ரெக்கை கட்டி பறக்குது மனசு

by Pradhanya kuzhali
529 views

Episode -8 

ஹேமா, “உன்னை மனோஜ் சார் நேர்ல வந்து பார்க்கச் சொன்னார்”னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போயிட்டா.

இளவேனில் மனசுக்குள்ள, ‘அவனையா! அவனைப் போய் நான் ஏன் பார்க்கணும்? சரியான சிடுமூஞ்சி. சிரிக்கக்கூடக் காசு கேட்பான்,’னு நினைச்சுக்கிட்டே நடந்தா.

மனோஜ் ஒருவித படபடப்புடன் உட்கார்ந்திருந்தான். இத்தனை வருஷத்துல இதுபோல ஒரு உணர்வை அவன் அனுபவிச்சதே இல்லை. அவள் வந்ததும் என்ன பேசுறதுன்னுகூடத் தெரியாம, அந்தப் பெதாலஜி புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தான். ஒரு மணி நேரம் ஆச்சு, அவள் வரவே இல்லை.

‘நான் தான் அவளை நினைச்சுக்கிட்டு இருக்கேன். அவளுக்கு என் மேல கோபம் மட்டும்தான் இருக்குமோ? என்னைச் சாதாரணமாக எடுத்துட்டு இருப்பா போல,’னு நினைச்சவனுக்கு, ஏனோ மனசுல முதல் முறையாக ஏமாற்றம் ஏற்பட்டது. அவனது முடிவை மறுபடியும் அலசி ஆராய ஆரம்பிச்சான்.

‘நீ செய்றது தப்பு. தேவையில்லாம அவளை நினைச்சுக்கிட்டு இருக்க வேண்டாம்,’னு அவன் மனசு சொல்ல, ‘இல்ல மனோஜ், அவளுடனான முதல் சந்திப்பு, ரெண்டு பேரும் இணையுற இடத்துல இருந்துதானே ஆரம்பிச்சது,’னு இன்னொரு பக்கம் சொல்லுச்சு. மனோஜோட மூளை, ‘Are you mad? அது ஜஸ்ட் ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்தான். நல்லா யோசிச்சுப் பாருடா,’னு சொல்ல, மனோஜ் இன்னும் அரை மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கிட்டு, மனதை கல்லாக்கி, ‘சரி, இனி அவள் நினைப்பும் வேண்டாம், அவளும் வேண்டாம்,’னு நினைச்சுகிட்டே ஒருவித கலக்கத்துடன் 13A அறையில இருந்து வெளியே வந்தான்.

அதே நேரம் இளவேனில் அவனைப் பார்க்க எதிர் திசையில நடந்து வந்தா. மனோஜோட மனசு கல்லில் இருந்து கரையத் தொடங்குச்சு. இன்னொரு பக்கம், அவனை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வெச்சதுக்குக் கோபம் மூக்குக்கு மேல எகிறத் தயாரா இருந்துச்சு.

அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் முன்னாடி நடந்தான். “ஹலோ… எக்ஸ்க்யூஸ் மீ சார்!”

அவன் கண்ணாடியை மூக்குக்குத் தள்ளிக்கிட்டே, “என்ன வேணும்?”னு முதல்முறையாகத் தமிழ்ல பேசினான். அவள் ஒரு நிமிஷம் நிதானிச்சு, “நீங்க என்னை பார்க்க வரச் சொன்னதா ஸ்டாப் நர்ஸ் ஹேமா சொன்னாங்க. அதான் வந்தேன். என்ன விஷயம்?”னு கேட்டா.

“நத்திங். நீங்க போகலாம்,”னு சொல்லிக்கிட்டே அவன் நடக்க ஆரம்பிச்சான். இளவேனிலுக்கு இப்போ கோபம் ஏறி, “இப்படி சொல்லிட்டுப் போனா என்ன அர்த்தம்? என்னோட டைம் வேஸ்ட்!”னு சொன்னா.

இதை கேட்டதும் அவன் அவளை உறுத்துப் பார்த்து, “Let me say that, SILLY GIRL!”னு கத்தினான். அவன் ‘சில்லி கேர்ள்’னு சொன்னதும், அவளுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக்கிட்டு, “நீங்க சொல்றதப் பார்த்தா, இந்த ரெண்டு மணி நேரமும் எனக்காகக் காத்திருந்ததுபோல தெரியுதே!”னு சொன்னா.

மனோஜ் உடனே மறுத்துட்டு, “I don’t need to answer you!”னு சொல்லிக்கிட்டே நடந்தான்.

இளவேனில் மனசுக்குள்ள, ‘கொஞ்சம் அதிகமா பேசிட்டோம். அவனோட குணம் நமக்குத் தெரியுமே… சிரிக்கத் தெரியாதவன். நாளைக்கு என்னைப் பத்தி ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணிவிட்டா என்ன பண்றது?’னு நினைச்சுக்கிட்டு…

கொஞ்சம் சோர்வா, “எனக்கு உண்மையாவே இந்த ரெண்டு மணி நேரமும் வேலை இருந்தது. அதனாலதான் வர முடியல. சாரி சார். இப்போ என்ன விஷயம் சொல்லுங்க?”ன்னு கேட்டா.

மனோஜ், “I have no time,”னு சொல்லிக்கிட்டே நடந்தவன், “நாளைக்கு இதே டைம் வந்தா சொல்றேன்,”னு சொல்லிட்டுப் போயிட்டான். இந்த பதிலுக்குக் காரணம், மனோஜ் அவளை மதிப்பீடு செய்ய ஆரம்பிச்சான். ‘இவன் நம்மளை எங்கிருந்து தள்ளிவிடுவது? ரெண்டு வார்த்தைகூடப் பேசுவான். அதுக்கு என்ன ஆட்டம் போடுறான்! எல்லாம் நம்ம நேரம்,’னு சொல்லிக்கிட்டே அவள் தன்னோட வேலையைப் பார்க்கப் போனா.

அடுத்த நாள் அழகாக விடிந்தது. மனோஜ் இரவில் ஜெனரல் டியூட்டில இருந்தபோதும் ரொம்ப பிரகாசமாக இருந்தான். அவனோட எண்ணங்கள் முழுதும், இளவேனில் ஒரு சின்ன மூலையில் ஆக்கிரமிச்சுக்கிட்டா.

அடுத்த நாள் வேகமா அவன் அறைக்குப் போய் குளிச்சு முடிச்சு, எப்பவும்போல ஒரு உடையைத் தேர்வு செஞ்சு போட்டுக்கிட்டு, தன்னோட கட்டுக்கடங்காத முடியை கோதி விட்டு கண்ணாடியை அணிஞ்சான். முதல்முறையாக கண்ணாடியைப் பார்த்து ஒருமுறை உடை சரியா இருக்கான்னு பார்த்துக்கிட்டே அந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிட்டான்.

நேரா ஃபுட் கோர்ட் போய் உப்மாவும், ஒரு ஃப்ரெஷ் ஜூஸும் – இன்னைக்கு மாதுளை – எப்பவும்போல பொறுமையா சாப்பிட்டுட்டு, அந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்துல மாட்டிக்கிட்டு அவளைப் பார்க்கக் கிளம்பினான். ஆனா, அதே நேரம் பார்த்து ஒரு நோயாளி மூச்சுவிடச் சிரமப்படுறதா வார்டில் இருந்து போன் வர, அவனோட மனசு அவள் நினைவில் இருந்து சுத்தமா வெளிய வந்து, நேரா அந்த இடத்துக்குப் போனான்.

அந்த நோயாளியைச் சுத்தி நர்ஸ் நின்னுட்டு இருக்க, ஆக்சிஜன் மாஸ்க் போட்டுருந்துச்சு. பக்கத்துல பல்ஸ் மெஷின் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இரத்த அழுத்தத்தைச் செக் செஞ்சவன், உடனடியாக அட்டெண்டரை வரச் சொல்லி, அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற ஏற்பாடுகளைச் செஞ்சான்.

அந்த நோயாளியோட பேரு ஜெகதீஷ். பேரை கேட்ட மனோஜ், “ஜெகதீஷ் சார், நல்லா மூச்சை இழுத்து விடுங்க. எதையும் நினைச்சு டென்ஷன் ஆக வேண்டாம், ஜெகதீஷ் சார்,”னு கூப்பிட்டுக்கிட்டே இருக்க, அவர் கண்களைத் திறந்தார். அவனுக்கு மேல அனுபவம் வாய்ந்த மருத்துவருடன் கலந்து பேசி, அவருக்கான ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சது.

மனோஜ் இளவேனிலை மறந்துட்டான். அவனுக்கு எல்லாத்தையும்விட முக்கியமானது இந்த வேலைதான். இப்படியே நேரம் போய்க்கிட்டு இருக்க, மணி நண்பகல் 11:15 ஆச்சு. அப்போதான் அவன் மக்கள் தொடர்பு துறை பக்கம் இருக்குற அவனோட சீனியர் ரியாவைப் பார்க்கப் போக, இளவேனில் நினைவு வந்தது.

‘ஓ மை காட்! அவளை நான் எப்படி மறந்தேன்?’னு நினைச்சுக்கிட்டே வேகமா அறை எண் 13A-க்கு போனான். அவள் கோபத்தோட உட்கார்ந்திருந்தா. மனோஜ் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாம, தன்னோட இடத்துக்கு வந்து உட்கார்ந்தான்.

இளவேனில் எழுந்து நின்றா. கோபத்துல மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, “நீங்க டாக்டர் தானே? எவ்வளவு படிச்சிருக்கீங்க? உங்களுக்கு அறிவு இல்லையா? உங்களைப் போலவே நானும் இங்கதான் வேலை பண்றேன். எவ்வளவு நேரம் இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், அது உங்களுக்குத் தெரியுமா?”ன்னு கேட்டா.

“எனக்குத் தெரியாது. எவ்வளவு நேரம்னு சொல்லு, தெரிஞ்சுக்குறேன்,”னு அசால்ட்டா மனோஜ் சொன்னான்.

இந்த பதிலைக் கேட்டதும் அவளோட உதடு துடிக்க, பேச வர…

மனோஜ்…?

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment