Episode -50
நிலா அவனை வேதனையுடன் பார்த்தாள். ருத்ரன் தண்ணீரை எடுத்து குடித்த படி, நான் என்ன பண்ணுவேன் சொல்லு டி? என்னை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு இதுல தெரியும். உன்னோட எக்ஸ் வந்தால் நான் என்ன பண்ணுவேன்? இப்போ இங்கே இன்னிக்கி!.
“எனக்கு எப்டி தெரியும்? ஒரு வேளை நீங்க என்னை வேணாம்னு சொல்லிடுவீங்க! நீங்க என்னை அவர் கூட சேர்த்து வச்சுடுவீங்க” என்றாள் நிலா.
ருத்ரன் புன்னகையுடன் ஹே லிப்ஸ் உன்னோட பாப்பாவுக்கு கொஞ்சம் பரிமாறு என பார்த்தான். நிலாவின் இலையில் அனைத்தும் நிரப்ப பட்டது.
நிலா ஒன்றும் புரியாமல் ருத்ரனை பார்க்க, சாப்பிடு!! என அவளை பார்த்தான்.
இல்ல நீங்க சொல்லுங்க! நான் லவ் பன்றவரு வந்தால் என்ன பண்ணுவீங்க? என்றாள் நிலா.
ஓ அப்போ இப்போது கூட மனசுக்குள்ள மன்னவன் தான் இருக்கிறானா? இன்னும் எவனோ ஒருத்தனை தான் நினைச்சிட்டு இருக்கியா? என கேட்டான் ருத்ரன்.
நிலா…?
***
“முத்து என்னை நினைபிருக்கா டி நோக்கு?” என தன் தங்கையை பார்த்தாள் தங்க மீனாட்சி.
அக்கா!! என கண்களில் நீர் கோர்க்க தன் இரட்டையை பார்த்தாள் கண்மணி.
இருவரும் கட்டி கொண்டார்கள். உதய கிருஷ்ணா அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்.
தங்க மீனாட்சி கண்ணீரை துடைத்து கொண்டு எனக்கு சந்தோசம். எப்படியோ அன்னிக்கு நம்ம தப்பிச்சிட்டோம். இல்லன்னா அந்த அனந்து கடத்தி கொண்டு போய் வித்திருப்பான். நான் அப்படியே தண்ணியில் நீத்தம் போட்டு மயங்கி விழுந்துட்டேன் என்னை மீட்டது இவாளோட குடும்பம் தான். நான் இவரோட அப்படியே கல்கத்தா போயிட்டேன். கல்யாணம் பண்ணிட்டு வந்தான் வீட்டுக்கு வந்தேன். எதுக்கு தேவையில்லாம அங்கே போயி மறுபடியும் கடத்தி கல்யாணம் மறுபடியும் ஏற்பாடு பண்ணா என்ன பண்றதுன்னு தான் அப்படியே இருந்துட்டேன். இப்போ தான் அனுப்பூர் போனேன். உனக்கு கல்யாணம் ஆகுற விசயத்தை கூட நான் யார் கிட்டயும் சொல்லல என்றாள் தங்க மீனாட்சி.
எனக்கு எதுவும் நினைப்பில்லை கா! எல்லாமே நினைப்புக்கு வர ரெண்டு வருசம் எடுத்துக்குச்சு. என்னை தண்ணியில் இருந்து தூக்கிட்டு வந்து இவர் தான் காப்பாத்தி என்னை பார்த்துண்டார். நேக்கு நினைவு திரும்பினதும் இவர் கூடவே இருந்துட்டேன். நேக்கு இவரை தவிர யாரையும் தெரியாது. பிடிச்சது இவரையே கட்டின்டேன் என்றாள் கண்மணி.
பரவால்ல நேக்கும் சந்தோஷம் தான். என்னை இங்கே அழைச்சது உங்க மாமி தான். உன்னோட மாமியோட தோப்பணார் இவாளுக்கு இவரோட தோப்பனார்க்கும் சிநேகிதர்கள். ஆத்துக்கு வந்து பத்திரிக்கை வந்துட்டு போனா! என்னை பார்த்ததும் எல்லா விவரத்தையும் சொன்னா! நான் தான் இன்ப அதிர்ச்சியா இருக்கணும்னு உன் கிட்ட பேசாமல் நேராக வந்துட்டேன்.
சரி கா சந்தோசம்!! என கண்மணி நிவாஸை அறிமுகம் செய்து வைத்தாள்.
தங்க மீனாட்சி அனைவரிடமும் சிறிய தலையசைப்புடன் விசாரித்தாள். அவளின் கண்ணுக்கு ருத்ரன் தப்ப வில்லை.
