episode -35
மாமா ஈவினிங் வந்து பிக் அப் பண்ணிக்கோ! உனக்கு வெயிட் பண்ணுவேன் என காற்றில் முத்தத்தை பறக்க விட்டாள்.
ம்ம் வந்துட்டா போச்சு அமுலி என அன்பு செல்வன் அவளை விட்டுவிட்டு டிப்போ சென்றான்.
மாப்ளை!! பாப்பாளுக்கு இந்த வாரம் பள்ளிக்கூடம் போயிட்டு அடுத்த வாரம் வீட்டுக்கு வந்துடனும். ஆக்கி போட போறோம் என அன்னம் கூற.. கூடவே சக்கரவர்த்தியும் ஜெயா மற்றும் மாப்ளை முருகேசன் என இருவரிடமும் சொல்லி விட்டு புறப்பட்டார்.
வெளியே தனக்கொடி காத்திருந்தார். சீக்கிரம் வா அன்னம். பஸ்சுக்கு நேரமாச்சு! என சக்கரவர்த்தி அவரின் கைகளை பிடித்து கொண்டு நடக்க,
அப்பா!! என தனக்கொடி நின்றார்..
சொல்லு தனம் என சக்கரவர்த்தி தனது மகளை பார்க்க, அன்னம் பின்னால் இருந்து பார்த்தார்.
வாங்க பா நான் கொண்டு வந்து விடறேன். என கார் கதவை திறந்து விட்டார்.
தன் மனைவியை பார்த்தார் சக்கரவர்த்தி.
சட்டென சிரித்த அன்னம், மச்சான் நீங்க போங்க நான் சிவசக்தில வந்திடுறேனுங்க என திரும்பினார்.
ப்ச் என உச்சி கொட்டிய தனக்கொடி, நான் என்ன வில்லியா? அதான் உங்களை கூப்பிடுறேன் கூடவே சேர்த்து அழைக்கணுமா? ரெண்டு பேரும் வந்து ஏறுங்க என்றார் தனம்.
சக்கரவர்த்தி புருவம் தூக்கி கொண்டு அன்னத்தை பார்க்க, இன்னும் என்ன பண்ணிட்டு இருக்குற தனம்? என கீழே இறங்கியவர். அத்தை மாமா ரெண்டு பேரும் வாங்க. அவள் கூறு கெட்டவ! என்ன பண்ற சொல்றீங்க? என சொல்லியபடி தன் மாமனாருக்கு கதவை திறந்து விட வந்தார்.
இல்லைங்க மாப்ளை நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம் என சொல்லி விட்டு தன் மனைவியிடம், போலாமா இல்ல சிவசக்தில போலாமா? என கேட்டார்.
ஏனுங்க மச்சான் ஆசையா தனக்கொடி கூப்பிடுது. நம்ம எப்டி பஸ்ல போக முடியும். அதோட மனசு கஷ்டபடும் என சொல்லி விட்டு புன்னகையுடன் ஏறி கொண்டார்கள் இருவரும்.
இத்தனை உருகள் எனக்கு சந்தேகமா படுது என தனக்கு தானே சொல்லி கொண்டார் சக்கரவர்த்தி.
அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றார்கள். வீட்டுக்கு சென்றதும் அன்னம் மூச்சுக்கு முன்னூறு முறை மச்சா மச்சான் மச்சான் நம்ம தனம் பாப்பா என்னை கூப்பிட்டு கூட்டி போகுது என உற்சாகத்துடன் திரிந்தார்.
சக்கரவர்த்திக்கு அதிகப்படியாக தோன்றினாலும் தன் மனைவி உற்சாகமாக இருக்கிறாளே என அவரும் விட்டுவிட்டார்.
ஹே பூங்கொடி வரலையா? என மணிமேகலை கேட்க,
அன்பு வாரன்!
மணி உதட்டுக்குள் சிரிக்க,
இப்போ எதுக்குடி சிரிக்கிற? நீ? என முறைத்து கொண்டே பார்த்தாள்.
மேடம் டோட்டலா மாறிட்டீங்க? அதுக்கு தான் என சிரித்தவள் பூங்கொடி கையை ஓங்கும் முன் ஓடி விட்டாள்.
பூங்கொடி கிட்டதட்ட இரண்டு மணி நேரங்கள் காத்திருந்தாள் கல்லூரியில்.. அன்பு செல்வன் வரவே இல்லை. முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் பரவ, அவனுக்கு அழைத்தாள்.
பிசி என வந்தது.
உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எறிய, போனை தூக்கி வீச கையை உயர்த்தியவள் கைகளை இறுக்கி மடக்கி கொண்டு அழுகையை அடக்கி கொண்டு புறப்பட்டாள் வீட்டுக்கு.
அவளுக்கு உதாசீனம் பிடிக்காது. அவளை கண்டுகொள்ளாமல் யாரும் இருந்தால் சுத்தமாக பிடிக்காது. அவளுக்கு மிகவும் பிடித்தவர்கள் அதை செய்தால் பூங்கொடி பொல்லாதவள் ஆகி போவாள்.
அன்பு செல்வன் அவளுக்கு திரும்ப திரும்ப அழைத்தான். மூன்றாவது முறை அழைப்பை ஏற்றாள்.
சாரி பாப்பா நான் டியூட்டில இருக்கேன் என அவன் சொல்லி முடிப்பதற்குள் கோபமாக போனை கட் செய்தாள். நேராக பஸ்டாப் சென்றவள் கூட்டத்தில் ஏறினாள். கண்களில் நீர் வந்து விட, பாப்பா என தனம் பேருந்தின் மேனஜர் அழைத்தார்.
சட்டென திரும்பி பார்த்தாள் முகத்தில் வரவழைக்கப்பட்ட கம்பீரத்துடன். ஆம் மற்றவர்களின் முன் என்றும் தன்னை பலவீனமாக காட்டி கொள்ள மாட்டாள் பூங்கொடி.
என்ன கண்ணு? இந்த பஸ்ல போறீங்க? வாங்க நம்ம பஸ்ல போலாம் என அவர் அழைக்க,
வேண்டாம் என சொல்ல வந்தவள் தன் தந்தையின் நினைவு எட்டி பார்க்க ஒத்து கொண்டாள். பூங்கொடி வேறு பேருந்தில் சென்றால் கண்டிப்பாக அது சிவராமணுக்கு தெரிய வரும் அதனால் ஏறினாள்.அவளுக்கு தனி இடம் மரியாதை என சகலவசதிகளுடன் ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அவள் ஆலமரவளவை தாண்டும் இடத்தில் சதீஷ் அழைத்து கொண்டே வண்டியில் பின் தொடர்ந்தான். அவளுக்கு இருக்கும் கோபத்தில் சதீஷ வெட்டி கொள்ளும் ஆத்திரம் வந்தது.
வேக நடையுடன் செருப்பை விட்டாள் அது இரண்டும் திசைக்கு ஒருபக்கம் சென்று விழ ஒரு செருப்பு அங்கே கொட்டகையில் இருந்து வந்த அன்னத்தின் மேல் பட்டு விட்டது. சக்கரவர்த்தி அதை கவனிக்கவில்லை.
அன்னம் கூட அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் பூங்கொடியின் வாடிய முகத்தை பார்த்து, மச்சான்! மச்சான்! அமுலி முகமே சரி இல்லைங்க. கோபமா இருக்க போல தோணுது. என்னன்னு கேளுங்க மச்சான் என நச்சரித்தார்.
அமுலி!! அமுலி! என கத்தினார் சக்கரவர்த்தி.
என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க தாத்தா! காலேஜில் வேலை அதான் என அறையில் இருந்தபடியே கூறியவள் பைத்தியம் பிடித்தவளை போல அமர்ந்திருந்தாள்.
கேட்டுக்கிட்டியா என சக்கரவர்த்தி அன்னத்தை பார்க்க, இன்னும் அவருக்கு பதற்றம் குறையவில்லை. உடை கூட மாற்றாமல் அப்படியே கிடந்தாள். அவன் வராமல் போனது மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது.
அரக்க பறக்க வீட்டுக்கு வந்தான் அன்புசெல்வன்.
என்ன அன்பு? என்னாச்சு? என அன்னம் கேட்க..
பூங்கொடி மா? என பதைப்புடன் கேட்டான்.
உள்ளே இருக்குது. பள்ளிகூடத்துல நிறைய படிப்பு வேலை கொடுத்திட்டாங்க போல முகமே சரி இல்ல!! இந்தா கையோட குளிச்சிட்டு காபி தண்ணி எடுத்திட்டு போ! பசிக்கும் பாப்பாளுக்கு. மெதுவடை சுட்டேன் என சட்னி கூட நீட்டினார்.
வந்து வாங்கிக்கிறேன் மா! என வேகமாக அவர்கள் இருக்கும் வீட்டுக்கு ஓடினான்.
படுக்கையில் காலேஜ் ID கூட கழட்டாமல் அப்படியே சுருண்டு கிடந்தவளை பார்க்க உள்ளுக்குள் பயப்பந்து இருண்டது. சமாளிப்போம் என நினைத்து கொண்டவன்.
அமுலி எப்போ வந்த? நான் உனக்கு நான் போன் பண்ணேன்? என்னடா எடுக்கவே இல்ல.
அவளிடம் பதில் இல்லை.
அமுலி!! என அழைத்தவன். சரி இரு குளிச்சிட்டு வரேன் என வேகமாக சென்றான். அரை மணி நேரம் கழித்து வந்தவன். அதே தயக்கத்துடன் தன் அம்மாவிடம் இருந்து வடை, சட்டினி அதனுடன் டீ என அனைத்தையும் எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
அவள் போனை நோண்டி கொண்டு அமர்ந்திருக்க, அமுலி சுட சுட வடை எடுத்துக்கோ! கூடவே புதினா சட்னி சூப்பர் காமினேசன் தெரியுமா என தட்டை நீட்டினான்.
ப்ச்!!
அமுலி டிரை பண்ணு நல்லாருக்கும் என மீண்டும் அவள் புறம் நீட்டினான்.
கோபத்துடன் தட்டி விட்டாள். சட்னி அவனது முகத்தில் தெறித்து விழுந்தது. சூடான கொதிக்கும் டீ அவனது பாதத்தில் கொட்டி போனது.
ஆனால் பூங்கொடி?
அவளோ எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் மீண்டும் அவளது போனை நோண்டி கொண்டிருந்தாள்.
பெரிய அவமானம் அன்பு செல்வனுக்கு. ஒரு பெண்ணுக்கு இத்தனை கோபம் வருமா? என மனதுக்குள் ஓடிட, அதை விட வருத்தம் நிறைய இருக்க எதை பற்றியும் வெளிக்காட்டி கொள்ளாமல் வேகமாக அவ்விடத்தை சுத்தம் செய்தவன் உடையை மாற்றி கொண்டு வந்தான்.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சாரி அமுலி எனக்கு கொஞ்சம் வேலை.
அப்புறம் என்ன மயித்துக்கு டா கமிட் பண்ண? என்ன அப்படியே கழட்டுற வேலை? என்னை எதுக்கு கல்யாணம் பண்ண? என சட்டை காலரை இழுத்து பிடித்து கேட்டவள். என்னை அலட்சிய படுத்துறையா? அந்த அளவுக்கு நான் ரெண்டாம் பட்சம் ஆகிட்டேனா? சொல்லு டா? என கத்தினாள்.
ஹே பிளீஸ் சாரி டி!! நான் ஏதோ வேலையில் மறந்துட்டேன். பிளீஸ் அமுலி என கேட்டவன் சட்டென அவளை அணைத்து கொண்டான்.
என்னடா பண்ற? தள்ளி போ!! என்னை மயக்க டிரை பண்றயா? என அவள் சொல்லி கொண்டிருக்கவே உதட்டில் முத்தமிட்டான் அன்பு. ஆனால் அது அவளின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்த, உன்னோட பொறப்பு புத்தியை காட்டிட்டல்ல என்றாலே பார்க்கலாம்.
அன்பு..?
தொடரும்..