அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
272 views

Episode -125 

என்ன பண்றீங்க? பிளீஸ் என சிணுங்கி கொண்டே நின்றாள் சந்தனா. அவளின் கண்களை மூடி இருந்தான் சத்ய தேவ். 

பிளீஸ் தேவ்!! கைய எடுங்க!! என்னாச்சு? என களுக் களுக் சிரிப்புடன் அவள் சினுங்க, ஒரே நிமிசம் என கையை எடுத்தான். 

சந்தனாவுக்கு முன்னால் உணவு பதார்த்தங்கள் அடுக்கப்பட்டிருக்க, கண்களை விரிய பார்த்தாள். 

உனக்காக எல்லாமே நான் பண்ணேன் என கண் சிமட்டினான் ஆசையுடன்.. 

அவனை இறுக்கி அணைத்து கொண்டு முத்தம் பதிக்க நெருங்கினாள். 

ஃபர்ஸ்ட் அதை டேஸ்ட் பண்ணுங்க மேடம் என சத்ய தேவ் அவளை கட்டாய படுத்தி அமர வைத்து அனைத்தையும் பரிமாறினான். 

எல்லாமே சூப்பர் என ஆசையுடன் சாப்பிட்டாள். அடுத்த நாள் இருவரும் சேர்ந்து செக் அப் சென்றார்கள். 

பேபி நல்லா ஹெல்தியா இருக்கு. இதே போல எப்பவும் ஹேப்பியா இருங்க என டாக்டர் கூறி அனுப்பினார். 

எப்போ வளைகாப்பு செய்யலாம் என அவனது முகத்தை பற்றி முத்தமிட அருகில் நெருங்கினாள் சந்தனா. 

உன்னோட விருப்பம் பேபி என சத்ய தேவ் கூற.. 

இன்னும் ரெண்டு நாளில் ஆறு முடியுது. அப்புறம் ஏழு ஸ்டார்ட் ஆக போகுது. எப்போ தேவ் பண்றது? 

7 மாசம் ஆரம்பத்திலேயே பண்ணிடலாம் சனா. என சத்ய தேவ் கூற.. 

அப்போ இனி ஜாலி தான் என உற்சாகமாக சந்தனா கூற.. 

என்ன ஜாலி? என சத்ய தேவ் கேட்டான். 

கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட்டு அப்போ நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தோம். இப்போ கண்சீவ் ஆனதுல இருந்து ஒரு முத்தம் கொடுக்க கூட சார் பக்கத்தில வரதில்ல. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என சந்தனா பார்த்தாள். 

என்ன சந்தேகம்? இப்போ கூட உன்னை அணு அணுவா சித்ரவதை படுத்தி கொல்ல தோணுது தெரியுமா? என்றான் சக்தி. 

சந்தனா அவனை புருவம் சுருக்கி பார்க்க, 

சத்ய தேவ் கண்கள் சிவக்க, படுக்கையில் உன்னை மொத்தமா… என்றவன் வேறு புறம் திரும்பி கொண்டு கஷ்டபட்டு உணர்வுகளை கட்டு படுத்திட்டு இருக்கேன் நான். அது உனக்கு தெரியுமா? என கூறினான். 

டேய் கிஸ் பண்ணிடு இல்லன்னா அவளுக்கு சந்தேகம் வந்திடும் என காதுக்குள் இருக்கும் குட்டி மிஷினில் நிதின் குரல் கேட்க..  

சந்தனா யோசிப்பதற்குள் சட்டென திரும்பியவன். அவளை சுவற்றில் சாய்த்து கஷ்டபட்டு முத்தமிட்டான் மூர்க்கமாக.. 

சந்தனா கண்கள் சொக்கி நின்று அவன் பின்னந்தலையில் கோதி கொடுக்க, அவளின் தோல் பட்டையை அழுத்தி பிடித்தான். 

ஸ்ஸ் என முனகல் சத்தம் கேட்க வேகமாக அவளிடமிருந்து விலக்கினான். 

இதுக்கு தான் சொன்னேன் வேணாம்னு பாரு உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் என சத்ய தேவ் தோல் பட்டையில் முத்தமிட.. 

இந்த இன்னும் ஒரு மாசம் தான!! அப்புறம் டெலிவரிக்கு சார் ஹெல்ப் பண்ணுவீங்க தானே!! அதுக்கு தான் வெயிட்டிங் என்றவள் அவனை தின்பது போல பார்த்து கொண்டே சென்றாள். 

சக்தி வாழ்வு தான் என நிதின் குரல் கேட்க, கைகளை இறுக்கி மடக்கினான். 

ஒரு பெரு மூச்சை விட்டவன் அப்படியே அமர்ந்து விட்டான். தனது மகனின் பிறந்த நாள் இன்று. மனதை போட்டு பிசைந்தது. அங்கே அனைவரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று நினைக்கவே மிகவும் வேதனையாக இருந்தது. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, சத்ய தேவ் அவளின் முன் சில தேதியை காலண்டரில் காட்டினான். 

என்ன இது? 

இந்த நாலு டேட் ரொம்ப ஸ்பெஷல் இந்த மந்த்ல. சோ நம்ம முதல்ல pre pregnancy photoshoot பண்றோம் தென் சீமந்தம். உனக்கு ஓகே வா? என சத்ய தேவ் கேட்க

கண்கள் விரிய பார்த்தாள் சந்தனா. Pre pregnancy photoshoot அவள் எதிர்பார்க்க வில்லை. அதை விட முக்கிய குறிப்பு ரிதம் கருவாக இருக்கும் போது கூட pre pregnancy photoshoot எடுக்க வில்லை. ஆனால் தன்னுடன் எடுத்து கொள்ள ஆர்வமாக இருக்கிறான் என்றால் அதற்கு அர்த்தம்? இன்னும் வேறு என்ன வேண்டும்? என தோன்றியது. 

ஹான் எனக்கு ஓகே என சந்தனா உற்சாகமாக அவனது உதட்டில் முத்தமிட, அப்போ ஓகே வா என்று பதில் முத்தம் கொடுத்தான். 

ம்ம் என கூறியவள். வளைகாப்பு விஷயத்தை ப்ளாக், சனாதனன், துட்சாதனன் என அனைவரிடமும் கூறி விட்டு போனை வைத்தாள். 

Pre pregnancy photoshoot விமர்சையாக நடந்தது. உற்சாகத்தில் திளைத்தாள் சந்தனா. 

ஹே சனா இப்போ பேபி உள்ளே இருக்கா? நாளைக்கு பேபி பிறந்ததும் இந்த ரெண்டு போட்டோ அதாவது உன்னோட வயித்த பிடிச்சிட்டு நான் நிக்கற போல, குழந்தை பிறந்ததும் அவளை கையில வச்சிட்டு இதை re create பண்ணா நல்லாருக்கும்ல? உனக்கு ஓகே வா? என சத்ய தேவ் கேட்க.. 

ம்ம் என கண்களில் நீர் கோர்க்க அவனை பார்த்தாள். 

என்னாச்சு? என அவளின் நெற்றியில் முத்தமிட்டான். 

ஒண்ணுமில்ல என அவனை அணைத்து கொண்டாள். 

இதோ வளைகாப்பு அவளின் உறவுகள் விதார்த், சனாதனன், ப்ளாக் ஈகில், துச்சாதனன் அனைவரும் வந்திருந்தார்கள்.  பெரிதாக அவனுக்கு அடையாளம் தெரியாததை போல காட்டி கொண்டான். 

அங்கு தான் பிரச்னையே வெடித்தது. சந்தனாவின் கண் முன்னால் சனாதனன் சத்ய தேவ்வை சுட்டு விட.. 

சந்தனா..? 

தொடரும்..

You may also like

Leave a Comment