Episode-118
டேய் இன்னும் சந்தனா அந்த ட்ரக் எடுத்துக்கிறாளா? அது எதுவும் பிரச்னை ஆகிட போகுது? என்னோட குழந்தைக்கு? என நிதின் பதட்டத்துடன் கேட்டான்.
இல்ல இனிமே தேவையில்ல!! என சத்ய தேவ் பெரு மூச்சுடன் அமர்ந்தான்.
அப்போ ஓகே அவள் வயிற்றில் இருக்கும் என்னோட குழந்தை நல்லபடியா இருக்கணும் அது தான் வேணும் என்றான் நிதின்.
ஆமா நீ தப்பிச்சிட்ட நாயே!! நான் அந்த கிறுக்கி கிட்ட மாட்டிகிட்டேன் டா!!
பிளீஸ் டா!! வேற வழி இல்ல! அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! என நிதின் அமர்ந்தான்.
சத்ய தேவ் முறைத்து பார்த்தான். நிதின் சிரித்து கொண்டே அப்படி என்ன பண்றா?
என்னை கட்டி பிடிக்கிறா! அந்த கழிசடை! கிஸ் பண்றா! கண்ட இடத்தில கை வைக்கிறா!! என சத்ய தேவ் நெற்றியை தேய்த்தவன். எனக்கு அசிங்கத்து மேலே கால் வச்ச போல இருக்கு நிதினு. என் துகில நான் மிஸ் பண்றேன். ரிதம்! என் ராவடி என தலையை கோதியபடி கண்களை மூடினான்.
சரி சரியா போயிடும் நீ கவலை படாத டா!!
போடா ம*!! நீ ஒரு நாள் இவள் கூட இருந்து பாரு அப்போ தான் தெரியும். உன்னோட குழந்தைய தானே கேரி பண்றா என சத்ய தேவ் கோபத்தில் கத்தினான்.
சரி விடு விடு எல்லாமே சரி ஆகிடும் டா அண்ணா! என்றான் நிதின்.
மண்ணாங்கட்டி! அந்த சந்தனாவுக்கு டெலிவரி எப்போன்னு இருக்கு. என சத்ய தேவ் கண்களை மூடினான்.
(அப்படி என்ன நடந்தது?)
ப்ளாக் ஈகிள் கார்கோடன் எனப்படும் சனாதன கும்பல் எப்படி ரிதமை ப்ளாக் மெயில் செய்து மொத்த குடும்பத்தையும் பழி வாங்க முயற்சி செய்தார்களோ. அதையே ட்ரம் கார்டாக பயன்படுத்த நினைத்தான்.
எப்படி என்றால்? நம் சந்தனாவை வைத்து தான். சந்தனா அவர்களின் ஆள் என சத்ய தேவுக்கு எப்படி தெரியும்?
சத்ய தேவ் ரிதமின் வளைகாப்பின் போது அவளுக்கு போட்டு விடப்பட்ட புது தாலி கொடியின் மாங்கல்யத்தின் உள்ளே டிராக்கிங் டிவைஸ் மற்றும் மைக் செட் செய்து இருந்தான். அதன் மூலமாக ரிதமின் அனைத்து நகர்வுகளை தெரிந்து கொண்டான்.
அப்படித்தான் சந்தனா என்பவள் அரிச்சந்திராவின் இரவல் தங்கை என்பது தெரியும். அவளின் உண்மையான பெயர் சரிதா என்பது தெரிய வந்தது. அப்போதே ஆக்டிவேட் ஆகிவிட்டான் சத்ய தேவ். கண்டிப்பாக இதை அனைவரிடமும் சொன்னால் சொதப்பி விடும் என்பது உலக வழக்கம் ஆகிற்றே அதனால் விவரங்களை யாரிடமும் சொல்லவில்லை. அனைத்தும் உண்மையான நடக்க வேண்டும் என்று விரும்பினான்.
சத்ய தேவ் எதற்காகவும் தயங்கவில்லை. அவனுக்கு ரிதம் வேண்டும். தன் குடும்பம் வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வான். எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிப்பான்.
அப்புறம் எப்படி? அவளின் வயிற்றில் நிதின் குழந்தை?
ஹரிணியால் குழந்தை பெற்று கொள்ள முடியவில்லை. அதாவது முதல் பிரசவமே கொஞ்சம் சிக்கலான சூழலில் தான் நடந்தது. இரண்டாவது குழந்தையை தாங்கும் அளவுக்கு அவளுக்கு தெம்பு இல்லை. கர்ப்பப்பை வலுவும் இல்லை. அதனால் தான் சரிதாவை பகடை காயாக பயன் படுத்தி கொண்டார்கள்.
ஒரு முறை சத்ய தேவ் வேண்டும் என்றே அவளுக்கு அடி படுவது போல வழுக்கி விழ வைத்தான். ஹாஸ்பிடல் அழைத்து சென்றான். அவளுக்கே தெரியாமல் மயக்க நிலையில் ஹரிணியின் சினைமுட்டை மற்றும் நிதின் பிரகாஷ் உயிரணு இது இரண்டும் சேர்ந்து செயற்கை முறையில் கரு உருவாகி அவளின் வயிற்றில் செலுத்தப்பட்டது.
இதெல்லாம் நடப்பதற்கு முன் சந்தனாவின் நினைவில் சத்ய தேவ் மீது பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு மாய பிம்பத்தை உருவாக்க சைக்காட்ரிக் முறையை அதாவது இல்லூஷன் ஸ்டேஜிக்கு கொண்டு சென்றான். ஆரம்பத்திலேயே சந்தனாவுக்கு அவன் மேல் விருப்பம் உள்ள விசயம் இன்னும் சாதகமாகி போனது.
அதற்கான மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து வந்தான் சத்ய தேவ். நிஜமாகவே அவளை காதலிப்பது போல நடித்தான். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவள் மொத்தமாக அவன் கட்டு பாட்டுக்குள் வந்து சேர்ந்தாள்.
சந்தனா என்னும் சரிதாவின் வயிற்றில் குழந்தை இருந்தால் உண்மையாகவே ப்ளாக் ஈகிள், சனாதனன், துச்சாதனன் என அனைவரும் இளகி விடுவார்கள். அதற்கு காரணம் பெண்கள் தான் ஆண்களின் பலவீனம். அதே பெண்கள் தான் ஆண்களுக்கு பலமும் கூட.. அவளின் குழந்தை உண்மையாகவே சத்ய தேவ் சரிதாவின் வாரிசு என நம்ப வைக்க தான் இந்த திட்டம்.
அவர்கள் நம்பினார்களா? இல்லையா? என இப்பொழுது தெரியும்.
டேய் வந்துட்டானுங்க என நிதின் குரல் கொடுக்க சட்டென சுயநினைவுக்கு வந்தான் சத்ய தேவ்.
நிதின் ஏர் பார்ட் நீட்ட வாங்கி காதில் வைத்தான் சத்ய தேவ். சந்தனாவின் கழுத்தில் தொங்கும் சத்ய தேவ் செயினில் ஒரு மைக் மற்றும் ட்ராக்கர் இருந்தது. அது சந்தனாவுக்கு தெரிய வாய்ப்பில்லை..
என்னால கொஞ்சம் கூட நம்ப முடியலையே? என துட்சாதனன் சரிதாவை பார்த்து கேட்டான்.
சந்தனா புன்னகையுடன் இன்னும் என்ன நம்பனும்? நம்ப என்ன இருக்கு? எனக்கு சத்ய தேவ் வேணும். அவன் எப்படி இருக்கான் தெரியுமா? அவனை முதன் முதலில் அந்த ரிதம் கூட பார்த்ததுமே அவனை அடைய நினைச்சேன். ஆனால் அப்போ பகை கண்ணை மறைச்சிடுச்சு. ஆனால் இங்கே ரிதம கண்காணிக்க வந்ததும் என்னால என்னோட உணர்வுகளை கட்டு படுத்த முடியல. என்ற சரிகா மேலும்..
உங்க மூணு பேர் கிட்டயும் நான் இதுவரைக்கும் எதையும் கேட்டதில்ல எனக்கு சத்ய தேவ் வேணும். அவனோட குழந்தை என்னோட வயிற்றில். நினைக்கவே எப்டி இருக்கு தெரியுமா? அவன் நிஜமாவே மாறிட்டான். எனக்கு கண் கூடாக தெரியுது. என்னை தாங்கு தாங்குன்னு தாங்குறான் எனக்கு ஊட்டி விட்டான். நான் மாசமா இருக்கேன்னு தெரிஞ்சதும் அவனோட முகத்துல அத்தனை சந்தோஷம். இங்கே பாருங்க என போனை காட்டினாள்.
சனாதனன் அவள் பேசுவதை கேட்டு கொண்டிருக்க..
இந்த வாழ்க்கை எனக்கு பிடிச்சிருக்கு. சொல்ல போனால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னை வெளியே கூட்டிட்டு போறான். இன்னிக்கே செக் அப் பண்ண போலாம்னு சொன்னான். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன். எனக்கு இந்த அமைதியான வாழ்க்கை பிடிச்சிருக்கு. நான் எனக்கு அவன் வேணும். என்னோட குழந்தை நான் அவன் நாங்க மூணு பேரும் ஒரு குடும்பம். என்றவள் அத்தனை சந்தோஷத்துடன் பார்த்தாள்.
மூவரும் அமைதியாக இருந்தார்கள். சரிகா தனாவின் அருகில் வந்து, சொல்லு தனா எனக்கு சத்ய தேவ் வேணும். என்னோட சந்தோஷமே அவன் தான் பிளீஸ். எனக்கு போராட்ட வாழ்க்கை வேணாம். அத்தனை கடத்தல் பண்ணி தீவிரவாதம் பண்ணி பணம் சேர்த்து என்ன பண்ண போறோம்? நிம்மதி இல்லையே? ஆனால் சத்ய தேவ் கூட நான் நிம்மதியா இருக்கேன். பிளீஸ் தனா. நம்ம தான் இப்போ கூட ஜெயிச்சோம். அந்த இன்ப ராகவனை பழி வாங்கிட்டோம். அவனோட மருமகனை நான் மொத்தமா பரிச்சிட்டேன். இப்போ அவன் உங்களோட மாப்ளை. விதார்த் மாமா பத்தி சத்ய தேவுக்கு தெரியாது.
குழந்தை பிறக்கட்டும். கொஞ்சம் கொஞ்சமா மனசை மாத்தி அவரை வெளியே எடுக்கலாம். ரிதம் வழக்கம் போல இப்படியே அரிச்சந்திரன் பொண்டாட்டியா பைத்தியமா நடிக்கிறவ இனி அப்படியே கொஞ்ச நாளில் பைத்தியமா மாறிடுவா. அப்புறம் என்ன? அந்த ருத்ரன நம்ம பழி வாங்க அவசியமே இல்ல. மினிஸ்டர் வீட்ல வேலைக்காரனா இருந்திருக்கான் ஆறு மாசம் நம்ம வேலைய மினிஸ்டர் பொன்னே செஞ்சிட்டா! அந்த இன்ப ராகவனுக்கு சத்ய தேவ் தான் உயிர். சத்ய தேவ் உயிர் என்னோட வயித்துல! நம்ம குடும்ப வாரிசு சொல்லு தனா பிளீஸ் என கெஞ்சினாள்.
யோசிக்க டைம் கொடு!! என சனாதனன் கூறி விட்டான்.
பிளாக் ஈகிள் சனாதனன் பக்கம் திரும்பி, என்ன டைம் வேணும். உனக்கு இன்னும்? என்னோட தங்கச்சி இத்தனை சந்தோசமா இருந்து நான் பார்த்ததே இல்ல. கூறினான்.
எடுத்தோம் கவிழ்த்தோம் அப்டின்னு பண்ண முடியாது என துட்சாதனன் கூற..
வேகமாக துப்பாக்கியை எடுத்தாள் சரிகா. சனாதனன் அமைதியாக பார்க்க..
எனக்கு சத்ய தேவ் வேணும். அவன் அணைப்பு எனக்கு வேணும். இது அவனோட குழந்தை!! கண்டிப்பா இது பொண்ணா இருக்கணும். ஏன்னா பொண்ணு தான் அவனுக்கு பிடிக்கும். அப்போ தான் அந்த ரிதம் குழந்தைய மறப்பான். அவள் முன்னாடி நான் என்னோட தேவ் கூட வாழனும் அதுக்கு இடைஞ்சலா யாரும் வந்தீங்க. உங்களை கொன்னு போட்டுடுவேன் என சரிகா கோபத்தில் கொதித்தாள்.
நிதின் சத்ய தேவ்விடம், எப்டி டா அவளை இப்படி மயக்குன? என கேட்க..
மூடிட்டு கேளு என்றவன். உடனே போன் செய்தான் அவளுக்கு.
ஹே ஹே டென்ஷன் ஆகாத என பிளாக் ஈகிள் கூற..
போன் அலறியது.
போனை பார்த்தவள் முகம் இன்முகத்துடன் மலர்ந்து தேவ் என அழைப்பை எடுத்தாள்.
சனா எதுவும் வாமிட் சென்சேசன் இருக்கா? நீ எப்படி மேனேஜ் பண்ற? எனக்கு மனசே இல்ல! நான் பேசாம வீட்டுக்கு வந்திடவா? எனக்கு ஆசையா இருக்கு. என்றான் சத்ய தேவ்.
ஸ்பீக்கரில் போட்டு அனைவரையும் கேட்க வைத்தாள் சந்தனா.
நிதின் வாயை பொத்தி கொண்டு பார்த்தான்.
நம்ம குழந்தைக்கு நான் நேம் கூட யோசிச்சுட்டேன் தெரியுமா? எனக்கு இப்போவே புது ரத்தம் பாயிர போல இருக்கு. நம்ம குலதெய்வ கோவிலில் தான் நேம் வைக்கணும். எனக்கு பொண்ணு வேணும் அழகா தேவதை போல.. என சத்ய தேவ் கூற..
தேவ் நான் ஒரு அஞ்சு நிமிசத்தில் கூப்பிடவா?
என்னாச்சு? எதுவும் எமர்ஜென்சியா வீடியோ கால் பண்ணவா? என சத்ய தேவ் பதற..
இல்ல பாத்ரூம் போயிட்டு வரேன் டயர்டா இருக்கு.
அப்போ லஞ்ச் நான் வந்து பண்ணவா? இந்த நேரத்தில் சுவரொட்டி சாப்பிட்டால் ரொம்ப நல்லது நான் வாங்கி செஞ்சு தரேன். என பேசி போனை வைத்தான் சத்ய தேவ்.
சரிகா தனக்கு எதிரில் இருக்கும் மூவரையும் பார்த்தாள்.
சனாதனன் எழுந்து கொண்டான். என்ன சொல்ற என சரிகா கையை பிடிக்க.. ஓகே நம்ம வீட்டு பொண்ணுக்கு சீமந்தம் பண்ணும் போது மாப்ளைய கவனிச்சுக்கிறேன் என்றான்.
ரொம்ப தேங்க்ஸ் என கண்களில் நீருடன் அணைத்து கொண்டாள்.
எங்களுக்கு உன் சந்தோசம் தான் முக்கியம். ஆனாலும் கொஞ்சம் சந்தேகமா இருக்கு என சனாதனன் கூற..
சுத்தி சுத்தி பிரச்னை இருந்தால் எப்டி சத்ய தேவ் நிம்மதியா இருப்பான் அதான் சரிகா கிட்ட மொத்தமா விழுந்துட்டான் என கூறினான் பிளாக் ஈகில்.
பார்ப்போம் என அவர்கள் மூவரும் புறப்பட்டார்கள்.
சத்ய தேவ் பெரு மூச்சுடன் நிதினை பார்க்க..
டேய் மாதம்பட்டியவே மிஞ்சிட்ட!! என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினான்.
சத்ய தேவ்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels