அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
278 views

Episode 137

என்ன சொல்ல போகிறான்? என இரவு வரை காத்திருந்தாள் நிலா. 

இன்ப ராகவன் ரவுத்ரனை வைத்து கொண்டிருக்க, மாமா என முன்னால் சென்றாள். 

சொல்லு மா!! 

அவனை கொஞ்சம் தர்றீங்களா? இன்னிக்கி முழுக்க அவனை நான் பார்க்கவே இல்ல. என நிலாவின் தாயுள்ளம் துடிக்க கேட்டாள். 

ம்ம் தாராளமா. உன் பையன் உனக்கு தான் முதல் உரிமை இந்தா மா என நீட்டியவர். உனக்கு இவனை வச்சுக்க ஆசைன்னா நீயே வச்சுக்கோ. கோர்ட் ஆர்டர் பாலோ பண்ண அவசியம் இல்ல. அது தேவையும் இல்ல. என் பேரன் இந்த வீட்டு வாரிசு இவன். என்னோட பேரன் எவ்ளோ உச்சிக்கு போனாலும் அவன் பின்னாடி ரவிச்சந்திரன் குடும்ப வம்சம் அதோட ரத்தம் தான் இருக்கும். என்றவர் உனக்கு தயக்கம் வேணாம். என அனுப்பி வைத்தார். 

ஏனோ இன்ப ராகவன் பேசியது உள்ளுக்குள் ஒரு நிம்மதியை கொடுத்தது. அழகா உங்க தாத்தாவே சொல்லிட்டார். இனி அம்மா கூட நீங்க இருக்கலாம் தெரியுமா என மகனுக்கு முத்தமிட்டு தூக்கி கொண்டே வந்தாள் நிலா. 

அங்கே ருத்ரன் இருக்க, புருவம் சுருக்கி பார்த்தவள். அவனது முகத்தை பார்த்ததும் ஒரு நொடி அசந்து விட்டாள். 

தாடியுடன் சுற்றி கொண்டிருப்பவன் இன்று திருத்தம் செய்து, போலீஸ் போல மீசையை முறுக்கி விட்டு, ஹெர் கட்டிங் செய்து பார்க்கவே பளபளப்பாக இருந்தான். நிலா வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு கொண்ட ருத்ரன் நெளிந்து கொண்டே, க்கும் என என குரலை சிரும்பினான். 

ம்ம் சொல்லுங்க!! என்ன விசயம்? எதோ சொல்லணும்னு சொன்னீங்களே? என நிலா படுக்கைக்கு வர, 

கையில் மகனை பார்த்த ருத்ரன், இவனை எதுக்கு தூக்கிட்டு வந்த? கொண்டு போய் என் அப்பா கிட்ட கொடுத்திட்டு வா!! 

என்ன பேச்சு இது? இவன் என் பையன்? இன்னிக்கு காலையில் இருந்து இவனை பார்க்கவே இல்ல. மகாராஜா அவங்க தாத்தா கூட ஜாலியா ஊர் சுத்த போயிட்டார். அவருக்கு அம்மா இருக்கிறதையே மறந்து. என கொஞ்சி முத்தமிட்டவள் அப்படியே படுக்கையில் கிடத்தினாள். 

அவ்ளோ தானா இன்னும் வேற எதுவும் இருக்கா? என ருத்ரன் கேட்க, 

கொஞ்சம் வெளியே இருங்க அவனுக்கு நான் feed பண்ணனும். அப்படியே தூங்கிடுவேன். சோ எது பேசியதாக இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் என நிலா புடி கொடுக்காமல் பதில் கொடுக்க, வேகமாக அறையை விட்டு சென்றிருந்தான் ருத்ரன். 

மகனுக்கு பாலை புகட்டி கொண்டிருந்தவள் அப்படியே யோசனையில் ஆழ்ந்தாள். நல்ல வேலையாக ருத்ரன் சென்று விட்டான். இல்லையெனில் என்ன நடக்கும்? தறிகெட்டு அவன் பால் பார்வை ஈர்க்கப்படும். ரசிக்க தோன்றும். 

ரவுத்ரன் நெண்டி கொண்டே திரும்பி உறங்கி விட்டான். நிலா அப்படியே கண்களை மூடி தூங்கி விட்டாள். 

தூங்கிட்டியா என்ன? என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் ருத்ரன். 

திடுக்கிட்டு பார்த்தவள். வேக வேகமாக உடையை சரி செய்து கொண்டு, இப்போ எதுக்கு வந்தீங்க? காலையில பேசலாம்னு தான சொன்னேன். என எழுந்து அமர்ந்தாள். 

காலைல வரைக்கும் என்னால வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. அதான் இப்பவே வந்தேன். என்றவன் எட்டி பார்த்தான் மகனை.. 

தூங்கிட்டான் சமத்து குட்டி!! என தட்டி விட்டாள் மகனை.. 

அவளருகில் வந்து அமர்ந்தான். நிலா அவனை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொள்ள, எதுக்கு அவாய்ட் பண்ற? நீ இன்டென்சனா பண்றது நல்லாவே தெரியுது. 

விவாகரத்து கிடைச்சிடுச்சு. இனி அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறீங்க. அவாய்ட் பண்ண நமக்குள்ள என்ன இருக்கு? என கூறி கொண்டே படுக்கையை சரி செய்தாள். 

நமக்குள்ள ஒன்னுமே இல்லையா? இங்க என்னை பார்த்து சொல்லு! என படுக்கையை கலைத்து விட்டான். 

என்ன பண்றீங்க நீங்க? என நிலா அவனை அதிர்ந்து பார்க்க, நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் ஒன்னும் இல்லையா? லவ் இல்லையா? 

ஹாங் என விழித்தாள் நிலா. 

நான் தான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா? 

வேற எதுவும் பேசுங்க. 

லவ் மேக் பண்ணலாம். 

ஹாங் என அவள் விழித்து பார்க்க.. 

எனக்கு தோணுது!! That’s it.. 

நேத்து வரைக்கும் கோபமா இருந்தீங்க. இன்னிக்கு திடீர்னு என்னாச்சு? என நிலா மீண்டும் படுக்கையை சரி செய்தாள். 

தோணுது அவ்ளோ தான். என்னை நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ கவலை இல்ல. என கையை பற்றினான். 

தீரா என்ன பண்றீங்க? அக்காவுக்கு துரோகம் பண்ணாதீங்க!! 

எனக்கு தெரியும் என்னனென் பண்ணனும்னு. என உதட்டில் முத்தமிட்டான் அழுத்தி.. 

தீரா!! என அதிர்ச்சியுடன் நிலா நிற்க, ம்ம் தீரா தான். தீரவே மாட்டுக்கிது. உன்னை பார்த்தால் கொம்பு வச்ச காளையா உன்னை… என சொல்ல வில்லை. நிறுத்தி கொண்டான். யாருக்கு புரிய வேண்டுமோ அவளுக்கு புரிந்திருக்கும். 

தீரா!! என நிலா விலக போராட, உதடுகள் இரண்டும் அவனிடம் மாட்டி கொண்டது. 

தொட்டால் அசிங்கமா இருக்குன்னு சொன்னீப? 

இல்ல . இப்போ இல்ல இனி நீ சொன்னாலும் இல்ல.. 

உங்களை நான் அவமானப்படுத்தி இருக்கேன். என்கிட்ட எப்படி? 

லவ் பண்ண தெரியும். ஆயிரம் விதமா..  ஆயிரம் பொன்னை இல்லை. ஒரே பொன்னை  ஆயிர விதமா.. என்றவன் உதட்டை கவ்வி கொண்டான் மீண்டும் மீண்டும். நிலா விக்கித்து நின்றாள். அவன் தொட்டால் மறுப்பு ஏது என்னும் ரீதியில் தான் அவளின் உணர்வுகள் அனைத்தும் மொத்ததில் அவனுக்கு அடிமை. 

பிளீஸ் தீரா!! என அவள் சொக்கி நிற்க.. 

சலிக்கல டி!! என எல்லை கடந்தான் தேகத்தில்.. அனைத்தும் முடிய, கண்களை மூடினாள். 

தூங்கிட்டியா? என முத்தமிட்டான். 

ம்ம்… 

எனக்கு கம்பனி கொடு!! என இழுத்தான். 

இங்கே என்னை பாரு! என்னோட முகத்தை பாரு. 

ம்ம் ஹிம் என தலை குனிந்தாள். 

என்னாச்சு? என முகத்தை நிமர்த்தினான். 

பிளீஸ் என கீழ் உதட்டை கடித்து கொண்டாள். 

என்னை பாரேன்!! என்கிட்ட எதுவும் வித்தியாசம் தெரியுதா? 

இல் இல்ல.. என்றாள் அதையும் தலை குனிந்து. 

பொய் சொல்லாத!  என முகத்தை நிமர்த்தினான். 

விடுங்க.. 

உனக்கு எதுவும் என் கிட்ட சொல்லணுமா? 

அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலா. அவளுக்கு மேல் இருந்தான். இருவரும் தோல் சட்டையுடன் இருந்தார்கள். 

கழுத்து குழியில் முத்தமிட்டவன். ம்ம் சொல்லு எதுவும் சொல்லணுமா? என மீண்டும் கேட்டான். 

சொல்ல ஒண்ணுமில்ல. ஆனால் சில கேள்விகள் இருக்கு. 

என்ன? என கன்னத்தில் முத்தமிட்டான். 

நிலா அவனை பார்த்து, எதுக்கு இப்படி என்கிட்ட இருக்கீங்க? இதுக்கு அர்த்தம் என்ன? 

தொடரும்..

You may also like

Leave a Comment