என் போதை தேனே

by Pradhanya kuzhali
512 views

Episode-4

ருத்ர மூர்த்தியாக கண்களில் அனல் தெறிக்க, தேனருவியின் சங்கு கழுத்தில் தன் கை விரல் அச்சு பதியும்படி தாலி கட்டினான். 

ஆஆவென!! பெருங்குரலெடுத்து கத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

கைக்கு எட்டுவது போல இருந்தது, வாய்க்கு எட்ட வில்லையே என்னும் கடுப்பில் ரங்கன் பார்த்துக் கொண்டிருக்க, அவமானத்திலும் தங்கையின் செயலிலும் கூனி குறுகி வேதனையில் பார்த்தான் வேலன். அவள் இங்கிருந்து சென்றால் மட்டுமே நிம்மதியாக வாழ்வாள் என சந்தோச மனநிலையுடன் முழு மனதுடன் கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் மல்லி.

திருமணம் இனிதே முடிவு பெற, அருவி கண்களில் அருவியாக நீர் கொட்டியது. அவர்களின் வழக்கப்படி ஆடு, பண்ணி என அனைத்தையும் பலி கொடுத்து அமர்க்களமாக விருந்தை தொடங்க, அங்கதனிடம் வந்த மோஹித், “எனக்கு இங்கே இருந்து உடனே போகனும். சீக்கிரம் அவங்க கிட்ட சொல்லு,” என சொல்லி விட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

அங்கதன் நேராக ஊர் தலைவரிடம் பேசி, எப்படியோ சம்மதம் வாங்கி விட்டான். ஊர் தலைவர் அனைவரும் கூடி, தேனருவிக்கு அவர்களின் முறைப்படி அழகான மூக்கில் மூக்குத்தியை குத்தி விட்டார்கள். அவளின் கண்களில் நீர் இல்லை, மறத்து போனது போல அமர்ந்திருந்தாள். “வலி இருக்காதென முன்னாடியே தெரிந்திருக்க, இவ்வளவு விபரீதம் வந்திருக்காதே! நான் சென்றிருக்க மாட்டேனே!” என ஒரு கண்ணில் மட்டும் நீர் வழிந்தது.

“ம்ம், எவ்வளவு நேரம்?” என மோஹித் கடுப்புடன் கர்ஜித்தான். இங்கிருந்து சென்றதும் அவளுக்கு இருக்கு ஆட்டம். ரங்கனோ எதாவது செய்ய வேண்டும் என அடக்கி வாசித்தான்.

 ஊர் தலைவர் அவனிடம், “எங்க பொண்ணை ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இங்கே கொண்டு வந்து காட்டணும். இப்போ கல்யாணம் ஆகி இருக்கு அதனாலே அடுத்த மாசம் காட்டு காளிக்கு திருவிழா வருது. நீங்க கட்டாயம் எங்க பொண்ணோட வரணும்,” என உறுதியாக சொல்லி மிரட்டினார்.

“என்னால வர முடியாது,” என வெடுக்கென மோஹித் கூற, வேலனின் மனைவி முன்னால் வந்து, “அப்டின்னா உங்களை பத்தி நாங்க போலீஸ்ல புகார் கொடுப்போம். எங்களை சாதாரணமா எடை போடாதீங்க,” என கிட்ட தட்ட மிரட்டினாள். 

மோஹித்தின் பார்வை அழுத்தமாக தேனருவியின் மீது படிந்தது. “எல்லாம் இவளால் தான்!”

அங்கதன் அருகில் வந்து, “ஒத்திக்கோங்க சாமி! இல்லன்னா இவனுங்க பெரிய பிரச்னை பண்ணுவானுங்க. எங்களுக்கும் இவங்களுக்கும் ஒரே குல சாமி காட்டுக்காளி தான். நாங்களும் இதே பழங்குடி வம்சம் தான்,” என்றான். 

“என்ன டா எதிர் ஊருக்காரா? என்ன சொல்லி கொடுக்கிற?” என ரங்கன் கேட்டுக் கொண்டே முன்னால் வந்தான்.

ஊர் தலைவரின் பார்வை அவர்களின் மீது விழ, “கூட்டிட்டு வரேன்,” என ஒரே வார்த்தையில் முடித்தான். அங்கிருக்கும் அனைவரும் குலவை போட்டு சாமியை கும்பிட்டு, ஒரு விளக்கு மற்றும் காட்டு காளி திரு நீறு என அனைத்தையும் அருவிக்கு கொடுத்து அனுப்பினார்கள். ரங்கன் க்ரூரமாக அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

திக்கு தெரியாத காட்டில் விட்டால் கூட வழி பிடித்து வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது அவளுக்கு… கொடிய பாலை வன பயணம் போல இருந்தது. மல்லி தன் தங்கையை அணைத்து வழி அனுப்பி வைத்தாள். அருவி கேவி கேவி அழுது கொண்டே மோஹித் பின்னால் சென்றாள். தன் உறவுகளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். 

