Episode -41
வேணாம் பிளீஸ் விடுங்க நிவா! நான் போறேன். என அவள் கைகளை விடுவித்து கொள்ள போராட.. ப்ச் என்ன கண்மணி! பேசாமல் என்னை கொண்ணு போட்டுட்டு போயிடு! என கைகளை பிடித்து இழுத்தான் நிவாஸ்.
நிவா!! என்னோட நிவாஸ் இது இல்லையே!! என்னை முழுசா வெறுத்துட்டு இருக்கீங்க! இதுக்கு நான் செத்து போலாம் அதுக்கு தான் என்னை விட்டுடுங்கோ! என அழுதபடி அவள் அப்படியே நிற்க..
ஏற்கனவே பைத்தியம் பிடிச்ச மாதிரி தான் இருக்கேன். நீயும் என்னை விட்டு போடி!! என அவன் கத்தியபடி போதையில் தலையை பிடித்து கொண்டான். மெல்ல அவன் பக்கம் திரும்பியவள். கண்களில் நீருடன் அவனையே பார்த்தாள்.
நிவாஸ் மெல்ல தலைக்கு ஏறிய மது போதை கிறக்கத்துடன் பார்த்தான்.
கண்மணி அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்ல போக.. கைகளை பிடித்தான் இருவரும் எதுவும் பேசவில்லை. கண்ணமா என இழுத்தவன். அவளை அணைத்து கொண்டான் இறுக்கமாக..
இருவரும் கால் இடறி மூச்சு முட்ட அப்படியே படுக்கையில் விழுந்தார்கள். நிவா! என அவனை அணைத்து கொண்டவள். நான் என்னோட மனசுல நீங்க மட்டும் தான் நிவா இருக்கீங்க! அதை நிரூபிக்க நான் என்ன பண்ணட்டும்? என மெல்ல அவனது உதட்டில் முத்தமிட்டவள். நிவா! I love you என சொல்லியபடி அவள் நகர முயற்சி செய்ய.. கண்ணமா என உதட்டை கவ்வி கொண்டான். முத்தங்கள் மூர்க்கமானது.
அவள் அவனை மூச்சு வாங்க பார்க்க… இனிமே விட்டு போறன்னு சொல்லாத டி! நீ இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு யோசிச்சு பார்த்தியா கண்மணி! என கண்களில் நீர் கோர்க்க அவளை பார்த்தான். நிவா என வேகமாக அவனது உதட்டை கவ்வி கொண்டாள். முத்தங்கள் மெல்ல மெல்ல எல்லை மீறியது உடல்கள் இரண்டும் ஒட்டி கொண்டது. காதலும் தவிப்பும் ஊடலும் கூடலும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட ஆசையெல்லாம் யுத்தத்தில் பறந்து போனது. இறுதியில் அவளை நிவாஸ் ஆள.. கண்மணி அவனை மொத்தமாக ஏற்று கொண்டாள்.
நிகழ்காலத்தில் மெதுவாக கண்களை திறந்து அவனை பார்த்தாள் கண்மணி.
நிவாஸ் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருக்க.. இப்போ எதுக்கு இப்படி உட்கார்ந்துட்டு இருக்கீங்க நிவா? என மெல்ல எழுந்தவள் அவளது நிலையை பார்த்தாள். எதுவும் தவறாக தோன்றவில்லை.
நான் அது நீ சுயநினைவில் தான இருந்த? தள்ளி போயிருக்கலாமே கண்மணி? என்ன ஆகிடுச்சு பார்த்தல்ல! என வார்த்தைகளை விட்டான்.
கண்மணி எதுவும் பேசாமல் வேகமாக அவளின் உடையை அணிந்து கொண்டவள். தேஜு கொடுத்த அனைத்து ஆபரணங்களையும் எடுத்து ஓரிடத்தில் வைத்தவள். சரியா இருக்கா பார்த்துக்கோங்க! என்று விட்டு புறப்பட்டாள்.
கண்மணி உன்னை தான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்! என நிவாஸ் அவளை தடுத்தான்.
அவனது சொல் அம்புகளை தாங்க முடியாதவள். இங்கிருந்து கிளம்புறேன் நிவா! இனி எனக்கென்ன வேலை? என்றாள் கசந்த புன்னகையுடன்..
கண்மணி! என அவள் முன் வந்து நின்றவன். எங்கே போற?
உங்களுக்கு பாரமா நான் இங்கே இருக்க விரும்பல! நான் போறேன். உங்க கண்ணில் படாத இடத்துக்கு.. நான் உங்களுக்கு தொல்லையா தொந்தரவா இருக்க விரும்பல.. என்றாள் கண்களில் நீர் கோர்க்க..
அய்யோ! நான் எப்போ டி அப்படி சொன்னேன்? எனக்கு கொஞ்சம் டைம் கொடுன்னு தானே கேட்டேன். என்றான் நிவாஸ்.
டைம் வேணாம் நிவாஸ்! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நமக்குள்ள நடந்ததை நீங்க பெருசா எடுத்துக்க வேணாம் அதை மறந்திடுங்க! நான் அதை பெருசு பண்ண மாட்டேன். எனக்கு உங்க நிம்மதி தான் முக்கியம். நீங்க சந்தோசமா இருக்கணும் என்று விட்டு நகர்ந்தாள்.
