Episode-107
உன்னோட லவ் ஹிஸ்டரி எனக்கு எதுக்கு? என ருத்ரன் கூற..
இன்னும் அஞ்சு மாசத்தில் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன ஆக போகுதுன்னு தெரியும். எப்டியும் நான் தான் ஜெயிக்க போறேன். சோ எனக்காக சிவா வெயிட்டிங் அவரை கட்டிப்பேன் என்றாள் நிலா.
ருத்ரனின் முகம் சடுதியில் மாறி போக.. கோபத்தை கட்டுபடுத்த எவ்வளவோ முயற்சி செய்தான் முடியவில்லை. எதிரில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை வேகமாக எடுத்து மடமடவென குடித்தவன் அப்படியே முகத்தை கழுவினான்.
நர்ஸ் என நிலா கத்த.. டாக்டர் என ஓடி வந்தாள் ஒரு செவிலி பெண்.
பிரசர் செக் பண்ணுங்க!! என கையை கட்டியபடி கூறினாள் நிலா.
செவிலியின் முகம் மாற, இங்கே ருத்ரன் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.
எவ்ளோ? Range என்ன? என நிலா சாதாரணமாக கேட்க..
140 hypertension stage 2 என்று தயங்கி கொண்டே கூறினாள்.
நோட் பண்ணிக்கோங்க.. என்று விட்டு அவள் திரும்ப..
எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற? என ருத்ரன் கேட்டு விட்டான்.
நிலா அவனை தீர்க்கமாக பார்த்து, ரோல் நம்பர் 22,33,44,55 நாலு பேரும் வாங்க.. என்றாள்.
ருத்ரன் கைகளை இறுக்கி மடக்கியபடி நின்றிருக்க..
நால்வரும் வரிசையாக வந்து நின்றார்கள். நிலா அவர்களை பார்த்தவள். ருத்ரனை பார்த்து, உன்னை விட பலசாலி இவங்க நாலு பேரும். நீ உன்னோட வேலைய மட்டும் பார்த்திட்டு இருந்திருந்தால் நிவாஸ் பொண்டாட்டிய இவங்க தூக்கிட்டு போய் அட்மிட் பண்ணிருப்பாங்க. மீனாட்சிக்கு பெயின் ஸ்டார்ட் ஆகும் போதே நான் இவங்களை வர சொன்னேன். இவங்க ஆல்மோஸ்ட் வந்துட்டாங்க.
ருத்ரன் அவளது முகத்தை பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பி கொண்டான்.
May be உங்களுக்கு இந்த luxurious life கொஞ்சம் புதுசா இருக்கலாம். எங்களை சுத்தி எப்போவும் ஆள் இருப்பாங்க. அண்ட் நீங்க humanity ன்னு சொல்லிட்டு நீங்க பண்ண ஹீரோயிசம் இப்படி சப்புன்னு முடிஞ்சு போச்சு. இது என்னாவது பரவாயில்லை. என்னோட அண்ணன் நிவாஸ்க்கு இந்த விஷயம் தெரிஞ்சா பற்ற வைத்த நெருப்பு ஒன்று போல தான்..
தான் இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாமோ என தோன்றியது.
அண்ட் உங்களோட லைஃப் ஜாக்கெட் ஒன்னு முடிஞ்சிடுச்சு. இன்னும் ரெண்டு தடவை தான் இருக்கு. கோபப்பட்டீங்கன்னா பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு புறப்படலாம். என்றவள் வெளியே செல்ல போக..
அவளின் கையை பிடித்தான் ருத்ரன்.
ஹே என்ன பண்ற? என நிலா பொங்கி கொண்டு வர, அங்கிருக்கும் டேப் கட்டிலில் அவளை தள்ளியவன் மெல்ல படர்ந்தான்.
ஹே ராஸ்கல்!! உன்னை இரு ரோல் நம்பர் என நிலா அழைக்க போக.. உதட்டை கவ்வி கொண்டான் ஆவேசமாக.. முத்தங்கள் தீவிரமடைந்தது.
நிலாவின் தேகக்கூடு அவனுடன் ஒன்ற போராடியது. அவனை கட்டி தழுவ கைகள் ஏங்கியது. முத்தங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல.. அதற்குள் அங்கம் நனைந்து போனது. அந்த வாசத்தை முகர்ந்து கொண்டவன் மெல்ல அவளிடமிருந்து விலகினான் தலையை கோதி கொண்டே..
நிலா கோபத்துடன் தள்ளி விட்டாள். ருத்ரன் சிரித்து கொண்டே நர்ஸ் என கத்தினான்.
வேகமாக உடையில் இருக்குக் ஜிப்பை போட்டு கொண்டு சரியசெய்தபடி எழுந்து நின்றாள் நிலா.
சார் என வேகமாக உள்ளே வந்தாள் செவிலி.
