Epi 144
என்ன டி பண்ற? இப்படியெல்லாம் பண்ணா அப்படியே உருகி ஊத்திவிடுவாங்களா? என அவளையே முறைத்து பார்த்தான் ருத்ரன்.
என் இஷ்டம் நான் என்ன வேணாலும் பண்ணுவேன். உங்களுக்கு என்ன? என அருகில் நெருங்கியவள் இறுக்கி அவனை அணைக்க முயன்றாள் நிலா.
அவளின் வயிறு ருத்ரனை அணைக்க விடாமல் இடித்தது. அவனோ எதுவும் பேசாமல் அப்படியே நின்றான்.
ஹலோ என மூச்சு வாங்கி கொண்டே அழைத்தவள். ஹெல்ப் பண்ணலாமே கட்டி பிடிக்கிறேன். என நிமிர்ந்து பார்த்தாள்.
பிடிச்சுக்கோ! என்கிட்ட எதுக்கு சொல்ற? என ருத்ரன் அப்படியே நிற்க, தீரா!! பிளீஸ் எனக்கு தோணுது ரொம்ப ரொம்ப.. என முத்தமிட்டாள் எட்டிய இடங்களுக்கு..
தோணுதா? அப்டின்னா? என ருத்ரன் எதுவுமே தெரியாததை போல கேட்க..
நடிக்காதீங்க பக்கத்தில வாங்க! உட்காருங்க என இழுத்து சென்று அமர வைத்தவள் அவனது மடியில் அமர்ந்து கொண்டாள். கன்னத்தில் முத்தமிட்டாள். கல் போல அமர்ந்திருந்தான்.
ருத்ரன் நான் உங்களை லவ் பண்றேன். Love you என சொல்லியபடி அவனது கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டவள். எனக்கு love you வேணும் நிறைய..
கடையில வாங்கிக்கோ!! என அமைதியாக கூறினான்.
எனக்கு வேணும் என பிடிவாதமாக கூறியவள் சொல்ல மாட்டீங்களா? Love you..
மாட்டேன் டி!!
அப்போ ஓகே என அவனது உதட்டில் முத்தமிட்டாள். ருத்ரனை அணு அணுவாக ரசித்தாள். பார்வையில் விழுங்கினாள். கைகள் அங்கும் இங்கும் மேய்ந்தது.
நான் ஒன்னும் 18 வயசு பையன் இல்ல. பார்த்ததும் அப்படியே என நிறுத்தினான்.
எனக்கு தெரியும் நான் டாக்டர் ஓகே என முத்தமிட்டாள் உதட்டில்..
தீரா!! லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. நீட் யூ.. வாண்ட் யூ.. என வாய்க்கு வந்ததை சொல்லியபடி அவனை முத்தமிட்டு இறுக்கமாக அணைத்து கொண்டவள். தோள் சட்டையுடன் அவனுக்கு காட்சி கொடுத்தாள். கூந்தலை ஒரு பக்கம் போட்டு கொண்டு…
அவனும் சொக்கி போய் முத்தமிட வர, போதும் எனக்கு தூக்கம் வருது. நீங்க போங்க.. என வேண்டுமென்றே விலகினாள் நிலா.
ஹேய்!! என்ன?
என்ன?
என்னடி? என கோபத்துடன் கேட்டான்.
அதான் என்னடா? என நிலா சரிக்கு சமமாக பேசினாள். அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டவன். தீராத விளையாட்டு பிள்ளையாக மாறி போனான்.
தீரா லவ் யூ சொல்லுங்க!! என ஆசையுடன் கேட்டவளின் உதட்டில் முத்தமிட்டு கொண்டே கூறினான்.
லவ் யூ!! லவ் யூ… ஹனி மூன் போலாமா? என கேட்டானே பார்க்கலாம்.
இப்போ முடியாது இன்னும் நாலு மாசத்துல டெலிவரி. என உதட்டை பிதுக்கினாள்.
வீட்ல ஆள் இருந்துகிட்டே இருப்பாங்க. எதுவும் பண்ண முடியாது டி!! என சிணுங்கி கொண்டே கூறினான் ருத்ரன்.
நைட்டு ஒன்னா தூங்கலாம்.. என முத்தமிட்டு கொண்டே கூறினாள்.
பகல்ல கொஞ்சம் தூக்கம் வருமே? என ருத்ரன் கூற..
என்ன பண்றது? என நிலா யோசனையுடன் கேட்டாள். யோசிச்சுட்டேன் என்றவன் அவளின் உதட்டை கவ்வி கொண்டான். இருவரும் விடிய விடிய மோக விளையாட்டை கொஞ்சம் குறைவாக விளையாடினார்கள். அதற்கு பதில் என்றும் இல்லாமல் நிறைய பேசினார்கள். அவளை அணு அணுவாக ரசித்து உள் வாங்கினான் ருத்ரன். அவளும் அப்படித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் ரசித்தார்கள். பேச பேச பத்தவே இல்லை. அந்த அளவுக்கு என்ன பேசினார்கள் என அவர்களுக்கு தெரியவும் இல்லை. இயல்பான கணவன் மனைவி போல அவர்களின் வாழ்க்கை சிறக்க ஆரம்பித்தது.
அதென்ன வாங்க போங்க அப்டின்னு சொல்ற? என ருத்ரன் அவளின் காதை கடித்தான்.
பழக்கம் ஆகிடுச்சு.
என்ன பழக்கம்? என ருத்ரன் கேட்க..
சின்ன வயசுல சொப்பு விளையாடுவேன். என்றாள் நிலா.
அதான் உன்னை நாங்க சேர்த்துக்கவே மாட்டோமே என ருத்ரன் அவளின் முகத்தை பார்த்தான்.
நிலா கண்ணக்குழி தெரிய சிரித்தவள். நான் தனியா எங்க வீட்ல விளையாடுவேன். நான் தான் பொண்டாட்டி , நீங்க தான் என்னோட புருஷன். பால் கனி பக்கம் போய் நீங்க என் பக்கத்தில இருக்கிறதா imagine பண்ணிக்கிட்டு விளையாடுவேன். அது ரொம்ப நல்லாருக்கும் என்றாள்.
ருத்ரன் அவளின் உதட்டில் முத்தமிட்டு, எனக்கும் உன் கூட விளையாட ஆசை வரும் தான். ஆனால் உன் அண்ணனுக இருப்பானுங்க. நான் உன்கிட்ட பேசி அது சீன் கிரியேட் ஆகி, எதுவும் பிரச்னை வந்துட்டா என்ன பண்றதுன்னு தான், நீ விளையாட வந்தால் நான் வரவே மாட்டேன். என்றான்
ம்ம் என ஒற்றை பதிலுடன் நிறுத்தி கொண்டாள்.
என்னை எதுக்கு பிடிக்குது உனக்கு? என ருத்ரன் கேட்டே விட்டான். நிலாவின் முகத்தில் வெட்கம் பரவியது.
கேட்டதுக்கு பதில் சொல்லு டி!! என உதட்டில் முத்தமிட்டான்.
மாமியும் நீங்களும் இருக்க bond எனக்கு பிடிக்கும். அப்புறம் நீங்களும் சக்தி அண்ணாவும் இருக்கிற bond, ரிதம் அண்ணி உங்க கூட சண்டை போடும் போது அது ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும். எங்க வீட்ல வாழ்க்கை முறை எல்லாமே இயந்திரதனமா இருக்கும். ஆனால் நீங்க அப்படி இல்ல. அப்புறம் எப்பவுமே நீங்க என்னை வேற கண்ணோட்டத்தில் பார்ப்பீங்க. என்னை திட்டுவீங்க. அது எனக்கு life time goal.. உங்க மனசுல இடம் புடிக்கணும்னு. அது addict feeling. பிடிக்காத ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு நமக்காக எல்லாத்தையும் செய்ய எப்போ வருவார் அப்டின்னு உங்களை நினைச்சு தவம் கிடைக்கும் நாட்களும் உண்டு. ஏன் என்னை பிடிக்கலன்னு உங்களுக்காக ஏங்கி இருக்கேன் ரொம்ப. என உணர்வு பூர்வமாக உள்ளத்தை வெளிப்படுத்தினாள்.
ருத்ரன் அவளின் முன்னால் எழுந்து மண்டி போட்டு அமர்ந்தான்.
என்ன பண்றீங்க? என நிலா அதிர்ச்சியுடன் கேட்க..
இல்லடி நான் பண்ணது தப்பு. நிறைய தப்பு பண்ணிட்டேன். உன்னை தெரிஞ்சே கஷ்ட படுத்திட்டேன். அது தப்பு நிலா. நான் உனக்கு தகுதி இல்ல டி! உன்னோட காதல்.. அது சத்தியமா வார்த்தையில விவரிக்க முடியாது நிலா. நான் என்ன சொல்றது? என இதயம் படபடக்க வியர்க்க விறுவிறுக்க பார்த்தான்.
அவனிடம் எந்த பதிலும் இல்லை..
நிலாவின் கண்களில் பரிசுத்த அன்பு மட்டுமே இருந்தது. இல்ல தீரா எனக்கு நீங்க சொந்தம். இது போதும். என்னோட லைஃப் டைம் செட்டில்மெண்ட் நீங்க தான் என்றாள்.
ருத்ரன் அவளின் கால்களை எடுத்து மடியில் வைத்து கொண்டவன். ஓப்பனா சொல்ல போனால் உங்க ஃபேமிலி அளவுக்கு நாங்க பணம் படைச்சவங்க இல்ல. என்னோட அப்பாவுக்கும் உன் சித்தப்பாவுக்கும் எப்பவும் ஆகாது ( ஏய் சண்டைக்காரா pocket novel கதை இன்பா – விவேகா காதல் கதை) இதெல்லாம் கேட்டு வளர்ந்தேன். குட்டியா கியூட்டா இருக்கிற பேபிய யாருக்கு தான் பிடிக்காது. நீ நிஜமாவே நிலா தாண்டி.. இந்த கண்ணக்குழி உன்னோட குட்டி போனி டெயில் அவ்ளோ அழகா இருக்கும். ஒன்லி நான் ரசிச்சுப்பையிங் மட்டும் தான். எனக்கு நீ அதிகபட்சம்னு தோணுச்சு. அதான் விட்டேன். ஆனால் விதி விடல.. அந்த கோவில்ல நீ தான் மீனாட்சிய ஆண்டாள்னு நினைச்சு உன்னையே பார்த்தேன். எனக்கு இன்னும் வரைக்கும் நீதான்னு தெரியல இப்போ தான் தெரிஞ்சது. உன் மேலே எண்ணம் போக கூடாதுன்னு தான் தங்க மீனாட்சியை லவ் பண்ணேன். எனக்கே ஒரு பயம் வந்திடுச்சு. உன் மேலே உணர்வுகள் வந்துட்டா என்ன பண்றதுன்னு தான் அவசர அவசரமா மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணேன். ஆனால் விதி மீனாட்சியில விளையாடிச்சு. நீ வரம் டி!! என்னோட வரம் என்கிட்டயே கிடைச்சிடுச்சு என கட்டி கொண்டு முத்தமிட்டான்.
நிலா பூரித்து அமர்ந்திருந்தாள்.
என்னோட அம்மா உன்னை கட்டிக்க சொன்னதும் actually ருத்ரன் Happy தான். நம்ம லைஃப்போட ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்குதுன்னு நினைச்சேன். நீ வேற ஒருத்தனை லவ் பண்ணி குழந்தை பெத்துக்கிற அளவுக்கு இருந்திருக்கன்னு தெரிஞ்ச அந்த விசயமே என்னை கொன்னுச்சு தெரியுமா? அது நரகமா இருந்துச்சு. உன் மேலே அவ்ளோ கோபம்? அப்பவும் உன்னை விட மனசே இல்ல. யாரை லவ் பண்ணா என்ன? நிலா இந்த ஜென்மத்தில் பொண்டாட்டியா எனக்கு தான். அவள் மூலமா ஒரு குழந்தை வந்துட்டா பேட்ச் ஒர்க் பண்ண மாதிரி இருக்குன்னு நினைச்சேன்.
அதுவும் நீங்க தான? என நிலா சிரித்து கொண்டே பார்த்தாள்.
நிலா எனக்குதான்னு பிரபஞ்சமே பிளான் பண்ணியிருக்க அப்புறம் என்ன பிரச்னை? நீ எனக்கு தான் என முத்தமிட்டான் ருத்ரன்.
அவளும் சளைக்காமல் முத்தம் வைத்தாள். காதல் செய்தார்கள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.. அனைவரும் ஈரோடு கிளம்பினார்கள்.
தொடரும்..