Episode -38
புரண்டு படுத்தவள். இல்ல அபச்சாரம்! பண்ண கூடாது என தனக்கு தானே சொல்லி கொண்டாள் நிலா. இல்ல வேணும் என பட்டி மன்றம் நடத்தி இறுதியில் போனை எடுத்து சமையலறை லேண்ட்லைன் அழைத்தாள்.
ஹலோ என பணிப்பெண் குரல் கொடுக்க…
அக்கா நேத்து அம்மா செஞ்சாங்களே சூப் அது இருக்கா? என எட்சிள் ஊறியது நிலாவுக்கு.
என்ன சூப் பாப்பா? வெஜ் சூப் தான நான் செஞ்சு எடுத்திட்டு வரேன் என பணிப்பெண் கூற..
அக்கா வெஜ் இல்ல! நாண்வெஜ் சூப் என கண்களை மூடி கூறி முடித்தாள் நிலா.
நிலாவா பேசுறது? என பணிப்பெண் மீண்டும் கேட்க..
நேக்கு வேணும்! பிளீஸ் ஆற்று கால் பாயா அப்புறம் சந்தவம் வேணும். என்றாள் நிலா.
ஆட்டு கால் பாயாவா? அது அம்மா செஞ்சா தான் நல்லாருக்கும் என சொல்லி கொண்டிருக்கும் போதே தேஜூவின் குரல் கேட்டது.
என்ன சொல்லுங்க யாருக்கு என்ன வேணும் மா? என தேஜு கேட்க..
அக்கா அம்மா கிட்ட சொல்ல வேணாம் என சொல்லி முடிப்பதற்குள் பணிப்பெண் கூறி விட்டார்.
நிஜமாவா சொல்றீங்க? என தேஜூ அதிர்ச்சியுடன் கேட்க..
உதட்டை கடித்து கொண்டவள். அக்கா அம்மா கிட்ட போன் கொடுங்க என்றாள் நிலா.
நிலா!
மா அபச்சாரம் தான் நேக்கு தெரியும். ஆனால் தீரா தான் சாப்பிட்டு பழக சொன்னர்.
தப்பில்லைடி தங்கம் இப்போவே செஞ்சு கொண்டு வரேன் என்ற தேஜூ உற்சாகமாக தன் பெண்ணுக்கு சமைக்க ஆரம்பித்தார்.
நெருப்பில் வாட்டபட்ட கால்களை நசுக்கி போட்டு கமகமக்கும் ஆட்டு கால் பாயா அதனுடன் சந்தவம் செய்தவர். Sp உன் பொண்ணுக்கு ஆட்டு கால் பாயா வேணுமாம் என இன்டர் காமில் கூறினார்.
அடுத்த அஞ்சு நிமிடத்தில் என்ன? நிஜமாவா? பொன்மாயி சொன்னாலா? இல்ல நீ சாப்பிட செஞ்சியா? என sp கேட்க..
ஹே அவள் தான் போன் பண்ணி கேட்டா!
Sp ஆச்சரியத்துடன் நான் எத்தனை தடவை மட்டன் சாப்பிட சொல்லி கெஞ்சி இருப்பேன். இப்போ எப்டி திடீர்னு? என்னால நம்ப முடியலயே என கேட்டார்.
நம்ம சொன்னால் கேட்க மாட்டாள். அதெல்லாம் சொல்றவங்க சொல்லணும். அதை விட உன் பொண்ணு சொல்றத நீ கேட்டா அசந்து போயிருப்ப! மா தீரா என்னை சாப்பிட்டு பழகிக்க சொன்னர். என நிலாவை போல பேசி காட்டினார் தேஜு.
Spr மனதில் ருத்ரன் வானளவு வளர்ந்து நின்றான். சுட சுட ஆட்டு கால் பாயா அதனுடன் சந்தவம் சூப் ஒன்று அதனுடன் அரைத்து விட்ட குழம்பு ஒரு கிண்ணம். அங்கும் இங்கும் நடந்தாள் வயிறு வேறு பசித்தது. நாக்கு நமநமவென இருந்தது.
கதவு தட்டப்படும் ஓசை கேட்க.. மா என எட்சி ஊற கதவை திறந்தாள் அங்கே தாய் தந்தை இருவரும் நின்று கொண்டிருக்க..
நிலா முகத்தை சுளித்தபடி எதுக்கு டாடி கிட்ட சொன்ன நீ? என முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்றாள்.
பொம்மாயி என்னாச்சு? நான் என்ன பண்ணேன்?
இல்ல டாடி! அது! நான் அம்மா கிட்ட கேட்டேன். இதுக்கு போயி நீங்க இங்கே வந்திருக்கீங்க? அதான் என தந்தையின் மடியில் அமர்ந்தாள் நிலா.
டாடி உனக்கு ஊட்டி விட வந்தேன். என spr ஊட்டிவிட ரசித்து சாப்பிட்டாள் நிலா.
“மா காலையில் வேணும்!”
ஹே நாளைக்கு சீமந்தம் இருக்கு! என தேஜூ கூற..
ஹே என் பொம்மாயி கேட்கிறா! என் தங்கம் சொல்றது தான் மெனு! நீ சடங்குக்கு கட்டு சாதம் செய்ய சொல்லிடு. அண்ட் மெயின் மெனுவ அசைவம் வை! என் தங்கம் பிறந்து 25 வருசம் உங்கப்பனாள அசைவம் சாப்பிடல. இன்னிக்கு தான் ஆசையா சாப்பிடுறா! போடி! இனி நாங்க அசைவம்! தங்கம் நாளைக்கு காலையில் இன்னும் நல்லாருக்கும் மார்னிங் சாப்பிடு! பாரு கண்ணெல்லாம் உள்ளே போயிடுச்சு! உடம்புல ரத்தமே இல்ல வெளுப்பா இருக்க! உங்க அம்மா கடக்குறா! நாளைக்கு உங்க மகி சித்தி வர போறாங்க! என spr சொல்லி கொண்டிருக்க..
மிஸ்டர் spr உங்க பொண்ணு சாப்பிட்டுக்குவா! கொஞ்சம் எழுந்து வரியா?
டாடி நீங்க சித்தி பத்தி பேசிட்டீங்க! மம்மி கோபத்தில் இருக்காங்க என நிலா கண்ணகுளி தெரிய சிரிக்க..
ஹே நான் சும்மா சொன்னேன் தேஜு மகி வராள்ன்னு சொன்னேன் டி. இதுல தப்பா எதுவுமே இல்லையே! என spr தன் மனைவியின் பின்னால் சென்றார்.
நிலா நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக சாப்பிட்டவள். தூக்கம் கண்களை சுழட்ட நான்கு முறை இயற்கை அழைப்பு முடித்து உறங்கினாள்.
**
ஹே இன்னும் என்ன பண்றான் உன் தவ புதல்வன்? இன்னும் வரவே இல்லை? நேராமாகுது விவேகா! ஹைத் ராபாத் போகனும் டி! அவனை வர சொல்லு! பிளைட்டுக்கு நேரமாகுது என்றார் இன்பா.
இதோ போறேன் எதுக்கு கத்துறீங்க? குழந்தை தூங்கட்டும் பாவம் அஞ்சு மணிக்கு என் பையனால எழுந்துக்க முடியாது.
ஹே அவன் பையன் டி! என இன்பா சொல்ல..
இதுக்கு மட்டும் வாய் வங்காள விரிகுடா வரை நீளும். உன் பொண்ணு எப்டி குடும்ப நடத்தரான்னு இப்போ வாயை திறந்து சொல்லு! என விவேகா கேட்க..
என் பொண்ணுக்கு என்ன என்னோட மருமகன் அவளை தாங்கிட்டு இருக்கான்.
நல்லா வருவீங்க டா! உங்க வீட்டு பொண்ணை கட்டினவன் இளிச்ச வாயன். கீழே குனிந்து தொடப்பன் எடுத்து பெருக்கி இருக்க மாட்டாள். எல்லா வேலையும் சக்தியே செய்யறான்.
ஹே துணி துவைக்க வாசிங் மிஷின், வீட்டை சுத்தம் பண்ண வேக்கம் க்லீனர், அயன் பண்ண அயன் பாக்ஸ், ac, oven எல்லாமே என் பொண்ணுக்கு வாங்கி கொடுத்திருக்கேன். வேலை செஞ்சா ஒன்னும் குறைஞ்சிட மாட்டான் சக்தி. எனக்கு ரிதம் லிட்டில் பிரின்ஸஸ் வர போறாங்க! என் ரிதம் பொண்ணுக்கு சோர்வா இருக்கும் அதான் சக்தி பண்ணி தரான். உனக்கு என்ன டி போய் பண்ணி மாதிரி தூங்கிட்டு இருக்கும் அவனை எழுப்பு கிளம்பலாம் என இன்பா சொல்ல..
கண்களை தேய்த்தபடி வெளியே வந்தான் ருத்ரன்.
வந்துட்டான் உன் பையன் என விவேகா கூறி விட்டு பரிசு கொடுக்கும் பொருட்களை சரி பார்த்தார்.
நான் சக்தி மாமா கூட வரேன் நீங்க போங்க என ருத்ரன் கூற..
இல்ல நீ எங்க கூட தான் வரணும் என வம்படியாக அழைத்து சென்றார் இன்பா.
ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சலைச்சது இல்ல என திட்டிய படி பின்னால் சென்றார்.
சூர்ய தேவ் – மகிளினி, கார்த்திக் – மை விழி, உதயன்- தாரா, வசந்தன் – கலைவாணி என மொத்த படையும் கிளம்பியது.
ஹரிணியின் தாய் தந்தை ராம் கீதா மற்றும் அவர்களின் மகன் ஆதவ் ஏற்கனவே சென்றிருந்தார்கள்.
இதழ், மிதுன் தேவ், சிவன்யா, பவன்யா, வெற்றி மாறன், இனியா, இதயன் என மொத்த குடும்பமும் ஆஜர் ஆனது ஹைத்ரா பாத்தில்.
ருத்ரன் ஓரிடத்தில் அமர்ந்திருக்க.. தம்பி தீரா தம்பி நீ என் தங்கச்சியை கட்டிக்க போறதாக கேள்வி பட்டேன். என்ன டா என் கிட்ட சொல்லவே இல்லை. என நிலாவின் உடன் பிறப்புகள் சுற்றி வளைத்தது.
நிவாஸ் அவனது அறையில் இருந்தான். யாரையும் பார்க்க பிடிக்க வில்லை. கண்மணி அவனது காதலி என மனதில் ஆழமாக பதிந்து போக.. குடித்து கொண்டிருந்தான்.
கண்மணி நிவாஸ்க்கு பிடித்த வண்ணத்தில் புடவையை கட்டி கொண்டவள் மனதில். என்னையும் நிவாவையும் பார்த்து எல்லாரும் பொறாமை படனும். முக்கியமா அந்த ருத்ரன் அப்புறம் அந்த நாடக காரி நிலா. ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி இருக்கா அவளும் அவளோட மூஞ்சியும். நிவா! உங்களுக்காக தான் நான் இருக்கேன் என தன்னை தன் நிவாவுக்காக பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டு நேராக நிவாசை பார்க்க சென்றாள்.
மா இத்தனை வளையல் எனக்கு வேணாம்! என்று நிலா சொல்ல…
அடி வாங்க போற ஒழுங்கா போடு! உன்னோட மாமா மாமி வந்தாச்சு. கூடவே ருத்ரன் வந்திருக்கான். நீ அலங்காரம் பண்ணிக்கோ நிலா. அடுத்து உங்க கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு. சீக்கிரம் பண்ணு நான் போய் உன்னோட அண்ணிய பார்த்திட்டு வரேன் என புறப்பட்டார் தேஜூ.
அருகில் ப்ளாஸ்கில் சுட சுட ஆட்டு கால் சூப் இருக்க.. ஒரு கப்பில் ஊற்றி கொண்டவள் அதை குடித்து கொண்டே வளையலை ஜோடி சேர்த்தாள்.
ஹே எங்கே டா தீரா போற! பதில் சொல்லிட்டு போ! இந்த இன்டர்வியு ல பாஸ் பண்ணா தான் என் தங்கச்சியை நீ கட்டிக்க முடியும் என இதழ் அழைக்க..
ஆளை விடுங்க டி! என எஸ்கேப் ஆனான் ருத்ரன்.
ஹாய் ருத்ரன் கண்ணா! என தேஜூ அழைக்க..
மாமி என புன்னகைத்தான்.
நிலா கிட்ட ஜ்வெல் செட் கொடுத்தேன் எதையும் போட மாட்டேன்னு வீம்புக்கு உட்கார்ந்துட்டு இருக்கா போய் அவளை கூட்டிட்டு வருவியாம் என்றார்.
இதோ போறேன் என நேராக அவளது அறைக்கு சென்றான் ருத்ரன்.
எது குடிச்சாலும் உடனேயே யூரின் வருதே! சுகர் இருக்குமா? செக் பண்ணனும் என இன்னொரு கப் ஊற்றி வாசத்தை இழுத்து ஒரு மிடுக்கு குடித்தாள் ஆட்டு கால் சூப்பை.
ஹே என்ன டி பண்ற? என பின்னால் ருத்ரணின் குரல் கேட்க..
நிலா..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
