அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
218 views

AAA  138

என்ன சொல்லணும்? என நிலா ருத்ரனை பார்த்தாள். 

எதுவுமே இல்லையாடி!! என ருத்ரன் அவளின் மூக்கை மூக்குடன் உரசி கொண்டிருந்தான் வெகு நேரம், ஒன்.. ஒண்ணுமில்ல..  என கண்களை மூடியபடி காரிகையிடமிருந்து பதில் வந்தது. 

கன்னம் இரண்டையும் பற்றியவன் மாறி மாறி முத்தமிட்டான். நிலாவின் முகம் சொக்கி கிடந்தது. 

கீழ் உதட்டை கவ்வி கொண்டவன் சிறிது நேரம் கழித்து அவளையே பார்த்தான். 

என்ன அப்படி பார்க்கிறீங்க? என நிலா வெட்கத்தில் கேட்டாள் மெய் மறந்து, 

அந்த சர்வேஸ்வரன் கூட நீ நிக்கும் போது எனக்கு பிடிக்கல. அவனை பார்த்தாலே பத்திட்டு வருது. அவனை போய் உன்னை கல்யாணம் பண்ண உங்க வீட்ல பேசி இருக்காங்களே கிறுக்கு மச்சானுங்க. அவனுங்களுக்கு அறிவு இருக்கா டி!! 

எனக்கு அதுல உடன்பாடு இல்லன்னு அவர் கிட்டயே சொல்லிட்டேன். என்றாள் நிலா. 

ருத்ரனின் கைகள் அவளது மேனியை வருடி கொண்டே மிச்சம் வச்சிருக்கானா? ரவுத்ரன் என கேட்டான். 

ஹாங் என அவள் திகைத்து விழிக்க, மிச்சம் வச்சிருக்கானா இல்ல மொத்தமா தீர்த்திட்டானா? என்று கேட்டு கொண்டே அவன் பார்வை சென்ற இடத்துக்கு வந்தவள் கண்களோ கூசி போக வேறு புறம் திரும்பி கொண்டாள். 

ஆக்சுவலி என்ன சொல்ல? மதுவை விட இது ஹெல்தி தான் என்றான். 

ச்சீ!! என நிலா முகத்தை திருப்பி கொண்டாள். 

ஏன் அப்புடி சொன்ன? என ருத்ரன் கேட்க.. 

என்ன சொன்னேன்? 

அவனை வேணாம்னு எதுக்கு சொன்ன? கட்டியிருக்கலாமே? என ருத்ரன் நேரடியாகவே கேட்டு விட்டான். 

நிலா கண்களை தீவிரமாக சுருக்கி பார்த்தவள். எனக்கு விருப்பம் இல்ல அவ்ளோ தான். என ஒரே வார்த்தையில் முடித்தாள். 

இன்னொரு கேள்வி இருக்கு. 

என்ன? என நிலா பார்த்தாள். 

உன்கிட்ட எரிஞ்சு விழுந்திருக்கேன். எல்லா இடத்துலயும் மேடம் என்னை விட்டு கொடுக்காம நல்லது தான் நினைச்சிருக்கீங்க. என்றவன் அவளின் முகத்தை பார்க்க, நிலாவின் முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது. 

மேலும் ருத்ரன், அதுக்கும் மேலே எனக்கு என்னோட லவ்வர் மீனாட்சிய தேடி என்றவன் உதட்டில் முத்தமிட்டு கொடுத்திருக்க, அப்போ கூட உன்னை தான் நான் திட்டினேன். எனக்காக தன் அண்ணன் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணுன்னு கூட பார்க்காம எனக்கு ஹெல்ப் பண்ண எவ்ளோவோ டிரை பண்ணீங்க. அண்ட் கல்யாணத்துல உன்னை வற்புறுத்தி டார்ச்சர் பண்ணி தான் கட்டிட்டேன். ஆனால் உன்னை டச் பண்ணா? மேடம் உருகி நிக்கிறீங்க? திட்டினா எல்லாத்தையும் வாங்கிக்கிட்டீங்க. இதெல்லாம் தாண்டி அதோ அங்கே படுத்திருக்கானே பட் தூக்கிட்டு அவன் என்னோட பையன்னு தெரிஞ்சதும் என்னை வேணாம்னு நீங்க சொல்ல, நீங்க வேணும்னு நான் சொல்ல, உங்களை லவ் பண்றேன்னு open statement விட்டேன் சரியா? என்றவன் மீண்டும் லவ் யூ என்றான். 

நிலாவின் முகத்தில் முத்து முத்தாக வியர்க்க அவனை பார்த்தாள். 

அவளின் கழுத்தில் முகம் புதைத்து கடித்து நிமிர்ந்தவன். நிலா மேடம் என்னை ஒதுக்கி வச்சீங்க. என்னை வேலைக்காரனா கூப்பிட்டீங்க. நான் என்னோட கோபத்தை கட்டுப்படுதிக்கிட்டு வந்தேன். அப்போ தான் ஒரு மேஜிக் நடந்துச்சு. 

என்ன? என நிலா பதட்டத்துடன் கேட்க. 

மேடம் என்னை கூப்பிட்டு அசைவ விருந்து வச்சீங்க. என ருத்ரன் கூற.. 

எச்சில் விழுங்கி கொண்டு பார்த்தாள். ருத்ரன்  மூக்கை மூக்குடன் உரசி கொண்டே அப்புறம் இதோ வயித்துல இருக்குறவன ரெடி பண்ணிட்ட நீ!! 

ஹாங் என நிலா பார்க்க, 

சரி அது ஹேப்பி ஆக்சிடன்ட். திட்டமிட்டு பண்ணலன்னு தெரியுது. என்றவன் விவாகரத்து பண்ண வந்த!! அப்புறம் bla bla bla extra seens எல்லாம் நடந்தது. அப்புறம் இதழ் கூட எனக்கு கல்யாணம் பண்ணலாம்னு அம்மா முடிவ நான் accept பண்ணேன்.  babyகாக நீ வந்த?  மறுபடியும் என்னை தொட்ட.. 

ஹான்!! என நிலா முறைக்க.. 

சரி நான் தான் தொட்டேன். But நான் விடும்போது விலகும் போது நீ விடல.. 

நிலாவினால் அவனது முகத்தை பார்க்கவே முடியவில்லை. தயக்கத்துடன் இருந்தாள். 

இதெல்லாம் நடந்ததுக்கு பிறகு என நிறுத்தியவன் நிலாவின் மோவாய் பற்றி இந்த எல்லா விசயத்தையும், இதோ இப்போ என்கூட இருக்கியே இந்த நிமிசம் வரைக்கும் என்னோட touch உனக்கு என்ன feel கொடுக்குது? நான் எவ்ளோ கஷ்டபடுத்தினாலும் தள்ளி போனாலும் சரி.. ஆனால் நான் உன்கிட்ட உருகும் போது நீ எதுக்கு டி உருகுற? என் மேலே உன்னோட நிலைப்பாடு என்ன? என மொத்த கதையையும் மூன்று பத்தியில் கேட்டு விட்டான் ருத்ரன். 

நிலா எதுவும் பேசாமல் மவுனமாக இருக்க, ருத்ரனின் பார்வை விழி அகலாமல் அவள் மேல் இருக்க, சொல்லு நிலா!! எனக்கு பதில் வேணும். இதுக்கு அர்த்தம் என்ன? என அவனது பிடியில் அழுத்தம் நிறைந்தது. 

நீங்க சொல்றது எனக்கு புரியல தூக்கம் வருது என அவள் விலக முற்பட.. 

என்ன புரியல? எதுக்கு டி தொட்டால் உருகுற? அதுவும் நான் தொட்டால் எதுக்கு உருகுற? சொல்லு!! என அவனது குரலில் கொஞ்சம் வன்மை கூடி இருந்தது. 

ஏன்னா அந்த விஷயத்துல நீங்க என குறும்புடன் கண்ணை சிமட்டினாள். 

ஓ ஓகே!! ஆனால் எதுக்கு ஸ்டமக் fill பண்ணிக்கிட்ட? சொல்லு என அவளை புருவம் சுருக்கி பார்த்தான். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… 

ருத்ரன் கோபத்துடன், நிலா!! ஏதாவது சொல்றதாக இருந்தால் வாய் விட்டு சொல்லிடு. அப்புறம் பின்னாடி உனக்கு சொந்தமா இருக்குற பொருள் உங்க அக்காவோடது ஆகிடும். 

இப்போ கூட எனக்கு சொந்தம் இல்ல. அதான் விவாரகர்த்து ஆகிடுச்சே!! என்றாள். 

அவ்ளோ தானா? என வேகமாக எழுந்து அமர்ந்தான். 

நிலாவும் அவனுடன் எழுந்து நின்றாள். ருத்ரன் கையை மடக்கியபடி, அவ்ளோ தானா வேற ஒண்ணுமில்லையா? அப்போ அந்த சர்வேஸ்வரன கல்யாணம் பண்ணிக்கலாம்ல? என மீண்டும் கேட்டான். 

எனக்கு பிடிக்கல தோணல!! என நிலா கூறி விட.. 

ருத்ரன் அங்கும் இங்கும் வேகமாக நடந்தான் மூச்சு வாங்க, கோபம் வந்தது எக்க சக்கமாக.. நிலா உடையை அணிந்து கொள்ள பொறுக்கினாள். 

ஹே அவ்ளோ தானா டி!! 

வேற என்ன? என நிலா பார்க்க.. 

கையை இறுக்கி மடக்கியவன். நிலாவை முறைத்து பார்த்தான். 

என்னாச்சு? என நிலா பார்க்க.. 

போதும் டி!! எதுவும் கேட்க வேணாம். எனக்கு ஒன்னும் ஆகல. அப்டியே இரு. என வேகமாக அறையை விட்டு வெளியே செல்ல சென்றான். 

தீரா ட்ரெஸ்? என முன்னால் போய் தடுத்தாள். 

அவள் கையில் இருக்கும் உடையை வாங்கி அணிந்து கொண்டவன். அவள் முகத்தை பிடித்து, நான் உன்னை லவ் பண்றேன் டி. லவ் யூ. உன் கூட இருக்க நினைக்கிறேன். என்னோட முடிவை நான் சொல்லிட்டேன். உனக்கு நாளைக்கு காலையில வரைக்கும் டைம். நீ எனக்கு பதில் சொல்ற. அப்படி இல்லன்னு வை.. என வேகமாக வெளியேறி இருந்தான். 

நிலா அதே இடத்தில் நின்றாள். அவளது திருவாய் மூடி கொண்டு தான் இருந்தது. அவனே இத்தனை இறங்கி வந்து பேசும் போது, அவள் பேசுவாளா என்ன? ஒரு விசயம் சாதாரணமாக நடப்பது எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலுக்கு பிடிக்காது. அப்படி பிடித்தால் கதை ஆரம்ப புள்ளியிலே சுபம் உண்டாகும். அப்படி இருந்தால் என்ன ஆவது. அவளது ஹீரோயின் அவதார அதிசயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. 

இதோ அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ருத்ரன் தடாலடியாக அறைக்குள் நுழைந்தான். 

திடுக்கிட்டு அவனை பார்த்தாள் நிலா. 

நான் கேட்டதுக்கு பதில் என்னாச்சு? என நெற்றி பொட்டில் அடித்தபடி கேட்டான்

நிலா

You may also like

Leave a Comment