ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை 35

by Pradhanya kuzhali
277 views

Epi 35 

அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் போல, ‘டிங் டாங்’ என்று முழிப்பு தட்டியது ஆடவனுக்கு. அந்த ஆடம்பர படுக்கை அறையில் அவளின் வாசம் காற்றோடு கலந்திருந்தது. கண் விழிப்புத் தட்டிய அந்த நொடியில், அவனது கரங்களுக்குள் ஒரு மென்மையான பூவைப் போல ஒடுங்கிக் கிடந்த சாவித்திரியின் மாநிறத் தேகம், அவனது ஆடவனின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து, மலை போல உயரத் தொடங்கியது!

இரவு போட்ட மாத்திரையின் வீரியத்தில் காய்ச்சல் முற்றிலும் குறைந்திருந்தது. இப்பொழுது முழுக்க முழுக்க அவனது எண்ணத்தில் சாவித்ரி மட்டுமே நிறைந்திருந்தாள். அவளைத் தன்னுள் முழுமையாக ஆட்கொள்ள வேண்டும் என்ற ஆசை, அவனது நரம்புகளைத் தீவிரமாக முறுக்கேற்றியது.

‘எப்படி டிரஸ்ல இருக்கா? நேத்து டிரஸ் இல்லாமதானே தூங்குனோம்?’ எனச் சந்தேகம் வேறு எழுந்தது ஆடவனுக்கு. சோர்வுடன் உறங்கிக் கொண்டிருப்பவளைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை; ஆனால், குட்டி குட்டி முத்தம் கொடுக்கலாம் என்று நினைத்தவன், இப்பொழுது அவளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டான். மெதுவாக அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான். அந்த மென்மையான அமுதத்தின் சுவை பட்டதும் அவனது வேகம் அசுரத்தனமாக மாறியது.

சாவித்ரி திடுக்கிட்டுக் கண் விழிப்பதற்குள், அவளது இடையை ஒரே தூக்காகத் தூக்கித் தன் வலுவான உடம்பின் கீழ் சிறைபிடித்திருந்தான் ஆடவன். “சத்யா… என்ன இது? காலங்காத்தால…” என அவள் தவிப்புடன் மூச்சுவாங்க முணுமுணுக்க…

“So what?” என அவளது வார்த்தைகளைத் தன் ஆதிக்க முத்தத்தால் அப்படியே மென்று முழுங்கினான். அவனது நீண்ட விரல்கள் அவளது மேனியின் வளைவுகளில் மீண்டும் ஒரு புதிய காவியத்தை எழுதத் தொடங்கின.

அதிகாலையின் அந்தப் பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கி, காலை எட்டு மணி வரைக்கும் இருவருக்குள்ளும் தீராத கட்டில் விளையாட்டு இன்னும் முடிந்த பாடில்லை! விடிவதற்குள் மட்டும் சத்யமூர்த்தி அவளுள் மூன்று முறை மூழ்கி முத்தெடுத்துவிட்டான்.

அவனது அசுரத்தனமான வேகத்தையும், தணியாத வீரியத்தையும் கண்டு உள்ளுக்குள் அடியோடு திடுக்கிட்டுப் போனாள் பெண்ணவள். ‘காய்ச்சல் இருக்கும்போதே இந்த அளவுக்கு இருக்கிறாரே! இன்னும் திடகாத்திரமா இருந்தால் என்னோட இடுப்பு என்னத்துக்கு ஆகும்? மற்ற நேரங்கள்ல இவனை எப்படித்தான் தாங்கப் போறேனோ!’ என்ற நினைப்பே அவளது நெஞ்சுக்குள் ஒரு மாபெரும் வெட்கத்தையும் நடுக்கத்தையும் ஒரே நேரத்தில் குடியேற்றியது. அவளது மாநிறக் கன்னங்கள் காதல் சிவப்பாக மாறித் தகித்தன; ஆனால், இந்தப் பரவசத்தை அவள் இழக்க விரும்பவில்லை.

“அச்சோ, லேட் ஆயிடுச்சு சத்யா! விடுங்க,” என அவனை விட்டு விலகவே முடியவில்லை. கோபத்துடன் நேரத்தைப் பார்த்தாள்; ‘ஒன்பது’ எனக் காட்டியது. சாவித்ரி தன் கலைந்த கூந்தலை அள்ளி முடிந்துகொண்டு, அவனது மார்பில் லேசாகக் குத்தினாள்.