ம்ம் இப்போ டெஸ்ட் எடுக்கலாம். BP செக் பண்ணுங்க என்று கையை நீட்டினான் ருத்ரன்.
செவிலி நிலாவை பார்க்க.. ப்ச் அங்கே என்ன பார்வை எடுங்க மா!! தமிழ் தெரியுமா? தெலுங்கு தானா? எனக்கு வேற தெலுங்கு தெரியாதே!! பொம்மாயி சாரி சாரி டயலாக் மாத்தி சொல்லிட்டேன். அம்மாயி BP டெஸ்ட்
காவலையா என்றான்.
செவிலி சிரிப்பை அடக்கமுடியாமல் நின்றாள்.
மேடம் தேன் நிலா மேடம்.. எடுக்க சொல்லுங்க மேடம் என கொஞ்சல் மொழியில் கூறினான் ருத்ரன்.
அவனை முறைத்த நிலா கண் அசைக்க, உடனே செக் செய்தாள். செவிலியின் கண்கள் விரிய..
எவ்ளோ? என நிலா கேட்க..
நார்மல் மேடம்
ம்ம் போலாம் என நிலா கூற..
நர்ஸ் நீங்க போங்க டாக்டர் பேசண்டை கவனிச்சிட்டு வருவாங்க என்று அனுப்பி வைத்தான் ருத்ரன்.
வழிய விடு ராஸ்கல்..
சோ இதுல இருந்து என்ன தெரியுது? என ருத்ரன் கேட்க..
நிலா சிரித்து கொண்டே இதுக்கு அலையும் ஆளுன்னு தெரியுது என்றாள். எப்படியாவது அவனுக்கு கோபம் வரவைக்க வேண்டும். என்பதற்காகவே..
நிஜமா அலையுது டி நீ சரியா சொல்லிட்ட.. என்னால என்னை கட்டுபடுத்த முடியல. சோ நீ என்ன பண்ற? டெய்லி ஒரு கிஸ் கொடுத்திட்டு போறயா?
செருப்பு பிஞ்சிடும்!!
ஹே ரொம்ப பழசா இருக்கு டி! என்னோட டாடிகிட்ட என் மம்மி சொல்ற டயலாக் இது. புதைஞ்சி போனத சொல்ற! புதுசா வேற எதுவும் try பண்ணு என்றான்.
அவனா முறைத்தபடி அவள் வேகமாக சென்று விட்டாள்.
அவள் சென்றதும் ஒன்று உரைத்தது. எக்காரணத்தை கொண்டும் மீனாட்சி கிட்ட இவள் முன்னாடி பேச கூடாது. அப்போ மறைஞ்சு பேசலாமா? அய்யோ அதுவா முக்கியம் அந்த சைக்கோ நிவாஸ் எதுவும் மீனாட்சிய கஷ்ட படுத்திட்டா என்ன பண்றது என்று தோன்றியது.
யார் அந்த சிவா? என் ஹனி பேபிய லவ் பண்ண? நீ யாரு டா? என யோசித்தவன் வேகமாக போனை எடுத்து ராக்கேசுக்கு அழைத்தான்.
மச்சான் எங்கே டா இருக்க? ஆள் அட்ரசையே காணோம்?
சத்யஜித் ரெட்டி யாருக்கு விசாரி அண்ட் அவருக்கு பையன் சிவநேசன் அப்டின்னு யாரோ இருக்காங்களாம் அது யாரு என்ன மொத்த விவரமும் எனக்கு வேணும் என்றான் ருத்ரன்.
மச்சான் எங்கே இருக்க நீ?
அது வீட்டோட மாப்ளை ஆகிட்டேன். என் பொண்டாட்டி கூப்பிடுறா நான் போயிட்டு வரேன் என போனை கட் செய்தான் என்று சொல்வதை விட போன் கட் ஆனது. அதற்கு காரணம் பேட்டரி வீக்.
என்ன பண்றது? இந்த போனுக்கு பதிலாக வேற போன் வாங்கலாம். ம்ம் இந்த மாச சம்பளம் இருக்குல்ல அதுல வாங்குவோம் என நினைத்தவன் பணத்தை எடுத்து கொண்டு வந்தான்.
எப்படி செல்வது என யோசனை ருத்ரனுக்கு.
சென்று தான் ஆக வேணும். போன் கட்டாயம் வேணும். என நடந்தே சென்றான் ருத்ரன்.
Roll no 21 எங்கே என வீடே அதிரும்படி கத்தினாள் நிலா.
அவன் இல்லை..
இதோ இரண்டாவது லைஃப் ஜாக்கெட் காலியானது. கூடவே ருத்ரன் வாங்கிய புது போனை கண் முன்னால் உடைத்து வீசியிருந்தாள் நிலா.
ருத்ரன்… ?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels