அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
291 views

Episode-127

மூடிட்டு போ என சொல்லி விட்டு படுக்கையில் சுருண்டு கிடந்தான் சத்ய தேவ். நினைவுகள் முழுதும் ரிதம் மட்டுமே இருந்தாள். எப்பொழுது அவளை அள்ளிக்கொள்ள போகிறோம் என்ற எண்ணம் உள்ளுக்குள் காதல் நோயை அதிகப்படுத்தியது. 

சத்ய தேவ் குணமாக கிட்டதட்ட 15 நாட்களுக்கு மேல் ஆனது. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விஷயங்கள் தெரிய வர, இன்னொரு பக்கம் சந்தனா தனது குழந்தையின் பிரசவத்துக்காக காத்திருந்தாள். 

சத்ய தேவ் இரண்டு முறை சென்று பார்த்து வந்தான். நடிப்பை அப்படியே தொடர்ந்தான். இதோ டெலிவரி ஆனது. அழகான பெண் குழந்தை. பார்க்கவே அத்தனை லட்சணம். சத்ய தேவ் வெளியில் காத்திருக்க, குழந்தையை தூக்கி கொண்டு வந்து நிதினிடம் கொடுத்தார்கள். 

நிதின் கண்களில் சந்தோச ரேகைகள் தெரிந்தது. அவ்விடத்துக்கு ஹரிணியும் வந்திருந்தாள். குழந்தையை நிதின் அவளுக்கு பரிசாக நீட்ட.. வாங்கி கொண்டு இருவரும் சென்று விட்டார்கள். துவண்ட கொடி போல கிடந்தாள் சந்தனா. அவளின் கண்களில் நீர் கொட்டி கொண்டிருந்தது. அதற்கு காரணம் தனது மொத்த குடும்பத்தையும் ஒருவனுக்காக கொன்று குவித்திருந்தாள் யோசிக்காமல். அவன் சத்ய தேவ் தான். அவனுக்காக அவனது காதலுக்காக எது வேண்டுமானாலும் செய்வாள். 

ப்ளாக் ஈகிள், தனா நினைவு வந்து போக, கண்களை துடைத்து கொண்டாள். 

சந்தனா உன்னை பார்க்க வந்திருக்காங்க என காவலாளி கூற, மெதுவாக எழுந்து அமர்ந்தவள் சத்ய தேவை பார்த்ததும் குழந்தை எங்கே என கேட்டாள். 

குழந்தை….  எங்க வீட்டு குழந்தை பத்ரமா இருக்கு சரிகா என்றான். 

அவளின் இதயம் வேகமாக துடிக்க, உன்னை பத்தி எல்லாமே தெரிஞ்சு போச்சு. என்றவன் ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு புறப்பட்டான் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டே.. 

ஆம் சரிகாவுக்கு இன்னும் மூன்று மாதங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்ற படுகிறது. 

சத்ய தேவ் நேராக அவனது வீட்டுக்கு சென்றான். நிதின் மற்றும் ஹரிணி இருவரும் அப்பொழுது தான் குழந்தையை காட்டி விட்டு வெளியே வந்தார்கள். 

சத்ய தேவ் வீட்டு வாசலில் நிற்க, வேகமாக சென்ற மகி அவனது கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். 

அவன் ஒரு கல்லை போல அப்படியே நிற்க, அம்மா என இதழ் அழுது கொண்டே தடுக்க, இன்னொரு பக்கம் மிதுன் தடுத்தான். சத்ய தேவ் எதுவும் பேசாமல் நிற்க, சூர்யா வந்து மகியை தடுத்தார். 

இன்ப ராகவன் விவேகா இருவரும் நின்றிருந்தார்கள். 

என் பையன் என்னைக்கும் தப்பு பண்ண மாட்டான் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனாலும் அவளை நீ நாடகம் போட கட்டிக்கிட்டது கூட எனக்கு பிடிக்கல சக்தி என தேம்பி அழுதார். 

தன் அன்னையை அணைத்து கொண்டான் சக்தி. ஒரு வழியாக அனைவரும் சமாதானம் ஆகி விட சக்தி நேராக தனது மாமனாரின் முன் சென்றான். 

இன்ப ராகவன் எதுவும் பேசாமல் நின்றார். நான் பண்ணது அதிகப்படின்னு எனக்கு தெரியும் மாமா! ஆனால் வேற வழி எனக்கு தெரியல… 

நேருக்கு நேர் தான் மோதனும். இது அசிங்கமா இருக்கு சக்தி என இன்பா முகத்தை திருப்பி கொண்டார். அனைவரின் கவனமும் சத்ய தேவ் மற்றும் இன்பராகவன் மேல் இருக்க.. 

ஹே ரிதம் கீழே வாடி என காட்டு கத்தல் கத்தினான். 

அவள் தான் சுய நினைவு இல்லாமல் இருக்காளே! அவள் எப்படி வருவா? என விவேகா அழுது கொண்டே கூறினார். 

சத்ய தேவ் விவேகாவை பார்த்து, அவள் பைத்தியம் இல்ல. பைத்தியமா நடிச்சிட்டு இருக்கா அவளை பைத்தியமா நடிக்க சொல்லி இருக்காங்க. என்றான். 

இன்பா ருத்ரன் விவேகா மகி சூர்யா மிதுன் இதழ், நிலா என அனைவரின் பார்வையும் சத்ய தேவ் மீது படிய.. 

அவள் பைத்தியம் இல்ல. அவளை அரிச்சந்திர பொண்டாட்டியா நடிக்க சொல்லி இருக்கான் ப்ளாக் ஈகில். அவள் இத்தனை நாளும் நடிச்சிருக்கா! போதுமா உண்மை இல்ல இன்னும் சொல்லணுமா? என சத்ய தேவ் பார்த்தான். 

விவேகா வேகமாக தன் மகளின் அறைக்குள் ஓடினார் மூச்சு வாங்க.. 

அடுத்த அரை மணி நேரத்தில் விவேகாவுடன் வெளியே வந்தாள் ரிதம். 

சத்ய தேவ் இன்பாவை பார்த்து, நான் பண்ணது தப்பா தெரியலை மாமா. ரிதம வச்சு உங்களை பழி வாங்க நினைச்ச அவங்களை அதே பாணியில் நான் பழி வாங்கினேன். எனக்கு என் பொண்டாட்டி என் குழந்தை என் குடும்பம் முக்கியம். இப்படியே நியாயமா போராட்டம் போராடனும் தண்டனை வாங்கி கொடுக்கணும்னு உட்கார்ந்திட்டு இருந்து தான் இத்தனை வருடத்தை நீங்க வெஸ்ட் பண்ணிட்டீங்க. அது மாதிரி நான் எதுக்கு பண்ணனும். ஏன்னா உங்க குடும்பத்தில் இருக்கும் யாருமே மத்தவங்களை பத்தி கட்டிணவங்களை பத்தி யோசிக்கும் பழக்கமே இல்லையே. ருத்ரன் வாழ்க்கைய சீரழிச்சதும் அவங்க தான், ரிதமோட நினைவுகளை அழிச்சு அவளை சைலஜாவாக மாத்தினதும் அவங்க தான். உங்க பொண்ணு ஸ்டண்ட் வேலை பண்ணி அவளே தானா ஒருத்தனை கொல்ல பிரானா மீனுக்கு இறை போட்டிருக்கா அவ்ளோ நம்பிக்கை என் மேலே.. இப்போ அவள் பைத்தியமா நடிக்க காரணம் கூட அவனுங்க தான் என முடித்தான். 

எவனுக? யாரு காரணம்? என விவேகா கேட்க.. 

அது கிருஷ்ணன் தாத்தா வீட்டு பகை.. அதுக்கும் மேலே எதுவும் நான் சொல்ல விரும்பல.. என்ற சத்ய தேவ் கண்கள் ரிதமின் மேடிட்ட வயிற்றில் போய் முடிந்தது. 

அங்கிருக்கும் அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்று விட ரிதம் நேராக அவலரைக்கு சென்றாள்.

ஹே ராவடி என சத்ய தேவ் பின்னாலேயே சென்றான். 

இந்த பக்கம் நிலா அமர்ந்து தேம்பி அழுதாள். அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது. அப்போ அதெல்லாம் அப்பாவோட அண்ணனோட எதிரிகள் இல்லையா? இது தெரியாம தீராவை நான் ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேனே என அழுதாள்.

தொடரும்…

You may also like

Leave a Comment