Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -49

ருத்ரனின் கண்கள் சிவந்து கிடந்தது. அவனது பார்வை அவளை தான் கொய்து கொண்டிருந்தது. நிலா அவனை பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பி கொள்ள.. 

வானத்தை வதனத்துக்கு போர்த்தி விட்டது போல அவளின் தேகத்துக்கு இந்த நீல நிறம் அருமையாக பொருந்தி இருந்தது. வடிவமான முகம் பூஞ்சோலை பெண் ஆனது. பொன் வண்டு கண்கள். ருத்ரனை பார்த்து அனைவரும் கேட்கும் கேள்வி உங்க அப்பாவோட கண்ணகுழி அழகா இருக்கும் உனக்கும் இருந்தால் இன்னும் அழகு டா!! என்பார்கள். கண்ணகுளியை சிறு வயதில் இருந்து வெறுத்தவன் இதோ அவளின் கண்ண குளி வெட்டில் விழுந்து விடுவான் போல.. பள்ளமாக இருக்கிறதே கன்ன குளி. 

உலகில் ரம்யமான விசயங்கள் அனைத்தும் நிலாவாக தெரிகிறது அவன் கண்களுக்கு. நிலவும் இதில் அடக்கம். ஆனால் மித மிஞ்சிய கோபமும் ஆத்திரமும் கொட்டி கிடந்தது அவன் விழிகளில்..

நிலா அவனை நிமிர்ந்து பார்த்தாள். செதுக்கி வச்ச சிலை தான். ஒரு டாக்டர் ஆன்டி ஹீரோவா இருந்தால் அது அர்ஜுன் ரெட்டி. இதுவே ஒரு ஆர்மி மேன் போலீஸ் மேன் ஆன்டி ஹீரோவா இருந்தால் அது இவனை போல தான் இருக்கும். பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் அழகாக இருந்தான். நிலா கூட அவனை ஆயிரம் முறை பார்த்தாள். இத்தனை அழகாக இருந்தால் யார் தான் பார்க்காமல் இருப்பார்கள்? கண்கள் சிவந்திருக்க.. அவனது ரூபி லிப்ஸ் கீழ் உதடு கொஞ்சம் கருத்து போயிருந்ததது. சிகரெட்டை ஊதி தள்ளுகிறான். 

ருத்ரன் அவளை பார்த்தான். இன்னும் கவிதைத்துவமாக சொல்ல போனால் ruby lip, coral lip அதாவது கீழ் உதட்டை கடித்து கொண்டவள். அவனை பார்த்து எதுக்கு தீரா என்.. என அவள் ஆரம்பிக்க.. 

சுவற்றில் ஓங்கி குத்து விட்டான் ருத்ரன். 

தீரா என நிலாவின் நடுங்கிய உதடுகள் வாயை மூடி கொண்டது.

வாயை மூடு!! எதுவும் பேச கூடாது. புரியுதா? என கத்தினான். 

ம்ம் என மெல்ல தலையாட்டினாள். 

சாப்பிட போலாம் வா! என ருத்ரன் முன்னால் நகர.. 

அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். நிலா வேகமாக ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுக்க.. தேவையில்லை.. என அவளின் கையில் இருக்கும் கர்சீப்பை பிடுங்கியவன். இதுல கட்டி விடு!! 

தீரா!! அது! 

வாய மூட்ரி!… என்றவன் ஆமா என்ன தீரா தீரான்னு என்னை ஏலம் விடுற? நான் என்ன உன் கூட அவ்ளோ நெருக்கமா பழகினனா? 

அப் அப்போ எப்டி கூப்பிட..

வாங்க போங்கன்னு மரியாதை கொடு புரியுதா? 

சரி!! என தலையாட்டினாள் நிலா. 

வெளியே சென்ற இருவரும் மீண்டும் உள்ளே வந்தனர். ஆம் ருத்ரன் தான் அவளை தர தரவென மீண்டும் இழுத்து வந்தான். 

என்னங்க? என அவள் திக்கி திணறி அழைக்க.. ருத்ரன் அவளை சுவற்றில் சாய்த்து அவன் கட்டிய தாலியை தொட்டு பார்த்து டைட்டாக இருக்கிறதா என செக் செய்தான். அவனது விரல்கள் நெஞ்சு குழியை தொட… நிலா பேச்சு வராமல் அப்படியே நின்றாள். அவனது கவனம் மொத்தமும் பேசுவதில் தான் இருந்தது. ஆனால் நிலா? நிலாவுக்கு அப்படி இல்லை. அவன் அருகில் வந்தால் அவஸ்தையாக உணர்கிறாள். 

ருத்ரன் அவளது முகத்தை நிமிர்த்தி இங்கே பாரு என்னை என நிமர்த்தினான். 

அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க ருத்ரனை பார்க்க.. இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்! என்னை ஏன் கல்யாணம் பண்ணீங்க? என்னை ஏன் கிஸ்சடிச்சீங்க? என்னை வேணாம்னு சொல்லுங்க! நான் வேணாம் அப்படி இப்படின்னு எதாவது பேசின அப்புறம் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். It happened.. அவ்ளோ தான் இனி எதை பத்தியும் பேச கூடாது. நீ வெசனபட்டு என்னை வெஸனபட வைக்காத!! 

அப்டின்னா? என நிலா கேட்க.. 

“எப்டி?”

“விஷம்”

அப்டின்னா கவலை!! என விளக்கம் கொடுத்தவன். சட்டென ஹே சொல்றது புரியுதா? 

“ம்ம் புரியுது.” என்றாள் நிலா. 

சரி வா சாப்பிடலாம்! என இருவரும் நேராக சாப்பிடும் இடத்துக்கு சென்றார்கள். 

இதழ் ஹாஃப் சாரியில் அழகாக ஜொலிக்க.. லிப்ஸ் இன்னிக்கி செம்மயா இருக்க? 

டேய் உன் பொண்டாட்டி பக்கத்தில் இருக்கா! அவளை வச்சுகிட்டு சைட் அடிக்கிறயா நீ!! என இதழ் முறைத்தாள். 

அவள் படி தான்டா பத்தினி. எனக்கெல்லாம் எல்லை கோடு வரையறுக்க மாட்டாள். ஹே என்னை கேட்பியா டி!! 

ம்ம் ஹிம் என தலை ஆட்டியது அந்த நிலா. 

சுத்தம் பாப்பா நீ என்ன அவன் எது சொன்னாலும் தலையாட்டுற? இப்படி இருந்தால் எப்படி? அவன் உன்னை ஆட்டி வைப்பான் நிலா குட்டி! நீ சரி இல்ல போ! என இதழ் பவன்யா இருவரும் பெறு மூச்சை விட்டார்கள். 

ஒரு ஜோடி மணமக்கள் நிவாஸ் மற்றும் கண்மணி இருவரும் எதிரில் அமர்ந்திருக்க.. இன்னொரு பக்கம் நிலா ருத்ரன். நால்வர் பார்வையும் எதிர் எதிரில்… சிறப்பு என ருத்ரன் முனுமுனுத்து கொண்டான். 

இதழ், பவன்யா, சிவன்யா, இனியா, இதயன், வெற்றி, மிதுன் என அனைவரும் பரிமாறிட.. 

சத்ய தேவ் ஒரு பக்கம் அமர்ந்து காதல் சைக்கோ சதி ரிதமுக்கு ஊட்டி விட்டான். 

ஊட்டி விடுற மாதிரி போட்டோஸ் எடுத்து கொண்டிருந்தார்கள். போட்டோ கிராபர்கள். 

ருத்ரன் கர்சீப்பை எடுத்து விட்டு சாப்பிட பிசைய முடியவில்லை. நிலா அவனையே பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்ல வில்லை. 

என்ன டி பார்த்திட்டு உம்முன்னா மூஞ்சி மாதிரி இருக்க? 

என்ன பண்ணனும்? என நிலா கேட்க.. 

“என்னை பண்ணனுமா?”

நிலா வளையலை ஒதுக்கி கொண்டு ஊட்டி விடவா? 

ம்ம் ஊட்டு எல்லாத்தையும்.. முதல்ல கேசரியில் இருந்து ஆரம்பி.. உன்னோட கேசரி! அது வேணும் எனக்கு. 

நிலா எட்சிள் கையில் கேசரியை எடுத்து ஊட்டினாள். அதை தான் வந்ததும் எடுத்து சுவைத்து பார்த்தாள். 

இதென்ன? 

“பப்பு புவா புலுசு!!”

என்னடி எல்லாமே புளிக்குது? 

“அது கோங்குறா சட்னி. எங்க ஊர் டிரெடிசனல்” 

ச்ச கேட்டரிங் சரி இல்லை. கேசரி மட்டும் தான் நல்லாருக்கு எல்லாமே புளிக்கிது!

இது டிரை பண்ணுங்க பிண்டி பொரியல், இது தொடைக்காய்! கத்தரிக்காய் என அனைத்தும்  ஊட்டி விட்டாள். 

அது வேணும் இது வேணும். பெருசா ஊட்டு டி!, இன்னும் தண்ணி கொடு!, இது மோர்!, இதென்ன? எங்க ஊர்ல சாப்பிடிருக்க தானே! என அதட்டி அதட்டி அவளை வேலை வாங்கினான். 

டேய் என்ன டா பண்ற? என இதழ் கேட்க.. 

அவள் தான் ஊட்டி விடுறேன்னு சொன்னா! அதான் சரின்னு அவளுக்கு எப்டி ஊட்டனும்ன்னு சொல்லி கொடுக்கிறேன். 

இருக்கட்டும் இருக்கட்டும் என இதழ் மிரட்ட . 

நீ எப்போ டி கல்யாண சோறு பொட போற? என ருத்ரன் கேட்க.. 

எல்லா என் நேர கொடுமை? என்னை விட அஞ்சு மாச சின்னவன் நீ உனக்கெல்லாம் கல்யாணம். அதுவும் எங்க குட்டி பாப்பாவை.. 

‘அவளா குட்டி பாப்பா? இப்படி முகத்தை வச்சிட்டு’ என ருத்ரன் கண்கள் சிவக்க.. 

இவ்வளவு நேரமும் நிவாஸ் மற்றும் கண்மணி இருவரையும் கிளிக் செய்து கொண்டிருந்த போட்டோ கிராப் கேங் அப்படியே ருத்ரன் நிலா பக்கம் திரும்பியது. இயற்கையாக ஒரு முரட்டு பையனுக்கு ஊட்டி விடும் குட்டி பெண் அவர்களின் உணர்வுகளை செயற்கை பூஸவில்லை.  அதனால் போட்டோ கிராபர் வளைத்து வளைத்து எடுத்தார். 

ஹரிணி வயிற்றை பிடித்தபடி புன்னகையுடன் நடந்து வந்தாள். 

அனைவரின் பார்வையும் ஹரிணியின் மீது பட்டது. ஹே கல்யாண பொண்ணு மாதிரியே இன்னொரு பொண்ணு! ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க! ஓ இவங்க ரெட்டை பொறு போல.. என அனைவரும் அவர்களுக்குள் பேசி கொள்ள.. 

நிலாவின் பார்வை ஹரிணியின் பின்னால் நடந்து வரும் பெண்ணின் மீது பார்வை படிந்தது. 

ருத்ரன் அவளின் பார்வையை கண்டு கொண்டு. ஹே அங்கே என்ன டி பார்வை? ஊட்டி விடு என அவளின் கையை பிடித்து வாயில் ஊட்ட வைத்து குட்டி விரல்களை கொஞ்சம் கடித்தான்.

அவிச் என நிலா அவனை திரும்பி பார்க்க.. ஊட்டு டி!! எனக்கு கேசரி வேணும். 

இதோ கா தூரி அக்கா கொஞ்சம் ப்ரூட் கேசரி. 

என வாங்கி கொண்டவள் அங்கே வரும் மீனாட்சியை பார்த்து கொண்டே ருத்ரனை பார்த்தாள். 

நிவா உங்களுக்கு நான் ஊட்டி விடவா என கண்மணி கேட்டு கொண்டிருக்கவே! 

ஹே கண்மணி யாரு வந்திருக்காங்க பாரு! என சொல்லி கொண்டே வந்தாள் ஹரிணி. 

கண்மணி புன்னகையுடன் யாரது என பார்த்தவள் முகம் அப்படியே மாறி போனது. தங்க மீனாட்சி மற்றும் அவளது கணவன் உதயகிருஷ்ணாவுடன் வந்து கொண்டிருந்தாள். 

நிவாசின் கண்கள் விரிய ஹே கண்ணமா உன்னோட அக்காவா அது? 

கண்மணியின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை பூத்தது. ஆமாங்க என கூறினாள். 

நிலாவின் பார்வை ருத்ரன் மீது படிய.. என்ன அப்படி பார்க்கிற? என கேட்டான். 

ஒன்னுமில்லை!! என நிலா தலையை அசைக்க.. 

ருத்ரன் சிரித்து கொண்டே இதே போல உன்னோட எக்ஸ் வந்தால் நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? 

நிலா…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.