அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
417 views

EPI 157

AAA – final 

மா இவன் என துகில் ஆதியையும் சாகியையும் காட்டிட… ரிதம் வேகமாக வந்து எட்டி பார்த்தாள். 

சாகியை ஆதி அடித்து கொண்டிருந்தான். டேய் ஆதி வெளுப்பேன் ராஸ்கல் என்னடா இது? தம்பி டா அவன் உனக்கு? தம்பிய அடிக்கலாமா? சொல்லு என விலக்கி விட்டாள் ரிதம். 

இருவரும் தூக்கு என கைகளை நீட்டியபடி உதட்டை பிதுக்கினார்கள். முடியலடா என அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டாள் ரிதம். துகில் ரிதமின் கையணைப்பில் இருக்க, ஆதி, சாகி இருவரும் ரிதமின் மடியில்.. சத்ய தேவ் ஆபீஸ் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வரை அப்படியே அமர்ந்திடுந்தார்கள். 

ரிதம் சோர்ந்து விட்டாள். கொஞ்சம் நகர்ந்தால் போதும் ஆதி வீல் வில்லென கத்துகிறான். இத்தனை பிடிவாதமா? என மிரண்டு போனாள் ரிதம். கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. 

என்னாச்சு என சத்ய தேவ்வின் குரல் கேட்க, ப்பா தம்பி அடிச்சிட்டான் தம்பிய என்றான் துகில்.. 

சாகி உதட்டை பிதுக்கிய படி சத்ய தேவ் பக்கம் கையை நீட்ட, இல்லடா சாகி என தூக்கி கொண்டான் சத்ய தேவ். கூடவே துகிலையும்.. 

டாடி என துகில் உற்சாகமாக தன் தந்தையை கட்டிக்கொண்டான். ஆதி ரிதமின் சேலை மாராப்பை இறுக்கி பற்றி கொண்டு சத்ய தேவைப் பார்த்தான். அவனுக்ஹ் ரிதம் தான் பிடிக்கும். யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டான். என்னோட அம்மா எனக்கு மட்டும் தான் அம்மா. அதில் துகில் கூட வருவான் அதற்கு காரணம் துகில் ஆதியை விட பெரியவன். ஆனால் சாகி? அவன் குட்டியாக தனக்கு போட்டியாக அம்மாவுடன் இருக்கிறானே என்ற எண்ணம். எனக்கு முடியல சக்தி என சோர்வுடன் கூறினாள் ரிதம். 

துகில் என இன்பாவின் அழைப்பு வர, ஒரே ஓட்டமாக இறங்கி ஓடி விட்டான் தாத்தாவிடம்.. தாத்தா என்றால் மிகவும் பிடித்தம். 

சரி அவனை கொடு நான் வச்சிருக்கேன் என சத்ய தேவ் வாங்க முற்பட… ரிதமை கட்டிக்கொண்டு அழுதான் ஆதி. 

சத்ய தேவ் சிரித்து கொண்டே, துகில் தான் எனக்கு போட்டி அப்டின்னு நினைச்சேன். எங்க மூணு பேருக்கும் போட்டியே இவன் தான் போலயே? என்றவன் நேராக கிச்சன் சென்று அனைத்து வேலைகளையும் பார்த்தான். 

சாகி அமைதியாக கேரட்டை கடித்து கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்திருந்தான். சத்ய தேவ் தான் அவனை அமரவைத்திருந்தான். 

ஆதி மெல்ல வந்தவன் கையில் இருக்கும் கேரட்டை அடித்து பிடுங்கி கொண்டு தவழ்ந்து சென்று விட்டான். 

சாகிக்கு ஒரே அழுகை.. 

சக்தி தூக்கி கொஞ்சியபடி, அழ வேணாம் டாடி உங்களுக்கு ஆப்பிள் தரேன் சாப்பிடுங்க என நீட்ட வழிசல் ஊற்றி கொண்டு கடிக்க முயற்சி செய்தான் சாஹித்யா. 

இப்டியே நாட்கள் வேகமாக ஓடி கொண்டிருந்தது. 

காதலை சொன்ன ஆள் முத்தத்துக்கு மேலே நெருங்காமல் இருக்க காரணம் என்னவோ? என ரிதம் முன்னால் வந்து நின்றாள். 

