அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
359 views

Episode -83

ரிதம் பேசிய அனைத்தையும் கேட்டவள். அவளை வித்தியாசமாக பார்த்தாள். 

சொன்னது புரிஞ்சதா? என்று மேலும் அதட்டினாள் ரிதம். 

ம்ம் சரி மண்ணி நான் எப்போவும் அவர் கூட இருப்பேன். என்று விட்டு வெளியே வந்தாள். 

அனைவருக்கும் இரவு உணவை சூர்யா தயார் செய்திருந்தார். உற்சாகமாக பேசி சிரித்து கொண்டே அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள். 

வீட்டுக்கு சென்றதும் தேஜூ தன் மகள் சொன்ன விஷயத்தை கூற.. 

ருத்ரன் கண்டிப்பா அப்படி தவறா நினைக்க மாட்டான். நம்ம பொம்மாயி கற்பனை பண்ணிக்கிறா! நான் இது பத்தி பேசுறேன் என்றார் spr. 

நான் சொல்றத முதல்ல கேளுங்க. நிலாவுக்கு இது புடிக்கல. அவளை கட்டாய படுத்த வேணாம். 

இல்ல டி தேஜு என அவர் ஆரம்பிக்க.. 

நம்ம வளைகாப்பு பண்றது எல்லாரும் சந்தோசமா இருக்கிறதுக்கு தானே! இன்னும் உன் பொண்ணு அந்த சம்பவத்தை மறக்கல போல! நல்லா இருக்க அவளோட மனசை நம்ம ஏன் பழசை நியாபக படுத்துற போல பண்ணனும்? இது வேணாம் sp! நீயே யோசிச்சு முடிவெடு நான் சொல்றத சொல்லிட்டேன் என்றார் தேஜூ. 

Spr அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இதயம் மிகவும் கனத்து போயிருந்தது. என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகி போச்சே என்று வேதனை எக்க சக்கமாக இருந்தது.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் ருத்ரன் நேராக குழந்தையை பார்க்க சென்று விடுவான். இரவு வரை அங்கேயே இருப்பான். மொத்தத்தில் இப்பொழுது குழந்தையை தொல்லை செய்ய ஆரம்பித்து இருந்தான். 

நாளைக்கு நிலாவுக்கு குழந்தை பிறந்தால் இதே போல கொஞ்சுவியா? என ரிதம் கேட்க.. 

நான் ஒன்னும் கல்நெஞ்ச காரன் இல்லயே! எனக்கு குழந்தைகளை பிடிக்கும் என்றான் ருத்ரன். 

ம்ம் சரி எப்போ வளைகாப்பு என கேட்டாள் ரிதம். 

அவங்க அப்பா date fix பண்ணிட்டு சொல்றேன்னு  இருக்கார் என்றான். 

சரி என ரிதம் கூற அவளுக்காக பால் சுறா, கத்தரிக்காய போட்டு செய்த தொக்கு கிரேவியை வந்து கொடுத்தார். ரிதம் சப்பு கொட்டி சாப்பிட ஆரம்பிக்க.. குழந்தை சினுங்க ஆரம்பித்தான். 

அத்தை இவன் 1 போயிட்டான். இவனுக்கு பசிக்குது போல.. வெள்ளை வேஷ்டி ஈரம் ஆகிடுச்சு என குழந்தையின் துணியை சுத்த படுத்தினான் ருத்ரன். 

மாமி நான் வரவா? என ரிதம் எழுந்து கொள்ள.. 

நீ சாப்பிடு ரிதம் நான் பார்த்துக்கிறேன் என்றவர். அவனை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். ருத்ரன் கை கழுவ சென்றிருந்தான். 

இங்கே spr இரண்டு நாட்களாக பெரும் யோசனையில் இருந்தார். தேஜு சொல்வதும் சரி தான் என அவருக்கு தோன்றியது. ருத்ரனுக்கு அழைத்தார். 

