அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
671 views

Episode -46

எல்லாரும் கொஞ்சம் நிறுத்துங்க என கத்தினான் ருத்ரன். 

சியாம், அஜ்மல், கிஷோர், சேத்தன், அனந்து, என அனைவரும் திடுக்கிட்டு பார்க்க.. 

வெங்கடேஷ் ருத்ரனை பார்த்து பாவா! உன்னை ஆ அம்மாயி எப்டி கல்யாணம் பண்ண சம்மதிச்சதுன்னு தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு? என கேட்டான். 

ருத்ரன் அவர்கள் அனைவரையும் பார்த்து சொடக்கு போட்ட படி சியாமின் கையில் இருக்கும் ரம்மை வாங்கி ஒரே மூச்சில் குடித்தவன். இப்போவே அவள் வருவா! எல்லாரும் பால்கனிக்கு போங்க டா! உங்களுக்கே தெரியும் என கூறினான். 

பக்காவா மச்சி!! என அனைவரும் கேட்க.. 

ம்ம் பக்கா!! என ருத்ரன் உறுதியாக கூறினான். 

டேய் வாங்க டா!! என இராணுவ கும்பல் தள்ளாடி கொண்டே பால்கனியில் ஒளிந்து கொள்ள.. 

சியாம் வேக வேகமாக உள்ளே வந்தான். 

என்ன டா!

மச்சி சரக்கு! என இரண்டு பாட்டிலையும் தூக்கி கொண்டு சென்றான். 

அதற்குள் வெங்கடேஷ் வர, 

உனக்கு என்ன டா? என ருத்ரன் கேட்க.. 

சைட் டிஷ் மச்சி என தூக்கி கொண்டு உள்ளே ஓடினார்கள். 

நிலாவின் எண்ணுக்கு அழைத்தான் ருத்ரன். ஹே கேப்டன் போன் பன்றாப்டி! என நிலாவின் தோழி ஜெனிஷா புன்னகையுடன் போனை கொடுக்க.. 

தோழிகள் அனைவரும் சிரித்தார்கள். நிலா ஒதுக்கு புறமாக வந்து நின்று விரக்தியுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். 

என்ன டி பண்ற? 

“மருதாணி வச்சிட்டு இருக்கேன்!”

ரெண்டு கைலயும் வச்சாச்சா? 

இல் இல்ல.. ஒரு கையில் வச்சுட்டென் இன்னொரு கைக்கு வைக்கணும். எதுக்கு போன் பண்ணீங்க? என நிலா தடுமாறி கொண்டே கேட்க.. 

இப்போ உடனே கிளம்பி வா எனக்கு மருதாணி வச்சு விடு! 

ஹாங் என அவள் விழிக்க.. 

வாடி! வரியா இல்ல நான் வரவா? 

ம்ம் ந.. நானே வரேன்!! என போனை வைத்தவள் மருதாணி கிண்ணம் மற்றும் மெகந்தி கோன் இரண்டையும் எடுத்து கொண்டு புறப்பட்டாள் நிலா. 

எங்க டா டாக்டர்!! 

“*** மூடிட்டு இருங்க டா வருவா!” என ருத்ரன் சொல்ல காலிங் பெல் அடித்தது. 

டாக்டர் வந்தாச்சு என அனைவரும் போதையில் கூட தெளிவாக விழித்து கதவை பார்க்க.. 

கதவை திறந்ததும் நிலா நின்றிருந்தாள் சுற்றிலும் பதட்டத்துடன் பார்த்து கொண்டே உள்ளே நுழைந்தாள். 

சீக்கிரம் கையை காட்டுங்க! எனக்கு போகனும்! என நிலா கூற.. 

உன் கைய காட்டு என அவன் அவளின் கையை இழுத்து பார்த்தான். 

அழகாக இருந்தது. எந்த வித டிசைனும் கசலசவென இல்லை. இட்லி போல பெரிய ஒரு ஶ்ரகில் அதை சுற்றி குட்டி குட்டி சர்கில். அந்த சர்கல் அருகில் ருத்ரன் தேன் நிலா என்று எழுதி இருந்தது. 

