அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
232 views

Episode 135

இதையெல்லாம் எதுக்காக நான் சொல்லிட்டு இருக்கேன்னு தெரியுமா? என ருத்ரன் அவளை பார்க்க, உதடு துடிக்க அவனை பார்த்தாள் நிலா. 

அன்னிக்கு உன்னை தொட்டது, உன்னோட விருப்பத்துக்காக மட்டும் தான். அதுக்கு எனக்கு விளக்கம் கொடுக்க தோணுச்சு. என்றான் ருத்ரன் அவளை பார்த்து, 

நேரமாச்சு! என் பையனை நான் இப்போவே பார்க்கணும் என நெஞ்சை தேய்த்து கொண்டே கூறினாள் நிலா. 

என்னாச்சு? என ருத்ரன் ஆராய்ச்சியுடன் அவளை பார்க்க, நான் வீட்டுக்கு போகணும் என வேறு புறம் திரும்பி கொண்டாள். 

வண்டியை நேராக வீட்டுக்கு விட்டான். இதழ் ஒருவள் கூட வந்தாள் என்பதை அவர்கள் இருவரும் மறந்து போயிருந்தார்கள். 

வீட்டுக்கு சென்றதும், மகனை தூக்கி கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டாள் நிலா. குழந்தைக்கு பால் புகட்டி தூங்க வைத்தாள். 

இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. இதோ அடுத்த நாள் சுட சுட விவாகரத்து தயாராகி வந்தது.  கீதா ருத்ரனிடம், ஜீவனாம்சம் வேணாம்னு சொல்லிட்டா நிலா. அதனால எந்த பிரச்னையும் இல்ல. 

ருத்ரன் சிரித்து கொண்டே, அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய பணக்காரன் இல்ல. அதே போல இந்த விவாகரத்து என்னோட முடிவு இல்லையே! அரண்மனை கிளிக்கு ராஜாவை விட்டு போகனும்னு எண்ணம் சுதந்திரமா இல்ல. ராஜாவை விட மகாராஜா கிட்ட போகணும். என்னை விட இங்கே மகாராஜா அந்த சர்வேஸ்வரன். போகட்டும் பணமும் பணமும், தகுதியும் தகுதியும் , அழகும் அழகும் இப்படி எல்லாமே பொருத்தமா இருக்கும் என சொல்லி விட்டு நகர்ந்தான். 

கண்களில் நீர் வழிய அவன் பேசும் அனைத்தையும் கேட்டவள் எதுவும் சொல்லாமல் அவளரைக்கு சென்று விட்டாள். 

தீரா ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் என கீதா அழைக்க, என்ன என புருவம் சுருக்கி பார்த்தான். 

அது ஒரு குழந்தைய அவள் கேட்டிருக்கிறா!! 

என்ன குழந்தை? என ருத்ரன் கேள்வியாக பார்க்க, அவளுக்கு ஒரு குழந்தை வேணுமாம். அது மென்சன் ஆகி இருக்கு. என கீதா கூற.. 

ருத்ரன் கைகளை இறுக்கி மடக்கியவன் அதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும். என சொல்லி அனுப்பி வைத்தான். 

****

ரிதமுக்கு கண்ணில் கருவளையம் வரும் அளவுக்கு வேலை இருந்தது. சோர்ந்து கிடந்தாள். இரண்டு குட்டிகளும் கத்தி விரைத்தது. 

டேய் இல்லடா தங்கம்!! இதோ அம்மா வந்துட்டா என இரண்டு புட்டியிலும் பாலை கொடுக்க வேகமாக உறுஞ்சியது இரண்டும். உட்கார நேரமில்லை. மகி ஒரு பக்கம் விவேகா ஒரு பக்கம் என இருவரும் இரண்டு குட்டிகளையும் மேய்க்க, துகில் எப்பொழுதும் மிதுனுடன் இருந்தான். சூர்யா தனது பேரனை ஆபீஸ் அழைத்து சென்று விடுவார். இன்னொரு பக்கம் ரவுத்திரன் இன்பாவுடன் இருந்தான். இருவருக்கும் நல்ல ஒட்டுதல். 

டேய் ஓடாத! உன் அப்பனை விட கம்மியா சேட்டை பண்ணு டா!! என இன்பா இன்னொரு பக்கம் அவனை கொஞ்சி கொண்டு சுற்றினார். 

இங்கு தனித்து விடப்பட்ட ஒரு நபர் சத்ய தேவ் தான். நாட்கள் மெல்ல நகர்ந்தது. 

என்னாச்சு மாமா? ஒரு மாதிரியா இருக்கீங்க? என ருத்ரன் கேட்க, 

என்ன பண்ண சொல்ற? என காக்கி உடையுடன் அப்படியே அமர்ந்தான் சக்தி. 

ருத்ரன் ஒரு பெரிய மூச்சை விட்டபடி ரிதம் இத்தனை பிடிவாதமா இருப்பாள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என்றான் சலித்து கொண்டே.. 

நீயும் தான் பிடிவாதமா இருக்க!! அவள் தான் நிலா தான் லவ் பண்றான்னு உன்கிட்ட சொன்னேனே? அப்புறம் எதுக்கு டா விவாகரத்து வாங்கின? அவள் எதுக்கு விவாகரத்து அப்ளை பண்ணான்னு உனக்கு தெரியும் தானே! எல்லாமே தெரிஞ்சும் நீ எதுக்கு டா இப்படி இருக்க? என சத்ய தேவ் சலித்து கொண்டே பார்த்தான். 

ருத்ரன் தன் அக்காள் புருஷனை பார்த்து, “நான் அவளுக்காக பண்ணதுக்கு என் மேலே இஷ்டம்ன்னு ஒரு வார்த்தை அவள் சொல்லிட்டா, இப்போ இருக்கிற நிலைமை எல்லாமே மாறிடும். ஆனால் அவள் எவ்ளோ ஊமை குசும்பி அப்டின்னு இதுல இருந்து தெரியுது மாமா. அவளுக்காக நான் என்னை வேற ஒருத்தனா மாத்திக்கிட்டு அவள் முன்னாடி போய் வேலைக்காரனா நின்னேன். என் கூட வாழ இது வரைக்கும் அவள் என்ன மாமா பண்ணா?”

” இந்த உறவு தானாக அமையும் போதும் என்னை விட்டு போறேன். என்னை வேணாம்னு சொல்லிடுங்க அப்டின்னு தான் நின்னா! எப்பவும் என்னை விட்டு போறேன்னு நிப்பவ கிட்ட போய் என்ன பேச சொல்றீங்க? என்னோட விருப்பம் என்னன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்? அந்த சிறுக்கி இல்லாம என்னால இருக்க முடியாதுன்னும் அவளுக்கு தெரியும். ஆனால் இதெல்லாம் தெரிஞ்சாலும் வந்து சொல்ல மாட்டாள். இப்படியே முகத்தை பவியமா வச்சு என்னை கொல்ல வந்திருக்கா. நல்ல வேளை அவள் என்னை லவ் பண்ண விசயத்தை நீங்க என்கிட்ட சொன்னீங்க! இல்லன்னா அந்த ஹோப்யும் இல்லாம நான் தவிச்சு இருப்பேன்” என்றான் ருத்ரன். 

சத்ய தேவ் பெரு மூச்சுடன் அப்படியே சாய, அவனது மடியில் வந்து குழந்தையை வைத்தாள் ரிதம். 

குழந்தையின் அழு குரல் கேட்க, சட்டென நிமிர்ந்து பார்த்தான். 

ருத்ரன் வாயை பிளந்து பார்த்தான். ரிதம் தன் தம்பியை பார்த்து, கிளம்பி போ பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது உனக்கு இங்கே வேலை இல்ல!! என்றாள் ரிதம். 

ஹான் ரொம்ப பெரியவ நீ! மூணு பசங்களுக்கு அம்மா! அப்டின்னா பெரியவ தானே நீ! என்றான் ருத்ரன். தலையில் கொட்டு வைத்து அனுப்பினாள் ரிதம். 

சத்ய தேவ் அவளை சோர்வுடன் பார்க்க, ரிதம் பற்களை கடித்து கொண்டு, நீ பாட்டுக்கு வைத்த நப்பி விட்டுட்டு போயிட்ட! பெத்து வளர்த்து என்னால மூணு பேரையும் சமாளிக்க முடியாது. ஒழுங்கா இவனை டேக் கேர் பண்ற!! போ போய் எழுந்து குளிச்சிட்டு வந்து அவனை பண்டுதம் பாரு. மோசன் போயிட்டான். அதை கழுவி விடு. என சொல்லி விட்டு சென்றாள். 

மகனை தூக்கி பார்த்தான் சத்ய தேவ். ஸ்பீக்கர் போல ஒய்யு ஓய்யு என கதறினான் தேவ் சாஹி!! 

இவன் முதலா? இல்ல ரெண்டாவதா? என சத்ய தேவ் கேட்க.. 

அவன் ரெண்டாவது!! முதல் பையன் என்னைக்கும் எனக்கு தான் என்றாள் ரிதம். 

நான் ஒண்ணு நினைச்சா கடவுள் எனக்கு மட்டும் எதுக்கு மூணு பையன் கொடுத்தாரு. இதுக்கு பதிலாக ஒரு பொன்னை கொடுத்திருக்கலாம் என சொல்லி கொண்டே சாஹித்யாவை கொஞ்சியபடி அவனது டூ மற்றும் ஒன் என அனைத்தையும் கழுவி விட்டு குளித்து முடித்து மார்பில் போட்டு கொண்டான் பால் கொடுக்க பட அனத்தி கொண்டே குடித்தது குழந்தை. மார்பில் குட்டி மனிதன் தந்தையின் துடிப்பை கேட்டு அமைதியாக படுத்திருந்தான். இது தான் தந்தைக்கும் மகவுக்கும் இருக்கும் உறவு. தனது தந்தையின் ஸ்பரிசம் பட்டதும் குழந்தை அமைதியாக நெண்டி கொண்டே சிணுங்கி உறங்கியது. 

ரிதம் ஆராய்ச்சியுடன் பார்த்தாள். பால் தா!! என புட்டியை நீட்டினான் சத்ய தேவ். 

எப்படி இத்தனை அமைதியா இருக்கான்? என்கிட்ட இருக்கும் போது கத்துவானே! வீல் முழுங்கி மாதிரி. 

சத்ய தேவ் விரக்தி புன்னகையுடன், ஒருவேளை அம்மா புரிஞ்சுக்காத விசயத்தை அவன் புரிஞ்சுக்கிட்டானோ என்னவோ! என கூறினான் விளையாட்டாக.. 

என்ன? சொல்லிட்டு போ!! சுத்தி வளைக்காத? என ரிதம் கடுப்புடன் கூற.. 

என் மேலே தப்பில்லை அப்டின்னு என் பையனுக்கு தெரிஞ்சிருக்கு போல.. துகில தான் என் பக்கத்தில் அனுப்ப மாட்டின்ற இவனை கொடுத்ததுக்கு தேங்க்ஸ் என பாலை வாங்கி கொண்டு சாஹியுடன் சென்றான் சத்ய தேவ். 

சிவன்யாவுக்கு வளைகாப்பு அதில் 

மிதுன், இதழ், சத்ய தேவ், ரிதம், ருத்ரன், பவன்யா, சிவன்யா, வெற்றி என அனைவரும் ஒரே இடத்தில் இருக்க, நிதின் வந்தான். அவனுடன் நிவாஸ், கண்மணி, ஹரிணி என அனைவரும் வந்திருந்தார்கள். அப்படி இப்படி பேச்சு போய் அது முதல் காதலில் வந்து நிற்க, 

நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஆண்டாள் கதை வர போகுது. 

ஆண்டாளா? மீனாட்சியா? 

தொடரும்..

You may also like

Leave a Comment