Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
டேய் வீரா கீழே வா! என கத்தியபடி காக்கி உடையில் சீறும் சிங்கமாக அங்கும் இங்கும் உறுமி கொண்டே நடந்தான் சத்ய தேவ்.

இனி அடை மழை வெளுத்து வாங்க போகுது. இதுக்கு மேலே நமக்கு இங்கே வேலை இல்ல. என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் கௌதம்.

அதற்கும் மூக்கு வியர்த்தது போல ஒரு அதிகார அழைப்பு கௌதம்! என்ன பண்ற? சத்ய தேவ் வந்திருக்கான். அவனை கவனிக்காம எங்கே போற என ட்ராக் மட்டும் அணிந்த படி கண்கள் சிவக்க அம்முவின் நினைவுகளை தள்ளி வைத்து விட்டு சத்ய தேவ்! F* you.. மார்னிங்லயே என்னை பார்க்க வீட்டுக்கு வந்திருக்க? கம் கம் ஒரு ஓட்கா போடுவோம் என நண்பனை பார்த்து கொஞ்சம் சிரித்துக் கொண்டே கட்டியணைக்க வந்தான் அதிவீரன்.

சத்ய தேவ் அவனது கழுத்தை பிடித்து இறுக்கி தள்ளி விட்டவன். "என்ன காரியம் பண்ணிட்டு இருக்க நீ?" என கண்கள் சிவக்க பார்க்க, கூர்மையாக வீரா சக்தியை நோக்கி வந்ததும் வராததுமா இப்போ எதுக்கு புரியாம பேசிட்டு இருக்க? என்ன சொல்ல வர? எனக்கு ஒன்னும் புரியல என்றான் நண்பனின் கையை விலக்கி விட்டுக் கொண்டே...

"இது தான் ஆபிஸ் போற நேரமா?"

"ஒர்க் பிரேசர் அதான் தூங்கிட்டேன்" என கண்களை தேய்த்தான் வீரா.

இடுப்பில் கை வைத்த சத்ய தேவ், நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல. அசிங்கமா இல்லையா டா உனக்கு?

வீராவின் பார்வை கொஞ்சம் கோபத்துடன் பின்னால் நின்றிருக்கும் கெளதமன் மீது விழ, ஹே அங்கே என்ன லுக்கு? இங்கே என்னை பாரு? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?

ஒரு பெரு மூச்சை விட்ட வீரா நேராக கப்போட் பக்கம் சென்றவன். ஒரு ஓட்கா பாட்டிலை எடுத்துக் கொண்டு கிச்சன் சென்று விலை உயர்ந்த கண்ணாடி அவுன்சில் ஊற்றி கொண்டே டென்ஷன் ஆகாத தேவ்! இந்த 6 மந்த்ஸ் நான் ரொம்ப பீஸ்புள்லா ஃபீல் பண்றேன். பிஸ்னஸ்ஸ அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக போறேன். நான் ஒன்னும் எவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து படுக்கலயே! ஜஸ்ட் போன் கால் தானே இதுல என்ன இருக்கு? என குடித்த படி சத்ய தேவ்வின் எதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தான்.

யூ ராஸ்கல்! நீ சரி இல்ல வீரா! என்ன கண்றாவி இது? எப்டி உனக்கு விளக்கம் கொடுக்க தோணுது. ஒரு பொண்ணை பிசிக்களா அப்ரோச் பண்றத விட ஆயிரம் மடங்கு கேவலம் என்ன தெரியுமா? இந்த மாதிரி போன் கால்ஸ் பேசுறது. திஸ் ஈஸ் நாட் ஃபேர்!

நீ நினைக்கிற மாதிரி இல்ல ஜஸ்ட் போன் கால்ஸ் தான்! அதுக்கு நீ இந்த அளவுக்கு ரியாக்ட் ஆக வேண்டிய அவசியம் இல்ல என வீரா மீண்டும் கூற, சத்ய தேவ் முறைத்து பார்த்தான்.

வேணுமா என ஓட்காவை நீட்டினான் அதிவீரா!

உன்னோட மாற்றங்கள் நல்லா விசிபிலா இருக்கு என சத்ய தேவ் முறைத்துக் கொண்டே தந்திர புன்னகையை வீசினான்.

அதிவீரா எதுவும் பேசாமல் குடிப்பதில் கவனம் செலுத்தினான். "அதுக்கு நீ பேசாமல் கல்யாணம் பண்ணிக்க!"

"நெவர்"

"நீ பண்றது பைத்தியக்கார தனம் வீரா! உனக்கு புரியுதா இல்லையா? இனி இதை பண்ணாத"

பண்ணுவேன் என வீரா திட்டவட்டமாக கூறினான்.

நான் உன்னோட தாத்தா கிட்ட உன் கல்யாணத்தை பத்தி பேச போறேன்! என சத்ய தேவ் நகர, ஹே B* உன்னோட வேலைய பாரு! என்னோட விசயத்தில் தலையிடாத! என வேகமாக அங்கிருந்த கண்ணாடி ஜாடியை தள்ளி விட்டான் வீரா.

சத்ய தேவ் கைகளை மடக்கி கோபத்தை கட்டு படுத்தியவன் விழி அகலாமல் அதிவீரனை கொல்லும் வெறியில் பார்த்தான்.

உன்னோட வீரத்தை எல்லாம் என் கிட்ட வச்சுக்காத! எந்த விதத்திலும் உனக்கு நான் சலைச்சவன் தான்!

ம்ம் அப்படியே இருக்கட்டும் இது தான் நம்ம கடைசி மீட்! இனி நீயா ஸ்லம் டாக் மாதிரி என்னை தேடி வருவ!

அதி வீரா சிரித்த படி, "நீ bitch இல்லல்ல"

You son of.. என நிறுத்திய சத்ய தேவ் டக் டக் என நடந்த படி இன்னொரு தடவை யோசிச்சிக்க. இல்லன்னா இந்த சத்ய தேவ் யாருன்னு நீ பார்ப்ப. choose me இனி இருக்காது. என்னோட அடுத்த கட்ட வேலையே அதை இல்லாம ஆக்கறது தான் என சொல்லிய படி அவ்விடத்தை விட்டு சென்றான்.

அதிவீரா எதுவும் பாதிக்காததை போல எழுந்தவன். கௌதமை கொல்லும் வெறியுடன் நெருங்கினான்.

பாஸ்! தா! தாத்தா வந்ததும் என்னை தான் தேடுவாங்க! எனக்கு எந்த பிரச்னையும் இல்ல தாராளமா என்னை கொன்னுடுங்க என்று பயத்துடன் நின்றான்.

இனி நீ ஆபிஸ்க்கு டாமி சங்கலிய கழுத்தில் மாட்டிக்கிட்டு தான் வர! என சத்ய தேவ் அவனுக்கு கொடுத்த நாய் குட்டியின் கழுத்தில் இருந்து அவிழ்த்து அதை கெளதமின் தலையில் போட்டு விட்டவன். முன்னால் நடக்க நாய் பின்னால் ஃபாலோ செய்தது.

உன்னோட ஃபாதர் என்னை தேவையில்லாம தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டான் என பேசி கொண்டே ஆபிஸ் கிளம்பினான்.

இங்கே ரமா மற்றும் அம்மு இருவரும் ஹாஸ்பிடலில் இருந்தார்கள். வழக்கமான செக் அப் மற்றும் மாத்திரைகளை அனைத்தையும் முடித்து விட்டு சீனியர் டாக்டரை பார்க்க அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

டாக்டர் சீனிவாசன் இதய நிபுணர் என இருக்க, பார்க்க அனுமதி கொடுக்க பட்டது.

சார் என அம்மு உள்ளே நுழைந்தாள்.

வாங்க வாங்க ரமா எப்டி இருக்காங்க! என அவளின் ரிப்போர்ட்டை புரட்டி பார்த்தார்.

கண்ணாடி வழியாக வெளியே அமர்ந்திருக்கும் தன் அக்காவை பார்த்த அம்மு. இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்ல டாக்டர் என கூறினார்.

சீனிவாசன் அவளிடம் உங்களை கூபீட்டதுக்கான ஒரே ரீசன் இதயம் மாற்று அறுவை சிகிச்சை பன்றதுக்கான விவரங்களை சொல்ல தான் மா!

சொல்லுங்க சார்! பணத்தை நான் ஏற்பாடு பண்ணிட்டு தான் இருக்கேன். கொஞ்சம் டைம் கொடுங்க. இப்போதைக்கு முன் பணம் ஒரு 15 லட்சம் கட்டிடுறேன் என கூறினாள் அம்மு.

சீனிவாசன் சின்ன புன்னகையுடன் உன்னோட தவிப்பு புரியுது மா உன்னோட அக்காவுக்கு எதுவும் ஆகாது. எனக்கு பெங்களூரில் ஒரு பிரபலமான ஹாஸ்டல்ல அர்ஜுன்னு ஒரு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் இருக்காரு.

ஏன் சார் இங்கே? நீங்க இருக்கீங்க தானே!

இல்ல மா! அங்கே நான் டிரஸ்ட்ல நிறைய பேருக்கு உதவிட்டு இருக்கோம். அங்கே உங்க அக்காவ அட்மிட் பண்ணா நீங்க ஹார்ட்க்கு உண்டான புரோசிஜர் மட்டும் பண்ணா போதும். உங்களோட ஹாஸ்பிடல் செலவு எல்லாத்தையும் எங்களோட டிரஸ்ட் அதாவது கஷ்ட படுற மக்களுக்கு உதவி செய்யுற மருத்துவர் எல்லாம் சேர்ந்து ஸ்டார்ட் பண்ண உதவும் கரங்கள் மத்த செலவு எல்லாத்தையும் பார்த்துக்கும் என்றார்.

இதை கேட்டதும் கடவுளே நேரில் வந்து பேசியது போல இருந்தது அம்முவுக்கு. கண்களில் நீர் வழிய ரொம்ப ரொம்ப நன்றி சார்! என அழுது கொண்டே கையை கூப்பினாள்.

நானும் எல்லாருக்கும் உதவி பண்ணிட்டு தான் மா இருக்கேன். இந்த மாற்று இதயம் நம்ம கையில் இல்ல donor relations டிமாண்ட் பண்றது தான். அவங்க ஃபாரினர்ரா கூட இருக்கலாம். நாங்க உன் அக்காவுக்காக பேசி ஃபைனல் பண்ணிருக்க அமௌன்ட் தான் சொல்லியிருக்கோம் பார்க்கலாம் மா! என்றார்.

ரொம்ப நன்றி சார்! என்னைக்கும் இந்த உதவிய நான் மறக்கவே மாட்டேன். என கண்ணீர் மல்க அழுதவள். இப்போ அடுத்ததாக என்ன பண்ணனும் சார் என கேட்டாள்.

சீனிவாசன் அவளிடம் ஆல்ரெடி அந்த ஹாஸ்பிடலில் டாக்டர் அர்ஜுன் கிட்ட எல்லாமே பேசிட்டேன். நீங்க பணத்தை ரெடி பண்ணிட்டு 10 நாளைக்கு முன்னாடியே அங்கே போகனும். என்றார்.

ஓகே சார் இந்த ஒரு வாரத்துக்குள் நான் வரேன் சார் என அம்மு எழுந்திருக்க, இது அர்ஜுன் டாக்டர் விவரங்கள். இங்கே இருந்து போறதுக்கு முன்னாடி வந்து என்னை பார்த்திட்டு போங்க, உங்களுக்கு கொட்டேசன் எல்லாம் ரெடி panni என்னோட டேபிலில் வைக்கிறேன். எனக்கு சிங்கப்பூர் போகனும் மா என்றார்.

ஓகே டாக்டர் என நிம்மதியுடன் தன் அக்காவை அழைத்துக் கொண்டு சென்றாள். என்ன அம்மு ரொம்ப சந்தோசமா இருக்க?

அக்கா! கடவுள் நம்மள கை விடல என சந்தோசமாக டாக்டர் சொன்ன அனைத்து விசயங்களையும் கூறியவள். இன்னிக்கி கோவிலுக்கு போகலாம் கா! எப்படியும் என்னோட ரமா என்னை விட்டு எங்கேயும் போக மாட்டாள். நீ தான் நெகடிவ்வா இருக்க! பாரு என்னோட நம்பிக்கை வீண் போகல என அழைத்து சென்றாள்.

எது நடக்கிறதோ என் தங்கை சிரிக்கிறாள். நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்த சிரிப்பை ஆசை தீர பார்க்க வேண்டும் என ரமா அன்முவுடன் சேர்ந்து கொண்டாள்.

அம்மு இந்த தாவணி போட்டு காட்டு உனக்கு அழகா இருக்கும் என மாத்திரையை போட்டுக் கொண்டே கூறினாள் ரமா.

ஹான் இது கூட நல்ல யோசனையாக இருக்கே! நான் இதை போட்டுகிட்டு கோவிலுக்கு போயிட்டு வரேன்! என கிளம்பினாள்.

இன்னிக்கு ஒரு நாள் லீவ் போட்டு என் கூட தூங்கு டி! தினமும் தனியா தூங்க பயமா இருக்கு. என ரமா கூற, அம்மு தன் அக்காவை பாயுந்து வந்து அணைத்து கொண்டவள்.

ரமா உன் கிட்ட ஒரு விடயம். நான் பெங்களூர் போகும் வரைக்கு தான் நைட் வேலை பார்ப்பேன். அதுக்கு அப்புறம் நம்ம நிரந்தரமா அங்கேயே செட்டிள் ஆகிடலாம் என்றாள்.

இதை கேட்டதும் ரமாவுக்கு நிம்மதி ஆகி போக, தன் தங்கையின் கன்னத்தில் முத்தமிட்ட படி விடை கொடுத்தாள்.

மணி எட்டை தொட்டது.

பிகினில உன்னை பார்க்க ஆசை டி அம்முஉஉ என துக்களுடன் அமர்ந்திருந்தான் அதிவீரா!

இதோ திரையில் அம்மு!

ஆனால் பிகினி..?

வருவான்..
 

Author: Pradhanya
Article Title: Episode-3
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Revathipriya

Member
Joined
Oct 14, 2024
Messages
30
Shakthi ya yellarum romba tension pannitey irukaanga pa🤭. Acho Ammu ku inimel thaan roomba problems varum pola😔. Story romba interesting ah poguthunga Sis👌👌👌🔥🔥🔥👍😍
 

Magi

Member
Joined
Oct 6, 2024
Messages
41
🔥 superb convo between veera and Shakthi and Gowtham vera level😂 story intresting ah irukku 💓 what next what next ithuthan mind kulla vanthuttey irukku😌
 
Top