சத்யமூர்த்தி தன் காந்தப் புன்னகையைச் சிதறவிட்டபடி அவளது இடையை வளைத்து, “லேட் ஆனா என்னடி? அந்த ஸ்கூலோட ஓனரே நான்தான். எனக்கு யாரு லீவ் லெட்டர் கேட்பா?” என்றான் தன் அசாத்திய தெனாவெட்டுடன்.

“உங்களுக்கு ஓகே… ஆனால் நான் அங்கே ஒரு சாதாரண ஸ்டாஃப் தானே? என்னை மிஸ்டர் சத்யமூர்த்தி வந்து கேட்பாரே?” எனச் சாவித்ரி கூற… சத்யமூர்த்தியின் கண்கள் அவளின் வெட்டுக் குழிகளுக்குள், இயற்கை அதிசயங்களுக்குச் சென்று, “மிஸ்டர் சத்யமூர்த்தியோட மனசைக் குளிர வைக்க என் கூடச் சேர்ந்து குளிச்சா போதும்,” என்று சொல்லிக்கொண்டே, வேண்டாம் வேண்டாம் எனச் சாவித்ரி தடுத்தும் கேட்காமல் தூக்கிச் சென்றுவிட்டிருந்தான்.

அந்தப் பிரம்மாண்ட பாத்ரூமின் ஷவரின்கீழ் இருவரின் உடல்களும் மீண்டும் ஒத்திசைந்து நனைந்தன. குளிர்ந்த நீரின் தாரைகளுக்கு நடுவிலும் சத்யமூர்த்தியின் கைகள் அவளைச் சும்மா விடவில்லை. அவளைப் பின்னால் இருந்து அணைத்துத் தன் مார்போடு ஒட்டிக்கொண்டவன், அவளது காதுமடலில் தன் ஈர உதடுகளைப் பதித்து, “எப்போ நைட்டு டிரஸ் போட்டேன்னு எனக்கு ஞாபகமே இல்ல… அண்ட், லேட் ஆனதுக்குக் கூட இந்த டிரஸ் தான் காரணம்,” என்றான் அவனது வேலையைச் செவ்வனே செய்துகொண்டு.

“அடப்பாவி! நான் மேடம்கிட்ட பேசும்போது அவ்வளோ காதைத் தீட்டிக்கிட்டு கேட்டிருக்கீங்க? நான் டிரஸ்ல இருக்கிற விஷயம் சாருக்குத் தெரியலையா?” என அவனைத் தண்ணீர் சொட்டச் சொட்டப் பார்த்தாள்.

“அது, இந்தத் திமிர் பிடிச்ச பொண்ணோட குரல் அந்த அளவுக்கு இங்கே பதிஞ்சு போச்சு!”

“நான் உங்க அம்மாகிட்டதானே பேசினேன்? வேற யார்கிட்ட பேசினா என்ன பண்ணியிருப்பீங்க?” என இரு புருவத்தையும் தூக்கினாள்.

சத்யமூர்த்தி விறைப்பாக அவளது முகத்தைப் பார்த்து, “ஆமாடி… என் முன்னாடி வேற எவனாவது உன்கிட்ட வழியுறதைப் பார்த்தா, நீ யார்கூடப் பேசுறதைப் பார்த்தாலும் நான் அப்படித்தான் பண்ணுவேன். உன்னை அடைச்சு வைப்பேன், கடிச்சு வைப்பேன்,” என முத்தமிட்டான்.

“நீங்க டூ மச்சா பண்றீங்க…” எனச் சாவித்ரி அவனது நெஞ்சில் பலமாக அடித்தாள்.

“டூ மச்தான்… ஆனால், நான் உண்மையத்தானே சொன்னேன்! என் ஆளு சாவித்திரி. அவ என்கிட்ட மட்டும்தான் பேசணும். என் பார்வையில் இருக்கும்போது அவகூட எவனும் தேவையில்லாமல் பேசக்கூடாது. எவனாவது இன்டென்ஷனாக வந்து ஃப்ளர்ட் பண்ணும்போது, அதை என்னால பார்க்க முடியாது,” என அவளது ஈர உதடுகளை மீண்டும் ஒருமுறை கவ்விப் பருகினான்.

சாவித்திரிக்கு ஒவ்வொரு நொடியும் அவனது பேச்சுகளும், அவனது நடத்தையும் உள்ளுக்குள் ஒரு ஆச்சரியத்தையும், பரவசத்தையும் கொடுத்தன. அவனது மணிமணியான பேச்சுகளைக் கேட்கும்போது அவளையே அவளால் நம்ப முடியவில்லை.

ஒருவழியாக இருவரும் கிளம்பிப் பள்ளிக்கு வந்து சேர அத்தனையுமே தாமதமாகிப் போனது. வழக்கமாக ஒன்பது மணிக்குத் துல்லியமாக இருக்கும் சேர்மனின் கார், அன்று பத்து மணிக்கு மேல் வளாகத்திற்குள் நுழைந்தது. அதே நேரத்தில் சாவித்திரியும் உள்ளே வந்து சேர்ந்தாள்.

அன்று முதல் சாவித்ரி அவளது பழைய பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, பள்ளியின் கவன ஈர்ப்பான ‘சி பிளாக்’ (C Block) நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தாள். அங்கே ஏற்கனவே மூத்த ஊழியர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த காயத்ரி, பிரபாவதி, காஞ்சனா ஆகிய மூவரின் கழுகுக் கண்களும் சாவித்திரியின் மீதே விழுந்து கிடந்தன.

“என்னடி பிரபா… இந்தச் சாவித்ரி இங்கே ஜாயின் பண்ணதுல இருந்து நிறைய விசித்திரமான விஷயம் நடக்குது, நோட் பண்ணியா நீ?” என்று காஞ்சனா தண்ணீரைப் பருகிக்கொண்டே கூறினாள்.

“என்ன சொல்ற?” எனப் பிரபா திடுக்கிட்டுக் கேட்டாள்.

“நமக்கெல்லாம் இன்டர்வியூ பிராசஸ் ஒன் வீக் நடந்தது. ஆனால், இவளுக்கு மட்டும் ஒரே நாளில் நடந்தது. எல்லா இன்டர்வியூவும் கான்ஃபரன்ஸ் ஹால்ல கண்டக்ட் பண்ணுவாங்க; இவளுக்கு மட்டும் சேர்மன் ரூம்ல இன்டர்வியூ!” என்றாள் காஞ்சனா.

“ஹே, நீ போயிருக்கியா சேர்மன் ரூமுக்கு?” எனக் காயத்ரி கேட்க…

“ம்ஹூம், அங்கே பின் டிராப் சைலன்ஸ் இருக்குமாம். அங்கே நம்ம தருண் சார், ரவீந்திரன் சார், சீனிவாசன் சார் மட்டும்தான் போயிருக்காங்க; லேடீஸ் ஸ்டாப்ஸ் நாட் அலவ்டு,” என்றாள் காஞ்சனா.

காயத்ரி லேப்டாப்பைத் தட்டிக்கொண்டே, “இப்போ ரெண்டாவது முறையா இவளைச் சி பிளாக்குக்கு மாத்தியிருக்காங்க?” என்றாள்.

காஞ்சனா தனது சுழல் நாற்காலியைத் தள்ளியபடி, “அதுவும் சேர்மன் சாரோட கார் உள்ள வந்த அதே செகண்ட்ல இவளும் உள்ள வர்றா?” என ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

பிரபாவதி தன் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு, “இதெல்லாம் நம்ம அஸ்யூம்ஷனாக இருக்கும். நம்ம ஒர்க்ல ஃபோகஸ் பண்ணுவோம்,” என்றாள். அவர்கள் பேசிச் சிறிது நேரம் கூட ஆகவில்லை; அவர்கள் பேசியதற்கு ஏற்றது போலவே அடுத்து வந்த சம்பவங்கள் இன்னும் அவர்களைப் பேசத் தூண்டின.

அவர்கள் நினைத்தது போலவே, அன்று மதியத்திற்குள் மட்டும் சாவித்திரியை அப்ரூவல், ப்ராஜெக்ட் ஃபைல் எனக் காரணம் காட்டிச் சத்யமூர்த்தி அழைத்தான். அவனது பிரத்தியேக அறைக்குக் கோப்புகளை எடுத்துக்கொண்டு சென்றாள் சாவித்ரி. அவள் உள்ளே நுழைந்ததும், அவளது இடையை வளைத்து முத்தமிடத் தொடங்கினான் அவன்.

சாவித்ரி திடுக்கிட்டு, “சத்யா, என்ன பண்றீங்க? இது ஸ்கூல்!” எனச் சிரமப்பட்டு அவனது முத்தத் தாக்குதலிலிருந்து மீள முயற்சிசெய்துகொண்டே பதில் கொடுத்தாள்.

“இது என்னோட ரூம்…” என்று ஒற்றைப் பதிலில் அவளின் உதடுகளை ஹூக் போட்டுக்கொண்டான். விரல்கள் அவளின் கழுத்துக்குக் கீழ் இறங்கியது.

“சத்யாஆ!!” எனக் கண்களில் தீப்பொறியுடன் நிறுத்தினாள்.

“ப்ச், என்னடி?” எனச் சோர்வுடன் சத்யமூர்த்தி ஏறிட… “முத்தத்தோட ஸ்டாப் பண்ணிக்கோங்க… நான் வேலை செய்யிற இடம், என்னோட வேலை தெய்வம் மாதிரி; அதுக்குன்னு சில பிரின்சிபல்ஸ் இருக்கு,” என்றாள்.

சத்யமூர்த்தி அவளை வெற்றுப் பார்வை பார்த்தான். சாவித்ரி சலித்துக்கொண்டு, “நேத்து நைட்டு, இன்னைக்குக் காலையிலன்னு ஒட்டிட்டேதானே இருக்கோம்? இதுக்கும் மேலே என்ன வேணும்? என்ன குறை உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

அவளை முறைத்துக்கொண்டு நேராக இருக்கையில் அமர்ந்துகொண்டான்; எதுவும் பேசவில்லை. “நான் புறப்படுறேன், இனி கூப்பிடாதீங்க…” என்று பாதி தூரம் சென்றவள், அவனைத் திரும்பிப் பார்த்தாள். பேப்பர் வெயிட்ட உருட்டிக்கொண்டிருந்தான் சத்யமூர்த்தி.

“அய்யோ…” எனப் பெரிய மூச்சை விட்டவள் அவனருகில் சென்றாள். இன்னும் அட்டாளி மேல் முகம் வைத்திருப்பதைப் போலச் சுருக்கிக்கொண்டான்.

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?”

“போடி!” என்றான் பொய் கோபத்துடன்.

“டென்ஷன் பண்ணாதீங்க!” என அவனது மடியில் அமர்ந்துகொண்டாள்.

“Do you know my situation? இந்த டிசையரை என்னால… I can’t,” என்றவனின் கைகளோ அவளின் இடை வளைவுக்குள் சென்று மென்மையை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் அவளின் பின் கழுத்தில் முத்தமிட்டான் சத்தத்துடன்…

“வீட்டுக்குப்போனதும் அதைத்தானே செய்யப் போறீங்க? ஆல்ரெடி நான் வந்து அரை மணி நேரமாகுது. பார்க்கிறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? அதை யோசிச்சுப் பார்த்தீங்களா?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

“நினைச்சா நினைக்கட்டும். நீதான் அடுத்த சேர்பர்சன்,” என்றான்.

“அய்யோ, எனக்கு வேண்டாம்ப்பா!” என்று அவனிடமிருந்து எழுந்து ஓடினாள். சத்யமூர்த்தி சிரித்தபடி, “நில்லுடி!” என அவளைப் பிடிக்க வர, அதற்குள் வெளியே சென்றிருந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அழைத்தான்; “ரூமுக்கு வா!”, “No bag day பத்தி டிஸ்கஸ் பண்ணனும், ரூமுக்கு வா!”, “அந்த லிட்டில் ஷார்க் டேங்க் செலிப்ரேஷன் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணு, ரூமுக்கு வா. சாவித்ரி, ரூமுக்கு வா!”

ஒவ்வொரு முறையும் சத்யமூர்த்தி அவளை ஏதோ ஒரு சின்ன கோப்பைக் காட்டி, “இந்த ஃபைல்ல ஒரு டவுட்… நீதான் பக்கத்துல நின்னு எக்ஸ்பிளைன் பண்ணனும்,” என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தன் அறைக்கு வம்படியாகக் காதல் செய்துகொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி, மற்ற இருவரையும் சேர்த்துக்கொண்டு இட்டுக்கட்டி அசிங்கமாகப் பேசத் தொடங்கினாள். “பார்த்தீங்களாக்கா… உள்ள போகும்போது புலி மாதிரி போறா, வெளியே வரும்போது முகம் எல்லாம் டயர்டா இருக்கு,” என்று தன் பங்குக்குக் கூற…

“ஹே, அவளோட புடவை இடுப்புக்கு மேலே இருந்தது; ஆனால், இப்போ இடுப்புக்குக் கீழே இருக்கு, தொப்புள் காட்டிட்டு வர்றா! ரெண்டு பேரும் என்ன பண்ணியிருப்பாங்க?” எனப் பிரபாவதி மெல்லிய குரலில் சொல்ல…

“காயூ, அவளோட லிப்ஸைப் பாரு எப்படிச் சிவந்திருக்குன்னு? இதுவே போதாதா, உள்ளே என்னென்ன நடந்திருக்குன்னு தெரிஞ்சுக்க!” என்றாள் காஞ்சனா.

“எப்படிடி இவளுக்கு மட்டும்? எனக்கு ஒண்ணுமே புரியல… அவளை விட நான் சின்ன வயசுதான். அவளே பிச்சைக்காரி மாதிரி வெளுத்துப்போன காட்டன் புடவையில் வர்றா! ஆனால் நான்? என்னோட சாரியிலிருந்து என்னோட எல்லா அக்சஸரீஸ்க்கும் 10,000 ஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். ஆனால், அந்த ஆளுக்கு இவளைத்தான் பிடிச்சிருக்கு. ஏன் அப்படி? இதெல்லாம் மத்தவங்க கண்ணுக்குத் தெரியாதா?” என அங்கலாய்ப்புடன் கூறினாள் காஞ்சனா.

“புடவை கலைஞ்சு வருது! அதுவும் நாலு தடவை உள்ள போயிட்டு வர்றா. என்ன நடக்குதுன்னு பார்க்கிறவங்க எல்லாருக்கும் புரியும். கௌரவமான ஸ்கூல்ல இப்படி ஒரு கேடுகெட்ட பிழைப்பா?” என அசிங்கமாக விஷத்தைக் கக்கினாள்.

அவர்களது இந்த அசிங்கமான பேச்சு, பள்ளியின் ஆண் ஊழியர்களான பரத், சிவேஷ், பார்த்தசாரதி ஆகியோரின் காதுகளுக்கும் பரவியது. அவர்களும் சாவித்திரியை ஒரு கேவலமான, தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினர்.

மதிய உணவு இடைவேளையின் போது, பார்த்தசாரதி தன் நண்பர்களிடம், “மச்சான்… சேர்மன் ஹிட்லராகவும் ஸ்ட்ரிக்டாகவும் இருந்தாலும் டேஸ்ட் நல்லாத்தான் இருக்குடா. இவளைப் பார்த்தா எனக்கே ஏதோ பண்ணுது. சேர்மனுக்கு மட்டும்தான் சான்ஸா? நம்மளும் ஒரு கை பார்க்கலாமா?” என அநாகரிகமாகக் கிசுகிசுத்துச் சிரித்தான். பரத்தும் சிவேஷும் அவனது பேச்சுக்கு ஈடுகொடுத்து அசிங்கமான சைகைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தனர்.

சாவித்ரி அந்தப் பக்கமாகக் கடந்து செல்லும்போது, அவர்கள் அனைவரும் அவளை ஒரு விழுங்கும் பார்வையோடு பார்த்து, தங்களுக்குள் கிசுகிசுத்துச் சிரித்த அந்தச் சூழல் தலைகீழாக மாறியது. ஆனால், இது எதையும் அவள் அறியவில்லை. இது காட்டுத்தீயாக ஏற்கனவே பரவ ஆரம்பித்திருந்தது. ஒரு இடத்தில் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்கும்போது தெரியும்; ஆனால், அப்பொழுது யார் எப்படி மாறுகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதோ, மாலை வீட்டுக்குக் கிளம்பினார்கள். “எல்லாமே ஓகேதானே? வீட்டுக்குப்போறோம்,” என உற்சாகமாகப் பதில் கொடுத்தான் சத்யமூர்த்தி.

சாவித்ரி அவனை முறைத்துப் பார்க்க… “இப்போ எதுக்குடி முறைக்கிற?” என அவளின் கையைப் பற்றினான், காரை ஓட்டிக்கொண்டே…

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை…” என வெட்கத்தை வெளிக்காட்டாமல் வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

இதோ, பார்க்கிங் வந்தாகிவிட்டது. இறங்குவதற்கு முன்னால் காரிலேயே அவனது சில்மிஷ வேலைகளை ஆரம்பித்தான்.

 * (தொடரும்…)

You may also like

Leave a Comment