என்னோட ஆசை இன்னும் ஃபுல்பில் ஆகல கொஞ்சம் குழப்பமாக இருக்கேன். குழப்பம் சரியானதும் தீர்வு கிடைச்சதும் ஓடி வருவேன் என கூறி விட்டு சென்றிருந்தான் சத்ய தேவ். 

ரிதமின் கைகளை பிடித்து கொண்டு தூங்கியது முரட்டு வாண்டு தேவ் ஆதித்யா. அவனது முகத்தை பார்த்தாலே கண்டு கொள்ளலாம் ரிதமிடம் 24 மணி நேரமும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒருவன் யார்? என கேட்டால் கண்களை மூடிக்கொண்டு தேவ் ஆதித்யா என்று கூறலாம். 

மணி 11.55 இருக்கும். ரிதமின் கையை பற்றி எழ வைத்தான் சத்ய தேவ். 

என்ன டா? ஆதி? என ரிதம் கண்களை தேய்த்து கொண்டு பார்க்க.. 

நான் உன்னோட புருஷன் என கடுமையான குரலில் கூறினான் சத்ய தேவ். 

அச்சோ சாரி!! சொல்லு சக்தி என ரிதம் கேட்க.. 

Long drive போலாமா? என சத்ய தேவ் கேட்டான். 

இப்போவா? என ரிதம் சோர்வுடன் பார்த்தாள். 

இப்போ தான் வா போலாம் என சத்ய தேவ் உசுப்பி விட.. 

குழந்தை என ரிதம் கேட்க.. அதுவும் தான் என்றான் சக்தி. 

டேய் நீ தேவையில்லாம பையன எதுவும் சொல்லாத கொன்னுடுவேன் என சொல்லி கொண்டே புறப்பட்டாள். துகில் தூங்கி கொண்டிருக்க, அவனையும் தட்டி எழுப்பிய சக்தி சாகியை தூக்கி கொண்டு புறப்பட்டான். 

Long driveண்ணு சொல்லிட்டு எதுக்கு டா ஏர்போர்ட் கூட்டி வந்திருக்க? இவனுங்க மூணு பேரும் மோசன் போகணும், ஃப்ரெஷ் ஆகணும் என ரிதம் ஆரம்பிக்க.. ஹே typical house wife மாதிரி behave பண்ணாத ரிதம் எல்லாமே எனக்கு தெரியும் டி என அழைத்து சென்றான். மத்திய பிரதேசம் வந்து சேரும்போது கண்டுகொண்டாள் ரிதம். அவன் எங்கு அழைத்து செல்கிறான் என்று. உள்ளுக்குள் குறுகுறுப்பு எதுவும் பேசவில்லை அவள். 

கஜுராஹோவின் மேற்குக் கோவில்கள்.  

சூரிய அஸ்தமனம் ரத்தச் சிவப்பில் வானைத் தொட்டது.  

கோவில் சிற்பங்கள் காதலின் ஆயிரம் ரூபங்களைச் சொல்லிக் கொண்டிருந்தன.

Haritage காட்டேஜ் புக் செய்திருந்தான். மூன்று புதல்வர்களையும் குளிக்க வைத்து உணவு ஊட்டி சத்ய தேவ் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க, ரிதமின் முன் பச்சை வண்ண கூரை பட்டு புடவையை நீட்டினான். 

எதுவும் பேசாமல் கட்டிக்கொண்டாள். ஆதி தன் அம்மாவை பார்த்து கொண்டே வந்தான். நெஞ்சில் சாய்ந்து கொண்டான். கோவிலுக்கு செல்லும் தூரத்தில் மூன்று மகன்களும் தூங்கி இருக்க ரிதமின் கையை பற்றினான். 

ரிதம் உதட்டை கடித்து கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டாள். மகன்களை தூக்கி கொண்டு கோவில் முன்னாள் வந்திருந்தார்கள். ரிதம் அவனையே பார்க்க, wish you Happy birthday and many more happy returns of the day என நெற்றியில் முத்தமிட்டு மஞ்சள் கயிற்றை எடுத்தான். 

அவள் நெகிழ்ந்துபோய் பார்த்தாள் 

“ஐ லவ் யூ, ரிதம்,” என்றான் சத்யதேவ்.

“ஐ லவ் யூ டூ, சத்யதேவ்,” என்று ரிதம் மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

முதல் முடிச்சு கட்டும் போது அவள் நடுங்கினாள்.  

இரண்டாவது முடிச்சு கட்டும் போது அவள் கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது.  

மூன்றாவது முடிச்சு கட்டி முடித்ததும் அவன் அவளை இறுக அணைத்தான்.  

எப்படி இப்படி? என ரிதம் மெல்லிய குரலில் கேட்க.. 

உன்னை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் முதலில் இருந்து லவ் பண்ணுவேன். பத்தியகாரதனமாக நீ வேணும் அவ்ளோ தான் இதுக்கு பதில்.. 

அவள் நிமிர்ந்து பார்க்க தயங்கினாள். இந்த அளவுக்கு அவள் கூட காதலை வெளிப்படுத்தியது இல்லை. 

அந்தப் பழைமையான கோயில் மண்டபத்தில், சத்யதேவ், ரிதமின் கழுத்தில் மீண்டும் அந்தத் தாம்பூலத்தைக் கட்டினான். அந்தக் கயிறு அவளது கழுத்தில் மென்மையாக விழுந்தது. அது வெறும் கயிறு அல்ல; இத்தனை ஆண்டுகள் அவளின் தீராத மாறாத காதலுக்கு  கிடைத்த காதல் வரம். 

அவளது நெற்றி வகுட்டில் அவன் குங்குமம் இட்டான். ரிதமின் கண்கள் நீர் கோர்த்தன. அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

“ஐ லவ் யூ சத்யதேவ். என் வாழ்நாள் முழுசும் நீ தான் நீ மட்டும் தான்,” என்றாள்.

அரை மணி நேரத்தில் புறப்பட்டிருந்தார்கள். 

குழந்தைகளை தூங்கிய நிலையிலேயே மீன்டும் ஏர்போர்ட் வந்து சேர வானில் பறந்தார்கள். 

நடுவானில் மிதக்கும் போது சட்டை பட்டனை கழட்டி அவளிடம் காட்டினான். 

என்னடா இதெல்லாம்? எனக்கு மூச்சு அடைக்கிற போல இருக்கு டா என ரிதம் கண்களில் நீர் கோர்க்க சொல்ல.. 

பிடிச்சிருக்கா? என காந்த குரலில் கேட்டான் சக்தி. 

ரிதமின் பெயரை பச்சை குத்தியிருந்தான் நெஞ்சில்.. ரிதம் வாயை திறந்து கூறிய வார்த்தைகள் I want you.. 

வீட்டுக்கு போனதும் என உஷ்ண மூச்சுடன் சொல்லி முடித்தான் சத்ய தேவ். இதோ இரு ஜீவன்கள் அதை கேட்டதும் சினுங்க ஆரம்பித்தது. 

நேராக வீடு வந்து சேர்ந்தார்கள் அன்று மாலையே!! இன்ப ராகவன் மகளை பார்க்க காத்து கொண்டிருந்தார். ரிதமின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. துகிலுக்கும் ரவுத்திரனுக்கும் ஊட்டி விட்டு திரும்பினாள் ரிதம். 

அங்கே நிலா நின்றிருக்க, உன்னோட வயிறை எப்போ பார்த்தாலும் பெருசா இருக்க போல தோணுது. நீ பெல்ட் போட்டு குறை டி என்றாள் ரிதம். 

விவேகாவின் பார்வை கோபத்துடன் ருத்ரன் மேல் படிந்து மீண்டது. 

சத்ய தேவ் சிரித்து கொண்டே, அது மசக்கை வயிறு. உன் தம்பி வாரிசு இருக்கு ரிதம் என்றான். 

என்னடா தீரா இப்படி அல்பமா இருக்க? என்னடா நீ? ஒரு decorum decipline இதெல்லாம் எங்கே டா போச்சு என ரிதம் கேட்டு கொண்டிருக்க.. 

ஆதி உன்னோட அம்மா தனியா இருக்காடா என போட்டு விட்டான் ருத்ரன். 

இதோ பசை போல வந்து ஒட்டி கொண்டான் ஆதி. இக்கத்திலேயே இருந்தான் 24 மணி நேரமும். 

சத்ய தேவிடம் இருந்தான் சாகி. இரவு அவனை சூர்யா வந்து தூக்கி சென்று விட்டார். துகில் இன்பாவுடன் தூங்கி விட்டான். ஆதி ரிதமிடம்.. 

இங்கே படுக்கையில் சத்யதேவ் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். வெளியே சந்திரனின் வெளிச்சம் இருந்தது, ஆனால், அவர்களுக்குள் காதல் அனல் எரிந்தது. இத்தனை வருடக் காதல் காத்திருப்பு இப்போது அவர்களுக்குள் ஒரு அழகான, நித்தியமான காதல் உறவாக மலர்ந்திருந்தது.

அந்த இரவு…  

திரி விளக்குகள் மட்டுமே ஒளி.  

ரோஜா இதழ்கள் படுக்கையில் பரவியிருந்தன.  

மல்லிகை மணம் நாசியை தொட்டது. அவர்கள் இருவருக்கும் நடுவில் ஆதி வேறு இருந்தான். சத்ய தேவுக்கு கோபம் தான். ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை

அவள் கழுத்தில் புதிய தாலி மின்னியது. 

அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.  

கண்களில். பிறகு உதடுகளில்.  

நீண்ட, ஆழமான, உயிரை உருக்கிய முத்தம். 

அவன் கைகள் நடுங்க, அவள் புடவையை மெதுவாக அவிழ்த்தான்.  

டேய் என்ன சக்தி இதெல்லாம் முதல் தடவை நடக்குற போல behave பண்ற? என ரிதம் அவனை பார்த்து கேட்டாள். 

என்னோட நினைவுகள் அழிஞ்சு இது தானே முதல் தடவை.. என்றானே பார்க்கலாம். 

நல்லவேளை உனக்கு எல்லாமே மறந்து போனது நல்லது தான். இந்த லவ் எல்லாத்தையும் மிஸ் பண்ணியிருப்பன் டா என இறுக்கி அணைத்து கொண்டாள். 

அவனது ஒவ்வொரு அசைவும் அனுமதி கேட்டது.  

அவள் கண்கள் “ஆமாம்” என்றன.

அவன் அவள் கழுத்தில் தாலியை முத்தமிட்டான்.  

“இனிமே எப்பவும் முத்திரை…” என்று முனகினான்.  

அவள் அவனை இழுத்து அணைத்தாள்.  

அவள் நகங்கள் அவன் முதுகில் காதலை எழுதின.  

அவன் அவளை முழுமையாக ஆட்கொண்டான்.  மெதுவாக…  

ஆழமாக… புனிதமாக…  பின்னர் காட்டுத்தனமாக…  கூடவே பைத்தியக்கார தனமாக.. 

அவர்கள் உடல்கள் ஒருவருக்குள் ஒருவர் இழந்து, கண்டு, பிறந்து கொண்டிருந்தன.  

அவள் பெயரை அவன் உயிரோடு அழைத்தான்.  

அவன் பெயரை அவள் உச்சியில் முனகினாள்.  

நெஞ்சு குழியில் முத்தமிட்டான். இந்த இரவு வெளிச்சம், ஜன்னலில் வீசும் தென்றல் காற்று ஒவ்வொரு அலைவரிசையிலும் அது அவர்களை இணைத்தது.

அந்த இரவு முழுவதும் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.  

மீண்டும்… மீண்டும்…  

உச்சம் தொட்டு, உருகி, பிறந்து…  

விடியும் போது ரிதம் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.  

என்னடி? என நெற்றியில் முத்தமிட்டான். 

என்னைக்கும் நீயும் உன்னோட காதலும் எனக்கு on cloud nine தான் கூடவே acid போல என்னை அரிக்கும். விரும்பியே எரிய நினைக்கிறேன். 

ரிதம் என சத்யதேவ் அவள் கண்ணீரை முத்தமிட்டான்.  

“இனிமே நாம தினமும் முதல் இரவுதான்… என் உயிர்க் காதலி…”  

ஆயிரம் வருஷங்களாக காதல் நடந்து கொண்டே இருக்கிறது.  

இன்று அந்தக் காதல் சத்யதேவ்-ரிதம் என்ற பெயரில்  

மீண்டும் பிறந்து…  

முழுமையாக உயிர் பெற்றது.

“தீராக்காதல் நிலா என்றென்றும் தீராவின் காதல் தேன் நிலா!”

“என்னைக்கும் இந்த இதயம் சத்ய தேவ்ன்னு ரிதமிக்ல துடிக்கும்!” 

சுபமான ஆரம்பம் இனிதே தொடரும். 

— பத்தாவைக்கும் பார்வைகாராவில் சந்திப்போம் மக்களே

You may also like

Leave a Comment