ஏன் டி புரிஞ்சுக்க மாட்டிக்கிற நீ தான் என்னோட சந்தோஷம் என இழுத்து அணைத்து கொண்டான் வேகமாக..
இல்ல நிவாஸ்!! என அவள் கண்களில் நீருடன் நகர முயற்சி செய்ய..
நீ எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும்னு நினைச்சேன் நீ தான் டி என்னோட உலகம். ஆனால் எனக்கு முன்னாடி உனக்கு அந்த ருத்ரன் அவன் உன்னோட சின்ன வயசு பிரென்ட் அது …. சரி வேணாம் விடு! எனக் கூறியவன். கண்ணம்மா என் கண்மணி ஐ லவ் யூ!! நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம் டி! என்னோட மூச்சு காத்து நீ தான். உன்னோட விசயத்தில் எல்லாமே நான் தான் முதலா இருக்கணும். ஆனால் என்னை விட அந்த ருத்ரன் அவனுக்கு உன்னை பத்தி தெரிஞ்சது எனக்கு பிடிக்கல.. அவன் உன்னை லவ்..
என்னை இல்ல நிவாஸ்! அவன் லவ் பண்ணது தங்க மீனாட்சிய!! நான் முத்து மீனாட்சி! போதுமா! என உருக்கமாக கூறினாள் கண்மணி.
நிவாஸ் அவளை அணைத்து கொண்டு சரி கோப படாத! சாரி நான் தான் தப்பு! என்னோட கண்மணி எனக்காக பொறந்தவ! போதுமா? என்றான்.
கண்மணி அவனை நிம்மதியுடன் அணைத்து கொண்டாள். எப்படியும் தன் உடன் பிறந்த அக்காள் மீனாட்சி கடலுடன் சென்று விட்டாள் அவள் வந்து உண்மையை சொல்ல போவதில்லை. அது ஒரு பக்கம் இருந்தாலும் இப்பொழுது நிவாஸ் கன்மணிக்கு மட்டுமே! இருவரும் ஈருடல் ஓர் உயிர் ஆகி விட்டார்கள். கண்டிப்பாக நிவாஸ் தன்னை விலகி செல்ல மாட்டான் என நம்பினாள்.
ஒரு வேளை மீனாட்சி வந்தால்? எப்டி இருக்கும்? அதாவது கடலுடன் சென்ற மீனாட்சி!! அவள் தங்க மீனாட்சி தான்! ஆனால் ருத்ரனை காதலித்தது தங்க மீனாட்சி என பெயரை மாற்றி கொண்டு திரிந்த முத்து மீனாட்சி அதாவது நிவாசின் காதல் கண்மணி.
நிவா உங்க கிட்ட ஒரு விசயம்?
என்ன கண்ணம்மா என் கண்மணி என முத்தமிட்டான்.
நிலாவுக்கு அந்த ருத்ரன் வேணாம்! இந்த கல்யாணத்தை நடத்த விட கூடாது நிருத்திடலாம் என்றாள் கண்மணி.
நிவாஸ் அவளை திடுக்கிட்டு பார்க்க..
யோசிச்சு பாருங்க நிவா! அந்த ருத்ரன் எல்லா இடத்துலயும் நிலாவை அவமான படுத்துறான். அதை விட உங்களையும் நிதின் மாமாவையும் அப்படி தான் ட்ரீட் பண்றான். அப்படி இருக்க ஒருத்தன் இந்த வீட்டு மருமகன் ஆகும் போது என்ன நடக்கும்னு நீங்களே யோசிங்க. அவன் வேணாம். அவனை விட நல்ல பையன் நிலாவுக்கு அமையுவார்! இது என்னோட ஒப்பீனியன். இனி உங்க முடிவு என்று விட்டு குளிக்க சென்றாள்.
நிவாசுடன் கண்மணி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் எனில் spr குடும்பத்துக்கு ருத்ரன் மருமகனாக வர கூடாது. குறிப்பாக நிலாவை கட்டி கொள்ள கூடாது என்பதில் கண்மணி வஞ்சகத்துடன் இருந்தாள்.
நிவாஸ் ஒன்றும் புரியாமல் யோசனையுடன் இருந்தான்.
****
படுத்தால் புரண்டால் என எது செய்தாலும் ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை நிலாவுக்கு. கொஞ்சம் கூட அயர்ச்சி என்பது இல்லை. மொத்தமாக அவளின் எண்ணத்தை ஆக்கிரமித்தது ருத்ரன் தான்.
நினைத்து கூட பார்க்கவில்லை அவள். அவன் கொடுத்த முத்தங்களும் அந்த இறுகிய பிடியும் இப்பொழுது ரசிக்க முடியாமல் திண்டாடி போனாள்.
அவளின் பாடே இப்படி இருக்கிறதே அப்போ ருத்ரன் நிலை?
நாளை முகூர்த்த புடவை எடுக்க போகிறார்கள். ருத்ரன் வருவானா?
பார்ப்போம்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