மோஹித் நேராக அவன் தங்கி இருக்கும் ரிசார்ட்டுக்கு சென்றான். அந்த ரெசார்ட்டின் மேனேஜர் அவளை பார்த்ததும், “என்ன மா யாரை பார்க்க வந்திருக்க?” என அருவியின் ஜாக்கெட் இல்லாமல் அவர்களின் வழக்கப்படி கட்டி இருந்த உடையை பார்த்ததும் தடுத்து நிறுத்தினார். காலில் செருப்பு இல்லை, நெற்றி வகிட்டில் அத்தனை குங்குமம், தலை நிறைய பூ என பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தாள் அருவி.

அங்கிருக்கும் ஆட்களை பார்த்ததும் உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொள்ள, கண்களில் நீருடன் அழ ஆரம்பித்தாள். 

“What the hell is going on? She is my movie heroine. Ethnic costume உங்களுக்கு எப்படி தெரியுது மேனேஜர்,” என கேட்டுக் கொண்டே வந்து நின்றான் மோஹித்.

“ஐம் எக்ஸ்ட்றீம்லி சாரி சார். நீங்க போங்க மேம்,” என வழி விட்டார்கள். அருவி இன்னும் பயந்தபடி நின்று கொண்டிருக்க, அவளின் கைகளை பிடித்து இழுத்து சென்றான். அவர்களுக்கு அது சாதாரணமாக தான் தெரிந்தது. ஆனால் அருவிக்கு தான் அவனது பிடிப்பு வலியை கொடுத்தது. நேராக அவனது இடத்துக்கு வந்து, அப்படியே கதவை தாளிட்டு அவளை படுக்கையில் தள்ளினான்.

“எதுக்கு டி பொய் சொன்ன? ஹான் எதுக்கு பொய் சொன்ன?” என மிரட்டினான். அவள் நடுங்கி கொண்டே அழுது கறைந்தாள். 

“இந்த நடிப்பு நாடகம் எல்லாம் என் கிட்ட வேணாம் நானே பெரிய நடிகன். உன்னை என கொஞ்சம் சத்தமாக கத்தினான். அதில் பொசுக்கென மயங்கி விழுந்தாள். மோஹித் அப்படியே அமைதி ஆகினான்.

“இவளை?” என பெரு மூச்சை விட்டவன் அங்கும் இங்கும் நடந்தான். அவனது சிந்தையில் ஆயிரம் பிரச்னைகள் வரிசை கட்டி நின்றது.

 “ஹாரிகாவை எப்படி சமாளிக்க போகிறோம்? மாம் அண்ட் டாட் கிட்ட என்ன சொல்லுவேன்? படிக்காத முட்டாள் பெண் இவள். அதுவும் ட்ரைபல்!! இது மட்டும் சினி இண்டஸ்ட்ரியில் தெரிஞ்சா என்ன நடக்கும்?” என பல கேள்விகள் மண்டையை குடைந்தது. 

தலையை அழுத்தி கோதியவன். ஒரு பெரு மூச்சை விட்ட படி எதிரில் இருக்கும் தண்ணீர் ஜக்கில் இருந்து நீரை அவளின் மேல் தெளித்தான்.

மெல்ல மெல்ல கண் விழித்தவளின் எதிரில் மோஹித் இருக்க, அப்பொழுது தான் இன்று காலையில் நடந்த அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வர, நடுக்கம் எடுத்தது. அவன் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

அருவி  வேகமாக மெத்தையில் இருந்து கீழே இறங்கினாள். “இங்கே பார்” என அவன் திரும்ப.. அவள் கையெடுத்து கும்பிட்ட படி, “என்னை மன்னிச்சிடுங்க சாமி நான் செஞ்சது தப்பு தானுங்க. உங்களோட விரல் நுனி கூட என் மேலே படல சாமி” என அவள் கமறிக் கொண்டே கூற…

“அப்புறம் எதுக்கு அங்கே எல்லார் முன்னாடியும் பொய் சொன்ன?” என அவளின் அருகில் நெருங்கி கேட்டான். “அது அது வந்து அதை பத்து கேட்காதீங்க சாமி! நான் செஞ்சது தப்பு தானுங்க” என அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகையை பார்த்ததும் அவனுக்கு இறக்கம் வர வில்லை. “நாடகக்காரி” என மட்டும் தான் தோன்றியது. 

மோஹித் எதுவும் பேசாமல் இன்னொரு அறைக்கு சென்று விட்டான். அதே ரெசார்ட்டில் நான்கு நாட்கள் இருந்தார்கள். அவளுக்கு வேலா வேலைக்கு உணவு வர அனைத்தையும் தவிர்த்து ஒரு மூலையில் ஒடுங்கி தன்னையே குறுக்கி படுத்துக் கொண்டாள்.

மோஹித்திற்கு வீட்டில் இருந்து போன் மேல் போன். இன்னொரு பக்கம் ஹாறிகா, இன்னொரு பக்கம் புரெட்யூசர் என அனைவரும் போன் செய்ய மோஹித்தின் மேனேஜர்,  மற்றும் அவனது அசிஸ்டன்ட் டைரக்டர், நண்பன், வெல் விசர் என அனைத்தும் ஒரே ஆள் கரன் அவனுக்கு இன்னொரு பக்கம் அழைக்க.. “வரேன் டா” என போனை வைத்தான்.

“அவள் என்ன செய்கிறாள்?” என நான்கு நாட்களுக்கு பிறகு அவளை பார்க்க சென்றான் மோஹித். ஓரிடத்தில் ஒடுங்கி படுத்திருந்தாள். 

“பன்றதெல்லாம் பண்ணிட்டு பாவ வேசம் போட்டுட்டு இருக்கா பாவி” என தோன்றியது. “இவளை விட்டு சென்றால் வேறு பிரச்னை வந்து சேரும் வேற வழி இல்லை அழைத்து தான் செல்ல வேண்டும்” என தோன்ற, பெரு மூச்சுடன் அவளை அழைத்தான்.

“ஹே.. தேனருவி” என அழைக்க.. 

“ம்ம் ஹிம்” சின்ன அசைவு கூட இல்லை. அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவளின் மேல் ஊற்றினான். 

பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். “சாமி” என அழைக்க..

“ச்சீ அப்படி கூப்பிட்ட கண்ணம் பழுத்து போயிடும்” என கற்ஜித்தான். அவள் எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டு பார்க்க அவன் ஒரு ஜக் நீரை அவளின் மேல் ஊற்றி இருந்ததால், அவளின் உடை உடலோடு ஒட்டி கிடக்க, வெண் சங்கு தேகம் அவனை ஒரு நொடி மயக்கத்தான் செய்தது. தொண்டை குறுகுறுக்க மேனேஜருக்கு போன் செய்தான்.

“சொல்லுங்க சார்…” என மேனேஜர் பணிவாக கூற…

 “ஒன் செகண்ட்” என்றவன். கண்களால் அவளை தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்தான். 

அவள் நெளிந்து கொண்டு நிற்க.. “ரெடிமேட் சுடிதார், ஸ்கட், இன்னர் எல்லாமே லேடிஸ் ஐட்டம் 10 பீசஸ் லார்ஜ் வேணும் குயிக்” என வைத்து விட்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் சொன்ன அனைத்து உடைகளும் வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டியவன். “போ போய் இதை போட்டுட்டு வா” என்றான்.

“எனக்கு போட தெரியாது.” என்றாள் ஒரே வார்த்தையில். “நான் போட்டு விடனுமா?” என்ற படி மோஹித் கேட்க.. 

“இல்லை” என்பதை போல தலை ஆட்டியவள். “எங்க ஊரில் புடவை மட்டும் தான் கட்டுவோம். இதெல்லாம் போட்டால் தெய்வ குத்தம்” என அவள் கூற… 

“அய்யயோ” என தலையில் அடித்துக் கொண்டவன். அவளிடம் எவ்வளவோ சொல்ல .. அடுத்து அழுது மயக்கம் வேறு வந்து விட்டது அருவிக்கு.

மீண்டும் ஹோட்டல் மேனேஜரிடம் போன் செய்து ரெடி மேட் ஜாக்கெட், அதற்கு ஏற்ப புடவை, இன்னர் என அனைத்தையும் கொண்டு வர செய்து அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் புடவை கட்டிக் கொண்டு வந்தாள். “வந்தாச்சுங்க!” என மெதுவாக வந்து நின்றாள். மோஹித் போனை நோண்டிக் கொண்டே திரும்பிப் பார்த்தவன். முகம் இன்னும் கோபமானது.

“என்ன டி இது?” என கண்களில் கோபத்துடன் கேட்டான். அவளின் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ள “நீங்க சொன்ன மாதிரி கட்டிட்டென்” என்றாள்.

“ஜாக்கெட் எங்கே டி? ப்ரா எங்கே? அதையும் வச்சு தானே கொடுத்தேன். உங்க ஊரில் இருக்க காட்டுவாசி மாதிரி வந்திருக்க, ஒழுங்கா போய் அதை போட்டுட்டு வா!”

“இல்ல அதெல்லாம் போட கூடாது தெய்வ குத்தம் ஆகிடும்.” என அருவி பயந்து கொண்டே கூற..

 “இப்போ உன்னை கொலை குத்தம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன். ஒழுங்கா அதை போட்டுட்டு வா!”

“மாட்டேன் சாமி” என அவள் கூறிக் கொண்டே திரும்ப, மோஹித் கடும் கோபத்தில் “நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன் எதிர் வாதம் பண்றியா நீ” என அருகில் வந்து அவளின் முந்தியைப் பிடித்து இழுத்தான். 

அவனது அழுத்தமான பிடியில் பூனம் புடவை சரசரவென அவிழ்ந்து கையோடு வர,  “அம்மாடியோ!!” என இரு கைகளை கொண்டு மார்பை X சேப்பில் மறைத்து நின்றாள் அருவி.

மோஹித்தின் கண்களுக்கு X குறியீட்டின் மேல் பார்வை அழுத்தமாக படிய.. 

அருவி…? 

வருவாள்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment