருக

ஹே வலிக்குது இதயா என்னை விடு டி
நீ என்ன பண்ணி வச்சு இருக்க இப்போ எதுக்கு என்னை இதயான்னு கூப்பிடற அப்போ நான் உன்னை கோகுல் ன்னு கூப்பிடவா…

நீ எப்படி வேணுமாலும் கூப்பிடு நான் உன்னை இதயான்னு தான் கூப்பிடுவேன்

இதயா…..

இதயா…..
கோகுல்….
கோகுல்….. என கூப்பிட

மீண்டும் கோகுல் அவளை இன்னொரு கன்னம் பல் தடம் தெரிய கடித்து வைத்து விட்டு ஓடி செல்ல

சரியாக இதன்யா ஹே கோகுல் உன்னை சும்மா விட மாட்டேன் என்று அவள் கன்னத்தை தேய்த்து கொண்டு வர

இங்கு சித்தார்த் அவள் கோகுல் உன்னை சும்மா விட மாட்டேன் என்று சொன்னது மட்டும் காதில் விழ இவளை தேடி வந்தவன் கண்டது அவள் இரு கன்னங்களில் பல் தடங்கள் வட்டவடிவமாக இருக்க

சித்தார்த்துக்கு வந்த கோபத்தில் இப்போது வாய் விட்டே கேட்டு விட்டான்.

வாட் ஹாப்பன் என்று கொஞ்சம் கம்பீரமான குரலில் கேட்டுக்கொண்டே இவன் ஒரு ராஜாவை போல இவளை நோக்கி கோப பார்வை வீசி நடந்து வர இதன்யா உடனே தன் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்து கொண்டு

சார் எனக்கு  ரொம்ப தலை வலிக்குது என்று அவள் பொய் சொல்ல

அவன் தன் பார்வையை கூறாக்கி அதுக்கு உன்னோட கன்னத்தை எதுக்கு பிடித்து கொண்டு  ஏன் நிற்கிறாய்?

இல்ல சார் பல் அதும் பெயின் ஆ இருக்கு என்று பொய் சொல்ல

சித்தார்த்துக்கு எதுவோ தவறாக தோன்ற அவள் அருகில் வந்தவன்

ம்ம்ம் கன்னத்தில் இருந்து உன்னோட கைய எடு ???

தொடரும்…..

 EPI 11

தன் இரு கைகளாலும் இதன்யா கன்னத்தை மறைத்து கொண்டு நிற்க சித்தார்த் அவள் அருகில் வந்து

ம்ம்ம்ம், கன்னத்தில் இருந்து கைய எடு!,

“ஒன்னும் இல்ல நீங்கள் போங்க”,

“நான் உன்கிட்ட இப்போ என்ன சொன்னேன், அதை மட்டும் நீ செய் “
வேணாம் பிளீஸ் என்று இவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சித்தார்த்தை அழைக்க கல்லூரி முதல்வர் வர கொஞ்ச தூரத்தில் அது தெரிய சித்தார்த் அவள் அருகில் வலுகட்டாயமாக கைகளை விலக்கி பார்க்க

அவள் இரு கன்னங்களிலும் பல் தடங்கள் வாட் ஈஸ் திஸ்?…

என்னன்னு கேட்டேன். 

அவள் தலையை கீழே குனிந்து கொண்டு நிற்க 

சித்தார்த் கோபமாக அருகில் உள்ள சுவற்றில் குத்தியவன்” இதுக்கு நீயா வந்து எனக்கு பதில் சொல்லணும் “என்று சொல்லி விட்டு வேகமாக அங்கு இருந்து சென்று விட்டான்.

அவன் சென்று சிறிது நேரம் கழித்து தான் அவள் கண்களை திறந்தாள்.” நான் எதுக்கு இவனுக்கு பதில் சொல்லணும்? இப்போது இவனுக்கு என்ன வந்தது என்னை பற்றி அதும் என் மேல் இவன் அதிக உரிமை எடுத்து கொள்வது போல் எனக்கு தோணுதே!”

இப்போது என்ன செய்ய காத்திருக்கிறான்! என்று தெரியவில்லையே? நான் போய் இதை யாரிடமாவது சொன்னால் அவர்கள் என்னை தான் லூசு அப்டின்னு சொல்லுவாங்க.
எல்லாம் அவளால் வந்தது.
“இரு டி உன்னை சும்மா விட மாட்டேன் டி” என நினைத்தவள்.

இப்போது அவன் கைகள் முட்டிய அந்த சுவற்றை பார்தவளுக்கு அச்சோ! அவன் கைகள் வலிக்குமே என்று அவனுக்கு இவள் பரிதாபப்பட்டு கொண்டு இருக்கும் நேரம் அங்கே சித்தார்த் என்ன செய்கிறான்.

சித்தார்த்  நினைவுகள் எல்லாம் அவள் கண்ணங்களில் தான் இருந்தது. யாரையாவது விரும்புகிறாளா. இல்லையே நம்ப ஸ்பை எப்போதும் எந்த விஷயமும் மிஸ் பண்ணாம தகவல் சேகரித்து கொண்டு வருவார்களே.

யார் அவன்??
அந்த கன்னம் அது எனக்கானது அவன் யாரென்று கண்டு பிடித்து அவனை அழித்து விடுவேன்.
இவளுக்கு எவ்ளோ திமிர் என்கிட்ட பொய் சொல்றா, இவளை எதுவும் செய்ய வேண்டும் என நினைத்தவன்.
வேதியியல் துறை தலைவரை வர சொல்லி இதன்யாவுக்கு என்ன வேலை என்று சொல்ல
அவரே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார். அவனிடம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சரி என்று இதன்யாவை வேதியியல் லேப்க்கு வர சொன்னார்.

துறை தலைவர் இதன்யவை பார்த்து இன்னிக்கு இளங்கலை 2 ஆண்டு மாணவர்கள், மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப் மா நீங்கள் நான் கொடுக்கும் விவரப்படி சொல்யுஷன்ஸ் தயார் செய்து விடுங்கள் என சொல்ல

இதன்யாவுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது.
என்ன சார் சொல்றீங்க
இது நான் சொல்லல மா கரெஸ்பான்டென்ட் தான் சொன்னாரு!

இதன்யா வேறு வழி இல்லாமல் அந்த விவரங்கள் வாங்கி பார்க்க அவளுக்கு தலை சுற்றியது.

“சார் நான் இப்போ தான் இளங்கலை முடித்து இருக்கிறேன். யாரோட வழிகாட்டுதலும் இல்லாமல் எப்படி சார்?” என அவள் சொல்ல அவருக்கு பாவமாக இருந்தது.

“இல்லமா உன் கிட்ட போன் இருந்தால் அதில் அந்த உப்புகளோட செறிவு எவ்ளோ அப்டின்னு கண்டு பிடித்து போடுமா என்னால் இவளோ தான் சொல்ல முடியும்.”

மேலே கேமரா இருக்கு மா, சார் நம்மல கண்காணிப்பார் ,என சொல்லி அவர் இது என்னாலேயே தனியா தயார் செய்ய முடியாது இந்த பொண்ணு பாவம் என நினைத்து கொண்டே சென்றார்.

இதன்யாவின் மனம் மிகவும் வேதனையாக இருந்தது. கோகுலப்ரியா!… நீ மட்டும்  என் கிட்ட மாட்டினா அவ்ளோ தான் என அவள் அந்த கனிம உப்புகள், அமிலங்கள் இருக்கும் அறைக்கு சென்றவள் அதற்கான வேலையை ஆரம்பித்தாள்.
முதலில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சால்ட் அன்நௌன் தயார் செய்ய ஆரம்பித்தாள்.

நமக்கு தான் இருக்கவே இருக்கு கூகிள் நண்பன் கேட்டயான் 2, ஆனயான் 2 சேர்த்து ரியாக்சன் போட்டு பார்த்து கிட்ட தட்ட 18 ஜோடி சால்ட் பொட்டலம்  48 மாணவர்களுக்கு தயார் செய்ய 1மணி நேரம் ஆனது முதலில் அதை கொண்டு போய் கொடுத்து விட்டாள்.

அடுத்து முதுகலை மாணவர்களுக்கு செய்ய அவர்களுக்கு இன்று இயற்பியல் வேதியல் லேப் அது பொட்டெண்டசியோ மீட்டர் வைத்து செய்ய வேண்டும் அவர்கள் கொடுத்த எக்ஸ்பரிமெண்ட் எடுத்து பார்க்க அதில் சில  செறிவு அதிகமான அமிலகள் நைட்ரிக் அமிலம்1 N, 2N சல்ப்யூரிக் அமிலம் தயாரிக்க வேண்டும் இது கொஞ்சம் கஷ்டம் ஆனால் வேறு வழி இல்லாமல் அதையும் தயாரித்தாள்.

இந்த அமிலம் தயாரிக்க 1N கொஞ்சம் கான்சன்டிரேட் அமிலம் அவள் கைகளில் பட்டு விட்டது. நல்ல வேளை இடது கை கட்டை விரல் கொஞ்சம் மட்டும் தான் பட்டது.

சில்வர் நைட்ரேட் என்னும் சால்ட் அதில் 0.1N, மற்றும் 0.05N ஆகியவை பொட்டாசியம் அயோடைடு 10%, பொட்டாசியம் குளோரைடு என அனைத்தும் தயாரித்து விட்டு அந்த செய்முறை செய்ய தேவையான பொருட்கள் மறறும் அனொடு, கேத்தோடு ஆகியவற்றை எடுத்து வைத்தாள். இது அனைத்தும் செய்து முடிக்க மொத்தம் இரண்டு மணி நேரம், இவள் இளங்கலை மாணவர்களுக்கு தயார் செய்து போய் கொடுத்தவுடன் அவர்கள் லேப் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

இவள் இங்கு அனைத்தும் செய்து கொண்டு இருப்பதை சித்தார்த் கோப கண்களால் பார்த்து கொண்டு இருந்தான்.

இன்னும் மதிய உணவு இடைவேளைக்கு ஒரு முக்கால் மணி நேரம் இருக்க இவள் வெளியே வந்து ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

மிகவும் களைப்பாக உணர்ந்தாள். அப்போது பின்னால் இருந்து கோகுலபிரியா இதண்யாவின் இடைய கிள்ள சட்டென்று கோபம் வந்து விட பின்னால் திரும்பி அறைய போக
இதயா நான் தான் டி!   என அவள் சொல்ல

வந்துட்டியா நீ! என அவள் இரு காதுகளையும் பிடித்து திருக ஹே சாரி டி.. பிளீஸ்! பிளீஸ்! வலிக்குது! இதயா விடு டி என அவள் மடியில் அமர்ந்து கொண்டாள் கோகுலப்ரியா.

ஆம் பெண்தோழிகள் எப்போதும் அவர்கள் இயல்பு நிலை இப்படி தான் இருக்கும் ஆனால் ஆண் நண்பர்கள் இப்படி இருந்ததால் அதை நினைக்கவே சிரிப்பு வருகிறது அதை பார்க்க மிகவும் … போதும் நாம் கதைக்கு வருவோம்.

சித்தார்த் அவள் செய்வதை பார்த்து விட்டு அவன் இன்று வந்த வேலை NAC  குழுமம் தொடர்பான வேலை ஒவ்வொரு கல்லூரிகள் அங்கு தர வரிசை படி ஆய்வு செய்து அந்த கல்லூரியை மதிப்பீடு செய்யும் அந்த வேலை தொடர்பாக தான் சித்து காலேஜ் வந்தான்.

மீட்டிங் முடித்து விட்டு இவன் நேராக வேதியியல் துறை லேப் செல்ல அங்கு இதண்யா இல்லை.

உடனே hod யை வர சொல்லி எங்கே என கேட்க அவர் பதட்டம் கொண்டு ஒரு நிமிடம் சார் என விசாரித்து விட்டு

சார் அந்த பொண்ணு pg 1ம் ஆண்டு  கோகுலப்ரியா என்ற மானவியோடு மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் என சொல்ல,

இப்போது சித்தார்த் என்ன பெயர் அது ….
சார்….
அந்த girl பெயர் எதோ ….
சார் அந்த girl பெயர் கோகுலப்ரியா  என கூற

இப்போது சித்தார்த்துக்கு என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை
சித் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல பாவம் என்னோட” லிட்டில் ஹார்ட் ” என மனம் சொல்ல

என்ன “லிட்டில் ஹார்டா”  என அவன் மூளை கேட்க ம்ம்ம் ஆமா அவ என்னோட குட்டி இதயம் இதன்யா என மனம் சொல்ல இப்போது முதல் முறையாக சித்தார்த் மெலிதாக சிரித்தான்.

இதன்யா சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் கேமராவில் கணினி திரையில் பார்க்க ஆரம்பித்தான்.
அவளது தோழி பிரியா அவளுக்கு ஊட்டி விடுவது. இவள் அவளுக்கு ஊட்டி விடுவது என ஒரே பாசம் தான். ஆனால் உண்மையில் பிரியாவும் இதன்யாவும் மிகவும் நெருக்கமான தோழிகள்.

பள்ளியில் பத்தாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படிக்கின்றனர்.  இன்று வரை மிகவும் நெருக்கம் பிரியாவின் அனைத்து ரகசியங்களும் இதன்யாவுகு தான் தெரியும்.

இதன்யா, என் கிட்ட B.Ed படிக்க போறேன்னு சொன்ன இப்போ பார்த்தால் Msc சேர்ந்து இருக்க? 

எதுக்கு இதயா நடப்பதை பேசு டி என்னை நம்பி ஒரு கிளாஸ் கொடுத்து பாடம் எடுக்க சொன்னால் என்னை பார்த்து அந்த  புள்ளைகளை கிறுகிறுப்பு வரும் அப்புறம் அதை பார்த்தால் எனக்கு   தூக்கம் வரும் 

உன்னை நீயே பாரு இந்த புடவை, கொண்டை, கூடவே சோடா புட்டி இது எல்லாம் எனக்கு பொருந்துமா டி.. இந்த புடவைக்குள் நான் எப்படி இருக்க முடியும்.

இதன்யா, வேணும்னா எதுவும் போடாமல் வா அப்போ நல்லா இருக்கும் டி.. 

பிரியா, எனக்கும் ஆசை தான்! 

ஹே ஹே வாயாடி!. அப்புறம் உன் பின்னாடி பையன் யாரும்!. என இதன்யா கேட்க 

பிரியா, அது பொன்னு பின்னாடி சுத்துவாக டி நான் பொன்னு இல்ல.. 

தெரியும் நீ ஒரு ஒரு!. 

பிரியா, இதயா நான் மட்டும் பையனா இருந்தேன் உன்னை லவ் பண்ணி இருப்பேன். செம்மக்கட்டை டி.. 

இதை கேட்டதும் இதன்யா அடிக்க வர சில பெண்கள் பிரியாவை முறைத்து பார்த்தனர். 

இதன்யா, என்ன டி அந்த பொண்ணுங்க உன்னை அப்படி பார்க்குது. 

அது ஒன்னும் இல்ல அவள் ஒரு பையன் கூட சிரித்து பேசிட்டு இருந்தாள். அதுவும் என் கிட்ட வந்து அவள் கதையை சொன்னா.. 

நீ என்ன பண்ண? 

நான் சும்மா இருப்பனா  அதை அப்படியே ரெகார்ட் பண்ணி டிபார்ட்மெண்ட் ல  போட்டு விட்டேன். இப்ப பிசிக்ஸ்க்கும் எனக்கும் வாய்க்கால் தகராறு! அவ்ளோ தான் கச்சேரி இந்த லவ் பண்றவங்கல பார்த்தாலே எனக்கு பிடிக்க மாட்டிங்குது இதயா! 

இதன்யா, ஹே அப்போ உன் நட்பு வட்டம்!

பெரிய கூட்டம் நீ வேற நான் தனி ஒருவள் இல்ல எனக்குன்னு ஒரு கூட்டம் இருக்கு.. அதுவும் லவ் பண்ண பிடிக்காத சங்கம் 

எத்தனை பேரு? 

நான்,  பூர்ணா, வினோலினா அதுங்க ரெண்டும் இன்னிக்கி வெளியே கான்ஃபரன்ஸ் போயிருக்கு என்னையும் கூப்பிட்டாலுக.. 

இதன்யா, போயிருக்க வேண்டியது தானே!. 

பிரியா, அட போடி இங்கே NAC work போகுது தீனி ஜூனியர்  பசங்கள எடுத்து வர சொல்லி இருக்கேன். லாலி பாப், ஹார்லிக்ஸ், அரிசி ஊற வச்சு சக்கரை போட்டு எடுத்து வர சொல்லி இருக்கிறேன். 

அப்படியே ஓரமா உட்கார்ந்து நல்லா சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் அப்படியே பஸ்ல போய் முக்கால் மணி நேரம் ஒரு தூக்கம் எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா!. 

இதன்யா,  அடி பாவி! 

பிரியா, என் ஒத்து ரெண்டும் வரல இல்லன்னா ஜோரா இருக்கும் புளி சாதம், தக்காளி தொக்கு எல்லாம் ப்ரேக்லயே சாப்பிட்டு விடுவேன் . மூணு மூணு டிபன் பாக்ஸ் நல்ல தூக்கம். இதை விட என்ன வேணும். 

இதன்யா, விளைந்து போயிட்ட டி!  நீ ஊட்டி விடு என சொல்ல அதே போல் தான் பிரியாவுக்கும்  ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டு இதன்யா போன் எண் பிரியா வாங்கி கொண்டு மீண்டும் கன்னத்தை ஒரு வட்டம் போட்டு விட இதன்யா அவள் காதினை பிடித்து திருகி விட்டு பிரிய மனமில்லாமல்  இருவரும் பிரிந்தனர்.

இதை எலலாம் சித் பார்த்து விட்டு ஒரு காவலாளி கிட்ட அவளை வர சொல்வதாக அழைத்து வரும் படி கூறினான்.

அவளை அழைத்து கொண்டு சித் இருக்கும் அறைக்கு வர அவள் வெளியே நின்று கொண்டு உள்ளே செல்லலாமா! வேண்டாமா! உள்ளே சென்றால் அவன் எதும் திட்டுவானோ? இல்லை எதும் செய்வானோ? என இவள் யோசித்து கொண்டு முன்னும் பின்னுமாக நடக்க

சித்தார்த் அவள் எப்போது உள்ளே வருவாள்  என ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்தவன் இப்போது காத்திருக்க மனம் இல்லாமல் வெளியே கதவுகளை திறந்து கொண்டு நிற்க அவள் சித் வந்தது கூட தெரியாமல் தன் தலைய கீழ் குனிந்து கொண்டு  தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே நடக்க

ம்ம் ம்ம் என இவன் தன் தொண்டையை சரி செய்ய ,
அவள் அப்போது யார் என நிமிர இவன் அவளை ரசித்து  பார்த்து கொண்டு நிற்க இவள் சட்டென திரும்பி நின்று கொண்டாள்.

உள்ளே வா என இவன் சொல்ல அவள் அப்படியே நின்றாள். இப்போது நீ வருகிறாயா இல்லை நான் என…..

அவன்….???

இந்த epi பிடித்து இருந்தால் சொல்லிட்டு போங்க அப்படியே உங்க friendsக்கு share pannunga.. இன்னும் போக போக கதை நல்லா இருக்கும். என்னோட பெஸ்ட் கொடுத்து இருக்கேன். இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன இருக்கு? சித்தார்த் எதுக்கு அவளை இப்படி நடத்துகிறான்? சித்தார்த் நல்லவனா? கெட்டவனா? நீங்க என்ன நினைக்கிறீங்க? பிளீஸ் சொல்லிட்டு போங்க );

தொடரும்….

EPI 12

சித் சொல்ல வர அதற்குள் இதன்யா ம்ம்ம்.. வருகிறேன். என்று சொல்லி தலை குனிந்து கொண்டே உள்ளே சென்றாள்.

அவன் நேராக ஒரு முதலுதவி பெட்டி எடுத்து அவள் கைகளில் உள்ள காயத்திற்கு மருந்து போட அருகில் வர இவள் கொடுங்கள் நானே போட்டு கொள்கிறேன்…

சித்தார்த் கிட்ட இருந்து ஒரு கோப பார்வையே பதிலாக கிடைத்தது இவள் விரல்கள் மட்டும் நீட்ட அவன் அதற்கு தீ காயத்திற்கு உண்டான மருந்தை போட்டு கட்டினான்.

இதன்யா அவனிடம் நான் ஸ்கூல் கு கிளம்பட்டுமா….

முதலில் எனக்கு சர்வ் பண்ணு …

நீங்கள் இன்னும் சாப்பிடலயா மணி 2.30 ஆகுது ரொம்பவும் பசிக்குமே!

நீ தானே இனி எனக்கு சர்வ பண்றேன் அப்டின்னு சொன்ன சோ நான் உனக்காக வெயிட் பண்னேன்.

என இவன் சொல்லவும் இதன்யாவுக்கு அவன் மேல் கோபம் வர வில்லை. ஒரு தாயை தேடும் பிள்ளை போல் தோன்றினான்.

உடனே அங்கு இருந்த உணவினை எடுத்து முழு மனம் கொண்டு பரிமாறினாள்.

ஆனால் சிதார்த்தால் எடுத்து உண்ண முடியாமல் சிரமப்பட அவள் பார்த்து விட்டு என்னாச்சு உங்களுக்கு என ஒரு வேகத்தில் சித்தார்த்தின் கைகளை அவள் பிடித்து பார்த்து அவனுடைய கைகளை வருடி விட்டு ஊதி விட்டு நிமிர்ந்து அவனிடம் இவள் எதோ சொல்ல வர  

இதன்யாவுக்கு மனம் முழுவதும் சித்தார்த்தின் மீது கோபமாக இருந்தது. என்ன தான் காலையில் அவளை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றினாலும் இப்போது அவளை சீண்டி காயப்படுதுகிரான்.

அவனோட குணமே இது தான் போலயே ரொம்ப கஷ்டம் பா ….. என்று இவள் நினைத்து கொண்டு அவன் சாப்பிட அனைத்து உணவுகளும் பரிமாறினாள்.

சித்தார்த் அவளையே வைத்த கண் வாங்காமல் அவளுக்கு தெரியாமல் அணு அணுவாக ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்.

மம்ம் சாப்பிடுங்கள்… என்று அவனிடம் சொல்ல அவன் அந்த கைகளில் உணவை எடுக்க ஓரு சிறு தயக்கம் காட்டிட உடனே இவள் அவனை என்ன என்பது போல் முகத்தை பார்த்து விட்டு கைகளை பாரக்க கைகள் சற்று வீங்கி இருந்தது.

உடனே அவள் பதறி அவன் கைகளை சட்டென்று பிடித்தவள் அச்சோ! என்னாச்சு இப்படி ஆகி விட்டது, என்று சிராய்ப்புகளுக்கு ஊதி வருடி விட்டு பின் அந்த வீங்கி சிவந்த பகுதியை பார்த்தவள்.

உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் என்று தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே அவனை பார்க்க அப்போது தான்  உணர்ந்தாள். அவனிடம் கொஞ்சம் உரிமை எடுத்து கைகளை பிடித்து இருப்பது நியாபகம் வர அவன் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே அதே விறைப்பு குறையாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா அசடு வழிந்தவளாய் தெரியாமல்… என்று இவள் அவன் கையை விடும் நேரம் அவன் இவள் கைகளை கொஞ்சம் அழுத்தம் கொண்டு பிடிக்க இவளுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது.

அவன் இன்னொரு கையில் ஸ்பூன் எடுத்துகொண்டு சாப்பிட ஆரம்பிக்க இவள் தன் கைகளையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் வி… விடுங்கள்… மன்னித்து விடுங்கள்… பிளீஸ்…. சாரி என உதடுகள் தந்தி அடிக்க கூறினாள்.

சித்தார்த் தன் உணவின் மேல் கவனம் செலுத்தியவன், நீ என்கிட்ட எதுவும் சொல்லனுமா…..
நானா நான் என்ன சொல்லணும்…..
என்ன சொல்ல வேண்டியது இருக்கு….. என்று அவள் யோசித்து கொண்டே இருந்தவளின் மனதில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது அவன் கோகுலப்ரியாவை பற்றி கேட்கிறான் என நினைத்தவள்.

சார்….
ம்ம்….
என்னோட கன்னம் அது என்னோட தோழி பிரியா பண்ணுன வேலை…..
வேற ஒன்னும் இல்ல அவ பெயர் கோகுலபிரியா என சொல்லி விட்டு ஒரு சில மணி துளிகள் கழித்து

இப்போ கைய விடுறீங்களா…..
என்னோட கை என்று அவள் காட்ட இப்போது சித்தார்த் அவளின் விரல்களை மெதுவாக விட்டான்.

இப்போது அவன் சாப்பிட்டு முடித்து விட்டு தண்ணீர் குடித்து கொண்டே அவளை பார்த்தவன்.

இப்போது நேரடியாக  இதன்யாவை மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்க்க இவளுக்கு எதோ போல் இருந்தது. தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு அப்படியே அவன் பார்வையின் தாக்கம் தாங்காமல் தனது கூந்தல் கற்றை முடிகளை ஒதுக்கியவள்.

தன்னை இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ள முயற்சிக்க இப்போது சித்தார்த் பேசினான்.

நீயும் உன்னோட தோழியும் லெஸ்பியனா!! ஆ….
என்ன… அப்படினா என்ன? என்று இவள் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு கேட்க…
உன்னை பார்த்தால் அப்படி தெரியலையே என இவன் அவளை கொஞ்சம் சும்மா சீண்டும் எண்ணத்தில் சொல்ல

இதன்யா சித்தார்த்தை பார்த்து சார் நீங்க சொல்றது சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல நீங்க சொல்றதுக்கு அர்த்தம் என்ன என்று பட படத்துகொண்டு கேட்க

சித்தார்த் அவளை பார்த்து ஒரு சிறு புன்னகை செய்து இதை அவ கிட்ட நீ கேளு என்று சொல்லி விட்டு எழுந்து நடிகன் என்பதை மறைக்கும் முக கவசம், அந்த கூலர்ஸ் அணிந்து கொண்டு ஒரு இரண்டடி நடந்தவன்

பின்னால் திரும்பாமலயே ஈவ்னிங் உன்னை ட்ராப் பண்றேன் இப்போ நீ உன் நண்பிய பார்க்க போ….

அண்ட்… என்று நிருத்தியவன் நான் எதுவும் இன்டென்சனா பண்ணல…. (அதாவது சாரி கேட்கிறான் சாரி அப்டின்னு மென்சன் பண்ணாமல்) நிற்காமல் வேக வேமாக அவனுடைய வேலையை பார்க்க சென்று விட்டான்.

இதன்யாவுக்கு சிறிது நேரம் பிடித்தது அவன் என்ன சொன்னான் என்று சரியான திமிர் பிடிச்சவன் சாரி இப்படி கூட சொல்லலாமா எதோ சொன்னானே லெஸ்பியன் அப்டின்னா என்ன அந்த பிரியா கிட்டயே கேட்கலாம் என்று இவள் நேராக வேதியியல் வகுப்புக்கு செல்ல அதற்கு முன்னவே பிரியா நின்று கொண்டு இருந்தாள்.

ஹே ரவுடி நீ இங்கே என்ன பண்ற கிளாஸ் கவனிக்காமல் வெளியே என்ன வேலை உனக்கு

இதயா யாரோ என்னை பார்க்க வருகிறார்களாம் அப்டின்னு hod யே நேராக வந்து சொன்னாரு அது தான் வெயிட் பண்றேன்.

அவள் சித்தார்த்தை மனதில் இவனை என்ன செய்ய…. என்று அது நான் தான் பிரியா… வா போகலாம்

என்னடி சொல்ற நீயா….
உனக்கு இவளோ மரியாதையா…
ஹே என்ன நடக்குது இங்க நான் காலையில் கேட்ட போது அப்படியே மலுப்பி விட்ட இப்போ சொல்லு டி என்று அவள் கண்ணத்தில் வட்டம் போட வர உடனே இதன்யா ஹே போதும் வலிக்குது வா நம்ப பூட் கோர்ட் போலாம்

பிரியா அவள் தோள் மேல் கை போட்டு கொண்டு ஹே சொல்லு டி என்ன விஷயம் எனக்கு தெரியாமல் எதுவும் என்று அவள் இடையை பிடித்து கிள்ள

ஹே பிரியா லெஸ்பியன் அப்பிடின்னா என்ன…..
உடனே பிரியா அவள் அருகில் இருந்து கொஞ்சம் விலகி நின்று அவளை மேலும் கீழும் பார்க்க
என்ன டி என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய்.
பிரியா அவளை பார்த்து அப்டின்னா…

அப்டின்னா…. என இதன்யா கேட்க
அப்டின்னா….
அப்டின்னா என்ன சொல்லு டி பிளீஸ்…
இதயா அப்டின்ன” ஓரினச்சேர்க்கையாளர்”
அதாவது பெண் -பெண் என பிரியா சொல்ல…

போதும் ,போதும் ,சொல்லாத பிரியா ….

இதுக்கு எல்லாம் காரணம் நீ தான் உன்னால தான் இப்படி அய்யோ என்னை இப்படி நினைத்து விட்டானே என்று இவள் ஹே இனி என்ன நீ கண்ணத்தில் இப்படி செய்ய கூடாது என இரு பக்கமும் கைகள் வைத்து மறைத்து கொள்ள,

ஹே !ஹே ! இதன்யா யார் அவன் ஹே சொல்லு டி… என்று மிகவும் ஆர்வமாக அவள் அருகில் வந்தாள்.

ஹே இப்போ சொல்ல போறியா இல்லையா
சரி சரி சொல்றேன் இரு என்று சுற்றும் முற்றும் பார்த்தவள்.

பிரியா உனக்கு சித்தார்த் கிருஷ்ணா தெரியுமா….

ம்ம் தெரியும் அவரு பெயர் சித்தார்த் ரவிச்சந்திரன், ம்ம் ஆக்டர்  ,சோ ஹண்ட்சம் கரெண்ட்லி  கேர்ள் பிரண்ட் ,மெலினா ஜார்ஜ்

இப்போ என்ன அதுக்கு ஹே இந்த காலேஜ் அவங்களோடது அவரு தான் கரஸ்பான்டென்ட் டி.

ஹே என்ன சொல்ற  நிஜமாவா இந்த காலேஜ் சித்துவோடதா என அதிர்ந்து அவளை பார்க்க,

ம்ம்ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள்.

ஹே… ஜாலி! ஜாலி !
அவர் கிட்ட ஒரு ஆட்டோ கிராப் வாங்கணும், நேரில் எப்டி இருப்பாரு!
அய்யோ என்ன பண்றது ,எனக்கு கையும் ஓடல காலும் ஓடலை! என பிரியா அன்று பூஜா பேசியதை போல் பேச  இதன்யா அவளை அலுப்பாக பார்த்தாள்.

ஒரு நிமிடம் இதுக்கும் நான் கேட்பதற்கும் என்ன தொடர்பு சொல்லு டி

அது நான் அவரோட ஸ்கூல் ல தான் வொர்க் பண்றேன்.
ம்ம் அதனால….. என பிரியா கேட்க

அவரு தான் என்கிட்ட கேட்டாரு அந்த லெஸ் பத்தி…
எவரு டி…. அது?
அது தான் “தி கிரேட் சித்தார்த் கிருஷ்ணா ” என்று சொல்லி கொண்டே இவள் நடந்து செல்ல
பிரியாவை காணவில்லை. சிறிது தூரம் சென்றவள் எதோ குறையுதே என பார்க்க பின்னால் ஒரு ஆறு அடி தொலைவில் பிரியா அப்படியே நின்றாள்.

பிரியா….
ஹே பிரியா….
கோகுல்…
லூசு என்னாச்சு உனக்கு …. ஹே நீ இப்போ என்ன சொன்ன சித்து உன் கிட்ட பேசினாரா!

சாரி சாரி நீ சித்து கிட்ட பேசினாயா…. இது நிஜமா நீ என்னை ஏமாற்றவில்லை தானே…

நான் உன்கிட்ட பொய் சொல்வேனா…
அவர் கிட்ட தான் நான் வேலை செயுறேன். வேற ஒன்னும் இல்ல….

இதயா பொய் சொல்ற நீ எதோ மறைக்கிற… சொல்லு என்ன விஷயம்.
இதன்யா அவளிடம் அனைத்தும் ஒப்பித்தாள் முதல் சண்டை, b.ed காலேஜ் ல பார்த்தது, அவன் காப்பாற்றியது , சில நெருக்கமான விஷயம் ஒன்றும் நடக்கவில்லை ஆனால் சில விஷயங்கள் மட்டும் மறைத்து அனைத்தும் கூறினாள்.

பிரியா ஒரு இறுக்கையில் அமர்ந்து அனைத்தும் கேடட்வளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

அவள் இதன்யாவிடம் ஹே அவருக்கு உன் மேல் கொஞ்சம் இன்டெர்ரஸ்ட் டி…
ஹே மண்ணாங்கட்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ தானே இப்பொ சொன்ன அந்த லீனா ஆக்டர் கூட லவ் அப்டின்னு என்று கண்களில் ஒரு ஏக்கத்தோடு இவள் சொல்ல

ஹே பொய் சொல்லாத இதயா உனக்கு அவர பிடிக்கும் தானே….
அவள் பிரியாவின் காதுகளை திருக நீ என்ன சொன்னாலும் இது தான் உண்மை ஆனால் ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ …

என்ன அது ….
நீ அவர் கிட்ட இருந்து கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டன் பண்ணு  டி அவரு வேற நம்ப வேற என்று பிரியா கூறினாள்.

நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல டி எனக்கு எந்த எண்ணமும் இல்லை….

ம்ம் இருந்தால் சரி நீ கொஞ்சம் கேர் ஃபுலா இரு என்று பிரியா சொல்ல இதன்யா மனது நன்றாக குழம்பிப்போனது.

பிரியா அவளிடம் சும்மா சொல்ல கூடாது டி சாரியில் செம்மயா இருக்க டி சித்துவே என்னோட இதன்யா கிட்ட மயங்கி விட்டார்.

ஹே பிரியா என்று அவள் காதை பிடித்து திருகினாள். இங்கு சித்தார்த் அவன் வேலையை முடித்து விட்டு இவளுக்காக காத்திருக்க இதண்யாவும் வந்தாள்.

அவளுடைய முகமே சித்தார்த்துக்கு பதிலாக இருந்தது. காரில் அவள் எதுவும் பேச வில்லை நேராக ஹாஸ்டல் முன்பு நிற்க அவள் சித்தார்த்திடம் தேங்க் யூ சார்…. என சொல்லி அந்த கார் கதவுகளை திறக்கும் முன் நானும் பிரியாவும் நீங்கள் சொல்ற மாதிரி இல்லை (லெஸ்பியன்) என்று சொல்லி விட்டு திறக்க போக

சித்தார்த் சட்டென்று.  நான் எப்டி பிலீவ் பண்றது …. என அவளை சீண்டும் எண்ணத்தில் தான் கூறினான்.

இதன்யா இப்போது அவனை பார்த்து நீங்கள் எதுக்கு நம்ப வேண்டும் ,என்னை பற்றி உங்களுக்கு என்ன என்று அவள் இருந்த மனநிலையில் வார்த்தையை விட

சித்தார்த்  கார் கதவுகளை லாக் செய்தவன்.அவள் அருகில் வந்து  இப்போ என்ன சொன்ன என்று அவளை நெருங்கி அவன் ஒரு விரலால் அவள் கற்றை கூந்தலை காதுக்கு பின்னால் ஒதுக்கியவன்.

மீண்டும் அவளிடம் ம்ம்ம் சொல்லு என்று அவளின் கண்ணாடியை கழட்டி விட இப்போது இதன்யாவுக்கு  மிகவும் மூச்சு வாங்க படபடப்பாக அவனை பார்க்க முடியாமல் திணறினாள்.

அடுத்து அவன் விரல் அவள் அதரங்களுக்கு…..

தொடரும்…..

EPI 13

நீங்கள் எதற்கு என்னை நம்ப வேண்டும். என்னை பற்றி உங்களுக்கு என்ன …. என்று இதன்யா சொல்லி திரும்ப சித்தார்த் காரின் கதவுகளை லாக் செய்தவன். அவளை நெருங்கி இப்போ என்ன சொன்ன… என்று அவள் முடிக் கற்றையை ஒரே ஒரு விரலால் ஒதுக்கி விட அவள் ஒரு நிமிடம் அப்படியே விலவிலத்து  போனாள்.

அவனது விரலின் தீண்டல் இவளுக்கு மின்சாரம் பாய்வது போல் இருக்க அதோடு அவன் நில்லாமல் ஹே சொல்லு …என அவள் கண்ணாடியை கழட்ட இதற்கும் மேல் இங்கு இருந்தால் எதுவும் சரிப்படாது என நினைத்தவள். கதவின் பக்கம் திரும்பி வேகமாக திறக்க போக சித்தார்த் சாதாரண பார்வையில் டோர் லாக் ஆகி இருக்கு… என்று சொல்லி கொண்டே அவளை தன் புறம் திருப்ப அவள் அவனை ஏர் எடுத்து பார்க்க மிகவும் சிரமப்பட உடனே அவளின் முகத்தை பற்றி தன் ஒரு விரலில் நிமிர்த்தியவன் இதண்யாவை பார்த்து கொண்டே அவ கிட்ட எல்லாம் சொல்லிட்டியா…..
ம்ம் சொல்லு ….
யா… யாரு கிட்ட என்ன சொன்னேன்.., அவ தான் உன்னோடே தோழி, நண்பி, ப்ரெண்ட் கோகுல பிரியா என அவன் சொல்ல
நான் ஒன்னும் சொல்லல….
ஹே உன்னோட மொத்தமும் எனக்கு தெரியும் ஐ மின்,  நீ என்ன நினைக்கிறாயோ அதெல்லாம் ஐனோ எவெரி திங்க் …
இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல்
ம்ம்ம் கொஞ்சம் சொன்னேன் வேற ஒன்னும் இல்லை….

அப்போ உனக்கு எது நடந்தாலும் அவ கிட்ட போய் சொல்லி விடுவ ….

ம்ம்ம்ம் ஆமா என மிகவும் மெதுவான குரலில் இவள் சொல்ல அப்போ இதையும் போய் சொல்லு என்று இதன்யாவின் அறிகில் வந்த சித் அவளின் பின்ன தலையை சாய்த்து அவன் முகத்துக்கு அரிகில் கொண்டு வந்தவன் அவள் மூக்கோடு அவனது மூக்கை உரசி அவள் இதழ்களை தன் விரல் கொண்டு வருடி விட அவளுக்கு உள்ளே ஒரு பூகம்பம் வந்தது போல உடல் எல்லாம் சிலிர்க்க இதயம் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.

ஹே என்னை பாரு…. சீ மீ …. என்னோட ஐ ய பாரு என இவன் சொல்ல இவள் பார்வை கீழ் இருக்க அவளது சுவாசம் சூடாக தொடங்கியது. என்னை விடுங்க …. என்ன பண்றீங்க நீங்க …. நான் என்ன பண்றேன்….  என்று சொல்லியவன் அவளை எதுவும் செய்யவில்லை அப்படியே ஒரு இரண்டு நிமிடம் கழிந்தது மௌனம் மட்டுமே எதுவும் நடக்கவில்லை சித்தார்த் அவளை எதுவும் செய்யவில்லை.

சித்தார்த்துக்கு இதன்யாவின் இதய துடிப்பு அவளை மீறி வெளியே கேட்க “லிட்டில் ஹார்ட் “என மனதில் சொல்லிக்கொண்டான். இதன்யாவை சுற்றி சித்தார்த்தின் வாசனை அவனது மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது. அவளது பார்வை இவனை தீண்டவில்லை (பார்க்கவில்லை) ஆனால் சித்தார்த்தின் பார்வை அவளை ஒவ்வொரு நொடியும் தீண்ட அவளின் தீண்டாத பார்வைக்கு அவன் ஏங்கினான்.
அவள் மனதில் முருகா.. முருகா… முருகா… முருகா…. இந்த ஒரு வருஷம் இந்த ஒரே வருஷம் தான் b. Ed முடிச்சிட்டு நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்னோட கனவை நோக்கி போய் விட வேண்டும் என்று மனதில் கூறிகொண்டாள்.

ஆனால் b. Ed இரண்டு வருடம் அவள் படிக்கும் வருடத்தில் மாற போவதை அவள் அறிய வில்லை.

அவளை விட்டவன் இப்போ நம்பறேன் நீ அது (லெஸ்பியன்)இல்லை என்று  மெலிதாக சிரித்து கொண்டே அவளை விடுவிக்க வேக வேகமாக சென்று விட்டாள்.
சித்தார்த் அவள் சென்ற திசையை பார்த்து லிட்டில் ஹார்ட் தான் அது எப்போதும் எனக்கு தான் என்று சொல்லிக் கொண்டே தன் காரை காலேஜ் நோக்கி கிளப்பினான்.

ஆம் அவளை ஹாஸ்டலில் விடுவதற்காக தான் வந்தான் இப்போது அவன் வேலைகளை ஆரம்பித்தான்.

பெங்களூரில் மிகப்பெரிய ஒரு உயர் ரக தங்கும் விடுதியில் தன்னுடைய சில பாகங்கள் மட்டும் மறைத்து இருக்கும் அந்த நீச்சல் உடையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாசி (மூக்கு), உதடுகள், மார்பகங்கள்,நட்டு வைக்கப்பட்ட புருவங்கள் , என இயற்கை தேகத்தை செயற்கை ஆக்கி ஒரு மெழுகு பொம்மை போல் ஒரு ஆடவனை நோக்கி ஒயின் கோப்பையுடன் சென்றாள்.
மெலினா ஜார்ஜ் யார் அவள் ???
அவள் தான் சித்தார்த்தின் காதலி முன்னால் காதலி என்று சொன்னால் சரியாக இருக்கும்.

Jk ராவ் அவனும் சித்தார்த் போல வாரிசு நடிகன் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த்தை விட வெள்ளித்திரையில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டு இருப்பவன் ஆனால் அவனுக்கு குடும்பம் குழந்தை என அனைத்தும் நிறைவான வாழ்க்கை தான் ஆனால் ஆசை யாரை விட்டது.

மெலினா ஜெகதீஸ நோக்கி தான் தன்னுடைய மாய புன்னகை கொண்டு நடந்து வர அவளை ஒரே இழுப்பில் தன் மேல் இழுத்து கொள்ள ஹே… Jk என அவள் கூறும் முன்னவே  அவள் உதடுகளை  தனக்கு விருந்தாக்கி கொண்டு இருந்தான் . ஜெகதீஷ் கஜேந்திரா என்கிற பெயரை Jk என வைத்து கொண்டான்.  எதற்கு லீனா அவனுடன் இருக்கிறாள்.  வேறு எதற்கு அவன் ஒரு சமகால படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான புரோடெக்சன் வேலைகள் எல்லாம் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இப்படி ஒரு மீட்டிங்.

மெலீனாவை பார்த்து உனக்கு நான் பெட்டர் ன்னு தோணுதா இல்லை அந்த****சித்து வா என்று சொல்லி கொண்டே அந்த ஒயினை எடுத்து அவள் மேல் ஊற்ற ஹே Jk நான் எப்போ அப்படி சொன்னேன் நீ என்னை பண்ணது போல் என்னை அவன் நாட் வொர்த் Jk என்று கூறியவள். அவனின் மேல் ஒரு பாம்பை போல் அவளுடைய உடலை சுற்றி இப்போ ஐ நீட் யூ என்று கூற அவன் தட்ஸ் மை கேர்ல்  என அவளை மோக பார்வை கொண்டு அள்ளி அணைத்து கொண்டு அறைக்கு சென்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டும் தன் அப்பாவை போல் இருக்க கூடாது என்று தன் சுயத்தை ,தன் இயல்பை ,தன் படிப்பு ,அழகு ,ஒழுக்கம் என அனைத்தையும் மெலீனாவுக்காக அவள் காலடியில் வைத்து ஒரு அடிமையை போல் அவளுக்காக  காதலுக்காக ஏங்கினான் சித்தார்த் ஆனால் அவனுக்கு கிடைத்தது துரோகம் மட்டுமே…

இங்கு சித்தார்த் தன் காலேஜ் நுழைந்த உடனேயே தாராவிடம் இருந்து போன் வந்தது. தாரா வளர்ந்து வரும் நடிகை சித்தார்த் நடித்த (a+b)2 படத்தின் நாயகி சித்தார்த்தின் நெருங்கிய தோழி ஆவாள். சித்தார்த், குரு பிரகாஷ் ரெட்டி, தாரா மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

ம்ம் சொல்லு தாரா….
சித்து எங்கே இருக்க ….
நான் இங்கே TN ல தமிழ் நாட்டில் இருக்கேன். என்ன விஷயம்…
இல்ல நத்திங் டா…
ம்ம் சொல்லு …
லீனா Jk கூட ஒரு மூவி கமிட் ஆகி இருக்கா …
ம்ம் ஓகே அதனால் இப்போ என்ன என்று ஒரு கசந்த புன்னகை சிந்தினான்.
இல்ல டா நீ அவ கிட்ட என அவள் சொல்லும் நேரம் ஸ்டாப் இட் தாரா…. இந்த ஒரு வருஷம் சரி அதற்கு முன்னாடியும் சரி என்னையும் அவளையும் வச்சு வெறும் காசிப்ஸ் மட்டும் அந்த கோசிப்ஸ் ல அவளை பற்றி பேசி பிரபலம் ஆகி இப்பொ பாலிவுட் அடுத்து ஹாலிவுட் தான் அதற்கு தானே என்னை use பண்ணி தூக்கி போட்டாள்.

நானும் அவ கிட்ட இது தெரியாமல் slave (அடிமை) மாறி சுற்றி கொண்டு இருந்தேன் குரு என்கிட்ட அப்போவே சொன்னான் ஆனால் நான் என்று அவன் உதடுகளை மடித்து கடித்து கொண்டவன் அதற்கும் மேல் ஒன்றும் பேச வில்லை .

நான் TN வரதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த சித்தார்த் இல்லை இப்போ நான் வேற ஒரு சித்தார்த் I hate her name , I hate every thing memory for her என கோபமாக கூறி வைக்க போக சாரி சித்து …. ஒரு சிறு அமைதிக்கு பின் ம்ம் டேக் கேர் என்று கூறி போன் வைத்தவன் அதற்கும் மேல் இனி என்ன நடக்கும் என்று தெரியும் அதனால் அவன் போனை சைலண்ட் ல போட்டவன் வேண்டாம் என்று அணைத்து வைத்து விட்டான்.

இதற்கும் மேல் வேலையில் கவனம் வர வில்லை அதனால் தன் வீட்டுக்கு ஆறுதல் மருந்தை தேடி சென்றான். தன்னை மறக்கும் அளவுக்கு குடித்தவன் நினைவில் லீனா இல்லை இதன்யா இருந்தாள்.

“லிட்டில் ஹார்ட்”
என்று அவனுடைய இதயத்தை வருடி” இங்கே பெயினா இருக்கு டி “
என்னன்னு தெரியலை என்று நா குழற தன் கண்கள் தரையை பார்த்து கொண்டே

ஹே என்னன்னு தெரியலை டி உன் கூட இருந்தால் அது என்னை நானே நிஜமா ட்ரூ வா….நீ என் கூட இருப்பியா…. இருக்கணும்.. இப்போ இனி எப்போவும் நீ எனக்கு தான்…

நான் உன்னை எங்கேயும் போக விட மாட்டேன் உன்னை என்னோட நெஞ்சு கூட்டில் வைத்து அடைத்து கொள்வேன்
என்று கூறி அவன் இன்னொரு  பாட்டில் ஒயின் எடுத்து வாயில் சரித்தவன்.

கண்கள் சொருகி கிடக்க இதன்யாவின் முகம் அவள் தன் கண்ணாடியை சரி செய்வது போல் அவன் மன கண்ணில் ஓட உனக்கு அதிகமான சந்தோஷத்துக்கும் சரி உன்னோட கஷ்டம் , கோபம் எல்லார்துக்கும் நான் தான் காரணமா இருக்கணும் நீ….என அவன் நிதானத்துடன் அங்கே உள்ள மது பாட்டில்கள் அனைத்தையும் தள்ளி உதைத்தான். 

           ******

புன்னகையுடன் மதுவை குடித்து கொண்டு இருந்தான் நவீன் குமார். மோகன் அருகில் நின்று கொண்டு இருக்க… நவீன் இந்த நியூஸ் நாளைக்கு ஃப்ளாஷ் நியூசா!.. 

ம்ம் ஆமா சார்… என கூறி கொண்டு இருந்தான். லக்கி கேர்ள பைண்ட் பண்ணியாச்சா!.. 

சார் என புரியாமல் அவன் விழிக்க.. 

நவீன், என்னோட லக்கி சார்ம் தன்யா எங்கே அவள் வாசத்தை நிறைத்த இந்த சுவாசம் அதனால் எனக்கு எவ்ளோ பிராபிட் தெரியுமா! 

மோகன் சொன்னால் தானே தெரியும் என முணுமுணுக்க … 

யூ புல் சிட்…  இப்போ ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனி  கூட டை அப் பண்ணி காஸ்மெட்டிக் புரோடெக்ட் ரிலீஸ் பண்ண போறோம் அதுல ஃபர்ஸ்ட் “தன்யா ஹேர் வாஷ் ஷாம்பூ”ஃபெனுக்ரீக் மேஜர் மெட்டீரியலா சேர்க்க சொல்லி இருக்கேன். நிச்சயம் ஹிட் அடிக்கும்..  என  கூறியவன். 

எப்போ கண்டு பிடிப்ப? கூடிய சீக்கிரம் சார் லிஸ்ட் ரெடி ஆகிடுச்சு இனி ஒன் மந்த்!.. 

கம் அகைன்! என அவன் கர்ஜிக்க.. 

சார் அட்லீஸ்ட் 15 டேஸ் கொடுங்க சார் பிளீஸ் என மோகன் கெஞ்சிட.. 

நவீன்,10 டேஸ் ஃபைனல்.. அவளை கூடிய சீக்கிரத்தில்  அவளை அடையவேனும். 

மோகன், சார் இன்னொரு விஷயம்… 

என்ன? 

சித்தார்த் சார் போன கார் ஆக்சிடன்ட் கேஸ் ஃபைல் ஆகி இருக்கு… கம்பளைன்ட் பண்ணி இருக்காரு!.. 

நவீன் இளனமாக நல்லா தானே இருக்கான். அப்புறம் எதுக்கு கேஸ்!. 

மோகன், அவர் தனியா இல்ல சார் அவர் சாட்சியா இருக்காரு  அவரு கூட வந்த பொண்ணு தான் கம்பிளைன்ட் கொடுத்து இருக்கு… 

பொண்ணா!.. 

ம்ம் ஆமா சார் டீச்சர்! என மோகன் சொல்ல.. 

யார் அது?.. 

தொடரும்.. 

EPI 14

பொண்ணா!.. 

ம்ம் ஆமா சார் டீச்சர்! என மோகன் சொல்ல.. 

யார் அது? அவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறான். என நவீன் குமார் கேட்க.. 

தெரியல சார்…என மோகன் சாதாரணமாக சொல்ல.. 

வாட் தெரியலயா!.. 

மோகன், சார் சித்தார்த் சார் கொஞ்சம் இறக்கம் உள்ளவர் எதிரிக்கு எதிரி த்ரோகிக்கு துரோகி மற்ற படி என அவன் சொல்ல வர… முடியாமல் தத்தலித்தான் அந்தரத்தில பறந்து கொண்டு இருந்தான். 

நவீன் குமாருக்கு அவன் பேச பேச உள்ளுக்குள் கோபம் கொதித்து எழ அவனை தூக்கி இருந்தான். 

ச.. சார்.. சார் என முக்கி கொண்டே அவன் பேசிட சாரி சார் என அவன் கெஞ்ச நவீன் அவனை விட அந்தரத்தில இருந்து தொப்பென கீழே விழுந்தான். 

உடல் நடுக்கம் கண்டது. நவீன் அவனை பார்க்க சார் சார் சாரி சார் இனி இப்படி பேச மாட்டேன். என சொல்லி தன்னை அசுவாச படுத்தினான். 

நவீன், சீக்கிரம் என்னோட பேபி யை கண்டு பிடிக்கும் வழிய பாரு.. என சொல்லி கொண்டே வேகமாக அவனது பெரியப்பாவை பார்க்க சென்றான். 

      *****

இதன்யா என்ன செய்கிறாள்.

இதன்யா காரில் இருந்து மூச்சு வாங்க இறங்கி வந்தவள் நினைவில் சித்தார்த் மட்டுமே இருந்தான்.

அவன் மூச்சு காற்று அருகில் வீசுவது போலவும் சித்தார்த் மூக்கோடு மூக்கு வைத்து உரசிய அந்த இடம் குறுகுறுக்க ஆரம்பித்தது.

அய்யோ என்னாச்சு எனக்கு அவன் …அவன் நினைப்பாவே இருக்கே!  அந்த மூக்கின் மீது விரல் வைத்து தீண்டி பார்த்தாள்.
நேராக படுக்கையில் போய் சோர்வாக விழுந்தவளின் எண்ணம் முழுவதும் சித்தார்த் தான் இருந்தான்.

அவனது மூச்சு காற்று இவள் மேல் வீசுவது போல் தோன்ற ஒரு நிமிடம் உடலில் எல்லா இடங்களிலும் இரத்தம் வேகமாக பாய்ந்தது. உள்ளுக்குள் ஒரு மின்சாரம் தான்

தன் எண்ணத்தை வேறு ஒன்றின் மீது செலுத்த வேண்டும் என்று நினைத்தவள் அந்த புதிய ஃபோனில் தன் அம்மா, அக்கா, அண்ணா, தன் மாமா வீடு என அனைவரிடமும் பேசி தன்னை இயல்பாக காட்டி கொள்ள முயற்சி செய்தாள்.

இரவு ஆக இதன்யாவுக்கு நித்திரை தான் வர வில்லை அது தான் மொத்தமாக சித்தார்த் கிட்ட தொலைத்து விட்டாளே.

பிளீஸ் தூங்கு டி அவனை நினைக்காதே அவன் உன்னை ரிவெஞ் பண்றான்.

ரொம்ப ரொம்ப கெட்டவன் டி என மூளை சொல்ல
மனமோ இல்லை உன்னோட உயிரை காப்பாற்றி இருக்கிறான் அவன் கொஞ்சம் தான் கெட்டவன் ரொம்ப ரொம்ப நல்லவன் டி

இல்லை இல்லை இப்போ நான் என்ன செய்யட்டும் முருகா நீ தான் ஹெல்ப் பண்ணனும் பிளீஸ் டார்லிங் என்று தமிழ் கடவுளிடம் ஆங்கிலத்தில் உதவி கேட்டு கொண்டு இருந்தாள் இதன்யா

இங்கு சித்தார்த் தன் சுய நினைவை இழந்து அந்த ரூமில் தனியாக புலம்பி கொண்டே படுத்து இருந்தான்.
சிறிது நேரத்தில் ரிஷி வந்தான் அவனை கை தாங்களாக கூட்டி சென்று போதை தெளிய வைக்க போக

சித்தார்த் லிட்டில் ஹார்ட் எனக்கு வேணும்டி
நீ எனக்கு மட்டும் தான்
நீ என்னை மட்டும் தான் விரும்பனும் யாரையும் பார்க்க கூடாது டி என
பின் லிட்டில் ஹார்ட்….
லிட்டில் ஹார்ட்….
லிட்டில் ஹார்ட்…
லிட்டில் ஹார்ட் என தமிழில் உளற ரிஷிக்கு ஒரு நிமிடம் ஆச்சர்யம் சந்தேகம் இரண்டுமே வந்தது.

யார் அந்த லிட்டில் ஹார்ட் சித்தார்த் தமிழில்  உளரும் அளவுக்கு இவர் மனதில் இடம் பிடித்தது என நினைத்து கொண்டே அவனை குளியலறை கூட்டி சென்று குளிக்க வைத்து எதுவும் சாப்பிடாமல் இருந்தால் சாப்பாட்டை ஊட்ட அருகில் சென்றான்.

டேய் ரிஷி ….
சொல்லுங்க சார்….
என்னடா சார் ன்னு கூப்பிடற….
சரி சொல்லுங்க நான் எப்படி கூப்பிடனும் என்று வாயில் உணவு வைக்க அதை மென்று முழுங்கி கொண்டே மாமான்னு கூப்பிடு
நீ ரோஷினிய கல்யாணம் பண்ணா என்னை மாமான்னு தான் கூப்பிடனும்….
ரிஷி அவன் இருக்கும் மன நிலையில் எதுவும் பேச விரும்பாமல் ம்மம் மாமா…
குட் பாய்… என அடுத்து உணவை வாங்கியவன் அப்போ என்னோட வைவ் உன்னை எப்படி கூப்பிடனும்….
நீங்கள் அமைதியா சாப்பிடுங்க பிளீஸ்
டேய் சொல்லு டா ….
இல்ல என்று இவன் எழ போக …
சரி சொல்றேன் பிளீஸ் இந்த ஒரு வாய் என சொல்ல முதலில் நீ சொல்லு …
அவங்க எனக்கு சிஸ்டர்… அப்படின்னா என்ன டா .. தங்கை போதுமா
நான் எப்டி உன்னை கூப்பிட சொன்னேன்.
ம்ம் சரி மாமா அவங்க எனக்கு தங்கை போதுமா..
ம்ம் அதே நினைப்பு தான் உன் மனசுல இருக்கணும் காட் இட் அவ உனக்கு தங்கை எனக்கு கூடிய சீக்கிரத்தில் என சொல்லி கொண்டே அப்படியே உறங்கி போனான்.
யார் இது லிட்டில் ஹார்ட் இவருக்கு அவ்ளோ முக்கியமான ஒருவர் என்று மனதில் நினைத்தவன் சிதார்த் நடுவில் எழுகிறானா என பார்க்க அருகில் அமர்ந்து பார்த்து கொண்டே உறங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் தான் அவனுக்கு தலை வலிக்க அந்த வீட்டில் சித்தார்த்தின் தாத்தாவுக்கு விசுவாசமாக வேலை செய்யும் இரு ஆட்கள் சரசம்மா, முத்து இருவர் தான் இன்னும் ஒரு 50பேர் அந்த அரண்மனை போல் இருக்கும் வீட்டில் வேலை செய்கின்றனர்.
ரிஷி சரசுமாவிடம் தலைவலி சரியாக கஷாயம் வாங்கிக் கொண்டு மேலே வந்தான்.
ரிஷியை பார்த்ததும் தான் சித்துவிர்க்கு எல்லாம் நியாபகம் வந்தது.
சார் இந்தாங்க என்று கொடுக்க
சித்து அவனை முறைக்கும் பார்வை பார்த்து விட்டு என்னனு கூப்பிட்ட நீ …..
அவன் கேள்வியாக சார்….
உன்னை நான் மாமா அப்டின்னு கூப்பிட சொன்னதாக எனக்கு நியாபகம்!
ரிஷி அவனை அதிர்ச்சியாக பார்த்து விட்டு இப்போது வேறு வழி இல்லாமல் ச சரி மாமா…. என சொல்ல
ம்ம்ம்.. என்று அந்த கஷாயத்தை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான்.
பின் வேகமாக அனைத்து செய்தி தாள்கள் எடுத்து ஆங்கிலம், கன்னடம்,  மொழி தாள்கள் எடுத்து என்ன செய்தி என பார்க்க சித்து நினைத்தது போலவே சித்துவும், மெலீனாவும் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்து விட்டு அவன் அதிர்ச்சி ஆக வில்லை.
இது ஆறு மாசத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு நெருக்கமான செல்பி….
சித்துவின் மனதில் நான் நெனைச்சேன் டி ,நீ *** என சில வார்த்தைகள் உபயோகித்து விட்டு, வலைதளம் சென்றவன் அங்கும் அதே போல் சில வற்றை பார்க்க மனது கவலை அடையவில்லை இப்போது கோபம், வெறுப்பு, ரணம் மட்டுமே இருந்தது.
உடனே குரு பிரகாஷ்க்கு ஃபோன் செய்தவன் வலை தளத்தில் உள்ள சித்து மெலீனா தொடர்பான அனைத்து செய்திகளையும் நீக்கினான்.

மெலினா ஏன் இவ்வாறு செய்கிறாள். வேறு ஒன்றும் இல்லை அவள் பேசு பொருளாக எப்பொதும் இருக்க வேண்டும்; அவ்வளவு தான்.

ரிஷி மனதில் ஒரே குழப்பம் கேள்வி தான் கேட்டு விடலாமா என தோன்ற சித்தார்த் அவன் முகத்தை பார்த்து ம்ம்ம்…
என அவன் மனதை படித்தது போல் சொல்ல,
அந்த , அந்த லிட்டில் ஹார்ட் யாரு ?
இப்போது சித்தார்த் முகத்தில் ஒரு நிமிடம் மென்மையான சிரிப்பு வந்து விட்டு இதை ரிஷி கேட்டதில் கடுப்பானவன்.
உன்னோட தங்கை..
மேகா வா ! என ரிஷி அவனது தங்கையை பற்றி சொல்ல
சித்து அவனை முறைத்தான். இனி எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவனாக இருந்தான்.

இங்கு காலையில் எழுந்த இதன்யா  தனது போனில் வலை தளம் செல்ல அந்த புகைப்படத்தை பார்த்து விட்டாள்.

மனது ஒரு நிமிடம் கனத்து போனது இதயம் மிகவும் வலிப்பது போல் ஒரு உணர்வு. என்னாச்சு இதன்யா உனக்கு அவன் யாரோடு நெருக்கமாக இருந்தால் உனக்கு என்ன என்று மூளை கேட்க
எனக்கு என்ன …. எனக்கு ஒன்றும் இல்லையே என்று தன் மனது கட்டாயமாக பொய் சொன்னது.

இந்த ஒரு வருடம் ஒரே வருடம் இல்ல இன்னும் பத்து மாதம் தான் அப்புறம் நீ இங்கு இருந்து கிளம்பிவிடுவாய் என மூளை அறிவுரை வழங்கியது.

அவளோடு இவ்வளவு நெருக்கம் காதல் நான் யார் நான் ஒரு சாதாரண பொன்னு அவ பேரழகி உன் கிட்ட அவன் பேசியதே உலக அதிசயங்களில்  ஒன்னு.

இல்ல ,இல்ல, இதன்யா இப்படி நினைக்காதே ,பிரியா சொன்னது மனசுல வைத்து கொள் என்று தன்னை சரி செய்து கொண்டு இனி அவன் மேல் நம் எண்ணம் போக கூடாது என்று பள்ளி கிளம்பினாள்.

சித்தார்த் இன்று தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்பது போல் பள்ளி வந்தான். இதன்யாவும் வந்தாள். அவளுக்கு கொடுக்கப்பட்ட காலஅட்டவணை படி நேராக 11ம் வகுப்புக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தாள்.

இன்று சித்தார்த்துக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்ன தான் வலை பக்கங்களில் இருந்து படத்தை நீக்கினாலும் இந்த பத்திரிக்கைகாரர்கள் எதுவும் செய்தி கிடைக்குமா என அலைந்து கொண்டே இருப்பார்கள்.

இதன்யா காலை மூன்று வகுப்பு முடியும் வரை வகுப்பில் இருந்து வெளியே வரவே இல்லை. இங்கு சித் மனம் கொஞ்சம் கவலை காலையில் இருந்து அவனுடய லிட்டில் ஹார்ட் அவன் கண்ணில் படவே இல்லையே மதியம் சாப்பிடும் போது பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டான்.

மதியமும் ஆனது வழக்கம் போல் ரிஷி உணவை கொண்டு வர அவனிடம் நான் உன்னை காலேஜ் தானே போக சொன்னேன். இங்கே என்ன பண்ற என்பது போல் ஒரு பார்வை பார்க்க,

இப்போ கிளம்பிவிடுவேன் ஸார் என்று கூறி பின் மாமா என்று அழைக்க ம் கிளம்பு நான் வரேன், நீ முதலில் போ …

ரிஷி இப்போது வெளியே சென்றவன் நேராக இதன்யாவை பார்க்க சென்றான். அவள் கைகளில் ஃபோன் வைத்து இருப்பதை பார்த்து என்ன தனு புது ஃபோன் என சொல்ல இதன்யா ஃபோனை அவனிடம் நீட்டினாள்.

சீனியர் இது என்று சித்தார்த் கூறிய அனைத்து விஷயமும் கூற அவனுக்கும் இது தெரிந்த விஷயம் தான் அதனால் சந்தேகம் வர வில்ல.

ரிஷி தன் எண் கொடுக்கலாமா என யோசித்து கொண்டே இருக்கும் நேரம் அவளே கேட்டாள். ரிஷி சந்தோஷமாக தன் எண்ணை அதில் பதிவு செய்தவன் ஒரு மிஸ்டு கால்  விட்டு தன் போனில்  பதிவு செய்து கொண்டான்.

உடனே ரிஷி அவளிடம் தனு என்னோட PhD வேலையை ஆரம்பிக்க போகிறேன். சூப்பர் சீனியர் வாழ்த்துக்கள். எனக்கு சாக்லேட் என கேட்க அந்த galaxy சாக்லேட் எடுத்து நீட்ட அவள் சந்தோஷமாக வாங்கி கொண்டாள்.17)தெரிஞ்சு தான் கொடுத்தேன். இன்டென்ஷனா தான் உனக்கு!.. 

அவன் அவளின் கண்களில் இருந்து மீள முடியாமல் இதழில் விழ அவனை தள்ள முடியாமலும் அந்த இதழ் சண்டையை தடுக்க முடியாமலும் பெண்ணவள் சில நிமிடம் தன்னை மறந்து பின் அவனிடம் இருந்து தன் இதழை மீட்டு கொண்டு வேகமாக தள்ளி விட்டவள்.

அவன் கண்ணங்களில் ஒரு அறை விட்டு ஆள் காட்டி விரலை நீட்டி கொன்றுவேன்…. என மிரட்டி சென்று விட்டாள்.

சித்தார்த் அவள் சென்றதும் ஒரு கையில் கன்னத்தை சிரித்து கொண்டே தேய்த்தவன் . ஒரு கை கொண்டு அவன் இதழ்கள் இரண்டையும் தொட்டு பார்த்து வருடினான். “லிட்டில் ஹார்ட் Today வெறி ஹாட்”என கூறி விட்டு சிரித்து கொண்டே தன் கூலர்ஸ் எடுத்து போட்டு கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

இதன்யா நேராக ரெஸ்ட் ரூம் சென்றவள் அவன் கொடுத்த முத்தத்தை தேய்த்து கழுவினாள். இன்னும் கழுவு டி என்று அறிவு ஆயிரம் முறை சொல்ல அந்த இதயம் இன்னும் வேகமாக துடித்து கொண்டு தான் இருந்தது.

முகத்தையும் ஒரு முறை கழுவிய பிறகு கண்ணாடியில் அவள் முகத்தை பார்க்க அவன் வாசம் நாசியில் இருந்து கொண்டே இருந்தது.

“எவ்ளோ தைரியம் அவனுக்கு எனக்கு முத்தம் கொடுத்து விட்டானே! . இன்னும் இரண்டு கன்னத்திலும் அறைந்து இருக்க வேண்டும். அவனை சும்மா விட கூடாது!” என்று இப்போது இயலாமயுள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.

“என்னோட முதல் முத்த அனுபவம் அது  என்னோடவனோடு தான்  இருக்க வேண்டும் இப்போ இவன் எதுக்கு இப்படி செய்தான்.”  இப்போது என்று கைகளில் நெட்டி எடுத்து கொண்டே கோபத்தில் அங்கும் இங்கும் நடக்க ஒரு நிமிடம் கண்கள் மூடினால் கூட  தன் இதழில் மெய் மறந்து அவன் கொடுத்த முத்தம் மட்டுமே நினைவுக்கு வந்தது. இதை நினைக்க நினைக்க அவளுக்கு உலைகலன் போல் கொதித்தது. இதை இப்படியே விட கூடாது என்று நினைத்தவள் அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று கிளம்பினாள்.

சித்தார்த் தன் அறைக்கு சென்றவன் அவனது கார்ட்ஸ் மற்றும் பணியாளர் அனைவரிடமும் இனி இதன்யா  அவனை பார்க்க வந்தால் காத்திருக்க வைக்க கூடாது உடனே உள்ளே அனுப்பி விட வேண்டும். அவர்கள் உடனே சரி என்று வேலையை தொடர்ந்தனர்.

சித்தார்த் எதிர் பார்க்க வில்லை இப்போதே தேடி வருவாள் என்று இவன் போன் எடுத்து தன் அம்மாவிடம் பேசலாம் என்று போன் செய்யப் போக வேக வேகமாக நடந்து இதன்யா அவன் அறைக்கு வந்தாள்.

எதேட்ச்சையாக கணினி திரையில் பார்க்க அவள் மூக்கு புடைக்க கோப பார்வையில் இவன் அறை நோக்கி வருவது தெரிய இப்போது “ஐம் நாட் எக்ஸ்பெக்டட் ஃப்ரம் யூ லிட்டில் ஹார்ட் பட் ஐம் வெயிட்டிங் டி கம் குயிக் லீ”… என சொல்லி கொண்டே  பார்க்க அவள் உள்ளே வர யாரும் தடுக்க வில்லை “மே ஐ கம் இன் ஆவது ம***வது” அவள் அப்படி ஒரு கோபத்தில் இருந்தாள்.

இவள் உள்ளே வருவது தெரிந்தும் தெரியாதது போல் சித்தார்த் அதே கம்பீரம், மிடுக்குடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க.. உள்ளே வந்தவள் அவன் முன்னே நின்றவள் அவன் வேறு எதிலோ கவனம் செலுத்துவது தெரிய அவள் சொடுக்கிட இவன் தன் புருவத்தை நெரித்து கொண்டே அவளை ஒரு பார்வை பார்க்க…

இதன்யா, எதுக்கு இப்படி செஞ்சீங்க…

சித்தார்த் புருவத்தை மேல தூக்கி கொண்டு  என்ன செஞ்சேன்…”எப்படி செஞ்சேன்?”…

“என்ன உங்களுக்கு கொஞ்சம் அறிவு எதுவும் இருக்கா!”

எனக்கா என்று ஒரு சிறு புன்னகை சிந்தியவன்… இப்போ உங்களுக்கு என்ன வேனும்….

இதன்யா மனதில் எதுவும் சொல்ட்ரானா பாரு தெரியாமல் செய்து விட்டேன் அப்டின்னு சொன்ன கூட அவனை நாலு கேள்விகேட்கலாம்….இப்போது அவனிடம்

எதுக்கு கிஸ் பண்ணீங்க? 

நானா? 

“ம்ம் நீங்க தான்! தெரியாமல் கொடுத்து விட்டேன் அப்டின்னு சொல்றத கேட்க நான் ஒன்னும் முட்டால் இல்ல”. என்று கோபத்தில் கைகளை நீட்டி அவனை கேட்க

இப்போது சித்தார்த் அவளை நிதானமாக பார்த்து,
“நான் தெரிஞ்சு தான் கொடுத்தேன்” என்று  சொல்ல

இப்போது அவள் வார்த்தைகள் அப்படியே வெளியே வர மறுத்தது.
ஒரு சில நிமிடம் இப்படியே செல்ல சித்தார்த் மௌனம் உடைத்தான்.

“நான் தெரிஞ்சு தான்!”  என்று அவன் உதடுகளை கடித்து கொண்டு “தெரிஞ்சு தான் கொடுத்தேன். இன்டென்ஷனா தான் கொடுத்தேன்.’

இப்போது இதன்யா ஏன் இப்படி பண்ணிங்க?  எப்படி நீங்க இப்படி செய்யலாம்… இனி நான் இங்கே வேலை செய்ய முடியாது…

சித்தார்த்தின் பார்வை மாறியது “அப்படியெல்லாம் உன்னால போக முடியாது உன் வேலைய நீ தான் செய்யணும் புரியுதா” அவளை பார்த்து குறும்பாக” நான் உன்னை அடிச்சதுக்கு தான் நீ திருப்பி அடிச்சிட்டியே”

இதன்யா இப்போது புருவம் நெருக்கி அவனை முறைத்து பார்க்க “ஐ மின் நான் உனக்கு கிஸ் அடிச்சேன் நீ என் கன்னத்தில் அடிச்சுட்ட… இதுக்கு சரியா போச்சு..
நீ ப்ரீத் பண்ணும்போது டெம்பரேச்சர் 37.°f ல பாரன்ஹீட் ல நீ ப்ரீத் பண்ண சோ எனக்கு அந்த ஹீட் ல நான் மைண்ட் பிளான்க் ஆகி கிஸ் பண்ணிட்டேன். தட்ஸ் ஆல்”..

இதை கேட்டு இதன்யாவால் அடுத்த வார்த்தைப் பேச முடியவில்லை.

இதன்யா,ஒரு சில நிமிடம் கழித்து இனி இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்க வேண்டாம்.

ம்ம் ஓகே மேடம் தெரியும் சொன்னீங்களே! என்னை கொன்றுவீங்க… அது தானே என்று கூறி உள்ளுக்குள் சிரித்தான்.

நான் வேலைய விட்டு போறேன் என அவள் சொல்ல…

அதற்கு சித்தார்த் அப்போ என்னோட கிஸ் உனக்கு எதோ சம்திங் பண்ணி இருக்கு அதனால் தானே நீ வேலைய விட்டு போற…
மண்ணாங்கட்டி சான்சே இல்ல..

அப்போ உன்னோட வேலைய பாரு!
நான் என்னோட வேலைய பார்க்கிறேன். என சித்தார்த் சொல்ல

இப்போது அவள் எந்த பதிலும் சொல்லாமல் வேகமாக கிளம்பி விட்டாள்.

சித்தார்த் இப்போது அவள் சென்றதும் அவளை முத்தமிட்ட நிகழ்வு நினைவுக்கு வந்தது. அந்த இரு அதரங்களும் அவ்வளவு குளுமை தான் அவளுடைய நாசி அது எப்போதும் தன் மூக்கை வைத்து உரசுவது போல் தோன்றியது. சில மணி துளிகள் அவளும் கண்களை மூடி அவனுள் கரைந்து போனதை இவன் கவனிக்கவே செய்தான்.

இன்னும் கொஞ்ச நாள் தான் டி  அப்புறம் நீ என் பக்கத்தில் இருப்ப என மனதில் ஒரு திட்டத்துடன்  சித்தார்த் நினைத்து கொண்டு இருக்க அவன் அம்மா அழைத்தாள். மா இன்னும் 2மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்… என்று சொல்லி சித்தார்த் கிளம்பினான்.

இங்கே முதல் வகுப்பு அவளுக்கு ஃப்ரீ ஆக இருக்க போய் ஸ்டாப் ரூமில் அமர்ந்து கொண்டாள். அவன் சொன்னது தான் மனதில் ஓடி கொண்டு இருந்தது. எப்படி இதில் இருந்து தப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தாள்.

சித்தார்த் பெங்களூர் கிளம்பி விட்டான். ஒரு மணி நேரம் பறந்து அறை மணி நேரம் காரில் விரைந்து இப்போது அந்த அரண்மணை போல் இருக்கும் வீட்டின் உள்ளே நான்கு கார் படை சூழ உள்ளே சென்றான்.

எப்பொதும்  எதிலும் மிகவும் நாட்டம் இல்லாமல்  கடமை,கடுமை முகத்துடன் சுற்றி கொண்டு இருக்கும் மகன் முகம் மற்றும் கண்களில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு ஏக்கம் இருக்கும் ஆனால் இன்று முகம் மிகவும் உற்சாகத்துடன் வந்ததை பார்த்த பவானி ஒரு நிமிடம் மனதில் நிம்மதியுடன் அமர்ந்து இருந்தாள்.

மா… எதுக்கு வர சொன்னீங்க…
ஏன் சித்து எதுக்கு அப்டின்னு உனக்கு தெரியாதா….
லீனா புது படத்தில் கமிட் ஆகி இருக்கா போல… எப்போ டா உங்க கல்யாணத்தை நான் பார்ப்பது… எப்போ என்னோட வாரிசுகளை அள்ளி முத்தமிடுவது.

மா.. என்று இப்போது அவன் முகம் கடுமையை தத்து எடுத்துக் கொண்டான்…
அப்போ இதுக்கு என்ன அர்த்தம் என மெலினா- சித்தார்த் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் எடுத்து அவன் முன் நீட்டினாள்.

மா பிளீஸ் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..

லீனா ரொம்ப நல்ல பொண்ணு நடிகை கூட அதனால் தான் சித்து நான் சொன்னேன். சித்தார்த் மனதில் அவ நல்லவ, அவளை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது மா… உங்க அப்பாவுக்கு என் மேல் துளி கூட காதல் இல்லை ஆனால் அந்த ரதி தேவியை எப்படி தாங்குகிறார். லீனா நடிகை இப்போ பார் நான் என்று எதோ சொல்ல வர
ஸ்டாப் இட்…… என்று அவன் கத்தினான்.
நீ லீனா வை வீட்டுக்கு கூட்டி வந்து எவ்ளோ நாள் ஆகுது.
ம்ம் போதும் கூடிய சீக்கிரத்தில் கூட்டிகிட்டு வரேன்…. 
பவானி ஓகே என்று சொல்ல அவன் வேக வேகமாக படிகளில் ஏறி அவனது அறைக்கு சென்று விட்டான்.

அவன் பெங்களூர் வந்தது தாராகோவிந்த் க்கு தெரிய உடனே சித்து வீட்டுக்கு கிளம்பி விட்டாள். சித் இதன்யாவை பற்றிய சிந்தனையில் லயத்து இருந்தான். தாரா பவானி கிட்ட பேசி விட்டு சித்துவுக்கு பிடித்த லெமன் டீ எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

ஹலோ மிஸ்டர் உள்ளே வரலாமா….
சித் யார் என்று பார்த்து விட்டு மம்ம் அவ்வளவு தான் பதில் …
ஹே ஏண்டா இப்படி முகத்தை வச்சி இருக்க…
அவன் அவளிடம் இருந்து லெமன் டீ வாங்கி கொண்டு ஒரு சிப் குடித்து கொண்டே அவளை பார்த்து உன்னோட படம் எப்படி போகுது….
ம்ம் ஓகே இந்த முறை நான் ரொம்ப ஹோப் ல இருக்கேன் பார்க்கலாம்…
ம்ம் குட் ….
எப்போ டா கம் பக் கொடுக்க போற….
சித் அவளை பார்த்து ஒரே ஒரு கசந்த புன்னகை சிந்தினான் .
உனக்கு ஓகே அப்டின்னா சொல்லு நம்ப ரெண்டு பேரும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கலாம்.
ம்ம் அதை அப்புறம் பார்க்கலாம். என்ன உன்னோட முகத்தில் இப்போ கொஞ்சம் சிரிப்பு எட்டி பார்க்குது என்ன விஷயம் சொல்லு டா எதுவும் இப்போ ….
நத்திங்….
கொஞ்சம் சதீஸ் சொன்னான் மீதிய நீ சொன்னா நல்லா இருக்கும்…
ஹே தாரா யூ என அவன் ஒரு தலையணை எடுத்து வீச
ஹே ஓவரா பண்ணாத புரியுதா…
ம்ம் ஆமா ….
ஹே சூப்பர் யாரு டா அந்த ஜில்லு…
ஹே ஜில்லு இல்ல லிட்டில் ஹார்ட் தாரா…
இப்போது தாரா……?

தொடரும்…..

கொஞ்சம் கமென்ட் போடுங்க அப்படியே review ல star பிளீஸ்.. 

தனு அப்போ அப்போ கொஞ்சம் மெசேஜ் பண்ணு
ம்ம் ஓகே என்று சிரித்த முகத்துடன் சொல்ல ரிஷி பிரிய மனம் இல்லாமல் பிரிந்தான்.

இதை எல்லாம் ஒருவர் கோவகண்களால் பார்த்து கொண்டு இருந்தான்.
இதன்யா அந்த சாக்லேட் எடுத்து கைகளில் வைத்து கொண்டு பார்த்து கொண்டு இருக்க அவள் போன் அலர யார் என்று பார்க்க யார் என தெரிய வில்லை.

ஹலோ யாரு?
சித் மனதில் ( நான் உனக்கு யாரா … இருக்கட்டும் இங்கே வாடி உன்னை…)
ஹே சர்வ் பண்ண வா என சொல்லி கட் செய்தான்.

இப்போது என்ன செய்ய என்று யோசித்தாள் எப்படியும் பரிமாரவில்லை என்றால் நிச்சயம் எதுவும் செய்வான் என்று நினைத்தவள் வேறு வழயில்லாமல் சித்தார்த்தின் அறைக்கு முன் சென்றாள்.

அவள் உள்ளே வர வில்லை என தெரிந்து கொண்டவன் மீண்டும் ஒரு அழைப்பு விடுக்க இப்போது அதை எடுக்கும் முன் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.

ம்ம் இன்னிக்கு நேற்றை விட நல்லா தான் இருக்க தினமும் எனக்கு புதுசு புதுசா தெரியற டி….

தொடரும்….

EPI 15

சித்தார்த் அவளை உள்ளே  அழைக்க இதன்யா மனதில்  “ஹே அவன் முகத்தை மட்டும் பார்க்காதே, முக்கியமாக அவன் கண்கள் நீ பார்த்தாய், அப்புறம் நீ அவ்ளோ தான்!” என்று அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே அவனுடைய  அறையை நோக்கி  வந்தாள்.

ஏன் என்றால் சித்தார்த்தின் கண்களின் இமைகள் மிகவும் அடர்த்தியாகவும் மிகவும் நெருக்கமாகவும் அழகாக இருக்கும். அவனுக்கு மிகவும் அழகு சேர்ப்பது அவன் உயிர்ப்பு நிரைந்த கண்கள், இன்னொன்று அந்த குரல் வளை, ஒவ்வொரு முறை அவன் பேசும்போதும் அழகாக மேலும் கீழும் ஏறி இறங்கும் இப்போதே சித் பற்றிய கனவில் தான் சுற்றி கொண்டு வந்தாள் இதன்யா! 

இங்கே சித்தார்த் கணினி திரையில் பார்த்து கொண்டு இருந்தான்.  அவள் என்ன செய்கிறாள் என  பார்க்க அறையின் அருகில்  வந்தவள்  இன்னும் உள்ளே வராமல் இருக்க…

சித் கடுப்பானவன்  இன்னொரு முறை போனில்  அழைக்க.. பார்க்காதே!  நிமிர்த்து மட்டும் பார்த்து விடாதே!  முருகா!  முருகா பிளீஸ்!  என்று சொல்லி கொண்டே உள்ளே அனுமதி கேட்டு வந்தவள்.

உள்ளே வந்தவளின் தலை குனிந்த படியே இருக்க அப்படியே அவனுக்கு  “குட் மார்னிங் சார்!” என வணக்கம் வைத்தாள்.   

அவன் மனதில் ” ம்மம் நேற்று ஒரு மாதிரி தெரிகிறாள். இன்று ஒரு மாதிரி தெரிகிறாள் வசியகாரி… ஆனாலும் சும்மா சொல்ல கூடாது டா சித் நல்லா இருக்கா டா அந்த மூக்கு ம்ம் ஒன்னும் சொல்ல முடியல என்னா மூக்கு!” ….

இதன்யா நேராக அவன் சாப்பிடுவதற்கு எல்லாம் அனைத்தும் எடுத்து வைத்து சாப்பிட வாங்க சார்….

பதில் இல்லை…

முருகா முருகா என்னையா நீ பிளீஸ் செல்லம் என்ன சோதிக்காதிங்க ..

அவளது மனது ஒரே ஒரு முறை அவனை பார்த்து சொல்லி விடு டி
அவளது மூளை வேண்டாம் இதன்யா … என இருவரும் பட்டி மன்றம் நடத்த
இப்போது கொஞ்சம் சத்தமாக சார் பிளீஸ் சாப்பிட வாங்க …

சித் மனம்  போதும் டா இல்லனா அழுது விடுவாள்.. போ சாப்பிடு அப்புறம் எப்படியும் இங்கே தானே இருப்பா …
சித்தார்த் அவள் பரிமாறிய மேஜைக்கு வந்து மெதுவாக உணவுகளை நேர்த்தியாக எடுத்து உண்டவன்.
அவளை பார்க்க அவள் பார்வை தரையை பார்த்து கொண்டே இருக்க

“என்ன இன்னிக்கு கொஞ்சம் டிப்பரண்ட் ஆ பிஹேவ் பன்றாளே!
நம்ப முகத்தை வந்ததில் இருந்து ஒரு முறை கூட பார்க்கவே இல்லை!”

“ரசம்”… என இவன் கேட்க

இவள் கொண்டு வந்து ஊற்ற போக அவன் கைகளை வேண்டும் என்றே வைக்க இதன்யா சித்தார்த் தெரிந்தே வைத்த கைகளில் தெரியாமல் ஊற்றி விட்டாள்.

இதற்காகவே காத்திருந்தவன் போல் முதல் முறையாக அவன் உரிமையை நிலை நாட்டுகிறான்.

சித்தார்த், ஹே சுடுது டி… ஸ்..ஹா .. கொதிக்குது டி…

என்ன டி!யா!! என்று நினைத்தவள்.
சாரி சார் பிளீஸ் என்னை மன்னித்து விடுங்கள் என்று அருகில் ஒரு கிளாஸ்ல கூல் வாட்டர் ஊற்றி அதில் அவன் கையை எடுத்து இவளே உள்ளுக்குள் தண்ணிரில் விட
இப்போது பட படக்கும் விழிகளில் இப்போ ஓகே வா… என்று அப்போதும் சித்தார்த்தின் விழிகளை பார்க்க வில்லை.

இதற்கும் மேல் பொறுமையை இழந்த சித்தார்த் அருகில் இருந்த தண்ணிரை எடுத்து ஒரே மூச்சில் குடித்தவன் எழுந்து இதன்யா அவன் கையை பிடித்து இருந்த அதே கையை இப்போது அழுத்தம் கொண்டு அவன் பிடிக்க இப்போது அவளுக்கு எதோ தவறாக பட அப்போதும் அவள் அவன் முகத்தை பார்க்காமல் அவள் கைகளை உருவி கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்க…

சித்தார்த் மனதில் இவளை….
என்று அவளை அப்படியே சுவற்றுக்கு மெதுவாக தள்ளியவன்.
இதன்யா என்று (அழகாக  எப்படி சொல்வது திருத்தமாக ஆனால் அந்த உச்சரிப்பு இவளுக்கு புதிது)
ஹே என்ன பாரு…
தன் பெயரை கூப்பிட்டதும் உள்ளங்கை  வியர்த்தது.

ஹே சீ மீ … உடல் எல்லாம் சிலிர்த்து போனது பெண்ணவளுக்கு ,
இப்போது இன்னும் அவள் அருகில் நெருங்கியவன் அவளின் தாடையை பற்றி அவனை பார்க்க வைக்க அவளது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது
 

என்ன மேடம் ரொம்ப ஓவரா பண்றீங்க. … நான்! நானா! .. 

அப்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே!…. பிளீஸ் என்னை விடுங்க. 

அப்போ எதுக்கு நீ என்னை பார்த்து பேச மாட்டிங்கிர ம்மம்..

டெல் மீ. .  அன்சர் பண்ணு…

என்ன என்ன பேச இருக்கு….

அவன் , ம்ம் ஹே இங்கே என்னை பாரு என் கண்ணை பாரு… என்று அவனது மூக்கும் இவளது மூக்கும் உரச சரியாக ஒரே ஒரு இன்ச் இடைவெளி தான்… என்ன எதுவும் என் கிட்ட இருந்து மறைக்கிறாயா…

இல்லையே!  அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…

அப்போ கண்ணை பார்த்து பேசு ….

ம்ம் சரி நான் உங்க கண்ணை பார்த்து பேசறேன் இப்போ விடுங்க…

ஆர் யூ ஃபால் இன்…. என நிறுத்தி சித் அவளை பார்க்க

வாட் தீ ஹெல்… என இவள் சொல்ல வந்தது கோபம் இவனுக்கு…
இப்போ என்ன சொன்ன … நான் நான் ஒன்னும் சொல்லல …

ஹே சொல்லு …. என்ற சித்தார்த்
இப்போ நீ சொன்னதுக்கே உன்னை என்று அவன் விரல்கள் கொண்டு அவள் இதழ்களை வருடியவன்… ம்ம் எனக்கு தான் உன்னை பார்க்க பார்க்க நரகமா இருக்கு என மனதில் நினைத்துக் கொண்டு அவள் உதடுகளை சுண்டி விட்டு விடுவித்தான். அவள் இதயம் வெடித்து மட்டும் தான் சிதரவில்லை.

கதவு வரை சென்றவள் நாளைக்கு நான் காலேஜ் போறேன் ஸார் அதனால் உங்களுக்கு சர்வ் பண்ண என்று அவள் முடிக்க வில்லை…

“வாட் அ கோ இன்சிடென்ட்ஸ்
நான் நாளைக்கு காலேஜ் தான் போறேன் வந்திடு”….

வேக வேகமாக வெளியே வந்தவள் நேராக ரெஸ்ட் ரூம் சென்று கொஞ்ச நேரம் வெளியே வரவே இல்லை…

இதன்யா உன்னை டி போட்டு கூப்பிட்டு விட்டானே!..
நீ எதுக்கு டி சும்மா விட்ட. ..
என்னை என்ன பண்ண சொல்ற அவன் கண்ணை பார்த்து என்னால பேச முடியல வார்த்தை வர மாட்டிங்கிது.
கஷ்டம் ,கஷ்டம் ,கஷ்டம், ரொம்ப கஷ்டம்…
இப்போ அங்கே வந்து என்ன செய்ய போறானோ!பேசாமல் காலேஜ் க்கு லீவ் போட்டு விடு அது தான் உனக்கு நல்லது.ம்ம் சரி அப்போ நான் லீவ் போட்டு கொள்கிறேன்.

அடுத்த நாள் இவள் வருவாள் என்று காலேஜ் சென்ற சித்தார்த்துக்கு வெறும் ஏமாற்றம் தான் .ஹே எதுக்கு டி இப்போ காலேஜ் லீவ் அதுவும் என் கிட்ட சொல்லாமல் லீவ் போட்ட ..  உன்னை நான் எப்போ நினைத்தாலும் வந்து பார்த்து விட வேண்டும். ம்ம் என்ன செய்யலாம். ம்ம் இப்போ நீயா என் கிட்ட நல்லா மாட்டிகிட்ட என்று நினைத்தவன் சதீஷ் குமார்க்கு போன் செய்தான்.
சதீஷ் குமார் தான் சித்தார்த்தின் பெர்சனல் அசிஸ்டென்ட் இப்போது அவன்  புனேவில் இருக்கிறான்.

சதீஷ் நீ இப்போ நான் சொல்லும் வேலையை செய்து விடு என்று அவன் சொல்ல ம்மம் சரி பாஸ் என்று அவன் வேலையை ஆரம்பித்தான்.
(அப்படி என்ன தான் செய்தான் சித்தார்த் அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க ) இதன்யா இருக்கும் ஹாஸ்டல் தன் அம்மா பவானி பெயரில் வாங்கி விட்டான்.

அடுத்த நாள் இன்று சித்தார்த் பெங்களூரு செல்ல வேண்டும் . அந்த புகைப்படம் பற்றி தன் தாயிடம் விளக்கம் சொல்ல வர சொன்னார். சித்தார்த் போனில் மாம் நான் நாளைக்கு வரேன் என்று சொல்லி வைத்து விட்டான்.

இன்று அவள் எங்கு செல்வாள்?  காலேஜ் அப்படி இல்லனா ஸ்கூல் எங்கே போனாலும் நீ என்னை தான் முதலில் பார்ப்ப டி!  என்று கொஞ்சம் தாமதமாக வீட்டில் இருந்து கிளம்பினான் .

இதன்யா இன்று ஸ்கூல் சென்றாள். அவள் ஹாஸ்டலில் இருந்து கிளம்பும் போதே அவனுக்கு அவள் எங்கு செல்கிறாள் என்று செய்தி வர இங்கு இவன் அழகாக தன்னை தயார் படுத்தி கொண்டு கிளம்பினான்.

சரியாக அவள் வரும் நேரத்திற்கு முன் சித் ஸ்கூலில் சதீஷுடன் இருந்தான். கால்மேல் கால் போட்டு கொண்டு மிரட்டும் தோரணையில் அமர்ந்து இருந்தான்.

இவள் பூஜாவுடன் உள்ளே வர அதற்கும் முன்பே சித் மீட்டிங் ஹாலில் அனைவருக்கும் மீட்டிங் என ஒவ்வொருவராக வர பூஜாவின் பின்னே இவளும் போக சதீஷை சித் பார்க்க  சதீஷ், மிஸ் பூஜா ….
ஸார்… நேற்று ஸ்கூல் க்கு வராதவர்கள் சார வந்து மீட் பண்ணிட்டு போங்க…

பூஜா நேராக சித்தார்த்தை பார்த்து  அவள் காரணத்தை கூற ,
ம்ம் சரி என்று அந்த மீட்டிங் ஹால் அதிரும் படி ஒரு பதில் கூறினான்.

அடுத்தபடியாக  ரெகுலர் ஸ்டாப் ஆங்கில ஆசிரியர் நேற்று வராததால் சித் அருகில் சென்று அவள் பேச வாட் தி எற்த் ஸ் கோஇங் ஆன்…..

அந்த ஹாலில் இருக்கும் அனைவர் பார்வையும் அந்த ஆசிரியர் மீது செல்ல சித்தார்த் அந்த பெண்ணை பார்த்து
இவளோ அன்பிளேசன்ட் ஸ்மெல்… நீங்க ஸ்கூல்க்கு பாடம் எடுக்க வந்து இருக்கீங்களா!  இல்ல எதோ பங்ஷன்,பார்டிக்கு வந்து இருக்கீங்களா!  ….

(அந்த பெண் வாசனை திரவியம் ஒப்பனை என மேலும் தன்னை அழகு படுத்திக் கொண்டு வந்தாள்) போங்க!. இப்போ நீங்க ஹன்டல் பண்ற கிளாஸ் க்கு லஸ்சன் பிளான் எழுதி வாங்க என சொல்ல அவள் திருதிருவென முழித்தாள்.

இப்போது சித்தார்த் எல்லாரையும் பார்த்து லீசன் மீ எல்லோரும் அவங்க ஹன்டல் பண்ற கிளாஸ்க்கு எழுதி கொடுத்து விட்டு கிளாஸ்க்கு போங்க என்று தன் கண்களை சுழல விட்டு நெக்ஸ்ட் மீட்டிங் ல பாதி பேர் இருக்க மாட்டிங்க….. மம் சோ சாட் …

இதன்யா மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க இப்போது

சித்தார்த்தின் பார்வை அவளை நோக்க… 

தொடரும்….

 EPI 16

சித்தார்த் அனைவரையும் லஸ்ஸன் பிளான் எழுத சொல்ல இங்கே இதன்யா உள்ளே சென்றவள் பூஜாவுடன் நின்று கொண்டு இருந்தாள்.

பூஜா நேற்று விடுப்பு எடுத்தகாரணத்தை சொல்லி விட்டு போய் அவளும் லஸ்ஸன் பிளான் எழுத ஆரம்பிக்க இதன்யா மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள்.
சித்தார்த் அவளை பார்த்து ஒய் ஆர் யூ ஸ்டேன்டிங்? என அழுத்தமான வார்த்தைகளில் கேட்க
இவள் அருகில் வந்து நேற்று நான் ஸ்கூல் வரல சார்…
ஏன் வரல… என்று அவளை பார்க்க, அவள் எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே நிற்க

அங்கே இருந்த அனைத்து ஆசிரியர்களும் இப்போது சித்தார்த்தை பார்க்க அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க உடனே அனைவரும் உடனே தலையை குனிந்து கொண்டனர். இப்போ போய் லசன் பிளான் எழுதி கொண்டு வா… இதுக்கு ரீசன்  சொல்லிட்டு தான் நீ கிளாஸ் போகனும்.
இப்போது அங்கு இருந்த ஆசிரியர்கள்  இவன் ஒரு நடிகன் இல்ல அந்த எம லோகத்தில் இருந்து ஸ்ட்ரைக்டா வந்து இருக்கான் …
போச்சு இந்த பொன்னு நல்லா மாட்டிக்கிச்சு… பாவம் இந்த இதன்யா பொன்னு.. இதுக்கு கிருஷ்ணன் சார் எவ்ளோவோ பரவாயில்லை… என்று அவர்களுக்குள் பேசி கொண்டே எழுதி விட்டு அவனிடம் கொடுத்து விட்டு அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர்.
இதன்யா எழுதி கொண்டு இருக்க சதீஷ் அங்கே ஓரமாக நின்று கொண்டு இருக்க,
சித்தார்த் கைகளில் ஒரு பெண்ணை சுழற்றி கொண்டே அவர்களை ஒரு பார்வை பார்க்க ம்ம் ஓகே இப்போ அடுத்த மீட்டிங் ல மீட் பண்ணலாம் அதுக்குள்ள
மிதமாக கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து இருக்க வேண்டும்.  அவர்களுக்கு சிறப்பு கவனம் கொடுத்து நன்றாக படிக்கும் குழந்தைகளாக மாற்ற வேண்டும். மிரட்டுவது, அடிப்பது, இந்த மாதிரி எதுவும் என் காதுக்கு வந்தது அவ்ளோ தான்.
ம்ம் ஓகே சார்…
குறைந்து இருக்குமா இருக்காதா…
இப்போது சத்தமாக கண்டிப்பாக முடியும் சார் என்று அனைவரும் கொஞ்சம் சத்தமாக சொல்ல ,
நான் ஒன் வீக் வர மாட்டேன் சோ,
இது தான் உங்க எல்லாருக்கும் நான் வைக்கும் முக்கியமான evaluation காட் இட்…
இந்த வார்த்தையை கேட்ட அனைவருக்கும் அதாவது சித்தார்த் ஒரு வாரம் வர மட்டான் என்ற செய்தி அனைவர் தலையிலும் பனி கட்டிகளை வைத்தது போல் ஒரே குளிர்ச்சி..

இதன்யாவுக்கு சொல்லவே தேவையில்லை முகம் எல்லாம் புன்னகை இல்லை  ஆனால் அவள் கண்கள் பிரகாசமாக மின்னுவதை சித்தார்த் பார்த்து விட்டான்.  நான் வர மாட்டேன் அப்டின்னு சொன்னதும் என்ன சந்தோஷம் டி உனக்கு இதுக்காகவே உன்னை சிறப்பா கவனித்து விட்டு செல்கிறேன் டி…
பிரைன், என்ன பண்ணலாம் சொல்லு சித் அவளை சும்மா விட கூடாது.
அவன் உதடுகள் ம்ம் யோசி …
இந்த ஒரு வாரமும் நம்ப நினைப்பில் தான் சுத்தனும்.
ம்ம் சிறப்பா செய்வோம்..
ஹே வேணாம் சித் லிட்டில் ஹார்ட் பாவம்.. என மனம் சொல்ல.. அதை அவன் அறிவு கேட்க வில்லை.

நம் உணர்வுகளை வெளிபடுத்த முக்கியம் பங்கு கண்கள் தானே… இவள் மனதில்
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் முருகா ஓம்! முருகா!ஓம் முருகா! சஸ்டியை நோக்க என முதல் வரி மனதில் துதி பாடியவள்… செல்லம் இப்போ லஸ்சன் பிளான் முடிச்சு விட்டு என்னோட பக்திய உனக்கு காட்டுகிறேன் என்று இவள் சந்தோச மன நிலையில் எழுதி கொண்டு இருந்தாள்.

“டிஸ்மிஸ்”… என்று ஒரு அழுத்தமான சத்தம்
விட்டால் போதும் என்று எல்லோரும் ஓடி விட்டனர்.
இப்போது இதன்யா மட்டும் வேக வேகமாக எழுதி கொண்டு இருந்தாள்.
பிசிக்ஸ் யாரு ஹேண்டில் பண்றவங்க லிஸ்ட் போய் கலெக்ட் பண்ணி விட்டு அவங்களை ஆபீஸ் ரூம் ல வெயிட் பண்ண சொல்லு சதிஸ்…
ம்ம் ஓகே பாஸ்… என சிரித்து கொண்டே அவன் கிளம்பி விட்டான்.
டிஸ்மிஸ் அப்டின்னு சித் சொல்லும்போதே வேக வேகமாக எழுதியவள் லாஸ்ட் “எவேல்யுவேஷன்”எழுதி கொண்டு இருக்க சித்தார்த் மாட்டிக்கிட்ட டி “லிட்டில் ஹார்ட்” என்று மனதில் சொல்லியவன் இப்போது அவன் இடத்தில் இருந்து எழுந்தான்.
ஒவ்வொரு அடிகளாக சித்தார்த் இதன்யா அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வர இங்கு அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
முருகா முருகா முருகா… போச்சு போச்சு வந்து விட்டான்.
அய்யோ இன்னிக்கு என்ன பண்ண போரானோ..
ஏற்கனவே என்னோட தூக்கம், நிம்மதி, பசி எல்லாம் போச்சு என்று இவள் நினைத்துக் கொண்டு இருக்க
நான்கு அடிகள்…
இரண்டு அடிகள்…
இப்போது அருகில் அய்யோ போச்சு போச்சு என இவள் எழுதுவதில் கவனம் செலுத்துவது போல் நடிக்க.. அவன் காந்த குரலில் “இதன்யா”என்று கூப்பிட இப்போது அவளை அறியாமல் நிமிர்ந்து பார்த்து விட்டாள்.
அவன் இவளை பார்த்து பிறை போல் ஒரு குட்டி புன்னகை கொஞ்சம் மட்டும் தான்..
ஆர் யூ ஃபினிஷ்டு…
யெஸ் சார்…  இதோ என இப்போது எழுந்து அந்த பேப்பர் அவனிடம் நீட்ட
ம்ம் குட்… என்று அதை வாங்கி கொண்டு அதை பார்க்க
இவள் சார் எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு போகட்டுமா…
ம்ம் ஓகே என சித் சொல்ல ,
ஒரு பெருமூச்சு விட்டவள் தேங்க் யூ சார் என ஒரு மூன்று அடிகள் அவள் நடந்து செல்ல..
ஒன் மினிட்…இப்போது அதே இடத்தில் நின்றாள்.
இவன் இவனை என்ன பன்றது சரியா டார்ச்சர் பன்றானே…
சார் சொல்லுங்க என அவள் திரும்ப அவன் இவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக வந்தவன்.
நேற்று எங்கே போன..
நான் ..
காலேஜ் ஏன் வரல…
அது அது கொஞ்சம் எனக்கு தலைவலி என்று தன் கண்ணாடியை சரி செய்ய
ஐ ஹேட் லைஸ்….
சார் நிஜம் தான் என்று அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய,
ஹே என்ன பாரு… உங்க உங்களை தான் ப..பார்க்கிறேன்..
இப்போது இன்னும் இரண்டு அடிகள் இதன்யாவை நோக்கி வர
இப்போது வேக வேகமாக துடிக்கும் இதயத்தை நொந்து கொண்டு அவள் பின்னால் வைத்தாள்.
இவள் பின்னோக்கி நகர அவன் முன்னோக்கி நகர்ந்தான்.
அதை அப்புறம் கவனிக்கிறேன் இப்போ நான் ஒன் வீக் வர மாட்டேன் அப்டின்னு சொன்னதும் உன் முகத்தில் அவ்ளோ சந்தோஷம் அது ஏன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..
ம்ம் சொல்லு…
அய்யோ கண்டுபிடித்து விட்டானே என்று நினைத்தவள்.
இல்ல சார் எனக்கு என்ன சந்தோஷம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.
ஹே பொய் சொல்லாத…
இல்ல சார் என்று இவள் சொல்ல இப்போது நகர்ந்து கொண்டே வந்தவள் அதற்கு மேல் நகர வில்லை ஏன்…
அதுக்கு அப்புறம் சுவர், அதாவது சுவற்றில் மோதி நின்றாள். சுதாரித்து கொண்டவளாய் கதவு இருக்கும் பக்கம் ஒரு அடி வைக்க உடனே சித் அவள் கால் வைத்த  இடத்தில் அவளை தடுப்பது போல் அவனுடய ஷி கால் வைக்க இப்போது அவள் முகம் அவன் அகன்ற மார்புக்கு நேராக இருக்க உடனே இதன்யாவின் கைகள் வியர்க்க தொடங்கியது.
இப்போ இப்போ எதுக்கு நீங்க இவ்ளோ பக்கத்தில் இருக்கீங்க த தள்ளி போங்க…

நீ பதில் சொல்லு …
இப்போது கோபம் கொண்டவள் ஆமா நான் லீவு போட்டேன் என்னோட விருப்பம் உங்களுக்கு என்ன? என்று அவன் கண்களை பார்த்து நேராக கூறி விட்டு அவன் கை வளைவில் குனிந்து சென்றாள்.

இப்போது இரண்டே எட்டில் அவளை இழுத்து சுவற்றில் தள்ளி அவள் மேல் ஒட்டி கொண்டான்.
அவளுக்கு அவன் ஸ்பரிசம் உடல் எல்லாம் பூகம்பம் வெடிக்க தொடங்கியது. அவள் ரோமங்களில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்த்து நிற்க வேக மூச்சு எடுத்தாள்.

என்ன ஒரே நாளில் மேடம்க்கு இவ்ளோ கோபம்… என்று அவள் காதுக்கு அருகில் போய் சொன்னவன்…
அவளின் கண்ணாடியை கழட்டி விட்டு அருகே உள்ள மேஜை மீது வைத்தான்.
இவள் கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.
ஹே இதன்யா கண்ணை திற…
அவள் இன்னும் இறுக்கி மூடி கொள்ள
திற டி என்று சொல்லி கொண்டே அவள் இதழ்களை வருடினான்.

ஏனோ அவளுக்கு அவன் அருகில் இருக்கும் போது வார்த்தைகளே வர சிரமபட்டது. இப்போது மூக்கோடு மூக்கு உரசியவன். நான் வர மாட்டேன் அப்டின்னு சொன்னதும் அவ்ளோ சந்தோச படுற ம்ம்ம்ம்…
இப்போது தன்னிலை விளக்கம் கொடுக்க கண்களை திறந்தவள் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று அப்படியே சொல்லிக் கொண்டே அவனை விட்டு விலக முற்பட அவள் தவறு செய்த குழந்தை போல் எதோ சொல்ல

சித் காதுக்கு அந்த வார்த்தைகள் விழ வில்லை அவளை மையல் கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்ற இப்போது இதழில் மையல் கொண்டான்.

அவள் அப்படி எல்லாம் இல்லை என்ற சொல் வார்த்தையில் இருக்கும் போதே அந்த கண்களிலும் அவள் மூச்சு காற்றிலும் தன்னை தொலைத்தவன். அவள் இதழில் விழ இதன்யாவின் கண்கள் அகலமாக விரிந்தது என்ன செய்கிறான் இவன் என அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய அவளால் முடிய வில்லை.

இங்கிலீஷ் , ஸ்பானிஷ், மெக்சிகன் என அனைத்து வகையும் ஒரே முத்தத்தில் காட்டிட அவன் இங்கிலீஷ் தாண்டி ஸ்பானிஷ் போகும்போதே அவன் முத்தத்தில் இவள் விழுந்து விட்டாள்.  ஒரு சில மணி துளியில் பெண்மை விழித்து கொள்ள அவனை தன் மொத்த பலம் கொண்டு தள்ளி விட்டவள்

அவன் கன்னத்தை பார்த்து ஓங்கி ஒரு அரை விட்டாள்.

இப்போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து என்ன நினைத்துக் கொண்டு இருக்கீங்க…. நீங்க நினைக்கிற பொன்னு நான் இல்ல… இந்த வேலை என் கிட்ட வேண்டாம். கொன்றுவேன்… என்று கூறியவள் தன் கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு அந்த இடத்தில் இருந்து வேகமாக நடையிட்டாள்.

இதற்கு பின் நம் சித்தார்த் என்ன செய்ய வேண்டும் அவளை பழி வாங்க வேண்டும் அவள் கன்னத்தில்  அடித்ததற்கு ஆனால் அவன் அவள் அடித்த இடத்தை தொட்டு பார்த்து சிரித்தான்.

அது குரோத புன்னகை இல்லை ஆனால் ஏன் சிரித்தான்….? அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்…

EPI 17

17)தெரிஞ்சு தான் கொடுத்தேன். இன்டென்ஷனா தான் உனக்கு!.. 

அவன் அவளின் கண்களில் இருந்து மீள முடியாமல் இதழில் விழ அவனை தள்ள முடியாமலும் அந்த இதழ் சண்டையை தடுக்க முடியாமலும் பெண்ணவள் சில நிமிடம் தன்னை மறந்து பின் அவனிடம் இருந்து தன் இதழை மீட்டு கொண்டு வேகமாக தள்ளி விட்டவள்.

அவன் கண்ணங்களில் ஒரு அறை விட்டு ஆள் காட்டி விரலை நீட்டி கொன்றுவேன்…. என மிரட்டி சென்று விட்டாள்.

சித்தார்த் அவள் சென்றதும் ஒரு கையில் கன்னத்தை சிரித்து கொண்டே தேய்த்தவன் . ஒரு கை கொண்டு அவன் இதழ்கள் இரண்டையும் தொட்டு பார்த்து வருடினான். “லிட்டில் ஹார்ட் Today வெறி ஹாட்”என கூறி விட்டு சிரித்து கொண்டே தன் கூலர்ஸ் எடுத்து போட்டு கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

இதன்யா நேராக ரெஸ்ட் ரூம் சென்றவள் அவன் கொடுத்த முத்தத்தை தேய்த்து கழுவினாள். இன்னும் கழுவு டி என்று அறிவு ஆயிரம் முறை சொல்ல அந்த இதயம் இன்னும் வேகமாக துடித்து கொண்டு தான் இருந்தது.

முகத்தையும் ஒரு முறை கழுவிய பிறகு கண்ணாடியில் அவள் முகத்தை பார்க்க அவன் வாசம் நாசியில் இருந்து கொண்டே இருந்தது.

“எவ்ளோ தைரியம் அவனுக்கு எனக்கு முத்தம் கொடுத்து விட்டானே! . இன்னும் இரண்டு கன்னத்திலும் அறைந்து இருக்க வேண்டும். அவனை சும்மா விட கூடாது!” என்று இப்போது இயலாமயுள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.

“என்னோட முதல் முத்த அனுபவம் அது  என்னோடவனோடு தான்  இருக்க வேண்டும் இப்போ இவன் எதுக்கு இப்படி செய்தான்.”  இப்போது என்று கைகளில் நெட்டி எடுத்து கொண்டே கோபத்தில் அங்கும் இங்கும் நடக்க ஒரு நிமிடம் கண்கள் மூடினால் கூட  தன் இதழில் மெய் மறந்து அவன் கொடுத்த முத்தம் மட்டுமே நினைவுக்கு வந்தது. இதை நினைக்க நினைக்க அவளுக்கு உலைகலன் போல் கொதித்தது. இதை இப்படியே விட கூடாது என்று நினைத்தவள் அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று கிளம்பினாள்.

சித்தார்த் தன் அறைக்கு சென்றவன் அவனது கார்ட்ஸ் மற்றும் பணியாளர் அனைவரிடமும் இனி இதன்யா  அவனை பார்க்க வந்தால் காத்திருக்க வைக்க கூடாது உடனே உள்ளே அனுப்பி விட வேண்டும். அவர்கள் உடனே சரி என்று வேலையை தொடர்ந்தனர்.

சித்தார்த் எதிர் பார்க்க வில்லை இப்போதே தேடி வருவாள் என்று இவன் போன் எடுத்து தன் அம்மாவிடம் பேசலாம் என்று போன் செய்யப் போக வேக வேகமாக நடந்து இதன்யா அவன் அறைக்கு வந்தாள்.

எதேட்ச்சையாக கணினி திரையில் பார்க்க அவள் மூக்கு புடைக்க கோப பார்வையில் இவன் அறை நோக்கி வருவது தெரிய இப்போது “ஐம் நாட் எக்ஸ்பெக்டட் ஃப்ரம் யூ லிட்டில் ஹார்ட் பட் ஐம் வெயிட்டிங் டி கம் குயிக் லீ”… என சொல்லி கொண்டே  பார்க்க அவள் உள்ளே வர யாரும் தடுக்க வில்லை “மே ஐ கம் இன் ஆவது ம***வது” அவள் அப்படி ஒரு கோபத்தில் இருந்தாள்.

இவள் உள்ளே வருவது தெரிந்தும் தெரியாதது போல் சித்தார்த் அதே கம்பீரம், மிடுக்குடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க.. உள்ளே வந்தவள் அவன் முன்னே நின்றவள் அவன் வேறு எதிலோ கவனம் செலுத்துவது தெரிய அவள் சொடுக்கிட இவன் தன் புருவத்தை நெரித்து கொண்டே அவளை ஒரு பார்வை பார்க்க…

இதன்யா, எதுக்கு இப்படி செஞ்சீங்க…

சித்தார்த் புருவத்தை மேல தூக்கி கொண்டு  என்ன செஞ்சேன்…”எப்படி செஞ்சேன்?”…

“என்ன உங்களுக்கு கொஞ்சம் அறிவு எதுவும் இருக்கா!”

எனக்கா என்று ஒரு சிறு புன்னகை சிந்தியவன்… இப்போ உங்களுக்கு என்ன வேனும்….

இதன்யா மனதில் எதுவும் சொல்ட்ரானா பாரு தெரியாமல் செய்து விட்டேன் அப்டின்னு சொன்ன கூட அவனை நாலு கேள்விகேட்கலாம்….இப்போது அவனிடம்

எதுக்கு கிஸ் பண்ணீங்க? 

நானா? 

“ம்ம் நீங்க தான்! தெரியாமல் கொடுத்து விட்டேன் அப்டின்னு சொல்றத கேட்க நான் ஒன்னும் முட்டால் இல்ல”. என்று கோபத்தில் கைகளை நீட்டி அவனை கேட்க

இப்போது சித்தார்த் அவளை நிதானமாக பார்த்து,
“நான் தெரிஞ்சு தான் கொடுத்தேன்” என்று  சொல்ல

இப்போது அவள் வார்த்தைகள் அப்படியே வெளியே வர மறுத்தது.
ஒரு சில நிமிடம் இப்படியே செல்ல சித்தார்த் மௌனம் உடைத்தான்.

“நான் தெரிஞ்சு தான்!”  என்று அவன் உதடுகளை கடித்து கொண்டு “தெரிஞ்சு தான் கொடுத்தேன். இன்டென்ஷனா தான் கொடுத்தேன்.’

இப்போது இதன்யா ஏன் இப்படி பண்ணிங்க?  எப்படி நீங்க இப்படி செய்யலாம்… இனி நான் இங்கே வேலை செய்ய முடியாது…

சித்தார்த்தின் பார்வை மாறியது “அப்படியெல்லாம் உன்னால போக முடியாது உன் வேலைய நீ தான் செய்யணும் புரியுதா” அவளை பார்த்து குறும்பாக” நான் உன்னை அடிச்சதுக்கு தான் நீ திருப்பி அடிச்சிட்டியே”

இதன்யா இப்போது புருவம் நெருக்கி அவனை முறைத்து பார்க்க “ஐ மின் நான் உனக்கு கிஸ் அடிச்சேன் நீ என் கன்னத்தில் அடிச்சுட்ட… இதுக்கு சரியா போச்சு..
நீ ப்ரீத் பண்ணும்போது டெம்பரேச்சர் 37.°f ல பாரன்ஹீட் ல நீ ப்ரீத் பண்ண சோ எனக்கு அந்த ஹீட் ல நான் மைண்ட் பிளான்க் ஆகி கிஸ் பண்ணிட்டேன். தட்ஸ் ஆல்”..

இதை கேட்டு இதன்யாவால் அடுத்த வார்த்தைப் பேச முடியவில்லை.

இதன்யா,ஒரு சில நிமிடம் கழித்து இனி இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்க வேண்டாம்.

ம்ம் ஓகே மேடம் தெரியும் சொன்னீங்களே! என்னை கொன்றுவீங்க… அது தானே என்று கூறி உள்ளுக்குள் சிரித்தான்.

நான் வேலைய விட்டு போறேன் என அவள் சொல்ல…

அதற்கு சித்தார்த் அப்போ என்னோட கிஸ் உனக்கு எதோ சம்திங் பண்ணி இருக்கு அதனால் தானே நீ வேலைய விட்டு போற…
மண்ணாங்கட்டி சான்சே இல்ல..

அப்போ உன்னோட வேலைய பாரு!
நான் என்னோட வேலைய பார்க்கிறேன். என சித்தார்த் சொல்ல

இப்போது அவள் எந்த பதிலும் சொல்லாமல் வேகமாக கிளம்பி விட்டாள்.

சித்தார்த் இப்போது அவள் சென்றதும் அவளை முத்தமிட்ட நிகழ்வு நினைவுக்கு வந்தது. அந்த இரு அதரங்களும் அவ்வளவு குளுமை தான் அவளுடைய நாசி அது எப்போதும் தன் மூக்கை வைத்து உரசுவது போல் தோன்றியது. சில மணி துளிகள் அவளும் கண்களை மூடி அவனுள் கரைந்து போனதை இவன் கவனிக்கவே செய்தான்.

இன்னும் கொஞ்ச நாள் தான் டி  அப்புறம் நீ என் பக்கத்தில் இருப்ப என மனதில் ஒரு திட்டத்துடன்  சித்தார்த் நினைத்து கொண்டு இருக்க அவன் அம்மா அழைத்தாள். மா இன்னும் 2மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்… என்று சொல்லி சித்தார்த் கிளம்பினான்.

இங்கே முதல் வகுப்பு அவளுக்கு ஃப்ரீ ஆக இருக்க போய் ஸ்டாப் ரூமில் அமர்ந்து கொண்டாள். அவன் சொன்னது தான் மனதில் ஓடி கொண்டு இருந்தது. எப்படி இதில் இருந்து தப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தாள்.

சித்தார்த் பெங்களூர் கிளம்பி விட்டான். ஒரு மணி நேரம் பறந்து அறை மணி நேரம் காரில் விரைந்து இப்போது அந்த அரண்மணை போல் இருக்கும் வீட்டின் உள்ளே நான்கு கார் படை சூழ உள்ளே சென்றான்.

எப்பொதும்  எதிலும் மிகவும் நாட்டம் இல்லாமல்  கடமை,கடுமை முகத்துடன் சுற்றி கொண்டு இருக்கும் மகன் முகம் மற்றும் கண்களில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு ஏக்கம் இருக்கும் ஆனால் இன்று முகம் மிகவும் உற்சாகத்துடன் வந்ததை பார்த்த பவானி ஒரு நிமிடம் மனதில் நிம்மதியுடன் அமர்ந்து இருந்தாள்.

மா… எதுக்கு வர சொன்னீங்க…
ஏன் சித்து எதுக்கு அப்டின்னு உனக்கு தெரியாதா….
லீனா புது படத்தில் கமிட் ஆகி இருக்கா போல… எப்போ டா உங்க கல்யாணத்தை நான் பார்ப்பது… எப்போ என்னோட வாரிசுகளை அள்ளி முத்தமிடுவது.

மா.. என்று இப்போது அவன் முகம் கடுமையை தத்து எடுத்துக் கொண்டான்…
அப்போ இதுக்கு என்ன அர்த்தம் என மெலினா- சித்தார்த் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் எடுத்து அவன் முன் நீட்டினாள்.

மா பிளீஸ் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..

லீனா ரொம்ப நல்ல பொண்ணு நடிகை கூட அதனால் தான் சித்து நான் சொன்னேன். சித்தார்த் மனதில் அவ நல்லவ, அவளை பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது மா… உங்க அப்பாவுக்கு என் மேல் துளி கூட காதல் இல்லை ஆனால் அந்த ரதி தேவியை எப்படி தாங்குகிறார். லீனா நடிகை இப்போ பார் நான் என்று எதோ சொல்ல வர
ஸ்டாப் இட்…… என்று அவன் கத்தினான்.
நீ லீனா வை வீட்டுக்கு கூட்டி வந்து எவ்ளோ நாள் ஆகுது.
ம்ம் போதும் கூடிய சீக்கிரத்தில் கூட்டிகிட்டு வரேன்…. 
பவானி ஓகே என்று சொல்ல அவன் வேக வேகமாக படிகளில் ஏறி அவனது அறைக்கு சென்று விட்டான்.

அவன் பெங்களூர் வந்தது தாராகோவிந்த் க்கு தெரிய உடனே சித்து வீட்டுக்கு கிளம்பி விட்டாள். சித் இதன்யாவை பற்றிய சிந்தனையில் லயத்து இருந்தான். தாரா பவானி கிட்ட பேசி விட்டு சித்துவுக்கு பிடித்த லெமன் டீ எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

ஹலோ மிஸ்டர் உள்ளே வரலாமா….
சித் யார் என்று பார்த்து விட்டு மம்ம் அவ்வளவு தான் பதில் …
ஹே ஏண்டா இப்படி முகத்தை வச்சி இருக்க…
அவன் அவளிடம் இருந்து லெமன் டீ வாங்கி கொண்டு ஒரு சிப் குடித்து கொண்டே அவளை பார்த்து உன்னோட படம் எப்படி போகுது….
ம்ம் ஓகே இந்த முறை நான் ரொம்ப ஹோப் ல இருக்கேன் பார்க்கலாம்…
ம்ம் குட் ….
எப்போ டா கம் பக் கொடுக்க போற….
சித் அவளை பார்த்து ஒரே ஒரு கசந்த புன்னகை சிந்தினான் .
உனக்கு ஓகே அப்டின்னா சொல்லு நம்ப ரெண்டு பேரும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கலாம்.
ம்ம் அதை அப்புறம் பார்க்கலாம். என்ன உன்னோட முகத்தில் இப்போ கொஞ்சம் சிரிப்பு எட்டி பார்க்குது என்ன விஷயம் சொல்லு டா எதுவும் இப்போ ….
நத்திங்….
கொஞ்சம் சதீஸ் சொன்னான் மீதிய நீ சொன்னா நல்லா இருக்கும்…
ஹே தாரா யூ என அவன் ஒரு தலையணை எடுத்து வீச
ஹே ஓவரா பண்ணாத புரியுதா…
ம்ம் ஆமா ….
ஹே சூப்பர் யாரு டா அந்த ஜில்லு…
ஹே ஜில்லு இல்ல லிட்டில் ஹார்ட் தாரா…
இப்போது தாரா……?

தொடரும்…..

EPI 18

தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள். 

தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு… ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்… என சித்தார்த் சொல்ல

தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா…

சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா  சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்…

இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க,

நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான்.  அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்…. என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது.

தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா ..

சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான்.

இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு…

ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச.. 

அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா… என இழுத்தான். 

ம்ம் பாருடா இன்டரெஸ்டிங்
நீ பிசிக்ஸ், அவ கெமிஸ்ட்ரி ரெண்டு பேரும் சேர்ந்தா பிசிகல் கெமிஸ்ட்ரி தான்

என்ட் ஆப் கிளம்பு…
என்று சித்தார்த் அவளை கதவுக்கு அருகில் போய் தள்ள

 தாரா, ஹே நாளைக்கு காலைல வருவேன்.

சித்தார்த்,உனக்கு ஷூட்டிங் இல்லையா…

இப்போ ஹீரோ சண்டைக்காட்சி போர்ஷன் அங்கே எனக்கு வேலை இல்ல…

சித்து,ம்ம் அப்போ நாளைக்கு பார்க்கலாம்.

இதன்யா என்ன செய்து கொண்டு இருக்கிறாள். ம்ம் வாங்க பார்க்கலாமே
இதன்யா பள்ளி முடிந்ததும் நேராக விடுதிக்கு சென்றவள்.

அய்யோ இவன் இவனை நான் என்ன பண்ணட்டும், என்று தன் உதடுகளை தொட்டு பார்த்தாள். ஒரு நிமிடம் ஷாக் அடித்தது. உதடுகளை வருடினாள்.

“எனக்கு அவன் அருகில் இருக்கும்போது ஏன் விலக்க தோன்ற வில்லை. அவன் வாசனை அது ஏன் என் மேல் வீசுவது போன்று தோன்றுகிறது. ஒரு வேளை அவன் நடிகன் அதனால் எனக்கு இப்படி தோணுதா”  என கண்ணாடி அருகில் சென்றாள். 

“பிரியா சொன்னாளே!  இந்த மாதிரி நினைப்பு இருக்க கூடாது. அவனும் எப்போ பார்த்தாலும் என்னை சீண்டி கொண்டே இருக்கிறான். இப்போ நான் என்ன பண்ணட்டும். இனி அவனை அவேய்ட் பண்ணனும் எப்படி பன்றது இன்னும் ஒரு வாரம் வர மாட்டான் அதுக்குள் எதவும் யோசிக்கணும். இந்த காலேஜ் சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள் எவ்ளோ பிரச்சனை.”

சரி இந்த பிரியாவுக்கு கால் பண்ணலாம் என பிரியாவுக்கு கால் செய்தாள்.

பிரியா,ஹே என்ன டி எனக்கு கால் பண்ணி இருக்க… சும்மா தான் டி பேசணும் போல் இருந்தது.

பிரியா அவளிடம் ஹே எதோ சம்திங் நடந்து இருக்கு என்ன விஷயம் சொல்லு? 


எப்படி டி கண்டு பிடிச்ச…
என்னோட இதயா பற்றி எனக்கு தெரியாதா… ஹே அது சித்து விஷயம் தான

உ.. உன்.. உனக்கு எப்டி தெரியும்…
சரி சரி சொல்லு என்ன விஷயம்..
இதன்யா அவளிடம் முத்தம் கொடுத்தது பற்றி சொல்லாமல் அவள் இதழை வருடியது, அன்று தன் உயிர் காப்பாற்றியது பற்றி கூற…

பிரியா சாக் ஆகி ஹே என்ன டி சொல்ற? 

ம்ம் ஆமா பிரியா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல டி.. வேலை விட்டு போறேன்னு கூட சொல்லிவிட்டேன் டி.. அதுக்கு அவன் உனக்கு என் மேல் எதுவும் சம்திங் ஆ அப்டின்னு சொன்னா!  நான் இல்லை அப்டின்னு சொன்னேன். அப்போ உன் வேலைய பாருன்னு சொல்லிட்டான்.

சரி உன்னோட உதடை சித்து வருடும் போது எப்படி இருந்தது? 


ஹே  மங்குனி அது இப்போ உனக்கு தேவையா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு டி…

பிரியா, ஓவரா பண்ணாத இதயா  சும்மா தெரிஞ்சுக்க தான் எனக்கு அப்படி ஒரு அனுபவம் நடந்தது இல்லை டி நீ பேசுறது பார்த்தால் சித்து டார்லிங் உனக்கு கிஸ் கொடுத்த மாதிரி பில்ட் அப் கொடுக்குற..

இதை கேட்டு இதன்யாவின் போன் கை நழுவியது.

ஹே இதயா! 

இதயா லைன்ல இருக்கியா டி…
போனை எடுத்து காதில் வைத்தவள் ம்ம் இருக்கேன் என்று படபடக்க பேசினாள்.

அதென்ன டார்லிங்? 

ஏன் டி உனக்கு என்ன?  எனக்கு சித்துவ ரொம்ப பிடிக்கும்.

சரி அதுக்கு நான் என்ன பண்ணட்டும்… நீ  ஒன்னும் பண்ண வேணாம் எதுவும் ஐடியா கொடு…

என்னன்னு…

இதன்யா,  இனி அவன் என் பக்கத்தில வர கூடாது.
ம்ம் சரி ஓகே அதை நாளைக்கு யோசிச்சு சொல்றேன்.

இன்னிக்கி என்னாச்சி…
அவசரபடாத டி அதுக்கு நிறைய அனலைஸ் பண்ணனும்.
ம்ம் ஓகே …

ஹே இன்னிக்கி அந்த பிக்ஸ் பாத்தியா அது தான் ஹாட் டாபிக்..
எந்த பிக்? என இதன்யா வினவ.. 

அது தான் சித்துவும் அந்த லீனாவும் சேர்ந்து ஒரு போட்டோ…

இதன்யா கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் ம்ம் பார்த்தேன் டி…

அப்புறம் எதுக்கு உன் கிட்ட இப்படி நடந்து கொள்கிறார் ஒரு வேளை சித்து அவங்க அப்பா ரவிச்சந்திரன் மாதிரி அப்டின்னு நினைக்கிறேன் டி…
ஏன் டி அப்படி சொல்ற…

பிரியா, ம்ம் சித்து அப்பாவுக்கு ரெண்டு மனைவி முதல் மனைவி அவங்க தான் சித்து அம்மா அப்புறம் ஒரு பொன்னு ரோஷினி,   அந்த ரெண்டாவது மனைவி பெயர் ரதி தேவி அவங்களுக்கு ஆரவ் அப்டின்னு ஒரு பையன் அதனால் சித்துவுக்கு அவங்க அப்பாவை சுத்தமா பிடிக்காது. அப்டின்னு பேசிக்கிராங்க அது உண்மையா அப்டின்னு தெரியல..  அதனால் தான் சித்தார்த் கிருஷ்ணா அப்படின்னு அம்மா வழி பேரு யூஸ் பன்றாரு…

இதன்யா, ம்ம் போதும் அவன் புராணம் எனக்கு அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கரது அதுக்கு ஐடியா மட்டும் யோசி என சொல்லி போன் வைத்தாள்.

என்ன தான் ஆயிரம் மூளை அவளுக்கு கிளாஸ் எடுத்தாலும் மனம் அவன் அருகாமை , அவனது பார்வை , அவன் அலட்சிய பேச்சு இதற்கு ஏன்க செய்தது.
லூசு இதன்யா அவனுக்கு வேற ஒரு பொன்னு கூட கல்யாணம் ஏன் லிவிங் டூ கேதர் ல கூட இருப்பாங்க இனி அவனை பற்றி நினைக்காதே என தன் மனதுக்கு கடிவாளம் போட்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக ஓடியது பிரியா போன் செய்து அவளுக்கு சில யோசனைகள் கூற இவளும் சரி என்றாள்.

இங்கே சித்தார்த்தின்  தந்தை வழி தாத்தா சந்திர மௌலி அவனை பார்க்க வீட்டுக்கு வர சொன்னார். அவர் தான் சித்தார்த்துக்கு சொந்தமான அனைத்து சொத்து உரிமையையும் அவனுக்கு கொடுத்து இப்போது அவன் கவனிப்பின் பேரில் தான் பாதி இயங்குகிறது. அதை எப்படியும் கை பற்றி அவனை அவமான படுத்தி அந்த சிஇஓ பதவியில் தன் மகன் ஆரவை அமர்த்த தான் ரதி தேவி இவ்வளவு சூழ்ச்சி எல்லாம் செய்கிறாள்.

கிருஷ்ணன் வீட்டை போல் பிரம்மாண்டமான வீடு தான் அவன் அங்கு சென்றதும் வழக்கம் போல் இன்னும் கடுமையாக முகத்தை வைத்து கொண்டான். உள்ளே செல்ல அவன் பாட்டி ஸ்வர்ணம்  அவனை உள்ளே அழைத்தாள். 

சோபாவில் அமர்ந்தவன் அங்கு இருக்கும் பணியாள் கிட்ட ” ஐம் சித்தார்த் கிருஷ்ணா மிஸ்டர் சந்திர மௌலி ய பார்க்க வந்து இருக்கிறான் என்று போய் சொல்!” … என்று கடுமையான கம்பீரம் நிறைந்த குரலில் சொல்ல

ச சரிங்க சார்… என்று அந்த பணியாள் திரும்பும் நேரம் சந்திர மௌலி கீழ வந்தார் சித்தார்த் பேசியது காதில் விழ அவருக்கு வருத்தம் இருந்தாலும் ஒரு பக்கம் பெருமை தான் எவ்வளவு ஆளுமையான பேச்சு என் பேரன் என் ரத்தம் என சந்தோஷம்…. அருகில் அவர் வர மரியாதை நிமித்தம் காரணமாக எழுந்து நின்றான்.

எப்படி இருக்க சித்து? 

என் கிட்ட வேலை விஷயம் மட்டும் பேசுங்க இல்லை நான் இப்போவே கிளம்பிடுவேன்…
நான் என்ன பா செய்தேன்… என் மேல் உனக்கு ஏன் இவ்வளவு வெருப்பு…
இப்போது ஒரு புன்னகையை சிந்தி எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏன்னா இந்த இரத்தம் என் உடலில் ஓடுவது உங்க பையனோடது ஐ ஹேட் சீட்டர்ஸ்…

அம்மா சொல்லி இருக்காங்க உங்களை சங்கட படுத்த கூடாது அப்டின்னு உங்களுக்கு இப்போ என்ன வேணும் ..
எனக்கு என்னோட பேரன் வேனும் ..
வாட் அ காமெடி சென்ஸ்
அதுக்கு தான் மிஸ்டர் ஆரவ் ரவிசந்திரன் இருக்காரு அப்புறம் என்ன…
இதெல்லாம் உங்களை கஷ்ட படுத்த நான் பேச வில்லை நான் எப்போதும் சித்தார்த் கிருஷ்ணா தான் என்று சொல்ல இதற்கும் மேல் பேசி ஒன்றும் பயனில்லை என்று அவர் தொழில் தொடர்பாக பேசி விட்டு அப்படியே தன் பேரனுடன் மதிய உணவை முடித்தார்.
அதற்கும் மேல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என சித்தார்த் கிளம்பி விட்டான் அவன் வெளியே செல்லும் நேரம் காருக்கு அருகில் ரதி தந்திர புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தாள்.
என்ன மிஸ்டர் எப்படி இருக்க …
சித்து எந்த பதிலும் சொல்ல வில்லை…
ம்ம் சரி வந்ததும் வந்து விட்டாய் இதோ இந்த கவர் பிரித்து பார்…

சித்தார்த் என்ன என்பது போல பார்க்க ரதி கேவல புன்னகையை சிந்தி அதை அவனிடம் கொடுத்து விட்டு ஒரு பார்வை

என்னை கேவலமாக பார்க்கிற உனக்கு உன்னோட கேர்ல் பிரென்ட் அவளோட பெட்டை யாரு கூட ஷார் பண்ணி இருக்கா அப்டின்னு கொஞ்சம் பார்த்துக்கோ டா என மனதில் நினைத்துக் கொண்டு…
நான் வரேன் என ரதி அவனை கேவலமாக பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

சித்தார்த் காரில் ஏரியவன் அதை திறந்து பார்க்க அதில் மெலினா மற்றும் JK இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இதை பார்த்து அவனுக்கு ஒரே ஒரு  கசந்த புன்னகை மட்டுமே வந்தது.

இங்கே இதன்யாவின் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி ஹாய் தனு…
இதை பார்ததும் கண்டு கொண்டாள். ம்ம் சொல்லுங்க சீனியர்…
இப்போது ரிஷி ஒரு போட்டோ அனுப்பினான்.
அதை பார்த்த இதன்யா அப்போ அதை நீங்க தான் வைத்து இருக்கீங்களா…
ம்ம் ஆமா என்று சில சிரிக்கும் ஸ்மைல் ஸ்டிக்கர் அனுப்பி விட்டான்.
எல்லாம் உங்களால் தான் அன்னிக்கு ஒரு நாள் ஃபுல் லா நான் லேப் க்கு வெளியே நின்னேன் தெரியுமா ..
ஸாரி தனு…
பிளீஸ் ஸாரி….
சரி ஒகே நான் மன்னித்து விட்டேன்.
அப்டின்னா எனக்கு கேலக்ஸி சாக்கலட்டு வாங்கி தரனும்.
ம்ம் டபிள் ஒகே நாளைக்கு வாங்கி வந்து கொடுத்து விட்டு போகிறேன். என சொல்லி இருவரும் போன் வைத்தனர்.

இங்கே சித்தார்த் இதன்யாவின் போனில் ஒரு ஹேக் அப் வைத்து இருந்தான் அவளுக்கு வரும் செய்திகள் மெசேஜ் படிக்க கால் யாருடன் பேசுகிறாள் என தெரிந்து கொள்ள செட் செய்து இருந்தான்.

இப்போது அதை ஓபன் செய்து பார்க்க அதில் ரிஷி, இதன்யா பேசியது முக்கியமாக அந்த போட்டோ அதை பார்த்து விட்டு வரேன் டி எவ்ளோ திமிர் உனக்கு அவன் கிட்ட பேசுகிறாய்.. அந்த போட்டோ அந்த ரிஷி அவனும் அவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை…
உன்னை சும்மா விட மாட்டேன் டி அந்த போட்டோ அதில் ….!!!???
நாளைக்கு சூர்ய உதயம் வரும்போது நான் அங்கே இருப்பேன் டி….!!!!
உன்னை….

தொடரும்….

EPI 19

 சித்தார்த் அந்த புகை படத்தை பார்த்து கடுப்பாகி  விட்டான். அப்படி அவன் பார்த்தது என்ன? 

அது வேற ஒன்னும் இல்லங்க லேப் கோட்!. 

ரிஷி இதன்யாவுக்கு லேப் கோட் அதாவது அவளுடைய கோட் தான் இவ்வளவு நாளும் ரிஷி அணிந்து கொண்டு லேப் செய்து இருக்கிறான்.

அந்த கோட் போட்டோ மற்றும் இருவரின் உரையாடல் இதுவே சித்தார்த்துக்கு அது யாருடையது என தீர்மானம் ஆனது.

இந்த காரணத்தினால் தான் சித்தார்த்துக்கு கோபம் ஏறியது. அவர்கள் உரையாடலை பார்த்ததும் உடனே சித்தார்த் கிளம்பி விட்டான்.

அதற்குள் பவானி அவன் வேகமாக கிளம்புவதை பார்த்து என்ன வேலையா இருந்தாலும் நீ காலையில் தான் செல்ல வேண்டும் என்று விடா பிடியாக கூறியதால் வேறு வழி இல்லாமல் கோபத்துடன் அவன் எப்போது விடியும் அவளை வந்து இந்த முறை சும்மா விட கூடாது என சித்தார்த் தகித்து கொண்டு இருக்க 

****

இங்கே,

ரிஷி இதன்யாவிடம் மெசேஜ்ல பேசி விட்டு பின் அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

நிதன்யா  இளங்கலை இறுதி ஆண்டு இயற்பியல், இதன்யா இளங்கலை முதலாம் ஆண்டு வேதியல், ரிஷி முதுகலை முதல் ஆண்டு இயற்பியல் அன்று ரிஷிக்கு லேப் அவன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் லேப் கோட் எடுத்து கிண்டலுக்காக ரிஷியை சீண்ட வேண்டும் என்று அவனுடய கோட்டை எடுத்து காலேஜ் பஸ் ல வைத்து மறைத்து விட்டனர்.

இயற்பியல் துறை லேப் மிகவும் கண்டிப்பு கடுமை அங்கு இருக்கும் ஆசிரியர் விரிவுரையாளர் முகங்களில் எப்பொதும் கடுமை மட்டுமே இப்போது ரிஷி கோட் காணவில்லை என்று தெரிந்து கொண்டவன் இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி கொண்டு தன் காதலி நிதன்யாவை சந்திக்க சென்றான்.

ஹே தன்யா…. ரிஷி அழைத்ததும் நிதன்யா முகத்தில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அதை ரிஷியும் பார்க்க தவற வில்லை.

ம்ம் சொல்லுங்க அண்ணா….

இப்போது ரிஷி ஒன்னும் இல்லை நீ போ….

ஹே சாரி சாரி ரிஷி…

இப்போ போதுமா என மின்னும் கண்களில் நிதன்யா கேட்க,
இப்போது கண்ணகுளி தெரிய ஒரு புன்னகை சிந்தினான்.

ம்ம் சொல்லுங்க ரிஷிக்கு என்ன வேனும்? 

ம்ம் உன்னோட லேப் கோட் கொஞ்சம் தரயா..

ஏன்? என்று ஒரு புருவ முடிச்சு போட நிதன்யா பார்த்தாள்.

எனக்கு தான்,  என்னோட கோட் ட பசங்க எதோ வேலை பண்ணிட்டாங்க இப்போ அந்த குணா லேப் அவனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது இப்போ நீ தரயா இல்ல நான் அந்த இரண்டாம் ஆண்டு மோகனா கிட்ட வாங்கவா…

ஹே ரொம்ப ஓவரா பண்றீங்க இதுக்கு எல்லாம் இருக்கு உங்களுக்கு என நிதன்யா சொல்ல

ஹே இப்போ என்ன சொன்ன…
ஒன்னும் இல்லை…

ஹே சொல்லிட்டு போ டி என ரிஷி கேட்க

இதன்யா கிட்ட இருக்கு நான் போய் வாங்கி கிட்டு வரேன்…

ஹே விடு தன்யா நான் போய் எடுத்து கொள்கிறேன் என சொல்லி விட்டு இவன் அவளை நிதன்யாவை மனதில் நிறைத்து கொண்டு பறந்து விட்டான்.

இதன்யா அப்போது லைபிரரி சென்று இருக்க அவள் பேக் ல இருந்து நிதன்யா கோட்க்கு பதிலாக இதன்யா கோட் எடுத்து வந்து விட்டான்.

அதை அணிந்தஉடன் அவளின் பிரத்யேக வாசனை அவனுக்கு ஓட்டி கொண்டது.

அடுத்த பாடவேலை நிதன்யாவுக்கு லேப் இருக்க அவள் போய் ரிஷி கோட் கொடு எனக்கு லேப் இருக்கு…
ம்ம் தர முடியாது…

ஹே விளையாடாத தா …

ம்ம் எனக்கு இந்த கோட் ரொம்ப பிடிச்சு இருக்கு நான் நாளைக்கு உனக்கு புது கோட் வாங்கி தரேன் பிளீஸ்….

இதை கேட்டதும் நிதன்யா மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்.
பள்ளியில் இருந்து அவனை தெரியும் ஆனால் அங்கு ஒரு முறை கூட பேசியது இல்லை நிதன்யா ரிஷியை மறைந்து கொண்டு பார்ப்பாள் ரசித்து கொண்டே இருப்பாள்.

ரிஷிக்கு  தெரியும் நிதன்யா தன்னை விரும்புகிறாள். காலேஜ் வந்ததும் இருவரும் இப்போது பார்த்து கொண்டு தெரிந்தும் தெரியாதது போல் காதல் மொழிகளில் பேசி கொண்டு இருந்தனர்.

நிதன்யா எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டாள். அங்கு இதன்யாவின் வகுப்புக்கு போய் நிதன்யா அவளுடைய கோட் வாங்கும் போது தான் ரிஷி மாற்றி எடுத்து வந்து இருக்கிறான் என தெரிந்தது.

ரிஷியின் காதல் வார்த்தையில் மயங்கிய நிதண்யா அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. ஆனால் அங்கு இதன்யா , அக்கா இப்போ என்னோட லேப் இருக்கு என்னோட கோட் காணோம் பிளீஸ் கொடு….
ஹே எனக்கு தெரியாது டி இப்போ எனக்கு லேப் நான் போகனும் என நிதன்யா ரிஷி வந்ததை மறைத்து சென்று விட்டாள்.

இங்கே ரிஷி அதை பத்திரபடுத்தி கொண்டான். ஆனால் அதில் ஒன்று இடத்தில்  ஐ என்னும் ஆங்கில எழுத்து இருந்ததை அவன் கவனிக்க மறந்தான்.

அதன் பின் காலேஜ் முடிந்ததும் எப்படியும் முதுகலை அங்கு நிதன்யா படிக்க வருவாள் தன் காதலை அவளிடம் சொல்லி விடலாம் என இருந்தான். ஆனால் அதற்குள் நிதன்யா வேறு ஒருவருக்கு சொந்தமாகி விட்டாள் என இதன்யா மூலமாக தெரிந்து கொண்டான்.

அவன் உடைந்து போனான். முதல் காதல் அதுவும் பள்ளியில் இருந்து அவளை விரும்புகிறாள். நிதன்யா பேரழகி என்று சொல்ல முடியாது. அழகி அதை விட நீளமான கூந்தல் அவனை மயக்க தான் செய்தது. பொதுத் தேர்வு என பள்ளியில் படிப்பதிலயே தான் கவனம் செலுத்துவது அவன் வேலை ஆனால் காலேஜ் வந்ததும் ரிஷியின் மனம் அவளை தேட தொடங்கியது. அவள் இல்லாத அந்த கல்லூரி நரக வாயில் போல் இருந்தது. மனம் கணத்து போனது.  

ஆனால் அந்த நேரம் தான் இதன்யா வந்தாள். அப்படியே பேசி பேசி இதன்யா மிகவும் இயல்பு மற்றும் ரிஷிக்கு அவளை மிகவும் பிடித்து போனது. அப்பொழுது தான் அந்த கோட் எடுத்து நிதன்யா நினைவில் எடுத்து பார்க்க அந்த i என்னும் எழுத்து அவன் கண்ணுக்கு தெரிந்தது.

ரிஷி மனதில் தன்யா உன்னை என் வாழ்க்கையில் இழந்து விட்டேன் டி. ஆனால் உன்னை போல் இருக்கும் இதன்யா அவளை எப்பொதும் இழக்க மாட்டேன் டி.இப்போது நீ தான் எனக்கு இதன்யாவை கொடுத்து இருக்கிறாய். என்று சொல்லி கொண்டான்.
ஆனால் இதன்யா அவளும் ரிஷிக்கு கிடைக்க போவது இல்லை அதற்கு தான் சித்தார்த் வந்து விட்டானே.

அங்கே சித்தார்த்துக்கு ரதி கொடுத்த அந்த புகை படங்கள் கூட அவ்வளவு கோபமும், கவலையும் தர வில்லை. மெலீனாவுடன் சித்தார்த் அவ்வளவு நெருக்கம் காதலி இப்போது அது அவனுக்கு ஒரு சிறு சலனமும் தர வில்லை.

ஆனால் அந்த கோட் அது தான் அவனுக்கு உறுத்தியது. ஒவ்வொரு நாளும் என்னோட லிட்டில் ஹார்ட்டை நீ  அணைப்பது போல் அதை போட்டு கொண்டு இருக்கிறாய் உன்னை நான் சும்மா விட மாட்டேன் ரிஷி….

அவள் இருக்கிறாளே துளி கூட அறிவு இல்லை நான் என்னை மட்டும் தான் தவறாக பார்ப்பாள். ஆனால் சரியான ராட்சசி… திமிர் பிடிச்சவ…

இரு டி நான் காலையில் வருகிறேன் கேலக்சி சாக்லெட் வேணுமா மேடம் க்கு உன்னை இந்த கேலக்சி ல இருந்தே தூக்கனும் டி….

என்ன டா சித் அவ மேல இப்படி ஓவரா உரிமை கொண்டாடுகிறாய்.
ம்ம் லிட்டில் ஹார்ட் என்னோடவள்…
லீனாவை கூட இப்படி தான் நினைத்தாய்…. அவ என் கூட மட்டும் பெட் சேர் பண்ணலயே இந்த இண்டஸ்ட்ரி ல என் கூட இருப்பது போல் எல்லார் கூடவும் இருந்து இருக்கிறாள். என்னை காதல் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்.

ஆனால் என்னோட லிட்டில் ஹார்ட் அவ மொத்தமும் எப்பவும் நான் தான் இப்பவும் எப்போதும் எனக்கு மட்டும் தான் என சித்தார்த்துக்கு ஒரு  நிமிடம் உடலில் மின்சாரம் தாக்க தான் செய்தது.

ம்ம் எப்போ டி நான் உன்னை மொத்தமும் எடுத்து கொள்வது என சித்தார்த்துக்கு அவளின் குளிர்ந்த இதழ்கள் நினைவுக்கு வந்தது. அவளை நினைத்துக் கொண்டே ஒரே ஒரு முறை ஸ்டாங் மது ஒரு பெக் போட்டு கொண்டு நாளைக்கு வந்துடுவேன் டி இதயா என சொல்லி அப்படியே பெட்டில் விழுந்தான்.

அடுத்த நாள் விடிந்தது. இதன்யா பள்ளிக்கு கிளம்பி போகும் வழியிலே ரிஷி அவளை மறித்து ஒரு பேக்கரி அழைத்து சென்று விட்டான்.

என்ன சீனியர் நான் சும்மா தான் கேட்டேன் நீங்க எதுக்கு நிஜமாவே கூட்டி வந்தீங்க….

இல்ல தனு இதை என்னோட அப்பாலஜி யா நீ எடுத்துக்கோ பிளீஸ்…. என அழைத்து சென்றான்.

உள்ளே சென்றதும் அங்கே அவளுக்கு பிடித்த அந்த கேலக்ஸி சாக்லேட் வாங்கி மிகப் பெரிய பாராக வாங்கிக் கொடுத்தான்.

இப்போது அவள் பயந்து கொண்டே அந்த இடத்தில் கொஞ்சம்  ரிஷிக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
ரிஷிக்கு இதை நினைத்து அந்த கன்னகுளி இரண்டும் வலித்து விடும் போல்

இங்கே ஒருவன் அவசர அவரமாக விமான நிலையத்தில் இருந்து வேக வேகமாக காரில் விரைந்து வந்து கொண்டு இருந்தான்.

அந்த காளான் பப்ஸ் சாப்பிட்ட இதன்யா, அவனை பார்த்து சீனியர் இப்போ கிளம்பலாமா…
ரிஷி மனம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன என பாடல் கேட்க தொடங்கியது.

அதில் இருந்து தன்னை மீட்டு கொண்ட ரிஷி,ம்ம் சரி தனு என சொல்லி இருவரும் நடந்தே சென்றார்கள்.
அதற்குள் சித்தார்த் பள்ளிக்கு வந்து விட்டான்.

சித்தார்த் ருத்ர மூர்த்தியாக அவனது இடத்தில் அமர்ந்து கொண்டு கண்காணிப்பு கேமராவில் என்ன நடக்கிறது. அவள் வந்து விட்டாளா என பார்க்க

இன்னும் சித்தார்த்தின் இதய ராணி இதன்யா இன்னும் வர வில்லை.

சதீஷ், பாஸ் மேடம் என சொல்ல
அவன் சதீஷ ஒரு பார்வை பார்க்க
மேடம் ரிஷி சார் கூட ஸ்கூல்க்கு வெளியே சிறிது தூரத்தில் வரவும் அங்கு உள்ள கார்ட்ஸ் தகவல் கொடுத்தனர்.

சதீஷ் ஸ்கூல் பெல் அடிக்க சொல்லு…
ஓகே பாஸ்…. என அவன் வேலையை செய்தான்.

சீனியர் கேட்டு லாக் பண்றாங்க நான் போகனும் நீங்க கிளம்புங்க…

ம்ம் சரி தனு … என பிரிய மனமில்லாமல் பிரிந்தான் அவள் ஓடி சென்று உள்ளே செல்வதற்குள் பூட்டி விட்டனர்.

ஹலோ பிளீஸ் திறங்க ….

இன்னும் டைம் 5 நிமிடம் இருக்கு…
ஸாரி மிஸ் சித்தார்த் சார் வந்து விட்டார் ஸ்கூல் டைம் மாற்றி விட்டார்…..
இந்த வார்த்தைகள் இதை கேட்டு இதன்யா உறைந்து போனாள்.

தன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி என்ன ஸார் வந்தாச்சா…!!??

அவள் சிலையாக அங்கேயே நிற்க இப்போது ஒரு சில மணி துளிகள் கழித்து கேட்டின் கதவுகள் திறக்க அங்கே சித்தார்த் காரில் அவளை முறைத்து கொண்டே வெளியே வந்தான்.

சார் பிளீஸ் உள்ளே போகட்டுமா? 

தொடரும்…..

EPI 20

  இதன்யா மிஸ்!..

இதன்யா அதே இடத்தில் சில நிமிடம் நிற்க அப்போது கேட்டின் கதவுகள் திறக்க பள்ளியின் உள்ளே இருந்து காரில் சித்தார்த் வெளியே வந்தான்.

அவள் அருகே வந்து கார் நின்றது இதன்யா கொஞ்சம் படபடத்து கொண்டே அவனை பார்த்து “சார் உள்ளே போகட்டுமா?” 


சித்தார்த் அவளை பார்த்து முறைத்தவன்.ம்ம் போலாம் நான் ரிடர்ன் வரும் வரை இங்கேயே வெயிட் பண்ணு! 

ம்ம்  ஓகே சார்… என்று அவள் சொல்ல
கார் உடனே  சீறி பறந்தது.

சித்தார்த் ஒரு சிறு புன்னகையுடன் இப்போது தன் கூலர்ஸ் கழட்டி விட்டு அவளை கார் கண்ணாடியின் வழியில் ஒரு முறை பார்த்தான்.

சதீஷ், “பாஸ் இப்போ நம்ப எங்கே போகனும்?”..

இப்போ கொடூர புன்னகை சிந்திய சித்தார்த் “காரை காலேஜ்க்கு விடு”…

ம்ம் ஒகே பாஸ்… என்று கூறிய சதீஷ் வேகமாக காலேஜ் பக்கம் திருப்பி ஓட்டினான்.

காலேஜ் வந்து சேர்ந்தனர். சித்தார்த் வழக்கம் போல் அந்த மாஸ்க், கூலர் அணிந்து கொண்டு நேராக பிசிக்ஸ் dept சென்றான்.

அங்கு ரிஷி கணினியில் அமர்ந்து சில ஜார்ணல்ஸ் பார்த்து சில புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தான்.

க்கும்,… உடனே ரிஷி திரும்பி பார்க்க அங்கே சித்தார்த் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

சார் என உடனே அருகில் வர சித்தார்த் அவனை முறைத்தான்.

மாமா!… என சொல்லி கொண்டே அந்த புத்தகம் சில டாபிக்ஸ் எல்லாம் கொண்டு வந்து அருகில் காட்டிட
உடனே சித் அவன் அமர்ந்து இருந்த இடத்தை ஒரு நோட்டம் விட அங்கே இதயராணியின் (இதன்யா) கோட் இருக்க இப்போது சித்தார்த் தன் கார்ட்ஸ ஒரு பார்வை பார்க்க அவர்கள் உடனே ஒரு பார்சல் கொண்டு வந்தனர்.

ரிஷி இப்போது சித்தார்த்தை கேள்வியாக பார்க்க “ம்ம் இது உனக்காக ரோஸினி பிரசெண்ட் பண்ணி இருக்கா…

“ரோஷினி” என்ற பெயரை கேட்டதும் ரிஷி முகம் மாறியது.
என்ன…

ஒ ஒன்னும் இல்ல மாமா என சொல்லி கொண்டே அதனை வாங்கி கொண்டான்.

ம்ம் ஓபன் பண்னு…

ரிஷி மனம் இவள் எதுக்கு இது எல்லாம் எனக்கு தரா இவ கிட்ட நான் இன்னும் பேசியது கூட இல்லை டிஸ்கஸ்டிங்… என நினைத்து கொண்டே திறக்க அதில் ஒரு வெள்ளை கோட் இருக்க

சித், உன்னோட ph.d நல்ல படியா முடியனும் அப்டின்னு கொடுத்து இருக்கா…

ரிஷி கஷ்ட பட்டு சிரித்தான்.

ம்ம் சரி மாமா நல்லா இருக்கு …
சித்தார்த் அவனை புருவம் நெருக்கி இதுல என்ன நல்லா இருக்கு? ..

ரிஷி இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க

சரி இதை போடு ஒரு பிக் எடுத்து அவளுக்கு அனுப்ப சொன்னா வெயிட் பண்ணிட்டு இருப்பா…

ம்ம் மாமா இதோ இப்போ உடனே… என அந்த கோட் எடுத்து போட சித்தார்த் நேராக இதன்யா கோட் இருக்கும் இடத்தை நோக்கி சென்று அதை கைகளில் எடுக்க

ரிஷி வேக வேகமாக அவன் அருகில் வந்து அதை சித் கிட்ட மாமா அது என்னோடது!  வைத்து விடுங்கள்…

சித்தார்த் முறைத்து விட்டு இது உனக்கு வேணாம் எனக்கு பிடிக்கல…

மாமா இதை நான் ugல இருந்து வைத்து இருக்கிறேன். எனக்கு மிகவும் சென்டிமெண்ட் மாமா…

இந்த கோட்ல என்ன சென்டிமெண்ட் இருக்கு இப்போ ரோஸினி கொடுத்து இருக்காளே! அதில் தான் நீ சென்டிமெண்ட் பார்க்கனும் என்று சொல்லி சதீஷ்!… 

யெஸ் பாஸ் என சதீஷ் ஓடி வந்தான். ம்ம் இதை கொண்டு போய் டஸ்ட் பின்ல போட்டு விடு..

மாமா பிளீஸ் மாமா வேண்டாம்…
சித்தார்த் அவனை பார்த்து முறைக்க அவன் பேச முடியாமல் தடுக்க முடியாமலும் தவித்தான்.

ஓகே பாஸ் என அவன் இரண்டு அடிகள் செல்ல

சதீஷ்…
சொல்லுங்க பாஸ் …

ம்ம் வேண்டாம் என்று ரிஷியைப் பார்க்க உடனே அவன் கண்களில் ஒரு ஒளி தெரிய

இப்போது சித்து, சதீஷ் இதை நம்ப கார் கிளின் பண்ண கொடித்திடு…

இதை சொன்னவுடன் ரிஷியின் முகத்தில் இரத்தம் வடிந்தது போல் இருந்தது.

சதீஷ் சிரிப்பை அடக்கி கொண்டே ம்ம் ஓகே பாஸ் என அதை எடுத்துக் கொண்டு சென்றான்.

என்னாச்சு ரிஷி?

ஒன்னும் இல்ல…

ம்ம் இப்போ தான் நீ இந்த கோட்ல சயின்டிஸ்ட் மாதிரியே இருக்க…

ரிஷியின் மனம் “இது ஒன்னு தான் ரொம்ப முக்கியம் என் தனுவோடது இப்படி கார் துடைக்க அய்யோ! எல்லாம் இந்த ரோலின் தான் காரணம்”..

சித் இப்போது திருப்தியாக புன்னகைத்தவன். ஓகே ரிஷி இப்போ இந்த என்று சில இன்டர்நேஷனல் சைன்ஸ் ஜர்னல் எல்லாம் சொல்லி அதில் போய் செலக்ட் பண்ணி எனக்கு மெயில் பண்ணு நான் பார்த்து விட்டு உனக்கு சொல்றேன்.

ம்ம் ஒகே மாமா…

ஓகே பாய் ஹவ் அ நைஸ் ஜார்னி… என்று இப்போது அங்கு இருந்து கிளம்பியவன். நேராக கெமிஸ்ட்ரி லேப் போய் அங்கு கொஞ்சம் கெரசின் வாங்கி அந்த கோட்டை பற்ற வைத்து எரித்தே விட்டான்.

இப்போது ஸ்கூல் செல்ல கிளம்பினான். மதிய நேரமே வந்து விட்டது.

இங்கே இதன்யா அவன் எப்போது வருவான் என்று காத்து கொண்டு இருந்து வெயிலில் சோர்ந்து போனாள்.

ஒவ்வொரு நிமிடம் நேரமும் ஆக ஆக அவளுக்கு சித்தார்த்தை அப்படியே ஒரு மலையில் இருந்து கீழ் தள்ள வேண்டும் என்று கோபம் கிளம்பியது.

இப்போது கார் வரவும் உடனே கோபத்தில் அவள்  அவமானத்தில் “நாம் உள்ளே செல்ல வேண்டாம் டி. நீ ஹாஸ்டல் போயிடு வெட்கம் அவமானமா இருக்கு என கண்களில் கண்ணீர் கோர்க்க அவள் திரும்பி ஒருசிறிது தூரம் நடக்க.

சதீஷ், பாஸ் மேடம் கிளம்பி விட்டார்கள்..

எங்கே? 

இதோ என அவன் சொல்ல,

சித்தார்த்துக்கு அவள் முகத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

சதீஷ் அவ முகத்தை பாரு…

பாஸ்  மேடம் செம்ம கோபத்தில் இருக்காங்க

சித்து, நீ காரை அவ பக்கத்துல போய் நிறுத்து…

ம்ம் ஓகே பாஸ்… என சதீஷ் காரை இதன்யா அருகில் போய் நிற்க உடனே கோப பார்வையில் காரினை பார்க்க…
சித்தார்த் கூலாக கார் ஜன்னல் கதவுகளை இறக்கி விட்டு அவளை பார்த்தான். 

அவள் அவனை பார்த்து முறைத்து விட்டு அடுத்த அடியை எடுத்து வைத்தாள்.

சித்து,என்ன மிஸ் ஸ்கூல்க்கு போகாம இங்கே என்ன பண்றீங்க?…

இதை கேட்டு அவள் அவனை திரும்பி பார்த்து நான் ஹாஸ்டல் போறேன்!, எனக்கு உடம்புக்கு முடியல…

அப்டியா காலைல நல்லா தானே இருந்தீங்க? என அவன் அவளை சீண்டி கொண்டே இருக்க…

அவள் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து செல்ல…

மிஸ் ஸ்கூல்க்கு வாங்க! என்று இவன் சொல்ல

இப்போ இது ஸ்கூல் இல்லை! நீங்க ஒன்னும் இப்போ என்னோட பாஸ் இல்ல! இது பப்ளிக் பிளேஸ்! அதனால என்னை ஆடர் போடுற வேலை வேணாம். என்று அவள் அவனை மிரட்டி விட்டு இதன்யா செல்ல…

சித்தார்த் அவள் பேசும் தோரணை பார்த்து உள்ளுக்குள் சிரித்து ரசித்தவன்.

சித்து,ஹே நில்லு டி…

இதன்யா திரும்பி பார்த்து முறைத்து இப்போ என்ன சொன்னீங்க…
நில்லுங்க மிஸ்…

சித்து, இப்போ மட்டும் நீங்க ஸ்கூல்க்கு வரல நம்ப அடுத்த மீட் போலீஸ் ஸ்டேஷன்ல தான் எப்டி வசதி…

நான்! நான்! என்ன பண்னேன்!

 சித், “நீயா சாரி மிஸ் நீங்க ஸ்கூல்ல ஃபோர்ஜேர் பண்ணி ஜாயின் பண்ணத சொல்லி உங்களை ஜெயிலில் போட்டு விடுவேன்…அப்புறம் அங்கே போய் நீங்க யாருக்கும் if you happy and you know it, clap your hands எல்லாம் பாட முடியாது யாருக்கும் சொல்லி கொடுக்கவும் முடியாது. உன் கரியர காலி பண்ணிடுவேன்…

சிறு நிமிடம் அமைதி நிலவியது….

மிஸ்!
மிஸ் இதன்யா டீச்சர்! ….ஆர் யூ ஹியர்.!.

யெஸ் சார்… என உதடுகள் துடிக்க கண்ணாடியை சரி செய்து கொண்டே அவனை எரிக்கும் பார்வை பார்க்க.

ம்ம் கூல்…இப்போ உள்ளே போறீங்களா… என்று சித்தார்த் வார்த்தைகள் வாயில் இருக்கவே

இதன்யா ஸ்கூல் நோக்கி நடக்க இப்போது சிரித்து கொண்டே சித்தார்த் காரை ஸ்கூல் கேட்டுக்கு வந்தவன். சரியாக இதன்யா அருகில் வர

செக்யூரிட்டி கிட்ட சித்தார்த், அவளை சீண்டும் நோக்கத்தில் “என்ன மேடம் வந்தால் கேட் ஒபன் பண்ண மாட்டிங்களா… உங்களால் தான் இதன்யா மிஸ் இப்போ இவளோ நேரம் வெளியே வெயிட் பண்ணி உள்ள போறாங்க.”

சாரி சாரி சார்…

ம்ம் இனி சரியா இருந்தா நல்லது இல்லை மிஸ் அவ்ளோ தான் கொன்றுவாங்க.. என சித்தார்த் சொல்ல

இதன்யா மூக்கு புடைக்க  அவனை முறைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

இப்போது நேராக ரெஸ்ட் ரூம் அருகே சென்றவள் அங்கு ஒரு பின் பக்கம் ஒரு மரம் இருக்க அங்கு போய் போன் எடுத்து டைம் பார்க்க பிரியாவுக்கு லஞ்ச் விட்டு இருப்பார்கள் என யோசித்தவள் அழுது கொண்டே போன் செய்தாள்.

பிரியா,ஹே என்ன டி ஸ்கூல் டைம் ல கால் பண்ணி இருக்க… இதயா… ஹே என்னாச்சி பேசு டி… இதன்யா…
இப்போது விம்மல் சத்தம் கேட்க

ஹே லூசு என்னாச்சு ஏன் அழர …
பிரியா…
பிரியா…

பிரியா, பிளீஸ் அழாம சொல்லு டி எனக்கு பயமா இருக்கு…

இதன்யா, அவன் அந்த ராஸ்கல்…

யாரு டி? 

அவன் தான்…

சித்து வா! 

ம்ம் ஆமா என இப்போது அழாமல் பேச
என்னடி எதுவும் உன்னை கிஸ் இல்ல உன்னை முடிச்சிட்டானா!

ஹே வந்தனா உன்னை கொலை பண்ண போறேன்…

சரி சரி சாரி இதயா நீ அழவும் நான் அப்படி நினைத்து விட்டேன் சொல்லு..

இதன்யா நடந்த அத்தனையும் கூற இதை கேட்டு பிரியாவுக்கு ஒரு புறம் சிரிப்பு ஒரு புறம் அதிர்ச்சி…
இதயா நிஜமாவா நிஜமாவே இப்படி நடந்ததா, அவர் ரொம்ப பொலைட் யாரு கிட்டயும் பேச மாட்டாரு டி..
இல்ல நீ எதோ கற்பனையில் பேசரயா…

இதன்யா, நா நான் எதுக்கு உன் கிட்ட பொய் சொல்லணும்… நான் உன் கிட்ட எதுவும் மறைத்து இருக்கேனா…

சரி சரி விடு செல்லம் என் டார்லிங் நீ விடு இனி நம்ப ரிவஞ்ச் பண்ணிக்கலாம்.

 இதன்யா, ம்ம் அவனை சும்மா விட கூடாது என்று சொல்லி போன் கட் செய்து விட்டு இவள் திரும்ப…
அங்கு சித்தார்த் இவளை பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

இப்போது சித்தார்த்….?
இதன்யா மனதில்….?

தொடரும்….

 EPI 21

பிரியாவிடம் ம்ம் ஆமா டி அவனை சும்மா விட கூடாது..அவள் போனில் பேசி கொண்டே திரும்ப அங்கே சித்தார்த் நின்று கொண்டு இருந்தான்.

அவள் கண்களில் ஒரு நிமிடம் பயம் வந்து போனது ஆனால் அதை வெளிக்காட்டாமல் உடனே அந்த இடத்தை விட்டு  நகர்ந்தாள்.

அவனை கண்டு கொள்ளாமல் அவள் செல்ல 

சித்தார்த், மிஸ் இதன்யா…

ம்ம் சொல்லுங்க சார்… என அவனை தைரியமாக திரும்பி பார்க்க, 

சித்து,இப்போ லஞ்ச் டைம்..

இதன்யா, அதுக்கு…

சித்து, சர்வ் மீ…

இதன்யா,டிஸ்கஸ்டிங்… என வாய்மொழியில் முணு முனுக்க..

இதை கேட்ட சித்தார்த்துக்கு மிகவும் கோபம் வந்தது. ஹே இப்போ என்ன சொன்ன…

இதன்யா, நான் என்ன சொன்னேன்…

சித்து இப்போது கோபமாக அவள் அருகில் வந்தவன். வெறுப்பா இருக்கோ…

இதன்யா அவன் கண்களை பார்த்து நேராக ம்ம்ம் ஆமா… வெறுப்பு என்ற அந்த ஒரு சொல் அவனை மதி இழக்க வைக்க அவளை அருகில் உள்ள தூண் மீது கொஞ்சம் நிறுத்தி அவள் அருகில் வர இப்போது இதன்யா அவன் செயலில் கொஞ்சம் தடுமாறினாள்.

“இப்போ இன்னும் அதிகமா என்னை வெறுத்துக்கோ டி “என்று அருகில் வந்தவன் மனம் இப்போது அவள் கண்களை பார்த்து சுய நினைவு வர சட்டென்று நகர்ந்து கொண்டவன்.
“இனி நான் உன்னை தேடி வர மாட்டேன் நீயா என்னை தேடி வருவ டி ,நீ ஒன்னும் எனக்கு சர்வ் பண்ண வர வேண்டாம்”…  என்று சொல்லி அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு தன் அறைக்கு வந்து விட்டான்.

மே ஐ கம் இன் சார் என கேட்டு கொண்டே உள்ளே வந்த சதீஷ் அவனிடம் ஒரு வீடியோ நீட்ட
அதை பார்த்து இன்னும் கடுப்பான சித்து ரோஷினிக்கு அழைத்தான்.

ஹலோ அண்ணா…

ஹே உனக்கு எக்ஸம் எப்போ முடியுது…
இந்த மங்த் எண்டுல தான்…
நீ அங்கேயே இருந்து கனவு கண்டா மட்டும் ரிஷி உனக்கு கிடைக்க மாட்டான் …

அண்ணா இப்போ நான் என்ன பண்ணட்டும்…

சீக்கிரம் இங்கே வா அவன் கூட பேசு உன் லவ் அவனுக்கு புரிய வை

ம்ம் சரி அண்ணா நான் சீக்கிரமே வந்து விடுவேன் என சொல்லி அவள் போன் வைக்க..

இங்கே சித்தார்த் கண்களை மூட இதன்யா ரிஷி அருகில் அமர்ந்து இருப்பது தான் அவன் மனதில் ஓடியது.
உன்னை!.. என்று நினைத்தவன் ஒன்னும் பண்ண முடியல, என்னால ஆனாலும் சும்மா விட முடியல டி என இதன்யாவுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட கால அட்டவணை படி அவள் 11,12 வகுப்புகளுக்கு போய் காலை மதியம் அது இல்லாமல் ஸ்பெசல் கிளாஸ் எல்லாம் எடுக்க மாலை ஹாஸ்டல் வரும் போது சோர்ந்து தான் வந்தாள்.

இங்கே சித்துவுக்கு இந்த NAC குழு வருவதால் காலேஜ்ல வேலை பளு மிகவும் அதிகமாக இருந்தது.
அவரவர் வேலையில் கவனம் செலுத்தினர் சித் அன்று அவளிடம் சொல்லி விட்டு போனதில் இருந்து அவள் மனம் மிகவும் வருத்த பட்டது.

இதன்யாவின் மனம் சித்தார்த்தை காரணம் இல்லாமல் தேட தொடங்கியது. 

இதன்யா மனம், நீ தப்பு பண்ணிட்ட டி அவர் உன்னை சர்வ் பண்ண கூப்பிட்டு இருக்கிறார். அன்னிக்கு உன்னை உண்மையாவே ஒரு ஹீரோ மாதிரி காப்பாற்றி இருக்கிறார்.
அது எவ்ளோ பெரிய விஷயம் அது உனக்கு நான் சொல்லி தான் தெரியனுமா பாவம் அவர் மனம் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும். 

அவள் உதடுகள் நான் எதோ கோபத்தில் சொல்லி விட்டேன் அதற்காக இந்த மூன்று நாளும் ஸ்கூல் பக்கம் வரவே இல்லையே 

மனம், அதுக்கு நீ தான் காரணம் இப்போ எனக்கு பார்க்கனும் போல இருக்கே என்று முகத்தில் வெட்கம் பரவ

ம்ம் அவர் நடிச்ச மூவி பார்க்கலாம் என்ன பார்க்க என்று யூ ட்யூப் ஓபன் செய்து ஸ்குரோல் செய்து விட்டு தேடலில் அன்று அந்த ஹோட்டலில் அந்த பணியாளர் சொன்ன படம் (a+b)2 என்று டைப் செய்ய தாரா கோவிந்த, சித்தார்த்த இருவர் படமும் முகப்பு பக்கத்தில் இருக்க ஆவலுடன் அதனை தொட அந்த படம் ஓட ஆரம்பித்தது.

அந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பு அவன் நிஜ வாழ்க்கையில் இருப்பது போன்ற யாரிடமும் பேசாமல் இருக்கும் கதாபாத்திரம் அதனால் அதில் அவன் நடிக்க வில்லை ஆனால் வாழ்ந்து  அவனுடய நிஜத்தை வெளி படுத்தி இருக்கிறான்.

இதன்யா அந்த படத்தை முழுவதும் பார்த்து முடிக்க மணி இரவு 10.30 ஆனது அதில் வந்த பாடல் நாயகி, நாயகன் காதல் காட்சிகள் என இருவரும் நன்கு நடித்து இருந்தனர்.

அதில் வரும் ஒரு காதல் பாடல் இதன்யாவுக்கு மனப்பாடம் ஆகி விட்டது கொஞ்சம் கொஞ்சமாக சித்தார்த் அவள் மனதை கொள்ளை கொள்ள ஆரம்பித்தான்.

அடுத்தநாள் மிகவும் உற்சாகமாக பள்ளி சென்றாள். பாடம் எல்லாம் சொல்லி கொடுத்தாள். இன்று மாலை மெலினா, சித்தார்த் நடித்த படம் அவளும் நானும் கன்னட டப்பிங் அதையும் அதே போல் மன நிலையில் சாதாரணமாக தான் பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த படத்தில் மெலினா, சித்து இருவரும் கணவன் மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

அதில் சித்து மெலினாவுக்கு ஒரு இதழ் முத்தம் கொடுக்கும் காட்சி அதில் இடம் பெற அன்று சித்தார்த் இதன்யாவுக்கு கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. உடனே அந்த படத்தினை அதோடு பார்க்க தொடர வில்லை.
இப்போது இதன்யாவின் மனம் பாரமாக ஆனது.

அடுத்த நாள் மனம் சோகமாகவும், சோர்வாகவும் இருக்க அவன் யாருக்கு முத்தம் கொடுத்தால் உனக்கு என்ன? என்னமோ செய்டாட்டுமே என சொல்லி தலைக்கு குளித்து தன்னை புத்துணர்வாக்க முயற்சி செய்து கொண்டே  பள்ளி வந்தாள்.

அவள் அவனை வேண்டாம் என்று நினைத்து நினைத்து ஒரு சுற்று இழைத்தது போல் ஆகி விட்டாள். இங்கு சித்தார்த் அவள் என்ன செய்து இருக்கிறாள் என்று அவள் போன் தரவுகளை செக் செய்ய அதில் அவளும் நானும் படம் இதன்யா பார்த்து இருப்பது தெரிய இப்போது சித்தார்த்தின் முகம் கொஞ்சம் இறுகியது.

 இவள் வழக்கம் போல் பாடம் எடுத்தாள் அது மட்டும் இல்லாமல் சித்தார்த்  அவனும் மெலீனாவும்  சேர்ந்து கொடுக்கும் முத்த காட்சி தான் நினைவுக்கு வந்தது  சோர்ந்து விட்டாள். இன்று மதியத்தில் இருந்தே கை கால் எல்லாம் மிகவும் வலிக்க மாலை ஆக ஆக கொஞ்சம் காய்ச்சல் வர ஆரம்பித்தது. 

இன்று காலையில் இருந்தே இதன்யாவுக்கு உடல் நலன் சரி யில்லை இங்கே அவள் பள்ளி வந்ததும் சித்தார்த் வந்து இருக்கிறான். என்று தெரியவும் மனம் அவனை பார்க்க வேண்டும் என்று மனமெல்லாம் துள்ளி குதிக்க லீனா நினைவுக்கு வந்தாள்.

“நான் இப்படி நினைக்கவே கூடாது!” என மனமெல்லாம் அவனை பார்க்க துடிக்க கட்டு படுத்தி கொண்டு வகுப்புக்கு சென்றாள். மதிய உணவு வேளை வர தொண்டையில் உணவு இறங்க மறுத்தது. இந்த ஒரு வாரமும் புது புது உணர்ச்சி குவியலில் சிக்கி தவித்தாள்.

இதை சித்தார்த் தன் அறையில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான். இப்போது ஸ்கூல் பெல் அடிக்க இன்று ஸ்பெஸல் கிளாஸ் விடுமுறை என்று சித்தார்த் அறிவிக்க இது எதுவும் தெரியாமல் ஸ்டாப் ரூமில் சோர்ந்து அமர்ந்து இருந்தாள்.

ராதா, இதன்யா மிஸ்! 

இவள் என்ன என்பது போல் திரும்பி பார்க்க இன்னிக்கி ஸ்பெசல் கிளாஸ் கேன்சல் நீங்க ஹாஸ்டல் கிளம்புங்க…
இதன்யா, ம்மம் ரொம்ப நன்றி மேடம் என சொன்னவள் ஒரு நிமிடம் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு கிளம்பலாம் என ரெஸ்ட் ரூம் சென்றாள். அவள் வெளியே வரும் போதே அவள் உடல் காய்ச்சலில் அனலாக கொதித்தது.
இவள் வெளியே வர அங்கு சித்தார்த் இவளை பார்க்க நின்று கொண்டு இருந்தான்.

இதன்யாவுக்கு அவனை பார்த்த அந்த ஒரு நிமிடம் அவ்வளவு  பிரகாசம் அவள் கண்களில் மின்னியது.

ஆனால் அது ஒரு நிமிடம் தான் பின் லீனாவுகு சித்து முத்தம் கொடுக்கும் காட்சி நினைவு வர முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு அவனை தாண்டி சென்றாள்.

சித்தார்த்துக்கு கோபம் “இத்தனை நாளாய் நம்மை பார்க்காமல் அவளுக்கு எந்த ஒரு உணர்வும் இல்லையா நம்மை கண்டு கொள்ளாமல் செல்கிறாள்!” என மனம் எல்லாம் ஒரே கோவம், கவலை அனைத்தும் ஒன்று சேர்ந்தது.

இதன்யா!… என அவன் அழகாக அவளது பெயரை அழைக்க மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தது.

தன் முக பாவனை மறைத்து எப்பொதும் போல் அதே முகத்துடன் சொல்லுங்க சார்! 

“இன்னிக்கி ஸ்பெஷல் கிளாஸ் இல்ல நீ ஹாஸ்டல் கிளம்பலாம்.”..

ம்ம் ஓகே சார்!… என உதடுகள் சொன்னாலும் மனம் அவ்ளோ தானா இன்னும் ரெண்டு வார்த்தை கூட பேச மாட்டானா என கவலை கொண்டது.

சித்து, மனம் ஹே லிட்டில் ஹார்ட் போறா டா எதுவும் செய்!

“என்ன செய்ய நான் எது செய்தாலும் அவளுக்கு பிடிக்க மாட்டிங்குதே!.. என நொந்து கொண்டு அவன் அவள் பின்னே நடக்க இப்போது  இதன்யா மனம் கேட்காமல் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டாள்.

இதன்யாவின் கண்களில் உள்ள ஏக்கதினை பார்த்தவன் அதற்கு மேல் தன்னை கட்டு படுத்த முடியாமல்  வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

இன்னும் சிறிது நேரம் அவள் அருகில் இருந்தால் கூட அவளின் மேல் மையல் கொண்டு இருப்பான்.சித்தார்தாக இருந்து இருந்தால்
அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து அவன் உதடுகள் அவள் உதட்டில் இருந்து  இருக்கும் போதே அவள் பின் தலையை அவனை நோக்கி இழுத்து முத்தமிட ஆரம்பித்து இருப்பான்.

ஆனால் இப்போது இதன்யாவின் காதலானாக  யோசித்து அவளை விட்டு சென்று விட்டான்.

சித்தார்த் சென்றதும்  இவள்  கண்களில் கண்ணீர்  தலையை பிடித்து கொண்டே நேராக தன் இடத்துக்கு சென்று உடைமைகளை எடுத்து கொண்டு கிளம்ப தயாரானாள். இவள் வெளியே வர சித்தார்த் காரில் வர சரியாக இருந்தது.

அவள் மெதுவாக நடந்து செல்ல அவள் அருகில் போய் காரை நிறுத்த அந்த தலைவலியில் சிரமப்பட்டு தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே யார் என பார்க்க சித்தார்த், காரில் ஏறு நான் ட்ராப் பண்றேன்….

இதன்யாவின் அறிவு லீனா! லீனா! என குரல் கொடுக்க அவள் “ரொம்ப நன்றி நான் நடந்தே போயிக்குவேன்”….

சித்தார்த், “உன்னை நான் ஏறு அப்டின்னு சொன்னேன் இட்ஸ் ஆடர் நாட் ரிக்வஸ்ட் ஓகே”

இப்போது அவளுக்கு கோபம் வர அவனை கண்டு கொள்ளாமல் சென்றாள்.

இப்போது கோபம் வர சித்தார்த் கீழ இறங்கி அவள் அருகில் வந்து…..?

தொடரும்…..

EPI 22

உன்னை காரில் எற சொன்னேன்..

இதன்யா மெதுவாக நடந்து கொண்டே தன் தலையை பிடித்து தேய்த்து கொண்டும் ஒரு கையில் கண்ணாடியை சரி செய்தவள் மனதில் மழைக்காலம் தான் அதற்கு காரணம் சித்து தான்!. இன்று அவனை பார்த்து விட்ட மகிழ்ச்சியில் மெதுவாக நடந்து கொண்டே சென்றாள். 

அந்த காய்ச்சலில் கூட  அவள் மனம் ரெக்க கட்டி பறக்க தான் செய்தது.

அவள்  நினைவில் புன்னகை முகமாக ஒவ்வொரு காலடிகளாக எடுத்து வைத்து சென்று கொண்டு இருந்தாள். இது சித்தார்த்துக்கு தெரிந்ததோ என்னவோ வேக வேகமாக காரை எடுக்க சொன்னவன் அவளை காண துடித்தான்.

சதீஷ் காரை எடுத்து  சாலைக்கு வர பள்ளிக்கு அருகில் அன்ன நடயிட்டு சென்று கொண்டு இருந்தாள் இதயராணி இதன்யா அவள் அருகில் வரவும் சித்தார்த் காரை நிறுத்த சொல்லி அவளை உள்ளே ஏறு,நான் உன்னை ட்ராப் பண்றேன்…

இதன்யா ரொம்பவும் நன்றி நான் நடந்தே போறேன்…

சித்து அவளை பார்த்து இட்ஸ் நாட் ரிக்வாஸ்ட் ஐம் ஆர்டரிங் யூ…

இப்போது  அவள் அவனை பார்த்து  முறைத்துவிட்டு செல்ல…

சித்து, மனதில் இவளை … என்று கூறி காரில் இருந்து வெளியே வந்து அவள் அருகில் வந்து நடந்தான்.

இதன்யா அவனை முறைத்து விட்டு இப்போ எதுக்கு என் பின்னாடி ஃபாலோ பண்றீங்க…

சித்து, நீ கொஞ்சம் ஓவரா பேசுற
இதன்யா, பிளீஸ் ஸ்கூல் காலேஜ் ல கொடுமை படுத்தரது உங்களுக்கு போதலயா இன்னும் என்னை கொடுமை படுத்தனுமா…

சித்து, போதும் உன்னோட சில்லி கொஸ்டின்கு என்னால பதில் சொல்ல முடியாது என்று அவள் கைகளை பிடிக்க அது நெருப்பாக கொதித்தது.

இதன்யா அவனிடம் இருந்து தன் கைகளை உதறி விட்டு அடுத்த அடி வைக்க இப்போது சித்தார்த் அவளை ஒரே பிடியில் இழுக்க இதன்யா சித்துவின் கை வளைவுக்குள் வந்தாள்.

அவனை விட்டு விலக போராடினாள்.
பிளீஸ் லீவ் மீ அலோன்…

“என்னாச்சு டி உனக்கு டெம்பர்ரேசர் அதிகமா இருக்கு!” என சித்து படபடத்து கொண்டே அவள் நெற்றியில் கை வைக்க கொதித்தது. கழுத்தில் தொட்டு பார்க்க அப்பொழுது கண்கள் எல்லாம் எரிய இதன்யா அவன் மேல் மயங்கி விழுந்தாள்.

சதீஷ் சித்துவின் அருகில் வேகமாக கார் கொண்டு வர,
சித்தார்த் அவளை காரின் உள்ளே மெதுவாக சாய வைத்தவன் உள்ளே சென்று அவளை தன் நெஞ்சோடு சாய்த்து கொண்டான்.

சதீஷ்,பாஸ் ஹாஸ்பிடல் போலாமா…
இல்ல நீ காரை வீட்டுக்கு விடு இப்போ குரு பிரகாஷ்க்கு கால் கனெக்ட் பண்ணு…. என சொல்லி கொண்டே அவள் கண்ணாடியை கலட்டி விட்டு தன் கை குட்டையை தண்ணீரில் நனைத்து அவள் நெற்றியில் பற்று போட்டு விட்டான்.

ஹலோ!…

என்ன எனக்கு கால் பண்ணி இருக்க?…
ஹே உன் ஹாஸ்பிடல்ல இருந்து

பெஸ்ட் டாக்டரை என் வீட்டுக்கு வர சொல்லு…
என்னாச்சு உனக்கு ஃபீவர் ஆ…
எனக்கு இல்லை எனக்கு முக்கியமான ஒருத்தருக்கு…

குரு, யாரு லீனாவா! என அவன் வேண்டும் என்றே சொல்ல

சித்தார்த், பாஸ்ட்** நான் சொன்னதை மட்டும் செய்…

குரு, ம்ம் ஐ நொ லிட்டில் ஹார்ட் ஐ ம் கரெக்ட் , என் கிட்ட தாரா சொன்னா…

சித்து , ஹே **** வை டா

குரு, சித்து ரொம்ப டென்ஷனா இருக்க போல இப்போ நீ வீட்டுக்கு போறதுக்குள் டாக்டர் இருப்பாங்க…

சதீஷ் வேகமாக அதே சமயம் நிதானமாக கார் ஓட்டினான்.
சித்தார்த்துக்கு மிகவும் படபடப்பாக இருந்தது.

இதன்யாவின்  முகத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு… அவளை அணைத்து இதழில் முத்தமிட்டான்.

அவன் மனதில், முன்ன என்னை பார்த்தாலே பயத்தில் நெளிவ இப்போ கொஞ்சம் கூட என் மேல் உனக்கு பயமே இல்ல டி…ஒரே ஒரு கிஸ் தான் கொடுத்தேன் அதுக்குள் திமிரு முன்பை விட அதிகம் ஆகி போச்சு மேடம்க்கு என்று அவள் மூக்கோடு மூக்கு உரசினான்.

அதற்குள் அவளிடம் அசைவு தெரிய அவளை அருகில் தன் நெஞ்சோடு சாய்த்து வைத்து கொண்டான்.

இப்போது மெதுவாக கண்களை திறந்த இதன்யா தான் எங்கு இருக்கிறோம் என்று பார்த்து விட்டு நிமிர்ந்து பார்க்க

சித்து அவளிடம் ஆர்  யூ ஒகே… அவனை பார்த்த அடுத்த நொடி அவள் அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து கொண்டு என்னை இறக்கி விடுங்க எங்கே கூட்டி போறீங்க என பேச

சித்தார்த், இவளோ ஃபீவர்ல உன்னை என்னால தனியா விட முடியாது டாக்டர் கிட்ட கூட்டி போய் செக் பண்ணிட்டு நீ ஹாஸ்டல் போ…

இல்ல ஹாஸ்பிடல் வேண்டாம் ஒரு பாரா***,ஒரு சிட்***, ஒரு ஆம்ப்ர** சப்பிடாலே சரியா போயிடும் பிளீஸ் என்னை விடுங்க நான் போனும்….

ம்ம் உன் கெமிஸ்ட்ரி மூளையை இங்கே என் கிட்ட காட்ட வேண்டாம்…

சார் இப்போ விட போறீங்களா? இல்லையா? என ஒரு குட்டி கலவரமே செய்ய

இதன்யாவை அருகில் இழுத்தவன்.”நீ இப்படியே கத்திட்டு இருந்த அப்புறம்  உன்னை இழுத்து வைத்து அவள் உதடுகளை வருடி கொண்டே,கிஸ் பண்ணிடுவேன்”… என்று சொல்லி இப்போ கத்துவியா என்று சித்து கேட்க அவள் அவனை பார்க்காமல் தள்ளி அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

சித்தார்த் இப்போது ஒரு சிறு புன்னகை சிந்த அதற்குள் சதீஷ் சித்தார்த்தின் வீட்டுக்கு வந்து விட்டான். அவன் வீட்டில் நுழைந்ததும் இதன்யா அந்த பிரம்மாண்டமான வீட்டை பார்த்து விட்டு “இது ஹாஸ்பிடல் மாதிரி தெரியல இது எந்த இடம் எதுக்கு இங்கே கூட்டி வந்தீங்க?”

சித் அவளை பார்த்தான். 

என்னை இப்படியே விடுங்கள் நான் ஹாஸ்டல் போகனும் என்று மீண்டும் அவள் பேசிக் கொண்டே போக சித்தார்த் அவள் நெற்றியில் தொட்டு பார்க்க இன்னும் வெப்ப நிலை அதிகமானது.

இதன்யா அவன் கைகளை தட்டி விட்டு இறங்க செல்ல சித்து அவளின் இடையோடு  தன் புறம் இழுக்க அவள் அவனை தள்ளி விட

சதீஷ்,பாஸ் டாக்டர் வந்துட்டாங்க…

சித்து, நீ அவங்கள உள்ளே கூட்டிட்டு போ நான் வரேன்..

ஓகே பாஸ் என சதீஷ் வெளியே செல்ல

அடுத்த நிமிடம் இதன்யாவின் பக்கம் திரும்பியவன் ஒரே இழுப்பில் அவள் அவன் மடியில் வந்து விட்டாள்.

அவளின் தலயை அவனை நோக்கி இழுத்த வேகத்தில் அவள் இதழில் ஆழ்ந்து முத்தமிட்டான். இதன்யா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேல் உதடு கீழ் உதடு என உள்ளே அவளின் சூடான நாக்கு அவனின் குளுமையில் துவன்டு போனது ஏற்கனவே சக்தி இல்லாமல் இருந்தவளுக்கு இன்னும் உடலில் சக்தி இல்லாமல் போனது.

அவளின் கழுத்து பகுதியில் சிறிது நேரம் மையல் கொண்டவன். இப்போது அவள் காது மடலில் கடித்து விட அவள் கூச்சத்தில் நெளிந்தாள். “நான் எது சொன்னாலும் செய்து காட்டுவேன்! அப்டின்னு உனக்கு  தெரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்!  இப்போ ப்ரேவ் கேர்லா நல்ல பிள்ளையா நான் சொல்வது கேட்பியா?”

இப்போது அவன் செய்கையில் முகம் சிவந்தவள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டே ,

ம்ம் கொட்டினாள்…

சித் அவனால் கலந்த உடையை சரி செய்ய இவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

சித்,ம்ம் நல்ல பொண்ணு வா போகலாம்! என கதவை திறக்க முதலில் சித்தார்த் இறங்க பின் அவள் பயந்து கொண்டே இறங்கினாள்.

நீ பயப்படுற அளவுக்கு இங்கே ஒயில்ட்  அனிமல் எல்லாம் இல்லை யாரும் உன்னை முழுங்க மாட்டாங்க இது என்னோட வீடு தான்..
சோ உன்னோட இந்த லுக் சேன்ஞ் பண்ணு..

இதன்யா இப்போது பிரமிப்பாக அந்த இடத்தை பார்த்து கொண்டே எதுவும் பேசாமல் உள்ளே வர அவன் திருப்தி பட்டு கொண்டான்.

ஷீலா, மற்றும் மாதவி என இருவர் உள்ளே காத்திருக்க சித்து உள்ளே வந்தவன்.

மதிம்மா. …..

சித்து தம்பி என சொல்லி கொண்டே ஒரு 50வயது மதிககத்தக்க ஒரு பெண் மணி வர

சித்து, இந்த பொண்ணை கெஸ்ட் ரூம் கூட்டி போங்க…

சரி தம்பி என்று சொல்லி கொண்டே சிரித்த முகத்தோடு அந்த பெண்மணி இதன்யாவை பார்க்க அவளோ அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை.

சித்தார்த் கோப பார்வை கொண்டு முறைத்து பார்க்க உடனே அவள் மெதுவாக மதி அம்மாவின் பின்னால் சென்றாள்.

சாரி ஃபார் த டிலே மேடம்…
இட்ஸ் ஓகே சார்… யாரு பேசன்ட்டு..
இதோ இப்போ போனாங்களே அவங்க தான் என கெஸ்ட் ரூம் பக்கம் அவன் அவர்களை அழைத்து செல்ல

மதி, சித்து தம்பி என சத்தமாக குரல் கொடுக்க…

சித்தார்த் பயந்து ஓடினான். என்னாச்சு மதிமா  என்று செல்ல இதன்யா அந்த அம்மாவின் மேல் மயங்கி இருந்தாள்.

சித்தார்த் அருகில் சென்று அவளை பூ போல் தூக்கி கொண்டவன் படுக்கையில் அவளை படுக்க வைத்தான். அதற்குள் ஷீலா, மாதவி இருவரும் வந்தனர்.

ஷீலா, சார் நீங்க வெளியில் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…

சித்து, ம்மம் ஓகே
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஷீலா, மாதவி இருவரும் சித்தார்த்தை பார்க்க,

டாக்டர் அவளுக்கு என்னாச்சு? 

சார் அவங்க கிட்ட தட்ட ஒரு மூனு நாளாக சரியா சாப்பாடு எடுத்துக்கல… சரியா தூங்கல…

மாதவி, அவங்க தினமும் தலைக்கு குளிச்சு நீர் கோர்த்து இருக்கு அதனால் ஃபீவர் வந்து இருக்கு… இப்போ அனிமிக் ஆ இருக்காங்க அதனால் கொஞ்சம் நல்லா சாப்பிட சொல்லுங்க… இப்போ மயக்கம் தெளிய கொஞ்சம் நேரம் ஆகும்..

ஃபீவர் குறைய இன்ஜெக்சன் போட்டு இருக்கோம்… குளுகோஸ் போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் அது உங்க விருப்பம் தான் என மாதவி சொல்ல உடனே அது எல்லாம் வேண்டாம் என்று கூறி அவள் அருகே போய் அமர்ந்து கொண்டான்.

அவன் முகத்தில் உள்ள கவலையை பார்த்து விட்டு ஷீலா , சார் ஒன்னும் பிரச்சனை இல்லை ஃபீல் பண்ண வேண்டாம்… அப்புறம் இப்படி இறுக்கி கொண்டை போட்டால் இதுவே கொஞ்சம் தலைக்கு பாரமா இருக்கும் அதுவும் அவன்களுக்கு முடி அதிகமா இருக்கறதால் ரொம்ப கழுத்து எல்லாம் வலிக்கும். இப்போ அவங்களுக்கு நிறைய ரெஸ்ட், நல்ல உணவு, தூக்கம் இது போதும்

ம்ம் ஓகே டாக்டர் ரொம்ப தேங்க்ஸ் …
சரி என்று சொல்லி மாதவி அவளுக்கு சத்து மாத்திரை, காய்ச்சல் மாத்திரை சில சத்து டானிக் எழுதி கொடுத்து விட்டு கிலம்பினர்.

ஒன் மிநிட்  சதீஷ்… என அழைக்க

சார் என அவன் வந்து அவர்களுக்கு பணம் கொடுக்க…டேக் இட்… என சித்து பணம் கொடுக்க..

சார் வேண்டாம் …. குரு சார் எங்களை வேலை விட்டே தூக்கி விடுவார் என அவனிடம் கெஞ்சி வேண்டாம் என சொல்ல நீங்க என்னோட காம்பிளிமெண்ட்டா வாங்கி தான் ஆக வேண்டும். என்று சொல்ல அவர்கள் வேறு வழி இல்லாமல் வாங்கி சென்றனர்.

சித்தார்த் அவளை அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த இதன்யாவுக்கு சித்தார்த் முகம் ஒரு சில நொடிகள் அவனை பார்த்து ரசித்த

அவள் …..??

தொடரும்…..

EPI 23

டாக்டர் இதன்யாவை செக் செய்து விட்டு போனதும் சித்தார்த் தன் உடையை கூட மாற்றாமல் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். 

மதி, சித்து தம்பி நீங்க போய் ஃப்ரெஷ் ஆகி விட்டு வாங்க நான் பாப்பா கூட இருக்கேன்,போங்க தம்பி என அவள் சொல்ல…

சித்து சரி என்று அவன் அறைக்கு சென்றான்.போகும்போது அவள் பேக் ல இருந்து இதன்யாவின் கைபேசியை எடுத்துக் கொண்டு சென்றான்.

மேலே அறைக்கு சென்ற  சித்தார்த்  கைரேகையை வைக்க அது உடனே ஓபன் ஆனது. ஆம் அவனுடய ரேகையயும் பதிவு செய்து வைத்து இருந்தான்.

உள்ளே சென்று நெட் ஆன் செய்து வலை தளத்தில் சமீபமாக தேடுதல் பட்டியல் பார்க்க அதில் இருந்த தரவுகள்  சித்துவின் உதடுகள் புன்னகையில் வளைந்தது.

எல்லாம் சித்தார்த் தான் இருந்தான். அவனுடய புகை படங்கள் சில சேவ் செய்து இருந்தாள்.

அந்த (a+b)2 படத்தில் வரும் ஒரு பாடலை டவுன்லோட் செய்து இருந்தாள். சித் மனதில் ம்ம் இந்த சாங் உனக்கு அவ்ளோ பிடிச்சு இருக்கா… என கூறி கொண்டே ஸ்குரோல் செய்து பார்க்க

சித்தார்த் – மெலினா பற்றிய செய்தி அந்த நெருக்கமான புகை படம் இருக்க அதை பார்த்து விட்டு ஓ இதனால தான் மேடம் என்னை பார்த்ததும் அவ்ளோ கோபமா!,சரியான ரௌடி டி நீ!…  என சொல்லி தலையை கோதி கொண்டே பெரு மூச்சு விட்டான். 

சீக்கிரம் இதை உனக்கு புரிய வைக்கணும் சரி செய்யனும் என்று அந்த படத்தை பார்த்து அவனுக்கே கோபம் வந்தது. போனை அருகில் வைத்து விட்டு டவல் எடுத்து கொண்டு வேகமாக குளித்து விட்டு எப்பொதும் வீட்டில் சாதாரண உடை அணிந்து கொண்டு அவள் போன் எடுத்து கொண்டு கீழ வந்தான். 

 அவன் நேராக கெஸ்ட் ரூம் சென்றான்.  அங்கே மதி அமர்ந்து இருக்க ” ம்ம் மதிம்மா ஃபீவர்க்கு என்ன சாப்பிட கொடுக்கனுமோ அதை ரெடி பண்ணுங்க”

ம்ம் சரி தம்பி என்று இரண்டு அடி வைத்தாள் அதன் பின் உடனே தம்பி! 

“ம்ம் மதி மா”

“அந்த பாப்பா இன்னிக்கு இங்கே தங்குமா? இல்லை கிளம்பி விடுமா?”…

ஏன் என்று கேள்வியாக சித்து பார்க்க…

இல்லை புடவை கட்டி இருக்கு கொஞ்சம் ட்ரெஸ் மாற்றி ரெஸ்ட் எடுக்க  கொஞ்சம் நல்லா இருக்கும் தானே….

சித்தார்த் மனதில் “இன்னிக்கி உன்னை இங்கேயே தங்க வச்சா கூட நல்லா இருக்குமே!” என நினைத்தவன்

“தேங்க்ஸ் மதி ம்மா!  நான் அவளுக்கு ட்ரெஸ் எடுத்து வர சொல்றேன்”…

இதுக்கு எதுக்கு எனக்கு நன்றி? ….

“இல்ல மதி மா எனக்கு இது தோனவே இல்லையே!  சரி அவளுக்கு சாப்பாடு ரெடி பண்ணுங்க.” என சொல்லி விட்டு சதீஷ்க்கு கால் செய்தான்.

சொல்லுங்க பாஸ்!…. சித்து  எல்லாம் சொல்லி முடிக்க
ஒகே பாஸ்! என்று அவன் இதன்யாவுக்கு இரவு தூங்க இலகுவான உடையை வாங்க சென்றான்.

இங்கே சித்தார்த் அவள் படுக்கையின் மேல்  அமர்ந்து அவள் முகத்தை தொட்டு பார்த்தான்.

சரியான வசியகாரி டி நீ!…. இன்னிக்கு லிட்டில் ஹார்ட் வாடின  பூ மாதிரி ஆகிட்டயே டி! வறுத்தம் கொண்டு பார்த்து பின் அவளையே சிறிது நேரம் ரசித்தான். 

அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து எப்போதும் போல் மூக்கோடு மூக்கு இரு புறமும் உரசி விட்டு காய்ச்சலில் வறண்டு போன அவளின் இதழ்களுக்கு தன் இதழ் கொண்டு ஒரு சிறிது நேரம் ஈர படுத்தினான்.

ம்ம் இப்போ ஒகே என்று அருகில் சேர் எடுத்து போட்டு அமர்ந்தவன் தன் லேப் டாப், சில பைல்கள், போன் என அனைத்து எடுத்து வந்து அவள் அருகில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து கண் விளித்தவள். நாம் எங்கு இருக்கிறோம்?  என்று சுற்றி ஒரு முறை பார்த்து விட அவள் கண்கள் சித்தார்த் மேல் வந்து நின்றது.

ஒரு சில நொடிகள் அவன் அமர்ந்து கொண்டு வேலை செய்யும் தோரணையை ரசித்தவள் இப்போது வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

சித்து சத்தம் வர திரும்பி பார்க்க அவள் படுக்கையில் இருந்து கீழே இறங்க போக,

ஹே எதுக்கு இப்போ இறங்கற?

“நான் ஹாஸ்டல் போனும், டைம் என்ன?என்னோட கண்ணாடி எங்கே? … என்னோட பேக்! அப்புறம் போன்!” என்று தேட  அருகில் உள்ள பேக் எடுத்து கொண்டு அதில் இருந்த கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டாள்.

அந்த காய்ச்சல் குறைந்து இருப்பதற்கு அடையாளமாக உடல் வியர்த்து கொட்டியது. “சரி நான் கிளம்புறேன் சார்!  ரொம்ப தேங்க்ஸ், உங்க கான்சர்ன்க்கு..” என்று சொல்லி இவள் கதவுக்கு அருகே செல்ல

சித்தார்த் அவனுடய வேலையில் கவணம் செலுத்தி கொண்டே உன்னை நான் போக சொல்லவே இல்லையே! என சொல்லி கொண்டு NAC தொடர்பான மெயில் செக் செய்து கொண்டு இருந்தான்.

இதன்யா, இது வெளி இடம்..  அண்ட்  ஸ்கூலும் இல்லை, காலேஜ்யும் இல்லை சோ என்னை நீங்க ரூல் பண்ண உங்களுக்கு ரைட்ஸ் இல்ல…

சித்து, குட் டைலாக் நான் படம் இனி நடிச்சா இத அட் பண்ணிக்கிறேன்…

இதன்யா, நீங்க என்னமோ பண்ணுங்க நான் கிளம்புறேன்…

சித்து,”ஒரு நிமிடம்”

என்ன என்பது போல் அவள் திரும்பி பார்க்க,

“நீ திரும்ப இங்கே இந்த ரூம்க்கு தான் வருவ வரும்போது எனக்கு தேர்ஸ்ட்டி யா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்து வா! என கூறியவன்,  மறுபடியும் ஒரு நிமிடம்! ஹாட் வாட்டர் வேணாம், ஜில் வாட்டர் எடுத்து வா!” என சித்தார்த் கூறினான்.

அவள் அவனை போடா ஸ்கவுன்ட்ரல்…. என்று மனதில் சொல்லிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றவள்.

சிறிது நேரத்தில் கோபமான முகத்துடன் கிளம்பி வந்தாள்.

இதன்யா கோபமாக அவன் முன் ஒரு கிளாஸ் குளிர்ந்த தண்ணீரை எடுத்து அவன் மேஜையில் வைத்து விட்டு சித்துவை பார்த்தாள்.

சித்து,இப்போது மயக்கும் புன்னகையை சிந்தி என்ன மேடம் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க…! என்று அந்த தண்ணீரை வாங்கி ஒரு சிப் குடித்தவன்,

ப்பா… இவ்ளோ ஹாட்டா இருக்கே! 

மிஸ்டர்…. என்று இதன்யா இடையின் மேல் கை வைத்து தன் கண்ணாடியை தள்ளி கொண்டு  அவனை பார்த்தாள். 


இதன்யாவின் இந்த தோரணையில் ஒரு நிமிடம் மயங்கியவன் பின் தன்னிலைக்கு வந்து “மம்ம் சொல்லுங்க டீச்சர்!”


என்னை வெளியே விட சொல்லி உங்க கார்ட்ஸ் கிட்ட சொல்லுங்க பிளீஸ்! 


சித்து அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு முறை நோட்டமிட அவள் அவன் பார்வையைப் அவள் இடையை பார்ப்பது தெரிய அவனை முறைத்து கொண்டே சரி செய்து ஒரு முறை நெளிந்தாள்.

சித் மனதில் அந்த குட்டி ஹிப்ல பெருசா ஒன்னும் இல்ல இதுக்கு எவ்ளோ சீன் போடுறா…

ஹலோ என்ன விட முடியுமா! அதை மட்டும் சொல்லுங்க…

ம்ம் முடியாது…

என்னை டென்ஷன் பண்ணாதீங்க அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.. என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே அவள் கைபேசி சிணுங்கியது.

அந்த கைபேசியில் ஒலித்த பாடலை கேட்டவனுக்கு இதழ்கள் விறிய அவளை பார்க்க அவளோ போச்சு! போச்சு! இவன் முன்னாடி போன் ரிங் ஆகுதே! என அவனை பார்க்காமல் போன் ஏற்று கொண்டு காதில் வைக்க அவள் அம்மா தான் பேசினார்…

என்ன பண்ற? 

இதன்யா, என்ன இந்நேரம் கால் பண்ணி இருக்க என்னாச்சு? 

சும்மா தான் டி! எப்படி இருக்க? 

இதன்யா, அது ஒன்னும் இல்ல எனக்கு கொஞ்சம் தலைவலி அது தான்…
 

தெய்வா, இதுக்கு தான் நான் இங்கே பக்கத்திலேயே சேர சொன்னேன் நீ கேட்டால் தானே இப்போ பாரு உன்னை என்னால ஒரு மாசம் கூட பிரிந்து இருக்க முடியல டா ..

 அவள் “அம்மா இந்த ஒரு வருஷம் தான் கண்ணை மூடி திறக்கரதுக்குள்ள ஓடி விடும் அப்புறம் என்ன? நான் உங்க பக்கதில் வந்துடுவேன்… என இவள் சொல்ல

சித் மனதில்  “என்ன? இன்னும் 11மாசம் தான் இங்கே இருப்பாளா! சித் அவளை உன் கூட வர வைக்க இதுவே அதிகம் டா”


இதன்யா போனில் அம்மா நந்து என்ன பண்றான்…

 தெய்வா, ம்ம் அவன் அபிதாபிக்கு எதோ வேலைக்கு அப்லை பண்ணி இருக்கான்.. அது மட்டும் கிடைத்தால் நம்ப எல்லா கஷ்டமும் போயிடும் இப்போ அதே கம்பெனில எந்த பிரச்சனையும் இல்லாமல் போயிட்டு இருக்கான்.அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் …

ம்ம் சொல்லுங்க மா…

ஒரு பொன்னு வந்து இருக்கு … இதை கேட்டதும் இதன்யா சித்துவை பார்க்க அவன் வேலையில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தான்.

ம்ம் நீ போட்டோ அனுப்பு மா நான் பிடிச்சு இருந்தா உடனே சொல்றேன்…

இதை கேட்டு சித்து அவளை பார்க்க அவள் ஓர கண்ணால் கண்டும் காணாமல் பேசி கொண்டு இருந்தாள்.
நந்து வேண்டாம் அப்டின்னு சொல்றான் நல்ல வரன் எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சுப் போச்சு..


ஓ அப்படியா அவங்க எங்க இருக்காங்க,
நான் படிக்கிற இடத்துக்கு பக்கத்திலயா! 


ம்ம் ஆமா டி…

ஜாதக பொருத்தம் எப்படி இருக்கு  என இதன்யா அமர்ந்து கொண்டு கேட்க.. 

இதை கேட்டு அதற்கு மேல் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடிய வில்லை….

என்ன பத்து பொருத்தமும் பக்காவா இருக்கா !ம்ம் சூப்பர் நீ உடனே போட்டோ அனுப்ப சொல்லு நான் பார்த்து விட்டு சொல்றேன் இதோ இந்த சனி, ஞாயிற்றுக்கிழமை  வரேன் அப்போவே நிச்சயம் பண்ணிடலாம் …

என்ன டி இப்படி சொல்ற என தெய்வா கேட்க 

ம்ம் ஆமா மா நிது காப்பு , டெலிவரி எல்லாம் இருக்கே அதனால முதலில் நிச்சயம் பண்ணிடலாம்.மா அவங்க num இருக்கா கொடு நான் இப்போவே பேசுறேன் என சொல்ல

சித்தார்த் அருகில் இருந்த தண்ணீர் எடுத்து ஒரே மூச்சில் குடித்தவன் அவளை பார்க்க…

ம்ம் சரி மா நாளைக்கு ஸ்கூல் இருக்கு நான் வைக்கிறேன்…

ம்ம் சரி உடம்பை பார்த்துக்கோ டி .. காலையில் ஸ்கூல்க்கு போறதுக்கு முன்னாடி போன் பண்ணு …

ம்ம் சரி மா..

 தெய்வா, ஹே இதன்யா நான் வேணும்னா மாமாவை அனுப்பி கூட்டி வர சொல்லட்டா…

மா நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல…

சரி வைக்காட்டா…

ம்ம் இப்போ உடனே போட்டோ அனுப்பு…

ம்ம் நான் நந்தனை அனுப்ப சொல்றேன் என சொல்லி இதன்யாவின் அம்மா தெய்வா போனை வைக்க…

உடனே இவள் வேக வேகமாய் வாட்ஸ் அப் சென்று கொண்டே சார் பிளீஸ் நான் கிளம்பனும்… என்று சொல்லி கொண்டே அவனை பார்ப்பதற்குள்

சித்து அதை விட  வேகமாக எழுந்தவன் அவள் அருகில் வந்து போன் பிடுங்கி அவனுடய ரேகை வைத்து உள்ளே சென்றான். 

சார் என்ன பண்றீங்க?  என்ன உங்க பிங்கர் பிரிண்ட் மேட்ச் ஆகுது!… முதலில் என்னோட போனை கொடுங்க… என சித்துவிடம் இருந்து போன் பிடுங்க இவள் போராடினாள். 

“ஹே இதன்யா ஒழுங்கா விடு டி!”

“டியா!” .. என்று இருவரும் மாறி மாறி அதை பிடுங்க முயற்சி செய்ய

இப்போது சித்து , இதன்யா இருவரும் படுக்கையில் விழுந்தனர். அவள் விழுந்ததும் அவளுடைய கொண்டை அவிழ்ந்து கூந்தல் ஒரு நீர் வீழ்ச்சி போல இருந்தது. போனை பிடுங்குவதில் கண்ணாக இருந்த இருவரும் படுக்கையில் விழுந்தது பெரிதாக யோசிக்க வில்லை…

“சார் என்னோட பெர்சனல்ல தேவை இல்லாமல் தலையிட வேண்டாம்! பிளீஸ் போன் கொடுங்க.” என்று இவள் பிடுங்க

அவளின் இடையில் உள்ள மடிப்புகள் எல்லாம் கலைந்தது.

“ஹான் உன்னோட பெர்சனல்” என்று பற்களை கடித்து கொண்டே கூறியவன்.

ஆமா!

“ஹே ரொம்ப என்னை டென்ஷன் பண்ணாத டி!” என்று கைகளை உயர்த்தி வாட்ஸ் அப்பில் வந்து இருந்த படத்தை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அது! 

அது!.

அது ஒரு பெண்ணின் புகை படம்! 

சித் அவளை பார்த்து என்ன இது? அப்போ நீ! நீ நிஜமாவே லெஸ்பியன் தானா…

ச்சீ… என்று காதுகளை அவள் பொத்தி கொள்ள கண்கள் இரண்டும் மூடி கொண்டாள்.

இப்போது தான் சித்தார்த் அவள் மேல் இருப்பதை உணர அவன் சட்டென்று அவளை விட்டு எழுந்து கொண்டான்.
அவள் உடனே கண்களை திறந்து பார்க்க அவள் புடவை எல்லாம் கலைந்து இருந்த கோலத்தை பார்த்து உடனே அவள் எழுந்து வேக வேகமாக சரி செய்ய அவனுக்கு முதுகு காட்டி திரும்பி கொள்ள சித்து உடனே வேறு புறம் திரும்பினான்.

பின் என்ன நினைத்தானோ உடனே அவளை திரும்பி பார்க்க…..???

தொடரும்…

 EPI 24

சித்தார்த் தன்னிலை அறிந்து வேகமாக அவள் மேல் இருந்து எழுந்து மறு புறம் திரும்பி கொண்டான். 

இதன்யா  திடுக்கிட்டு எழுந்து அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவள் தன் புடவையை சரி செய்து கொண்டு இருக்க சித்தார்த் அவனும் பின் புறம் திரும்பி கொண்டான்.

அச்சோ!  இவன் முன் இப்படி நடந்து விட்டதே! என  வெட்க முகம் கொண்டு முகம் சிவந்து சரி செய்து கொண்டு இருந்தாள். 

 சித் பின் என்ன நினைத்தானோ உடனே அவள் புறம் திரும்ப அவளது இடை அழகாக கொஞ்சம் மட்டும் தெரிய பின்னழகில் பாதியை கூந்தல் மறைத்து கொண்டு இன்னும் கொஞ்சம் கூந்தல் முன்னே பறக்க அதை ஒதுக்க சிரமபட்டு இதன்யா உடையை சரி செய்து கொண்டு  இருந்தாள். 

சித்தார்த்துக்கு தொண்டையில் குறு குறுக்க அவள் அருகில் வந்தவன் அவள் கூந்தலை கழுத்துக்கு ஒரு பக்கம் ஒதுக்க அவள் என்ன என்பது போல்   கழுத்தை வளைத்து  திருப்பி பார்க்க,

அந்த ஒரு பார்வை! ஒரே பார்வையில் சித்து தடுமாறி அவளை தன்னை பார்ப்பது போல் திருப்பி வேகமாக அவள் கண்ணாடியை கலட்டி படுக்கையில் தூக்கி போட்டவன்.

உடனே இதன்யா அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய சித்து, மனதில் ஐ கான்ட் லிவ் வித்அவுட் யூ டி!!… யூ ஆர் மைன்… என அவள் உதடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். 

இதன்யா எதிர் வினை ஆற்றும்  முன் அவன் வினை ஆற்ற தொடங்கி இருந்தான்.முதல் முறையாக அளவான அந்த இடையினை அவன் இரும்பு கரம் வீணை போல் மீட்ட துடிக் தடவ அவன் கைகளை இடையில் தொட்டு மீட்டிட அவள் அவன் மேல் வீணையாக விழுந்தாள்.  அவள் விலக விலக இவன் அவளை வேகம் கொண்டு முத்தமிட்டான். அவன் கையில் அந்த இடை படாத அவஸ்தை பட்டு கொண்டு இருந்தது. 

ஒரு கட்டத்தில் அவனின் தொடுதலில்  அவள் தன்னிலை மறந்து
அவன் நெஞ்சில் புதைத்து கொள்ள துடிக்க அவளின் பின் தலையை மீண்டும் அவனை நோக்கி சாய்த்து முத்தமிட்டான்.

அவள் கைகளை தன் கழுத்தில் தூக்கி போட்டு கொண்டான். அவளும்  அவனோடு கரைய ஆரம்பிக்கும் நேரம். 

இதன்யாவின் போன் ஒலிக்க சித்தார்த் அவளை விட்டு உடனே வெளியே சென்று விட்டான்.

வெளியே வந்த சித்தார்த்துக்கு ஒரு நிமிடம் துள்ளலாக இருந்தாலும் போச்சே!  ஏற்கனவே நம்ம கிட்ட வர மாட்டா! இப்போ வேற ஓவர் அட்வான்டேஜ் எடுத்து வைத்து விட்டேனே!… என மனம் சொல்ல

ம்ம் அவளை பார்த்தாலே ஐ கான்ட் கன்ட்ரோல்…. என்று அவன் அறிவு சொன்னது.

மனம், நீ லிட்டில் ஹார்ட ரொம்ப சாதாரணமா நினைத்து விட்டாய் நீ அவ்ளோ தான்…

அறிவு, நான் அவளை ரொம்ப மென்மையாக நடத்த வேண்டும் அப்டின்னு நினைத்தேன்.

மனம், டேய் பாவி உன் எண்ணம் எல்லாமே தப்பு  அவளிடம் மென்மையாக பேச வேண்டும் அதை விட்டு உன்னோட சில்லி பிஹேவியர் ல இனி அவ உன்னை வேற மாதிரி நினைத்து இருப்பா…

அறிவு, அப்படி ஒன்னு நடக்கவே கூடாது.. அதுக்கு எதாவது செய்யணும் என்று நினைத்தவன். அந்த அறைக்கு செல்ல அது சாத்தப்பட்டு இருந்தது.

இதன்யா…

கதவை திற….

பிளீஸ் நான் இனி இப்படி ஐ கெனாட் டூ எனிமோர் நடந்துக்க மாட்டேன்….

கதவை திற

ஓபன் தி டோர்….

எந்த பதிலும் இல்லாமல் இருக்க இப்போது பயம் கொண்ட சித்தார்த் வேகமாக கதவை தட்டி விட்டு கதவை உடைக்கவே சென்று விட்டான்.

அந்த சத்தம் கேட்டு அங்கு இருந்த பணியாளர்கள் அனைவரும் வர

ஒரு பணியாள்,சார் இந்த ரூம் சாவி இருக்கு நான் எடுத்து வருகிறேன் என ஓட

இப்போது கதவு திறந்தது… இவள் முகத்தை துடைத்து கொண்டே வெளியே வர அவளை பார்த்ததும் வேகமாக வந்து அணைத்து கொண்டான்.

சித்து வேகமாக அவளை அணைத்து கொள்ள அவன் இரும்பு பிடியில் இருந்து விலக அவள் சிரமப்பட்டு அவனை வேகமாக  கோபமாக அவனை தள்ளி விட்டாள்.

இதன்யா சுற்றி ஒரு முறை பார்க்க அங்கு அனைத்து பணியாளர்களும் நின்று கொண்டு இருந்தனர்.

சித்தார்த் அவள் பார்வையை புரிந்து கொண்டு திரும்பி ஒரு பார்வை பார்க்க

சித்தார்த்தின் கொடூர பார்வையில் அனைவரும் பயந்து கொண்டே நடுங்கி கொண்டு சில நொடிகளில் வேக வேகமாக அவரவர் வேலையை பார்க்க கிளம்பினர். அவர்கள் முக மாறுதலை கண்டு இதன்யா சித்தார்த்தை திரும்பி பார்க்க அவன் பணியாளர்களை பார்த்த பார்வையின் வீரியம் அவளுக்கு ஒரு நிமிடம்  பயத்தை ஏற்படுத்தியது.

ஒரு நிமிடம் இதன்யாவே பயந்து போனாள். பின் தன்னிலைக்கு வர

சித்து,ஹே எதுக்கு டோர் லாக் பண்ண?  அவனின் பார்வை அவ்வளவு மென்மையாக இருந்தது. இப்போது சிறிது நேரத்திற்கு முன் அனைவரும் பயந்து போய் சென்றது அந்த பார்வை இந்த கண்களில் இருந்து தான் வந்ததா என ஒரு நிமிடம் நினைத்தாள்.

“நான் ரெஸ்ட் ரூம் போனேன் அதனால லாக் பண்ணேன், நீங்க எதுக்கு இப்போ சும்மா என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகரீங்க!ரொம்ப ரொம்ப ஓவரா பண்றீங்க.எதுக்கு இப்போ தெரிஞ்சு இப்படி பண்றீங்க, உங்க இன்டென்ஷன் சரி இல்லை!”

இதை கேட்டு சித்தார்த், இந்த தடவை நான் தெரியாம பண்ணிட்டேன் டி இன்டன்சனா பண்ணல பிளீஸ் பிலீவ் மீ… என்று கண்களில் கடுமை இல்லாமல் மென்மையாக அவன் கூறினான். 

இதன்யா மனதில், ஹே இவன் ஒரு ஆக்டர் நல்லா உன் கிட்ட நடிக்கிறான் நீ ஏமார்ந்து விடாதே டி… ம்ம் மாட்டேன்…

சரி ஒகே இப்போ இன்னும் ஒன் ஹார் தான் இருக்கு ஹாஸ்டல் டோர் க்ளோஸ் பண்ணிடுவாங்க.. சோ என்னை கொண்டு விடுங்க… அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மதி சிகப்பு அரிசி கஞ்சி பால்,  ப்ரௌன் பிரெட் என அனைத்தும் எடுத்து கொண்டு சித்து தம்பி என சொல்லி கொண்டே உள்ளே வந்தாள்.

அவள் உள்ளே வந்து வைக்க அதை அவள் ஒரு பார்வை பார்த்து விட்டு இதன்யா,சரி கார்ட்ஸ் கிட்ட வந்து சொல்லுங்க…

இப்போது சதீஷ், பாஸ் மேடம்க்கு ட்ரெஸ் ரெடி என ஒரு நான்கு வகை ட்ரெஸ் பெண்களுக்கு பிடித்த வகையில் வாங்கி வந்து இருந்தான். அதை ஒரு பணியாள் எடுத்து வந்து முன்னே வைக்க,

இப்போது இதன்யா எரிக்கும் பார்வையில் சித்தார்த்தை பார்க்க,

அவன் அவளை கண்டு கொள்ளாமல் மதிம்மா அதை டீபாயில் வைத்து விட்டு போங்க…

ம்ம் சரி என்று வைத்து விட்டு சென்றார்.
சித்து சதீஷ பார்க்க, அவன் பார்வையை புரிந்து கொண்டு ஒகே பாஸ் என அவன் கிளம்பி விட்டான்.

சித்து இதன்யாவை பார்த்து” இன்னிக்கி ஒரு நாள் இங்கேயே ஸ்டே பண்ணிக்கோ.. ஃபீவர் இப்போ தான் குறைந்து இருக்கு இந்த ட்ரெஸ்ல எது உனக்கு பிடிச்சு இருக்கோ அதை வியர் பண்ணிக்கோ…இப்போ போய் சேஞ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்.” என மெதுவாக பொறுமையுடன் ஆளுமையாக கூறினான். 

அவள் அப்படியே நின்றாள். 

கம் ஃபாஸ்ட்…

அவள் சித்துவை பார்த்து சிரித்து கொண்டே “என்ன எதுவும் புதுசா என்னை பழி வாங்க டிராமா பண்றீங்களா!”…

சித்தார்த்” இப்போது நான் ரொம்ப நல்ல மோட் ல இருக்கேன்… உண்மையாவே ஒரு நல்ல எண்ணத்தில் தான் இதெல்லாம் பண்றேன். நீ அங்க ஸ்கூல்ல இருக்க சித்தார்த்தை உன் முன்னாடி காட்ட வைக்க வேண்டாம்.

அவள் பெரு மூச்சுடன் கை கட்டி நின்று கொண்டு இருக்க 

“நான் சொல்றத கேளு சமத்து பொண்ணா போய் ஃப்ரெஷ் ஆகி வந்து இது எல்லாம் சூடு ஆருவதற்குள் சாப்பிடு”…

என்னால இங்கே தங்க முடியாது…

சித்து, அப்போ என் ரூம் ல வந்து தங்குகிராயா?  என இரு புருவமும் தூக்கி கேட்டான். 

இதன்யா, வாட் ….?

ஐ மின் நான் இங்கே ஸ்டே பன்றேன் நீ என்னோட ரூமில் ஸ்டே பண்ணிக்கோ…

அவள் தலையில் கை வைத்து “அய்யோ நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா என்னால் இங்கே தங்க முடியாது!”…

ரீசன் சொல்லு….

எனக்கு…

உனக்கு…

ஹான் எனக்கு இந்த இடம் பிடிக்கல…
இதை கேட்டு சித்துவின் கைகள் எல்லாம் இறுக…

“இந்த இடத்தை பிடிக்கலையா! இல்லை, இந்த இடம் என்னோடது அப்டின்றதால் பிடிக்கலையா! இல்ல, என்னை பிடிக்கலையா!”

மூன்றுமே காரணம் தான் என்று அவன் மனம் கஷ்டபட வேண்டும் என்றே பேசினாள்.

அவன் கோபம் கொண்டு அருகில் உள்ள சுவற்றில் ஒரு குத்து விட இப்போது அவள் போன் அடித்தது.

அந்த ரிங் டோன், சித்துவும் தாராவும் இணைந்து நடித்த படத்தில் இருந்து ஒரு காதல் பாடல் இது கர்நாடவில் மிகவும் பிரபலமான பாடல் அந்த பாட்டில் கரோக்கி மட்டும் ரிங்டோனாக வைத்து இருந்தாள்.

இப்போது சித்தார்த் அவள் அருகில் வந்து அப்போ இந்த பாட்டு எதுக்கு ரிங் டோனா வச்சு இருக்கீங்க மேடம் என்று தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு இயல்பாக கேட்டான்.

அது அது வந்து … ஹான் அது நான் இல்லை எல்லாம் என்னோட ஃப்ரெண்ட் பூஜா தான்… என்று அவள் இரு விழிகள் உண்மையை சொல்ல உதடுகள் பொய் சொன்னது.

அப்போ உனக்கு பிடிக்கல! என அவளை ஆழ பார்வையுடன் நோக்கினான். 

என்ன பிடிக்கல நீங்க சொல்றது புரியல…

அந்த பாட்டு பிடிக்கலையா அப்டின்னு கேட்டேன்…

ம்ம் ஆமா சுத்தமா பிடிக்கல எனக்கு தமிழ் பாட்டு தான் பிடிக்கும்.. தமிழ் ஆக்டர் தான் என்னோட ஃபேவரட்… என்று சொல்ல

ஐ டோண்ட் லைக் லைஸ் இதன்யா!.

நா.. நானா நான் ஏன் பொய் சொல்லனும்..

எனக்கு உங்களை சுத்தமா என்று அவனை பார்க்க சித்துவின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் எனக்கு பிடிச்சா என்ன?  பிடிக்கவில்லை என்றால் என்ன? உங்களோட கேர்ல் ஃப்ரெண்ட்  அவங்க கிட்ட கேளுங்க! என்று சொல்லி அவள் செல்ல வேகமாக அந்த அறையை விட்டு சித்தார்த் சென்று விட்டான்.

இதன்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்னாச்சு ஏன் இவளோ நேரம் பேசும்போது கேட்டு விட்டு கடைசியாக அவர் “காதலி”பற்றி பேசும்போது வேக வேகமாக சென்று விட்டார். என யோசித்தவள் எப்படியும் இனி இவன் நம்மை  ஹாஸ்டல் விட மாட்டான் என தெரிந்து கொண்டவளாய் அதில் இருந்து ஒரு உடையை எடுத்து கொண்டு ஃப்ரெஷ் ஆகி அணிந்து வந்தாள். வயிறு வேற எதுவும் ஃபில் பண்ணு டி HCl அதிகமா சுறக்குது என்று சொல்ல உடனே வேக வேகமாக அந்த அரிசி கஞ்சி முழுவதும் காலி செய்தவள். பால் பிடிக்காது அதனால் அந்த பிரெட் மட்டும் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து விட்டு அருகில் அவன் மாத்திரை வைத்து இருந்தான். அதை எல்லாம் எடுத்து போட்டு கொண்டு அந்த டானிக் குடித்து விட்டு படுக்கைக்கு அருகில் வர உண்ட மயக்கம் அந்த படுக்கை சீக்கிரம் வா வந்து இங்கே படுத்து தூங்கு டி என சொல்ல

அவள் இன்று சித்துவோடு இருந்த இனிமையான பொழுதுகளை ரசித்து கொண்டே” நான் உன்னை தூரத்தில் இருந்து ரசிக்கும் ஒரு ரசிகை நீ நட்சத்திரம் நான் ஒரு சாதாரண மனுஷி இது போதும் நீ என்னை இப்படி கேர் பண்னாத,  அப்புறம் நீ எனக்கு வேணும் அப்டின்னு தோணும்!” என்று எதோ எதோ யோசித்து கொண்டு அந்த தூக்க மாத்திரை வீரியத்தில் தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் காலை சித்தார்த்தின் புதிய மாற்றத்திருக்கு அடி கல் நாட்டி விட்டு இவள் தூங்கி விட்டாள்.

அங்கே சித்து என்ன செய்கிறான்.?

தொடரும்….

EPI 25

அத்து மீறல்!.  

இதன்யா சித்தார்த்தின் மீது வேண்டும் என்றே கோபமாகவும் மனசு கஷ்டபடும் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

இதன்யா மனதில் சார் நீங்க எனக்கு  எட்டாத தூரம்… அதுவும் இல்லாமல் நீங்க வேறு ஒரு பொண்ணுக்கு சொந்தம்,என் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஒரு கோபம் , உங்களை நான் எதுவமே செய்ய வில்லையே?  எதுக்கு என் மேல் உரிமை எடுத்து கொள்கிரீர்கள்? 

நான் எப்படி தடுமாறினேன் என்று தெரிய வில்லை உங்கள் கண்களை என்னால் அதை நேராக சந்திக்க முடியவில்லை. அது ஆயிரம் உணர்ச்சி குவியலில் கோபம், பொறாமை, வெறுப்பு, அரவணைப்பு, ஏக்கம், பாசம் , உங்களை பார்த்தால் எனக்கு ஒரு சிறு குழந்தை போல் தோணுது எப்போ பார்த்தாலும் கோபம் தான்…

அது அப்படியே இருந்தால் சரி இப்போது நீங்க என்னை பார்க்கும் பார்வை அது இப்போ புதுசா இருக்கே… என் கிட்ட எப்பவும் போல சண்டை போடுங்க அப்போ தான் நான் உங்களை விட்டு விலக எளிதா இருக்கும். என்று நினைத்து கொண்டே உங்க தகுதிக்கு நான் உங்களை ரசிக்க மட்டும் தான் முடியும் நீங்க அய்யோ அவரை நெனைக்காதே டி என்று சொல்லி சித்துவை நினைத்து கொண்டே தூங்கி விட்டாள்.

இங்கே சித்தார்த் அவன் அறையில் அங்கும்  இங்கும் நடந்தான். என்னை பார்த்து என்ன கேட்டு விட்டாள்? அவளை பற்றி இவளுக்கு என்ன? என்று மதுவை குடிக்க எடுத்தான் ஆனால் எதோ தடுத்தது.

“கொடுமை பன்றேன் அப்டின்னு சொன்னாளே! நாளைக்கு அவளுக்கு விளக்கம் கொடுக்கணும். அப்புறம் அந்த ரிஷிய பற்றி நாளைக்கு சொல்லி விட வேண்டும்  என்று நினைத்தவன் தன் தாயின் அறைக்கு சென்று இனி இன்று ஒரு நாள் மட்டும் அவளை நான் பார்ப்பேன். கடவுளை நான் அவ்ளோ நம்பியது இல்லை . அவ எனக்கு அப்டின்னு இருந்தால் அந்த கடவுள் எதுவும் செய்யட்டும் இனி நான் அவளை தொந்தரவு செய்ய மாட்டேன். என்று சொல்லி கொண்டவன்.

நேராக அவள் அறைக்கு சென்றான் அவள் கதவை லாக் செய்ய வில்லை. அதற்கு தான் ஒரு பிரளயம் செய்தானே. அவளது சீரான மூச்சு சொன்னது அவள் தூங்கி விட்டாள் என்று அந்த மாத்திரைய எடுத்து பார்த்தவன் அவன் போன் எடுத்து அதில் உள்ள வீரியம் செக் செய்தான். பின் தூக்க மாத்திரை அதில் அவள் தூங்க கொடுத்து இருப்பது தெரிந்தது.

இன்னிக்கி ஒரு நாள் மட்டும் தான் உன்னை நான் பார்ப்பேன் இனி நீயா என்னை தேடி வந்தால் தான் டி உன் கிட்ட நான் வருவேன். என்று கூறியவன் அவளை தலை முதல் கால் வரை ஒரு முறை பார்த்தான் இந்த உடை மிகவும் அழகாக இருந்தது. ஒரு இளவரசி போல் தூங்கி கொண்டு இருந்தாள்.”தூங்கும் இளவரசி ” தூங்கும் இளவரசி அரோரா டிஸ்னி படத்தில் வரும் அந்த அரோராவை போல் இருந்தாள்.

ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டே இருந்தவன் அவள் படுக்கைக்கு அருகே சித்தார்த் அமர்ந்து கொண்டான். தூக்கத்தில் அவள் அவன் மேல் கைகளை போட இவன் அந்த வெண்டை விரல்களை பிடித்து கொண்டு அதற்கு முத்தம் வைத்தான்.

சித்துவின் ஸ்பரிசம் பட்டதும்  அவளுக்கு ஒரு சிறு புன்னகை முகத்தில் பரவியது. அவனும் அதை பார்க்க தவற வில்லை. லிட்டில் ஹார்ட் ஐ லவ் என்று பாதியிலேயே நிறுத்திவிட்டு அவன் வேகமாக எழுந்து செல்ல இதன்யா சித்துவின் சுண்டு விரலை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

சித்தார்த் இதற்கும் மேல் அவனை கட்டு படுத்த முடியாமல் அவள் இதழ்களில் விழுந்தான். இதன்யாவுக்கு கனவில் சித்தார்த் முத்தம் கொடுப்பது போல் இருந்தது. சித்து அவள் முகம் எல்லாம் முத்தமிட்டான். அந்த மூக்கு மேல் உரசி அவள் இதழ்களை மென்மையாக முத்தமிட்டு ஒரு முறை அவளை மனம் முழுவதும் நிறைத்து கொண்டு  திரும்பி பார்க்காமல் சென்றான்.

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. இதன்யா கொஞ்சம் தாமதமாக எழுந்தாள். ஆனால் 6.30 மணிக்கு எழுந்தாள். பின் நேராக பாத் ரூம் செல்ல அங்கு அவளுக்கு தேவையான அனைத்தும் இருந்தது. அவளுடைய சீருடை நேற்று அவள் அணிந்து இருந்த உடை துவைத்து அயன் செய்து மடித்து இருந்தது.

வேகமாக பல் துலக்கி விட்டு முகம் கழுவி விட்டு வெளியே வர மதி அவளுக்கு டீ, காபி, பூஸ்ட் என அனைத்தும் எடுத்து வர அவள் டீ மட்டும் எடுத்து கொண்டு நன்றி சொல்லி மீண்டும் அவள் இருக்கும் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.

அங்கு இன்னொரு கதவு இருக்க அதை திறந்து கொண்டு அவள் செல்ல அது பால் கனி அந்த பால் கனிக்கு எதிரே உடற் பயிற்சி செய்யும் அறையில் சித்தார்த் ஓடி கொண்டு இருந்தான்.

இவள் டீயை ஒவ்வொரு மிடர் குடித்து கொண்டே எதேட்சையாக திரும்பி பார்க்க சித்தார்த் அங்கே உடற்பயிற்சி செய்வதை பார்த்து அப்படியே வைத்த கண் வாங்காமல் தன் கன்னாடியை சரி செய்து கொண்டு அவனையே பார்த்தாள்.

சித்தார்த் உடற் பயிற்சி செய்து முடித்து விட்டு அந்த டவல் எடுத்து வியர்வையை துடைத்து கொண்டே திரும்ப அங்கே இதன்யா  பால்கனி திறந்து இருக்க அதன் வழியாக சித்தார்த்தை பார்ப்பது தெரிய ஒரு நிமிடம் கண்கள் மின்னி பின் அவளை பார்க்காமல் வேக வேகமாக முகத்தை கடுமையாக வைத்து கொண்டு சென்று விட்டான்.

இதன்யாவுக்கு அவன் தேகம் அப்படியே வியர்வையில் குளித்து இருந்தது அவன் உடற்கட்டுகள் அந்த தொண்டை குழி அந்த குரல் வளை இது மட்டுமே நினைவில் இருந்தது. 

ஹே இப்படி அப்பட்டமா பார்க்காத டி என்று அவள் மனமே சொல்லியது. அதன் பின் முறைத்து விட்டு அவன் சென்றது நியாபகம் வர அய்யோ! போச்சு!போச்சு! முருகா என் மானம் போச்சு தன்மானம் போச்சு எப்படி அவன் முகத்தில் முழிப்பது என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றவள்.

வேகமாக உள்ளே சென்று குளித்து முடித்து பள்ளிக்கு எப்பொதும் போல் கிளம்பினாள்.

இதன்யா மனதில் “அவன் உன்னை ட்ராப் பண்றேன் அப்டின்னு சொல்லுவான் ஆனால் நீ போக கூடாது”.. இப்படி இவள் நினைத்து கொண்டு இருக்க சித்தார்த் கிட்ட பெரிய பல்ப் வாங்க போகிறாள்.

ம்ம் வாங்க அதையும் பார்த்து விடலாம்.

இதன்யா கீழ செல்லும் நேரம் மிடுக்காக கருப்பு நிற கோட்ல பிராண்டட்டாக படிகளில் இறங்கி டைனிங் டேபிலுக்கு அமர சென்றான்.

இதன்யா இப்போது இறங்கி வருவதை ஓர கண்ணால் பார்த்து விட்டு கண்டும் காணாமல் அமர்ந்து கொண்டு மதிம்மா…
இதோ வரேன் தம்பி என அவர்கள் வர அங்கு சித்தார்த்துக்கு பரிமாற வர

அவனுக்கு ஒரு போன் வர அதை எடுத்து  அந்த அம்மாவை போக சொல்லி இவன் பேசி விட்டு  சாப்பிடுவதாக அவரிடம் சொல்லி கன்னடத்தில் பதில் பேசி கொண்டு இருக்க,

உடனே மதிக்கு சமையல் அறை வேலை இருக்க அவள் சென்றாள்.

இதன்யா அவனிடம்” இப்போது நான் கிளம்புகுறேன்.” என சொல்ல வர

மதிம்மா…

என இவன் அழைக்க அவர் பரிமாற தான் சித்து அவரை அழைக்கிறார் என தெரிந்து கொண்டவளாய் இவள் சித்துவுக்கு அருகில் சென்று அந்த சப்பாத்தி எடுத்து வைக்க…

இப்போது சித்தார்த் “டிஸ்கஸ்டிங்” என்று சொல்ல கைகள் அப்படியே நின்றது.

இதன்யாவின் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது. 

சித்தார்த், உங்களுக்கு எதுக்கு சிரமம் டீச்சர்… 

உடனே அவள் அந்த பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு  சித்தார்த்திடம் ” நீங்க செய்த எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி”… என்று சொல்லி அவள் கிளம்ப போக

சித்தார்த், ஒரு நிமிடம்…
அவள் எதிர்பார்ப்புடன் திரும்பி பார்க்க

சித்து அவளை பார்க்கவே இல்ல அவளை பார்க்காமல் ஒரு 5 நிமிடம் இங்கே உட்கார முடியுமா ….

இதன்யா, நானே ஸ்கூல்க்கு போயிக்குவேன் உங்க ஹெல்ப் வேணாம்.

இப்போது அவன் சிரித்து கொண்டே “ஸாரி மிஸ் நான் உங்களை ட்ராப் பண்ண நினைக்கவே இல்ல…உங்க கிட்ட சில விஷயம் சொல்லி கிளாரீஃபை பண்ண தான் வெயிட் பண்ண சொன்னேன்.”

இதன்யா என்ன என்பது போல் அவனை பார்க்க,

முதலில் நீங்க அன்னிக்கு கிளாஸ் எடுக்கும் போது முதன் முதலில் if you happy and you அதை பாடும்போது அது motivation சாங் அப்டின்னு நான் நெனைக்கல அது என் தவறு தான்…

அப்புறம் என்று ஒரு சிப் தண்ணிர் குடித்தான். ஆனால் அவள் முகத்தைப் பார்க்கவே இல்லை…

ம்ம் அதுக்கு அப்புறம் நீ போன ஸாரி நீங்க போன கிளாஸ்ல நல்ல ஒரு இம்ப்ரூவ் இருந்தது அதனால் தான் உன்னை ஸ்கூல் வர சொன்னேன்.

அப்புறம் நீயே கெமிஸ்ட்ரி ஃபுல்லா ஹேண்டில் பண்ண சொன்னது நான் தான்! அது உன்னோட அறிவுக்கு நான் போட்ட தீனி கெமிஸ்ட்ரி ஒரு கடல் மாதிரி அதில் நீ நடத்துற அந்த புக் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் தான்…

அவள் கண் கொட்டாமல் அவனையே பார்த்து இருக்க.  

அடுத்து என்று சொல்லி சித் ஒரு சப்பாத்தி எடுத்து வைத்து கொண்டே சாப்பிட்டவன். “உங்களை காலேஜ் கூட்டி போய் அந்த சொலுஷன் நான் தான் போட சொன்னேன். அதுவும் கிட்ட தட்ட ஒரு டெஸ்ட் மாதிரி இது ஒரு ப்ரேவ் கேர்ல்க்கு புரிந்து இருக்குமே!

ஆனால் உங்களுக்கு … என்று நிறுத்தி விட்டு சரி புரிய வேண்டாம்…

இப்போது கைகளை கழுவி விட்டு அவளை பார்க்காமல் கைகளை துடைத்து கொண்டு கால் மேல் கால் போட்டு கொண்டே அவன் போனில் ஒரு புகைபடம் எடுத்து அவள் முன்னே நீட்டினான்.

அதை கண்களில் கண்ணீர் கொண்டு அதை விழாமல் பார்த்து கொண்டே அந்த புகை படத்தை பார்க்க

சித், இது என்னோட தங்கை! அவள்  பெயர் ரோஷினி! அண்ட் உன் பின்னாடி ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கானே…

யாரு என்று தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே இதன்யா கேட்க…

சித்து”ரிஷி”…  என்று சொல்ல

என் பின்னாடி எல்லாம் சுத்துல ….

சித்து, அது எனக்கு தெரியாது…

ரிஷியை ரோஷினி விரும்புகிறாள். அது அவனுக்கும் தெரியும் ரெண்டு வீட்டு சம்மதத்தோடு அவங்க கூடிய சீக்கிரத்தில் சேர போறாங்க…

சரி அதை எதுக்கு என் கிட்ட சொல்றீங்க..

சித்து, அவன் உன்னை லவ் என்று அதற்கும் மேல் சித்து எதுவும் சொல்ல வில்லை…

இதை கேட்டு இதன்யா உறைந்தாள்! 

என்ன சொல்றீங்க? 

சித்…? 

தொடரும்….

 EPI 26

சித்தார்த் அவளிடம் ரிஷி உன்னை லவ் பண்றான் என்று சொன்னதும்

இதன்யா, என்ன சொல்றீங்க? 


நான் சொல்றத நீ நம்ப வேண்டாம் இதோ இதை பாரு என சில புகை படங்கள் அவளும் ரிஷியும் சாப்பிடும் போது அப்புறம் பேக்கரில எடுத்த புகை படங்கள் எல்லாம் அவளிடம் காட்டினான்.

அவள் இதில்  என்ன? என்பது போல் அதை எல்லாம் பாத்தாள்.

சித், “உங்களுக்கு எப்படி இந்த பார்வையோட மீனிங் புரியும்? மேடம் தான் ரொம்ப இன்னோசென்ட்  ஆச்சே?” என்றான்.
 

இதன்யாவுக்கு  ரிஷி பார்க்கும் பார்வையில் மாற்றம் உள்ளதை இப்பொழுது  கண்டு கொண்டாள்.

 சித் மேலும்” அண்ட் நீயும் அவனை லவ் பண்றதா இருந்தால் சொல்லி விடு என் தங்கை கிட்ட நான் இந்த மாதிரி இந்த மாதிரி அப்டின்னு சொல்லிடுவேன்.”


இதன்யா இதை கேட்டு மனம் கேட்காமல் “நான் லவ் பண்றேன்னு உங்களுக்கு தோணுதா!”..

“அது எப்படி டீச்சர் எனக்கு தெரியும்!”… என்று அவன் கூறினான்.

இப்போது பாவமாக கண்ணாடியை கலட்டி கண்ணீரை துடைத்து கொண்டு “நான் ரிஷி சாரை லவ் பண்ணல எப்பவும் எனக்கு அந்த  மாதிரி ஒரு எண்ணம் அவர் மேல் இருந்தது. இல்லை!”… என்று சொல்லி அவள் கண்ணாடியை அணிந்து கொண்டு கிளம்ப

“லாஸ்ட் ஒன் திங்க்”.. என்று அவன் சொல்ல அவள் திரும்பி பார்த்தாள்.

சித், “உங்க விருப்பம் இல்லாமல் உங்க கிட்ட அட்வான்டேஜ் ஸாரி ஸாரி ஓவர் அட்வான்டேஜ் எடுத்தது, அண்ட்   உங்க கிட்ட பொறுக்கி தனம்!, என்னை நீங்க அப்படி தான் நினைத்து இருப்பீங்க ,இது எல்லாம் என்னோட தப்பு தான், அதனால என்னை நீங்க!” என்று அவன்  சொல்ல வர

உடனே அவள் அங்கே இருந்து வெளியே ஓடி சென்று விட்டாள்.

சித்து மனதில் இப்போது ஒரு கவலை இருந்தாலும் ஒரு நிம்மதி இருந்தது.  இப்போது எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெளியே வந்தான். அவள் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

சித்தார்த்க்கு இப்போதே அவளை அணைத்து ஆறுதல் சொல்லி முத்தமழை பொழிய உதடுகள் ,  மற்றும் அவளை அள்ளி அணைக்க  துடிக்கும் கைகள் அதை கட்டு படுத்தி கொண்டான்.

க்கும்,  என்று அவள் அருகில் வந்து தன் தொண்டையை சரி செய்ய அவள் தன்னை சரி செய்து கொண்டு அவனை பார்த்தாள்.

இப்போது பேசினான்.” நான் தான்  உன்னை தேடி வந்து உன்னை இங்கே என் வீட்டுக்கு கூட்டி வந்தேன் சரியா டீச்சர்?

..
“ம்ம்” என்று ஒற்றை பதில் அளித்தாள்..

“அப்போ எங்கே உங்களை கூட்டி வந்தேனோ, அதே இடத்தில் கொண்டு விடுகிறேன்!”


“இனி நான் உன்னை தேடி வர மாட்டேன்.இப்போ போகலாம்!” என்று சொல்ல

இதன்யா காதுகளில் சித்து இறுதியாக சொன்ன வார்த்தைகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவள் எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்றாள். சும்மா இருப்பாளா? 

இப்போது இதன்யா “நானும் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!”


” என்ன “என்று சித்துவின் புருவங்கள் பேச

ஃபீவர்க்கு டேப், இஞ்செக்சன் இதுக்கு எல்லாம் நான் உங்களுக்கு ப்பே பண்ணிடறேன். என்று சொல்லி இவள் அவன் பதில் எதிர் பார்க்காமல் முன்னே நடந்தாள்.

சித்து, “உன்னை.! இப்படி ஓயாமல் எனக்கு எதிராக யோசிக்கிற மூளை, உன்னோட அந்த ரெண்டு உதடு அதை விட்டு வச்சிருக்கேன் பாரு அது என் தப்பு டி!” என்று நினைத்து கொண்டு அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் காரில் ஏறினான்.

சித்துவும் அவளுக்கு சளைத்தவன் இல்லையே நேற்று எந்த இடத்தில் அவளை கூட்டி சென்றானோ. அதே இடத்தில் போய் இறக்கி விட்டு எதுவும் சொல்லாமல் ஸ்கூல்க்கு சென்றான்.

இதன்யாவுக்கு இப்போது சித்துவின் செயல் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

அவன் இறக்கி விட்டு சென்றதும் அவள் உதடுகளை அழுத்தி  கடித்து கொண்டாள்.

நேராக பள்ளி சென்றாள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் பூஜா வந்தாள்.

ஹே இதன்யா நேற்று ஏன் ஹாஸ்டல் வரல…

அது அது ஒண்ணுமில்ல நான் இங்கே ஸ்கூல்லயே ஸ்டூடண்ட் ஹாஸ்டல்ல தங்கி விட்டேன்.

ஓ அப்படியா…

ம்ம் சரி என்று பொதுவாக சில விஷயம் பேசி விட்டு வகுப்புக்கு சென்றனர். இதன்யா மனதில் சித்தார்த் தான் இருந்தான்.” அப்போ நம்ப மேல் தான் தவறா?அவன் செய்தது அனைத்தும் சரியா?… இனி என்னிடம் வந்து பேச மாட்டானா?”…

அவள் மனம் “இதை தானே நீ எதிர் பார்த்த இப்போ என்னடி?”.. என்று மனம் சொல்ல

“அய்யோ! இதுக்கு எல்லாம் நீ தான் காரணம்…இப்போ அவன் என்ன சொல்ல வரான்?…இனி எல்லாம் உன்னோட முடிவு! நீ தான் முடிவு பண்ணனும்!… அப்போ நான் போய் சித் கிட்ட பேசணும், அவனை தேடி போகனும் அது தான் சொல்ல வருகிறான்.

“நான் எதுக்கு அவரை தேடி போகனும்?  அவர் கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு?…  என்று சொல்லி அவள் வகுப்புக்கு சென்றாள். 

அவளுக்கு சித்து வருவதற்கு முன் இருந்த வகுப்பு அட்டவணை இதன்யாவுக்கு மாற்றி இருக்க அதை பார்த்து விட்டு நேராக அதன் இஞ்சார்ஜிடம் போய் கேட்டாள். 

என்ன சார்? என்னோட டைம் டேபிள் மாறி இருக்கு? 

ம்ம் இனி இப்படி தான் மா உன்னோட வகுப்பு என்ன கொடுத்து இருக்கோ அதுக்கு மட்டும் நீங்க போங்க என்று சொல்லி அவர் கிளம்பினார்.

இதன்யாவால் எதுவும் திரும்பி கேட்க முடியவில்லை.

சதீஷ், இதன்யா மிஸ்…

ம்ம் சொல்லுங்க சார்..

நீங்க சாப்பிட்ட டேப், சிரப், பிரிஸ்கிரிப்ஷன் இதில் இருக்கு, அமௌன்ட் 500 ருப்பி மிஸ்,

“என்ன 500 ஆ “

இதன்யா, உங்களை யாரு சார் எனக்கு ஹெல்ப் பண்ண சொன்னா நான் கேட்டேனா? 

50 ருபில ஆக வேண்டிய வேலைய இப்படி உங்களால் எனக்கு 450 லாஸ் என்று இவள் ஆதங்கத்துடன் பேச…

சதீஷ் உள்ளுக்குள் சிரித்து கொண்டே மிஸ் நீங்க இதை சித்தார்த் சார் கிட்ட கேளுங்க… 

சித் பெயரை கேட்டதும் “இதுக்கு எதுக்கு நீங்க அவ்ளோ தூரம் போகனும் இந்த மாச சம்பளத்தில் பிடித்தம் பண்ணிடுங்க”… என்று அந்த மருந்துகளை எடுத்து கொண்டு சென்றாள்.

ம்ம் ஒகே மிஸ்!என்று அவன் சென்று இதன்யா சொன்ன அத்தனையும் சொல்ல சித்தார்த் கிட்ட கூறினான். 

அவன் முகத்தில் சிறு புன்னகை அவனை போக சொல்லி விட்டு” இது பத்தாது டி லிட்டில் ஹார்ட் இன்னும் நிறையை இருக்கு ஸ்வீட்டி!”  என்று நினைத்து கொண்டான்

சித்தார்த் உடனே அங்கு இருந்து கிளம்பி காலேஜ் சென்று விட்டான். NAC குழு வருவதால் அதற்கான வேலைகள் மலை போல் இருந்தது.

இப்படியே ஒரு வாரம் சென்றது அவன் இதன்யா இருக்கும் பக்கம் வரவே இல்லை.

இதன்யாவினால் அவனை பார்க்காமல் பசலை நோய் வந்தவள் போல் ஆகி விட்டாள்.

பிரியாவுக்கு போன் செய்தாள்.
ஹே என்ன டி ஒரு வாரம் ஆளையே காணோம்..

அது ஒன்னும் இல்ல பிரியா சும்மா தான்…

ம்ம் இப்போ என்ன விஷயம்…

காலேஜ்ல என்ன நடக்குது?

NAC கமிட்டி வராங்க அதனால கொஞ்சம் காலேஜ் பரபரப்பா இருக்கு டி…

ஓ அப்படியா சரி…

ம்ம் ஓகே அப்புறம்…

சரி நான் வைக்கிறேன் பிரியா…

“ஹே என்ன முகத்துல ஒரு கிலோ சோகம் இருக்கு போல,”

எனக்கு என்ன சோகம்…

“பொய் சொல்லாத டி இதயா”

“ஒன்னும் இல்ல விடேன்” என இதன்யா தவிர்த்து விட.. 


“சரி நீயே திரும்ப கால் பண்ணுவ அப்போ உன்னை வச்சு செய்யறேன் டி” என்று பிரியா சிரித்து கொண்டே வைத்தாள்.

நாளை காலேஜ் செல்வதாக இருந்தது. அடுத்த நாள் காலேஜ் சென்றாள். அங்கே வான் மதி, மனிஷா, இனியா, இந்து, பூஜா என அனைவரும் வகுப்பில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். 

மாணவர்களில் அபி, ஹரிஷ், நிதீஷ், சூர்யா , சுந்தர் , வேலு என அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்க

இந்து, ஹே TET  notification விட்டு இருக்காங்க பா..

ம்ம் சூப்பர்… என அனைவரும் பேசி கொண்டு இருக்க

பூஜா, ஹே இதன்யா  உன்னோட கனவு அதை ஒரு முறை சொல்லு டி எனக்கு அதை கேட்டால் படிக்க கொஞ்சம் பிரிஸ்க்கா இருக்கும் டி…

சூர்யா, ஹே அப்படி என்ன பூஜா இதன்யா கனவு? 


ஹே அது அவ சொன்னால் தான் நல்லா இருக்கும்..

அபி, ஹே சொல்லு இதன்யா பிளீஸ்…

இதன்யா சித்துவின் நினைவில் இருந்து தன்னிலைக்கு வந்தவள்.
ஒரு பெரும்மூச்சு விட்டு “மம்ம் சொல்றேன்” ஒரு நிமிடம் என்று சொல்லி எழுந்து நின்றவள்.

அவளின் வாழ்நாள் லட்சிய கனவை சொல்லும் நேரம் சித்தார்த் உள்ளே வந்து கொண்டு இருந்தான். இவள் குரல் கேட்க அதே இடத்தில் வெளியே நின்றான்.

இதன்யா சொல்ல ஆரம்பித்தாள். ” TET பாஸ் பண்ணி, அப்படியே ஒரு ஊதா நிற ஸ்கூட்டி பெப்ல  காட்டன் புடவையில் தலைக்கு குளிச்சு ஒரு குட்டி ஜதி மல்லி பந்து தலைக்கு வச்சு பின்னலிட்டு அப்புறம் அந்த ஸ்கூட்டர்ல அங்கே இருக்க அரசு பள்ளிக்கு அப்படியே போய் ஜம்முனு இறங்கனும்!”

அப்புறம் என அனைவரும் கோரஸ் போட

காலையில் 9.00 மணில இருந்து 6.00 மணி வரை இருந்து அந்த குழந்தைகளுக்கு புதுசு புதுசா நம்ப இமஜினசன் கெமிஸ்ட்ரிய கற்று கொடுக்க, அந்த குழந்தைகள் எல்லாம் கவனிக்க அப்புறம் அப்படியே சனி, ஞாயிறு அரசு விடுமறை அது மட்டும் இல்லாமல் அரசு விடுமுறை அத்தனையும் விடுமுறை  எப்படி இருக்கும்.. என்று கண்கள் மின்ன அவள் சொல்ல

இதில் மாணவிகள் அனைவரும் ஒரு முறை கனவில் வாழ்ந்து வந்து இருந்தனர்.

வேலு, இதன்யா அப்படியே இந்த பசங்க பாஸ் பண்ணா எப்டி இருக்கும் அதையும் சொல்லு பிளீஸ்..
தன் கண்ணாடியை ஆரம்பித்து கொண்டே அவள் சொல்ல ஆரம்பிக்க

பூஜா, ஹே நிறுத்து டி? 


இதன்யா என்ன? என்பது போல் பார்க்க

பூஜா, அந்த கல்யாண கனவை சொல்லவே இல்ல, அத சொல்லு டி, அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்…

இப்போ கொரசாக மாணவிகள் அனைவரும் கேட்க இதன்யா…?

வெளியே சித்தார்த்…? 

தொடரும்….

EPI 27

சித்தார்த் அப்பொழுது தான் அவன் புதிதாக வாங்கி உள்ள” வித்யா ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்” அதன் பெயரை தன் அம்மா பவானியின் பெயரில் மாற்றும் வேலையாக காலேஜ் வந்து இருந்தான். 

 அந்த நேரம் தான் இதன்யா  கண்களை மூடி கொண்டு TET  (teacher eligibility test) ல மெரிட் லெவலில் பாஸ் ஆகி மெறிட் கோட்டாவில் வேலைக்கு போக வேணும் என சொல்ல அதை அந்த பக்கம் வந்த சித்தார்த் காதில் விழுந்தது. 

இதன்யா கண்களை மூடி கொண்டு அவளின் வாழ்நாள் லட்சிய கனவை சொல்ல அதை கேட்ட மாணவிகள் அனைவரும் அவளின் கனவில் மெய் மறந்து  சென்று வந்து இருந்தனர்.

பூஜா, ஹே அந்த கல்யாண கனவு பிளீஸ் பிளீஸ் சொல்லு டி

சித்தார்த் கிளம்பலாம் என அடி எடுத்து வைக்கும் நேரம் பூஜா சொன்னது காதில் விழ அதே இடத்தில் நின்றான்.

சூர்யா, அபி, வேலு மூவரும் சொல்லு! இதன்யா நாங்க ஈகரா இருக்கோம் என சொல்ல அவள்

“சரி சரி சொல்றேன் ஒரு நிமிடம்!” என்று தன்னை நிலை படுத்தி கொண்டு மீண்டும் கண்களை மூட அவள் கண்களில் சித்தார்த் தெரிந்தான்.

உடனே கண்ணை திறந்தாள். ஹே என்னாச்சு டி? சீக்கிரம் சொல்லு? என வான்மதி சொல்ல..

அவள் இல்ல இல்ல இது என்னால சொல்ல முடியாது..

ஏன்? 


அது! அது! வந்து முடியாது என மலுப்பினாள். 

மாணவர்களுக்கு புஷ் என்று ஆனது.

பூஜா, ஹே டோண்ட் ஃபீல் எனக்கு நியாபகம் இருக்கு நான் சொல்கிறேன் என இதன்யாவின் கனவை கூற ஆரம்பித்தாள்.

“முக்கியமான குறிப்பு அவங்க அம்மா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிக்கனும், லவ் மேரேஜ் நாட் அலோ,ம்ம் ஸ்கூல் வாத்தி, அப்படி இல்லனா பேங்க்ல வொர்க் பன்றவங்கள கல்யாணம் பண்ணிக்கினும். முக்கியமா அவங்க லோக்கல் கையா இருக்கணும்.அதாவது  இதன்யா வீட்டுக்கு பக்கத்தில் இருக்கணும், ஒரு புல்லட் ல இதன்யா அப்படியே அந்த புது தாலி கழுத்தில் தொங்க பின்னாடி உட்கார்ந்து கொண்டு அப்படியே ஒரு எட்டு போட்டு அவங்க வீட்டில் வந்துu இறங்கணும்.

அப்புறம் என கன்னத்தில் கை வைத்து மாணவிகள் கேட்க.  

அப்புறம் ஆடி, தீபாவளி, பொங்கல், மாசி தேரு எல்லாத்துகும் டிங் டாங் அப்டின்னு அவ அம்மா வீட்டுக்கு வந்து விட வேணும். ம்ம் ஒரு பொன்னு, ஒரு பையன் பெற்று கொண்டு சொந்த ஊரொட வீடு அப்படியே ஸ்கூல் அப்படியே புருஷனை கவனித்து கொண்டு ஒரு அழகான மிடில் கிளாஸ் வாழ்க்கை அவ்ளோ தான்!.

“அவ்ளோ தானா!”என கரண் கேட்க 

எப்படி இருக்கு … இதை கேட்டு மாணவிகள் அனைவரும் கைகளை தட்ட மாணவர்கள்..

வேலு, இதன்யா நான் TET பாஸ் பண்ணிட்டு நேரா உங்க அம்மா முன்ன போய் நின்னு  இந்த கையில் போஸ்டிங் ஆடர் காட்டி,அப்படியே  உன்னை கல்யாணம் பண்ண எனக்கு டபிள் ஓகே உனக்கு ஓகே வா?… என்று சிரித்து கொண்டே ஆனால் ஆசையாக அவன் கேட்க..

“ம்ம் எனக்கு ஓகே!” என இந்து சொல்ல

“நோ! நோ! எனக்கு இதன்யா தான் வேணும்” என்று அவன் கூறினான்.

இதையெல்லாம் வெளியில் கேட்டு கொண்டு இருந்த சித்தார்த்துக்கு இருப்பு கொள்ள வில்லை. நேராக அவன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் அறைக்கு சென்ற சித்தார்த் சதீஷ வர சொல்ல,

உடனே அவன் உள்ளே வந்தான்.

சதீஷ்! என உரக்க அழைத்தான். 


ம்ம் சொல்லுங்க பாஸ்!. 


நான் எப்படி இருக்கேன்? 


பாஸ்! என்று அவன் திரு திரு வென முழிக்க

அதாவது அழகா இருக்கேனா! ஐ மின் பொண்ணுங்களுக்கு பிடிச்ச மாதிரி..  ஹாண்ட்சமா இருக்கேனா? 

சதீஷ், ஏன் பாஸ் இப்படி கேட்கறீ்க…

சித்து, நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!

உடனே அவன் பாஸ் நீங்க இதை ஒரு பொன்னு கிட்ட தான் கேட்கணும்…

“சதீஷ் ” என்று அவன் ஒரு கர்ஜனை செய்தான். 

“பாஸ் நீங்க அழகு  உங்களை எல்லா பொண்ணுக்கும் பிடிக்கும். அதுவும் நீங்க ஒரு ஆக்டர் சும்மா கெத்தா இருக்கீங்க!”

இப்போது சித்தார்த், அப்புறம் ஏன் அவளுக்கு என்னை பிடிக்க மாட்டிங்குது! 

சதீஷ் அமைதியாக நிற்க்க…

சித்து, ரிஷுய விட நான் அழகா இல்லையா? 


சதீஷ், பாஸ்  யாரு பாஸ்அப்டி சொன்னது? நீங்க ரிஷி சாரை விட எல்லாவற்றிளும் பெஸ்ட்!

சித்து, அப்போ ஏன் அவ என் கிட்ட எப்பவும் சண்டை மட்டும் தான் போடுரா பேச மட்டிங்குறாள்..

சதீஷ், பாஸ் இதுக்கு போய் நீங்க ஃபீல் பன்ணலாமா மேடம்க்கு உங்களை பிடிக்கும். அவங்க உங்க முன்னாடி அப்படி நடந்து கொள்கிறார்கள். ரிஷி சாரை விட மேடம்க்கு உங்களை தான்  பிடிக்கும்.

சித்து, அப்போ அவ எனக்கு கிடைப்பாளா…

சதீஷ், பாஸ் இதன்யா மேடம் உங்களுக்கு தான்!


இதை கேட்டு கொஞ்சம் அவன் கோபத்தை தனித்து கொண்டான்.

எல்லா dept லயும், b.ed ஹேண்டில் பண்ற ஸ்டாப் க்கு ஒரு மீட்டிங் போட்டு கெமிஸ்ட்ரி dept h.o.d ய ஒரு வழி செய்து விட்டான்.இதன்யா மேல் இருந்த அத்தனை கோபமும் இப்போது h.o.d மேல் இறக்கி விட்டான்.

“என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க? உங்க ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் வெட்டி பேச்சு பேசி சிரிச்சு கிட்டு இருக்காங்க? … இது இப்படியே தொடர்ந்தால் உங்க சீட் கிழிந்து விடும்!”


இவன் பேசி கொண்டு இருக்கும் போதே ஒரு சர்குளர் வர அதை பார்த்த சித்தார்த்துக்கு இவ்வளவு நேரமும் எரிமலை போல் இருந்த முகம் இப்போது பனிமலை போல் குளிர்து போனது.

அப்படி என்ன தான் அந்த செய்தி?

ஆசிரியர் பயிற்சி b.ed ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்களாக அதுவும் இந்த கல்வி ஆண்டில் பிரகடனபடுத்தபட்ட  அரசாணை தான் அது இதற்கான பேச்சு மற்றும் வழக்கு கிட்ட தட்ட ஆறு மாசத்துக்கு முன்பே ஆலோசனை நடந்து கொண்டு இருந்தது. என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இதே கல்வி ஆண்டில் அதை செய்ய வேண்டும் என்பது எதிர்பாராத ஒன்று! சித்தார்த் அந்த மீட்டிங்ல இதையும் சொல்லி விட்டு

“டிஸ்மிஸ்” என உறக்க கத்த அனைவரும் வியர்க்க விறுவிறுக்க அந்த இடத்தை விட்டு சென்றனர்.

சித்தார்த் மனதில் தொங்க தொங்க தாலி! புல்லட் ! வாத்தி! பேங்க் வேலை! அதை விட ஒரு பொன்னு !ஒரு பையன்! அப்புறம் புருஷனை கவனிப்பாளாமே…

இல்ல சித் என மூளை, அம்மா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிக்க்குவாளாம்!

மனம் கவலையாக “லவ் மேரேஜ் நாட் அலோ ” இப்படி சொல்லிட்டாளே!

ரெண்டு பேரும் கொஞ்சம் பொலம்பரத நிறுத்துங்க. அதுக்கு தான் இப்போ ரெண்டு வருஷம் டைம் எனக்கு கடவுள் கொடுத்து இருக்கிறார். அன்னிக்கு என்ன சொன்னாள் 11மாசம் தான் அப்புறம் அவங்க வீட்டுக்கு போயிடுவேன் அப்டின்னு அவங்க அம்மா கிட்ட போனில் சொன்னாள்…

ஆனா!

இப்போ ரெண்டு வருஷம் முழுசா இப்போ தான் ஒரு மாசம் முடிந்து இருக்கு என சித்து ஃபுல் ஃபார்ம்ல இருந்தான்.

எல்லா வகுப்பிலும் அந்த செய்தி அதற்கு முன்னர் போன்ல் நெட்டில் வர இதன்யாவுக்கு முருகா அவ்ளோ தான்! என் சோழி முடிஞ்சது!

இந்த 11மாசத்தை எப்படி இவன் கிட்ட இருந்து ஓட்டுவது என பார்த்தால் இப்போ முழுசா ரெண்டு வருஷம் நான் மர்கயா தான்… இன்னும் என்ன பண்ணுவானோ! 

இல்ல டி அவன் உன்னை தேடி வர மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டானே! இனி நீயா அவன் வலையில் சிக்கினால் தான் உண்டு..

கஷ்டம் !கஷ்டம் !கஷ்டம்! ரொம்ப கஷ்டம்!… என இவள் புலம்பும் நேரம்

நெஸ்ட் ஹவர் ஆடிடோரியம் வர வேண்டும். எனவும் காலேஜ் சேர் பெர்சன் வந்து இருக்கிறார்கள் என சொல்ல…

இதை கேட்டு மாணவிகள்  என்ன தான் b. Ed இரண்டு வருடம் என்பது வருத்தம் இருந்தும் உற்சாகம் அடைந்தனர் ஏன்னா சித்து வருகிறான் சைட் அடிக்கலாம் என்னும் ஆவல்…. அவர்களுக்கு இருக்க

போச்சு போச்சு உடனே நான் இங்கே நினைப்பது அங்கே அவனுக்கு மூக்கு வியர்த்து போச்சா வந்துட்டானே என இதன்யா புலம்பினாள்.

சித்தார்த் ரெடி ஆகி கொண்டு இருந்தான். மீட்டிங் அட்டென்ட் செய்ய, மனதில் இதய ராணி தான் இருந்தாள். என்னடி உனக்கு மட்டமான டேஸ்ட்டு வாத்தி! அப்புறம் பேங்க் ஆபீசர் !ஏன் ஒரு ஆக்டர் அப்டின்னு நினைக்க மாட்டியா…  வெறும் சைட்டு  ஸ்கிரீன்ல மட்டும் ரசிக்க வேண்டியது நேரில் உனக்கு இரிட்டேடிங் ம்ம்ம்…

இருக்கட்டும்! இறுக்கட்டும் இன்னும் இது எத்தனை நாளைக்கு அப்டின்னு நானும் பார்க்கிறேன் டி என நினைத்து கொண்டே கிளம்பினான்.

வழக்கம் போல் இதன்யாவின் குழு அந்த ஆடிட்டோரியத்தில் கடைசியாக அமர்ந்து இருக்க சித்தார்த் அழுத்தமான காலடிகலுடன் கத்தியான பார்வையை வீசி கொண்டே வர அங்கு இருந்த மாணவிகள் அனைவரும் சித்து சித்து என கத்திக்கொண்டே இருந்தனர்.

அவன் அவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு இதய ராணி எங்கு இருக்கிறாள் என ஒரு நோட்டம் அது யாருக்கும் தெரியாத ஒரு தேடுதல் கொண்டு அவளை பார்க்க முகம் எல்லாம் பதட்டம் இருக்க
அருகில் பூஜா சித்தார்த்தை ஸ்கூல்ல பார்த்த கதைகளை அருகே மாணவிகளிடம் கூறி கொண்டு இருந்தாள்.

இதன்யா,” ஹே கொஞ்சம் வாய மூடு அவன் புகழ் பாடியது போதும்.”


“ஹேய் ” என கோர்ஸ்சாக சத்தம் வர இப்போது மொத்த ஆடிட்டோரியமும் திரும்பி இதன்யாவின் குழுவை பார்க்க…

இதன்யா, அய்யோ போச்சு  எதுக்கு டி இப்படி கத்துனீங்க…

H.o.d , ஏன் மா அமைதியா இருக்க மாட்டிங்களா இப்போ தான் அவரு என்னை கூப்பிட்டு கிழி கிழின்னி கிழிச்சாரு இப்போ நீங்களும் என்னை வேலை விட்டு அனுப்பி விடுவீங்க போல

சாரி சார்… என சொல்ல
ம்ம் கொஞ்சம் அமைதியா இருங்க மா

சித்தார்த் மைக் பிடித்து b. Ed இரண்டு வருடம் ஆனதற்கு சில வார்த்தை சில மணி துளிகளில் பேசி விட்டு ஒழுங்கா படிங்க என சொல்லி அவன் இடத்துக்கு வந்து விட்டான்.

கெமிஸ்ட்ரி  h o d யைப் பார்த்து இப்போ யாரு சத்தம் போட்டாங்க அவங்கள சித்தார்த் சார் மீட் பண்ணனுமா…

இதை கேட்டு மாணவிகள் சந்தோஷ வெள்ளத்தில் இருக்க இங்கு ஒருத்தி சோக கப்பலில் மூழ்கி இருந்தாள்.

இதன்யா,போச்சு அவ்ளோ தான் நான் இன்னிக்கு

தொடரும்…

EPI 28

இதன்யா சித்தார்த்தை பற்றி திட்டியதை 

சித்தார்த் மீட்டிங் முடித்து விட்டு கெமிஸ்ட்றி dept hodயிடம் கத்திய மாணவர்களை பார்க்க வேண்டும். உடனே கரெஸ்பான்டென்ட் அறைக்கு வர சொல்லுங்க..  

ஓகே சார்! என

hod மாணவிகளிடம் வந்து  “சத்தம் போட்ட மாணவர்களை சேர்பர்சன் வர சொல்கிறார். போய் சார் கிட்ட சாரி கேளுங்க”..என சொல்ல..

மாணவிகள் மிகவும் சந்தோஷமாக, “இதன்யா இதுக்கு காரணம் நீ தான் டி இப்போ சித்து டார்லிங்க நாங்க பக்கத்தில் இருந்து பார்க்க போகிறோம்.”

இதன்யாவுக்கு அவனை டார்லிங் என்று சொன்னதும் உடனே கோபம் வர “ஹே என்ன டார்லிங்? அவன் ஒரு ஆளு அப்டின்னு அவனுக்கு எதுக்கு எவ்ளோ பில்ட் அப் கொடுக்கறீங்க? அதர் ஸ்டேட் ஸ்டார் எல்லாம் நல்லாவே இல்ல! இங்கே நம்ப தமிழ் ஸ்டார்ஸ் தான் நம்ம ஊர் படம் தான் மாஸ்!”

பூஜா, ஓவரா பண்ணாத இதன்யா!… ஹே சீக்கிரம் வாங்க டி என்று சொல்லி அவன் அறைக்கு அருகில் மொத்த மாணவிகள் கூட்டமும் சென்றது.

அங்கே உள்ள பணியாள், உங்க பெயர் எல்லாம் இதில் எழுதி கொடுங்க…
சரி என்று வான் மதி வாங்கி எழுத ஆரம்பித்தாள்..

இங்கேயே வெயிட் பண்ணுங்க…

ம்ம் ஒகே என்று அங்கு இருந்த மாணவிகள் தங்கள் உடை, ஒப்பணை எல்லாம் சரி பார்த்து கொண்டு இருக்க

இந்து,” ஹே  பூஜா நான் நல்லா இருக்கேனா! சித்து என்னை பார்ப்பாரா… ஹே நானு.!” என ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கேட்டு கொண்டு இருக்க இதன்யாவுக்கு இதை பார்த்ததும் ஒரு எரிச்சலாக இருந்தது.

அவள் அனைவரையும் முறைத்து கொண்டு இருக்க…

ஹே போடி என அனைத்து மாணவிகளும் தங்களை தயார் படுத்தி கொண்டு இருந்தனர். 

“யாராவது இருவர் உள்ளே வாங்க!”… என சொல்ல இதன்யாவை தவிர அனைவரும் சென்றனர். அவள் தான் வீம்பாக வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.

 சித்தார்த் அரைக்குள் அவர்கள் வர அவன்  கஷ்ட பட்டு தன் இயல்பை மீறி இனிமையாக பேசினான். வேறு எதற்கு அவளை பழி வாங்க தான்.

வெளியே அனைவரும் வர இதன்யாவின் இதயம் வேக வேகமாக துடிக்க அவன் அழைப்பான்! என எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரம் மாணவிகள் சிரித்து கொண்டே வந்து  

வளர் மதி, ஹே என்ன பார்க்கிறாய்?


“இல்ல ஒன்னும் இல்ல டி.”

வான் மதி, இதன்யா  அவரு கிளம்ப சொல்லி விட்டார்.

“ஓ அப்படியா சரி”என அவள் சித்துவின் அறையை ஏக்க பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

இதனை எல்லாம் சித்து அந்த கணினி வழியே பார்க்க அவள் முகத்தில் உள்ள அந்த எதிர்பார்ப்பு அவனுக்கு அவள் அருகில் இல்லாமலேயே இதன்யாவை உணர்ந்தான்.

சித்து, சதீஷ் அவ என்னை மிஸ் பன்றாளா! 

“ம்ம் பக்கா பாஸ்.”மேம் விட்டால் அழுது விடுவார்கள். 

இதை கேட்டு ஒரு கர்வத்துடன் புன்னகைத்து கொண்டான்.

இங்கே வகுப்புக்கு வந்ததும் அவள் வகுப்பு தோழிகள்,

இந்து, “ஹே இந்த போட்டோஸ்ல அவரு அழகா இருக்காரு பாரு.!”

சோ ஸ்வீட்… 

இதன்யா இதை கேட்டு என்ன என்று வேகமாக போன் பிடிங்கி பார்க்க

பூஜா, “ஹே இப்போ எதுக்கு வேக வேகமாக பிடுங்கி பார்க்கிற நீயும் வர வேண்டியது தானே!”

“நானா?  நான் எதுக்கு வரனும் ? எனக்கு சுத்தமா பிடிக்கல! இந்தாங்க நீங்களே கொஞ்சுங்க.”என சொல்லி அவள் தன் பேக்ல இருந்து தலைவலி மருந்து எடுத்து போட்டு கொண்டாள்.

“சித்து படத்தில் விட நேரில் செம்ம அழகு, அவரு பக்கத்தில் ஒரு வாசனை திரவியம் அது செம்மையாக இருக்கு தானே! இப்போ கூட என்னோட மூக்கில் அடிக்குது.” என வளர்மதி சொல்லி கொண்டு இருக்க

இதன்யா மனதில் அவன் அவள் அருகில் வந்தது,  முத்தம் கொடுத்தது, கழுத்தில் முகம் புதைத்தது, என நினைவு வர  அருகில் இல்லாமல் அவன் வாசனையை உணர்ந்தாள்.

மனம் , “அய்யோ என்னை கொடுமை பண்றானே!”.. என நினைக்க உடலில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்த்து நின்றது.

மீண்டும் அந்த விக்ஸ் எடுத்து இரு கைகளிலும் பூசி அதனை சோப்பு போட்டு கழுவுவது போல் அதை நன்கு தேய்த்து முகருந்து கொண்டாள்.

இப்படி செய்தால் அவன் வாசனை அவளை விட்டு சென்று விடுமாம். (அது இதயமே இல்லாத இதன்யாவின் கணிப்பு என மனசு சொல்ல இப்போ நீ யாரு என மூளை கேட்டது உன் மான கெட்ட இதயம்)

மதியம் வர அனைவரும் மதிய உணவு சாப்பிட கிளம்பினர். 

மனம்,”இப்போ கூட நீ போய் பரிமாறு அவன் சாப்பிட காத்து கொண்டு இருப்பான்.எந்த முகத்தை வைத்து கொண்டு போவ நீ அன்னிக்கு தான் டிஸ்கஸ்டிங்கா இருக்கு அப்டின்னு சொன்னியே!”

“ம்ம் அதுக்கு தான் அவன் ரிவேஞ்ச்  பண்ணானே!”… என்று நினைத்து அங்கும் இங்கும் நடந்தாள்.

மாணவிகள் சாப்பிட அழைக்க பெயருக்கு கொஞ்சம் குருவி போல் சாப்பிட்டாள்.

தறி கெட்ட மனம் அவனை நோக்கி குதிரை போல் அவன் பக்கம் ஓட தொடங்கியது.

அந்த பக்கமாக சதீஷ் போக அவள்  மனம் கேட்காமல்

“சார்”..

ம்ம் சொல்லுங்க மிஸ்!.   ஒரு சிறு புன்னகை சிந்த

இதன்யா என்ன கேட்பது என தெரியாமல் முழித்தாள். 

அவள், நீங்க சாப்ட்டீங்களா…

நான் வந்து பாஸ் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவேன். வேற எதுவும் சொல்லனுமா?… சார் வெயிட் பண்ணுவாரு! நான் போகனும் என சதீஷ் சொல்லும் நேரம்..

“சதீஷ்”… என பின்னால் இருந்து குரல் கேட்க

பாஸ்! என்று சதீஷ் திரும்பினான்.

இதன்யா சித்துவை பார்த்து கொண்டு இருக்க ஆனால் சித்து ஒரு கண் அசைவு கூட இதன்யாவின் பக்கம் திரும்பவே இல்லை.

“குயிக் மேன் அங்கே என்ன வெட்டி பேச்சு ஐ ம் ஹங்ரி!”

சாரி பாஸ் நான் வருகிறேன் என சொல்ல சித்து அவளை பார்க்காமல் திரும்பி சிரித்து கொண்டே சென்றான்.

இதன்யாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளின் மனம் காற்றில் பறக்கும் அவனோட முடி கூட உன்னை பார்க்க மாட்டிங்குது..  என்று அவள் அங்கு இருந்து சென்று விட்டாள்.

இங்கே உள்ளே வந்த சித்து அவன் இடத்தில் அமர்ந்து கொள்ள “பாஸ் மேடம் உங்களை பற்றி தான் எதோ கேட்க வந்தாங்க .அதுகுள்ள நீங்க வந்து விட்டீர்கள்.”

“ம்ம் நானும் பார்த்தேன்!இன்னும் பத்தாது அவள் இப்படியே இன்னும் ரெண்டு மூணு வாரம் சுத்தட்டும்” என்று சொல்லி திருப்தியாக சாப்பிட்டு விட்டு அங்கு இருந்து நல்ல மன நிலையில் கிளம்பினான்..

அடுத்து வந்த ஒரு வாரமும் காலேஜ்ல வேலை என்று அங்கு இருந்த பணியாளர் ஆசிரியர், விரிவுரையாளர் என அனைவருக்கும் வேலை கொடுத்து ஒரு வழி ஆக்கி விட்டான்

NAAC குழுமம் ஆய்வுக்கு வந்த நாட்கள் அவனுக்கு காலேஜ்ல மிகவும் வேலை அதிகமாக இருந்தது. குழுமம் வந்து ஆய்வு செய்து விட்டு A+ அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் நல்ல தர சான்று பெற்றுள்ளதாக வர சித்தார்த்தின் உழைப்பு வெற்றி கண்டது.

சித்தார்த், “தாத்தா நம்ப காலேஜ்க்கு A+கிடைத்து இருக்கு”

“ம்ம் குட் லக் மை பாய்” என கிருஷ்ணன் வாழ்த்தினார்.

கிருஷ்ணன் நேரில் வந்து பள்ளியிலும் கல்லூரியிலும் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு சின்ன விருந்து கொடுப்பதாக சொல்ல இவனும் சரி என்றான்.

அதே போல் அந்த வார இறுதி வேலை நாள் சனிக்கிழமை ஒரு உயர் ரக ஹோட்டலில் மதிய உணவு சொல்லி இருந்தார். அனைவரையும் காலேஜ் வர சொல்ல அன்று அவரவர் தன்னை அழகாக தயார் படுத்தி கொண்டு வந்தனர்.

இதன்யா, பூஜா!

“ம்ம் சொல்லு டி “

இதுக்கு கட்டாயம் வரணுமா நான் வரல டி

“ஓகே நீ போய் H.M கிட்ட சொல்லிடு ஆனால் நான் போவேன் டி அப்போ தான் அடுத்து PG பண்ண எனக்கு ஹெல்ப்பா இருக்கும்.”

சரி ஓகே நான் போய் சொல்லிட்டு ஹாஸ்டல் கிளம்புகிறேன். என அவள் H.M ரூமுக்கு சென்றாள். போகும் போது மனம் வழியில நீ அங்கே போய் உன்னால சித்தார்த்தை பார்க்காமல் இருக்க முடியாது அதனால தானே வர மாட்டிங்குற…

ம்ம் ஆமா அதுக்கு என்ன இப்போ அப்படியே இருக்கட்டும் என்று அவள் H.M அவர்கள பார்த்து  விஷயத்தை சொல்ல

ஒரு நிமிடம் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு மா …

இதன்யா வெளியே சென்றதும் H.M சதீஷ்க்கு போன் செய்து விவரத்தை கூற உடனே அவன் சித்துவிடம் கூறினான்.

சித் ,”ம்ம்ம் இவளோ தூரம் வந்துட்டீங்க மேடம், நீ இன்னிக்கி வந்தே ஆகனும் டி, எங்கே என்னை பார்த்தால் வந்து என்னிடம் ஒட்டி கொள்வாயோ! அப்டின்னு உனக்கு பயம், ம்ம் இது கூட நல்ல இம்ப்ரூமெண்ட் தான்!”

“எல்லாரும் கட்டாயம் வரனும் என சொல்ல சொல்” என்று சதீஸ் கிட்ட கூறினான்.

இதை அப்படியே இதண்யாவிடம் சொல்ல அவள் வேறு வழி இல்லாமல் சென்றாள்.

இதன்யா, “பூஜா நானும் வரேன்!”

என்ன இந்த திடீர் முடிவு? என அவள் வினவ.. 

அது கட்டாயம் எல்லாரும் வர சொல்லிட்டாங்க என சோகமாக கூறினாள்.‌


பூஜா சிரித்து கொண்டே எனக்கு தெரியும் வா! உனக்கு ட்ரெஸ் ஒரு சாரி எடுத்து வைத்து இருக்கிறேன் போ! இதை கட்டி வா! 


ஹே இது உன்னோடது? 

பூஜா, “அதனால் என்ன உனக்கு இது சூப்பரா இருக்கு, இந்த பின்க் கலர் ஒயிட் ஸ்டோன் வொர்க் செம்மையாக இருக்கு நான் ஸ்கை ப்ளூ நீ பின்க் கலர் போ போ சீக்கிரம் என சொல்ல

இதன்யா அழகாக அந்த புடவையை கட்டி வர அவள் மிகவும் அழகாக இருந்தாள். ஹே இந்த புடவையில் சும்மா நச்சன்னு இருக்க டி உன்னை பார்க்கிற எல்லாரும் ஃபிளாட் தான்.

வாய மூடு

பூஜா, இங்கே வா என அவளை  அமர வைத்து மிதமான ஒப்பணை செய்து விட்டாள்.

இந்தா பூ வைத்து கொள் என அவள் ஒரு சரம் மல்லியை தலையில் வைக்க..
ஹே எனக்கு வேணாம்! 

பூஜா, அடி வாங்க போற இப்படி பேச கூடாது .. சரி இது வேணாம் இந்த ஜதி மல்லி பந்து வைத்து கொள் என வட்ட வடிவில் கட்டிய அந்த பூவை சூடி விட்டாள்.

உனக்கு ஏது இந்த பூ…
இது ராதா டீச்சர் கொடுத்தாங்க… எனக்கு குண்டு மல்லி நான் வைத்து கொள்கிறேன் என பூஜாவும் வைத்து கொண்டாள்.

ம்ம் ஒரு நிமிடம் என்று அவளை தலை முதல் கால் வரை பார்த்தாள்.

“என்ன பூஜா குறுகுறுன்னு பார்க்கிற?” 

பூஜா, இதன்யா நிஜமாவே செம்மையாக இருக்க என்று நெட்டி முறித்து இன்னிக்கு உன்னை பார்க்கிற எல்லாரும் ஜொள்ளு தான் நானே உன்னை இப்போ சைட்டிங் …

ஹே லூசு என அடிக்க

ம்ம் இந்த கண்ணாடியை மட்டும் கழட்டி விடு…

முடியாது! அது மட்டும் முடியாது! … என அவள் கூறினாள்.

இங்கே சித்தார்த்தும் கிளம்பினான். “லிட்டில் ஹார்ட் ஐ ம் ஈகர்லி வெயிட்டிங் டூ சீ யூ! எப்போ வருவ இன்னிக்கி எப்படியும் வந்து என் கிட்ட பேசிடு டி! என்று அவளுக்கு இணையாக தயாராகி கிளம்பபினான்…

தொடரும்… 

EPI 29

          Girl friend!.. நீ!. 

பூஜா சொல்வதை போல் இன்னிக்கி அழகாவா இருக்கேன். என நினைத்து கொண்டே இதன்யா தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்ள அவள் பின்னால் சித்தார்த் அருகில் நிற்பது போல் தெரிய.

ஹே அந்த கண்ணாடியை கழட்டு டி என்று காதோரம் சித்தார்த்தின் குரல் கேட்டது. 

மு…முடியாது.. முடியவே முடியாது! என அவள் திக்கி திணறி சொல்ல

சித் அவளின் காதுக்கு அருகில் நீ என்ன கலட்டுவது நானே கலட்டுறேன் டி என அந்த காந்த குரலில் மிகவும் மெதுவாக  கூறினான். 

அதெல்லாம் முடியாது! என கொஞ்சம் சத்தமாக சொல்லி கொண்டே இதன் யா கண்ணாடியை பிடித்து கொண்டாள். 

பூஜா,”ஹே இதன்யா அதுக்கு எதுக்கு இப்படி கத்துற அந்த கண்ணாடியை நீ போட்டு கிட்டு வாடி ஆத்தா, இனி உன் கிட்ட நான் கழட்டு அப்டின்னு சொல்லவே மாட்டேன் டி போதுமா!

பூஜா! பூஜாவா! கழட்ட சொன்னாள்! என இப்பொழுது தான் அவளுக்கு கண்ணாடியை கழட்ட சொன்னது பூஜா என தெரிந்தது.

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். ம்ம் கஷ்டம் டி உன்னை வைத்து ஒன்னும் பண்ண முடியாது என இதன்யாவின் மனம் நொந்து கொண்டது.

ஸ்கூல் பஸ்ல அனைத்து ஆசிரியர்கள் , பணியாளர்கள் அனைவரும் ஏறி கொண்டனர்.

இதன்யா, பூஜா இருவரும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அவள் கைகள் வண்டி ஸ்டார்ட் செய்யும் போதே கைகள் வியர்க்க தொடங்கியது.

பஸ்ல ராதா இருவரையும் பார்த்து விட்டு இதன்யா இன்னிக்கி சூப்பரா இருக்க மா! 

ரொம்ப தேங்க்ஸ் டீச்சர்! 


டெய்லி யூனிபார்ம் ஸாரில பார்த்து விட்டு இன்னிக்கு கலர் சாரி யூ லுக் பிரிட்டி டா…

மிஸ் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ரொம்ப தேங்க்ஸ் என இதன்யா கூறினாள். 

பூஜா நீயும் நல்லா இருக்க டா என அவர்கள் பேசி கொண்டு வந்தனர். ஒரு அரை மணி நேரத்தில்  காலேஜ் வந்தது. அந்த பஸ் நேராக  உள்ளே வண்டி சென்றது.

இப்பொழுது அனைவரும் அந்த இடத்தை சுற்றி முற்றி பார்க்க உள்ளே சென்றதும் இதன்யாவின் கண்கள் தன்னிச்சயாக சித்துவை தேடியது.

அனைவரும் கீழ இறங்கி விட நேராக பங்ஷன் நடக்கும் இடத்துக்கு சென்றனர் கிருஷ்ணன் அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார். 

ஸ்கூல், காலேஜ்ல வேலை செய்யும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஒவ்வொருவராக மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்து விட்டு பேசி வந்தனர்.

அதே போல் இதன்யா , பூஜா, ராதா, ஜெனிட்டா , சம்பத், சேகர், தீபன், ராகுல் என பள்ளியில் வேலை செய்வோர் போய் வணக்கம் கூறி கொண்டு வந்தனர்.

ரிஷியை இதன்யா அங்கு எதிர்பார்க்கவில்லை. அவனை கண்டு கொள்ளாமல் அவள் செல்ல ரிஷி அவள் பேசாமல் போவதை பார்த்து மனம் கனத்து போனது.

ரிஷி உடனே அவளை பின் தொடர்ந்து சென்றான்.

சரியாக அதே நேரம் சித்தார்த் கிரே காலர் கோட் ஷூட் ல அழகாக அந்த உடைக்கு பொருத்தமான கருப்பு நிற ஷூ, கூலேர்ஸ் ஒரு கையில் ரோலக்ஸ் வாட்ச் என மிகவும் மிடுக்காகவும் கடுமையாகவும் உள்ளே நுழைந்தான்.

அந்த ஆடிட்டோரியத்தை ஒரு பார்வை ஓட விட்டான். இதய ராணி எங்கு இருக்கிறாள்? என்று பார்க்க அங்கு பூஜா மட்டும் இருந்தாள். 

எங்கே போயிட்டா? இவள் என தேடி விட்டு தன் தாத்தாவிடம் வந்து பேசி அருகில் அமர்ந்து கொண்டான்.

தன் போன் எடுத்து சதீஷ்க்கு கால் செய்து இதன்யா எங்கே இருக்கிறாள்?  என பார்க்குமாறு கூறினான்.

ரிஷி, தனு நில்லு…

அவள் பேசாமல் சென்றாள். 

என்னை பார்த்து விட்டு பேசாமல் போற என சொல்லி கொண்டே அருகில் நடந்தான். .

இதன்யா, சொல்லுங்க சார்…

என்ன சார்ன்னு கூப்பிடற? 


பின்ன எப்டி கூப்பிடறது சார், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போகிறேன்.

உடனே ரிஷி அவள் முன்னால் போய் நின்று கொண்டான்.

சதீஷ் – சித்துவிடம் இங்கே சார் மேடம் ஆடிட்டோரியம்க்கு வெளியே வெளியே என தயங்கி கொண்டே இருக்க 

ம்ம் வெளியே என்ன? 

அவங்க? 


ம்ம் சீக்கிரம் சொல்லு…

அவங்க கிட்ட ரிஷி சார் பேசி கொண்டு இருக்கிறார். என அவன் சொல்லி முடிக்கும் முன் அழைப்பு துண்டிக்க பட்டது.

சித் பற்களை கடித்து கொண்டு கோபமாக ப்ள** f**trash என சில மொழிகளை சொல்லி சட்டென்று எழுந்து அவளை பார்க்கும் முன் ஒருவருக்கு கால் செய்தான்.

ஹே எங்க இருக்க? 

ம்ம் ஆன் தி வே இதோ வந்துடுவேன்…

சீக்கிரம் வா என பேசி விட்டு  சென்றான்.

இங்கே ரிஷி அவள் முன் நின்றான். 

அவள் கொஞ்சம் கோபமாக வழிய விடுங்க சார்…

ஏன் தனு என் கிட்ட சரியாக பேச மாட்டிங்கிர? 

உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல என்று அவள் செல்ல

ரிஷி அவள் கைகளை பிடித்து கொண்டு நின்றான். 

இதன்யாவுக்கு சுருக்கென்று கோபம் வந்தது. என் கையை விடுங்க…

நீ எப்பொதும் போல பேசு தனு…

பிளீஸ் என் கையை விடுங்க என அவள் சொல்லி கையை உதரும் நேரம் சித்தார்த் பார்த்து விட்டான்.

க்கும்.., என்று சத்தம் வர இருவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கு எந்த ஒரு வெளிப்பாடும் முகத்தில் இல்லாமல் சித்தார்த் இவர்களை நோக்கி நடந்து வந்தான். 

உடனே ரிஷி, சார் என்று சொல்ல சித்து முறைத்தான்.

இப்போது இதன்யா முன்பு எப்படி மாமா என்று அழைப்பது? அப்படி அழைத்தால் ஏன் என கேள்வி கேட்பாள் என ரிஷி யோசித்து கொண்டே நின்றான். 

ம்ம்ம் வாங்க மிஸ்டர் ரிஷி… என்று சொல்லி அவன் திரும்பினான். 

இதன்யாவின் மனதில்” நம்மை பற்றி எதுவும் தவறாக நினைத்து இருப்பானோ!” என உள் மனம் கவலை கொண்டது.

சித்தார்த் மேல் இருந்து கீழ் வரை அவளை எந்த ஒரு வெளிப்பாடும் முகத்தில் இல்லாமல் பார்த்து விட்டு செல்ல அதுவே அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது.

இதன்யாவின் மனம் இப்போ கிளம்புவதற்குமுன் ஒரு முறை மட்டும் அவரிடம் பேசி விட வேண்டும் என நினைத்து கொண்டாள்.

சித் நடந்து கொண்டே இருக்க ரிஷி முன்னால் சென்று விட்டான். 

சித்த்வின் போன் அடிக்க அதை அழுத்தி காதில் வைத்தவன் மம் வந்துவிட்டாயா? 

இதோ உள்ளே நடந்து வந்து கொண்டு இருக்கிறேன் என மூூச்சு வாங்க கூறினாள்.‌

நான் சதீஷ அனுப்புகிறேன் என சித் சொல்லி விட்டு அந்த புதியவரை உள்ளே அழைத்து கூட்டி வரும  பொறுப்பை  சதீஷ்  கிட்ட கூறினான். 

இதன்யாவுக்கு  அவன் தனியாக இருப்பது தெரிய இதை விட ஒரு நல்ல தருணம் கிடைக்காது என நினைத்து சித்தார்த்தின் அருகில் சென்றாள்.

இதன்யா தயங்கி கொண்டே “சார்” என்று அழைக்க

அவன் திரும்பி பார்க்காமல் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தான்.

சார் பிளீஸ் நான் உங்க கிட்ட பேசணும்!  ஒரு நிமிடம் நில்லுங்க  என்று அவள் சித்துவின் பின்னால் சென்று கொண்டே ” நீங்க நினைப்பது போல இல்லை!”.. பிளீஸ்.! 


சித்தார்த் நின்று அவளை பார்த்து “அன்னிக்கே நான் உங்க கிட்ட கேட்டேன்! நீங்க ரிஷிய லவ் பண்றீங்களான்னு, என் கிட்ட இல்லன்னு சொல்லிட்டு இங்கே!”… என அவன் நிறுத்தி கொள்ள

அவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. “பிளீஸ் என்னை நீங்க மட்டும் தவறா நினைக்காதீங்க என்று அழ ஆரம்பித்தாள். 

சித் அவளை கண்டு கொள்ளாமல் சில அடிகள் முன்னே சென்றான்.

இப்போது மனம் கேட்காமல் என் கிட்ட பேச மாட்டீங்களா!… என்னை பார்க்க மாட்டீங்களா!.. என்று அவள் கேட்க

சித்தார்த் மனது அவள் பக்கம் குதித்தது. இருந்தாலும் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் அவளை பார்த்தான். 

“உங்க கிட்ட பேச என்ன இருக்கு? அண்ட் உங்களை நான் எதுக்கு பார்க்கனும்?  நீங்க என்னோட ஸ்கூல்ல வொர்க் பண்ற ஒரு ஸ்டாப் ஜஸ்ட் ஸ்டாப் தட்ஸ் ஆல்.”

அவள் திடகைத்து கொண்டே கண்களில் கண்ணீருடன் பார்த்தாள். 

 சித் அதோட நில்லாமல் “இவளோ எக்ஸ்பிளைன் நான் யாருக்கும் கொடுத்தது இல்ல, என்னோட எனர்ஜி வேஸ்ட் ஆகுது.”

இதன்யா விம்மி கொண்டே அவன் அருகில் வந்தவள்.கைகளை குலுக்க நீட்டி “நம்ப ரெண்டு பேரும் ஃப்ரெண்டா இருக்கலாமா? பிளீஸ் சண்டை வேண்டாம். முதல் நாளில் சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் நான் உங்களை தப்பா புரிந்து கொண்டேன்.” என தன்னை சமன் படுத்தி கொண்டே அவனை பார்த்தாள். 

மேலும் இதன்யா, “ரிஷி சார் என் கிட்ட பேச வந்தாரு நான் அவாய்டு பண்ணேன் அதனால் என் கையை பிடித்து விட்டார். இவளோ பிரச்சனை நமக்குள்ள எதுக்கு சண்டை வேணாம். சமாதானம் ஆகி விடலாமே சார், நான் எதுவும்  உங்களை தவறா பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்! இப்போ ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு ஓகே வா?  என்று அவள் கள்ளம் கபடமற்ற முகத்தில் சித்தார்த்தை நோக்கினாள். 

சித்தார்த் பிறை போல் புன்னகைத்து விட்டு விட்டு ம்ம்ம் நல்ல டீலா இருக்கே ஓகே என்று அவன் கைகளோடு குலுக்க இதன்யா ஒரு நிமிடம் சந்தோஷத்தில் புன்னகைத்தாள்.

ரொம்ப தேங்க்ஸ் சார்…

சித்து கைகளை குலுக்கி கொண்டே இருந்து அவளை கைகளோடு அவன் பக்கம் இளுத்துக்கொள்ள இதன்யா இதை எதர்பார்க்கவில்லை.

என்ன பண்றீங்க?  நான் தான் உங்க கிட்ட ப்ரெண்ட் அப்டின்னு சொன்னேனே? 

 ம்ம் ப்ரெண்ட் ஆமா இப்போ நான் இல்லன்னு சொல்லலையே.. என்று அவளை ஒட்டி உரசி நின்று கொண்டான்.

“அப்புறம் எதுக்கு இப்படி பண்றீங்க,  என் கை கையை விடுங்க!” என கைகளை உருவி கொள்ள அவள் முயற்சி செய்தாள். 

“நீ என்னோட பிரெண்ட் ஹ ஹ ஹா!   என்னோட  கேர்ல் ப்ரெண்ட்  சரி தானே!” என்று அவளை சுவற்றீல் ஒட்டி நிற்க வைத்தான். 

இதன்யா “கேர்ல் பிரென்ட்டா! என அதிர்ச்சியுடன் அவள் வாய் திறக்க 

சித் இதற்கும் மேல் தன்னை கட்டு படுத்த முடியாமல் அவளின் இதழ்களில் விழுந்தான். அந்த ஜதி மல்லியின் வாசமும் அவளின் வாசமும் ஒன்று சேர்ந்து வர சித்தார்த் அவளை இடையோடு அவன் புறம் இழுத்தான்.

இதன்யா அவனை தள்ளி விட சித்தார்த் சிரித்து கொண்டே “ஹே இப்போ எதுக்கு தள்ளி விடுற நீ என் கிட்ட ப்ரெண்ட் அப்டின்னு சொன்னா அதை நான் இப்படி தான் எடுத்துக்குவேன்.!” என்று சொல்லி கொண்டே அவன் கைகள் அவள் மேல் ஊறியது. 

இதன்யா அவனை முறைத்து  தள்ளி விட்டு அங்கு இருந்து செல்ல அவளை மீண்டும் இடையோடு இழுத்தான். “நீ தான் என்னை தேடி வந்த சரி தானே!” 

 அவள்  அவனிடம் மீண்டும் புரிய வைக்க முயற்சி செய்து ” இல்ல நான் ரிஷி சாரை பற்றி சொல்ல வந்தேன்!”என்று கூறினாள். 


நான் உன் கிட்ட கேட்டேனா? 


அவளிடம் பதில் இல்லை…

ம்ம் சொல்லு என்று அந்த புடவையை அவள் இடை தெரியாமல் இருக்க சரி செய்து கொண்டு இருந்தான்.

“நீங்க தவறா நினைக்க கூடாது அப்டின்னு தான் சொல்ல வந்தேன்!  ஆனால் நீங்க இப்போ என்ன பண்றீங்க என்னை விடுங்க!”

அதை பற்றி உனக்கு என்ன? என சித் இரு புருவமும் தூக்கினான். 


அது! அது! அவங்கள உங்க தங்கை லவ் பண்றாங்க அதனால் தான்…

ம்ம் சரி அப்புறம் நீ தானே பேசமாட்டிங்களா , பார்க்கமாட்டிங்களா அப்படின்னு எதுக்கு என் கிட்ட கேட்ட.???.மேலும் சித் அவளுக்கு முன்னால் சென்று அவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக நடந்தவன். 

எதுக்கு பேசமாட்டிங்களா? அப்படின்னு கேட்ட? 

என் வழியில் நான் போகும் போது எதுக்கு மேடம் என்னை பார்க்க மாட்டிங்களா அப்டின்னு கேட்ட சொல்லு என அருகில் நெருங்கினான். ம்ம்ம்ம்… 

இதன்யா…? 

தொடரும்….

EPI 30

சித்து அவளிடம்  நீ தான் என் கிட்ட வந்து பேசமாட்டின்களா? என்னை  பார்க்கமாட்டிங்களா அப்டின்னு கேட்ட? 

ம்ம் ஆமா, என்று அவள் அவனை விலக்கி, நீங்க தானே என் கிட்ட ரிஷி சாரை பற்றி சொன்னீங்க , அதை பற்றி எக்ஸ்பிலைன் பண்ணி  சொல்ல கூப்பிட்டேன். அப்போ நீங்க பேசாமல் போனீங்க? அதான்

மேலும் அவள் “எப்போ பார்த்தாலும் எதுவும் பிரச்சனை வருது, தயக்கத்தோடு எதுக்கு பேசணும்? ப்ரெண்ட் ஆ இருந்தா, எந்த பிரச்சனையும்  இல்லை,எந்த தயக்கமும் இல்ல, அப்போ நம்ப ரெண்டு பேரும் பிரென்ட் ஆ இரு… எதோ சொல்ல வருவதற்குள்

சித்து, “உன்னை என்னால ப்ரெண்ட் ஆ பார்க்க முடியாது”.

அப்புறம் வேற என்ன? என்று அவள் முறைக்க நீ என்னோட கேர்ல் ஃப்ரெண்டா இரு!… என்று கூலாக கூறினான். 


“உங்க ஸ்டுபிட் டாகிங் என் கிட்ட வேணாம் என்று அவள் சொல்லி அவனை விலக்கி செல்ல எத்தனித்தாள்.

“லிட்டில் ஹார்ட் ஓவரா பண்ணாத” என்று சித்து அருகில் உரசி கொண்டு வந்தான். 

உடனே அவள் என்ன என்று இரு புருவம் நெறிக்க பார்த்தாள். 

சித் அவளின் புருவ மத்தியை சுண்டி விட்டவன். அவள் கன்னம் வருடி,” இந்த சாரி உனக்கு நல்லாவே இல்ல! உன்னோட அழகை இன்னும் அதிகமா கூட்டுது.  இனி இவளோ அழகா ஸாரி கட்டாத நீ ரொம்ப எக்ஸ்பென்சிவ் டி! இந்த ஸாரில உன்னை எல்லாரும் ரசிக்க கூடாது என்று சொல்லி அவளை கொஞ்சம் மென்மையாக அதரங்களை அவன் உதடுகளால் இழுத்தான்.

அவள் அவனை தள்ளி விட முயற்சி செய்ய “ஹே நீ தான் என்னை தேடி வந்த அவ்ளோ தான் இனி நீ மொத்தமும் எனக்கு சொந்தம்! .. என்று அவள் காதுக்கு அருகில் சொல்லியவன்.” ” நீ என்னோட கேர்ல் பிரென்டா இருக்க வேனாம்!”

அவள் கோபமாக அவனை பார்க்க
“உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன் டி அந்த  கல்யாணமும் உன் விருப்பத்தோடு தான் நடக்கும்!” 

“உங்க நான்ஸன்ஸ் டாக் எல்லாம் என் கிட்ட வேணாம்.”

சித்து, “உன் மனச தொட்டு சொல்லு என் மேல உனக்கு ஃபீலிங்ஸ் இல்லையா!”

இதன்யா எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவள் மம் சரி தான் இருந்தது. ஆனால்!

அவன் முகம் பிரகாசமாக அவளை பார்த்தான். 

“ஆனால், ….அது நீங்க ஒரு ஆக்டர், ஒரு ஆண் அதனால் ஒரு அட்ராக்சன் அவ்ளோ தான்!.. அதுக்கு தான் உங்க கிட்ட பேசினால் எனக்கு அப்படி தோணாது..

“உன்னை கொன்றுவேன் டி!”


“நான் என்ன பண்ணேன் நீங்க தான் என்னை தொல்லை பண்றீங்க!”இதன்யா, நீங்க தான் ஒரு பொண்ணை காதலிக்கரீங்க, அப்புறம் என்ன?   எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கல!  கல்யாணமா? நானு.?  உங்களை! எதுக்கு? ..அய்யோ சிரிப்பா இருக்கு! 

 சித், “நான் ஒன்னும் காமடி பண்ணல சீரியஸ்சா சொல்றேன். உன்னோட முதல் அது நானா தான் இருக்கணும்… மைன்ட் இட்!”

இதன்யா, “என்னோடவனும் ஒருவனுக்கு ஒருத்தியாக என்னை மட்டும் நெனைக்கணும் அது நிச்சயமா நீங்க இல்ல!”.

உன்னோட வாய் இருக்கே” ப்பா!.. இதுக்கு ஒரு நாள் இருக்கு டி! ஆனால் இப்போ இதை சும்மா விட கூடாது.” என்று உதடுகளை வருடி திருகி விட அவள் வலியால் அவன் கோட்டின் உள் சட்டையை பிடித்து இழுத்து தள்ளி விட அதில் ஒரு பொத்தான் கீழ விழுந்தது.

சித்தார்த் சிரித்து கொண்டே” பாரு டா லிட்டில் ஹார்ட்க்கு இன்னும் கோபத்தில் முகம் எல்லாம் சிவக்குது.!”

ஹே ராஸ்கல் விடு… என்று அவள் கஸ்ட பட்டு உதடுகளை அசைக்க..

சித்து,” ம்ம் இப்போ கோபத்தில் சிவந்தது போதும் இப்போ என்னால உன்னோட முகமும் இந்த ஸ்வீட் லிப்ஸ் செர்ரி பழ கொத்து அதை டேஸ்ட் பண்ண போறேன். அதனால இன்னும் சிவக்கும் பாரு.” என்று அவன் இதன்யா முகத்துக்கு நெருங்கி வர…

“ஹே ஸ்கவுண்ட்ரல் தள்ளி போடா… என அவள் தலையை மட்டும் பின்னால் இழுத்து கொள்ள

” டா ” வா! மம் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் என்று அவளின் பின்ன தலையை  இழுத்து வேக வேகமாக முத்தமிட ஆரம்பித்தான்.

அவன் சொன்னது போலவே இதழ்கள் இரண்டும் சிவந்து வீங்கி போனது.

அவளது  உதடுகளை துடைத்து விட்டு மூக்கோடு வலது இடது புறம் அவன் மூக்கு உரசி விட்டு  “என்னோட ஒருத்தி நீ மட்டும் தான்” நீ மட்டும் காட் இட் மை வேர்ட் அண்ட் திங்க் இட்… என்று சொல்லி ஸ்டைலாக கூலேர்ஸ் எடுத்து போட்டு கொண்டு அங்கு இருந்து சென்றான்.

சித்து, சதீஷ்….

பாஸ் இந்த பக்கம் நான் யாரையும் விட வில்லை..

இங்கே இவளோ நேரம் கார்ட்ஸ் இருந்தாங்க.. 

ம்ம் குட் என்று சித்தார்த் சொல்லி விட்டு அவன் இடத்தில் போய் அமர்ந்தான்.

சித்தார்த் உடனே  அந்த நபருக்கு கால் செய்ய” டேய் ரெண்டு நிமிடம் டா கொஞ்சம் மேக் அப் போட்டு கிட்டு இருக்கேன்.

ஹே இப்போ வரல உன்னை!.  என்று அவன் எதோ கூற வர அவள் உள்ளே வந்தாள்.

அழகிய முகம், அளவான கூந்தல், பெரிய இடத்து பெண்களுக்கே உரிய தோற்றம், அவளுடைய உடையும் நடையும் சொன்னது.அவளும் சித்தார்த்துக்கு தங்கை என்பது பார்த்தாலே தெரியும்  செதுக்கி வைத்த வெண்கல சிலை போல் இருந்தாள் உள்ளே சித்தார்த்தை பார்த்து கொண்டே கண்களால் இன்னொருவரயும் தேடி கொண்டே உள்ளே வந்தாள்.

யார் அவள்? ரோஷினி ரவிச்சந்திரன். சித்தார்த்தின் தங்கை கண்கள் தன் தங்கையை ஒரு நிமிடம் பார்த்து விட்டு அடுத்து இதயராணியை தான் தேடியது.

சித்துவால் சிவந்த உதடுகளோடு இன்னொரு கதவு வழியாக சித்தார்த்தை எரித்து விடும் கண்களில் பார்த்து கொண்டே உள்ளே வந்தாள் இதன்யா .

ரோஸினி ,”ஹே சித்து வந்துட்டேன் இப்போ ஓகே வா!  வா!” கேட்க,

 அவனிடம் “ம்ம்” என்று ஒற்றை பதில் மட்டுமே,

இங்கே ரிஷிக்கு அவளை பார்த்ததும் கோபம் தலைக்கு ஏறியது.

இவளை! இவளை யார் இங்கே வர சொன்னது? என் தனு இங்கு இருக்கிறாளே!. இவளிடம் போய் பிடிக்க வில்லை. என்று சொல்லி விட வேண்டும். என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே கிருஷ்ணன் பேச ஆரம்பித்தார்.

“ஆல் ஆஃப் யூ குட் ஆப்ட்டர் நூன், இன்னிக்கு நம்ப இங்கே என்று அவர் பேச ஆரம்பித்தார். இந்த உழைப்பு எல்லாம் உங்களுடையது இந்த மாத சம்பளத்தில் இருந்து 10% கூட்ட படுகிறது.” இதை கேட்டு அனைவரும் உற்சாகமாக கைகளை தட்டினர்.

கிருஷ்ணன் காதுகளில் சித்து எதோ சொல்ல

“இந்த நாளை இன்னும் சிறப்பாக்க  எங்கள் வீட்டு வருங்கால என்று கிருஷ்ணன் நிறுத்த இதன்யாவுக்கு தூக்கி வாரி போட்டது.” ஒரு வேளை நம்மை பற்றி சொல்லி இருப்பானோ? என்று அவள் யோசிக்க

சித்தார்த் அவளுக்கு தெரியும் வண்ணம் ஒரு குறுநகை சிந்தினான்.

“ம்ம் எங்க வீட்டு வருங்கால மாப்பிள்ளை ரோஷினி கல்யாணம் பண்ண போரவங்களை முதல் முறையாக இந்த இடத்தில் அறிமுக படுத்துறேன்.” என சொன்னதும் தான் இதன்யாவுக்கு நிம்மதியாக இருந்தது.

ரோஷினி சிரித்த முகத்துடன் ரிஷியை நோக்கி நடந்து சென்றாள்.

ரிஷி இதன்யாவை பார்க்க அவள் சிரித்த முகத்துடன் அவனை பார்த்தாள்.

ரிஷி,  “தனு!”  என மனம் நொந்து போனான். இருந்தும் என்னோட காதலை உன் கிட்ட கட்டாயம் சொல்லுவேன் டி. ஒரு வேளை யாரவது எதும் நினைத்து கொள்வார்கள் என்று நீ சிரிக்கிற மாதிரி தோணுது! என்று அவன் நினைத்து கொண்டு இருக்க..

ரோஷ்ணி வந்து அவனிடம் கைகளை நீட்டினாள். ரிஷி எட்ச்சிலை வேகமாக விழுங்கி கொண்டே பார்க்க 

சித்தார்த் கோபத்தில் பார்க்க  கிருஷ்ணன் ஆர்வத்தில் அவனை பார்க்க வேறு வழியின்றி கஷ்ட பட்டு புன்னகைத்து அவளிடம் கை கோர்த்து கொண்டான்.

சித்தார்த் முதலில் கைகளை தட்ட அதை பார்த்து அங்கு இருந்த அனைவரும் தங்களுக்குள் எதோ பேசி கொண்டே கைகளை தட்டினர்.

ரிஷியின் பார்வை அவ்வபோது இதன்யாவை தொட்டு மீண்டது இதை ரோஷ்னி கவனித்தாள்.

அனைவரும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்ல ரிஷி ஒரு புன்னகை ரோஸ்ணியின் முகத்தை வந்ததில் இருந்து பார்க்கவே இல்லை.

சித்தார்த் அருகில் வந்த ரோஸ்னி, யாரு ஹ ஹுடுகி ??(யாரு அந்த பொண்ணு) ரிஷி அவளனு நோடுதானே!( ரிஷி அந்த பொண்ணையே பார்க்கிறான்).

சித்தார்த், நீ அதை ரிஷி கிட்டயே கேளு! 

“நான் எப்படி கேட்கட்டும் அவன் இப்போ கூட என் கிட்ட பேசவே இல்ல சித்து.”


சித்  எந்த வெளிப்பாடும் இல்லாமல்” நீ அந்த பொண்ணு கிட்ட கேளு.”

என்ன சொல்ற அண்ணா? 


ரோஷ்னி இதன்யாவை பார்த்து ” ம்ம் அது சரி அந்த பொண்ணு யாரு? என்னை விட அழகு கம்மி தான் அவ கட்டி இருக்க சாரி அவளை அப்படி அழகா காட்டுது சுமார் தான்.”

சித்து,ரொம்ப ஜலசா இருக்கோ…

“நா நானா நான் எதுக்கு பொறாமை படனும்?”


“அப்போ ஒத்துக்கோ.!”

வாட்? 


“அவ நல்லா இருக்கா!”


ஹே நீ ஆல்ரெடி ரிலேஷன்ஷிப் ல இருக்க…


சித்தார்த் எந்த தயக்கமும் இல்லாமல் “எனக்கு அவ வேணும் அப்டின்னு நினைச்சா, இப்போ கூட ப்ரேக் அப் பண்ணுவேன்.

இதை கேட்டு ரோசினி திகைத்து அதிர்ச்சியில் பார்க்க…
ஹே முதலில் ரிஷிய பாரு நான் சொல்றத இங்கேயே விட்டு விடு…

சரி அந்த பொண்ணு கிட்ட எப்படி பேசறது? என அவள் காரியத்தில் கண்ணாக இருக்க

சித்தார்த் வெயிட் அவளை இங்கே என்று எதோ நினைத்தவன்.” வேணாம் வா நம்ப அங்கே போலாம் என்று சித்தார்த் , ரோஸினி இருவரும் பூஜா, இதன்யாவை நோக்கி சென்றனர்.

 அங்கு இருந்த அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பேசி கொண்டு பூஜா, இதன்யாவை பார்க்க

பூஜா,”இதன்யா எல்லாரும் நம்மல ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.”

“அதுக்கு தாண்டி நான் சொன்னேன் இந்த புடவை வேணாம் அப்டின்னு இப்போ பாரு!” என்று தொடர்பே இல்லாமல் இதன்யா கூறினாள்.

“ஹே நம்மல பார்த்துக்கிட்டயே சித்தார்த் சாரும் அவங்க தங்கையும் வராங்க டி.!”

என்ன டி சொல்ற? என அவள் திரும்ப சித்தார்த் எந்த வெளிப்பாடும் இல்லாமல் அவள் அருகில் வந்து நின்றான்.

இதை பார்த்த ரிஷி வேக வேகமாக இதன்யா அருகில் நிற்க

இதன்யா அருகில் ரோஸினி வந்து நின்றாள். சித்தார்த், இதன்யா, ரோஸினிஅப்புறம் ரிஷி நிற்க

இதன்யா,சீனியர் வாழ்த்துக்கள்… என சொல்ல உடனே பூஜாவும் சேர்ந்து கொண்டாள்.

ரிஷி வேறு வழி இல்லாமல் தேங்க்ஸ் தனு, பூஜா என்று சொல்ல

ரோஸினி ரிஷியின் கையை தயக்கத்தோடு கோர்த்து கொண்டாள்.

எதெட்சயாக இதன்யா சித்துவை பார்க்க அவன் அவளை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் கண்கள் அவளின் கழுத்துக்கு கீழ் இறங்கி மேடு பள்ளம் முடித்து இடைக்கு வர

இதன்யா ஒரு நிமிடம் நெளிந்து கொண்டு “ராஸ்கல் எப்படி பார்க்கிறான் இவனை கண்ணுல h2so4 எடுத்து ஊற்ற வேண்டும் அப்படியே இரண்டு கண்களும் என்று மீண்டும் ஒரு முறை அவனை பார்க்க அவளுக்கு  மட்டும் தெரிவது போல் ஒரு குட்டி கண் சிமிட்டல் செய்தான். 

“அய்யோ பார்க்கிறானே!”இதற்கு மேல் இங்கு நின்றால் சரி இல்லை என நினைத்தவள். 

“ஓகே நீங்க பேசிட்டு இருங்க நாங்க என்று பூஜாவை சேர்த்து போறோம்”என  அவர்கள் இருவருக்கு இடையில் இருந்து இதன்யா நகர்ந்தாள்.

ஒரு நிமிடம் என சித்து….?

தொடரும்….

EPI 31

இதன்யா அவர்களிடம் “நீங்கள் பேசுங்க நாங்க போகிறோம்” என்று பூஜாவையும் சேர்த்து சொல்லி விட்டு இதன்யா அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்து தப்பிக்க நகர்ந்து செல்ல எத்தனித்தாள்.

சித்து,”ஒரு நிமிடம்”

இதன்யா வேறு வழி இல்லாமல் “என்ன” எண்பது போல் பார்க்க

சித்து, ரிஷி! 


“ம்ம் சொ.. சொல்லுங்க மாமா!”


“என்ன மாமா வா!” என ரோஷினி காதலாக ரிஷி யை பார்த்தாள்.

 சித் இதன்யாவை பார்த்து ” இவங்க யாருன்னு ரோஸ்னிக்கு இன்ட்றோ கொடு!”

ரிஷி ரோஷினியைப் பார்த்து விட்டு என்ன சொல்வது என முழிக்க இதன்யா “இதை சமாளிக்க வேண்டுமே!” என

“ஹாய் ரோஷினி மேம்! என்னோட பெயர் இதன்யா…அவங்க பெயர் பூஜா”

“நானு, பூஜா, ரிஷி சார் எல்லாம் காலேஜ்ல ஒண்ணா படித்தோம். நானும் ரிஷி சாரும் ஸ்கூல்மேட் நானும் பூஜாவும் கெமிஸ்ட்ரி, ரிஷி சார் பிசிக்ஸ் இப்போ நான் ஸ்கூல்ல வொர்க் பண்றேன்.”

“வாழ்த்துக்கள் மேம் நீங்களும் சீனியர் ஸாரி ரிஷி சாரும் மேட் ஃபார் ஈச் அதர்!” ரோஷினி இதை கேட்டு புன்னகைத்தாள்.

சித்தார்த்,” உன் நேம் எதோ தனு அப்படின்னு கூப்பிட்டான் இவன்! நிஜமாவே உன்னோட  பெயர் என்ன?” என வேண்டும் என்றே அவளை சீண்டினான். 

அது அது இப்போது ரோஷினி முகம் மாற

இதன்யா சித்தார்த்தை முறைத்து கொண்டே “என்னோட பெயர் இதன்யா அது  எனக்கு அக்கா இருக்கு அவள் பேர் நிதன்யா…. என் அக்கா தான் ரிஷி சார் பிரென்ட்” என்று சொல்ல ரிஷி முகம் வாடி போய் இருந்தது. 

மேலும் அவள் நாங்க ஒரே மாதிரி இருப்போம் அப்டின்னு சொல்லுவாங்க அதனால்  “ஒரு வேறுபாட்டுக்கு தனு அப்டின்னு collegeல கொஞ்சம் கூப்பிடுவாங்க!”

“ஓ பட் எனக்கு பிடிக்கல”என்று சொல்ல இதை கேட்டு பூஜாவுக்கு சிரிப்பு வந்தது.

“தாங்க்ஸ் ஃபார் யூ ர் காம்ப்லிமெண்ட்” என்று இதன்யா அவனை முறைத்து கொண்டே கூறினாள்.

ஓகே மேடம் நீங்க பேசுங்க நாங்க போறோம் ..

ரோஷினி, வெயிட் பண்ணுங்க இதன்யா நீங்க தான அவர் கூட படிச்ச பொண்ணு  அதனால் அவரோட ஸ்கூல், collegeல லைஃப் பற்றி  நடந்தது எல்லாம்  சொல்லணும்.

சாரி மேம் எனக்கு அந்த அளவுக்கு தெரியாது. நான் அவரோட ஜூனியர் அதுவும் வேற dept…

சித்தார்த் எதையோ யோசித்து விட்டு கூலாக.. “ரோஷினி  நீ இவள் அக்கா கிட்ட கேளு அவங்களுக்கு தெரிந்து இருக்கும்!”

இதை கேட்டு இதன்யா, ரிஷி இருவரும் திடுக்கிட்டு பார்த்தனர்

ரோஷினி , ஏன் அண்ணா? 


சித், இல்ல இவ அக்கா தானே ரிஷி dept அப்படி தானே ரிஷி! 

அவன் அதிர்ச்சியில் பார்த்தான்.


சித், நீ சொல்லு இதன்யா உங்க அக்கா நம்பர் கொடேன் ரொம்ப உதவியா இருக்கும் என்று அவன் கேட்க…

இல்ல அது முடியாது… என் அக்காவுக்கு மேரேஜ்  ஆகி விட்டது.

ரோஷினி, ஓ அப்படியா சரி ஓகே… நீங்க என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம்.

பரவாயில்ல மேம்…

சித்து, “ஓவர் சீன் போடாதீங்க மேடம் அப்புறம் பின்னாடி ரொம்ப வருத்த படுவீங்க என்று அவன் கைகுட்டை கொண்டு உதடுகள் துடைத்தான். 

இதன்யாவுக்கு அவன் கூற வரும் அர்த்தம் புரிய அவள் எதுவும் பேச வில்லை.தலையை கீழ குநிது கொண்டாள்.

ரோஷினி, “இங்கே எனக்கு கம்பனிக்கு ஆள் இல்லை நான் உங்க கூட ஜாயின் பண்ணிக்கவா!”

இதன்யா, “இல்ல மேம் ரிஷி சார் தனியா இருப்பாரு, நீங்க இப்போ தானே வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் டை ம் ஸ்பெண்டு பண்ணுங்க.”

இதை கேட்டதும் இதன்யாவை ரோஷினிக்கு மிகவும் பிடித்து போனது.

ரிஷி,ரோஷினி மேம் நான் கிருஷ்ணன் தாத்தா கிட்ட பேசிட்டு வரேன்…

ரோஷினிக்கு இதை கேட்டு முகம் வாடி போக

சித்தார்த், ம்ம் கல்யாணத்துக்கு முன்னாடி இப்போவே லவ் (slave) அடிமை ஆகிட்ட போல… இதை கேட்டு அவள்  கன்னம் சிவந்தாள்.

இப்போது சித், இப்போ நீ அவளை நிக் நேம் வச்சு கூப்பிடு….

ம்ம் சரி மாமா என வேறு வழி இல்லாமல் கூறினான்.

இப்போவே கூப்பிடு! 

என்ன மாமா கூப்பிட? 

கூப்பிடு டா…

ரிஷி திரு திறுவென முழித்தான்.

இதன்யா, ரிஷி சார் அவங்க காஸ்ட்யூம்க்கு டிஸ்னி பிரின்ஸஸ் மாதிரி இருக்காங்க நீங்க “டெடி” ” கேன்டி”அப்டின்னு கூப்பிடுங்க…

ச்சீ… என்று சித்து  முனகினான். 

இதன்யாஅவனை முறைத்து வேறு புறம் திரும்பி கொண்டாள். ரோஷினி கொஞ்சம் அதிர்ச்சியாக தன் அண்ணனை பாத்தாள்.

பூஜா சிரித்தாள்.‌

பூஜா,” ரிஷி அண்ணா “சுவீட்டி ” இது ஓகே வா! “

சித்தார்த், ம்ம் சூப்பர் பூஜா குட் திங்கிங்

பூஜா, “சார் என் பெயர் உங்களுக்கு தெரியுமா?  இது வரலாறு பதிவு சார்!”

இதை கேட்டு அவன் புன்னகைத்தான்.
“சார் ஒரு செல்ஃபி பிளீஸ்!”


சித்,ம்ம் எடுக்கலாமே என சொல்ல

உடனே ரிஷி , இதன்யா இருவரும் ஒரே நேரத்தில் விலகி செல்ல…

ரோஷினி-ரிஷியை ஏக்க பார்வை பார்க்க…

சித்- இதன்யாவை கோவ பார்வை பார்க்க

அவள் போடா என்று வேறு புறம் திரும்பி கொண்டாள்.

சித்து, ரோஷினி ரிஷி உன் கூட தனியா செல்ஃபி எடுக்க விருப்ப படறான் போ செல்லம்…அப்படி தானே ரிஷி…

ம்ம் ஆமா மாமா.. என்று வலியுடன் தலை ஆட்டினான்.

சித்து, பூஜா கம் என்று சொல்லி அவள் அருகில் ஒட்டாமல் தான் பதி பத்தினி ஆண் மகன் என நடந்து கொண்டான்  ஒரு செல்ஃபி எடுத்தான்.

அந்த போட்டோவை போனில் எடுத்து பூஜா ரசித்து பார்த்து கொண்டு இருக்க

அந்த நேரம் ஹாலை ஒரு நோட்டம் விட்டான்.

சித்தார்த்தை சுற்றி ஒரு நான்கு அடி தூரத்தில் கார்ட்ஸ் இருக்க வேறு யாரும் அவர்களை பார்க்க வாய்ப்பு இல்லை, அனைவரும் மதிய உணவு சாப்பிட தயார் செய்ய பட்ட இடத்துக்கு அழைத்து செல்ல பட்டனர்.

ரோஷினி, ரிஷியுடன் தாத்தாவை பார்க்க செல்ல,

இது தான் சரியான தருணம் என்று இதன்யாவின் இடையோடு இழுக்க அவள் அதிர்து கத்த போய் இருக்கும் இடத்தை பார்த்து வாயை மூடி கொண்டாள்.

சித்து அவன் போனில் லிட்டில் ஹார்ட் ஒரு செல்ஃபி.. என்று அவளை நெருங்கி அவள் அசரும் நேரத்தில் எடுத்தான். “ஹே தள்ளி போடா!.. அறிவு கெட்டவனே!”

 சித், “இங்கேயே ஒரு லிப் லாக் பண்ணிடுவென் வாய க்ளோஸ் பண்ணு டி”

இதன்யா, அய்யோ  பூஜா திரும்ப போறா  முருகா! முருகா…! பூஜா என அவள் சொல்லி முடிக்கும் முன் அந்த இடத்தை விட்டு அவன் சென்று விட்டான்.

சரியாக சித்து நகர பூஜா திரும்ப சரியாக இருந்தது. அவன் இங்கே என்ன நடக்கிறது என்ற முக பாவனையில் சென்றான்.

ரோஷினி  (நீவு நன்னோடிகா மாட்டானடுவுடிலேவா) நீங்க என் கூட பேச மாட்டிங்களா?…

உடனே ரிஷி, கொஞ்சம் தமிழ் தமிழ பேசுங்க…

உங்களுக்கு தான் கன்னடம் தெரியுமே, அப்புறம் என்ன…

ரிஷி, எனக்கு தமிழ் தான் பிடிக்கும் என் அம்மா கன்னடம் ஆனால் என்னோட அப்பா தமிழ் தானே நான் மொழிய எப்பவும் விட்டு தர மாட்டேன். என்னோட தாய்மொழி தமிழ் தான் எனக்கு வர போற மனைவி தமிழ் பொண்ணா இருக்கணும் அபடின்றது என்னோட கனவு ஆனால் என்னோட நேரம் என்று ரிஷி நிறுத்த ரோஷினிக்கு கண்ணீர் வந்து விட்டது.

ஆனாலும் அதை அவனிடம் காட்டி கொள்ளாமல் ம்ம் சரிங்க…

வாங்க போங்க இந்த பார்மாலிட்டி வேணாம்…

ரிஷி, போதும் உங்களுக்கும் எனக்கும் ஒரு வருஷம் தானே வித்தியாசம்.

ரோஷினி  நீங்க என்னை வாங்க போங்க அப்டின்னு கூப்பிடரீங்க? 

ரிஷி,”நீங்க தி கிரேட் ஆக்டர் ரவிச்சந்திரன் பொன்னு, அண்ட் தி கிரேட் பிஸ்னஸ் கிங் , ஆக்டர் பிசிக்சிஸ்ட் சித்தார்த் ரவிச்சந்திரன் அவரோட ஒரே தங்கை உங்களை எப்படி மரியாதை இல்லாமல்!” என ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நீ பொருத்தம் இல்லை நீ பண திமிர் உள்ளவள் என்பது போல் விஷம் தடவி பேசினான்.

“நான் அவ்ளோ பெரிய ஆள் இல்லை சாதாரண பொன்னு தான்”….

ரிஷி, “ம்ம் அப்படி பார்த்தால் கூட நீங்க b.tech நான் சாதாரண ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல ஒரு டிகிரி சோ உங்களுக்கு மரியாதை கொடுக்கணும் மேடம்!”

ரோஷினி இதை கேட்டு மனம் மிகவும் நொந்து போனது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக தன் தாத்தாவை பார்க்க சென்றாள்.

இங்கே சித்தார்த் சென்றதும் தான் இதன்யாவுக்கு உயிர் வந்தது.

பூஜா அவள் அருகில் வந்து ஹே இங்கே பாரு சித்து எவ்ளோ கியூட் என்று அவள் வருட

“ஹே போடி! அவனும் அவன் மூஞ்சும்.”


“எதுக்கு டி உனக்கு அவர் மேல கோபம்?”

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே “அது அது ஒன்னும் இல்ல அவனை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.”

ம்ம் வரும் வரும் இங்கே பாரு இன்னும் கொஞ்சம் பத்திகிட்டும்…. என அந்த புகை படத்தை அவள்  காட்ட அதில் சித்து பூஜாவை விட்டு தள்ளி நின்று  முகம் சுளிக்காமல் ஒரு போட்டோ எடுத்து இருந்தான்.

இதை பார்த்ததும் இந்த குணம் இதன்யாவுக்கு பிடித்து தான் போனது. ஒரு நிமிடம் அவன் எங்கு இருக்கிறான் என்று கண்கள் தேட அங்கே சிங்கம் போல் கம்பீரமாக அமைதியாக நின்று கொண்டு யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தான். 

அவள் மீண்டும் தன்னை சமன் செய்து கொண்டு சரி சரி போதும் வா நம்ப போகலாம்… என சொல்லி சாப்பிடும் இடத்துக்கு சென்றனர்.

அவர்கள் செல்லும்போது ராதா பூஜாவை அழைக்க அவள் இதன்யா நீ போடி நான் வருகிறேன். என அவள் சென்று விட்டாள். 

இதன்யா நடந்து சென்றாள். போகும் போது அங்கே
ரோஷினி ஒரு இடத்தில் நின்று கொண்டு கண்கள் கலங்கி கைகுட்டையில் துடைத்து கொண்டு இருந்தாள். 

இதன்யா , மேம் என்னாச்சு ஏன் உங்க முகம் சிவந்து போயிருக்கு? 


ஒன்னும் இல்ல இதன்யா…

“சரி மேம் ஆனால் உங்க கஷ்டம் யாருகிட்டயாவது ஷர் பண்ணா உங்களுக்கு நல்லா இருக்கும் நீங்க ரிஷி சார் கிட்ட சொல்லுங்க.”

இதை கேட்டு ரோஷினி இன்னும் அழுதாள்.

மேம் சாரி உங்க ரெண்டு பேர்க்கும் எதோ!.  சாரி மேம் நான் அதில் இன்டர்பர் ஆக மாட்டேன்..

நில்லுங்க மிஸ் இதன்யா! 


அவள் நிற்க…

நான் உன்னை  ஹக்  பன்னிக்கவா …

ம்ம் பண்ணிக்கோங்க என்று இரு கைகளையும் விரிக்க ஒரு குழந்தை போல் நீட்டினாள். 

ரோஷினி  அணைத்து கொண்டாள்.

இதை அங்கு வந்த சித்தார்த் பார்த்து விட்டு சரியான வசியகாரி என் தங்கையை கூட விடில…

“சரி வாங்க ரெஸ்ட் ரூம் போலாம் முகம் கழுவி கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகுங்க!”என அவள் அழைத்து செல்ல ரோஷினி  உள்ளே சென்றாள். இவள் வெளியே காத்துகொண்டு இருந்தாள்…

சித்தார்த் அழுத்தமான காலடிகளுடன் சிங்க நடையிட்டு வந்தான். 

என்ன சத்தம்? நடந்து வருவது யார்? என்று திரும்பி பார்க்க அது சித்து என தெரிந்ததும் வேகமாக ரெஸ்ட் ரூம் உள்ளே அவள் காலடி எடுத்து வைக்க இரண்டு எட்டில் அருகில் வந்து அவளின் கையை பிடித்து கொண்டான்.

ஹே விடு டா…

சித்தார்த் அவளை இழுத்துக் கொண்டான்.

இதன்யா அவனிடம்….?

நவீன் குமார் ஒரு வழியாய் மீட்டிங் முடித்து விட்டு தெம்புடன் உற்சாகமாக வீட்டுக்கு வந்தான். 

மோகன் ரெடியா!. என நவீன் கேட்க.. 

இன்னிக்கி என்ன நடக்க போகுதோ கடவுளே தயவு செய்து அவர் தேடிய பெண் இன்னிக்கு கிடைத்து விட வேணும். என நினைத்து கொண்டே தன்யா என்ற பெயரில் இருக்கும் அத்தனை பேரையும் கேட்டு அவர்களுடைய விவரம் எடுத்து அதில் கல்லூரி படிக்கும் பெண்களின் லிஸ்ட் தயார் செய்து போட்டோ கொண்டு வந்தான். 

நவீன் உடை மாற்றி கொண்டு புன்னகையுடன் இறங்கி வர இதுக்கு பின்னாடி எவ்ளோ வில்லங்கம் இருக்குமோ தெரியலயே!. என வாங்க சார் என அழைத்து அமர வைத்தான். 

நவீன் பாப் கார்ன் சுவைக்க மோகன் எடுத்து காட்ட ஆரம்பித்தான். 

தொடரும்…..

EPI 32

அவள் காதுகளில்  யாரோ பின்னால்  நடந்து வரும் காலடி சத்தம் கேட்டதும் திரும்பி பார்க்க அங்கே  சிங்க நடை போட்டு கொண்டு சித்தார்த் வந்து கொண்டு இருந்தான்.

அடுத்த நொடி அவள் வேக வேகமாக ரெஸ்ட் ரூம் உள்ளே செல்ல போக அவளின் கையை பிடித்து இழுத்தான்.

என்னை பார்த்ததும் அப்படியே உள்ளே போற.. அவ்ளோ பயமா என்று இதன்யாவை இழுத்து போட்டு கொண்டான்.

ஹே விடு டா எனக்கு உன் மேல பயமா

அப்போ இல்லையா? 

ஹே லீவ் மி என அவள் துள்ள 

சித்து, அதென்ன முருகா! . முருகா! …
யார் அது?

ம்ம் உன் கிட்ட சொல்லணும் அப்டின்னு எனக்கு அவசியம் இல்ல என்று அவள் துள்ள…

“ம்ம் நீ சொல்ல வேணாம் அப்போ கன்ஃபார்ம் தான் அன்னிக்கு கிஸ், போன்ல ஒரு கேர்ல் போட்டோ, இன்னிக்கு ரோஸினிய ஹக் பண்ற என்று  எல்லா சின்டம்ஸ் சும் பார்த்தால் ம்ம்! ம்ம்! ம்ம்!” 

ஹே என்ன சொல்றீங்க… இப்ப இப்போ என்ன சொல்ல வரீங்க
என அவள் திக்கி கொண்டே முகத்தில் கவலையுடன் அவனை பார்த்தாள். 


சித்து சிரித்து கொண்டே அவளை இழுத்து அதரங்களில் முத்தமிட்டான்.

அவன் முத்தமிட்டதும் கைகள் இரண்டையும் அப்படியே இறுக்கி கொண்டாள்.

அவளின் அதரத்தில் மென்மையாக இதழ்யுத்தம் முடித்து அவளை விட்டு அவன் விலகி சென்று எதுவும் நடக்காதது போல் நின்று கொண்டான்.

அவள் அவன் முத்தம் கொடுக்கும் போது கைகளை இறுக்கி கொண்டு எப்படி நின்றாளோ அப்படியே நிற்க ரெஸ்ட் ரூம்ல இருந்து வெளியே வந்த  ரோஸினி இதன்யாவை பார்த்தாள். 

சித்தார்த்தும்  ரோஸினி பார்ப்பதை போல் பார்த்து கொண்டு நின்றான்.

ஹலோ இதன்யா உங்களுக்கு என்னாச்சு !… என்று ரோஸினி குரல் கேட்க அவள் அப்படியே அதிர்ச்சியாக திரும்பினாள்.

அங்கே சித்தார்த், ரோஸினி இருவரும் இவளை பார்த்து  நின்று கொண்டு இருந்தனர்.

சித்தார்த் அவளை பார்த்து என்ன என்பது போல் இரு புருவமும் தூக்கி கண்களை சிமிட்டிட 

“ஒ.. ஒன்னும் இல்ல மேம்.. வாங்க போலாம்.. என் அவள் ரோஸினியை கூப்பிட்டாள். 

சித்,  ஹே என்ன அவளை ஹக் பண்ணிட்டு நின்னு கிட்டு இருந்த, ஒரு வேளை நீ  ரிஷியை விட்டு இவளை லவ் பண்றயா ரோஸினி…

அண்ணா! உன்னை!..  ஐ வில் கில் யூ! …  என்று சொல்லி அவனை அடிக்க கை ஓங்கினாள்.

என்ன மேம் அவரு என்ன சொல்றாரு? 


சித், ஹே என்ன அவளை மேம்… உன்னை இன்னும் கவனிக்கனும் போல
பேரு சொல்லி கூப்பிடு…

இதன்யா ரோஸினியைப் பார்க்க

“பெயர் சொல்லியே கூப்பிடு  இதன்யா இவன் ரொம்ப மோசமானவன்.”

ம்ம் ஓகே ரோஸினி வாங்க போகலாம்…
அண்ணா நீ போ நாங்க வரோம்… என்று சொல்ல சித்து அவளை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு கிளம்பினான்.

ரோஸினி,  இதன்யா நீங்க யாரையும் லவ் பண்றீங்களா! 

நீங்க வேற மேம் அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் இல்ல, நான் அம்மா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. என்று முன்னால் போகும் சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்தாள்.

இது அங்கே சென்று கொண்டு இருந்த சித்தார்த்துக்கு கேட்டது. “இரு டி… உன்னை இன்னும் நல்லா கவனிக்கனும்”என்று நினைத்து சென்று விட்டான்

ரிஷியை இம்ப்ரெஸ் பண்ண நான் என்ன பண்றதுன்னு, தெரியல இதன்யா..


“அச்சோ இதுக்கு போய் எதுக்கு ஃபீல் பண்றீங்க ரோஷினி அவர்க்கு பிடிச்சதை செய்து பாருங்க அவளோ தான்.!”

இதை கேட்டதும் ரோஷினி மனதில் ரிஷி சொன்ன விஷயம் எல்லாம் மனதில் ஓடியது.  ரிஷிக்கு தமிழ் பிடிக்கும். அப்டின்னு சொன்னானே! அப்போ நம்ப தமிழ் நல்லா படிக்க கற்று கொள்ள வேண்டும். என நினைத்து கொண்டே “இதன்யா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்!”


“ம்ம் சொல்லுங்க ரோஷினி!”

எனக்கு தமிழ் எழுத, படிக்க சொல்லி தருவீங்களா? 


என்ன சொல்றீங்க? 


“ம்ம் ஆமா அவருக்கு தமிழ் தான் பிடிக்குமாம் இந்த கன்னடகாரிய பிடிக்காதாம்.”

“இப்படி எல்லாம் பேசாதீங்க உங்களுக்கு ரிஷி சாரை நீங்க இம்ப்ரெஸ் பண்ற மாதிரி தமிழ் எழுத படிக்க சொல்லி கொடுத்து அதில் கவிதையுடன் நீங்க போய் கெத்தா நிற்க்க தான் போறீங்க கவலை பட வேண்டாம்.”

நமக்கு முருகன் இருக்கிறார்…

முருகனா….!

ம்ம் ஆமா ரோஷினி தமிழ் கடவுள் முருகன் என சொல்லி கொண்டே அவர்கள் சாப்பிடும் இடத்துக்கு உள்ளே வந்தனர்.

பப்பே சிஸ்டத்தில் உணவுகள் எல்லாம் வைக்க பட்டு இருக்க அவரவருக்கு பிடித்த உணவூகளை எடுத்து கொண்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

ரோஷினி இதன்யாவின் கைகளை பிடித்து கொள்ள அது அவளுக்கு புது வித உணர்வை கொடுத்தது.

எனக்கு வெஜ் தான் பிடிக்கும் என இதன்யா  எடுத்து வைத்து கொண்டாள்.

ரோஷினி, எனக்கு நான்வேஜ் தான் பிடிக்கும்…

இதன்யா அவசரத்தில் ரிஷி சாருக்கு வெஜ் தான் பிடிக்கும்…

உனக்கு எப்படி தெரியும்… அது அது வந்து நாங்க மம் புட் கோர்ட்ல ஒன்னா சாப்பிடுவோம்.

பிசிக்ஸ் dept ஃபுல்லா ரிஷி சார் பின்னாடி தான் சுத்துவாளுங்க…

சித், ம்ம் அதுல உன் அக்காவுமா என்று பின்னால் இருந்து குரல் கேட்க இதன்யா திகைத்தாள்.

டெல் மி!. 

அவள் பயந்து கொண்டு நின்றாள். சித்தார்த்தை முறைத்து பார்த்தாள். 

சித்து ” ஐ ம் ஜஸ்ட் கிட்டிங் போ உன் பின்னாடி யாரும் சுற்றி இருக்க மாட்டாங்க, அது தான் சோடா புட்டிய போட்டுகிட்டு இருக்கியே!”

ரோஷினி, அண்ணா நீ ஏன் இந்த பொண்ணை ரொம்ப டீஸ் பண்ற? அதுவும் நாண் ஸ்டாப்பா பேசுற உன்னை இவளோ பேசி பார்த்ததே இல்லையே!  அப்புறம் நான் தாத்தா கிட்ட சொல்லி விடுவேன்… என்று சொல்லி ரிஷியைப் பார்க்க சென்றாள்.

இதற்கு அவன் பதில் பேசாமல் இதன்யாவின் பின்னால் சென்றான்.

ஹே எதுக்கு டி இத்தனை நாள் எனக்கு சர்வ் பண்ண வரல.. ..

நான் எதுக்கு வரனும் என்று அவள் யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தை பிடித்து புளி குழம்பு வாசனையை முகர்ந்து கொண்டே சாப்பிட அதை பார்த்து சித்துவுக்கு அவள் விரலை சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

“லிட்டில் ஹார்ட் ” என்று அவள் அருகில் வர  ஹே கிட்ட வந்த நான் கத்திடுவேன்… என்று அவள் சொல்லவும் சித் கத்து கத்தி பாரேன். என அருகில் நெருங்கி அவள் கையை பிடித்தான். 

ஹே!  ஹே! என கையை ஆட்டிட சித் அவளின் கையில் இருக்கும் உணவை எடுத்து அவன் சுவைக்க ஆரம்பித்தான்.அவளின் ஒவ்வொரு விரலையும் சுவைக்க இதன்யா வின் முகம் குப்பென வியர்த்தது. இதயம் வேகமாக துடிக்க அவள் அப்படியே நின்றாள். 

சித் அவளை பார்வையில் கொஞ்சம் பருகி விட்டு டூ டேஸ்ட்! என சொல்லி உடனே சித்தார்த் சென்று விட்டான்.

சரியாக அந்த நேரம் பிரியா கால் செய்தாள்.

ஹே என்ன பண்ற, ஒரு போன் கூட மேடம் பன்றதே இல்ல…

இதன் யா காதில் வைத்தாளே தவிர வாயில் வார்த்தை வர வில்லை. 

ஹே என்ன டி பண்ற? ஹலோ இதயா!  என பிரியா கத்திட தன்னிலைக்கி வந்தவள் கையை பார்த்தாள். இப்போ ஹேன்ட் வாஷ் பண்ண முடியாதே! என  வாய் மொழியாக கூறினாள். 

ஹே என்ன டி மாடு பண்ற? 


பிரியா நான் கொஞ்சம் கொட்டிக்கிட்டு இருக்கேன் டி…

எனக்கு ….

ம்ம் புளி குழம்பு டி என்று சொல்லி சப்பு கொட்டியவள். உணவு பிசைந்து சாப்பிட்டாள். 

அச்சோ! அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி!. என இதன்யா நினைத்து கொண்டு இருக்க 

பிரியா,  ஹே தண்டம் நான் வைக்கிறேன்.   

என்ன ஆச்சு? இன்னிக்கு எல்லாமே சூப்பர் காளான் சில்லி சூப்பர் டி! உனக்காக நான் சாப்பிடுரேன் கோகுல்!. 


ம்ம் போதும் போதும் உன்னோட பில்ட்அப்பை நிறுத்து டி…

இதன்யா, இப்போ என்ன உனக்கு பிரச்சனை முதலில் சொல்லு என்னை சாப்பிட விடு டி…

இப்போ எங்கே இருக்க? நான் காலேஜ் ல இருக்கேன் டி…

எந்த காலேஜ் ல?,

உன் காலேஜ் ல தான் என இதன்யா கூறினாள். 


பிரியா சிரித்து கொண்டே” இதயா எனக்கு என்னமோ அது உன் காலேஜ் அப்டின்னு என் மனசு சொல்லிகிட்டே இருக்கு.”


ம்ம் சொல்லும் சொல்லும் வாய மூடு டி! 


ஹே இன்னிக்கு அங்கே என்ன வேலை?  என்று அவள் கேட்க

இதன்யா, சேர்பர்சன் வந்து இருக்காங்க..

யாரு சித்துவா? 


இல்ல கிருஷ்ணன் சார், ரோஸினி மேம்
யாரு அந்த ரோஸினி?

அவனோட தங்கை…

யாரு அந்த “அவன்”?

“பிரியா உன்னை என் கையில் மட்டும் நீ சிக்குன நீ கைமா தான்.” 


சாரி சித்து தானே…

தெரியுதுல்ல உன் வாய கொஞ்சம் மூடு…

பிரியா, உன்னோட இடுப்பில் கொஞ்சம் ஸாரி வெளியே தெரியுது போல

இதன்யா, ஹே என்ன சொல்ற என உடனே அவள் சாரியை பார்த்தாள். 


இதன்யா, பிரியா இது எப்படி உனக்கு தெரியும்?.  என்று சொல்லி அவள் இடையை சரி செய்ய

பிரியா, “அந்த பூஜா உன்னையும் அவளையும் சேர்த்து ஸ்டேடஸ் வச்சு இருக்கா அவளை பார்த்தாலே எனக்கு நிரம்ப டென்ஷன் ஆகுது!” 

என்ன டி அவ உன்னை பண்ணா …

நீ எதுக்கு அவள் கூட போட்டோ எடுக்குற இதயா! நீ  என்ன பண்ணிட்டு இருக்க….

இதன்யா, நான் என்ன பண்ணேன்…

ஒருத்தி சொல்லிட்டு திரிஞ்சா உள்ளூர் வெளியூர் எல்லாம் வாடகை ஸ்கூட்டி எடுத்து கிட்டு நான் TET எழுத போறேன் TET எழுத போறேன்னு. என பிரியா அவளை வாரினாள்..

இதன்யா, இப்போது கூட சொல்றேன் நான்!  

பிரியா, ஹே போடி இப்போ அதுக்கு ஆப்பு வச்ச்ட்டாங்க தானே ஒழுங்கா என் கூட வந்து PG ஜாயின் பண்ணி இருக்கலாம்.வந்து விடு இதயா டெஸ்ட் எல்லாம் வைக்கிறாங்க டி! செமினார் எடுக்க சொல்றாங்க டி! கூடவே என்ன என்னவோ பண்றாங்க ஆர்கானிக் ஃபாரின் ஆத்தர் புக் படிக்க சொல்றாங்க டி!  நீ வந்தால் நம்ம லை பிரரி போலாம் நீ புக் படிக்கலாம் நான் உன் கூட சேர்ந்து பொம்மை பார்ப்பேன். அப்புறம் தீனி நெறைய சாப்பிடலாம் உன் அளவுக்கு எனக்கு இங்கே யாரும் ஈடு இல்ல டி!  என பிரியா பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள். 

இதன்யா, உன் வாய் இருக்கே முருகா! மண்ணு வாயாக இருந்தது. எல்லாம் கொட்டி போயிடும் உன்னை எப்டி மேய்க்கிறான்க! 

பிரியா, இதயா எருமை மாடு வா அப்டின்னு சொல்றேன் நீ என்ன பேசுற உனக்கு என்னை விட அவ கூட அந்த பூஜா கூட சேர்ந்து ஆட்டம் போட்டுக் கிட்டு இருக்கிறாயா! 

 இதன்யா,  உனக்கு பூஜா கூட நான் இருப்பது உனக்கு பிடிக்கல அதை முதலில் சொல்லு டி!


ஆமா எனக்கு சுத்தமா பிடிக்கல நீ என்னோட பெஸ்டீ.! பூஜா கூஜா ஏறிச்சலா இருக்கு! சீனு காரி! நீ வாடி இதயா நம்ம ஜாலியா இருக்கலாம். 


இதன்யா சிரித்து கொண்டே சரி சரி இனி நான் அவ கூட போட்டோ எடுக்கல போதுமா…

அப்போ PG ஜாயின் பண்ணு டி…

இதன்யா, ஹே நான் இப்போவும் சொல்றேன் நிச்சயம் டெட் பாஸ் பண்ண தான் போறேன்…ஸ்கூல்ல ஜாயின் பண்ண தான் போறேன்…

பிரியா, இப்படியே ஊற ஏமாற்றி கிட்டு இரு டி அங்கே ஸ்கூல் ல இப்போ என்ன பண்ற lkg, ukg க்கு போயி
daddy finger !daddy finger!
where are you?
hear iam! hear iam!
how do you do! இதை தான பாடி கிட்டு சுத்திகிட்டு இருக்க

இதை கேட்டதும் இதன்யாவுக்கு சித்து அவளை கிண்டல் செய்தது நினைவு வர…கோபமாக “நான் TET exam எழுத தான் போறேன், ஸ்கூல் ல ஜாயின் பண்ண தான் போறேன் அதை நீ பார்க்க தான போற.”. என்று அந்த காளான் பக்கொடாவை கோபமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். 

பிரியா சிரித்து கொண்டே இதயா , நீ ஜாயின் பண்றதுக்கு முன்னாடி உன் குழந்தை ஸ்கூல் ஜாயின் பண்ணிடும் அப்டின்னு நினைக்கிறேன் டி…

இதை கேட்டதும் இதன்யாவுக்கு புரை ஏறியது மிகவும் புரை ஏற கண்கள் எல்லாம் கலங்க அவள் தலையை தட்டி தண்ணீர் கொடுத்தான்.
மெதுவா மெதுவா என்று சொல்ல அவள் தண்ணிரை குடித்து கொண்டே யார் என்று பார்த்து அதிர்ந்தாள்?

யார் அது?         

              ********

மோகன் “தன்யா”என்ற பெயரில் கல்லூரியில் படிக்கும் அனைத்து பெண்களின் விவரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தான். 

நவீன், இது இல்ல! இவள் இல்லை! யூ இடியட் அவளுக்கு லாங் ஹேர் இந்த பொண்ணுக்கு முடி இருக்கா! என கூறி கொண்டு இருந்தான். 

மோகன் மனதுள் எனக்கு எப்படி பாஸ் தெரியும்? என நொந்து கொண்டான். 

நவீன், உனக்கு தெரியணும்? என கடுகடுத்தான் 

மோகன், பாஸ் ஒன் மினிட் என்று அதில் அதிகமாக கூந்தல் உள்ள பெண்களை தேர்வு செய்தான். வெறும் பத்து பெண்கள் மட்டுமே இருந்தனர். 

நவீன், இல்ல இல்ல இதுல இருக்க யாருமே இல்ல என பாப் கார்னை தூக்கி எறிந்தான். ஒரு பொண்ணை உன்னால் கண்டு பிடிக்க முடியாதா! 

மோகன் மனதில்” நான் என்ன கடத்தல் காரணா இல்லை மேட்றிமோனி நடத்துகிறேனா?”

நவீன் நெற்றியை தேய்த்து கொண்டு அமர்ந்தான். “எங்கே இருக்க லக்கி கேர்ள்? இப்படி ஒரு பொண்ணுக்காக நான் அலைகிறேனே? உனக்காக என்னோட மொத்த சாம்ராஜ்ஜியம் காத்து கொண்டு இருக்கு!” என நினைத்து கொண்டு இருந்தான். 

அந்த நேரம் மோகனுடைய போன் மின்னியது. நவீன் அமைதியுடன் கண்ணை மூடி கொண்டு இதன்யாவின் வாசனையை காற்றில் தேடி கொண்டு இருந்தான். 

மோகன் போனில் சித்தார்த் பார்வையின் கீழ் உள்ள கல்லூரிக்கு NAAC குழுமம் A தர சான்று கொடுக்கப்பட்டு இருப்பதையும் மற்றும் அதற்கான கொண்டாட்ட படங்கள் அனைத்தும் நவீனுடய பிரத்யேக உளவாளிகள் எப்பொழுதும் போல் மோகனுக்கு அனுப்பி வைத்தனர். அதை சொல்ல தான் போன் செய்து இருந்தனர். 

மோகன் சரி என நவீனை பார்த்தான். நவீன் ஒரு பெரு மூச்சை விட்டு எழுந்து கொண்டு செல்ல…

மோகன் திரையில் சித்தார்த், ரிஷி, ரோஸினி, இதன்யா, பூஜா என அனைவரும் நின்று கொண்டு இருப்பது கூடவே அந்த மீட்டிங் பிக்ஸ் என அனைத்தும் புராஜக்ட்டரில் சேர் செய்து ஓட விட்டு பாஸ்! சித்தார்த் சார் காலேஜ் NAAC செளிபிரேசன்.. 

நவீன் அதை திரும்பி பார்க்காமல் படிகளில் ஏறி கொண்டே பிளீஸ்! நான் கொஞ்சம் தனியா இருக்கனும் எதையும் பார்க்க விரும்பல என சொல்லி கொண்டே மேலே ஏறினான். 

மோகன், ஓகே பாஸ் என அந்த பென் ட்ரைவ் அப்படியே வைத்து விட்டு திரையை ஆஃப் செய்தான். ஒரு வேளை நவீன் பார்த்து இருந்தால்? இது வேறு எங்கோ போயிருக்கும். 

நவீன் நேராக அவன் அறைக்கு சென்றான். சித்தார்த் என்ன செய்கிறான் என கண் காணித்து அவனை விட அவனுக்கு இணையாக எல்லா இடங்களிலும் கால் பதிக்க வேண்டும் என்பது தான் நவீன் ஆசை அவன் மனதுல் ஒரு நாள் உன்னை விட உயர்ந்த இடத்துக்கு செல்வேன் டா! என மனதுக்குள் சொல்லி கொண்டே இருப்பான். 

சிறிது நேரத்தில் நவீன் போன் அலறியது. 

அழைப்பை பார்த்தான். முதலில் நவீனுடைய  தந்தை குணசேகர் அழைத்து இருந்தார். எடுக்க வில்லை. அவனுடைய தாய் பத்மா அழைத்தார். அவன் பார்க்கவே இல்லை. சிறிது நேரத்தில் இன்னொரு ரிங் வந்தது. அந்த இசையை கேட்டதும் அடித்து பிடித்து போன் எடுத்தான். அதில் பிக் டாட்! என ஒளிர்ந்தது. 

நவீன் இவ்வளவு நேரமும் இருந்த அனைத்து எண்ணத்தையும் தூக்கி போட்டு விட்டு வேகமாக தன் மனதை சரி செய்து கொண்டு பதில் பேசினான். 

ஹலோ நான் ராஜ சேகர் பேசுறேன்!. 

நவீன், டாடி ஐ நோ! நீங்க எதுக்கு போன் பண்ணீங்க ஒரு வார்த்தை மோகன் கிட்ட  சொல்லி இருந்தால் நான் நேரில் வருவேன். 

ராஜ சேகர் சிரித்து விட்டு சரி நான் பார்க்கனும் எனக்கு நவீன் குமார் அப்பாயின்ட் மெண்ட் கிடைக்குமா!. 

டாடி இட்ஸ் நாட் ஃபேர்!. 

ராஜ சேகர், பத்மா, குணா ரெண்டு பேரும் புலம்பி கொண்டு இருக்காங்க ஒரு முறை வந்து போனால் நல்லா இருக்கும். 

நவீன், எனக்கு நிறைய வேலை இருக்கு டாடி!. 

ராஜ சேகர், இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்ப கண்ணா! என் ஆசை கனவு எல்லாமே நீ தான், உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க நான் ஆசை படுகிறேன். 

நோ!..‌‌

ராஜ சேகர், கண்ணா முடிந்த கதை முடிந்து போச்சு! அந்த ரவி சந்திரன் குடும்பம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? 

நவீன், டாடி நான் உங்களை என்னோட அப்பாவை விட நேசிக்கிறேன். உங்களை வேண்டாம் என சொன்ன  அந்த பவானியை நான் சும்மா விட மாட்டேன். 

ராஜ சேகர், நவீன் குமார்!. என கோபத்தில் கத்தினார். 

நவீன், டாடி! நீங்க எல்லாம் மறந்து இருக்கலாம். எனக்கு அந்த சிறு வயதிலும் கூட ரவிச்சந்திரன் உங்களை அவமான படுத்திய காட்சி  உங்க கலங்கிய  என் கண்ணுக்குள் நிக்கிது!.இப்போ பாருங்க விதி அந்த ரதி பெயரில் தலை விரித்து ஆடுது.

ராஜ சேகர், இது அர்த்தமில்லாத கோபம் கண்ணா!. 

நவீன், அப்புறம் எதுக்கு டாடி நீங்க வேற பொண்ணை கல்யாணம் செய்து இருக்க வேண்டியது தானே எனக்கு பிக் மம்மி வந்து இருப்பாங்க.. 

ராஜ சேகர் அமைதியாக இருக்க..

நவீன் ,  எனக்கு தெரியாது அப்டின்னு நினைக்க வேணாம். தாத்தா உங்களை மேர்ஜ பண்ணிக்க சொல்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை வேணாம் என சொல்ல காரணம் அந்த பவானி! அன்று அனைவர் மும்பும் பவானி உங்களை கட்டிக்க விருப்பம் இல்லை என சொள்ளியதால் அனைத்து பெண்களும் பவானியே வேணாம் என்ற தூக்கி போட்டவனை  எனக்கும் வேணாம் என எல்லா பொண்ணுங்களும் அவமானம் செய்தாகள். நீங்க எவ்ளோ அழகு ஆளுமை! உங்களை.. 

ராஜ சேகர், அது உண்மை இல்ல நவீன்! எனக்கு எந்த பொண்ணு மேலேயும் ஆர்வம் இல்ல.. 

நவீன், இல்ல டாடி இதுக்கு பவானி,  ரவிச்சந்திரன் தான் காரணம்.  அவங்களுக்கு பிறந்த அந்த சித்தார்த் அவனை….!.

ராஜ சேகர், நவீன் குமார் என கர்ஜனை செய்தார். 

நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நான் வரேன் என சொல்லி விட்டு போனை வைத்தான். 

நேராக குளியல் அறை சென்று கோபம் தீற குளித்தான். மனதில் வெறி!வெளியே வந்ததும் பெங்களூர் புறப்பட்டான். 

மோகன் என்ன நியூஸ்? 

“பாஸ் சித்தார்த் சார் NAAC கிரேட் செளிபிரேசன்.” 

ம்ம் இப்ப நான் பிக் டாடிய பார்க்க போறேன். அண்ட் உனக்கு முக்கிய வேலை.. 

யெஸ் பாஸ் சொல்லுங்க? 

நவீன், நீ ரிதன்யா, சைதன்யா, நிதன்யா.. இது மாதிரி பேர் இருக்கும் பொண்ணை சார்ச் பண்ணு ஐ திங்க் அவள் கிடைக்க வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி பேர் இருக்கும் பொண்ணுங்க நீள கூந்தல், இருக்கும் பொண்ணுங்க பாரு!. இந்த முறை லக்கி கேர்ள்  கிடைப்பாள். 

மோகன், ஓகே பாஸ்!. என சொல்லி கொண்டே பாஸ் இந்த போட்டோஸ் வீடியோஸ் என்ன பண்றது? 

நவீன் கையை உதறி கொண்டே ஹான் வந்து பார்க்கிறேன். இப்போதைக்கு எனக்கு பிக் டாடி தான் முக்கியம் என சொல்லி கொண்டே சென்றான். 

நவீன் ஒரு நிமிடம் நின்று மோகன்! இது ரொம்ப முக்கிய மான தேடுதல் எப்படியாவது என்னோட லக்கி கேர்ள வேணும்! தப்பு நடந்தது! உன்னை….? 

மோகன், பாஸ் தப் தப்பு பண்ண மாட்டேன் கட்டாயம் கண்டு பிடித்து விடுவேன். 

குட் நியூஸ் வேணும்! லக்கி கேர்ள் வேணும்!  என சொல்லி விட்டு நவீன் கிளம்பினான். 

தொடரும்…

 EPI 33

நவீன் அவனது பெரியப்பா ராஜ சேகரை பார்க்க கிளம்பினான். 

பிரியா சொன்னதை கேட்ட உடன் இதன்யாவுக்கு கோபம் ஒரு பக்கம் சேர சாப்பிட்ட உணவு மூச்சு குழலில் ஏறிகொள்ள உடனே புரை ஏறியது நன்றாக கண்கள் எல்லாம் கலங்கி மிகவும் சிரமப்பட்டாள்.

அந்த நேரம் தீடீர் என்று தலையை வருடி மெதுவாக மெதுவாக என்று சொல்லி தண்ணீர் கொடுத்த கைகளுக்கு உரிமையானவரை நிமிர்த்து பார்த்த இதன்யா அதிர்ந்தாள்.

போனை உடனே கட் செய்து விட்டு
ரிஷி சார் நீங்களா? இங்கே என்ன பண்றீங்க!

நான் உன்னை பார்க்க தான் வந்தேன். ஏன் நான் வர கூடதா? 

உங்களுக்காக ரோஷினி மேம் தேடிட்டு இருப்பாங்க…

“எனக்கு அவளை பிடிக்கல தனு”


இதன்யா, அவங்க உங்க மேல உண்மையான காதல் வைத்து இருக்கிறார்கள் உங்களுக்காக எதுவும் செய்வார்கள்..

நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன் தனு…

இதன்யா இதை கேட்டு உள்ளுக்குள் பதட்டம் கொண்டாள். எங்கே ரிஷி காதலை தன்னிடம் சொல்லி விடுவானோ?  இனி முகத்தை கூட பார்த்து பேச முடியாமல் சங்கடமாக இருக்குமே என நினைத்தவள்.

“அந்த பொண்ணு வேற யாரையும் லவ் பண்ணா நீங்க என்ன பண்ணுவீங்க சார்!”

எனக்கு தெரியும் கண்டிப்பா அவ மனசில் நான் தான் இருக்கிறேன் என்று ரிஷி உறுதியாக கூறினான். 

“உங்களுக்கு எப்படி தெரியும் அந்த பொண்ணு உங்களை லவ் பண்ணுது அப்டின்னு அவ உங்க கிட்ட சொண்ணாளா?”

“அவ என் கிட்ட பழகுவதை வைத்து நான் நிச்சயம் சொல்லுவேன் தனு அவ மனதில் நான் தான் இருக்கிறேன்.”

இதன்யா சிரித்து கொண்டே “நானும் உங்க கிட்ட மட்டும் தான் பேசுகிறேன்.  எல்லாம் ஷேர் பண்றேன்  , பேசுகிறேன் எல்லாம் ஷேர் செய்கிறேன். அப்படி இருப்பதால் நான் உங்களை லவ் பண்றேன் அப்டின்னு அர்த்தமா.”யார் அந்த பொண்ணு? 

ரிஷி இதை கேட்டு உறைந்தான்…

இதன்யா, நீங்க கண்ணை கொஞ்சம் திறந்து பாருங்க ரிஷி சார்.

“இந்த உலகத்தில் மாதிரியை விட நிஜத்திற்கு தான் மதிப்பு அதிகம் நான் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்க.”

“ஒரு வேளை நீங்க ரோஷினி மேடம நிதன்யா கூட கம்பேர் பண்ணி கூட பாருங்க, என் அக்கா தைரியம் இல்லாமல் உங்க கிட்ட விரும்பியது கூட சொல்லாமல் விட்டு போயிட்டா,
அதுக்கு நீங்களும் தான் ஒரு காரணம் ஆனால் இப்போ ரோஷினி மேடம் உங்களை உண்மையா நேசிக்கிறார்கள்… என் அக்காவை மேடம் கூட கம்பேர் பண்ணி மேடம் காதலை கொச்சை படுத்திடாதிங்க.”

உங்களோட காதல் கிடைக்க அவங்க எதுவும் செய்வாங்க என் அக்கா என்ன செய்தாள்? என் அக்கா இடத்தில் நான் இருந்தால் கூட அவளை போல் வேறு ஒருவரை கல்யாணம் செய்து சென்று இருப்பேன்.

இதை சொல்லும் போது அங்கே இதன்யாவை பார்க்க வந்த சித்து கேட்டு விட்டான். அவள் சொல்வதை நினைத்து பார்த்த அவனுக்கு உள்ளுக்குள் பல எரிமலை வெடித்தது.

அங்கு இருந்து வேக வேகமாக சென்று விட்டான்.

ரிஷி, இப்போது கோபமாக “நீ எனக்கு ஆயிரம் சொன்னாலும் கூட நான் என் காதல் என்றும் என் மனதில் இருக்கும் ஆனால் அந்த ரோஷினியை ஒரு போதும் எனக்கு பிடிக்காது அவள் எனக்கு வேண்டாம்…  நான் இப்படியே இருந்து விடுவேன் என் வாழ்வில் என் சொல்லாத காதல் மட்டுமே போதும்  என்று சொல்லி அவன் கதவுக்கு அருகில் சென்றான். 

“ஒரு நிமிடம்”

என்ன தனு என்று வலி நிறைந்த குரலில் கேட்டான். 

நீங்க லவ் பண்ண பொன்னு யாரு?  என வேண்டும் என்றே கேட்டாள்.

அவ அவ என்னோட… துக்கம் தொண்டையை அடைக்க வேணாம் தனு என்று  அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டான்.

இங்கு இரு ஆண் மனமும் வெவ்வேறு மன நிலையில் இருந்தது. ஒன்று கோபம், இன்னோன்று காதல் தோல்வி அதுவும் அவளது சொற்களால் நேரடியாக மறைமுகமாக கூறி விட்டாள்.

இதன்யா மனதில் சாரி ரிஷி சார் நான் உங்களை எப்பொதும் ஒரு நல்ல தோழமையுடன் தான் நினைத்தேன்.  என்னால் உங்கள் மனம் சஞ்சலம் அடைந்து இருந்தால் அதில் என் தவறும் இருக்கு என்னை மன்னித்து விடுங்கள். என்று சொல்லி சாப்பிட்டு முடித்து கைகள் கழுவி வெளியே வந்தாள். 

அங்கே ரோஷினி, சித்து, ரிஷி , கிருஷ்ணன் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

ரிஷி இதன்யாவின் முகத்தை பார்க்கவே இல்லை. அதற்கான காரணம் அவளுக்கு தெரியுமே.. ஆனால் சித்து முகத்தை பார்க்க இதன்யா முதன் முதலாக அவனை பார்க்கும் போது இருந்த கடுமை முகத்தில் தெரிய அவளை ஒரு பார்வை பார்த்து முறைத்தான் கண்களில் அனல் தெறித்தது.

இதன்யா மனதில்” இவனுக்கு என்னாச்சு?  இவளோ நேரம் நல்லா தானே இருந்தான். இப்போ என்னை அவன் பார்வையிலேயே எரித்து விடுவான் போல, அதுகுள்ள எந்த பேய் இவனுக்கு வந்து ஏறிகிச்சோ தெரியலையே!”

அவள் மூளை, “ஹே லூசு அவன் முறைத்து பாத்தா உனக்கு என்ன அவனை விட்டு விலகி செல்லனும், அது தானே உன்னோட எண்ணம், அவன் முரைத்தால் நீயும் முறை” என்று சொல்லி அவளும் அவனை முறைக்க முயற்சி செய்து தோர்த்து போனாள்.

இப்போது அவள் ரோஷினி மேடம் நான் கிளம்புறேன். தேங்க் யூ  சார் ..தேங்க் யூ சித்தார்த் சார்.. தேங்க் யூ ரிஷி சார் … என அவள் குழுக்களுடன் சேர்ந்தாள். 

ரோஷினி, ஹே இதன்யா இரு ஈவ்னிங் நான் உன்னை ட்ராப் பண்றேன்..
இல்ல மேம் பரவாயில்லை உங்களுக்கு எதுக்கு சிரமம் நாம் போயிக்குவென்.

கிருஷ்ணன், அது தான் என்னோட பேத்தி இவளோ தூரம் சொல்ட்ராலே நீ ஈவ்னிங் போ மா…

இதன்யா, சார் என திரு திரு வென முழிக்க

ரோஷினி, மம் உன்னோட சேர் பர்சன் சொல்லிட்டாங்க, அப்புறம் என்ன நான் உன்னை ட்ராப் பண்றேன் ஓகே! 

அவள் வேறு வழி இல்லாமல் தலை ஆட்டினாள்.  சிறிது தூரம் போய் அமர்ந்து கொண்டவள் சித்தார்த் முறைத்து பார்த்ததை நினைத்து கொண்டு இருந்தாள்.

எதுக்கு இவர் இப்படி நம்மை முறைத்து பார்க்கிறார். நான் கிட்ட வந்தால் கத்தி விடுவேன் என்று சொன்னதற்கு இவளோ கோபமா….

இல்ல இல்ல அதுக்கு எல்லாம் அசருற ஆள் அவன் இல்லையே… வேற என்ன வா இருக்கும் என யோசிக்க

“ரிஷி வந்து சென்றது நினைவு வர ஒரு வேளை நம்ப ரிஷி சார் கிட்ட பேசியது கேட்டு எதுவும் தவறா நினைத்து இருப்பாரோ.”

ம்ம் அய்யோ என்னத்தை கேட்டு இருப்பார், என்று தெரிய வில்லையே? இப்போ இதை எப்படி சமாளிப்பது சரி நாளைக்கு ஸ்கூல் போக வேண்டாம் காலேஜ் போய் விடுவோம். அசைன்மெண்ட் எல்லாம் சமிட் பண்ணனும். என்று இதன்யா மனதில் யோசித்து கொண்டு இருந்தாள். 

அருகே கைகள் சொடுக்கு சத்தம் கேட்க அவள் யார் என பார்க்க ரோஷினி தான் சிரித்த முகமாக அவள் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.

ம்ம் சொல்லுங்க மேடம் நம்ப இப்போ கிலம்பலாமா?

ம்ம் போலாம் ,போலாம் அப்படி என்ன உனக்கு அவசரம் அங்கே போய் என்ன பண்ண போற என அவள் கேட்க

சும்மா தான் மேம் என்று சொல்லி இதன்யா கொஞ்சம் நெளிய

ரோஷினி, என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்க

இதன்யா, அது ஒன்னும் இல்ல மேம் இந்த சாரி கட்டி இருக்க கொஞ்சம் கஷ்டமா பொழுதும் சரி செய்ய வேண்டியதா  இருக்கு சீக்கிரம் ஹாஸ்டல் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். என்று சொல்லி கொண்டு இருக்க பின்னால் வந்த சித்து காதுகளில் இது விழ ஜிவ்வென்று இருந்தது.

சித் அவள் மேல் உன் எண்ணம் போக கூடாது சரியான திமிர் பிடித்தவள்… என மூளை சொல்ல மனம் இன்று காலையில் இருந்து அவளை சீண்டிய அனைத்தும் நினைவு வந்து அவனை இம்சை செய்தது.

சித்து,ரோஷினி வா போகலாம்… என்று அவன் அழைக்க

இதன்யா அவன் முகத்தை பார்க்க அவன் அவளை ஒரு பார்வை கூட பார்க்கவே இல்லை…

ரோஷினி, அண்ணா இதன்யாவையும் கூட்டி செல்லலாம்.

இங்கே வந்த மிஸ் இதன்யாவுக்கு போக தெரியாதா ..

அண்ணா ஓவரா பேசாதே…

மேம் நீங்க போங்க நான் பார்த்து கொள்கிறேன்.

ரோஷினி, அண்ணா ஓவரா பண்ண அப்புறம் அம்மா கிட்ட சொல்லிடுவேன்..
இதை கேட்டு இதன்யா கொஞ்சம் சிரித்து விட அவன் அவளை முறைத்தான்.

கார் ஏறியவுடன் உன் தோழி எங்கே போகனும்…

ரோஷினி,உன் ஹாஸ்டல் எங்கே இருக்கு.. என கேட்டு அவள் வழி கூறினாள். 

சித்து, எனக்கு அப்படி ஒரு இடம் இருப்பதே தெரியாது என்று சித்தார்த் கூறினான்.

இதன்யா முறைத்து கொண்டே  அந்த கண்ணாடி வழியாக பார்த்து அவள் வாய்குள்ளே “பச்சை பொய்க்காரா” அன்னிக்கு என்னை எப்படி வந்து தூக்கிட்டு போன இன்னிக்கு ,  உன்னை…. உன்னை என்ன பண்றது என நினைத்து, மேம் உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் போயுக்குவேன்…

ரோஷினி, நீ பேசாமல் இரு நீ போ அண்ணா

சித்து, ரோஷினி உன்னை நான் ரிஷி வீட்டில் விடுகிறேன் நீ அவன் கூட ஸ்டே பண்ணிக்கோ..

ரோஷினி, அண்ணா… என்று அவள் எதோ யோசித்து கொண்டே  இதன்யாவை பார்த்தவள். இதன்யா நீ இன்னிக்கு என் கூட ஸ்டே பண்றயா..
இதை கேட்டு அவள் அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்க்க..
வாட் தி ஹெல் இவளை எதுக்கு நம்ப வீட்டுக்கு நீ கூட்டி வர என சித்தார்த் பொங்கினான். 


நான் கூட்டி வருவேன் உனக்கு என்ன…

இதன்யா, மேம் நான் அங்கே எல்லாம் வந்து தங்க முடியாது…

சித்தார்த், அங்கே zoo இருக்கு அதனால் நீ வராமல் இருப்பதே நல்லது.
இதன்யா மனதில், zoo வுக்கு பதிலா தான் நீங்க இருக்கீங்களே…

ரோஷினி ,நான் இங்கே எவ்ளோ நாள் இருக்கேனா அவ்ளோ நாள் நீ என் கூட தான் ஸ்டே பண்ணனும்.

ரோஸினி சொன்னதை கேட்டு சித்தார்த்தின் மனம் குதுகளித்தது ஆனால் அதை அவன் வெளிகாட்டாமல் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

இதன்யா,” மேடம் இது எல்லாம் ரொம்ப டூ மச் என்னால முடியாது பிளீஸ் புரிந்து கொள்ளுங்கள். என்று சொல்லி கொண்டே சித்துவை கண்ணாடி வழியாக பார்க்க அதே கடுமையான முகம் மட்டும் தெரிந்தது.

ரோஸினி, “ஹே பிளீஸ் நீ எனக்கு சொன்னது மறந்து போய் விட்டதா.!

மேம் அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல நான் வந்து சொல்லி தருகிறேன்.

அண்ணா! என்று ஒரு கர்ஜனையான குரல் அது ரோஸினி தான்.

ம்ம் என்று அதே பொல் கம்பீரமான குரல் அது சித்து தான். 


மிஸ் இதன்யாவை ஹாஸ்டல் கொண்டு விடு என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

“கூல்  குட்டி டெவில்”…

இதன்யா, அய்யோ இந்த மேம் இவனை விட ஒரு படி அதிகமா கோவப்படுதே இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டி கொண்டு நான் நல்லா முழிக்கிறேன். என நினைத்து கொண்டே ரோஸினியைப் பார்த்தாள். 

அவள் இதன்யா பக்கம் திரும்பவே இல்லை.” இது ஒரு விதமான அன்பு தொல்லையா இருக்கே. இந்த மேம் கூட ஸ்டே பண்றது பிரச்சனை இல்ல இவன் இந்த சித்துவும் அங்கே தான் இருப்பான் என இவள் மேம்…பிளீஸ் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என அவள் கூறினாள்.‌


“சாரி மிஸ் இதன்யா.”

ஒரு சிறிது நேரம் கண்ணை மூடி யோசித்தவள் உடனே ம்ம் சரி நான் வரேன் மேம்.

சித்து உடனே “அவ்ளோ கஷ்ட பட்டு வர வேணாம்.”

  ரோஸினி ஹே போடா என்று சொல்லி அவளை அணைத்து முத்தமி்ட இதை பார்த்து சித்துவிற்கு கோபம் வந்தது.

டெவில் திஸ் டூ மச் என்று சித்து இருவரையும் முறைத்தான்.

இதன்யா கண்ணாடி வழியாக அவனை பார்க்க அவன் அவளை பார்த்து முறைத்தான்.

மேம் ஹாஸ்டல்ல என்னோட திங்க்ஸ் புக் இருக்கு சோ நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன். இப்போ ஹாஸ்டல் போறேன்.

அண்ணா நீ ஹாஸ்டல் விடு இப்போவே போய் எல்லாம் எடுத்து வரலாம்.

சித்து நேராக ஹாஸ்டல் சென்றான். ரோஸினி நீ கார்லயே இரு. என்று சொல்லி சித்து இறங்க பின்னால் இதன்யா இறங்கினாள்.

இதன்யா முன்னே நடக்க சித்து மாஸ்க் அணிந்து கொண்டே அவள் பின்னால் நடந்தான்.

இதன்யா அவனை பார்த்து நீங்க எதுக்கு என் பின்னாடி வரீங்க? இது லேடீஸ் ஹாஸ்டல் அவன் அதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

நேராக வந்தவன் அவனை பார்த்த காவலாளி உடனே வணக்கம் சொல்லி உள்ளே ஆபீஸ் ரூம் பக்கம் அழைத்து சென்றாள்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.”இங்கே என்ன நடக்குது! இவனை எதுக்கு உள்ளே விடுறாங்க.. அதுவும் வணக்கம் சொல்லி கூட்டி போறாங்க.”


சித்தார்த் வந்ததும் உடனே ஹாஸ்டல் வார்டன் பயந்து கொண்டே அவனை பார்க்க சென்றார்.

இதன்யா அதே இடத்தில் சிறிது நேரம் அவன் ஆளுமையை பார்த்து பிரம்மித்தாள்.

சித்,செக்யூரிட்டி எல்லாம் ஒகே தானே..
ம்ம் ஒகே சார்.. எந்த பிரச்னையும் இல்லை.

“புட்”…  குவாலிட்டியா தான் சார் புரோவைட் பண்றோம்.

இங்கே ஸ்டே பண்ணி இருக்க பெர்சன்ஸ் சரியா இருங்காங்களா…

“சார் நம்ப ஹோஸ்டல் மேல் எந்த ரிமார்க்கும் இல்ல சார்”. இதை எல்லாம் பேசி முடித்து விட்டு”ம்ம் என்னோட மாம் எப்போ வேணாலும் இன்ஸ்பெக்ஷன் வருவாங்க.”

வார்டன் படபடத்து கொண்டே ம்ம் ஒகே சார் என சொல்ல,

சித்தார்த் ஸ்டைலாக கண்ணாடி போட்டு கொண்டு அவளை கண்டு கொள்ளாமல் காருக்கு சென்றான்.

இதன்யா, வார்டனிடம் மேம் எதுக்கு அவர் இங்கே வந்தாரு?;


“அவரு தான் மா இந்த ஹாஸ்டல் நடத்துகிறார். ஐ மின் அவரோட அம்மா பேரில் தான் அவங்க தான் ஓனர்.”


இதன்யாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி “இவன் எப்பவும் நமக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கானே!” என்று அதே அதிர்ச்சியுடன் அவள் பொருள் தேவையானது மட்டும் எடுத்து கொண்டு இருக்க பூஜா வந்தாள்.

பூஜா, ஹே எங்கே டி பேக் பண்ற…
ம்ம் அது ஹான்…

கொஞ்ச நாள் இம்போட் வொர்க்கா ஸ்கூல் ஹாஸ்டல் போறேன்.

“ஓ அப்படியா அப்போ காலேஜ் எப்படி வருவ.?”


இதன்யா, நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்.

ம்ம் சரி என்று சொல்லி அந்த புடவையை மாற்றி கொண்டு ஒரு சாதாரண உடைக்கு மாறினாள்.

ஒரு சுடி ஃபுல் ஹேன்ட் பின்னால் அழகாக ஒரு நாட் தொங்கி கொண்டு இருக்க அந்த பாட்டியாலா பேண்ட் அந்த ஷால் என போட்டு கொண்டு அவளுடைய திங்க்ஸ் எடுத்து கொண்டு வார்டன் கிட்ட சைன் போட வந்தாள். 


ம்ம் சார் சொல்லிட்டாரு நீ போ மா என சொல்ல.

இதன்யா அங்கே ஹாஸ்டலில் இருந்து காரை நோக்கி பையை எடுத்து கொண்டு நடந்து வரும் காட்சியை காரில் இருந்து சித்து பார்க்க ஒரு நிமிடம் கண்கள் மின்னியது.

ஒரு புறம் அவளது கூந்தல் காற்றில் பறக்க ஒரு புறம் அவள் ஷால் காற்றில் பறக்க  கண்ணாடி மூக்கு மேல் கொஞ்சம் தள்ளி கொண்டு வந்தாள்.

“இவ நமக்கு மட்டும் தான் இவளோ அழகா தெரியுறாளா. என்னை மயக்கறதையே வேலையா வச்சு சுத்துராளே.!”


“சித்து கன்ட்ரோல் யூர் செல்ஃப்”.. என்று சொல்லி அவன் பார்வையை நேராக்கி கொண்டான்.

ம்ம் கம் பேபி என ரோஸினி அவளை உள்ளே அழைத்து அமர வைத்து கொண்டாள்.

நேராக அவர்கள் சித்துவின் வீட்டுக்கு சென்றனர். முதல் முறை எப்படி வந்தாளோ அதே போல் பயந்து கொண்டே இறங்க இந்த முறை எல்லா வசனமும் ரோஸினி பேசினாள்.

ஒரு மென்னகை சிந்தி கொண்டே உள்ளே வந்தாள். சித்தார்த் உள்ளே சென்றதும் வேகமாக அவன் அறை சென்று விட்டான்.

ஏன் என்றால் இப்போது அவனுக்கு அவன் அப்பா வழி பிஸ்னஸ் வீடியோ கான்பிரன்ஸ் இருந்தது.

வீட்டின் முதல் தளத்தில் ரோஸினி அறை இருக்க அருகில் அன்று இதன்யா வந்து தங்கிய அதே அறையில் அவள் கொண்டு போய் விட்டாள்.

அதற்கு மேல் தளத்தில் தான் சித்துவின் அறை அந்த பக்கம் எல்லாம் அவள் சென்றதே இல்லை.

ரோஸினி, போய் ஃப்ரெஷ் ஆகி உனக்கு பிடிச்ச ட்ரெஸ் வியர் பண்ணிக்கோ.

ம்ம் ஓகே மேம் …

பிளீஸ் இதன்யா நேம் சொல்லி கூப்பிடு எனக்கு ரொம்ப வயசு அதிகமா இருக்க மாதிரி ஃபீல் ஆகுது.

ம்ம் ஓகே என்று சிரித்து கொண்டே அவள் உள்ளே சென்று கதவை சாத்தி கொண்டாள்.

அந்த படுக்கையில் பொத்தென்று விழுந்தாள்.

இதன்யா மனதில் அவன் பாராமுகம் அவளை பாடாய் படுத்தியது. என்னாச்சு சாப்பிடும் பொழுது  இருந்தே ஒரு பார்வை கூட பார்க்க மாட்டிங்குறான்.  அவன்  கொடுத்த முத்தம் அது உதடுகளில் சூடேறியது. அவன் உதடுகளை இழுத்து கொண்டது. நினைவு வர தன்னை அறியாமல் அவள் உதடுகளை வருடினாள்.

அவள் காதுகளில்” என்னோட ஒருத்தி நீ மட்டும் தான்” என்று சித்து சொன்னது திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தது.

இது உண்மையா என்று இதன்யா அவளையே கிள்ளி கொண்டாள். அந்த வார்த்தை அவன் சொன்னது அவனோட ஒருத்தி நானா? அதை யோசிக்க சொன்னானே.!

மூளை, ஏன் உன்னோட மனசு தறி கெட்டு அவன் பின்னே போகுது. அவனோட வாசம் எனக்கு என்னை சுற்றி வீசுது இவனை விட்டு விலகி போக நான் ஒரு திட்டம் போட்டா மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்கிறேன்.

மனசு, சித்து எனக்கு வேணும்.

“உன்னை பிச்சு எறிஞ்சிடுவேன்.”

அவன் கண்ணில் பொய் இல்லை உண்மையான ஒரு உணர்வு தெரியுது.

இது சாத்தியமா! இல்லவே இல்லை இது நடக்காது நீ தேவை இல்லாத ஆசைய மனதில் வளர்த்து கொள்ளாதே.என்று தன்னை ஒரு நிலைபடுத்தி கொண்டு இருக்கிறாள்.

ஆனால் விதி அவளை சித்துவின் அன்பு, கோபம் , பாசம், வெறுப்பு, காதல் , ஏக்கம் என ஆறு பண்புகளும் அவளை அவனோடு ஒவ்வொரு படிகலாக அவளை இனி இணைக்க போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறி அவனின் இதயத்தில்  இணைய போகிறாள் இதன்யா.

சிறிது நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்தாள். சாரி ரோஸினி நான் அப்படியே சும்மா படுத்து கொண்டு இருந்தேன்.

ம்ம் பரவாயில்லை வா இந்த வீட்டை சுற்றி காட்டுகிறேன். ம்ம் சரி போகலாம் என்று இந்த முதல் தளத்தில் இருப்பது எல்லாம் எனக்கும் அண்ணாவுக்கும் சேர்த்து இருக்கு நீ இருப்பது கெஸ்ட் ரூம்…

அவள் ஓ அப்போ மேல என கேட்க மேலே எல்லாம் என் அண்ணா ரூம் இங்கே விட அங்கே அதிகமா இருக்கே. 

எல்லாமேவா…

ம்ம் ஆமா….

சரி வா மேலே போய் பார்க்கலாம்…

இல்ல ரோஸினி நான் வரல…

என் அண்ணா உன்னை எதும் செய்ய மாட்டான்…

இல்ல வேணாம் பிளீஸ்…

ஹே வா போகலாம் என அவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றாள்.
இந்த பக்கம் யாரையும் விட மாட்டான்.

இதன்யா, அப்படி என்ன ரூம்…
இது அவனோட புக் கலெக்சன் ரூம்..
உங்க அண்ணா என்ன படிச்சு இருக்காங்க …

அவனா நிறைய படிச்சு இருக்கான் இப்போ மம் லேட்டஸ்ட்டா ஹான் MBA எதோ ஒரு சப்ஜெக்ட்ல டபிள் டிகிரி வாங்கி இருக்கான்.

இதன்யா நடந்து கொண்டே அருகில் இருந்த இன்னொரு ரூம் செல்ல,
ஹே அந்த பக்கம் போகாத…. இதை விட அவனுக்கு அந்த ரூம் அவ்ளோ முக்கியம் என்று ரோஸினி பேசி கொண்டு இருக்கும் போதே சித்தார்த்,

ரோஸினி!!!! என்று வீட்டை அதிர வைக்கும் சத்தம்…

இதன்யா ரோஸினி பின்னால் போய் ஒழிந்து கொண்டாள்.

அண்ணா சாரி சாரி தெரியாமல் வந்துட்டேன்.
இப்போது சித்தார்த்….?

தொடரும்…

EPI 34

இதன்யா மற்றும் ரோஷினி இருவரும் சித்தார்த் இருக்கும் தளத்தின் பக்கம் வந்ததும் எதோ வெளியே சத்தம் ரோஸினி குரல்  கேட்க கோபத்துடன் வெளியே வந்தான். 

ரோஸினி! என்று சித்தார்த் ஒரு கர்ஜனை செய்து கொண்டே அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.
அந்த சத்தத்தை கேட்ட உடன் இதன்யா அவள் பின்னால் போய் நின்று கொண்டாள்.

அண்ணா பிளீஸ் சாரி நான் தெரியாமல் வந்து விட்டேன்.

“இங்கே என்ன பண்ற?”


இல்ல தனுவுக்கு வீட்டை சுற்றி காட்டலாம் அப்டின்னு கூட்டி வந்தேன்.
ரோஸினி “தனு” என்று சொன்னதை அவனால் கேட்க முடிய வில்லை. அது ரிஷி மட்டும் தான் அப்படி அழைப்பான்.


சித், “என்ன நேம் இது இவளோ கேவலமா இருக்கு டிஸ்கஸ்டிங்.”


இதன்யாவின் மனம் இதை கேட்டு மிகவும் வருத்தபட்டது. “ஏன் நம் மீது நெருப்பு அள்ளி வீசுவது போல் பேசுகிறான். என்னோடு சும்மா டைம் பாஸ் பண்ண ஒட்டி இருந்தானா!” என்று கண்கள் கலங்கியது.

ரோஸினி, எவ்ளோ கியூட்டா இருக்கு அதுவும் ரிஷி இப்படி தான் அவளை கூப்பிடுகிறார்.

“உனக்கு இந்த பக்கம் என்ன வேலை? 


சரி சரி இனி நான் அவளை இங்கே கூட்டி வர மாட்டேன் என்று சொல்லி அவள் அழைத்து செல்ல இதன்யா அந்த அறையை பார்த்து கொண்டே செல்வதை சித் கவனித்தான்.

கீழே சென்றதும் சிறிது நேரம் கழித்து சாப்பிட மேஜைக்கு வந்தனர்.

ரோஸினி, அண்ணா சீக்கிரம் வா! 


இதன்யா தயங்கி நின்று கொண்டு இருந்தாள். எப்படி இவர்களுடன் ஒரே இடத்தில் சாப்பிடுவது என யோசித்து கொண்டு இருக்க ரோஸினி அவளை அழைத்து பக்கத்தில் அமர்த்தி கொண்டாள்.

சித்து படிகளில் இருந்து இறங்கி வந்தான். ஆனால் அவளை பார்க்க வில்லை. ஆனால் இதன்யா அவனை பார்த்தாள்.

ரோஸினி அவனை அமர வைத்து உணவு பரிமாற சித்தார்த் பொறுமையாக எடுத்து சாப்பிட்டான்.

மதி மா, கண்ணு நீ உட்காரு நான் வைக்கிறேன்.

இல்ல மதி மா நானே அண்ணாவுக்கு வைக்கிறேன் என சொல்ல

இதன்யாவுக்கு  மட்டும் அவர் வைத்து விட்டு செல்ல அவள் அவன் சாப்பிடும் அழகை ரசித்து கொண்டே ஒரு பெரு மூச்சு விட்டாள். 

ரோஸினி, அடி வாங்க போற நீ சாப்பிடும் போது இப்படி செய்ய கூடாது.

அவள் சாரி என சொல்லி கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு கைகளை கழுவி கொண்டாள்.

சித்து சாப்பிட்டு முடித்தவுடன் ரோஸினிக்கி பரிமாற இதன்யா இதை எல்லாம் யோசனையாக பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்தில் ரோஸினி சாப்பிட்டு முடித்தவுடன் சித்தார்த்  இப்போது மட்டும் அவளுக்கு தெரியாமல் ஒரு பார்வை பார்த்து விட்டு மேலே சென்றான்.

இதன்யா அவள் அறைக்கு சென்று பால்கனியில் நின்று கொண்டு இருக்க ரோஸினி அவளை தேடி கொண்டு அங்கே வந்தாள்.

ஹே தனு ரிஷியொட ஸ்கூல் college ல  எதுவும் அவர் எப்படி இருப்பார் அவர் பின்னாடி பிள்ளைக சுற்றினார்களா?

ம்ம் நிறைய இருக்கு…

ம்ம் சொல்லு என கண்கள் மின்ன கேட்க

இதன்யா, ரோஸினி…

ம்ம் சொல்லு தனு…

“நீங்க ரெண்டு பேரும் ஏன் மாற்றி மாற்றி பரிமாறி சாபிட்டீர்கள் . இங்கே இவளோ வேலை ஆள் இருக்கும் போது அதுக்கு உங்களுக்கு எத்க்கு சிரமம்.உங்க அண்ணா மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா!’

இதை கேட்டதும் ரோஸினிக்கு ஒரு நிமிடம் முகம் கவலை பரவியது.

இதன்யா அவள் முக மாறுதலை கண்டு சாரி நான் தெரியாமல் கேட்டு விட்டேன்.
ரோஸினி அருகில் உள்ள சேரில் அமர்ந்தவள்.

“என் அண்ணா யாரை ரொம்ப மேட்லியா நேசம் வைத்து இருக்கானோ, அவங்கள மட்டும் தான் சர்வ் பண்ண சொல்லுவான். ஒன்ஸ் அவங்களை பிடிக்கல அப்புறம் அவனோட வெறுப்பு மொத்தமும் காட்டுவான்.”

இதன்யாவுக்கு இதை கேட்டு கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

ரோஸ்னி, நான் ஏன் சர்வ பண்ணேன் அப்டின்னு நீ கேட்ட தானே? 


ம்ம்…

அதுக்கு முன்ன உன்னை பற்றி சொல்லு? உங்க வீட்டில் நீ எப்படி உங்க குடும்பம் பற்றி சொல்லு?

இதை கேட்டு இதன்யா முழித்தாள்.

ரோஸினி, ஐ மின் உங்க வீட்டில் அம்மா, அப்பா, என அவர்களை பற்றி சொல்லு
எனக்கு அப்பா நான் 7த் படிக்கும் போது

மம் சாரி பேபி இட்ஸ் ஓகே.

இதன்யா சொல்ல ஆரம்பித்தாள். அம்மா,” நானு, அக்கா, அண்ணா நாங்க நாலு பேரு நானும் என் அக்காவும் ரொம்ப க்ளோஸ் என் அண்ணா அம்மா ரொம்ப க்ளோஸ்,அப்புறம் என் மாமா வீட்டுக்கு போவோம். அம்மாச்சி வீடு, சித்தி வீடு , அப்பா சொந்தம் கொஞ்சம் ஒட்ட மாட்டோம். தீபாவளி, பொங்கல், ஆடி பண்டிகை, புது வருடம் எல்லாம் ஒன்றா சேர்ந்து கொள்வோம் ஜாலியாக இருக்கும்.”என்று சொல்லி கொண்டே இதன்யா ரோஸினியைப் பார்க்க அவள் ஆசையா பார்து கொண்டு இருந்தாள்.

இதன்யா, என்னாச்சு? 

ரோஷினி,”ஒன்னும் இல்ல நீ ரொம்ப லக்கி தனு!”


“ஏன் ரோஸினி அப்படி சொல்றீங்க? எவ்ளோ கஷ்டம் இருக்கு தெரியுமா, என் அண்ணா ஜாப்க்கு வெளிநாடு ட்ரை பண்ணிட்டு இருக்கான். என் அக்கா வோட கல்யாண கடன் இன்னும் முடியல அதுகுள்ள இப்போ அவ மாசமா இருக்கா!”

ரோஸினி, அப்டின்னா என்ன

இதன்யா, சாரி ஐ மின் சீ ஈஸ் கன்சீவ்…

“ம்ம் சூப்பர் கன்கிரட்ஸ்!”


“அவ  சீமந்தம் , டெலிவரி, அண்ணாவுக்கு கல்யாணம் என்னோட படிப்பு இத்தன இருக்கு இன்னும் கவலை பட நிறைய இருக்கு என இதன்யா சொல்லி முடித்தாள்.

ரோஸினி இப்போதும் சிரித்து கொண்டே “இப்போ கூட நீ லக்கி தான் தனு” ..

. என்ன சொல்றீங்க? என நடந்து கொண்டே

ரோஸினி அறைக்கு வந்தனர்.
“ம்ம் ஆமா சித்தார்த் பற்றி என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்.
இதன்யா, சார் சினி ஸ்டார், உங்க அப்பா சூப்பர் ஸ்டார், நீங்க சித்தார்த் ஸாரோட ஒரே தங்கை, ஸ்கூல், காலேஜ் எல்லாம் வச்சு இருக்கீங்க நிறைய பிஸ்நஸ் பண்றீங்க.”

ரோஸினி சிரித்து கொண்டே” மம் சரி தான் ஆனால் எங்க கிட்ட சந்தோஷம் இல்லையே!”

என்ன சொல்றீங்க? 


“ம்ம் ஆமா தனு வெளியில்  அப்டின்னா நாங்க நல்லா இருப்பது போல் தெரியும் ஆனால் உள்ளே என்று கண்களில் கொஞ்சம் கண்ணீர் எட்டி பார்த்தது.” 

நீ கேட்டாயே ஏன் சர்வ் பண்ணீங்க அப்டின்னு நீங்க எப்பிடி சாப்பிடுவீங்க..
இருப்பது நாலு பேரு ஒன்னா தான் சாப்பிடுவோம்.

இதன்யா அவளையே கண் கொட்டாமல் பார்க்க

ரோஸினி, “அப்படி நான் என் வாழ் நாளில் சாப்பிட்டதே இல்ல தனு,
என் அண்ணா அவனை பற்றி யாருக்கும் தெரியாது. உங்களை பொல் தான் நாங்களும் இந்த மாதிரி ஆசை எல்லாம் எங்களுக்கும் இருக்கும் இருந்தது.

அப்புறம்…

ரோஸினி, என் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி போனதுக்கு அப்புறம் எங்க குடும்பம் இப்படி ஆகி விட்டது.

என் அம்மா சொள்ளுவாக நான் ஆறு மாத குழந்தை அப்போ 6வது கல்யாண நாள் என் மாம், டாட் க்கு முடிந்து எல்லாம் ஒன்னா சாப்பிட்டார்களாம் அண்ணின்கு தான் என் அண்ணா சிரிச்சு கடைசி நாள்…

இதன்யா வருத்தம் கொண்டு “அப்புறம் என்னாச்சு”

அடுத்த நாள் “என் டாட் அந்த ஆக்டர் ரதி தேவிய கல்யாணம் செய்து கொண்டாராம்.!”என்று சொல்லி கொண்டே ரோஸ்னி கண்களில் கண்ணீர் வந்தது.

இதன்யா மனம் கேட்காமல் அணைத்து கொண்டாள்.” சரி உங்க அண்ணா அவருக்கு என்ன ஆச்சு?”
ரோஸினி கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதால் அவள் கேட்பதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.

 ரோஸினி,” சித்தார்த்க்கு டாட் மேல ரொம்ப வெறுப்பு அதிகம் ஆகி விட்டது. டாட் டாட் அப்டின்னு எங்க அப்பா பின்னாடியே தான் எப்பவும் சுற்றி கொண்டு இருப்பான். கிருஷ்ணன் தாத்தா போய் என் டாட் கிட்ட கேட்க அதுக்கு இது என் விருப்பம் Love is unconditional எனக்கு ரதியை பிடித்து இருக்கு நான் கல்யாணம் செய்து கொண்டேன் அப்டின்னு சொல்லி விவகாரத்து கொடுத்து விட்டார்.

 மேலும் ரோஷினி, “சித்தார்த்க்கு ஆக்டிங் பிடிக்காது  என் மாம் தான் கம்பள் பண்ணி நடிக்க சொன்னாங்க. சித்து ஆக்டிங் ஸ்கூல் போய் முறையா ஆக்டிங் கற்று கொண்டு தான் நடித்தான் ஆனால் அங்கே பெங்களூர் ல எல்லாரும் வாரிசு நடிகன் அப்டின்னு சொல்லவும் என் டாடிய மென்சன் பன்னதுநால் நடிப்பதை விட்டுவிட்டான்.
அதே போல் அந்த மெலினா அவளை அப்படி லவ் பண்ணான். இதன்யாவுக்கு இதை கேட்டதும் தொண்டை குழி அடைத்தது. மிதலில் சித்து பின்னாடி அப்படியே பூனை குட்டி மாதிரி அவ சுற்றினாள்.அதன் பின் சித்து ஒரு ஸ்லேவ் மாதிரி மெலினா சுற்ற விட்டாள். எனக்கு எதுவும் தெரியாது அப்டின்னு நினைத்து கொண்டு இருக்கிறான் இது எல்லாம் எனக்கு தெரிந்தது என்று அவனுக்கு தெரிந்தால் அவன் இன்னும் கவலை படுவான்.
ஆனால் இப்போ மெலினா அவள் வேற கூட என்று அதோடு நிறுத்தி கொண்டாள்.”

ஆனால் இதன்யா மனதில் எல்லாம் பதிந்து போனது. அப்புறம் என்று கேட்க

ரோஷ்னி, ஒன்னும் இல்ல ம்ம் அவனுக்கு தமிழ் பொண்ணுங்க பிடிக்காது அந்த ரதி தமிழ் பொன்னு சோ அதனால் தான் உன்னை இப்போ நான் இருக்கும் போது ரொம்ப கோவமா நடந்து கொள்கிறான் நீ எதுவும் நினைக்காதே.

ம்ம் சரி ரோஸினி என்று அவள் சொல்லி நான் தூங்க போகட்டுமா.

ஹே நீ மோசம் ரிஷி பற்றி ஒன்னு கூட சொல்லவே இல்ல..

இதன்யா, முதலில் நீங்க சொல்லுங்க love at first sight

ரோஸினி, “கொஞ்சம் முகத்தில் வெட்கம் பரவ எனக்கு ரிஷிய பாத்ததும் இவன் நமக்காக பிறந்து இருக்கிறான் அப்டின்னு தோணிச்சு, அதுவும் என் அம்மா ப்ரெண்ட் பையன் அப்டின்னு தான் அறிமுகம் ரிஷி தாத்தா என் தாத்தா  ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் சோ நீ இப்போ சொன்னியே குடும்பமா உங்க வீட்டுல சாதாரண வாழ்க்கை அந்த வாழ்க்கை எனக்கு வாழணும் இதன்யா என சொல்லிய ரோஷினி அதுவும் என்னோட ரிஷி கூட” என்று அவள் பூரித்து கொண்டே கூறினாள்.

இதை கேட்டு இதன்யா மனதார வாழ்த்தினாள். அப்படியே பேசி கொண்டே இருவரும் ரோஸினி அறையில் உறங்கி போனார்கள்.

ரோஸினி ரிஷியைப் நினைத்து கொண்டே உறங்க இதன்யா சித்தார்த் பற்றி ஒரு குழப்ப மனநிலையில் உறங்கினாள். 

நடு இரவில் எழுந்து பார்க்க அவள் ரோஸினி அறையில் இருப்பது தெரிய அவள் அறைக்கு எழுந்து வெளியே செல்ல வர அந்த அரண்மனை போன்ற வீட்டில் சித்தார்த் இருக்கும் தளம் மட்டும் லைட் எரிந்து கொண்டு இருந்தது.

இதன்யா மனம் “சித் பாவம் ரோஸினி அந்த மெலினா பற்றி எதோ சொல்ல வந்தாளே! என்னவா இருக்கும்?  ஒருத்தன்?” என்று  எதோ அதே இடத்தில் நின்று யோசித்து கொண்டு இருக்க அப்போது சித்தார்த்  ஸ்டடி ரூமில் இருந்து  வெளியே வந்தான்.

இவள் அங்கே நின்று கொண்டு இருப்பதை பார்த்து இந்த நேரத்தில் தூங்காமல் இங்கே என்ன பண்றா என்று நினைத்து கொண்டு

க்கும்…தொண்டையை கனைக்க அப்போதும் அவள் தன் சிந்தையில் இருந்து வெளி வர வில்லை.

சித்தார்த் அருகில் வந்து  ஹே இங்கே என்னடி பண்ற? 

தன்னிலைக்கு வந்த இதன்யா
என்ன “டி”யா!

ம்ம் ரோஸினி உன்னை தனு அப்டின்னு கூப்பிடிகிறாள். ஏன் நான் உன்னை எனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடுறேன். என்ன பண்ற இங்கே!.. 

நான் சும்மா.. அது வந்து ரோஸினி மேம் கூட அப்படியே தூங்கிட்டேன் என்று சொல்லி அவள் இரண்டு அடிகள் எடுத்து வைக்க..

அப்போ நீ  என் கூட வந்து தூங்கு என்று அவன் அவளிடம் குறும்பாக சொல்ல

ஹே மைன்ட் யூர் வார்ட்ஸ்.. என்று கோபத்தில் அவள் அறையை நோக்கி நடந்தாள்.

லிட்டில் ஹார்ட் நில்லு டி . அவள் கைகளை பிடித்து கொண்டு “ஐ ம் ஜஸ்ட் கிட்டிங்” என சொல்லி  அந்த புக் கலெக்சன் ரூம் அருகில் உள்ள அறைக்கு அவளை கூட்டி சென்றான்.

“என் கைய விடுங்க என்னை எங்கே கூட்டி போறீங்க பிளீஸ் விடுங்க!” என்று அவள் கைகளை உதறி விட போராட

அவன் அந்த ரூம் அருகில் வந்ததும் அவளை சுவற்றில் ஒட்டி அவனும் ஒட்டி கொண்டான். இதன்யாவின் இதயம் படபடவென்று அடித்து கொண்டது.

எதுக்கு டி என்னை காரில் வரும்போதும்,  நான்  சாப்பிடும் போது,  அப்படியே என்னை தின்பது போல பார்த்த?என்று இதழோடு இதழ் உரச சித்தார்த் கேட்க

அவள் தெரிந்து விட்டதா? என மனதில் நினைத்து  கண்களை தரையை பார்த்து கொண்டு

நா.. நானா.. நான் ஒன்னும் பார்க்க வில்லை முதலில் தள்ளி போங்க..

இல்ல நீ பொய் சொல்ற!. 

இல்ல நான் பார்க்கல.. 

சித், நீ பார்த்ததை நான் பார்த்தேன். என அவள் முகத்தை பார்த்தான். 

சித்தார்த் அவளை சுவற்றில் ஒட்டவைத்து அவனும் ஒட்டி கொண்டான். அவள் கண்கள் தரையை பார்க்க “ம்ம் சொல்லு எதுக்கு என்னை அப்படியே நைட்டு டின்னர்க்கு  சாப்பிடுவது போல் என்னை எதுக்கு பார்த்தீர்கள்.!” என்று சொல்லி அவள் முகாவாயை அவனை பார்க்குமாறு செய்ய.

இதன்யா, ந …நான்… அது… நான் ஒன்னும் உங்களை பார்க்கவில்லை என்று அவள் கண்கள் அங்கும் இங்கும் அளைபாய்ந்தது அவன் கண்களை சந்திக்க வெட்கினாள் சொல்ல.

அவன் அருகில் அவனுடய ஸ்பரிசத்திலும் அவனுடைய குரல் வளை ஒவ்வொரு முறையும் பேசும்போது ஏறி இறங்குவதை அப்பட்டமாக பார்த்து ரசிக்க தான் செய்தாள்.

சித்தார்த் தாமதிக்காமல் அந்த அறையின் கதவினை திறந்து அவளை உள்ளே வெடுக்கென்று அழைத்து வந்தான்.

இதன்யா உள்ளே வந்ததும் அவனை திட்ட வாய் எடுத்தவள் ஒரு நிமிடம் அப்படியே அந்த இடத்தை பிரமித்து பார்த்தாள்.

சித்தார்த் இரு புருவமும் தூக்கி கொண்டு அவளை பார்க்க அவளோ அந்த இடத்தை தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே பார்த்தாள்.

“லிட்டில் ஹார்ட் கம் பேபி” என்று அவளை அழைத்து கொண்டு அங்கே ஜன்னலுக்கு அருகில் வைக்க பட்டு இருந்த அந்த டெலஸ்கோப் அருகில் அழைத்து சென்றான்.

ஆம் அந்த அறை முழுவதும் சித்தார்த்துக்கு விருப்பமான இயற்பியல் பொருள்கள் இருந்தது.

அதில் ஒன்று தொலை நோக்கி , இரண்டு ஜன்னல்களில் வெவ்வெறு தொலை நோக்கி இருந்தது.

அருகில் கிட்டார், பியானோ இருந்தது. சித்துவிற்கு விண்வெளி ஆரய்ச்சியில் மிகவும் ஆர்வம் வானில் உள்ள நட்சத்திரம் கோள்கள் மில்கி வே இதை பற்றிய படிப்புகளில் மிகவும் ஆர்வம் அதனால் அவன் வீட்டில் எல்லா இடங்களிலும்  தொலைநோக்கியை வாங்கி வைத்து இருக்கிறான்.

இதன்யா, இது இது டெலஸ்கோப் தானே.. என்று ஆர்வமாக அதை தொட்டு பார்க்க “மம் ஆமா உனக்கு பார்க்க விருப்பமா! ஆர் யூ லைக் டூ சீ!”


அவள் கண்கள் மின்ன “ம் யெஸ் சார்” என சொல்ல சித்தார்த்,

அதை செட் செய்து கொண்டே இது astronamical telescopy – celesteon SCTW- 102EQ3 என்று சொல்ல அவள் திரு திரு வென முழிக்க சித்து சிறு புன்னகை உதிர்த்து கொண்டே இது மாடல் நேம்.

இது professional telescopy 330x magnification with 2 trypoid eye pices என்று சொல்லி கொண்டே அதை தமிழில் விளக்கினான்.

இதன்யா ஆச்சரியமாக அவனை பார்க்க அவன் அவள் கண்ணாடியை கலட்டி அருகில் வைத்தவன் finder scope align பண்ண அதுக்கு அப்புறம் அந்த இரவு வானத்தில் ஒரு முறை பார்த்து விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பார்ப்பது பொல் தேர்வு செய்தான் இதன்யா அவன் செய்வதை இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

வானிலை பார்த்து விட்டு ஒரு இடத்தை பார்த்து வைத்து அவளை அந்த இடத்தில் சரியாக கண்களை வைத்து விட இதன்யா அவன் மேர் பார்வையில் கண்களை அந்த தொலை நோக்கியில் பார்த்து தன்னை அறியாமல் கைகளை உயர்த்தி அந்த நட்சத்திரங்கள், அந்த கோள்கள் எல்லாம் அவள் கைகளில் பிடித்து விடும் தூரத்தில் இருப்பது போல் இருக்க மெய் மறந்து அவள் கைகளை தூக்க 

சித்து,ஹே இங்கே இல்ல நம்ப தூரத்தில் இருக்கோம்… பார்த்து!..

இதன்யா, இட்ஸ்… இட்ஸ் அமேசிங்… நோ வேர்ட்ஸ் டூ எக்ஸ்பிரஸ்..  என்று சொல்ல

இதன்யா சிறிது நேரம் அந்த டெலஸ்கோப் விட்டு வர மனமே இல்லை அப்படியே பார்த்துகொண்டு இருக்க மம் போதும்…

பிளீஸ் பிளீஸ் என்று அவள் கெஞ்ச

சித்து, உனக்கு வேற லொகேஷன் வச்சு தரேன் பாரு இன்னும் நல்லா இருக்கும்… ஹான் ஒகே என்று அவள் சிறு பிள்ளை பொல் அவனை பார்த்து அவன் செய்து கொண்டு இருப்பதை கவனித்து கொண்டு இருந்தாள்.

ம்ம் இப்போ பாரு…

இதன்யா அதை பார்த்து கொண்டே இது எவ்ளோ இருக்கும் சொல்லுங்க…

சித்து, ஐ கான் ட் அண்டர்ஸ்டண்ட்…

இதோட விலை என்ன..

ம்ம் ஜஸ்ட் 3, 117, 415 rupees இதை கேட்டு அடித்து நொடி இதன்யா தள்ளி நின்று கொண்டாள்.என்ன அவ்ளோ விலையா!

சித் அவ்ளோ இல்ல . அவ்ளோ தான்…

இதன்யா ம்ம் அப்போ

சித், அது 3,914. ம்ம் பரவாயில்ல இது ரொம்ப கம்மியா இருக்கு இதை நான் வாங்கிகட்டுமா…

சித்தார்த் சிரித்து கொண்டே ஹே அது 3,914.96 அமெரிக்கன் டாலர் கிட்ட தட்ட இந்தியன் ருபாய் மதிப்பு சொல்ல

இதன்யா, முருகா எவ்ளோ காசு…

உனக்கு வேணும் அப்டின்னா சொல்லு உன்னோட லார்ட் முருகன் தர மாட்டாரு.


இதன்யா, அப்புறம் நீங்க தர போறீங்களா.?

நான் ஏன் தரனும் இது எல்லாம் வருங்காலத்தில் உனக்கு தான் டி சொந்தம்.

இந்த வார்த்தையை கேட்டு தன்னிலைக்கு இப்போது தான் வந்தாள்.


சரி  எனக்கு தூக்கம் வருது நான் போறேன் என்று அவள் இரண்டு அடி வைக்க சித் அவள் கைகளை பிடித்து கொண்டு மம் இதை ட்ரை பண்ணாம போறீங்க மேடம். என்று பியானோவில் அமர வைத்தான்.

இதன்யா எனக்கு இது இது எல்லாம் தெரியாது.

நான் சொல்லி தரேன் டி என்று அவன்  இடது கைகளில் அவளை பார்த்து கொண்டே இடது கை விரல்கள் பியாநோவில் நடனம் ஆடியது.

இதன்யா போதும் சத்தம் வரும் மேம் தூங்கி கிட்டு இருக்காங்க. என்று சொல்ல அவன் இப்போது கிட்டார் எடுத்து வந்து அவளிடம் கொடுக்க அவள் அந்த கம்பியை அசைத்து பார்க்க அந்த சத்தம் மிகவும் பிடித்து போக இரு முறை செய்தாள்.

சித், நீ ட்ரை பண்றயா..

இல்ல எனக்கு தெரியாது.

ஹேய் நான் சொல்லி தருகிறேன் என்று அவளை அணைத்தது பொல் நின்று முன்னால் அந்த கிட்டார் பிடித்து கொண்டு அவர்கள் இரு கைகளும் கிட்டார் மேல் இருக்க சித் கவனம் முழுவதும் அதை சொல்லி கொடுப்பதில் இருக்க

இதன்யாவின் கவனம் முழுவதும் சித்துவின் மேல் இருந்தது.”எவ்ளோ புத்தி சாலியா இருக்கான்? இப்படி ஒருவன் இருக்க முடியுமா! கிட்டார் வாசிக்கிரான், பியானோ வாசிக்கிறான், இப்போ என்னை வசியம் கூட செய்கிறான். அதை விட மண்டை ஜாஸ்தி அறிவு கொழுந்து என்பார்களே அது இவன் தானா! “

அவனது தனிதுவமான நறுமணமும்  மூச்சு காற்றும் அவளை தடுமாற செய்தது.சித் கொஞ்சம் வளைந்து அவள் மேல் ஒட்டி கிட்டார் மட்டும் பிடித்து அவள் விரல்கள் கோர்த்து நின்று  மீட்டி  கொண்டு இருந்தான். 

அவன் ஸ்பரிசம் சின்ன தீண்டுதல் கூட ஒரு மின்னல் வெட்டு பொல் இதன்யாவுக்கி இருந்தது.

ஹே கான்சன்டிரேட் பண்ணு டி என சொல்ல அவள் இப்போது அவன் சொல்வது பொல் செய்ய அந்த இசையின் ஓசை இனிமையாக இருக்க புன்னகைத்தாள்.

சித், பிடிச்சு இருக்கா…

இதன்யா….? 

தொடரும்… 

 EPI 35

சித் அவளிடம் “பிடிச்சு இருக்கா!”

இதன்யா, மம் ரொம்ப பிடிச்சு இருக்கு

சித், என்னை…

“ரொம்ப ரொம்ப”… என்று பாதியில் நிறுத்தி அவன் என்ன சொன்னான் என்று யோசித்து பாதியில் அதற்கும் மேல் எதுவும் சொல்லாமல் அவனிடம் இருந்து விலகினாள்.

சித்தார்த் ஒரு காந்த புன்னகை உதிர்த்து விட்டு நடிக்காத டி என்று சொல்லி கொண்டே அந்த அறையில் இருந்து வெளியே வந்தவன். 

அந்த இடத்தில் இருந்து வெளியே வந்து  அறையை மீண்டும் லாக் செய்தான்.

“நான் ஒன்னும் நடிக்கல”

இதன்யா முன்னே நடந்து கொண்டே

“எனக்கு ஒரு சந்தேகம்?”

“ம்ம்!”

ஆமா உங்களுக்கு எப்படி இந்த டெலஸ்கோப் எல்லாம் தெரியும் நீங்க எதோ MBA பிஸ்னஸ் அட்மின் பற்றி எதோ படித்ததா கேள்வி பட்டேன்.

சித், அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? எனக்கு பிடிச்சு இருக்கு!
அதுவும் சரி தான் என்று இதன்யா தலை அசைத்தாள்.

என்ன இதன்யா மிஸ் என்னை பற்றி கேட்கறீங்க? 


இதன்யா, இல்ல நான் சும்மா கேட்டேன்.
என்று அவள் நான்கு அடிகள் செல்ல

சித் தன் தலையை கோதி கொண்டே
  “ஆனால்  எனக்கு கொஞ்சம் பிசிக்ஸ்ல இன்டரஸ்ட் அதனால P.hd பண்ணி இருக்கேன்!”

இதை கேட்டு அதிர்ச்சியாகி அதே இடத்தில் நின்றாள். 

அவள் கேட்டது உண்மை தானா! இது நிஜமா!  

அவள் அவனை வேற்று கிரகவாசிகள் பொல் பாத்தாள்.

என்ன பிசிக்சா…

ம்ம் ஆமா என்னாச்சு உனக்கு? 


P.hd யா!…

“ம்ம்ம் ஏன் எதுவும் சர்டிபிகெட்  காட்டனுமா!”

அவன் பிசிக்ஸ் படித்து இருக்கிறான் என்ற அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுதாக இதன்யா வெளிவராமல் அவனையே பார்த்து” p.hd யா” என்று சொல்லி  கொண்டு இருக்க

அவளுடைய இந்த அதிர்ச்சியான முகம்  அவனை விழி விரிய பார்த்து கொண்டு இருந்தவளை  பார்த்து 

சித்தார்த்துக்கு சிரிப்பும்  உர்சாகமும் ஒரு சேர தோன்ற அதை அவளிடம் இருந்து இன்னும் வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.‌

சித்தார்த் அவளை இழுத்து அவள் இதழில் முத்தம் பதித்தான். அவள் தன்னிலைக்கு வந்து அவனை தள்ள முயற்சி செய்ய அது முடியாமல் போனது.

சித்தார்த்  அவளை கை கொண்டு தடுக்க விடாமல் இரு கைகளையும் பிடித்து கொண்டான்.

அவள் நெஞ்சு கூடு வேக வேகமாக மூச்சு விட அவன் அவள் உதடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டு இருந்தான்.

அவள் கண்கள் ஒரு சில நொடியில் சொருகி போக அவள் கைகள் அவனை தடுப்பதை நிறுத்தி இருக்க இப்போது அவள் கைகளை பிடித்து இருந்த சித்தார்தின் கைகள் அவளின் தலையை பிடித்து மேல் உதட்டில் மென்மையும்  கீழ் உதட்டில் வன்மையாகவும் கொடுத்து கொண்டே அவளை சுவரில் ஒட்ட வைத்து ஒட்டி கொண்டான். 

இருவர் மூச்சிலும் வெப்பநிலை அதிகமாகியது. அவள் கழுத்தில் சிறிது நேரம் கடித்து முத்தமிட அவள் சிணுங்கி அவனை தள்ளி விட அவள் கைகளுக்கு சக்தி இல்லாமல் வடிந்தது போல் இருக்க கஷ்ட பட்டு தடுக்க கைகள் செல்ல மீண்டும் இதழில் ஒதுங்கினான்.

இப்படியே போனால் சரி இல்லை அவளை எடுத்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும்  என சித்தார்த் அவளிடம் இருந்து மிகவும் கஷ்டபட்டு மீட்டுக் கொண்டு

அவளை பார்க்க அவன் மயக்கதில் இருந்து அவள் கண்களை இப்போது தான்  கொஞ்சம் கொஞ்சமாக  திறந்து தெளிந்து கொண்டு இருக்க அவள் முகத்தில் உள்ள அந்த வெட்கம் தனக்கானது என்று  மனம் நிறைவுடன் அவளை பார்த்தான்.

இப்போது அவள் சமன் செய்து கொண்டு முறைத்து விட்டு சென்றாள்.

சித்தார்த் உள்ளுக்குள் சிரித்து கொண்டே ”  லிட்டில் ஹார்ட் நீ ஓகே சொன்னா  நான் கூட வரட்டுமா!”

“ராஸ்கல் உன் வேலைய போய் பாரு டா!” என்று சொல்லி கொண்டே வேக வேகமாக படிகளில் இறங்கி அவள் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள். 

சித்தார்த் அவள் சென்றதும் சிரித்து கொண்டே நேராக குளியலறை சென்றான்.

அவளுக்கு கொடுத்த முத்தம் ஒவ்வொன்றும் அது தேனை விட தித்திப்பாக தோன்றியது.

அவளின் இதழ் ஒரு காந்தம் போல் அவனுக்கு தோன்றியது. அவளை பார்த்தாலே ஒட்டி கொள்ள சொல்டிறது மனம். அவளை நினைத்து கொண்டே நீரோடு நீரானான்.

இங்கே இதன்யா அவள் அறைக்கு வந்து அங்கு இருந்த கண்ணாடியில் அவளது இதழ்களை பார்க்க கீழ் உதடு வீங்கி இருந்தது.

இன்று மதியத்தில் எப்பொழுது  இவள் பேசுவாள் என்று அதற்காகவே காத்து கொண்டு இருந்தவனை போல் இல்லை அது தான் உண்மையும் கூட (அதற்கு தானே சித்து இவளுக்காக தான் ) அவளை முத்தத்தில் தண்டித்து கொண்டு இருக்கிறான்.

இதன்யாவின் மனம் மதில் மேல் பூனையாக இருந்தது. கண்களை மூடினால் ஒவ்வொரு நிமிடமும் சித்துவினுடைய ஏக்கமான முகம் இவளிடம் மட்டும்  எதிர்பார்ப்பு அது அதன் பெயர் அன்பு , அதீத உரிமை என்று கூட சொல்லலாம்.

அவன் கை சென்ற இடம் எல்லாம் ஒரு மின்சாரம் டன் கணக்கில் இதன்யாவுக்கு இறங்கியது. இனி என்ன தூக்கம் அது இனி வருமா அதையும் திருடி சென்று விட்டானே.
இதன்யா புரண்டு படுத்து பார்த்தாள். சிறிது நேரம் வெறுக்க சொல்லிய மனது கொஞ்சம் மட்டும் நேசிக்கவா என்னால் வெறுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டிட நீ என்னமோ செய் என்று சொல்லி தூங்க முயற்சி செய்து 3.00 மணிக்கு உறங்கினாள்.

சித்தார்த் காலையில் எப்பொதும் போல எழுந்து ஜிம் சென்று அவனுடைய அன்றாட பயிற்சிகளை செய்தான்.

இதன்யா அந்த அறைக்கு வரும் போதே கண்ணாடியை விட்டு சென்று விட்டாள். அது சித்தார்த் எடுத்து வைத்து இருந்தான்.

இன்று மிகவும் உற்சாகமாக அவன் முகம் இருந்தது. சித்தார்த் மனம் ஒரு சில முத்ததுக்கே இவ்வளவு உற்சாகம் என்றால் வாழ்க்கை முழுவதும் அவள் அருகில் அவள் முழுவதும் அவனுக்கு சொந்தமாகி இருந்தால் தினமும் உத்வேகம் தான் அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும் டி லிட்டில் ஹார்ட் என்று நினைத்து கொண்டான்.


இதன்யா 6.30 மணிக்கு எழுந்தவள் தலைக்கு குளித்து விட்டு முடியை காயவிட பால்கனி திறந்து கொண்டு வெளியே செல்ல அங்கே சித்தார்த் அவன் உடற் பயிற்சி செய்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவனுடைய அகன்ற தோள்கள் அந்த ஆறு படி கட்டுகள் அவனுடைய ஒரு பிடி கூட ஒரு இரும்பை போல் இருக்கும். என்று நினைத்த நேரம் அவன் அவளை பார்த்து விட்டான். வேக வேகமாக கதவை ஸாத்தி விட்டு உள்ளே வந்தாள்.

சித்தார்த்க்கு ஒரு நிமிடம் உடல் எல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது.

காலையிலேயே என்னை சைட்டு அடித்து விட்டு ஓடுகிறாயா இரு டி நான் வரேன் என்று நினைத்து கொண்டு அவன் அன்றாட வேலையை தொடர்ந்தான்.

அவன் மனதில் இப்போது பார்த்து விட்டு சென்ற இதன்யாவின் முகம் தான் நினைவுக்கு வந்துவந்து போனது.

இடுப்புக்கு கீழ் வரை உள்ள முடியை ஒரு பக்கம் போட்டு கொண்டு அழகாக பால்கனி முன் இருந்த கம்பியை பிடித்து கொண்டு முகத்தில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாத வசீகரம் அந்த மூக்கு எவ்ளோ அழகு சொல்ல வார்த்தைகளே இல்லை, அதை கடிக்க வேண்டும் பொல் இருந்தது.

சித்தார்த் மட்டும் அருகில் இருந்து இருந்தால் கடித்து இருப்பான். அவன் தலையில் இருந்து வியர்வை துளிகள் சொட்ட உஃப் என்று வியர்வையில் சுவாசத்தை வெளியிட்டு இதன்யாவின் எண்ணங்களில் இருந்து வெளி வர முயற்சி செய்தான்.

அப்போது தான் டாக்டர் ஷீலா சொன்னது நினைவு வந்தது. இவ காலையிலயே தலைக்கு குளித்து இருக்கிறாளே அவளுக்கு இருக்கும் முடி எப்போது உலரும் மீண்டும் எதுவும் காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது என்று அருகில் உள்ள டெலி போனில் மதியைப் அழைத்தான். அவன் விஷயத்தை சொல்ல சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவர் வைத்தார்.

இங்கே உள்ளே வந்த இதன்யா நினைவில் சித்தார்த் தான் இருந்தான்.

அந்த தங்க நிற உடலில் அங்கும் இங்கும் வைரம் பொல் மின்னி கொண்டு இருந்த வியர்வை துளிகள் தான் நினைவுக்கு வந்தது. இவளோ வேகமா ஓடுகிறார்.என நினைத்து கொண்டே டவல் எடுத்து முடியை துடைத்து கொண்டு இருக்க கதவு தட்டும் ஓசை கேட்டது.

அவள் மனம் வேகமா துடிக்க “அச்சோ ஒரு வேளை நாம் பார்த்ததற்கு ஏன் டி என்னை பார்த்த? அப்டின்னு கேட்க வந்து இருப்பானோ. என நினைத்து பயந்து கொண்டே கதவை திறக்க 

அங்கே மதி கைகளில் தூபம் வைத்து கொண்டு நின்றார்.

இதன்யா அவரை பார்த்து சிரித்து கொண்டேநிற்க

தலைக்கு குளிச்சியா கண்ணு

மம் ஆமா மா .

சரி இந்தா கொஞ்சம் சாம்பிராணி புகை பிடி அப்போ தான் சளி எல்லாம் பிடிக்காம இருக்கும் என்று சொல்லி உள்ளே வந்து அவளை சேரில் அமர வைத்து அந்த புகையை போட்டு விட்டார்.

இதன்யா மெய் மறந்து அந்த வாசத்தினை உள்ளே இழுத்து கொண்டாள்.

மதி, “உன்னோட முடி நல்லா உறுதியா இருக்கு பத்திரமா பார்த்துக்கோ நல்ல அடர்த்தி நீ லட்சணமா இருக்க இந்த முடி உனக்கு அவ்ளோ அழகு” என்று சொல்ல

இதன்யா,” ரொம்ப நன்றி மா. எங்க வீட்டில் எல்லாருக்கும் முடி அதிகம் பாருங்க. அதனால் தான் நான் கொஞ்சம் குட்டையா இருக்கேன். முடி என்னோட உயரத்தை அழுத்தி வளருது.”

உடனே மதி, “அதனால் என்ன நீ சித்து தம்பி பக்கதில் நிற்கும் போது சரியான பொருத்தம் தான் ஜோடி பொருத்தம் அழகு அச்சோ  நானே கண்ணு வைத்து விட்டேனே சுற்றி போடணும்.”

இதை கேட்டு இதன்யாவுக்கு ஒரே அதிர்ச்சி இவரிடம் எதுவும் கேட்க கூடாது என்று அமைதியாக இருந்தாள்.

உடனே மதி இதை கட்டில் அடியில் வைத்து விட்டு போகட்டுமா..
ம்ம் சரி மா என்று வேறு எதுவும் சொல்ல வில்லை.

அந்த ஊதா வண்ண குர்த்தாவில் அவளது தலையில் சிடுக்கு எடுத்து ஒரே ஒரு பனானா க்லிப் மட்டும் போட்டு கொண்டு சித்து வை அர்ச்சனை செய்து கொண்டே வெளியே வந்தாள்.

“இவனை! இவன் என்ன நினைத்து கொண்டு இருக்கிறான். ரஸ்கல், ஸ்கவுன்றல், இடியட்,  நான்சென்ஸ், ப்ளடி ஃபுல்” என்று திட்டி கொண்டே வெளியே வர இன்னும் ரோசினி தூங்கி கொண்டு இருந்தாள்.

 இதன்யா எட்டி பார்க்க கதவு கொஞ்சம் திறந்து இருந்தது மீண்டும் அவள் அறைக்கு  உள்ளே சென்று  விட்டாள். “அய்யோ! போச்சு இன்னிக்கு சன்டே எப்படி தான் இதுங்க ரெண்டையும் வச்சு நான் இந்த நாளை ஓட்ட போறேன் அப்டின்னு தெரியலையே!” என்று அவள் நினைத்து கொண்டு தன் கண்ணாடி இருக்கும் நினைவில் பழக்க தோஷத்தில் மூக்குக்கு தள்ள கண்ணாடி இல்லை!

அய்யோ எங்கே போச்சு? என்னோட கண்ணாடி! என்று அந்த அறை முழுவதும் தேடினாள்.

எங்கே போச்சு என்று யோசிக்க அங்கே மேல நேற்று நடந்தது நினைவு வந்தது. 

அவள் வேக வேகமாக அந்த அறை நோக்கி படியில் ஏற சித்தார்த் குளித்து முடித்து உடலில் துண்டு மட்டும் கட்டி கொண்டு வெளியே வந்தவன்.

டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று கொண்டு இருக்க அந்த ரூம் அதாவது அந்த டெலஸ்கோப் இருக்கும் அறையின் கதவு திறக்க முயற்சிக்கும் சத்தம் கேட்டது. 

சித்தார்த் கோபத்துடன் ” இந்த ரோஷிணி காலயிலேயே ஆரம்பித்துது விட்டாாள்! என்ன சத்தம் யார்?” இந்த தளத்துக்கு வந்து இருப்பது என்று வெளியே செல்ல அங்கு இதன்யா பதட்டத்தோடு நின்று கொண்டு அதை திறக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.

சித்து அவளை பார்த்ததும் உடனே ஹேய் இங்கே என்ன டி பண்ற? ..

அவள் அவனை பார்க்காமல் “என்னோட கண்ணாடி காணோம் இங்கே இருக்குமா! அப்டின்னு பார்க்க வந்தேன்.”

சித்து, இடியட் இதன்யா முதலில் கதவை பாரு டி பூட்டி இருக்கு.

“ச்ச ஆமா மறந்துட்டேன்.இப்போ என்ன பண்றது!”

ஒரு நிமிடம் என்று சொல்லி கொண்டே அவன் செல்ல  அவள் பின்னால் வந்தான்.

“அப்போ சாவி கொடுங்க எனக்கு கண்ணாடி வேணும். என்று சொல்லி அவள் திரும்பினாள்.


“ஏன் கண்ணாடி போடலான்னா மேடம்க்கு கண்ணு தெரியாதா!”

யாரு சொன்னா? எனக்கு தெரியும்! பட் எனக்கு வேணும்! இப்போது தான் அவள் அவனை பார்த்தாள். 

சித்தார்த் அவளின் அருகில் நெருங்கி நின்று கொண்டு இருந்தான். 

எ என்ன ப பண்றீங்க த தள்ளி போங்க…

உனக்கு கண்ணாடி வேணுமா..

ம்ம்.. கொடுங்க என்று கைகளை நீட்டிட.

சித்து , அது அந்த ரூம்ல டிரெஸ்ஸிங் டேபிள் மேல இருக்கு போய் எடுத்துக்கோ.

இதன்யா அவனிடம் இருந்து விலகி வேக வேகமாக அவன் சொன்ன அறைக்கு உள்ளே சென்று பார்க்க சித்து சொன்னது போலவே டிரெஸ்ஸிங் டேபிள் மேல் அவளின் கண்ணாடி இருந்தது. 

டைம் காட் என்று அவள் அந்த கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு திரும்ப அங்கே சித்தார்த் கதவின் அருகில் நின்று கொண்டு இருந்தான்.

இதன்யா, அவன் துண்டு மட்டும் கட்டி கொண்டு இருப்பதை பார்த்து கண்களை மூடி திரும்பி கொண்டாள்.

சித்து தன்னை ஒரு முறை பார்த்து கொண்டு அவளை பார்த்து “ஓ மேடம்க்கு ஷை கூட வருமோ! என்று அவள் அருகில் ஒவ்வொரு அடிகளாக நெருங்கி வந்தான்.

“லிட்டில் ஹார்ட்!”. அவன் குரல் அருகில் கேட்க உடனே அவள் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல போக அவன் அவள் கைகளை பிடித்து கொண்டான்.

அவள் அருகில் நெருங்கி அவளின் பிரத்யேக வாசனையை முகர்ந்து கொண்டே “என்ன இன்னிக்கி உன் மேல் வேற ஒரு வாசம் வருது!” என்று அவள் கூந்தலில் கைகளை நுழைத்து கொண்டே கேட்க அவள் ஸ்ஸ்ஸ் வலிக்குது விடுங்க.

இப்போ ஓகே வா.. என்று அவன் பிடியை தளர்த்த உடனே அவள் விலகி அவனிடம் இருந்து செல்ல முயற்சி செய்தாள். 

“டோண்ட் டு எணி ட்ரிக்ஸ் வித் மீ !” . என்று அவள் கண்ணாடியை மீண்டும் கலட்டி அருகில் உள்ள படுக்கையில் போட்டு அவள் இதழ் நோக்கி குனிந்து முத்தமிட்டான்.

இங்கே ரோசினி எழுந்து நேராக இதன்யா அறைக்கு செல்ல அந்த சாம்பிராணி வாசம் மட்டுமே அவளை வர வெற்றது. அவள் தனு.. இதன்யா என அவள் பெயரை கூறி கொண்டே வெளியே வந்தாள்.

இதன்யா ரோசினியிடம் மாட்டிக் கொள்வாளா!

இங்கே நவீன் குமார் பெங்களூரில் உள்ள  Dr. ராஜ சேகர் பேலஸ் என்று பெயரிடப்பட்ட   பெரிய வீட்டில் மாஸ்டர் பெட் ரூமில் உறங்கி கொண்டு இருந்தான். 

அவனது பெரியப்பா பார்க்க வேணும் என சொன்னதால் கிளம்பி வந்து விட்டான். 

” தலைக்கு குளித்து நீண்ட கூந்தலுக்கு சொந்தக்காரி நவி!  நவி! இன்னும் என்ன தூக்கம் எழுந்து  வாங்க.”. என சொல்லி துவட்டி கொண்டே கண்ணாடியில பார்த்து தலை வாரி கொண்டு இருந்தாள். 

ஹே தன்யா பேபி! உன்னோட முகம் காட்டு அப்போ தான் நான் கண் முழிப்பென் என சொல்லி கொண்டே அவன் கைகளை ஆட்டிட.. 

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

போ நவி நான் போறேன். என் முகத்தை காட்ட மாட்டேன் போடா என சொல்லி கொண்டே அவள் கதவை திறந்து கொண்டு செல்ல.. 

தன்யா!. என சொல்லி கொண்டே நவீன் எழுந்து அமர்ந்தான். மீண்டும் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க 

ச்ச கனவா! என் தன்யா குட்டி கனவுல கூட வந்து விட்டாள். இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தால் நான் முகத்தை பார்த்து இருப்பேனே! என தலையை கோதினான்.  

அப்பொழுது தான் கனவு களைய கதவு தட்டும் சத்தம் தான் காரணம் என கோபத்துடன் எழுந்து கதவை திறந்தான். 

Who is this? Irritating idiot என எழுந்து கொண்டே கதவை திறந்தான். 

அங்கே வெளியில் ஒரு பணியாள் கையில் ஜூசுடன் நின்று இருந்தான்.  வேகமாக அதை தட்டி விட்டான். 

உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்டனா! என கர்ஜித்தான். 

அந்த பணியாள் நடுங்கி கொண்டே சாரி சார் பெரியய்யா தான் உங்களுக்கு கொடுக்க சொன்னார்கள். அப்படியே சாப்பிட வர சொன்னாங்க! 

நவீன் இடையில் கை வைத்து கொண்டு பிக் டாட் சொன்னார்களா! 

ஆமா சார்! 

அப்படியா சரி இன்னொரு ஜுஸ் எடுத்திட்டு வா!  

சார்! என இன்னொரு ஜுஸ் நீட்டி கொடுத்தான். 

எப்படி? 

அந்த பணியாள், பெரியய்யா தான் ரெண்டு கிளாஸ் கொண்டு போக சொன்னாரு! 

நவீன் முகத்தில் இதை கேட்டு புன்னகை அரும்பியது. 

அந்த பணியாள் வேகமாக சென்று விட்டான். 

நவீன் மனதில் தன்னை இவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்து இருக்கிறாரே என ராஜ சேகரை மிகவும் பெருமையுடன் நினைத்தான்.

இங்கே மோகனுக்கு சித்தார்த் ஹாஸ்டல் வாங்கிய செய்தி மற்றும் ரோஸினி இங்கு வந்து சேர்ந்தது என அனைத்து விஷயமும் சேகரித்து கொண்டான். 

கூடவே தன்யா ( இதன்யா)வ ஒரு பக்கம் தேடி கொண்டு இருந்தான். மோகன் நவீனுக்கு அழைத்தான். 

ஹலோ ! 

பாஸ் ஒரு முக்கிய விஷயம். 

வாட்? 

பாஸ் என மோகன் ஆரம்பித்து சித்தார்த் பற்றிய முழு தகவலையும் கூறினான். 

இதை கேட்ட நவீனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. எதுக்கு இவன் இப்போ தங்கும் விடுதி வாங்கி இருக்கான். என யோசனையாகவே இருந்தது. 

மோகன், பாஸ்!  

நவீன், சரி லக்கி கேர்ல் தேடிட்டு இருக்கீங்க தானே!. 

ம்ம் ஆமா பாஸ் கட்டாயம் கண்டு பிடித்து விடுவேன். 

நவீன், சீக்கிரம் என சொல்லி போனை வைத்தான். 

அதன் பின் மீண்டும் நவீன் அழைத்தான். 

மோகன், பாஸ்!  

நவீன் நான் சொல்றத செய்!. 

சொல்லுங்க? 

“ம்ம் தன்யா என பெயரில் அந்த சித்தார்த் வாங்கி இருக்கும் ஹாஸ்டலில் தங்கி படிக்கிரார்களா என செக் பண்ணு “

ஓகே பாஸ் என வைத்து விட்டான். 

நவீன் குளித்து முடித்து தயாராகி கீழே வந்தான் . அவனுக்காக வீல் சேரில் ராஜ சேகர் அமர்ந்து இருந்தார். 

நவீன் , பிக் டாடி  என அழைத்து கொண்டே சென்றான். 

நவீன் மை பாய் என புன்னகையுடன் அவரும் அழைத்தார். 

டைனிங் டேபிளில் குணா மற்றும் நவீன் தாய் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தனர். 

ராஜ சேகர், வா வந்து உட்கார் ப்ரேக் பாஸ்ட் சாப்பிடணும்!. 

ம்ம் வாங்க நான் உங்களுக்கு சார்வ் பண்றேன் என நவீன் அவரை அமர வைத்தான். 

குணா தன் அண்ணனை பார்த்து தலை அசைக்க.. ராஜ சேகர் பார்வையில் பதில் அளித்து விட்டு நவீன் கிட்ட பேச ஆரம்பித்தார். 

நவீன்!  

சொல்லுங்க டாடி!. 

ராஜ சேகர், எனக்கு ஒரு பேர குழந்தை உன்னோட குழந்தையை பார்க்க ஆசையா இருக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்குவ இது சரியான வயசு என்ன சொல்ற!. 

நவீன், ம்ம் நான் ரெடி! என அவன் கூறி கொண்டே உணவை சாப்பிட ஆரம்பித்தான். 

குணா ஒரு நிமிடம் தன் மனைவி கிட்ட ஹே உன் பையன் என்ன சொல்றான் பாரு டி என்னை ஒரு கிள்ளு கில்லேன் நம்ப முடியல.. 

நவீன் பார்வையை குணாவின் மேல் படற விட அவர் ஒரு நிமிடம் பார்வை தாழ்த்தி கொண்டார். 

ராஜ சேகர், நவீன் நிஜம் தானே என்னை ஏமாற்ற மாட்ட தானே! 

நவீன், இல்ல டாடி எனக்கு சம்மதம் சொல்ல போனால் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு  இதை பற்றி பேச நினைத்தேன். 

குணா தன் மகனை வாய் பிளந்து பார்த்தார். 

நவீன் பார்வை ராஜ சேகர் மேல் இருக்க டாடி நான் ஒரு பொண்ணை விரும்புகிறேன். 

ராஜ சேகர், என்ன சொல்ற! இது சும்மா இல்ல தானே!  

நவீன், இட்ஸ் ட்ரூ டாட் உங்க மேல பிராமிஸ் நான் ஒரு பொண்ணை விரும்புகிறேன். அவள் பேரு தன்யா!.  

தொடரும்…

 EPI 36

 நீ வேணும்!.  

நவீன் “தன்யா”என்ற பெண்ணின் பெயரை சொன்னதும் அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர். 

குணா தன் மகனை அதிற்சசியுடன் பார்த்தார். அவர் உடனே எந்த கம்பனியுடைய வாரிசு? 

ராஜ சேகர், யார் அந்த பொண்ணு? என கேட்டார். 

நவீன் தன் தந்தையை முறைத்து பார்த்து கொண்டே “தன்யா ஹேர் ஷேம்பு அண்ட் கண்டிசனர் புரொடெக்ட் ஓனர்” 

ராஜ சேகர் யோசனையுடன் “நவீன் கண்ணா அது இப்போ நம்ம கம்பனியில இருந்து நியூவா வந்து மார்க்கெட்ல ஓடிட்டு இருக்கே!” 

ம்ம் யூ ஆர் அல்வேஸ் மை மைன்ட் ரீடர் டாட் ஆமா தன்யா அவளால் தான் எனக்கு இந்த ஐடியா கிடைச்சு அதை சக்சஸ் பண்ணி இருக்கேன். 

ராஜ சேகர் அவனை ஆல பார்வை பார்க்க நவீன் “டாட் நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்.” 

குணா, எங்கே எப்போ பார்த்த? 

“யூ ஆர் நாட் மை டாட் காட் இட்” என குணாவிடம் கூறியவன். ராஜ சேகரை பார்த்து “டாட் ஐ வாண்ட் டாக் டூ யூ!”

ராஜ சேகர்,” நவீன் உன் அப்பா கிட்ட மன்னிப்பு கேளு”

“மாட்டேன்!”

நவீன்! 

குணா, “அண்ணா விடுங்க”

நவீன் என உரக்க அழைத்தார். 

அவன் உதடுகளை கடித்து கொண்டே சாரி என சொல்லி கை கழுவி விட்டு எழுந்தான். 

ராஜ சேகர், நீ இப்போ சாப்பிடல நானும் சாப்பிட மாட்டேன். 

“டாட்”

சிட் டவுன் என உணவு பரிமாறும் பணி பெண்ணை பார்த்தார். 

மீண்டும் இன்னொரு முறை அனைத்து உணவுகளும் பரிமாற பட்டது. 

எதுவும் பேசாமல் அனைவரும் சாப்பிட்ட ஆரம்பித்தனர். 

அதன் பின் நவீன் ராஜ சேகரின் வீல் சேர தள்ளி கொண்டே அவரது அறைக்கு வந்தனர். 

அந்த அறையில் அமைதி நிலவியது. ராஜ சேகர், அந்த பொண்ணு யாரு இப்போ சொல்லு!. 

நவீன், யாருன்னு தெரியாது தேட சொல்லி இருக்கேன். 

ராஜ சேகர்,  “RG குரூப் ஆஃப் கம்பனியிடைய C.E.O இப்படி ஒரு பதில் சொல்லலாமா!  எங்கே இருந்தாலும் அவளை கையோடு கூட்டி வந்து இருக்கனும்”

நவீன் சந்தோச மன நிலையில் தன் பெரியப்பாவை பார்த்தான். டாடி லவ் யூ! உங்களுக்கு நிச்சயமா அவளை பிடிக்கும். அவளுக்கு பெரிய குடும்ப பின்னணி இல்ல. “பட் அவள் லக்கி கேர்ல் டாட் , இது வரை எந்த பொண்ணு மேலயும் இப்படி ஒரு உணர்வு வந்ததே இல்ல இன்பேக்ட் அவள் முகத்தை கூட நான் பார்த்ததே இல்ல அவளோட கூந்தல் அதை தான் பார்த்தேன் அவள்!” என இதன்யாவை பற்றி ரசித்து கூறி கொண்டு இருந்தான். 

ராஜ சேகர் தன் மகனை பார்த்து ரசித்து பூரித்து போனார்.நவீன் புருவத்தை நெருக்கி கொண்டே டாடி! என்ன ஆச்சு? 

ராஜ சேகர், நீ சீக்கிரம் அந்த பொண்ணை கண்டு பிடித்து சீக்கிரம் கூட்டி வா  உண்மையாகவே அவள் மனசில் நீ இருக்கனும். அதே போல் வழுகட்டாய படுத்த கூடாது. 

“ம்ம் ஓகே டாட் உங்க பையனை பிடிக்காமல் இருக்குமா! “

 ராஜ சேகர், உன்னோட சந்தோசம் எனக்கும் சந்தோஷம் என் வளர்ப்பு எங்கேயும் தவறா இருக்க கூடாது நவீன்

ஓகே டாடி என சொன்னவன். அப்போ நான் கிளம்ப வா!. 

ம்ம் சரி பத்திரமா போயிட்டு வா!  இப்போ எங்கே போற? 

நவீன், “தமிழ் நாடு” என சொல்லி கொண்டு அவன் வெளியே சென்றான். 

அந்த நேரம் மோகன் கிட்ட இருந்து கால் வந்தது. 

ம்ம் சொல்லு

பாஸ் நம்ம நியூ புரொடெக்ட்க்கு advertisingக்கு புக் பண்றதுக்கு பத்தி நீங்க நியாபகன் படுத்த சொன்னீங்க.. 

ஓ இதை எப்படி மறந்தேன். இப்போ ட்ரெண்ட்ல எந்த ஆக்டர் இருக்காங்க? 

ஜானவி, அக்ஷயா, அப்புறம் 

ம்ம் அப்புறம்? 

“தாரா”

 நவீன், அவளா! அவள் ஒரு ஆளு!  அவள் தன்யா ஹெர் வாஸ் ஷாம்பூக்கு மேட்ச்! அவள் யாரு டா! ஒத்து மாதிரி இரிட்டிங்.. 

மோகன், மெலினா!. 

நவீன், அவளுக்கு முடியில் மட்டும் தான் ட்ரான்ஸ்பிளான்ட் நடக்கல.. புல் ஷிட்.. 

மோகன், அப்போ நீங்களே சொல்லுங்க பாஸ்!  

நவீன், ஜாணவி புக் பண்ணிடு!. 

மோகன், பாஸ் கால்சீட் பிரச்னை அப்டின்னு சொல்லுவாங்க! கான்ட்றாக்ட் அப்படி இப்படின்னு நிறைய இருக்கு….

மோகன், பாஸ் கேரளாவில்”  நிவேதிதா”

நவீன், இப்போ என்ன சொல்ல வர விஷயத்தை நேரா சொல்லு.. 

மோகன், பாஸ் நீங்க பேசி பார்த்தால் உடனே மூவ் ஆகிடும்.. 

நவீன், மோகன் கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியுது!. 

மோகன், பாஸ் அவங்களுக்கு தன்யா மேடம விட முடி கொஞ்சம் கம்மி தான் பட் செட் ஆவார்கள். சோ நிச்சயம் ஹிட் அடிக்கும். 

நவீன், நீ லக்கி கேர்ள பைண்ட் பண்ணிட்டியா! 

இல்ல பாஸ் நீங்க சொன்னத வச்சு சொல்றேன். 

நவீன் ஒரு பெரிய மூச்சை விட்டு சரி ஓகே மாடல் போட்டோ அனுப்பி வை! 

மோகன், “பாஸ் லொக்கேஷன் கோவை பார்டர்” சோ நீங்க.. 

ம்ம் என சொல்லி போனை வைத்தான். 

             *******

இங்கே ரோஸினி காலையில் எழுந்ததும் பாத் ரூம் சென்று ரெப்ரஷ் ஆகி முகத்தை கழுவி விட்டு நேராக இதன்யா அறைக்கு சென்றாள்.

சித்தார்த் அறையில் அவன்  அவளை முத்தமிட்டு  அப்படியே தன்னுள் ஒளித்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அந்த முத்ததினால் அவளுக்கு மூச்சு முட்ட அவள் அவன் மார்பை பிடித்து தள்ளி விட அவளின் நிலை உணர்ந்து அவளின் இதழ் மீது இருந்து மீண்டவன்,  அவள் நெற்றியோடு நெற்றி உரசி கொண்டு இருவரும் வேக மூச்சு வாங்க நின்றனர். 

இதன்யா கண்களை மூடி இருந்தாள் . அவளின் இந்த வெட்க முகத்தைப் பார்த்து சித்து மெலிதாக சிரித்தான்.

இதன்யா அவன் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர இதோடு விட அவன் மனம் வர வில்ல. அவளை அப்படியே மேலே தூக்கி முத்தமிட்டான்.

இப்போது இதன்யாவின் உதடுகள் கீழ் நோக்கி இருக்க சித்தார்த்தின் தலை மேலே பார்த்து இருக்க அவன் உதடுகள் மேல் நோக்கி இருந்தது  அவன் அவளை கொஞ்சம் கூட தளர்த்த அனுமதிக்கவே இல்லை.

அவளுக்கு கிட்ட தட்ட மிதப்பது போல் இருந்தது. இப்போது அறிவு “ஹே அவன் உன்னை என்ன செய்து கொண்டு இருக்கிறான்.நீ அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக  கைப்பாவையாகி கொண்டு இருக்கிறாய். கண்ணை திற!” என்று சொல்ல வேக வேகமாக கண்களை திறந்து அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள்.

சரியாக அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க இதன்யாவை தலையில் செல்லமாக வருடியவன்.

அவளை அப்படியே அருகில் அமர வைத்து விட்டு
கதவின் அருகே செல்ல ரோஸினி தான்  தட்டி கொண்டு இருந்தாள்.

அண்ணா!

அண்ணா! இதன்யாவை காணோம்?..
அவள் சித்து அமர வைத்த  இடத்தில் இருந்து ரோஷினி குரல் கேட்டதும் எழுந்து கொண்டாள்.

சித்து,  “ம்மம் ஓகே,நான் குளித்து விட்டு உடை மாற்றி கீழ வருகிறேன். அவள் இங்கே தான் எங்கேயாவது இருப்பாள்.”

ரோஸினி, ஹே நீ பார்த்தாயா அவ எங்கே போனா? உனக்கு தெரியுமா? எனக்கு வேற பயமா இருக்கு.

சித்து, “நான் பார்க்க வில்லை
ரொம்ப நல்லது காணோமா!”


“ஹே அவளை என்ன பண்ண?”


சித்து, “நீ சொல்றது பார்த்தால் அவ என்னோட ரூமில் என் கூட இருக்க மாதிரி நீ பேசற டெவில்”

ரோஸினி, “சீக்கிரம் வா நீ ஓவர் இமஜின் பண்ணாத அவ உன்னை தேடி வரவே மாட்டா ,சான்சே இல்ல, போடா!” என்று சொல்லி அவள் வேகமாக கீழ சென்றாள்.

இதன்யா வேக வேகமாக கதவுக்கு அருகில் சென்று கதவை திறந்தாள்.

சித்து அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டான்.

இப்போது அவளுக்கு கோபம் வர “நீங்க பண்றது சரி இல்ல,  நீங்க நினைப்பது எல்லாம் நடக்காது. பிளீஸ் என்னை விட்டு விடுங்கள்.”

“என்ன சரி இல்லை?”என்று அவள் இடையோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

” உங்களுக்கு தெரியும் இனி என்னை இப்படி என் கிட்ட நடந்துக்க வேண்டாம்.”

சித்து, “என்னால் முடியாது!”என்று அவள் கழுத்து பகுதியில் முத்தமிட.

அவள் கஷ்ட பட்டு “நீங்க ஆல்ரெடி ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்க,  உங்களை கட்டிக்க போற பொண்ணுக்கு உண்மையா இருக்கணும்!”

சித்துவின் பிடி இன்னும் இறுகியது. “உன்னை கட்டிக்க போறது நான் தான் நான் மட்டும் தான்!”

 இதன்யா, “அவர் என்னை மட்டும் விரும்புபவாரா இருக்கணும் ஆனால் நீங்க ?”


  நான் உன்னை மட்டும் தான் என்று சொல்லி அவன் பாதியிலேயே நிறுத்தினான்.

இப்போது அவள் கண்களில் கண்ணீர் வந்தது.இதன்யா, “நான் யாருக்கும் செகண்ட் ஆப்ஷனா இருக்க விரும்பல!” இதை கேட்டதும் சித்துவுக்கு கோபமும் வெறுப்பும் அதிகமானது.

 அவன் கண்கள் எல்லாம் சிவந்து போக அவளை விட்டு விலகினான்.

“ம்ம் ஓகே அப்போ இப்போவே போயிடு,  நான் வேண்டாம் அப்டின்னு முடிவு பண்ணிட்ட தானே. இனி நான் உன்னை தேடி வர மாட்டேன். இனி நீ வேற ஒரு சித்தார்த்தை பார்ப்ப. ” 

இதன்யா, உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கட்டும். 

“என்னை டார்ச்சர் பண்ணாத டி. இப்போவே விட்டு போயிடு, ஒரு நிமிடம் யோசித்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்.” வேண்டாம் என சொன்ன விஷயத்தை வர் புறுத்தியோ பரிதாப உணர்பிலோ தன்னிலை விளக்கம் கொடுத்து வர வைக்கும்  கண்றாவி எனக்கு வேணாம். 

இப்போது அவளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.

சித் அவளின் முகத்தை நிமிர்த்தி
“ஒருத்தி கிட்ட மட்டும் தான்  நான் என் வாழ்வில் அன்பு எதிர்பார்த்து தேர்ந்து எடுத்து தோர்து போய்…..இப்போ  அது தான் என் வாழ்வில் மிக பெரிய தவறு ஆகி என்னை பாதி அழித்து விட்டது.அதில் இருந்து முழுசா கூட இன்னும் வெளியே வரல. ஆனால் எப்போ உன்னை பார்த்தேனோ உன்னோட உண்மையான முகம் தான் எனக்கு  என்று நிறுத்தி அவளை போல் என்னை ஏமாற்றி விட்டு போ!”.. 

இதன்யா கையறு நிலையில் அவனை பார்க்க.. 

சித், “அவ என் வாழ்க்கையை அழித்த துரோகி நீ என்னை முழுசா அழிக்க வந்து இருக்க.”

“அதென்ன டி செகண்ட் ஆப்ஷன்!… ஹான்  நீ என்னை உன்னோட மனசில் ஃபஸ்ட் ஆப்ஷனா நினைக்க மாட்டியா.”

“அவ என்னை தேடி  வந்தாள் என்னை ஏமாற்றி விட்டு போயிட்டா. நான் உன்னை தேடி வந்தேன் இப்போ நீயும் என்னை!.. “

மாம் எனக்கு உங்களை போல எதுவும்  கிடைக்கவில்லை.. மாம் என்று அவன் வாய் மொழியாக சொல்லி விட்டு அந்த ஆறாடி ஆண் மகன் கண்ணில் ஒரு சிறு நீர் படலம்.. 

இதன்யா வழியும் கண்ணீருடன் “நீ நீக யாரை சொல்றீங்க?”.

“விளக்கம் கொடுத்தால் தான் என்னை விரும்புவ உன்னோட பரிதாப காதல் எனக்கு தேவை இல்லை டி என்னை விட்டு போ உன்னை தேடி நான் வர மாட்டேன். பிளீஸ் லீவ் மீ அலோன். மொத்தமா என்னை விட்டு போய் விடு டி.”என்று அவன் கதவை திறந்து விட

இதன்யா பாதி தூரம் சென்றவள் திரும்பி அவனை ஏக்க பார்வையில் பார்த்து கொண்டே கீழ சென்றாள்.

ஆனால் அவள் பார்வை சொன்னது சித்துவின் மேல் உள்ள காதலை ஆனால் சொல் தானே முக்கியம் பார்க்கலாம் வருவாள். நிச்சயம் தேடி வருவாள். அப்பொழுது அவளை வைத்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான் .

சிறிது நேரத்திற்கு முன் இருந்த ஒரு சூழல் இப்போது இப்படி மாறி விட்டதே என நினைத்து வருந்தினான்.

இதன்யா அழுது கொண்டே அவள் அறைக்கு வந்து கதவை சாத்தி விட்டு படுக்கையில் படுத்து அழுதாள்.

“என் மனம் முழுசா ஏற்று கொள்ளவும் முடியாமல் அவர் கிட்ட இருந்து முழுசா விலகவும் முடியாமல் நரகமா இருக்கே. என அழுதாள் அந்த முட்டாள் பெண்!”

சரியாக அந்த நேரம் வீட்டில் இருந்து போன் வர அந்த செய்தியை கேட்டு இன்னும் உடைந்து போனாள்.
ஆம் அவள் அண்ணன் நந்தன் வேலைக்காக பணம் கட்டிய இடத்தில் விசா வுக்கு கட்டிய 15 லட்சம் மொத்தமாக அந்த கம்பெனி ஏமாற்றி விட்டு சென்று விட்டதாக இதன்யா அம்மா தெய்வா அழ உடனே அவள் ஊருக்கு கிளம்பினாள்.

இதன்யா ,ரோஷினி  எனக்கு கொஞ்சம் வீட்டில் பிரச்னை அதனால் ஊருக்கு போகிறேன் என்று அழுது கொண்டே கிளம்பினாள்.‌

என்னாச்சு தனு?  என்ன பிரச்சினை? உன் முகம் எல்லாம் ஏன் ஒரு மாதிரி இருக்கு? என்று அவள் கேட்டு கொண்டு இருக்கும் போதே

சித்தார்த் எந்த வெளிப்பாடும் இல்லாமல் கீழ இறங்கி வந்தான்.

ஒன்னும் இல்ல நான் பார்த்து கொள்கிறேன். என்று சொல்லி அவனை ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு கிளம்பினாள்.

அவன் அவளை பார்க்கவே இல்லை.

ரோசினி , அண்ணா அவளுக்கு வீட்டில் எதோ பிரச்னை பாவம் அவ அழுது கிட்டயே போறா என்று சொல்ல சித்து எதுவும் பதில் பேச வில்லை.

சித், சதீஷ்….பாஸ்…

ஸ்டடி ரூம்க்கு வா என்று சொல்லி இவன் செல்ல சதீஷ் பின்னாடியே சென்றான்.

“அவளுக்கு என்ன?  அவங்க வீட்டில் என்ன பிரச்னை அதை சீக்கிரம் கேதர் பண்ணு.”

“ஓகே பாஸ்!” என்று அவன் சென்று ஒரு அரை மணி நேரத்தில் அனைத்து தகவலும் சேகரித்து வந்து விட்டான்.

அதை சித்துவுடம் சொல்ல “அது எந்த கம்பெனி? எவ்ளோ பணம்? அது மீண்டும் அவளுக்கு கிடைக்குமா? போலீஸ் கம்பிளைன்ட் எதுவும் கொடுக்க முடியுமா? 

“இல்ல பாஸ் மேடம் அண்ணா எந்த ஒரு இவிதேன்ஸ் இல்லாமல் போய் பணத்தை மொத்தமா கொடுத்து இருக்கிறார் அப்புறம்   அந்த company கூட சரி இல்ல அது ஒரு மூன்று வருட காண்ட்ராக்ட் தான்.”

“தென் ஹவ் டூ ஸால்வ்?” .

பாஸ் ஒரு டூ டேஸ் கொடுங்க வேற எங்கேயும் ட்ரை பண்ணலாம், அவங்க அண்ணா நல்லா படிச்சு இருக்கங்க…

ஓகே சீக்கிரம் சாட் அவுட் பண்ணுங்க அவ கஸ்டபடுவது என்னால பார்க்க முடியல.

ஓகே பாஸ் என்று சதீஷ் கிளம்ப ஒன் மினிட்.. 

அவ தனியா வீட்டுக்கு போறா சோ,அவளுக்கு செக்யூரிட்டி ரெடி பண்ணிடு.

“பாஸ் நான் ஆல்ரெடி பண்ணிட்டேன்.”

” ஸ்மார்ட்”என்று சொல்லி அவன் கீழ வந்தான்.

இங்கே இதன்யா அழுது கொண்டே வீட்டுக்கு வந்தாள். உள்ளே நந்தன் ஒரு பக்கம் அமர்ந்து இருக்க தெய்வா அழுது கொண்டே இருக்க செல்வம் சமாதானம் செய்தார்.

இப்போ என்ன பண்றது,  அப்டின்னு யோசி அழாத

தெய்வா, “அண்ணா  மொத்த பணமும் போச்சு இப்போ அடகு வைத்தது எல்லாம் எப்படி திருப்புவது. வட்டி எவ்ளோ நாள் கட்டுவது. இது மட்டும் நிதன்யா வீட்டுக்கு தெரிஞ்சா எவ்ளோ அவமானம் தெரியுமா! சின்னவளுக்கு எப்படி கல்யாணம் செய்வது?. நிதன்யா மாசமா இருக்கிறது காப்பு, டெலிவரி எல்லாம்” என்று நினைத்து மயக்கம் போட வேக வேகமாக இதன்யா அம்மா அம்மா என்று அழுது கொண்டே தண்ணிர் எடுத்து வந்து முகத்தில் அடித்தாள்.

கொஞ்சம் அவள் கண்களை முழிக்க தண்ணீர் கொடுத்து அமர வைத்தாள். “விடு மா போலீஸ் கிட்ட போலாம். சந்தோஷ் மாமா கிட்ட நிதன்யா கிட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம்”

நந்தன் , அது முடியாது

இதன்யா… ஏன்?

என் கிட்ட இவிடன்ஸ் எதுவும் இல்லை. 

என்னடா சொல்ற அப்படி எந்த கம்பனியில் பணத்தை போட்ட? என அவள் ஷாக் ஆகி பார்க்க.

நந்தன், நான் அந்த கம்பனி பற்றி கேள்வி பட்ட விஷயம் வரை அது RG க்ரூப் கம்பனி கூட டை அப் ல இருந்து இருக்கு அந்த நம்பிக்கையில் தான் கட்டினேன். 

இப்போ என்ன ஆச்சு? 

இப்போ நான் கட்டிய கம்பனி ஆளையும் காணோம் அம்பியும் காணோம் என்னை மாதிரியே நிறைய பேர் ஏமார்ந்து இருக்காங்க!” 

செல்வம், அவனை கஷ்ட படுத்த கூடாது என்று நினைத்து சரி விடு கடவுள் இருக்கிறார்.

நந்து பிளீஸ் கவலை படாதே நான், அம்மா,மாமாச்சி இருக்கிறோம் நீ வருத்த படாத தப்பு உன் மேல இல்ல பிளீஸ் டா.

மனம் தளர விடாத நீ தான் நம்ப வீட்டுக்கு எல்லாமே அப்பாவுக்கு அடுத்து நீ தான் நிச்சயம் கடவுள் கூட இருக்கிறார். என தன் அண்ணனுக்கு மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தாள்.

தன் இஷ்ட தெய்வத்தை முருகனை வணங்கி கொண்டாள் அவளால் என்ன செய்ய முடியும்.

15 லட்சம் அது மட்டும் இல்லாமல் அடகு வைத்த நகை வீடு இது ஒரு 15 லட்சம் மொத்தமாக 30 லட்சம் இதை நினைத்து கொண்டே யாரும் சாப்பிடாமல் பேசாமல் அப்படியே இரண்டு நாள் கழிந்தது.

இதன்யா மனதில்  முருகா எதுவும் நல்லது நடக்காதா! என் குடும்பத்துக்கு எதுக்கு இத்தனை கஷ்டத்தை கொடுக்கிற நாங்க என்ன பாவம் செய்தோம்! என் நந்து பாவம் நீ தான் எதுவும் ஹெல்ப் பண்ணனும் என தினமும் சென்னி மலை கோவிலுக்கு சென்று வந்தாள். ஏற்கனவே சித்தார்த் பேசிட வார்த்தைகள் பாதி இதயத்தை தாக்கி இருக்க வீட்டில் உள்ள கஷ்டம் மீதி இதயத்தை தாக்கியது. 

இதற்கு இடையில் ரோஷினி அவளுக்கு கால் செய்ய நான் வந்து விடுவேன் என்று மட்டும் கூறினாள். ஆனால் என்ன பிரச்சனை என்று கூற வில்லை.

இப்படியே இன்னும் இரண்டு நாள் கழிந்தது. இதன்யா  தான் கட்டாய படுத்தி அண்ணனையும் , அம்மாவை யும் சாப்பிட வைத்தாள். அவ்வப்பொழுது நிதன்யா போன் செய்து குறுக்கு கேள்வி கேட்டு குடைந்து எடுப்பாள். அவளை ஒரு புறம் பேசி வைப்பதற்குள் நாக்கு தள்ளி விடும். 

அந்த நேரத்தில் தான் அந்த ஸ்பவம் நடந்தது . வழக்கம் போல் மாலை கோவிலுக்கு சென்று வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள். 

அந்த நேரம் நந்தனுக்கு ஒரு போன் கால் வந்தது.

அது பாரின் கால் அவன் அதை அட்டன் செய்து ஆங்கிலத்தில் பேசி விட்டு திரும்ப முகம் கொஞ்சம் பதட்டத்தில் திரும்ப,

இதன்யா, என்னாச்சி டா,

ஒன்னும் இல்லை சின்னு நான் நாக்ரி gulf ல என்னோட ரெஸ்யூம் போட்டு இருந்தேன் லண்டன்ல ஒரு இந்தியன் அண்ட் பாரின் கோலப்ரியேஷன் கம்பெனி இப்போ இன்டர்வியூ நாளைக்கு நடக்குது சோ இது ஓகே ஆகிட்டா விசா, அண்ட் அங்கே ஸ்டே எல்லாம் அவங்களே பண்ணிடுவான்க சின்னு.

ஹே என்னடா சொல்ற?  என்று சந்தோஷத்தில் அவள் பேசி கொண்டு இருக்க இல்ல டி நான் அந்த நேர்காணல் நல்ல படியா செய்யணும் என்று சொல்லி இப்போ அம்மா கிட்ட சொல்ல வேண்டாம் நான் வேலைக்கு செலக்ட் ஆனா மட்டும் சொல்லலாம் இது என்னோட தகுதி படிப்பு ரண்டுக்கும் ஏற்ற வேலை.

அடுத்த நாள் நேர்க்காணல் …!

சித்தார்த் தான் இதன்யாவின் அண்ணனுக்கு உதவி செய்து இருக்கிறான் என்று தெரிய வரும் போது என்ன நடக்கும் என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம் .

இன்று இதன்யாவை காப்பாற்றிய சித்துவுக்கு விரைவில் மெலினா, ரதி இருவரும் இணைந்து சிக்கலில் விட போகிறார்கள் அதில் இருந்து அவன் மீள இதன்யா உதவி செய்வாளா!
இனி கதைகளம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. என்ன நடக்கும்? 

(கதை பிடித்து இருக்கா சொல்லிட்டு போங்க, உங்களுக்காக கஷ்ட பட்டு ரைட் பண்றேன் பட்  comment box நிறைய மாட்டிக்கிதி கதை பிடிக்கலையா அதையும் சொல்லிடுங்க. ) 

நவீன் கேரக்டர பற்றி என்ன நினைக்கிறீங்க? 

இதன் யாவுக்கு சரியான ஜோடி யாரு? நவீன்?  (ஆர்) சித்தார்த்?  

உங்க கருத்துக்கு காத்திருக்கிறேன். 

நீந்துங்கின்ற வெண்ணிலா இன்னும் இரண்டு நாட்களில் பதிவு செய்ய படும் சோ அதையும் படித்து பாருங்கள்.

தொடரும்….

EPI 37

இதன்யாவை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் இன்னொரு முறை கூறுகிறேன். இதன் யாவின் அப்பா வரதராசு சென்னை காஞ்சிபுரம் அருகே ஒரு பள்ளியில் துடக்க பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார். 

வரதராசு தெய்வா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள், நந்தன், நிதன்யா, இதன்யா ஆவர். வரதராசுவின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள  “குலவிளக்கு”, இதன்யா 5 ம் வகுப்பு படிக்கும் போது வரதராசு எதிர் பாராத மாரடைப்பில் இறந்து விட தெயுவா தன் அம்மாவின் ஊர் கரூர் நொய்யல் ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியில் நொய்யல் செல்வத்துடன் வந்து செட்டில் ஆகி விட்டார். 

சிறு வயதில் இருந்தே சென்னையில் படித்ததால் பிள்ளைகள் மூவரையும் அங்கே ஹாஸ்டல் சேர்த்து படிக்க வைத்தார். நிதன்யா 12ம் வகுப்பு வரை ரிஷியுடன் ஒன்றாக படித்தாள். ஆசிரியர் பயிற்சி ஈரோடு பெருந்துறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் படித்தாள். அதன் பின் தன் விருப்ப பாடமாக இயற்பியலை சென்னையில் ரிஷி மற்றும் இதன் யாவுடன் படித்தாள். படித்து முடித்து விடுமுறைக்கு கோட்டை தேருக்கு  ஊருக்கு வரும் நேரத்தில் சந்தோஷ் அவளை பார்த்து பிடித்து போய் உடனே கட்டி கொண்டு ஹைத்ராபாத் செட்டில் ஆகி விட்டான். 

 இதன்யாவின் அண்ணன்  நந்தன் பொறியியல் படித்து முடித்து விட்டு கோவையில் வேலை செய்து  கொண்டு இருக்கிறான். சோ இப்போ நம்ம இதன்யா B. Ed படித்து கொண்டே பகுதி நேர வேலை சித்தார்த் சார் பள்ளியில் மற்றும்  இப்பொழுது புதிதாக வாங்கிய கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறாள். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இதன்யாவின் மனதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நந்தன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று வேண்டி கொண்டே இருந்தாள்.

நந்தன் நேர்காணல் முடித்து விட்டு அவர்களின் அழைப்புக்காக காத்து கொண்டு இருந்தான்.

தெய்வா, அண்ணா கரூர் பேப்பெர் மில்லில் எதுவும்!. 

மா! என்ன மா நீ நினைக்கும் மாதிரி சாதாரணமா வேலை வாங்குட முடியுமா! 

இதை கேட்டதும் அவர் அமைதி ஆகி விட்டார். செல்வம், பொண்ணு கொஞ்சம் பொறுமையா இரு மா என தன் தங்கையிடம் கூறினார். 

இதன்யா அவன் அருகில் வந்து , நந்து அது என்ன கம்பனி அப்டின்னு சந்தோஷ் மாமா கிட்ட கொடுத்து விசாரி டா இல்லை நம்ப தான் மறுபடியும் கஷ்ட படனும்.

அவள் சொல்வதும் சரி என்று தோன்ற சரி சின்னு என்று சொல்லி தன் தங்கை நிதன்யாவின் கணவர் சந்தோஷ்க்கு அனுப்பி அதை சரி பார்க்க சிரிது நேரத்தில் அவர் அழைத்தார். (“சின்னு” என்பது இதன் யாவை வீட்டில் அழைக்கும் செல்ல பெயர்) 

அது SPR corporation , and பவானி குருப்ஸ் சேர்ந்து ஒரு லண்டன் கம்பனி கூட கோலாபரெட் பண்ணி இருக்காங்க என அவர் சொல்லி வாழ்த்துகள் சொன்னார்.

அதில் நேர்க்கனால் அழைத்ததே மிக பெரிய அதிசயம் கவலை பட வேண்டாம் என்று சொல்லி வைத்தார். 

நந்தன் சந்தோஷ் சொன்ன அனைத்து விஷயமும் இதன்யாவிடம் கூற அவளுக்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது.

ஆனாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டாள். சிறிது நேரத்தில் அந்த பாரின் கம்பனி ல இருந்து போன் வர இன்னும் ஒரு மாதத்தில் வந்து ஜாயின் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் நந்தன் இதன்யாவை தூக்கி ஒரு சுற்று சுற்றி விட்டான்.

“சின்னு எல்லாம் உன்னால் தான் டி எனக்கு வேலை கிடைத்து விட்டத.  உன்னோட வார்த்தை எல்லாமே , ஒரு பாசிடிவ் டி” என தன் தங்கைக்கு நன்றி மழை பொழிந்தான். 

தெய்வா, செல்வம்  இருவரும் என்ன என்று கேட்க

நந்தன் விசயத்தை சொன்னதும் “இது உண்மை தானே! பணம் எதுவும் கட்டனுமா? என அவர் கொஞ்சம் படபடத்து கொண்டே கேட்க.

இல்ல மா இன்னும் ஒரு மாதத்தில் நான் கிளம்ப போறேன். எல்லாம் கம்பனி பார்த்து கொள்ளும் இப்போதைக்கு சில பிஸிகல் டேஸ்ட் மட்டும் எடுத்து அனுப்ப சொல்லி இருக்காங்க என்று அவன் சொல்ல அவர்கள் இருவருக்கும் மிகவும் சந்தோஷம்.

நந்தன் தன் மாமனை கட்டி கொண்டான். மாமா இனி நம்ப கஷ்டம் எல்லாம் தீர்ந்து விட்டது உங்களை இனி நான் எப்படி பார்த்து கொள்வேன் தெரியுமா?  நீங்க கவலை பட வேண்டாம் செழியன், பூங்குழலி இருவரும் என்னோட பொறுப்பு என சொல்ல செல்வத்திற்கு மிகுந்த சந்தோஷம் அவன் செய்யமால் போனாலும் கூட இப்படி உரிமை எடுத்து பேசியது போதும் என நினைத்தார்.

தெய்வா ,அண்ணா கடவுள் நம்மை கை விட் வில்லை என்று சொல்லி தன் கணவன் படத்தை பார்த்து விட்டு கடவுளை வணங்கினார்.

இங்கே,

சதீஷ், பாஸ் எல்லாம் ஓகே இன்னும் ஒரு மாதத்தில் மேடமொட அண்ணா பாரின் போக போகிறார்.

ம்ம் குட் என்று சித்தார்த் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிபடுத்தவில்லை.

அடுத்த நாள் இதன்யா ஊரில் இருந்து அவளை நந்தன் தான் கொண்டு வந்து ஹாஸ்டல் விட்டு சென்றான்.

அவள் ஹாஸ்டல் வந்து பத்து நிமிடம் கூட ஆக வில்லை ரோசினி அழைத்தாள்.

தனு வந்து விட்டாயா?.

ம்ம் இப்போ தான் வந்தேன்.

சரி இன்னிக்கு ஸ்கூல் போகலாயா? 

இல்ல ரோசினி நாளைக்கு தான் போகனும்.

“சரி நீ எங்கே இருக்க?”

“நான் ஹாஸ்டல்ல தான் இருக்கேன் நாளைக்கு வரேன்.”

“ஹே அதெல்லாம் முடியாது இப்போவே வா இல்ல நான் வந்து உன்னை அழைத்து செல்வேன் என்று கூறி போனை வைத்தாள். 

இதன்யாவுக்கு அங்கு செல்ல சுத்தமாக விருப்பம் இல்லை அங்கே போனால் சித்தார்த்தை பார்க்க வேண்டி வரும்.

இவள் இப்படி யோசித்து கொண்டு இருக்கும் போதே சதீஷ் வந்தான் ரோசினி தான் அவளை கூட்டி வர அனுப்பி இருந்தான்.

வேறு வழி இல்லாமல் சென்றாள்.

அவள் இருக்கும் அத்தனை இடமும் அவனுக்கு சொந்தம் எதிர் காலத்தில் அவளே சித்துவுக்கு தான் சொந்தமாக போகிறாள். வாழ்க்கை முழுவதும் ஒன்றாக வாழ போகிறாள்.

இது தெரியாமல் காலத்தை விட அவள் நிறைய  அவன் உணர்வுகளோடு விளையாடி கொண்டு இருக்கிறாள்.

இப்பொழுது அந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.

சித்தார்த் அங்கே இல்லை அவனுக்கு நிறைய வேலை இருந்தது.

அவள் வீட்டுக்கு வந்ததும் ரோஷினி வந்து அவளை அணைத்து கொண்டாள்.

“ஹே உன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு? 

ஒன்னும் இல்ல ரோஷினி நான் நல்லா இருக்கேன்.

நீ பொய் சொல்ற.

இல்ல நான் நல்லா இருக்கேன் என்று சொல்லி இருவரும் வீட்டுக்கு உள்ளே சென்றனர்.

சதீஷ் சித்தார்த்திடம் கூற ஆனால் அவன் வந்து பார்க்க வில்லை.

இதன்யாவுக்கு ரிஷியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

ஏன் என்றால் பிரியாவுக்கு அடுத்து ரிஷியிடம் தான் அனைத்தும் ஷார் செய்வாள்.

உள்ளே அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்றவள் ரிஷிக்கு போன் செய்தாள்.

அவாளது எண்ண பார்த்ததும் வலியில் எடுத்து காதில் வைத்தான்.

ஹலோ சீனியர்.. என்று சொல்லும்போது அவள் குரல் தளுதளுக்க.. 

ரிஷி கண்டு கொண்டான் அவளுக்கு எதோ பிரச்னை!  

“உடனே என்னாச்சு தனு?  ஏன் உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கு?  இப்போ எங்கே இருக்க?”

“ரோஷினி மேம் வீட்டில் இருக்கேன்.”

இதை கேட்டதும் அவ வீட்டுக்கு எதுக்கு போன உன்னை எதுவும் வேலை வாங்குகிறாளா!.

இல்ல சீனியர் அப்படி இல்ல அவங்க தனியா இருக்காங்க அதனால் நான் கூட ஸ்டே பண்ணி இருக்கேன்.

ரிஷி, சரி உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கு எதுவும் பிரச்னை இல்லை தானே.

ம்ம் நீங்க என் கிட்ட பேசாம இருப்பது தான் எனக்கு பிரச்னை.

அவன் அமைதியாக இருந்தான். 

இதன்யாவே தொடர்ந்தாள்.” நான்! எனக்கு எதுவும் ஷேர் பண்ண யாருமே இல்ல! நீங்க, பிரியா மட்டும் தான் இப்போ நீங்க என் கிட்ட பேசாமல் இருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”

அவள் சொல்வதை சிறிது நேரம் யோசித்தான். நம் மனதில் இருப்பது அவளுக்கு என்ன தெரியும்? கள்ளம் கபடமற்ற பெண் என தோன்றியது.

ஒரு சிறிது நேரம் கழித்து “ம்ம் இனி எப்பவும் போல பேசுவேன் கொஞ்சம் வேலை அதிகம் அது தான் பேசல ஒரு பத்து நிமிடம் கழித்து போன் பண்ணட்டுமா!”

ம்ம் சரி என்று சொல்லி அவள் போன் வைத்தாள்.

அவள் போன் வைத்ததும் ரிஷி குளித்து முடித்து விட்டு வெளியே வந்தவன் கண்ணாடியில் அவன் உருவத்தை பார்த்தான்.

நிதன்யா என்றும் இதன்யா இல்லை என்று இப்போது தோன்றியது.

காதல் பார்வை அது( நிதன்யா) அவளிடம் இருந்து தான் கிடைக்கும். கிடைத்தது. 

“ஆனால் என்ன செய்ய நிதன்யாவை நான் இழந்து விட்டேன். இப்போது அது எனக்கு இதன்யாவிடம் இருந்து கிடைக்காது .அவள் அன்பு ஒன்று மட்டுமே போதும் என அவள் என்னை உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறாள்.  அதனால் நான் அவளுடைய நலம் விரும்பியாக எப்பொதும் இருப்பேன்.” என நினைத்து கொண்டு அவளுக்கு போன் செய்தான்.

ஹலோ தனு என்ன பண்ற?

சீனியர் என்று அழுது கொண்டே வீட்டில் நடந்த எல்லா விஷயமும் கூறினாள்.

ரிஷிக்கு இதை கேட்டதும் மனம் நொந்து போனது.

“இதை முன்னவே எனக்கு சொல்லி இருக்கலாம் தானே உனக்கு நான் நினைவில் இல்லையா?” என்று அவன் கோபபட

உடனே இதன்யா, “சாரி சீனியர் எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என தெரிய வில்லை. ஆனால் இப்போ பிரச்னை சரி ஆகி விட்டது.”

இதன்யா, இப்போ எங்கே இருக்கீங்க.?

நான் வீட்டில் இருக்கிறேன்.

அப்போ காலேஜ் போலயா? 

இல்ல கொஞ்சம் உடம்பு சரி இல்லை.

இப்போ எப்படி இருக்கு ஓகே வா.

ம்ம் ஓகே. சரி நீ வெளியே வரயா நேரில் பேசலாம்.

இதன்யா ரோஷினியைப் பற்றி நினைத்து கொண்டே நீங்க இங்கே வாங்க.

நான் நானெல்லாம் அங்கே வர மாட்டேன் உனக்கு தெரியும் தானே.

இதன்யா, எனக்கு இங்கே எல்லாரும் ரொம்ப புதுசா இருக்காங்க,  நீங்க வந்தால் எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும் . என்று அவள் கூறினாள்..

ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தவன். சரி நான் வருகிறேன்…. என்று சொல்லி போன் வைத்தான்.

அதே நேரம் தாரா பட வேலைகள் அனைத்தும் முடித்து இப்போது எந்த கமிட்டிமெண்ட்டும் இல்லாததால் சித்தார்த்தை பார்க்க பெங்களூரில் இருந்து  இங்கே வந்து இப்போது வீட்டுக்கு காரில் வந்து கொண்டு இருந்தாள்.

இதன்யா ரோஷினியிடம்  “உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு!”…

ஹே என்ன அது என்று கேட்கும் நேரம் கதவு தட்டப்பட்டது.

ம்ம் போய் திறங்க…

அவள் நினைத்தது ரிஷி தான் வந்து இருக்கிறான் என்று..

ஆனால்!

ஆனால் அங்கு நின்றது “தாரா “அவளை பார்த்து ரோஷினி எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் இவள் எப்படி? தனு உனக்கு தெரியும்! இவளை தான் நீ சொன்னாயா.?”

இதன்யா தாராவை ஆச்சரியமாக பார்த்து கொண்டு எழுந்து நிற்க,

அவள் தன் கண்ணாடியை கலட்டி கொண்டே ஹே டெவில் எங்கே சித்து என்று உள்ளே இதன்யாவை பார்த்து கொண்டே வந்தாள்.

“அவன் ஆஃபீஸ் போயிட்டான் இப்போ எதுக்கு நீ இங்கே வந்த?  உங்க கொஞ்சல் எல்லாம் என்னால பார்க்க முடியாது தயவு செய்து என் முன்னாடி கொஞ்சிட்டு திரியாத..”

இதன்யா அருகில் வந்து நின்ற தாரா அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு  இந்த “லிட்டில் கேர்ல்” யாரு? 

ரோஸினி, அவ என்னோட பிரென்ட் என்று சொல்ல

தாரா, ஹாய் என்னோட நேம் தாரா உங்க பெயர் என்ன?

இதன்யா  அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து “மேம் உங்க மூவி நான் பார்த்து இருக்கிறேன். நீங்க தமிழ்ப் படம் கூட நடித்து இருக்கின்க தானே! எனக்கு உங்க நடிப்பு பிடிக்கும். நீங்க நேரில் ரொம்ப அழகா இருக்கீங்க.” என்று அவள் பேச

தாரா சிரித்து கொண்டே “ரொம்ப தேங்க்ஸ் நீங்க நல்ல பொண்ணா இருக்கீங்க நீங்க எப்படி இந்த டெவில்க்கு ப்ரெண்ட்டா இருக்கீங்க?”

ரோஷினி வேகவேகமாக இதன்யா அருகில் வந்து “ஹே அவ என் ப்ரெண்ட்! உனக்கு வேற படம் எதுவும் இல்லையா? எதுக்கு இங்கே வந்த? நீ மட்டுமா இல்லை அந்த இன்னொரு சைக்கோ குரு பிரகாஷ் அவனும் வந்து இருக்கிறானா?”

தாரா, ஹே ரொம்ப ஓவரா பேசுற என் டார்லிங் எங்கே?

“உன்னோட டார்லிங்” என்று சொல்லும் நேரம் மீண்டும் கதவு தட்டபட்டது.

கதவு திறக்க அங்கே ரிஷி நின்று கொண்டு இருப்பதை பார்த்து ரோஷினி கண்கள் மின்னியது.

அவள் ஒரு நிமிடம் அவனை ரசித்து கொண்டே அப்படியே நிற்க உடனே

தாரா, ஹே கொஞ்சம் பிரசென்ட்கு வா என்று சொல்ல

ரிஷி அவளை கண்டு கொள்ளாமல் நேராக இதன்யா அருகில் போய் எப்படி இருக்க? என்று கேட்டு

எப்பொதும் அவளுக்கு பிடித்த அந்த galaxy எடுத்து நீட்டிட இதை பார்த்து ரோஷினிக்கு உள்ளுக்குள் ஏக்கமாக இருந்தது.

தாராவும் அதை கண்டு கொண்டாள்.

இந்த சூழல் மிகவும் இறுக்கமாக இருப்பதை அறிந்து “ரொம்ப தேங்க்ஸ் ரிஷி அண்ணா.”

இதை கேட்டதும் தாரா, ரோஷினி இருவரும் கொஞ்சம் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். 


ரிஷி, “ஹே என்ன அண்ணா சொல்ற! நீ சீனியர் சொன்னால் தான் பேசுவேன். இல்லை இப்போவே கிளம்பி விடுவேன்.” என அவன் பொய் கோபம் கொள்ள

இதண்யா சிரித்து கொண்டே “இது ஒன்னும் காலேஜ் இல்ல நான் அண்ணா தான் சொல்வேன். என்று அவர்கள் இருவர் உரையாடலை ரோஷினி பார்த்து கொண்டு இருந்தாள்.

அருகில் தாரா, “இங்கே கொஞ்சம் பர்ன் ஆகிற ஸ்மெல் அடிக்குது டெவில். உனக்கு அப்படி எதுவும் அடிக்குதா!”. என சொல்ல உடனே ரோஷினி அவளை அடிக்க துரத்திட

சரியாக இப்போது கதவு தட்டும் ஓசை கேட்க ரோஷினி போய் கதவை திறந்ததும்

அங்கே எந்த உணர்ச்சியும் இல்லாமல் சித்து நின்று கொண்டு இருக்க 

ஹாய் சித்து டார்லிங் என சொல்லி கொண்டே தாரா அவனை வாசலில் போய் கட்டி அணைக்க  பார்த்து

இதன்யாவுக்கு கோபம், பொறாமை வர இப்போது தான் நிமிர்ந்து பார்க்க அங்கு என்ன நிலையில் இருக்கிறோம் என தெரியாமல்  இதன்யா சித்துவை முறைத்து கொண்டு  எழுந்து நின்றிருந்தாள்.

சித்தார்த் அவளின் முகத்தை கண்டு கொண்டான்.  லிட்டில் ஹார்ட் today fire பண்ண போறேன். என நினைத்து கொண்டு அவன் வேலையை ஆரம்பித்தான். 

தாரா அவனை அணைக்க உடனே  சித்து அவளை அன்பாக நட்பின் சாயல் மட்டுமே அவள் தலையில் வருடி விட்டு  இன்னும் விலகாமல் அவள் அவன் மேல் சாய்ந்து கொண்டு இருப்பதை இதன்யா பார்க்க நெஞ்சு குமிரியது. 

இன்னும் கோபம் அதிகமாக கண்களில் கண்ணீர் வேறு வந்து விட்டது.

இதை பார்த்து சித்தார்த் ம்ம் இது கூட நல்லா இருக்கே இரு டி லிட்டில் ஹார்ட் இனி உனக்கு இருக்கு ….

தாரா, ரோஷினி, ரிஷி, இதன்யா நால்வரும் ஹாலில் நின்று பேசிக் கொண்டு இருக்க இப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

ரோஷினி கதவு திறக்க அங்கே சித்தார்த் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் நின்றான். அவனை பார்த்த அடுத்த நொடி வேக வேகமாக தாரா போய் சித்து டார்லிங் என அணைத்து கொண்டாள்.

இதை பார்த்து கொண்டு இருந்த ரோஷினிக்கு இது சாதாரணமாக தான் இருந்தது. ரிஷி இதை பெரிதாக கண்டு கொள்ள வில்லை ஆனால் இதன்யா அவளுக்கு என்ன ஆனது? 

இதன்யாவின் முகத்தை பார்த்த சித்து என்னாச்சு எதுக்கு இப்படி முறைக்கிரா?  என பார்க்க அப்போது தான் அவனுக்கு புரிந்தது.

தாரா அணைத்து கொண்டு இருப்பது அவளுக்கு பொறாமையாக இருக்க கண்களில் கண்ணீர் கோர்க்க வேறு புறம் திரும்பி கொண்டாள்.

சித்து அப்படியே நின்று கொண்டு இருப்பதை பார்த்து தாரா விலக உடனே இப்போது சித்து அவளின் தோல் மேல் கை போட்டு கொண்டு அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

தாராவின் கழுத்தை கொஞ்சம் அழுத்தி நெரிக்க “ஹே லூசு வலிக்குது விடு இன்னிக்கு என்ன புதுசா என் மேல் உனக்கு இவளோ பாசம் இந்த மாதிரி எல்லாம் நீ எப்பொதும் நடந்து கொள்ள மாட்டியே!

சித்தார்த்,கொஞ்சம் சட் அப் தாரா.. 

ஹே விடு சித்து கழுத்து வலிக்குது டா!

“சாரி சாரி இப்போ நம்ப ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்க மாதிரி நினைத்து கொள் இப்போ நான் உன்னோட லவ்வர் மாதிரி நினைத்து கொள்!”

இதை கேட்டு தாரா சிரித்து கொண்டே சத்தியமா முடியல டா நான் அந்த a+b படமே கஷ்ட பட்டு உன் கூட அந்த காதல் காட்சி நடிச்சேன். அதுக்கே உன் கூட என்னால நடிக்க முடியாமல் எனக்கு வாமிட் தான் வந்தது. உன்னை போய் எப்டி டா நான் லவ்வர் அப்டின்னு சொல்லவே வாமித் வருது…

சித்து இப்போது கொஞ்சம் சிரித்து கொண்டே “ஹே ஓவரா பண்ணாத எனக்கும் இன் கூட இப்போ பக்கத்தில் நிற்க கூட டிஸ்கஸ்டிங்கா இருக்கு.!”

தாரா, அப்போ தள்ளி போ லூசு என்னை விடு வா போய் ஃப்ரெஷ் ஆகு சாப்பிடலாம்.

ம்ம் இதுல மட்டும் கரெக்ட்டா இரு நான் என்ன சொல்ல வரேன்னு கேளு…

ம்ம் முதலில் சொல்லு…

சித்து இதன்யாவை பார்த்து கொண்டே “லிட்டில் ஹார்ட்”என்று சொல்ல

எங்கேடா இருக்கா… 

சித்து நீ சரியான பிராட் வீட்டுக்குள்ள ஒளிச்சு வச்சு இருக்கியா எங்கே டா என்று அவள் ஆவலாக கேட்க

இதோ ஷி ஈஸ் தேர் என்று சொல்லி சித்தார்த் “ஹே உடனே பார்த்து வைக்காத கொஞ்சம் அவ சரி இல்ல தாரா ஓவரா பண்றா.!”


ஹேய் பொய் சொல்லாத நீ என்ன பண்ண ? அவ இங்கே தான் ஸ்டே பண்ணி இருக்காளா?.. ஓ அந்த இதன்யாவா?

ம் ம் ஆமா…

“அதை சொல்லுடா முதலில் அப்புறம் நீ சும்மா இருக்க மாட்டியே சொல்லு அவளை என்ன பண்ண!”..

மம்ம் கிஸ் ,ஹக் இதெல்லாம் பண்ணேன்.

அது தானே பார்த்தேன் சரியான ஃபிராடு டா நீ.பாவம் அந்த பொண்ணு…

அவளா பாவமா உனக்கு தெரியாது , தாரா அவள் சரியான மென்டல், என்னை டார்ச்சர் பண்றா.. 

அப்படி என்ன பண்ணா…

சித், அதை அப்புறம் சொல்றேன் இப்போ கொஞ்சம் perform பண்ணலாம் வா, என இப்போது சிரித்து பேசி கொண்டே ரோஷினி அருகில் வந்தனர்.

ரோஷினி, ஹே தனு இப்போ எதுக்கு நின்று கொண்டு இருக்க உட்காரு.. 

ஹான் ஓகே தெரியாமல் எதோ என உளறி கொண்டே அமர்ந்தாள். 

அதன் பின் இதன்யா அவர்களை பார்க்காமல் ரிஷி கிட்ட எதோ பேசி கொண்டு இருக்க,

சித், தாரா பிளீஸ் கொஞ்சம் நல்லா ஆக்ட் பண்ணு.

அவளோ , சித்து இப்போ பாரு டா என்னோட திறமையை என்று சொல்லி கொண்டே  ரோஷினி அருகில் வந்து, “சித்து டார்லிங் எங்கே சரசுமாவை காணோம்?

சித் தலையை கோதி கொண்டே ஜில் என்னாச்சு செல்லம்? …

இதை கேட்டதும் இதன்யா சட்டென்று திரும்பி பார்க்க 

தாரா, ஹே எல்லாரும் இருக்காங்க நீ இப்போ போய் ஜில்லுனு கூப்பிடற ஐ ஃபீல் ஷை …

ஓகே.. சரசு மா எங்கே எனக்காக தானே அவங்கள குகிங் பண்ண ரெடி பண்ண..

இதை கேட்டதும் இதன்யாவின் கண்கள் மட்டும் வெளியே வந்து குதித்து தற்கொலை செய்யும் ரீதியில் இருவரையும் பார்த்தது. 

டார்லிங்கா? செல்லமா? ஜில்லா? அப் அப்போ அப்போ நான் யாரு? என உதடு துடித்தது. 

எல்லாம் பொய்யா? ஹ ஹ ஹ.. 

நீன்துகின்ற வெண்ணிலா நாளையில் இருந்து வரும். தாரா வுக்கு லவ் சக்சஸ் ஆச்சா தெரிந்து கொள்ள நாளைக்கு NV வந்திடுங்க… 

இன்னிக்கி எப்படி இருக்கு ஸ்டோரி சொல்லிட்டு போங்க..  

ரிஷி பற்றி என்ன நினைக்கிறீங்க? 

 தொடரும்….

EPI 38

  டார்லிங்!!!…. செல்லம்!!!!… ஜில்!!!….

சித்து டார்லிங் எங்கே சரசுமாவை காணோம்? ஜில் என்னாச்சு செல்லம்… இதை கேட்டதும் இதன்யா சட்டென்று திரும்பி பார்க்க தாரா, ஹே எல்லாரும் இருக்காங்க நீ இப்போ போய் ஜில்லுனு கூப்பிடற ஐ ஃபீல் ஷை … ஓகே.. சரசு மா எங்கே எனக்காக தானே அவங்கள குகிங் பண்ண ரெடி பண்ண..

சித்து, ம்மம் ஆமா இப்போ மதிமா தான் இருக்காங்க அதனால் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிககொ..

ம்மம் ஒகே இனி இங்கே தான இருக்க போறேன் என்று சொல்லி அவன் கைகளை கோர்த்து கொண்டு தாரா இதன்யாவை பார்க்க அவளோ அவர்கள் இருவரும் கோர்த்து கொண்டு இருந்த கைகளை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

பேப் நான் ஃப்ரெஷ் ஆகி வரேன் சாப்பிடலாம்.. சித்து இப்போ உனக்கு மீட்டிங் தானே? 

என்னோட பேப் இன்னிக்கி வந்து இருக்கா சோ மீட்டிங் கேன்சல் பண்ணிட்டேன்.

ஐ ம் இம்பிரஸ்டு சித்து..

ரோஷினி இதை எல்லாம் வேறு வழி இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

தாரா, என்னோட ரூம் எது..

ரோஷினி நீ கெஸ்ட் ரூமில் தானே தங்குவ இப்போ அங்கே தனு இருக்கா… சோ நீ உங்க வீட்டுக்கு போ..

சித்து, தாரா இங்கே என்னோட floor வா இங்கே என் ரூமுக்கு என்று சொல்ல இதன்யா அவனை பின்னால் திரும்பி பார்த்தாள். 

“ம்ம் என்ன கண்ணு டி? ம்ம் இன்னும் இன்னும் நிறைய உன்னை தூண்டி விட போறேன்! அப்புறம் ஓடி வந்து என்னை கட்டிப்ப!”

ரோஷினி, ஹே இப்போ என்ன சொன்ன.?

சித்து, என்னோட ரூம்க்கு பக்கதில் ஒரு ரூம் இருக்கு அங்கே ஒகே வா..

இல்ல சித்து எனக்கு உன்னோட ரூம் கூட ஒகே தான்! உனக்கு ஒகே வா !

சித்தார்த் இதன்யாவை பார்த்து என்ன ஒகே  சொல்லட்டுமா? 

இதன் யா அவனை கோபத்துடன் மற்றும் அதிர்ச்சியுடன் பார்த்தாள். 

அங்கு இருந்த அனைவரும் அவளை பார்க்க உடனே அவன் ரோஷினி சொல்லு ஓகே வா உனக்கு என்று பேச்சை மாற்றினான்.

பேசாம போயிடு என்னை டென்ஷன் பண்ணாத என்று செல்ல..

சித்து ஒரு நிமிடம் நின்றவன், இதன்யா அருகில் வந்தான். அவள் அருகில் வருவது போல் வந்து ரிஷி அருகில் வந்து நின்றான்.

இதன்யாவுக்கு இருதய துடிப்பு அதிகமானது. அருகில் வைக்க பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுவதும் குடித்தாள்.

சித்து, எப்போ வந்த?

இப்போ தான் மாமா..

ஏன் காலேஜ் வரல..

கொஞ்சம் உடம்புக்கு முடியல அதனால் தான் ..

சரி இங்கேயே ஸ்டே பண்ணு..

அது வந்து மாமா என்று அவன் மழுப்ப

உடனே இதன்யா சீனியர் பிளீஸ் ஜாலியாக இருக்கும் பிளீஸ் என்று கெஞ்சினாள். 

அவன் அவள் முகத்தை பார்த்து விட்டு மம் சரி தனு என்று சொல்ல

சித்தார்த்துக்கு கோபம் அதிகமானது. “திமிர் டி உனக்கு கிலோ கணக்கில் இருக்கு என் முன்னாடி அவன் கிட்ட கெஞ்சுற இருக்கட்டும் எல்லாத்துக்கும் உன்னை கவனித்து கொள்கிறேன்!”

தாரா, சரி வா நம்ப போலாம் என்று கைகள் பிடித்து அவள் அழைத்து சென்றாள்.

இதன்யா அவன் சென்ற அடுத்த நிமிடம்  உடனே அவள் நேராக அவள் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டு அழுதாள்.

சித்து தாரா அருகில் இருப்பது மீண்டும் மீண்டும் அவள் எண்ணத்தில் வந்து போனது.

ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க?  என்று நினைத்து நினைத்து அழுதாள்.

சரி இது தான் சரி நான் உங்களுக்கு வேண்டாம் என்று மீண்டும் முருங்கை மரம் ஏறி கொண்டாள்.

ஆனால் அது சிறிது நேரம் தான் பார்க்கலாமே என்ன தான் செய்ய போகிறாள். 

இங்கே தாரா சித்தார்த் என்ன செய்கிறார்கள்? 

மேலே சென்றதும் இருவரும் மாறி மாறி பொருட்களை தூக்கி பொட்டு அடித்து கொள்ள ஆரம்பித்தனர்.

டேய் எதுக்கு டா மறைச்ச..

சித், “தாரா டோண்ட் டூ தட்.. பிளீஸ் இப்படி செய்யாத என் ரூம்  மார்கெட் மாதிரி ஆகி விட்டது. டிசிப்பிளினா இல்ல எனக்கு இது எல்லாம் பிடிக்காது.”

எல்லா பொருளும் களைத்து ஓயிந்து அருகில் உள்ள சோபாவில் தாரா அமர்ந்தாள்.

சித்து அந்த இடத்தை பார்த்து விட்டு  அவனே எடுத்து வைக்க சுத்த படுத்த ஆரம்பித்தான்.

டேய் செம்மையாக இருக்கா சித்து..

அவளை பற்றி பேசியதும் அவன் முகத்தில் புன்னகை பரவியது.

பாரேன் உனக்கு சிரிக்க கூட தெரியுமா? 

சட் அப் தாரா

 தாரா, அவ முகம் போட்டோ ஜெனிக் ஃபேஸ். அவ மூக்கு அழகா இருக்கு, நடிக்க மட்டும் வந்தால் எல்லா ஹீரோவும் அவ பின்னாடி தான் டா..

இதை கேட்டதும் கோபத்தில் சித்தார்த் அவள் மேல் பூ ஜாடி எடுத்து வீச அது கட்டாயம் நடக்கும் என்று எதிர் பார்த்தவள் நகர்ந்து கொண்டாள்.

ஹே ஸாரி சித்து.. சாரி சாரி பிளீஸ் forgive மீ பிளீஸ் டா என்று அவள் கெஞ்சி கொண்டே ஓடினாள். 

சித்து அவளை துரத்த தாரா ஓடாதே நில்லு…. ஒழுங்கா நில்லு…

அப்பொழுது தான் தன்னை அசுவாச படுத்தி கொண்டு வந்த இதன்யா கண்களில் இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது தெரிய ரிஷியை பார்க்க வந்த இதன்யா அவர்கள் ஓடி கொண்டு இருப்பதை பார்த்து அங்கேயே அழுகை வந்து விட அழுது விட்டாள்.

ஹே தனு! நில்லு!. 

ரிஷி, ரோஷினி ஒரே நேரத்தில் அவளை பார்த்து அழைத்தனர்.  அவள் அழுது கொண்டு இருப்பது தெரிய ஹே என்னாச்சு இதன்யா என ரோஷினி அருகில் வர ரிஷி பதரினான்.

தனு என்னாச்சு?  இப்போ தானே வீட்டில் இருந்து வந்த? அதுக்குள் என்னாச்சு? என்னோட ஜூனியர்க்கு என்று அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்தான். 

ரோஷினி வைத்த கண் வாங்காமல் ரிஷியை பார்த்து கொண்டு இருந்தாள்.

“ஒன்னும் இல்ல சீனியர் வீட்டு நியாபகம் வந்து விட்டது வேற ஒன்னும் இல்ல.” என்று கண்களை துடைத்து கொண்டு இயல்பாக முகத்தை வைத்து கொண்டாள்.

இங்கே சித் மற்றும் தாரா  இருவரும் சமாதானம் ஆகி “ம்ம் ஓகே அவளை மிஸ் பண்ணிடாதே உன்னோட ஹேப்பி எல்லாம் அவ கிட்ட தான் இருக்கு. நான் உன் கைய கோர்க்கும் போது அவ முகத்தை பார்கனுமே!”

சித், எப்படி இருந்தது? 

“டேய் அவ விட்டால் உன்னை அடிச்சு இருப்பா, இப்போ கூட அதே காண்டில் தான் சுற்றி கொண்டு இருக்கா டா.”

ம்ம் சரி நைட்டு குள்ள அவளை நான் லாங் கிஸ்  ஒரு டைட் ஹக் கொடுக்கணும்  அதுக்கு எதுவும் செய்..

எதே!. 

அதான் கிஸ்! ஹக்! ரெண்டும் என் லிட்டில் ஹார்ட்க்கு கொடுக்கணும் 

ஹே இப்போ என்ன சொன்ன…

சித்து சொன்னதை மீண்டும் சொல்லி காட்டினான்.

தாரா, என்னை என்ன டா நினைத்து கொண்டு இருக்க ? இதுக்கு தான் நான் அங்கே இருந்து வந்தேனா?

சித் , ஹே செய் தாரா அப்போ தான் உன்னோட பிரின்ஸ் வரும்போது நான் ஹெல்ப் பண்ணுவேன் அப்புறம் உன் இஷ்டம், நல்லா யோசித்து கொள் நான் நிச்சயம் ஹெல்ப் பண்ண மாட்டேன் குரு அவன் சுத்தமா இது எல்லாம் அவனுக்கு பிடிக்காது. இனி நீ தான் உன்னோட முடிவு..

டேய் வராத இளவரசனுக்கு இப்போ என்னடா அவசரம் இதை வச்சு பிளாக் மெயில் பண்ற .. 

சித், யாரு சொன்னா கண்டிப்பா இருப்பான் நீ முதலில் செய்வியா மாட்டியா அதுக்கு மட்டும் பதில் சொல்லு..

ம்ம் நல்லா பண்ற சித்து நீ லவ்! மேலும் தாரா எங்கே இருந்து உனக்கு இப்படி தோணுது.

சித், ஹேய் பிளான் ரெடியா.. இரு இரு யோசிக்கிறேன் என்று தாரா யோசிக்க தொடங்கினாள்.

சித்து, தாரா பிளான் ரெடியா..
 

தாரா,சித்து உன்னை கொன்றுவேன் டா…

சரி சரி டென்ஷன் ஆகாத சீக்கிரம் யோசி..

தாரா, எல்லாம் என்னோட நேரம் இந்நேரம் லாஸ் வேகஸ் போயிருப்பேன். எப்பவும் பார்ட்டி ஆட்டம் அப்டின்னு சுற்றி ஒரு மாறுதலுக்கு  அப்டின்னு நெனைச்சு இங்கே வந்தேன் உன் கிட்ட வசமா மாட்டிக்கொண்டேன். என்று தாரா யோசித்து கொண்டே இருந்தாள்.

ம்ம் சித்து சூப்பர் ஐடியா..

“முதலில் சொல்லு அதுக்கு அப்புறம் நான் சொல்றேன் அது சூப்பரா இல்ல வேஸ்டா!”

தாரா,ட்ருத் ஆர் டேர்…

சித், சரி அதுல என்ன பிளான்? ..

அவள் சொல்ல ஆரம்பித்தாள்.நான் அந்த குலுக்கல் சீட்டுல உன்னை கிஸ் பண்ணனும் , ஹக் பண்ணனும் அப்டின்னு எழுதி போட்டு விடுகிறேன்.

ம்ம் அப்புறம்..

தாரா கண்கள் மின்ன லிட்டில் ஹார்ட்க்கு நீ கிஸ் கொடுக்க தேவை இல்ல அவ உனக்கு கொடுப்பா டா நினைத்து பாரு.. 

சித் தாராவின்  அருகில் வந்து”  ஒரு வேலை அந்த சீட் உனக்கு இல்ல ரிஷிக்கு வந்தால் நான் என்ன பண்ணட்டும்?  என்று அவள் மேல் பில்லோவ எடுத்து வீச  தாரா சிரித்து கொண்டாள்.

ஹே எதுக்கு சிரிக்கிற.. 

உடனே தாரா எழுந்து கொண்டு “இல்ல சித்து நீ ரிஷிக்கு கிஸ் பண்ற மாதிரி நினைத்து பார்த்தேன் டா. என்று அவள் ஓட சித்தார்த்துக்கு கோபம் வந்தது.

“தாரா உன்னை அப்படியே தூக்கி டெரஸ்ல கட்டி போட்டு விடுவேன். அப்புறம் நைட்டு ஃபுல்லா தனியா இருப்ப” என்று அவள் மேல் எல்லா பில்லோவையும் எடுத்து வீசினான்.

தாரா, எனக்கு வராது நான் விளையாட மாட்டேன்.

சித்து, வேற யோசி அவள் கிட்ட பேசி கிட்ட தட்ட ஒரு வாரம் ஆக போகுது. 

தாரா சிறுது நேரம் யோசித்து விட்டு “டேய் என்னையே யோசிக்க சொல்ற நீயும் யோசிக்க வேண்டியது தானே!” 

“நான் ஒன்னும் சும்மா இல்ல”

சாரு அப்படி என்ன பன்றாரு? 

நான் அவளுக்கு எப்படி கிஸ் பண்றது அப்டின்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன். 

உன் பிளான் பாயில் ஆக!. 

“ஹே யோசி டி!”

இரு யோசித்து தொலையிரென். என தாரா இப்போது அமர்ந்து கொண்டே யோசித்து விட்டு “ம்ம் கட்டாயம் இந்த முறை சூப்பர் ஐடியா தான்!” என்று சொல்ல

சித், என்ன அது..

தாரா, hidden & sik இதை கேட்டதும் சித் முகம் திருப்பி கொள்ள டேய் நம்பு இந்த முறை சத்தியமா வொர்க் அவுட் ஆகும் என்னோட பிளான் முதலில் கேளு டா …

சித், மம் சொல்லு கேட்போம் என்று அவன் லேப் டாபில் வேலை செய்ய ஆரம்பித்தான்.

தாரா, நீ, நானு, ரிஷி, சதீஷ், லிட்டில் ஹார்ட், ரோஷினி சரியா முதல் ரெண்டு அவுட் எதுவும் செய்ய வேண்டாம்

கடைசியாக மூன்றாவது அவுட் நீ ஆகுற மாதிரி நான் பன்றேன், சரியா நீ அவ பக்கதில் போகும்போது இந்த வீட்டோட மொத்த பவரும் கட் பண்ணி விட்டு விடுகிறேன் அவளை நீ கிஸ் பண்ணிடு எப்படி என்னோட ஐடியா? 

சித், இதை கேட்டதும் மம் நாட் பேட்! 

என்ன நாட் பேடா உன் மூளை ஃபிரஸா தானே வச்சு இருக்க? நான் கஷ்ட பட்டு பிளான் பண்ணி இருக்கேன் டா! 

சித், சரி கட்டாயம் இதை செயல் படுத்துவோம். இது மட்டும் சக்சஸ் ஆச்சு என்னோட ஒயின் கலெக்சன்ல இருந்து உனக்கு ஒரு பாட்டில் இந்த டீல் உனக்கு ஒகே வா.. 

சித்து எனக்கு டபிள் ஓகே.. என்று சொல்லி தாரா கீழ வர சித்தார்த் தன்னை தயார் செய்து கொண்டு இருந்தான். பெரிய ஒப்பனை ஒன்றும் இல்லை குளித்து முடித்து வாசனை திரவியம் மட்டும் போட்டு கொண்டு வழக்கமாக வீட்டில் அணியும் உடையை அணிந்து கொண்டான்.

தாரா கீழ வந்ததும் அனைவரிடமும் பேசி கொண்டு எதும் விளையாடலாமா..

இதை கேட்டதும் ரோஷினி ட்ருத் ஆர்  டேர் ஜாலியா இருக்கும் .

உடனே ரிஷி, நான் வரல தாரா மேம் மாமா இருக்காரு. என்று சில செய்தி தாள்களை புரட்டி கொண்டு கூறினான். 

அப்போது அங்கே இதன்யா வர ரோஷினி, தனு இப்போ நம்ப விளையாட போறோம் நீ வரயா..

இதன்யா, “நானா?  நான் வரல நீங்க விளையாடுன்க நான் வேடிக்கை பார்க்கிறேன் எனக்கு ஒன்னும் தெரியாது .”

தாரா, இல்ல நீயும் வரனும் ஆனால் ரோஷினி சொன்ன கேம் வேண்டாம்.hidden & sik இப்போ ஒகே வா ரிஷி..

இல்ல மேம் மாமா இருக்காரு எனக்கு தீசிஸ் வொர்க் இருக்கு அப்புறம் கேட்பார்.

இதன்யா, சீனியர் அவர் எதுக்கு உங்களை கேட்கணும். அவரு என்னமோ சாரு மாதிரி பில்ட் கொடுக்குறீங்க? 

ரிஷி, தனு நான் அவர் கிட்ட தான் PhD பன்றேன். இதை கேட்டு அவள் முகத்தை திருப்பி கொள்ள..

சாரி பிளீஸ் இதை தான் நான் வந்த நாளில் இருந்து உன் கிட்ட சொல்ல முயற்சி பண்ணேன் சாரி தனு… 

ரோஷினி, ஹே சரின்னு சொல்லு அவர் தான் அவ்ளோ தூரம் சொல்றாரு தானே..

ரிஷி ரோஷினியை முறைக்க

இதன்யா சரி சீனியர் என்று சொல்லி பொதுவாக பேசினாள். 

தாரா, ரிஷி நீ வா நான் சித்து டார்லிங்கை பார்த்து கொள்கிறேன்.

இப்போது இதன்யா, போங்க மேம் தான் சொல்றாங்க தானே..

மம் சரி எல்லாம் என்னோட ஜூனியர் வந்தால் தான் என்று சொல்ல

உடனே அவள் நான் நானெல்லாம் வரல பா நீங்களே விளையாடுங்க..

ரோஷினி, பிளீஸ் தனு ஜாலியா இருக்கும் வாயேன்..

இல்ல நான் வரல..

ரிஷி, அப்போ நானும் வரல..

ரோஷினி, போச்சு இப்போ அவரும் வரல அப்டின்னு சொல்லிட்டாரு எல்லாம் உன்னால் தான்! 

இதன்யா, சிரிது நேரம் யோசித்து விட்டு சரீ வருகிறேன் என்று அவள் சொல்ல அடுத்த நொடி  தாரா சித்துவிக்கு மெசேஜ் செய்தாள்.

சித்து உடனே எதுவும் தெரியாதது போல் கீழ இறங்கி வந்தான்.

தாரா அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

இதன்யா அவர்கள் இருவரும் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு வேகமாக அவள் அறைக்கு செல்ல போக

உடனே ரோஷினி அவள் கைகளை பிடித்து அமர வைத்து கொண்டாள்.

தாரா, டார்லிங் நாங்க hidden &sik விளையாட போறோம்.

ம்ம் கேரீ ஆன்..

நீயும் வாயேன்..

நான் வரல..

தாரா, ஹே எனக்காக வாயேன் பிளீஸ் என்று சொல்ல அவன் சரி என்று கொஞ்சம் புன்னகை செய்தான்.

அது கடுமையான வெயிலில் மழை தூறுவது போல் இருந்தது.

சித், ஹே அந்த பவர் கட் அதுக்கு இந்த ஹவுஸ் management அப் ல இதை டச் பண்ணு என்னோட போன் ல இருந்து மட்டும் தான் அதை அக்செஸ் பண்ண முடியும் என்று தாரவிடம் எல்லா விஷயமும் கூறி போன் கொடுத்தான். 

சித் தாரா பேசி முடித்து இருவரும் கள்ள புன்னகை செய்து கொண்டனர்.

தாரா, டார்லிங் சதீஷ வர சொல்லு ஒரு ஆள் தேவை என்று சொல்ல உடனே சித் அவனை வர சொன்னான்.

சதீஷ் வர எங்கு எங்கு ஒளிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல அதை எல்லாம் அனைவரும் சரி என்றனர்.

முதலில் ரிஷி அவுட் ஆனான்.

அடுத்து தாரா,

மூன்றாவதாக தாரா சித்துவை பிடித்து

இப்போது சித்தார்த் அவுட் ஆனான்.

அவன் எண்ணி கொண்டு இருக்க எல்லாரும் போய் ஒளிந்து கொண்டனர்.
ரோஷினி, ரிஷி அருகில் ஒளிந்து கொண்டாள்.

தாரா, சதீஷ் இருவரும் அருகே அருகே ஒளிந்து கொண்டனர். அவன் கண்டு பிடிக்க வர சதீஷ் இதன்யா எங்கு ஒளிந்து இருக்கிறாள் என்று சைகை செய்ய சித் இதன்யாவை தேடி சென்றான்.

அவள் ஒரு தூண் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்தாள். அவள் மனதில் அவன் தாராவை தான் பிடித்து இருப்பான் என்று அவர்கள் இருவரும் பேசி சிரிக்கும் காட்சியை நினைத்து கொண்டு இருக்க..

தாரா, சித்,இருவரும் மனதில் மூன்று, இரண்டு, ஒன்று என எண்ணி கொள்ள 

சித்து சொன்னதை போலவே தாரா சரியான நேரத்தில் பவர் கட் செய்தாள். 

உடனே சித்து அவளை அப்படியே அருகில் இழுத்து அவள் இதழில் முத்தம் பதித்தான். இதன்யா ஒரு நிமிடம்  உறைந்தாள். அவன் ஒரு வாரம் அவளை பார்க்காமல் இருந்த மொத்த பிரிவையும் இந்த ஒரே முத்தத்தில் காட்ட ஆரம்பித்தான்.

இதன்யா கைகளில் சக்தி இல்லாமல் மிகவும் பலவீனமாக உணர்ந்தாள் இருவரும் கண்களை மூடி கொண்டனர். இதன்யாவுக்கு மனதில் உள்ள கவலை அனைத்தும் தூள் தூளாக சிதறி எங்கே போனது என்றே தெரியவில்லை.

அவள் இடையை அவனை நோக்கி இழுத்து அவள் உதடுகள் சிவக்கும் வரை முத்தமிட்டான். “என்ன திமிர் டி? இப்போ தள்ளி விடு டி ! சரியான திமிர் பிடிச்சவள் மனசில இருப்பதை சொன்னா முத்து உதிர்ந்து விடும்!” என்று அவன் நினைத்து கொண்டே முத்தமிட்டான்.

தாரா, சதீஷ் ஆன் பன்னட்டுமா..

இருங்க மேம் இன்னும் ஒரு பத்து நிமிடம்…

டேய் சரி இல்ல டா அவன் இருக்கிற தீவிரத்துல அந்த பொண்ணை எதுவும் செய்து விடுவான் டா…

“மேம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல இதன்யா மேம் சாரை ரொம்ப லவ் பண்றாங்க ஆனால் சொல்ல மாட்டிங்கிராங்க.. ” 

இங்கே ரிஷிக்கு ஒரு வீக்நஸ் இருட்டு என்றால் சாருக்கு ரொம்ப பயம் தாரா பவர் கட் செய்த அடுத்த நிமிடம் ரிஷி ரோஷினி அருகில் அவள் பெயரை அழைத்து கொண்டே வந்து கைகள் கோர்த்து கொண்டான்.

கொஞ்சம் பயம் அதிகமாக ரோஷினி பக்கத்தில இரு என்னை விட்டு எங்கும் போகாதே என்று சொல்லி அவன் பயத்தில் அவளை அணைத்து கொண்டான்.

ரோஷினிக்கு ஒரு புறம் சிரிப்பு ஒரு பக்கம் வானில் பறப்பது போல் இருந்தது.

இங்கே சித்தார்த் அவளை இறுக்கமாக அணைத்து அவள் கழுத்தில் அவளின் பிரத்யேக வாசனையை உள்ளே இழுத்துக் கொண்டான். அவன் கைகளை அவள் உடல் எல்லா இடத்திலும் ஊர்வலம் போக அவள் அவனின் தீவிரம் தாங்க முடியாமல் அவனை அணைத்து கொண்டாள்.

மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்க மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தமிட்டு அவளிடம் இருந்து ஒரு சில நொடிகளில் விலகி தாரா இருக்கும் இடத்துக்கு வந்து விட்டான்.

இதன் யா அப்படியே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்களை மூடி கொண்டு நின்று கொண்டு இருந்தாள். 

உடனே பவர் ஆன் செய்ய இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சித்தார்தின் மயக்கத்தில் இருந்து வெளி வந்த இதன்யா கண்களை மெதுவாக திறக்க அருகில் அவன் இல்லை என்று தெரிய சுற்றி சுற்றி தேடினாள்.

சித்து, சதீஷ் அருகே நின்று கொண்டு இருந்தான்.

தாரா உடனே ரோஷினி எங்கே என்று பார்க்க அவர்கள் இருவரும் கட்டி கொண்டு நின்று இருந்தவர் 

அவள் சிரித்து கொண்டே இதன்யா அறுகில் வந்தாள்.  “ஹே என்னாச்சு நீ ஏன் ஒரு மாதிரி நிக்கிற.?”

ஒன்னும் இல்ல மேம்.. என்று சொல்லி அவள் ஹால் வந்தாள்.

தாரா மனதில் அப்போ நான் மட்டும் தான் இங்கே சிங்கிளா ஒன்னு என்னடான்னா முத்தம் கொடுக்குது. இன்னொரு ரெண்டும் கட்டி கிட்டு நிக்கிது. ஆனால் நானு மெக்கானிக் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். 

இதன்யா சித்தார்த் தை பார்த்து கொண்டே வந்தாள். 

 ஆனால் சித்து அவளை பார்க்க வில்லை. அவன் பார்வை  சதீஷ் நீ தான் அவுட் என்று பேசி கொண்டு இருந்தான்.

ரோஷினி, ரிஷி.. 

ம்ம்….

கரெண்ட் வந்து விட்டது என்று சொல்ல அவன் சட்டென்று விலகினான்.

இந்த பவர் கட்டில் சித்து தான் பக்கோடா சாப்பிட்டான். என்றால் ரிஷி கூட ரோஸினியும் சேர்ந்து சாப்பிட்டாள். 

இங்கே இதன்யா சித்துவை பார்த்து கொண்டு இருக்க

சதீஷ், பாஸ் மேடம் என்று எதோ?

தொடரும் ….

EPI 39

சித் அவளை முத்தமிட்டு பின் அவளை விட்டு பிரிய மனமில்லாமல் இருந்தாலும்  வேக வேகமாக அந்த இடத்தை விட்டு சதீஷ் இருக்கும் இடத்திற்கு வந்த அடுத்த நொடி கரெண்ட் ஆன் செய்ய பட்டது.

ரோஷினியை பயத்தில் அணைத்து கொண்டு இருந்த ரிஷி இப்போது அவள் சொன்ன அடுத்த நொடி தன்னை நிலை படுத்தி கொண்டு நகர்ந்தான்.

ரிஷி, பிளீஸ் எனக்கு இருட்டு அப்டின்னா பயம்ன்னு தனு கிட்ட சொல்லிடாத..

ஏன்… ?

அவ என்னை தான் ரோல் மாடலாக நினைத்து கொண்டு இருக்கா பிளீஸ் சொல்லாத..

ரோஷினி சிரித்து கொண்டே நான் சொல்ல மாட்டேன் நீங்க கவலை பட வேண்டாம் என்று முகமெல்லாம் வெட்கமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்.

இங்கே தாரா, சித்து நீ தானே அவுட் எப்படி தீடீர் ன்னு கரெண்ட் கட் ஆச்சு…

எதோ சர்க்யூட் பிரச்சனை …

சரி இப்போ யார் அவுட்

சதீஷ், நான் தான் மேம் அவுட் சாரு என்னை கரண்ட் கட்க்கு முன்னவ பிடித்து விட்டார் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது இதன்யா வந்தாள்.

தாரா அவள் முகத்தை பார்க்க அவள் இதழ்கள் சிவந்து இருந்தது. கைகளில் உள்ள பூனை முடிகள் எல்லாம் விறைத்து கொண்டு நின்றது.

“இதன்யா என்னச்சு எதுவும் கனவு கண்டயா”
அவளுக்கு வாத்தைகள் வாயில் சிக்கி கொண்டது.

இல்லை மேம் ஒன்னும் இல்லை நான் நல்லா இருக்கேன். என்று சித்தார்த்தை பார்த்தாள். 

அவனுக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல் இருந்தான்.

அவள் மனம் இது கனவா? இல்லை நிஜமா?  அது அவர் தான் எனக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார்!

இல்லை உன்னோட கற்பனை நீ அவரை நினைத்து நினைத்து இப்படி ஆகி விட்டாய் என்று இவள் யோசித்து கொண்டு இருக்க என குழம்பி நின்று கொண்டு இருந்தாள். 

அங்கே  ரோஷினி வெட்க முகத்தோடு வந்து நின்றாள். ரிஷி கொஞ்சம் பதட்டத்துடன் வந்து நின்றான்.

தாரா, சதீஷ் நீ போய் எண்ணு என்று சொல்ல

ஒரே நேரத்தில் ரிஷியும், இதன்யாவும்,” நான் வரல”என்று சொல்ல ரோஷினி, 

தாரா, சதீஸ் என அனைவரும் பார்த்தனர்.

சித் முகம் ஒரு குட்டி புன்னகை சிந்தியது.

ரோஷினி முகமும் புன்னகை செய்தது.

தாரா இப்போது தான் நிம்மதியாக உணர்ந்தாள். சரி எனக்கும் பசிக்குது நம்ப சாப்பிடலாம் என்று சொல்லி அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.

சதீஷ் உடனே கிளம்பி விட்டான்.

தாரா,ரோஷினியிடம்” ஹே ஒரே ரொமான்டிக் மோட் ல இருக்க போல!”

ஜஸ்ட் சட் அப் தாரா.. என்று அவள் படுக்கை அறை ஓடி விட்டாள்.

இதன்யா அதற்கு முன்னவே அவள் அறைக்கு சென்று  விட்டாள். மீண்டும் மீண்டும் மனம் எல்லாம் குழப்பமாக இருந்தது.

“உண்மையா ? பொய்யா? என்று ஒரு நிமிடம் கண்ணை மூடி பார்க்க ஷாக் அடித்தது. அய்யோ என்னால இதுக்கும் மேல முடியல முருகா என்னை நீ பைத்தியமாக்குற!”

இங்கே ரிஷி வெளியே சென்று கொஞ்சம் தோட்டத்தில் நடக்க போனான்.

சித்தார்த் அறைக்கு தாரா வந்தாள்.

அவள் முன்னால் ஒரு ஒயின் பாட்டில் இருக்க அதை பார்த்து தூக்கி கட்டி ஒரு முத்தம் பதித்தாள்.

தாரா, டேய் எத்தனை கிஸ் கொடுத்த…

இதை கேட்டதும் அவன் முறைத்து “ஹே தாரா உனக்கு மேனர்ஸ் இருக்கா”

“டேய் முதலில் அது உனக்கு இருக்கா?  என் கிட்ட வந்து  கேட்டு போய் அவளை நல்லா சீண்டி விட்டு வந்து இருக்க நீ!’,அவள் உதடு முகம் எல்லாம் சிவந்து போச்சு…

“ஹே ஒழுங்கா அந்த பாட்டில் எடுத்து கொண்டு உன் ரூமுக்கு போயிடு!”இல்ல என அவன் சொல்ல வர என்று தாரா சிரித்து கொண்டே கிளம்பி விட்டாள்.

சித் நினைவுகள்  எல்லாம் அன்று அழுது கொண்டே ஓடிய அவள் முகம் தான் நினைவுக்கு வந்தது.

இன்று அவள் முகத்தில் இருந்த அந்த ஒரு பிரகாசம் அதை நினைத்து மனதில் ஒரு மின்னல் வெட்டியது.
அவள் வாசம் அவன் மேல் வீச தொடங்கியது.

இங்கே பெங்களூர் இரவு தொலைபேசியில் ரதி யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தாள்.

ரதி, நீ என்ன பண்ணிட்டு இருக்க…

மறுமுனை அதை நான் தான் உங்க கிட்ட கேட்கணும்…

இப்பொழுது ரதி, நான் தோர்த்து போயிட்டேன்..

அவன் இவளோ அறிவா இருக்கிறது தான் என்னோட பெரிய பிரச்னையா இருக்கு…

இந்த முறை அவன் காலேஜ் NACC ல நல்ல ரேங்க் வாங்கி வைத்து விட்டான். நான் படிச்ச காலேஜ் வாங்க போனால் அது அந்த ***பவானி பெயரில் எனக்கு முன்னவ வாங்கி விட்டான். நான் எப்படி வெட்டினாலும் வளர்ந்து வருகிறான்.

அதனால் தான் உன்னை வைத்து நான் அவனை உன்னோட அடிமை ஆக்கி வைத்து இருந்தேன்.
மறுமுனை ஒரு புன்னகையை சிந்தியது. அது வேறு யாரும் அல்ல மெலினா தான்.. ரதி, லீனா அவனை உன்னால் மட்டும் தான் கஷ்ட படுத்த முடியும்… லீனா முன்னால் இருந்த ஓட்கா ஒரு சாட்ஸ் அடித்தவள். அப்போ உங்க பிலிம் கம்பனி பாதி ஷேர்ஸ் எனக்கு வேணும்.

ரதி, ஹே இது ரொம்ப டூ மச்..