இதென்ன!! என பேர் எல்லாம் பலமா இருக்கு? என அவன் அருகில் வந்து கேட்க.. 

லெம்.. லெம.. லெமன் ஜுஸ் குடிச்சிருக்கீங்களா? 

ஆமா லெமன் தான் என அவளை கண்கள் சொக்க பார்த்தான். 

நிலா வேறு புறம் திரும்பி கொள்ள.. இந்த கையில எதுவும் இல்லையா? என அவளின் கையை இழுத்து அவனது நெஞ்சுக்கு வைத்து கொண்டான். 

சியாம், வெங்கடேஷ், அனந்து, கிஷோர், அஜ்மல் என அனைவரும் வாயை பிளந்து பார்த்தார்கள். 

பாரேன் இந்த ருத்ரன் கேடி! அந்த டாக்டர் அவன் கிட்ட ஒட்டிக்கிட்டு நிக்கிது! நம்ம முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்து டிராமா பிளே பண்ணிருப்பாங்களா? என சியாம் கூற.. 

டேய் அமைதியா இரு டா! ஹாட் சீன் வருதா பார்ப்போம். 

ரெண்டு பேரும் உரசிட்டு நிக்கிறாங்க! ருத்ரன் முத்தம் கூட கொடுப்பான் என அனந்து கூற.. எட்டி உதைத்தான் வெங்கடேஷ். 

டேய் அவன்!! என அனைவரும் அதிர்ச்சியில் பார்க்க.. மருதாணியை கையில் அப்பி கொண்டு இடுப்பில் சென்றன ருத்ரனது கைகள். 

ஆவென ஒரு கூட்டம் பார்த்து கொண்டிருக்க…  என்.. என்ன பண்றீங்க? என நிலா அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்க்க.. 

எதோ பண்றேன்! எனக்கு தோன்றத பண்ணுவேன்! என உதட்டில் முத்தமிட்டான். 

நிலா அவனது கண்களை பார்க்க… கீழ் உதட்டை சப்பிக் கொண்டே புருவம் தூக்கினான் ருத்ரன். 

அவனை விட்டு விலக முடியாமல் திணறினாள். ஒரு கையில் மருதாணி இன்னொரு கையில் மருதாணி கிண்ணம்.  எதிரில் அவன்.. தன்னை விட்டு அசைய முடியாத படிக்கு லிப் லாக் செய்திருக்கிறான்.  

மூச்சுக்கு நகர்ந்தான். பிளீஸ் விடுங்க.. 

நிலாஅஅ! என கிறக்கத்துடன் அழைத்தான் ருத்ரன். 

மெல்ல அவனை பார்த்தாள் மூச்சு வாங்கி கொண்டே.. 

நீ அழகா இருக்க! கொஞ்சமா!! என்றான். ருத்ரன். 

கொஞ்சம் என்பது திருஷ்டி போல.. 

அவள் அழகாக இருக்கிறாள் அவ்வளவே.. நிலாவின் கண்களில் ஆசையும் தவிப்பும் காதலும் கொட்டி கிடந்தது. ஆனால் வெளிபடுத்த முடியாமல் திணறினாள். 

எல்லாத்தையும் மறந்துடு இப்போ இந்த நிமிசம் என்ன தோணுது உனக்கு? என்னை கட்டிக்கோ! அதுவும் இறுக்கமா!! நீயாவே கட்டிக்கணும்! கம் பேபி!! என அவளிடம் இருந்து விலகினான் ருத்ரன். 

அவளுக்கு முதுகு காட்டியபடி தலையை கோதினான். 

இதோ நிலவு பின்னால் கட்டி கொண்டது. 

ருத்ரன் முகத்தில் புன்னகையுடன் பால் கணியில் இருக்கும் தன் நண்பர்களை பார்த்தான். 

டேய் டாக்டர் உண்மையாகவே ருத்ரன விருப்ப பட்டு கட்டிருக்கு! அவ்ளோ தான் எப்படியோ மயக்கிட்டான் என சியாம் சொல்ல..

சுந்தரி எனக்கு இல்லா!! அனந்து. 

பங்காரம் அம்மாயி ருத்ரன் பெல்லி என விட்டு விட்டு உலரினான் வெங்கடேஷ். 

நிலா பியார் ருத்ரன் என்றான் சேத்தன். 

குண்டூர்காரம் பொண்ணை சென்னை எக்ஸ்பிரஸ்ல வந்து பிக் அப் பண்ணிட்டு போயிட்டான் என அனைவரும் தவிப்புடன் பார்க்க.. 

ஆனால் இங்கே நிலா அவனை கட்டி கொண்டு பிளீஸ் தீரா இந்த கல்யாணம் வேணாமே! நான் உங்களுக்கு பொருத்தம் இல்ல ஒரு தடவை யோசிச்சு பாருங்க என்று கூற.. 

ருத்ரன் பற்களை கடித்தபடி பின்னால் திரும்பியவன். அவளை மெல்ல சுவற்றில் சாய்த்து என்ன டி!! திரும்ப திரும்ப அங்கேயே வந்து நிக்கிற? எனக்கு யாரு பொருத்தம்?  பொருத்தம் இல்லன்னு நீ சொல்ல வேணாம். நாளைக்கு இந்நேரம் நம்ம ரெண்டு பேருக்கும்.. என நிறுத்தி விட்டு அவளை பார்த்தவன். 

F* இடியட் என கெட்ட வார்த்தையை கூறினான். 

அவள் அவனை பாவமாக பார்த்தபடி திரும்ப.. அவள் கழுத்தில் முத்தமிட்டவன். என்னை வேணாம்னு சொல்லாத நிலா! உன்னை கொன்னுடுவேன் என்றவன். உதடுகள் அவளின் நெஞ்சு குழியில் அழுத்தமாக பதிய… அடுத்த முத்தம் புடவையை விலக்கி இடையில் கொடுத்து அழுத்தமாக கடித்த தடத்துடன் அனுப்பி வைத்தான். 

அவளின் மறு கையில் you are mine!! என ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. அவன் தான் எழுதி இருக்கிறான். 

You are mine என்பது I love you என்ற வார்த்தையை விட வீரியம் மிகுந்தது என நிலாவுக்கு தெரியவில்லை. அதை அவளின் கையில் எழுதிய ருத்ரனுக்கு கூட தான் ஏன் அப்படி எழுதினோம் என தெரியவில்லை. 

இரண்டு நாட்களாக பச்சை தண்ணீர் பல்லில் படவில்லை இப்படியே திருமணத்தை எப்படி நிறுத்துவது என யோசித்து கொண்டிருந்தாள். 

ருத்ரன் அங்கே அருகில் இருக்கும் மது பாட்டிலை ஒரே மூச்சில் குடித்தான். பால் கனியில் இருந்து நட்பு வட்டங்கள் மொத்தமும் அங்கு வந்து அவனை சுற்றி தூக்கியது. 

ருத்ரா நீ சாதிச்சிட்ட டா! செஞ்சிட்ட டா! அந்த golden sparrow வ கொத்திட்ட!! வேற லெவல் என கத்தி கோஷமிட்டார்கள். 

ருத்ரன் எதுவும் பேசாமல் ஸோபாவில் அமர்ந்து கொண்டான் தலையை தேய்த்து கொண்டே..

நிலாவுக்கு விடிய விடிய தூக்கமில்லை. இதோ அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. இரண்டு ஜோடிகளுக்கு திருமணம். நிவாஸ்  கண்மணி, நிலா மற்றும் ருத்ரன். 

அதில் மூவர் ருத்ரணின் கல்யாணம் நிற்க வேண்டும் என அமர்ந்திருக்க… ருத்ரன் உறுதியாக இருந்தான். அவனோட பொண்டாட்டி அவள் தான் நிலா. 

சியாம் வாட்சை எடுத்து கொடுத்தபடி மச்சி இன்னிக்கி நைட்!! மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே என பாட.. 

டேய் அப்படி இல்ல டா அடி வெத்தலை போட்ட உதட்டை எனக்கு பத்திரம் பண்ணி கொடு! புத்தி கலங்கிட முத்தம் கொடுத்துடு ராசாத்தி! ஆணுக்கோ அஞ்சு!! என பாட வந்த கிஷோர் திடீரென.. மாமா இன்னிக்கு ஹெவி பெர்பார்ம் பண்ணி டாக்டர் மேலே பாஞ்சிடாதே! கொஞ்சம் பொறுமையா பண்ணு! என்றான். 

அனைவரையும் கோபத்துடன் தள்ளி விட்ட படி போனை எடுத்து நிலாவுக்கு அழைத்தான் ருத்ரன். 

டேய் என்ன டா என்னாச்சு? என அனைவரும் பதட்டத்துடன் கேட்க.. 

வெளியே போங்க டா! ராஸ்கள்ஸ் என கத்தினான் ருத்ரன். 

இந்த அரக்கன் அடங்காதவன் கிட்ட மாட்டிக்கிட்டு அந்த பொண்ணு இனி என்ன பண்ண போகுதோ தெரியல என அனைவரும் முணுமுனுத்து கொண்டே சென்றார்கள். 

ஹே மாப்பிள்ளை ரொம்ப அவசரத்தில் இருக்கார்! என ஜெனி, மியாழ், கியாரா மூவரும் கிண்டலடிக்க.. பேசு நிலா அவருக்கு என்ன அர்ஜென்சியோ தெரியல என நீட்டினாள் அக்ஷயா. 

நிலா போனை வாங்கி கொள்ள.. ஹே எதுக்கு டி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க? ஆறடி கிரேக்க சிற்பம் மாதிரி கேப்டன் உன்னை கட்டம் கட்டி சுத்தி வராரு இதை விட என்ன வேணும்? முதல்ல சிரி! என அவளிடம் போனை திணித்து விட்டு வெளியே சென்றார்கள். 

ஹலோ!! என நிலா காற்றுக்கே கேட்காத குரலில் பதில் கொடுக்க.. 

கிளம்பிட்டியா? 

ம்ம்!! 

என்னை கட்டிக்க மாட்ட அப்படி தானே! இப்போ விட்டு போன்னு சொன்னா கிளம்பிடுவ? அப்படி தான டி? சொல்லு டி!!

நிலா அமைதியாக இருக்க.. 

ஹே சொல்லுடி!! You f** எனக்கு பைத்தியம் பிடிக்குது டி! என்னை வேணாம்னு விட்டு எழுந்து போவ அப்படி தானே! அதுவும் மண மேடையில் அப்படியே விட்டு போயிடுவ! விட்டு போவியா டி! அப்படி ஒரு எண்ணம் வச்சிருக்க தான? உன்னை என பற்களை கடித்தான். 

பிளீஸ் திட்டாதேள்.  என நிலா அழுதாள். 

“கட்டிப்பியா?”

கட்டிப்பேன்! 

உன்னோட அண்ணன் வேணாம்னு சொன்னா! என ருத்ரன் கூற.. 

“கட்டிப்பென்!”

அந்த நிவாஸ் வேணாம்னு சொன்னா? என ருத்ரன் கேட்டு கொண்டே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். 

“கட்டிப்பேன்”

யாரை கட்டிப்ப? 

உங்களை!!

ஹான் என்ன சொன்ன? 

உங்களை கட்டிக்குவேன் திராவை கட்டிக்குவேன் என கண்களை துடைத்தபடி கூறினாள். 

அந்த மீனாட்சி உன்னை கட்டிக்க வேணாம்னு சொல்ற பேச்சை கேட்பியா? 

நிலா ஒரு நொடி அமைதியாக இருக்க.. 

ஹே இருக்கியா டி லைன்ல!! 

இல்ல கேட்க மாட்டேன்! யாரு பேச்சையும் கேட்க மாட்டேன் உங்களை கட்டிப்பேன்! எது நடந்தாலும் கட்டிப்பேன்! என் ருத்ரன கட்டிப்பேன்! போதுமா! என அழுதாள். 

அழு மூஞ்சியா வராத எனக்கு பிடிக்காது. நல்லா மேக் அப் பண்ணிட்டு பிரைட்டா வா நான் மண மேடையில் வெயிட் பண்றேன் என போனை கட் செய்து விட்டு தலையை கோதியவாறு சிகரெட்டை அணைத்து விட்டு புறப்பட்டான் ருத்ரன். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment