தலையணை மந்திரம்

by Pradhanya kuzhali
552 views

Promo

“என்னடி ஜானு இது? லூசுத்தனம் பண்ணாத.. என்னை எதுக்கு டி இங்கே கூட்டிட்டு வந்த?” என்று மாறன் வேகமாக கைகளை உதறினான்.

 மருத்துவமனையின் முகப்பு வாசலிலேயே அவனது கால்கள் இரண்டு எட்டுகளைப் பின்னோக்கி வைத்தன. அவனுக்குள் இருந்த பதற்றம் வயிற்றைக் கலக்கியது. இது சாதாரண மருத்துவமனை அல்ல; அவனது மானம் கப்பலேறும் இடம். ஆனால், ஜான்சிக்கு அது புரிவதாக இல்லை.

“சும்மா வறியா இல்லையா? ஆறு மாசமாச்சு.. வெறும் மிச்சர் தான் சாப்பிட்டுட்டு இருந்திருக்க? இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்கிறது? டாக்டர் ராஜ் மோகன் ரொம்ப ஃபேமஸ். கையை பிடிச்சாலே நாடி நரம்பெல்லாம் சொல்லுவாராம்..” ஜான்சி அவனது மணிக்கட்டைத் திருகி இழுத்தாள்.

மாறன் முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டான். “ஐயோ.. எவனாவது பார்த்துட்டா என் டாக்டர் சீட் கிழிஞ்சுடுமே! என் கிளினிக்கிற்கே என்னையே பேஷன்ட்டா கூட்டிட்டு வர்ற கொடுமை இந்த உலகத்துல எவனுக்குமே நடந்திருக்காது,” என்று தனக்குள் புலம்பினான்.

“ஜானு.. ப்ளீஸ்.. நான் ஓடிப் போயிடுறேன்டி.. ஆள விடு..” என்று அவன் கெஞ்சியபடியே திரும்ப எத்தனிக்க,

“நிக்கறியா? இல்ல எல்லார் முன்னாடியும் உன்னை?” என்று அதட்டினாள் ஜான்சி. ஒரு ரவுடி போல அவனது சட்டைக் காலரைப் பற்றி இழுத்து நிறுத்தினாள். “ஐ வில் கில் யூ ராஸ்கல்..”

சரியாக அந்தத் தருணம். விதியின் விளையாட்டு போல, உள்ளே இருந்து வெளியே வந்தார் டாக்டர் ராஜ் மோகன். கையில் ஃபைலுடன் வேகமாக வந்தவர், வாசலில் முகத்தை மூடிக்கொண்டு நிற்கும் உருவத்தைப் பார்த்ததும் ஒரு கணம் திடுக்கிட்டார். அடுத்த நொடியே அந்த உடல்மொழி அவருக்குப் புரிந்துவிட்டது.

பதறியடித்துக்கொண்டு ஓடி வந்த ராஜ் மோகன், “சார்!” என்று மூச்சிரைக்க, “சார்! என்ன சார் இது? திடீர் விசிட்? இன்னைக்கு லீவுன்னு சொன்னீங்க? ஆனா நல்லவேளை வந்தீங்க சார்.. உள்ள ஐம்பது பேர் டோக்கன் போட்டு காத்துட்டு இருக்காங்க. நீங்க ரவுண்ட்ஸ் வந்தாதான் சார் வேலையே நடக்கும்!”

ராஜ் மோகன் படபடவென பொரிந்து தள்ள, அந்த இடமே மயான அமைதியானது.

மாறன் கண்களை இறுக மூடிக்கொண்டான். ‘மாட்னோம்டா கழவாணி’ என்பது போல அவனது முகம் சுருங்கியது. மெதுவாக கர்ச்சீப்பை விலக்கி, ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.

ஜான்சியின் பிடி மெல்ல தளர்ந்தது. அவளது கண்கள் ராஜ் மோகனைப் பார்த்து, பிறகு தன் கணவனைப் பார்த்து, மீண்டும் ராஜ் மோகனைப் பார்த்தன. ஒரு புரியாத புதிரை அவிழ்ப்பது போல அவள் விழித்தாள்.

“எக்ஸ் கியூஸ் மீ டாக்டர்..” ஜான்சியின் குரலில் சந்தேகம் கீறிட்டது. “யாரைப் பார்த்து ரவுண்ட்ஸ் வர்றீங்களான்னு கேக்குறீங்க? இவரு பேஷன்ட் பாஸ்.. இவருக்கு…”

ராஜ் மோகன் அதிர்ச்சியில் சிரித்தான்.

 “மேடம்.. என்ன விளையாடுறீங்களா? இவரு பேஷன்ட்டா? இவர்தான் ‘டாக்டர் கந்தர்வ மாறன்’. இந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர்! இவர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கத்தான் ஊரே காத்துக்கிட்டு இருக்கு!”

ஜான்சிக்கு தலையில் யாரோ சுத்தியால் அடித்தது போல் இருந்தது. நம்ப முடியாமல் தன் கணவனைத் திரும்பினாள். 

மாறன், “ஹிஹி.. ஆமா ஜானு.. அது வந்து..” எனத் தயங்கியபடி நின்றான்.

மெதுவாகத் தலை நிமிர்ந்து மருத்துவமனையின் முகப்புப் பலகையை அண்ணாந்து பார்த்தாள்.

“டாக்டர். கந்தர்வ மாறன் – எம்.டி. (பாலியல் மற்றும் உளவியல் நிபுணர்)”

“ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்குற கந்தர்வனா நீ? வீட்ல மட்டும் ஏன்டா டம்மி பீஸா நடிச்ச?” என்ற கேள்வி அவள் தொண்டைக்குழி வரை வந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

அதிர்ச்சியின் உச்சத்தில், ஜான்சியின் கால்கள் பின்னிக்கொள்ள, ” யூ ச்சீட் மி…” என்று முனகியபடியே, நெடுமரமெனச் சரிந்து மாறனின் மார்பிலேயே பொத்தென மயங்கி விழுந்தாள்.

ஜானு ஜானு என அவளை கையில் ஏந்தி கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான் கந்தர்வ மாறன் என்னும் பெயர் கொண்ட கார்த்திக் மாறன். 

தலையணை மந்திரம் 

விரைவில்.. 

You may also like

1 comment

Gayathri Sgh January 16, 2026 - 6:00 pm

Ethukuta unmaiya marachiruka 🤔…
Karthik maaran name ketathum நீந்துகின்ற வெண்ணிலா vara Karthik maaran than napagam varuthu sister 😍😍😍

Reply

Leave a Comment