Episode -82
ருத்ரன் உற்சாகத்துடன் வந்து சேர்ந்தான். மாமா!! என்னை மாமா சொல்ல ஒருத்தன் வந்துட்டான். என தடாலடியாக வீட்டுக்குள் நுழைந்தான்.
இன்பராகவன் மற்றும் சூர்யா இருவர் இருக்க, அங்கே மிதுன், இதழ், பவன்யா, இனியா, இதயன் வெற்றி அவனை பார்த்தார்கள்.
மகி, விவேகா, ரிதம், சத்ய தேவ் என நால்வரும் குழந்தைக்கு தடுப்பூசி மற்றும் இன்னும் பிற பரிசோதனைகள் செய்ய சென்றிருந்தார்கள்.
லிப்ஸ்!! எங்கே மாமா? என கேட்டான்.
அவங்க ஹாஸ்பிடல் போயிருக்காங்க தீரா என இதழ் கூற..
அங்கே நிதின், ஹரிணி , spr, தேஜூவின் கையில் நிவின் என வந்து இறங்கினார்கள்.
ஹே நிவின் குட்டி அத்தை கிட்ட வா! என இதழ் தூக்கி கொண்டு சென்று விட்டாள். அவளுடன் ஒரு படை செல்ல..
மாமா எப்டி இருக்கீங்க? என ருத்ரன் spr கிட்ட பேசினான்.
மா என நிலா தேஜுவின் பக்கம் சென்றாள்.
எல்லாரும் நல்லாருக்கோம் மாப்பிள்ளை! என்றவர் இன்பாவின் அருகில் பேச சென்றார்.
தேஜுவை தனியாக அழைத்து சென்றாள் நிலா.
என்ன டி!! எப்டி இருக்க? என கேட்டார்.
நான் முக்கியமான விஷயம் பேசணும் என சமையல் கட்டின் பக்கம் இழுத்து சென்றாள்.
அப்படி என்னடி விசயம்?
மா எனக்கு இந்த வளைகாப்பு வேணாம்!
ஏன்? என்னாச்சு? என தேஜூ கேட்க..
வேணாம் அவ்ளோ தான்! அப்பா கிட்ட சொல்லிடுங்க!
அதான் ஏன்னு கேட்கிறேன். என தேஜூ அதட்ட..
நிலாவின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள..
ருத்ரன் எதுவும்? என அவரின் முகம் மாற..
அச்சோ அவர் எதுவும் சொல்லல, ஆனால் இது வேணாம்.
நீ இரு நான் ருத்ரன் கிட்ட கேட்கிறேன் என தேஜு நகர..
எவனோ கொடுத்த குழந்தைய வயித்துல சுமந்துகிட்டு அவர் கூட வளைகாப்பில் அவரோட குழந்தைய சுமக்குற போல உட்கார்ந்து சீமந்தம் பண்ணிக்க சொல்றீங்களா? என கேட்டாள்.
தேஜு என்ன சொல்வது என தெரியாமல் பார்க்க..
நிலா அவரின் கையை பிடித்து, நீங்க அப்பா கிட்ட சொல்லி புரிய வையுங்க. எனக்கு எந்த குறையும் இல்ல. நான் சந்தோசமா இருக்கேன் . அவர் குடும்பத்துக்கு அட்லீஸ்ட் இதையாவது நான் செய்யனும் மா! அப்படியே இந்த சீமந்தம் நடந்தாலும் அவங்க மனசுல ஏதோ ஒரு மூளையில் இது தீரா குழந்தை இல்லன்னு நினைப்பாங்க! என் கூட உட்கார்ந்து இருக்கும் போது தீரா கூட நினைக்கலாம். என்னால அவங்க குடும்பத்துக்கு சங்கடம் கொடுக்க முடியாது மா என்றாள்.
தேஜூ தன் மகளை கட்டி கொண்டு அழுதார்.
மா நான் ஸ்ட்ராங்கா தான் இருக்கேன் நீங்க கவலை படாதீங்க. என கூறினாள்.
அதற்குள் சத்ய தேவ், ரிதம், மகி, விவேகா நால்வரும் வந்து சேர்ந்தார்கள்.
அனைவரும் குழந்தையை தூக்கி வாசம் பிடித்து கொஞ்ச ஆரம்பித்தனர். ருத்ரன் மற்றும் இதழ் இருவருக்கும் சண்டையே வந்தது.
நான் தான் first ஏன்னா நான் அவனுக்கு தாய்மாமன் என ருத்ரன் நிற்க.. நான் தான் டா முதல்ல அவன் என் சக்தி அண்ணா பையன். அவனுக்கு நான் அத்தை டா! என பேசி கொண்டே முறைத்தார்கள். அதற்குள் மிதுன் வாங்கினான்.
மா அவனை கொடுக்க சொல்லுங்க என ருத்ரன் விவேகா கிட்ட கூற..
துகில் ஒரு பிஸ் அடி டா! அது உன் மாமான்னு சொல்லிட்டு இருக்கானே அவன் வாயில் நேரா போகணும் என கூறினான் மிதுன்.
மா!! என ருத்ரன் கத்த..
டேய் கிண்டல் பண்றாங்க டா! இதுக்கும் என்ன தான் கூப்பிடுவியா? போய் வாங்கு குழந்தைய என்றார் விவேகா.
இப்பொழுது குழந்தை ருத்ரன் கைகளில்.. நிலா அவன் அருகில் சென்று, என்கிட்ட கொடுங்க என கேட்டாள்.
ப்ச் ஆல்ரெடி நீ தான் உனக்கு ஒரு பாப்பா வயித்துல வச்சிருக்கியே! இவனாவது என்கிட்ட இருக்கட்டுமே என்றான் ருத்ரன்.
இப்படி ஆள் ஆளுக்கு குழந்தைய தூக்க சண்டையிட்டு கொண்டிருக்க.. குட்டி போட்ட கன்னுக்குட்டி பெட்டை மற்றும் சேவல் இரண்டும் தனியாக சென்று விட்டார்கள்.
இப்படி எதுக்கு டி சாரி கேட்டுட்டு இருக்க? என சத்ய தேவ் அவளின் கையை பிடித்து கேட்டான்.
கஜிராஹோல நான் நம்ம குழந்தையை என அவள் நிறுத்தி விட..
சத்ய தேவ் அவளின் உதட்டில் முத்தமிட்டு எனக்கு துகில்லா நீயா அப்டின்னு கேட்டால் நான் உன்னை தான் டி முக்கியம்ன்னு சொல்லுவேன். எனக்கு நீ தான் முக்கியம். உனக்காக தான் அவன். எனக்காக எப்போவும் நீ மட்டும் தான். நீ மட்டும் தான் என அழுத்தி கூறியவன். எனக்கு வருத்தம் தான். ஏன்னா அந்த பேபியையும் நீ தானே கேரி பண்ணிட்டு இருந்த! இப்போ கூட சொல்றேன். உன்னோட பையன் நாளைக்கு அவனுக்கான இணையை தேடிட்டு அவனோட வாழ்க்கைய பார்க்க போயிடுவான். என்றான்.
ரிதம் அவனது உதட்டில் முத்தமிட்டாள். அதற்குள் குழந்தையின் அழு குரல் கேட்க.. சத்ய தேவ் அவளை விட்டு பிரிந்தான். என்னாச்சு எதுக்கு அழுகை உனக்கு? என ரிதம் கேட்டு கொண்டே வாங்கியவள். பால் புகட்டினாள்.
சத்ய தேவ் வெளியே செல்ல போக, ஹே எங்கே போற நீ?
இர்ரி! எல்லாரும் வந்திருக்காக நான் போய் பேசிட்டு வரேன் என பார்த்தான்.
ரொம்ப நேரம் எடுத்துக்காத சீக்கிரமா வா! என்று விட்டு அவள் குழந்தையின் தலையை வருடி கொடுத்தாள்.
ஹே ட்ரீட் எப்போ தர போற?
எதுக்கு ட்ரீட் என சத்ய தேவ் நிதினை பார்க்க..
எதுக்கு ட்ரீட்டா? உன் பையன் வீட்லயே டெலிவரி ஆகிட்டான். அமேசான் பிளிப்கார்ட் மாதிரி! என் பையன் மின்த்ரா போல அலைப்பற பண்ணி வந்தான். உன் பையன் அமைதியா வந்துட்டான் டா! என்றான் நிதின்.
சரி என்ன ட்ரீட் வேணும் சொல்லு!! என சிரித்து கொண்டே கேட்டான் சத்ய தேவ்.
ட்ரீட் வேணாம். அதுக்கு பதிலா ஒரு பெட் வச்சுப்போம்.
என்ன பெட்?
பொண்ணு பெத்துக்கிற போட்டி! என நிதின் கூற..
துதூ ஒரு மினிஸ்டர் மாதிரி பேசு டா! என்றான் சத்ய தேவ். அனைவரும் கலகலப்பாக இருந்தார்கள்.
சத்ய தேவ் நிலாவின் அருகில் சென்றவன். எப்டி இருக்க பாப்பா! என நலம் விசாரித்தான்.
அண்ணா குட்டி பையன் என்ன பண்றான்? எனக்கு பார்க்கணும் போல இருக்கு! என நிலா சொல்ல..
நீ உள்ளே போ பாப்பா! என சத்ய தேவ் அறையை மெல்ல திறந்தான்.
அது அன்னி!! என நிலா தயங்க..
போ ஒன்னும் சொல்ல மாட்டாள் என அனுப்பி வைத்தான்.
நிலா உள்ளே சென்றதும் ரிதம் புன்னகையுடன் வரவேற்றாள்.
அன்னி குட்டி தம்பி என்ன பண்றான்?
சார் இப்போ பயங்கர தூக்கத்தில் இருக்கார். நீயே பாரேன் என காட்டினாள் ரிதம்.
நிலா அருகில் அமர்ந்து குட்டி பையனின் கால்களை வருடி பார்த்தாள்.
சரி சொல்லு நிலா இவன் யாரை போல இருக்கான்? என ரிதம் கேட்க..
நிலா கன்னக்குழி தெரிய சிரித்தவள். அது என இழுத்தாள்.
சொல்லு! என ரிதம் மீண்டும் கேட்க..
அண்ணா போல இருக்கான். ம்ம் அப்புறம் அவனோட ஜாடை கொஞ்சமா உங்க தம்பி போல இருக்கு! என்று கூறினாள் நிலா.
ரிதம் புருவத்தை தூக்கிய படி அப்போ என்னை போல இல்லையா! அந்த தீரா போல இருக்கானா? எப்டி find பண்ண? அந்த அளவுக்கு அவனோட முகம் உனக்கு தெரியுதா என்ன? என கொக்கி போட்டாள்.
அ.. அது அது வந்து என நிலா தயங்க..
ரிதம் சிரித்து கொண்டே நமக்கு யாரை பிடிச்சிருக்கோ! யார் முகம் அதிகமா மனசுல பதிந்து இருக்கோ அதே போல குழந்தை இருக்குமாம். என்னோட மனசுல சக்தி இருக்கான். சோ எனக்கு என் புருஷன் போல தான் இந்த குட்டி ஹீரோ இருக்கான். ஏன்னா இவன் என் புருஷன் ஹீரோ என்றாள்.
நிலா படபடக்கும் இதயத்துடன் ம்ம் என பதில் கொடுக்க.. ரிதம் அவளின் வயிற்றை வருடி பார்த்தாள்.
என்ன அண்ணி? என்று சட்டென சுய நினைவுக்கு வந்தாள் நிலா.
பாப்பாவை நல்லா பார்த்துக்கோ!
ம்ம்!!
தீராவை விட்டு எப்போவும் பிரிய கூடாது. எது நடந்தாலும் நீ அவனை விட்டு போக கூடாது. என் தம்பி கொஞ்சம் instant லூசு. எப்போவும் கிறுக்கு தனம் பண்ணுவான். ஆனால் அதே லூசு தான் ரொம்ப madlyயாக ஒருத்தரையே depend பண்ணி இருப்பான். Family அப்டின்னு வந்தால் அவனுக்கு என் அம்மா! வெளியே அப்டின்னா என் புருஷனை விடாது கறுப்பு போல சுத்திட்டு இருப்பான்.
இதை கேட்டு நிலா மெல்ல புன்னகை செய்ய..
ரிதம் கைகளை பற்றி என் தம்பி இப்போ சக்தி கிட்டருந்து கொஞ்சக் விலகி இருக்கான். அதுக்கு காரணம் நீ!
நிலா ஆச்சரியமாக பார்க்க.. ரிதம் கன்னக்குழி புன்னகையை சிந்தி விட்டு, உன்னை depend பண்ணி அவன் இருக்கான். அது எனக்கு விசிப்லா தெரியுது.
இல் என நிலா ஆரம்பிக்க..
அது தான் உண்மை! இதை நீ அவன் கிட்ட கேட்டாலும் கூட இல்லன்னு தான் சொல்லும் அந்த லூசு. எதையும் கோபமா எக்ஸ்பிரஸ் பண்ணி அதுக்கு பழக்கம். என்றாள் ரிதம்.
நிலா எதுவும் பேசவில்லை..
ரிதம் அவளின் கையை அழுத்தி பற்றி, உங்க ரெண்டு பேருக்கும் பாஸ்ட் எப்டி வேணாலும் இருக்கட்டும். ஆனால் இனி இதுக்கு அப்புறம் அவனை நீ எப்போவும் விட்டு போக கூடாது எது நடந்தாலும் புரியுதா!
என்ன அண்ணி சொல்றீங்க? என நிலா அவளை பார்க்க..
இல்ல நிலா. எதாவது பிரச்னை? ஐ மீன் நிதினுக்கு, நிவாஸ் யாருக்கும் என் தம்பிய பிடிக்காதே அதுக்கு சொல்றேன். நாளை பின்ன எதுவும் பிரச்னை வந்தால் நீ யார் பக்கம் நிப்ப!
நிலா உறுதியாக எனக்கு தீரா தான் முக்கியம் அவர் பக்கம் தான் மன்னி நிப்பேன் என்றாள்.
இது போரும் நீ சமத்து என்றாள் ரிதம்.
இருந்தாலும் ரிதமுக்கு ருத்ரன் விசயம் பற்றி spr வீட்டில் தெரிந்தால் என்ன ஆகுமோ என பயம் இருக்கப்தான் செய்தது.
***
ஹே எதுக்கு டி பேபி சவர் வேணாம்னு சொன்ன?
நிலா..?
தொடரும்
