Epi 143
ஒவ்வொரு நொடியும் வேதனையுடன் மனதில் பாரத்துடன் நடந்தது முதல் கல்யாணம். ஆனால் இன்று மனம் முழுவதும் உற்சாகத்துடன் கன்னங்குழி ததும்ப மணமேடையில் அமர்ந்திருந்தாள் நிலா.
ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். எதுவும் பேசலாமே? என தோள் கொண்டு தோள் இடித்தாள்.
தைரியம் தான்!! என வாய்க்குள் முனகி கொண்டவன். எதுவும் பேசவில்லை.
நாங்க சொன்ன போது மேடம் கேட்கல, சத்ய தேவ் சொன்னதும் எப்படி மனசு மாறின? என அனைவரும் கேட்டார்கள். இந்த moment’s அ என்ஜாய் பண்ண விடுங்க. அப்புறம் பதில் சொல்றேன். என தைரியமாக பேசியவளை புருவம் சுருக்கி பார்த்தான் ருத்ரன்.
இதோ அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். ஆசையுடன் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தாள் நிலா.
ஹே நேரா பாரு? என்னை எதுக்கு பார்க்கிற? என இரும்பி கொண்டே கேட்டான்.
என் புருஷனை நான் பார்ப்பேன். என்றாலே பார்க்கலாம். புருவம் தூக்கியபடி இதழ் கடித்து அமர்ந்திருந்தான்.
அனைவரின் பார்வையும் மேடையின் மீது இருக்க spr நேராக இன்பாவின் அருகில் சென்று தனது பேரனை வாங்கி கொண்டார். இன்பா சிரித்து கொண்டு, இவனை சமாளிக்க முடியல அவனோட அப்பன விட பத்து வால் வச்சிருக்கான். என கொடுத்து விட்டு சூர்யாவிடம் இருந்து துகிலை வாங்கி கொண்டார்.
இன்பா என்ன பண்ற? என சூர்யா முறைத்து கொண்டு கேட்டார்.
என் பேரன் இவன்!! போடா என்னோட பிஸ்னஸ் எல்லாம் என் துகில்க்கு சொந்தம். இவனை நான் என் கூட வச்சுக்க போறேன். என கூறினார் இன்பா.
எல்லாரும் என்னை பார்த்து தான் சிரிக்கிறீங்க. இப்போ எதுக்கு டி காணாததை கண்ட போல பார்க்குற? என் முகத்துல எதுவும் எழுதி ஒட்டி இருக்கா?
அழகா இருக்கேள்! பிடிச்சிடுத்து!! ரொம்ப..
எனக்கு புரியல என்றான் ருத்ரன்.
உங்க மேலே ஆசை. பார்க்காமல் இருக்க முடியல.
அப்போ கண்ணு கோளாறுன்னு நினைக்கிறேன். என்றான் ருத்ரன் எழுந்து கொண்டே..
அது கண்ணு கோளாறு இல்ல. வயசு கோளாறு. உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது. என நிலா எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு சென்றாள்.
அரை போதையா இருக்கும். ஒரு கட்டிங் போடு சரியா போயிடும் என அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினான் பேசி கொண்டே..
கட்லிங்கா? சூப்பர் போலாமே? என்றாலே பார்க்கலாம்.
ஹே நீ ரொம்ப டூ மச்சா போற!! என ருத்ரன் கூற..
ஆமா போவேன் இப்போ என்ன என கையை கோர்த்து கொண்டாள் நிலா.
என்னடி ட்ரெஸ் இது? என ருத்ரன் கேட்க, அய்யயோ மெட்டர்னிட்டி நைட்டி.. என நிலா தலையில் கை வைத்தாள். சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்தி கொண்டு சென்றான் ருத்ரன்.
அனைவரும் உற்சாகமாக இருந்தார்கள். மனதுக்குள் ஒரு நிம்மதியான இதம் பரவியது. ருத்ரன் நேராக மிதுன் அருகில் சென்று, மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என நின்றான் வேண்டும் என்றே..
எத்தனை தடவை டா கல்யாணம் பண்ணுவ? உனக்கு சும்மா ஆசிவாதம் கொடுக்க.. போடா என்றான் மிதுன்.
என்னங்க நம்ம மிதுனுக்கு கல்யாணம் பண்ணனும். பாவங்க பொக்குன்னு இருக்கான் என்றார் மகி.
பண்ணிடலாம் ஊருல நோம்பி. சோ அங்கேயே என்ற அம்மா பொண்ணு பார்த்து வச்சிருக்காங்க. அப்படியே பாப்பாலுக்கும் மாப்ளை பார்த்திருக்காங்க. என்றார் சூர்யா.
அப்டியா அப்போ ஓகே என மகி சொல்ல, அத்தை அது வந்து மிதுன் மாமா என இனியா வந்தாள் அருகில்..
(நான் பொல்லாதவன் ல தான் மிதுன் கல்யாணம் நடக்கும் all readers assemble ஆகிடுங்க. இப்போ இல்ல AAA முடிஞ்சு நான் பொல்லாதவன் continoue பண்ணுவேன்)
மை டியர் அழ கூடாது.. என அணைத்து முத்தமிட்டான் சத்ய தேவ்.
ரிதம் ஒருவனுக்கு பால் புகட்டி கொண்டு இன்னொருவனுக்கு புட்டியில் நீட்டினாள்.
இதென்ன அநியாயம் பண்ற? இவனும் உன்னோட மகன் தான் ஓவரா பண்ற ரிதம். என சத்ய தேவ் கடுப்புடன் கூறினான்.
எல்லாம் எனக்கு தெரியும் டா!! எல்லாம் உன்னால.. இதுவும் என்னோட மில்க் தான். நீ தெரியாம பேசிட்டு இருக்காத. நான் தூக்கமில்லாம கஷ்ட பட்டுட்டு இருக்கேன். இதுக்கு காரணம் நீ தான் நீ மட்டும் தான் போடா!! என அங்கிருக்கும் பொருளை எடுத்து வீசினாள் ரிதம்.
சத்ய தேவ் பெரு மூச்சுடன் தனது மகனை தூக்கி கொண்டு, நரகமாக இருந்தது வாழ்க்கை. ரிதம் சைக்கோவாக மாறி கொண்டிருந்தாள். இதற்கு ஒரு முடிவே இல்லையா என நொந்து போனான்.
எது செய்தாலும் குற்றம் என்னும் ரீதியில் பார்க்கிறாள். இப்பொழுதே குழந்தையை பாகுபாட்டுடன் பார்க்கிறாள். இருவரும் ஒரே போல தானே இருக்கிறார்கள். ஒன்றாக பார்க்க மாட்டேன் என்கிறாளே!! என உள்ளுக்குள் வேதனை பரவியது.
மாமா சாப்பிடீங்களா? தூங்க போலாம் வாங்க என வந்து நின்றான் ருத்ரன்.
என்ன டா? என் கூட தூங்க வர? இன்னிக்கி தான் காதல் கை கூடி கல்யாணம் முடிஞ்சிருக்கு. புதுமாப்ளை இப்படி பேசலாமா? என சத்ய தேவ் கேட்க..
என்ன மாமா புது மாப்ளை? அவள் மாசமா இருக்காளே!! அதுவும் இல்லாம அவள் பண்றது ரொம்ப ஆக்வேடா இருக்கு அப்பட்டமா என்னை பார்த்துகிட்டே இருக்கா. அது சரி வராது. நீங்க தான் சாஹிய விடிய விடிய எந்திரிச்சு பார்த்துக்கிறீங்க அதான் கம்பனிக்கு என ருத்ரன் கூறினான்.
சத்ய தேவ் சிரித்தபடி, எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. இன்னிக்கு உனக்கு முக்கியமான நாள். நீயும் நிலாவும் சண்டையே போட கூடாது. ஒற்றுமையா இருக்கணும். அவள் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு. என்றான்.
எப்போ டியூட்டியில் ஜாயின் பண்ண போறீங்க? என ருத்ரன் கேட்க,
ஒரு பெரு மூச்சை விட்ட சத்ய தேவ், ப்ரைவேட் டிடெக்டிவ் ஆபிஸ் வைக்க போறேன். அண்ட் ரிசைன் பண்ணிட்டேன்.
என்ன மாமா சொல்றீங்க? என அதிர்ச்சியுடன் ருத்ரன் கேட்க, சத்ய தேவ் அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை. மகனுக்கு உதட்டை துடைத்து விட்டு நெஞ்சில் போட்டு தட்டி கொண்டே சென்றான்.
ருத்ரன் தீவிரமாக யோசித்து கொண்டிருக்க உள் அறையில் ரிதம் கத்தி கொண்டிருக்கும் குரல் கேட்டது. ரிதம் குட்டி கத்தாத தங்கம்? அவன் என்ன பண்ணுவான்? கொஞ்சம் பொறுமையா இரு செல்லம் என கங்கா சொல்லி கொண்டிருந்தார்.
கத்திட்டே இருக்கான் அம்மச்சி!! எனக்கு முடியல என சிணுங்கினாள்.
சரியா போயிடுவான் இங்கே என்கிட்ட கொடு! என அவனை சீராட்டினார் கங்கா.
கும் என குரலை சிரும்பி கொண்டே வந்து நின்றாள் நிலா. ஹலோ தீரா!! நான் வந்து நிக்கிறேன் என நிலா மீண்டும் குரல் கொடுக்க,
ருத்ரன் திரும்பி பார்த்து விட்டு, போ போய் தூங்கும் வேலைய பாரு!! என உள்ளே செல்ல போனவனை இழுத்து கொண்டு அறைக்கு வந்தாள் நிலா.
என்னடி பண்ற? என ருத்ரன் திகைத்து கேட்க..
கட்லிங் என்றாள் இறுக்கி அணைத்து கொண்டே..
எங்கே உன் பையன்? அவனை தானே பாதுகாப்பு கவசமா வச்சிட்டு சுத்திட்டு இருப்ப அவனை கட்டிக்கிட்டு தூங்குற வழிய பாரு. என்னை விடு. என நகர்ந்தான்.
அப்படியெல்லாம் விட முடியாது. அவன் இங்கே இல்ல..
வேற எங்கே? என ருத்ரன் கேட்க..
அவனை என் டாடி கூட்டிட்டு போயிட்டார். நானும் அனுப்பி வச்சுட்டேன். இனி அவன் அங்கே தான் இருப்பான் என்றாள் நிலா.
எதுக்கு உங்க வீட்ல கொண்டு விட்ட? என் அம்மா அப்பா இருக்காங்க என கோபத்தில் பார்த்தான்.
துகில மாமா பார்த்துக்கிறார். அன்னிக்கி ரெண்டு குழந்தை இருக்குல்ல அவங்க ரெண்டு பேரையும் மேனேஜ் பண்ணணும்ல அதுக்கு தான் என சொல்லி கொண்டே அருகில் நெருங்கினாள்.
சரி தூங்கு நான் போறேன் என வெளியே செல்ல போனவனை பின்னால் இருந்து அணைத்து கொண்டாள் நிலா.
தீரா என முத்தமிட்டாள் நிலா.
என்ன பண்ற நீ? ஓவரா இருக்கு transformation.. சோ கொஞ்சம் குறைச்சிக்க.. என அவன் சொல்லவே முத்தமிட்டாள்.
நிலா!! என பிரித்து விட்டான் ருத்ரன்.
லவ் யூ!! எவ்ளோ தெரியுமா? இதோ என் வயித்துல வளரும் பாப்பா தான் என்னோட லவ்வுக்கு அடையாளம். நீங்க கேட்டீங்களே எனக்கு பொண்ணு வேணும்னு அதுக்காக பெத்துக்க முடிவு பண்ணேன்.. அன்னிக்கே.. நான் எனக்கு expression fear.. அதான் லவ் சொல்லல. எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் குட்டி வயசுல இருந்து. உங்க கிட்ட பேச மாட்டேனா? உங்க பார்வை என் மேலே படாதா அப்டின்னு தவம் கிடந்திருக்கேன் தீரா? லவ் யூ இங்கே இதயத்துல இருந்து, இதோ என்னோட gift என அவனது கையை எடுத்து வயிற்றின் மேல் வைத்து முகத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.
ம்ம் லவ் யூ டூ!!.. என்றான் ருத்ரன்.
இது ஆத்மார்த்தமா இல்லையே? என நிலா உதட்டை பிதுக்கிய படி கூற..
Slave மாதிரி லவ் பண்றேன்னு சொல்லும் போது எதுவுமே தெரியாத மாதிரி முகத்தை வச்சிட்டு சுத்திட்டு இருந்தல்ல. இப்போ நீ வந்து சொல்லும் போது நான் உடனே உன்னை கொஞ்சி தூக்கி வச்சுக்கணும்? அப்படி தானே? மொத்த expectations curiosity ரெண்டையும் குழி தோண்டி புதைச்சுபோட்டு லவ் யூ வாம் போடி என்று கதவை திறந்தான்.
நிலா கதவை லாக் செய்து விட்டு மாராப்பை சரிய விட்டவள். முடியை முன்னால் போட்டு கொண்டு அவன் பக்கம் திரும்பினாள்.
ருத்ரன்..?
தொடரும்..