Epi 141
தீரா உன்கிட்ட முக்கியமா பேசணும் என வந்து நின்றார் விவேகா.
என்ன விசயம் மா? என இதழுக்கு ஒரு தட்டில் உணவை நிரப்பி கொண்டு திரும்பினான் ருத்ரன்.
அது இந்த நேரத்தில் இதை சொல்றதா? வேண்டாமா தெரியல.. என தயங்கி கொண்டே நின்றார்.
சொல்லுங்க மா? என்ன விசயம்? என ருத்ரன் பொறுமையாக கேட்டான்.
விவேகா கைகளை பிசைந்தபடி, நான் வந்து அது வந்து என பெரு மூச்சை விட்டவர். இந்த கல்யாணத்தை பத்தி நான் யோசிச்சு பார்த்தேன். எனக்கு சரியா படல.. என்னோட எண்ணங்களை உனக்கு போட்டு திணிக்கிற போல ஒரு பீலிங். அதனால..
அதனால? என புருவத்தை சுருக்கியப்படி தனது அன்னையை பார்த்தான்.
இந்த கல்யாணம் வேணாம் டா!!
என்ன பேசிட்டு இருக்கீங்க என உணவு தட்டை வைத்து விட்டு தனது அன்னையை பார்த்தான் ருத்ரன்.
விவேகாவின் கண்களில் நீர் கோர்க்க, நான் பண்றது ரொம்ப அதிகப்படின்னு இப்போ புரிஞ்சுகிட்டேன். நிலா உன்னைய நடத்தினத இப்போ வரைக்கும் என்னால துளி கூட ஏத்துக்க முடியல.. ரொம்ப ஆத்திரமா இருக்கு. என்னால அதை ஜீரணிக்கவே முடியல.. ஆனால் இப்போ அதை விட பெரிய விசயம். உன்னோட குழந்தைங்க.. அதாவது வாயும் வயிறுமா இருக்கவ கிட்ட போட்டி போட்டுகிட்டு சரிக்கு சரி மோதி அவளை கஷ்ட படுத்தனுமா? அப்டின்னு எனக்கு ஒரே யோசனையா இருக்கு? நம்ம குடும்பத்தோட அடுத்த சந்ததியே அவளோட வயித்தில தான் இருக்கு. அப்படி இருக்கையில் அவளை கஷ்ட படுத்தனுமா? என்ற எண்ணம் மட்டும் தான் வேற ஒண்ணுமில்ல. என்றார்.
ருத்ரன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து செல்ல, தீரா!! அம்மா டா.. நான் சொல்லிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற? என விவேகா தனது மகனை தடுத்தார்.
ஒரு பெருமூச்சுடன் தனது அன்னையை பார்த்த ருத்ரன், இப்போ தேவையில்லாம இதழுக்கு நம்பிக்கை கொடுத்த மாதிரி ஆகி போச்சு. அவள் நிற்கதியா நிக்கணுமா? சொல்லுங்க மா?
அவள் கிட்ட நான் பேசறேன் கண்ணு..
ஒரு வேளை கல்யாணத்தை நிறுத்தினதுக்கு பிறகு நிலா என்னை வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்றது மா? அவள் எப்போ என்னை வேணும்னு சொல்லியிருக்கா? சொல்லுங்க? என்னை தேடி எப்போ வந்திருக்கா? நான் தானே அவளை தேடி போயிருக்கிறேன்? வேணாம் வேணாம் அப்டின்னு சொல்ல காரணம் என்னன்னா? அவளுக்கு நான் வேணாம் மா!! அவளுக்காக இதழ் மனசை என்னால நொறுக்க முடியாது.
அப்போ அவள் சொல்லணும்? அப்படி தானே!!
ஆமா மா! அவள் வந்து சொல்லட்டும். ருத்ரன் என் புருஷன் எனக்கு மட்டும் தான் அப்டின்னு இதழ் கிட்ட சொல்லிட்டா கண்டிப்பா இதழ் கட்டு படுவா! என்று விட்டு சென்றிருந்தான்.
விவேகா இதையே இரவு முழுவதும் யோசித்தார். அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ரத்த கலரில் கையில் மருதாணி சிவந்திருந்தது.
டான்ஸ் பிராக்டிஸ் நடந்து கொண்டிருந்தது. வரவேற்பு விழாவில் ஆட..
உன் பார்வையில் பைத்தியமானேன். உனக்கும் எனக்கும் (இது இதழ் செலக்சன்)
இன்னிசை அளபெடையே அமுதே இயற்கையின் நன்கொடையே (இது ருத்ரன் செலக்சன்)
என்ன பாட்டு இது? நல்லாவே இல்ல என சைத்ரேஷ் கூறி கொண்டிருக்க..
இங்கே நம்ம கெஸ்ட் அவ்ளோ தான்! நீ பெரிய கழட்டியா இருந்தால் போய் ஆடி காட்டு பார்ப்போம் என்று விட்டார் சித்தார்த்.
நான் எதுக்கு ஆடுவேன் என்ற சைத்ரேஷ் எகத்தாளத்துடன் பார்த்தவன் கண்கள் விரிந்தது.
இதழினியுடன் ருத்ரன் அழகாக நாட்டியம் ஆடினான். இருவரை பார்க்கவும் அப்படியே மேட் ஃபார் ஈச் அதர் போல இருந்தது.
“சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்!
உன் அழகால் தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சு மட்டும் வாழவிடு” என இதழ் உற்சாகமாக ருத்ரனுடன் ஆடி கால் இடறி கீழே விழ போனவளை பிடித்து கொண்டான் இடையுடன்..
அனைவரும் கையை தட்டினார்கள். இதன்யா விவேகாவிடம், அக்கா உங்க பையன் ஆர்மி மேன் தான? என கேட்க..
ஆர்மி மேன் தான் கூடவே கிளாசிக்கல் டான்ஸர். என சுரத்தே இல்லாமல் பதில் கூறினார்.
இதன்யா உண்மையாக, நல்லா ஆடுகிறார். ரொம்ப நல்லாருக்கு. இதழினி கூட சூப்பரா ஆடி இருக்கார் என பாராட்டினார்.
நன்றி என விவேகா ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு எழுந்தவர். நிலாவை நோக்கி சென்றார். ஆயிரம் இருந்தாலும் இன்பா சொன்ன வார்த்தைக்கு கட்டுப்படுவார். அவ்ளோ லவ்வு அவர் மேல்..
சர்வேஸ்வரன் அங்கு நடக்கும் ஆட்டங்களை பார்த்து கொண்டிருந்தான்.
விவேகா அறைக்குள் நுழைய, கண்களை துடைத்தபடி எழுந்து நின்றாள் நிலா.
உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என எடுத்ததும் ஆரம்பித்தார் விவேகா.
சொல்லுங்க!
என்ன முடிவு பண்ணியிருக்க? உன்னோட வாழ்க்கைய பத்தி? என கேட்டார் விவேகா.
என்ன சொல்றீங்க? என புரியாதை போல கேட்டாள்.
விவேகா பெரு மூச்சுடன், என் பையன நீ நடத்தினது எனக்கு பிடிக்கல. வெறுக்கிறேன் அதில் எந்த மாற்றமும் இல்ல..
நிலா உதட்டை கடித்து கொண்டு கீழே குனிந்தாள்.
ஆனால் என்னால அப்படியே விட முடியாது. எங்க குடும்பத்துக்கு நீ வேணும். என் பையனோட வாரிசை சுமந்துகிட்டு இருக்க, ரெண்டு குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு என்னோட பையன் எதுக்கு சாபத்தை வாங்கிக் கட்டிக்கணும்? என்றார் விவேகா.
நிலா எதுவும் பேசாமல் இருக்க, விவேகா அவளிடம், என் பேர குழந்தைகளுக்காக நீ ருத்ரன் கூட சேரனும். அம்மா அப்பா இல்லாம என் பேரன் வளர கூடாது. அதை சொல்லத்தான் வந்தேன். நீ இதழ் கிட்ட சொல்லு நிலா. என்றார் விவேகா.
நிலா ஒரு பெரு மூச்சுடன், உங்க பையனுக்கு நான் பொருத்தம் இல்ல. அவர் அக்காவ கட்டிக்கிட்டதும். எல்லாமே சரியா போயிடும் என்றாள்.
நான் சொல்றத கேளு நிலா! என விவேகா பேச வர ஒரே வார்த்தையில் நிறுத்தி இருந்தாள் நிலா.
தன்னால் முடிந்த மட்டும் கூறி விட்டார். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அவளை முறைத்து விட்டு நகர்ந்தார்.
சத்தியமா சொல்றேன் எங்க வீட்ல எல்லாருக்கும் உன்னை பிடிக்கும். என்னை விட உன்மேல் தான் பாசம் காட்டுவாங்க நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் என சிம்பு சோனியா அகர்வாலிடம் கூறும் வசனங்களை ருத்ரன் இதழை பார்த்து கூறி கொண்டிருந்தான். மிகவும் அற்புதமாக வந்திருந்தது காட்சி.
இதழ் அத்தனை உற்சாகத்துடன் இருந்தாள். மகி நேராக வந்து நிலாவிடம் பேசினார். இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி.. அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.
சூர்யா வந்து கூறினார் நிலாவிடம், மிதுன் கூறினான். இந்த கல்யாணம் வேண்டாம் என்று. நிதின் வந்து கேட்டான் கல்யாணத்தை நிறுத்தவா என்று. கண்மணி வந்து நிலாவிடம் பேசினாள். திருமணத்தை நிறுத்த சொல்லி..
Spr கூட சொன்னார். ஆனால் நிலா யார் சொல்வதையும் கேட்கவில்லை. அவள் எதற்கு சொல்ல வேண்டும் என்னும் ரீதியில் தான் வீட்டுக்குள் நடமாடி கொண்டிருந்தாள்.
சித்தார்த் குடும்பம் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. வேறு என்ன செய்ய முடியும்? அவ்வளவு தான்.
உன் தம்பி கிட்ட பேசலாமே என சத்ய தேவ் ரிதமிடம் கூற..
என்னன்னு? என சாஹிக்கு பால் கொடுத்து கொண்டே பார்த்தாள் ரிதம்.
இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி, நிலா கூட சேர்ந்து வாழ சொல்லி.. என சத்ய தேவ் ஆதியை நெஞ்சில் போட்டு தட்டி கொண்டே கேட்டான்.
என்னோட வாழ்க்கையில் நான் ஒழுங்கா இல்ல. நான் என்னோட தம்பிக்கு அட்வைஸ் பண்ற தகுதியில் இல்ல. அதனால எனக்கு தேவையில்லாத விடயத்தில் தலையிட மாட்டேன் என தீர்க்கமாக கூறிய ரிதம், ஆதித்யா என்னோட பையன். என்கிட்ட கொடுத்திடு. இந்த கொஞ்சும் வேலையெல்லாம் சாஹி கிட்ட மட்டும் வச்சுக்கோ! என பிடுங்கி கொண்டு சென்று விட்டாள்.
சத்ய தேவுக்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. அந்த நேரம் பார்த்து ஊரில் இருந்து சூர்யாவுக்கு அழைப்பு வந்தது. கோவில் நோம்பி அதே கோட்டை மாரியம்மன் திருவிழா. அனைவரையும் வர கூறினார் நட்ராஜ்.
வர பார்க்கிறேன் பா!! என சூர்யா போனை வைக்க செல்ல..
கண்ணு நாங்க மிதுன் குட்டிக்கும், இதழ் பாப்பாவுக்கும் வரன் பார்த்து வச்சிருக்கோம். நிச்சயம் உனக்கு பிடிக்கும் சூர்யா. நீங்க எல்லாருமே வரணும். இதோ அம்மா பேசுது என போனை உமாவிடம் நீட்டினார் நட்ராஜ்.
சூர்யாவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை சரி என்று தலையாட்டி விட்டு போனை வைத்தார்.
இதோ அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. யாருடைய முகத்திலும் துளி சந்தோசம் இல்லை. அனைவரும் கலக்கத்துடன் இருக்க, மண மேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் ருத்ரன் அமர்ந்து இருந்தான். இதழ் கூரை பட்டு புடவையில் தயாராகி கொண்டிருந்தாள்.
நிலாவின் முன்னால் சத்ய தேவ் இருந்தான்.
அண்ணா? என கண்களை துடைத்து கொண்டு எழுந்தாள் நிலா.
என்ன பண்ணிட்டு இருக்க நீ? எல்லாரும் கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்கிறாங்க? ஆனா நீ அப்படியே இருக்க? இது தான் உன்னோட காதலா? இது தான் உன்னோட போராட்டமா? இவ்வளவு தானா காதல்? அவன் கூட உனக்கு வாழ ஆசையே இல்லையா? என சத்ய தேவ் சரமாரியாக கேள்வியை கேட்டான்.
நிலா…?
தொடரும்..