அவளோ,உங்களுடையது தான் கேட்டேன். மிஸஸ் ரவிச்சந்திரன் ஷேர்ஸ் வேண்டாம். உங்க பிளான் மொத்தமும் எனக்கு தெரியும் சோ நீங்க என்னை நல்லபடியா ஹேண்டில் பண்ணனும்.
நீ இந்த முறை அவனை அடிக்கிற விதத்தில் தான் சந்திரமௌலி குரூப்ஸ் அண்ட் ரவிச்சந்திரன் குரூப்ஸ் மொத்ததுக்கும் என் பையன்
ஆரவ் ரவிச்சந்திரனை நான் CEO வா கொண்டு வந்து விடுவேன். அவனால் வாரிசு கிடைக்காது என்று சொல்லி சொத்து மொத்ததுக்கும் என் பையனை அதிபதி ஆக்கி விடுவேன். நீ வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டா இந்த ஜென்மத்தில் அவனை கல்யாணம் பண்ணிக்க எவளும் வர மாட்டா இது மட்டும் நடந்தால் போதும் உன்னை நான் நல்லா கவனிப்பேன் லீனா…என ரதி கூறினாள். 

லீனா, நிச்சயம் நீங்க சொல்றது எல்லாமே நடக்கும் என்று சொல்லி இருவரும் கட் செய்தனர்.

லீனா நரியை போன்ற புத்தி, ரதி ஒரு ஓநாய் போன்றவள் இருவரும் சேர்ந்து சித்தார்த்துக்கு வலை விரித்து விட்டார்கள். இதில் இருந்து அவன் தப்பிப்பானா?

இங்கே தாரா, டேய் சித்து எனக்கு ரொம்ப பசிக்குது வா சாப்பிடலாம். அவன் கையில் அந்த குவாண்டம் பிஸிக்ஸ் புத்தகத்தை புரட்டி கொண்டே நீ போ நான் வருகிறேன்.

இப்போ நீ வரல நீ வரதுக்கு முன்னாடியே நான், லிட்டில் ஹார்ட்டை வர சொல்லி சாப்பிட்டு முடித்து விடுவேன்.

இதை கேட்ட அடுத்த நொடி அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு, மம் போகலாம் என்று ஒற்றை பதில் அவ்வளவே…

தாரா டேய் அப்படி என்ன டா அவ உன்னை பண்ணா?  குட்டி போட்ட பூனை மாதிரி அவ பின்னால் அதுவம் அவ பெயர் சொன்னால் கூட அப்படியே வசியம் பண்ண மாதிரி அடிமையா இருக்க…

சரி தான் மயக்கிட்டா…

டேய் நீ உண்மையாவே மயங்கிட்டியா..

சித், “மம்ம்” போதும் இப்போ கொஞ்சம் ஆக்ட் பண்ணலாம் என்று அவள் தோள் மேல் கைகளை போட்டு கொண்டே கீழ வந்தான்.

இதன்யா அவர்கள் இருவரையும் பார்த்து வேக வேகமாக மூச்சு விட

சித், தாராவின் காதில் என் லிட்டில் ஹார்ட் மூச்சு விடர காற்றோட டெம்பரேச்சர் **f  என்று சொல்ல இதை கேட்டு

தாரா “டேய்” அவனை அடித்தாள்.

சித் ,இப்போ இன்னும் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு.. இப்படியே போனால் நெக்ஸ்ட் அவ பியூட்டி ஃபுல் நோஸ்ல இருந்து பிளட் வந்திடும்…

தாரா, சித்து இது நிஜமாவே நீ தானா என்று அவள் கண்களை மூடி தேய்த்து அவனை ஒரு கிள்ளி விட ஹேய் வாட் ஸ் திஸ் என்று சொல்லி உணவு மேஜயில் வந்து அமர்ந்தனர்.

ரோஷினி, அப்படி என்ன ரகசியம் நீங்க சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வரீங்க என் கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்.

தாரா, எங்க ரெண்டு பேருக்கும் பேசி சிரிக்க ஆயிரம் இருக்கும்… உங்க வேலைய நீங்க பாருங்க…

இந்த முறை சித்துவுக்கு தாரா பறிமாறினாள்..

இதன்யா அவர்கள் இருவரும் சாப்பிடுவதை பார்த்து கொண்டே ஒரு வாய் சாப்பிட உதடுகள் எரிந்தது.

ரிஷி, என்னாச்சு தனு ஏன் சாப்பிட இவளோ கஸ்ட்படற சாப்பாடு காரமா கூட இல்லையே..

ரோஷினி, ஹே உன்னோட உதடு இவ்ளோ சிவப்பா இருக்கு தோல் உரிந்து விட்டதா..

இதை சொன்னதும் தாராவிற்கு புரை ஏறியது. அவள் சித்துவை முறைத்தாள்.

சித் அவள் தலயை  தட்டி விட்டு தண்ணீர் கொடுத்தான்.

அவள் மட்டும் முறைக்கவில்லை இதன்யாவும்  சித்துவை முறைத்து கொண்டு இருந்தாள்.

உதடு பற்றி  கேட்டதும் இதன்யா மனதில் “அப்போ நிஜமாவே கிஸ் பண்ணி இருக்கான்! நான் தான் லூசு மாதிரி அது கனவு அப்படின்னு நினைத்து கொண்டு இருக்கேன்.”

ரோஷினி, ஹே இதன்யா..  ஹலோ என்னாச்சு …

“அது அது ஒன்னும் இல்ல தெரியாமல் உதட்டை கடித்து கொண்டேன்!” என்று இதன்யா சொல்ல இதை கேட்டு சித்தார்த்துக்கு ஒரு சிறு புன்னகை அதை இதன்யா பார்த்து விட்டாள்.

தாராவிருக்கு சித் பார்த்து பார்த்து உணவு பரிமாறினான். அவளை அப்படி கவனித்து பார்த்து கொண்டான். பின்ன சின்ன வயதில் இருந்தே ஒன்றாக பள்ளி கல்லூரி அனைத்திலும் ஒரே வகுப்பு தோழி வீட்டில் தோழி எல்லாமே தாரா தான் அதனால் சித்துவுக்கு அவள் மீது பாசம் தான்.. இதை எல்லாம் இதன்யா பொறாமையாக பார்த்து வெம்பி கொண்டு இருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் எழுந்து செல்ல சித்த்துவுக்கு ஒரு போன் கால் வர அதை எடுத்து கொண்டு  அவன் தோட்டத்துக்கு சென்றான். இதன்யா கொஞ்சம் காற்று வாங்க மேலே மாடிக்கு சென்றாள்.

அவன் கீழ இருந்து போன் பேசி கொண்டே கொஞ்சம் அப்படியே வேடிக்கை பார்க்க அவனின் இதயராணி அந்த நிலவை ரசித்து கொண்டு இருக்கும் காட்சி தான் தெரிந்தது.

அவளும் எதேட்சையாக திரும்ப அங்கு சித்து போன் பேசி கொண்டு இருப்பது தெரிய அவனிடம் கேட்க இது தான் சரியான தருணம் என்று நினைத்து வேக வேகமாக கீழ வந்தாள்.

சித்து அவள் எங்கே என்று பேசி கொண்டே தேட அவள் அங்கு இல்லை பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டு கொண்டே திரும்ப அங்கு இதன்யா இவனை பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

அவன் போன் பேசி முடித்து  அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல இதன்யா, ஒரு நிமிடம்…என்று
சித், நின்றான்… 

சித்து போன் பேசி முடித்து விட்டு பின்னால் திரும்ப அங்கு இதன்யா முறைத்து கொண்டே நின்றிருந்தாள்.

அவன் அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே இரண்டு அடிகள் சென்றான்.

ஒரு நிமிடம்…

சித் அலட்சியமாக அவளை பார்க்க,

இதன்யா, நீங்க தானே அது!

என்ன சொல்றீங்க டீச்சர் எனக்கு புரியல?

உங்களுக்கு எப்படி புரியும் நீங்க ஒன்னும் தெரியாத சின்ன குழந்தை பாருங்க..

சித், இப்போ உங்களுக்கு என்ன வேணும்? 


சும்மா நடிக்க வேண்டாம்.

சித், “நீங்க சொல்றது சரி தான் நான் இப்போதைக்கு நடிப்பதா எனக்கு ஐடியா இல்ல என்று உள்ளே சென்றான். 


இதன்யா அவனை முறைத்து கொண்டே சித் முன்னால் போய் நின்றாள்.

சித், “ஹலோ உங்களுக்கு என்ன வேணும்?  நான் என்னோட வேலை உண்டு நான் உண்டு அப்டின்னு இருக்கேன். தேவை இல்லாமல் என்னோட ஹார்மோன்ச தூண்டி விடாதிக”

அவள் இதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவள் “சார் நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க சரி இல்லை!”

நான் என்ன பண்ணேன் எதுக்கு தேவை இல்லாமல் என் மேல் பழி போடுறீங்க..
அவள் அவனிடம் எதுக்கு என்னை கிஸ் பண்ணிங்க..

சித்தார்த் இதை கேட்டு உள்ளுக்குள் சிறித்தவன், மனதில்” சித் நீ கிஸ் பண்ணதை கிட்ட தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து இப்போ தான் கண்டு பிடித்து இருக்கிறாள். இன்னும் கொஞ்சம் அவளை குழப்பி விடு என சொல்ல மம் சிறப்பா செய்வோம்!”

நான் உங்களை கிஸ் பண்ணெனா? 

ம்ம் ஆமா…

சித், ஆனால் எனக்கு அப்படி எதுவும் நியாபகம் இல்லையே..

பொய் பொய் சொல்ல வேண்டாம் சார்…

நான் கிஸ் பண்ணதுக்கு உன் கிட்ட என்ன ஆதாரம் இருக்கு எப்போ கிஸ் பண்ணேன் சொல்லு? என்று இரு புருவமும் தூக்கி கொண்டே கேட்டான். 

அவள் இதழ் மற்றும் கண்களை மாறி மாறி சித்தார்த் பார்க்க

உடனே இதன்யா அவளை அறியாமல் உதட்டை மடக்கி கொண்டாள்.

ம்ம் சொல்லுங்க என்று கேட்க…

அவள் என்ன சொல்வது என முழித்தால் இல்ல நீங்க! நீங்க ! எனக்கு தெரியும்!. 

சித்தார்த்தின் அறிவு அவளை கொஞ்சம் டெம்ப்ட் பண்ணி விடு..மம் குட் ஐடியா! 

அவன் அவளிடம் “சரி ஓகே எப்போ கிஸ் பண்ணேன்? எப்படி கிஸ் பண்ணேன்? எங்கே கிஸ் பண்ணெனு சொல்லு?”

அவள் அவன் திட்டத்தை அறியாமல் “கரண்ட் கட் ஆன போது தான் கிஸ் பண்ணிங்க ஒத்துக்கொங்க!”

சித் ஒரு புன்னகையை உதிர்த்து “அந்த கேப்ல நீங்க என்னை நினைத்து தூங்கி இருப்பீங்க, அதனால் நான் கனவில் கிஸ் பண்ணி இருக்க சான்ஸ் இருக்கு!”


இல்ல அது நிஜம் தான் நான் அதை ஃபீல்….. என்று எதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் அப்படியே நிறுத்தினாள்.

ம்ம் சொல்லுங்க நீங்க ஃபீல் பண்ணிங்களா?

“இல்லை அப்படி இல்ல எனக்கு ரொம்ப பேட் ஃபீலா இருந்தது.”

இதை கேட்டதும் அவனுக்கு கோபம் வர உடனே “யூ ஆர் ரியலி கரெக்ட் என் கூட என் ஜில் மை பேப் இருக்கும் போது நான் உங்களை கிஸ் பண்ணது எனக்கே டிஸ்கஸ்டிங்கா இருக்கு!”

“அப்போ நிஜமாவே நீங்க கிஸ் பண்ணல அப்படி தானே!” என்று ஏக்க பார்வையில் அவனை பார்த்தாள்.

சித், மம் ஆமா சரி எங்கே கிஸ் பண்ணேன் அதை சொல்லு.. எ

ன் லிப்ல தான் என்று அவள் சொன்னதும் அவன் சிரித்தான்.

எப்படி என்று   கேட்டதும் அவளுக்கு வெட்கம் கோபம் இரண்டும் சேர்ந்து வர உடனே அவனை முறைத்து விரல்களை நீட்டி மிரட்டினாள்.

அது நான் இல்ல என விரலை தட்டி விட்டான் …

அது நீங்க தான் எனக்கு நல்லா தெரியும்..

உனக்கு என்ன தெரியும்? ..

ராஸ்கல் என்று அவள் திட்ட

சரி அப்போ நீ கண்ணாடி போட்டு இருந்தியா?…

அவள் மம் ஆமா என்று சொல்ல அவன்

அப்போ அது நிச்சயமா நான் இல்லை.. 

இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? என்று அவள் வினவ

சித்தார்த் கொஞ்சம் காந்த குரலில் “மெதுவாக மென்மையாக உன்னை கிஸ் பண்ணும்போது எப்பவும் நான் என்ன பண்ணுவேன் சொல்லு?”

இதை கேட்டதும் இதன்யா” நீங்க சொல்ல வேண்டாம் நான் போறேன்.” என்று சொல்லி கிளம்பினாள்.

அவள் கைகளை பிடித்து “ஹே என் மேலே பழி போட்டு எங்கே ஓடுற நில்லு.”.. என்று அவள் முன்னால் வந்து நின்றான்.

ம்ம் சொல்லுங்க..

எனக்கு உன்னோட கண்ணாடி பிடிக்காது சோ அதை கலட்டி விட்டு உன்னை அப்படியே!… என்று அவன் சொல்ல

போதும் !போதும் ! என்று அவள் நிறுத்தினாள்.

சித், மம் இப்போ புரியுதா நீ கண்ணாடி போட்டு இருக்கும் போது நான் கிஸ் பண்ணி இருக்க மாட்டேன். இப்போ உனக்கு கிளியர் தானே..சொல்லு சீக்கிரம் ஆமாவா? இல்லையா?.

ம்ம் ஆமா..

இதை கேட்டு சிரித்தவன்.ம்ம் நான் கிளம்புறேன் அப்புறம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கூட என்னோட ஹார்மோன் வேலை ஆரம்பித்து விடும் என்று சொல்லி அவன் ஒரு நான்கு அடிகள் வைத்து நின்று விட்டு அவளை பார்த்து அப்போ நான் உனக்கு கிஸ் பண்ற மாதிரி என்னை பற்றியே நினைத்து கொண்டு இருக்க சரி தானே…

யாரு சொன்னா அப்ட் அப்படி எல்லாம் இல்லை…

ஹே நீ தானே சொன்ன.. 

அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க சரி நான் கிஸ் பண்ண மாதிரியே நினைத்து கொள் நிஜத்தை விட கனவில் இன்னும் நல்லா இருக்கும் என்று சொல்லி  சிரித்து கொண்டே சென்றான்.

இதன்யா மனதில் அவன் சென்றதும் ஒரே குழப்பமாக இருந்தது. இப்போ என்ன சொல்லிட்டு போறான் ? இவன் கிஸ் பண்ணி இருக்கானா? இல்ல பண்ணல? அப்படினு சொல்லிட்டு போரானா?.. அய்யோ என்னை இப்படி குழப்பி விட்டு போயிட்டானே.? என்று நினைத்து கொண்டே அவள் அறைக்கு சென்றாள். சித்தார்த் சொன்ன அனைத்து விஷயமும் யோசித்து பார்த்தாள்.

அவன் முத்தம் கொடுக்கும் போது கண்ணாடியை கலட்டி விட்டு தான் என்று நினைத்த இதன்யாவுக்கு அதற்கும் மேல் நினைக்க முடிய வில்லை. முருகா! முருகா !சீக்கிரம் இங்கே இருந்து கிளம்பி விட வேண்டும் என்று நினைத்து கொண்டே தூங்கினாள்.

ஆனால் விதி வேறு ஒரு திட்டம் போட்டது. அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. இன்று ஆசிரியர் பயிற்சி செல்ல அணைத்து மாணவர்களுக்கும்  பள்ளிகள் எது என்று சொல்ல வர சொல்லி இருக்க இதன்யா காலை அவன் கண்களுக்கு படாமல் சீக்கிரம் கிளம்பி ஹாஸ்டல் சென்றாள்.

பூஜாவுடன் கிளம்பி காலேஜ் சென்றாள். வான்மதி, வளர், இந்து, வேல்முருகன், கோபி, சுரேஷ், குமார், ஜனனி என அனைவரும் வகுப்பில் இருந்தனர். வகுப்பு ஆரம்பித்தது. அவர்களது இஞ்சார்ஜ் வந்து அவர்கள் செல்லும் பள்ளிகள் பற்றி விளக்கம் கொடுத்து யார் யார் எந்த பள்ளி என்று கூற அனைவரும் அதை நோட் செய்து கொண்டனர். சில மாணவர்கள் அதற்கு பணம் கட்ட முடியுமா என்று கேட்டு கொண்டு இருந்தனர்.

இப்படியே மதியம் கழிந்தது அங்கே ரோஷினி இதன்யாவை தேடி வந்து விட்டாள்.

ஹே எதுக்கு என் கிட்ட சொல்லாமல் வந்த…

இல்ல ரோஷினி எனக்கு கொஞ்சம் டைம் ஆகி விட்டது அவசரத்தில் வந்து விட்டேன்.

ரோஷினி, சரி வா இன்னிக்கி ரிஷி யைப் பார்க்க காலேஜ் போலாம்..
இல்ல என்னால் வர முடியாது எனக்கு இப்போ IES Indian education system கிளாஸ் இருக்கு…

ஹே இன்னிக்கி கிளப் ஆக்டிவிட்டி தான்

நீ அங்கே போய் என்ன பண்ண போற வா…

இல்ல ரோஷினி என்னால வர முடியாது.

சரி விடு நான் இபோவே சித்து கிட்ட காலேஜ் லீவ் விட சொல்றேன்.

இதனை கேட்டு வேறு வழி யில்லாமல் சரி வரேன் என்று சொல்லி இதன்யா சென்றாள்.

அங்கே காலேஜ் சென்றதும் இதன்யா அந்த பக்கம் பிரியாவை பாத்ததும் ஒளிந்து கொண்டே செல்ல பிரியா அதை கண்டு கொண்டு அவள் பின்னால் சென்று எப்பொதும் போல் அவளை இழுத்து கண்ணத்தில் ஒரு வட்டம் போட ரோஷினி பின்னால் இதன்யா எங்கே என்று திரும்பி பார்க்க அங்கு பிரியா அவள் கன்னத்தில் முத்தம் கொடுப்பது தான் தெரிந்தது.

ஹே வலிக்குது…

ரோஷினி, யாரு இந்த பொன்னு உனக்கு கிஸ் பண்றா?… அதை சொன்னதும் பிரியாவுக்கு கோவம் வர

யாரு இந்த பொன்னு இதயா?

ஹே லூசு அவங்க சித்தார்த் சார் சிஸ்டர் டி…

ஓ அப்படியா என்று கேட்டு அமைதியானாள்.

சாரி ரோஷினி இது என்னோட பிரென்ட் எதுவும் நினைக்க வேண்டாம்.

பிரியா இதன்யாவுடம்
ஹே என்ன நீ அவங்க பேர் சொல்லி கூப்பிடர?


ரோஷினி, ஹே அவ என் பிரென்ட் அவ என்னை பெயர் சொல்லி தான் கூப்பிடுவாள்.

பிரியா கோபமாக முகத்தை திருப்பி கொண்டு அங்கு இருந்து செல்ல ரோஷினி இதன்யா கைகளை பிடித்து கொண்டாள்.

ரோஷினி, ஹே தனு அவ எதுக்கு உன்னை கிஸ் பண்றா எனக்கு அவளை பார்த்தாலே பிடிக்கல…

இதன்யா மனதில், “அண்ணனுக்கும் தங்கைக்கும் தங்கைக்கும் ஒரே எண்ணம் நான் யார் கூட இருந்தால் இவங்களுக்கு என்ன சரியான டார்ச்சர் பண்ணுதுங்க இது எங்கே போய் முடியுமோ!”

சித்தார்த்துக்கு ஒரு போன் வருகிறது அதை எடுத்து பேச அவன் பேசிய அனைத்தும் இதன்யா கேட்டு விட்டாள்.

அது என்னவாக இருக்கும்????

தொடரும்…

EPI 40

ரிஷி மிகவும் பரபரப்பாக அவனுடைய வேலையில் இருந்தான்.

இங்கே பிரியா இதன்யாவின் மேல் கோபம் கொண்டு  அவளின் கைகளை உதறி விட்டு லேப் சென்று விட்டாள்.

ரோஷினி அவளை அழைத்து கொண்டு ரிஷியை பார்க்க சென்றனர். அங்கே அவன் முகத்தை பார்த்து விட்டு

இதன்யா, ரோஷினி சீனியர் டென்ஷனா இருக்காங்க இப்போ போய் நம்ப பேச வேண்டாம் வாங்க போயிடலாம்.

இல்ல தனு அவர் சிரித்து கொண்டு தான் எல்லாரிடமும் பேசுகிறார் உனக்கு அவரை பற்றி தெரியல.. என்று சொல்ல

ம்ம் சரி நீ சொல்லு எப்போ ரிஷியை  நீ முதன் முதலில் பார்த்த ரிஷி மாம் அவங்க கிட்ட நீ பேசி இருக்கியா?

இதன்யா, நான் எங்க காலேஜ்ல காம்பிடிசன் வெச்சாங்க அதுல தான் நான் முதன் முதலில் சீனியர பார்த்தேன்.

ரோஷினி, என்ன போட்டி அது…

அது கவிதை போட்டி poem writing அப்போ தான் பார்த்தேன் எங்க காலேஜ் ல ரிஷி அண்ணா தான் முதல் பரிசு…

ரோஸினி, அப்போ நீ?

நாம் மூன்றாம் பரிசு அப்போ எனக்கு ஒரு தோணிச்சு அண்ணா மாதிரி எழுதணும் அப்டின்னு ஆசை பட்டேன்.காதல் கவிதை எல்லாம் சும்மா செம்மையாக எழுதுவாரு…

ரோஷினி,
மற்ற போட்டி எல்லாம் ரிஷி கலந்து கொள்ள மாட்டாரா? 

பிஸிக்ஸ் க்ளப் அப்புறம் எக்ஸ்போ இதில் தான் கலந்து கொள்வார்.

மேலும் இதன்யா, ரிஷி அண்ணாவுக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் பாட்டு அதை விட பாடுபவர்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ரோஷினி, அப்போ நீ பாடுவியா, டான்ஸ் பன்னுவியா…

இல்ல ரோஷினி அவ்ளோ திறமை எல்லாம் என் கிட்ட இல்ல , ஆனால் என் அக்கா சூப்பரா டான்ஸ் ஆடுவா, பாட்டு அப்படியே உருகி போற மாதிரி பாடுவா, 

இதை கேட்டதும் ரோஷினி, உங்க அக்காவும் ரிஷி கிளாஸ்சா!

“இல்ல என் அக்கா ug ஃபைனல் படிக்கும் போது ரிஷி அண்ணா pg ஃபைனல் சீனியர் அவ்ளோ தான்.”

 மேலும் இதன்யா, ஆனால் ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் தான் எல்லா போட்டிலயும் என் அக்கா கலந்துக்குவா அப்போ தான் இந்த கவிதை போட்டியில் தான் என் அக்கா  ரிஷி சாரை இன்ட்றோ பண்ணா.. என்று பிரியாவிடம் பேசுவது போல் இதன்யா பேசி விட்டு இப்போது சுய நினைவு வந்தவளாய் திரும்பி பார்த்தாள் .

ரோஷினி முகம் கொஞ்சம் பொறாமை ஏக்க மன நிலையில் இருந்தது.

இதன்யா, சரி போதும் ரோஷினி பெருசா ஒன்னும் இல்ல நம்ப போலாம் இன்னிக்கி ராத்திரி நான் உங்களுக்கு தமிழ் சொல்லி தருகிறேன். என இதன்யா கூறினாள்.

உடனே அவள் தனு ஒரு நிமிடம் என்ன என்பது போல் பார்க்க” உன் அக்கா போட்டோ எனக்கு காட்டு”

இதன்யா மனம் ஒரு நிமிடம் படபடத்தது இப்போது காட்டவில்லை தவறாகி விடும் என்று நினைத்து தன் அக்கா கல்யாண புகை படத்தை எடுத்து காட்டினாள்.

ரோஷினி அதை வாங்கி பார்த்து ஒரு நிமிடம் பேச வில்லை..

இதன்யா, என்னாச்சு? 

ரோஷினி, ஒன்னும் இல்லை நல்லா இருக்கா? உன் அக்கா வேற போட்டோ காட்டு காலேஜ் டேஸ் போட்டோஸ் இருக்கா? 

அது என் கிட்ட இல்ல ஹான் பிரியா வைத்து இருப்பா..யாரு அது ?

இதன்யா, இப்போ கூட ஒரு பொண்ணு என்னை கிஸ் பண்ணாலே அவ தான் அவளும் நானும் ஒரே கிளாஸ் தான்

ரோஸ், ஓ இது வேறயா சரி போ சீக்கிரம் வாங்கி வா நான் தாரா வை பார்க்க போறேன்.

“என்ன தாரா மேம் இங்கே வந்து இருக்காங்களா!”

ஹே சைலன்ட்டா இரு யாருக்கும் கேட்டு விட போகுது சித்து தான் கூட்டி வந்து இருக்கிறான் என்று கூறி அவள் கிளம்பினாள்.

சதீஷ், பாஸ் மேடம் இங்கே காலேஜ் வந்து இருக்கிறார்கள்.

இதை கேட்டதும் சித்தார்த் உடனே கேமரா புட்டேஜ் பார்த்தான்.

தாரா அருகில் இருந்த சோபாவில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு “சித்து…டேய் விட்டால் அப்படியே கேமரா குள்ள விழுந்து விடாதே! ரொம்ப ஓவரா பண்ற.?”. 

சட் அப் என்று சொல்லி இப்போது எங்கே இருக்கிறாள் என பார்த்தான்.

இங்கே இதன்யா பிரியா எங்கே இருக்கிறாள் என்று பார்த்து தேடி கொண்டே வர கடைசியில் அவள் லேப் செய்து கொண்டு இருந்தாள்.

பிரியா டார்லிங்!.. என்று அவளை கூப்பிட அவளை தவிர மொத்த மாணவ மாணவிகள் அனைவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கே வந்த கிளாஸ் இஞ்சார்ஜ் அன்று சித்து அவளுக்கு கொடுத்த மரியாதையை பார்த்து கோகுல பிரியா என்று அழைத்தார். 

அய்யோ போச்சு என்ன சொல்ல போறாங்களோ என்று பயந்து கொண்டே முன்னே பிரியா முன்னே வந்தாள். 


அவர் மரியாதையாக “நீங்க போய் மேடமை பார்த்து விட்டு வாங்க!”


சரி சார் என்று வெளியே வர அங்கே இதன்யா சிரித்த முகத்துடன் நின்று கொண்டு இருந்தாள். 

சொல்லுங்க மேடம் உங்களுக்கு என்ன வேணும்..

இதன்யா, ஹே என்னடி இப்படி பேசுற நான் என்ன பண்ணுவது..

 பிரியா, நீங்க இந்த காலேஜ்கே ஓனர் நான் போய் உங்க கிட்ட என்ன பேசட்டும்,நீங்க பெரியா ஆளு, நான் யாரு? நான் கொடுத்த பூஸ்ட் , ஹார்லிக்ஸ், புளி மிட்டாய், அரிசி இது எல்லாம் நினைப்பு இருக்குமா!

இதை கேட்டதும் இதன்யா கண்களில் கண்ணீர் வர அவள் திரும்பி சென்றாள்.

ஹே சாரி இதயா என்று பிரியா அவளை பின்னால் இருந்து கட்டி கொண்டாள்.

பிரியா,அவ ரொம்ப ஓவரா பேசுறமாதிரி எனக்கு எரிச்சலா இருக்கு. சோ நான் வேகமா வந்து விட்டேன்.

இதன்யா, அவர்களை பற்றி அனைத்து விஷயமும் ரிஷி, ரோஷினி, பற்றி அனைத்து விஷயமும் கூறிட..

ஹே சித்து வீட்டில் தான் தங்கி இருக்கியா.. நிஜமாவா என்று அவள் ஆச்சரியமாக கேட்க…

நான் எவ்ளோ முக்கிய விஷயம் சொல்றேன்  பிரியா நாயே அங்க தங்கி இருப்பது பற்றி கேட்கிற..

பிரியா, ஹே எனக்கு இது தான் முக்கியம் இதயா…. ஒரு விஷயம் கவணித்தாயா ரிஷி ஒரு பிசிக்ஸ் மென்டல் இந்த ரோஷினி ஒரு பேய் அந்த ரிஷி தங்கை மேகா ஒரு சைக்கோ சோ மொத்த குடும்பமும் ஒரு சீரியல் கில்லர்ஸ் எனக்கு அந்த ரிஷி யைப் பார்த்தாலே எரிச்சல்  காலேஜ் இருந்தே சுத்தமா பிடிக்காது. எதோ நீ பேசுற ஒரு காரணத்தினால் தான் நான் பேசறேன் அவன் உன்னை பார்க்கிற பார்வை லவ்வரை பார்ப்பது போல் இருக்கும்..

இதன்யா, இதை கேட்டு ஹே இவளோ நாள் இதை பற்றி சொல்லவே இல்லை இப்போ சொல்ற…

பிரியா, இப்போ தான் அந்த ரிஷிக்கு லவ்வர் இருக்கே அதனால் தான் இப்போ சொன்னேன். நீ அவர் மேலே ரொம்ப மரியாதை வைத்து இருக்க என்னால உங்க ப்ரெண்ட் சிப் மூழ்கி போச்சுன்னா என்ன பண்றது. என அவள் சொல்ல இதன்யா எதுவும் சொல்ல வில்லை.

அந்த பாட வேலை முடிந்து பிரியா கிளாஸ் ல உள்ள மாணவர்கள்  அனைவரும் வகுப்புக்கு சென்றனர்.

இதன்யா,பிரியா இப்போ நீ சமாதானம் ஆகி விட்டாய் தானே…

ம்ம்ம் என்னோட இதயா கிட்ட போய் நான் சண்டை போடுவெனா.. என்று கண்ணத்தில் முத்தம் கொடுத்து,
பிரியா அவளை லேப் உள்ளே அழைத்து சென்றாள்.

ஹே இப்போ எதுக்கு இங்கே கூட்டி வர என இதன்யா கேட்க ,

ஹே நம்ப சேர்ந்து லேப் செஞ்சு எவ்ளோ நாள் ஆச்சு அப்படியே சும்மா இண்டிகேட்டர், சில்வர் நைட்ரேட் டெஸ்ட், அப்புறம் fake பிளட் டெஸ்ட், florocence, carboxylic acid டெஸ்ட்  இதெல்லாம் செஞ்சு பார்க்கலாம் வாடி என்று பிரியா உள்ளே அதற்கான உபரணங்களையும் எடுத்து வைத்து இவர்கள் செய்ய பிரியா சொன்ன இந்த விளையாட்டு இன்னும் சிறிது நேரத்தில் வினையாக மாற போவதை அவர்கள் அறியவில்லை.

பிரியா, ஹே இதயா நீ சித்து ரூமில தான் ஸ்டே பண்ணி இருக்கியா..

ஹே எருமை அந்த அசிட் ல வாய கழுவு டி . அடங்கா நாய் பிரியா உனக்கு எப்பவும் தப்பு தப்பா தோணுது..

பிரியா, போ இதன்யா நீ என்கிட்ட பொய் சொன்ற உன் முகம் முன்னை விட ஒரு இடத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடுது இன்னொரு பக்கத்தில் சோகம் இருக்கு சோ என்ன விஷயம் சொல்லு டி…


இதன்யா, ம்ம் மண்ணாங்கட்டி வாய மூடு இங்கே பாரு எனக்கு கோல்டன் ஸ்பங்கல் எவ்ளோ அழகா இருக்கு பாரு..

லெட் கன்பார்ம் டெஸ்ட் தங்க நிற துகள் போல் இருக்கும் அதை செய்து பார்த்து கொண்டு அடுத்த சிஃப் reagent சேர்த்து எது எதோ செய்ய வெள்ளி நிறம் அழகாக டெஸ்ட் டியூப் ல வந்து இருந்தது. அருகில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் செய்ய தேவையான உபகரணம் எடுத்து வைக்க பட்டு இருக்க இவர்கள் ஜாலியாக சிரித்து பேசி விளையாடி கொண்டே செய்தனர்.

இங்கே ரோஷினி, என்ன இவளை இன்னும் காணோம் என்று தேடி கொண்டே வர அப்போது இருவரும் பொய் மாதிரி பிளட் செய்து ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர்.

பெர்ரிக் குளோரைடு, பொட்டாசியம்தையோசயனைடு இது இரண்டையும் தண்ணிரில் கலக்கி பிரியா முதலில் கைகளில் வெட்டி இரத்தம் வருவது போல் அதை பூசி கொண்டாள்.

அடுத்து இதன்யாக்கு நெற்றியில் வருவது பொல் பூசி விளையாட அங்கே அருகில் மண்ணெனயில் சோடியம் மெட்டல் போட்டு வைக்க பட்டு இருந்ததும் அதன் மேல் தண்ணீர் பட்டால் நெருப்பு வந்து அந்த இடமே நெருப்பு பிடிக்கும்…

ரோஷினி வந்து பார்க்க அங்கே இருவரும் விளையாடி நடித்து கொண்டு இருப்பதை உண்மை என்று நம்பி “தனு” என்று கத்தி கொண்டே அருகில் வர பயத்தில் பிரியா அருகில் இருந்த அந்த கண்ணாடி உபகரணம் மீது பட்டு எல்லாம் கீழ விழுந்து சில்லு சில்லாக நொறுங்கி போனது.

அருகில் மானவர்கள் லேப் செய்ய கொஞ்சம் மட்டும் அறுத்து வைக்க பட்டு இருந்தது மாணவர்கள் லேப் முடித்து வகுப்புக்கு சென்று இருந்தனர். 

சோடியம் மெட்டல் அவள் கத்தியதில் மண்ணெண்ணெய் ல இருந்து அருகில் உள்ள சின்கில் விழுந்தது.விழுந்த அடுத்த நொடி தண்ணீர் பட்டதும் நெருப்பு பொறி உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க ஆரம்பித்தது.

மூவரும் கண் இமைக்கும் நொடியில் எல்லாம் நடந்து கொண்டு இருக்க புகை வர நெருப்பு பற்றி எரியும் அபாய சைரன் அடிக்க உடனே பதறி அடித்து கொண்டு

அங்கு வேலை செய்பவர்கள்  ஒரு பக்கம் வர சைரன் சத்தம் கேட்டு மீட்டிங்ல இருந்த சித்தார்த் வேக வேகமாக ஓடி வந்தான்.

இங்கே இதன்யா அருகில் இருந்த மணல் வாளியை பிரியா தடுக்க தடுக்க போய் மணலை கொட்ட ஆரம்பித்தாள். 

ஒரு பக்கம் சோடியம் மெட்டல் பட்டாசு போல் ஜெக ஜோதியாக வெடித்து கொண்டு இருக்க அப்பாரட்டஸ் ஒரு பக்கம் நொறுங்கி சரிய ஆரம்பித்தது. பிப்பெட், பியுரெட், மற்றும் கோனிக்கள் ஃப்ளாஷ்க், எல்லாம் சரிந்து சத்தத்துடன் விழுந்தது. 


பிரியா, வேணாம் இதயா உன் மேல் பட்டு விட போகுது என்று அழுது கொண்டே தடுக்க
அந்த நெருப்பு பொறி வெடிக்கும் இடத்தில் கொட்டினாள்.

ரோஷினி, ஹே உனக்கு என்னாச்சி ரத்தமா என்று தொட வர பிரியா வேகமாக இதன்யாவை அவள் பக்கம் இழுத்து எங்கும் நெருப்பு பட்டு இருக்கிறதா என பார்க்க சைரன் சத்தம் நின்றது. 

அங்கே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், dept மொத்த விரிவுரையாளர், துறை தலைவர் இருக்க லேப்ல இருந்து புகை வந்து கொண்டு இருக்க.. 

பத்து விரிவுரையாளர்கள், லேப் பராமரிப்பு செய்பவர்கள் என அனைவரும் வந்து சேர்ந்தனர். 

அங்கே நொறுங்கி கடந்த பொருட்கள் பார்த்து hod  பிரியாவை திட்ட வாய் எடுக்கும் நேரம்

சித்தார்த் வேக வேகமாக அங்கே இருந்த கோலத்தினை பார்த்து வாட்ஸ் கோயிங் ஆன்? என ஒரு கர்ஜனை செய்ய அனைவரும் நடுங்கி கொண்டே திரும்ப பிரியா கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

பின்னால் சதீஷ், தாரா, ரிஷி மூவரும் வந்தனர்.

“வாட் தி ஹெல் ஈஸ் கோயிங் ஆன்?”

சித்தார்த் கண்களில் இருந்த கோபத்தை பார்த்து ஒரு நிமிடம் ரோஷினி நடுங்கி போனாள். 

இங்கே என்ன நடக்குது ? என்று கர்ஜனை குரலில் அங்கே சித்தார்த் ருத்ர மூர்த்தியாக ஒரு புலியை போல் வர உடனே பிரியா பயத்தில் நடுங்கினாள்.

அந்த பொய் இரத்தம் அவள் கைகளிலும் இதன்யா நெற்றியிலும் இருக்க அது என்ன என்று அறியாமல் சித்தார்த் மனம் இங்கே பதறியது. ஆனாலும் சுற்றி நிறைய பேர் இருக்க இப்போது எதுவும் கேட்க கூடாது. என்று வந்தான்.சீக்கிரம் முதலுதவி செய்ய ஏற்பாடு பண்ணுங்க யாருக்கும் காயம் இல்லை தானே என்று தன் தங்கையை ஒரு நிமிடம் ஆராய்ந்து அவன் கண்கள் பிரியா இதன்யா மீது சென்றது.

சித் உடனை போனை எடுத்து அவனுடைய தனிப்பட்ட மருத்துவன் அபிநவ் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். 

அழைப்பு ஏற்க பட்டது. ஐம் சித்தார்த் கிருஷ்ணா ஸ்பீகிங்!  

எனி இம்பார்ட்டன்ட்? 

சித், “நீ உடனே இப்போவே பவானி இனஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி வந்திடு”

சார் ஐம் அட் டெல்லி? 

சோ வாட் இடியட் உடனே எல்லாம் கேன்சல் பண்ணிட்டு வா! என கட் செய்தான். 

கெமிஸ்ட்ரி HOD, சார் இது எப்படி ஆச்சுன்னு தெரியல…

சித் அவரை முறைத்து விட்டு என்னோட டைம் ரொம்ப பிரீசியஸ் எனக்கு பதில் மட்டும் தான் வேணும் காரணம் தேவை இல்லை புரியுதா..

இங்கே யார்?… இருந்தது யார்? இதுக்கு காரணம் எப்படி இந்த விபத்து நடந்தது. அனைவரும் திறுதிருவேன முழிக்க…

சதீஷ் கேமரா புடேஜ் எடுத்து வா பார்க்கலாம்.

இங்கே சம்மந்தம் இல்லாதவங்க கெட் அவுட்  என்று கர்கணையுடன் கூறினான்.

அவன்  சொன்னதும் அங்கு இருந்த விரிவுரையாளர்கள் மொத்தமும் இருந்த தடம் தெரியாமல் ஓடி விட்டனர்.

கெமிஸ்ட்ரி hod மட்டும் நின்று கொண்டு இருந்தார். ஹலோ chemistry dep hod நீங்க தானே…

அவர் கை குட்டையில் தன் முகத்தை துடைத்து கொண்டே” யெஸ் சார்”..

உங்க ஸ்டாப் arrange பண்ணி இங்கே உடைந்து போன பொருள் எவ்ளோ என்ன அப்டின்னு எனக்கு உடனே அதோட டீட்டில்ஸ் வேணும் போங்க ரெடி பண்ணுங்க…

அண்ட் நீங்க மூனு பேரும் என்னோட ரூம்க்கு வாங்க..

ரோஷினி தன் அண்ணனை பார்த்து பயந்து கொண்டே நடந்தாள்.

இதன்யா நடுவில் இருக்க ஒரு கையை ரோஷினியும் ஒரு கையை பிரியாவும் பிடித்து கொள்ள அவள் நடுவில் இருந்தாள்.

சித், சதீஷ் , இவங்களுக்கு இரத்தம் வருது அதுக்கு first aid செய்யணும் ரெடி பன்னுங்க…

இதை கேட்டதும் இதன்யா, பிரியாவின் கால்கள் நகர மறுத்து அப்படியே நின்றது. இதன்யாவின் முகம் வியர்த்து வழிய பிரியா நடுங்கினாள்.

பின்னால் அவர்கள் வராமல் இருப்பது பார்த்து தாரா,சித்து அவங்க அங்கேயே நிற்கிறார்கள்..

ரோஷினி, “என்னாச்சு வா தனு போலாம் அண்ணா செம்ம கோபத்தில் இருக்கான் எனக்கு பயமா இருக்கு”

சித்தார்த் திரும்பி பார்க்க அவன் பார்வை வீரியத்துள் கால்கள் தானாக நடந்தது.

சித்தார்த் அறையில் ரிஷி,  நின்று கொண்டு இருக்க தாரா சோபாவில அமர்ந்து இருந்தாள்.

சித்தார்த் அவன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

ரோஷினி தாரா அருகில் அமர செல்ல  ஹே இல்லிக ஹோகபெக்கு (எங்கே போற)…

நானு குள்ளிட்டுகொல்லாலு பயாஸசுட்டென்… (எனக்கு இப்போ உட்காரணும்) என்று ரோசினி சொன்னாள்.

சித்தார்த் அனல் கக்கும் பார்வை வீசிட மவுன்னு இல்லிகே பராலு நிம் மாணு யாரு கெளிந்தேரு?(வாய மூடு உன்னை யாரு இங்கே வர சொன்னது) என்று மிரட்டும் தோரணையில் கூற ரோசினி அழுது விட்டாள்.

தாரா, சன்டவாகிசாலு,( கொஞ்சம் அமைதியா இரு)

சித்தார்த் பொறுமையை இழந்து இது எல்லார்துக்கும் காரணம் இவ தான்…

ரோசினி அழுது கொண்டே நானு நிம்மகா டண்டிகா ஹெளுட்டின்(உன்னை டாட் கிட்ட சொல்றேன் ) தன் அப்பாவைபற்றி பேசியதை  கேட்டதும் சித்தார்த்துக்கு கோபம் தலைக்கேறியது.

உடனே அவன் ரோசினியை அடிக்க அருகில் வர நடுவில் அந்த சமயம் ரிஷி வேணாம் மாமா என்று சொல்ல வர ஒரு புறம் கத்திட தாரா எதோ சொல்ல வந்தாள். 

இதன்யா அவன் அரையை வாங்கி அந்த சோபாவில் விழுந்தாள்.

அந்த இடத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ரோசினி கண்ணை மூடி இருந்தாள். அடி பட வில்லை என்று முழித்து பார்க்க இதன்யா கன்னத்தை பிடித்து கொண்டு சோபாவில் கிடந்தது தான் தெரிந்தது.

இப்போது அவனுக்கு இன்னும் கோபம் வர சட்டென்று அருகில் உள்ள பூ ஜாடியை கீழ போட்டு உடைத்தான்..

தாரா, சித்து பிளீஸ்..  என்று அவள் கூறி கொண்டே இதன்யாவை தூக்கி அவன் அறைந்த இடத்தை பார்க்க விரல் ஆச்சு தெரிந்தது

அவன் இதன்யாவை பார்த்து முறைத்து “உன்னை யாரு நடுவில் வர சொன்னது? முதலில் நீ யாரு எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வர, உனக்கு அறிவு இருக்கா? 

இப்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இந்த விபத்துக்கு காரணம் நான் தான் ரோஸினி மேம் இல்ல சார் என்று அவள் எழுந்து பிரியா அருகில் சென்று நின்று கொண்டாள்.

ரிஷி இதன்யா அருகில் வர இப்போது சதீஷ் முதலுதவி பெட்டி கொண்டு வர அதை பார்த்து பிரியா பயத்தில் இதன்யாவை பிடித்து கொண்டாள்…

சித் தன் தலையை கோதி விட்டபடி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுவதும் குடித்தான்.

சதீஷ், மிஸ் வாங்க என்று அழைக்க இருவரும் அந்த இடத்தை விட்டு நகர வில்லை.

ரிஷி கண்டு கொண்டான். இது பொட்டாசியம் தயோ சயனைடா!.. 

இதன்யா தலையை குனிது கொண்டே ஆமா என்று தலையை ஆட்டிட..

ரிஷி பயந்து கொண்டே சித்தார்த்தை பார்க்க அவன் அவள் சொன்னதும் பின்னால் திரும்பி ஒரு பார்வை அது நரகத்தில் எமன் பார்ப்பது போல் இருந்தது.

சதீஷ் லேப் புட்டேஜ்..  அவன் வேகமாக சென்று அதை கொடுக்க அதில் அங்கு நடந்த அத்தனையும் பார்த்து விட்டு கோபத்தில் அருகில் உள்ள அலங்கார சிலையை தள்ளி விட்டான்.

சத்தம் அந்த அறையை அதிர வைத்தது. 

இனி அவ்ளோ தான் இதயா என்னோட m.sc என்று பிரியா அவள் காதில் கூறினாள். 

ரிஷி பிரியாவை பார்த்து முறைத்து விட்டு “எனக்கு தெரியும் அவளை கெடுப்பது நீ தானே இடியட் பிரியா!” என்று வாய் மொழியாக கூறினான்.

ரோசினி அழுது கொண்டே இருந்தாள்.

ரிஷி , அழ வேண்டாம் என்று ஒரு கார்டசிகாக கூறினான்.இருந்தாலும் அவள் அழுது கொண்டே இருந்தாள்.

எல்லாம் வெளியே போங்க என்று சொல்ல தாரா உடனே எழுந்து வெளியே சென்றாள்.

ரோசினி, அழுதாலும் வேக வேகமாக வெளியே சென்றாள். அவன் கோபம் அதிகரித்து இருப்பதற்கான அர்த்தம்

சதீஷ்  வேகமாக செல்ல ரிஷி, வா இதன்யா போகலாம் என்று கதவு வரை செல்ல

டீச்சர் நீங்க இருங்க? 

ரிஷி,மாமா!. 

ஐ சே கெட் அவுட் ராஸ்கல்!. 

 மேடம்  எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு போங்க..

பிரியா இதன்யாவை கண்களில் கண்ணீரோடு பார்த்தாள் .

நெக்ஸ்ட் நீங்க தான் பிரியா வெளியே வெயிட் பன்னுங்க…

அறைக்கு வெளியே சித்தார்த்தின் பிரத்யேக காவலாளிகள் பீம் பாய் போல் நால்வர் நின்று கொண்டு இருந்தனர். 

இதன்யா கண்களில் கண்ணீர் கொட்டியது.

கதவு சாத்தபட்டது அவள் அப்படியே தேம்பி அழுது கொண்டு இருக்க..

சித்தார்த் தன் தலையை கோதி விட்டபடி ஹே இங்கே திரும்பு டி..

அவள் அப்படியே நின்றாள் எந்த அசைவும் இல்லை.

“இப்போ நீ திரும்புகிறாயா இல்ல நான் வரட்டுமா!”.

அவள் கீழ குனிதி கொண்டே திரும்பி “சார் என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் செய்து விட்டேன்.”

சித்தார்த் உடனே எழுந்து அவள் அருகில் வந்து முகத்தை நிமிர்த்தி உனக்கு அறிவு இருக்கா சோடியம் எக்ஸ்ப்லோசிவ் மாதிரி வெடிக்கும் போது உன்னை யாரு மணல் கொட்ட சொன்னது..” உன் மேல் சோடியம் பட்டு இருந்தால் என்னை பற்றி நீ யோசித்து பார்த்தியா”..

இதை கேட்டதும் இதன்யா…? 

தொடரும்… 

EPI 41

இதை கேட்டதும் இதன்யா மனதில் இருந்த சூறாவளி அடங்கி தென்றல் வீச தொடங்கியது. ஆனால் அவள் வீம்பு பிடித்தவளாச்சே..

“உன் உயிர் மேல் அக்கறை இருக்கா டி அறிவு கெட்டவளே,.. உன் கூட இருக்க ரெண்டும் சரியான கழண்ட கேஸ் தான் நீ அதுக்கும் மேல் கல் நெஞ்சக்காரி!”

அவள் பார்வை தரையை பார்த்து கொண்டு இருந்தது.

எதுக்கு ரோசினிய அடிக்கும் போது குறுக்கே வந்த…

அவள் பதில் சொல்லாமல் உதடு துடிக்க அழ..

இதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவளை நெருங்கினான். அவள் கன்னத்தை தடவி பார்த்து இன்னிக்கி ஃபீவர் இஞ்ஜெக்சன் போட்டுக்கோ.. என்று சொல்லி அவள் முகத்தை பார்க்க…

இன்னும் ஒரு நிமிடம் நீ என்னை பார்க்கல அப்புறம் நான் நிஜமாவே உன்னை இப்போ கிஸ் பண்ணிடுவேன்..

இதன்யாவின் காதுகளில் அவன் சொன்னது “என்னை பற்றி யோசித்து பார்த்தாயா” என்ற வார்த்தை அந்த வார்த்தையில் இருந்து வெளி வரவில்லை.

அப்போ அவர் மனதில் நான் இருக்கிறேன்! நான் மட்டும் தான் இருக்கிறேன்! என்று சொல்ல வேண்டாம் அது கனவாக இருந்தால் நன்று.. 

அவள் விருப்பம் இல்லாமல் முத்தம் கொடுக்க கூடாது என்ற கொள்கையோடு இருந்தான்.

அதனால் அவள் கன்னம் அரைந்த பகுதியை வருடி விட்டு ஊதினான். அவன் நெருக்கமாக இருப்பதை உணர்ந்தவள் அவனை தள்ளி விட முயற்சி செய்தாள். 

என்ன ரொம்ப சோதிக்காத நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன்.

உன் மேல் எனக்கு எந்த இன்டர்ஸ்டும் இல்லை என்று சொல்ல மீண்டும் அவள் கண்களில் நீர் மடை திறந்து பாய ஆரம்பித்தது.

கதவை திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள்.

பிரியாவிடம் நடந்தது என்ன என்று சித்து கேட்க அவள் பயந்து கொண்டே பதில் சொன்னாள்.

சித்தார்த் , பிரியாவுக்கும் இதன்யாவுக்கும் இரண்டு நாள் லீவு கொடுத்து விட்டு மூன்றாம் நாள் இதே மீடிங் ஹாலில் சந்திக்க வர வேண்டும் என்று தன் தங்கை உட்பட  அனைவரையும் வர சொன்னான்.

அபிநவ் அன்று மதியமே அடித்து பிடித்து ஃப்ளைட்டில் பறந்து ஏர்போர்டில் இருந்து காரில் ஏறி கொண்டு அவனுக்கு போன் செய்தான். 

“ஹலோ சித்தார்த் சார் நான் ஆன் தி வே!”

சித், நீ….. என ஒரு சில நிமிடம் அமைதியாகி விட்டு ஓ வந்துட்டியா! நேரா கெஸ்ட் ஹவுஸ் போயிடு!. 

அபி, ஆர் யூ ஜோக்கிங் கெஸ்ட் ஹவுஸ்ல ரெஸ்ட் எடுக்க தான் வர சொன்னீங்களா!. 

சித், எனக்கு பெர்சனல் டாக்டராக இருக்க உனக்கு எக்கானோமிக் டோட்டல் மனி எவ்ளோ? 

அபி, 12

முழுசா சொல்லு? 

12 கோடி!. 

சித், அதுக்கு நீ என்ன வேலை செய்யுற சும்மா தானே இருக்க? 

அபி, சித் சார் நான் உங்க சீனியர் தெரியும் தானே!  

சித், மூடிட்டு வாடா! ஒரு மாசம் முன்னாடி பொறந்துட்டு சீன் போடுறான்!. 

அபி, சித் சார் நீங்க இப்போ “தி ஃபேமஸ் அபினவ் ஹாஸ்பிடல்ஸ்” GM கிட்ட பேசிட்டு இருக்கீங்க!

சித், இல்லையே நான் எனக்கு கீழ வேலை பார்க்கும் அபினவ் கிட்ட பேசுகுறேன்!.அது மட்டும் இல்லாமல் நான் கூட அதில ஒரு பார்ட்னர்!. எதுவும் இடம் மாறி இருக்கா? இல்ல என் பீம் பாய விட்டு இடம் மாற்ற வேணுமா!. 

அபி, ஒகே ஒகே நான் கெஸ்ட் ஹவுஸ் போறேன்! என சொல்லி விட்டு அவன் நேராக சென்றான். 

இதன்யா அவன் சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். ரோசினி உண்மையில் இதன்யாவை ஒரு தோழி போல் நேசித்தாள். அந்த இரண்டு நாளும் அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வர வில்லை.

சித் வீட்டுக்கு வந்ததும் அபிக்கு கால் செய்தான். 

ஹே என்ன பண்ற? 

நான் சும்மா வெட்டியா இருக்கேன். எதுக்கு மிஸ்டர் என்னை இங்கே வர சொன்ன? 

சித் அமைதியாக இருக்க.. 

அபி ஒரு நிமிடம் பயந்து இல்ல அது வந்து சாரி இப்போ என்ன பண்ணனும்? 

சித், ஜஸ்ட் வாக்காபில் டிஸ்டன்ஸ் தான் சோ அபிநவ் சார் நடந்து இப்போ இங்கே என் வீட்டுக்கு வரனும். கூட உன்னோட டாக்டர் போட்டி தூக்கிட்டு வா!  

என்ன நடந்தா! 

சித், உன்னோட சேலரிய குறைக்கலாம் அப்டின்னு நினைத்தேன். 

வர்றேன்! என போனை கட் செய்து விட்டு சித்தார்த் வீட்டை நோக்கி அவன் வந்தான். 

சித் லேப் டாப்பில் வேலை செய்து கொண்டு இருக்க எதிரில் உள்ள சோபாவில அமர்ந்தான். 

சொல்லுங்க! யாருக்கு என்ன?

சித் பார்வையை அவன் பக்கம் திருப்பி முறைக்க வேகமாக அபி எழுந்து நின்றான். 

ஃபாலோ மி என சொல்லி கொண்டு முதல் தளம் வந்து சேர்ந்தனர். அந்த வீட்டின் பிரம்மாண்டம் அபி ய கவர வில்லை. ஏன் என்றால் இதை போல் பெரிய பேலஸ் விசாகப்பட்டினத்தில் அவனுக்கு இருக்கிறது. பெரிய குடும்பத்தின் வாரிசு சித்தார்த்தின் தாத்தா கிருஷ்னனுடைய தங்கையின் பேரன் தான் இந்த அபினவ்!..

இதன்யாவின் அறைக்கு அருகில் வந்து நின்றான். அபி அவனுக்கு பின்னால் முட்டி நின்றான். 

ச்ச…

அபி, தெரியாமல் மோதி விட்டேன்!. 

சித் அவன் பக்கம் திரும்பி இந்த அறையில் இருக்கவங்களுக்கு ஃபீவர் ஒரு ஜெனரல் செக் பண்ணிட்டு டேப்லட் கொடு!

அபி, பொண்ணா? பையனா?

சித், உனக்கு தங்கை போல!.. 

அபி மின்னும் கண்களுடன் பொண்ணா! என முடியை கோதி விட்டு கண்ணாடியை சரி செய்து முகத்தில் உள்ள கடுமையை கொஞ்சம் குறைத்தான்.

சித் அவனுடைய செய்கையை பார்த்து விட்டு அருகில் நெருங்கி கழுத்தை இறுக்கி பிடித்தவன். நான் சொன்னது புரியல போல உனக்கு தங்கை என்னோட கேர்ல் ப்ரெண்ட், ஃப்யூச்சர் பாட்னர்!.. 

அபி, அப்போ லீனா!.. 

சித், அருகில் உள்ள கெர்டைனை முறுக்கி அவன் கழுத்தை சுற்றி இருக்க.. ஹே விடு டா! புரியுது! என் தங்கச்சி போதுமா! ஒரு நல்லவனை கொண்ணு கொலைகாரன் ஆகாத, நான் வாழ வேணும் விடு!

சித் கதவை தட்ட அபி தன்னை கஷ்ட பட்டு சம படுத்தி கொண்டு நிற்க…

இதன்யா அழுது வீங்கிய முகத்துடன் கதவை திறந்தாள். 

அபி, ஹலோ!  ஹாய்! 

சித் அவன் காலை மிதித்தான்.

மேடம்!. 

யார் நீங்க? 

சித், இவர் டாக்டர் உனக்கு ஃபீவர் செக் பண்ண வந்திருக்காரு!. 

அபி, கன்னம் சிவந்து இருக்கு. இவ்வளவு அழகான பொண்ணை ஹர்ட் பண்ணது எவன்? 

சித், நான் தான்? இதை தெரிந்து என்ன பண்ண போற? 

அபி, சொன்ன வேலையை பார்க்கிறியா!. 

இதன்யா இதை கேட்டு ஒரு மென் புன்னகை சிந்தினாள். 

அபி அவளுக்கு வெப்ப நிலை செக் செய்து விட்டு இமை வெட்டாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். 

இதன்யா, அவனை பார்த்து முறைத்தாள். 

அபி, நீங்க யூ லுக் பிரிட்டி!. 

சித் கைகளை கட்டி கொண்டு அபி முன் வந்து நின்றான். 

அபி திடுக்கிட்டு அச்சோ போச்சு என எட்சிலை முழுங்கி விட்டு” மிஸ்டர் சித்தார்த் இன்னிக்கி நீங்க கூட அழகா இருக்கீங்க!”

அப்படியா!. 

ம்ம் ஆமா!. 

சித், இன்னொருத்தர் கூட உன் கிட்ட பேச வெயிட் பன்றாரு?  

யாரு? 

குரு பிரகாஷ்!.. 

அபி இங்கு பெயரை கேட்டதும் வேகமாக எழுந்து நின்று சிஸ் உங்களுக்கு ஒன்னும் இல்ல இந்த டேப் சாப்பிடுங்க அண்ட் இந்த களிம்பு எழுதி கொடுத்து இருக்கேன். சாரு வாங்கி தருவார். அப்லை பண்ணுங்க சரியா போயிடும். என பேசி விட்டு எழுந்தான். 

இதன்யா, ரொம்ப நன்றி சார்!. 

அபி, இட்ஸ் ஓகே ஹெல்த் முக்கியம் அதை விட என அவன் பேச வர சித் தரதரவென வெளியே இழுத்து சென்றான். 

இதன்யா வெளியே வர சித், ஹே கதவை சாத்த எனக்கு தெரியும் போய் ரெஸ்ட் எடு!. 

அவள் அவனை நிமிந்து பார்க்காமல் தலை குனிந்து கொண்டே உள்ளே சென்றாள். 

அபி மூச்சை பிடித்து கொண்டு வெளியே நிற்க…சித், வா போய் குருவ பார்த்திட்டு போலாம். 

நீ போ!.  என சொன்னவன் தன்னை சுதாரித்து நீங்க போங்க சார் நான் இப்போவே கிளம்புறேன். 

அவள் எப்படி இருக்கா? 

அபி, செம்மையாக இருக்கா? எப்படி உன் கிட்ட?.. என சொல்ல வர கையை முறுக்கி பிடித்தான். 

ஹே வலிக்குது விடு டா!. 

சித், அவளுக்கு ஹெல்த் கண்டிசன் எப்டி இருக்கு? 

அபி, அதுவா ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கா! பட் வீக்கா இருக்கா! பல்ஸ் கூட பில்ட் ஆகல வீக் ஹெல்த்!. 

சித், சரி இன்னிக்கி ராத்திரி இப்போவே கிளம்பி விடு!. 

அபி, மிஸ்டர் சித்தார்த் உங்க கிட்ட கொஞ்சம் பெர்சனல் பேசணும்? 

ம்ம் என்னும் ஒற்றை பதில்.. 

அபி,இந்த பொண்ணு எங்கே பிடிச்ச? 

அடி வாங்கி சாகாத அப்புறம் உன் ஹாஸ்பிடல் எனக்கு தான் ஓடி போயிடு!. 

அபி மனதில் போடா இங்கே தான் ஸ்டே பண்ணுவேன். இனி நானும் உன்னை போலவே  எனக்கு ஒரு கோல்ட் ஃபிஷ் கண்டு பிடிக்க போறேன். என நினைத்து கொண்டே கிளம்பினான்.

அடுத்த நாள் சித்தார்த் சொன்னது போல் ரோசினி, இதன்யா, பிரியா மூவரும் வந்து இருந்தனர்.

கெமிஸ்ட்ரி HOD கையில் ஒரு லிஸ்ட் கொண்டு வந்து சிதார்த்திடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். அங்கே விபத்து நடந்த இடம் ஆள் வைத்து சரி செய்து முடித்து இருந்தனர்.

சித், சதீஷ் என்று அழைக்க உடனே அவன் அந்த லிஸ்ட் வாங்கி படிக்க ஆரம்பித்தான்.


டெசிகேட்டர் 3, சிலிக்கா க்ருசிபல் 25, கோனிகல் ஃபிளாஷ்க் 56, சோடியம் மெட்டல் விலை, பிப்பெட், பியிரெட், கோனிக்கல் ஃப்ளாஷ்க், மெசரிங் ஜார், என்று இன்னும் அவர்கள் உடைத்த அனைதுக்கும் எவ்வளவு காசு செலவாகும் என்று இருவர் யோசித்து கொண்டு இருந்தனர். 

சித்தார்த் சொன்னது போலவே இதன்யா,பிரியா, ரோஷினி மூவரும் வந்து நின்றனர்.

ரிஷி அங்கே என்ன நடக்க போகிறதோ? என்று படபடப்புடன் நின்று கொண்டு இருந்தான்.

சித்தார்த் வைத்த கண் வாங்காமல் இதன்யாவை பார்த்து கொண்டு இருக்க தாரா அவனை சுய நினைவுக்கு கொண்டு வர

ஹேய் சித்து எதுக்கு டா இப்படி பார்க்கிற! என்று சத்தமாக சொல்ல

இப்போது அனைவரும் சித்தார்தை பார்த்தனர்.

தாரா, ஹே எதுக்கு  இப்படி எல்லாரையும்  முறைத்து பார்க்கிற அப்டின்னு கேட்டேன். என்று சமாளித்தாள்.

சித்தார்த் பார்வை பிரியா, இதன்யாவின் மேல் இருக்க அதற்குள் உடைந்த பொருட்களின் பட்டியல் வந்தது.

அதை சதீஷ் படிக்க ஆரம்பித்தான். அதை கேட்க கேட்க

பிரியாவுக்கு மனதில் அபாய சங்கு ஊத ஆரம்பித்தது. M.Sc அவ்ளோ தான் இன்டிவிஜுவல் ப்ரேகேஜே இந்த காலேஜ் ல அதிகம், 

இதுல சிலிகா க்ருசிப்ல், அப்புறம் டெஸ்சிகேட்டர் இதை நினைத்தாலே அய்யோ போச்சு அப்பாவுக்கு தெரிஞ்சா!  நான் அவ்ளோ தான்!

அம்மாவுக்கு தெரிஞ்சா அடுத்த நிமிடம் மாப்பிளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருமே என்ன பண்றத?. என்று முகம் எல்லாம் ஒரு மாதிரி ஆகி போனாள். 

பிரியா, இதயா எனக்கு ஒன்னு வருதுடி…

இதன்யா, அப்படியே  கொஞ்சம் நிமிந்து  உனக்கு பிடிச்ச சித்துவை பார்த்துக்கோ..

ஏன் டி ஒன்னு வராதா!

இதன்யா,  இல்ல பிரியா ஒன்னுக்கும், ரெண்டுக்கும் சேர்ந்து வரும் பாரு… என்று இருவரும் காதுக்குள் பேசி கொண்டு இருந்தனர்.

ரிஷி, ஹே தனு ஸ்ஸ் என்று  அமைதியாக இருக்க சொன்னான்.

சதீஷ், சார் மொத்தம் எல்லாம் சேர்த்து உடைந்தது 90,000 அப்புறம் புதுசு வாங்கினால் 90,000 மொத்தம் 1,80,000 இதை கேட்டு பிரியா, இதயா எனக்கு ரெண்டும் சேர்ந்து வருது டி..

இதன்யா, சார் ஒரு கிருசிப்ல விலை 0000 இவளோ தான் டெசிகேட்டர்0000 ஆனால் நீங்க சொல்றது அதிகமா இருக்கே.? 

சித்தார்த், நீங்க தீபாவளி வெடிச்சிங்க அதை மறந்து இருப்பீர்கள்!

அப்புறம் சில்வர் நைட்ரேட் மொத்தமும் காலி அது 5கிராம் எவ்ளோ அப்டின்னு கொஞ்சம் கூகிள்ல செக் பண்ணுங்க டீச்சர் என சித்தார்த் கேட்டான். 

இதன்டா போனை எடுக்க 

சதீஷ், அப்படியே சோடியம், லெட் இதெல்லாம் கொஞ்சம் பார்த்திட்டு சொல்லுங்க…

இதை கேட்ட இதன்யா மனதில்”   இவன் இப்படி புள்ளி விவரம் அத்தனையும்  புட்டு புட்டு வைக்கிறானே!”

சித், நான் கூட இதை சரி செய்யுற அமொண்ட் மேநேஜ்மெண்ட் ல எழுதி விட நினைச்சேன்

ஆனால்! 

ஆனால்! 

“இவளோ பேசுற இந்த வாய சும்மா விட கூடாது. என்ன பிரியா நீங்க என்ன சொல்றீங்க!”

பிரியா, சார் மன்னிக்கணும் பெரியவங்க பேசும்போது நான் சின்ன பொண்ணு பேச கூடாது இருந்தாலும் என்னோட கருத்தை சொல்லி விடுகிறேன் என்று பவியமாக ஆரம்பித்தாள்.

அவள் கைகளை கட்டி கொண்டு மிகவும் அப்பாவியாக “சார் இதுல உங்க சிஸ்டர்கும் பங்கு இருக்கு எங்க மேலயும் தப்பு இருக்கு..

இதன்யா, அப்படி இல்ல பிரியா சொல்ல வேண்டாம் டி மேம் மேல தப்பு இல்ல சார் இவ எதோ உலருகிராள்.

பிரியா, ஹே நீ சும்மா இரு டி என்று அவளிடம் சண்டைக்கு போக

உடனே சித்தார்த், டீச்சர் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ..

இல்ல சார் அது வந்து…

ம்ம் என்று அவன் அதட்டிட அவள் அமைதியானாள்.

பிரியா, அவங்க மட்டும் வராமல் இருந்தால் அன்னிக்கு இவளோ நடந்து இருக்காது சார் அதனால…

சித், மம் சொல்லுங்க …

நானும் இதயாவும்…

இதன்யா, ஹே எருமை.. 

பிரியா, சார் நானும் இதன்யாவும் நீங்க சொன்ன மாதிரி பணம் கொடுத்து விடுகிறோம்..

சித், அப்போ பிராப்ளம் சால்வ..

பிரியா, சார் அதில ஒரு சிக்கல்…

சித், ம்ம் சொல்லுங்க அதையும் கேட்கிறேன்.

சார் எங்களால் 3digit தான் ஷார் கொடுக்க முடியும்…

சித், நீங்க சொல்றது புரியல பிரியா…
சார், நான் 900,இதன்யா 900   பிளீஸ் மறித்து விடாதீர்கள்…

இதன்யா, பிரியா லூசு உனக்கு என்ன பைத்தியமா 250 பீடா மாதிரி சொல்ற

பிரியா, நீ கொஞ்சம் அமைதியா இரு கட்டாயம் இந்த பிளான் வொர்க் அவுட் ஆகும்.

இதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி ஆகி பின் சிரிக்க ஆரம்பித்தனர்.

சித் தன் உதடுகளை கடித்து கொண்டு சிரிப்பை அடக்கினான்.

பிரியா, சார் இந்த டீல் உங்களுக்கு ஒகே வா…

சித்தார்த், நான் ஒரு டீல் சொல்றேன் அதில் மட்டும் சரியா சொல்லி சக்சஸ் பண்ணிட்டா நீங்க ரெண்டு பேரும்  பணம் கட்ட தேவை இல்ல..

இதை கேட்டு பிரியா கண்கள் மின்னியது.ம்ம் சொல்லுங்க சார்…

நீங்க என்ன படிக்கிரீங்க…

M.sc கெமிஸ்ட்ரி சார் …

ம்ம் சூப்பர் இப்போ உங்க கிட்ட நான் ஒரு மூன்று கேள்வி கேட்க போறேன்…

பிரியா, சார் இது எல்லாம் எனக்கு கை வந்த கலை சொல்லுங்க உங்க படத்தில் இருந்து ஒரு பாட்டு பாடட்டுமா..

இதை கேட்டதும் ரிஷி, சதீஷ் இருவரும் சிரிக்க இதன்யா அவள் கைகளை பிடித்து கிள்ளி விட்டாள்.

சித், இல்ல மிஸ் பிரியா(periodic table) ஆவர்த்தன அட்டவணை தெரியுமா…

ம்ம் தெரியும் சார்…

சித், அதை அப்படியே சொல்லு மா இதை கேட்டதும் ரிஷி, பிரியாவை பார்த்து சிரித்தான்.

சார் நீங்க சொல்றது விலங்கல 

ரிஷி, எப்படி விளங்கும் நல்லா மாட்டி கிட்டா! இதன்யா உனக்கு தெரியும் தானே!. 

இதை கேட்டதும் இதன்யா முளித்தாள்.

சித், அதை அப்படியே சொல்லு மா…

ஆக்சிஜன், ஜின்க், சில்வர், கோல்ட்…

சித், வாட் ஈஸ் திஸ்…

சார் நீங்க தானே சொல்ல சொன்னிங்க..

சித்,ஹைட்ரஜன் ல இருந்து சொல்லு மா,  spdf எல்லா பிளாக்கும் சொல்லணும், லைனா சொல்லணும், இதை மட்டும் சொல்லிடு…

பிரியா, சார் சொன்னா விட்டு விடுவீங்களா!

சித், இல்ல இன்னும் ரெண்டு டாஸ்க் இருக்கு..

பிரியா, சார் பிளீஸ் என்று இரு கைகளை சேர்த்து வணக்கம் போட்டு கெஞ்சுவது போல முகத்தை வைத்து சார் சத்தியமா எனக்கு தெரியாது …எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க சார்… நான் இதுல கொஞ்சம் வீக் சோ ரீ கால் பண்ணிக்கிரேன்.நீங்க அதுக்குள்ள இதன்யா கிட்ட கேளுங்க சார்

சித் இதன்யாவை பார்த்து டீச்சர் நீங்க சொல்லுங்க…

இதன்யா சொல்ல ஆரம்பித்தாள். ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம்,……. ஐயன் , ஜிங்க்.. என்று 30தனிமம் சரியாக சொன்னாள். அதற்கும் மேல் அப்படியே நிற்க

இப்போது சித், ம்ம் அடுத்து சொல்லுங்க டீச்சர்…

பிரியா, சார் அதுக்கும் மேல அவளுக்கு தெரியாது.

சித், சரி பேக் வேர்ட் சொல்லுங்க ஜின்க், ஐயன், அப்படியே சொல்லுங்க..
அதற்கு இதன்யா திக்கி கொண்டே பதில் அளிக்க…

சித், சரி இப்போ நீங்க சொல்லுங்க முதல் 30..

பிரியா, சார் அவளுக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியாது சார் என்று அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டாள்.

ரிஷி, தாரா, சதீஷ், மூவரும் இதை கேட்டு சிரிக்க ,ரோஷினி பிரியாவை ஏளனமாக பார்த்தாள்.

சித், அப்போ இந்த ஈக்வேசன் சாள்வ் பண்ணுங்க என்று சொல்லி அருகில் இருக்கும் எழுது பலகையில் சாதாரண ரெண்டு சமன்பாடு எழுதி போட்டான்.


இதன்யா, சார் நான் இதை கிளியர் பண்றேன்…

சித்,உங்க வேலையை நீங்க பாருங்க..
வாங்க பிரியா என சொல்ல அவள் அந்த எழுது பென் வாங்கி கொண்டு போய் நின்றாள்.

Co+2fe+2so4+H2o=?

Ba+2Na+2H2so4=?

பிரியா இதன்யாவை பார்த்து கொண்டே எழுத போக..

சித், மம் அங்கே என்ன பார்வை சீக்கிரம் அன்சர் பண்ணுங்க..

பிரியா வேறு வழி இல்லாமல் எதோ எழுதினாள்.அவள் பதில் எழுதி முடித்தது பார்த்து

இதன்யா ரிஷி இருவரும்  மனதில் அய்யோ மொத்தமா நான் படிச்ச காலேஜ் மானத்தை வாங்குறாலே என்று நினைக்க..

சதீஷ், பாஸ் அவங்க அன்சர் எழுதிட்டாங்கா

சித்தார்த், தன் கண்களை போனில் இருந்து எடுக்காமல் சரியா எழுதிட்டாங்களா..

சதீஷ் சிரித்து கொண்டே பாஸ் இப்படி ஒரு பதில் யாருமே எழுதி இருக்க மாட்டாங்க பாருங்க பாஸ்…

சித்தார்த் நிமிர்ந்து பார்க்க Co+2fe+2so4+H2o=2cofee+H2so4+o
Ba+2Na+2H2so4=Banana+H2so4+so3+..

இதோடு நிறுத்தி விட

சித்தார்த் அதை பார்த்து சிரித்து கொண்டே எப்படி?  நீ எங்க காலேஜ் ல வந்து ஜாயின் பண்ண?… நீ நிஜமா ug பாஸ் பண்ணியா.? 

பிரியா,சார் கொஞ்சம் பதட்டத்தில் என்னோட கை தவறா எழுதி விட்டது மற்ற படி நான் டிஸ்டின்சன் சார்..

சரி ரிஷி நீ (periodic table) ஆவர்த்தன அட்டவணை சொல்லு.

ம்ம் தெரியும் சார்… என்று அவன் கடகடவென்று சொல்லி முடித்தான்.

சரியாக அந்த நேரம் சித்தார்த்துக்கு குரு கால் செய்ய புன்னகை முகம் கொண்டு அதை அட்டென்ட் செய்ய அனைவரையும் பார்க்க எல்லோரும் வெளியே சென்றனர்.

இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கேள்வி கேட்பேன் சொல்லிட்டு போகனும்…
சரி சார் என்று கிலம்பபினர்.

அங்கே தாரா, சித் இருவர் மட்டும் இருந்தனர். பிரியா அவள் போனை மறந்து சித் அறையில் உள்ள சோபாவில வைத்து விட்டு வந்து விட்டாள்.

பிரியா, ஹே இதயா பிளீஸ் டி என் போனை விட்டு வந்து விட்டேன் அதை போய் எடுத்து வா பிளீஸ் என்று கெஞ்ச…

இதன்யா அவளை திட்டி கொண்டே இரு போய் எடுத்து வந்து தொலையிரென் என்று சொல்லி சித் அறைக்கு சென்றாள்.

கதவு கொஞ்சம் திறந்து இருக்க உள்ளே கேட்டு செல்லலாம் என்று தட்ட போகும் நேரம் சித்தார்த் சொன்ன பெயரை கேட்டு அப்படியே நின்றாள்.

“நந்தனை எந்த பிராஞ்ச்ல போட்டு இருக்க குரு” ரொம்ப வேலை வாங்காத டா என்று அவன் போனில் பேச இதன்யா அப்படியே அவன் பேசுவதை சில நிமிடம் நின்று கேட்டு விட்டு வேகமாக அங்கு இருந்து சென்றாள்.

ஆம் நந்தன் இதன்யாவின் அண்ணன் இப்போது தான் அவளுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது. அப்போ நந்துவிக்கு வேலை போட்டு கொடுத்தது இவர் தானா 15லட்சம் கட்டி அனுப்ப போறது சித்தார்த் தானா என்று நினைத்து அதிர்ச்சி அடைந்தாள்.

அடுத்து இதன்யாவுக்கு அவள் அம்மா தெய்வா கிட்ட இருந்து போன் வருகிறது.

அதை கேட்டதும் இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி…?

ஆச்சர்யம்!….? 

இதன்யா அடுத்து என்னை செய்ய போகிறாள்? 

தொடரும்.. 

EPI 42

சித்தார்த்தின் அறையில் இருந்து வெளியே வந்ததும் ரிஷி இதன்யாவை பார்த்தான். 

என்ன சீனியர்? 

ரிஷி, ஹே தனு உன் தோழி மொத்தமா நம்ப காலேஜ் மானத்தை வாங்கிட்டா, அண்ட் நீ உன் கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். periodic table முழுவதும் படிச்சு வச்சுக்கோ அப்டின்னு எ சேன் பேச்சை நீ கொஞ்சம் கூட ஒரு பொருட்டாக மதிக்க வில்லை.

இதன்யா, இல்ல சீனியர் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல இனி இந்த ஒரு தடவை ஒரே ஒரு தடவை பிளீஸ்…

ரிஷி அவளை பார்த்து சிரித்தான்.

பிரியா, ரொம்ப ஓவரா ஆடாதிங்க மிஸ்டர் ரிஷி முதலில் உங்களுக்கும் அந்த table ககும் எந்த சம்மந்தமும் இல்லை, எனக்கு சித்து டார்லிங்கை பார்த்ததும் கொஞ்சம்  ஸ்டன் ஆகிட்டேன். அவரை போல் அழகா ஒரு ஆள் முன்னாடி வந்ததும் இதயம் ஒரு நிமிடம் பீட் பண்றத நிருத்திடுச்சு. மற்ற படி ஒன்னும் இல்ல நான் டிஸ்டிங்ஷன் புரியுதா!. 

ரிஷி, மம் நீ பேலன்ஸ் பண்ண லட்சணத்தில் தெரியுது என்ன எழுதுன banana, அப்புறம் coffee என்று அவன் சொல்லி சிரிக்க…

பிரியா, ரொம்ப ஓவரா போரிங்க சரி இல்லை என்னோட சுய ரூபத்தை நான் காட்ட வேண்டி வரும் என்று சொல்ல

ரோஸ்னி அவர்கள் மூவரையும் பார்த்து கொண்டு வந்தாள். 

இருவரும் மாறி மாறி சண்டையிட ஆரம்பித்தனர். ரிஷி, உன் வாய் இருக்கே அது காவாய்! இதன்யா இனி இந்த கேர்ல் கூட பேசாத!. 

பிரியா, இதயா! என்ன டி பார்த்திட்டு இருக்க நம்ம கெமிஸ்ட்ரி அப்போவே நான் சொன்னேன் இந்த பிசிக்ஸ் கிட்ட வச்சுக்காத அப்டின்னு பாரு கெமிஸ்ட்ரி மலையில் நேற்று முளைத இந்த பிசிக்ஸ் காளான் என்ன வாய் பேசுது!. 

ரிஷி, மக்கு மக்கு மக்கு பிசிக்ஸ் ல இருந்து தான் கெமிஸ்ட்ரி வந்தது. 

பிரியா, கெமிஸ்ட்ரில இருந்து தான் பிசிக்ஸ் வந்தது. பீரியாடிக் டேபிள் எங்களுக்கு தான் சொந்தம்.  

இதன்யா, அய்யோ நிறுத்துங்க.. இது மெண்டலீஃப்க்கு தெரிந்தால் கடுப்பாகி இருப்பாரு.. 

யார் அந்த மெண்டல் இலை!. 

ரிஷி, தனு தயவு செய்து இவள் கூட சுத்தாத பாரு என்ன கேள்வி கேட்கிறாள். 

இதன்யா, ஹே பிரியா பீரியாடிக் டேபிள் அவரு தான் டி அறெஞ் பண்ணாரு!  

பிரியா, ஹே எனக்கு தெரியும் சும்மா டெஸ்ட் பண்ணேன். அந்த ரிஷிய கம்முன்னு இருக்க சொல்லு! இனி பேசாத நமக்கு தான் அவமானம்!. 

உன்னை இரு சித் என அவன் சொல்ல வர அப்போது ரிஷியின் போன் அடித்ததும் உடனே பிரியா அவளது போன் எங்கே என தேட அது சித் அறையில் வைத்து விட்டு வந்தது தெரிய வந்தது. 

பிரியா, இதயா செல்லம் என்னோட போன் நான் சித் டார்லிங் அறையில் மறந்து விட்டு வந்து விட்டேன் பிளீஸ் அதை போய் எடுத்து வாடி…

அவள் சித்தார்த்தை டார்லிங் என்று சொல்ல

அதை கேட்டு இதன்யா மிகவும் பொறாமை கோபம் இரண்டும் சேர்ந்து வர “ஹே நீயே போய் எடுத்துக்கோ நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன் போடி!”

பிரியா, சரி போ உனக்கு நானா முக்கியம் அந்த ரோஸினி தானே உனக்கு போ என்னை தாண்டி போ  இனி அவ்ளோ தான்ல்ல  உனக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், ஊற வச்ச அரிசி அப்புறம் கிசான் ஜாம், ஊருகா, அப்புறம் ஆல்பன்லீபே லாலி பாப் வாங்கி கொடுத்து உன்னை வளர்த்து விட்ட நான் உனக்கு தெரியல போ என்று அவள் சொல்ல வர…

இதன்யா,  அம்மா தாயே கொஞ்சம் நிறுத்து போறேன். உன் வாய் கொஞ்சம் ஓயுமா! சரி இரு போய் தொலையுறேன் என்று சொல்லி பின்னால் நடந்தாள்.

அவள் சென்றதும் வழக்கம் போல் ரிஷி, பிரியா இருவரும் அவர்கள் சண்டையை ஆரம்பித்தனர்.

இதன்யா, சரியாக சித் அறைக்கு அருகில் வந்ததும் சித்தார்த் போனில் பேசிக் கொண்டு இருந்த அனைத்து விசயமும் கேட்டு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள்.

அருகில் உள்ள தோட்டதிறுக்கு வந்தவள் சித் பேசிய உரையாடலை நினைத்து பார்த்தாள். அப்படி என்ன தான் கேட்டாள். 

“தன் அண்ணனுக்கு அதாவது நந்தனுக்கு உதவி செய்து இருக்கிறான் எதற்கு செய்ய வேண்டும். ஏன் செய்ய வேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் அவள் மனதில் ஓடி கொண்டு இருந்தது.

இதன்யாவின் மனம் “அவர் ரொம்ப நல்லவர் டி, அவர் செய்த உதவியை உன்னிடம் செய்தது போலவே காட்டிக்கொள்ள வில்லை. இப்டி ஒரு மனம் படைத்தவனை யாருக்கு தான் பிடிக்காது !”

இதன்யா வெட்கத்தை விட்டு சித்தார்த்தை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள் விரும்புகிறாள். ஆனால் இன்னொரு மனம் கட்டாயம் இது நடக்காது . இது நடக்காமல் தடுக்க எதுவும் செய்ய வேண்டும்.. 

சரி இந்த 15லட்சம் எப்படி அவருக்கு மீண்டும் கொடுப்பது என்று யோசித்தாள்.சரியாக அந்த நேரம் நந்து வாட்ஸ் அப்ல  எண்ணில் இருந்து சில புகை படங்கள் வந்தது. அதை பார்த்து கொண்டு இருக்கும் போதே அவளுக்கு அழைப்பு வந்தது.

இதன்யா, அம்மா எப்படி எல்லாம் திருப்புனீங்க…

தெய்வா சிரித்து கொண்டே சின்ன பொன்னு எல்லா நகையும் அதற்கு உண்டான கடன்  தள்ளுபடி பண்ணிட்டாங்க டி இது எல்லாம் நம்ம குழலி அம்மா தான் காரணம் தேருக்கு கிடா வெட்டனும் டி இனி பிரச்சனையே இல்லை மொத்தம் 12 லட்சம் டி…

அவள் சந்தேகமாக அது எப்படி மா இப்படி நடக்கும்!

அது எப்படி நடந்தா நமக்கு என்ன இப்போ எனக்கு ரொம்ப நிம்மதி இதுக்கு எல்லாம் நம்ப நிதண்யா மாசமா இருப்பது தான் காரணம் நம்ப வீட்டுக்கு புது வரவு வரும் போதே நம்ப குறை எல்லாம் தீருது டி நந்து வேலைக்கு போக போறான்.

அடுத்து அவள் அம்மா, சின்னு நீ சீக்கிரம் ஊருக்கு வா உன்னோட நகை எல்லாம் போட்டு பார்க்கனும் கிட்ட தட்ட எட்டு வருஷமா இந்த நகை எல்லாம் பேங்க்லயே இருந்தது. நீ பெரிய மனுஷி ஆன போது கூட என்னால் உனக்கு நகை போட்டு அழகு பார்க்க முடியல அப்பா மட்டும் இருந்து இருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்து இருக்குமா… என்று அதை நினைத்து தெய்வா அழ

உடனே சரி மா நான் வர பார்க்கிறேன் இப்போ அழ வேண்டாம் எனக்கு இப்போ கிளாஸ் நான் வைக்கிறேன் என்று போன் வைத்தாள்.

முதலில் பேங்க்ல ஒரு தடவை செக் செய்யணும் கூட்டுறவு வங்கியில் மட்டும் தான் விவசாய கடன் ஆட்சி மாறும்போது எப்போதாவது தள்ளுபடி ஆகும்.இப்போ தொடர்பே இல்லாமல் இப்படி ஆகி இருக்கு.

இதன்யாவின் மனம் கட்டாயம் இது அவர் வேலை தான் எதுக்கு இப்படி செய்கிறார். 15லட்சம் , இப்போ 12லட்சம் மொத்தமா 27 லட்சம் இதை எப்படி கொடுப்பது.
என்று மனம் எல்லாம் மிகவும் பாரமாக இருக்க அவள் அப்படியே பிரியா இருக்கும் இடத்துக்கு வந்தாள்.

அங்கே ரிஷி, பிரியா சண்டை இன்னும் தீராமல் சென்று கொண்டு இருக்க ரிஷி, தனு இனி இந்த ரௌடி கூட நீ பேச கூடாது.

பிரியா, இதயா உன் முகத்துக்கு தான் பார்க்கிறேன் . இல்ல ரிஷி அவ்ளோ தான் இந்த பிசிக்ஸ் கூட்டத்தை பார்த்தாலே எனக்கு நிரம்ப டென்ஷன் ஆகுது ஒழுங்கா ஓடிட சொல்லு டி என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே

சித்தார்த் பிரியா பேசுவதை கேட்டு கொண்டே வந்தான்.

ஏன் பிரியா உங்களுக்கு பிசிக்ஸ் பிடிக்காதா!

சார்! அப்படி இல்ல சார் அவங்க கொஞ்சம் பெரிய சைன்டிஸ்ட் மாதிரி ஓவரா பண்ணுவாங்க ஆனால் ஒரு சைடிஷ்க்கு கூட வொர்த் இல்ல சார் என்று சொல்லி கொண்டே இதன்யா கைகளை பிடித்து கொண்டாள்.

சித்தார்த்,  ஓ அப்படியா சரி மீதி இப்போ கொஸ்டின் கேட்கலாமா… உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு…

பிரியா, சார் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்…

சித், இன்னுமா…எவ்ளோ 

சார் ஒரு ரெண்டு வருஷம் டைம் கொடுங்க சார்..

சதீஷ், ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் சொல்லி விடுவீர்களா…

பிரியா, பக்கா சார் முயற்சி பண்ணி படிச்சு நெட் தேர்வு எழுதி பாஸ் பண்ணி போஸ்டிங் என்று சொல்லி கொண்டே போக

சதீஷ், NET ஆ நீங்க…

பிரியா, ச்சீ… நானா.. நான் இல்ல

சதீஷ், பின்ன

பிரியா, அப்படி எவனாவது பாஸ் பண்ணி இருந்தா அவனை எனக்கு வராத காதலை ட்றை பண்ணி கல்யாணம் பண்ணி செட்டிலே ஆகிடுவேன்…அதுவும் அவன் கெமிஸ்ட்ரியா தான் இருக்கணும்.

சதீஷ், அப்போ 90,000
பிரியா, அதுக்கு தான் லவ் பண்ண போறேன்.

சித் இதை கேட்டு சிரித்து கொண்டே இதன்யாவை பார்க்க அவள் எதோ தீவிர யோசனையில் வேறு எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள்.

ரிஷி, கண்டிப்பா நடக்காது ஒழுங்கா காசு கொடுத்து விட்டு இடத்தை காலி பண்ணு உனக்கு NET அதுவும் கெமிஸ்ட்ரி இடியட்..

பிரியா, நீங்க எல்லாம் ஒரு ஆளு உங்களுக்கு எல்லாம் ஒரு மென்டல் கைடா p. hd பண்ண இருக்கும் போது எனக்கு ஒருத்தர் இருக்க மாட்டாரா….

சதீஷ், பாஸ் இந்த பொன்னு உங்களையே மென்டல் சொல்லுது…

ரிஷி, மாமா இவளை காலேஜ் விட்டு tc கிழிச்சு அனுப்பி விடுங்க.. 

சித், என்ன பிரியா செய்து விடலாமா…
சார் இங்கே என்ன நடக்குது… இந்த ரிஷி உங்க கிட்ட தான் என்று நிறுத்த ரோஷினி பிரியாவை முறைத்து கொண்டே வந்தாள்.

இதயா! இதயா! ஹே லூசு எங்கே இருக்க உன் ஆளு பிசிக்ஸ் படித்து இருக்கிறாரா என்று அவளை உசுப்பி விட இதன்யா தன் சுய நினைவுக்கு வந்தவளாய் முறைத்து விட்டு… இப்போது சதீஷ பார்த்து,

இதன்யா, சதீஷ் சார்…

மிஸ் சொல்லுங்க ….
நான் 90,000 கொடுத்து விடுகிறேன் சார் என்று சொல்ல உடனே அந்த இடம் கொஞ்சம் இறுக்கமானது.

ரிஷி, மாமா இதன்யா செஞ்ச மொத்ததுக்கும் நான் பொறுப்பு…

வேண்டாம் சீனியர் என்று அவள் சொல்ல…

இங்கே சித்தார்த்தின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக தொடங்கியது.

அவன் மனதில் எவ்ளோ தைரியம் டி உனக்கு….. என்னோட P.A கிட்ட கூப்பிட்டு பணத்தை கட்டுகிறேன் அப்டின்னு சொல்ற அடங்க மாட்ட டி நீ உன்னை என்ன பண்றது என்று நினைத்தவன்.

ஆல் ஆஃப் யூ ஷட் அப் என்று ஒரு சத்தம் அனைவரும் வாயை மூடி கொண்டனர்.

சித், ரிஷி உன்னோட வேலைய நீ பாரு அது தான் அவ என்று வந்த வார்த்தையை கஷ்ட பட்டு விழுங்கி அவங்க கொடுக்கிரேன் அப்டின்னு சொல்லிட்டாங்க அப்புறம் என்ன.

பிரியா, சார் பிளீஸ் சார் அவ ஒரு லூசு சீன் போடுறா மன்னித்து விடுங்கள் சார்.

சித், நீ கட்ட வேண்டாம் பிரியா நீங்க போகலாம்.. என்று சொல்ல

ரோஷினி,இதன்யா நீ எந்த காசும் கட்ட தேவை இல்லை…

இதை கேட்டு சித் முறைத்தான்.

ரோஷினி, தாரா இந்த காலேஜ் அவனுக்கு எவ்ளோ ரைட்ஸ் இருக்கோ அதே போல சமமா எனக்கும் ரைட்ஸ் இருக்கு சோ தனு நீ கொடுக்க வேண்டாம்…

இல்ல மேம் பரவாயில்லை இது நான் செய்த தவறு எனக்காக யாரும் கொடுக்க வேண்டாம் நானே கட்டி விடுகிறேன் என்று அவள் சொல்ல இல்ல நீ தர கூடாது. தனு அப்படி என்னை மீறி நீ கொடுத்தால் இனி இது தான் நம்ப ரெண்டு பேரும் பேசிக்கிற கடைசி நாள். என்று ரோஷினி கூறினாள்.

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அந்த இடத்தின் சூழலை மாற்ற

பிரியா, சார் சார் ஒரே ஒரு செல்ஃபி பிளீஸ்…

தாரா, சதீஷ், இவளை எங்கே இருந்து புடிச்சுக்கிட்டு வந்தாங்க இந்த வாய் அடிக்குறா..

ரிஷி, இது திருந்தாத ஜென்மம் இவ கிட்ட மட்டும் இவரு ஏன் இவளோ நல்ல விதமாக நடந்து கொள்கிறார்? அதும் இல்லாமல் பக்கம் பக்கமா பேசுகிறார் நான் ரெண்டு வார்த்தை அதிகமா பேசினா கூட டைம் வேஸ்ட் ஆகுது  அப்டின்னு சொல்லி விடுவார்.

சித், 90,000 ஒரு செல்ஃபி க்கு ஓகே வா

பிரியா, சார் அப்போ வேண்டாம்…என்று சொல்லி தாரா அருகில் சென்றவள்

பிரியா, மேம் நான் உங்களோட பெரிய பெரிய குட்டி ரசிகை உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் பிளீஸ் ஒரு செல்ஃபி…

தாரா சிரித்து கொண்டே ம்ம் வா ரௌடி என்று சொல்லி ஒரு படம் எடுத்தனர்.

தாரா, உன் தோழி செல்ஃபி இதெல்லாம் எடுக்க மாட்டாங்களா. நடிகர் எல்லாம் பிடிக்காதா? 

பிரியா, அந்த செல்ஃபிய நோட்டம் விட்டு கொண்டே மேம் அவளுக்கு முதன் முதலில் சித்தார்த் சார் யாருன்னு கூட தெரியாது. நான் தான் சொன்னேன் அவர் ஒரு ஆக்டர்ன்னு அவ சரியான படிப்ஸ்  எப்போ பார்த்தாலும் படிச்ட்டு சுற்றி கொண்டு இருப்பா என விளையாட்டாக அனைத்து விஷயமும் கூறினாள். 

இதை கேட்டதும் தாரா சித்தார்த்தை பார்க்க அவன் முகம் இன்னும் கோபமாக இருந்தது. அனைவரும் கிளம்பினர்.

ரோஷினியிடம் பணம் தர மாட்டேன் என்று சொல்ல அவள் சரி என் அன்னனிடம் எனக்காக அடி வாங்கியது மன்னித்து விடு என்று சொல்லி அணைத்து கொண்டாள்.

பிரியா, தாரா இருவரும் பேசி கொண்டே வர, சதீஷ், ரிஷி இருவரும் புராஜக்ட் தொடர்பான பேசி கொண்டு போக ரோஷினி கிட்ட இதோ வருகிறேன்

அனைவரும் வெளியே செல்ல சித்தார்த் மட்டும் அதே இடத்தில் அவன் போன் நோண்டி கொண்டு இருந்தான்.

இதன்யா அவனை தேடி வந்தாள். எஸ்க்யூஸ்மி சார்?

இதை கேட்டதும் அவன் திரும்பி அவளை பார்த்தான். 

இதன்யா ரோஷினியிடம் நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் வருகிறேன் என்று சொல்லி சித்தார்த் இருக்கும் அறையை நோக்கி நடந்தாள்.

சித்தார்த் அங்கு இருந்த மேஜயின் மேல் அமர்ந்து கொண்டு இதன்யா பேசியதையும் அவள் அலட்சிய பார்வையையும் நினைத்து  கோபப்பட்டவன். அதில் இருந்து வெளிவர நினைத்து போன் எடுத்து பார்த்து கொண்டு இருந்த வேளையில் அவனை சீண்டி பார்க்க கங்கணம் கட்டிக்கொண்டு வந்து விட்டாள்.

எஸ்க்யூஸ்மீ சார்! என்று அவள் அழைக்க சத்தம் வந்த திசையை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான்.

மே ஐ கம்இன் சார்…

சித், இந்த குட் ஹேபிட்ஸ் எல்லாம் உனக்கு இருக்கா என்று மனதில் நினைத்தவன்.

ம்ம் என்று ஒற்றை பதில்
இதற்கு அவள் எந்த பதிலும் சொல்ல வில்லை.

இதன்யா உள்ளே நுழைந்த பின்” நான் உடைத்த பொருளுக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன். ரோஷினியிடம் இது பற்றி சொல்ல வேண்டாம். நான் யாருக்கும் கடனாளியாக இருக்க விரும்ப வில்லை இதை சொல்வதற்கு தான் நான் வந்தேன். “

தாங்க்ஸ் சார்…என்று சொல்லி அவள் திரும்ப

உடனே சித், இப்போது அவன் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்தவன் அவளை நோக்கி நடந்து கொண்டே இதை எதுக்கு என் கிட்ட வந்து சொல்ற…

அவள், நீங்க தானே…

அவன் ” நான் தான் நான் என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது?. நான் எல்லாம் ஒரு ஆள் அப்டின்னு நீ …… நீ இல்ல நீங்க ஸாரி மேடம் …நீங்க என்னை மதிக்கவே இல்லை…

சித், நீங்க ரஸ்பெக்ட் பண்ற சதீஷ் சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று பேசிக்கொண்டே சித்  அவள் அருகில் வந்து விட்டான்.

இப்போது அவள் முகத்தை பார்த்து சித்,  உன்னை பணம் கொடுக்க வேண்டாம் அப்டின்னு நான் சொல்லவே இல்லையே நீ பணம் 90,000 கொடுக்கணும். மொத்தமா கொடுக்கணும். 

இதன்யா அவனை திடுக்கிட்டு பார்த்தாள். 

சித், “ஃபர்ஸ்ட் அப் ஆல் நீ எனக்கு யாரு? என் கிட்ட வேலை செய்யுற ஒரு  வர்கர் தட்ஸ் ஆல்” இதை சொல்லும் போது சித் மனம் மிகவும் வருந்தியது .இருந்தாலும் அவள் பேசிய பேச்சுக்கு கட்டாயம் இது போல் தான் பேச வேண்டும்.

சோ எப்போ கொடுக்க முடியுமோ கொடு என்று சொல்ல

அவள் யார்  இதன்யா! 

சும்மா இருப்பாளா!.

ஓகே சார் இந்த மாச சம்பளத்தில் இருந்து மூன்று மாதம் பணம் பிடித்து கொள்ளுங்கள் என்று சொல்லி திரும்பியவள்.

மீண்டும் நின்று அவனை பார்த்து இப்போ உங்க வீட்டில் ஸ்டே பண்ணி இருப்பதற்கு எவ்ளோ  கொடுக்கணும்? 

இதை கேட்டதும் சித்தார்த் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.  இருந்தாலும் அவன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு “ம்ம் சீக்கிரம் சொல்றேன் மிஸ் இதன்யா மிஸ் !”என்று சொல்லி விட்டு அருகில் இருந்த கண்ணாடி டேபிலில் ஒரு குத்து விட்டான்.அது கற்கண்டு சக்கரையை போல் நொறுங்கி போனது. 

இதன்யா பயந்து கண்களை மூடி கொள்ள சித் உஷ்ண மூச்சுடன் ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டு இருந்தான். 

அவள் பயந்து மெதுவாக கண்களை திறந்தாள். 

சித் பற்களை கடித்து கொண்டு இதுக்கு ப்ரேக்கேஜ் நீ கொடுக்க தேவையில்லை.எனக்கு பிடிக்கல அதான் உடைச்சென். இந்த கண்ணாடி என்னை ரொம்ப இரிடெட் பண்ணுது அதான்! என அவள் கண்ணாடியை பார்த்து கூறினான்.

இதன்யா அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே அவனை பதட்டத்துடன்  பார்க்க.. 

சித் போனை எடுத்து கொண்டு சதீஷ்  ஐம் ஹேங்கிரி! சோ கண்ணாடி ரெடி பண்ணு நான் உடைக்கும் ஆத்திரத்தில் இருக்கேன். முக்கியமா கெமிஸ்ட்ரி லேப் திங்க்ஸ்ஸ அப்பாரட்டஸ் வேணும். எடுத்து ரெடி பண்ணு அண்ட் அந்த மொத்த கணக்கையும் இன்சூரன்ஸ் ல க்ளைம் பண்ணிக்கலாம். 

இதை கேட்டு இதன்யா அவனை சாக் ஆகி பார்த்தாள். இவன்! இவன்!  கோபம் வந்தால் எது வேணாலும் செய்வானா! நான் காசு கொடுக்க கஷ்ட படுறேன் இவன் உடைக்க ரெடி பண்ண சொல்லிட்டு போறான். 

அவன் கோபத்தை கட்டு படுத்த முடியாமல் நேராக அவன் அறைக்கு வேக நடையிட்டான். 

நான் உங்களுக்கு வேண்டாம். நான் உங்களுக்கு தகுதி இல்லாதவள் என்று நினைத்து கொண்டு அவள் தன் கவலைகளையும் சித்தார்த் மீதான ஏக்க பார்வை இதை எல்லாம் மனதின் ஒரு மூலையில் புதைத்து விட்டு சென்றாள்.

இங்கே சித்தார்த், நீ எனக்கு வேணும் டி எவ்ளோ வாய், எவ்ளோ திமிர், வீட்டில் ஸ்டே பண்றதுக்கு எவ்ளோ கொடுக்கணும் அப்டின்னு கேக்கற? இந்த வாய் இந்த துடுக்கு பேச்சு இதில் தான் டி என்னை மயக்கி உன் பின்னாடி இந்த சித் சுத்துறேன் நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் கூடிய சீக்கிரத்தில் நீயே சொல்லுவ டி நான் சொல்ல வைப்பேன்.

(இதில் யார் நினைப்பது நடக்கும்? இதன்யா ஜெயிப்பாளா? சித்து ஜெயிப்பானா? இந்த இதன்யா விவேகாவுக்கே டஃப் கொடுக்கிறாள். இருக்காதா! விவேகாவும் இதன்யாவும் ஒரே ஸ்கூல்… ரிஷி தான் விவேகா கிளாஸ் மேட்.. சரி இப்போ அடுத்து என்ன நடக்க போகுது!. 

இதோ லீனா வந்து விட்டாள். சித்து பாவம் எத்தனை பேரை சமாலிப்பான். கூடவே பிரச்னைய தூக்கி கொண்டு வந்து விட்டாள். லீனா அவளுடைய மீடியா பக்கத்தில் இருந்து சித்தார்த் கூட இணைக்கப்பட்டு இருந்த பெயரை நீக்கி விட்டாள். .

உடனே அந்த செய்தி தீயாக சமூக வலை தளங்களில் பரவ தொடங்கியது. அந்த செய்தி சித்தார்த்தின் அம்மா பவானிக்கு தெரிய வர சித்தார்த்தை அவர் பெங்களூர் அழைத்து இருக்கிறார். சித்து பெங்களூர் செல்கிறான். கூடவே அபியும் அவனுக்கு துணையாக சென்றான். 

அங்கே அடுத்து என்ன நடக்கும்? இதன்யா இதை எப்படி எடுத்து கொள்ள போகிறாள். )

பார்ப்போம் 

தொடரும் …

EPI 43

” இன்னும் நெருங்கி வர தோணுது!”

“உன்னை டார்ச்சர் பண்ண போறேன். நீ எனக்கு வேணும் டி எவ்ளோ வாய், எவ்ளோ திமிர், வீட்டில் ஸ்டே பண்றதுக்கு எவ்ளோ கொடுக்கணும்!  அப்டின்னு கேக்கற, இந்த வாய்! இந்த துடுக்கு பேச்சு, இதில் தான் டி என்னை மயக்கி உன் பின்னாடி இந்த சித் சுத்துறேன். நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் கூடிய சீக்கிரத்தில் நீயே சொல்லுவ டி நான் சொல்ல வைப்பேன்.”

என சித்தார்த் சொல்லி கொண்டே அவளை பற்றி நினைக்க கொஞ்சம் கொஞ்சமாக அவள் மேல் இருந்த கோபம் ஏனோ மோகமாக மாறியது. 

ஒவ்வொரு முறை இப்படி நீ பேசும்போது எனக்கு கோபம் வரதுக்கு பதில் உன் மேல் ஈர்ப்பு தான் அதிகம் ஆகுது டி.

என்று தனக்குள் சொல்லி கொண்டு தன்  அவள் மீதான எண்ணம் அது கொஞ்சம் கூட குறைய வில்லை இன்னும் வேண்டும் என்றே தோன்றியது.

அவள் அருகில் வேண்டும் அவள் பேசுவதை ரசிக்க வேண்டும் என்று சித் தன்னை தானே சமாதானம் படுத்தி கொண்டான்.

இங்கே ரதி, போனில் லீனா நீ சொன்னது போலவே செய்து விட்டேன். உன்னோட வெகுமதி உனக்கு கிடைத்து விட்டது. இப்போவவது உன்னோட வேலைய ஆரம்பிப்பாயா…

லீனா, “ரதி மேம் இனி நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க! என்னோட பெர்பார்ம் எப்படி இருக்கு அப்டின்னு வெயிட் அண்ட் வாச்!” என்று சொல்லி வைத்து விட்டு அவள் வேலையை ஆரம்பித்தாள்.

மாலை ஆனது அனைவரும் வீடு சென்றனர். இதன்யா அவள் மனதை கட்டு படுத்தி கொண்டு அவள் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. சரியாக மணி இரவு 7.00 அணைத்து ஊடகத்திலும் செய்திகள் சித், லீனா இருவரும் இருக்கும் புகை படங்கள் தான் வைரலாக பரவி கொண்டு இருந்தது.

முதலில் தாரா வேக வேகமாக ஓடி வந்து சித்து, டேய் நியூஸ் பார்த்தியா என்று அவள் கேட்கும் நேரம் சித்தார்த் வீட்டின் உள்ள நுழைவு வாயில் காவலாளி கிட்ட இருந்து போன் வந்தது.

கர்நாடகா பெங்களூரில் உள்ள சில செய்தி பத்திரிக்கையாளர்கள், தமிழ் நாட்டில் உள்ள சில மீடியா எல்லாம் வாசலின் முன் இருக்க சித்தார்த்துக்கு பாதுகாப்பு அதிக படுத்த பட்டது.

சித் தன் தலையை கோதி விட்டபடி அந்த வலை தளம் உள்ளே செல்ல அங்கே லீனா, சித் இருவரும் இணைந்து வைத்து இருந்த இன்ஸ்டா கணக்கில் இருந்து லீனா அவள் பெயரை நீக்கி கொண்டாள். சித் இதற்கு வருத்த படவில்லை அதே சமயம் சந்தோஷமும் இல்லை. லீனா பத்தினி தெய்வமாக மாறி இருக்கும் சில டிவிட்கள் சித்தார்த்தை பற்றி சில காதல் முறிவு கவிதைகள் எல்லாம் நிரம்பி வழிந்தது.

அந்த சிறிது நேரத்தில் அது பரவி இப்போது சித்தார்த்துக்கு ஒரு பிரச்சினையாக மாறி இருக்கும் என்று இருவர் கணக்கு போட்டனர்.

ஆனால் அது சரியான கணக்கு தானா இல்லை தவறான கணக்கா என்பது அவர்களுக்கு தெரியவரும்போது நமக்கும் தெரியும். இதன்யா இது எதையும் அறியாமல் அவள் அறையில் இருந்தாள்.

தாரா, டேய் இப்போ என்ன செய்ய போற…

சித், என்ன செய்ய சொல்ற…
அவள் அமைதியானாள்.

ரோஷினி சித்தார்த்தை பார்க்க வந்தாள். அண்ணா அவளையும் உன்னையும் பற்றி எனக்கு முன்னவ தெரியும்… என்று கூறி ரோஷினி அவனை அணைத்துக் கொண்டாள்.

சித்தார்த் முகம் இறுகி போய் விட்டது. அவனுக்கு போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

ரோஷினி, அண்ணா அம்மா போன் பண்றாங்க…

சித், எடுக்காத ரோஷினி நான் இப்போவே அம்மாவை பார்க்க செல்கிறேன் என்று சொல்லி வேக வேகமாக புறப்பட்டான்.

தாரா, நானும் வருகிறேன்…

சித், நீ ரோஷினி கூட இங்கேயே இரு நான் சீக்கிரம் வந்து விடுவேன் என்று சொல்லி கிலம்பியவன் வெளியே செல்லும் முன் இதன்யாவின் அறையை ஒரு சில நொடிகள் பார்த்து விட்டு சென்றான்.

அவன் வெளியே வர அங்கு இவன் வருகைக்காக காத்து கொண்டு இருந்த பத்திரிக்கையாளர் அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.

சித், எதுவும் பேசாமல் அவர்களை தவிர்த்து காரில் கிளம்பினான்.குரு போன் செய்தான்.

குரு, சித்து நான் அவ கிட்ட பேசட்டுமா.. விடு இது என்னோட பிராப்ளம் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டான்.

சில மணி நேரங்களில் பெங்களூர் வந்து சேர்ந்தவன். தன் அம்மாவை காண சென்றான்.

பவானி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு லீனாவுக்கு போன் முயற்சி செய்து கொண்டு இருந்தாள். கிருஷ்ணன் தன் மகளை அருகில் அமர்ந்து சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.

சித்தார்த் உள்ளே வந்தவன் நேராக தன் அம்மா இருக்கும் இடத்துக்கு சென்றான்.

மாம் என்று அழைக்க..

பவானி, இது எல்லாம் உண்மையா கண்ணா… ஏன் லீனா போன் எடுத்து பேச மாட்டின்றா சொல்லு… சித்து என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்…

இப்போ தான் நான் உனக்கு ஜாதகம் பார்த்தேன். உன்னோட ஜோடி உன் மேல்
உன்னை விட உன் மேல் அவ உயிரை வைத்து இருப்பா கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் ஆக போகுது இன்னும் ரெண்டு வருஷத்துல என்னோட பேர பசங்க என்று நினைத்து பவானி அழ இதை சித்தார்த் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தான்.

 சித் தன் அம்மாவின் அருகில் சென்றவன். கைகளில் வைத்து இருந்த தண்ணீர் எடுத்து நீட்டியவன் இப்போது பேச ஆரம்பித்தான். “அம்மா நீங்க நினைப்பது போல் லீனா இல்ல மா!”


நீ தான் எல்லாத்துக்கும் காரணமா… சொல்லு சித்து எதுக்கு இப்போ அமைதியா இருக்க…

கிருஷ்ணன், சித்தார்த் என்ன அமைதியா இருக்க என் பொண்ணை கஷ்ட படுத்துவது தான் உங்க ஃபேமிலி மோத்ததுக்கும் வேலை…

சித்தார்த் இப்போது பேசினான்.  மாம் நாங்க ரெண்டு பேரும் ப்ரேக் அப் பண்ணி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆக போகுது நாங்க ரெண்டு பேரும் எப்பவோ பிரிந்து விட்டோம்…

இதை கேட்டு பவானி உறைந்தாள்.

கிருஷ்ணன்,  வாட்..

யெஸ் தாத்தா அவளுக்கு நான் முக்கியம் இல்லை என்னோட ஸ்டேடஸ் பணம் காசப்ஸ் இது தான் தேவை என்று சொல்ல

பவாணி, நீ பொய் தானே சொல்ற நான் நம்ப மாட்டேன் அவளை விட பொருத்தமா யாருமே உனக்கு கிடைக்க மாட்டாங்க சித்து கண்ணா நீங்க சினிமா நிஜ வாழ்க்கை ரெண்டிலும் உன் பக்கத்தில் அவ தான் டா சரியா இருப்பா…

சித், மாம் ட்ரை டூ அண்டர்ஸ்டண்ட் மீ உங்களுக்கு ஒன்னும் தெரியாது. எல்லாரும் உங்க புருஷனை போல் இருக்க மாட்டாங்க.. உங்களோட ஃபோர்சிங்ல தான் இந்த அளவுக்கு இது வளர்ந்து இருக்கு இதுக்கு மேல் இது வேண்டாம் பிளீஸ் என்னை விடுங்க மா… என்னை முதலில் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.. என்று சொல்லி அவன் வேக வேகமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.

இங்கே இதன்யா சித்தார்த் பேசியது அவன் பார்வை அவன் சிரிப்பு கம்பீரம் என அவனை பற்றியே நினைத்து கொண்டு அழுது அப்படியே உறங்கி விட்டாள் காலையில் எப்பொதும் போல் எழுந்து போன் எடுத்து பார்க்க அதில் பிரியா, பூஜா, ரிஷி இவர்களிடம் இருந்து தவற விட்ட அழைப்புகள் இருக்க மனம் படபடக்க ஆரம்பித்தது. முதலில் பிரியாவுக்கு அழைத்தாள். 

இதன்யா அடுத்த நாள் காலையில் எழுந்து தன் போனை பார்த்தவள் உடனே பிரியாவுக்கு அழைக்க..

பிரியா, ஹே என்ன டி பண்ற? உனக்கு எத்தனை முறை கால் பண்ணட்டும்..

இதன்யா, நீ முதலில் எதுக்கு கால் பண்ண பூஜா, ரிஷி சார் எல்லாரும் எனக்கு கால் பண்ணி இருக்கீங்க அப்படி என்ன ஆச்சு டி?

உடனே அவள்  நம்ப சித்து டார்லிங்.. என்று நிறுத்திட…

இதன்யாவின் இதயம் வேக வேகமாக துடிக்க கண்களில் கண்ணீர் ஒரு நிமிடம் வந்து கொண்டே”  ஹே என்னாச்சு அவர்க்கு சொல்லு!  நல் நல்லா தானே இருக்கிறார் .”என்று சொல்லி கொண்டே கதவுகளை திறக்க போக

பிரியா, உனக்கு ஒண்ணுமே தெரியல டி சித்து அப்புறம் அந்த லீனா ரெண்டு பேரும்.. “லீனா” என்ற பெயரை கேட்டதும் இதன்யா கதவுகளை திறக்காமல் அப்படியே நின்றாள்.

இதன்யா மிகவும் கஷ்ட பட்டு துக்கம் தொண்டையை அடைக்க அதை மறைத்து கொண்டு “என்ன டி அந்த லீனாவுக்கும் சித்து சாருக்கும் கல்யாணமா!”…!

பிரியா, லூசு இதன்யா  இனி இந்த ஜென்மத்தில்   நடக்கவே நடக்காது ….

என்ன சொல்ற பிரியா!

ம்ம் ஆமா போய் கூகிள், யூ ட்யூப் பாரு…

இதன்யா, ஹே என்ன டி சொல்ற கொஞ்சம் புறியுற மாதிரி பேசி தொலை..

பிரியா அவள் பேசியதை கேட்டதும் உடனே கோபம் வர போடி நான் போன் வைக்கிறேன்.

பிரியா பிரியா பிளீஸ் டி என்னோட செல்லம்  சொல்லு சொல்லு என்னாச்சு? என இதன்யா அவளை கேட்டு கொண்டே இருந்தாள். 

பிரியா அவளிடம் அனைத்து விஷயமும் சொல்ல அதை கேட்ட இதன்யா ஒரு நிமிடம் உறைந்தாள்.

பிரியா, ஹே… ஹேய் இதயா லைன்ல இருக்கியா? இல்லையா?எவ்ளோ பெரிய விஷயம் நடந்து இருக்கு, அந்த கலவர பூமியில் நீ இது எதுவும் தெரியாமல் அவங்க வீட்டிலே இருந்து கொண்டு குப்பர கவுந்து தூங்கி இருக்க நான் சொல்றது சரி தானே…

இதன்யா, சரி சரி போதும் போதும் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வைக்கிறேன் என்று போன் வைத்தாள்.

பிரியா சொன்ன விஷயத்தை கேட்டதும் அவளுக்கு கோபம் உள்ளுக்குள் எரிந்தது.  குறுக்கு நெடுக்கும் நடந்தவள்.” அந்த லீனா! அவளுக்கு எவ்ளோ திமிர் ? என்னோட சித்துவை வேண்டாம் என்று சொல்லி விட்டாள். அவளும் அவ முகமும் பாஜாரி அவ என் சித் பக்கத்தில் நிற்க முடியுமா!  ராஸ்கல் அவ முகம் எல்லாம் பிளாஸ்டிக் surgery அப்புறம் சித் எவ்ளோ படித்து இருக்கிறார்!” 

என அவள் சொல்லி கொண்டே பெரு மூச்சை உஸ்ண மூச்சாக வெளி விட்டாள். “ஹே லீனா நீ  இப்போது மட்டும் என் கைகளில் கிடைத்தால் சட்னி தான்!”   என்று அவள் மனம் அவனுக்கு பரிந்து பேசி கொண்டு இருந்தது.

இதன்யா பிரைன் -” ஹே இப்போ நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்!  “உன்னோட சித்துவா”என்று அவளது மூளை கேட்க ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.

“என் மனசு இப்போ எதுக்கு அவன் பின்னே போகுது இல்ல !இல்ல! அவன் எப்படி போனால், உனக்கு என்ன? நீ உண்டு உன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்று சபதம் போட்டு கொண்டு வெளியே வந்தாள்.

இனி தான் சபதம் எல்லாம் தூள் தூளாக உடைய போகிறதே… பார்ப்போம் என்ன செய்ய போகிறாள்.

வெளியே வந்த இதன்யா நேராக ரோஷினி யைப் பார்க்க சென்றாள். அவள் கவலையில் இருக்க

என்னாச்சு ரோஷினி! .

உடனே அவள் இதன்யாவை கட்டி கொண்டாள். ரோஷினி, தனு என் அண்ணா ரொம்ப பாவம் தெரியுமா ? என் அண்ணாவை எப்படி அவமான படித்தி விட்டாள். என்று அவள் அழுது கொண்டு இருக்க

அப்போது ரோஷினி போனுக்கு அழைப்பு வந்தது. அப்பா என்று காட்டிட உடனே அவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

ரவிச்சந்திரன்.c,,

ரோஷினி சுவீடி…

ம்ம் சொல்லுங்க மிஸ்டர் ரவிசந்திரன் என அவள் சொல்ல மறு முனை அமைதியானது. 

ரோஷினி, எல்லாம் உங்களால் தான் டாட் என் அண்ணா எவ்ளோ அவமானபடுகிறான்? என்று கூறி கொண்டு இருக்கும் போதே 

இதன்யா  ரோஷினி அவர்களின் குடும்ப விஷயம் பேசுகிறாள் என்று தெரிந்து எழுந்து வெளியே செல்ல எத்தணிக்க அவள் இதன் யாவின் கைகளை பிடித்து அருகில் அமர வைத்து கொண்டாள். 

ரவி, “நான் என்ன சுவீட்டி பண்ணேன் அது அவன் லைஃப்!நான் இப்போ போன் பண்ணது உன்னோட லைஃப் பற்றி பேச.!” 

ரோஷினி, கசந்த புன்னகை செய்தவள் என்னோட வாழ்க்கை மேல எப்படி உங்களுக்கு தீடீர் அக்கறை.!

ரவி மேலும் “நீ எப்போதுமே என் பொன்னு தான் உன் அம்மாவை தான் நான் பிரிந்தேன் ஆனால் நீ என்னோட உயிர் உனக்காக நான்
மிகப்பெரிய பிசினெஸ் மேன் பையனை பார்த்து வைத்து இருக்கிறேன். உனக்கு கல்யாண வயசு ஆகி விட்டதே! என் ஒரே பொன்னு என் செல்ல பொன்னு சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் சுவிட்டி!” 

ரோஷினி கண்களில் கண்ணீர் வர “நீங்க எனக்கு… உங்க அக்கறை தேவை இல்லை!… நீங்களும் தேவை இல்லை!” என்று அவள் போன் வைக்க போக

ரவி, “நான் சொல்ற பையனை தான் நீ கல்யாணம் பண்ணிக்க வேணும் உன் அம்மா பேச்சை கேட்டு கொண்டு இருக்காதே!” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ரோஷினி போன் கட் செய்து வைத்து விட்டாள்.

இதன்யாவுக்கு அவர்கள் பேசியது புரியவில்லை. கன்னடம் என்றாலும் எதோ வாக்குவாதம் என்று மட்டும் தெரிந்து கொண்டாள்.

அவளை ஆறுதல் படுத்தினாள். இப்படியே ஒரு வாரம் சென்றது. சித்தார்த் பெங்களூரில் இருந்து கொண்டே அவன் வேலைகளை செய்தான்.

இதன்யாவுக்கு சித்துவை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு நாளும் அவள் போனில் அவன் எண் டயல் செய்வாள். ஆனால் “என்ன பேசுவது? ஏன் பேச வேண்டும்?” என்று தோன்றும் அவன் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்து ஒரு வாரமும் தவித்து போனாள்.

சித்தார்த்  கஷ்ட பட வேண்டும் என்பது தானே ரதியின் திட்டம் ஆனால் இதை இப்படியே விட கூடாது இந்த பிரச்சனை முடிவதற்கு முன் இன்னொரு புது பிரச்சினையை நிகழ்த்த வேண்டும். அதில் எப்படியும் அவள் மகன் ஆரவை மொத்த சந்திர மௌலி மற்றும் ரவி சந்திரன் சொத்து தொழில்களுக்கு ஒரே வாரிசு ஆக்கி விட வேண்டும் என்று ஒரு வலுவான திட்டம் தீட்டினாள்.

சித்தார்த்தின் பெயர் மதிப்பு எல்லாம் ஒரு புறம் குறைய குறைய லீனா கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கினாள்.

அனைத்து இடங்களிலும் அவளை பற்றிய கிசு கிசுக்கள் மட்டுமே இருந்தது.

ஆனாலும் இன்னும் சித்தார்த் இதற்கு எந்த பதிலும் அளிக்க வில்லை எண்பது மிகவும் மர்மமாக இருந்தது. 

அனைத்து ஊடகங்களும் சித்தார்த்தை வட்ட மிட ஆரம்பித்தது. அவன் வாய் திறந்தால் கொஞ்சம் கண்டென்ட் கிடைக்கும் அதை வைத்து இன்னும் பெரிதாக்கி TRB ரேட்டிங் ஏற்றி சம்பாதிக்கலாம் என நிறைய பத்திரிக்கை மற்றும் டீவி சேனல்கள் தீவிர வேலையில் ஈடு பட்டு கொண்டு இருந்தது. 

இதோ அந்த நாளும் வந்தது.

சித் சதீஷிடம் சொல்லி அவனுடைய  டிவிட்டர், இன்ஸ்டா வலை பக்கங்களில் அவன் கருத்தை அதிகார பூர்வமாக பதிவிட்டான்.

Men will be a men.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை…

ஆனால் karma is Boomerang.. 

.

பெண்கள் அதிக உணர்ச்சி குவியலில் இருப்பவர்கள்.

நேற்றைய விடியல் என்பது எனக்கு ஒரு இறந்த காலம்…

நான் எதிர் காலைத்தை நோக்கி செல்கிறேன். 

மாற்றம் ஒன்றே மாறாதது.

எது நடந்தாலும் பூமி சுற்றுவது நின்று விடாது. 

so முடிந்து விட்டால் அது இறந்த காலத்தில் சேர்க்கப்படும் அது போல் எனக்கு எல்லாமே இறந்த காலம் ….எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் இந்த காதல்!  இது 

“Finally Love Is Unconditional “என்று  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என அனைத்து மொழியிலும் எழுத பட்டு இருந்தது.

இந்த செய்தியை பார்த்ததும் இன்னொருவருக்கு மிகவும் சந்தோஷம்

அது யார்? நியூஸிலாந்தில் சித்தார்த் படித்த அதே கல்லூரியில் அவனுக்கு இணையாக அவனையே இணையாக அடய வேண்டும் என்று சுற்றி கொண்டு இருக்கிறாள். ரிஷியின் தங்கை மேகா

“சித்து டார்லிங் ! இப்போ நீ சிங்கிள் இன்னும் ஒரு ஆறு மாசம் சீக்கிரம் வந்து விடுவேன்.ரிஷிக்கும் ரோஷினிக்கும் கல்யாணம் அடுத்து உனக்கும் எனக்கும்தான் நான் எப்படி டா இந்த லீனாவை துரத்திவது அப்டின்னு நினைத்தேன். அந்த கடவுளே எனக்காக அவளை துரத்தி விட்டார். இன்னும் கொஞ்ச நாள் தான் சித்து!” என்று சொல்லி அவள் நண்பர்கள் குழுக்களுக்கு பார்ட்டி ட்ரீட் அனைத்தும் கொடுக்க ஏற்பாடு செய்தாள்.

சித்தார்த் இதை பதிவிட்ட சில மணி துளிகளில் அது மிகவும் பிரபலம் அடைந்தது.

ஆனாலும் அவன் சொன்னது  சில நபர்களுக்கு புரிய வில்லை புரிந்த நபர்கள் நல்ல மனம் படைத்தவர்கள். அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.

சித்தார்த்தை சில பேர் அதிஷ்டம் இல்லாதவன் என்றும் சில பேர் திட்டியும் தீர்த்தனர்…

சில பத்திரிக்கை நிருபர்கள் சித்து சொல்ல வருவது என்ன தவறு?  யார் மேல இருக்கும்? என்று ஒரு பெரிய நீல் கதைகளை உருவாக்கி பேசு பொருளாக வைத்து இருந்தனர்.

இந்த பதிவுகள் வந்த சில நாட்களில் மெளீனா, ஜெகதீஷ் இருவரும் நடித்து கொண்டு இருக்கும் படத்தில் இருந்து சில காட்சிகள் முன்னோட்ட படங்கள் வெளி வந்து இணையத்தில் மீண்டும் லீனா பேசு பொருளாக வளம் வந்து கொண்டு இருந்தாள்.

இங்கே சித்தார்த் மீண்டும் அவன் வேலையில் மூழ்கி இருந்தான்.

பவானி எப்படியும் லீனாவை சித்துவுடன் சேர்த்து விட எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு இருந்தாள்.

பிரியா, இதயா என்னோட டார்லிங் டிவீட் பார்த்தியா! Love is unconditional அப்டின்னு போட்டு இருக்கு இதுக்கு அர்த்தம் என்ன சொல்லு? 

இதன்யா, நீயே கேள்வி கேட்டு இருக்க நீயே பதிலும் சொல்லி தொலை.. 

பிரியா, அப்போ சித்து லவ் பண்ண இப்போ கூட ரெடி தான்.. 

இதன்யா, இப்போ என்ன சொல்ற? 

பிரியா, பிராடு நாயே போடி! சித்து ப்ரேக் அப் ஆனதில் இருந்து செம்ம ஸ்மார்ட்டாக ரொம்ப செக்ஸியா இருக்காரு பாரேன்!  

இதன்யா, எருமை எருமை என்ன பேசுற.. 

இப்போ இதில் என்ன தப்பு இருக்கு பக்கத்தில் இருந்து நீயும் பார்க்க மாட்ட என்னையும் பார்க்க விட மாட்ட.. 

இதன்யா, பிரியா உன்னை யாரும் காலேஜ்ல கேட்க மாட்டார்களா! பவானி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இப்போ இருந்து என் கண்ட்ரோல் Hod ல இருந்து எல்லாமே நமக்கு அவ்ளோ மரியாதை தெரியுமா!  

இதன்யா, பிளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாத இப்போ எனக்கு க்ளாஸ் இருக்கு என சொல்லி போனை வைத்தாள். 

பிரியா, நாயே  நீ எங்கே போனாலும் என் கிட்ட தான் வந்து நிக்கனும்.. என சொல்லி அவள் லூட்டியை ஆரம்பித்தாள். 

சித்தார்த் புதிதாக மேற்கொண்ட சில பணிகளை முடித்து விட்டு தன்னவளை காண வேண்டும் அவளை அணைத்து ஆறுதல் தேடி கொள்ள வேண்டும் என்று தோன்ற உடனே தமிழ் நாடு கிளம்பி விட்டான்.

இதன்யா எப்போதும் போல் பள்ளி கிளம்பி சென்றாள். அவள் வகுப்பு பாடங்களை எடுத்து முடித்து விட்டு அவள் இடத்துக்கு வந்து அமர்ந்தாள்.

பூஜா, ஹே இதன்யா இன்னிக்கு ஸ்கூல் மீட்டிங் டி சரியா லஞ்ச் ப்ரேக் ல சீக்கிரம் சாப்பிட்டு விட்டு மீட்டிங் ஹாலில் அசெம்பில் ஆகனும்…

இதன்யா, மீட்டிங் யாரு டி கண்டக்ட் பண்றாங்க?

அங்கே அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு உள்ளே வந்த

ராதா டீச்சர், சித்தார்த் சார் வர போகிறார்.

பூஜா, நிஜமாவா அவர் வந்துட்டாரா? 

மம்ம்  இப்போ இன்னும் கோபமா ரொம்ப கடுமையாக இருக்கிறார். என்று சொல்ல இதன்யாவின் மனம் இரு கலவையான உணர்வில் தவித்தது.

அவர் வந்து விட்டார் என்று மனம் குதுகளித்தது. ம்ம் பார்க்கலாம்.. 

ம்ம் வந்துட்டான்! கிட்ட தட்ட 15 நாள் ஆக போகுது..  எப்படி இருக்க பொறானோ! 

இதன்யா மூளை அவன் என்ன சோப்பா அப்படியே கரைந்து போக.. 

ஆனால் நீ சித்துவை நினைத்து நினைத்து கரைந்து போயிட்ட அது தெரியுதா!. 

“நானா! நான் நல்லா தானே இருக்கேன்!”

இதன்யா, அவன் வேண்டாம் என்று ஒரு மானம் கெட்ட மனசு கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னதே! இப்போ என்ன புதுசா!. 

இதன்யா – சித்தார்த் சந்திப்பு நாளை.. 

யார் மனதில் என்ன? 

தொடரும்…

EPI 44

சித்தார்த் உடனான மீட்டிங் பற்றி ராதா டீச்சர் சொன்னதை கேட்டதும் இதன்யாவின் மனதில் ஒரு வித கலவையான உணர்வு தோன்றியது. 

“இப்போது அவரிடம் பேசினால் என்னை தவறாக நினைத்து விடுவாரா? இல்லை! என்ன பேசுவது? என்று அதை நினைத்து குழம்பி தவித்தாள்.

அவள் மனம் “நீ எப்பொதும் போல் உன் நிலையில் இருந்து மாறாமல் இரு!” என்று மனதில் ஒரு குட்டி கருத்தரங்கம் வைத்து ஒரு முடிவுக்கு வந்தவளாய் இப்போது கிளம்பினாள்.

சித்தார்த் அவன் அறையில் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க ஒரு ஆறு மாசம் தூங்காமல் இருந்த இன்சோம்னியா நோயாளி போல் இருந்தான்..

சித் மனம்” என்ன டா இப்படி இருக்க? இன்னிக்கி லிட்டில் ஹார்டை மீட் பண்ண போற,  உனக்கு எவ்ளோ வொர்க் இருக்கு! அவளை சீண்டனும் கிஸ், ஹக்ஸ் இதெல்லாம் வேணும்! இப்படி சோர்வாக இருக்காமல் அவளை சீண்டும் சித்தார்த்தாக கொஞ்சம் வெளியே வா! அபிசியலா இப்போ நீ சிங்கில் இது போதுமே!”

சித், மூளை “யூ ஆர் கரெக்ட்! பட் அவள் ஒரு கொள்கையோடு சுத்திட்டு இருக்கா! அவ கிட்ட போய் சொன்னா டேய் போடா அப்டின்னு சொல்லிட்டு போயிடுவா! .

ம்ம் அது என் கிட்ட நடக்காது 

 அப்பொழுதும் சித் மனம் தளராமல் “அவ லிட்டில் ஹார்ட் எனக்கு கிடைக்கணும், அப்டின்னு தான் இவ்வளவும்  நடந்து இருக்கு சோ பாசிடிவா யோசிக்கணும்.” என்று நினைத்து கொண்டு ஒரு முறை ஃப்ரெஷ் ஆகி தன்னை தயார் படுத்தி கொண்டு அவளை காண சென்றான்.

இங்கே இதன்யாவும் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்க்க கண்கள் எல்லாம் உள்ளே போய் கருவளையம் வந்து இருந்தது.

சித்தார்த்தை நினைத்து கொண்டே கிட்ட தட்ட இந்த இரண்டு வாரங்களும் சரியாக சாப்பிட வில்லை தூங்க வில்லை. முகம் எல்லாம் தொங்கி போய் இருந்தது. கண்ணாடியை கலட்டி தன் முகத்தை பார்க்க அவளின் வசீகரம் கொஞ்சம் கூட குறைய வில்லை.

இதன்யா மனதில் ஒரு வித எண்ணம் தோன்றியது. கண்ணாடிப் போடாமல் இன்று மீட்டிங் செல்லலாம் சித்தார்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? என்று யோசித்தாள். அவனை காண்பதற்காக முகம் கழுவி ஒரே ஒரு குட்டி பொட்டு இரு புருவத்தையும் ஒரு முறை நீவி விட்டு பின் அவளை எப்போதும் தீண்டி கொண்டு இருக்கும் அந்த சிறு கூந்தல் கற்றையை எடுத்து விட்டு அது இயற்கையாக வந்தது போல் செட் செய்தாள்.

ஆனால் அது அவளின் கை வண்ணம் என்று நமக்கு மட்டுமே தெரியும் அந்த கொண்டையை கொஞ்சம் இறுக்கமாக போட்டு இருந்தாள். அவனை பார்க்கும் போது அது சரியாக அவிழ்ந்து விழ கூடாது. கொஞ்சம் குங்குமம் எடுத்து அவள் கழுத்தில் வைத்து கொண்டாள்.

இப்போது ஒரு முறை அவளை பார்த்து திருப்தி பட்டு கொண்டவள் அந்த கண்ணாடியை அவள் இடையில் சொருகி கொண்டாள். இடை தெரியாமல் தான் இருந்தது. அவளுக்கு அவளே கண்ணாடியை பார்த்து உதடு குவித்து முத்தமிட்டு சென்றாள்.

இதன்யா மூளை, இப்போ என்ன செய்கிறாய்? . இல்ல சும்மா ஒரு கியூரியாசிட்டி! என்று மனம் சொல்ல சரி இல்ல டி நீ… ஹே போடி என்று கிளம்பினாள்.

அனைவரும் மீட்டிங் ஹாலில் ஒரு வித கலக்கத்துடன் அமர்ந்து இருந்தனர்.

சித்தார்த் சரியான நேரத்திற்கு உள்ளே வந்தான். அவனது கரு நீல கோட் மேல் சட்டையை நீவி விட்டு கொண்டே அவனது இருக்கையில் ஸ்டைலாக வந்து அமர்ந்தான்.

சித்தார்த்தின் காவலாளிகள் வெளியே நின்று கொண்டனர். சதீஸ் சித்தார்த்தின் பின்னால் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அவன் உள்ளே வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். அவன் பதிலுக்காக காத்து கொண்டு இருக்க அவன் அந்த அறையை ஒரு நோட்டம் விட்டு சிட் டவுன் என்று சொல்ல அனைவரும் அமர்ந்தனர்.

இதன்யா சித்தார்த் பார்ப்பான் என்று எதிர் பார்க்க அவன் ஒரு சிறு கண் அசைவு கூட அவள் மேல் படவில்லை.

அவள்  மனதில் வேஸ்ட் வேஸ்ட்! வேஸ்ட்! சுத்தம் வேஸ்ட்! என்று நினைத்து கொண்டு அவன் பேசும் கம்பீரத்தில் மெய் மறந்து கொண்டு இருந்தாள்.

இதன்யா மனதில் ஒரு வேளை அவரோட காதலியை நினைத்து இப்படி ஆகி விட்டாரா?..

அவள் அறிவு, ஹே இடியட் அவன் எப்படி இருந்தால் உனக்கு என்ன உனக்கு வராததை நீ இப்போ எதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்க உன்னோட லட்சியத்தை மறந்து போய் விட்டாயா ஸ்கூட்டி, ஃப்ரீ ஹெர், காட்டன் சாரி, ஜதி மல்லி பூ, என்று தன்னை சித்தார்த்தின் மாயயில் இருந்து மீட்டு கொண்டு அவன் சொல்வதை கவனிக்க தொடங்கினாள்.

சித்தார்த் அவள் பார்க்காத நேரத்தில் அவன் அவளை பார்க்க அடிக்கடி அவள் கைகள் இடையை தொட்டு சரி செய்து கொண்டே இருந்தது.

சித் மனதில் என்ன இன்னிக்கு மேடம் கண்ணாடி போடாமல் வந்து இருக்கா.

“சம்திங் ராங் முகத்தில் டன் கணக்கில் ஏக்கம் எக்பெக்ட்டேசன் இருக்கே”

சித்தார்த் பேச வேண்டியதை பேசி முடித்து இன்னும் சில வேலைகளையும் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி மாணவர்களுக்கு தனி தனியாக இயற்பியல், வேதியல், கணிதம், எடுக்க சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ் வழி படித்தவர்களை நியமிக்க உத்தரவிட்டான்.

சித் மேலும் வேலையில் ஏமாற்றும் நோக்கத்தோடு என் கிட்ட யாரும் நடந்து கொண்டீர்கள் விளைவு மோசமா இருக்கும்… என்று சொல்லி டிஸ்பஸ் என்ற வார்த்தை தான் அனைவரும் வேக வேகமாக அதை அட்டென்ட் செய்த பதிவேட்டில் கைஎழுத்து போட்டு விட்டு  பறந்து விட்டனர்.

பூஜா, இதன்யா இருவரும் வெளியே செல்ல சித்தார்த், எக்ஸ்கியூஸ் மீ கெமிஸ்ட்ரி டீச்சர் என்று அழைத்து கொண்டே அவன் நடக்க இங்கே

இதன்யாவுக்கு தலை கால் புரிய வில்லை.

அய்யோ இப்போவாச்சு பேச வந்தானே! என்று நினைத்து கொண்டு அவள் பின்னால் திரும்ப சித்து அவளை பார்க்காமல் அருகில் உள்ள பூஜாவை பார்த்தான். 

பூஜா, சார் நீங்க என்னை தான் கூப்பிட்டீர்களா?.

சித் ஒரு குறுநகை சிந்தி மம் ஆமா உங்க பேர் பூஜா தானே உங்களை தான் கூப்பிட்டேன் சோ..

பூஜா சந்தோஷத்தில் சார் நிஜமா என்னோட பேர் உங்களுக்கு நினைவு இருக்கா அய்யோ  என்னால் நம்ப முடியல… நான் கூட நீங்க இதன்யாவை தான் கூப்பிடீர்கள் என்று நினைத்தேன்.

சித், அது யாரு..

இதை கேட்டதும் இதன்யாவுக்கு கோபம் வர பழக்க தோஷத்தில் கண்ணாடியை மூக்குக்கு தள்ளுவது போல் செய்தாள். சித், இதன்யாவின் பக்கம் திரும்பவே இல்லை..

பூஜா, நீங்க கெமிஸ்ட்ரில மிஸ் ஹான் இதன்யா மட்டும் தான் இருக்காங்களா  நீங்களும் தானே ஹேண்டில் பண்றீங்க அதனால் தான் உங்களை கூப்பிட்டேன்…

பூஜா அசடு வழிந்து கொண்டே சார் ஓகே சார் சொல்லுங்க… இதன்யா அவனை பார்த்து முறைத்து விட்டு திரும்பி வேக வேகமாக நடக்க

சித்தார்த் பூஜாவிடம் மிஸ் பூஜா எனக்கு ஒரு கண்ணாடி ஸ்டேண்ட் வேணும் ஐ மின் ஸ்பெக்ஸ் ஸ்டேண்ட் வேண்டும் உங்க கிட்ட இருக்கா?.

சார் நீங்க சொல்றது புரியல..

சித், என் கிட்ட கூலர்ஸ் இருக்கு சோ அதுக்கு ஸ்டண்ட் வேணும் எனக்கு இந்த ஊர் அதிகமா தெரியாது. உங்களுக்கு தெரிஜவங்க யாராவது அதுக்கு ஸ்பெஷல்லா ஸ்டேண்ட் பாக்ஸ் யூஸ் பண்றாங்கலா! அதை பார்க்க லுக்கா இருக்கணும் இப்போ நான் சொல்றது புரியுதா ..

பூஜா, சார் கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியல நான் இதன்யா கிட்ட கேட்டு சொல்றேன்.அவளுக்கு தான் கண்ணாடி யூஸ் பண்ற ஹேபிட் இருக்கு 

சித், மம் அவங்க கிட்ட இருந்தால் கூட ஓகே தான் எவ்ளோ பணமோ அதை கொடுத்து அந்த ஸ்டேச்சுவ  நான் வாங்கிக்கிரென்.. 

பூஜா, சார் ஸ்டேண்டா! சிலையா!

சித் சிரித்து கொண்டே ஸ்டாண்டு தான் என்று சொல்லி அங்கு இருந்து நகர்ந்தான்.

பூஜா வேக வேகமாக இதன்யா அருகில் வந்தாள்.ஹே ஏன் டி என்னை விட்டு வந்த…

இதன்யா, எனக்கு அங்கே என்ன வேலை உன் கிட்ட தானே பேசினார் அப்புறம் என்ன..

பூஜா, அவர் பேசியது எனக்கு சுத்தமா புரியல அவருக்கு எதோ ஸ்டேண்ட் வேணுமா…

இதன்யா முறைத்து கொண்டே என்ன ஸ்டேண்ட் அது… கண்ணாடி ஸ்டேண்ட் வேணுமா கண்ணாடி கலட்டி வைக்க..

இதன்யா, அப்படி நான் கேள்வி பட்டதே இல்லையே!.. ஹே பொய் சொல்லாத அது ஒரு சிலையா இருந்தாலும் ஒகே ஸ்டேண்ட் ஆ இருந்தாலும் ஓகே அப்டின்னு சொன்னாரு எவ்ளோ பணம் கூட தருவாராம்..

இதன்யா, என்ன பூஜா உளறி கிட்டு இருக்க அப்படி ஒண்ணும் எனக்கு தெரியாது.

இதன்யா மனம் இவன் எதுககு இப்போ சம்மந்தமே இல்லாமல் பேசிட்டு இருக்கான் ஒரு வேளை முழுசா லூசு ஆகிட்டானா. ஏற்கனவே பிசிக்கா பிசிக்ஸ் படிச்சுட்டு கலண்ட கேசா தான் சுத்துவான்.

இதன்யா மனம், அது சித் இல்ல நீ தான்..  ஹே அடங்கு நீ என் கிட்ட இருக்க.. என் மனசு முழுதும் சித் தான் என்று

பூஜா, அப்போ வா நம்ப போய் சார் கிட்ட கேட்கலாம் என் பேரு எல்லாம் நினைவில் வைத்து இருக்கிறார் அவருக்கு நான் வாங்கி தரனும் என்று வலுகட்டாயமாக அவளை கூட்டி சென்றாள்.

சித், எதிர் பார்க்க வில்லை அவளை பூஜா கூட்டி வருகிறாள் என்று அவனும் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.அவள் வந்து நின்றாள். சார் இதன்யா கிட்ட சொல்லுங்க நான் சொன்னது அவளுக்கு புரியல.. சித் சதீஷ ஒரு பார்வை பார்க்க

சதீஷ், பூஜா டீச்சர் உங்களுக்கு யாராவது தமிழ் வழி கெமிஸ்ட்ரி டீச்சர் தெரியுமா உங்க தோழி யாராவது டிட்டில் சொன்னா நாங்க நேர்காணல் வைப்போம்..

பூஜா உடனே சதீஷ் பின்னால் சொல்ல சென்றாள்.

இதன்யா முறைத்து கொண்டே உங்களுக்கு என்ன வேணும்.? சீக்கிரம் சொல்லுங்க எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு..

சித், உங்க தோழி சொல்லலயா..

இதன்யா வேறு எங்கோ பார்த்து கொண்டு அவ சொன்னது எனக்கு புரியல..

சித்தார்த் எழுந்து நின்றவன் எனக்கு ஒரு கண்ணாடி ஸ்டேண்ட் வேணும் நீங்க வைத்து இருக்கிங்களே!  அதே போல! என அவன் பார்வையை அவள் மேல் மேய விட்டான். 

இதன்யா அவன் பார்வையில் திணறி கொண்டே  என் கிட்ட அந்த மாதிரி எதுவும் இல்லை.

டீச்சர் உங்க கண்ணாடி எங்கே?

அது அது வந்து ஸ்டாப் ரூமில் இருக்கு என்று அவள் சொல்ல

பொய் சொல்லாத! 

இல்ல நிஜமா தான் என சொல்லி கொண்டே அவள் வெளியே செல்ல முயற்சி செய்தாள். 

சித்தார்த் சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தவன்.

இங்கே இதன்யா மனதில் நம்ப முந்தியை வைத்து மறைத்து சொருகி இருக்கிறோம். என்று அவளுக்கு படபடப்பாக இருந்தாலும்  அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்து கொண்டே நின்று இருந்தாள்.

சித், ம்ம் உன் ஸ்டேண்ட் சூப்பர் டி என்று அவள் இடையை காட்டிட

இதன்யா, எங்கே?  எங்கே இருக்கு?  எங்கேயும் இல்ல! என்று சொல்லி அவள் அடுத்த அடி வைத்தாள்.

சித்தார்த் அவள் கைகளை பிடித்து அவன் பக்கம் இழுத்தவன். 

“உன் ஹிப்ல பிளீட்ஸ்ல வச்சு மறைச்சு இருக்க ”  இப்போ எடுக்கட்டுமா! என்று சொல்லி பின்னால் இருந்து அவள் இடையை அவனை நோக்கி இழுத்தான். 

இல்ல இல்ல தள்ளி போங்க!. 

ஆடாத அப்புறம் சேதாரம் உன் ஹிப்புக்கு தான் என அலுங்காமல் அவள் இடையில் இருந்து கண்ணாடியை எடுக்க அவன் கை விரல் பட்டதும் இதன்யாவுக்கு ஒரு நிமிடம் ஷாக் அடித்தது.

எப்படி கண்டு புடிச்சு இருப்பான்! அய்யோ! என அவள் கண்ணை மூடி கொண்டே அவனிடம் இருந்து விடு பட முயற்சி செய்தாள். 

சித் அவள் காதுக்கு அருகில் வந்து உன்னால என் கிட்ட இருந்து எதையும் மறைக்க முடியாது.. 

சித்தார்த் அவளை அவன் புறம் இழுத்து அந்த கண்ணாடியை அலுங்காமல் எடுத்து அருகில் உள்ள மேஜையில் வைத்தான். பின் தாமதிக்காமல் இடையோடு இரு கைகளையும் கோர்த்து கட்டி கொண்டான். இதன்யாவின் இதயம் வேக வேகமாக துடித்தது. சித்தார்த்துக்கு இப்போது தான் மனம் லேசாக உணர்ந்தான். ஒரு சில நொடிகளில் அவள் தன்னிலை பெற்று விலக முயற்சி செய்ய

சித், அவள் பின் கழுத்தில் தலையை சாய்த்து கொண்டே பிளீஸ் டி எனக்கு ரொம்ப டிபிரஸ்டா இருக்கு வெறும் 5 நிமிடம் மட்டும் இப்படி கட்டி கொள்கிறேன் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்  டி…

இதை கேட்டதும் இதன்யாவுக்கு மறுக்க தோன்ற வில்லை. அவள் அப்படியே நின்றாள். அவள் எதிர் வினை கண்டு சித்தார்த் மனம் இப்போது மிகவும் நிம்மதியாக இருந்தது.

அவன் கண்களை மூடி அவள் வாசத்தினை உள் இழுத்து கொண்டு அப்படியே அவளை கொஞ்சம் இறுக்கி அணைத்து கொண்டான். இருவரது  மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது.

இதன்யாவுக்கு அவன் அருகாமை அவஸ்தையாக இருக்க சித்தார்துக்கு அவனது கவலை,  வேலை பளு, மன அழுத்தம் இது எல்லாம் இந்த நிமிடம் இல்லை எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம்  என்று தோன்றியது. இதன்யா இப்போது அவனுக்கு ஒரு அன்னை போல் அரவணைத்து இருந்தாள்.

சித்தார்த் தமிழ் நாடு வந்து இருப்பதை தெரிந்து கொண்ட தாரா அவனை பார்க்க நேராக பள்ளிக்கு வந்தாள்.

தாரா மனதில், இந்த ராஸ்கல் நேரா ஸ்கூல்க்கு வந்து இருக்கிறான். ரெண்டு பொண்ணை தனியாக விட்டு சென்று இருக்கிறோம் அப்டின்னு அவனுக்கு அக்கறை சுத்தமா இல்லை இடியட் என்று திட்டி கொண்டே அவன் அறைக்கு வந்தாள்.

அவன் தான் உள்ளே இருப்பான் என்று அறையை திறக்க அங்கே அவள் கண்ட காட்சி சித்தார்த் இதன்யாவை பின்னால் இருந்து கட்டி அணைத்து கொண்டு நிற்பது தான்.

தாரா” டேய் ஃப்ராடு சரியான கேடி தான் டா!” என்று உள்ளுக்குள் சந்தோஷம் சிரிப்பு என இரண்டும் ஒரு சேர வர அப்படியே அவள் பின்னோக்கி மெதுவாக வெளியே உள்ள  இருக்கையில் வந்து  அமர்ந்தாள்.

ஒரு சில மணி நேரம் கழித்து தாரா அவன் இன்னும் அவளை விட வில்லை என்று தோன்ற அவனுக்கு கால் செய்தாள். அந்த கைப்பேசி சத்தம் கேட்டதும் அவள் தான் முதலில் தன்னிலைக்கு வந்தாள்.

இதன்யா, 5 நிமிடம் ஆகி விட்டது என் என்னை கொஞ்சம் விடுங்க என்று அவள் திக்கி கொண்டே சொல்ல உடனே அவன் இல்ல இன்னும் 20 செக் இருக்கு என்று இப்போது அவளை இறுக்கி வெற்று இடையில் வருட 

இதன்யா , உங்க போன் அடிக்குது நீங்க!..  பண்றது சரி இல்லை, எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு.. 

ப்ச்ச, என்று அவளை திருப்பி அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து மம்

இன்னிக்கி எனக்காக  இந்த 5 நிமிடம் டைம் ஸ்பென்ட் பண்ணதுக்கு ரொம்ப தக்ஸ் டி என்று சொல்ல அவள் அவனை பார்க்க முடியாமல் கீழ் குனிந்து கொண்டே வேகமாக வெளிய வந்தாள்.

அவள் முகத்தில் வெட்கம் அப்படியே கன்னம் இரண்டும் மின்னியது. அவள் சித்தார்த்தின் மயக்கதில் இருந்து இன்னும் வெளி வராமல் அப்படியே நின்று கொண்டு  இருக்க

தாரா அவள் அருகில் வந்தாள். 


க்கும், உடனே இதன்யா யார்? என்று திரும்பி பார்த்திட

அங்கே தாரா இரு புருவமும் தூக்கி அவளை பார்த்து கொண்டு நின்று இருந்தாள்.

இதன்யா அவளை பார்த்ததும் மே! மேம்! நீங்க எப்போ வந்தீங்க? .

உடனே அவள் சிரித்து கொண்டே” நீ கனவில் யார் கூடவோ டூயட் ஆடிட்கிட்டு நீயாவே சிரிச்சுட்டு இருந்தியே அப்போவே வந்து விட்டேன்! ஆமா யாரு அந்த லக்கி பெல்லோ?

இதன்யா, மேம் அப்படி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நான் சும்மா என்று மழுப்பி கொண்டு இருக்க,

உடனே தாரா, சரி இப்போ சித்தார்த் சார் ஃப்ரீயா இருக்காரா?.. நான் போய் பார்க்கலாமா?..

இதன்யா, மேம் அதை எதுக்கு என் கிட்ட கேட்கறீஙக? நீங்க போங்க மேம், நான் எனக்கு சொல்ல என்ன இருக்கு..

 தாரா, இல்ல இதன்யா இனி எல்லாம் உன் கிட்ட கேட்டு தானே செய்யணும் டக்குன்னு போக முடியாது தானே.. என்ன! என்று சரி தானே என இரு புருவமும் உயர்த்தி கேட்டாள். 

இதன்யா இரு புருவமும் சுருக்கி அவளை பார்த்தாள். 

“ஹே அப்படி இல்ல இப்போ தானே நீ சித்தார்த் ரூம் ல இருந்து வெளியே வந்த அதை சொன்னேன் நீ ஒன்னும் டென்ஷன் ஆக வேண்டாம்.!”

இப்போது அவள் இயல்பாக பார்த்து விட்டு நீங்க போங்க மேம் எனக்கு கிளாஸ் க்கு டைம் ஆச்சு என்று சொல்லி வேக வேகமாக திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.

அவள் சென்றதும் உள்ளே சென்ற தாரா, “நான் கூட நீ ரொம்ப கவலையா இருப்ப அப்டின்னு உன்னை பார்க்க வந்தால் இங்கே நீ அவ கூட பசை போல் ஒட்டி நின்று கொண்டு இருக்க எப்படி டா அதுக்குள்ள அவ கன்வின்ஸ் ஆகிட்டாளா!”

சித் லேப் டாப் ல இருந்து அவன் கண்களை அகற்றாமல் அந்த கரடி நீ தானா!..

என்ன டா சொல்ற? ..

அவ கூட நான் இருக்கும் போது போன் பண்ணி என்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ண? இந்த சிவ பூஜை கரடி!. 

ஹே ஓவரா பேசுற சரி இல்ல டா.. சரி சரி ஐ ம் ஜஸ்ட் கிட்டிங் வா வந்து உட்காரு எதுவும் சாப்பிடுகிறாயா..

தாரா, சித் நான் உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா…

ம்ம்…

நீ உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா எப்படி டா உனக்கு இப்போ இருக்கு..

சித்தார்த், ஒரு கசந்த புன்னகை சிந்தி “ஒருத்தன் ஒரு தடவை ஏமாற்றத்தை ஃபேஸ் பண்ணும் போது தான் அது வலிக்கும் அதன் பின் அது பழகி விடும் தாரா…… இன்பேக்ட் எனக்கு லீனா மேல் கோபம் இல்லை வருத்தம் தான் அவ பிரபலம் ஆக என்னோட காதலும் லைஃப்புமா கிடைச்சது. அவ என் கிட்ட கேட்டு இருந்தால் நான் எல்லாமே அவளுக்காக ஒரு நல்ல துணையா செய்து இருப்பேன்.”

தாரா அவன் சொல்வதை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தாள். 

சித், “ஆனால் என்னோட எல்லா பலவீனமும் தெரிந்து கொண்டு என்னை மொத்தமும் அவளின் பொய்யான அன்புக்கு அடிமை ஆக்கி என்னை ஏமாற்றி இருக்கிறாள். இதில் தவறு அவள் மேல் இல்லை. 

இப்போ என்ன சொல்ல வர? 

சித், அவ அட்டென்ஷன் சீக்கர் (attention seeker) எல்லார் கவனமும் நம் மேல் இருக்கணும் அப்டின்ற டிசார்டர் அவளுக்கு இருக்கு

தாரா, என்ன சொல்ற நீ! 

ம்ம் என் மேல் தான் தவறு என்று சொல்லி அந்த இருக்கையில் பின்னால் ஸயிந்து மேலே வெறித்து பார்த்தான்.

தாரா, ஸாரி சித்து… அவன் எதுவும் சொல்ல வில்லை.

தாரா, இன்னிக்கி வெதர் நல்லா இருக்கு கொஞ்சம் ட்ரிங்க் பண்ணலாமா குரு கூட இங்கே தான் இருக்கிறான். நீ ஒரு வார்த்தை சொல்லு அவனை வர சொல்றேன் அப்படியே கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்.

சித், ஹே என்ன விஷயம் முதலில் அதை சொல்லு லூசு!..

தாரா சிரித்து கொண்டே நான் ஒரு ரெண்டு தமிழ் படத்துல கமிட் ஆகி இருக்கேன்.

சித் இப்போது சந்தோஷமாக மம் சூப்பர் யாரு ஹீரோ?  என்று கேட்க

அவள் ஒன்று புது முகம், இன்னொன்று வளர்ந்து வரும் முன்னணி நடிகர் என்று சொல்லி பொதுவாக சில விஷயங்கள் பேசினர்.

சித், தாரா இன்னிக்கு வேண்டாம் நான் நல்லா ஸ்லீப் பண்ணி ரெண்டு வாரம் ஆகுது அதனால் இந்த வீக் என்ட் உனக்கு ஓகே வா..

தாரா, மம் ஓகே இன்னிக்கு உனக்கு நல்லா தூக்கம் வரும் அவ வேற கன்வின்ஸ் ஆயிட்டா…

சித்தார்த் , அவளா சான்சே இல்ல நான் அவ கிட்ட கேட்டேன் ஒரு கொஞ்சம் நேரம் மட்டும் உன்னை கட்டி கொள்கிறேன்னு. எனக்கே ஆச்சர்யம் தான் எப்பவும் சண்டை போட்டு கிட்டு தான் இருப்பா என்னை எதிர்ப்பது மட்டும் தான் அவளுக்கு வேலை  ஆனால் என்ன பண்ண அது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம் ஒவ்வொரு நாளும் என் கண்ணுக்கு புதுசா தெரியுறா தாரா..

தொடரும்.. 

EPI 45

சித், ஒவ்வொரு நாளும் புதுசா தெரியிறா!.. 

தாரா, மம் அவ கொஞ்சம் மாறி விட்டாள் டா.. தனியா சிரித்து கொண்டே வந்தாள். இனி சீக்கிரம் அவ உனக்கு சொந்தம் ஆகி விடுவாள் அடுத்து ஒரே லவ்  தான்!

சித்தார்த் அவள் பேசியதை மறுக்கும் பொருட்டு “அப்படி மட்டும் நீ நினைக்க வேண்டாம் அவ எப்போ மாறுவா அப்டின்னு கெஸ் பண்ணவே முடியாது!  இந்த கேர்ல்ஸ் எல்லாம் கொஞ்சம் இன்ஃபினட் திங்க்ல இருப்பாங்க!  மனசுல நல்லதே நினைக்க மாட்டார்கள்! எப்பவும் டிரான்ஸ்சிசன் ஸ்டேட்ல தான் இருக்கும்!”

தாரா, என்னடா சித்து maths, chemistry, physics மூணும் கலந்து சொல்ற.. 

சித், இந்த  மேத்ஸ், சயின்ஸ் கூட ஈஸி தாரா ஆனால் அவள் சயின்ஸ் இல்ல அவள் சைக்காலஜி.. 

தாரா, நானும் பொன்னு தான் டா

சித், ம்ம் உன்னோட பார்ட்னர் வந்தால் அவன் கிட்ட கேட்டால் தெரியும்.

ம்ம் அதை அப்புறம் பார்க்கலாம்..

சித், நீ விட்டால் நாங்க விட்டு விடுவோமா நானும் குருவும் ஒரு நல்ல பையனா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்.

தாரா, இது சீட்டிங் நீ லவ் பண்ணி லிட்டில் ஹார்ட கல்யாணம் பண்ணிப்ப நான் மட்டும் நீங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணனுமா?..

ம்ம்ம் ஆமா எனக்கு நீயும் ரோஷினியும் ஒன்னு தான் எனக்கு திருப்தியா இருந்ததால் மட்டும் தான் நாம் குரு கிட்ட சொல்லுவேன்.

தாரா, டேய் போடா அதெல்லாம் நடக்காது. என்னோட பிரின்ஸ் எங்கு இருக்கிறானோ? 

தாராவின் நிஜநாயகன் வர போகிறான். அவன் வந்த பின் இவர்கள் நட்பு ஒற்றுமையில் இருக்குமா என்பது பின் வரும் எபிசோட்களில் பார்ப்போம்.

அதன் பின் சித்தார்த், தாரா இருவரும் வீட்டுக்கு கிளம்பினர். சித் நேராக அவன் படுக்கை அறை சென்று சதீஸ் கிட்ட அவன் முடிக்க வேண்டிய மீதி வேலைகள் அனைத்தும் சொல்லி விட்டு உறங்க ஆரம்பித்தான். இரவு சாப்பிட கூட கீழ வர வில்லை.  இரவு மணி 10.30 க்கு எழுந்து வெளியே வந்தான்.

சோம்பல் முரித்து கொண்டே  படிகளில் இறங்கி இரவில் வேலை செய்யும் பணியாட்கள்  இருவர் மட்டும் இருந்தனர்.

சித்தார்த்தை பார்த்து சாப்பிட சொல்ல அப்பொழுது ரோஷினி அறையில் இருந்து பேச்சு சத்தம், சிரிப்பு சத்தம் கேட்க சித் பணியாளிடம் எளிமையாக இரு உணவுகளை சொல்லி விட்டு ரோஷினி அறையை நோக்கி நடந்தான். 

ரோஷினி அறையில் பேச்சு சத்தம் கேட்டதும் உடனே சித்து என்ன என்பதை போல் அவள் அறையை நோக்கி நடந்தான்.

அங்கே சென்றதும் தாரா ஒரு இடத்தில் அமர்ந்து ரெட் ஒயினை ஒரு கோப்பையில் ஊற்றி அதை பருகி சிரித்து கொண்டு இருக்க

அருகில் ரோஷினி ஒரு நோட்டில் பேனாவை வைத்து கொண்டு எதோ எழுதி கொண்டு இருந்தாள். 

இதன்யா அந்த இரவு உடையில் அங்கு இருந்த எழுது பலகையில் அந்த பேனாவில் எழுதி விட்டு குச்சியை வைத்து ம்ம் எழுதியாச்சா… 

தாரா, ஹே டெவில் இன்னும் எழுதல அவ அதோட ஒரே இடத்தில் அப்படியே இருக்கா டி… என்று கூறினாள். 

ரோஷினி,தனு இல்ல டி இதோ நான் எழுதி விட்டேன் இந்த தாரா போதயில் உளருகுறாள்..

இதன்யா தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே என்ன.. மேம் சொல்றது உண்மையா? இப்படி இருந்தா எனக்கு உங்களுக்கு சொல்லி கொடுத்து வயசு ஆகிடும். நீங்க வேற ஒருத்தரை சொல்லி கொடுக்க ரெடி பண்ணிக்கோங்க..

ஹே நெனு சம்பெஸ்தானு..

இதன்யா, ஹான் என்ன சொல்றீங்க..

தாரா, அவ உன்னை கொன்றுவாலாம்..

ரோஷினி, பிளீஸ் டி தனு இந்த எழுத்து எல்லாம் பார்க்க படிக்க கொஞ்சம் விசித்திரமாக இருக்கு..

இதன்யா, ரிஷி அண்ணா வேணும் தானே..

ஆமா நீங்க மட்டும் இப்போ ரிஷி அண்ணா கிட்ட படிக்க போயிருந்திங்க என்ன நடக்கும் தெரியுமா…

தாரா, என்ன ஆகும்..

இதன்யா, அண்ணா கிட்ட அடி  வாங்கி இருப்பீங்க..

தாரா சிரித்து கொண்டே இல்ல லிட்டில் ஹார்ட் ரிஷி அவளை கிஸ் அடிச்சு இருப்பான் இந்நேரம் ரொமான்ஸ் மோட்க்கு போயிருப்பான்க..

தாரா “லிட்டில் ஹார்ட்” என்று சொல்லவும்

இதன்யா அதை கேட்டு திடுக்கிட்டு பார்த்தாள்.

ரோஷினி, ஹே அது என்ன “லிட்டில் ஹார்ட்” யாரை சொன்ன..

தாரா, அப்படி தானே அவன் கூப்பிடுவான் சரி தானே இதன்யா..

சரியாக சித்து  இதற்கு மேல் விட்டால் தாரா உளறி விடுவாள் என்று உடனே அங்கு வந்தவன்.

இங்கே என்ன நடக்குது…

ரோஷினி, அண்ணா எனக்கு தனு தமிழ் சொல்லி  தருகிறாள்.

இதன்யா சித்துவை பார்த்து முறைக்க 

அவன், இவளா?

அண்ணா என்ன மரியாதை இல்லாமல் பேசுற…

பின்ன எப்படி கூப்பிட சொல்ற, அவ என்னோட ஸ்டாப் நான் எப்படி வெனுநாலும் கூப்பிடுவேன்.

தாரா, அதை நான் சொல்றேன் சித்து நீ அவளை என்று சொல்ல வர

சித், தாரா அமிர்தா ஆன்டி  வந்து இருக்கிரார்கள். இதை கேட்டதும் வேக வேகமாக அவள் கதவின் அருகே சென்றாள்.

ரோஷினி, அண்ணா நிஜமா வந்து இருக்கிறாரா..

சித், நீ படிச்சது போதும் அவ நாளைக்கு ஸ்கூல்க்கு போகனும்…  போய் தூங்கு..  தாரா வேக வேகமாக தன் அம்மா வந்து இருக்கிறார் என்று சொன்னதும் உடனே அவள் அறைக்கு போய் கதவை பூட்டி கொண்டாள்.

இங்கே ரோஷினி , சரி சரி ஓவரா திட்டாத நான் தூங்குகிறேன் என்று சொல்ல இதன்யா அவள் அறைக்கு செல்ல வெளியே வந்தாள்.

சித் ரோஷினி அறையில் இருந்து வெளியே வந்து அவளை திரும்பி பார்க்க அவள் அவனை முறைத்து கொண்டு நின்று இருந்தாள்.

சித் அவளை கண்டு கொள்ளாமல் சாப்பிடும் இடம் நோக்கி சென்றான்.

சித் சொன்ன சாப்பாடு தயார் செய்து மேஜையில் இருக்க அவன் அவள் அங்கு நின்று கொண்டு இருப்பதை பார்த்து  விட்டு அமர்ந்தான்.

அவன் கிட்சென்க்கு அங்கு உள்ள போனில் எனக்கு சர்வ் பண்ண வாங்க என்று அவளை பார்த்து கொண்டே சொல்லி வைத்து விட்டு காத்திருந்தான். 

இதன்யா மனதில் “நம்மை பற்றி  இப்படி அந்த தாரா மேம் கிட்ட சொல்லி வைத்து இருக்கிறானே! இது எங்கே போய் முடியுமோ அவங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்குமா.!”

அவன் பேசுவதை கேட்டவள் உடனே அவனிடம் பேச வந்தாள். “உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!”

இதன்யா,  நீங்க..   என்று மீண்டும்  சொல்ல வர

சித், ஹே ரொம்ப பசிக்குது  பிளீஸ் உன்னோட கோபத்தை நான் சாப்பிட்டு முடித்ததும் வைத்து கொள்ளலாம். உனக்கு தூக்கம் வந்தால் நீ போய் தூங்கு.. 

சரி நான் வெயிட் பன்றேன்…

சித் சொன்னது போலவே ஒரு பணியாளர் வந்தார். 

அவர் அவனுக்கு உணவுகளை பறிமார

அவன் மிஸ்க்கு சர்வ் பண்ணுக..

இதன்யா, நான் சாப்பிட்டு விட்டேன்

சித், எனக்கு வயிறு வலிக்கும். நம்ப காலையில் பேசலாம் இப்போ போய் தூங்கு ….

இதன்யா, இல்ல எனக்கு இப்போவே பேசணும்.. அப்போ என்று அவன் நாற்காலியை காட்டிட அவள் வேறு வழி இல்லாமல் அமர்ந்தாள்.

சித் நினைத்தது இது தான் அவன் நடத்தி காட்டி விட்டான். அவள் பெயருக்கு ஒரு வாய் எடுத்து சாப்பிட்டாள். இதுல ஒரு டேஸ்டும் இல்ல எப்படி சாப்பிடுகிறான்? என்று அவள் மனதில் நினைத்து கொண்டாள்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் எழுந்து அவன் அறைக்கு செல்ல.. “உங்க கிட்ட பேசணும் ,அப்டின்னு சொல்லி இருந்தேனே!”

சித்தார்த், சொல்லுங்க மிஸ்.. 

இதன்யா, தாரா மேம்..

என்னோட பேப்க்கு என்னாச்சி..

இதன்யா, அவள் தலையை பிடித்து கொண்டே உங்க நடிப்பை எல்லாம் படத்தில் நடிங்க என் கிட்ட வேண்டாம்.

சித், நீ சொல்றது எனக்கு புரியல..

இதன்யா, உங்களை பற்றி எனக்கு தெரியும் என் கிட்ட நடிக்க வேண்டாம்..

இதை கேட்டதும் அடுத்த நொடி சித் இதன்யா அருகில் வந்து அவளை அணைத்து கொண்டு கண்ணத்தில் ஒரு முத்தமும் இதழில் ஒரு முத்தம் ஒற்றி எடுத்தான். 

இதை சற்றும் எதிர்பாராத இதன்யா திகைத்து நின்றாள். கண்ணை மூடி திறக்கும் நொடியில் அனைத்தும் நடந்து விட்டது.

உடனே அவள் அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய..

சித், அவள் காதுகளை வருடி விட்டு கொண்டே என்னாச்சு டி ?

இதன்யா, தள்ளி போங்க என்ன பண்றீங்க?..

ஹே நீ தானே சொன்ன?..

என்ன சொன்னேன், முதலில் என்னை விடுங்க.. 

சித், நீ சீட் பண்ற.. நான் என்ன பண்ணேன் என்று அவள் மூக்கை விடைத்து கொண்டு பேசிட

சித், நடிக்க வேண்டாம் அப்டின்னு சொன்ன அதானால என்னோட ரியல உன் கிட்ட வெளி படுத்துகிறேன்.

என்ன!  ரியலா என்று அவள் திடிக்கிட்டாள்.

சித், மம் இவளோ நேரம் உன் கிட்ட என்னை கட்டு படுத்தி கொண்டு பேசிட்டு இருந்தேன். அது தான் இப்போ நீயே சொள்ளிட்டியே  நடிக்க தேவை இல்லை என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவள் அடுத்து பேச நேரம் கொடுக்காமல் அவளின் இதழை சிறை செய்தான்.

அந்த உணவின் சுவை அவன் இதழில் இருந்து கொஞ்சம் ஒட்டி இருந்தது இப்போது இவளுக்கு சுவை இல்லாத உணவு அவன் இதழில் இருந்து வந்ததால் என்னவோ சுவையாக இருந்தது.

அவள் ஒரு நிமிடம் தன்னிலை மறந்தாள். கைகளை இறுக்கி கொண்டாள்.

“லிட்டில் ஹார்ட் ஐ மிஸ் யூ சோ மச் டி” என்று அவளை மூச்சு வாங்கிட விலகியவன். மீண்டும் அவளின் இதழை சிறை செய்தான்.

அவன் கைகள் அவளின் அங்கங்கள் இரண்டும் அவன் மேல் உரசிட அவளின் இடையை அழுத்தமாக பற்றினான்.

அவன் வழக்கம் போல் அனைத்து வகையான முத்த சுவையும் அவளின் இதழில் சுவைத்து விட்டு அவளை விட அவள் ஒரு நிமிடம் தள்ளாடி போனாள்.

சித் அவளை பார்த்து சிரித்து கொண்டே நின்றான். 

அப்போது தான்  தன்னிலை வந்த இதன்யா யூ ராஸ்கல் என்று சொல்லி அவனை அடிக்க கை ஓங்கினாள். 

சித் அவளின் அடிக்க ஓங்கிய கைகளை பிடித்து ”  ஹே இந்த கன்னத்தில் ஸ்லப் பண்ணு என்று சொல்ல அவள் அவனை மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க முறைத்து கொண்டே அப்படியே அவனை கண்ட படி திட்டி விட்டு வேக வேகமாக அவள் அறையை நோக்கி சென்று கதவை அடைத்து கொண்டாள். 

இங்கே அனைத்து விளம்பரபடத்தையும் அவனே நேரில் சென்று மிகவும் கலை நயத்துடன் துல்லியமாக நவீன் குமார் எடுத்து முடித்தான். ஏன் என்றால் அவன் மிகவும் சந்தோசமாக இருக்கிறான். சித்தார்த் – மெலினா செய்திகள் அவனுக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்தது. 

அனைவரும் சித்தார்த்தை ராசி இல்லாதவன் தோற்று போனவன் என பேசுவது காதில் தேன் வந்து பாயுவது போல் இருந்தது. அதே உற்சாகத்தில் வெற்றி கரமாக அனைத்து வேலையும் துடிப்புடன் செய்தான். 

விளம்பர வேலையை முடித்து விட்டு நவீன் அவனது வீட்டுக்கு விரைந்தான். மோகன் அவன் வருவதற்காகவே காத்து கொண்டு இருந்தான். 

மோகன்! 

பாஸ் உங்களுக்கு தான் வெயிட் பண்ணேன். 

நவீன் புன்னகையுடன் லக்கி கேர்ள் கண்டு பிடித்து விட்டாயா? 

ஆல் மோஸ்ட் பாஸ் நீங்க பார்த்து கன்பார்ம் பண்ணுங்க!. 

வெறி குட் ஆல் செட் என அவனது டையை கொஞ்சம் இலக செய்து கொண்டே சோபாவில அமர்ந்தான். 

மோகன் அவன் சேகரித்த மீதமிருந்த பெண்களின் படங்களை நீட்டினான். பாஸ் இவங்க காலேஜ் படிக்கிறாங்க!

நவீன், மோகன் அவளுக்கு முடி நீளமா இருக்கும்.. 

“இவங்களுக்கு கூட நீளமா இருக்கு பாஸ்!”என இரண்டு போட்டோ காட்டினான். 

பாஸ் இவங்க நேம் “சைதன்யா”அண்ட் இவங்க பேரு வெறும்” தன்யா”அண்ட் இவெங்க பேரு “இதன்யா”என மூவர் படங்களையும் காட்டினான். 

நவீன் மூன்று படங்களையும் உற்று பார்த்தான். இதன்யா கண்ணாடியை போட்டு கொண்டு புடவையில் இருந்தாள். பாஸ் போட் சைஸ் போட்டோ அதே போல் தன்யா சுடிதாரில் இருந்தாள். சைதன்யா ஜீன் டாப்ஸ்ல இருந்தாள். 

மோகன், பாஸ் இவங்க மூணு பேரும் நம்ம காம்ப்ளக்ஸ் ரவுண்டானாவில் தான் இருக்காங்க சோ பாசிப்ள் அதிகம் பாஸ்!  

நவீன் அதில் இருந்து இதன்யாவின் புகை படத்தை எடுத்து பார்த்தான். “இவள் இவளாக தான் இருக்க வேணும் என் மனசு சொல்லுது”

மோகன், எப்டி பாஸ் சோடா புட்டி கூடவே கொண்டையெல்லலாம் போட்டு இருக்காங்க.. ஆனால் இங்கே பாருங்க தன்யா சுடியில் பின்னலிட்டு சும்மா ஜம்முனு இருக்காங்க அதை விட சைதன்யா மேம் ஜீன்ல இருக்காங்க.. 

நவீன் ஒரு பெரு மூச்சை விட்டு “மோகன் போதும் என் லக்கி சார்ம் இவள் தான்!”

மோகன், எப்டி கண்டு பிடிப்பீங்க? 

நவீன், நூறு சதவீதம் இதன்யா தான் அதில் எனக்கு சந்தேகம் இல்ல பட் உனக்கு சந்தேகமா இருந்தால் நம்ம காம்ப்ளக்ஸ்ல ஷோ ரூம் வைத்து இருக்கும் ஓணர் கிட்ட போய் இப்போவே கேட்டு வா! 

மோகன், பாஸ் இப்போவா! 

ம்ம் இப்போ தான்! 

அவர் கடையை மூடி இருப்பார்!. 

“சோ வாட் அவங்க வீட்டுக்கு போய் கேட்டு விட்டு வா!”

பாஸ்!

ம்ம் சொன்னதை செய் என உருமினான். 

மோகன் வேறு வழி இல்லாமல் மூன்று படங்களையும் எடுத்து கொண்டு செல்ல.. 

நவீன், மோகன் நான் சொன்னது புரியலயா! லக்கி சார்ம் போட்டோ மட்டும் எடுத்து கொண்டு போ! என அவன் உறுமினான். 

ஓகே பாஸ் என மோகன் நொந்து கொண்டு இந்த நேரத்தில் கோட்டான், பூனை நரி எல்லாம் கிளம்பும் நேரமா பார்த்து நம்மை அனுப்பி வைக்கிறார் இவரை என்ன செய்வது? ஒன்னும் செய்ய முடியாது என நினைத்து கொண்டே சென்றான். 

அவர் வீட்டுக்கு சென்று கதவை தட்டினான். இந்த நடு சாமத்தில் யார் வந்து இருப்பது என திடுக்கிட்டு கதவை திறந்தார். 

சொல்லுங்க என்ன வேணும்? 

சார் நான் காம்ப்ளக்ஸ் ஓணருடைய P.A என கூறினான். 

வாங்க வாங்க! என்ன சார் ஆச்சு இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க? 

மோகன், ஒன்னும் இல்ல அன்னிக்கு கடையில் தன்யா அப்டின்னு ஒரு பொண்ணை பற்றி பேசி கொண்டு இருந்தோமே நியாபகம் இருக்கா சார்!. 

அந்த மனிதர் மோகனை மேலும் கீழும் பார்த்து விட்டு சொல்லுங்க அதுக்கு இப்போ என்ன சார்? 

மோகன், “அவமானம் உனக்கு தேவையாடா! என நொந்து கொண்டே சார் அவங்க இந்த பொண்ணா! கொஞ்சம் பார்த்து சொல்லுங்க இவங்க எங்களுக்கு ரொம்ப வேண்ட பட்டவர்கள் அதை விட எங்க பாஸ்சுக்கு ரொம்ப முக்கியம்.”

அப்படியா என சொல்லி கொண்டே அவனை உள்ளே அழைத்தார்.

“இட்ஸ் ஓகே சார் நீங்க இங்கே இருந்தே சொல்லுங்க இப்போ கிளம்ப வேணும்.”

அவர் லைட் போட்டு அந்த புகை படத்தை பார்த்து கொண்டே ஹான் இதே பொண்ணு தான் இவள் பேரு தன்யா இதன்யா! 

மோகன் தன் முதலாலியின் புத்தி கூர்மைய நினைத்து வியந்து போனான். ” எபடி பாஸ் இவ்வளவு சார்ப்பா இருக்காரு உண்மையாவே கிரேட் அவ்ளோ விரும்புகிறார் போலயே!”

இதையெல்லாம் நினைத்தவன் மீண்டும் தன்னை மீட்டு கொண்டு” ஓகே நாளைக்கு ஷாப் க்கு வந்திடுங்க” என சொல்லி விட்டு நவீனை பார்க்க கிளம்பினான். 

நவீன் கூலாக அமர்ந்து கொண்டு நொடிக்கு நூறு முறை அவளை நினைத்து இங்கு விறைத்து கொண்டு இருந்தான். முகத்தில் அவ்வளவு புன்னகை நெஞ்சம் எல்லாம் எது எதோ செய்ய ஓட்ட பந்தயத்தில் ஓடியது போல் வேகமாக துடித்தது. இரவு வேளை அதை விட இன்னும் விடிய சில மணி நிமிடங்கள் மட்டுமே உள்ளது. அவனின் ஒவ்வொரு செல்லும் அவளுக்காக ஏங்கியது. 

நவீன்  மனதை அலங்கரிக்க வந்தவள் கூடவே அவனுடைய வீட்டை குடும்பத்தை இன்னும் சொல்ல போனால் அவன் அறையை படுக்கையை அவனுடன் பகிர்ந்து கொள்ள வந்தவள் என்று கூறலாம். 

மோகன் பாஸ் என கலவரத்துடன் வந்தான். 

நவீன் , ம்ம்!. 

“நீங்க நீங்க சொன்னது சரி பாஸ் அவங்க தான் நீங்க பார்த்த பொண்ணு!”என மூச்சு வாங்கி கொண்டே கூறினான். 

நவீன், “நான் தான் சொன்னேனே! எனக்கு தெரியும் மோகன்” அவள் என்னோட லக்கி சார்ம் சோ அடுத்த கட்ட வேலையாக அவளை சீக்கிரம் கண்டு பிடி கூடிய சீக்கிரத்தில் அவளை எனக்கு சொந்தம் ஆக்கி கொள்ள வேண்டும். 

மோகன் சரி என சென்றான். ஆனால் நவீனுக்கு தெரிய வில்லை. இதன்யா ஏற்கனவே சித்தார்த் கிட்ட சென்று அவனுக்கு விரைவில் சொந்தமாக போகிறாள். அதிஷ்டம் கெட்டவன் என நவீன் மட்டும் இல்லாமல்  அனைவரும் சித்தார்த்தை தூற்ற அதனை மாற்றி அமைக்க அவனுக்கு உயிருக்கு உயிராக மாற போகிறாள். அதை நவீன் எப்படி எதிர் கொள்ள போகிறான். 

பார்ப்போம்!. 

இதய ராணி என்ன செய்கிறாள்? 

இங்கே வேக வேகமாக அவள் அறைக்கு வந்த இதன்யாவுக்கு முதன் முதலாக வெட்க சிரிப்பு வந்தது.

அப்படியே படுக்கையில் படுத்து கொண்டாள். எங்கே எப்படி சென்றாலும் நம்மை இழுத்து ஒட்டி கொள்கிறாரே?  என்று அவள் கைகள் அவன் தொட்ட இடங்களுக்கு எல்லாம்  ஒரு நிமிடம் சென்றது. இதயம் வேக வேகமாக துடித்தது. உதட்டில் வந்து நின்றாள்.

“லிட்டில் ஹார்ட்”அப்டின்னு சொல்லும் போதே என்னோட இதயம் குதித்து அவரிடம் சென்று விடுவது போல் எனக்கு இருக்கு ஆனால் இது நடக்குமா? நான் அவருக்கு அவருடைய அந்தஸ்த்துக்கு  தகுதியானவள் இல்லை?  என்று மூளை சொன்னாலும் மனம் சித்தார்த்தை தான் வட்டம் அடித்தது.

“வேண்டாம் இதன்யா இது உனக்கு வேண்டாம் இது வெறும் ஆக்சிடோசின், அண்ட் டோபமைன் இந்த ரெண்டு ஹார்மோன்ஸ் வேலை..  சோ இதில் விழுந்து விடாதே இது கிணறு இல்ல ஆள் துளை கிணறு வேண்டாம்.”

“இதன்யா அவரை பற்றி நினைக்காதே முதலில் வீட்டுக்கு போய் அந்த பணம் நந்து வேலை இது எல்லாம் சரியா அப்டின்னு செக் பண்ணிட்டு வா.!”

அவர் தான் எல்லாம் செய்து இருந்தால் எப்படியும் மொத்த பணத்தையும் எப்படியாவது கொடுத்து விட வேண்டும்.

அதுக்கு அப்புரம் இந்த இடத்தில் இருந்து மொத்தமா போயிடனும் ஆனால் உடனே சென்று விட வேண்டும் மொத்தத்தில் இந்த வீட்டில் தங்கி இருக்க கூடாது. இந்த பள்ளி வேலை வேண்டாம் வேறு வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக மொத்த பணத்தையும் கொடுத்து விட வேண்டும்.

Tet, tnpsc, C tet எதாவது எழுதி பாஸ் பண்ணி பெரிய வேலைக்கு போய் லோன் போட்டு மொத்த கடனையும் அடைக்க வேண்டும். அதுவும் மெரிட்ல ஒன்னும் கவர்மென்ட் ஸ்கூல் அப்படி இல்லன்னா கேந்திர வித்யாலயால வேலைக்கு போகனும் வேலைக்கு போய் தீரணும். 

( ஹே யாரு டி நீ teacher eligibility test எழுதவே state board ல யே எனக்கு எல்லாம் நாக்கு தள்ளுது இவள் என்னடா என்றால் central board tet பற்றி எல்லாம் பேசுகிறாள். இதன்யா நீ ஒழுக்கமா சித்துவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி ஸ்கூல்க்கு ஆள் சேர்க்கும் வழிய பாரு அச்சோ தப்பா சொல்லிட்டேன். சித்து கூட ஸ்கூல் நடத்தும் வேலையை பாரு) 

என்று அவள் மூளை சொல்ல உதடுகளும் தானாக உம் கொட்டியது.ஆனால் அவள் கண்கள் தானாக கலங்கியது. அவனை விட்டு பிரிந்து சென்று விட வேண்டும் என்று சொல்லும் போதே இதயம் கணத்து போனது.

அவள் இங்கு அவனிடம் இருந்து எப்படி பிரிந்து செல்வது என்று யோசித்து கொண்டு இருந்த வேளையில் அங்கே சித்து நீண்ட நாள் கழித்து நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான். 

பிரிவா அவனிடம் இருந்து உனக்கா அது இந்த ஜென்மத்தில் நடக்காது அதையும் மீறி தில்லாலங்கடி வேலை செய்து நீ சென்றால் நீயே அவனை தேடி வரும் பொருட்டு செய்து விடுவான். அதை விட சித்தார்த் உன் மேல் ஓவர் போசசிவ்நஸ் மற்றும் தன்னுடையவள் என்று என்னைக்கோ ஃபிக்ஸ் ஆகி விட்டான் நீ என்ன பண்ண போற இதன்யா? 

தொடரும்… 

EPI 46

அடுத்த நாள் அழகாக விடிந்தது.

இதன்யா அவள் எடுத்த முடிவில் இருந்து மாறாமல் அவன் கிளம்புவதற்கு முன்னே கிளம்பி பூஜாவை பார்க்க ஹாஸ்டல் சென்று விட்டாள்.

பூஜா, ஹே என்னடி இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் க்கு தானே வர போறேன் இப்போ எதுக்கு இங்கே வந்த..

இதன்யா, இல்ல பூஜா எனக்கு அங்கே இருக்க பிடிக்கல சோ அது தான் கிளம்பி உன்னை தேடி வந்து விட்டேன். என்று பேசி கொண்டே அவள் படுக்கயில் சாய்ந்து கொண்டாள்.

அங்கே அன்று ஒரு முறை பேபி சாப் ல  வேலை செய்த போது அவர்கள் கொடுத்த வாசனை திரவியம் சோப்பு அவள் இடத்தில் இருக்க இதன்யாவுக்கு ஒரு விசித்திர யோசனை வந்தது அவள் அந்த வாசனை திரவியத்தை எடுத்து கொஞ்சம் மேலே போட்டு கொண்டாள்.

பூஜா, ஹே என்ன பண்ற இதன்யா.. இல்ல டி இது கொடுத்ததில் இருந்து ஒரு முறை கூட போட்டு பார்க்க வில்லை அது தான் இன்னிக்கு ட்ரை பண்ணேன்.

நீ கொஞ்சம் வித்தியாசமா நடந்து கொள்கிற.. நான் வாசனை திரவியம் போட்டால் என் கிட்ட அதுல ஆல்கஹால் தான் இருக்கு இதை போய் எதுக்கு போடுகிரீங்கள் கேன்சர் வரும் அப்டின்னு பக்கம் பக்கமா கிளாஸ் எடுப்ப இன்னிக்கு என்னடான்னா ஆளை தூக்குற அளவுக்கு போட்டு வர…

இதன்யா, அது அப்படி இல்ல பூஜா குழந்தைகள் பயன் படுத்தும் பொருளில் யாரும் அதிகமான கெமிக்கல்ஸ் யூஸ் பண்ண மாட்டாங்க டி என்று சொல்ல

உடனே பூஜா , ஹே சித்து சார் அன்னிக்கு அந்த இங்கிலீஷ் டீச்சர திட்டியதை நீ மறந்து பொயிட்டியா…

இதன்யா, ஹே போடி இது என் இஷ்டம் திட்டினால் நான் வேலை விட்டு போறேன் எனக்கு அம்மா கூட இருக்கணும் போல் இருக்கு…

இதை கேட்டதும் பூஜா, ஹே லூசு என்னடி ஒரு மாதிரி பேசுற என்ன உனக்கு பீரியட்ஸ்சா மோட் ஸ்விங் ல இருக்கியா.. 

இதன்யா, இல்ல நீ கம்முன்னு வா என்று சொல்லி  அங்கு இருந்து பூஜாவுடன் ஸ்கூல்க்கு சேர்ந்து சென்றனர்.

அவள் வீட்டில் இருந்து சென்றதும் ஒரு பணியாள், சித்தார்த்திடம் வந்து சொல்ல அவன் அவளை கண்கானிக்க ஒரு ஆளை அனுப்பி இருந்தான் அது அவளின் பாதுகாப்புக்கு மட்டுமே சொல்லி இருந்தான்.

இதன்யாவும் பூஜாவும் பள்ளி சென்றனர். இந்த மாதத்தின் இடையில் பள்ளி ஆண்டு விழா வருகிறது அதனால் அதற்காக காலை 9.00 மணிக்கு மீட்டிங் என்று ஏற்கனவே பள்ளியில் சொல்லி இருந்தனர்.

அதே போல் அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடி இருந்தனர்.

சித்தார்த் தன் கருப்பு நிற கோட் ஷூட்டில் கம்பீரமாக தக் தக் என்ற நடையிலும் அந்த  சத்தத்துடன் உள்ளே நுழைந்தான்.

அனைத்து ஆசிரியர்களும் எழுந்து நின்று அவனுக்கு காலை வணக்கம் சொல்லி கொண்டே அமர இதன்யா நின்று கொண்டு மட்டும் இருந்தாலே தவிர கடமைக்கு வணக்கம் சொல்லி அமர்ந்து கொண்டாள்.

அவளை தாண்டி செல்லும் போது ஒரு வாசனை திரவியத்தின் வாசம் அவன் நாசியை துளைக்க இப்போது அவன் முக மாறுதலை இதன்யா எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தாள்.

சித்தார்த் இதன்யா அமர்ந்து இருக்கும் அதே இடத்தில் நிற்க உடனே அந்த மீட்டிங் ஹாலில் இருந்த மொத்த ஆசிரியர் கூட்டமும் இதன்யா மற்றும் சித்தார்த்தை பார்க்க அவன் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் அவளை பார்த்து யூ ஸ்டேண்ட் அப் என்று சொல்ல அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சித், நீங்க தான் என்று சொல்லி வேக வேகமாக அவன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

அனைவர் பார்வையும் இதன்யாவின் மேல் இருக்க அவள் மனதில் இதை தான் எதிர் பார்த்தேன்.என்று நினைத்து கொண்டு இருக்க

சித், அவளை பார்த்து கைகளை உயர்த்தி ஆர் யூ ஹேவ் அ சென்ஸ்? இட்ஸ் நாட் பார்ட்டி டிஸ்கோ ரைட்? யூ இரிட்டேதிங்க் இடியட்… ஆன்சர் மீ…  என்று அவன் சொல்ல இவள் அப்படியே நின்றாள்.

என்ன சப்ஜெக்ட் ஹென்டில் பண்ற..

அவள், கெமி..கெமிஸ்ட்ரி..

மம் சொல்லு ஆவர்த்தன அட்டவணை சொல்லு என்று கேட்க அவள் கட கடவென்று கூறினாள். இதை அவன் எதிர் பார்க்க வில்லை.

பெக் வேர்ட் வா..f தொகுதி தனிமத்தில் இருந்து பின் வரிசையில் வந்தாள். HCl ஏன் ஸ்ட்ராங் ஆசிட் சொல்லு… எது ரொம்ப ஸ்ட்ராங் HCl ஆ? H2so4 ஆ? என்று அவன் கேட்க திரு திரு வென முழித்தாள்.

எலக்ட்ரோ நேகட்டிவிட்டீ ஆடர்? சொல்லு… அவள் பதில் சொல்ல வருவதற்குள் ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரி? சொல்லு..

இதன்யா,E= என்று சொல்ல வருவதற்குள் அடுத்து வாட் ஸ் லூயிஸ் ஆசிட்?
அன்சர் மீ யூ கிரேசி… அண்சர் மீ என்று அவன் கத்திட அருகில் இருந்த  அனைவரும் இதன்யாவை பாவமாக பார்க்க அவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

இதுக்கு எல்லாம் அன்சார் பண்ணு டக் டக்குண்ணு சொல்லணும் நீயே இப்படி தத்தியா இருந்தா நீ கிளாஸ் எடுக்கும் அந்த ஸ்டூடண்ஸ் யாருக்கும் ஒன்னும் தெரியாது போல..  நீயெல்லாம் நல்லா மேக் அப் பண்ணிட்டு இருக்க  மட்டும் தான் லாயக்கு
அவள் அழுது கொண்டே இருக்க..

  சித், ஹே நீ எதுக்கு இங்கே வந்த போய் கின்டர் கார்டன் சேர்ந்து கொள்,உன்னால் எனக்கு டைம் வேஸ்ட்., உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா! 

இதன்யா, நான் வேலையை விட்டு போகிறேன்!


சித், ஓ உனக்கு ரோஷம் வேற வருதா.. டிசிப்ளின் துளி கூட இல்லை உனக்கு கொஞ்சம் கூட மனர்ஸ் இல்ல..
அவள் அமைதியாக இருக்க.. அன்சர் பண்ணு…

பூஜா, ஹே அவர் வந்து விட்டார்! இதன்யா சித்தார்த் சார் வந்துட்டாரு என்ன டி பண்ற? என உழுக்கினாள். 

சுய நினைவுக்கு வந்த இதன்யாக்கு இப்பொழுது தான் எல்லாம் புரிந்தது. அப்போ இவ்வளவு நேரமும் பாரதி ராஜா படம் போல கனவுக்குள் போயிட்டேன் போலயே அய்யோ இப்போ கனவு கண்டு இருக்கும் நேரமா இது அவன் கிட்ட இருந்து ரிவெஞ் வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகும் நேரம்  அவள் கண்களைத் தேய்த்து கொண்டு பார்த்தாள்.

அனைவரும் அவனுக்கு எழுந்து வணக்கம் சொல்லி கொண்டு இருந்தனர்.

அப்போ இது கனவா!..பூஜா,  என்ன கனவா அங்கே பாரு டி இப்போது தான் உள்ளே வருகிறார்.. என்று சொல்ல அவள் கனவில் தோன்றியது. போலவே அந்த கருப்பு நிற கோட் ஷீட்டில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டு இருந்தான்.

அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் சொல்லி அமர இதன்யாவின் அருகில் வர அவளும் அதே போல் எழுந்து கடமைக்கு வணக்கம் சொல்லி அமர உடனே அவனுக்கு அந்த வாசனை திரவியம் வாசம் மூக்கை துளைத்தது.

இதன்யா நினைத்தது போலவே அவன் முகம் மாறிட அது அவளிடம் இருந்து தான் வருகிறது என்று அவளின் முகத்தில் உள்ள எதிர்பார்ப்பே சொன்னது. 

அவள் மனதில் அச்சோ இதன்யா வெறி குட் அவன் முகம் மாறுது இப்போ உன்னை திட்ட போறான் நீ எஸ்கெப் ஆக போறா”  முருகா !வேல் முருகா!.. ஓம் முருகா ஓம் முருகா முத்தமிழ் இறைவா வடிவேலா!”

சித் அவன் கண்களை கூர்மையாக்கி அவளை பார்த்து யூ ஸ்டேண்ட் அப்.. என்று சொல்லிட அந்த அறையில் இருந்த அனைவர் பார்வையும் இதன்யாவின் மேல் இருந்தது. 

சித் அவன் இருக்கைக்கு போய் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு அந்த அறையில் உள்ள அனைவரையும் பார்வையில்  ஒரு நோட்டம் விட்டான். முகத்தில் அனைவருக்கும் வியர்வை வடிந்தது.

இதன்யா எந்த ஒரு கவலையும் இல்லாமல் நின்றாள்.வாடா வாடா சீக்கிரம் திட்டு டா!  பகல் கனவு பலிக்காது அப்டின்னு யாரு சொன்னது இப்போ நான் கண்ட பகல் கனவு பலிக்க போகுது இனி இங்கே நான் வேலை செய்ய தேவையே இல்ல சீக்கிரம் ஆரம்பிங்க நான் என் வீட்டுக்கு போகனும் என்று மன கணக்கு போட்டது.

அங்கு இருக்கும் அனைவரும் அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ராதா, என்னாச்சி பூஜா..

இல்ல மிஸ் அவ கிட்ட நான் அப்போவே சொன்னேன் கொஞ்சம் பிரிஸ்க்கா பெர்ஃப்யூம் போட்டு இருக்கா அது சாருக்கு தெரிந்து போச்சு…

போச்சு போச்சு அவர் வார்த்தை ஒண்ணு ஒன்னும் கத்தி மாதிரி இருக்கும் இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுது…

சித், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருக்க.. அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் அங்கு இருந்த அனைவரும் இதன்யாவின் மேல் பரிதாப பட்டனர்..

இதன்யா, சார் எதுக்கு கூப்பிட்டீர்கள் என்று கேட்டாள். 

சித், இப்போது பேசினான்… அவன் பார்வையை கடுமையாக வைத்து நான் எதுக்கு கூப்பிட்டேன் அப்டின்னு உங்களுக்கு தெரியாதா? என்ன?  

இதன்யா புரியாமல் நின்றாள். 

               *******

நவீன் வழக்கம் போல்  அவனுடைய காலை பணிகளை ஆரம்பிக்க சென்றான். 

மோகன் ஒரு வித பதட்டத்துடன் நவீனுடய அறைக்கு வந்தான்.”RG கன்ஸ்ட்ரக்சன்ஸ்” மெனேஜிங் டைரக்டர் என தங்க நிற எழுத்துக்கள் மின்னி கொண்டு இருந்தது. 

பாஸ்!.. 

சொல்லு!  என புதிதாக மிகப்பெரிய பொருட் செலவில் இன்னும் வெளியில் கூடிய சீக்கிரம் அறிவிக்கப்படும் ஒரிசா மாநிலத்தில் பரம்பூரில் ஒரு மிகப்பெரிய தீம் பார்க் கூடவே ஸாப்பிங் காம்ப்லஸ் அதற்கான விவரம் மற்றும் ப்ளூ பிரின்ட் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருந்தான். 

மோகன் அவனுடைய  வேலையில் தொந்தரவு செய்ய கூடாது என அமைதியாக நின்று கொண்டு அப்புறம் வருகிறேன் என வெளியே செல்ல எத்தணித்தான். 

நவீன், வெயிட்! என்ன விஷயம் சொல்லிட்டு போ!. 

பாஸ் இது அவ் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல.. 

சொன்னால் தானே தெரியும் முதலில் விஷயம் என்னன்னு சொல்லு!. 

பாஸ் அது வந்து!. 

“சீக்கிரம்”என புருவம் சுறுக்கினான். 

மோகன், பாஸ் இதன்யா மேடம்!. 

நவீன், “சொல்லி!” என கர்ஜனை செய்தான். 

“பாஸ் இதன்யா மேடம் சித்தார்த் சார் காலேஜ் ல தான் படிக்கிறாங்க!”

நவீன், அவ்ளோ தான நான் கூட கொஞ்சம் பயந்து விட்டேன். 

மோகன், பாஸ் விஷயம் இன்னும் இருக்கு.. 

என்ன? 

“நம்ம ஆளுங்க மேல் போலீஸ் கம்பிளைன்ட் பண்ணது இதன்யா மேம்!” 

நவீன், அது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல மோகன் நீ ஃப்ரீயா விடு கூடிய சீக்கிரத்தில் இங்கே பக்கத்தில் ஒரு காலேஜ் விலைக்கு வாங்கி அவளை அதில் சேர வைத்து விடலாம். 

மோகன், பாஸ்!  என தயங்கி கொண்டே அவன் முன் சில படங்களை நீட்டினான். 

அதை பார்த்த நவீன் கண்கள் சிவந்தது. 

இங்கே சித்தார்த் அவளை நிற்க சொல்லி விட்டு  அவனுடைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

அவள் சார் எதுக்கு கூப்பிட்டார்கள்!

சித், உங்களுக்கு தெரியாதா.. என்று கேட்க

அவள் அமைதியாக நின்று யோசித்து விட்டு எனக்கு தெரியல சார்…

சித் அந்த மீட்டிங் ஹாலில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு” உங்க எல்லாரையும் நான் எதுக்கு இங்கே வர சொன்னேன்?”

அதில் ஒரு டீச்சர் “ஸ்கூல் ஆனிவல் டே பற்றி டிஸ்கஸ் பண்ண சார்!”

சித்,மம் குட் என்று அவன் பார்வை இதன்யாவின் மீது விழுந்தது.

“சோ நீங்க கனவுல இருக்கிங்களா!”

அவள் நோ சார்…

ம்ம் அப்போ சொல்லுங்க.. 

இதன்யா மனம் இவனை என்ன பண்றது? டென்ஷன் பன்றானே இடியட் ராஸ்கல்.. என்று சொல்லிட அவள் பார்வையின் கூர்மைய அறிந்து அவன் இருமிட சதீஸ் தண்ணீர் எடுத்து கொடுத்தான்.

சித் அதனை ஒரு மிடுக்கு குடித்து விட்டு இங்கே இருக்க யாரோ என்னை பேட் வேர்ட்ஸ் ல திட்டுறீங்க போல…

சார் அப்படி எல்லாம் இல்லை சார்… இதன்யா திரு திரு வென முழித்தாள்.

ம்ம் இருக்கட்டுமே அவங்களுக்கு இருக்கு… என்று சொல்ல அனைவரும் பதட்டத்தில் அமர்ந்து கொண்டு இருந்தனர்.

சித் ஒரு சிறு புன்னகை சிந்தி ஐம் ஜஸ்ட் கிட்டிங்.. என்று சொல்லி விட்டு அவளை பார்த்து..

சித், என்ன மேடம் அப்படியே நிற்கிறீர்கள்..

சார்..

உங்க சஜசன் சொல்லுங்க இது என்னோட முதல் அனுபவம் இந்த ஸ்கூல் பொறுப்பு ஏற்று கொண்டு நான் ஆர்கனைஸ் பண்ண போற பங்ஷன்..

இதன்யா தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே சார் என்னை விட சீனியர் நிறைய பேர் இருக்காங்க சோ அவங்க கிட்ட கேளுங்க சார்.. 

சித் பார்வை கடுமையாக்கி நான் உங்களை தான் சொல்ல சொன்னேன்.

இதன்யா ஒரு சிறிது நேரம் அப்படியே நின்றவள் அவளுக்கு தெரிந்த சில விஷயம் கூற மம் பெட்டர் என்று சொல்லி அவளை அமர சொன்னான்.

அப்படியே அங்கு இருந்த அனைவரும் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிட

சித், வீ ஹேவ் 20 மினிட்ஸ் நெக்ஸ்ட் கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது சோ எல்லாரும் அவங்க அவங்க சஜ்ஜசன்ஸ் அண்ட் ஐடியாஸ் எல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி அந்த மிஸ் கிட்ட கொடுங்க என்று இதன்யாவை காட்டி விட்டான். 

அங்கு இருந்த அனைவரும் அவளை பாவமாக பார்த்து விட்டு எழுத ஆரம்பித்தனர்.

சித், ஹலோ எங்கே இருக்கிங்க? நீங்களும் தான் எழுத வேண்டும்! என்று சொல்லிட இதன்யா வேறு வழி இல்லாமல் எழுத ஆரம்பித்தாள்.

அங்கு இருந்த அனைவரும் அவர்களுக்குள் “இந்த பொன்னு நல்லா மாட்டிகிச்சு!” சித்து சார் இவளை டார்கெட் பண்ணிட்டாரு!.. எப்படியோ நம்ப தப்பித்து விட்டோம்!..

அங்கே உள்ள ஒரு டீச்சர், “அப்படி என்ன பா இந்த பொன்னு பண்ணுச்சு?”

“தெரியல பா எதோ சாரையே எதுத்து பேசி இருக்கா அப்டின்னு ஸ்டாப் ரூமில் பேசி கிட்டாங்க.”

“ஹே இல்ல பா அந்த பொண்ணு  இன்னிக்கு சார் வரும் போது சரியா விஷ் பண்ணல, அதனால தான் அவரு இப்படி அந்த பொண்ணை வேலை வாங்குகிறார!”

“சரி சரி நமக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை!” என்று சொல்லி அவர்கள் எழுதி விட்டு மீட்டிங் அட்டென்ட் செய்த பதிவேட்டில் சைன் செய்து விட்டு ஒவ்வொருவராக கிளம்பினர்.

பூஜா, இதன்யா நல்லா மாட்டிகிட்ட டி சாரு இன்னிக்கி செம்ம கோபத்தில் இருக்காரு போல..

 கொஞ்சம் வாயை மூடு டி..

பூஜா, நீ பேசாமல் அவர் கிட்ட நான் தெரியாமல் பெர்ஃப்யூம் போட்டு வந்து விட்டேன் சாரி சார் அப்டின்னு சொல்லிட்டு வந்திடு…

இதன்யா, நான் எதுக்கு சாரி கேட்கணும் என்னால் கேட்க முடியாது நீ உன் கிளாஸ் க்கு போ என்று அவள் சொல்ல..

பூஜா, நீ என்னமோ பண்ணு அவரை பற்றி உனக்கு தெரியாது அப்டின்னு நினைக்கிறேன் பனிஸ்மெண்ட் எல்லாம் பயங்கரமா கொடிப்பாரு டி அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே

சதீஸ், பூஜா ஆர் யூ ஃபினிஸ்ட்..

யெஸ் சார்..

வொய் ஆர் யூ மர்மரிங் கோ டூ யூர் கிளாஸ்..

அவளோ ஓகே சார் என்று சொல்லி ஒரே ஓட்டமும் நடையுமாக சென்று விட்டாள்.

இப்போது அங்கே மூவர் மட்டுமே இருந்தனர்.

சதீஷ், சித்தார்த், இதன்யா மூவர் மட்டும் இருக்க அவள் அந்த பேப்பர் எல்லா வற்றையும் அடுக்கி கொண்டு இருக்க

சித்தார்த் அவளை கண்டு கொள்ளாமல் எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான்.

அவள் அடுக்கி விட்டு நிமிர்ந்து பார்க்க அங்கு லேப் டாப்ல சதீஷ் எதோ வேலை செய்து கொண்டு இருந்தான்.

இதன்யா அவனிடம் சார் இந்தாங்க… சதீஷ் நிமிர்ந்து பார்த்து விட்டு” மேம் இதை சார் கிட்ட கொடுக்கணும்!”

அவள்” நீங்க கொடுத்து விடுங்கள் சார் எனக்கு கிளாஸ் இருக்கு!”

சதீஷ்,” மேம் இன்னிக்கு ஃபர்ஸ்ட் ஹவர் உங்களுக்கு ஃப்ரீ தானே நீங்களே போய் கொடுத்து விடுங்கள்.!”

நானா! நான் ஏன் கொடுக்கணும்? நான் நெக்ஸ்ட் ஹவர் கிளாஸ்க்கு ப்ரிபர் பண்ணனும் அண்ட் நீங்க தான் அவரோட PA..

சதீஷ் சிரித்து கொண்டே நீங்க சொல்றது சரி தான் ஆனா இந்த வொர்க் உங்களுக்கு கொடுத்தது அவர் தானே..

அவளோ ஆமா…

சோ யூ ஆர் தி ரெஸ்பான்சிபில்… என்று அவன் சொல்ல வேறு வழி இல்லாமல் அவள் அதை எடுத்து கொண்டு வெளியே சென்றாள்.

அவள் சென்ற அடுத்த நொடி சதீஷ் போன் செய்தான்.  ஹலோ பாஸ்…

சித், கிளம்பிட்டாளா..

யெஸ் பாஸ் மேம் ஆன் தி வே என்று சொல்லி போன் வைத்து விட இங்கே சித் அவன் அறையில் உள்ள கணினி திரையில் கவனத்தை செலுத்தி கொண்டு இருந்தான்.

அவள் அவன் அறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்தாள்.

இதன்யாவின் அறிவு இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்ப்ப சீக்கிரம் உள்ளே போ போய் கொடுத்து விட்டு வந்து விடு என்று சொல்ல அவள் ஒரு பெரு மூச்சை வெளி விட்டு உள்ளே செல்ல கதவை தட்டினாள்.

யெஸ் கம் இன்..

அவள் உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தாள். 

உடனே சித், ” வாட் அ ப்ளசென்ட் ஸ்மெல்!”…

அவள் அவனை பார்த்து முறைத்து விட்டு “நீங்க கலெக்ட் பண்ண சொன்னது எல்லாம் பண்ணிட்டேன்! இந்தாங்க” என்று அவள் அவன் முன் இருந்த மேஜையிள் வைத்து விட்டு தேங்க் யூ சார் என்று சொல்லி அவள் திரும்பினாள் .

சித், மம் ஓகே ஒன் செகண்ட்..

இதன்யா, இன்னும் என்ன?  என்பது போல் திரும்பி பார்க்க..

சித்தார்த், என்ன மேடம் இன்னிக்கு புதுசா ரொம்ப வாசனையா ப்ளூ பெரி தோட்டத்தில் விழுந்து எழுந்து வந்து இருக்கிறீர்கள்..  

இதன்யா புரியாமல் அவனை பார்க்க சித், நீ  யூஸ் பண்ண பெர்ஃப்யூம் ஃப்லேவர் ப்ளூ பெரி… 

“எனக்கு அதெல்லாம் தெரியாது!”

சித், ஓ அப்போ என்ன தான் தெரியும் ஒரு பாட்டிலயும் இன்னிக்கே காலி பண்ணிட்டியா… 

அவள் என்ன என்று பார்க்க பெர்ஃப்யூம் பாட்டிலை சொன்னேன்.. 

இதன்யா, அது என் இஷ்டம்.. என்று அவள் சொல்ல சித்தார்த் சிரித்தான்.

இதன்யா தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க…

சித் சிரிப்பை அடக்கிக் கொண்டு “மேடம் எதோ எக்பெக்ட் பண்ணி வந்து இப்போ அது நடக்காமல் போனதில் ஓவர் டென்ஷனா இருக்க போல உன்னோட மூக்கு சிவப்பா இருக்கு!”..

இதன்யா, அப் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. 

ஹே பொய் சொல்லாத உன்னை பற்றி எனக்கு தெரியும் டி… என்று சொல்லி கொண்டே அவள் அருகில் வந்து விட்டான்.

சரி சரி எனக்கு கிளாஸ் க்கு டைம் ஆகுது நான் கிளம்புகிறேன்..

சித் ஹே எங்கே டி ஓடுற இன்னும் நான் பேசி முடிக்கவே இல்லை.. 

இதன்யா, இப்போ பேச நமக்குள்ள என்ன இருக்கு..

சித் மம் சரி தான் டைம் வேஸ்ட் அப்போ செய்ய நிறைய இருக்கு..

இதன்யா என்ன?…… என்று தலையில் கொம்பு மட்டும் தான் இல்லை இருந்து இருந்தால்  ராட்சசி தான் இராட்சசி போல் அவனை பார்க்க

சித், ஹலோ நான் வேலைய சொன்னேன்..நீ என்ன நினைத்தாய்..

அவள் முறைத்து விட்டு இரண்டு அடி எடுத்து வைக்க அவன் யாருக்காக இவளோ
பெர்ஃப்யூம் அடித்து வந்த? …

இதன்யா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…

சித், யாரை மயக்க இவளோ பெர்ஃப்யூம்.. என்று சொல்லி கொண்டே  அவள் அருகில் ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தான்.

நான் யாரை மயக்கணும் அப்படி எல்லாம் இல்லை இந்த மாதிரி லூஸ் டாக் எல்லாம் என் கிட்ட பேச வேண்டாம் இது எல்லாம் சரி இல்லை… என்று சொல்ல சித் இதன்யாவை இழுத்து அவளுடைய அந்த ப்ளூ பெரி நறுமணத்தை ஒரு முறை சுவாசித்து பார்த்தான்.

இதன்யா,  ஹே என்ன பண்றீங்க தள்ளி போங்க..

ஹே நடிக்காத டி நீ எனக்காக தானே போட்டு வந்த..

இல்லவே இல்லை என்று அவள் சொல்லி கொண்டு இருக்க அவன் கைகள் அவள் மேல் ஊறியது.

ப்ச்ச், அகைன் அண்ட் அகைன் பொய் சொல்ற..

இல்ல உங்களுக்கு பெர்ஃப்யூம் பிடிக்காது சோ நீங்க என்னை திட்டனும் இப்போ நீங்க என்ன பண்றீங்க என்று மிகவும் மெதுவான குரலில் அவள் கூறினாள்.

சித்,”நான் சொன்னேனா..  எனக்கு பிடிக்கும் அதுவும் நீ இந்த மாதிரி எனக்கு கோபம் வரனும் அப்டின்னு செய்யர இந்த வேலை எல்லாமே என்னை இம்ப்ரெஸ் பண்ணுது உனக்கு மூளை இல்ல இதயமும் இல்ல..  என்ன பண்றது? எனக்கு உன் மேல கோபம் வர மாட்டிங்குது! அதுவும் நீ இன்னிக்கு பண்ணது தான் என்னால என்னோட சிரிப்பை ஐ கான்ட் கன்ட்ரோல் மைசெல்ஃப்.”

நான் என்ன பண்ணேன்..

சித் சிரித்து கொண்டே பேபி யூஸ் பண்ற பெர்ஃப்யூம் போட்டால் எனக்கு கோபம் வராது அந்த பேபியை கொஞ்ச  தோணும் அப்படியே அந்த மூக்கை கடிக்க தோணும், அண்ட் கிஸ் பண்ண  அப்படியே அந்த பேபியைப் தூக்க தோணும் , சோ இப்போ எனக்கு அதெல்லாம் தோணுது டி என்று சொல்லி கொண்டே அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி கொண்டு  சித் அவள் அருகில் வந்தான். 

இதன்யா, வே வேண்டாம் கிட் கிட்ட வராதீங்க! 

என்று சொல்லி கொண்டே அவள் பின்னால் ஒரு அடி எடுத்து வைக்க

சித் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்..

தொடரும்.. 

EPI 47

சித் அவள் அருகில்  வந்து உன் மேல எனக்கு கோபமே வராது நீ செய்வது எனக்கு சிரிக்க தோன்றுகிறது என்று சொல்லி வந்தான். 

இதன்யா பின்னால் ஒரு அடி வைக்க சித் அவளை நோக்கி அடுத்த அடி வைத்து  “இப்போ உன்னை கொஞ்ச தோணுது! ஐ மின் அந்த குழந்தையை கொஞ்ச தோணும்! என்று சொல்லி கொண்டே அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான். 

இதன்யா, அ அதுக்கு நீங்க குழந்தையை போய் கொஞ்சுங்க…

சித்  தன் தாடியை அழகாக நீவி கொண்டே “இங்கே யாரு பேபிஸ் யூஸ் பண்ற புரோடெக்ட் எல்லாம் யூஸ் பண்றாங்கலோ அவங்க தானே பேபி… அம் ஐ கரெக்ட் பேபி!” என்று அவளை பார்த்து  ஒரு புருவம் தூக்கி அருகில் வந்தான்.

அவளோ, வே வேண்டாம் கிட் கிட்ட வராதீங்க நான் நான் கத்திடுவென்…

சித், கத்து டி என்று சொல்லி கொண்டே அருகில் வந்து விட்டான்.

அவள் கண்களை மூடி கொண்டாள்.

சித் அவளிடம் நெருங்கி இப்போது அவளை நிதானமாக பார்த்தான்.  அவனது கண்கள் அவளை ஒவ்வொரு செல்லாக ஆராய்ந்தது. அந்த ப்ளூ பெரி நறுமணம் அவனை மயக்கியது.

“லிட்டில் ஹார்ட்” என்று காந்த குரலில் அவன் கூப்பிட அவளை அறியாமல் கண்களை திறந்து பார்த்தாள்…

அவ்வளவு தான் ஒரு கையில் அவளின் கண்ணாடியை  எடுத்து அருகில் உள்ள சோபாவின் மேல் தூக்கி எறிந்து விட்டு  அவன் அவளின் இதழ்களை அவன் வசமாக்கி கொண்டான்.

இதன்யாவின் கைகள் அவனை தள்ளி விட கூட சக்தி இல்லாமல் மொத்த சக்தியும் அவன் வசம் அவளின் சக்தியை உறிந்து கொண்டு இருந்தான்.

மேல் உதடு கீழ் உதடு என காந்தம் போல் மாறி மாறி ஒட்டி கொண்டான். அவன் விழித்து கொண்டே முத்தமிட்டான்.

அவள் கண்களை மூடி கொண்டாள். அவளின் ஒவ்வொரு முக மாறுதலையும் அவன் பார்க்க பார்க்க அவளை விட மனம் சற்றும் தோன்றவில்லை.. வேக வேகமாக மூச்சு விட்டாள். அவள்  கண்கள் எல்லாம் கிறங்கி போயிருக்க அவன் கைகள் அவள் மேல் தேடுதல் தொடங்கியது.

அவளை அப்படியே சுவற்றில் ஒட்டி அவளின் இடையில் வருடி இறுக்கி பிடிக்க அவனின் இரும்பு கைகளை அவள் கைகள் கொண்டு இப்போது தடுக்க மீண்டும் இதழை வசமாக்கி கொண்டான்.

அவளின் பெண்மை இரண்டும் அவன் மேல் மோதிட அவள் கூச்சத்தில் அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள்.

அவனிடம் இருந்து கொஞ்சமாக தெளிந்து பிளீஸ் என்னை விடுங்க..

சித் அவளின் முகத்தை நிமிர்த்தி இதழில் ஒற்றி எடுத்து கொண்டே “இதன்யா என்னை விட்டு போகனும் அப்டின்னு நினைக்காதே! அப்புறம் நீ தான் ரொம்ப கஷ்டப் படுவ!”

இதன்யா,  இது சரி வராது இது வேண்டாம்..

சித், நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.. நீ எனக்கு வேணும் டி..

நெவர்…நீங்க வேற நான் வேற யோசித்து பாருங்க…

சித், நான் ஒரு ஆண் நீ பெண் உனக்கும் எனக்கும் அவ்ளோ தான் வேறுபாடு நான் சொல்றது புரியுதா… என்று சொல்லி அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

இதன்யா கோபம் கொண்டு அவனை விலக்கி விட்டு உங்க கிட்ட இருந்து  வரும் காதல் நான் இரண்டாவது காதல் தானே.. உங்களுக்கு நான் பொருத்தம் இல்லை உங்களுக்கு அது புரியுதா இல்லையா…

சித் இதை கேட்டு சிரித்து கொண்டே அப்படி இந்த உலகத்தில் எவனுமே இருக்க மாட்டான். எலாருக்கும் முதல்  காதல் இருக்கும் எல்லாரும் நிச்சயம் லவ் பண்ணி இருப்பாங்க பட் என்னோட விஷயம் டோட்டலி டிஃபரன்ட் அவ என்னை லவ் பண்ணல யூஸ் பண்ணிக்கிட்டா…  என்னை ஏமாற்றி விட்டாள் அது என் தவறு தான்…

இதன்யா, அதை பற்றி எனக்கு தெரியாது. நீங்க நாளைக்கு கூட அவங்க கூட மறுபடியும் சேரலாம்..

சித், நீ சரியான கல் நெஞ்சகாரி டி.. நீ கும்பிடும் கடவுள் அவதாரம் எல்லாம் முருகன் ரெண்டு இணை,  இன்னொருவர் 16000 மனைவிகள். ஒரு மணைவி தலையில் என்று அவர்களை பூஜித்து ஆரதிக்க செய்வீர்கள் ஆனால் ஒருவன் தெரியாமல் நடந்த ஒரு சிறு விபத்து அதை ஏற்றுக் கொள்ள மாட்டியா… நெவர் சான்ஸ்லெஸ்… 

இதை கேட்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை…

இங்கே சித்தார்த் அவளிடம் கல்யாணம் மற்றும் காதல் விஷயம் அனைத்தும் பேசி ஒட்டி கொண்டு இருந்த நேரம் இங்கே சிவந்த கண்களுடன் நவீன் குமார் அந்த படத்தை பார்த்தான். 

மோகன் பயந்து கொண்டே “பாஸ் சித்தார்த் சார் இதன்யா மேடம லவ் பண்றாரு!”

“நெவர்” என அந்த கம்பனியே அதிரும் அளவு கத்தினான். 

ப பாஸ்! 

அவன் கண்கள் சிவக்க உடல் நரம்புகள் எல்லாம் புடைக்க எழுந்து நின்றான். சித்தார்த் இதன்யா இருவரும் சேர்ந்து இருக்கும் படங்கள். அவன் அவளுக்கு முத்தமிடுவது இதன்யா கட்டி கொண்டு அவனுடைய நெஞ்சில் புதைவது. என அனைத்தும் இருந்தது. 

நவீன் ஆட்கள் சித்தார்த் கம்பனியில் சில பேர் இருக்கின்றனர். அவர்கள் மறை முகமாக எடுத்த புகை படங்கள் தான் இது!. 

NAAC கொண்டாட்ட விருந்தில் அவள் ஒயிலாக அவன் பின்னால் சென்றது. ஹாஸ்டலில் இருந்து அவளை சித்தாத் அழைத்து செல்வது என அனைத்தும் பதிவுடன் இருந்தது. 

மோகன் மிகவும் சோகத்துடன் பார்த்து கொண்டு இருந்தான். 

நவீன், “கொஞ்சம் கூட தாமதிக்க வேண்டாம். என் லக்கி சார்ம் எனக்கு வேணும் அவளை தூக்கிடுங்க.  ஹாஸ்டல்ல இருந்து தூக்கிட்டு வந்திடு!”

மோகன், “பாஸ் இப் இப்போ அவங்க ஹாஸ்டலில் இல்ல சித்தார்த் சார் வீட்டில் தான் ஸ்டே பண்ணி இருக்காங்க!”

நவீன் மோகனை திரும்பி பார்த்தான். மோகன், “ஆமா பாஸ் மேம் ஸ்டே பண்ணி இருக்கும் ஹாஸ்டல் கூட அவரே சொந்தமாக வாங்கி விட்டார். கூடவே மேடம்க்கு இப்போ நாலு பாடி கார்ட் போட்டு இருக்காரு”

இதுக்கு அர்த்தம் இப்போ என்ன சொல்ல வர.. எனக்கு அவள் வேணும் அவனை போய் என் லக்கி சார்ம் லவ் பண்ணுவாளா! அது நடக்காதே! அவளுக்கு அவனை எல்லாம் பிடித்து போக வாய்ப்பு இல்லையே!. என அருகில் கோபத்துடன் நடந்தான். 

மோகன், பாஸ் இது தான் உண்மை இதை இதோட விட்டு விடுங்கள்.  

நவீன் பற்களை கடித்து கொண்டு வேக வேகமாக விரல்களை அவன் தொடையில் தாளம் தட்டினான். விடனுமா! எதுக்கு விடனும்! அவனுக்கு அவன் கூட என் லக்கி சார்ம்.. 

மோகன், பாஸ் இது ரிஸ்க்கு சித்தார்த் சார் இது வரை நம்ம கிட்ட நேராக மொதுனது இல்ல.. இந்த விஷயம் பின்னாடி பெரிய பிரச்னை ஆகிடும்.. 

நவீன்….? 

இங்கே சித், பதில் சொல்லு டி… அவள் அமைதியாக இருக்க…

சித், இந்த உலகத்தில் எந்த ஆண்பிள்ளையும் ஒருத்தியை மட்டும் நேசித்து இருக்க மாட்டான் எல்லார்குள்ளயும் ஒரு தலை காதல் நிச்சயம் இருக்கும். எந்த பொன்னும் ஒருத்தனை காதலித்து இருந்து இருக்க மாட்டாள்.

சித், ஒரே ஒரு கொஸ்டீன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு… என்ன என்பது போல் அவனை பார்க்க… நீ என்னை லவ் பண்ணலயா என்று அவள் கையை எடுத்து அவன் தலை மேல் வைத்து கொண்டான்.

இப்போது இதன்யா என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருக்க சொல்லு டி… இல்லன்னு சொல்லிட்டு போ நான் உன் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன். எனக்கு சத்தியம் , சாமி இது மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் உனக்கு இருக்கு சோ பண்ணு டி..

அவள் தரையை பார்த்து கொண்டு கொட்ட கொட்ட விழித்தாள். 

சித், எந்த ஒரு ஆணும் ஒரு  பொண்ணு கிட்ட வர எதிர் வினை வைத்து தான் பின்னால் சுற்றுவான். எனக்கு தெரியும் உனக்கு என் மேல் இஷ்டம்!  அதனால் தான் உன்னை நான் இப்படி சீண்டி ஓட்டி கொள்கிறேன். இதை நீ எப்பிடி வேணாலும் நினைத்து கொள்…ஆனால் இதுக்கு பதில் மட்டும் சொல்லிட்டு போ..

அவள் அவன் பார்வையை தவிர்த்தாள்..

சித், என்னை பாரு டி என் கண்ணை பாரு இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டு போ உன்னோட ஃபவரெட் காட் ரெண்டு வைப் வச்சு இருக்காரு தானே அவர் மேல் என் மேல் பிராமிஸ் பண்ணிட்டு போ…

இதை கேட்டதும் உடனே அவள் அவனிடம் இருந்து கைகளை உருவி கொள்ள முயற்சி செய்தாள்.

பிளீஸ் லீவ் மீ… என்னால் சொல்ல முடியாது உங்களுக்கு நான் ஏன் சத்தியம் பண்ணனும்..

இதன்யா, அதுவும் உங்க மேல் நான் பண்ண எந்த அவசியமும் இல்லை. நீங்க நினைப்பது போல் எதுவும் இல்ல. என்னை விடுங்க.. என்னை விட்டு போங்க.. 

சித், சத்தியம் பண்ணு டி அப்போ தான் உன்னை விடுவேன் இல்ல இன்னிக்கி ஃபுல்லா இங்கே தான் நீ இருக்கணும்…

இதன்யா, நான் பண்ண மாட்டேன்

சித், அப்போ முடியாது….

இதன்யா, இங்கே தானே இருக்கணும் சரி ஓகே நான் இருக்கேன். என்று சொல்லி அவள் அவனை கண்டு கொள்ளாமல் அருகில் உள்ள சோபாவில் போய் அமர்ந்து கொண்டாள்.

அவள் காலையில் இருந்து அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை சித்தார்த் அவன் வேலைகளை செய்ய ஆரம்பித்தான். அவள் அவன் பார்க்காத நேரத்தில் அவனை ரசித்து கொண்டு இருந்தாள். அவன் பார்க்கும் போது முகத்தை கோபமாக வைத்து கொண்டாள். சிறிது நேரம் கூட அவளால் சும்மா உட்கார முடியவில்லை. அதனால் அங்கும் இங்கும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

மதிய உணவு இடைவேலை வந்தது. சென்று உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். அவள் ஒரு முடிவோடு தான் இருந்தாள். இன்றோடு இந்த பிரச்சினையை முடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். வரும்போது சில புத்தகங்களை எடுத்து வந்தாள் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு அதை புரட்டி கொண்டும் எதோ முனுமுனுத்து கொண்டும் இருந்தாள்.

சித்துவுக்கு இருக்கும் வேலை பளுவிலும் அவளை ஒரு பார்வை பார்க்க அது அவனுக்கு எனர்ஜியாக இருந்தது. சட்டென்று அவள் நிமிருந்து கொண்டு பார்க்க அவன் இவளை பார்த்து கொண்டே போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருக்க இதன்யா தன் கண்ணாடியை தள்ளி அவனை முறைத்தாள்.

சித்து அவளை பார்த்து உதடு குவித்து கண் சிமிட்டி விட உடனே கீழே குனிந்து கொண்டாள்…

இதன்யா,  “இவனை.. இவனை…இவனை என்ன பண்றது…அவள் மனம்  உன்னால் ஒன்னும் பண்ண முடியாது டி என்று நினைத்து கொண்டு அய்யோ இதன்யா இவனால் இந்த மொத்த நாளும் வேஸ்ட் ஆகி விட்டது. அதுக்கு பதிலா அஸ்சைன்மென்ட் எழுதி இருக்கலாம். என்று நினைத்து கொண்டு மணியய் பார்க்க மணி மூன்று முப்பது இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளி முடிந்து விடும்.”

இதன்யா, சார்.. என்று அழைக்க அவன் தீவிரமாக எதோ வேலையில் இருந்தான்.

சார் என்று சத்தமிட்டு அழைக்க..

மம்மம் என்று சத்தம் மட்டும் வர

அவள் , எனக்கு இன்னிக்கி கிரவுண்ட் டுட்டி இருக்கு நான் கிலம்பட்டுமா…

சித், மம் போயிட்டு சீக்கிரம் வந்திடு உனக்காக நான் வெயிட் பண்ணுவேன்…

இதன்யா, சார் நான் தெளிவா சொல்லிட்டேன் என்னை தொந்தரவு பண்ணாதீங்க…

சித், நீ வரல நீ வர வரை நான் போக மாட்டேன்… என்று அவன் வேலையில் பிசியாகி விட்டான்.

அவள் அங்கு சென்றதும் சித் சொன்னது தான் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது.

அனைவரும் சென்றதும் அவள் இடத்துக்கு வந்து அவளது உடமைகளை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

ஒருவேளை இவன் அங்கேயே இருப்பானோ…. எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்க சதீஷ் நினைவுக்கு வந்தான்.

சதீஷை காண சென்றாள்.

அவள் சார்…

அவன் ஆச்சர்யமாக யார் என்று பார்த்து சொல்லுங்க மிஸ்…..

சார் அவர் கிளம்பி விட்டாரா…

சதீஸ், யாரு மிஸ்?..

அது தான் உங்க பாஸ்…

சதீஷ் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியில் இல்ல மிஸ் சார் அவர் அறையில் தான் இருக்கிறார். என்று சொல்ல

ரொம்ப தேங்க்ஸ் சார் என்று பற்களை நரணரத்து கொண்டே அவன் அறையை நோக்கி நடந்தாள்.

அங்கே சித்துவை பார்க்க காலேஜ் ல இருந்து பிசிக்ஸ் H.O.D வந்து இருந்தார்.

சித்துவின் காவலாளிகள் அவரை செக் செய்து உள்ளே அனுமதி கேட்டு அனுப்பி வைக்க வெறும் 5 நிமிடத்தில் அவர் வேக வேகமாக வெளியே வந்தார்.

இதை எல்லாம் பார்த்து கொண்டே இதன்யா அங்கு வர இவளை கண்டதும் அங்கு இருந்தவர்கள் இவளுக்கு வழி விட்டு அவனிடம் அனுமதி கூட கேட்காமல் உள்ளே விட்டனர். …

அங்கு இருந்த ஒருவரிடம் அவள் அண்ணா!… அண்ணா உங்களை தான்!…

உடனே அருகில் இருந்த நபர் திரும்பி பார்க்க சொல்லுங்க மேடம்!..

இதன்யா,  இல்ல நான் வந்ததும் அவர் கிட்ட கேட்காமல் என்னை செக் செய்யாமல் உள்ளே அனுப்புறீங்க.. இதுக்கு என்ன காரணம்? 

பாதுகாவலர் – இது பாஸ் ஆடர் மேடம் நீங்க எப்போ வந்தாலும் யார் இருந்தாலும் உங்களை தான் அனுப்ப வேண்டும் செக் செய்ய தேவை இல்லை.. அவரோட அனுமதி கூட தேவை இல்லை என்று சொன்னார் நீங்க எப்போது வேண்டுமானாலும் அவரை பார்க்க செல்லலாம்…

இன்னொரு காவலாளி- எங்க பவானி மேடம் க்கு அடுத்து உங்களுக்கு தான் இப்படி சொல்லி இருக்கிறார் என்று அவர்கள் சொல்லி அவளுக்கு கதவு திறந்து  விட்டார். 

அந்த காவலாளிகள் சொன்னதை கேட்ட இதன்யா மனதில் என்ன சொல்வது என்று தெரியவில்லை… அவள் மனம் இதன்யா நீ பண்றது தவறு அவர் உன் மீது உண்மையான நேசம் வைத்து இருக்கிறார் நீ அதை மிகவும் உதாசீனம் செய்கிறாய்… உன் மனதில் இருப்பதை சொல்லி விடு… என்று மனம் சொல்ல இப்போது குழப்பத்தில் உள்ளே சென்றாள்….

சித்தார்திடம்” உள்ளே வரலாமா?” என்று கேட்க அவனிடம் இருந்து சிறிய கண் அசைவு  வர உள்ளே சென்றாள். அப்போது அவன் தந்தையின் தொடர்பான பிஸ்னஸ் மீட்டிங் சென்று கொண்டு இருந்தது. அவனின் ஆளுமையான் நிதானமான பேச்சு அந்த யார்க்கும் அஞ்சாத பார்வை என்று அவனை அணு அணுவாக ரசித்து கொண்டு இருந்தாள். கால் மேல் கால் போட்டு கொண்டு சரளமாக ஆங்கிலம் மற்றும் கன்னடம் என்று மாறி மாறி பேசினான். அவள் மெய் மறந்து பார்த்து கொண்டு இருக்க…

சித்தாத்தின் மீட்டிங் முடிந்தது.அவன் அவளை பார்க்காமலேயே “பக்கத்தில் வந்தால் இன்னும் என்னை நல்லா சைட் அடிக்கலாம்”… என்று சொல்ல அவள் அப்போதும் சுய நினைவுக்கு வர வில்லை. சித் அவனுடைய தாடியை தடவி கொண்டே இப்போது அவளை பார்த்து “விட்டால் ஒரு நாள் பூரா வழிசலோட என்னை பார்துட்டு இருப்ப போல”… என்று சொல்லி கொண்டே அவளை பார்க்க சித் வழிசல் என்று சொன்னதும் அவளின் உதட்டிக்கு அருகே தன்னிச்சையாக தொட்டு பார்த்தாள்.

சித், சிரித்து கொண்டே அவன் இடத்தை விட்டு எழுந்து நீ வாழ் நாள் முழுதும் என்னை இப்படி தூரத்தில் இருந்து சைட் அடிக்க தேவை இல்ல என்று சொல்லி அவள் அருகில் வந்து அமர அவள் சட்டென்று அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை… என்று அவள் எழ அவன் அவள் கைகளை பிடித்து கொண்டான்.

நீ என்னை பக்கதில் இருந்து ரசித்து கொண்டே இருக்கலாம் என்று சொல்ல அவள் கைகளை உதறினாள்.

அவன் ஹே உட்காரு டி… உன் கிட்ட கொஞ்சம் பேசணும்… என்று சொல்லி அவள் கைகளை பிடித்து அருகில் அமர வைத்து கொண்டான்.

என்ன? என்பது போல் அவள் பார்க்க சித் நிதானமாக பார்த்தான்.

அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தான். அன்று ரோஷினி சித் பற்றிய ஃப்ளாஷ் பேக் சொன்னதை மீண்டும் ஓட்டினான். ஆனால்  ஆண்கள் கூறினால் எப்படி இருக்குமோ அப்படி கூறினான்.

அதன் பின் சித், நான் அவ (லீனா) கிட்ட இருந்து எதிர் பார்த்தது ஒரு கேரிங் உண்மை தன்மை எப்பவுமே ஆண்கள் ஒரு பொன்னு கிட்ட ரொம்ப பலவீனமா இருப்பாங்க அவள் எல்லாத்துக்கும் தனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கணும் அப்டின்னு நினைப்பாங்க.. அதே போல் தான் நானும்  ஆனால் அவ என்னை   அவள் என்று நிறுத்திட..  பின் சிறிது நேரம் கழித்து அவனே தொடர்ந்தான்.

“எனக்கு ஒருவனுக்கு ஒருத்தியாக தான் இருக்க ஆசை அவள் செல்வந்தர் வீட்டு பொண்ணா இருக்கறது விட குணத்தில் எல்லா செல்வமும் இருக்க வேண்டும்… அது அத்தனையும் உன் கிட்ட இருக்கு  டி!” 

எனக்கு பரிதாப காதல் பிடிக்காது. ஆனால் நீ என்னை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் என்னை பட்டு உனக்கு எல்லாமே தெரிந்து இருக்கணும். அந்த ஒரு காரணம் தான். நான் உன் கிட்ட இருப்பது போல் எல்லார் கிட்டயும் நடந்து கொள்ள மாட்டேன். சித்தார்த் கிருஷ்ணா வேற மாதிரி! 

அவள் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். 

சித், நம்ப முதல் சந்திப்பு சண்டையில் இருந்து இருக்கலாம் ஆனால் உன்னோட அந்த attitude, அந்த திமிர் தனம் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு… நான் யாருன்னு தெரிந்ததுக்கு அப்புறம் கூட உன்னோட நிலையில் இருந்து மாறாமல் நீ என்னை எதிர்த்து பேசின…

அவளை மறக்க நான் இந்த ஒரு வருஷம் ரொம்ப கஷ்ட பட்டேன். உன்னை பார்த்த அடுத்த நாள் என்னோட நினைவில் நீ மட்டும் தான் டி இருந்த ஸ்டில் இப்போதும் இருக்க..  நீ எதோ ஒரு விஷயத்தில் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுற நீ நினைப்பது போல் இல்லை டி உன் கூட இருக்கும் போது என்னோட கஷ்டமான என்னோட இந்த போராட்டமான வாழ்க்கை சொர்க்கம் மாதிரி இருக்கு…

உன்னோட பேச்சு, உன்னோட இந்த கோபம் எது சொன்னாலும் உடனே டெம்ட் ஆகி குதிக்கிறது இதை எல்லாம் நான் மறுபடி மறுபடி சொல்ல  தோணுது டி உன்னை கோப படுத்த தோணும். உன்னோடது உன்னோட எல்லா கேரக்டரும் எனக்கு பிடிக்கும்.. என்னோட ஆறுதல் நீ தான் இந்த எல்லாம் என் வாழ்வின் இறுதி மூச்சவரை எனக்கு வேணும் டி.. என்று சொல்லி அவளை பார்க்க அவள் அவன் சொல்வதை யோசித்து கொண்டு இருந்தாள்.

சித் அப்படியே அவள் மடியில் தலை வைத்து  படுத்து கொண்டு அவளை பார்க்க இப்போது அவளால் அவனை எழுந்து போ என்று சொல்ல வார்த்தை வர வில்லை.

இதன்யா அமைதியாக இருப்பதை பார்த்து உடனே அவளின் இடையை கட்டி கொண்டான்.

அவளின் ஒரு கையை அவனே எடுத்து தலையில் வைத்து கோதி கொடுக்க செய்ய இதன்யா வேறு வழி இல்லாமல் கோதி கொடுத்தாள்.

அவளின் இடையில் உள்ள நாபியில் அவன் கைகள் கொண்டு வருடி முத்தம் வைக்க இப்போது அவள் தவித்தாள்.

அவளின் முக மாறுதலை பார்த்த அவன் அவள் தலையை சாய்த்து அவள் கண்ணாடியை கலட்டி விட்டு  முத்தமிட்டான்.

இதன்யா கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் விழ தொடங்கி விட்டாள்.

அவள் மனதில் இப்படி “ஒரு ஆண் மகன் யாருக்கு கிடைக்கும். அவனை பற்றி அனைத்தும் கூறி என் வார்த்தைக்காக காத்திருக்கிறானே! இவன் இவனை எப்படி நான் வேணாம் என சொல்வேன். எப்போதோ நான் அவனுக்கு சொந்தமாகி விட்டேனே!” 

நான் சண்டை போட்டு  கஷ்ட படுத்தினாலும் கூட மீண்டும் வந்து நிற்கிறான். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? என அவள் மனம் யோடித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தது. 

இங்கே நவீன் என்ன செய்ய காத்திருக்கிறான்? 

இதன்யா என்ன செய்ய போகிறாள்? 

எனக்கே ரொம்ப டென்ஷனா இருக்கு அடித்து சித்தார்த்தின் தந்தை வழி தாத்தா அழைக்க போகிறார்? 

நீங்க என்ன நினைக்கிறீர்கள்? 

தொடரும்.. 

EPI 48

சித் அவளின் இடையை கட்டி கொண்டு முத்தமிட இதன் யா அடுத்து என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தவள்.

“என் கிட்ட எல்லா உரிமையும் எடுத்து கொண்டும் எல்லாமே செய்து விட்டு இப்போது பதில் சொல்லு அப்டின்னு கேட்கிறான்.. சரியான” புத்தா”(புத்தர் சித்தார்தின் செல்ல பெயர் இது இதன்யா வைத்தது.) இவனை சும்மா விட கூடாது கொஞ்சம் டென்ஷன் பண்ணி விடனும்,  கொஞ்சம் சுற்ற விட வேண்டும் , அப்புறம் சொல்லி கொள்ளலாம். என்று நினைத்தவள்.அவனை மெதுவாக விலக்கி விட்டு  எழுந்து நின்றாள்.

சித்  அவள் கைகளை பிடித்து கொண்டு “ஹே  சொல்லிட்டு போ!”

இதன்யா, “எனக்கு கொஞ்சம் யோசிக்க  டைம் வேணும்!”என்று அவன் முகத்தை பார்க்காமல் கூறினாள்.

சித்துவுக்கு இதை கேட்டு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. “எப்பொழுதும் உடும்பு பிடி பிடிப்பவள் இப்போது இது வரை வந்து இருக்கிறாள்.”என்று நினைத்து ஆறுதல் அடைந்தான்.

இதன்யா,  ஆனால் ஒரு கண்டிசன்…

“என்ன?”

“நீங்க அது வரை என்னை தொந்தரவு செய்ய கூடாது,  அண்ட் என்னோட முடிவு எதுவா இருந்தாலும் நீங்க ஏற்று கொள்ள வேண்டும்!”

சித், மம் ஓகே என்று சொல்லி விட, 

சரி நான் கிளம்புகிறேன்…  என்று அவள் சொல்ல நம்ப சேர்ந்து போலாம்…

அவள் தலையில் கை வைத்து கொண்டே “வேணாம்! இப்போ தானே சொன்னேன் என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு, 

“சரி ஓகே ஓகே ச்சில் நீ தனியாவே போ! ஆனால்  எப்போ உன்னோட முடிவு சொல்ல போற?”

இதன்யா, நான் இந்த வீக் ஊருக்கு போறேன் போயிட்டு வந்து சொல்றேன்…

சித், அங்கே போய் உன்னோட மைண்ட் மாறிடுச்சுன்னா வாட் டூ டு! உன்னோட கோல் எல்லாம் ரொம்ப மோசமா இருக்குமே!  சோ அது தான் எனக்கு கொஞ்சம்…. என்று நிறுத்தி விட்டான். 

இதன்யா, என்ன என்னோட கோல் மோசமா இருக்கும்?  உங்களுக்கு என்ன தெரியும்?  என்று அவனை முறைத்து கொண்டே கேட்டாள்.

சித்தார்த் அவளை பார்த்து முகத்தை கடுகையாக்கியவன் அன்று அவள் வாழ்வின் லட்சியம் பற்றி சொன்னதை அப்படியே முகத்தை கடுமையாக வைத்து கொண்டு அவன் சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு டூ வீலர், அண்ட் ஒரு டொக்கு பால்வாடியில் வேலை அப்புறம் அங்கேயே எவனும் இருந்தால் மொக்கை பையனை கல்யாணம் வேற பண்ணிப்பியே! கூடவே அவன் கூட பைக்ல போவே! ச்சீ ச்சீ டிஸ்கஸ்டிங் தாட்ஸ் யூ ஹெவ் லாட்ஸ் பேட் திங்க்ஸ்! என முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டே கூறினான். 

அவளுக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை..

சித், “ஏன் டி உனக்கு இப்படி மட்டமான லட்சியம்?  நல்லா படிச்சு நல்லா ஒரு சினிமாவில் நடிக்கும் ஒரு கதாநாயகன்  மாதிரி ஒரு பையன் ம்ம்  அழகா கிட்ட தட்ட என்னை போல் ஒரு பையனை போல் என அவன் சிகயை  கோதி கொண்டே கைகள் இரண்டையும் உதறி கொண்டே கிட்ட தட்ட லு என்னை போல்  சொல்லுவ அப்டின்னு பார்த்தால் உன் டேஸ்ட் ரொம்ப மோசம்!”

இதன்யா, எனக்கு இந்த மாதிரி பையன் தான் பிடிக்கும் என்று அவள் சொல்லிட

சித், உன்னை  கொன்றுவேன்… எதுக்கு! யாரை? அந்த ராஸ்கல் மட்டும் என் கையில் கிடைச்சா பினிஷ்…

இதன்யா சிரித்து கொண்டே உங்களை மாதிரி பையன் என்று சொல்லி…. நிறுத்தி  அவள் அவனை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து கொண்டு இருக்க.. 

ஹே என்னடி? 

 இதன்யா, “ம்ம்.. ம்ம்.. ம்ம்….சைட் மட்டும் அடிக்கலாம் பட் இது வாழ்க்கை பிரச்னை பாஸ்!” என்று அவனை வேண்டாம் என்பது போல் கூறினாள்.

சித்தார்த் இதை கேட்டதும் கோபமாக அவளை ஒரு பிடியில்  இழுக்க அவன் மார்பில் முட்டி நின்றாள்.

“நான் சாப்ட் அப்டின்னு ஓவரா வாய் பேசாத டி என்னோட ரஃப் அண்ட் டஃப் முகத்தை பார்த்தால் நீ தாங்க மாட்ட!” என அவளின் கன்னம்  தடவியவன்.

“என்னை தவிர நோட் தி வேர்ட்ஸ் என்னை மட்டும் தான் நினைக்கணும் பேசணும் வேறு யாரை பற்றியும் திங்க் வரவே கூடாது பேசவும் கூடாது!” என கூறினான். 

அவள் கொஞ்சம் திடுக்கிட்டு பார்க்க சித் அவளின் இதயத்தை தொட்டு காட்டி

“இங்கே இதுல நான் மட்டும் தான் இருக்கணும் என்னை பற்றி மட்டும் தான் இந்த மூளை  என்று அவளின் தலையை தொட்டு இங்கே என்னை பற்றி  திங்க் பண்ணனும் இது ரெக்வஸ்ட் இல்ல ஆடர் காட் இட்!”  என்று சொல்லி அவள் இதழை வலிக்கும் படி கிள்ளி விட்டான். 

ஸ்ஸ் என்று அவள்  வலியிள் துடிக்க இப்போது இதழில் முத்தமிட அவள் சட்டென்று அவனை தள்ளி விட்டாள்.

“நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன செய்றீங்க.? என்று அவள் சொல்ல இப்போது சுய நினைவுக்கு வந்தவன்.

சாரி சாரி என்று சொல்லி அவளை மீண்டும் இழுக்க ஹேய்..

சித், டோண்ட் திங்க் ராங் உன் ட்ரெஸ் எல்லாம் கலைந்து இருக்கு அதுக்கு நான் தானே ரெஸ்பான்சிபில் என்று மயக்கும் புன்னகையுடன் அதை சரி செய்தான்.

இதன்யா அவன் பார்வையை தவிர்த்து விட்டு “நானே சரி செய்து கொள்கிறேன் தள்ளி போங்க! என்று அவள் முறைக்க

சித், சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு பத்திரமா வந்திடு..

இதை கேட்டு அவள் முறைக்க அது தெரிந்தும்  அவன் கண்டு கொள்ளாமல் கிளம்பினான்.

இதன்யா அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் விஷயத்தையும் நினைத்து நினைத்து சிரித்த முகமாக சித்தார்த்தின் வீடு நோக்கி நடந்தாள்.

இதை பிரியாவிடம் சொல்ல வேணும் என்று தோன்றியது. அவள் பிரியாவுக்கு போன் செய்தாள். இதன்யா பிரியாவுக்கு கால் செய்தாள்.

“ஹலோ பிரியா!”

“ஹே சொல்லு இதயா இப்போ தான் உனக்கு என்னோட நியாபகம் வந்ததா எருமை! எருமை!”

ஹே இப்போ எதுக்கு இப்படி திட்டுற? .

பிரியா, “ஆமா டி அன்னிக்கு மொத்தமா அந்த ரோஷினியால் உடைத்ததற்கு பணம் தரண்ணு சொல்லிட்டு போயிட்ட நல்ல வேலை என் சித்து டார்லிங் வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டாரு!’

சித்துவை டார்லிங் என்று சொன்னதும் அவளுக்கு சட்டென்று கோபம்  வர” சரி அப்போ நான் போன் வைத்து விடுகிறேன்!” 

பிரியா, “ஹே லூசு லூசி சாரி சாரி பேசு எனக்கு இப்போ உன் கன்னத்தை கடிக்கணும் போல் தோணுது டி!”

 இதன்யா, ஹே லொட லொடன்னு எதுக்கு டி இப்படி பொரிந்து தள்ளுற? 

சரி சரி எதுக்கு இப்போ போன் பண்ண அதை சொல்லு.. 

இதன்யா, போனில் வேண்டாம் நான் நேரில் சொல்றேன் டி…

பிரியா, ஹே வந்தேன்னு வை உன்னை கொன்றுவேன் இப்போ எதுக்கு டி போன் பண்ண ஒழுங்கா சொல்ற? 

“அவளோ இல்ல பிரியா நான் நேரில் வந்து சொல்றேன் டி!”

பிரியா கடுப்பாகி “நாயே நான் பாட்டுக்கு சிவனே!! அப்டின்னு இருந்த என்னை போன் பண்ணி விஷயம் சொல்றேன்னு சொல்லி இப்போ சொல்லாமல் விட்டால் எனக்கு அது என்னவா இருக்கும்?  அப்டின்னு விடிய விடிய யோசிக்க தோணும் தூக்கம் வராது டி! இப்போ ஒழுங்கா சொல்லு டி! இல்ல? உன்னை சும்மா விட மாட்டேன்?” 

இதன்யா, சரி சரி சொல்றேன்… என்று அவள் நிறுத்திட ,

ம்ம் சொல்லு…

“அது”பிரியா!

“ம்ம் சொல்லு சொல்லு இதயா!” 

ஹே அவசர படாத..

சரி சொல்லு…

அது வந்து… என இதன்யா இழுத்தாள்.

ம்ம் மேட்டர் க்கு வாடி…

அது..

நான்..

நீ! என பிரியா எழுந்து நின்று ஆர்வமாக நின்று நகத்தை கடித்து கொண்டு கேட்டாள். 

நான்..

நீ தான்..

ஐ யம்..

பிரியா கடுப்பாகி “ஹே செப்பல்ஸ் பறந்து வரும் மூடிட்டு சொல்லு டி!”

போ நான் சொல்ல மாட்டேன்!, போன் வைக்கிறேன்…

பிரியா, சரி சரி என் பட்டு குட்டி சொல்லுங்க செல்லம் வீட்டில் அம்மா மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களா? இல்ல எதாவது யாருக்கும் தெரியாமல்  XXX படம் பார்த்தியா?

என்ன? அப்டின்னா என்ன? 

அதை அப்புறம் சொல்றேன் முதலில் நீ சொல்லு டி..

இதன்யா, X அப்டின்னா? 

அப்போ நீ சொல்லு டி அப்புறம் நான் சொல்றேன்

இதன்யா,  “சரி இப்போ நிச்சயம் சொல்லிடுவேன்!”

பிரியா ஆவலாக என்ன என்பது பொல் காதை போனில் புதைத்து கொண்டாள்.

இதன்யா,” நான் லவ் பன்றேன் டி.!”

இதை கேட்டதும் அவள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க ஹலோ ஹே லைன்ல இருக்கியா கோகுல் மாடு!  தண்ட மாடு! என்று அவள் பிரியாவை கூப்பிட்டு கொண்டே இருக்க

சிறிது நேரம் கழித்து பிரியா,  ஹலோ? நீங்க நிஜமாவே இதன்யா தானா?..

இதன்யா, ஹே வந்தனா உன்னை அடிப்பேன் டி..

பிரியா, “அந்த பையன் யாரு என்ன பண்றான் காட்டாயம் இந்த லவ் நான் உன் கூட இல்லாத நேரத்தில் தான் வந்து இருக்கும்!”

இதன்யா, ஹே என்னால நம்ப முடியல டி நான் ஒருத்தரை லவ் எல்லாம் பண்றேன்!என அவள் ஆச்சரியமாக கூறினாள்.

பிரியா, “என்னாலயும் தான் கண்டிப்பா நீ அதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்ட,  சரி அந்த பையன் யாரு சீக்கிரம் சஸ்பன்ச உடை எனக்கு இப்போ வேலை இருக்கு!”

அப்படி என்ன உனக்கு கலட்டுற வேலை?

“ஹே அவசரம் டி.!”

அப்போ போயிட்டு வா…

பிரியா, இல்ல நீ சொல்லு…

உங்க காலேஜ் தான் ..

என் காலேஜ்ஜா!, என்ன DEPT! 

இதன்யா சுற்றி வளைக்காமல் உடனே கண்ணை மூடி கொண்டு  “உங்க காலேஜ் சேர் பர்சன்!”

பிரியா, ஹே ச்சீ அவரு தாத்தா டி..

ஹே உன்னை கொலை பண்ண போறேன், நாயே!

பிரியா, சாரி சாரி அந்த ரோஷினியா?  லெஸ்பியனா மாரிட்டியா..

ஹே உன்னை!.

பிரியா, சரி சரி நான் சும்மா சொன்னேன் சொல்லு..  ஹே பேர் சொல்லிடு!. 

இதன்யா, சித்தார்த் ரவிசந்திரன்

பிரியா, காமெடி பண்ணாத…

சீரியசா சொல்றேன் டி…

பிரியா, “நீ வெனா அவரை லவ் பண்ணலாம் ,  ஆனால் சித்து வாய்ப்பே இல்லை அதுவும் இப்போ ட்ரெண்ட் என் சித்து டார்லிங் தான்!,  இப்போ டார்லிங் சிங்கிள் வேற எவள் கொத்திட்டு போக போராலோ தெரியல. அடுத்து சித்துவுக்கு இப்போ டிமேன்ட் அதிகம்!” 

இதன்யா, நான் ஒன்னும் அவர் பின்னால் சுத்துல அவர் தான் என் பின்னாடி சுற்றி கொண்டு இருக்கிறார்..

என்ன டி சொல்ற இது நிஜமா!

இதன்யா , “உன் கிட்ட பொய் சொல்ல எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல நான் போன் வைக்கிறேன்.”

பிரியா, “ஹே ஸாரி இதயா நான் சும்மா உன்னை சீண்டி பார்த்தேன். எனக்கு அந்த டவுட்டு அன்னிக்கே இருந்தது! ஆனால் இப்போ நீயும் லவ் பண்ற அது தான் உலகத்தில் முதல் அதிசயம்.   இப்போ இன்றில்  இருந்து முதல் அதிசயம் எல்லாமே பின்னாடி போயிருச்சு டி.. இனி உன்னை என்னால்!”

என்ன? 

பிரியா,” இனி உன்னை என்னால்!”

இதன்யா, ஹே முழுசா சொல்லு எருமை…

பிரியா, “இல்ல டி இனி உன் கண்ணத்தில் என்னால் வட்டம் போட முடியாதே இனி நீ மொத்தமும் சித்துவோட புரோபர்ட்டி!”

ஹே அடி வாங்க போற…

பிரியா, “ஹே இன்னிக்கி மீடியாவுக்கு கூட தெரியாத விஷயம் பெறிய நியூஸ் என் கிட்ட.. ஹான்  இப்போ என் கிட்ட… அதுவும் நீ சித்து லவ்வர் கேட்கவே காதில் தேன் வந்து பாயுது!”

ம்ம்ம் பாயும் பாயும்..

பிரியா, இனி காலேஜ்ல நான் கெத்து காட்டுவேன், நீ தான் இனி அந்த காலேஜ்க்கு சொந்தகாறி நான் சொன்னது பலித்து விட்டது.

இதன்யா, அப்படி எல்லாம் நினைத்து கொண்டு இருக்காதே ! என் நிலையில் இருந்து எப்பொதும் நான் மாற மாட்டேன் . நான் போன் வைக்கிறேன் ..

பிரியா, ஹே வைக்காதே இனி தான் மேட்டர்

என்ன? 

பிரியா, சொல்லு சொல்லு…

இதன்யா, என்ன சொல்ல சொல்ற…

பிரியா, “ஹே சித்து உனக்கு என்ன கொடுத்தாரு? அதை சொல்லு!”

இதன்யா, ஹே அதெல்லாம் ஒன்னும் இல்லை…

ஹே நடிக்காத சொல்லு முத்தமா இல்ல மொத்தமும் கொடுத்தாரா? 

இதன்யா, இப்போ செப்பல்ஸ் அங்கே பறந்து வரும்..

பிரியா, “ஹே நான் நைட்டு போன் பண்ணுவேன் நீ சொல்ற ரியல் ரொமான்ஸ் எப்படி இருக்க போகுதோ!” என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே இதன்யா போன் கட் செய்து விட்டாள்.

அவள் முகத்தில் சந்தோஷத்தில் முகம் எல்லாம் புன்னகையாக வீட்டுக்கு உள்ளே வந்தாள்.

இங்கே நவீன் வீடு மயான அமைதியுடன் காட்சி அளித்தது. இதன்யா பள்ளியில் இருந்து கிளம்பியதும் அவளை நவீன் கட்டளையின் கீழ்  மோகன் பின் தொடர குறிப்பிட்ட தூரத்தில் சித்தார்த்தின் ஆட்கள் பின் தொடர்ந்தனர். 

இதன்யா புன்னகையுடன் மெதுவாக நடந்து கொண்டே சிரித்து கொண்டு வெட்கத்தில் பிரியா கிட்ட பேசிய முகம் அவள் முடியை காதுக்கு ஒதுக்குவது. இது தான் திரையில் ஓடி கொண்டு இருந்தது. நவீன் மனது “என்னை நினைத்து இந்த வெட்கம் வர வேண்டும் ஆனால் இது அவனை நினைத்து வருகிறதே! என தகித்து கொண்டு இருந்தான்.”

“என்னோட லக்கி சார்ம் எனக்கு வேணும் இது இப்போ தான் சூடு பிடிக்க போகுது அவன் கிட்ட இருந்து இதன்யாவை பிரித்து அவள் வாயால் சித்தார்த் வேண்டாம் என சொல்ல வைத்து நவீன் தான் எனக்கு எல்லாமே அப்டின்னு அவளை மாற்றி எனக்கு சொந்தமாக்கி தூக்குவென். என் லக்கி சார்ம் எனக்கு மட்டும் தான் ஆட்டம் இனி ஆரம்பிக்க போகுது.சித்தார்த் கிருஷ்ணா!.” என நவீன் நரணரத்து கொண்டான். 

இங்கே தாரா அவள் முகத்தில் உள்ள இந்த புன்னகையை பார்த்து அதை ஒரு போட்டோ எடுத்து சித்துவுக்கு அனுப்பி வைத்தாள்.

ரோஷினி, என்ன தனு இன்னிக்கு முகம் எல்லாம் பல்ப் எரியுது எதாவது ஸ்பெஷல் டே வா?

அவள் அப்படி எல்லாம் ஒன்னும்  இல்லை சும்மா தான் என்று அவள் அறைக்கு உடை மாற்றி ஃப்ரெஷ் ஆக சென்றாள்.

தாரா வாட்ஸ் அப் சென்று பார்க்க அது இன்னும் பார்க்க படாமல் இருந்தது.

உடனே தாரா சித்தார்த்துக்கு போன் செய்தாள். ஹே என்ன பண்ற?  

ஹே நான் ரொம்ப பிசியா இருக்கேன் இப்போ எதுக்கு கால் பண்ண? 

சரி விடு அது அவளை பற்றிய விஷயம்..

சித் கோபம் கொண்டு “லீனா பற்றி டோண்ட் டாக் வித் மீ.!”..

டேய் இரு இரு இப்போ பிரசென்ட்ல உன் லிட்டில் ஹார்ட் பற்றி தான்..

அவளுக்கு என்ன ஆச்சு?

“டேய் ஓவரா பெர்ஃபார்ம் பண்ணாத, அவ நல்லா தான் இருக்கிறாள்”

சரி எதுக்கு கால் பண்ண?

நான் வீட்டுக்கு வர லேட் ஆகும் வீட்டுக்கு வந்ததும் பேசி கொள்ளலாம்..

ஹே முதலில் வாட்ஸ் அப் போய் பாரு.. உனக்கு எல்லாம்  அனுப்பி வைத்தேன் பாரு என்னை சொல்லனும் என்று அவள் சொல்லிட உடனே சித்தார்த் சற்றும் தாமதிக்காமல் வாட்ஸ் அப் சென்றான். 

அதில் இதன்யா சிரித்த முகத்துடன் அவனது வீட்டில் உள்ளே நுழையும் போது எடுத்த படம் தான் அது அந்த படத்தினை சிரித்து கொண்டே வருடி பார்த்தவன்….

சித் “என்னோடவளாக சீக்கிரம் இந்த வீட்டுக்குள்ள வருவ !” என்று சொல்லி வைத்த கண் வாங்காமல் அந்த படத்தை பார்த்தவன்.அதன் பின் சிறிது நேரம் கழித்து வேலையில் மூழ்கி போனான்.

இங்கே ரோஷினி தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் கற்று கொண்டாள். அடுத்து படிக்க கற்று கொடுத்து கொண்டு இருந்தாள்.

தாராவின் மேனேஜர் ரேணு அவளுக்கு போன் செய்தாள்.

சொல்லு ரேணு?

மேடம் நாளைக்கு அந்த புது முகத்தோட தமிழ் படம் நடிக்க போறீங்கலே அந்த புது முகம் உங்க கிட்ட பேச அப்பாயிண்ட் மெண்ட் கேட்கிறார்.

எதுக்கு…

ரேணு, “சாதாரண மீட் தான் மேடம் அந்த பையனுக்கு முதல் படம் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறான் நட்பு ரீதியாக பேசி விட்டால் படத்தில் தயக்கம் இல்லாமல் நடிக்க முடியும் அப்டின்னு சொன்னான் உங்களுக்கு இஷ்டம் இல்லன்னா வேண்டாம்!” 

தாரா, சரி ஓகே…

எங்கே வர சொல்றது…

அதை நான் நாளைக்கு சொல்றேன் என்று சொல்லி போன் வைத்தாள்.

இதன்யா, புது படம் நடிக்க போறீங்களா மேம்…

ம்ம் ஆமா,  அதுவும் தமிழில் பண்ண போறேன்…

சூப்பர் சூப்பர் அப்போ நான் நிச்சயம் அந்த படம் பார்க்க போறேன்..

தாரா, என் கூட பார்க்க ஓகே வா..

என்ன மேம் இப்படி கேட்டு விட்டீர்கள்? நான் பிரியா எங்க ரெண்டு பேரையும் கூட்டி போரீங்களா?

  ம்ம்ம் போயிட்டா போச்சு உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?

ம்ம்ம் கேளுங்க மேம்..

உனக்கு பசங்க ப்ரெண்ட் யாராவது இருக்காங்களா? உன் பின்னாடி சுற்றி இருக்காங்களா?

இதை கேட்டதும் இதன்யா, இல்ல மேம் அந்த அளவுக்கு நான் வொர்த் இல்ல அண்ட் காலேஜ் ல இந்த பிரியா எல்லா பசங்க கூடவும் சண்டை போட்டு விடுவாள் dept மாட்டி விட்டு விடுவாள். அதனால் எந்த பசங்களுக்கும் எங்களை பிடிக்காது.

ரோசினி, அது அப்படி இல்ல தனு அந்த பிரியாவால் தான் உன் பின்னாடி பசங்க வரல இல்ல நிறைய பசங்க உன் பின்னால் சுற்றி இருப்பாங்க.. இதை கேட்டு இதன்யா சிரித்தாள்.

இப்படியே பேசி கொண்டு இருக்க ரோசினிக்கு அவள் சொல்லி கொடுக்க அவள் படித்து கொண்டு இருந்தாள்.

மூவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.

இதன்யா இன்று இருந்த மன நிலையில் அவளுக்கு சரியாக சாப்பிட முடிய வில்லை பசி எடுக்க வில்லை அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். அனைவரும் தூங்கி இருக்க இவள் வழக்கம் போல் அம்மா, அக்காவுக்கு போன் செய்து பேசி விட்டு கொஞ்சம் பசி எடுக்க சமையல் அறை செல்லும் நேரம் பிரியா கால் செய்தாள்.

பிரியா, ஹே கன்டின்யூ பண்ணு டி… இதன்யா போனை காதில் வைத்து கொண்டே தண்ணீர், கொஞ்சம் தீனிகள் எல்லாம் அவள் காசு போட்டு வாங்கி இருந்த பொருளை ஒரு தட்டில் போட்டு கொண்டு அவளிடம் பேசி கொண்டே சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

அப்போது தான் வேலை முடித்து வீட்டுக்கு வந்த சித்து கண்களில் அவள் பட்டாள்.

அவள் சிரித்து போனில் பேசுவது தெரிய இந்நேரத்தில் யாரிடம் பேசுகிறாள் மணி 11.00 ஆகுது என்று நினைத்து கொண்டே மேலே அவன் அறைக்கு சென்றான். ஃப்ரெஷ் ஆகி விட்டு கீழே வர அவள் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டு இருக்க இவன் மனதில் இன்னும் தூங்கவில்லையா இவள்? யார் அது? போனில்? என்று சொல்லி கொண்டே அவள் அறைக்கு சென்றான்.

அவள் அறையில் இல்லை பால் கணியில் தண்ணீர், தீனி என்று சமையல் அறையில் இருந்து எடுத்து வந்த பொருளை வைத்து விட்டு கொஞ்சம் கொறித்து கொண்டே அவளிடம் பேசி கொண்டு இருந்தாள்.

பிரியா, “ஹே கிஸ் பண்ணும் போது நீ கண்ணை மூடி இருந்தியா இல்ல சித்துவை பார்த்து கொண்டு இருந்தியா.?” 

இதன்யா,அறிவு இருக்கா உனக்கு இப்படி எல்லாம் கேட்கிற? 

பிரியா, நான் சித்து டார்லிங் ஸ்கிரீன் ரொமான்ஸ் தான் பார்த்து இருக்கேன். நிஜமாவே ரொமான்ஸ் பண்ணா எப்டி இருக்கும் அப்டின்னு ஒரே ஆர்வமா இருக்கு இதயா ஆனால் நீ ஓவரா சீன் போடுற சொல்லு எப்டி இருந்தது? 

 இதன்யா,  ஹே ச்சீ ச்சீ நீ ரொம்ப மோசம் டாபிக் வேற பேசு என்று வெட்க முகம் கொண்டு அவள் பிரியாவிடம் சொல்ல அவளின் முகத்தில் உள்ள இந்த வெட்கம் அவள் யாரிடம் பேசுகிறாள். என்று தெரியாமேயே சித்துவுக்கு சந்தேகம் தர உடனே சட்டென்று முகம் கடுமையை தத்தெடுத்து கொண்டது அவன் கோபத்துடன் பால்கனி சென்றான்….

Idhanya….? 

தொடரும்…

EPI 49

இதன்யா இரவு உணவை முடித்து விட்டு  அறைக்கு சென்றவள் பிரியா கால் செய்ததும் அவளிடம் பேச ஆரம்பித்தாள். அந்த நேரம் தான் சித்தார்த் வீட்டுக்கு வந்தான். 

 இங்கே பிரியா, ஹே நீ அவர் கிட்ட உன்னோட  லவ் சொல்லிட்டியா? 

“இல்ல பிரியா எனக்கு பயமா குழப்பமா இருக்கு.”

“என்ன பயம் உனக்கு.?”

இதன்யா, “நீ தானே டி சொன்ன, அவர் வேற! நம்ப வேற! அப்டின்னு, எனக்கும் அது  தான் சரியா படுது அவரை விட்டு நான் தூரமா போனாலும் எதுவும் செய்து நான் அருகில் இருக்கிற மாதிரி செய்து விடுகிறார்.”

பிரியா, நீ சொல்றது சரி தான் ஆனால் இப்போ கதை அப்படி இல்ல அப்போ அவரு  கமிட்ல இருந்தாரு. அந்த லீனா கூட இருந்தாரு இப்போ ப்ரேக் அப் ஆகிடுச்சே! 

“இது தப்பு இல்லையா பிரியா!”

கல்யாணம் ஆகி divorce ஆகி இருந்தால் என்ன பண்ணி இருப்ப? 

இதன்யா அமைதியாக இருக்க 

பிரியா, இந்த காதல் கூட அதே போல் தான் நீ லீனா கிட்ட இருந்து சித்தார்த்தை பரிக்கள. அதும் இல்லாமல் ஆக்டர் jk கூட அவள் அப்படி இப்படி இருப்பதா நிறைய காசப்

“இப்போ என்ன சொல்ல வர?”

அவர் உன் மேல் உண்மையான நேசம் வைத்து இருக்கிறார்.

இதன்யா, எப்படி சொல்ற? 

பிரியா, “ஹே அன்னிக்கு அந்த லேப் ல விபத்து நடந்த போது அவர் பதறி அடித்து கொண்டு வேக வேகமாக அங்கே வந்ததும் அவர் கண்ணு உன்னை தான் தேடுச்சு தெரியுமா? உனக்கு எதுவும் ஆகி விட்டதோ! என்று அவர் தவித்து போய் விட்டார்”…

மேலும் பிரியா, “அதை நான் கவனித்தேன்.. இது  உண்மையான அன்பு இருந்தால் தான் டி வரும்… பிரியா மேலும் தொடர்ந்தாள் நான் சொன்னேன் தான் ஆனால் அவர் உன் மேல் தீவிரமா இருக்கிறார். அண்ட் உன் உயிரை காப்பாற்றி இருக்கிறார். அவர் இருக்கும் ஸ்டேட்ஸ்க்கு உன் பின்னாடி சுற்றுகிறார். நிறைய பேர் காதல் கதை பேசி ஏமாற்றி விட்டு செல்லுவார்கள் ஆனால் அவர் உன் கிட்ட ஜென்யூனா உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் அப்டின்னு அப்ரோச் பண்ணி இருக்கிறார் இதை விட என்ன டி வேணும்?”

இதன்யா, இருந்தாலும் எனக்கு…

பிரியா, உன் மண்ணாங்கட்டி மர மண்டையை வைத்து கொண்டு  ஓவரா யோசிக்காதே!  அவர் எவ்ளோ டெரர் தெரியுமா?  யாரு கிட்டயும் ரெண்டு வார்த்தைக்கு மேல பேசவே மாட்டாரு! எல்லாரும் பயந்து நடுங்குவாங்க! அவர் கெத்து டி எல்லாரும் நடுங்கி பின்வாங்க போவார்கள்.ஆனால்  அன்னிக்கு நான் உன் பிரென்ட் அப்டின்றதால் தான் என் கிட்ட பேசினார்…

இதன்யா குழப்பத்துடன் அமர்ந்து கொண்டு இருக்க 

பிரியா, ஹே கண்டதை யோசித்து கொண்டு இருக்காத லூசு!.  உன் மூளையை யூஸ் பண்ணாத அது ரொம்ப டேன்ஜர் ஃப்ரீயா விடு பார்த்து கொள்ளலாம்…

இதன்யா, சரி ஓகே..

பிரியா, சரி எப்போ உன் முடிவை சொல்ல போற?.

நான் ஊருக்கு போயிட்டு வந்து சொல்ல போறேன்..

பிரியா, அவர் உன் கிட்ட சொல்லிட்டாரா லவ் பண்றேன்னு சொல்லல…

பின்ன…. என்னை பிடிச்சு இருக்கு என் கூட எப்பவும் இருக்கணும் அப்டின்னு சொன்னாரு…

பிரியா, சரி சரி அதை விடு அப்புறம் இந்த முத்தம், நான்வெஜ் கிஸ் இதெல்லாம் கொடுத்தாரா…

இதன்யா கோபம் கொண்டு அவளை திட்டி கொண்டு இருக்கும் நேரம் தான் சித்தார்த் உள்ளே வந்தான்.

இதன்யா, உன் வாயில் எப்பவும் டபிள் மீணிங் தான்!  வேற டாபிக் பேச மாட்டியா! ..

சித் அவள் அறைக்கு உள்ளே நுழையும் போது இது கேட்க அவன் அவள் அமர்ந்து இருந்த இடத்துக்கு நேராக வர அவனை அங்கு எதிர்பாராத அவள்  சட்டென்று பதட்டத்தில் எழுந்து நிற்க அவள் முகம் தவறு செய்தவள் போல் வைத்து இருப்பதை பார்த்தான்.

சித் வேகமாக அவளை நோக்கி அடி எடுத்து வைக்க அவள் உடனே போன் கட் செய்தாள்.

இதன்யா மனதில் அய்யோ நம்ப பேசின எல்லாம் ஒரு வேளை கேட்டு இருப்பாரோ என்று மனதில் ஒரு எண்ணம் தோன்ற இவள் யோசித்து கொண்டு இருக்க

சித், “இந்நேரம் தூங்காமல் என்ன பண்ற?யார் கிட்ட இவளோ நேரம் சிரிச்சு பேசிட்டு இருக்க, நான் இங்கே வீட்டுக்கு உள்ளே வந்தது கூட தெரியாமல் அப்படி யார் கூட பேசிட்டு இருந்த!” 

இதன்யா,  தயங்கி கொண்டே “நான்! நான் வீட்டில் பேசிட்டு இருந்தேன்!…

ஹே டோண்ட் டெல் லைஸ்.. ஐ ஹேட் லைஸ்.. என்று சொல்லி உன் போனை கொடு… என சித்தார்த் அவள் முன் கை நீட்டினான். 

இதன்யா, இல்ல நான் பிரியா கிட்ட பேசிட்டு இருந்தேன்…

இதை கேட்டதும் அவன் அவ கிட்டயா…

ம்ம் ஆமா…

சரி போன் கொடு நான் பார்க்கிறேன்..

இல்ல நான் தர மாட்டேன்…

சித், ஹே ஒழுங்கா தந்திடு டி என்று அவன் அருகில் வர உடனே இவள் வேக வேகமாக எழுந்து பால்கனி கதவுக்கு சித்துவிடம் இருந்து தப்பிக்க  அருகில் செல்ல  இவள் கதவில் கை வைக்கும் நேரம் அவன் அவளின் இடையை பிடித்து இழுத்தான். 

அவள் அந்த அதிர்ச்சியில் இழுத்த வேகத்தில் கதவு சாத்தி கொண்டது…

சித், ஒ ஷிட் என்று அவன் அவளை விட்டு ஹே இப்போ என்ன பண்ண? கதவு நீங்க இளுத்ததில் சாத்தி கொண்டது..

சித் அப்படியே நின்றான்.

அவனிடம் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மீண்டும் இதன்யா கதவுக்கு அருகில் செல்ல சித் அவளிடம் இருந்து போனை பிடுங்க போன் கீழே விழுந்தது…

இதன்யா கோபமாக கவலையாக என் போன் என்று கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது. 

அவள் போனை எடுத்து பார்க்க டிஸ்பிளே தூள் தூளாக உடைந்து நொறுங்கி போய் இருந்தது.

சித் அதை பார்க்க வில்லை அவளை பார்க்க பாவமாக இருந்தது.

அவன்  கீழே அவள் அருகில் வந்து அமர்ந்து அதை வாங்க கைகளை நீட்டிட அவள் தட்டி விட்டாள். 

அவள் அழுது கொண்டே எல்லாம் உங்களால் தான்! முதலில் இந்த இடத்தை விட்டு வெளியே போங்க! என்று கோபத்திலும் போன் உடைந்த கவலையிலும் ஒரு துளி கண்ணீர் கண்களில் எட்டி பார்க்க பேசினாள்.

சித், சரி விடு நான் கேட்கும் போது கொடுத்து இருந்தால் அது உடைந்து இருக்காது.

இதன்யா, அது என்னோட பெர்சனல் நீங்க எதுக்கு பார்க்கனும் நான் யார் கூட வேணாலும் பேசுவேன்… என்று அவள் கோபத்தில் மூக்கு புடைக்க அவனை பார்த்து பேசிட அதை அவன் ரசித்து கொண்டே  இருந்தான்.

சித், “நான் வேனும்ன்னு பண்ணல! அது தெரியாம கீழே விழுந்து  விட்டது டென்ஷன் ஆகாத டி உனக்கு நான் புதுசு வாங்கி தரேன்!”

இதன்யா அந்த போனை பார்த்து கொண்டே” புது போனாம் புது போன் அது யாருக்கு வேணும்! இது என்னோட முதல் போன் நான் இங்கே இருந்து வேலை விட்டு போகும் போது இதுக்கும் பணம் கட்டி வாங்கி போகனும் அப்டின்னு நினைத்தேன்.

ஆனால் நீங்க! என இதன்யா விசும்பி கொண்டே  இப்போ பண்ண வேலையால் என் போனு..  என்று அதை அவள் பார்க்க

சித், ” நீ போன் மேல் இவளோ சென்டிமெண்டா இருப்பன்னு எனக்கு தெரியாது டி பிளீஸ் நான் இன்டென்சனா பண்ணல டி!” 

இதன்யா, நீங்க முதலில் வெளியே போங்க..

இதை கேட்டு சித் அருகில் உள்ள அந்த சொகுசு சோபாவில் கூலாக அமர்ந்தான்.

இதன்யா எழுந்து அவனை பார்த்து வெளியே போங்க.. 

சித் அவள் அங்கு வைத்து இருந்த தின்பண்டங்கள் எல்லாம் பார்த்து விட்டு அதில் ஒன்று எடுத்து ருசிக்க ஆரம்பித்தான்.

அவள் உங்களை நான் வெளியே போக சொன்னேன்..

சித், கதவை திறந்து விடு நான் இப்போவே போறேன்..

இதன்யா வேக வேகமாக கதவை திறந்து பார்க்க கதவு திறக்க வில்லை.. அவளும் இரண்டு பக்கமும் முயற்சி செய்து பார்க்க அப்போதும் கதவு திறக்க வில்லை.

என்னாச்சு ஏன் கதவு திறக்க மாட்டின்குது..

சித், “இந்த கதவை வெளியில் இருந்து துறக்க முடியாது அறையின் உள்ளே இருந்து தான் திறக்க முடியும் பூட்டவும் முடியும்,  இப்போ நீ வெளியே இருந்து சாத்தி விட்டாய்!”

இதன்யா, இப்போ இப்போ என்ன பண்றது? எப்பிடி வெளியே போவது?

சித், யாராவது உள்ளே உன் அறைக்கு வந்து கதவு திறந்தால் நாம் உடனே வெளியே போய் விடலாம்.

இதன்யா,  போச்சு அய்யோ இப்போ என்ன பண்றது?… என்று அவள் குறுக்கும் நெடுக்கும் நடக்க.. 

சித், நான் வேணா ரோசினியை கூப்பிடவா?

அவள் சரி என்றதும் சித் அவள் இருக்கும் அறை பக்கம் ஒட்டி நின்று கொண்டு கூப்பிட செல்ல

இதன்யா வேக வேகமாக அவன் அருகில் வந்து வேணாம் என்று அவன் வாயில் கைகள் வைத்தாள்..

சித்  அதிர்ச்சியாக உனக்கு என்னாச்சு டி..

இல்ல இல்ல நீங்க இங்கே என் அறையில் இருப்பது அவங்களுக்கு தெரிய வேணாம்..

“ஏன் “என்று புருவம் நெருக்கி அவன் கேட்க

“வேண்டாம் அவ்ளோ தான்!…

அதுக்கு ரீசன் சொல்லு..

“அவங்க தவறா நினைத்து விட்டால் அது ரிஷி சாருக்கு தெரிந்து விடும் என்னோட இமேஜ் என்ன ஆவது.!” 

இதை கேட்டு சித், “அவன் தவறா நினைக்க கூடாது! அதுங்க ரெண்டும் ஒரு ஆளு,  ஆனால் நான் உனக்கு முக்கியம் இல்ல அப்படி தானே டி,  எப்படியும் ஒரு நாள் தெரிய தானே போதுது அப்போ என்ன பண்ணுவ?”

“இல்ல அது அது வந்து அதை அப்போ பார்த்து கொள்ளலாம்”.. என்று அவள் சமாளிக்க இவ்வளவு நேரமும் அவனோடு நெருக்கத்தில் பேசி கொண்டு இருந்த அவள் இப்போது தன்னை சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விலகினாள்.

அவள் விலகியதும் அவளின் எண்ணெய் தேய்த்து பின்ன பட்ட ஜடையை அவனை நோக்கி இழுத்தான்.

இதன்யா அப்படியே அவன் மேல் ஒட்டி கொண்டாள்.

ப்ச்ச.. விடுண்க எனக்கு ஜடை வலிக்குது…

சரி சரி என்று அவள் ஜடையை விட்டு  என் பக்கம் திரும்பு..

நீங்க என்னை விடுங்க.. 

நீ திரும்பினால் நான் உன்னை விட்டு விடுவேன்.

இதன்யா, மாட்டேன் நீங்க விடுங்க..

இன்று அவள் அணிந்து இருந்த உடை டாப் அண்ட் பேன்ட் சித் அவளின் இடையில் வருடி கொண்டே “லிட்டில் ஹார்ட் நானே மனசு வைத்து உன்னை விட்டால் தான் உண்டு , அதுவும் நீ எங்கேயும் என்னை விட்டு தப்பி ஓட முடியாது கதவு லாக் ஆகி இருக்கு தெரியும் தானே!” 

இதன்யா, என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது அப்டின்னு உங்க கிட்ட சொல்லி இருந்தேன் தானே  இப்போ நீங்க சீட்டிங் பண்றீங்க…

சித் அவளின் இடையை அழுத்தி பிடித்து அப்படி நான் எதுவுமே உன் கிட்ட சொல்லவே இல்லயே..

ஹே பொய் சொல்றீங்க பிளீஸ் என்னை விடுங்க..

சித், ஆமா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்ன்னு சொன்னேன் இப்போதும் அதை தான் சொல்றேன்.. என்று சொல்லி அவளின் பின் கழுத்தில் முத்தமி்ட

அப் அப்போ விடுங்க என்று நா குலர அவள்  கூறினாள். 

சித், லிட்டில் ஹார்ட் அது ஸ்கூல் சோ அங்கே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சோ அது ஸ்கூல்க்கு போனால் மட்டும் தான் அந்த ரூல்ஸ்ச ஃபாலோ பண்ணனும் டி… 

இதன்யா வெடுக்கென கண்ணை திறக்க 

சித், “இது நம்ப வீடு சோ இங்கே தேவை இல்லாத ஒன்னு” என்று அவன் மெதுவான குரலில் அவள் காதுக்கு அருகில் சொல்லி காது மடலை கடித்தான்.

அவள் கூச்சத்தில் நெளிந்து கொண்டே “இது உங்க வீடு என்னோட வீடு இல்ல!” என்று எதோ சொல்ல வர

இது நம்ப வீடு தான்! 

இல்ல என்று அவள் மீண்டும் சொல்ல

இட்ஸ் யூர் ஹவுஸ்.. 

அவள் மீண்டும்  இல்ல என்று சொல்ல அவளை அப்படியே ஒரே பிடியில் அவனை பார்க்குமாறு திருப்பினான்.

சித், இது நம்ப வீடு யு காட் இட் மை வேர்ட்…

அவள் இல்ல என்று சொல்ல வரும் நேரம் அவள் இதழ்களை அவன் வசமாக்கி கொண்டான்.

இதன்யா அவனிடம் இருந்து விலக முடியாமல் அவன் அவளிடம் ஒட்டி கொண்டான். அவள் கண்களை மூடிக் கொண்டு அவனுடன் கரைந்து தான் போனாள்.

அவன் கைகள் அவளின் இடையை இறுக்கமாக பிடித்து கொள்ள அவன் உணர்வுகளை கட்டு படுத்தி கொள்ள அவளை விட்டான்.

அவள் கண்கள் மயக்க நிலையில் இருக்க அருகில் உள்ள சோபாவில் அமர்ந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு அவளை பார்க்க அவள் அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.

சித் சிரித்து கொண்டே அவளின் கைகளை பிடித்து இழுத்து அருகில் அமர்த்தி கொண்டான்.

பின் அவளிடம் தண்ணீர் கொடுக்க அவள் வாங்க வில்லை..

ஹே வாங்கு டி இல்ல இதையும் நான் ஊட்டி விட வேண்டி வரும்..

எனக்கு வேண்டாம் எனக்கு தாகம் இல்ல..

சரி அப்போ மொத்தமும் நானே குடித்து விடுகிறேன் என்று அவன் குடிக்க

இதன்யா அவனிடம் இல்ல எனக்கும் வேணும் பிளீஸ்.. பிளீஸ்.. என்று சொல்லிட அவன் அவளிடம் நீட்டினான்.

அருகில் இருந்த தீனிகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

இதன்யா, இப்போ என்ன பண்றது?  எப்படி வெளியே போறது..

சித், அதுக்கு மார்னிங் வரை வெயிட் பண்ணனும்.

அவள் உங்க கிட்ட போன் இல்லையா ஐ மீன் எடுத்து வரலயா.. என்னோட போன் உள்ளே இருக்கு… என்று சொல்லி கொண்டே எல்லாம் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

ரொம்ப பசிக்குது உன் டேஸ்ட் நல்லா தான் இருக்கு பட் இதில் எல்லாம் கலோரி அளவு எல்லாமே அதிகம்..

இதை கேட்டு அவள் கோபம் கொண்டு அப்போ நீங்க ஒன்னும் சாப்பிட வேண்டாம் கொடுங்க என்று பிடுங்கினாள். 

ஹே இட்ஸ் ஓகே எனக்கு வேனும் டி கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி lip fusion ல என்னோட எனர்ஜி கலோரி எல்லாம் யூஸ் பண்ணிட்டேன்..

இதன்யா, அது என்ன fusion ஒ பிசிஸ்க்ஸ்  பிரைன் முடியல….ஆமா அது என்ன லிப் fusion? .. 

மம் அதை எக்ஸ்ப்லைன் பண்றேன்.. உனக்கு என்னை விட அறிவு கம்மி தான்…

திஸ் டூ மச்.. 

சித் அந்த நொறுக்கு தீனி எல்லாம் சாப்பிட்டு விட்டு எனக்கு தண்ணி வேணும்..

இதன்யா, வாட்டர் காலி ஆகிடுச்சு…அவன் உதடுகளை துடைத்து கொண்டே கைகளை தட்டி விட்டு ஐ ஃபீல் தேர்ஸ்ட்டி.. என்று அவளை பார்க்க

இதன்யா, நீங்க தானே லாஸ்ட்டா குடித்து காலி பண்னிங்க இப்போ தண்ணிக்கு எங்கே போறது…

சித் அவளை இழுத்து இதழ் நோக்கி குனிய 

இதன்யா,தள்ளி போங்க என்று தள்ளி விட..

ஹே நீ தானே டவுட்டு கேட்ட.. என்ன? லிப் fusion..

உன்னோட லிப் என்று அவள் இதழ்களை வருடி என்னோட லிப் என்று சொல்ல இதை கேட்டதும் அவள் அவனை முறைத்து பார்த்தாள். 

சித், ஹே இப்போ எதுக்கு உன் புருவம் galaxy வரைக்கும் போயிட்டு வருது…

அவள் அவனை தள்ளி விட முயற்சி செய்ய சரி சரி டென்ஷன் ஆகாத உன்னோட மூக்கு அப்படியே ரெட்டா சிவக்குது என்று சொல்லி வழக்கம் போல் முக்கோடு அவன் மூக்கை உரசி விட்டு அவளை விட்டு  எழுந்து நின்று கொண்டான்.

சித் நேராக அந்த நிலவினை பார்த்து ரசிக்க தொடங்கினான்.

சிறிது நேரம் அவளிடம் எதுவும் பேசவில்லை.

அவள் அவன் அருகில் போய் நின்று கொண்டு உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?.

ம்ம்..

இதன்யா, தாரா மேம் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா?.

சித், ம்ம் ஆமா நான், தாரா ரெண்டு பேரும் சின்ன வயசில்  இருந்தே ஒரே ஸ்கூல்ல ஒன்னா படித்தோம்..

என் தாத்தா அவங்க தாத்தா ரெண்டு பேரும் ஃபேமிலி ப்ரெண்ட்ஸ்..

இதன்யா, அவங்க கிட்ட என்னை பற்றி சொண்னிங்களா? 

நிஜமா இல்லை..

அப்புறம் அவங்க என்னை..

சித், உன் கிட்ட வந்து கேட்டாளா?

அவள் இல்லை என்று தலை ஆட்டிட..

சித், என்னை சுற்றி என்ன நடந்தாலும் அவ கண்டு பிடித்து விடுவாள். என்னை பற்றி அவளுக்கு என்னை விட அதிகமா தெரியும்… என்று அவளை பற்றி பேசவும் இதன்யாவுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

சித் அவளின் முக வாட்டத்தை பார்த்து அவளை இழுத்து இடையில் கை போட்டு கொண்டு “அவ என்னோட பிரென்ட் கிட்ட தட்ட ரோசினி மாதிரி நீ நினைக்கிற மாதிரி வேற எதுவும் இல்ல.”

அவள் அவனிடம் இருந்து விலக முயற்சி செய்து கொண்டே” நானா! நான் ஒன்னும் நினைக்கல.” என்று சொல்லி “கொஞ்சம் என் கிட்ட இருந்து தள்ளி நில்லுங்க!”

சித், ஹே ஓவரா பண்ற டி நான் இங்கே தனியா தானே நின்னு கிட்டு இருந்தேன். நீயா வந்து என் பக்கத்தில் நின்ன இப்போ என் மேல் blame பண்ற.. கொஞ்சம் அமைதியா இரு..

இதன்யா, நீங்க தான் என்னை எப்பவும் ரூல் பண்றீங்க என்னோட பேச்சை நீங்க ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது இல்ல..

அவன் இதை கேட்டதும் தந்திரமாக புன்னகை செய்து விட்டு அவளை விட்டான்.

 இதில் சிரிக்க என்ன இருக்கு…

சித், நீ என்னை ரூல் பண்ற நாள் ரொம்ப தூரத்தில் இல்ல… இதை கேட்டதும் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் அந்த இடத்தில் இருந்து சோபாவில் போய் அமர்ந்தாள்.

ஒரு சிறிது நேரம் அந்த அமைதியை ரசித்து கொண்டு இருந்தான். திரும்பி அவளை பார்க்க அவளுக்கு தூக்கம் வந்து விட்டது..

சித் அவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவளை பார்த்தான். 

 இதன்யா.. அவள் கண்களை தேய்த்து கொண்டே அவனை பார்த்தாள்.

இங்கே மடியில் வந்து படுத்துக்கோ.. இதை கேட்டதும் அவள் வேண்டாம் என்று தலை அசைக்க.. அவளை இழுத்து அவன் மடியில் தலை வைத்து அவள் முகத்தை வருடி விட்டான்.

அவளுக்கு இருந்த தூக்கம் எல்லாம் இருந்த  இடம் தெரியாமல் ஓடி போனது.. அவன் அவள் தலையை வருடி விட்டு விரல்களுக்கு சொடுக்கு எடுத்து விட்டு அவளை பார்த்து க்ளோஸ் யூர் ஐஸ் பேபி என்று சொல்ல அவள் கண்களை மூடி கொண்டாள்.

ஆனால் கரு விழிகள் அங்கும் இங்கும் உருட்டி கொண்டே இருந்தாள். அவன் என்ன செய்கிறான் என்று கண்களை திறந்து பார்க்க அவன் அவளுக்கு முன் அசதியில் கண்கள் மேலே வானத்தை பார்த்தபடி உறங்கி இருந்தான். சிறிது நேரத்தில் கழுத்து வலிக்கும் போலும் அந்த பக்கமும் இந்த பக்கமும் தலையை திருப்பி கொண்டு இருக்க அதை பார்த்து மனம் தாங்காமல் அவள் சார்! சார் !என்று அழைக்க.. கண்களை மெதுவாக திறந்து பார்த்தான்.

ஹே என்னாச்சு இன்னும் தூங்களயா? 

இல்ல எனக்கு தூக்கம் வரல நீங்க இந்த சோபாவில படுது கொள்ளுங்கள்..

சித், எனக்கு பில்லோ வேணும் இல்லன்னா கழுத்து பிடித்து கொள்ளும் காலையில் வலிக்கும் சோ நான் இப்படியே தூங்குகிறேன், நீ எழுந்துக்க வேணும்னா எழுத்துக்க தூங்கும் போது என் மடியில் எப்போ வேணுமோ படுத்துக்கோ..

இதன்யாவின் மனம் அவன்பால் ஈர்த்தது. “இவ்வளவு மென்மையாக நடந்து கொள்கிறான். இப்படி ஒரு ஆடவன் இருக்க முடியுமா? .. இவனை வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் துரதிஷ்டசாளி இவனை வேதனை படுத்தும் அனைவரும் நரகத்துக்கு தான் செல்வர்!”என்று நினைத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

சிறிது நேரம் அவன் சிரமப்படிவதை பார்த்து விட்டு அவன் அருகில் போய் அமர்து கொண்டாள்.

இதன்யா, சார் சார்..

ம்ம்

“இங்கே என்னோட மடியில் தலை வைத்து கொள்ளுங்கள்” என்று சொல்ல அவன் அப்போதும் அப்படியே இருந்தான்.

சிறிது நேரம் கழித்து கண்களை வெடுக்கென்று திறந்தவன் அவளை பார்த்து

சித், “இப்போ இப்போ என்ன சொன்ன?”

அவள்…? 

தொடரும்….

EPI 50

                     சம்பவம்!.. 

இதன்யா, “நீங்க ரொம்ப சிரம படுகிறீர்கள்? அதனால் இங்கே என் மடியில்…  உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேண்டாம்!”.

சித்,  உனக்கு கஷ்டம் இல்ல தானே! 

இஷ்டம் தான் அவள் இட வலமாக தலை அசைத்தாள். அவன் அவள் மடியில் தலை வைத்து அவளின் இடையில் சில முத்தம் பதித்தான்.

இதன்யா, ஹேய் என் என்ன பண்றீங்க..

இல்ல டி இது பெட் டைம் கிஸ் என்று சொல்லி அவளை குறு குறுக்க வைத்து விட

இதன்யா, அப்போ நீங்க எழுங்க.. சாரி டி என்று சொல்லு இரு கைகளையும் அவளை கட்டி கொண்டு தூங்கினான்.

இதன்யாவுக்கு அவனோடு இருக்க மிகவும் பிடித்து போனது “இந்த நாள் மட்டும் இப்படியே நீண்டு விடாதா!” என்று தோன்றியது.

அவள் கைகள் அவன் தலையை கோதி விட்டபடி அவன் முகத்தை பார்த்தாள். “அழகான ஒட்டிய இரு புருவம்  கணைகளான கண்கள் கூர் மூக்கு, சவரம் செய்யப்படாத தாடி, அவளை எப்பொதும் வெட்க பட வைக்கும் இதழ்கள் இதன்யாவுக்கு பிடித்த அந்த குரல் வலை அந்த சங்கு போன்று இருக்கும் அமைப்பை தொட்டு பார்த்தாள். கால்களை சுருக்கி கொண்டு அவளின் இடையை கட்டி கொண்டு தூங்கி கொண்டு இருந்தான்.

அவனது மூச்சு காற்று அவளின் இடையை ஒவ்வொரு முறையும் தொட்டு சென்றது..

அவனை இப்போது இதன்யாவுக்கு முத்தமிட வேண்டும் என்று முதன் முதலாக தோன்றியது.  

இதன்யா அவனை ஒரு நிமிடம் பார்த்தாள். ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றம் கொண்ட அவன் கால்களை சுருக்கி கொண்டு அவளின் இடையை கட்டி கொண்டு உறங்கி கொண்டு இருந்தான். அவனுடைய பிடி மிகவும் அழுத்தமாகவும் இரும்பு போல இருந்தது. சித்தார்த்தின் முகம் அந்த நெருக்கமான புல்வெளி போல் இருக்கும் தாடி மிகவும் அழகு இவனை யாருக்கு தான் பிடிக்காது.

ஒரு வேளை முதல் பார்வையில் இதன்யா மற்றும் சித்தார்த் இருவருக்கும் இடையில் சண்டை மட்டும் நடக்காமல் இருந்து இருந்தால் கூட பூஜா, பிரியா, மற்றும் கல்லூரி தோழிகள் போல் சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று இதன்யாவுக்கு தோன்றி இருக்கும்.

ஆனால் இப்படி தொடர்பே இல்லாமல் தீடீர் என்று மோதி கொண்டு சண்டையிட்டு இப்போது இது காதலில் வந்து முடிந்து இருக்கிறது.

அன்று பள்ளியில் முதன் முதலாக மாஸ்க் இல்லாமல் சித்தார்த் நடந்து வரும்போதே அவள்  அணிந்து இருந்த கண்ணாடியை மீறி அவனை ரசித்தாள்.

அப்பொழுது தான் அவள் மூளை “அவனே உன் எதிரி அவனை போய் இப்படி அப்பட்டமாக ரசித்து கொண்டு இருக்கிறாய், வெட்கமா இருக்கு! உன் மனசு மானம் கெட்ட மனது!” என்று திட்டி விட அதன் பின் அவள் பார்வையை ரிஷி பக்கம் திருப்பினாள்.

சித்தார்தின் மீசை முடிகள் அவள் இடையை ஒரு பக்கம் தீண்ட அவன் மூச்சு காற்று ஒரு பக்கம் கூசிட அவள் வெட்கி போய் அமர்ந்து இருந்தாள்.

அவன் தலை முடியை தொட்டு பார்த்தாள். அவன் முகத்தை அருகில் இருந்து பார்த்தாள்.” எவ்வளவு கம்பீரமான முகம் இப்படி ஒருவனுக்கு நம்மை பிடித்து இருக்கிறதா? என்று நினைத்து பார்த்தாள்.

அவன் நெற்றிய தொட்டு நீவி விட்டவள் இந்த கோணத்தில் அவனை பார்க்கும் போது அவள் மனம்” இவன் உன்னுடையவன்” என்று தோன்றியது.

அது கேட்கும் போதே உடலில் புது ரத்தம் பாய்ந்தது. அவன் நெற்றியில் அவளின் முதல் முத்தத்தை பதித்தாள். இப்படியே அவனை விடியும் வரை ரசித்து கொண்டே எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே தெரிய வில்லை.

அதிகாலை எப்பொதும் போல் எழுந்து பார்க்க அப்போது தான் நேற்று நடந்த அனைத்து விஷயமும் நினைவுக்கு வந்தது.” இந்த விடியல் என்னவளின் மடியில்” சித்தார்துக்கு மனம் எல்லாம் நிறைவாக இருந்தது. அவளின் வாசம் அவன் நாசியில் நிறைந்து இருந்தது.

சித்தாத் அவளை பார்க்க அவளின் ஒரு கை அவன் தலையிலும் ஒரு கை அகன்ற மார்பிலும் வைத்து மேலே பார்த்தவாரு அப்படியே சோபாவில சாய்ந்து உறங்கி இருந்தாள்.

அவன் மனம் ஒவ்வொரு நாளும் உன்னோட மடியில் தான் எனக்கு விடியல் இருக்கணும் டி இதை விட வேற எதுவும் தேவை இல்ல அப்டின்னு சொல்ல மாட்டேன் infinite time நீ எனக்கு வேணும் அப்போ கூட இந்த மனசு எனாஃப் ஆகாது. நீ  வேணும் தட்ஸ் ஆல் என்று சிரித்த முகமாக அவளின் இடையில் முத்தம் பதிக்க அவள் தூக்கத்தில் நெளிந்து கொண்டு முகத்தில் புன்னகையுடன் கொஞ்சம் திரும்பி படுத்தாள்.

சித்தார்த் அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்து அதிகாலை சூரியனை பார்த்தான். அவன் கையில் அணிந்து இருந்த ஸ்மார்ட் வாட்ச்சின் பட்டனை அழுத்தி ப்ளூ டூத் ஆன் செய்து எது எதோ செய்தான். அடுத்த சில மணி துளிகளில் இதன்யாவின் அறைக்கு சதீஷ் வந்தான். காட்ஸ் பால் கனி கதவை உள்ளே இருந்து திறந்து விட்டு வெளியே சென்று விட்டனர். 

 இதை அவன் நேற்றே செய்து இருக்கலாம் ஆனால் அவளுடன் இந்த பொழுது கிடைத்து இருக்காதே..

சித் அவளை பூ போல் தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்தான். அவள் குட்டி குரட்டையுள் தூங்கி கொண்டு இருந்தாள். அவள் நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தம் அவளது இதழில் ஒற்றி எடுத்தான். வெளியே பால் கனி கதவை சாத்திட வர அங்கு இவ்வளவு நேரம் நடந்த அத்தனையையும் அபினவ் வீடியோ எடுத்து கொண்டு இருந்தான். 

“மிஸ்டர் சித்தார்த் கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க!”

டேய் என்ன பண்ற? எதுக்கு என்னோட வொர்க் நாள் ரூம் க்கு வந்த என அவன் இந்த பக்கதில் இருந்து சித் கத்தினான். 

அபி சிரித்து கொண்டே” நீ அந்த பொண்ணு ரூமில் வொர்க் அவுட் பண்ற மாதிரி தெரிந்தது. அது தான் நான் எக்சர்சைஸ் செய்யலாம் அப்டின்னு வந்தேன் என்ன ப்ரோ?” என கண்ணடித்தான். 

சித்,  இரு டா ராஸ்கல் வரேன் என வேகமாக உடற்பயிற்சி அறையை நோக்கி சென்றான். 

அபி, “நீ கிட்ட வந்த இது எல்லாத்தையும் நான் இப்போவே பவானி சித்திக்கு அனுப்பி விடுவேன் எப்டி வசதி!”

சித், அனுப்பி விடு உன்னோட தாய்லாந்து மசாஜ் அப்புறம் மடகாஸ்கர் டூர் பிக்ஸ் கூடவே பிகினி பிக்ஸ் என் கிட்ட இருக்கு அதை நான் உங்க டாட்க்கு அனுப்புறேன். அண்ட் என சித் போனை எடுத்து “அதர் டிவைஸ் டவர் கட் பண்ணி விடுங்க!”

அபி ஒரு நிமிடம் பயந்து எட்சிளை விழுங்கி கொண்டே சித்து என்ன பண்ற? 

சித், ஹான் என அரிகில் உள்ள டம்பில்சை தூக்கி கொண்டே தமிழில் ஒரு வார்த்தை இருக்கும் “சம்பவம்”சம்பவம் ஃபார்வேர்ட் ஆகி போச்சு!. 

அபி வேகமாக அருகில் வந்தான். என்ன பண்ண? 

சித், உன்னோட மடகாஸ்கர் அண்ட் தாய் மஸாஜ் ரெண்டும் ஹாட்டா ஹைத்ராபாத் பறந்திடுச்சு! என புருவம் உயர்த்தி கொண்டே கூறினான். 

அபி நகத்தை கடித்து கொண்டு எதுக்கு டா இப்படி பண்ண? நான் சும்மா விளையாட்டுக்கு உன்னை கிண்டல் பண்ண தான் அப்படி சொன்னேன். ஆனால் நீ உண்மையாவே அனுப்பி விட்டாயா! 

சித், அப்டியா சோ சாரி!..

அபி, உன்னை என்ன செய்கிறேன் பாரு டா இப்போவே அது எல்லாம் பவா சித்திக்கு அனுப்பிரென்… 

சித், அனுப்பு அது தான் எனக்கும் வேணும் எப்டியும் மம்மி கிட்ட நானே சொல்லணும் அப்டின்னு நினைத்தேன் அது உன்னால் தெரிந்தால் எனக்கு ரொம்ப ஹாப்பி என கண் சினிட்டினான். 

சித் பேசி கொண்டு இருக்கும் போதே அபிக்கு தந்தை மற்றும் தாயிடம் இருந்து அழைப்பு வர தொடங்கியது. 

அபி சித்துவை முறைத்து கொண்டே நானா! லேது அது நேணு காது! நிசங்கா நேனு… நானா! நானா!. 

அதற்குள் போன் அபியின் அம்மா வாங்கி கொண்டார். அம்மா இல்ல மா அது நான் இல்ல.. 

தாரணி, உன்னை பற்றி கேட்கல உன் பின்னாடி இருப்பது யாரு டா! எங்க  மானத்தை வாங்கி விட்ட இப்படி தான் நீ ஹாஸ்பிடல் பார்த்து கொண்டு இருக்கியா!. என அபினவ் அம்மா தாரணி பேச பேச வீரசிம்மா போன் வாங்கினார். 

நானா! என அபி அழைக்க.. 

அவர் அவனை உடனே வீட்டுக்கு வர சொல்லி விட்டார். 

அபி உஷ்ன மூச்சுடன் சித்தார்த்தை பார்த்தான். சித், இனி சும்மா கூட இப்படி என் கிட்ட விளையாடாத டா!. என வேர்க்க விறுவிறுக்க சித் வெளியே செல்ல.. 

அபி அதே இடத்தில் நின்றான். சித், இப்போ வரயா? இல்லையா?

“நெவர்”

சித் நின்று வெளியே கொண்டு வர பட்ட லெமன் டீயை ஒரு மிடுக்கு குடித்தவன். இன்னிக்கு உன்னை காலேஜ் ல ஒரு மெடிக்கல் கேம்ப் போட கூட்டி போகலாம் அப்டின்னு நினைச்சேன். பட் நீ இவளோ கஷ்ட பட்டு வர வேண்டாம்.. 

அபி, சித்து பாய்! என்ன டா நீ இப்போவே வரேன்!. என காரி துப்பிய அனைத்தும் துடைத்து விட்டு பேசி கொண்டே பின்னால் சென்றான். 

சித், காலேஜ் இல்ல ஸ்கூல் ஓகே வா!.. 

அபி, சித்தார்த் என்னை சொப்பு விளையாட கூட்டி பொராயா!. என கோபம் கொண்டு முன்னால் நடந்தான். 

சித், சரி போ இப்போ மாலத்தீவு போட்டோ கொஞ்சம்!..

அபி, வரன் டா வரேன் யாருக்கும் எதையும் அனுப்பி வைக்காத.. என பின்னால் சென்றான். 

அதன் பின் வேலை தொடர்பாக மெடிக்கல் கேம்ப் தொடர்பாக பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு அவன் அங்கு இருந்து அவன் காலை பணிகளை செய்ய ஆரம்பித்தான்.

சித்தார்த் அங்கே வேலை செய்பவர்களிடம் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி வைக்க இதன்யா  காலை 9.30 மணி வரை தூங்கினாள்.

ரோசினி  9.00 மணிக்கு எழுந்து கண்களை தேய்த்து கொண்டே வெளியே வர அங்கே தாரா டிப் டாப்பாக கிளம்பி உணவு மேஜை அருகில் அமர்ந்து இருந்தாள்.

ரோசினி, தாரா தனு ஸ்கூல்க்கு போய்ட்டாளா?

அவள் போனை நோண்டி கொண்டே அவ இன்னும் ரூம் விட்டு வெளியே வரவே இல்ல.. 

இதை கேட்டு ரோசினி ஆச்சரியமாக பார்த்து விட்டு நிஜமாவா எப்பொதும் 6 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவாள் இன்னிக்கு இவளோ நேரம் தூங்கிவிட்டாள்.

தாரா, ஒரு வேளை நைட்டு ஃபுல்லா அவ பாய் பிரென்ட் கூட பேசிட்டு இருக்கலாம் யாருக்கு தெரியும்..

ரோசினி இதை கேட்டு சிரித்து கொண்டே சான்ஸ் லெஸ் உலகத்தில் சில அதிசயம் இருக்கு

அவளோ என்ன? 

“அது ஒன்னு என் கூட பொறந்தது (சித்தார்த்) எப்பொதும் புதிராகவே சுற்றி கொண்டு இருக்கும்.”

தாரா, அப்புறம்? 

“இன்னொன்று இதன்யா லவ் பண்றது . அண்ட் எனக்கு வந்து வாய்த்தது ரிஷி ஒரு வார்த்தை பேச கூட காசு கொடுக்கணும்.”

இதை சொல்லி கொண்டு இருக்கும் போதே இதன்யா அவள் அறையில் இருந்து எழுந்து வெளியே வந்தாள்.

இதன்யா,  என்ன ரோசினி இன்னிக்கு 6.00 மணிக்கே எழுந்து விட்டீர்கள்.  ரிஷி அண்ணாவை இம்ப்ரெஸ் பண்ண எதுவம் திட்டம் வைத்து இருக்கின்களா..

ரோசினி, தாரா இருவரும் இதை கேட்டு சிரித்து விட்டு

தாரா, டீச்சர் மணி இப்போ காலை 9.00 மணி..

என்ன 9.00 மணியா? அய்யோ போச்சு போச்சு இன்னிக்கு நான் எப்படி ஸ்கூல்க்கு போறது.. இனி உன்னால் ஸ்கூல்க்கு போக முடியாது..

ரோசினி, தாரா சித்து பொயிட்டானா.. இது என்ன கேள்வி அவனே ஒரு கிளாக் அவன் எப்போவோ கிளம்பி போய் விட்டான்.

இதன்யா,  சாடிஸ்ட் எப்படி கதவை திறந்து வெளியே போனான். அவன் மட்டும் போயிட்டான்.

தாரா, இதன்யா எதுவும் சொண்ணிங்களா.. என வேண்டும் என்றே அவள் கேட்க..

ஹான் இல்ல மேம் ..

ரோசினி, ஹே இன்னிக்கி லீவ் போட்டு விடு நான் உனக்கு லீவ் தரேன் இதுக்கு மேல் நீ ஸ்கூல்க்கு போன அப்புறம் சித்து உன்னை நீல் டவுன் போட வைப்பான்..

அவள் சோகமாக முகத்தை வைத்து இருக்க

தாரா, அப்படி என்ன ஸ்கூல் போக டீச்சர் ரொம்ப ஈகர்ரா இறுக்கிங்க.?யாரையும் மிஸ் பண்றீங்களா?

இதன்யா, மேம் எனக்கு தலை வலிக்குது நான் உள்ளே போறேன் என்று மலுப்பி விட்டு உள்ளே சென்றாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் தாரா அந்த புது முக கதா நாயகனை பார்க்க அந்த உயர் தர xyz ரெஸ்டாரன்ட் சென்றாள்.

சதீஷ் இதன்யாவை பார்க்க வந்து இருந்தான். இதன்யா குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாள்.

சாப்பிட அமர்ந்த நேரம் சதீஷ் வர

ரோசினி, என்ன சார் இந்த பக்கம்?

இல்ல மேம் கொஞ்ச ஸ்கூல் விஷயமா மிஸ்சு கிட்ட பேச வந்தேன்..

அவள் திரு திரு வென முழிக்க மேம் சதீஷ், சித்து சார் சொன்னாரே அந்த ஆண்டு விழா பற்றி உங்க கிட்ட சில விஷயம் பேசணும்…

“நானா எனக்கே ஒன்னும் தெரியாதே!’

சார் தான்  உங்களை பார்த்து பேசி விட்டு வர சொன்னா் என்று சொல்ல

இதன்யா அவளுடைய கூந்தலை ஒரு பக்கம் எடுத்து போட்டு கொண்டு மம் சொல்லுங்க சார் என்று அவன் இருக்கும் இடத்துக்கு செல்ல
ரோசினி சாப்பிட அமர்ந்தாள்.

அவன்  ரோசினி என்ன செய்கிறாள் என்று பார்த்து விட்டு இதன்யாவிடம் “மேம் பாஸ் உங்க கிட்ட இதை கொடுக்க சொன்னார்!” என்று ஒரு சதுர வடிவ பெட்டிய நீட்டிட அதற்கு உள்ளே ஒரு புது போன் இருந்தது.

சதீஷ் , சார் எல்லாம் ஏற்கனவே இன்ஸ்டால், செட்டிங் எல்லாம் செய்து வைத்து விட்டார். உங்க சிம் ஆல்ரெடி போட்டாச்சு நீங்க ஒரு முறை அவருக்கு கால் பண்ணி பேசி விடுங்கள்..

இதன்யாவுக்கு அந்த போனை வாங்க விருப்பம் இல்லை ஆனாலும் இப்போது என்ன செய்வது என்று அந்த போனை சதீஷ் கிட்ட கொடுத்து விட்டாள் .

சார் எனக்கு வேண்டாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள்..

சதீஸ், மேம் நீங்கள் போன் கொடுப்பதற்கு முன் இதை ஒரு தடவ பாருங்கள்.. என்று ஒரு லெட்டர் கவர் நீட்டினான்.

அது சதீஸ்சின் வேலை ராஜினாமா கடிதம்..

இதன்யா திடுக்கிட்டு என்ன சார் இது? 

சதீஷ், மம் ஆமா மேடம் நீங்க போன் வாங்க வில்லை என்றால் நான் வேலை விட்டு போக வேண்டும்.. இனி உங்க முடிவு என்று சதீஷ் சொல்ல

இதன்யா மனதில் இவனை என்ன பண்றது?  என்று நினைத்து கொண்டு கொடுங்க என்று போனை வாங்கி கொண்டாள்.

சதீஷ் நின்று கொண்டு இருந்தான். “என்ன சார் இன்னும் எதுவும் கண்டிசன் இருக்கா?”

மேம் பாஸ்க்கு கால் பண்ணி மறக்காமல் பேசி விடுங்கள் என்று சொல்ல..

“சார் நான் பண்றேன் இப்போவே பண்ணி தொலையிரேன்.” என்று நினைத்து கொண்டு அவனிடம் “இதோ இப்போவே பண்றேன் சார்!” என்று அவனுக்கு அழைத்தாள்.

சதீஷ் அவள் போன் செய்கிறாள் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பினான்.

சித்தார்த், அவள் அழைப்பை ஏர்று காதில் வைத்து என்ன டி போன் வேண்டாம்ன்னு சொன்னியா?

இதை கேட்டு அவள் திடுக்கிட்டு உங் உங்களுக்கு எப்படி தெரியும்..

சித் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு உன்னை பற்றி எனக்கு எல்லாமே தெரியுமே.. ஐ நொ டி..

இதன்யா கோபமாக இப்போ எதுக்கு கால் பண்ண சொன்னிங்க?

எப்போ எழுந்த? 

நான் 9.00 கிளாக் தான் எழுந்தேன். இதுக்கு எல்லாம் நீங்க தான் காரணம் எதுக்கு நீங்க என்னை எழுப்பி விடல..  இதை கேட்டதும் சித் ஒரு புன்னகையை சிந்த அந்த மெல்லிய சத்தம்

இதன்யாவுக்கு கேட்கவும் அவள் இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறார்கள் இது ஒன்னும் ஜோக் இல்ல..

இதன்யா தாமதாக எழுதது பற்றி சித்தார்த் தான் காரணம் என்று சொல்லவும் உடனே அவன் சிரிக்க,

இப்போ எதுக்கு சிறிக்கிறீங்க?.

சித், அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நீ இன்னும் வளருள டி..

இப்போ நீங்க சொல்ல போறீங்களா இல்லையா..

சித், “நான் சொன்னா கேளு இதன்யா உனக்கு புரியாது!”

அவள் நான் ஒன்னும் சின்ன பொன்னு இல்லை சொல்லுங்க..

சித், மம் சரி தான் என்னோட கிஸ் வாங்கி திரும்ப எனக்கு கொடுக்கும் அளவுக்கு நீ பெரிய பொன்னு ஆகிட்ட..

அவள் இதை கேட்டதும் திடுக்கிட்டு நான் போன் வைக்கிறேன்..

ஹே அப்போ நான் ரீசன் சொல்ல வெனாவா..

அப்போ சொல்லுங்க..

நீ தானே சொன்ன என்னால தான் லேட்டா எழுந்தேன்னு அப்போ நான் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேனா பிசிக்கா அண்ட் மெண்டலா? என அவனுடைய சீட்ல நன்கு சாய்ந்து கொண்டே கால் எடுத்து சுவரில் வைத்து கொண்டு கேட்டான். 

அவள் நீங்க சொல்றது ஒன்னும் புரியலயே..

சித் யோசித்து கொண்டே மம் இப்போ புரியும் பாரு..

சொல்லுங்க..

சித், என்னை நினைக்கும் போது இதன்யா மிஸ்சுக்கு ஆக்சிடோசின் வேலை பில்ட் ஆகுதா ..

அவள் தன்னிச்சையாக அட ஆமா.. என்று சொல்லி இல்ல என்று உடனே மறுத்தாள் . இல்லைவே இல்ல!.

ஹே  பொய் சொல்லாத அப்போ உள்ளுகுள்ள லிட்டில் ஹார்ட்க்கு உள்ளே நான் தான் இருக்கேன்..

இதன்யா,” யாரு சொன்னா? அப்படி எல்லாம் ஒரு மண்ணும் இல்ல நீங்க என்ன திறந்து பார்த்தது போல் சொல்றீங்க.. என் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்.” 

சித் சிரித்து கொண்டே கமிங் சூன்ல உன்னை மொத்தமும் நான் தான் டி துறந்து பார்க்க போறேன்..

இதை கேட்டதும் அவளுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரிய வில்லை.

சித் இந்த இறுக்கமான சூழலை கொஞ்சம் மென்மையாகிட “ஐ மின் உன்னோட இதயத்தை சொன்னேன்” 

சான்ஸ் இல்ல நான் என்னோட முடிவை உங்க கிட்ட சொல்லவே இல்ல..

“உன் லிப்ஸ் பொய் சொல்லுது உன் ….. உன்  இல்ல என்னோட லிட்டில் ஹார்ட் அது என்னை தேடி வரும் அண்ட் ஊருக்கு போயிட்டு வந்தால் நீ என் கிட்ட சொல்ல போற வெயிட் பன்றேன் டி!” என்று சொல்லி போன் வைத்தான்.

எங்கு பேசினாலும் இங்கே வந்து விடுகிறானே! இவன் பேச்சில் நான் எங்கேயோ தொலைந்து விடுகிறேன். என்று நினைத்து கொண்டு அவள் சாப்பிட சென்றாள்.

இங்கே தாரா அந்த XYZ ரெஸ்டாரன்ட்க்கு சென்று கொண்டு இருந்தாள்.

அவள் அந்த இடத்தில் இறங்கியதும் அவளுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் அங்கு ஒரு டேபிலில் அமர்ந்து கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.

அந்த புது முக நடிகரிடம் இருந்து போன் வந்தது.

ஹலோ மேம் சாரி ஃபார் தி டிலே..

தாரா, இட்ஸ் ஓகே.. நீங்க எங்கே இருக்கிங்க, என்னை தெரியுமா..

அவன், மேம் உங்களை எனக்கு தெரியாமல் இருக்குமா நானே வருகிறேன் மேம்..

தாரா, பட் நான் கொஞ்சம் என் அடையாளத்தை மறைத்து கொண்டு வந்து இருக்கிறேன்..

உங்க ட்ரெஸ் கோட் சொல்லுங்க.. ஓ அப்படியா மேம் நான் இன்னிக்கு கிரே ஷர்ட், பிளாக் ஃபார்மல்ல வந்து இருக்கிறேன் நான் உள்ளே வந்து விட்டேன் மேம் என்று சொல்ல..

டக் டக் என்று நடந்து கொண்டே சென்றான். பின்னால் இருந்து பார்க்கும் போதே கம்பீரமான தோற்றம் தாரா மனதில் மம் நல்ல எதிர் காலம் இருக்கு இவளோ பாஸ்டா நடக்கிறான்.

தாரா அந்த ஆடவனிடம் ஹலோ உங்களை தான்.. அவன் போன் பேசி கொண்டே பின்னால் திரும்பி அவளை பார்த்து வாட் ஹப்பென்?who are you? என்று கேட்க தாரா அவனின் கம்பீரமான தோற்றம் க்ளீன் சேவ், பிளாக் கூலர்ஸ், அவனின் அளவான மீசை, அடர்த்தியான புருவங்கள், அந்த வறண்டு போன ஒரு உதடுகள்.. ஆனால் கண்கள் அது பெண்களுக்கு இருக்கும் கண்களை போல் மயக்கும் கண்கள் யார் அவன்? 

தாரா அவனிடம் விழுந்து விட்டாள்.. 

யார் அவன்? 

தொடரும்… 

You may also like

Leave a Comment