ஹலோ!! 

ரிதம்! குழந்தை எப்டி இருக்கான்? 

ம்ம் குட் அங்கில்! ஒரு நிமிசம் இதோ ருத்ரன் வந்துட்டான் கொடுக்கிறேன் என ரிதம் போனை நீட்ட.. 

யாரு என கேட்டு கொண்டே வாங்கினான். 

ருத்ரன்!! 

ஹான் மாமா சொல்லுங்க!! சீமந்தன் எப்போ வச்சுக்கலாம் என கேட்டான் ருத்ரன். 

அது வந்து! என தயங்கியவர். இல்ல மாப்பிள்ளை சீமந்தம் வைக்க வேணாம். 

ஏன் என்னாச்சு மாமா! என ருத்ரன் கேட்க.. 

Spr ஒரு பெரு மூச்சை விட்டபடி அனைத்தையும் கூறினார். அதை கேட்டதும் ருத்ரனுக்கு நிலாவின் மேல் இன்னும் கோபம் வந்து சேர்ந்தது. நிலாவுக்கு பழைய நியாபகத்தை திருப்பி நினைவு படுத்துர போல ஆகிடும், உங்க குடும்பத்துல எல்லாருக்கும் ஒரு தயக்கமும் ஏக்கமும் வருமே! நிலா இதை செய்ய வேணாம்னு நினைக்கிறா!! விட்டுடுவோம் மாப்பிள்ளை என்றார். 

ருத்ரன் ஒரு பெரு மூச்சை விட்டபடி போனை வைத்தான். 

அதற்கு மேல் அவனால் என்ன பேச முடியும். சரிங்க மாமா என்று விட்டு போனை வைத்தான். 

ரிதம் தண்ணீரை குடித்து முடித்தவள் தன் தம்பியை பார்த்து, என்னாச்சு? என கேட்டாள். 

ஒண்ணுமில்ல!! 

சொல்லு டா நாயே!! என்ன கேடு உனக்கு? என திட்டினாள். 

சீமந்தம் வேணாம்னு சொல்றார். அது அவங்க இஷ்டம். இதுல நான் என்ன சொல்ல முடியும். என தலையை கோதினான். 

ரிதம் மெல்ல எழுந்தவள் தன் தம்பியை பார்த்து, இந்த வளைகாப்பு நடக்கணும். அவங்க வீட்ல பேசு என்றாள். 

ருத்ரன் தன் அக்காவை முறைத்து விட்டு, அவங்களே வேணாம்னு சொல்றாங்க நான் எதுக்கு போய் சொல்லிட்டு!. அது தேவையில்லாத வேலைன்னு தோணுது. 

சரி ஓகே நீ சொல்ற மாதிரியே நீ எதுவும் பண்ண வேணாம். ஆனா நாளைக்கு இன்னொரு குழந்தை… அதாவது உனக்கும் அவளுக்கும் பிறக்கிற குழந்தைக்கு மறுபடியும் வளைகாப்பு பண்ணுவியா? வளைகாப்பு அப்படின்றது முத குழந்தைக்கு தான் பண்ணுவாங்க! அப்போ நீ வளைகாப்பு பண்ணும் போது எல்லாரும் என்ன பேசுவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சியா? என கேட்டாள். 

இன்னொரு குழந்தையா சுத்தம் அவளுக்கு என் கூட குழந்தை பெத்துக்க பிடிக்குமா என்ன எனக்கெல்லாம் அது ஒன்னு தான் கேடு! என்று மனதில் நினைத்துக் கொண்டான். 

டேய் இன்னொரு குழந்தை பெத்துக்கிற ஐடியாவுல இருக்கியா இல்லையா? நாளைக்கு நீ விருப்பப்படலனாலும் உன்னோட அம்மா தீவிரமா விருப்பப்படும்.  அப்போ என்ன பதில் பேசுவ? என்ன பண்ணுவ? என்று போட்டு வாங்க முயற்சி செய்தாள் ரிதம். 

நான் அத பத்தி பெருசா எதுவும் யோசிக்கல என்று ருத்ரன் கூற.. 

ரிதம் அவனைப் பார்த்து அடுத்த குழந்தைக்கு நீ வளைகாப்பு பண்ணுனா கண்டிப்பா முதல் குழந்தையை பிரிச்சு வைக்குற போல ஆகிடும்!

இங்க ஒரு குழந்தைக்கு வழியில்ல இவ அடுத்த குழந்தைக்கு போய்ட்டா என நினைத்தான் ருத்ரன். 

டேய் அப்பதான் அது ரொம்ப வித்தியாசமா தெரியும் அவங்க கிட்ட பேசி இந்த குழந்தைக்கு வளைகாப்பு பண்ண சொல்லு இல்லன்னா நான் பேசவா என்று ரிதம் கேட்க.. 

வேண்டாம் உன்னோட வேலை மொத்தமும் என் மருமகன் மேல மட்டும் தான் இருக்கணும் அவனை நீ பார்த்துக்கோ நான் என்ன பண்றதுன்னு பார்க்கிறேன் என்று புறப்பட்டான். 

ரிதம் ஒரு பெரு மூச்சை விட்டபடி மகியை நோக்கி நடந்தாள். ரிதமின் பாட்டி கங்கா கையில் குழந்தை இருந்தது. உடலை முறுக்கி கொண்டு காலை கடன் செய்து கொண்டிருந்தது. 

***

வீட்டுக்கு தடாலடியாக வந்து சேர்ந்தான் ருத்ரன். 

நேராக நிலா எங்கு இருக்கிறாள் என தேடி கொண்டே சென்றான். 

இன்ப ராகவன் , விவேகா இருவரும் வீட்டில் இல்லை. குழந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தார்கள். 

பின் பக்கத்தில் எலுமிச்சை செடியின் பக்கம் நாய் குட்டிகள் விளையாடி கொண்டிருக்க, சேரில் அமர்ந்தபடி நாய் குட்டிகளை பார்த்து கொண்டிருந்தாள் நிலா. 

சட்டென இரும்பியவள் பின்னால் திரும்பி பார்க்க.. ருத்ரன் கைகளில் சிகரெட்டுடன் நின்றிருந்தான். கோபமும் இயலாமையும் தோன்ற எழுந்தாள். என் மேலே சத்தியம் பண்ணிட்டு எப்டி இதை ஸ்மோக் பண்ணனும்னு உங்களுக்கு தோணுது? 

என் தாலி கட்டிக்கிட்டு இன்னும் உன்னோட காதலனை நீயே நினைச்சிட்டு இருக்கும் போது நான் ஸ்மோக் பண்ண கூடாதா என்ன? 

நிலா அவனை கோபமாக பார்த்தவள். சத்தியமா சொல்றேன். உங்களை கட்டிக்கிட்டதுக்கு பிறகு உங்களை மட்டும் என சொல்ல வந்தவள் இடை நிறுத்தினாள். 

சத்தியவான் சாவித்ரி வந்துட்டா!! அப்புறம் எதுக்கு டி சீமந்தம் வேணாம்னு சொன்ன? என கேட்டு கொண்டே சிகரெட்டை அணைத்தான். அவன் பற்ற வைத்தானே தவிர புகைக்கவில்லை என்பது நிலாவுக்கு தெரியுமா என்ன? 

உங்களுக்கு!. 

ப்ச் நான் சொன்னேனா சீமந்தம் பண்ண வேணாம்னு? 

எனக்கு பிடிக்கல!! 

ருத்ரன் சிரித்து கொண்டே.. உன்னோட நடிப்பை வேற இடத்துல காட்டு!.  

நிலா அவனை பார்த்து, சீமந்தம் எனக்கு வேணாம். அவ்ளோ தான் உங்க வேலைய நீங்க பாருங்க என்று விட்டு அவள் உள்ளே செல்ல போக.. இடை மறித்தான். 

நகருங்க 

எனக்கு சீமந்தம் பண்ணனும்! 

பண்ணிக்கோங்க!! என நிலா நகர முற்பட.. 

ஹே என கழுத்தை பிடித்தான். 

சீமந்தம் பண்ண நான் ஓகே சொல்லணும்னா உங்க கிட்ட டிமாண்ட் இருக்கு. 

என்ன? என கையை எடுத்தான். 

எனக்கு உங்களோட பாப்பா வேணும். 

ருத்ரன் அவளை கொல்லும் வெறியில் பார்க்க.. 

முடியாதுன்னா போங்க! எனக்கு சீமந்தம் வேணாம். என்று விட்டு முன்னால் நடந்து கிச்சன் சென்றாள். 

ஹே என்னடி உன் இஷ்டத்துக்கு போற!! நான் பேசிட்டு இருக்கேன். 

பேசுங்க!! எனக்கு தண்ணி தாகமா இருக்கு என குடித்தாள். 

வேற எதுவும் கேளு அது மட்டும் முடியாது. என ருத்ரன் கூற…

எனக்கு பாப்பா வேணும் அவ்ளோ தான். ஓகே அப்டின்னா அடுத்தது பேசுங்க!! இல்லன்னா உங்க வேலைய பாருங்க!! என்று விட்டு நகர்ந்தாள். 

இரவு வரை அப்படியே இருந்தான். நிலாவுக்கு விவேகா போன் செய்தார். சொல்லுங்க மாமி? 

நான் ரிதம் வீட்ல தான் இருக்கேன். உனக்கு குழம்பு செஞ்சு வச்சிருக்கேன். தோசை ஊத்துக்கோ டா! நாளைக்கு தான் நாங்க வருவோம் என்றார். 

சரிங்க மாமி! என சொல்லி விட்டு உணவை சாப்பிட வெளியே வந்தாள். ருத்ரன் தந்தூரி சிக்கனை சாப்பிட்ட படி பிரஷ் ஜுஸ் குடித்து கொண்டிருந்தான். அவளுக்கான தோசையை அவளே சுட்டு கொண்டு கிச்சனில் சாப்பிட்டு முடித்தவள். மாத்திரையை விழுங்கி கொண்டு டானிக் குடித்து முடித்து வாக்கிங் சென்றாள். 

தன் வீட்டில் இன்னொருவன் இருப்பதையே மதிக்கவில்லை. அரை மணி நேரம் வாக்கிங் சென்றவள். சிறிது நேரம் அமர்த்து விட்டு படுக்க செல்ல.. 

முடிவா என்ன சொல்ற? என அவனது குரல் கேட்டது. 

என்னோட முடிவை சொல்லிட்டேன். கண்டிப்பா பாப்பா வேணும். என கைகளை கட்டியபடி அவனை பார்த்தாள். 

அன்னிக்கு வேணாம்னு சொன்ன? என ருத்ரன் பார்த்தான். 

இன்னிக்கி வேணும்னு தோணுது! என்றாள் அதே பாணியில்.. 

ருத்ரன் அசால்ட்டாக..  அப்போ நீயே டிரை பண்ணிக்கோ! உனக்கு தான வேணும். நான் உன்னோட பக்கத்தில் வர மாட்டேன். உனக்கு குழந்தை வேணும்னா நீ தான் வரணும். போய் இந்த குழந்தைய சீமந்தம் பண்ணி பெத்து எடு அப்புறம் அடுத்து பார்ப்போம் என்று விட்டு அவன் கிச்சன் சென்றான். 

இதோ அவன் கை கழுவி திரும்ப முதுகை கட்டி கொண்டிருந்தாள் நிலா. 

ருத்ரன்..?

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment