உறவே உயிரே

by Pradhanya kuzhali
400 views

உயிரே-4

செவ்வந்தியைப் பற்றிய நினைவுகளோடு காரை ஓட்டி வந்ததால், முன்னால் வந்த வாகனத்தின் மீது அன்புவின் கவனம் போகவில்லை. எதிர்பாராதவிதமாக, முன்னால் சென்ற எக்ஸல் வாகனத்தின் மீது மோதிவிட, அதில் வந்த பெரிய சாமி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அன்பு பதற்றத்துடன், “யோவ்! யூ புல்ஷிட்!” என்று கத்திக்கொண்டே வேகமாக இறங்கினான்.

“நீங்க தப்பா என் மேலே வந்து மோதிட்டு இப்படிப் பேசுறீங்க! படிச்சவர் மாதிரிதானே இருக்கீங்க, அறிவு இல்லையா?” என்று பெரிய சாமி பேச, அதுவரை செவ்வந்தியினால் மழுங்கடிக்கப்பட்டிருந்த அன்புவின் கோபம் இப்போது தலைதூக்கியது.

“யாரைப் பார்த்து என்ன பேசிட்டு இருக்கீங்க? நான் யாருன்னு தெரியுமா? நீங்கதான் தப்பா வந்து என் வண்டியில் விழுந்திருக்கீங்க! காலையில் உங்களுக்கு வேற வண்டி கிடைக்கலையா?” என்று கத்தினான்.

பெரிய சாமி தள்ளாடிக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “நீங்க வெளியூர்னு விட்டுப் போறேன், இல்லைன்னா!” என்று சொல்லிவிட்டு மெதுவாக வண்டியை ஸ்டார்ட் செய்து நிறுத்தினார்.

அன்பு அவரைக் கடுகடுவெனப் பார்த்துவிட்டு, இருக்கை அருகே இருந்த தனது வாலெட்டை எடுத்து, அதில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து பெரிய சாமியிடம் நீட்டினான்.

அவர் அன்புவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

“ஹலோ, வேணாமா!” என்று அன்பு அழைக்க, “உன்னைப் பெத்தவங்க ரொம்பப் பாவம்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார் பெரிய சாமி.

அன்பு, “இரிடேட்டிங் இடியட்!” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பணத்தை மீண்டும் பர்ஸில் வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

பெரிய சாமியின் வண்டியின் சத்தம் கேட்டதும், செவ்வந்தி “அப்பா வந்தாச்சு!” எனச் சிரித்துக்கொண்டே வெளியே வந்தவள், தன் தந்தையின் முகத்தைப் பார்த்ததும் “அப்பா!” என அலறிக்கொண்டே ஓடினாள். அருணும், முத்து சாமியும் பதட்டத்துடன் ஓடி வந்தனர்.

பெரிய சாமி, “கண்ணு, ஒண்ணும் இல்லைடா!” என்றார்.

அருண், “மாமா என்னாச்சு? எப்படிங்க மாமா உங்க காலில் காயம்?” எனக் கேட்டான்.

முத்து சாமி, “என்ன மாப்பிள்ளை ஆச்சு?” என்றார்.

“ஒண்ணும் இல்லைங்க மாப்பிள்ளை! வரும் வழியில்!” என மூச்சு வாங்கியபடியே நின்றார் பெரிய சாமி.

செவ்வந்தியின் உடல் நடுங்க, “அப்பா!” என அழ ஆரம்பித்தாள். மயக்கம் வருவதுபோல் கண்களைச் சுழற்றி நின்றாள்.

பெரிய சாமி, “பொண்ணு ஒண்ணும் இல்லை கண்ணு! நீ மயங்கிடாதே!” என்று சொல்லிக்கொண்டே அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.

உள்ளே அவரை அமர வைத்து சிராய்ப்புக் காயங்களைப் பார்த்தாள். “அப்பா, அப்படி என்ன கவனக்குறைவு? என்னைக்கூட நீங்க மறந்துபோய்ட்டீங்க…” என்றாள்.

முத்து சாமி, “பொண்ணு என்னடா கண்ணு!” என்று கேட்டார்.

அருண் அவளின் காதைத் திருகி, “பொட்டைக் கழுதை! கொழுப்பு அதிகமாகிப்போச்சு! அம்மா வரட்டும், உன்னைச் சொல்றேன்!” என்றான்.

“அப்பா, மாமா!” எனச் சிணுங்கி அழுதாள்.

முத்து சாமி, “டேய், பொண்ணு மேலே கையை வைக்கிற! சாட்டையால் இழுப்பேன் ராஸ்கல்!” என்று அதட்ட, அருண் உடனே கையை எடுத்துக்கொண்டான்.

செவ்வந்தி ஓடிச் சென்று தன் தந்தைக்குச் சூடாக கருப்பு டீ போட்டுக் கொண்டு வந்தாள். பெரிய சாமி அதைக் குடிக்க, அவரின் காலில் உள்ள காயங்களுக்கு மஞ்சள் பூசினாள்.

“மாப்பிள்ளை!” என்று பெரிய சாமி முத்து சாமியிடம் சொல்ல, “சொல்லுங்க மாப்பிள்ளை!” என்றார் முத்து சாமி.

“கோவில் அறங்காவலர் பணியை நீங்களே செய்யுங்க!” என்றார் பெரிய சாமி.

“என்ன ஆச்சு?” என்று முத்து சாமி கேட்க, “நான் சொல்றேன் மாப்பிள்ளை” என்று கூறினார்.

செவ்வந்தி தன் தந்தைக்கு உணவுகளைக் கொடுத்து சாப்பிட வைத்தாள். அதற்குள் சுதா பதற்றத்துடன் “அண்ணா! என்னங்க அண்ணா ஆச்சு!” என ஓடி வந்தாள்.

“ஒண்ணும் இல்லை சுதா! கொஞ்சம் கிறுகிறுப்பு வந்திடுச்சு!” என்றார் பெரிய சாமி.

“அண்ணா தனியா எதுக்கு போகணும்? உங்களை யாரு அலசிப் போட ஆத்துக்கு போகச் சொன்னது? நான் எதுக்கு இருக்கேன்! ஐயோ, எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல!” என்றாள் சுதா.

“நான் நல்லா இருக்கேன் கண்ணு! நீ போய் நேரமே சாப்பிடு!” என்று அவளை அனுப்பி வைத்தார்.

பெரிய சாமி, “கண்ணு தோட்டத்துக்கு போகலையா?” என்று கேட்டார்.

“அது நர்சரி, பா!” என அழுத்திச் சொன்னாள் செவ்வந்தி.

“ஏதோ ஒண்ணு! போகலையா?” என்றார்.

“இல்லை, மனசு ஒருமாதிரி இருக்கு. நான் உங்கள் கூடவே இருக்கணும்” என்றாள்.

“பொண்ணு, நான் நல்லா இருக்கேன், நீ போடா!” என்றார்.

“இல்லை பா!” என்று பிடிவாதம் செய்தாள்.

“நீ போகலைன்னா உங்க அம்மா வருத்தப்படுவா!” என்றார் பெரிய சாமி.

“அம்மாவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“நீதானே சொல்லுவ, அங்கே இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் அம்மா சுற்றி வருவதைப் போல இருக்கும்னு! அதான், நீ போயிட்டு வா! அருண், பாப்பாவைக் கூட்டிப்போ!” என்றார்.

“சரிங்க மாமா!” என்று அருண் அவளை அழைக்க, செவ்வந்தி எதையோ யோசித்துவிட்டுச் “சரி” என்று கூறி கிளம்பினாள்.

முத்து சாமி, “ஏன் மாப்பிள்ளை அறங்காவலர் பதவி வேணாம்னு சொல்லிவிட்டீர்கள்?” என்று கேட்டார்.

“மாப்பிள்ளை, பாப்பாவுக்குக் கல்யாணம் பண்ண யோசிச்சு இருக்கேன். என்னமோ தெரியலை, கீழே விழுந்த நொடி பாப்பாவின் நினைப்புதான் வந்தது. ஒரு நல்ல, பொறுப்பான, குணமுள்ள பையனாப் பார்க்கணும்!” என்று பெரிய சாமி கூறினார்.

முத்து சாமி, “அதுக்குத் தூரமா எதுக்குப் போறீங்க? என் தங்கச்சி மகளை நான் பொண்ணு எடுத்துக்க மாட்டேனா!” என்றார்.

பெரிய சாமி, “பாப்பாகிட்ட நீங்களே கேளுங்க. சம்மதம் சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கூடிய சீக்கிரம் கல்யாணத்தைப் பார்க்கணும் மாப்பிள்ளை!” என்றார்.

முத்து சாமி சிரித்துக்கொண்டே, “மூணு மாசம் பெரிய வித்தியாசம் இல்லதான். பாப்பா ஒத்துகுமா, தெரியலயே!” என்று சொன்னார்.

“சரி, கேட்போம்!” என அவரவர் வேலையைப் பார்த்தனர்.

அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. செவ்வந்தி வழக்கம் போல் தினமும் காலையில் தலைக்குக் குளித்து, விரதம் இருந்து, அனைத்தையும் செய்து முடித்தாள். அதன் பிறகுதான் நர்சரிக்குக் கிளம்புவாள்.

சந்தானம் அனைத்து ஆட்களையும் சரியான நேரத்திற்கு அழைத்து வந்தான். அவர்களின் குழுவில் முக்கிய மேஸ்திரி மற்றும் மேற்பார்வையாளர்கள் இருந்தனர். மீதி உள்ளவர்களை முத்து சாமியிடம் சொல்லி, சோலார் பக்கத்தில் உள்ள ஆட்களை அழைத்துக்கொள்ளலாம் என அன்பு முடிவு எடுத்தான்.

இன்றுதான் பால்கால் நட்டு, நவதானியம் வைத்துப் பூஜை செய்து வேலையைத் தொடங்கி வைக்க வேண்டும். அதற்கான அனைத்து வேலைகளையும் சந்தானம் பார்த்துக்கொண்டான்.

அன்பு ஒரே நாளில் மொத்தமாக முத்து சாமி சொன்ன விருந்தினர் இல்லத்திற்கு வந்துவிட்டான்.

செவ்வந்தி வழக்கம் போல் நர்சரிக்குப் புறப்பட்டு விட்டாள். அருண் அவளை புல்லட்டில் கொண்டு வந்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஐயர், “தம்பி, பூமி பூஜை போட எல்லாப் பொருளும் வாங்கிட்டு வந்தாச்சோ?” என சந்தானத்திடம் கேட்டார்.

“எல்லாமே இருக்கு சாமி!” என்று காட்டினான்.

அந்த நேரம், சந்தன நிற சட்டையில் ஃபார்மலாக வந்து அன்பு செல்வன் இறங்கினான்.

சந்தானம், “குட் மார்னிங் சார்!” என்றான்.

“ம்ம்! எல்லாம் ரெடியா?” எனச் சொல்லிக்கொண்டே வந்தான் அன்பு செல்வன்.

“யெஸ் சார்!”

ஐயர், “அம்பி, இங்கே பொன்குழந்தை யாரும் இருக்காளா?” என்று கேட்டார்.

அன்பு செல்வன் தன் ஆளுமைக்குரலில், “அவர் ஏதோ கேட்கிறார், போய்ப் பாரு!” என்றான்.

“யெஸ் சார்!” என ஓடினான் சந்தானம்.

“என்ன சாமி சொல்றீங்க?” என்று அன்பு செல்வன் கேட்டான்.

“ஆமாண்டா அம்பி, அப்போதான் சடங்கு செய்யச் சரியா இருக்கும். நல்ல நேரம் ஆரம்பிக்க இன்னும் கால்மணி நேரம் இருக்கும். நாழி ஆவதற்குள் அழைச்சிட்டு வாங்கோ!” என்றார் ஐயர்.

அன்பு செல்வன், “என்ன ஆச்சு, இன்னும் எவ்வளவு நேரம்? இப்போ எனக்கு முக்கியமா வேலை இருக்கு!” என்றான்.

சந்தானம், “சார், ஒரு பொண்ணு வரணுமாம். அப்போதான் இதைப் பண்ண முடியும்னு சொல்றாங்க” என்றான்.

அன்பு செல்வன் கடுமையாக, “இது உனக்கு முன்னாடியே தெரியாதா? டைம் வேஸ்ட்! இந்தப் பட்டி காட்டில் எங்கே இருந்து கூட்டி வருவது? என்னமோ பண்ணு, ஆனால் என்ன செய்வியோ எது செய்வியோ, இன்னைக்கு இதை முடித்து ஆகணும். அதுக்கு அப்புறம் டாக்குமெண்ட் ஒர்க் இருக்கு!” என்றான்.

“யெஸ் சார்!” என்று சொல்லிக்கொண்டே சென்றான் சந்தானம். வண்டி இல்லை, நாளைக்குத்தான் செகண்ட் ஹேண்ட் பைக் வாங்க வேண்டும். அதனால் எப்படி அழைப்பது, யாரை அழைப்பது என நொந்துபோய் நின்று கொண்டிருந்தான்.

அன்பு செல்வன் அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஐயர், “அம்பி, இந்தா என் எக்ஸல் சாவி. போய்ப் பார்த்து கூட்டிண்டு வா. இந்தப் பக்கம் போனால் பஸ் ஸ்டாப் வரும். சாமி காரியம் தடங்கல் ஆகக் கூடாது” என்று சொன்னார்.

“சரிங்க சாமி!” எனச் சொல்லிக்கொண்டே வாங்கிச் சென்றான் சந்தானம்.

எல்லா இடங்களிலும் தேடினான். கடைசியில் அவன் வண்டி நர்சரி முன்பு நின்றது. செவ்வந்தி அனைத்துச் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். “இன்னும் வளர வேணும் செல்லங்களா!” எனச் சிரிப்புச் சத்தம் கேட்டது.

‘முருகா, ஒரு பொண்ணைக் கண்ணில் காட்டுப்பா!’ எனத் திரும்ப, அவள் பின்புறம் தெரிந்தது. ‘பொண்ணு! அப்பா! முருகா, நன்றி!’ எனப் பெருமூச்சு விட்டவன், “மேடம்! மேடம்!” என்று அழைத்தான்.

“என்னங்க வேணும்! உரமா, இல்லைச் செடியா, மணி பிளான்டா, இல்லை பொக்கேவா, அப்புறம்…” என செவ்வந்தி ஆரம்பிக்க, “மேடம், மேடம் ஒரு நிமிடம்! ப்ளீஸ்!” என்று சந்தானம் தடுத்தான்.

“ம்ம், சொல்லுங்க!”

சந்தானம், “நீங்க கொஞ்சம் என் கூட வர முடியுமா?” என்று கேட்க, அவள் புருவம் சுருங்கி, “நான் எதுக்கு உங்க கூட வரணும்? யாருங்க நீங்க? ஏதோ தவறாப் பேசற மாதிரி இருக்கே!” என்றாள்.

சந்தானம், “மேடம், சாரி, சாரி! இங்கே பக்கத்தில் ஒரு காம்ப்ளக்ஸ் புராஜக்ட் பூமி பூஜை நடக்க இருக்கு! அதுக்குப் பூஜை பண்ணப் பொண்ணு வேணும்! ஐ மீன், பொண்ணுதான் வரணும்! அதுக்குத்தான், வேற ஒண்ணும் இல்லை!” என்றான்.

செவ்வந்தி அப்படியே நின்று யோசித்தாள். சந்தானத்தை மேலும் கீழும் பார்த்தாள்.

‘என்ன இப்படிப் பார்க்கிறா?’ என அவன் மனதில் நினைத்தான்.

செவ்வந்தி, “பூமி பூஜையா?” என்று கேட்டாள்.

“ம்ம், ஆமா மேடம்!”

செவ்வந்தி முடியாது என்பதுபோல், “ஆனால் என்னால் நர்சரியைத் தனியா விட்டு வர முடியாதே! இப்போ கஸ்டமர்ஸ் வர நேரம்!” என்றாள்.

சந்தானம் சுற்றியும் பார்வையைச் சுழலவிட்டான். ‘கொஞ்ச தூரத்தில் RTO ஆஃபீஸ். இந்தப் பக்கத்தில் நாய் நரி கூட இல்லை! இப்படிப் பொய் சொல்கிறாள். எல்லாம் என் நேரம்!’ என நினைக்க, அவனுக்கு மூக்கு வேர்க்க, அன்பு செல்வன் அழைத்தான்.

“ஹே, இன்னும் 5 மினிட்ஸ்தான் இருக்கு, சீக்கிரம் வா!”

சந்தானம், “மேடம், பாஸ் ஃபோன் பண்றார் மேடம்! நல்ல நேரம் முடியப்போகுதாம், ப்ளீஸ் மேடம்! இல்லைன்னா என்னோட வேலை போயிடும்!” என்றான்.

செவ்வந்தி சந்தேகமாக, “நிஜமாதானே? பொய் இல்லையே?” என்று கேட்டாள்.

“நிஜம்தான் மேடம்! இதோ சைட் பிக், உங்களுக்குத் தெரிந்து இருக்குமே!” எனக் காட்டினான்.

செவ்வந்தி அவனிடம், “சரி, நம்புகிறேன், வாங்க போலாம்!” என அவனுடன் கிளம்பினாள்.

சந்தானம் சிரித்துக்கொண்டே, “ரொம்ப தேங்க்ஸ் மேடம்!” என்றான்.

“ம்ம்” என வண்டியில் ஏறினாள். சந்தானம் சரியான நேரத்திற்கு வந்துவிட்டான்.

செவ்வந்தி சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டாள்.

ஐயர், “அட குழந்தை! நீயா!” என்றார்.

அன்பு செல்வன் கோபமாக, “சந்தானம், உனக்குக் கொஞ்சம் கூட டெடிகேஷன் இல்லை! பேபியைப் போய்க் கூட்டி வந்திருக்கே, நான்சென்ஸ்!” என்றான்.

அங்கே செவ்வந்தி வந்து நின்றாள்.

(என்னத்தைச் சொல்ல? ஒரு பெண்ணை சைட் அடித்துவிட்டு, அவங்க அப்பா மேலே வண்டியை விட்டு அன்பு வந்திருக்கான். பெரிய சாமிதான் செவ்வந்தியின் அப்பா என்று தெரிந்தால் என்ன நடக்கும்? அடுத்து என்ன நடக்கும், பார்ப்போம்.)

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment