Episode-131
என்ன என்கிட்ட டிரை பண்ற? என ரிதமின் பார்வை சத்ய தேவ்வின் மீது படிந்தது.
துகில் வயித்துல இருக்கும் போது உனக்கு நான் போட்ட தாலி நினைப்பு இருக்கா?
ப்ச் என உச்சி கொட்டினாள் ரிதம்.
“உன்கிட்ட சரிகா என்ன பேசினா? அவள் கிட்ட நீ என்ன பேசின? அரிச்சந்திராவ நீ கொலை பண்ணது, ப்ளாக் ஈகில் வார்த்தைக்கு கட்டு பட்டு இருந்தது. அவன் உன்னை போன் பண்ணி ப்ளாக் மெயில் பண்ணது இப்படி எல்லாமே எனக்கு தெரியும். அந்த தாலியில நான் மைக்ரோ சிப் பிக்ஸ் பண்ணி வச்சிருந்தேன்.”
ரிதமின் முகம் சடுதியில் வெளிறி போனது. சத்ய தேவின் முகம் கோபத்தில் சிவந்து போக, நீ வேணும்னா என்னை உன்னோட புருஷனா, காதலனா, இல்ல ஒரு மூணாவது மனுஷனா? இப்படி எந்த இடத்துலயும் வைக்கல. அப்படி வச்சிருந்தா இத்தனை பிரச்னையையும் என் கிட்ட சொல்லி இருந்தேனா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அதை face பண்ணியிருந்திருக்கலாம். அதை கம்ப்ளிக்கெட் பண்ணது நீ. என கர்ஜனையுடன் முடித்திருந்தான்.
எதுவும் பேசவில்லை முகத்தை திருப்பி கொண்டாள். நான் அப்படி இருக்க முடியாது. ரிதம் என் பையனோட அம்மா, என்னோட காதல் மனைவி, yes I love her அவள் எனக்கு வேணும். அவளை காயப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ முடியாது. அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். அதான் இதை நானே face பண்ண முடிவெடுத்தேன். எல்லாத்தையும் முடிச்சேன். அதுல மிச்சம் இருக்கவளை உன் கையால முடிக்கணும். என முன்னால் நடந்தான்.
ரிதம் அவன் பின்னால் நடந்தாள். அங்கும் இங்கும் நடந்தபடி சரிகா நின்று கொண்டிருக்க, சத்ய தேவ் வந்தான்.
தேவ்!! என கண்களில் ஒளியுடன் அழைத்தாள். அது ஒரு நிமிடம் தான். சத்ய தேவின் பின்னால் ரிதம் வருவதை பார்த்ததும் சடுதியில் முகம் மாறி போனது. அதுவும் அவளது வயிற்றை பார்த்ததும் சரிகா அதிர்ந்து நின்றாள்.
சாரி டூ சே திஸ் சனா! சந்தனா! சரிகா நான் பழி வாங்கினேன். எஸ் உன்னை பழி வாங்கினேன். அவளுக்காக.. என கைகளை கட்டியபடி கூறினான்.
சரிகா மூச்சு வாங்கி கொண்டே தள்ளாடியபடி நின்றாள்.
ப்ளாக் ஈகில், திட்சாதனன் , சனாதனன் எல்லாரும் சொன்னது உண்மை தான். அவங்களை நான் பேச விடல.. அண்ட் அவங்க என்னை சுடல.. நானே சுட்டுகிட்டேன். எல்லாம் உனக்காக என்றான்.
பித்து பிடித்தவள போல பார்த்தாள் சரிகா.
நீ கொஞ்சம் வெளியே போ என ரிதம் கூற..
சத்ய தேவ் எதுவும் பேசாமல் நகர்ந்தான். ரிதம் அவளின் முன்னால் சென்று தலை முடியை கோதி கொண்டவள். அவனை படுகுழியில் புதைச்சாலும் ரிதம் ரிதம்ன்னு தான் துடிப்பான். இப்போ தெரிஞ்சிருக்குமே! சொல்லி அடிக்க மாட்டேன். சொல்லாம மொத்தமா க்ளோஸ் பண்ணிட்டேன். இப்போ தெரியுதா ரிதம் இன்ப ராகவன் நான் டி!! இதோ வயித்துல ரெண்டு பேரை துணைக்கு கொடுத்திட்டு தான் உன் கூட அந்த வீட்ல இருந்திருக்கான். அப்போ பார்த்துக்கோ அவனுக்கு என் மேல காதல் இல்ல பைத்தியக்கார தனம் என்றாள் ரிதம்.
சரிகா அதே இடத்தில் அமர்ந்து கொண்டவள் கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டியது. இப்பொழுதே தன்னை மாய்த்து கொள்ள வேண்டும் என தோன்ற.. வேகமாக கண்ணை துடைத்தவள். என்னை சுட்டுடு!! என இரண்டு கைகளையும் விரித்து காட்டினாள்.
ரிதம் புன்னகையுடன் மாட்டேன். நீ உன் குடும்பத்தை நினைச்சு துடி துடிச்சு சாகனும். அவங்களுக்கு நீ எட்டப்பன். பச்சை துரோகி. அவங்களை கூட நீ தானே கொன்ன!! ரொம்ப நல்லாருக்கு. அதையெல்லாம் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கல
ஹா என கத்தினாள் சரிகா.
நேரமாச்சு என சொல்லி கொண்டே சத்ய தேவ் உள்ளே நுழைந்தான்.
சரிகா அவனை பார்த்து, நான் கலங்கள சத்ய தேவ். போதும் உன் கூட வாழ்ந்த வாழ்க்கை. அதுக்காக அவங்களை கொன்றதை கூட நான் நியாயமா எடுத்துப்பேன். உன் பொண்டாட்டியா உன்னோட தாலிய சுமந்திட்டு தான் சாக போறேன். உன்னோட இருந்ததை என்னோட கடைசி மூச்சு வரைக்கும் மறக்க மாட்டேன் அடுத்த ஜென்மம் அப்டின்னு ஒண்ணு இருந்தால் கண்டிப்பா ரிதம உன் கூட சேர விட மாட்டேன். நான் தான் உன் பொண்டாட்டி. Love you தேவ். தேவ் லவ் யூ!! லவ் யூ தேவ்!! தேவ் தேவ் தேவ் என கத்தி இருந்தாள் சரிகா.
இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு அவளுக்கு..
காரில் ஏறியதும் சத்ய தேவ் அவளின் கையை பற்றினான்.
ப்ச் என வேகமாக தட்டி விட்டாள். முகமெல்லாம் அழுத்தத்தில் இருந்தது.
அவள் கிட்ட நீ பேசின எல்லாத்தையும் கேட்டேன்.
வீட்டுக்கு வண்டிய எடு!!
என்னடி பிரச்னை? என சத்ய தேவ் கேட்க..
ரிதம் அவனை தீர்க்கமாக பார்த்தவள். சட்டை காலரை இழுத்து பற்றி, எனக்கு உன்னை ஏத்துக்க முடியல!! போதுமா?
அதான் ஏன்னு கேட்கிறேன்? என்றான் காட்டமாக..
நீ அவள் தொட்ட பொருளாகிட..
ஹே அந்த குழந்தை நிதின் – ஹரினிக்கு பிறந்தது. அவள் சரோகேட் மதர்.
அவள் சொன்னதை கேட்டியா இல்லையடா? என கத்தி விட்டாள் ரிதம்.
என்னடி பிரச்னை? அவள் என்ன சொன்னா?
உனக்காக மூணு நாலு கொலை பண்ணிருக்கா அப்போ எந்த அளவுக்கு அவளோட மனசுல நீ இருப்ப? நீ என் கூட இருந்தால், தொட்டால் எல்லாமே அந்த சரிகா பேசின விடயம் தான் என் ஞாபகத்துக்கு வரும். சிம்பிளா சொல்றேன். நீ வேணாம். என்னை விட்டுடு. நமக்குள்ள எந்த பிசிக்கல் டச்சும் இனி இல்ல. விவாகரத்து பண்ணி என்னோட டாடி மம்மிய சமாளிக்க முடியாது. நான் இப்படியே இருந்திடறேன். உன்னை நான் முதன் முதலில் ஏர்போர்ட்டில் பார்க்கும் போது சொன்னேன் stranger அப்டின்னு இனி நம்ம ரெண்டு பேரும் stranger thats it என்றவள் வேறு புறம் திரும்பி கொண்டாள்.
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சுடன் வண்டியை எடுத்தான். என்ன சொல்வது என தெரியவில்லை. வீட்டுக்கு சென்றதும் காரில் இருந்து இறங்கியவள் வாசலை அடையும்போதே வலி எடுக்க ஆரம்பித்தது.
அப்பா என கத்தியவள் அப்படியே அமர்ந்து விட..
சத்ய தேவ் வேகமாக அருகில் நெருங்கினான். அவளை அள்ளி கொண்டான்.
என்னாச்சு என அனைவரும் பதட்டத்துடன் ஓடி வர நிலா வேகமாக வந்தாள்.
அப்பா!! டாடி!! டாடி என கத்தினாள் ரிதம். டிம்பிள் ரிதம் மா என இன்ப ராகவன் பதறியடித்து கொண்டு வந்தார்.
டாடி தூக்குங்க ஹாஸ்பிடல் வேணாம். நம்ம வீட்டுக்கு போலாம்.
அன்னி என நிலா அவளை பிடிக்க வர,
தொடாத!! போயிடு!! என எட்ட நிறுத்தினாள்.
நிலாவின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. சத்ய தேவ் அவளின் முகத்தை பிடிக்க,
டாடி எனக்கு வீட்டுக்கு போகணும் என ரிதம் கூற..
நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. இது எட்டு மாசம் தான் ஆகுது குழந்தைகளுக்கு ஹாஸ்பிடல் போகணும். ரெண்டு குழந்தை டெலிவரி வந்து ரொம்ப ரிஸ்க். அண்ணா அன்னி கிட்ட சொல்லுங்க. சித்தி சொல்லுங்க என நிலா எடுத்து கூற..
மகி அருகில் வந்து ஹாஸ்பிடல் போலாம் ரிதம். சொல்றத கேளு மா என சொல்லி கொண்டிருக்க..
ஓகே மாமி என்றவள். டாடி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ! தம்பி வாடா என அழைத்தாள். சத்ய தேவ்வை அவள் அப்பட்டமாக விலக்கி வைத்தாள்.
அங்கே தனிமரமாக நின்றான் சக்தி. வீட்டில் இருக்கும் அனைவரும் ஹாஸ்பிடல் விரைந்து சென்று விட, நிலா தனது அண்ணனை பார்த்தாள் கண் கலங்கி போனது.
என்னாச்சு? அண்ணா!! என நிலா கேட்க…
ஒண்ணுமில்ல மா என ஒற்றை வரியில் முடித்து கொண்டவன். அப்படியே அமர்ந்து விட.. இதோ போகும் வழியிலேயே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
ஒருவன் பிறந்தான். இன்னொருவன் ஹாஸ்பிடல் சென்றதும் பொறுமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் பிறந்தான்.
ரிதம் மயக்க நிலையில் இருக்க, சக்தி பையன் பிறந்திருக்கான் என சூர்யா ஹாஸ்பிடல் வர சொன்னார்.
ஹாஸ்பிடல் வந்தான் தயக்கத்துடன்.. யாருக்காக அனைத்தையும் செய்தானோ அவளே கடைசியில் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் நன்றாக தெரிந்தது.
இன்ப ராகவன் முகத்தில் அத்தனை சந்தோஷம். ருத்ரனுக்கு யாரை அள்ளி கொள்ளலாம் என குழப்பம். கையில் துகில் இருந்தான்.
மகியின் கையில் ஒரு குழந்தை, விவேகாவின் கையில் இன்னொரு குழந்தை. ருத்ரன் சிரித்து கொண்டே துகில் செல்லம் உனக்கு ரெண்டு தம்பி இருக்காங்க என காட்டினான்.
ரிதம் கண் விழித்ததும் பார்த்த முதல் உருவம் சத்ய தேவ் தான். அவனை பார்த்ததும் முகம் திருப்பி கொண்டாள்.
ஹே அன்னி இவனுக்கு நான் ரெண்டு பேர் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன் என இதழ் ஆரம்பிக்க..
நான் முடிவு பண்ணிட்டேன் இனி என் பசங்க பேருக்கு பின்னாடி தேவ் வராது என்றாலே பார்க்கலாம்.
என்ன ரிதம் சொல்ற? என விவேகா பதட்டத்துடன் கேட்க..
சத்ய தேவ் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. வெளியே சென்று விட..
தேவ் ஆதித்யன், தேவ் சாகித்யன் என்றவள் இருவரையும் பார்க்க ஒரே போல இருந்தார்கள்.
Identical twins பிறந்திருந்தார்கள்.
தொடரும் .