Episode -121
இப்போ என்ன டா பண்ண போற? என இதழ் கேட்க..
விவேகா தன் மகனை முறைத்து பார்த்தார். கண்களில் கண்ணீருடன்.
மா நான் என்ன பண்ணேன்? என்னை எதுக்கு இப்படி பார்க்கிறீங்க? மகி மாமி! நான் என்ன பண்ணேன்? அம்மா கிட்ட சொல்லுங்க! என ருத்ரன் தன் அம்மாவுக்கு பயந்து நடுங்குவது போல பேசினான்.
விடு விவேகா!! என மகி சமாதானம் செய்ய,
எப்படி கா விட சொல்றீங்க? மிதுன உங்க மருமகள் உங்க முன்னாடியே அசிங்கமா நடத்துனா நீங்க சும்மா இருப்பீங்களா? சொல்லுங்க என விவேகா அழுது கொண்டே கேட்டார்.
மாமாவுக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலையே!! அப்புறம் எப்படி மாமி சொல்லுவாங்க என ருத்ரன் கூறி கொண்டிருக்க, ரிதமை கைகளை பிடித்து வம்படியாக அழைத்து வந்த மிதுன் பார்த்தியா மா இவன் சொல்ற அளவுக்கு என் நிலமை ஆகி போச்சு! எப்போ மா எனக்கு கட்டி வைக்க போற ஏதாவது ஒரு பொன்னை! இவன் எனக்கும் எட்டு வருசத்துக்கு சின்னவன் இவனுக்கு ஒரு குட்டி போட்டு இப்போ விவாகரத்து பண்ணி ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்க போறான். அதுக்கும் பொண்ணு கிடைக்குது. அதுவும் இவனை விட மூத்த பொண்ணு என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்க போறா! ஆனால் நான்? எனக்கு என்னை விட பெரியவளும் கிடைக்க மாட்டுகிறா? என்னை விட சின்னவலுகல ஓணான் ஒடக்கான் மாதிரி இருக்கவனுங்க பிக் அப் பண்ணிட்டு போயிடுறாங்க என்ன மா என்னோட நிலைமை?
அதுக்கு முக ராசி வேணும் மாமா?
நான் ரிதம முன்னாடியே propose பண்ணி இருக்கணும். என்னடி? உனக்கு ஏன் அவனை பிடிச்சது? என்னை பிடிச்சிருக்கலாம். எப்போ டி என்கிட்ட எப்பவும் போல பேசுவ? என மிதுன் அவளை சரி செய்ய வேண்டும் என முனைப்புடன் பேசுகிறான். இப்பொழுது கூட நண்பனாக இருக்கிறான். ஆனால் ரிதம் அப்படியே இருந்தாள் எதுவும் பேசவில்லை.
ஹே பேசு டி! நான் மிதுன் டி!! என கைகளை பிடித்து கொண்டான் மிதுன்.
விவேகா தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டவள். ருத்ரனை கோபத்துடன் பார்த்தார்.
மிதுனு பேசாம நீ லவ் பண்ணு டா!! என மகி சொல்ல..
மா எனக்கு பண்ணு பாருங்க ச்ச பொண்ணு பாருங்க. எனக்கு லவ் செட் ஆகாது. என்றான்.
ப்பா!! ம்ம் ப்ப் என துகில் உதட்டில் எச்சில் செய்தான் மிதுனை பார்த்து கொண்டே தூக்கு என்பதை போல..
வாடா மகனே என மிதுன் தூக்கி முத்தமிட..
மாமா பேசாம நீ god father ஆகிடு என ருத்ரன் கூற..
சமையலறையில் இருந்து பருப்பு மத்த எடுத்து கொண்டு வந்தார் விவேகா.
தீரா அத்தை மத்து எடுத்து வர்றாங்க என இதழ் சிரித்து கொண்டே கூற..
மொத்துங்க அத்தை அவனை!! என மிதுன் கூற..
மா நான் என்ன மா பண்ணேன்? இப்போ எதுக்கு கோபமா அடிக்க வர நீ? என ருத்ரன் இதழின் பின்னால் ஒளிந்தான்.
உன்னால டா! உன்னால தான்! அவள் கூட இப்போ மறுபடியும் அவள் வர மாதிரி ஆகிடுச்சு என பற்களை கடித்து கொண்டு பத்ரகாளி போல நின்றார் விவேகா.
அத்தை விடுங்க! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.
என்ன உன்னோட தங்கச்சிக்கு விட்டு கொடுக்க போறியா? உனக்கு ருத்ரன் வேணாமா? என விவேகா கேட்க..
நான் எதுக்கு வேணாம்னு சொல்ல போறேன்? ஏண்டா தீரா? என சிரித்து கொண்டே பார்த்த இதழ், எனக்கு தீரா வேணும். ஆனால் அதுக்கு முன்னாடி அவன் நிலா கூட வாழ்க்கைய முடிச்சுக்க வேணும் தானே! நீங்க தைரியமா இருங்க அத்தை! நானும் உங்களுக்கு மருமகள் தான் என்னடா ஓகே தானே! என இதழ் திரும்பி பார்க்க எச்சில் கூட்டி விழுங்கியபடி பார்த்தான் ருத்ரன்.
என்ன டா எதுவும் சொல்லு! என இதழ் புருவம் தூக்க..
ஹான் அப் அப்படி தான் என சமாளித்தான்.
இதழ் விவேகாவின் அருகில் சென்று, சரிங்க அத்தை கீதாவை வர சொல்லவா? என்றாள்
எதுக்கு மா?
ருத்ரன் நிலா ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும். ஆறு மாசம் அதுக்கு பிறகு தானே எனக்கும் தீராவுக்கும் கல்யாணம். என்ன தீரா நான் சொல்றது சரி தான..
ம்ம் என்றான் ஒற்றை பதிலுடன்..
என்னமா ஒரே வீட்ல இருக்கணுமா? என விவேகா வருத்தப்பட்டு கேட்க..
இங்கே வரட்டும் இல்லன்னா தனி குடித்தனம் வெச்சிடலாம்.
தனி குடுத்தனமா? என விவேகா சாக் ஆக..
நானும் போறேன் அத்தை. தீரா கூட இருக்கேன்.
நாசமா போச்சு!! மா அதெல்லாம் வேணாம். இங்கே வரட்டும் அவள். இங்கேயே ஆறு மாசம் இருக்கட்டும். என்றான் ருத்ரன்.
ஹான் அதுவும் சரி தான் அப்போ தான் உன்னை கண்காணிக்க முடியும் என விவேகா கூற..
மா!! டூ மச்சா போறீங்க!! அவ்ளோ தான் சொல்லிட்டேன். என ருத்ரன் கோபத்துடன் பார்த்தான்.
ஏதாவது ஏடாகூடம் ஆகி போச்சுன்னா என்ன பண்றது? எனக்கு உன் மேலே நம்பிக்கை இல்ல டா என விவேகா உறுதியாக கூறி விட..
கேட்டில் ஹாரன் சத்தம் கேட்டது.
மிதுன் துகிலை தட்டி கொண்டே வந்தவன். Spr வீட்டுல இருந்து கார் வந்திருக்கு என கூறினான்.
கார் உள்ளே வர வேணாம் அங்கேயே நிறுத்த சொல்லு! என விவேகா கத்தினார்.
நிலா இறங்கி கொண்டு வர அவளின் பின்னால் கவின் , கூடவே நிதின் வந்தான்.
கவின் என்னும் கவிநேசன் தான் நிலாவுக்காக வாதாடுகிறான்.
வெளியவே நில்லு வீட்டுக்குள் வர வேணாம். என விவேகா கூற..
இது என் சித்தி வீடு அவங்க சொல்லட்டும் என நிதின் கூற, மகி வெளியே வரவே இல்லை.
சொல்லி விட்டதே அவங்க தான். எதுக்கும் உன் தங்கச்சி இங்கே வந்திருக்கா!! என விவேகாவின் பார்வை நிலாவின் கையில் இருக்கும் குழந்தையின் மீது படிந்தது.
ஆறு மாசம் வாழ சொல்லி இருக்காங்க என கோர்ட் ஆர்டரை நீட்டினான் கவின்.
நிலா எதுவும் பேசாமல் நின்றாள். ருத்ரன் அவளை பார்க்கவே இல்லை வேறு புறம் திரும்பி கொண்டான்.
இதழ் அவளை பார்த்து கையசைத்து உள்ளே அழைத்து சென்றாள்.
விவேகா கோபத்தில் பற்களை கடித்தபடி நிற்க அப்பொழுது தான் இன்பா மற்றும் சூர்யா இருவரும் வந்தார்கள்.
நிதின் கொஞ்சம் சத்தமாக நிலா கையில இருக்க பையன பத்திரமா பார்த்துக்க. சரியா செக் அப் போ! இல்ல வேணாம் நானே உன்னை செக் அப் கூட்டிட்டு போக வரேன். ரெண்டு குழந்தையும் பத்ரம் என்றான்.
எதே குழந்தையா? என முதலில் ஷாக் ஆனது மிதுன் தான்.
விவேகா அதிர்ச்சியில் வாயை பொத்தி கொள்ள, இன்பா ருத்ரனை வெட்டவா குத்தவா என்னும் ரீதியில் பார்த்தார்.
ருத்ரன் சட்டென நிலாவை பார்த்தான். அவள் தலையை குனிந்து கொண்டு நின்றாள்.
உங்க பையன் எங்க வீட்ல இருந்து வந்து மூணு மாசம் ஆகுது. அவள் வயித்துல இப்போ மூணு மாசம். கணக்கு போட்டுக்கோங்க. வர்றேன் என புறப்பட்டான் நிதின்.
விவேகா ருத்ரனின் தலை முடியை கொத்தாக பிடித்தவர். என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க? என் ஆசையில மண்ணை அள்ளி போட்டுட்டியே பாவிஈஈஈஈஈ!! என்னடா இதெல்லாம் என தலை தலையாக அடித்து கொண்டே அவனை அடித்தார்.
ருத்ரன்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels