Epi 142
இப்போ உனக்கு என்ன தான் பிரச்னை? என சத்ய தேவ் கட்டமாகவே கேட்டான்.
நிலா அழுகையுடன் நின்றிருக்க, இதழ் பண்றது எல்லாமே வீம்புக்கு தான். அது ருத்ரனை கட்டிக்க இல்ல. அதுக்கு பின்னாடி ஒரு பெரிய ஸ்டோரி இருக்கு நிலா. ஆனால் நீ பண்றது எப்டி இருக்குன்னா? ரொம்ப ரொம்ப முட்டாள் தனமா இருக்கு. என்ன தான் உன்னோட திட்டம்? அப்பா அம்மா, பெரியப்பா பெரியம்மா, உன்னோட அண்ணன், இப்படி நம்ம வீட்ல இருக்க எல்லாரும் வந்து உன்கிட்ட கெஞ்சிட்டு போறாங்க. சரியில்ல நிலா உன்னோட attitude என திட்டியே விட்டான்.
அண்ணா அப்படியெல்லாம் பேசாத. நான் நான் ஒன்னும் மாறல உன்னோட மாப்ளை தான் மாறிட்டு இருக்கார் அதை முதல்ல தெரிஞ்சுக்கோ!
ருத்ரன் என்ன மாறினான்? அதையெல்லாம் பேச இது தான் நேரமா? சொல்லு? முதல்ல நீ கல்யாணத்தை நிறுத்து போ!!
எனக்கு clarity இல்லாம நிறுத்த முடியாது. என நிலா கூறி விட..
எல்லாமே மாங்கா மடைச்சிகளா இருந்தால் என்ன தான் பண்ண முடியும்? என்னால மட்டும் என நொந்து கொண்டவன். உனக்கு என்ன கிளாரிட்டி வேணும் சொல்லு? எனக்கு எதுவும் தெரிஞ்சா நான் சொல்றேன். என சத்ய தேவ் பெரு மூச்சுடன் கூறினான்.
நிலா அழுகையை துடைத்து கொண்டு சின்ன வயசுல இருந்து இப்போ ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் வெறுத்தார் என்னை. ஆனால் இப்போ வந்து லவ் பண்றேன்னு சொல்றார். இப்போ அப்டின்னா ஏத்துக்குவேன். ஆனால் சின்ன வயசில இருந்து லவ் பண்றேன்னு சொல்றார். சத்தியமா என்னால துளி கூட நம்ப முடியல.. எனக்கு என்னமோ அவர் பண்ற எல்லாமே நடிப்பு மாதிரின்னு தோணுது. என்கிட்ட ஒரு confort பீல் பண்ணிட்டார். அண்ட் கண்மணி அதாவது மீனாட்சிய பழி வாங்கனும். அதுக்காக made for each other அப்டின்னு ஒரு மாஸ்க் போட்டு அவரோட காதலி முன்னாடி இப்படி perform பண்றார். அவ்ளோ தான் என முடித்தாள்.
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன் அப்படியா? சரி வா நம்ம மாமனார் வீட்டுக்கு போயிட்டு வரலாம் என கையை பிடித்து அழைத்து சென்றான்.
இங்கே அனைவரும் சின்சியராக கல்யாண மேடையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்கள். சர்வேஸ்வரன் பார்வை மொத்தமும் இதழ் மேல் இருந்தது. இதழ் அதற்கு எதிர்மாறாக, தீராவின் கையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
எங்கே போறாங்க இவங்க ரெண்டு பேரும் என இதழ் திரும்பி பார்த்து கேட்க, அவங்க எங்கே போனால் நமக்கு என்ன? நம்மோட மேரேஜ்ல கவனம் செலுத்துவோம் என குருக்கள் கூறும் மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தான் ருத்ரன்.
அதுவும் சரி தான் என இதழ் திருமண வேலையில் கவனம் செலுத்தினாள்.
படியில் ஏறி மேலே ருத்ரனின் அறைக்கும் வந்து விட்டார்கள் சத்ய தேவ் மற்றும் நிலா இருவரும்.
உங்கெ உங்கே என சாஹி அழ அவனுக்கு பால் புட்டியை வாயில் வைத்து கொண்டே நிலாவை பார்த்த சத்ய தேவ். அவனோட அலமாரிய ஓபன் பண்ணு.
ஹாங் என நிலா திகைத்து பார்க்க,
ப்ச் பண்ணு பாப்பா!! இவன் வேற சிணுங்கறான். என மகனை கொஞ்சியபடி கூறினான் சத்ய தேவ்.
அலமாரியை திறந்து கொண்டே தன் அண்ணனை பார்த்தாள் நிலா.
ஒரு குட்டி ஜியாமன்றி பாக்ஸ் இருக்கும் பாரு. பழசு. அதை எடு என்றான்.
நிலா அந்த ஜியாமன்றி பாக்ஸை ஓப்பன் செய்தவள் கண்கள் புரியாமல் சத்ய தேவை பார்க்க, அதுல இருக்க நியுஸ் பேப்பர்ல ஒரு போட்டோ இருக்கும் பாரு எடு நிலா என அதட்டினான்.
அதே போல நிலா எடுத்தாள். அவளின் கண்கள் அகல விரிந்தது. இது நான் தான் கும்பகோணம்ல மீனாட்சி வேசம்..
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன், அவன் மீனாட்சிய தான் லவ் பண்ணியிருக்கான். அந்த மீனாட்சி நீ தான்.
நிலாவின் கண்களில் நீர் கொட்டியது. மூக்கை உறிஞ்சி கொண்டே நின்றாள்.
போய் அந்த மிலிட்டரி சூட் கேசை ஓபன் பண்ணு? என சத்ய தேவ் சொல்லி கொண்டே மகனை தட்டி கொடுத்தான் சீரணம் ஆக.. ..
வேகமாக சூட் கேசை ஓபன் செய்தாள் பதட்டத்துடன்.
அதுல அந்த கொலுசு இருக்கும் பாரு. அந்த நேபாள எல்லை விவகாரம். என சத்ய தேவ் கூற.. முகத்தை மூடியபடி அழுதாள் நிலா.
இந்த பக்கம் திற மிலிட்டரி கேம்ப்ல நீ அழுதுகிட்டே ஓடின போது உன்னோட முடி அவனோட பட்டன்ல சிக்கிகிச்சே அதை கூட பத்திரமா எடுத்து வச்சிருக்கான் பாரு.
அண்ணா!! என தேம்பி அழுதாள்.
Final touch அந்த போட்டோ frame ல விவேகா மாமியும் அவனும் சின்ன வயசுல இருக்க இமேஜ் பின்னாடி கழட்டி பாரு என சத்ய தேவ் கூற..
அவளால கழட்ட முடியாமல் கைகள் வரவில்லை.. அழுகை நின்ற பாடில்லை..
இவனை புடி நான் ஓபன் பண்ணி காட்டுறேன். என frameமை ஓபன் செய்து காட்டினான். அதில் சிறு வயதில் நிலா எட்டு மாத குழந்தையாக கொழுக் மொழுக் என இருக்கும் போது அவளின் கன்னத்தில் ருத்ரன் சிரிப்புடன் முத்தமிடும் போட்டோ இருந்தது. நிலாவிடம் காட்டினான் சத்ய தேவ்.
அண்ணா என மூச்சு வாங்க பார்த்த நிலா, இப்போ இப்போவே கல்யாணத்தை நிறுத்தனும் என வேகமாக எழுந்தாள்.
சரி அவனை கொடு என குழந்தையை வாங்கி கொண்டான் சத்ய தேவ்.
ஓட்டமும் நடையுமாக சென்றார்கள் இருவரும். நிலா ஒரு முக்கியமான விஷயம் என சத்ய தேவ் கூற..
நிலா மூச்சு வாங்கி கொண்டே திரும்பினாள்.
உன்கிட்ட ருத்ரன் comfort ஆக feel பண்றான்னு சொன்ன தானே!! அதிலயே அவன் உன் மேலே வச்சிருக்க love proof ஆகிடுச்சு. Love you தேவையில்ல. Like you தேவையில்ல. காதல் அப்படின்ற வார்த்தையே தேவையில்ல. ஒருத்தர் கிட்ட இருக்க மிதமிஞ்சிய சுதந்திரம் ஒரு comfort feel தான் என்னை பொறுத்த வரைக்கும் காதல். அது தான் அவங்களோட வாழ்க்கையில் நீண்ட நாட்கள் கைய கோர்த்துட்டு போக வைக்கும். என கூறி முடித்தான்.
அண்ணா நீங்க சொல்றது சரி தான் என சத்ய தேவ்வின் கையை பிடித்து கொண்டாள் நிலா அழுகையுடன்..
இல்லடா தங்கம். நீ stressed ஆக இருந்தால் உள்ளே இருக்கிற baby ரொம்ப கஷ்டப்படும். ஃப்ரீயா இரு. மெதுவா போலாம் நான் இல்லாம அங்கே கல்யாணம் நடக்காது என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.
அனைவரும் அட்சதை தூவி கொண்டிருந்தார்கள். மங்கள வாத்தியம் இசைத்தது. (சும்மா சும்மா)
ருத்ரன் அதே மிடுக்குடன் இதழின் அருகில் அமர்ந்திருக்க, நிலா அழுகையுடன் நேராக இன்பாவின் முன்னால் சென்றவள். மாமா கல்யாணத்தை நிறுத்த சொல்லுங்க. நான் தீராவ லவ் பண்றேன். எனக்கு தீரா வேணும். இப்போ சொல்றேன். எனக்கு சின்ன வயசில இருந்தே தீராவை பிடிக்கும். பிளீஸ் மாமா என அழுதாள்.
அழாத மா!! வா என இன்ப ராகவன் முன்னாள் நடக்க, தாலியை எடுத்து கொண்டான் ருத்ரன்.. இதோ கழுத்திலும் சுற்றினான்.
டேய் நிறுத்து டா! என சத்ய தேவ், நிதின், நிவாஸ், இன்பா, சூர்ய தேவ், மிதுன் தேவ் என அனைவரும் ஒரே நேரத்தில் கத்த… அதே நேரம் வீர் என அழுகை துகில், சாகி, ஆதி, ரவுத்ரன், நிவின், ஹரிணியின் குழந்தை ஹாசினி என அனைவரும் கத்தினார்கள்.
இல்ல இல்லடா அழ கூடாது. என சமாதானம் செய்தார்கள் தாய்மார்கள்.
என்ன நடக்குது? என சித்தார்த் கேட்க,
கல்யாணம் நின்னுடுச்சு என்ற சர்வேஸ்வரன் இதழை பார்த்து கொண்டே புறப்பட்டான்.
நிலா உன்னை லவ் பண்றாலாம். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறா? என கூறினார் இன்பா.
ருத்ரன் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, நிலா நேராக இதழின் பக்கம் சென்று, அக்கா எனக்கு இப்போதும் தெரியும் உங்களுக்கு தீரா மேலே பீலிங் இல்லன்னு. எனக்கு என்னோட தீரா வேணும் கா பிளீஸ். நான் எதுவும் தப்பு பண்ணியிருந்தால் மன்னிச்சிடுங்க. இத்தனை நாள் நான் எதையும் express பண்ணாம இருந்துட்டேன். இப்போ எனக்கு என்னோட காதலும் வாழ்க்கையும் பறிபோகும் நிலை. எனக்கு தீரா வேணும் கா என்றாள் நிலா.
இதழ் புன்னகையுடன் எழுந்து, இவனை நீயே கட்டிக்கோ! நான் நினைச்சது நடந்திடுச்சு. என தன் தங்கையின் அருகில் வந்தவள். சாரி பாப்பா. உன்னை நான் எப்பவும் கஷ்ட படுத்த நினைச்சதே இல்ல. நீயே இப்போ சொல்லலன்னா கூட கல்யாணம் நின்றிருக்கும். எனக்கு தீராவ புருஷனா பார்க்க முடியாது. அவன் என்னோட தம்பி தான். அப்படியே பார்த்து பழகிட்டேன். எல்லாமே ஆக்டிங் தான். என்னடா தீரா? என இதழ் பார்க்க..
இல்ல lips ஒரு வேளை நான் உனக்கு முன்னாடி பிறந்திருந்தா தட்டி தூக்கி இருப்பேன் என ருத்ரன் நிலாவை பார்த்து கொண்டே கூற.. நிலா அவனை முறைத்து பார்த்தாள்.
இதழ் புன்னகையுடன், வா வந்து உட்காரு வரலாற்றில் இரண்டாவது முறையாக பையன மடியில் உக்கார வச்சு ஒரு கல்யாணம். என இதழ் ரவுத்ரனை ருத்ரனின் மடியில் அமர்த்தினாள்.
மாமி மன்னிச்சிடுங்க! என நிலா எழுந்து விவேகா பக்கம் செல்ல போக.. .
விவேகா மென்புன்னகையுடன் என் பையனை சந்தோஷமா பார்த்துகிட்டா போதும். எனக்கு என் பையன் சந்தோஷம் தான் முக்கியம் என்றார்.
கெட்டி மேளம் கெட்டி மேளம் என குருக்கள் கூறி, தாலி எடுத்து கொடுங்க என கூற..
மாமா நீங்க எடுத்து கொடுங்க என கூறினான் ருத்ரன்.
இல்ல இங்கே நல்ல காதல் ஜோடியா இப்போ வரை பிரியாம இருக்கவங்க தான் எடுத்து கொடுக்கணும் என்ற சத்யதேவ், சித்தி மைவிழி சித்தி கார்த்திக் டாடிய கூட்டிட்டு வாங்க என அழைத்தான்.
என் பையன்? என மைவிழி உற்சாகத்துடன் கூறியபடி வந்தவர். நல்லா இருக்கணும் நீங்க ரெண்டு பேரும் என சொல்லி கொண்டே கார்த்திக், மை விழி இருவரும் தாலி எடுத்து கொடுக்க நிலா – ருத்ரன் திருமணம் நல்ல படியாக நடந்தது.
மகி சூர்யாவை விட்டு பிரிஞ்சி தான் மிதுன் பிறந்தான், விவேகா சொல்லவே வேணாம் ரிதம் வயித்துல இருக்கும் போது இன்பா கூட இல்ல. Spr – தேஜூ கூட அதே போல தான். அப்படி பார்க்கும் போது இங்கே best couple மை விழி – கார்த்திக் தான் score பண்ணிருக்காங்க. எது நடந்தாலும் வீட்டுக்குள்ளேயே சண்டை போட்டு பிரிஞ்சி சேர்ந்து இது வரைக்கும் ஒன்றாக இருக்காங்க. So சத்ய தேவ்க்கு தன்னோட சித்தி எப்பவுமே special தான். இது போல எல்லாருக்கும் அம்மா கூட பிறந்த தங்கச்சி நெருக்கமா இருப்பாங்க அதை express பண்ண தான் இந்த seen வச்சேன்.
ருத்ரன் – நிலா convo அண்ட் இனி ரிதம் – சத்ய தேவ் ட்ராக் இருக்கு.
Maximum 10 episodes ல season 1 முடிவடைய போகுது.