அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
242 views

Epi-134

எனக்கு இப்போவே விவாகரத்து வேணும். என நிலா உள்ளே கூறி விட, 

ருத்ரனும் அதை அமோதித்தான். இங்கே வெளியே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த இதழினியை பார்த்த சர்வேஷ்வரன் அவளின் கையை பிடித்தான். 

யூ ராஸ்கல் என கையை விடுவிக்க அவள் உதறி விட, வேகமாக அவளின் இடையை பிடித்து கொண்டவன் அப்படியே அழைத்து சென்றான் காருக்கு. 

ப்ச் விட்ரா ராஸ்கல் என இதழ் துள்ள, உஷ்ஷ்ஷ்!! என ஆள் காட்டி விரல் கொண்டு வாயில் வைத்து காட்டியவன். சத்தம் போடாதடி என இழுத்து சென்றான் காருக்குள். கார் வேகமாக சீறி பாய்ந்தது. ( இந்த content மற்றும் அவர்கள் இருவரின் காட்சிகள் அனைத்தும் நான் பொல்லாதவன் கதையில் வரும். Ok நான் பொல்லாதவன் எப்போ வரும்? அசுரனும் அகதியும் 🔥 முடிஞ்சு வரும்) 

கவுன்சிலர் இருவரையும் மாறி மாறி பார்த்தவர். வெயிட் பண்ணுங்க என அனுப்பி வைத்தவர். அவர்களின் வழக்கறிஞர்கள் இருவரிடமும் பேச ஆரம்பித்தார். 

இருவரும் வெளியே வந்தார்கள் எதுவும் பேசாமல்.. ருத்ரன் எதிரில் இருப்பவளை முறைத்து பார்த்தான். 

நிலா பாவமாக நின்றாள். என்ன செய்வாள்? அவனது அருகில் சென்றவள். என்னால வீட்டுக்கு வர முடியாது. நான் இப்படியே போயிடவா? 

என்னாச்சு? 

உங்களுக்கு சொந்தம் இல்லாத நான் எதுக்கு அங்கே இருக்கணும்? அங்கே நடக்குற எதையும் என்னால பார்த்திட்டு உயிரோட இருக்க முடியும்னு தோணல. 

நான் பார்த்திட்டு இருக்கலையா என்ன? அவன் கிட்ட அப்படியே விரமத்தியா பேசிட்டு நின்னியே அதையெல்லாம் நான் பார்த்திட்டு தானே இருக்கேன். அப்புறம் என்னடி கேடு உனக்கு? என பழைய ருத்ரனாக ஒரு நொடி மாறி இருந்தான் ருத்ரன். 

நிலா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, ருத்ரன் விரலை விட்டு எண்ணி கொண்டே கோபத்தை கட்டு படுத்தியவன். நல்லா புடிச்சிருக்க!! அப்படியே ஒழுகி ஊத்துற அளவுக்கு பேசுறான். அப்புறம் என்ன? கொண்டாட்டம் தான். Load மொத்தமும் இங்கே இறக்கி வச்சுட்டு அவனை போய் கட்டிக்கடி!! என்ற ருத்ரன் அருகில் நெருங்கி அவளின் கையை பற்றினான். 

என்ன பண்றீங்க தீரா? 

No no way!!.. இனி தீரா!! வீரா சூரா சுறா அப்டின்னு கூப்பிடும் வேலைய வச்சுகிட்ட.. அவ்ளோ தான் சொல்லிட்டேன். எனக்கு என் குழந்தை முக்கியம்.. என்றான் அதிகாரமாக.. 

அதுக்கு எதுக்கு தோள் மேல கைய போடுறீங்க. 

உள்ளே என் குழந்தை தான இருக்கு. இது டெலிவரி ஆகிற வரைக்கும், இதை நீ டெலிவரி பண்ண எல்லா ஹெல்பும் நான் பண்ணுவேன். என்றானே பார்க்கலாம். 

ஹாங் என அவள் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க, என்னடி பார்க்கிற? என மோவாய் பற்றினான் அழுத்தமாக.. 

தீரா!! என நிலா பேச வர, உதட்டை அழுத்தி கிள்ளினான். 

ஸ்ஹா!! என நிலா திணற.. 

இப்போ தானே சொன்னேன் கூப்பிடாதன்னு சொன்னேன். என ருத்ரன் அவளை பார்த்தவன் நிலா எதிர்பாரா நேரத்தில் அவளின் வயிற்றை வருடினான். 

நிலாவின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள, என்ன சொன்ன? வீட்ல நடக்கிற விசயத்தையெல்லாம் பார்த்தா உயிரோட இருக்க முடியாதோன்னு தோணுது அப்டின்னு தானே சொன்ன? இதெல்லாம் நம்புற போலவா இருக்கு? என்னமோ என்னை லவ் பண்ணவ மாதிரி பேசுற? என கேட்டானே பார்க்கலாம். 

அது அது வந்து… 

ஹே என அவளின் கழுத்தை பிடித்த ருத்ரன். நீ தானே விவாகரத்து பண்ணுவேன்னு சொன்னா? சொல்லு டி!! என பற்களை கடித்தான். 

ம்ம் நான் தான் சொன்னேன். என நிலா தலை குனிந்து கொண்டாள். 

ருத்ரன் பெரு மூச்சுடன் தலையை கோதி கொண்டு, அன்னிக்கு நான் ரவுத்ரனை உன்னோட ரூம்ல போட வந்த அன்னிக்கு என்ன நடந்தது? 

என்ன நடந்தது? என நிலா வேறு புறம் திரும்பி கொள்ள, அன்னிக்கி உன்னை தொடும் போது எப்டி இருந்தது தெரியுமா? என ருத்ரன் நேராக அமர்ந்தான். 

நிலா வெடுக்கென அவன் பக்கம் திரும்பினாள். 

உன்னை தொட கையெல்லாம் கூசுச்சு. என்னோட உணர்வுகளை நினைச்சா அதே இடத்துல தூக்கு போட்டு தொங்கு டா அப்டின்னு தோணுச்சு. 

நிலா எதோ பேச வந்தவள் வேகமாக கண்களை துடைத்து கொண்டு பார்க்க, 

அப்புறம் எதுக்கு டா தொட்ட அப்டின்னு கேட்க தானே நினைச்ச? என ருத்ரன் அவளை பார்க்க.. 

இல் இல்ல என்றாள் நிலா. 

ருத்ரன் பெரு மூச்சுடன் தலையை கோதி கொண்டே, என்னை கேவலமா பேசின அதை அக்சப்ட் பண்ணேன். என்னை அசிங்கமா நடத்தின. ஆனால் எனக்கு அது அசிங்கமாவே தெரியல. உனக்கு பண்ண விசயம் எல்லாத்தையும் நான் ஆத்மார்த்தமா தான் செஞ்சேன். அதாவது ஹைதராபாத்ல என்னை வேலைக்காரனா கூட்டிட்டு போனியே அதை பத்தி சொல்லிட்டு இருக்கேன் என்றான் ருத்ரன். 

நிலாவின் இதயம் வேகமாக துடிக்க, அவனை பதட்டத்துடன் பார்த்தாள். 

ருத்ரன் சிரித்து கொண்டே to be frank என்னை நீ வீட்டோட மாப்ளையா கூட்டி போயிருந்தால் கூட நான் என்னோட தன்மானத்தை விட்டுட்டு உன் கூட வந்திருப்பேன். அதுக்கு காரணம் என்னன்னா நான் உன்னை அந்த அளவுக்கு விரும்பினேன். It’s not based intimate… எனக்கு உன்னை பிடிக்கும். Thats it… உன்னை வெறுக்க காரணங்களை நானே தேடிக்கிட்டேன். ஆனால் இது எல்லாத்தையும் நீ உதாசீனம் செஞ்சது கூட என்னை hate பண்ணவே இல்ல. கூடவே நீ என்னையும் மீனாட்சி சாரி கண்மணியையும் சேர்த்து வச்சு பேசி அதுக்காக என் கூட intimate ஆக இருந்தியே! அதுக்கு கூட நான் feel பண்ணல. அதை நான் காதலா பார்த்தேன். உன்னோட கோபத்தை ரசிச்சேன். உன்னோட possesivenessக்கு பைத்தியமானேன். 

என்றவன் பெரு மூச்சுடன் அவளை பார்த்தான். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, உண்மையாகவே நான் எங்கே தெரியுமா நான் தோற்தவனா feel பண்ணேன்? என ருத்ரன் அவளை பார்க்க, நிலா என்ன சொல்வது என தெரியாமல் பார்த்தாள். 

அ… அந்த பார்வதி… உங்க வீட்டு வேலைக்கார பொண்ணு… அவள்  கூட நீ சேர்த்து வச்சு பேசின பார்த்தியா? அப்போ தாண்டி நான் மொத்தமா.. என நிறுத்தினான். 

என்னை அலையுற போல காட்டிட்ட! என்னை… என ருத்ரன் பார்க்க.. 

நிலா..? 

தொடரும்..

You may also like

Leave a Comment