இது யாரு? இவரை நான் அனுப்பூர்ல பார்த்திருக்கேனே! என தங்க மீனாட்சி கேட்க..
அவர் அவர் வந்து என்னோட ஆத்துகாரோட தங்கச்சி மனைவி. இன்னிக்கு தான் அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ். என்றாள் கண்மணி.
அப்படியா!! சரி வா உன்னோட மாமிய பார்த்து பேசிட்டு வரலாம் என தங்க மீனாட்சி அழைக்க இருவரும் சென்றார்கள்.
***
நிலாவுக்கு குமட்டி கொண்டு வர என்னாச்சு என ருத்ரன் அவளுடன் வாஷ் ரூம் சென்றான்.
கொஞ்சம் அதி அதிகமா சாப்பிட்டேன். அதான் குமட்டிட்டு வருது என முகத்தை கழுவிய படி கூறினாள்.
இப்போ ஓகேவா! வா வந்து தண்ணி குடி என அவளை ஃபேன் காற்றில் அமர வைத்தவன். தண்ணீரை கொடுத்தான்.
இப்போ எப்டி இருக்கு? ஓகேவா? நீ கம்மியா தானே சாப்பிட்ட! அதுவும் கோழி கொத்துற மாதிரி!! என திட்டியவன். என்ன வேணும் உனக்கு? சொல்லு ரொம்ப வீக்கா இருக்க? உன்னோட டேஸ்ட் பட்ஸ் எதை லைக் பண்ணுது? யோசி!! என ருத்ரன் கேட்க..
நிலா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“கேட்கிறேன்ல பதில் சொல்லு டி!”
அது வந்து எனக்கு என தலையை குனிந்து கொண்டாள்.
சொல்லு என்ன வேணும்?
அத் அது வந்து அன்னிக்கு நீங்க..
அன்னிக்கு நான்? என்ன?
அன்னிக்கு நீங்க வற்புறுத்தி கொடுத்தீங்களே ஆட்டு கால் சூப்! அது தான் என்னோட நாக்குக்கு நல்லாருக்கு! என்றாள்.
ருத்ரன் முகத்தில் சிரிப்பு தோன்ற? அன்னிக்கு வேணாம்னு வாமிட் பண்ண? என அவன் புருவம் சுருக்கி கேட்க..
நீங்க கிளம்பினதும். மறுபடியும் செஞ்சு தர சொல்லி குடிச்சேன். அது கூடவே இட்லில தொட்டு சாப்பிட்டேன் சூப்பரா இருந்தது என்றாள் நயன விழிகளில்..
அப்போ ஆட்டு கால் சூப்பை இப்போவே சாப்பிடுவோம். வா போலாம் என அவன் அழைக்க..
இப்போ வேணாம் இன்னிக்கி கல்யாணம் நடந்திருக்கு! அதனாலே நாளைக்கு தான் பண்ணுவாங்க என அவனை தடுத்தாள்.
சொல்றத கேளு டி! வீக்கா இருக்க!! என ருத்ரன் அவளை புருவம் சுருக்கி பார்த்தான்.
வீட்டுக்கு போய் இட்லி செய்ய சொல்லி சாப்பிடலாம். எனக்கு நாக்குக்கு அது தான் புடிக்கிது. என்றாள்.
சரி என ருத்ரன் அவளின் கையை பிடித்த படி முன்னால் நடக்க.. உங்க கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!!
“என்ன கேள்வி?”
“அது தான் என்னோட எக்ஸ் வந்தால் என்னை நீங்க விட்டுடுவீங்க தான!”
வில்லதனமாக சிரித்தான் ருத்ரன்.
நிலா அவனை பார்க்க, ருத்ரன் பற்களை கடித்தபடி அடுத்தவங்கள பிரிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் எனக்கு சுத்தமா பிடிக்காத உன்னை சும்மா விடுவேனா என்ன? எவனையும் பக்கத்தில நெருங்க விட மாட்டேன். நீ அவனை ஏக்கத்தோட சேர முடியாத மாதிரி பார்க்கணும். அவன் தவிக்கணும். வாட் அ சீன்? ப்பா கிக்கா இருக்கு டி! முடிஞ்சா அவன் முன்னாடியே உன்னை கிஸ் பண்ணுவேன். அப்படியே லிப்ல.. உனக்கும் வேதனை உன்னோட எக்ஸ்க்கு அதை விட இருக்கும்ல எப்டி!!
நிலா எதுவும் பேசாமல் அமைதியாக வந்தவள். திடீரென உங்களோட எக்ஸ் வந்தால்..?
அது தான் உன் அண்ணன் பொண்டாட்டி!! என்றான் ருத்ரன்.
நிலா அப்பட்ட அதிர்ச்சியில் பார்க்க, ருத்ரன் அவளின் தோல் மேல் கை போட்டுக்கொண்டு பொய் கூட ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை தான். ஆனால் ஏமாற்றுதல் பித்தலாட்டம் பண்றது இதெல்லாம் எனக்கு பிடிக்காது. அவளை கம்பேர் பண்ணும் போது நீ எனக்கு பெட்டர் தான் டி!! என்றான் ருத்ரன்.
நிலா எதுவும் பேசவில்லை அமைதியாக நடந்தாள். அவளுக்கும் உனக்கும் ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா? அவளை காரணமே இல்லாம பிடிக்கும். உன்னை காரணமே இல்லாம பிடிக்காது. இப்போ அவளை பொய் பித்தலாட்டத்துக்காக வேணாம்னு ஒதுங்கிட்டேன். நீ அநியாயத்துக்கு நல்லவ மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல தான். இருந்தாலும் உன்னோட உண்மை எனக்கு பிடிச்சது. இந்த குழந்தை எனக்கு ஒரு பொருட்டு இல்ல. ஆனால் எப்போவும் பொண்ணுங்களை எனக்கு பிடிக்காது நீயா இருந்தாலும் சரி அவளா இருந்தாலும் சரி என்று விட்டு நடந்தான்.
இவன் என்ன சொல்றான்? அந்த பக்கமும் இல்லை இந்த பக்கமும் இல்லை. நடுவில் இருக்கிறான். அதை விட எப்படி இருந்தாலும் மாறாத ஒரே விசயம் என்னை பிடிக்காது. இது தான் இந்த வார்த்தை என அவளின் கண்களில் நீர் முட்டி கொண்டது.
திருமணம் நன்றாக முடிந்தது. அனைவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். ருத்ரன் மற்றும் நிலா இருவரும் அவர்களின் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நிவாஸ் மற்றும் கண்மணி இருவரும் spr வீட்டில்..
கண்மணி புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தாள். நிவாஸ் என அழைத்து கொண்டே..
கண்ணம்மா உன் கிட்ட ஒன்னு கேட்கணும்.
என்ன விசயம்? உங்களுக்காக பாதாம், பிஸ்தா, கிஷ்மிஸ், எல்லாம் போட்டு பால் சுண்ட காய்ச்சி எடுத்திட்டு வந்தேன். என கூறி கொண்டே வந்தாள்.
கல்யாணத்தில் உங்க அக்கா ருத்ரணை பார்த்து தெரியாத மாதிரி உன் கிட்ட கேட்க என்ன காரணம்? என்றான் நிவாஸ்.
கண்மணியின் முகத்தில் பதட்டம் பரவ அதை காட்டி கொள்ளாமல். அது ஆத்துக்காரர் பக்கத்தில் இருக்கும் போது எப்டி அவள் ஓபனா கேட்பா? வேற ஒன்னுமில்லை என்றாள்.
அப்படியா? என நிவாஸ் கேட்க..
அப்படி தான் வேற என்ன இருக்கு? அதுல? என்னாச்சு உங்களுக்கு? என கண்மணி கேட்க..
இது யார் மோதிரம்ன்னு பார்த்து சொல்லு!! என கைகளை காட்டினான் நிவாஸ்.
இது? இது வந்து என அவளின் முகத்தில் பதட்டம் ஒட்டி கொள்ள..
நிவாஸ் கண்கள் சிவந்து கிடக்க.. நீ தான் அது இல்லையா?
நா நான் வந்து!! அது இல்ல நிவா நான் என்ன சொல்றேன்னு கேளுங்க முதல்ல..
ஹே என கத்தினான் வீடே அதிர..
கண்மணியின் கண்களில் நீர் கொட்டியது. அன்று தோட்டத்தில் ருத்ரன் தூக்கி வீசிய மோதிரம் நிவாஸ் கைகளில் வந்து சிக்கும் என கனவா கண்டாள் கண்மணி.
நிவாஸ் – கண்மணி நிலை என்ன?
கல்யாணம் ஆகி கிட்ட தட்ட ஒருவாரம் ருத்ரன் வீட்டுக்கே வரவில்லை . இதோ இப்பொழுது வந்தான் தள்ளாடும் போதையுடன் கழுத்து வரை குடித்து விட்டு..
நிலா – ருத்ரன்.?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels